• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 3 : நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி

[3-5] நற்செய்தியாகிய மறுபடியும் பிறப்பது என்பதன் பொருள் என்ன? (யோவான் 3:1-6)

(யோவான் 3:1-6)
“யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவிடத்தில் வந்து; ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக; ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு; ஒரு மனுஷன் முதிர்வயதாய் இருக்கையில் எப்படி பிறப்பான்? அவன் தன் தாயின் கர்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக; ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாமிசத்தில் பிறப்பது மாமிசமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்”
 
 
வேதாகமத்தைப்பொருத்தவரை மறுபடியும் பிறப்பது என்பதன் பொருள் என்ன?
 
இவ்வுலகின் பெரும்பாலானவர்கள் இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே மறுபடியும் பிறக்க விரும்புகிறார்கள். ஆயினும், உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். இரட்சிப்பு நம்முடைய நடத்தையினால் மட்டுமே கிடைக்கும் ஒன்றல்ல.
 
மறுபடியும் பிறப்பது உடம்பின் உணர்வுகளுக்கும் மாறுபாடுகளுக்கும் சம்பந்தப்பட்டதா?
இல்லை. மறுபடியும் பிறப்பது என்பது ஆவிக்குரிய மாற்றம். இது பாவி ஒருவன் பாவமில்லாமல் மீண்டும் பிறப்பதாகும்.
 
நிறைய கிறிஸ்தவர்கள் இதனைத் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளார்கள். அவர்கள் நிச்சயமாக மறுபடியும் பிறப்போம் என்று நம்புகிறார்கள். கீழ்வரும் காரணங்கள் அவற்றில் சில. சிலர் இரட்சிப்படைய நிறைய புதிய தேவாலயங்களைக் கட்டுகிறார்கள். நற்செய்தி அறிவிக்கப்படாத மனிதர்களிடம் இயேசுவைப்பற்றி பிரசங்கிக்க சிலர் அர்பணித்துக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் விவாகம் செய்துகொள்ளாது அவர்களின் சக்தியையெல்லாம், ‘கர்த்தரின் பணி` என்றெண்ணி காரியமாற்றுகிறார்கள்.
இது மட்டுமில்லை. சில மனிதர்கள் நிறைய பணத்தை தேவாலயத்திற்கு கொடுக்கிறார்கள். இல்லையென்றால் அவர்கள் தேவாலயத்தை துப்புரவு செய்கிறார்கள். எல்லாம் சேர்த்து அவர்களின் நேரத்தையும் செல்வத்தையும் தேவாலயத்திற்கு அர்பணிக்கிறார்கள். இவையெல்லாம் ஜீவ கிரீடத்தை அவர்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறார்கள். கர்த்தர் அவர்களுடைய சேவையை ஒப்புக்கொண்டு, அவர்களை மீண்டும் பிறக்கச்செய்வார் என்று எண்ணுகிறார்கள்.
முக்கிய பொருள் யாதெனில், நிறைய அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் மீண்டும் பிறக்க விரும்புகிறார்கள். இத்தகைய மனிதர்களை எவரும் காணலாம், அவர்கள் மிகவும் கடினமாக வேலை செய்வதனைக் கர்த்தர் கண்டு, அவர்களை என்றாவது மீண்டும் பிறக்கச் செய்வார் என்று நம்புகிறார்கள். அவர்கள் எல்லா மத நிறுவனங்களிலும், அமைதி நல்கும் இடங்களிலும், பள்ளிகளிலும் இருக்கிறார்கள். அவர்களின் நிலை மோசமானது. அவர்கள் எப்படி மறுபடியும் பிறப்பது என்ற உண்மை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நடத்தையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர். “இதனைச் சரியாக செய்தால் நான் மறுபடி பிறப்பேன்” என்றென்னுகிறார்கள். “ஆயர் வெஸ்லியைப் போன்று, நானும், ஒரு நாளில் மீண்டும் பிறப்பேன்” என்றெண்ணி அவர்களின் எல்லா முயற்ச்சிகளையும் இக்காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் மீண்டும் பிறப்பதற்கு இவையெல்லாம் அஸ்திவாரம் என்று நம்புகிறார்கள். யோவான் 3:8 படித்து அதனை மறுபடியும் பிறப்பது எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது? என்று யாராலும் கூற முடியாது என்று அர்த்தம் கற்பிக்கின்றனர்.
ஆகவே அவர்கள் தொடர்ந்து கடின வேலைகளை, இயேசு என்றாவது மறுபடியும் பிறக்கச் செய்வார் என்றென்னி தொடர்ந்து செய்ய வேண்டியதுதான். நிறைய பேர் “இதனைத் தொடர்ந்து முயற்சி செய்தால் இயேசு மறுபிறப்பை அருளிச்செய்வார் என்று நினைக்கிறார்கள். மறுபிறப்பை பற்றி எதுவும் தெரியாமலேயே மீண்டும் பிறக்க முடியும். ஒரு காலை வேளையில் தூக்கத்திலிருந்து எழும்பும்போது மறுபடியும் பிறந்தவனாக எழுவேன். அப்பொழுது எனக்கு பரலோக ராஜ்ஜியம் செல்ல நான் தெரிந்துக் கொள்ளப்பட்டவன் என்று தெரியும்.” இது போன்ற நம்பிக்கைகள் ஒன்றுக்கும் உதவாது.
நாம் இப்படி மறுபடியும் பிறக்க முடியாது. நாம் மதுபானம் மற்றும் சிகரெட்டிலிருந்து தூர இருப்பதாலோ, ஆலயத்திற்கு ஒழுங்காக போவதாலோ மீண்டும் பிறக்க முடியாது. இயேசு கூறினார், பரலோக ராஜ்ஜியம் செல்ல ஒரே வழி நாம் ‘நீர் மற்றும் பரிசுத்த ஆவியினால் மீண்டும் பிறப்பதேயாகும்.` மறுபடியும் பிறப்பதற்கான இறைவனின் ஒரே நிர்பந்தம் நீர் மற்றும் பரிசுத்த ஆவியே ஆகும்.
ஒருவன் நீரினாலும், ஆவியினாலும் மறுபடியும் பிறக்காவிட்டால் அவனின் நியாயமான செய்கைகள் யாவும் இயேசுவின் முன் விருதா. ஒருவன் காணிக்கை கொடுப்பதன் மூலமாகவோ, அன்பளிப்பு கொடுப்பதாலோ, அர்பணிப்பதாலோ மறுபடியும் பிறக்கமுடியாது. சிலர் நாம் மறுபடியும் பிறந்தவர்களா என்பது கர்த்தருக்குத்தான் தெரியும், நமக்குத் தெரியாது என்றெண்ணலாம்.
இப்படி எண்ணுவது மிகவும் வசதியானது. ஆனால் மறுபிறப்பை மேசையினடியில் ஒளித்து வைக்க முடியாது. மறுபடியும் பிறந்தது, அவருக்கு மிக நிச்சயமாகத் தெரியும். அடுத்தவர்களும் அதனை உணருவார்கள். மாமிசத்தினால் இதனை உணர முடியாது. ஆனால் ஆவிக்குள் இதனை உணர முடியும். உண்மையில் மீண்டும் பிறந்தவர்கள் வேதவாக்கு மூலமாக, நீரினாலும், இரத்தத்தினாலும், ஆவியாலும் மறுபடியும் பிறந்தவர்கள் ஆவர். நிக்கொதேமு எப்படி மறுபடியும் பிறந்ததை உணரவில்லையோ, அதுபோல மறுபடியும் பிறக்காதவர்கள் மறுபடியும் பிறந்ததை அறியமுடியாது.
ஆகவே நாம் உண்மையான வார்த்தைகளைக் கேட்கவேண்டும். பாவ விடுதலை - ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம் மூலமே கிடைக்கும். கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்டுப் படிப்பதன் மூலம், அவற்றிலுள்ள உண்மைகளைக் கண்டு கொள்ள முடியும். ஆகவே நமது மனதை திறந்து கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்பது மிகவும் முக்கியமானதாகும்.
“காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்திற்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.” (யோவான் 3:8)
மறுபடியும் பிறக்காத ஒருவன் இந்த வசனத்தை படிக்கும்போது “ஆ! இயேசுவே கூறியிருக்கிறார் என்னால் மறுபடி பிறந்தேனா என்று அறிய முடியாது என்று! யாருக்கும் தெரியாது!” இவ்வெண்ணம் அவனுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நமக்கு எங்கிருந்து காற்று வருகிறது? அது எங்கே போகிறது என்று தெரியாது. ஆனால் கர்த்தருக்கு எல்லாம் தெரியும்.
மறுபடியும் பிறந்தவர்கள் முதலில் அவர்களின் மறுபிறப்பை உணர்வதில்லை. இது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் அப்படிப்பட்டவரின் இருதயத்தில் நற்செய்தியிருக்கிறது; இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் குருதியினால் விடுதலை என்ற வார்த்தை இருக்கிறது.
இதுவே மறுபடியும் பிறந்ததற்கான அடையாளம். யாரெல்லாம் நற்செய்தியைக் கேட்கும்போது “ஓ! அப்படியானால் நான் பாவமற்றவன். ஆகவே நான் இரட்சிக்கப்பட்டவன். நான் மறுபடியும் பிறந்தவன்” என்பதை புரிந்துகொள்கிறார்களோ அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள். யார் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்பிக்கையுடன் இருதயத்தில் வைக்கிறார்களோ அவர்கள் நீதிமான்களாகவும் கர்த்தரின் பிள்ளைகளும் ஆகிறார்கள்.
சிலர் “நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?” என்று கேட்கப் பட்டிருக்கலாம். அவர் “இன்னும் இல்லை” என்கிறார். “நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?” “ஆமாம்” இங்கே எதிரும் புதிருமாக இந்த நபர் இருக்கிறார் இல்லையா? இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்றால் ஒருவர் மறுபடியும் பிறந்தால் அவர் மாமிசத்திலும் மாறுதலிருக்கும் என்று இவர் நம்புவதேயாகும்.
இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் பிறப்பது என்பது முற்றிலும் மாற்றப்பட்ட வாழ்க்கை முறை என்று நம்புகிறார்கள். உண்மை யாதெனில் இவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறத்தலை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.
மறுபடியும் பிறப்பதை அநேகர் சரிவர அறிந்துகொள்வதில்லை. மிகவும் இரங்கத்தக்க நிலை. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, ஆலயத்தலைவர்கள் கூட ஒரு மாய நிலையிலேயே கடமையாற்றுகிறார்கள். மறுபடி பிறந்த நம்மின் இருதயம் அவர்களுக்காக துக்கப்படுகிறது.
நாமே இப்படி துக்கமடையும்போது நம் கர்த்தர் இயேசுவிற்கு எவ்வளவு வலியை இது தோற்றுவிக்கும்? நாம் எல்லோரும் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நம்புவதன் மூலமாக மறுபடியும் பிறப்போமாக.
மறுபடியும் பிறப்பது, இரட்சிக்கப்படுவது, இரண்டும் ஒன்றே. ஆனாலும் நிறையபேரிற்கு இந்த உண்மைத் தெரியாது. மறுபடியும் பிறப்பதென்பது, ஒருவரின் இருதயம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புவதினால் முற்றிலுமாக கழுவப்படுவதாகும். இதன் பொருள் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவைப்பலி ஆகியவற்றை நம்புவதால் நீதிமான்களாகிறோம் என்பதாகும்.
மறுபடியும் பிறப்பதற்கு முன், அவர்கள் பாவிகள். அதன் பிறகு, அவர்கள் முற்றிலும் பாவமற்றவர்கள். சரியாகக் கூறுவதானால் அவர்கள் மீண்டும் புதிய மனிதனாக பிறந்தவர்கள். அவர்கள் இரட்சிப்பின் நற்செய்தியை நம்புவதால் கர்த்தரின் பிள்ளைகளானார்கள்.
மறுபடியும் பிறப்பதென்பது இயேசுவின் ஞானஸ்நானம் என்ற ஆடையை அணிந்துகொண்டு, இயேசுவுடன் சிலுவையில் மரித்து, அவருடன் மீண்டும் உயிருடன் எழும்புவதாகும். இதன் பொருள் ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் சிலுவை ஆகிய வார்த்தைகளினால் ஒருவன் நீதிமானாகிறான்.
ஒருவன் தாயின் கர்ப்பத்திலிருந்து பிறக்கும் போதே பாவியாக பிறக்கிறான். அவன் உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் கிடைக்கும் மறுபிறப்பை கேட்டு அதனை நம்பும்போது நீதிமானாகவும், மீண்டும் பிறந்தவனாகவும் ஆகிறான்.
வெளியே எந்த மாறுதலும் இல்லாதவனாக காட்சியளித்தாலும், உள்ளே, ஆவியில் அவன் மீண்டும் பிறந்தவன். ஆனால் இந்த உண்மை வெகு சிலருக்கே தெரியும். பத்தாயிரம் பேரில் ஒருவனுக்கு கூட தெரியாது. நீங்கள் வெகு சிலருக்குத்தான் மறுபிறப்பைப்பற்றிய உண்மை தெரியும் என்ற என் கருத்துடன் ஒத்துப் போகிறீர்களா?
நீரினாலும் ஆவியினால் கிட்டும் நற்செய்தியை நம்பி மறுபடியும் பிறந்தவர்களால் மட்டுமே உண்மையாக மீண்டும் பிறந்தவர்களை சாதரண கிறிஸ்தவர்களிடமிருந்து பிரித்துணர முடியும்.
 
 
காற்றினைக் கட்டுப்படுத்துவது இயேசுவே
 
இரட்சிக்கப்பட்டது யார் என்று யாருக்குத் தெரியும்?
மறுபடியும் பிறந்தவர்களுக்குமட்டுமே.
 
“காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்திற்கு போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.” இயேசு மறுபடியும் பிறக்காதவர்களைப் பற்றி இங்கே கூறுகிறார். மறுபடியும் பிறந்த ஒருவருக்கு மறுபடியும் பிறப்பதைக் குறித்து தெரியும். ஆனால் நிக்கொதேமுக்கு அது தெரியாது. கர்த்தருக்கு யார் மறுபடியும் பிறந்தவர் என்பது தெரியும். மறுபடியும் பிறந்தவர்களுக்கும் இது தெரியும்.
ஆயினும், காற்று எங்கிருந்து வருகிறது? அது எங்கே போகிறதென்று ஒருவனுக்கு எப்படித் தெரியாதோ, அதுபோல் மறுபடி பிறக்காத ஒருவனுக்கு ஒருவன் மறுபடி பிறப்பது எப்படி என்பது தெரியாது?
இதனை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? காற்றை அசைப்பது யார்? கர்த்தர். காற்றை படைத்தது யார்? பரலோகத்தின் கர்த்தர். உலகின் வெப்பதட்ப நிலையை கட்டுப்படுத்துவது, காற்றை ஒருவழிப்படுத்துவது, நீரை வழிப் படுத்துவது யார்? உயிருள்ளவற்றிற்கு ஜீவ சுவாசத்தைக் கொடுத்தவர் யார்? வேறு வார்த்தைகளில் கூறினால் யார் இந்த உலகின் ஜீவராசிகளை உருவாக்கியது? யார் அவற்றை வாழச் செய்தது? வேறுயாருமல்ல, இயேசுவே இதனைச் செய்தார், இயேசுவே கர்த்தர்.
நமக்கு நற்செய்தியின் வாக்குகளான நீர், இரத்தம் மற்றும் ஆவியைப் பற்றி தெரியாவிட்டால், நம்மால் மறுபடி பிறக்கவோ, மற்றவர்களுக்கு ஆன்மீக காரியங்களை கற்றுக்கொடுப்பதோ இயலாது, இயேசு கூறினார். ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் அவன் மறுபடி பிறக்க முடியாது.
நாம் கண்டிப்பாக நீர் மற்றும் ஆவியைப் பற்றிய நற்செய்தியை நம்பவேண்டும். இந்த வல்லமையான நற்செய்தி நம்மை மறுபடி பிறக்கச் செய்கிறது. யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புகிறார்களோ பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வந்து, அவர்கள் மனதில் வாசம் செய்வார்.
உலகின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொள்ள, இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் செய்யப்பட்டார். இந்த பாவங்களுக்கு பரிகாரமாக சிலுவையில் இரத்தம் சிந்தினார். அவர் மனித குலத்திற்கு இரட்சிப்பான, மறுபடியும் பிறத்தலை மனிதர்களின் இருதயத்தில் நியமித்தார். இந்த நற்செய்தியை நாம் நம்பும்போது பரிசுத்த ஆவியானவர் நம் ஆன்மாவிற்குள் வருகிறார். இதுவே மறுபடியும் பிறத்தலுக்கான இரட்சிப்பாகும். நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மூலமாகவும் அவரின் குருதிதியினாலும் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டன, என்பதை நம்பும்போது நாம் உண்மையிலேயே மறுபடியும் பிறந்தவராகிறோம்.
ஆதியாகமம் 1:2 இல் இப்படி கூறப்பட்டுள்ளது. “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.” தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. தேவ ஆவியானவர் பூமியின் பரப்பிற்கு வெளியாக உலவிக்கொண்டிருந்தார்.
இதன் பொருள் யாதெனில் ஆவியானவரால், பாவிகளின் இருதயத்திற்குள் வர முடியாது. மறுபடி பிறக்காத ஒருவனின் இதயமானது ஒழுங்கின்மையும் பாவ இருளில் மூழ்கியதாகவும் இருக்கிறது. ஆன படியால் தேவ ஆவியானவரால் அப்படிப்பட்டவர்களின் இருதயத்தில் வாசம் செய்ய இயலாது.
பாவிகளின் இருதயத்தைப் பிரகாசிப்பதற்கு நற்செய்தியாகிய ஒளியைக் கர்த்தர் உலகிற்கு அனுப்பினார். கர்த்தர் சொன்னார். “வெளிச்சம் உண்டாகக்கவது”. அங்கே வெளிச்சம் உண்டாயிற்று. அப்பொழுது மாத்திரமே, தேவ ஆவியானவரால் மனித இருதயங்களில் வாசம் செய்ய முடியும்.
ஆகவே, மறுபடியும் பிறந்தவர்களின் இருதயத்திலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புகிறவர்களிடமும் தேவ ஆவியானவர் வாசம் செய்கிறார். இதுவே மறுபடியும் பிறத்தல் என்பதற்கான பொருள் ஆகும். அவர்கள் இரட்சிப்படைவதற்கான வழியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றிய வார்த்தைகளைக் கேட்டு விசுவாசித்ததால் அவர்கள் இருதயத்திலும் மறுபடியும் பிறந்தவர்களானார்கள்.
ஒருவன் மறுபடியும் எப்படி பிறக்க முடியும்? பரிசேயனாகிய நிக்கொதேமுவிற்கு இயேசு விளக்குகிறார். “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தை காண மாட்டான்.” நிக்கொதேமு மீண்டும் கேட்டான் “நாம் எப்படி நீரினாலும், ஆவியினாலும் மறுபடியும் பிறக்க முடியும்? தாயின் கர்ப்பத்தில் நுழைந்து மீண்டும் பிறக்கக் கூடுமோ?” அவன் நேரடி அர்த்தத்தை எடுத்துக்கொண்டான். அவனால் மறுபடி பிறத்தலின் உள்ளர்த்தத்தை தெளிவாக புரிந்துக் கொள்ள இயலவில்லை.
இயேசு அவனை நோக்கி: “நீ இஸ்ரவேலின் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?” என்றார். இயேசு கூறினார் ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசியான் - அதனைக் காணவும் மாட்டான். இயேசு நிக்கொதேமுவிற்கு மறுபடியும் பிறப்பதைக் குறித்த உண்மைகளை போதித்தார். உண்மையாகவே நிறைய கிறிஸ்தவர்கள் மறுபடியும் பிறக்காமல், இயேசுவை விசுவாசிக்கிறார்கள். நிக்கொதேமு போன்ற கிறிஸ்தவர்கள் உண்மையில் மறுபடி பிறந்தவர்களில்லை.
இந் நாட்களின் தேவாலயத் தலைவர்களைப் போன்று நிக்கொதேமுவும் ஒரு ஆன்மீகத்தலைவன். நவீனச் சொற்களில் கூறினால் அவன் ஒரு மாநில பிரதிநிதி போன்றவன். மதத்தினைப் பொருத்தவரை அவனொரு ஆசிரியன். எபிரேயரின் ரபீ. யூதர்களின் மதத்தலைவன். அவன் ஒரு நன்கு கற்ற அறிவாளி.
இன்றைய நாட்களில் கல்வி பாடசாலைகளைப் போன்று இஸ்ரவேலில் அந்நாட்களில் கல்வி நிறுவனங்கள் இருந்ததில்லை. மக்கள் கோயில்களுக்கு “படித்தவர்களிடமிருந்து” கற்றுக்கொள்வதற்குச் சென்றனர். அவர்கள் மக்களின் ஆசிரியர்கள். இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் போலி ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் மறுபடியும் பிறந்தவராகாமலேயே மக்களுக்குப் போதித்து வந்தனர்.
இக்காலத்தில் நிறைய மதத்தலைவர்கள், ஆலய அலுவலர்கள், பிரசங்கிப்போர், மூப்பர்கள், டீக்கன்கள் மறுபடி பிறக்காதவர்களாகவே இருக்கிறார்கள், நிக்கொதேமுவைப் போன்று அவர்களுக்கு மீண்டும் பிறப்பதைக் குறித்த உண்மை தெரியாது. நிறைய பேர் மறுபடி பிறக்கவேண்டும் என்றால் இரண்டாம் முறை தாயின் கர்ப்பத்திற்குள் நுழைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு மறுபடியும் பிறக்க வேண்டியதின் அவசியம் தெரியும். ஆனால் எப்படி மறுபடியும் பிறப்பது என்று தெரியாது.
குருடன் யானையைத் தொட்டு, வீனாக அதனை அடையாளம் காண முயற்சி செய்வதுபோல், அவர்களுடைய அறிவீனத்தால், தவறாக போதிக்கிறார்கள். அவர்களுடைய போதனை அவர்களின் சொந்த உணர்வுகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டது, உலகின் முக்கியத்தைக் குறித்து ஆலயங்களில் போதிக்கிறார்கள். இதனைக் கேட்பதால் நம்பிக்கையுள்ள மனிதர்கள் மீண்டும் பிறப்பதிலிருந்து தடுக்கப் படுகிறார்கள்.
மீண்டும் பிறப்பதற்கும், நாம் செய்யும் நல்லக் காரியங்களுக்கும் சம்பந்தம் இல்லை. கர்த்தர் அருளிய நீர் இயேசுவின் இரத்தம், தேவ ஆவி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வதன் மூலம் மட்டுமே நாம் மறுபடி பிறக்க முடியும். இந்த கர்த்தரின் நற்செய்தி நம்மை பாவங்களிலிருந்து நீதிமான்களாக மாற்றுகிறது.
இயேசு கூறினார்; “பூமிக்கடுத்த காரியங்களை உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே; பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?” இயேசு ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக நம்முடைய பாவங்கள் யாவும் கழுவப்பட்டன. இயேசு இந்த பாவ மண்ணிப்பைக் குறித்து கூறியபோது யாரும் நம்பவில்லை.
அவர்கள் எதனை நம்பவில்லை? அவர்கள் பாவ மண்ணிப்பு இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும், அவருடைய சிலுவை மரணத்தினாலும் கிட்டும் என்பதை நம்பவில்லை. இயேசு இது குறித்தே, பரம காரியங்களை மக்கள் நம்பப்போவதில்லை என்றார்.
நம்முடைய பாவங்களைக் கழுவும் பொருட்டே அவர் யோவான் ஸ்நானகன் மூலம் ஞானஸ்நானம் பெற்றார். சிலுவையில் மரணமடைந்தார். மறுபடியும் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்து பாவங்கள் மறுபடியும் பிறக்க பாதை அமைத்தார்.
ஆகவே இயேசு பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டி நிக்கொதேமுவிற்கு விளக்கமளித்தார். “பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பலோகத்தில் இருக்கிறவருமான மனுஷகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்.” (யோவான் 3:13-15) மோசேயினால் சர்ப்பம் வணாந்தரத்திலே உயர்த்தப் பட்டது போல் அவரை விசுவாசிப்போர் நித்திய ஜீவனை அடையும் படிக்கு மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.
இயேசுவின் “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” என்ற வாக்கியங்களின் பொருள் யாது? அவருடைய ஞானஸ்நானமும், இரத்தமும் மனிதகுலத்திற்கு எப்படி பாவ மன்னிப்பை அளிக்கும் என்று பழைய ஏற்ப்பாட்டின் இந்த வாக்கியங்கள் மூலம் விளக்குகிறார்.
அவர் சிலுவையில் மரணமடையும் முன்பாகவும், அவர் உயர்த்தப்படுவதற்கு முன்னும், யோவான் ஸ்நானகனால், உலகின் பாவங்களை ஞானஸ்நானம் மூலம் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் எந்தப் பாவங்களுமில்லாமல், அவர் சிலுவையில் மரிக்க இயலாது. சிலுவையில் மரிக்கும் பொருட்டு, உலகின் பாவங்களை எல்லாம் யோவான் ஸ்நானகன் மூலம், ஞானஸ்நானம் பெற்று முதலில் அவர்மீது ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நம்முடைய பாவங்களை எல்லாம் அவர் ஏற்றுக் கொண்டு, அதற்கு கூலியாக தம்முடைய இரத்தத்தைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே பாவிகளை நாசத்திலிருந்து காப்பாற்ற முடியும். இந்தப்படியேநீரினாலும் ஆவியினாலும் கிடைக்கும் இரட்சிப்பாகிய மறுபடி பிறத்தலை இயேசு அருளினார்.
ஆகவே, இயேசுவை நம்பும் யாரும், ஞானஸ்நானம் எனும் ஆடையை உடுத்து, அவருடன் மரித்து, அவருடன் மீண்டும் உயிருடன் எழும்ப வேண்டும். பிற்காலத்தில் நிக்கொதேமு இது குறித்து புரிந்துக் கொண்டான்.
 
 
சர்ப்பம் உயர்த்தப்படும்போது
 
இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்?
ஏனெனில் எல்லா பாவங்களையும் ஞானஸ்நானம் மூலம் அவர் ஏற்றுக்கொண்டார்.
 
மோசே எப்படி வென்கலச்சர்பத்தை வனாந்தரத்திலே உயர்த்தினான் என்று உங்களுக்குத் தெரியுமா? இச்சம்பவம் எண்ணாகமம் 21-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்திலிருந்து குடிபெயரும்போது மன உறுதி இழந்து, கர்த்தருக்கும் மோசேயிற்கும் எதிராக பேசலானார்கள்.
இதன்பலனாக, கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பத்தை அவர்கள் மத்தியில் அனுப்பினார். அது அவர்களின் கூடாரங்களுக்குள் நுழைந்து அவர்களைக் கடித்துக் கொன்றது. அது அவர்களைக் கடித்தவுடன், அவர்கள் உடல் வீக்கம் கண்டு இறந்தார்கள். இதனால் நிறைய பேர் மரித்தனர்.
இம்மக்களின் தலைவனான மோசே, தன் மக்கள் சாகத் தொடங்கிய போது, கர்த்தரிடம் பிரார்த்தனைச் செய்தான். கர்த்தர் மோசேயிடம் கூறினார். வெண்கலத்தில் ஒரு கொள்ளிவாய்ச் சர்பத்தைச் செய்து ஒரு கம்பத்தில் கட்டி உயர்த்து என்று. கர்த்தர் மோசேயிடம் மேலும் கூறினார், யாரெல்லாம் இதனைப் பார்க்கிறார்களோ அவர்கள் வாழ்வடைவார்கள். மோசே கர்த்தர் கூறியபடிச்செய்து, மக்களிடம் கர்த்தரின் வார்த்தைகளை தெரிவித்தான். அவரின் வார்த்தைகளை நம்பி, வெண்கலச் சர்ப்பத்தை பார்த்தவர்கள் சுகமடைந்தனர். அதுபோல் நாமும் சாத்தானின் கொடிய விஷக்கடியிலிருந்து தப்பவேண்டும். இஸ்ரவேல் மக்கள் மோசேயிற்கு செவிசாய்த்து, கம்பின் உச்சியிலிருக்கும் வெண்கலச் சர்ப்பத்தை நோக்கினார்கள். இப்படியாக அவர்கள் சுகமடைந்தனர்.
இச்சர்ப்பம் வெளிப்படுத்திய செய்தி யாதெனில், மக்களின் மரணம் இயேசு கிறிஸ்துவின் மீது, அவரின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணம் மூலமாக வந்தது என்பதாகும். உலக மக்கள் எல்லோரின் பாவங்களுக்கும் கிரயமாக சிலுவை மரணத்தை அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். இப்படியாக நம்முடைய தண்டனைளை ஒரு முடிவிற்கு கொண்டு வந்தார்.
சர்பத்தின் விஷம் போன்ற சாத்தானின் இச்சைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். நம்முடைய பாவங்களிற்குப் பிராயச்சித்தமாக, அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து மீண்டும் அவரை விசுவாசிப்போரை இரட்சிக்கும்படியாக உயிருடன் எழ வேண்டியிருந்தது.
யாரெல்லாம் இயேசு நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தத்தை, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமும், இரத்தம் மூலமும் செலுத்தி நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு, மறுபடியும் பிறக்கலாம் என்பதை நம்புகிறார்களோ, அவர்கள் பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலர்கள் வென்கலப் பாம்பைப் பார்த்து தப்பியது போல், இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறப்பார்கள்.
அவருடைய யோவான் ஸ்நானகன் யோர்தான் நதியில் செய்வித்த ஞானஸ்நானத்தினாலும், அவர் சிலுவையில் மரித்ததனாலும், மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்ததன் மூலமும், நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான முழுக்கூலியையும் கொடுத்துவிட்டார். இப்பொழுது அவரை நம்புகிறவர்கள் அவருடைய இரத்ததினால் ஆசிர்வதிக்கப்பட்டு இரட்சிப்படைவார்கள்.
“பரலோகத்தில் இருந்திறங்கினவரும், பரலோகத்தில் இருக்கிறவருமான மனுஷ குமாரனேயல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை”. (யோவான் 3:13). நம்முடைய பாவங்களுக்கு தம்முடைய ஞானஸ்நானம் மூலமும், சிலுவையில் சிந்திய இரத்தம் மூலமும் இயேசுவானவர் கிரயம் செலுத்தியதின் மூலம் பரலோகத்தின் கதவுகளை நமக்குத் திறந்தார். இயேசு கூறினார் “நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”. (யோவான் 14:6 )
இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டதால், பரலோகக் கதவுகள் திறக்கப்பட்டன. இயேசுவின் மூலம் இரட்சிப்பு என்பதை நம்புகிறவர்கள் எல்லாம் இரட்சிக்கப்படுவார்கள். இயேசு ஏற்கெனவே பாவத்திற்கான விலையை கொடுத்துவிட்டார். ஆகவே யாரெல்லாம் நீர், இரத்தம் மற்றும் ஆவியைப் பற்றிய உண்மைகளை நம்புகிறார்களோ, அவர்கள் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கலாம்.
இயேசு நம்மை நீர் மற்றும் ஆவியின் நற்செய்தியின் மூலம் இரட்சித்தார். மறுபடியும் பிறத்தல் என்பது ஞானஸ்நானத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் அவர் கர்த்தர் என்பதையும் நம்புவதால் வரும்.
“சர்ப்பமானது மேசேயினால் வனாந்திரத்திலே உயத்தப்பட்டது போல மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்” (யோவான் 3:14). இந்த வசனத்தின் பொருள் யாது? இயேசு ஏன் சிலுவையில் அறையப்படவேண்டும்? நம்போல் அவர் பாவியா? நம்போல் அவர் பலவீனமானவரா? நம்மைப் போல் அவர் குறை உள்ளவரா? இல்லை அவர் அப்படி இல்லை.
அப்படியானால் அவர் ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும்? நம்மை இரட்சிக்கவும், நம்முடைய பாவங்களுக்கு கிரயத்தைக் கொடுக்கவுமே அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவர் நம்மை பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டே ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டார்.
இரட்சிப்பின் சத்தியம் இதுவே. நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறப்பதே அது. பாவத்தின் கிரயமாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவருடைய சிலுவை மரணத்தையும் யாரெல்லாம் நம்புகிறார்களோ, அவர்களுக்கு இயேசு புதிய வாழ்வைக் கொடுத்தார்.
 
 
நீர் மற்றும் ஆவி என்பதன் பொருள்.
 
நீர் மற்றும் ஆவி என்பதன் பொருள் யாது?
நீர் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், ஆவி அவர் கர்த்தர் என்பதையும் குறிக்கிறது.
 
வேதம் கூறுகிறது. நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நம்பினால் மறுபடியும் பிறப்போம் என்று. கர்த்தரின் பிள்ளைகளாவது மற்றும் மறுபடியும் பிறப்பது என்பது வேத வாக்குகளினால் சாதிக்கப்படுகிறது. நற்செய்தியானது, நம்முடைய பாவங்களுக்கு கொடுக்கப்பட்ட கிரயமாகிய நீர், இயேசுவின் இரத்தம் மற்றும் ஆவியாகும்.
வேதாகமத்தைப் பொறுத்தவரை நீர் என்பது இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது (1 பேதுரு 3:21) ஆவி என்பது இயேசு கர்த்தர் என்பதைக் குறிக்கிறது. இயேசு உலகத்திற்கு மனிதனாக, மாமிசத்துடன் பிறந்து, அவருடைய ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும், கிரயம் செலுத்தினார் என்பது மறுபடி பிறத்தலுக்கான உண்மையாகும்.
அவர் நம்முடைய பாவங்கள் யாவற்றையும் ஞானஸ்நானம் மூலம் தம்மீது ஏற்றுக்கொண்டு அதற்கான விலையை சிலுவை மரணம் மூலம் கொடுத்தார். ஞானஸ்நானம் பெற்றதனாலும், சிலுவையில் இரத்தம் சிந்தியதாலும், அவரை நம்புபவர்களை இரட்சித்தார்.
ஞானஸ்நானமும், அவரின் இரத்தமும், நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பதைக் குறிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். நீராலும் ஆவியாலும் மறுபடி பிறந்தவர்களால் மட்டுமே பரலோகத்தைக் காணவோ அதனுள் பிரவேசிக்கவோ இயலும். இயேசு நம்மை ஞானஸ்நானமாகிய நீராலும், அவர் இரத்ததினாலும், அவர் ஆவியாலும் இரட்சித்தார். நீங்கள் இதனை நம்புகிறீர்களா?
இயேசுவே பரலோகத்தின் உயர்ந்த ஆசாரி. அவர் இவ்வுலகிற்கு நம் பாவங்களுக்கு கூலி கொடுப்பதற்காக வந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்றார். சிலுவையில் இரத்தம் சிந்தினார். மறுபடியும் எழுந்தார். இப்படியாக அவரை நம்புவோருக்கு இரட்சகரானார்.
இயேசு யோவான் 10:7 இல் இவ்வாறு கூறுகிறார். “நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”. இயேசு பரலோக கதவண்டையில் நிற்கிறார். யார் நமக்காக கதவைத் திறப்பது? அது இயேசுவாகும்.
அவரின் இரட்சிப்புக்குறித்த உண்மை தெரியாத அவரின் விசுவாசிகளுக்கு முகத்தைத் திருப்புகிறார். அவர் அவருடைய ஞானஸ்நானத்தையும், இரத்ததையும், ஆவியையும் நம்பாதவர்களை மறுபடி பிறக்க அனுமதியளியார். அவருடைய வேத வாக்குகளையும், அவருடைய பரிசுத்தத்தையும் நம்பாதவர்களையும் அவர் கர்த்தர் என்பதை ஏற்க மறுப்பவர்களையும், காணும்போது முகத்தை திருப்பிவிடுகிறார்.
எழுதப்பட்ட உண்மை யாதெனில் அவர் இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து, ஞானஸ்நானம் பெற்று, நம்முடைய உலகின் பாவங்களுக்கு பலியாக சிலுவையில் மரித்தார். நமக்காகவே அவர் சிலுவையில் மரித்தார். சிலுவை மரணத்திற்கு பிறகு மூன்றாம் நாள் உயிருடன் எழும்பினார். இந்த உண்மைகளை நம்ப மறுப்பவர்கள் கர்த்தரால் சபிக்கப்பட்டு நாசமடைவார்கள். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று எழுதப்பட்டுள்ளது.
ஆயினும், அவருடைய ஞானஸ்நானத்தையும், இரத்தத்தையும் நம்பியதால் ஆசீர்வாதமான பாவ மன்னிப்பை கிடைக்கப்பட்டவர்களும் இருதயம் பரிசுத்தமானதாக மாற்றப்பட்டவர்களும். பரலோகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவர். இதுவே மறுபடியும் பிறப்பதைக் குறித்த உண்மையான நற்செய்தி. இந்நற்செய்தி நீர், இரத்தம் மற்றும் ஆவியினால் வந்தது. யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் இரத்தத்தையும் நம்புகிறார்களோ அவர்கள் மட்டுமே மறுபடியும் பிறக்க முடியும். யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர், குருதி மற்றும் ஆவியை நம்புகிறார்களோ அவர்கள் பாவமற்றவர்கள். அவர்களே உண்மையில் மறுபடியும் பிறந்தவர்கள்.
நிக்கொதேமு எப்படி இந்த உண்மையைப் பற்றி எச்சரிக்கை இல்லாதிருந்தானோ, அவ்வாறே இன்றும் பலர் உண்மையான நற்செய்தி தெரியாமல் இயேசுவை நம்புகிறார்கள். நிக்கொதேமுவின் சமூகம் முரட்டாட்டம் பிடித்தது. ஆயினும் உண்மையான நற்செய்தியை இயேசுவினிடமிருந்து அவன் கேட்டான். இயேசு சிலுவயில் அறையப்பட்ட போது அவரை அடக்கம் பண்ண வந்தவர்களில் அவனும் ஒருவன். அப்பொழுது அவன் நம்பிக்கைக்குள் வந்திருந்தான்.
இந்நாட்களில் பெரும்பாலான நமக்கு இயேசுவின் நீர் மற்றும் ஆவியைக் குறித்த உண்மைத் தெரியவில்லை. மேலும் பெரும்பாலானவர்கள் நற்செய்தியைக் கேட்கும்போது அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இரங்கத்தக்க நிலை இது.
நாம் மறுபடி பிறப்பதற்கான வாய்ப்பை இயேசு ஏறபடுத்தினார். எது நம்மை மறுபடியும் பிறக்கச் செய்கிறது? நீர், இரத்தம் மற்றும் ஆவி. இயேசு ஞானஸ்நானம் பெற்றதால் நமது பாவங்களை எடுத்துப் போட்டார். அவர் சிலுவையில் மரித்து, மீண்டும் மரித்தோரிலிருந்து உயிருடன் எழும்பினார்.
யாரெல்லாம் அவரை நம்புகிறார்களோ அவர்களுக்கு மறுபிறப்பை அருளிச்செய்து ஆசீர்வதிக்கிறார். இயேசுவே இரட்சகர்; அவரே, அவரை நம்புவோரை மறுபடியும் பிறக்கச் செய்கிறார். வானத்தையும் பூமியையும், இடையிலுள்ள யாவையும் படைத்த இயேசுவுடன் எப்போதும் இருக்க ஜெபம் செய்யவும்.
யோவான் 3:16 கூறுகிறது. “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” இயேசுவை நம்புவதன் மூலம், நிரந்தர வாழ்வை பெற்றுக்கொண்டோம். நீரையும் ஆவியையும் நம்பியதால் நாம் மறுபடியும் பிறந்தோம். உண்மை யாதெனில், இரட்சிப்பைக்குறித்த நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் குருதியை நம்புவதோடு இயேசுவே இரட்சகர், அவரே கர்த்தர் என்பதையும் நம்புகிறவர்கள் இரட்சிக்கப் படுவார்கள்.
இந்த நற்செய்தியை நாம் நம்ப மறுத்தால், பாதாளத்திற்குள் நிரந்தரமாக வீசப்படுவோம். அதனால் தான் இயேசு நிக்கொதேமுவிற்கு கூறினார். “பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?”
கர்த்தர் நமக்காக என்ன செய்தார்? இயேசுவினால் கிடைக்கப்பட்ட இரட்சிப்பு நம்மை மறுபடியும் பிறக்கச் செய்தது. இயேசு நம்மை இவ்வுலகத்தினின்றும், சாத்தானிடமிருந்தும் உலகின் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்தார். பாவத்தின் மூலம் கிடைக்கும் தண்டனையிலிருந்து உலக மக்களை காப்பாற்றுவதற்காக, இயேசு நம்முடைய பாவங்களை ஞானஸ்நானம் மூலம் தன்மீது ஏற்றுக்கொண்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார்.
இரட்சிப்படைய வேண்டுமா? இல்லையா? என்பது நமது விருப்பம். மறுபடியும் பிறப்பதற்கான இரட்சிப்படைதல் இயேசுவின் ஞானஸ்நானம், மற்றும் இயேசுவின் இரத்தம் ஆகியவற்றால் வரும் இரட்சிப்பு, ஆகியவற்றை நம்புவதால் கிடைக்கிறது.
கர்த்தர் நமக்கு இரண்டு விதமான ஆசீர்வாதங்களைக் கொடுத்துள்ளார். முதலாவது பொதுவான ஆசீர்வாதம். இது இயற்கையின் எல்லாவற்றையும், சூரியன், காற்று முதலியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இது பொது ஆசீர்வாதம் எனப்படுவதற்கான காரணம், இது பாவிகள், நீதிமான்கள் உட்பட எல்லோருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது.
அப்படியானால் சிறப்பு ஆசீர்வாதம் என்பது என்ன? நம்முடைய பாவங்களினால் கிடைக்கும் மரணத்திலிருந்து நம்மை இரட்சிக்கும், நீர் மற்றும் ஆவியினால் கிடைக்கும் மறுபடியும் பிறத்தல் என்பதே சிறப்பு ஆசீர்வாதமாகும்.
 
 
சிறப்பான ஆசீர்வாதம்
 
கர்த்தர் நமக்கருளின ஆசீர்வாதம் என்ன?
தம்முடைய ஞானஸ்நானம், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் நம்மை மீண்டும் பிறக்கச் செய்ததே.
 
யோவான் 3:16 இல் எழுதப்பட்டுள்ளது. “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” இது சிறப்பு ஆசீர்வாதத்தைப் பற்றி விவரிக்கிறது; இயேசு மனித உடலில் இவ்வுலகிற்கு வந்து நம்முடைய பாவங்களை கழுவினார். இதன் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று நமக்காக சிலுவையில் அறையப்பட்டார். ஆகவே உண்மையில் நம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கப்பட்டோம். இதுவே சிறப்பான ஆசீர்வாதம் ஆகும்.
இயேசு நம்மை இரட்சித்து, பாவிகளாயிருந்த நம்மை, நீதிமான்களாக மாற்றினார் என்பது உண்மை. கர்த்தரின் சிறப்பான ஆசீவாதத்தை, இந்த உண்மையை நம்புவதால் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்களனைவரும் இதனை நம்புகிறீர்களா?
உங்கள் வாழ்வு முழுவதும் எத்தனை நம்பிக்கையுடன் நீங்கள் இருந்தாலும், இந்தச் சிறப்பு ஆசீர்வாதம் வேண்டாம் என்றால் உங்கள் நம்பிக்கைகள் வீண்போகும்.
இதனை எப்பொழுதும் பிரசங்கிக்கிறேன். மறுபடி பிறப்பதற்கான ஒரே வழி இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையையும் நம்புவதுதான் என்பதை நான் போதிக்க மறக்கவில்லை. வேதாகமத்தில் உள்ள எல்லா நூல்களும் இயேசுவின்மூலம் மறுபடியும் பிறப்பதற்கான ஆசீர்வாதமே சிறப்பு ஆசீர்வாதம் என்று கூறுகின்றன. இதுவே நாம் பேசிக்கொண்டிருக்கும் பொருள் ஆகும். “கர்த்தரின் எந்த ஒரு ஆசீர்வாதமும்” பாவிகள் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றின் மூலம் பெறும் இரட்சிப்பை விட பெரிதாகக் கூறப்படவில்லை.
இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை மரணமுமே கர்த்தர் அருளிய சிறப்பு ஆசீர்வாதமாகும். இவ்வுலகின் கள்ளப் போதகர்களுக்கு இது குறித்து எதுவும் கூறமுடியாது. இந்தக் கள்ளப் போதகர்கள் தேவதூதர்களின் வெளிச்சத்தை ஒத்த ஆடையை அணிந்துள்ளனர். அவர்கள் கிறிஸ்தவம் கூறும் நல்லொழுக்கத்தையும், மனிதாபிமானத்தையும் பட்டயமாக தரித்திருக்கிறார்கள், ஆம், இது உண்மை. அவர்கள் கர்த்தரின் இந்த சிறப்பு ஆசீர்வாதத்தை அலட்சியம் செய்வதால், அற்புதங்களைச் செய்வது, சுகமில்லாதவர்களை குணமாக்குவது எல்லாம் மோசமான செயல்கள்.
கர்த்தரின் இந்த சிறப்பு ஆசீர்வாதமே, பாவிகளாகிய நமக்கு, கர்த்தர் அருளிய நற்செய்தியாகிய பாவமன்னிப்பு. இந்த சிறப்பு ஆசீர்வாதம் மூலம் கர்த்தர் நாம் மறுபடியும் பிறக்க அனுமதி அளித்தார். அவர் தம்முடைய ஞானஸ்நானம், இரத்தம், மரணம், உயிர்த்தெழுதல் மூலமாக நம்மை புதிதாக்கினார். நம்மை அவரின் பாவமற்ற பிள்ளைகளாக்கினார்.
இதனை நம்புகிறீர்களா? - ஆம் - நீங்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவரா? - ஆம் - இயேசுவின் ஞானஸ்நானம், அவர் இரத்தம், அவர் மரணம், அவர் உயிர்த்தெழுந்தது இதுவே கர்த்தர் நீர் மற்றும் ஆவி மூலம் நமக்கு கொடுத்த சிறப்பு ஆசீர்வாதமாகும். இதுவே சிறப்பு ஆசீர்வாதம் குறித்த நற்செய்தியாகும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - அவர் நம்மை இந்த சிறப்பு ஆசீர்வாதம் மூலம் இரட்சித்தார்.
நிறைய கிறிஸ்தவ விசுவாசிகள் கர்த்தரின் சிறப்பு ஆசீர்வாதம் பற்றி எதுவும் தெரியாமலிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. அவர்களுக்கு நற்செய்தியாகிய ஞானஸ்நானம் மற்றும் குருதியை குறித்தோ, நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பது குறித்தோ தெரியாது. குருட்டுத்தனமாக அவர்களின் சொந்த வழிகளிலும் மதத்தின் நல் வழிகளிலும் அவர்கள் பாதை தேடுகிறார்கள். மிகுந்த அறிவீனர்களாக அவர்கள் இருக்கின்றனர்.
கிறிஸ்தவ மதம் வெகு காலமாக நம்முடன் இருக்கிறது, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அது செப்பம் செய்யப்பட்டது. ஆனால் இன்றும் கொரியா மற்றும் உலகம் முழுவதும் கர்த்தரின் சிறப்பு ஆசீர்வாதத்தையும், மறுபடியும் பிறத்தலைப்பற்றிய உண்மையையும் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
ஆயினும், நாம் உலகத்தின் கடைசி காலங்களில் வாழ்வதால், இந்த உண்மைகளை கர்த்தர் அவர்களுக்கு வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.
பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கு நீதிமான்களாக வேண்டும். பாவிகள் மறுபடியும் பிறக்க வேண்டும். இது நீர் மற்றும் ஆவியைப்பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்வதால் வருகிறது. நிறைய கிறிஸ்தவர்கள் மறுபடியும் பிறக்க கடும் முயற்சிகளைச் செய்கின்றனர்.
ஆயினும், அவர்கள் மறுபடியும் பிறப்பதன் உண்மையான கருத்தை புரிந்துகொள்ளாவிட்டால், அவர்கள் நம்பிக்கை வீண். அவர்கள் பரலோக ராஜ்ஜியத்திற்குச் செல்ல மறுபடியும் பிறக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மறுபடியும் பிறத்தலுக்கான உண்மையின் சிறிய அளவும் தெரியாது.
அவர்கள் தங்களுக்குள்ளே கீழ் கண்டவாறு தீர்மானிக்கிறார்கள். நாம் முழு நம்பிக்கையுடன் விசுவாசிக்கிறோம். நமது இருதயம் நெருப்பாய் இருக்கிறது, இதுவே மறுபடியும் பிறப்பதாகும். ஆனால் சொந்த அனுபவங்கள் மூலம் மறுபடியும் பிறக்க முயற்சி செய்வதோ, மத சடங்காச்சாரியங்களில் ஆர்வம் காட்டுவதோ தவறான நம்பிக்கைக்கு வழி நடத்தும்.
 
 
மறுபடியும் பிறக்கச் செய்வதற்கு வழி காட்டும் வேதவாக்கு
 
நம்பிக்கைக்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
இயேசு நம்மை இரட்சிக்க செய்தவற்றை நம்புவது நம்பிக்கையாகும். அதே சமயம் மதம் ஒருவரின் சொந்த யோசனைகளையும் அவர்கள் காரியங்களையும் சார்ந்துள்ளது.
 
மறுபடியும் பிறத்தலைப் பற்றி 1 யோவான் 5:4-8 இல் வெகுத்தெளிவாக நீர், இரத்தம் மற்றும் ஆவியை நம்புவதால் மட்டுமே மறுபடியும் பிறக்க முடியும் என்பதைக் கூறுகிறது. நாம் மறுபடியும் பிறக்கவேண்டுமானால் கீழ்கண்டவற்றை தெளிவாக மனதில் கொள்ளவேண்டும். மறுபடியும் பிறப்பது சத்தியமான வேத வாக்குகளின் மூலம் மட்டுமே சாத்தியாமாகும். சில காட்சிகள், பல பாஷைகளில் பேசுதல், ஒரு சில உணர்ச்சியூட்டும் அனுபவங்கள் நம்மை மறுபடியும் பிறப்பதற்கு வழி நடத்தாது.
இயேசு யோவான் மூன்றாம் அதிகாரத்தில் கூறுகிறார். ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான். ஒருவன் மறுபடியும் பிறக்கவேண்டும் என்றால், பொதுவாக அவன் இயேசுவை இரண்டு முறை நம்பவேண்டும். முதலாவது மதம் கூறும் வழிகளினாலும், கர்த்தரின் கட்டளைகள் மூலமாக தான் பாவி என்பதை உணர்வதாலும் அவன் இயேசுவை நம்புகிறான். கர்த்தரின் கட்டளைகள் மூலம் தான் எப்படிப்பட்ட பாவி என்பதை உணர்ந்து அவன் இயேசுவை விசுவாசிக்கிறான்.
உலகின் மதங்களுடன் சம்பந்தப்படுத்தி, இயேசுவிடம் நாம் நம்பிக்கை வைக்கலாகாது. கிறிஸ்தவம் இன்னும் ஒரு வெறும் மதமல்ல. அதுவே நம்பிக்கையின் மூலம் ஜீவ வாழ்வை பெறுவதற்கான ஒரே வழி.
யாரேனும் இயேசுவை ஒரு மதமாக கருதி நம்பினால் அவன் வெறுங்கையன் ஆவான். அவன் வெறுமையானதும், ஒழுங்கீனம் உள்ளதும், பாவம் நிறைந்ததுமான இருதயத்துடன் இருப்பான். இது உண்மையில்லையா? நீங்கள் பரிசேயர் போன்ற வேஷக்காரர்களாக வேண்டாம்.
எல்லோரும் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக விரும்புகிறார்கள், ஆயினும் ஒருவன் கிறிஸ்தவத்தை ஒரு மதம் என்றென்னினால், அவன் வேஷக்காரனாகவும், இருதயம் முழுவதும் பாவத்திலுமாக முடிவடைவான். நாம் மறுபடியும் பிறப்பதன் சத்தியத்தை கட்டாயமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் கிறிஸ்தவத்தை ஒரு மதமாக நம்பி, மறுபடியும் பிறக்காதவர்களாகிறார்களோ, அவர்கள் பெரும் குழப்பத்திற்கும் ஒரு வெறுமையான இருதயத்தை பெறும் நிலைக்கும் ஆளாகிறார்கள். ஒருவன் மறுபடியும் பிறக்காமல் இயேசுவை நம்பினால் அவன் நம்பிக்கை தவறானது, ஆகவே அவன் மாய்மாலக்காரனாகிறான். அவன் வெளியரங்கமாக எல்லார் கண்களுக்கும் பரிசுத்தமாகத் தெரிகிறான். ஆனால் அவன் படுதோல்வியை அடைகிறான்.
கிறிஸ்தவத்தை நீங்கள் ஒரு மதமாக நினைக்கும்வரை நீங்கள் ஒரு பாவி. ஒரு கபடவேஷதாரி. மிஞ்சியிருக்கும் நாட்களை புலம்பலில் கழிப்பீர்கள். உங்கள் பாவத்தில் இருந்து விடுதலை பெற விரும்பினால், எழுதப்பட்டிருக்கும் உண்மைகளை நம்பவேண்டும். அது நற்செய்தியாகிய நீர், குருதி மற்றும் ஆவியாகும்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிடைக்கும் பாவ மன்னிப்பின் இரகசியத்தை தேடல்
 
நம்மை மறுபடியும் பிறக்கச் செய்வது எது?
இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல்.
 
என்றும் மாறாத வேத வாக்கின் மூலம் எவராலும் மறுபடியும் பிறக்கமுடியும் என்பதை வேதம் கூறுகிறது. நாம் அப்போஸ்தலர்களின் வாக்குகளை இப்பொழுது பார்ப்போமாக. 1 பேதுரு 3:21 இவ்வாறு கூறுகிறது. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.”
வேதாகமத்தில் இயேசுவின் ஞானஸ்நானமானது நம் இரட்சிப்பின் குறியீடு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசுவை விசுவாசிப்போர் எல்லாம் நமது ஞானஸ்நானத்தை மட்டும் பற்றியல்ல, இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் பாவிகளாகிய நமக்கு புது வாழ்வை அளித்தது. இதனை நம்புங்கள், ஆகவே நீங்கள் மறுபடி பிறப்பீர்கள், இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை சம்பாதிப்பீர்கள்.
இரட்சிப்பு இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலம் கிடைக்கிறது. இதனால் நாம் இரட்சிக்கப்படுகிறோம். நீதிமான்களாக நித்திய வாழ்வினை சம்பாதிக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வேத வாக்கின் மூலம் இரட்சிப்பின் சத்தியத்தை நம்பும்போது, நம்முடைய பாவங்கள் எல்லாக் காலங்களிலும் சுத்திகரிக்கப் பட்டவைகளாக இருக்கும்.
மறுபடியும் பிறப்பதற்கு இரண்டாம் முறை பிறக்கவேண்டும். நாமெல்லாம் மத கண்ணோட்டத்தின் மூலமே இயேசுவை விசுவாசிக்கத் தொடங்குகிறோம், பிறகு உண்மயை அறிந்து, விசுவாசத்தின் மூலம் மறுபடியும் பிறக்கிறோம். இயேசு என்பதன் பொருள் “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21).
நாம் இயேசுவை விசுவாசித்து, அவர் மனித குலத்திற்கு என்ன செய்தார் என்பதை அறிந்தால் நம்முடைய பாவங்களிலிருந்து, நாம் கழுவப்பட்டு புத்தம் புதிய மக்களாகிறோம். முதலில் இயேசுவை ஒரு மதமாக நம்புகிறோம். பிறகு நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தம் ஆகியவற்றைக் கேள்விப்பட்டு விசுவாசிக்கும்போது நாம் மறுபடியும் பிறக்கிறோம்.
எந்த சத்தியம் நம்மை மறுபடியும் பிறந்தவர்களாகச் செய்கிறது? முதலாவது இயேசுவின் ஞானஸ்நானம், பிறகு அவர் சிலுவையில் சிந்திய இரத்தம், கடைசியாக அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழும்பியது. மறுபடியும் பிறந்தோம் என்பது இயேசுவை நம் கர்த்தராகவும், நம்முடைய இரட்சகராகவும் நம்புவதாகும். பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் எப்படி பிறந்தார்கள் என்று பார்ப்போம்.
 
 
பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பாவ பரிகார முறை; கைகளை வைப்பதும், இரத்தப் பலி கொடுப்பதும்
 
பழைய ஏற்பாட்டின் மறுபடியும் பிறப்பதைக் குறித்த நற்செய்தி என்ன? முதலில் லேவியராகமம் முதல் அத்தியாயத்தை படிப்போம். மறுபடியும் பிறப்பதைக் குறித்து அது என்ன கூறுகிறது? லேவியராகமம் 1:1-5 இல் “கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால் உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலி செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தை தெரிந்தெடுத்து பலி செலுத்தவேண்டும். அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகன பலியானால், அவன் ஒரு பழுதற்ற காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கீகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அந்த காளையை கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புகூடார வாசலில் இருக்கிற பலி பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவீர்கள்.”
இஸ்ரவேலர்கள் எப்படி தம்முடன் பலியிடும் முறைகளின் மூலமாக ஐக்கியமாக முடியும் என்பதை லேவியராகமத்தில் கர்த்தர் கூறுகிறார். இதுவே சத்தியம், இதனைத் தெளிவாக நாம் அறிந்துக் கொள்ளவேண்டும். இந்த வார்த்தைகளை ஆராய்வோமாக.
ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து கர்த்தர் மோசேயை அழைத்துப் பேசினார். அது இஸ்ரவேலர்களின் பாவப் பரிகாரத்தைக் குறித்ததாய் இருந்தது. கர்த்தரின் கட்டளைகளை மீறி இஸ்ரவேலர்கள் பாவம் செய்யும்போது, அதற்கு பாவ பரிகாரமாக அவர்கள் மந்தையிலிருந்து களங்கமில்லாத ஒரு மிருகத்தைக் கர்த்தருக்கு பலியாக கொடுக்கவேண்டும்.
பலியிடப்படும் விலங்கானது கர்த்தர் கூறிய விலங்காகவும், எந்த ஒரு பழுதுமில்லாததாகவும் இருக்க வேண்டும். அதேபோல் கர்த்தர் கூறிய முறைப்படி அவை பலியிடப்பட வேண்டும். பலியிடும் முறைகள் பின் வருமாறு.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் யாரேனும் பாவம் செய்தால் பாவ விடுதலைக்காக கர்த்தரின் முன்பாக அவன் பலிகொடுக்க வேண்டும். முதலில் பலியாகும் மிருகம் களங்கமில்லாததாக இருக்கவேண்டும். இரண்டாவதாக, அவன் பாவங்களை மிருகத்திற்கு இடமாற்றம் செய்யும்பொருட்டுத், தன் கைகளை அம்மிருகத்தின் தலைமீது வைக்கவேண்டும்.
அம்மிருகம் கொல்லப்பட்டவுடன், அதன் இரத்ததை பலிபீடத்திலுள்ள கொம்புகளில் இட வேண்டும். மீதி இரத்ததைத் தரையில் கொட்ட வேண்டும். விடுதலைக் கிடைப்பதற்கான கர்த்தர் ஆசீர்வதித்தருளிய ஆசரிப்புக்கூடார முறைமை இதுவேயாகும்.
கர்த்தருடைய கட்டளைகளும், பிரமானங்களும் 613 பகுதிகளாக உள்ளன. இவற்றில் எதைச்செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தர் இக்கட்டளைகளையும், சட்டங்களையும் இஸ்ரவேலருக்கு கொடுத்தார். அவர்களுக்கு கர்த்தரின் இக்கட்டளைகளும் சட்டங்களும் சரியென தெரிந்திருந்தாலும், அதன்படி அவர்களால் வாழ முடியவில்லை. ஏனெனில் எல்லோரும் ஆதாமின் மூலமாக 12 வகையான பாவங்களை சொந்தமாக்கியுள்ளோம்.
எனவே, கர்த்தருக்கு முன்பாக சரியானதைச் செய்யும் திறமையை அவர்கள் இழந்தார்கள். இஸ்ரவேலர்கள் நீதிமான்களாகும் திறமையையும் இழந்தார்கள். ஆனால் தொடர்ந்து பாவம் செய்வதிலிருந்து அவர்களால் தப்பமுடியவில்லை. எவ்வளாவு கடினமாக பாவங்களிலிருந்து விலக முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. மனித குலம் பாவிகளாக பிறப்பதும், பாவிகளாக சாவதும், முன்கூட்டியே எழுதப்பட்ட ஒன்றாக இருந்தது.
கர்த்தர் தன்னுடைய அளவுகடந்த இரக்கத்தினால் அவர் ஜனத்திற்கு பலியிடும் முறை மூலமாக பாவ மன்னிப்பு பெற ஒரு வழியைக் கொடுத்தார். ஆசரிப்புக்கூடார முறைகளை அவர் கொடுத்ததன் மூலமாக இஸ்ரவேல் மற்றும் உலகின் எல்லா மக்களும் பாவ விடுதலை பெறமுடிந்தது. பலியிடும் முறையினால் கர்த்தர் மனிதகுலம் மீது எத்தனை நீதியான அன்பு வைத்தார் என்று தெரிகிறது, அவர் உலகம் இரட்சிக்கப்படும் வழியைக் காட்டினார்.
கர்த்தர் மக்களுக்கு பலியிடும் முறையைக் கொடுத்ததுடன் லேவியின் குடும்பத்தாரை இவ்வாராதனையை நடத்த நியமித்தார். இஸ்ரவேலின் கோத்திரத்தில் லேவியின் குடும்பத்தார் மட்டுமே பலியாராதனையை, இஸ்ரவேலருக்காக நடத்துவதற்கு நியமிக்கப்பட்டனர்.
மோசேயும் ஆரோனும் லேவியின் குடும்பத்தார். வேதம் ஆசரிப்புக் கூடாரத்தில் பலியிடுவதற்கான ஒழுங்கு முறைகள் மற்றும் சட்டங்கள், நற்செய்தியாகிய கைவைப்பதன் மூலம், கிடைக்கும் பாவ விடுதலைக் குறித்து பதிவு செய்துள்ளது.
ஆகவே, லேவியரின் பலியிடும் முறைகளை நாம் அறிந்தால், நாமே மறுபடியும் பிறக்கமுடியும். இதனாலேயே ஆசரிப்புக்கூடார பலியிடும் முறைகளைப் பற்றிய, தேவ வார்த்தைகளை நாம் கற்கவேண்டும். இதுவே பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான பகுதியாகும். இறுதியாக நாம் புதியஏற்பாட்டிற்கு வரும்போது, நீர் மற்றும் ஆவியால் கிடைக்கும் மறு பிறப்பு ஆசீர்வாதமாக இருக்கிறது.
 
 
பழைய ஏற்பாட்டின்படி பாவ மன்னிப்பு
 
கர்த்தரின் குணங்கள் என்ன?
நியாயம் மற்றும் அன்பு.
 
லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த மோசேயைக் கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திற்கு அழைத்து, மோசேயின் சகோதரனான ஆரோனை தலைமை ஆசாரியனாக நியமித்தார். ஆரோனின் வேலை மனிதர்களின் பாவங்களை பலி மிருகங்கள் மீது கடத்துவிப்பதாக இருந்தது,
லேவியராகமம் 1:2 இல் கர்த்தர் மோசேயிடம் இவ்வாறு கூறுகிறார். “நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால் உங்களில் ஒருவன் கர்த்தருக்கு பலி செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலாவது ஆட்டு மந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலி செலுத்தவேண்டும்”. கர்த்தர் இங்கே பலி காணிக்கையைப் பற்றி குறிப்பிடுகிறார். எவனொருவன் பாவ மன்னிப்பை வேண்டுகிறானோ, அவன் தன்னுடைய மந்தையிலிருந்து ஆட்டையோ, மாட்டையோ பலி கொடுக்க வேண்டியதாயிருந்தது.
கர்த்தர் அவர்களிடம் கூறினார். “அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கீகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டு வந்து,” (லேவியராகமம் 1:3).
மனிதனின் பாவங்கள் நிமித்தம் மனிதன் பெறக்கூடிய மரணத் தண்டனையிலிருந்து தப்பிக்க அவன் செலுத்தும் இப்பலிகளை கர்த்தர் ஏற்றார். இஸ்ரவேலர்கள் தம் கைகளை பலி மிருகங்களின் தலை மீது வைத்து தம் பாவங்களை இடமாற்றம் செய்தனர். பலி மிருகங்கள் ஒருவனின் சொந்த சித்தத்தினால் அளிக்கப்பட வேண்டும். 4-ஆம் வசனம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
“அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப் படும்படி தன் கையை அதின் தலையின் மேல் வைத்து.” இத்தகைய பலிகள் கர்த்தர் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்தது. ஒரு பாவி பலி மிருகத்தின் தலை மீது அவன் கைகளை வைக்கும்போது, அவன் பாவங்கள் மிருகத்தின் தலைமீது இடமாற்றம் செய்யப்பட்டன. ஆகவே ஒரு பாவி, கர்த்தரின் முன்பாக அவன் கைகளை பலி மிருகத்தின் தலைமீது வைக்கவேண்டும். அப்போது அதனைக் கர்த்தர் ஏற்று அவனுக்கு பாவ மன்னிப்பை அருளுவார்.
இப்பலியைச் செலுத்துபவன் அம்மிருகத்தைக் கொன்று பலி பீடத்தின் மீதிருக்கும் கொம்புகளில் இரத்தத்தை ஊற்றவேண்டும்; மீதி இரத்தத்தை பலி பீடம் முன்பு தரையில் கொட்டவேண்டும். பாவத்திற்கு கூலியாகவும் அதிலிருந்து விடுபடவும் கர்த்தரின் கட்டளைப்படி, இப்பலிகளை அவர்கள் காணிக்கையாக செலுத்தவேண்டும்.
லேவியராகவும் 1:5 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடார வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்க கடவர்கள்.” நாலு மூலைகளிலும் கொம்புகள் வைக்கப்பட்டுள்ள தகன பலிபீடம் ஆசரிப்புக் கூடாரத்தினுள், கதவருகினில் இருந்தது.
ஒருவன் பலி மிருகத்தின் தலையின்மீது அவன் கைகளை வைத்து அவன் பாவங்களை இடமாற்றம் செய்யவேண்டும். பிறகு அவன் அம்மிருகத்தினைக் கொல்லவேண்டும். பிறகு ஆசாரியர் அம்மிருகத்தின் இரத்தத்தை கொம்புகளின் மீது தெளித்தனர். பலிபீடத்திலுள்ள இக்கொம்புகள் நியாயத்தீர்ப்பினைக் குறிக்கின்றன. ஆகவே, இக்கொம்புகளில் இரத்தமிடுவது, பாவிக்காக அம்மிருகம் இரத்தம் சிந்தி, பாவ மன்னிப்பு அடைவதைக் குறிக்கிறது. கர்த்தர் பலி பீடத்திலுள்ள இக்கொம்புகளில் இருக்கும் இரத்தத்தைக் கண்டு, பாவியிடமிருந்த பாவங்களை எடுத்துப்போட்டார்.
எதற்காக இப்பலிகள் இரத்தம் சிந்த வேண்டும்? ஏனெனில் “பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23)” அதே சமயம் இரத்தம் மாமிசத்தின் ஜீவனாய் இருக்கிறது. அதனால் எபிரேயரில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரேயர் 9:22) ஆனபடியால், பலி மிருகத்தின் இரத்தம் சிந்துதலினால், பாவத்தின் சம்பளம் மரணம் என்ற கர்த்தரின் கட்டளை நிறைவேற்றப் பட்டது.
நியாயமாக, பாவியிடமிருந்து இரத்தம் வந்திருக்க வேண்டும். ஆனால் பலி மிருகம் அந்தப் பாவிக்காய் இரத்தம் சிந்தி அவனை பாவமற்றவனாக்கியது. ஆசாரியன் அப்பலி மிருகத்தின் குருதியை அக் கொம்புகளில் ஊற்றியதானது பாவத்திற்கான சம்பளம் செலுத்தப்பட்டதைக் குறிக்கிறது.
நாம் புதிய ஏற்பாட்டின் வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 மூலம் இக்கொம்புகள் நியாயப் புத்தகத்தை குறிப்பிடுவதை அறிந்து கொள்ளலாம். ஆகவே இக்கொம்புகளில் இரத்தத்தை ஊற்றுவது நியாயப் புத்தகத்திற்கு அதனை அளிப்பதற்கு ஒத்ததாகும். இது பாவத்திற்கு பலிமீது கைவைத்ததாலும், அப்பலி இரத்தம் சிந்தியாதாலும் நியாயத் தீர்ப்புக் கிட்டியதைச் சுட்டிக்காட்டுகிறது.
 
 
பாவம் இரண்டு இடங்களில் பதிவு செய்யப் படுகிறது.
 
கர்த்தருக்கு முன்பாக மனிதர் செய்யும் பாவங்கள் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்படுகின்றன. ஒன்று அவர்களின் இருதயப் பலகை. மற்றது கர்த்தரின் முன்பாக விரிக்கப்பட்டிருக்கும் அவரின் ஜீவ புத்தகம்.
எரேமியா 17:1 இல் எழுதப்பட்டுள்ளது. “யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும், உங்கள் பலி பீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.”
லேவியராகமம் 17:11 இவ்வாறு கூறுகிறது “மாமிசத்தின் உயிர் இரத்தத்திலிருக்கிறது.” மாமிசத்தின் உயிர் இரத்தம். நம்முடைய பாவங்களுக்கு இரத்தம் மூலமாகவே கூலி கொடுக்க முடியும். ஆகவே, பலிபீடக் கொம்புகளில் இரத்தம் இடப்பட்டது. சட்டத்தின்படி, எல்லாமே இரத்தத்தினால் சுத்திகரிக்கப் படுகின்றன. மேலும், இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை (எபிரேயர் 9:22).
“பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகன பலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன். அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின் மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின் மேல் கட்டைகளை அடுக்கி, அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும், கொழுப்பையும் பலி பீடத்திலுள்ள அக்கினியிலிருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கி வைக்கக்கடவர்கள். அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின் மேல் சர்வாங்க தகன பலியாகத் தகனிக்ககடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகன பலி.” (லேவியராகமம் 1:6-9)
அதன்படி, ஆசாரியர்கள் தகனபலியை துண்டுதுண்டாக வெட்டி, அதனை பலிபீடத்தின் மேலுள்ள தீயில் வைத்தார்கள். இம்முறை எதனைக் குறிக்கிறது என்றால், கர்த்தருக்கு முன்பாக பாவம் செய்தவன், கொல்லப்பட்டு, இரத்தஞ்சிந்தி, நரகத்திலிருக்கும் தீயினுள் தூக்கி எறியப்படுவதைக் குறிக்கிறது. ஆனால் நியாயத்தீர்ப்பு பலியிடுவதன் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆகவே மக்களால் பாவமன்னிப்பு பெற முடிந்தது.
நீதியின் தேவனுக்கு சர்வாங்கத் தகனப்பலியே நியாயச் சடங்காகும். கர்த்தர் இரண்டு விதிகளைச் செயல்படுத்தினார். ஒன்று நீதியின் விதி மற்றது அன்பின் விதி. இதுவே மனிதகுலம் பாவமன்னிப்பு பெற அனுசரிக்க வேண்டியச் சடங்காகும்.
கர்த்தர் நீதிமானாயிருப்பதனால், அவரே தீர்ப்பெழுதி மரணத்தண்டனை அளிக்கிறார். ஆனால், அவர் மனிதர்களை நேசிப்பதால், அவர்கள் தம் பாவங்களை, பலி மிருகங்கள் மீது இடமாற்றம் செய்ய அனுமதி அளித்தார். புதிய ஏற்பாட்டில்; அவர் நம்மை வெகுவாக நேசித்ததால், அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து பாவிகளாகிய நமக்காக பலியானார். இயேசுவின் ஞானஸ்நானமும், அவரின் சிலுவை மரணமும் இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் கழுவின.
 
 
பழைய ஏற்பாட்டின் படி தினமும் நாம் செய்யும் பாவத்திற்கு பரிகாரம் என்ன?
 
பழைய ஏற்பாடு கூறும் களங்கமில்லா பலி யாரைக் குறிப்பிடுகிறது?
இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது.
 
லேவியராகமம் 4:27 இலிருந்து படிப்போமாக “சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால், தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரிய வரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளின் பழுதற்ற ஒரு பெண் குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து, பாவ நிவாரண பவியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகன பலியிடும் இடத்தில் அந்தப் பாவ நிவாரண பலியைக் கொல்லக்கடவன். அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகன பலிபீடத்துக் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலேயே ஊற்றிவிட்டு, சமாதான பலியிலிருந்து கொழுப்பை எடுப்பது போல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்கு பாவ நிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்” (லேவியராகமம் 4:27-31).
ஆதாமின் சந்தியினர், இஸ்ரவேல் மக்கள் உட்பட இவ்வுலகின் மக்கள் யாவரும் இவ்வுலகில் பிறக்கும் போதே பாவிகளாகப் பிறந்தனர். ஆகவே, நம் இருதயமானது பாவம் நிரம்பியதாக உள்ளது. தீயச் சிந்தனைகள், கள்ளத்தொடர்பு, கொலை, களவு, இச்சை, முட்டாள்தனம் போன்ற எல்லா பாவங்களும் ஒருவனின் இருதயத்தை நிரப்பியுள்ளன.
ஒருவன் தன் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற விரும்பினால், அவன் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்திற்கு களங்கமில்லாத ஒரு மிருகத்தைக் கொண்டு வரவேண்டியதாக இருந்தது. பிறகு அவன் கைகளை அம்மிருகத்தின் தலை மீது வைத்து அவன் பாவங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். அதனைக் கொன்று அதன் இரத்தத்தை கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்கும்பொருட்டு, ஆசாரியரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆசாரியர் நீதி நியமனங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அந்தப் பாவியின் பாவம் நிவர்த்திக்கப் படுகிறது.
கர்த்தருடைய கட்டளைகளும் நியமனங்களும் இல்லாமல், மக்களால், அவர்கள் பாவம் செய்கிறார்களா, இல்லையா, என்பதை அறிய முடியாது. கர்த்தருடைய கட்டளைகளினாலும் அவர் நியமனங்களினாலும் நம்மை ஆராய்ந்து பார்த்தால் நம் பாவங்களைக் கண்டுகொள்ளமுடியும். நம்முடைய பாவங்களுக்கு நமது அளவுகோளினால் தீர்ப்பளிக்கப்படுவதில்லை. அவை கர்த்தரின் கட்டளைகளினாலும், நியமனங்களினாலும் வழங்கப் படுகின்றன.
சாதாரண இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்தனர் - அவை வேண்டுமென்றே செய்யப்படவில்லை; அவர்கள் பிறக்கும் போதே எல்லா வகையான பாவங்களையும் தம் இருதயத்தில் கொண்டிருந்தனர். மனிதன் அவன் பலவீனத்தினால் செய்யும் பாவங்கள் மீறுதல் என்றழைக்கப்படுகிறது. மனிதனின் பாவங்கள், மீறுதல்களையும், பாவச் செயல்களையும் உள்ளடக்கியுள்ளது.
எல்லோரும் முழுமையடையாத மனிதர்களே. இஸ்ரவேலர்களும் முழுமை அடையாதவர்கள் ஆதலால், அவர்கள் பாவிகளாக, பாவம் செய்தனர். நம்முடைய பாவச்செயல்களைக் கீழ்க் கண்டவாறு வகுக்கலாம். நம் மனம் மோசமான சிந்தனைகளில் ஈடுபடுவது பாவமாகும். அச்சிந்தனைகளை நடைமுறைப் படுத்தும்போது, அது மீறுதல் ஆகிறது. இவ்வுலகின் பாவங்கள் இவ்விரண்டையும் உள்ளடக்கியுள்ளன.
பழைய ஏற்பாட்டின்படி, பலி மிருகத்தின் மீது கை வைப்பதன் மூலம், பாவங்கள் இடமாற்றம் அடைந்தன. அதன் பிறகு பாவி, பாவமில்லாதவனானான். ஆகவே, அவன் மரிக்கவேண்டியதில்லை. இந்த பலிகொடுக்கும் முறை, நியாயத்தினதும், கர்த்தருடைய அன்பினதும் நிழலாகும்.
கர்த்தர் நம்மை மண்ணிலிருந்து படைத்ததால், முதலில் நாம் வெறும் புழுதியே. இரத்தத்தை பலி பீடத்திலுள்ள கொம்புகளில் ஊற்றுவதாலும், மீதி இரத்தத்தை பலி பீடத்தைச் சுற்றிலும் ஊற்றுவதாலும், இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களுக்கு நிவர்த்திச் செய்தனர். அவர்களுடைய இருதயப் பலகையிலிருந்த பாவங்கள் அழிக்கப்பட்டன.
“அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின் மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனயாகத் தகனித்து,” வேதாகமத்தில் கொழுப்பு எனப்படுவது, பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. ஆகவே, பாவ நிவர்த்தி வேண்டுமென்றால், கர்த்தர் நியமித்த வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். கர்த்தர் சரியென்று கூறிய வழிகளில் பாவ மன்னிப்பை நமது இருதயங்களில் பெற வேண்டும்.
கர்த்தர் இஸ்ரவேலிடம் பலி கொடுக்கவேண்டிய மிருகங்களாக ஆட்டுக்குட்டியையோ, ஆட்டையோ, கன்றையோ தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். பழைய ஏற்பாட்டின் பலி மிருகங்கள் தெரிந்தெடுக்கப்பட்டவை. ஆட்டுக்குட்டி களங்கமில்லாத ஒரு மிருகம். பலி மிருகங்கள் ஏன் களங்கமில்லாதவைகளாக தேர்ந்து எடுக்கப் பட்டனவென்றால், அவை பரிசுத்த ஆவியினால் தோற்றுவிக்கப்பட்ட மனிதர்களுக்காக பலியிடப்படும் இயேசுவை குறிக்கின்றன.
பழைய ஏற்பாட்டு மனிதர்கள் தம் பாவங்களை களங்கமில்லாத பலி மிருகங்களின் தலையில் கைகளை வைப்பதன் மூலம் இடமாற்றம் செய்தார்கள். ஆசாரியர்கள் பலி ஆராதனையை நடத்தி அவர்கள் பாவத்திற்கு பரிகாரம் செய்தார்கள். இப்படியாகவே இஸ்ரவேல் மக்கள் பாவ விடுதலை பெற்றார்கள்.
 
 
பாவ விடுதலை நாளின் அனுசரிப்பு முறைகள்
 
பாவ விடுதலை நாளில் இஸ்ரவேலர்கள் ஏன் பலியிடவேண்டும்?
ஏனெனில் அவர்களின் ஜீவ நாட்கள் முடியும்வரை பாவம் செய்தார்கள். தினமும் செலுத்தப்படும் பலி அவர்களை கர்த்தர் முன் பரிசுத்தவான்கள் ஆக்கவில்லை.
 
ஆயினும், எப்போதெல்லாம், பாவம் செய்கிறார்களோ அப்பொதெல்லாம் அவர்கள் பலி செலுத்தவேண்டும். பாவ நிவர்த்திக்கென்று பலியிடப்படும் மிருகங்களைப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆகவே, மக்கள் மெதுவாக இதைக் குறித்து கவலை அற்றவர்கள் ஆனார்கள். தினமும் பாவ நிவர்த்தி செய்வது ஒரு நிரந்தர வேலைப் போலாகி விட்டதால், அவர்கள் இந்த பலியிடும் முறைகளிலிருந்து ஒரேயடியாக விலகி நடக்கத் தலைப்பட்டனர்.
நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் நம்முடைய பாவங்களுக்கெல்லாம் நம்மால் பலி செலுத்த முடியாது. அதற்கு முழு மாற்று யாதெனில் கர்த்தர் நியமித்த இரட்சிப்பின் விதி முறைகளை இதயப் பூர்வமாக விசுவாசிப்பதேயாகும்.
நாம் பலவீனர்களாக இருப்பதனால் கர்த்தரின் கட்டளைகளை கைக்கொண்டு நடக்க எத்தனை கடும் முயற்சி செய்தாலும், நாம் எவ்வளவு முழுமை அடையாதவர்கள் என்பதையும், எத்தனை பலவீனமுள்ளவர்கள் என்பதையும் மட்டுமே உணர்வோம். ஆகவே இஸ்ரவேல் மக்கள் முழு வருட பாவத்திற்கான பாவ நிவர்த்தி செய்ய கர்த்தர் ஒரு வழியை ஏற்படுத்தினார். (லேவியராகமம் 16:17-22 )
மேலும் லேவியராகமத்தில் எழுதப்பட்டுள்ளது. “ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களை தாழ்மைபடுத்துவதுமன்றி ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக் கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவ நிவர்த்தி செய்யப்படும். உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை” (லேவியராகமம் 16:29-31).
பாவ நிவர்த்தி தினமான ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் தலைமை ஆசாரியர் பலியாராதனையை நடத்தியபோது, இஸ்ரவேல் மக்கள் அவ்வருடம் முழுவதிலும் செய்த பாவங்கள் நிவர்த்திக்கப் பட்டதால் அவர்கள் மன அமைதிப்பெற்றார்கள். அவர்கள் பாவங்கள் கழுவப்பட்டதால், அந்நாளில் அவர்கள் மனம் அமைதிப்பெற்றது.
ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதியாக தலைமை ஆசாரியரான ஆரோன், பாவ நிவர்த்திக்கான பலியாராதனையை நடத்த வேண்டும். இவ்வேளையில் மற்ற ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையக்கூடாது. முதன்முதலில் ஆரோன் அவனிற்காகவும் அவன் குடும்பத்திற்காகவும் பாவ நிவர்த்திக்கென பலியிட வேண்டும். அதன் பிறகே, இஸ்ரவேல் மக்களுக்காக ஆராதனையை ஏறெடுக்க முடியும், ஏனெனில் ஆரோனும் அவன் வீட்டாரும் பாவம் செய்திருந்தார்கள்.
அவன் பலியாராதனையை இப்படி நடத்தினான். “அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்து கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கு என்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவ நிவாரணப்பலியாகச் சோரப்பண்ணி, போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவ நிவர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போக விடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி” (லேவியராகமம் 16:7-10).
ஆரோன் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் பாவ நிவர்த்திக்கான முறைகளை செய்துவிட்டு “இரண்டு ஆடுகளுக்காகவும் சீட்டு போட்டான்” ஒரு ஆடு கர்த்தருடையது. மற்றது போக்காடாகும்.
முதலில் இரண்டு ஆடுகளும் கர்த்தருக்கு படைக்கப்பட்டன. இங்கு தலைமை ஆசாரியன், அவ்வருடம் முழுவதும் இஸ்ரவேலர் செய்த பாவங்களை, தன் கையை ஆட்டின் தலை மீது வைத்து இடமாற்றம் செய்தான்.
மிகுந்த பரிசுத்த தலத்திலுள்ள கிருபாசனத்திற்கு, இரத்தம் எடுத்துச் செல்லப்பட்டு ஏழு முறை இரத்தம் தெளிக்கப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் கடந்த ஒரு வருடமாகச் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன. இஸ்ரவேலரின் பாவங்களினால் அவர்கள் சாகிறதற்கு பதிலாக, ஆரோன் அவர்கள் பாவங்களை பலி மிருகத்தின் தலை மீது கை வைத்து, இட மாற்றம் செய்து அதனை அவர்களுக்காக தீர்ப்பிற்கு உட்படுத்தினான். பிறகு மற்ற ஆட்டை கர்த்தர் முன் பலியிட்டான். இப்பலி மக்களுக்காக ஏறெடுக்கப்பட்ட பலியாகும்.
 
 
மக்களுக்காக
 
எல்லா மக்களுக்கு முன்பாகவும், ஆரோன் தன் கைகளை இரண்டாம் ஆட்டின் தலைமீது வைத்து கர்த்தர் முன் பாவ அறிக்கைச் செய்தான். “கர்த்தரே, இஸ்ரவேல் மக்கள் கொலை செய்தார்கள், கள்ளத்தொடர்பு வைத்தார்கள். திருடினார்கள், இச்சையடைந்தார்கள், அவர்கள் விக்கிரகங்கள் முன் தலை வணங்கினார்கள். ஔய்வு நாளை அவர்கள் பரிசுத்தமாக ஆசரிக்கவில்லை. உம்முடைய நாமத்தை அவர்கள் வீனில் வழங்கினார்கள். உம்முடைய கட்டளைகளையும் நியமனங்களையும் உடைத்துப் போட்டனர்” இதன் பிறகு அவன் கைகளை எடுத்தான். இதன் மூலம் மக்களின் அவ்வருட பாவங்கள் முழுவதும், பலி மிருகத்தின் மீது இடமாற்றம் செய்விக்கப்பட்டது.
லேவியராகமம் 16:21 படிப்போமாக. “அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின் மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.”
போக்காடு இஸ்ரவேல் மக்களின் பாவங்களைத் தலைமேல் சுமந்து, வனாந்தரத்திலே திரிந்து சாகவேண்டும். போக்காடு எபிரேய மொழியில் “அசாசேல்” என்றழைக்கப்படுகிறது. இதன் பொருள் “வெளியில் போடுவது” என்பதாகும். இதன் கருத்து யாதெனில், கர்த்தர் முன்பாக, இஸ்ரவேலருக்கு பதிலாக சீட்டுப் போடப்பட்டது என்பதாகும்.
ஆகவே இஸ்ரவேலரின் பாவங்கள் போக்காடு மீது ஆரோன் கைவைத்ததால் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்படியாக இஸ்ரவேலரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அவர்கள் தலைமை ஆசாரியன் அவன் கையை ஆட்டின் தலையின் மீது வைத்ததையும், அந்த ஆடு வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டதையும் கண்டபோது, இம்முறைமை மீது நம்பிக்கை வைத்ததால், அவர்கள் பாவநிவர்த்தியினை நிச்சயமாய் அறிந்துக் கொண்டார்கள். பழைய ஏற்பாட்டின் எல்லா முறைகளும், புதிய ஏற்பாட்டின் ‘மறுபடியும் பிறத்தலுக்கான நற்செய்தியின்` நிழலாகும்.
பழைய ஏற்பாட்டின்படி, பலிமிருகம் மீது கை வைத்தலும், இரத்தஞ்சிந்துதலும் பாவ இரட்சிப்பின் நற்செய்தியாகும். புதிய ஏற்பாட்டில் கூட அடிப்படையில் அது ஒன்றே.
 
 
புதிய ஏற்பாட்டின் பாவ மன்னிப்பு நற்செய்தி
 
புதிய ஏற்பாட்டின் படி எல்லா பாவங்களும் எப்படி எடுத்துப் போடப்பட்டது?
மத்தேயு 1:21-25 இல் எழுதப்பட்டுள்ளது. “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது. நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்து கொண்டு; அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”
மனிதர்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி கர்த்தராகிய இயேசு, இம்மானுவேல் என்ற பெயருடன் இவ்வுலகிற்கு வந்தார். ஆகவே அவருக்கு இயேசு என்று பெயரிடப்பட்டது. உலகின் பாவங்களை எடுத்துப் போடும்படி மனித மாமிசமாக அவர் வந்தார். அவர் நம்முடைய இரட்சிப்பை முழுமைசெய்து நம்மை பவங்களிலிருந்து நிரந்தரமாக விடுதலையாக்கினார்.
 
 
மறுபடியும் பிறத்தலின் நற்செய்தி.
 
இயேசு நம்மை நம் பாவங்களில் இருந்து எப்படி விடுதலையாக்கினார்? அவர் ஞானஸ்நானம் மூலமாகவே. மத்தேயு 3:13 ஐ நோக்குவோமாக.
“அப்போழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:13-17)
புதிய ஏற்பாட்டின்படி, இயேசு 30 வயதாகும்போது, யோர்தான் நதியிலிருந்த யோவான் ஸ்நானகனிடம் வந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று, பாவிகளிடமிருந்து எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். இப்படிச் செய்ததினால், கர்த்தரின் நீதியை அவர் முழுமைச்செய்தார்.
 
 
இயேசு யோர்தானில் ஏன் ஞானஸ்நானம் பெற்றார்?
 
நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டது என்ன?
கர்த்தரின் நீதி.
 
பரலோக தலைமை ஆசாரியர், மனிதகுலத்தின் கடைசி தலைமை ஆசாரியனைச் சந்தித்துபோது நடந்த காட்சிகளை நாம் காண்போமாக. இங்கு ஞானஸ்நானம் மூலம் கர்த்தரின் நீதியை உணரலாம். ஞானஸ்நானம் உலகின் பாவங்களுக்கு பாவ நிவர்த்தியைப் பெற்றுத்தந்தது.
இயேசுவிற்கு ஞானஸ்நானம் நல்கிய யோவான் ஸ்நானகன் ஸ்திரீகளில் பிறந்தவர்களில் சிறந்தவன். இயேசு மத்தேயு 11:11 இல் இவ்வாறு சாட்சி பகருகிறார். “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை”. பழைய ஏற்பாட்டில் பாவ மன்னிப்பு நாளில் தலைமை ஆசாரியனான ஆரோன் பலிமிருகத்தின் தலைமீது கைவைத்தபோது பாவங்கள் எப்படிக் கழுவப்பட்டதோ, அதுபோல புதிய ஏற்பாட்டில், உலகின் பாவங்கள் யாவும் யோவான் ஸ்நானகன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது கழுவப்பட்டது.
நம் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலப் பாவங்கள் அனைத்திற்குமான முழு பாவ நிவிர்த்தியாவது நற்செய்தியாகிய மறுபடியும் பிறத்தலாகும். ஆகவே இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிட்டும் நற்செய்தியாகிய விடுதலையானது கர்த்தரின் நீதியை முழுமையாக்கும் பொருட்டு கர்த்தர் நியமித்த, இவ்வுலகின் எல்லா மக்களையும் இரட்சித்த நற்செய்தியாகும். இயேசு உலகின் சகலப் பாவங்களுக்கும் பரிகாரமாக மிகவும் பொருந்தத் தக்க வகையில் ஞானஸ்நானம் செய்யப் பட்டார்.
“எல்லா நீதிகளையும்” முழுமையாக்குதல் என்றால் என்ன? அதன்பொருள் உலகின் பாவங்களை எல்லாம் சிறந்த முறையினால் அவர் கழுவினார் என்பதாகும். இயேசு மனிதர்களின் பாவங்களை கழுவும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார். “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப் படுத்தப்படுகிறது.” (ரோமர் 1:17)
தேவநீதி, அவருடைய ஒரே குமாரரான இயேசுவை யோவான் ஸ்நானன் அளித்த ஞானஸ்நானம் மூலமும், இயேசுவின் சிலுவை மரணம் மூலமும், உலகின் பாவங்களைக் கழுவுவதற்கு கொடுத்ததின் மூலம் விளங்குகிறது.
புதிய ஏற்பாட்டில், தேவநீதி இயேசுவின் ஞானஸ்நானம் மூலமும் அவரின் இரத்தம் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக யோர்தான் நதியில் இயேசு நம் பாவங்களை எடுத்துப் போட்டதால் நாம் நீதிமான்களானோம். நம்முடைய இருதயங்களில் கர்த்தரின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும்போது, தேவநீதி உண்மையில் முழுமையடைகிறது.
“இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:15-17)
இவ்வசனங்கள் கர்த்தரே இரட்சிப்பின் நீதியை அவர் குமாரனின் ஞானஸ்நானம் மூலம் சாட்சி பகன்றதை தெரிவிக்கின்றன. அவர் நம்மிடம் கூறுகிறார். “யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்ற இயேசு, இப்பொழுது உண்மையாக எனது குமாரன்”. எல்லா மனிதர்களும் பாவமன்னிப்பு பெரும்பொருட்டு, இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்பதை கர்த்தர் சாட்சி கூறுகிறார். இயேசுவின் இப்பரிசுத்த செயல்கள் வீணாகதப் படிக்கு அவர் இப்படிச் செய்தார்.
இயேசு தேவகுமாரன். அவரே இவ்வுலக பாவிகளின் இரட்சகர். “இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று கர்த்தர் கூறினார். இயேசு அவர் தந்தையின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, அவர் ஞானஸ்நானம் மூலம் மனிதர்களின் பாவங்களை எடுத்துப்போட்டார், என்பது உண்மையாகும்.
ஞானஸ்நானம் என்பதன் பொருள் “கழுவப்படுதல், இடமாற்றம் செய்தல், அடக்கம் செய்தல்” என்பதாகும். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நம்முடைய பாவங்களெல்லாம் அவர்மீது இடமாற்றம் செய்யப்பட்டதினால், நாம் செய்யவேண்டியதெல்லாம், நற்செய்தியை நம்பி உலகின் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் படுதலேயாகும்.
பழைய ஏற்பாட்டின் இரட்சிப்பைக் குறித்த தீர்க்க தரிசனங்கள், புதிய ஏற்பாட்டின் இயேசு ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் முழுமையடைந்தன. ஆகவே பழைய ஏற்பாட்டின் தீர்க்க தரிசனங்கள் கடைசியாக புதிய ஏற்பாட்டில் அவற்றை ஒத்தவற்றைக் கண்டன. பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேல் மக்கள், வருடத்தில் ஒரு முறை பாவ மன்னிப்பு பெற்றதுபோல புதிய ஏற்பாட்டில் மனிதர்களின் பாவங்கள் இயேசுவின் மீது இடமாற்றம் செய்யப்பட்டு, அவை நிரந்தரமாக கழுவப்பட்டன.
லேவியராகமம் 16:29, மத்தேயு 3:15 ஒத்ததாகும். இவ்வுலகின் பாவங்களை எடுத்துக் கொள்ளும்படி இயேசு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டார். அவருடைய ஞானஸ்நானத்திற்கு நன்றிகள். அவருடைய நிரந்தர பாவமன்னிப்பை நம்புபவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிப்படைவார்கள். அவர்களுடைய இருதய பலகையிலிருந்து அவர்கள் பாவங்கள் அழிக்கப்பட்டன.
நீங்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை மரணத்தையும் அறிந்து உங்கள் இருதயத்தில் அதனை விசுவாசிக்கவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு பக்தியாக வாழ்ந்தாலும், உங்கள் பாவங்களை சுத்திகரிக்க முடியாது. இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் மட்டுமே வேதவாக்கு முழுமைப் பெற்று நமது பாவங்கள் கழுவப்பட்டன. உண்மையான இரட்சிப்பு பாவ விடுதலையில் இருந்து கிடைக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிடைக்கிறது.
இதனை மனதில் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த இரட்சிப்பை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லையா? இது மனித வாக்குகள் அல்ல. இவை தேவனுடையவை. இயேசு சிலுவையில் மரித்தது ஏனெனில் அவர் உங்களுடைய பாவங்களை தம் ஞானஸ்நானம் மூலம் எடுத்துக் கொண்டார் என்பதையும் அவர் ஞானஸ்நானம் பெற்றதினாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும் ஒத்துக் கொள்கிறீர்களா?
ரோமர் 8:3-4 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப் பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமானத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.”
நாம் உலகிற்குரியவர்களாகவும், மாமிசம் பலவீனமுள்ளதாக இருப்பதனாலும் கர்த்தரின் கட்டளைகளையும் நியாயப் பிரமானங்களையும் நாம் தொடர்ந்து கைப்பற்ற முடியாது; ஆகவே இயேசு மாமிசத்தின் பாவங்களை தம்மீது ஏற்றுக்கொண்டார். இது இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த சத்தியமாகும். இயேசுவின் சிலுவை மரணம் அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதுவே ஞானமாகிய கர்த்தரின் மூல நற்செய்தியாகும்.
நீங்கள் இயேசுவின் சிலுவை மரணத்தை மட்டும் விசுவாசித்துக் கொண்டிருந்தீர்களானால், இயேசுவின் ஞானஸ்நானம் மூலமே நற்செய்தியாகிய இரட்சிப்பு கிட்டியது என்பதையும் உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்வீர்களாக. அப்பொழுது மாத்திரமே உண்மையில் நீங்கள் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும்.
 
 
மூல நற்செய்தி
 
மூல நற்செய்தி என்ன?
நீர் மற்றும் ஆவியைப் பற்றிய நற்செய்தி.
 
மூல நற்செய்தியாவது, பாவங்களிலிருந்து விடுதலையடையச் செய்யும் நற்செய்தியாகும். இதுவே கர்த்தர் கூறிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவையாகும். இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரே தடவையில் கழுவினார், இதனை விசுவாசிப்போரிற்கு இரட்சிப்பை நல்கினார். நம்முடைய நம்பிக்கையின் படி, நம்முடைய வருங்கால பாவங்களையும் அவர் கழுவினார்.
இப்பொழுது, யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நம்புகிறார்களோ, அவர்கள் இவ்வுலக பாவங்களிலிருந்து நிரந்தரமாக இரட்சிக்கப்படுவர். இதனை நம்புகிறீர்களா? உங்கள் பதில் “ஆம் நம்புகிறேன்” என்றிருந்தால் உண்மையில் நீங்கள் நீதிமானானீர்கள்.
இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு நடைபெற்றச் சம்பவங்களை சுருக்கமாக பார்ப்போம். யோவான் 1:29 இல் இவ்வாறு எழுதபட்டுள்ளது. “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”
யோவான் ஸ்நானன் இயேசுவே இவ்வுலகத்தின் பாவங்களை எடுத்துப்போடுபவர் என்று சாட்சி கூறினான். யோர்தான் நதியில் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது, உலகின் பாவங்களை யோவான் ஸ்நானனே அவருக்கு ஞானஸ்நானம் மூலம் கொடுத்ததால், அவனால் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ
 
d51a5b0d-ada4-46a0-9e03-958365349e2b

ஆட்டுக்குட்டி” என்று சாட்சி கூறமுடிந்தது. இயேசு ஞானஸ்நானம் பெற்றதன் மூலம், இவ்வுலகின் பாவங்களை எடுத்துப்போட்டார். இதுவே மீண்டும் பிறப்பதான நற்செய்தியாகும்.
“இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை நீக்கினார்.
நீங்கள் பிறந்த நாளிலிருந்து பத்து வயதுவரைச் செய்த பாவங்களும் இந்த உலகின் பாவங்களில் உள்ளடங்கியிருந்தன. நீங்கள் இப்பாவங்கள் இயேசுவின் மீது இடமாற்றம் அடைந்ததை நம்புகிறீர்களா? ஆமாம் நம்புகிறேன். 11 இலிருந்து 20 வயது வரை உங்கள் மீறுதல்கள் என்னவாயிற்று? இப்பாவங்களும் இயேசுவின் மீது இடமாற்றம் செய்யப்பட்டன என்பதை நம்புகிறீர்களா? ஆமாம் நம்புகிறேன்.
வருங்காலத்தில் நீங்கள் செய்யப்போகும் பாவங்களும் இவ்வுலக பாவங்களில் உள்ளடங்கியுள்ளதா? ஆம், அவை உள்ளடக்கியுள்ளன. அப்படியானால் அவை உண்மையில் இயேசுவின் மீது இடமாற்றம் செய்யப்பட்டதை நம்புகிறீர்களா? - ஆம் நம்புகிறேன்.
இவ்வுலகின் பாவங்களிலிருந்து உண்மையில் உங்களுக்கு இரட்சிப்பு வேண்டுமா? அப்படியானால் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தைப் பற்றிய நற்செய்தியையும் நம்புங்கள். இதனை நம்பும்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இதனை நம்புகிறீர்களா? இதுவே மறுபடியும் பிறத்தலின் சத்தியமான இரட்சிப்பாகும். இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் குருதியுமே மறுபடியும் பிறத்தலின் மூல நற்செய்தியாகும். இதுவே தேவன் உலகின் பாவிகளுக்கருளிய ஈவு.
இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் நல்கும் மறுபடி பிறத்தல் அளிக்கும் இரட்சிப்பை பெற, அவரின் அன்பை தெரிந்துகொள்ள அவரின்மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும். மறுபடியும் பிறத்தலுக்கான குறியீடுகள் நீரும், இயேசுவின் இரத்தமுமாகும். வேதாகமம் கூறும் சத்தியத்தை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
 
 
மதமும் நம்பிக்கையும்
 
மறுபடி பிறந்தவர்களாகிய நம்மிருதயத்திலிருக்கும் சாட்சியம் என்ன?
இயேசு தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நமது அனைத்து பாவங்களையும் துடைத்தார் என்பது.
 
மதம் என்பதன் பொருள், வேதவாக்கைப் புறக்கணித்து ஒருவனின் சொந்த அறிவுப்படி இயேசுவை நம்புவதாகும். ஆனால் பாவத்திலிருந்து இரட்சிப்பு ஒருவனின் சொந்த யோசனைகளிலிருந்து தூரமாயிருக்கிறது. நம்பிக்கை என்பது சொந்த யோசனைகளை விலக்கி, பழைய மற்றும் புதிய ஏற்படுகளின் வாக்குகளை நம்புவதாகும். வேதாகமம் கூறுவதை அப்படியே எடுத்துக்கொண்டும், நீர் மற்றும் இரத்தத்தின் இரட்சிப்பை ஏற்று, இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவர் சிலுவை மரணத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் மூல நற்செய்தியின் ஞானத்தை தன் இருதயத்தில் ஏற்பதன் மூலம் இரட்சிக்கப்படுவான்.
ஞானஸ்நானம் இல்லாது நம் பாவங்கள் இயேசுவின் மீது இடம் மாறாது. இரத்தஞ்சிந்தாமல் பாவத்திற்கு கூலி கொடுக்க இயலாது. இயேசு சிலுவைக்குச் சென்று இரத்தம் சிந்து முன்பாகவே நம்முடைய எல்லாப் பாவங்களும் அவர் மீதிருந்தன. இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும், நற்செய்தியின் மூலம் மறுபடி பிறத்தலை நம்புவதன் மூலமாக, உலகின் பாவங்களிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம்.
உண்மையான நம்பிக்கை என்னவென்றால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நமது பாவங்களைப் பரிபூரணமாக கழுவிவிட்டார் என்பதேயாகும். நம்முடைய பாவங்களின் தீர்ப்பை அவர் சிலுவையில் எடுத்துச் சென்றார் என்பதை நம்பவேண்டும். கர்த்தர் நம்மீது எந்த அளவு அன்பு கூர்ந்தார் என்றால், அவர் நம்மை இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலும் இரட்சித்தார். இந்த நற்செய்தியை நாம் நம்பும்போது, நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைகிறோம். தீர்ப்பிலிருந்து விடுதலை கிடைக்கிறது. கர்த்தரின் முன்பாக நீதிமான்களாகிறோம்.
“கர்த்தரே நான் விசுவாசிக்கிறேன். நான் இரட்சிக்கப்பட தகுதியானவன் அல்ல, ஆனால் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நம்புகிறேன்.” நம்மை மறுபடி பிறக்கச் செய்த நற்செய்தியை நல்கியதால், நாம் கர்த்தருக்கு மாத்திரமே நன்றி செலுத்தவேண்டும். மறுபடியும் பிறத்தலான மூல நற்செய்தியை நம்புவதே உண்மை நம்பிக்கையாகும்.
மறுபடியும் பிறப்பதன் சத்தியம் இது; “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17) “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்” (யோவான் 8:32). நாம் சத்தியத்தை தெளிவாக அறியவேண்டும். மேலும் அதற்குச் சாட்சியாக விளங்கும், நீர், இரத்தம் மற்றும் ஆவியை நம்ப வேண்டும். (1 யோவான் 5:5-8)
“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” இதுவே நீர் மற்றும் இரத்தம் குறித்த இயேசுவின் வார்த்தைகளாகும். நீங்கள் விடுவிக்கப்பட்டீர்களா? நாம் மதம் சார்ந்தவர்களாக இருக்கிறோமா? அல்லது விசுவாசிகளா? இயேசுவிற்கு வேண்டியதெல்லாம் நீர் மற்றும் ஆவியின் மூலம் மறுபடி பிறக்கும் நற்செய்தியை நம்புகிறவர்கள் மாத்திரம் தான்.
நீங்கள் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றை நம்பினால் நீங்கள் இருதயத்தில் பாவமில்லாதவர்களாக இருப்பீர்கள், ஆனால் இயேசுவை மதத்தின் ஒரு அங்கமாக கருதினால் நீங்கள் இன்னும் பாவத்தில் ஜீவிக்கிறீர்கள். ஏனென்றால் இயேசு இரட்சிக்கும் முறையில் உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. மதச் சார்புடையவர்கள் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறார்களோ, அதற்கு பரிகாரமாக அப்பொழுது பாவமன்னிப்பு வேண்டி ஜெபிக்கிறார்கள்.
ஆகவே, இப்படிப்பட்டவர்கள் பாவங்களிலிருந்து முழுவதுமாக இரட்சிக்கப்பட முடியாது. அவர்கள் வாழ் நாள் முழுவதும் பாவ மன்னிப்பு வேண்டினாலும், அது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மூலம் அளித்த பாவ மன்னிப்புக்கு ஈடாகாது. இயேசுவின் நற்செய்தியை நம்பி இரட்சிக்கப்படுவோமாக, அது உலகின் பாவங்கள் யாவையும், எதிர்கால பாவங்கள் உட்பட கழுவிவிட்டது.
நான் மீண்டுமாகச் சொல்லுகிறேன், தினமும் பாவ மன்னிப்பு வேண்டுவது, மறுபடியும் பிறப்பதற்கு ஈடாகாது. எல்லாக் கிறிஸ்தவர்களும் மறுபடியும் பிறத்தல் மூலம் பாவப் பரிகாரம் செய்யப்படுகிறது என்பதை இப்பொழுது நம்பவேண்டும்.
நம்முடைய எல்லா பாவங்களுக்கும் நம்மால் புலம்ப முடியாது. தவறான புலம்பல் கர்த்தரிடம் கொண்டு சேர்க்காது. அது ஆத்துமாவை மட்டும் தேற்றுகிறது. தவறான புலம்பல் ஒருதலைப் பட்சமான பாவ அறிக்கையாகும் - அது கர்த்தருடைய சித்தத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இது கர்த்தர் நம்மிடமிருந்து விரும்பும் ஒன்றல்ல.
உண்மையான புலம்பல் யாது? அது கர்த்தரிடம் திரும்புதலாகும். மறுபடியும் இயேசுவின் இரட்சிப்பு பற்றிய வார்த்தைகளுக்கு வருவதும் எழுதப்பட்ட வார்த்தைகளை அப்படியே நம்புவதும், இயேசுவிடம் அழைத்து வரும். நம்மை இரட்சிக்கும் நற்செய்தி யாதெனில் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவையே ஆகும். இந்த நற்செய்தியை முழுவதுமாக நம்பினால் நாம் இரட்சிக்கப்படுவது மட்டுமின்றி நித்திய வாழ்க்கையும் பெறுவோம்.
இதுவே நற்செய்தியாகிய மறுபடியும் பிறத்தலின் ஞானமாகும்; அதனால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் குருதி, கர்த்தரின் ராஜ்ஜியத்தைப் பற்றிய நற்செய்தி ஆகியவை நம்மை மறுபடி பிறக்க அனுமதி அளிக்கிறது.
இயேசு நம்மிடம் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்கவேண்டும் என்றபோது அவர், நாம் அவரின் ஞானஸ்நானத்தயும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நம்புவதால் மறுபடியும் பிறக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். அப்பொழுது நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தினுள் நுழைந்து அங்கே வாழ முடியும். நாம் அவருடைய வார்த்தைகளை நம்ப வேண்டும். இரண்டு காரியங்கள் நம் பாவத்தின் பரிகாரத்திற்கு சாட்சியாக இருக்கின்றன. இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகிய வார்த்தைகள் நம்மை மறுபடி பிறக்க அனுமதியளிக்கின்றன.
இப்பொழுது பாவ பரிகாரத்தையும், நற்செய்தியாகிய மறுபடி பிறத்தலையும் நம்புகிறீர்களா? இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவையில் சிந்திய குருதி மீது நாம் வைக்கும் நம்பிக்கை உலகின் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கிறது. இந்நம்பிக்கையின் மூலம் நாம் மறுபடியும் பிறக்க முடியும். வேதாகமம், இயேசு இவ்வுலகின் பாவிகளின் பாவங்களை எல்லாம் எப்படி கழுவினார் என்று கூறுகிறது. அதை நம்பி நாம் ஏன் மறுபடியும் பிறக்க கூடாது?
யாரெல்லாம் மறுபடியும் பிறத்தலுக்கான இரண்டு சாட்சிகளாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தயும் அவர் சிலுவை மரணத்தையும் நம்புகிறார்களோ அவர்கள் உண்மையாகவே மறுபடியும் பிறந்தவர்கள். தேவ குமாரனை விசுவாசிக்கிறவனும் சாட்சியாக இருக்கிறான். (1 யோவான் 5:3-10). நீங்கள் இயேசுவை விசுவாசிக்கும் போது, நற்செய்தியாகிய நீர் இரத்தம் மற்றும் ஆவியை புறம்பே தள்ளக்கூடாது.
படைத்தலைவன் நாகமான் ஏழு முறை யோர்தானில் முழுகி குஷ்ட ரோகத்திலிருந்து விடுதலைப் பெற்றது போல (2 ராஜாக்கள் 5 ஆம் அதிகாரம்), இயேசு உலகின் பாவங்களை நிரந்தரமாக கழுவினார் என்பதயும் நிரந்தர இரட்சிப்பை நமக்கு நல்கினார் என்பதையும் நாம் நம்பவேண்டும்.
இயேசு நம்மை நேசித்ததால் நாம் உலகின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு, நித்திய ஜீவனை பாவ நிவர்த்தியான நற்செய்தியை நம்புவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நாமெல்லாம் மறுபடியும் பிறப்பதான நற்செய்தியை நம்பி, கர்த்தரின் இரட்சிப்பை பெறுவோமாக.