(யாத்திராகமம் 12:43-49)
“மேலும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நியப்புத்திரன் ஒருவனும் அதைப்புசிக்கவேண்டாம். பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்த சேதனம் பண்ணின பின், அவன் அதைப்புசிக்கலாம். அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம். அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாமிசத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகக்கூடாது. அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. இஸ்ரவேல் சபையாரெல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள். அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சார்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்த சேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம். சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.”
பழைய ஏற்பாட்டின்படி, இஸ்ரவேலர்கள் கர்த்தரின் பிள்ளையாகுவதற்கு இருந்த மாற்றமுடியாத நிபந்தனை யாது?
அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.
கர்த்தரை நம்பும் நமக்கு பழைய ஏற்பாட்டில் உள்ளதும், புதிய ஏற்பாட்டில் உள்ளதுமான தேவவாக்கு முக்கியமும் விலையேறப்பட்டதுமாக இருக்கிறது, வேதவாக்கு நமது ஜீவ வாக்காக இருப்பதால், ஒரு வார்த்தையையும் நாம் இழந்து போகலாகாது.
இன்றைய வசனங்கள், பஸ்கா பண்டிகயை ஒருவன் கடைப்பிடிக்கவேண்டுமானால் அவன் முன்பே விருத்தசேதனம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று கூறுகின்றன. கர்த்தர் இதை ஏன் கூறுகிறார் என்று நாம் யோசிக்கவேண்டும். ஒருவன் விருத்தசேதனம் செய்யாவிட்டால் அவனால் பஸ்கா பண்டிகையை ஆசரிக்கமுடியாது.
இயேசுவை நாம் நம்பவேண்டுமானால், இந்தக் கட்டளைக்கு கர்த்தர் வைத்திருக்கும் திட்டம் என்ன என்று நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். விருத்தசேதனம் என்பது ஒரு மனிதனின் நுனித்தோலை வெட்டி விடுவதாகும். கர்த்தர் ஏன் ஆபிரகாமிடமும், அவன் வம்சத்தாரிடமும் விருத்தசேதனம் பண்ணும்படிக் கூறினார்? அதற்கு காரணம் என்னவெனில், கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தப்படி, பாவத்திலிருந்து தம்மை துண்டிப்பவர்கள் மட்டுமே அவரின் மக்களாகமுடியும்.
அதனாலேயே, பழைய ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ரவேல் மக்களிடம் விருத்தசேதனம் செய்யும்படிக்கு அவர் கூறுகிறார். கர்த்தரின் மக்களாக வேண்டுமானால் அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். இது அவரின் கட்டளையாகும். பரிசுத்தத்தின் அஸ்திவாரமாகவும் இருக்கிறது. யாரெல்லாம் விருத்தசேதனம் மூலமாக விசுவாசித்து தம் பாவங்களைத் துண்டித்து போடுகிறார்களோ அவர்களுக்கு அவர் கர்த்தராகிறார். அத்துடன் புதிய ஏற்பாட்டில் விசுவாசத்தினால் பாவத்தை எவனொருவன் துண்டிக்கிறானோ அவனுக்கு அவர் கர்த்தராகிறார்.
பஸ்கா பண்டிகை
பஸ்கா என்றால் என்ன?
இந்நாள் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதைக் குறித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.
இஸ்ரவேலர்களின் மிக முக்கியமான பண்டிகை பஸ்காவாகும். இந்நாள் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதைக் குறித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் நாளாகும். எகிப்தில் 400வருடங்களாக இஸ்ரவேலர்கள் அடிமைகளாயிருந்தனர். பாரோனின் இதயத்தை அசைக்கும்படியாக கர்த்தர் பத்து கொடிய வாதைகளை கொண்டுவந்தார். இந்தப்படியாகவே கர்த்தர் இஸ்ரவேலர்களை காணான் தேசத்திற்கு வழி நடத்தினார்.
பலியான ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், விருத்த சேதனத்தினாலும், எகிப்திற்கு வந்த கடைசி வாதையான தலைப் பிள்ளைகளின் சாவிலிருந்து இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்பட்டனர். ஆகவே, கர்த்தர் தம் கிருபையை இஸ்ரவேல் மக்கள் தம் சந்ததியினர் நினைவுகூறும் வகையில் பஸ்காவை அனுசரிக்கும்படி கூறினார்.
பஸ்காவை அனுசரிக்கும் பொருட்டு இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டும்?
பஸ்காவை அனுசரிக்கும்பொருட்டு இஸ்ரவேலர்கள் என்ன செய்யவேண்டும்?
அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.
பஸ்கா பண்டிகையை நாம் ஆவிக்குள் அனுசரிக்க வேண்டுமானால் நமது இதயத்தில் விருத்தசேதனம் செய்ய வேண்டுமென்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவை கொண்டாட வேண்டுமானால் அவர்கள் கூட விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.
“மேலும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நியப்புத்திரன் ஒருவனும் அதைப்புசிக்கவேண்டாம். பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்த சேதனம் பண்ணின பின், அவன் அதைப்புசிக்கலாம். அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம். அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாமிசத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது. அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. இஸ்ரவேல் சபையாரெல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள். அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சார்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்த சேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம். சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.” இப்படியாக அவர் இஸ்ரவேலர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டபின் பஸ்காபண்டிகைய ஆசரிக்கவேண்டும் என்றார்.
யாருக்கு பஸ்காவின் ஆட்டுக்குட்டியின் இறைச்சியை சாப்பிடவும் பஸ்காவை ஆசரிக்கவும் அனுமதியளிக்கப் பட்டிருந்தது? விருத்தசேதனம் பண்ணப் பட்டவர்களால் மட்டுமே பஸ்காவை ஆசரிக்கமுடியும்.
நமக்குத் தெரிந்த பஸ்காவின் ஆட்டுக்குட்டி, உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்த இயேசுகிறிஸ்து ஆவார்.
அப்படியானால் பழைய ஏற்பாட்டினதும், புதிய ஏற்பாட்டினதும் விருத்தசேதனம் என்ன? விருத்தசேதனம் என்பது நுனித்தோலை துண்டித்துவிடுவதாகும். இயேசுகிறிஸ்துவும் கூட இவ்வுலகில் பிறந்த எட்டாவது நாள் விருத்தசேதனம் பண்ணப்பட்டார். கர்த்தர் பஸ்கா பண்டிகையில் பங்கேற்கும் அனைவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் என்று கட்டளையிட்டார். யாரெல்லாம் விருத்தசேதனம் பண்ணப்படவில்லையோ, அவர்கள் பஸ்காவில் பங்கேற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
ஆகவே, கர்த்தரின் கட்டளைப்படி எல்லோரும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் புதிய ஏற்பாடு கூறும் விருத்தசேதனத்தின் பொருளை புரிந்துகொள்ளவேண்டும்.
கர்த்தர் ஆபிரகாமிடம் கட்டளையிட்ட விருத்த சேதன முறைமை யாது?
ஆபிரகாமும் அவன் சந்ததியினரும் எப்படி கர்த்தரின் பிள்ளைகளாக முடிந்தது?
விருத்தசேதனம் பண்ணிக்கொண்டதால்.
ஆதியாகமத்தில் கர்த்தர் ஆபிரகாமிடம் தோன்றி அவனிடமும் அவன் சந்ததியாரிடமும் ஒரு பொருத்தனைச் செய்துக்கொண்டார். 15ஆம் அதிகாரத்தில் கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியினர் வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகுவார்கள் என்றும் அவர்களுக்கு கானான் தேசத்தை சொந்தமாகக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் 17ஆம் அதிகாரத்தில், கர்த்தர் ஆபிரகாமிடம் கூறினார். அவனும் அவன் சந்ததியாரும் அவர் பொருத்தனைக்குட்பட்டு விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் அவர் அவர்களின் கர்த்தராகவும் அவர்கள் அவரின் மக்களுமாவார்கள். இது ஆபிரகாமுடனும் அவன் சந்ததியாருடனும் கர்த்தர் செய்துக்கொண்ட உடன்படிக்கையாகும். யாரெல்லாம் அவரின் உடன்படிக்கையை நம்பி விருத்தசேதனம் செய்துக் கொள்கிறார்களோ அவர்கள் அவரின் பிள்ளைகளாகவும், அவர் அவர்களின் கர்த்தராகவும் ஆவதாக அவர் உறுதியளித்தார்.
ஆதியாகமம் 17:7-8 கூறுகிறது. “உனக்கும் உனக்குப்பின் வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாய் இருக்கும்படிக்கு எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். நீ பரதேசியாக தங்கி வருகிற கானான் தேசமுழுவதயும், உனக்கும் உனக்குப்பின் வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாய் இருப்பேன் என்றார்.”
விருத்தசேதனம் கர்த்தர் ஆபிரகாமிற்கும் அவன் சந்ததியினருக்கும் செய்த உடன்படிக்கையின் அடையாளமாகும்.
ஆவிக்குரிய விருத்தசேதனம் என்று குறிக்கப் படுவது யாது?
ஆவிக்குரிய விருத்தசேதனம் என்றால் என்ன?
இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதின் முலம் பாவங்களை இதயத்திலிருந்து துண்டிப்பது.
ஆபிரகாம் தேவவாக்குத்தத்தத்தை நம்பினபடியால் கர்த்தர் அவனை நீதிமானாக்கினார். அவனைத் தன் பிள்ளையும் ஆக்கினார். விருத்தசேதனமே கர்த்தருக்கும் ஆபிரகாமிற்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடையாளமாகும்.
“எனக்கும் உங்களுக்கும், உனக்கு பின் வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.” (ஆதியாகமம் 17:10)
சரீரப்பிரகாரம் விருத்தசேதனம் என்பது நுனித்தோலைத் துண்டிப்பதாகும். ஆவிக்குரிய பிரகாரம் அது இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் நம்புவதன்மூலமாக இயேசுவின் மீது நமது பாவங்களையெல்லாம் சுமத்துவதாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தின் இரட்சிப்பை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலமாக நமது பாவங்களைத் துண்டிக்கும்போது நாம் ஆவிக்குரிய விருத்தசேதனம் செய்தவர்கள் ஆகிறோம். புதிய ஏற்பாட்டின் விருத்தசேதனம் என்பது இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களைத் துண்டிப்பதாகும்.
ஆகவே, பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனம் என்பது புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களைத் துண்டிப்பதாகும். இது இரண்டுமே கர்த்தரின் உடன்படிக்கைகள். இது நம்மை கர்த்தரின் மக்களாக மாற்றுகிறது. ஆகவே, பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும் புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும் ஒன்றேயாகும்.
தம்முடைய நுனித்தோலினைத் துண்டித்து ஆபிரகாமின் சந்ததியினர் கர்த்தரின் மக்களானது போல நமது இதயத்திலிருந்து பாவங்களைத் துண்டித்துப் போட்டால் நாம் கர்த்தரின் பிள்ளைகள் ஆகிறோம். இயேசு யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெறும்போது அவர் உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப்போட்டார் என்பதை நம்புவதன்மூலம் நாம் அவரின் பிள்ளைகளாகிறோம்.
இயேசுவின் ஞானஸ்நானம் பாவிகளின் பாவங்களைத் துண்டித்து அவர்களை நீதிமான்களாக்குகிறது. தோலின் ஒரு பாகம் விருத்தசேதன முறையில் அகற்றப்பட்டதுபோல யோர்தான் நதியில் யோவான் ஸ்நானகன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது மனித குலத்தின் பாவங்கள் அவர்கள் இருதயங்களிலிருந்து துண்டிக்கப்பட்டன. இதனை நம்புகிறவர்கள் ஆவிக்குரிய விருத்தசேதனம் பெற்று அவரின் பிள்ளைகளாகவும், நீதிமான்களாகவும் ஆகிறார்கள்.
கர்த்தரிடமிருந்து மக்களைப் பிரிக்கும் பொய் நம்பிக்கைகள்
கர்த்தரிடமிருந்து இஸ்ரவேலரை பிரித்தது என்ன?
விருத்தசேதனம் இல்லாமை.
கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் பண்ணப்படாதவன் அவன் மக்களிலிருந்து பிரிக்கப்பட வேண்டுமென்றார். அப்படியானால் விருத்தசேதனம் என்பது என்ன? மேலும் ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது என்ன? சரீரப் பிரகாரமான விருத்தசேதனம் என்பது உடலின் ஒரு பாகமாகிய சிறிய தோல் பகுதியை துண்டிப்பதானால்; ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது இயேசுவின் ஞானஸ்நானம் மூலமாக நமது எல்லா பாவங்களையும் இதயத்திலிருந்து துண்டிப்பதாகும்.
மனித குலத்தின் ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது இயேசுவின் ஞானஸ்நானம் ஆகும், இதன் மூலமாக உலகின் பாவங்கள் எல்லாம் நம்மிடமிருந்து துண்டிக்கப்பட்டு இயேசுவின்மீது இடமாற்றம் செய்யப்பட்டது. யோவான் ஸ்நானகனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம், எல்லா மனிதர்களையும் ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணும்படியாகவும் எல்லா பாவங்களையும் எடுத்துப்போடும்படியுமாகும்.
மனிதரின் எல்லாப் பாவங்களும் இயேசுவின்மீது சுமத்தப்பட்டது. கர்த்தர் ஆபிரகாமின் கர்த்தர் ஆனதால் அவர் ஈசாக்கின் கர்த்தர். யாக்கோபின் தேவன், அவர்களின் சந்ததியாரின் கர்த்தர். அவர் ஆபிரகாமுடனும் அவன் சந்ததியாருடனும் உடன்படிக்கைச் செய்து அவர்களின் நுனித்தோலினை துண்டிக்கச் செய்தார். இப்படியாக அவர் கர்த்தரானார். விருத்தசேதனம் மூலம் தம் பாவங்களைத் துண்டித்த அனைவரின் இரட்சகருமானார்.
கர்த்தர் ஆபிரகாமிடம் பேசினார். “உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு கொள்ளப்பட்ட எந்த பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் பணத்திற்கு கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாமிசத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. நுனித்தோலின் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாய் இருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.” (ஆதியாகமம் 17:12-14)
ஆவிக்குரிய விருத்தசேதனம் இல்லாமல் இயேசுவிடம் வர முயல்பவன் அவன் மக்களிடமிருந்து அறுப்புண்டு போவானாக. ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் ஞானஸ்நானமாகும். அதன் மூலமாக உலகின் பாவங்கள் யாவும், இயேசுவின் மீது இடமாற்றம் செய்யப்பட்டது.
யாரொருவன் இயேசுவை நம்புகிறானோ அவன் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தையும் புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானத்தையும், அவன் ஆவியில் பெறும் பொருட்டு பாவங்களிலிருந்து இரட்சிக்கப் படும்படியாகவும், கர்த்தரின் பிள்ளைகளாகும்படிக்கும் நம்பவேண்டும். இயேசுவை நாம் விசுவாசிப்பதால் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும் புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும் ஒன்றேயாகும்.
விருத்தசேதனம் என்பதன் சரியான பொருளை நாம் புரிந்துகொள்ளாவிட்டாலோ, மறுபடியும் நம்மைப் பிறக்கச் செய்யும் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை இதயத்தில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலோ நமது நம்பிக்கை வீன். நாம் கர்த்தரிடத்தில் விசுவாசமாக இருப்பதாக நினைக்கலாம். ஆனால் அது நம் வீட்டை மணலில் கட்டியதுபோலாகும்.
கர்த்தர் தம்மை விசுவாசிப்போர் அனைவரையும் விருத்தசேதனம் பண்ணும்படி கூறுகிறார். ஆவிக்குரிய விருத்தசேதனமாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிடைக்கும் பாவ மன்னிப்பை நம்பச்சொல்கிறார். விருத்தசேதனமில்லாமல் நாம் அவரின் பிள்ளைகளாக முடியாது. விருத்தசேதனம் இல்லையென்றால் அவரின் மக்களிடமிருந்து துண்டிக்கபடுவோம். ஆகவே, கர்த்தர் அவன் காசுக்காக வாங்கப்பட்டவனோ, அல்லது புதிதாக வந்தவனோ, அவன் பஸ்காவில் பங்கேற்கும் முன்பதாக விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் என்ற முறையை நியமித்தார்.
விருத்தசேதனம் பண்ணப்படவில்லையென்றால், வீட்டில் பிறந்த பிள்ளைகூட தனது மக்களிடமிருந்து பிரிக்கப்படும். கர்த்தர் இஸ்ரவேலரிடம் செய்துகொண்ட இந்த உடன்படிக்கை இயேசுவை நம்பும் எல்லோருக்கும் பொதுவாய் இருக்கிறது.
யாத்திராகமம் 12 -இன் படி பஸ்காவின் இறைச்சியையும் கசப்பான இலையையும் சாப்பிடுவதற்கு முன்பாக இஸ்ரவேல் மக்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாக இருக்கவேண்டியாதாயிருந்தது. பஸ்காவின் மாமிசம், விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களுக்கு மட்டுமான ஒரு உரிமையாக இருந்தது.
நமக்கு முக்கியமாகத் தெரியவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்கள் பஸ்காவின் மாமிசத்தைப் புசித்து ஆட்டிக்குட்டியின் இரத்தத்தை கதவின் நிலைமீதும், வீட்டின் உத்திரங்கள் மீதும் பூசியதன்மூலம் அவர்கள் ஏற்கெனவே விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் என்பதாகும்.
கர்த்தரின் கட்டளைப்படி ஒருவன் விருத்தசேதனம் பண்ணப் படாதவனாக இருந்தால் அவன் ஜனங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, கர்த்தரின் பிள்ளையாகும் உரிமையை இழந்துபோகிறான். இதன்பொருள் ஆவிக்குரிய விருத்தசேதனம் மீது நம்பாத பாவமானது அவர்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.” (1 பேதுரு 3:21) நீ யோர்தான் நதியில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலமாக உன்னுடையப் பாவங்கள் மாற்றப்பட்டதை உண்மையில் விசுவாசிக்கிறாயா? நீ உண்மையாகவே இதனைப் புரிந்து சத்தியத்தை நம்புவாயானால், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் குருதியையும் நம்புவாயானால், நீ ஆவியில் விருத்தசேதனம் அடைந்ததையும், நீதிமானாகியதையும் உணர்வாய். மேலும் ஆவிக்குரிய உண்மையில் உனக்கு நம்பிக்கை ஏற்படும். உனக்கு அவ்வுண்மை சிலுவையில் இயேசு சிந்திய இரத்தம், அவரின் ஞானஸ்நானம் இல்லாது அர்த்தமில்லை என்பது புரியும்.
ஆவிக்குரிய விருத்தசேதனமாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீது நம்பிக்கையில்லாமல் இயேசுவின் சிலுவையை மட்டும் நம்பினீர்களானால், நீங்கள் கர்த்தரின் கிருபையிலிருந்து வெளியேற்றப்பட்டதை அறிவீர்கள். நீங்கள், உங்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருப்பதை உணர்வீர்கள்.
கர்த்தர் நமக்கருளிய பாவமன்னிப்பு இயேசுவின் ஞானஸ்நானத்தில் தொடங்கியதையும் அது அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தில் முடிவடைந்ததுமான சத்தியத்தை நாம் விசுவாசிக்கவேண்டும். இப்படிச் செய்வதற்கு கர்த்தருடைய வார்த்தைகளை, இயேசுவின் ஞானஸ்நானத்தை, அவரின் குருதியை இரட்சிப்பாக நமது இதயத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும்.
இந்நம்பிக்கை மூலமாக இருளின் வல்லமையிலிருந்து விடுதலையாகி ஒளியின் பிள்ளைகளாக முடியும். இந்த ஆவிக்குரிய நம்பிக்கை உண்மையில் மறுபடியும் பிறந்தவர்களை சாதாரண விசுவாசிகளிடமிருந்து பிரிக்கிறது.
நம் கர்த்தர் இயேசு நம்மிடம், தம்மைச் சார்ந்திருக்கும்படி கூறினார். அவர் தம் ஞானஸ்நானம் மூலமும் அவரின் குருதியினாலும் இவ்வுலகின் பாவங்களையெல்லாம் கழுவிவிட்டார்.
ஆகவே கர்த்தரின் பிள்ளைகளானோம் என்பதற்கு அடையாளமாக இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் நம்பவேண்டும். நாம் அப்படிச் செய்யவில்லை என்றால் அவரிலிருந்து துண்டிக்கப்படுவோம்.
பாவத்திலிருந்து இரட்சிப்பு என்பது புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தையும் தவிர வேறில்லை. இரட்சிப்பு எப்போது முழுமையடைகிறதென்றால் நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் (ஆவிக்குரிய விருத்தசேதனம்) அவரின் சிலுவை இரத்தத்தை (பஸ்காவின் ஆட்டுக்குட்டியின் இரத்தம்) நம்புவதாலும் முழுமையடைகிறது.
பழைய ஏற்பாட்டில் உள்ள சரீர விருத்தசேதனமானது புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானத்துடன் தொடர்புடையது ஏசாயா 34:16 வேதாமத்திலுள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஜோடியிருக்கிறது என்று கூறுகிறது. “கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.”
பழைய ஏற்பாட்டிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் புதிய ஏற்பாட்டுடன் இனைக்கப் பட்டவை. ஒரு வார்த்தையும் அதன் ஜோடியிலிருந்து குறைவுப் படாது.
தவறான வழிகளில் முட்டாள் தனமாக நம்புவோரின் கதி என்ன?
விசுவாசிகளுடன் யாரெல்லாம் நரகத்திற்குப் போவார்கள்?
ஆவிக்குரிய விருத்தசேதனத்தை நம்பாதவர்கள்.
இந்நாட்களில் பலர் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் மீது மட்டும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கேட்கிறார்கள். “விருத்தசேதனம் என்பதன் பொருள் யாது? அது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்களிடம் மட்டும் செயல்படுத்தப்பட்டது. புதிய ஏற்பாட்டின் இக்காலத்தில் நாம் நமது நுனித்தோலை துண்டிக்க தேவையில்லை.”
இது உண்மையாகும், நான் சரீர பிரகாரமாக விருத்தசேதனமடைய வேண்டுமென்று ஆலோசனைக் கூறவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை குறித்து தெளிவாகக் கூறுகிறார். நான் இப்போது குறிப்பிடுவது இருதயத்தின் விருத்தசேதனமாகும்.
நான் உங்களை சரீர பிரகாரமாக விருத்தசேதனம் செய்யும்படிக் கூறவில்லை. சரீர விருத்தசேதனம் நமக்கு அர்த்தமில்லாதது. நமக்கு நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிப்புண்டாகும்படி இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் ஆவிக்குரிய விருத்தசேதனம் பெரும்பொருட்டு இயேசுவிடம் வரவேண்டும்.
யாரெல்லாம் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர் ஆவியின் விருத்தசேதனம் பெறவேண்டும். அதுவே நம் பாவங்களை அகற்றும் ஒரே வழி. நாம் நீதிமான்களாகும் ஒரே வழி. ஆவிக்குரிய விருத்தசேதனத்திற்குப் பிறகு தான் நாம் முற்றிலும் பாவமற்றவர்களாவோம். ஆகவே இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலம் ஆவிக்குரிய விருத்தசேதனம் கிடைப்பதை நம் இதயத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் முக்கியத்தை அப்போஸ்தலராகிய பவுல் நம்பினார். அவர் கூறினார் “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” (ரோமர் 2:29) பாவமின்றி நாமிருக்க வேண்டுமானால் நாம் ஆவிக்குரிய விருத்தசேதனம் அடைந்தவர்களாதல் வேண்டும்.
உன்னில் துண்டிக்கப்பட்ட பாவங்கள் நிச்சயமாக இயேசுவிடம் இடமாற்றம் செய்யப்பட்டதா? புதிய ஏற்பாட்டில் கூட இயேசுவை விசுவாசிப்பவர்கள், இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலமாக ஆவிக்குரிய விருத்தசேதனம் பெறவேண்டும்.
இதனைத் தன் நிருபங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவுப்படுத்துகிறார். கர்த்தர் எல்லா மனிதர்களையும் இவ்வுலகின் பாவங்களிலிருந்து இரட்சித்தார், அவர்களை அவரின் மக்களாக்கினார். இஸ்ரவேல் மக்கள் நுனித்தோலை அகற்றியதன் மூலம் கர்த்தரின் மக்களானார்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பி நமது பாவங்களை இயேசுவின் மீது சுமத்தியதால் நாம் அவரின் பிள்ளைகளானோம்.
கர்த்தர், நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீதும் இயேசுவின் சிலுவை இரத்தம் மீதும் விசுவாசிப்பதைக் காணும்போது அவரின் மக்களாக ஏற்கிறார். இந்நம்பிக்கை நம்மை ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாக மட்டுமின்றி நமது இரட்சிப்புக்கும் வழி நடத்துகிறது.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் குருதிமூலம் பாவிகளுக்கு இரட்சிப்புண்டு
இயேசுவால் இரட்சிப்பு எப்படி முழுமைப்படுத்தப்பட்டது?
அவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணம் மூலமாக.
இயேசுவின் ஞானஸ்நான நீரினாலும், அவரின் சிலுவை இரத்தத்தினாலும் பாவிகளுக்காக இரட்சிப்பை பூர்த்தியாக்கினார். ஆட்டுக்குட்டியின் இரத்தம் தீர்ப்பாகவும், இயேசுவின் ஞானஸ்நானம் ஆவிக்குரிய விருத்தசேதனமும் நம் பாவங்களை அவரின் மீது இடமாற்றம் செய்வித்ததுமாகும்.
இன்றைய கிறிஸ்தவ ஆலயங்கள் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனம் நமக்கு முக்கியமானதாக இல்லா விட்டாலும் இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் அசட்டை செய்யக்கூடாது.
நான் உஙகளிடம், உங்கள் பாவங்கள் எல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் எடுத்துப் போடப்பட்டன என்று கூறினேன். இயேசுவின் ஞானஸ்நானம் உங்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களை இரட்சித்தது; இதனை நம்புகிறீர்களா? நீங்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை அசட்டை செய்தால் மறுபடியும் பிறத்தலான நற்செய்தி உங்களுக்கு எப்போதும் தெரியாது, அதுவே இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிட்டிய நற்செய்தியாகிய முழு பாவ விடுதலையாகும்.
கர்த்தர் கூறும் ஆவிக்குரிய விருத்தசேதனமாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் எப்படி அசட்டைப் பண்ணலாம்? நாம் வேதாகமத்தை வாசித்தால், விருத்தசேதனமும், பஸ்கா ஆட்டுக்குட்டியும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது தெரியும். இயேசுவின் ஞானஸ்நானம் - இதுவே ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் இரகசியம் ஆகும்.
அப்போஸ்தலனாகிய யோவான் பிரசங்கித்த நற்செய்தியானது, இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் குறித்த நற்செய்தி தவிர வேறில்லை. 1 யோவான் 5:6 இல் அவர் கூறுகிறார். “இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்”.
இயேசு நீரினாலும், இரத்தத்தினாலும், ஆவியாலும் வந்ததாக அவர் கூறினார். நீரில் மட்டுமல்ல, இரத்தத்தில் மட்டுமல்ல, நீர், இரத்தம், ஆவி அனைத்திலும் வந்தவர். இம்மூன்று தனி காரியங்களும் நம்முடைய இரட்சிப்பிற்கான அத்தாட்சியாகும். அவையாவன இயேசுவின் ஞானஸ்நானம், இயேசுவின் சிலுவை இரத்தம், அவரின் உயிர்த்தெழுதல், இம்மூன்றும் ஒன்றே.
வேதாகமம் ஏன் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் குறித்துப் பேசுகிறது?
பஸ்கா பண்டிகையின்போது ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மட்டுமா இஸ்ரவேல் ஜங்கள் இரட்சிக்கப்பட்டார்கள்?
இல்லை. பஸ்காவை ஆசரிக்கும் முன்பே அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள்.
நம்மை நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கச்செய்வது இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் குருதியுமாகும். யாத்திராகமம் 12-ஆம் அதிகாரம் கூறுகிறது “அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப்புசிக்கும் வீட்டு வாசல் நிலைகால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்.”
இதனைத் தெரிந்த பிறகும், பஸ்காவின் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை பட்டும் நாம் நம்பினால் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று கூறுவோமா? அப்படியானால் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு அத்தனை முக்கியத்துவம் ஏன்? அப்போஸ்தலர்கள் கூறினார்கள். “ஞானஸ்நானத்தினாலே அவரோடே கூட அடக்கம் பண்ணப் பட்டவர்களாகவும்” (கொலோசெயர் 2:12) “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப்பேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” (கலாத்தியர் 3:27) ...அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது” (1 பேதுரு 3: 21)
அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் பவுலும், மற்றும் எல்லா சீடர்களும் இயேசுவின் ஞானஸ்நானம் குறித்து சொல்லியுள்ளார்கள். யோர்தான் நதியில் இயேசு ஞானஸ்நானம் பெற்றதையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறத்தலுக்கான உண்மை என்னவெனில் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தை விசுவாசிப்பதே.
உங்களிடம் உண்மையைக் கூற வேண்டுமானால், நான் இயேசுவை விசுவாசித்தேன், ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அவரின் இரத்தத்தை மட்டும் நம்பினேன். அவரின் ஞானஸ்நானத்திற்கு ஒப்புதல் கூட அளிக்கவில்லை. இந்த அறிவு என் இதயத்தில் இருந்த பாவங்களை எடுத்துப்போடவில்லை. நான் இயேசுவை எனது முழு இதயத்துடனும் நம்பினேன், ஆனால் எனது இதயமுழுவதிலும் பாவம் நிறைந்திருந்தது.
10 ஆண்டுகளுக்குப் பின் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைக் (இயேசுவின் ஞானஸ்நானம்) கண்டுபிடித்தேன். நான் மறுபடியும் பிறந்தேன். அப்பொழுது ஒரு உண்மை எனக்குப் புலனானது. பழைய ஏற்பாட்டு விருத்தசேதனம் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானத்தை ஒத்திருக்கிறது, இதனை நம்பினேன் இன்னும் நம்புகிறேன்.
“புதிய ஏற்பாட்டின் படி இயேசுவின் இரத்தம் அவர் ஞானஸ்நானம் இவை இரண்டையும் விசுவாசிப்பது சரிதானா? என்னுடைய நம்பிக்கை வேதாகமத்தைப் பொருத்தவரை சரியானது தானா?” நான் மறுபடியும் பிறந்ததும், இக்காரியங்களைக் குறித்து அதிசயித்தேன்.
நான் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றின் செய்தியை விசுவாசித்தாலும், கேள்விகள் என் மனதில் அப்படியே இருந்தன. “இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது என்னுடைய எல்லாப் பாவங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதா? இல்லை, இயேசுவின் சிலுவை மரணம் என்னை என் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்ததா? இயேசுவை என் கர்த்தரென்றும், இரட்சகர் என்றும் மட்டும் நம்பினால் போதாதா?” யாத்திராகமம் 12 ஆம் அதிகரத்தைப் படிக்கும்போது இவை மனதில் இடித்தன.
நிறைய மனிதர்கள் யாத்திராகமம் 12 ஆம் அதிகாரத்தை இந்நாட்களில் படித்திருந்த போதிலும், இயேசுகிறிஸ்து சிலுவையில் தமது இரட்சகராக மரித்தார் என்று அறிக்கைச் செய்யும்போது இரண்டாம் முறை சிந்திப்பதில்லை. அவர்கள் இரத்தத்தில் விசுவாசம் வைப்பது சரியென்றெண்ணி, அவர்கள் கண்ட உண்மையைச் சாட்சி பகருகிறார்கள். அவர்கள் மிக உறுதியான நம்பிக்கையுடன் இயேசுவே கர்த்தர், கர்த்தரின் குமாரன் என்று கூறலாம். ஆனால் அவர்கள் இன்னமும் பாவிகளே. அவர்கள் இயேசுகிறிஸ்துவை இரட்சகராக நம்பினால் அவர்களின் இதயத்தில் இன்னமும் பாவமிருந்தாலும் கூட இரட்சிக்கப்படுவோம் என்று எண்ணுகிறார்கள்.
இத்தகைய விசுவாசம் உண்மையான விசுவாசமில்லை. இந்த நம்பிக்கை மட்டும் மறுபடியும் பிறக்க உதவாது. இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நம்மை நீதிமான்களாக்குகின்றன.
அப்படியானால் யாத்திராகமம் 12ஆம் அதிகாரம் என்ன கருத்தைக் கூறுகிறது? நாம் “இயேசுவினுடைய இரத்தத்தை மட்டும் விசுவாசித்து அவருடைய ஞானஸ்நானத்தை அசட்டை செய்வதனால் எதுவும் பிரச்சினை இருக்கிறதா” என்று நினைத்து வேதாகமத்தை உற்று நோக்கினேன். யாத்திராகமத்தை படித்து முடிக்கும் முன்பே நான் உண்மையைக் கண்டு பிடித்தேன். அவ்வுண்மையானது இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமல்ல அவரின் ஞானஸ்நானத்தினாலும் வருகிறது. வேதாகமத்தின் மூலம் நாம் நமது இதயத்தில் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலமும் அவர் இரத்தத்தினாலும் விருத்தசேதனம் செய்யப்பட்டதற்கான உறுதிமொழி கிடைத்தது.
நிறைய கிறிஸ்தவர்கள் இன்னும் பாவிகளாய் இருப்பதேன்?
அவர்கள் இன்னும் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காததால்.
யாத்திராகமம் 12:47-49 இல் இருந்து நான் ஒருவன் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தால் மட்டுமே பஸ்காவின் இறைச்சியைச் சாப்பிட அனுமதிக்கப்பட்டான் என்பதை அறிந்தேன். இக்காரணம் பற்றி கர்த்தர் 49 ஆம் வசனத்தில் “சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.”
ஆகவே விருத்தசேதனம் செய்யப்படாதோர் பஸ்காவின் இறைச்சியை சாப்பிடக்கூடாததாக இருந்தது. இந்த உண்மையை நான் கண்டறிந்தேன், அப்படியே இயேசுவை நமது இரட்சகராக விசுவாசிக்கும்போது, யோர்தானில் இயேசுவின் ஞானஸ்நானத்தின் போது நமது பாவங்களெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்ட சம்பவத்தையும் அதன் பிறகு அந்தப் பாவங்களுக்காக இயேசுகிறிஸ்து சிலுவையில் மறித்தார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும்.
இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டதால் நியாயம் தீர்க்கும்பொருட்டு அவர் சிலுவையில் மரித்தார் என்பதை அறிந்துகொண்டபோது, இவ்வுலகின் எல்லா பாவங்களிலிருந்தும், எல்லா மீறுதல்களிலிருந்தும் ஆவிக்குரிய விருத்தசேதனம் இரட்சித்தது என்பதையும் அறிந்துகொண்டேன்.
அந்த நொடிப்பொழுதில், என்னுடைய எல்லா பாவங்களும் போய்விட்டன என்பதை உணர்ந்தேன். எனது மனம் பனியைப்போல் வெண்மையாயிற்று. நான் இறுதியாக எனது இதயத்திற்குள் நீர், இரத்தம் மற்றும் ஆவியைப்பற்றிய நற்செய்தியை எடுத்துச்சென்றேன்.
இரண்டு காரியங்கள் நம்மை இரட்சிப்பதை உணர்ந்தேன். பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனமும் ஆட்டுகுட்டியின் இரத்தமும்; புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அனைத்துப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதும், அவரின் சிலுவையின் இரத்தமும் நம்மை இரட்சிக்கின்றன. பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும் புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும் உண்மையில் ஒன்றே.
இயேசுகிறிஸ்து தாம் எந்த பாவமும் செய்ததற்காக நியாயம் தீர்க்கப்படவில்லை. ஆனால் அவர் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் சகலப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக் கொண்டார். யாரெல்லாம் மனிதர்களின் பிரதிநிதியாகிய, யோவான் ஸ்நானகன் இயேசுவிடம் உலகின் பாவங்களையெல்லாம் சுமத்தி ஞானஸ்நானம் கொடுத்தான் என்பதை நம்புகிறார்களோ அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றையும் விசுவாசிக்கவேண்டும்.
வேதாகமத்தில் பல முறை இயேசுவின் ஞானஸ்நானத்தைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும் நிறைய மனிதர்கள் அதை ஏன் மறுக்கிறார்கள்? அப்படிச் செய்வதனால் அவர்கள் இயேசுவை விசுவாசித்தால் கூட இன்னமும் பாவிகளே. அவர்கள் இயேசுவை விசுவாசிக்கலாம் ஆயினும் அவகள் கர்த்தரிடமிருந்து துண்டிக்கப்படுவர். அவர்கள் இரங்கத்தக்கவர்கள், அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் கூட நரகத்திற்குத்தான் போவர்.
இயேசுவை விசுவாசித்தால் அவர்கள் எப்படி பாவியாக இருக்கமுடியும்? அவர்கள் ஏன் பாவியாக ஜீவிக்கிறார்கள்? அவர்கள் ஏன் அழிவின் பாதையில் நடக்கிறார்கள்? இது மிகவும் இரங்கத்தக்க நிலை. அவர்கள் தொடர்ந்து பாவிகளாகவே இருப்பர். ஏனெனில், அவர்கள் இயேசுவின் மீது உலகின் எல்லாப் பாவங்களும் சுமத்தப்பட்டுவிட்டன என்ற உண்மையை நம்புவதில்லை. இயேசு தம் ஆவிக்குரிய ஞானஸ்நானத்தின் மூலம் நிரந்தர இரட்சிப்பை எல்லா மக்களுக்கும் எடுத்து வந்தார்.
மக்கள் இயேசுவின் இரத்தத்தை நம்புவதன் மூலமாக பாவ மன்னிப்பு பெறலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அத்தகைய நம்பிக்கை அவர்களை முழுமையாக்காது. அது ஏன்? அது ஏனெனில் அவர்கள் தம் பாவத்தை இயேசுவின் மீது சுமத்த தவறியதேயாகும்!
கர்த்தருடைய நியமனப்படி நீரையும் (இயேசுவின் ஞானஸ்நானம்) அவரின் இரத்தத்தையும் நம்பினால் நாம் இரட்சிக்கப்படுவோம். அது ஆவிக்குரிய விருத்தசேதனம் அளிக்கும் இரட்சிப்பாகும். அப்பொழுது, அப்பொழுது மட்டுமே நாம் கர்த்தரின் உண்மை பிள்ளைகளாக முடியும்.
நாம் நம்மையே கேட்கவேண்டும். நாம் இயேசுவின் இரத்தத்தை மட்டும் ஆவிக்குரிய விருத்தசேதனமாக நம்பினால், நமது பாவங்களெல்லாம் முழுவதும் கழுவப்படுமா? இதற்கு பதில் காண இதயத்தை மிக ஆழமாக பார்க்கவேண்டும்.
நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலமும், அவரின் சிலுவை இரத்தத்தின் மூலமும் இரட்சிப்பை வெற்றியாகப்பெற்றதுபோல, பழைய ஏற்பாட்டு காலத்திலே விருத்தசேதனம் மூலமும், பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலமும் மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இப்படியாக கர்த்தரின் நியாயத்தீர்ப்பினின்றும், பாவ உலகிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட்டோம். இதனை நம்புகிறவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாவார்கள், கர்த்தர் அவர்களின் தந்தையாவார்.
ஒருவன் இந்த இரண்டு காரியங்களை நம்புவதன் மூலம் இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் உடமையாகிறான். அவை விருத்தசேதனமும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தமுமாகும். அதாவது இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமுமாகும். இயேசுவை பொருத்தவரை இதுவே உண்மையாகும். இதுவே நீர், இரத்தம், ஆவியினால் மறுபடியும் பிறத்தலின் உண்மைப்பொருளாகும்.
வேதாகமம் கூறும் நீரினாலும் ஆவியாலும் கிடைக்கும் பாவ விடுதலை யாது?
இயேசுவின் குருதியை மட்டும் நம்பிபாவிகள் நீதிமான்களாக முடியுமா?
முடியாது.
இயேசு தம்முடைய சிம்மாசனத்தைவிட்டு இவ்வுலகத்திற்கு இறங்கி வந்தார். இவ்வுலகின் எல்லா பாவங்களையும் சுமந்து தீர்க்கும்பொருட்டு தமது 30ஆம் வயதில் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார்.
இயேசுவின் சிலுவை இரத்தம் உலகிலுள்ள பாவிகள் செய்த பாவங்களுக்கான கிரயமாகும். இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு இரட்சகராக வந்தார். நீராலும் இரத்தத்தாலும் எல்லா பாவிகளையும் அவர்கள் பாவத்திலிருந்து இரட்சித்தார்.
நாம் இரத்தத்தினால் மட்டுமா மறுபடியும் பிறந்தோம்? இல்லை. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலமாக நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். இயேசுவின் இரத்தத்தை மட்டும் நம்புகிறவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பிகிறேன். “இயேசுவின் இரத்தத்தை மட்டும் நம்பி பாவிகள் நீதிமான்களாக முடியுமா அல்லது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தினால் நீதிமான்களாகிறோமா? இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் நமது பாவங்களை அவரில் சுமத்தியதையும் அவரின் இரத்தத்தையும் நம்புவதாலா? அல்லது அவரின் இரத்தத்தை மட்டும் நம்புவதாலா? எது உண்மை? நான் உங்களைக் கேட்கிறேன். ”
நீராலும் ஆவியாலும் உண்மையாக மறுபடியும் பிறக்க கீழ்க் கண்டவற்றை பூர்த்திச் செய்ய வேண்டும். நாம் இயேசு உலகிற்கு மாமிசமாக வந்தார் என்று நம்பவேண்டும், யோர்தானில் அவரின் ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்டார், சிலுவையில் நமது பாவங்களுக்காக நியாயம் தீர்க்கப்பட்டார். இயேசுவை, நமது உண்மையான இரட்சகரை, இந்த வழியில் விசுவாசித்தால் நாம் உண்மையில் மறுபடி பிறக்கமுடியும்.
உங்களை மறுபடியும் கேட்கிறேன். வேதாகமம் நம்பிக்கையை எவ்வாறு வரையறுக்கிறது? இயேசுவின் இரத்தத்தை நம்புவதா? அல்லது இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் இவை இரண்டையும் நம்புவதா?
இயேசுவின் இரத்தத்தின்மீது வைக்கும் நம்பிக்கை கீழ்க்கண்டவாறு. இயேசு இவ்வுலகின் எல்லா பாவங்களுக்கும் தீர்க்கப்பட்டு ஆக்கினையடைந்தார். நம்முடைய பாவங்களினிமித்தம் அவர் நசுக்கப்பட்டு காயமடைந்ததால் நாம் கடும் தீர்ப்பிலிருந்து தப்பினோம். ஆனால் அது முழுமையான உண்மையல்ல. இந்தக் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ளுமுன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தவேண்டும். இயேசு ஏன் சிலுவையில் அறையப்படவேண்டும்?
வேதாகமம் மிகத்தெளிவாக, பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறுகிறது. இயேசு இவ்வுலகில் எந்தப் பாவங்களையும் செய்யவில்லை. மரியாளின் சரீர மூலமாக மனித மாமிசமாக அவர் வந்தார். ஆனால் அவர் பரிசுத்த தேவனின் மைந்தனாகவும், பாவிகளின் இரட்சகராகவும் மனித உருவத்தில் வந்தார். அதனாலேயே சிலுவையில் மரிக்கும் முன்பாக யோவான் ஸ்நானகனால் அவர் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டார். அவர் ஞானஸ்நானம் பெற்றபோது நம்முடைய எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்றுகொண்டார். ஆகவே இந்த ஞானஸ்நானம் இல்லையென்றால் சிலுவையில் இரத்தம் சிந்துவதற்கான ஆக்கினையை அவர் பெற்றிருக்க மாட்டார்.
பழைய ஏற்பாட்டின் பலியிடும் முறைமை
பலி செலுத்துவதற்கான தவிர்க்க முடியாத நியதிகள் என்ன?
(1) கலங்கமில்லாத உயிருள்ள ஒரு மிருகம்.
(2) பலியின் தலையில் கை வைத்தல்.
(3) அதன் குருதி
பரிசுத்த ஆசரிப்புக்கூடாரத்தின் பலி செலுத்தும் முறையின் மூலமாக உண்மையைப் பார்ப்போம். பழைய ஏற்பாட்டின்படி ஒருவனின் பாவத்தை இடமாற்றவோ, இஸ்ரவேலின் பாவத்தை இடமாற்றவோ அப்பாவியோ அல்லது தலைமையாசரியனோ பலியாட்டுக்குட்டியின் தலைமீது கைவைத்தனர். இக்காணிக்கைகள் கொல்லப்பட்டு பலிபீடம் முன்பாக காணிக்கையாக படைக்கப்பட்டன. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் முன்னோடியாகும், மேலும் இயேசுகிறிஸ்துவே கர்த்தர் அனுப்புவதாக உறுதியளித்த பலியாகிய ஆட்டுக்குட்டியானவர்.
நீங்கள் எல்லாம் எப்பொழுது உங்கள் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது சுமத்தினீர்கள்? இதனைக் குறித்து சிந்தித்து எனக்கு பதிலளிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் பலி மிருகங்களின் தலை மீது கை வைக்காமல் இஸ்ரவேலர்கள் அதனைக் கொல்லக்கூடாததாக இருந்தது. (தலையில் கை வைப்பது என்பதன் பொருள், பலி மிருகத்தின் மீது பாவத்தை சுமத்துவது என்பதாகும்) பலிபீடத்திற்கு முன்பாக பலி காணிக்கை அழைத்து வரப்படும் முன்பு, பாவங்களை பலி மிருகங்களின் மீது சுமத்தும் பொருட்டு அதன் தலை மீது கை வைக்கும் சம்பவம் நடைபெற்றிருந்தது.
“அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின் மேல் வைத்து” (லேவியராகமம் 1:4) லேவியராகமத்தில் எல்லாப் பாவிகளின் மீதும் கைகளை வைப்பது தேவையென்று எழுதப் பட்டுள்ளது. பலியின் மீது தம் கையை வைப்பதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் தம் பாவங்களை அதன் மீது சுமத்தவும், கர்த்தர் முன் நம்பிக்கையுடன் அதன் இரத்தத்தையும் சதையையும் காணிக்கையாக்கியதால் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்படைய முடிந்தது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் கூட இஸ்ரவேலர்கள் நம்பிக்கையினால் இரட்சிக்கப்பட்டனர்.
கர்த்தரின் முன்பாக சர்வாங்கத் தகனப் பலியை ஏறெடுக்கும்போது, பாவி ஒருவன் தன் பாவம் அப்பலியிடம் செல்வதற்கேதுவாக அதன் தலைமீது தன் கையை வைக்கவேண்டும். அப்பலிக் காணிக்கை அப்பாவியின் சார்பாக கொல்லப்படுகிறது. அதன் குருதியானது பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் உள்ள கொம்புகளில் ஊற்றப் படுகிறது. மீதி இரத்தம் பலி பீடத்தைச் சுற்றிலும் உள்ளத் தரையில் ஊற்றப்படுகிறது. பாவிகள் இந்தப்படியே பாவ விடுதலை அடைந்தனர்.
புதிய ஏற்பாட்டின் படி நீர் மற்றும் இயேசுவின் இரத்தத்தை நம்புவதன் மூலமாக பாவிகள் அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெற முடியும். 1யோவான் 5:1-10 இவ்வாறு கூறுகிறது. ஒரு பாவி இயேசுவின் ஞானஸ்நானத்தையும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தையும் (சிலுவை) நம்பும்பொழுது அவன் பாவ விடுதலையடைகிறான்.
ஆகவே, எந்தப் பாவியும் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் இவை இரண்டையும் விசுவாசித்துகொண்டிக்கும்வரையில் பாவ விடுதலைப் பெறுவான்.
நீராலும் ஆவியாலும் பறுபடியும் பிறப்பதற்கு, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய இரண்டும் பரிசுத்த ஆவியுடன் சேர்ந்து ஒரு பிரிக்கமுடியாத காரணியாக அமைகிறது.
அன்பானவர்களே, உங்களால் இயேசுவின் இரத்தத்தை மட்டும் விசுவாசித்து பாவ விடுதலைப் பெற முடியுமா? யாரெல்லாம் இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டும் விசுவாசித்து மறுபடியும் பிறக்கமுடியும் என்கிறார்களோ அவர்கள் இதயத்தில் பாவம் இன்னமும் இருக்கிறது. ஆயினும் இயேசுவின் ஞானஸ்நானத்தை புதிய ஏற்பாட்டின் ஆவிக்குரிய விருத்தசேதனமாக நம்பினால் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவோம். இயேசுவின் ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள விருத்தசேதனத்திற்கு ஒப்பாகும்.
எல்லாப் பிரிவுகளிலும் அதற்குரிய கொள்கைகள் இருக்கின்றன. அவர்கள் தம் போலியான விசுவாசத்தை விட்டொழிக்காவிட்டால் நரகத்திற்கு போகும்படிக்கு நாசமாவார்கள். பிரஸ்பைட்டியன் சபை முற்குறிக்கப்படுதல் என்ற கொள்கையுடையது. மெதடிஸ்ட் சபை அர்மீனியக் (மனிதாபிமானம்) கொள்கையை வலியுறுத்துகிறது, பாப்டிஸ்ட் சபை ஞானஸ்நானக் கொள்கையையும் ஹோலினஸ் சபை, புனித வாழ்க்கையையும் வலியுறுத்துகின்றன. இவையெல்லாம் சத்தியவாக்கிலிருந்து விலகிச் சென்றவை.
மறுபடியும் பிறத்தலைக்குறித்து வேதாகமத்தின் சத்திய வார்த்தை என்ன கூறுகிறது? வேதம் இயேசுவின் ஞானஸ்நானத்திலும் அவரின் இரத்தத்திலும் உண்மைக் காணப்படுவதாக கூறுகிறது. யாரெல்லாம் வேதவாக்கினை விசுவாசித்து அதனைப் பின் பற்றுகிறார்களோ, யாரெல்லாம் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதைக் குறித்து விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாவ விடுதலையைக் கண்டடைவார்கள்.
இயேசுவின் ஞானஸ்நான இரகசியம் என்ன?
புதிய ஏற்பாடு கூறும் ஆவிக்குரிய விருத்தசேதனம் என்ன?
இயேசுவின் ஞானஸ்நானம்.
இயேசுவின் ஞானஸ்நானம் ஆவிக்குரிய விருத்தசேதனமாகும். பழைய ஏற்பாட்டில் யாரேனும் விருத்தசேதனம் பண்ணப்படாதவனாக இருந்தால் அவன் தன் மக்களிலிருந்து துண்டிக்கப்படவேண்டுமென்று கர்த்தர் கூறினார்.
புதிய ஏற்பாடு கூறும் ஆவிக்குரிய விருத்தசேதனம் இயேசுவின் ஞானஸ்நானமாகும். நாம் இதனைப் புரிந்து கொண்டு நம்பவேண்டும். இயேசுவின் பொதுவான பிரசங்க ஆரம்பக்காலத்தில் யோவான் ஸ்நானகனால் அவர் ஞானஸ்நானம் பெற்றதால், அவரின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலம் நாம் ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் ஆகலாம். நாம் ஏன் இயேசுவானவர் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதற்கான காரணங்களை கவனமாக ஆராயவேண்டும்.
“அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாய் இருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா? என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடம் கொடுத்தான்.” (மத்தேயு 3:13-15)
மரண நதியான யோர்தானில் யோவான் ஸ்நானகனால் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. யோவான் ஸ்நானகனால் இயேசுவின் தலைமீது கைவைக்கப்பட்டு அவர் முழுவதுமாக நீரினுள் ஆழ்த்தப்பட்டார். இதுவே ஞானஸ்நான முறைகளில் மிகவும் சரியானதாகும். (ஞானஸ்நானம்: நீரினுள் அமிழ்த்தப்படுதல்) உலகின் பாவங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் வகையாக, பழைய ஏற்பாட்டில் கூறியுள்ளபடி அவர் தலை மீது கைவைக்கப்பட்டு, அம்முறையால் அவர் ஞானஸ்நானம் பெறவேண்டியதாய் இருந்தது. இயேசுவை நம்புவோருக்கு இயேசுவின் ஞானஸ்நானமே ஆவிக்குரிய விருத்தசேதனமாகும். “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடம் கொடுத்தான்.” (மத்தேயு 3:15) இயேசு இவ்வுலகின் பாவங்களை எடுத்துப்போட்டு நமது கர்த்தராகவும், இரட்சகருமாக இருப்பது மிகவும் பொருத்தமாகும். ஆகவே நம்முடைய எல்லாப் பாவங்களையும் தம் தலைமீது கொண்டு சிலுவையில் மரித்தார் என்று எழுதப்பட்டிருப்பதும் பொருத்தமாகும்.
எல்லாப் பாவிகளையும் மறுபடியும் பிறக்கச்செய்யும் வல்லமை இயேசுவின் ஞானஸ்நானத்தில் இருக்கிறது. இதுவே நீர் மற்றும் ஆவியானவர் குறித்த நற்செய்தியின் இரகசியமாகும்.
அவர் தம்முடைய பொது வாழ்க்கையில் பாவிகளை அவர்களின் சகல பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும்பொருட்டு, யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார். ஞானஸ்நானம் என்பதற்கு “கழுவப்படுதல், அடக்கம் பண்ணபடுதல், மாற்றப்படுதல்” என்ற அர்த்தங்கள் உள்ளன.
கர்த்தர் கேட்டபடி ஞானஸ்நானம் பெற்றதால் இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமந்தார். “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்திட தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29) இயேசுவின் ஞானஸ்நானத்தின் பொருள் யாதென்றால், யாரெல்லாம் அவரை நம்புகிறார்களோ அவ்வுலக மக்கள் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெறுகிறார்கள்.
உலகின் அனைத்துப் பாவங்களையும் சுமந்த தேவாட்டுக்குட்டியானவர் சிலுவைக்குச் சென்றார். மேலும் அவர் எல்லா மக்களுக்குமான நியாயத் தீர்ப்பை ஏற்றார். இப்படியாக மனித குலத்தை பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
ஆகவே, பழைய விருத்தசேதனம் போன்ற இயேசுவின் ஞானஸ்நானம், அவர் சிலுவையில் இரட்சிப்புக்காக சிந்திய இரத்தம் ஆகியவற்றை நம்புவோர் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவர். தம்முடைய ஞானஸ்நானத்தினாலும், அவரின் குருதியினாலும், இயேசுகிறிஸ்து எல்லாப் பாவிகளையும் இரட்சித்தார்.
இரட்சிப்பு இரத்தத்தினால் மட்டுமா வருகிறது? இல்லை. அப்படியில்லை.
இயேசு உலகிற்கு எதன்மூலம் வந்தார்?
நீரினாலும் ஆவியினாலும் வந்தார்.
1 யோவான் 5:4-8 கூறுகிறது. “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும், இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமானவராகையால், ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்வைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.”
அன்பான கிறிஸ்தவர்களே, உங்களுக்கு இரட்சகரான அவரைக்குறித்த சாட்சியமென்ன? நீராலும் இரத்தத்தாலும் வந்த தேவகுமாரனை விசுவாசிப்பதேயல்லாமல் வேறென்ன?
உலகினை மேற்கொள்ளும் வெற்றியென்ன? நீரையும் இரத்தத்தையும் நம்புவதால் கிடைக்கும் வல்லமையே அது, இயேசுவே நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால் ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர்.
பூமியிலே, மூன்று காரியங்கள் சாட்சி கூறுகின்றன. நீர், இரத்தம் மற்றும் ஆவி என்பவைகளே அவைகள். இவை மூன்றும் ஒன்றே. நம்மை நிரந்தர ஆக்கினையிலிருந்து தப்புவிக்கும் பொருட்டு இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். நம்மை படைத்தவர் கர்த்தர், பாவிகளனைவரின் இரட்சகராயினார் என்பதற்கு அத்தாட்சியாக, நம் அனைவரையும் இரட்சிக்கும் நற்செய்தியான நீர் மற்றும் ஆவி ஆகியவை இருக்கின்றன.
இயேசு இவ்வுலகத்திற்கு மாமிசத்தில் ஆவியாக வந்தார் என்பதற்கும், நம்முடைய பாவங்களை தம்மீது சுமக்கும் பொருட்டு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றார் என்பதற்கும், நம்முடைய பாவங்களுக்குத் தீர்ப்பாக சிலுவையில் மரித்தார் என்பதற்கும் நாமே சாட்சிகள். அவரை விசுவாசிப்போரை இரட்சிக்கிறார். இதுவே நீரையும் ஆவியையும் குறித்த உண்மையான நற்செய்தியாகும்.
கர்த்தரின் இரட்சிப்பைக் குறித்து நீரும் இரத்தமும் பகரும் சாட்சியம் என்ன?
பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்திற்கு ஒப்பாக இருப்பது என்ன?
இயேசுவின் ஞானஸ்நானம்.
நீரானது இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின்படி இயேசுவின் ஞானஸ்நானம் விருத்தசேதனமாகும். பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தின் ஜோடி புதிய ஏற்பாட்டின் இயேசுவினுடைய ஞானஸ்நானமாகும். உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சி இயேசுவின் ஞானஸ்நானத்தில் இருக்கிறது.
இதனை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் கர்த்தர் முன்பாக நின்று, நல் மனசாட்சியுடன் “நீரே என் இரட்சகர், என் தேவனே, உமது ஞானஸ்நானத்தையும், உம் இரத்தத்தையும் நம்புகிறேன். அதுவே நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியாகும். ஆகவே என்னிடம் பாவங்கள் இல்லை. நான் தேவனின் பிள்ளையாக இருக்கிறேன், நீர் என் இரட்சகர் ஆவீர்”. இதனை நாம் உண்மையான விசுவாசத்துடன் வெளிப்படையாக சொல்லுவோம். இதனை நாம் சொல்லமுடிவதற்கான காரணம் நம்முடைய விசுவாசம் இயேசுவின் ஞானஸ்நானத்திலும் அவரின் குருதியிலும் இருப்பதேயாகும்.
நம்மை மறுபடியும் பிறக்கச்செய்யும் வாக்கு யாது? அது இயேசுவின் ஞானஸ்நானமும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தமுமாகும். நம் இருதயத்தின் இரட்சிப்பிற்கான சாட்சியம் இதுவாகும். இதுவே நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதைக் குறித்த நற்செய்தியாகும்.
அன்புள்ள கிறிஸ்தவர்களே, நான் உங்களிடம் மறுபடியும் கேட்கிறேன் “இயேசுவின் இரத்தத்தை மட்டும் நாம் விசுவாசிப்பதால் ஒரு பாவி இரட்சிக்கப்பட முடியுமா?” இல்லை. இயேசுவின் சிலுவை மரணம் மீது வைக்கும் விசுவாசம் மட்டும் இரட்சிப்பிற்கு தேவையானதல்ல. இது நீரையும் ஆவியையும் - நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பதால் பாவிகள் மறுபடியும் பிறக்கமுடிகிறது. இப்பொழுது உங்களுக்கு வேதாகமத்தைக் காட்டுகிறேன். அது நீரைப் பற்றி கூறுகிறது. வேறுவார்த்தையில் கூறினால் இயேசுவின் ஞானஸ்நானத்தைப் பற்றிக் கூறுகிறது.
1 பேதுரு 3:21-22 கூறுகிறது. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, (மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாய் இருந்து,) இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; அவர் பரலோகத்திற்கு போய் தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவ தூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்கு கீழ்பட்டிருக்கிறது.”
அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவின் ஞானஸ்நானம் இரட்சிப்பிற்கு ஒப்பாக இருப்பதாகவும், பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டதற்கு அது அத்தாட்சியாகவும் இருப்பதாக சாட்சியும் கூறுகிறார். இயேசுவின் ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்திற்கு சமமாகும். பழைய ஏற்பாட்டு காலத்தில் - எப்படி இஸ்ரவேல் மக்கள் தேவ வாக்கை நம்பி அவரின் பிள்ளைகளாகும்படி தம் நுனித்தோலை வெட்டிக்கொண்டார்களோ, அப்படியே புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசுவின் ஞானஸ்நானம் நம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சிக்கிறது.
ஆகவே பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும், புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானம் ஆகிய இரண்டும் ஒன்றே. நீங்களெல்லாம் இப்போது இயேசுவின் ஞானஸ்நானம் விருத்தசேதனத்திற்கு ஒப்பானது என்று நம்புகிறீர்களா? 1 பேதுரு 3:21 இல் எழுதப்பட்டுள்ளபடி அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது இப்பொழுது நம்மையும் இரட்சிக்கிறது. கர்த்தரின் எழுதப்பட்ட வாக்குகளுடன் நீ வாதம் பண்ணக்கூடுமோ?
இவ்வுலகில் வாழும் நாம், பாவமில்லாமல் எப்படி இருக்கமுடியும்? பாவத்திலிருந்து இரட்சிப்பு கிடைக்கவும், நீதிகள் முழுமைப் படுத்தப்படவும், இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார். மத்தேயு 3:15 கூறுகிறது “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.”
உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால், அவரை நம்பும் அனைவரும் இப்போது பாவமற்றவர்கள். நாம் அனைவரும் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நமது பாவங்கள் அவரின் மீது சுமத்தப்பட்டது என்பதை ஏற்பதன் மூலம் நீதிமான்களாகிறோம். நம்மை தீர்ப்பிலிருந்து இரட்சிக்கும்படியாக நம் சகல பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார்.
அன்பு நண்பர்களே, பாவிகளை சகல பாவங்களிலிருந்தும் இரண்டு காரணிகள் இரட்சிக்கின்றன. அவையாவன, நீர் மற்றும் ஆவியாகும். இயேசுவின் மூன்றாண்டுகள் பொது பிரசங்க நாட்களில் அவர் செய்த இரு முக்கிய காரியங்கள், நமது பாவங்களை தம்மீது ஏற்றுக்கொண்டதும், நமக்காக சிலுவையில் மரித்ததுமாகும்.
யோவான் 1:29 கூறுகிறது. “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார். மேலும் நமது மீறுதல்களிலிருந்து பாவ விடுதலையளிக்க சிலுவையில் மரித்தார். இயேசுவே தேவகுமாரன். நம்மைப் படைத்தவர் அவர். பழைய ஏற்பாட்டில் கர்த்தர் செய்த விருத்தசேதன உடன்படிக்கையை அவர் நிறைவாக்குவதற்காக உலகின் பாவங்களைச் சுமந்தார்.
எவனொருவன் தன் இதயத்தில் இயேசுவின் ஞானஸ்நானத்தை, நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறானோ அவன் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கிறான். யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு கர்த்தர் இரட்சகர் ஆவார். கர்த்தருக்கு நன்றி, அல்லேலூயா! இயேசு கர்த்தர் வாக்குதத்தம் செய்த இரட்சிப்பை நிறைவாக்கினார். அவர் நம்மை இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார்.
மாமிச அழுக்கை நீக்குவதல்ல
காலப்போக்கில் மாமிசம் புனிதமாகிறதா?
இல்லை. மாமிசம் பாவங்களைத் தொடர்ந்து சேர்க்கிறது. இது நமது மரணம்வரைத் தொடரும்.
1 பேதுரு 3:21 கூறுகிறது. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாய் இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது”
இயேசுகிறிஸ்துவை ஒருவன் தன் இரட்சகராக விசுவாசித்து வரும்போது, அவன் மாமிசத்தின் பாவங்களை நிறுத்துகிறான் என்று அர்த்தமாகாது. நாம் தொடர்ந்து பாவம் செய்தாலும், இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலம், நம்முடைய உலகப்பிரகாரமான பாவங்களை இயேசுவில் சுமத்துகிறோம். பாவங்களுக்கு கூலியாக சிலுவையில் அவர் இரத்தத்தைக் கொடுத்தார். மறுபடியும் பிறத்தல் என்பதன் பொருள் உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நமது இதயத்திற்குள் வரவேற்பதாகும். பாவமன்னிப்பை நமது இதயத்தில் வெற்றிப்பொருளாக கொள்கிறோம். நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நம்பியதால், நம் இதயங்கள் மறுபடியும் பிறந்தன. ஆனாலும் நாம் மாமிசத்தின் பாவங்களையும், மீறுதல்களையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். ஆயினும் நமது மாமிசத்தின் பாவங்கள் அனைத்தும் ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுவிட்டன.
இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் ஞானஸ்நானம் சாட்சியாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தினால் கிடைக்கும் பாவமன்னிப்பை நாம் விசுவாசிக்கும்போது, நாம் பாவங்கள் அற்றவர்களாகிறோம். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் வரும் இரட்சிப்பைக் குறித்த உண்மையை நமது இதயத்திற்குள் எடுத்துச் செல்லும் பொழுது நாம் மறுபடியும் பிறக்கிறோம். மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நீதிமான்களும் ஆனோம்.
பழைய ஏற்பாட்டின் ஆபிரகாமின் விசுவாசம் இதுவே. அப்போஸ்தலனாகிய பவுல் நீதிமானாவதைக் குறித்து பேசியதும் இதுவே, அப்போஸ்தலனாகிய பேதுரு சாட்சி பகன்ற இரட்சிப்பை போல் உள்ளதும் இதுவே. ஆபிரகாம் வேதவாக்கை கேட்டு அதனை விசுவாசித்து நீதிமான் ஆனது போல நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் மரித்ததையும் விசுவாசிக்கும்போது நாம் இரட்சிக்கப்படுகிறோம்.
யோவான் 1:12 கூறுகிறது. “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.” நம்மை தம்முடைய ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்த இயேசுவை உனது இரட்சகராக ஏற்றுக்கொள்கிறாயா? தேவகுமாரன் தம் நீர் மற்றும் இரத்தம் ஆகியவற்றால் அளித்த இரட்சிப்பை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமா இரட்சிப்பு வருகிறது? இல்லை. அது நீராலும் இயேசுவின் இரத்தத்தினாலும் வருகிறது. வேதாகமத்தில் இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தினால் மட்டும் வருவதல்ல என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் இரத்தத்தினாலும் வருகிறது.
புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் ஞானஸ்நானம் ஆவிக்குரிய விருத்தசேதனமாகும். இரட்சிப்பு நம்மை பாவங்களிலிருந்து துண்டித்து போடுகிறது என்பது உண்மை. உலகின் பாவங்களுக்காக அவர் தீர்க்கப்பட்டார் என்பதன் பொருள், அவர் நமக்காக, உனக்காகவும், எனக்காகவும் நியாயம் தீர்க்கப்பட்டார் என்பதாகும்.
பாவ மன்னிப்பின் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும், இரத்தத்தையும் நாம் பெறும்பொழுது, நமது பாவங்களுக்கான தீர்ப்பிலிருந்து நாம் விடுதலை ஆகிறோம். நமது விசுவாசத்தின் மூலம், இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட்டோம். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் நமது இரட்சிப்பாக ஏற்றுக்கொள்ளும்போது நம் இருதயத்தில் உள்ள எல்லா பாவங்களும் கழுவப்பட்டன. இதனை உண்மையென நீ புரிந்துகொண்டு நம்புகிறாயா? நீங்கள் நீர் மற்றும் ஆவி குறித்த நற்செய்தியை விசுவாசிப்பீர்கள் என்று நான் விரும்புகிறேன். விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” (ரோமர் 2:29) நம் இதயத்தில் எப்படி விருத்தசேதனம் செய்யப்படுகிறோம். நாம் இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்தார் என்றும், அவரின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்தார் என்றும், நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்றும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார் என்றும் நம்புவதன் மூலம் ஆவிக்குள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாகிறோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் இதயத்தில் விருத்தசேதனம் என்று கூறினான். இதயத்தில் விருத்தசேதனம் என்பது இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும், விசுவாசிப்பதும் ஆகும். உங்கள் இதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டுமானால், நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, அப்பொழுது மட்டுமே உங்களால் உண்மையில் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும்.
யோவான் ஸ்நானன் இயேசுவால் அனுப்பப் பட்டவனா?
யோவான் ஸ்நானன் யார்?
அவன் மனிதகுலத்தின் பிரதிநிதி, ஆரோனின் வம்சத்தின் படி அவனே கடைசி தலைமை ஆசாரியன்.
இங்கே இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்த யோவான் ஸ்நானன் யாரென்று நாம் கேட்கவேண்டும். யோவான் ஸ்நானன் மனிதகுலத்தின் பிரதிநிதியாவான். மத்தேயு 11:11-14 கூறுகிறது. “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோக ராஜ்ஜியத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான் ஸ்நானன் காலமுதல் இது வரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்துண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன் தான்.”
அன்பான கிறிஸ்தவர்களே, ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை என்று இயேசு கூறினார். யோவான் ஸ்நானனின் பிறப்பின் மூலம், முதல் உடன்படிக்கையின் காலம், பழைய ஏற்பாட்டுக் காலம் ஆகியவை முடிவடைந்தன. கர்த்தரின் உடன்படிக்கையை இயேசு நிறைவேற்ற வந்தமையால் அக்காலம் முடிவடைந்தது.
அப்படியானால், கர்த்தருடைய உடன்படிக்கையை நிறைவேற்றப்போவது யார்? இயேசுகிறிஸ்துவும் யோவான் ஸ்நானனுமே அது. யோவான் ஸ்நானன் உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது இடமாற்றம் செய்தான். பழைய ஏற்பாட்டின் கடைசி தலைமை ஆசாரியன் யார்? ஆரோனின் சந்ததியில் வந்தது யார்? அது யோவான் ஸ்நானன் என்று இயேசுவே சாட்சி கூறுகிறார். யோவான் ஸ்நானனே மனிதர்களின் பிரதிநிதி, ஸ்தீரிகளில் பிறந்தவர்களில் உயர்ந்தவன்.
நம்மிடமுள்ள குறிப்புகளை ஆராய்வோம். மோசே, ஆபிரகாம், யாக்கோபு எல்லாம் ஸ்திரீகளில் பிறந்தவர்கள். ஆனால் பழைய ஏற்பாட்டினதும், புதிய ஏற்பாட்டினதும் மனிதர்களில் ஸ்திரீகளுக்கு பிறந்தவர்களில் உயர்ந்தவன் யார்? அது யோவான் ஸ்நானனேயாகும்.
பழைய ஏற்பாட்டின் கடைசி ஆசாரியானவனும், ஆரோனின் சந்ததியானவனுமான யோவான் ஸ்நானன் புதிய ஏற்பாட்டுக் காலத்தில், தேவ ஆட்டுக்குட்டிக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். இது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவமன்னிப்பு நாளில் ஆரோன் பலி மிருகங்கள் மீது கைவைத்ததற்கு ஒப்பானதாகும். இயேசுகிறிஸ்துவுக்கு அவன் ஞானஸ்நானம் கொடுத்து உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது சுமத்தினான். அவன் கர்த்தருடைய சேவகன் ஆவான். இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்ததன் மூலமாக மனிதர்களின் இதயங்களில் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை நிறைவேற்றினான்.
நம்முடைய இரட்சிப்பின் அடையாளமாக இயேசுவின் ஞானஸ்நானத்துடன் கண்டிப்பாக அவர் இரத்தத்தையும் நம்ப வேண்டும். இயேசுகிறிஸ்து உலகின் பாவங்களையெல்லாம் தம்மேல் ஞானஸ்நானம் மூலம் ஏற்றுக்கொண்டு அதற்காக தீர்க்கப்பட்டார். நாம் செய்ய வேண்டிய ஒரே எளிய வேலை இதனை விசுவாசிப்பதேயாகும். இயேசுவின் அனுபவங்களை நாம் விசுவாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாக இருக்கிறது.
நற்செய்தியாகிய நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதை இதயப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நீங்கள் ஆபிரகாமின் சந்ததியினராகவும் கர்த்தரின் பிள்ளையுமாவீர்கள். வெகு சிலரே கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்கள். ஆனால் நிறைய மக்கள் அவரை தம் இருதயத்தினுள் ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.
பகல் முடிந்தது. இரவு வருகின்றது. இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பி அவரை உன் இதயத்திற்குள் பிரவேசிக்க அனுமதி கொடு. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் மீதிருக்கும் உனது விசுவாசம் உன்னை ஆசீர்வதிப்பதோடு ஆவிக்குரிய இரட்சிப்பையும் நல்கும்.
இரட்சிப்பின் நற்செய்தியை நீ நம்பும்போது ஆவியின் அபிஷேகம் கிட்டுகிறது என்பதை எப்போதும் மனதில் வை. நற்செய்தியானது இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமுமாகும். நீ ஆவிக்குரிய விளக்கையும் (தேவாலயம்) எண்ணெய்யையும் (ஆவியானவர்) புத்தியுள்ள கன்னிகையை (மத்தேயு 25:4) போன்று நற்செய்தியாகிய ஞானஸ்நானத்தையும் அவரின் குருதியையும் நம்புவதால் ஆயத்தமாக வைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
இயேசுவை யார் நம்புகிறார்களோ அவர்கள் இதயத்தில் ஆவியுடன் ஆலயத்திற்கு செல்வார்களாக.
இயேசு யாருக்காக ஞானஸ்நானம் பெற்றார்?
இயேசு எதற்காக ஞானஸ்நானம் பெற்றார்?
மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவும் பொருட்டு.
“நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக; இப்பொழுது இடம் கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.” (மத்தேயு 3:14-15)
மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவும்படியாக இயேசு ஞானஸ்நானம் பெற்றார். இயேசுகிறிஸ்துவே தேவகுமாரன், நமது இரட்சகர். நம்மை படைத்த படைப்பாளி அவரே. இயேசுகிறிஸ்து, தந்தையான கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றும் பொருட்டும், நம்மை அவர் மக்களாக்கவும் வந்தார்.
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளனைவரும் யாரைக்குறித்து பேசுகிறார்கள்? அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து பேசுகிறார்கள். பழைய ஏற்பாட்டின் எல்லா தீர்க்கதரிசிகளும் இயேசு இவ்வுலகிற்கு வரப்போவதையும், நமது பாவங்களை தம்மீது ஏற்றுக்கொள்ளப் போவதையும், நம் அனைவரையும் பாவங்களிலிருந்து நிரந்தரமாக விடுதலைச் செய்யப்போவதையும் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களில் கூறப்பட்டபடி இயேசு இவ்வுலகிற்கு வந்தார். ஆதாம், ஏவாளில் இருந்து உலகின் கடைசி மனிதன் வரையுள்ள மனிதகுலத்தின் பாவங்களை அவர் எடுத்துப்போட்டார்.
இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும், அவரின் குருதியினாலும் வரும் இரட்சிப்பை உன் இருதயத்தில் இப்போது ஏற்றுக்கொள். இது உண்மை என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா? உன் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறதா? “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” எல்லா நீதிகளையும் நிறைவேற்றும்படியாக யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார்.
ஞானஸ்நானம் என்ற வார்த்தையானது கழுவுதல் என்று பொருள்படும். பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட கையை வைக்கும் முறையின் படி யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார்.
மனிதகுலத்தின் சகல பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டபிறகு யோர்தான் நதியில் அவர் முழுகினார். இவ்வாறு பாவிகளின் இறப்பையும் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடுகிறது. இயேசு நீரில் மூழ்கியது இயேசுவின் சிலுவை மரணத்திற்கு ஒப்பானதாகும். அவர் நீரிலிருந்து வெளியே வந்தது மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்ததைக் குறிக்கிறது. சிலுவை மரணத்திற்கு பிறகு இயேசு மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார்.
இயேசு தமது கர்த்தராகவும் இரட்சகருமாகவும் இருக்கிறார். ஞானஸ்நானம் பெறும் பொருட்டு இயேசு இவ்வுலகிற்கு வந்ததும், சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்ததும், மூன்றாம் நாள் உயிருடன் எழுந்ததும், இப்பொழுது அவர் கர்த்தரின் வலது பக்கம் அமர்ந்திருக்கிறார் என்பதுமான காரணங்கள் அவர் மனிதகுலத்தை மரணத்திலிருந்து இரட்சித்தார் என்பதற்கு தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது. இந்த உண்மையை சிரத்தையுடன் நம்புகிறாயா?
புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் ஞானஸ்நானமே ஆவிக்குரிய விருத்த சேதனமாகும். “இருதயத்தின் விருத்த சேதனமே விருத்த சேதனமாகும்” இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் நம்புவதாலும், நம் பாவங்கள் எல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதையும் நாம் உண்மையென விசுவாசிப்பதால் இதயம் விருத்தசேதனம் பண்ணப்பட்டதாகின்றது. இருதயத்தில் விருத்தசேதனம் என்பது நம்முடைய பாவங்களையெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவர் மீது சுமத்தியதை ஒப்புக்கொள்வதாகும்.
நீ உன் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா? இதயத்தின் விருத்த சேதனத்தை நீ விசுவாசித்தால் உன் பாவங்கள் நிரந்தரமாக கழுவப்படும். இதற்காகவே இயேசு நீதியை நிறைவாக்கி பாவிகளுக்கு இரட்சிப்பை உறுதியளித்தார்.
அன்பான கிறிஸ்தவர்களே, இந்த இரட்சிப்பின் உறுதியை உங்கள் இதயத்தினுள்ளும், மனதிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே உண்மை. இயேசுவின் இரட்சிப்பை உங்களிருதயத்தில் ஏற்றுக்கொண்டால் உன் பாவங்களில் இருந்து விடுதலையாவாய். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைப் பேர்களோ, அத்தனைப் பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12).
ஞானஸ்நானத்தைப் பெறும்பொருட்டு இயேசு ஏன் இவ்வுலகிற்கு வரவேண்டும் என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா? அதனை இப்போது நம்புகிறீர்களா? மனிதர்களின் பாவங்களை சுமந்து தீர்க்கும் பொருட்டு இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அதுவே ஞானஸ்நானமாகிய விருத்த சேதனமாகும். இயேசுவின் ஞானஸ்நானமானது நமக்கு ஆவிக்குரிய விருத்தசேதனமாகிறது. அதனாலேயே அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை இதயத்தில் விருத்தசேதனம் செய்யும் படிக் கூறுகிறான். இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தாலும் நம்மைத் தெளிவாக இரட்சித்தார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதனை இதயத்தில் நம்புவதைத் தவிர வேறில்லை. நாம் “ஆம். ஆமேன்” என்று இதயபூர்வமாக வேதவாக்கிற்கு கூறவேண்டும். இதனை நம்புகிறாயா?
இந்த உண்மையை உன்னிருதயதில் ஏற்றுக் கொள்கிறாயா?
இயேசுவை சேவிக்கும் முன் நாம் என்ன செய்யவேண்டும்?
நீரையும் ஆவியையும் பற்றிய உண்மையை இதயத்தினுள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகின்றன. இந்நாளில் இக்கிருபையின் காலத்தில் நமது இதயத்தில் இயேசுவின் இரத்தத்தையும், நீரையும் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எதையும் நாம் செய்யத் தேவையில்லை.
“இருதயத்தின் விருத்தசேதனமே, விருத்தசேதனமாகும்” நம்மிருதயத்தில் விசுவாசத்துடன் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். நம் விசுவாசத்தாலேயே நாம் இரட்சிக்கப் படுகின்றோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர்கள் விருத்தசேதனம் மூலமும், பஸ்காவின் இரத்தத்தைக் கதவின் மீதும், மேலுத்திரம் மீதும் தெளித்ததன் மூலமும் இரட்சிக்கப்பட்டார்கள்.
யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் அவர்களின் இரட்சிப்பாக விசுவாசிக்கிறார்களோ அவர்கள் கர்த்தரின் தீர்ப்புக் குறித்து பயப்படத்தேவையில்லை, ஏனெனில் அது அவர்களைக் கடந்துச் செல்லும். ஆனால் உண்மையை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது கர்த்தரின் தீர்ப்பு பாயும். நிறையபேர் இயேசுவை வீனாக நம்பிக்கொண்டு இன்னமும் பாவங்களுக்கு அடிமைகளாயிருக்கின்றனர்.
இந்நிலைக்கு அவர்கள் எப்படி வந்தனர்? பாவங்களினால் அவர்களேன் இன்னும் துன்பப் படுகிறார்கள்? இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் குருதியையும் பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாமையே. அவர்கள் இயேசுவின் குருதியை மட்டும் நம்புகிறார்கள். அவரின் ஞானஸ்நானத்தை அசட்டையோ அல்லது மேலோட்டமாகவோ கருதுகிறார்கள்.
இயேசுவின் குருதியை மட்டும் சாதாரணமாக விசுவாசித்தால் இரட்சிப்பு கிட்டிவிடுமா? வேதாகமம் இது இப்படியானது தான் என்று கூறுகிறதா? இதுகுறித்து பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் என்ன கூறுகின்றன? வேதாகமத்தைப் பொருத்தவரையில் அது தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மட்டுமல்ல இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்பு வெற்றிக்கொள்ளபடுகிறது. (1 யோவான் 5:3-6)
இயேசுவின் இரத்தத்தை மட்டுமா நீ நம்புகிறாய்? யாருடைய இருதங்களில் இன்னும் பாவம் இருக்கிறதோ அவர்கள் தம் தவறான நம்பிக்கைகளை கைவிட்டு உண்மையான நற்செய்திக்குத் திரும்பவேண்டும்.
இதனை நம்பாதவர்கள் தாம் தவறாக வழிநடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டு தம்முடைய பாவங்களை இயேசு யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானம் மூலம் தீர்த்ததை அறியாமல் போனதை உணரவேண்டும். அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை அலட்சியப்படுத்தியதை தவறு என்று கூறவேண்டும். தன்னுடைய ஞானஸ்நானம் மூலம் இயேசு இவ்வுலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார் என்பதை அவர்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய இரண்டையும் நாம் விசுவாசிக்கும்போதே இரட்சிப்பு கிடைக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலமே நம்மால் நித்திய ஜீவனை சம்பாதிக்க முடிகிறது.
அன்புள்ள கிறிஸ்தவர்களே, இதுவரை இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து அதன்மேல் வாழ்ந்தீர்களா? அப்படியாயின் நிச்சயமாக உங்களிருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது. கர்த்தரின் சட்டப்படி வாழ்வதால் நீங்கள் பாவங்களில்லாது இருப்பதாக நினைத்தால் அது உங்கள் தனிப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். இந்த உறுதியான நம்பிக்கை வேதவாக்குடன் ஒத்துப்போவதில்லை.
இன்னும் நேரமிருக்கிறது
நம்மை சத்தியம் எதிலிருந்து விடுதலையாக்குகிறது?
பாவம் மற்றும் மரணம் குறித்த சட்டத்திலிருந்து.
இன்னும் அதிக நேரமாகவில்லை. நீங்களெல்லாம் செய்யவேண்டியது என்னவென்றால் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் கட்டாயமாக விசுவாசிக்கவேண்டும். அப்போது உங்கள் இதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவீர்கள். எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவீர்கள் என்பதன் பொருள் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் நம்புவதால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்பதாகும்.
இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் உனது பாவங்களிலிருந்து உன்னை இரட்சிக்கும் என்று விசுவாசிக்க நீ சித்தமாயிருக்கிறாயா? இதனை நம்பினால் இரட்சிப்பு எப்படிப்பட்டது என்று கற்றுக்கொள்வாய். சமாதானத்தை உன் மனதிலே பெறுவாய். அப்பொழுது, அப்பொழுது மட்டுமே நீ நீதிமானாவாய். உன்னுடைய வேலைகளினாலல்ல. அது வேதவாக்கின் மீதுள்ள உன் விசுவாசத்தைப் பொருத்தது. உங்களில் யாரெல்லாம் இன்னும் இயேசுவின் இரத்தத்தை மட்டும் இரட்சிப்படைய நம்பி, அதனைச் சார்த்திருந்தால், உங்களை, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகிய இரண்டையும் விசுவாசிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.
அன்புள்ள கிறிஸ்தவர்களே, மனிதகுலத்திற்கு பாவங்களிலிருந்து முழு இரட்சிப்பு, நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலமாக நிறைவேற்றப்பட்டது. ஆவியானவர் கர்த்தராயிருக்கிறார். கர்த்தர் இவ்வுலகிற்கு மனித சரீரத்தில் வந்தார்.
கர்த்தர் தம் தீர்க்கதரிசிகள் மூலமாக நாம் அவரை இயேசு என்றழைக்க வேண்டுமென்றார். இயேசு என்பதற்கு அவர் தம் மக்களை பாவங்களிலிருந்து இரட்சிக்கிறார் என்று பொருளாகும். கர்த்தர் கூறினார். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்” (மத்தேயு 1:23)
பாவிகளை இரட்சிக்கும்பொருட்டு தேவன் இவ்வுலகத்திற்கு வந்தார். உலகின் எல்லாப் பாவங்களையும் தமது ஞானஸ்நானத்தின் மூலம் அவர் சுமந்து தீர்த்ததன் மூலம் எல்லாப் பாவிகளையும் இரட்சித்தார். இதுவே உண்மையாகும். நீர் மற்றும் ஆவியின் இரட்சிப்பும் ஆகும். இதனைச் சொல்வதற்காக நான் இங்கே இருக்கிறேன். இயேசுவின் இரத்தத்தால் மட்டுமா நாம் இரட்சிக்கப்பட்டோம்? அப்படியில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.
இக்காலத்தில் நிறைய கள்ளத் தீர்க்கதரிசிகளும் வேதப் புரட்டர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதில்லை. இயேசு கூறினார். “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” (யோவான் 8:32)
சத்தியத்தை நாம் அறியவேண்டும். இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தைக் குறித்து என்ன கூறினார் என்பதையும் நாம் அறியவேண்டும். நாம் அதனை ஏன் நம்பவேண்டும் என்றும் அறியவேண்டும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களை விருத்தசேதனம் பண்ணும்படிக்கு கர்த்தர் ஏன் கூறினார் என்றும் பஸ்காவின் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைக் குறித்து அவர் ஏன் கூறினார் என்பதையும் நாம் அறியவேண்டும்.
ஒரு சம்பவத்தின் பகுதியை மட்டும் நாம் அறிந்தால் நம்மால் சத்தியத்தை புரிந்துகொள்ளமுடியாது. இயேசு கூறினார் “ஒருவன் ஜலத்தினலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 3:5)
இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறுதல்.
இயேசுவின் மரணத்துடன் நாம் ஐக்கியமாவது எப்படி?
இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களை எல்லாம் இயேசுவின் மீது சுமத்துவதின் மூலம்.
இரட்சிப்பின் இரகசியத்தைக் குறித்து வேதாகமம் சாட்சி கூறுகிறது. அது இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமா கிடைக்கிறது? இல்லை. அது அவரின் இரத்தம் அவரின் ஞானஸ்நானம் ஆகிய இரண்டாலும் கிடைக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இதனைக்குறித்து ரோமர் 6ஆம் அதிகாரத்திலும் அவனின் பல்வேறு நிருபங்களிலும் மீண்டும் மீண்டும் கூறுகிறான்.
ரோமர் 6:3-8 ஐ வாசிப்போமாக. “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல் நாமும் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால், அவருடனே கூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.”
5-ஆம் வசனத்தைப் பார்ப்போமாக அது கூறுகிறது “ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்”
அவருடைய மரணம் நம் மரணமுமாகும். ஏனெனில் அவருடைய ஞானஸ்நானம் மூலமாக நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டு விட்டது. ஆகவே, இயேசுவின் ஞானஸ்நானம் நம்மை சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்துடன் இணைக்கிறது.
இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவை மீது நாம் வைக்கும் நம்பிக்கையானது இயேசுவுடன் ஐக்கியமாக அனுமதிக்கிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23) ஆகவே, இயேசுவின் சிலுவை மரணமானது நமது மரணமுமாகும். நம் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்கும்பொருட்டு இயேசு ஞானஸ்நானம் பெற்றார். இந்த உண்மையை நம்பினால் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவுடன் நாம் ஐக்கியமாவோம்.
இயேசுவை மதத்தின் ஒரு பகுதியாக விசுவாசிக்க கூடாது
“அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்பதன் பொருள் யாது?
அதன் பொருள் என்னவென்றால் இயேசு ஒரே சமயத்தில் நம் பாவங்களை கழுவினார் என்பதும் இந்த உண்மையை நம்புகிறவர்களை அவர் இரட்சிக்கிறார் என்பதுமாகும்.
நிறைய மனிதர்கள் இயேசுவை ஒரு மதத்தின் வழியாக மட்டும் நம்புகிறார்கள். ஆகவே, அவர்கள் ஆலயத்திற்கு சென்று அழுது ஜெபித்து மனம் கதறுகிறார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்து தினமும் பாவ மன்னிப்பை வேண்டுகிறார்கள். “இயேசுவே, எனக்குத் தெரியும்! மேலும் நீர் எனக்காய் சிலுவையில் மரித்ததை நம்புகிறேன். ஆம் நான் விசுவாசிக்கிறேன்.
அவர்கள் இவ்வசனத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளது தெளிவாகிறது. “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்தீகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) அவர்கள் பாவ அறிக்கை செய்வதன் மூலம் தினமும் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள். மேலுள்ள வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவம் நமது அன்றாட மீறுதல்கள் இல்லை. இவ்வசனம் எதைக் குறிப்பிடுகிறது என்றால் நாம் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்று பாவ அறிக்கை செய்யும்போது நமது பாவங்கள் ஒரேயடியாக மன்னிக்கப்படும் என்பதேயாகும்.
“ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும் கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” (ரோமர் 10:17) “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” (யோவான் 8:32)
அன்பான கிறிஸ்தவர்களே, உண்மைத் தெளிவாக இருக்கிறது. இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் பாவங்களை சுமக்காமல் அவர் சிலுவையில் மரித்தார் என்று விசுவாசிப்பீர்களானால் உங்கள் நம்பிக்கை வீண். எந்த கிறிஸ்தவனாவது தன் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படவேண்டுமானால் அவன் இயேசுவின் யோர்தான் ஞானஸ்நானம் மூலம் தனது சகல பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதையும் நம்முடைய பாவங்களுக்காக அவர், சிலுவையில் நியாயம் தீர்க்கப்பட்டார் என்பதையும் அவன் கட்டாயமாக நம்பவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதனால் நாம் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய இரண்டையும் விசுவாசிக்கவேண்டும்.
“அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை என்றான்” (அப்போஸ்தலர் 4:12). நம் எல்லாப் பாவங்களையும் தம் ஞானஸ்நானம் மூலம் ஏற்று இயேசு நமது இரட்சகரானார். இயேசு நம்மை நிரந்தர ஆக்கினையிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு நீராலும் ஆவியாலும் வந்தார். “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப் பண்ணப்படும்.” (ரோமர் 10:10) நீங்கள் பாவியா? இல்லை நீதிமானா?
கலாத்தியர் 3:27 கூறுகிறது, “ஏனெனில் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” இவ்வசனம் இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் பாவங்கள் அனைத்தையும் தம்மீது ஏற்றுக் கொண்டு பிறகு சிலுவையில் அறையப் பட்டார் என்ற உண்மையை நமக்கு கூறுகிறது. அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து இப்போது கர்த்தரின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவரை நம்புவோருக்கு அவர் இரட்சிப்பின் கர்த்தரானார்.
இயேசு ஞானஸ்நானம் பெறவில்லையென்றால், நமக்காக அவர் சிலுவையில் இரத்தம் சிந்தவில்லையென்றால் அவர் நமது இரட்சகராயிருக்க முடியாது. நாம் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்கும் போது மட்டுமே நாம் இரட்சிக்கப் படுவோம்.
மோசேயின் புத்திரர்கள்
எகிப்து செல்லும் வழியில் கர்த்தர் ஏன் மோசேயை கொல்லமுயன்றார்?
மோசே தன் புத்திரர்களுக்கு விருத்தசேதனம் பண்ணாததால்.
அன்பானவர்களே, உங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் நீர் மற்றும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் எப்படி பாவமன்னிப்பு பெறமுடியும் என்ற இரகசியத்தைக் குறித்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இவ் வேதவாக்கினை கேட்க முடிவது அதிசயமான ஆசீர்வாதமாகும்.
அது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டும்தானா? பழைய ஏற்பாட்டுக் காலத்தில், மக்கள் விருத்தசேதனத்தின் மூலமாகவும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் ஆபிரகாமின் சந்ததியாயினர். நாம் இப்போது இயேசுவின் ஞானஸ்நானம் மூலமும் அவரின் இரத்தத்தின் மூலமும் கர்த்தரின் மக்களானோம். பழைய ஏற்பாட்டில் மோசே மூலமாக கர்த்தர் இதற்கான அத்தாட்சியை காண்பித்தார்.
இஸ்ரவேல் மக்களை இரட்சிக்கும்பொருட்டு கர்த்தர் மோசேயிடம் பேசினார். அவனிடம் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி கூறினார். ஆகவே, மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்தில் உத்தரவு பெற்று மீதியானை விட்டு தன் மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எகிப்தை நோக்கி புறப்பட்டான். அவன் தன் குடும்பத்தாரை ஏற்றிக்கொண்டு போகும்போது, வழியிலே தங்குமிடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப் பார்த்தார்.
அவனின் மனைவியான சிப்போராளுக்கு அதற்கான காரணம் தெரியும். அவள் கூர்மையான ஒரு கல்லை எடுத்து தன் மகனின் நுனித்தோலை அறுத்து, அதனை அவன் கண்களுக்கு முன்பாக எறிந்து “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்” ஆகவே கர்த்தர் அவனைப் போகவிட்டார்.
இதுவே, யாராயிருந்தாலும், மோசேயின் புத்திரராக இருந்தாலும், அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படாதவர்களாக இருந்தால் அவர்களைக் கொல்வேன் என்று கர்த்தர் கூறும் முறையாகும்.
இஸ்ரவேல் மக்களுக்கு விருத்தசேதனமானது கர்த்தரின் உடன்படிக்கைக்கான அடையாளமாகும். அவர்களுக்கு யாரானாலும், தலைவனின் மகனாயிருந்தாலும், அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படாதவர்களாக இருந்தால் தம் மக்களிடம் இருந்து துண்டிக்கபடுவோம் என்று நிச்சயமாக தெரிந்திருந்தது. ஆகவே, மோசேயின் மகனை தம் மக்களிடமிருந்து துண்டித்து போடுவதைத் தவிர்க்கும்பொருட்டு இப்படியாக மோசேயை எச்சரிக்கைச் செய்தார்.
வேதம் கூறுகிறது, சிப்போராள் கூர்மையான ஒரு கல்லை எடுத்து தன் மகனின் நுனித்தோலை அறுத்து, அதனை அவன் கண்களுக்கு முன்பாக எறிந்து “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என்றதற்கு காரணம் என்னவென்றால் அது கர்த்தரின் எதிர்பார்ப்பான விருத்தசேதனத்தை நிறைவேற்றுவதாகும். (யாத்திராகமம் 4:26)
இஸ்ரவேலர்களில் யாரெல்லாம் விருத்தசேதனம் பண்ணப் படவில்லையோ அவர்கள் தம் மக்களிலிருந்து துண்டிக்கப்பட்டார்கள். விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் மட்டுமே பஸ்கா ஆட்டுக்குட்டியின் இறைச்சியை சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் மட்டுமே கர்த்தரின் மக்களாக ஆராதனைகளில் பங்கேற்க முடிந்தது.
அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு எபிரேயன். அவன் பிறந்து 8 நாட்களில் விருத்தசேதனம் பண்ணப்பட்டான். கமாலியேல் என்ற போதகரிடம் பயின்றான். இயேசு ஏன் யோர்தானில் ஞானஸ்நானம் பெறவேன்டும்? அவர் ஏன் சிலுவையில் அறையப் பட வேண்டும் என்று சரியாக புரிந்திருந்தான். ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் தன் எல்லா நிருபங்களிலும் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து எழுதினான்.
அப்போஸ்தலனாகிய பவுல் நமது இரட்சிப்பு இயேசுவின் இரத்தம் மூலம் நிறைவு செய்யப் பட்டதை அநேக இடத்தில் கூறுகிறான். இயேசுவின் இரத்தம் பாவ மன்னிப்பு முறையின் கடைசி நிலையாகும். ஆனால் உண்மையில் ஆவிக்குரிய விருத்தசேதனம் இயேசுவின் ஞானஸ்நானமாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டு விட்டு, அவரின் இரத்தத்தை மட்டும் கூறுவதில் பயனேதுமில்லை.
இயேசுவின் சிலுவையைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் நிறைய இடங்களில் நேரடியாகக் கூறுகிறான். இது ஏன்? இதுவே நமது இரட்சிப்பின் கடைசி அடையாளமாகும். இயேசு தம் மீது இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் சுமந்த போதிலும், நமக்காக அவர் தீர்க்கப்பட்டு இரத்தஞ்சிந்தியிராவிட்டால் நாம் முழுவதுமாக இரட்சிப்படைந்திருக்க மாட்டோம். அதனாலேயே சிலுவையைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி குறிப்பிடுகின்றான். சிலுவையே நமது இரட்சிப்பின் இறுதி நிலையாகும்.
இந்த இரட்சிப்பின் சத்தியத்தை சிதைக்காமல் ஒவ்வொரு சந்ததியினரும் அடுத்த சந்ததிக்கு கையளித்திருந்தால், இந்நாட்களில் அநேகர் பாவமில்லாமல் இருந்திருப்பார்கள். ஆனால் காலப் போக்கில் உண்மை காணாமற் போயிற்று. நிறைய மக்களுக்கு சிலுவை மட்டுமே தெரியும். அவரின் ஞானஸ்நானத்தின் உட்பொருளை அவர்கள் உணர்ந்ததில்லை.
என் சாட்சி
பாவிகளை நீதிமான்களாக கர்த்தர் கருதுகிறாரா?
இல்லை. கர்த்தர் நீதியாயிருக்கிறார். நீதிமான்கள் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவர்கள். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவர்கள் தம் பாவங்களை அவர் மீது சுமத்தி விட்டனர்.
நான் 20 வயதினனாக இருக்கும் போது இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்னால் என் வாழ்க்கையில் எத்தனைப் பாவங்களைச் செய்தேன் என்று நினைவில்லை. ஏனெனில் எனக்கு கர்த்தரின் சட்டங்கள் தெரியாது. கர்த்தரைப் பற்றி முற்றிலும் தெரியாதவனாக, அந்நேரம் வரை என் வழிகளில் வாழ்ந்தேன்.
அப்பொழுது நான் நோயாளியானேன். நான் எந்த அளவு நோயாளியாக இருந்தேனென்றால், நான் செத்து விடுவேன் என்று நினைத்தேன். ஆகவே என் சாவிற்கு முன் என் பாவங்களிலிருந்து பாவமண்ணிப்பு பெற்றுவிட வேண்டுமென்று தீர்மானித்தேன். என்னைப் போன்ற பாவிகளுக்காய் இயேசு மரித்தார் என்று கேள்விப் பட்டிருந்தமையால், அவரை விசுவாசிக்கத் தீர்மானித்தேன். அதன் பிறகு முதல் நாட்களில் நான் ஆணந்தத்தினாலும் நன்றியினாலும் நிறைந்திருந்தேன்.
இவ்வுணர்ச்சி காலப் போக்கில் மங்கத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தினமும் பாவம் செய்வதை தவிர்க்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் நான் பாவியானேன். 10 வருடங்களுக்குப் பிறகும் நான் பாவியாகவே இருந்தேன். இப்போது இன்னும் மோசமான பாவியாகி இருந்தேன். நான் இயேசுவை 10 வருடங்களாக் விசுவாசித்த போதிலும், நான் பாவி என்ற நிலை மாறவில்லை. நான் விசுவாசியாகவும் அதே சமயம் பாவியாகவுமிருந்தேன்.
நான் “அழுகை என்னை இரட்சிக்காது! என் முகம் கண்ணீரில் குளித்தாலும், என் பயத்தினை தள்ளி வைக்க முடியவில்லை. வருடக்கணக்கான பாவங்களை கழுவ முடியவில்லை! அழுகை என்னை இரட்சிக்காது!” என்ற பாடலைப் பாடினாலும், எப்போதெல்லாம் பாவம் செய்தேனோ அப்போது அழுதேன்.
“அன்புள்ள ஆண்டவரே, தயவு செய்து இப்பாவத்தை எனக்கு மன்னியும். இதனை இப்போது மன்னியும். நான் இனி ஒரு போதும் பாவம் செய்ய மாட்டேன்” நான் பாவம் செய்த பின் மூன்று நாட்கள் ஜெபிப்பேன். ஒரு மூலையிலுள்ள அறைக் கதவைச் சாத்திக் கொண்டு, மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பேன். ஏனெனில் எனது மனசாட்சி மிகவும் கணமாக இருந்தபடியால், நான் கர்த்தரின் மன்னிப்பை அழுது வேண்டினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு எனக்கு நன்றாக இருக்கும். நான் அவர் பிரசன்னத்தில் மீண்டும் இருப்பதாக நினைப்பேன்.
“மீண்டும், எனது பாவங்களை கழுவி விட்டேன், அல்லேலூயா!” ஆகவே மீண்டும் சிறிது காலத்திற்கு கடமைகளைச் செய்து வாழ்வேன். ஆனால் வெகு சீக்கிரமாக பாவம் செய்தேன். மீண்டும் என் சுமை அதிகரிக்கும். இந்த சக்கரமானது மீண்டும் மீண்டும் என்னால் கடைப் பிடிக்கப் பட்டது. தொடக்க காலத்தில் இயேசுவை விசுவாசிப்பது மிகவும் பெரிதாக இருந்தது. ஆனால் அதிக காலம் அவரை விசிவாசித்தாலும், என்னுடையப் பாவங்கள் மேலும் பெருகின. அது பூட்டிய அறையில் அதிக புழுதி சேர்வதைப் போலாயிருந்தது.
பத்து வருடங்களுக்குப் பிறகு, தொடக்கக்காலத்தில் இருந்ததை விட அதிகப் பாவியானேன். “ஏன் என் இளம் பிராயத்திலேயே இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கினேன்? நான் 80 வயது வரைப் பொருத்திருந்து இயேசுவை நம்பியிருந்தால் நன்றாக இருக்குமே. அப்போது எனது பாவங்கள் என் மனசாட்சியை உறுத்தாது. ஆகவே தினமும் பாவத்திற்காய் புலம்பத் தேவையில்லை.” நான் கர்த்தரின் சித்தப் படி வாழவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அது கடைப்பிடிக்க இயலாதது. எனது மனதிலிருந்து நான் தவறுவது போல் தோன்றியது.
கர்த்தரில் புதிதாக ஏதும் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன். நிறைய நேரம் இறையியல் படிப்பதில் செலவிட்டேன், ஆனால் சில வருடங்களில் எனது இருதயம் இன்னும் வெறுமையாகியது. மதத்தத்துவங்கள் குறித்த நூல்களைப் படிக்கும் முன் அனலுள்ள படுக்கையில் எப்போதும் சொகுசாக உறங்காத சாது டேமியனைப் போல் வாழ வேண்டுமென்று கூறுவேன். நான் எனக்காக என்றும் வாழக்கூடாது என்றும் என்னை, முற்றிலுமாக கஷ்டப்படுவோர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்றும் உறுதி எடுத்திருந்தேன்.
இந்த சாதுவைக் குறித்து படித்தபோது, அவரைப் போலவே வாழ உறுதியெடுத்தேன். என் வாழ்வு உயர்வானதாக இருக்க முயற்சி செய்தேன். சொரசொரப்பான சிமெண்ட் தரையில் முழங்காலிட்டு ஒரே சமயத்தில் மணிக்கணக்காக ஜெபிப்பதுண்டு. அப்பொழுது எனது ஜெபத்திற்கு மிகுந்த அர்ததமிருப்பதாக உணர்வேன். பிறகு என்னைக் குறித்து சிறப்பாக உணர்ந்தேன்.
ஆனால் 10 வருடங்களுக்கு பிற்கு என்னால் இப்படி இருக்க முடியவில்லை. ஆகவே கர்த்தரிடம் ஜெபித்தேன், “பரலோகத்திலுள்ள அன்புள்ள ஆண்டவரே தயவுசெய்து என்னை இரட்சியும். உம்மை எனது முழு இதயத்துடன் நம்புகிறேன். யாராவது என் தொண்டையில் கத்தியை வைத்தாலும் கூட உம்மிடமுள்ள பக்தியிலிருந்து மாறமாட்டேனென்று எனக்குத் தெரியும், ஆயினும் உம்மை எனது இதயப்பூர்வமாக விசுவாசித்தாலும் ஏன் எனக்குள் வெறுமையாக உணருகிறேன்? நான் ஏன் இப்படி ஏமாளியானேன்? எப்போதுமில்லாத அளவு இப்போது ஏன் மோசமான பாவியானேன்? என்னுடையப் பாவங்களைக் குறித்து முன்பு இப்படிச் சிந்தித்ததில்லை. நான் உம்மை விசுவாசிக்கத் தொடங்கியபின், இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஏன் மோசமானவனாக இருக்கிறேன் என்று ஆச்சரியப்பட்டேன். என்னில் என்ன நிகழுகிறது?”
இந்த இடத்தில் இதற்கான காரணம் எனக்குப் புரிந்தது. என்னுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப் படாமலேயே கர்த்தரை விசுவாசித்திருக்கிறேன். அந்நேரத்தில் எனக்கு உண்மைத் தெரியவில்லை. அது என்னை பைத்தியக்காரன் ஆக்குவதற்கு போதுமானதாய் இருந்தது.
என்னுடைய இதயத்தில் பாவம் இருக்கும்போது, கர்த்தரின் கிருபையால் கிடைக்கும் பாவ விடுதலையைக் குறித்து மற்றவர்களிடம் நாம் எப்படி கூறக்கூடும்? இயேசுவை விசுவாசிக்கும்படி மற்றவர்களிடம் நான் எப்படி கூறக்கூடும்? மீண்டும் மீண்டும் ஜெபித்தேன். “அன்புள்ள ஆண்டவரே, வெகு சீக்கிரமாக வேதாகமகக் கல்லூரியின் பட்டம் வெற்றவனாகி ஆராதனை நடத்துபவனாக நியமிக்கப்பட போகிறேன். ஆனால் நான் பாவங்களால் சுமையேற்றப்பட்ட ஆராதனை நடத்துபவனானால் மற்ற பாவிகளிடத்தில் பாவ விடுதலைக் குறித்து நான் எப்படிக் கூறக்கூடும்? நானே ஒரு பாவி. நான் அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்களைப் படிக்கும்போது யாரொருவன் இயேசுவின் ஆவியை பெறாமலிருக்கிறானோ அவன் கர்த்தரின் பிள்ளை அல்லவென்று கண்டேன். எவ்வளவு எதிர்பார்ப்புடன் தேடினாலும் என்னுள் ஆவியானவர் இல்லை. அது தொடக்கத்தில் இருந்ததையும் பிறகு மாயமாகி போனதையும் உணர்ந்தேன். என்ன நடந்தது? ஏனென்று தயவு செய்து கூறும், கர்த்தரே! ”
குறிப்பாக இயேசுவை விசுவாசிப்பதால் பாவ மன்னிப்பு உண்டாயிற்று என்று என்னை ஏமாற்றியதே அதன் காரணம். இதனால் வெகு நாட்களாக மனஸ்தாபப்பட்டேன்.
அவரை எதிர்பார்ப்புடன் தேடுபவர்களிடம் தன்னை வெளிப்படுத்துவதாக கர்த்தர் உறுதியளித்துள்ளார். இறுதியில் அவரின் சத்தியத்தின் மூலம் என்னைச் சந்தித்தார். இயேசுவை நம்பத்தொடங்கி 10 வருடங்கள் ஆன பின்பும் நான் பாவியாகவே இருந்தேன். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம், அவர் இரத்தம் ஆகியவை குறித்த இரகசியத்தைக் கற்றபோது, பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தையும், புதிய ஏற்பாட்டின் ஆவிக்குரிய விருத்தசேதனத்தையும் கண்டு கொண்டபோது, இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிடைக்கும் இரட்சிப்பின் இரகசியத்தை உணர்ந்து விசுவாசித்தேன். என் ஆத்துமா உரைந்த பனியைப்போல் வெண்மையாயிற்று.
உனக்கும் அது பொருந்தலாம். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசித்தால், நீயும் பாவமற்றவனாவாய். நீ முழுமைபெற்றவனாய் இல்லாவிட்டாலும் கூட, நீ நீதிமானாய் இருப்பாய். இந்த உண்மைகளை உன் இதயத்தில் ஏற்றுக்கொண்டு மற்றவர்களையும் தெரிந்துகொள்ளச் செய்தால் அவர்களும் இரட்சிக்கப்பட்டு கர்த்தரை “அல்லேலூயா” என்று சத்தமிட்டு ஸ்தோத்தரிப்பார்கள்.
பாவ விடுதலைப் பெற்ற சகோதர, சகோதரிகளை நான் வாழ்த்த விரும்புகிறேன். நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சித்ததால், இயேசுவை ஸ்தோத்தரிக்கிறேன். “அல்லேலூயா” நாம் சந்தோஷமாக நம் பாவங்களிலிருந்து விடுதலையானோம்.
அது பெருத்த ஆசீர்வாதமாக இருப்பதால் நம் சந்தோஷத்தை வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. நாம் இப்பாடலைச் சேர்ந்து பாடுவோமாக. “அவர் பெயர் இரகசியமானது. எல்லா ஜீவராசிகளிடமும் இரகசியத்தை வெளிப்படுத்தவில்லை. கட்டிடம் கட்டுவோர் கற்களை ஒதுக்கி வீசியதுபோல் அவர் வீசப்பட்டார், ஆனால் அவர் பெயர் எனது இதயத்தின் விலையேறப்பட்டக் கல்லாகும்.”
இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் எல்லாப் பாவிகளையும் பாவங்களில் இருந்து இரட்சிக்க போதுமானதாக இருக்கிறது
நம் எல்லாப் பாவத்தையும் இதயத்திலிருந்து நீக்குவது எது?
இயேசுவின் ஞானஸ்நானம்.
இயேசுகிறிஸ்து தம் ஞானஸ்நானம், இரத்தம் மூலமாக இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார். நம்மை ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாக்கி, நம்மை அவர் மக்களாக்கினார். மறுபடியும் பிறந்தவர்களின் கர்த்தர் அவர்.
பாவத்திற்கு தீர்ப்பு எப்போதும் உண்டு. ஆனால் நம்மை இரட்சிக்கும்படி இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் தீர்க்கப்பட்டார். அவருடைய இரத்தத்தினால் நம்மை இரட்சித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் எழுந்தார். பிதாவான கர்த்தரே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர்.
இயேசுவின் ஜீவனே நமது ஜீவனுமாகும். கர்த்தரின் பிள்ளைகளாக நாம் இருப்பதற்கான அடையாளமும் அவரே. இயேசுவின் ஞானஸ்நானம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டது. இயேசுவின் விலையேறப்பட்ட சிலுவை இரத்தம் நமக்காக அவர் நியாயம் தீர்க்கப்பட்டதற்கு அத்தாட்சியாகும்.
அன்பு நண்பர்களே, உங்கள் இதயத்தில் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் குறித்த நிச்சயமிருக்கிறதா? மீண்டும் கேட்கிறேன். நமது இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தின் மூலம் மட்டுமா வருகிறது? இல்லை. அது இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய இரண்டின் மூலமாகவும் வருகிறது.
வேதப்புரட்டன் யார் ?
வேதப்புரட்டன் யார்?
தன்னை ஆக்கினைக்குள்ளாக்கும்படி இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பத் தவறுபவன் எவனோ அவன் வேதப்புரட்டன்.
அன்புள்ள நண்பர்களே நீங்கள் தினமும் பாவ அறிக்கை செய்தாலும், இயேசுவை விசுவாசித்தாலும் பாவியாகவே இருக்கிறீர்களா? இயேசுவை விசுவாசித்தபோதிலும் நீ பாவியாகவே இருந்தால் நீ ஒரு வேதப்புரட்டன். வேதப்புரட்டல் இயேசுவின் சத்தியத்தை நம்பாமையாகும். தீத்து 3:10 வேதப்புரட்டல் குறித்து பேசுகிறது. “வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைத் தவறி, தன்னிலே தானே ஆக்கினைத் தீர்ப்புடையவனாய் பாவஞ்செய்கிறவன் என்று அறிந்திருக்கிறாயே.”
தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவன் இவ்வாறு கூறுகிறான். “அன்புள்ள கர்த்தரே! நான் ஒரு பாவி. நான் உம்மை விசுவாசிக்கிறேன், ஆனால் நான் இன்னும் பாவியாயிருக்கிறேன். யார் எதைக் கூறினாலும் பரவாயில்லை, நான் பாவி. இது உண்மையென்று எனக்குத் தெரியும்.”
கர்த்தர் அவனிடம் கூறுகின்றார். “நீ இன்னும் பாவியா? என்னுடைய பிள்ளையில்லையா? அப்படியானால் நீ வேதப்புரட்டன். நரகத்தின் அக்கினியில் நீ எறியப்படுவாயாக.”
உன் இதயத்தில் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமல் இயேசுவை விசுவாசிப்பாயானால், உன் ஆவியில் பாவமிருக்கிறது என்று கர்த்தரிடம் பாவ அறிக்கை செய்து உன்னைப் பாவியென்று நீயே ஆக்கினைத்தீர்ப்பு செய்தால், கர்த்தர் முன் நீ ஒரு வேதப்புரட்டன்.
இரட்சிப்புக்குறித்த கர்த்தரின் சாட்சியம் யாது?
அது நீர், இரத்தம் மற்றும் ஆவியாகும்.
யாரெல்லாம் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் விசுவாசிக்கிறார்களோ, யாரெல்லாம் கர்த்தரின் மக்கள் ஆனார்களோ, யாரெல்லாம் தம் பாவங்களிலிருந்து கழுவப்பட்டார்களோ அவர்கள் நீதிமான்கள். இயேசுவை விசுவாசிக்கும் நீ இன்னும் எப்படி பாவியாயிருக்கிறாய்? பரலோக ராஜ்ஜியத்தினுள் பாவியால் பிரவேசிக்க முடியாது.
இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நீதிமான்கள் ஆனவர்கள் யாரோ, அவர்கள் இருதயத்தில் கர்த்தருக்கு சாட்சி பகருகிறார்கள். இயேசுவின் ஞானஸ்நானமும் அவர் இரத்தமும் சாட்சியாகும். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் செய்த இரட்சிப்பின் வேலை இதுவே.
ஆகவே, நம்முடைய பாவங்களையெல்லாம் எடுத்துப்போட்ட நற்செய்தியான இயேசுவின் ஞானஸ்நானத்தை ஒருவன் விசுவாசிக்க மறுத்தால் அவன் கர்த்தரிடமிருந்து துண்டிக்கப்படுகிறான்.
அன்புள்ள விசுவாசத்தின் சகோதர, சகோதரிகளே, உங்கள் இருதயத்தில், பாவிகளின் இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமல்ல. நீராகிய இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் உண்டாயிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
யாரெல்லாம் இயேசு இவ்வுலகில் செய்த வேலைகளை நம்புகிறார்களோ, யாரெல்லாம் நீர், இரத்தம் மற்றும் ஆவியானவரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் சகல பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவார்கள். இதுவே நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியானவர் குறித்த உண்மையும் ஞானமுமாய் இருக்கிறது.
இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களனைத்தையும் துடைத்தார். ஆகவே, அவரின் மூலம் எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட முடியும். இப்பொழுது நீ உண்மையாக இயேசுவை நம்பினால், எந்த வழியிலும் நீ பாவியாக இருக்கமுடியாது.
இயேசு நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். வழித் தப்பிப்போன எல்லா ஆத்துமாக்களையும் அவர் இரட்சித்தார். அவர்கள் கர்த்தரின் உடமையானதால் சாத்தானின் வஞ்சனைகளிலிருந்து தூரமாகிப் போனார்கள். காணாமல் போன ஆத்துமாக்களை கண்டுபிடிக்க இயேசு விரும்புகிறார். இயேசுவின் மூலமாக நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியானவரால் கர்த்தர் பணியாற்றுகிறார். அவர் நம்மை அழைத்தார். அவரால் இப்பொழுது நமது பாவங்களிலிருந்து விடுதலையாகி இரட்சிக்கப்படுகிறோம்.
இந்த உயர்ந்த சத்தியத்தை நீ நம்புகிறாயா? நான் உன்னிடம் கூறுவது இரட்சிப்பு வெறும் இரத்தத்தினால் மட்டும் வருவதல்ல. அது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகிய இரண்டினாலும் வருவதாகும். இரத்தத்தினால் மட்டுமே இரட்சிக்கப்பட்டதாக கூறுபவர்கள் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
நாமெல்லாம், இரட்சிக்கப்படுவதற்கு இயேசுவின் இரத்தத்தை நம்புவது மட்டும் போதும் என்று நினைக்கிறோம். முன்பு இப்படி நினைத்தோம். இப்பொழுது இது போதாது என்று புரிந்து கொள்ளவேண்டும். நாம் நீர், இரத்தம் மற்றும் ஆவியின் மூலம் வந்த இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறந்தோம்.
இயேசுவின் ஞானஸ்நானத்திலும் அவரின் இரத்தத்திலும் விசுவாசம் வைப்பதன் மூலமாக எல்லா பாவிகளும் மறுபடியும் பிறக்கமுடியும் (1 யோவான் 5:5-10) இயேசுவை துதிப்போமாக. அல்லேலூயா!