(எபிரெயர் 7:1-28)
“இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாய் இருந்தான்; ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய் அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசம பாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும் பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சாமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும். இவன் தகப்பனும் தாயும், வம்ச வரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் உடையவனாய் இராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். இவன் எவ்வளவு பெரியவனாய் இருக்கிறான் பாருங்கள்: கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்கு தசம பாகம் கொடுத்தான். லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அறையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசம பாகம் வாங்குகிறதற்கு கட்டளைப் பெற்றிருக்கிறார்கள். ஆகிலும் அவர்களுடைய வம்ச வரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசம பாகம் வாங்கி வாக்குத்தத்தங்களை பெற்றவனை ஆசீர்வதித்தான். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்கு சந்தேகமில்லை. அன்றிலும் இங்கே மரிக்கிற மனுஷர்கள் தசம பாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சி பெற்றவன் வாங்கினான். அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டு போனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அறையில் இருந்தபடியால், தசம பாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய் தசம பாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லாவோ நியாயப் பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணபடுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின் படி அழைக்கப்படாமல் மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்ப வேண்டுவதென்ன? ஆசாரித்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்பட வேண்டியதாகும். இவைகள் எவரைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்திற்குள்ளானவராய் இருக்கிறாரே; அந்த கோத்திரத்தில் ஒருவனாகிலும், பலி பீடத்து ஊழியம் செய்ததில்லையே. நம்முடைய கர்த்தர் யூதா கோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாய் இருக்கிறது; அந்த கோத்திரத்தாரைக் குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதனால், மேற் சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. அவர் மாமிச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமானத்தின் படி ஆசாரியராகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்கு தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின் படியே ஆசாரியர் ஆனார். முந்தின கட்டளை பலவீனம் உள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததின் நிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப் பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். அன்றியும், அவர்கள். ஆனையில்லாமல் ஆசாரியராக்கப் படுகிறார்கள். இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின் படி என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர் என்று கர்ததர் ஆணையிட்டார். மனம் மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார். ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்கு பிணையாளியானார். அன்றியும், அவர்கள் மரணத்தின் நிமித்தம் நிலைத்திருக்க கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராய் இருக்கிறார்கள். இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவம் உள்ளவராய் இருக்கிறார். மேலும் தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவருமாயிருக்கிறார். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும் பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாய் இருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராய் இருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப் போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும் பின்பு ஜங்களுடைய பாவங்களுக்காகவும், நாடோரும் பலியிட வேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரே தரம் செய்து முடித்தார். நியாயப்பிரமானமானது பலவீனமுள்ள மனுஷர்களை பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது. நியாயப் பிரமாணத்திற்கு பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமும் என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.”
இயேசு பரலோக ஆசாரியர்
யார் பெரியவர், தலைமை ஆசாரியன் மெல்கிசேதேக்கா அல்லது ஆரோனின் வம்சத்தை சேர்ந்த தலைமை ஆசாரியனா?
தலைமை ஆசாரியன் மெல்கிசேதேக்கு.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மெல்கிசேதேக்கு என்னும் தலைமை ஆசாரியன் இருந்தான். ஆபிரகாமின் காலத்தில் கெதர்லாகோமேரும் மற்ற ராஜாக்களும் ஒன்று சேர்ந்து சோதோம் கொமாரா என்ற நகரங்களின் பொருட்களை எடுத்துச் சென்றனர். ஆபிரகாம் தன் வீட்டில் பிறந்த வேலையாட்களுக்கு ஆயுதம் தரிப்பித்து, கெதர்லாகோமேர் கூட்டணிக்கு எதிராக அவர்களை போருக்கு வழி நடத்தினான்.
அங்கே ஏலாம் நாட்டு ராஜாவான கெதர்லாகோமேரையும் அவன் கூட்டணியினரையும் வென்று, ஆபிரகாம் தன் சகோதரனின் மகன் லோத்தின் உடமைகளை திரும்பி எடுத்துவந்தான். ஆபிரகாம் தன் பகைவர்களை வென்று திரும்பி வருகையில் உன்னதமான தேவனுடைய ஆசாரியனும் சாலேமின் ராஜாவுமான மெல்கிசேதேக்கு, அப்பமும், திராட்சை இரசமும் கொண்டுவந்து ஆபிரகாமை ஆசீர்வதித்தான். ஆபிரகாம் தசம பாகத்தை அவனிடம் செலுத்தினான். (ஆதியாகமம் 14 ஆம் அதிகாரம்)
வேதாகமத்தில், தலைமை ஆசாரியன் மெல்கிசேதேக்கின் சிறப்புகளைப் பற்றியும் அவனையொத்த தலைமை ஆசாரியர்களைக் குறித்தும் விவரமாக எழுதப்பட்டுள்ளது. தலைமை ஆசாரியனான மெல்கிசேதேக்கு “சமாதானத்தின் ராஜா”, “நீதியின் ராஜா”, தகப்பனில்லாது வந்தவன், தாயில்லாது வந்தவன், வம்சமில்லாதவன், கர்த்தரின் குமாரன் போன்றே படைக்கப்பட்டவன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆசாரியனாகவே இருந்தான்.
வேதாகமம் இயேசுவின் சிறப்புகளை கவனமாக கருத்தில் கொள்ளச் சொல்லுகிறது. அவர் மெல்கிசேதேக்கைப் போன்ற உயர்ந்த ஆசாரியர். புதிய ஏற்பாட்டின் தலைமை ஆசாரியரான இயேசு, பழைய ஏற்பாட்டின் தலைமை ஆசாரியனான ஆரோனுடன் ஒப்பிடத்தக்கவர்.
லேவியின் சந்ததியினர் ஆசாரியர்களாகி, மக்களிடமிருந்து, அதாவது சகோதரர்களிடமிருந்து தசமபாகம் பெற்றார்கள். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள். ஆனால் ஆபிரகாம் தலைமை ஆசாரியனான மெல்கிசேதேக்கிடம் தசம பாகத்தைக் கொடுத்தபோது, லேவி இன்னும் தன் தகப்பன் மடிக்குள் இருந்தான்.
பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் இயேசுவைவிட மேலானவர்களா? இது குறித்து வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைமை ஆசாரியர்களைவிட இயேசு உயர்ந்தவரா? யார் யாரை ஆசீர்வதிப்பது? எபிரெயர் நிருபத்தை எழுதியவன் தொடக்கம் முதல் இது குறித்து கூறுகிறான். “சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.” ஆபிரகாம் தலைமை ஆசாரியனான மெல்கிசேதேக்கின் மூலம் ஆசீர்வாதம் பெற்றான்.
நம் விசுவாசத்தில் வாழ்வது எப்படி? பழைய ஏற்பாடு கூறும், ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தர் கட்டளையிட்ட பலி முறைகளின் மீது சார்ந்திருப்பதா? அல்லது பரலோகத்தின் உயர்ந்த ஆசாரியராக நீர் மற்றும் ஆவியினால் பலியிடப்பட்டவருமான, நம்மிடம் வந்த இயேசுவில் சார்ந்திருப்பதா?
எந்தக் கருத்தை நாம் தேர்ந்தெடுக்கிறோமோ, அதனைப் பொருத்து நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவோ, மோசம் போனவர்களாகவோ ஆகிறோம். தேவ வாக்கின்படி தினமும் பலியிடுகிறோமா? அல்லது நீராலும் ஆவியாலும், தன்னைத்தானே ஒரே தரம் பலியாகக் கொடுத்த இயேசுவின் இரட்சிப்பைத் தெரிந்து கொண்டோமா? இவையிரண்டில் ஏதாவது ஒன்றை நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் ஆரோன் மற்றும் லேவியின் சந்ததியினரை நோக்கிப் பார்த்தனர், புதிய ஏற்பாட்டின் இந்நாட்களில் யார் பெரியவர்? இயேசுவா அல்லது ஆரோனையொத்த ஆசாரியரா என்று நாம் கேட்கப்பட்டால், இயேசு தான் பெரியவர் என்று பதில் கூறலாம். மக்களுக்கு இக்காரியம் தெளிவாகத் தெரிந்தாலும், சிலர் தம் சொந்த நம்பிக்கைகளையே பின் பற்றுகின்றனர்.
வேதாகமம் இதற்கு மிகச் சரியான பதிலைக் கொடுக்கிறது. அது இயேசு, வேறொரு கோத்திரத்தை, இதுவரை பலி பீடத்தில் யாரும் ஆராதனைச் செய்திராத சந்ததியிலிருந்து பரலோக ஆசாரியரானார் என்று கூறுகிறது. “ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்பட வேண்டியாதாகும்.”
கர்த்தர் மோசே மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளைகளையும், 613 விரிவான சட்டங்களையும் கொடுத்தார். மோசே கர்த்தரின் கட்டளைப்படியும் அவரின் சட்டப்படியும் வாழுமாறு மக்களிடம் கூறினான். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.
கர்த்தர் முதல் உடன்படிக்கையை விட்டுவிட்டு இரண்டாம் உடன்படிக்கை செய்ததேன்?
முதல் உடன்படிக்கையின்படி வாழ மனிதன்மிகவும் பலவீனமானவன்.
வேதாகமத்தில், இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய கட்டளைகளின் படி வாழ்வதாக உறுதியெடுத்தனர். இவற்றை முதல் ஐந்து நூல்களான, ஆதியாகமம், யாத்திராகமம், லேவியாரகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவற்றில் காணலாம். கர்த்தர் ஔவ்வொரு கட்டளைகளையும் அறிவிக்க, எந்தத் தயக்கமும் இன்றி “ஆமாம்” என்று அவர்கள் அறிவித்தனர்.
ஆயினும் உபாகமத்திற்கு பிறகு, யோசுவா காலமுதல் அவர்கள் கர்த்தரின் கட்டளைகளின்படி வாழவில்லை என்பதை நாம் காணலாம். நியாயாதிபதிகள் முதல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் காலங்களில் அவர்கள் தம் தலைவர்களை மதிக்காமல் வாழத் தொடங்கினர். அதன்பிறகு, பரிசுத்த ஆசரிப்புக்கூடார பலியிடும் முறையை மாற்றுமளவிற்கு அழுகிப்போனார்கள்.
இறுதியாக மல்கியா காலத்தில், கர்த்தரின் கட்டளைப்படி களங்கமில்லாத விலங்குகளைத் தவிர்த்து, பலியிடத்தகாத விலங்குகளை அழைத்து வந்தனர். அவர்கள் ஆசாரியர்களிடம் “தயவுசெய்து இதனைப் பாருங்கள். இதனை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கேட்டனர். கர்த்தரின் கட்டளைப்படி பலியிடுவதைத் தவிர்த்து, அதனைத் தாறுமாறாக்கினர்.
பழைய ஏற்பாட்டு கால முழுவதும் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் கட்டளையை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் இம்முறையில் கிட்டும் இரட்சிப்பைக் குறித்து மறந்துபோயும், அசட்டையாகவும் இருந்தார்கள். ஆகவே கர்த்தர் பலியிடும் முறையை மாற்ற வேண்டியதாய் இருந்தது. எரேமியாவில் கர்த்தர் சொல்லுகிறார். “இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.”
எரேமியா 31:31-34 ஐப் பார்ப்போம். “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப் போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்து கொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும், எல்லாரும் என்னை அறிந்து அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினயாதிருப்பேன்.”
தானொரு புதிய உடன்படிக்கைச் செய்யப்போவதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் இஸ்ரவேல் மக்களுடன் ஏற்கெனவே ஔர் உடன்படிக்கையைச் செய்திருந்தாலும் மக்கள் அவரின் வாக்குப்படி நடக்கத் தவறினர். ஆகவே, அவரின் மக்களுடன் புதியதொரு இரட்சிப்பின் உடன்படிக்கை ஒன்றைச் செய்ய தீர்மானித்தார்.
அவர்கள் கர்த்தர் முன்பாக, “உம்மை மட்டுமே நாம் தொழுது கொள்ளுவோம். உம்முடைய வார்த்தைகளின்படியும் கட்டளைகளின் படியும் வாழ்வோம்: என்று உறுதிமொழி கூறினார்கள். கர்த்தர் அவர்களிடம் “எனக்கு முன்பாக உங்களுக்கு வேறெந்த தெய்வங்களும் வேண்டாம்.” என்றார். அதற்கு இஸ்ரவேல் மக்கள் “நிச்சயமாக நாம் வேறெந்த தெய்வங்களையும் வணங்க மாட்டோம். நீரே எங்களின் ஒரே கர்த்தர். எங்களுக்கு வேறெந்த தெய்வங்களும் உண்டாயிருக்காது.” என்று உறுதி கூறினார்கள். ஆனால் இந்த உறுதிமொழியைக் கடைப்பிடிக்கத் தவறினார்கள்.
கர்த்தருடைய சட்டங்களின் கரு பத்துக் கட்டளைகளில் இருக்கிறது. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. ஔய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. கொலைச் செய்யாதிருப்பாயாக. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20ஆம் அதிகாரம்)
கர்த்தருடைய கட்டளைகள் 613 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நம் வாழ்நாள் முழுதும் அதனைக் கடைபிடிக்கும்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது. “மகளை என்னச் செய்யக்கூடாது? மகனை என்னச் செய்யக்கூடாது? மாற்றுத் தாயை என்னச் செய்யக்கூடாது....” கர்த்தரின் சட்டம் நல்ல காரியங்களைச் செய்யும் படியும் கெட்ட காரியங்களைச் செய்யாதிருக்கும்படியும் கட்டளையிட்டது. இவையே பத்துக் கட்டளைகளும் 613 விரிவான பிரிவுகளுமாகும். ஆயினும் எல்லா மனிதர்களில் ஒருவனாலும், கர்த்தரின் சட்டப்பிரிவுகள் அனைத்தையும் கடைப்பிடிக்கக் கூடாததாக இருந்தது, ஆகவே கர்த்தர் அவர்களை இரட்சிக்கும்பொருட்டு வேறு வழியொன்றை அறிவிப்பதில் தீவிரமாயிருந்தார்.
ஆசாரியத்துவம் எப்போது மாற்றப்பட்டது. இயேசு இவ்வுலகிற்கு வந்த பிறகு ஆசாரியத்துவம் மாற்றப்பட்டது. ஆரோனையொத்த சகல ஆசாரியர்களிடமிருந்தும் இயேசு ஆசாரியத்துவத்தை ஏற்றுக்கொண்டார். பரிசுத்த ஆசரிப்புக்கூடார பலி முறைகளை அவர் கைவிட்டார். அது லேவியையொத்த ஆசாரியர்களின் இயற்கையான உரிமையாக இருந்தது. அவர் ஒருவரே பரலோக ஆசாரித்துவத்தை ஆராதித்தார்.
அவர் ஆரோனின் சந்ததியினராக இவ்வுலகத்திற்கு வரவில்லை. ராஜாக்களின் குடும்பமாகிய யூதாவின் சந்ததியில் வந்தார். ஞானஸ்நானம் மூலமும், சிலுவை இரத்தம் மூலமும் தம்மை பலியாக அர்ப்பணித்து எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
தம்மைப் பலியாக அவர் கொடுத்ததால், நம் பாவப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக்கொடுத்தார். தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலமாக பலியிட்டு மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார். அவர் ஒரே தரம் எல்லாப் பாவங்களுக்கும் நிரந்தரப் பலியாக தன்னைக் கொடுத்தார்.
ஆசாரித்துவம் மாறியபோது சட்டங்களும் மாறின
இரட்சிப்பின் சட்டம் எவ்வாறு மாறியது?
இயேசுகிறிஸ்து நிரந்தர பலியானதால்.
அன்பு நண்பர்களே, பழைய ஏற்பாட்டின் ஆசாரித்துவம் புதிய ஏற்பாட்டில் மாற்றப்பட்டது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில், கடந்த வருடம் முழுவதும் இஸ்ரவேலர்கள் செய்தப் பாவங்களுக்காக லேவி குடும்பத்தினனும் ஆரோனின் சந்ததியினனுமான தலைமை ஆசாரியன், பாவ விடுதலைக்காக பலியாராதனைச் செய்தான். தலைமை ஆசாரியன் மிகவும் பரிசுத்தமான இடத்திற்குள் பிரவேசித்தான். அவன் பலியிட்ட மிருகத்தின் இரத்தத்துடன், கிருபாசனம் முன் சென்றான். திரைக்குப் பின்னாலிருந்த மிகவும் பரிசுத்தமான இடத்திற்குள் தலைமை ஆசாரியன் மட்டுமே போக முடியும்.
ஆனால் இயேசுவின் வருகைக்குப் பிறகு, ஆரோனின் ஆசாரித்துவம் அவரிற்கு மாற்றப்பட்டது. இயேசு நிரந்தர ஆசாரியரானார். எல்லா மனிதர்களும் தம் சகலப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படும்படியாக தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்ததன் மூலம் அவர் நிரந்தர ஆசாரியராக ஆராதனை நடத்தினார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தன் மக்களுக்காக ஆராதனை ஏறெடுக்கும் முன் தலைமை ஆசாரியனும் ஒரு காளையின் தலையில் கைவைத்து தன் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டியிருந்தது. அவனுடையப் பாவங்களை “கர்த்தரே நான் பாவங்களை இடமாற்றம் செய்தேன்” என் கூறி கை வைத்து தன் பாவங்களை இடமாற்றம் செய்தான். அதன் பிறகு அந்த மிருகத்தைக் கொன்று, அதன் இரத்தத்தை ஏழுமுறை கிருபாசனத்தின் மீது தெளித்தான்.
தலைமை ஆசாரியனான ஆரோனே நிறைவற்றவனென்றால் மக்களின் நிலை என்னவென்று நினைத்துப் பாருங்கள். லேவியின் மகன், தலைமை ஆசாரியனான ஆரோனே ஒரு பாவி, அதனால் அவன் தன் பாவங்களிலிருந்தும், தன் குடும்பத்தாரின் பாவங்களிலிருந்தும் மீட்கப்பட பலி செலுத்தவேண்டியிருந்தது.
எரேமியா 31 இல் கர்த்தர் கூறுகிறார். “நான் உடன்படிக்கையை உடைத்துப்போடுவேன். நான் உன்னுடன் உடன்படிக்கைச் செய்தேன். அதனை நீ கடைப்பிடிக்கவில்லை. ஆகவே, உன்னை பரிசுத்தமாக்காத அந்த உடன்படிக்கையை தூரவைத்துவிட்டு புதியதோர் இரட்சிப்பின் உடன்படிக்கையை கொடுப்பேன். என்னுடைய கட்டளைகளினால் இனிமேல் உன்னை இரட்சிக்கப்போவதில்லை. ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் இரட்சிப்பை அருளிச் செய்வேன்”
கர்த்தர் நமக்கு புதிய உடன்படிக்கையைக் கொடுத்தார். நேரம் வந்தபோது, இயேசு இவ்வுலகிற்கு மனிதனைப்போன்றே வந்தார். உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கும்பொருட்டு தன்னை அர்ப்பணித்தார். சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். அவரை விசுவாசிப்போரை இரட்சிக்கிறார். தம் ஞாஸ்நானம் மூலம் மனித குலத்தின் சகல பாவங்களையும் எடுத்துப்போட்டார்.
கர்த்தரின் சட்டங்கள் தூர வைக்கப்பட்டு, நிரப்பப்பட்டன: இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் கட்டளைப்படி வாழ்ந்திருந்தால், அவர்கள் இரட்சிப்படைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யத் தவறினார்கள். “பாவத்தை அறிகிற அறிவு, நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்.” (ரோமர் 3:20)
தாம் பாவிகள் என்பதை இஸ்ரவேலர்கள் உணரவும் சட்டம் அவர்களை விடுதலையாக்காது என்பதை உணரவும் வேண்டுமென்று கர்த்தர் விரும்பினார். கர்த்தர் அவர்களின் கிரியைகளின் நிமித்தமல்ல, இரட்சிப்பின் சட்டமாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் அவர்களை இரட்சித்தார். அவரின் அளவில்லாத அன்பின் மூலம், கர்த்தர் ஒரு புதிய உடன்படிக்கையை நமக்குக் கொடுத்தார். அதன்படி இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் மூலமாக, இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும், நாம் இரட்சிக்கப்பட முடியும்.
இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றின் உட்பொருளை அறியாது இயேசுவை நீ விசுவாசித்தால், உன் நம்பிக்கை வீண். அப்படிச் செய்வதானால் இயேசுவை மொத்தமாக நீ விசுவாசிக்காமல் இருந்த போதை விட அதிக தொந்திரவில் இருக்கிறாய்.
கர்த்தர் மனிதர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு புதிய உடன்படிக்கைச் செய்வதாகக் கூறினார். அதன்பலனாக, நம் செய்கைகளின் பலனாக, நாம் இரட்சிக்கப்படவில்லை; ஆனால் நீதியின் இரட்சிப்பு சட்டமாகிய நீர் மற்றும் இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டோம்.
இது அவரின் நிரந்தர வாக்குத்தத்தமாகும். இயேசுவை நம்புவோருக்கு இவ்வாக்குதத்தத்தை நிறைவேற்றினார். இயேசுவின் சிறப்புகளைப் பற்றியும் அவர் நம்மிடம் கூறினார். பழைய ஏற்பாட்டின் ஆரோனை ஒத்த ஆசாரியர்களுடன் ஒப்பிட்டு இயேசு எவ்வளவு பெரியவர் என்று நம்மிடம் கூறினார்.
இயேசுவின் இரத்தம் நீர் ஆகியவற்றால் கிட்டும் இரட்சிப்பை நாம் விசுவாசிப்பதால் சிறப்பானவர்களானோம். இதனை தயவுசெய்து எண்ணிப்பாருங்கள். உங்கள் போதகர் எத்தனைப் படித்திருந்தாலும், எத்தனை அழகாக பேசினாலும் அவர் எப்படி இயேசுவை விட பெரியவராக முடியும்? அதற்கு வழியே இல்லை. நீர் மற்றும் இரத்தத்தை விசுவாசிப்பதால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படமுடியும். கர்த்தரின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் ஒருபொழுதும் இரட்சிப்படைய முடியாது. ஏனெனில் ஆசாரித்துவம் மாறியதால் இரட்சிப்பிற்கான சட்டமும் மாறுதல் அடைந்தது.
மேன்மையான கர்த்தரின் அன்பு
எது மேலானது, கர்த்தரின் அன்பா அல்லது அவரின் சட்டமா?
கர்த்தரின் அன்பு.
இயேசுவை விசுவாசித்தால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுவோம். இயேசு நம்மை எப்படி இரட்சித்தார்? நமக்கு கர்த்தரின் அன்பு எத்தனைப் பெரிது என்று தெரியவேண்டும். அப்படியானால் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கும், கர்த்தருடைய அன்பின் மேன்மைக்கும் உள்ள வித்தியாசமென்ன?
மரபு சார்ந்தவர்கள் தங்கள் பிரிவின் கொள்கைகளுக்கும், தம் சொந்த அனுபவங்களுக்கும், கர்த்தரின் வார்த்தைக்கும் மேலாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆயினும், உண்மையானதும், இயேசுவுக்குள் முழுமையான ஆவிக்குரிய விசுவாசமும்; நீர் மற்றும் ஆவியால் நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பின் மேன்மையை விசுவாசிப்பதால் வரும்.
இன்றும் கூட, தம் மூலப் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகவும், தம் அன்றாடப் பாவங்களுக்காக தினந்தோறும் மனம் வருந்தி ஜெபிக்கவேண்டுமென்றும் கூறுவோர் அநேகர். நிறைய மனிதர்கள் இதனை நம்பி, பழைய ஏற்ப்பாட்டின் கட்டளைகளின்படி தங்கள் வாழ்வினில் வாழ முயல்கிறார்கள். அவர்களுக்கு நீர் மற்றும் ஆவியால் வந்த இயேசு அளிக்கும் இரட்சிப்பின் மேன்மையைக் குறித்து எதுவும் தெரியாது.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ரவேலர்கள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்பொருட்டு, கர்த்தரின் சட்டப்படி வாழவேண்டியிருந்தது. ஆயினும் அவர்கள் இரட்சிப்படையவில்லை. ஆயினும் கர்த்தருக்கு நாம் பலவீனர்கள் என்றும், நாம் முழுமையடையாதவர்கள் என்றும் தெரியுமாகையால் அவர் தம் கட்டளைகளைத் தள்ளி வைத்தார். நம்முடைய செய்கைகளினால் எப்பொழுதும் நாம் இரட்சிப்படைய முடியாது. இயேசு தம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் நம்மை இரட்சிப்பதாக கூறினார். அவர் “நான் உங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் உங்களை விடுதலையாக்குவேன் என்றார்.” கர்த்தர் இதனை ஆதியாகமத்தில் தீர்க்கத்தரிசனமாக உரைத்தார்.
“அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதியாகமம் 3:15). ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து விழுந்துபோய், அத்திமர இலைகளினால் ஆடைசெய்து கர்த்தரிடமிருந்து தம் பாவங்களை மறைக்கும்படியாக அவற்றை அணிந்தனர். ஆயினும் கர்த்தர் அவர்களை அழைத்து தோலினாலான ஆடையை இரட்சிப்பின் அடையாளமாக அவர்களுக்கு அணிவித்தார். ஆதியாகமம் இரண்டுவிதமான இரட்சிப்பின் ஆடைகளைக் குறித்து கூறுகிறது. ஒன்று அத்திமர இலைகளினால் ஆனது மற்றது தோலிலானது. எது சிறந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள். தோலினால் செய்யப்பட்ட ஆடையே சிறந்தது. ஏனெனில் மனிதனை பாதுகாக்கும்படி ஒரு மிருகத்தின் உயிர் எடுக்கப்பட்டது.
அத்திமர இலைகளினால் செய்யப்பட்ட ஆடை உதிர்ந்து போகும். அத்தியிலை ஒரு கை வடிவத்தில் அமைந்திருப்பதை அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, அத்திமர இலையை ஆடையாக அணிவது நற்செய்கைகளினால் பாவங்களை மறைப்பது போன்றதாகும். நீங்கள் அத்திமர இலைகளினால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கீழே உட்கார்ந்தீர்களானால் சீக்கிரத்தில் அது துண்டு துண்டாகிவிடும். நான் சிறுவனாக இருக்கையில் சிப்பாய்போல் விளையாடுவதற்கு, அரரூட் இலையில் கவசம் செய்வேன். அவற்றை நான் எத்தனைக் கவனமாக உடுத்தாலும் நாளின் முடிவில் அவை பிய்ந்துபோய்விடும். அதுபோல மனிதகுலத்தின் மாமிசம் பரிசுத்தப் படுதலை கடினமாக்குகிறது.
ஆயினும் நீர் மற்றும் இரத்தம் அளிக்கும் இரட்சிப்பு, இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் ஆகியவை நிறைய பாவிகளை இரட்சித்துள்ளது. இது கர்த்தரின் மேன்மையான அன்பைக் குறித்து சாட்சி பகறுகின்றது. இந்தப்படியே கர்த்தரின் அன்பு அவர் சட்டத்தினைவிட மேலானதாகும்.
கர்த்தரின் சட்டத்தில் இன்னும் விசுவாசம் வைத்திருப்பவர்கள்
மரபுச் சார்ந்தவர்கள் தம் செய்கைகளின் மூலம் தினமும் புதிய ஆடைகளைச் செய்வதேன்?
அவர்கள் செய்கைகளினால், தாம் நீதிமான்களாக முடியாது என்று அவர்களுக்கு தெரியாததால்.
அத்திமர இலையினால் தம் ஆடையைத் தயாரிப்பவர்கள் மரபுச் சார்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். இத்தகைய தவறுதலாக வழி நடத்தப்பட்ட விசுவாசிகள் தம் ஆடையை அடிக்கடி மாற்றவேண்டியுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் அவர்கள் ஆலயத்திற்கு செல்லும்போதும் அவர்கள் புதிய ஆடை ஒன்றைத் தயாரிக்கவேண்டும். “அன்புள்ள கர்த்தரே, கடந்த வாரம் அநேக பாவங்களைச் செய்தேன். ஆயினும் கர்த்தரே, நீர் என்னைச் சிலுவையில் இரட்சித்ததை விசுவாசிக்கிறேன். கர்த்தரே, தயவுசெய்து சிலுவை இரத்தத்தின் மூலம் என்னைக் கழுவும்!” இப்படிச் செய்வதனால் ஒரு புதிய ஆடையை, அந்த இடத்தில், அந்த நேரத்தில் தைத்தார்கள். “ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா!”
ஆனால் வெகுசீக்கிரமாக இன்னுமொரு ஆடையை வீட்டில் தயாரிக்கவேண்டும். ஏன்? ஏனெனில் அவர்களுடைய பழைய ஆடைகள் கிழிந்து போயின. “அன்புள்ள கர்த்தரே, கடந்த மூன்று நாட்களில் மீண்டும் பாவம் செய்தேன். தயவு செய்து மன்னியும்.” அவர்கள் மீண்டும் மீண்டும் மனம் வருந்துதலான ஆடையை அணிகிறார்கள்.
தொடக்கக் காலத்தில், ஆடையானது அநேக நாட்களுக்கு வரும், ஆனால் சில காலத்திற்கு பிறகு, ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆடை அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்களால் கர்த்தரின் சட்டப்படி எப்பொழுதும் வாழ முடியாதாகையால், தம்மைக் குறித்து வெட்கம் கொள்கிறார்கள். “ஓ, இது மிகவும் வெட்கமாக இருக்கிறது. கர்த்தரே, ஓ, கர்த்தரே நான் மீண்டும் பாவம் செய்தேன்!” மனம் வருந்துதலான புதிய ஆடையை அவர்கள் தயாரிக்கவேண்டும். “ஓ, கர்த்தரே, இன்று அத்திமர இலைகளினால் ஆடை தயாரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.” புதிய ஆடையைத் தயாரிக்க அவர்கள் கஷ்டப்பட்டு வேலைச் செய்கிறார்கள்.
இத்தகைய மனிதர்கள் கர்த்தரை கூப்பிட்டால் அது பாவ அறிக்கைச் செய்யவே. தம் உதடுகளைக் கடித்துக் கொண்டு கட~வுளே! என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டுத் தினமும் ஒரு புதிய ஆடையைத் தயாரிக்கிறார்கள். அப்புறம் அவர்கள் களைப்படைந்தபின் என்னவாகின்றது?
வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ மலைகளுக்குச் சென்று உபவாசம் இருக்கிறார்கள். அவர்கள் பலமுள்ளதும் கடினமாக உழைக்கக்கூடியதுமான ஆடைகளை முயன்று தயாரிக்கிறார்கள். “கர்த்தரே, என் பாவங்களைக் கழுவிப்போடும், என்னைப் புதிதாக்கும். நான் உம்மை நம்பியிருக்கிறேன், கர்த்தரே.” இரவில் ஜெபிப்பது நல்லது என்று நினைக்கிறார்கள். ஆகவே, பகல் நேரங்களில் நன்கு தூங்கி இருட்டும் வேளை தொடங்கிய உடனேயே தம் பலத்தையெல்லாம் உபயோகித்து மரக்கிலைகளில் தொங்கிக்கொண்டோ, இருட்டான குகைக்களுக்குள்ளே போயோ, கர்த்தரை நோக்கி கூக்குரலிடுகிறார்கள். “கர்த்தரே, நான் விசுவாசிக்கிறேன்!” “நான் மனம் வருந்தி என் இருதயத்தை சோகமான மனதால் நிறைத்தேன்.” அவர்கள் சத்தமிட்டு ஜெபித்து கத்துகிறார்கள். “நான் விசுவாசிக்கிறேன்.” இம்முறைகள் மூலமாக அவர்கள் சிறப்பான ஆடைகளைத் தயாரிக்கிறார்கள். அது வெகு நேரம் உழைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அவை அப்படி இருப்பதில்லை.
மலையில் ஜெபம் செய்து கீழிறங்கும்போது எத்தனை பலமாக இருக்கிறது. தென்றல் காற்றைப் போலவும், வசந்த கால மழை; மரங்கள், பூக்கள் மீது பொழிவது போல், அவர்கள் ஆத்துமா சந்தோஷத்தினாலும் வல்லவரின் கிருபையினாலும் நிறைந்திருக்கிறது. மலைகளின் மேலிருந்ததைவிட ஆத்துமா சுத்தமாக இருப்பதை உணர்ந்து, புதிய சிறப்பு ஆடைகளுடன் உலகினை எதிர் கொள்ளுகிறார்கள்.
ஆனால் அவர்கள் தங்கள் இல்லத்திற்கும் ஆலயத்திற்கும் திரும்பி வாழத்தொடங்கும்போது, அவ்வாடைகள் அழுக்காகி கிழியத் தொடங்குகின்றன. அவர்களுடைய நண்பர்கள் “நீ எங்கே போயிருந்தாய்?” என்று கேட்கிறார்கள்.
“நல்லது, சிறிது நேரம் சற்று தூரமாகச் சென்றிருந்தேன்.”
“நீ சற்றே எடையிழந்திருப்பதுபோல் தோன்றுகிறாய்.”
“நல்லது, ஆமாம், ஆனால் அது வேறு ஒரு கதை.”
அவர்கள் தாம் உபவாசமிருந்ததை காட்டிக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் ஆலயத்திற்குச் சென்று ஜெபிக்கிறார்கள். “நான் பெண்களை இச்சிக்கமாட்டேன். பொய் சொல்லமாட்டேன். அயல் வீட்டினை நான் இச்சிக்க மாட்டேன். எல்லா மக்களையும் நேசிப்பேன்.”
ஆனால் அவர்கள் ஔர் அழகான பெண்ணை மெலிந்த கால்களுடன் கண்டால், அவர்கள் இதயத்திலுள்ள பரிசுத்தம் நொடியில் காமமாகிவிடுகிறது. “அவள் ஆடை எத்தனைக் குறைவாக இருக்கிறது பார்! அவள் ஆடை சிறியதாக சிறியதாக ஆகிறது! அந்தக் கால்களை மறுபடியும் நான் பார்த்தேயாக வேண்டும்! ஓ! இல்லை! ஓ, கர்த்தரே நான் மீண்டும் பாவஞ் செய்தேன்!”
மரபு சார்ந்தவர்கள் பக்திமான்கள்போல் தோன்றுகிறார்கள். அவர்கள் தினமும் புதிய ஆடை தயாரிக்க வேண்டுமென்பதை நீ அறிந்துகொள். மரபு சார்ந்திருத்தல் அத்தி இலைகளினால் செய்யப்பட்ட ஆடையைப் போன்று, தவறான நம்பிக்கையாகும். கர்த்தரின் சட்டப்பிரகாரமாக வாழ வேண்டுமென்று அநேக மக்கள் பக்தியுடன் வாழ கடும் பிரயத்தனம் செய்கிறார்கள். தம் நுரையீரல் கிழிய மலை உச்சியிலிருந்து தமது பக்தி வெளிப்படும்படி கத்துகிறார்கள்.
மரபு சார்ந்தவர்கள், ஆலயத்தில் ஜெபக்கூட்டம் நடத்துகையில், நல்லத் தோற்றத்துடன் இருக்கிறார்கள். “பரலோகத்திலுள்ள பரிசுத்த பிதாவே! கடந்த வாரம் நாம் பாவம் செய்தோம். நம்மை தயவுசெய்து மன்னியும்.” அவர்கள் அழுது கதறுகிறார்கள். சபையோரும் அதனை பின்பற்றுகிறார்கள். தமக்குள் அவர்கள் நினைக்கிறார்கள், “அவர் மலைமீது ஜெபிப்பதிலும், உபவாசமிருப்பதிலும் நிறைய நேரம் செலவிட்டிருப்பார். அவர் எத்தனை பக்தியுடனும், முழு நம்பிக்கையுடனும் இருக்கிறார்” ஆனால் அவர் நம்பிக்கை மரபு சார்ந்திருப்பதால், ஜெபக்கூட்டம் முடியும் முன்பே அவருடைய இருதயம் முரட்டுத்தனத்தாலும், பாவத்தாலும் நிரம்பத் தொடங்கிவிடுகிறது.
அத்திமர இலைகளால் சிறப்பு ஆடைகளை மக்கள் தயாரிக்கும்போது, அவை இரண்டு மாதமோ மூன்று மாதமோ உழைக்கும். ஆனால் சீக்கிரமாகவே சிறிது காலத்திலே அவை உபயோகமற்றுபோவதால் அவர்கள் மீண்டும் புதிய ஆடை தயாரித்து தம் கபட வாழ்வைத் தொடருகிறார்கள். இதுவே இரட்சிக்கபடும்படியாக சட்டத்தின்படி வாழ நினைக்கும் மரபு சார்ந்தவனின் வாழ்க்கையாகும். அவர்கள் அத்திமர இலையிலிருந்து தொடர்ந்து புதிய ஆடைகளைச் செய்துகொண்டே இருக்கவேண்டும்.
மரபு சார்ந்து வாழ்வது அத்திமர இலை நம்பிக்கையாகும். அவர்கள் “கடந்த வாரம் முழுவதும் பாவம் செய்தீர்கள், அப்படியில்லையா? அப்படியானால் மனம் வருந்தி ஜெபியுங்கள்.” என்று உங்களிடம் கூறுவார்கள்.
உங்களிடம் பலத்த குரலில் சத்தமிடுவார்கள் “மனம் வருந்து! ஜெபி!”
மரபு சார்ந்த ஒருவனுக்குத் தன் குரலை பரிசுத்தமானதுபோல் காட்டத் தெரியும். “கர்த்தரே! என்னைப் பொருத்துக்கொள்ளும். உம்முடைய சட்டப்படி நான் வாழவில்லை. உம்முடைய கட்டளைகளை கடைப்பிடிக்கவில்லை. என்னை மன்னியும் கர்த்தரே. மீண்டும் ஒரு முறை என்னை மன்னியும்.”
அவர்கள் எத்தனைத் தீவிரமாக சட்டத்தின்படி வாழப் போராடினாலும் அவர்களால் அப்படி வாழ முடியாது. அவர்கள் கர்த்தரின் சட்டத்திற்கும் கர்த்தருக்கு எதிராகவும் சவால் விடுகிறார்கள். கர்த்தருக்கு முன் அவர்கள் முரடர்களாக இருக்கிறார்கள்.
சூடல் பேயின் விருப்பங்கள்
கர்த்தர் ஏன் சட்டத்தை அகற்றினார்?
ஏனெனில் பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க அதனால் முடியாது.
சூடல் பே என்றொரு வாலிபன் இருந்தான். 1950 இல், கொரிய யுத்தத்தின்போது கம்யூனிச சிப்பாய்கள் வந்து அவனின் அசைக்கமுடியாத சமய நம்பிக்கையிலிருந்து கம்யூனிஸ்டாக மாற்ற ஓய்வு நாளில் தாழ்வாரத்தைப் பெருக்கும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் இந்த சமய நம்பிக்கையுள்ள வாலிபன் அவர்கள் கட்டளைக்கு அடிபணிய மறுத்தான். அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் அவ்வாலிபனோ மீண்டும் மறுத்தான்.
கடைசியாக, சிப்பாய்கள் அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து துப்பாக்கி முனையை அவன் மீது குறிவத்தார்கள். “எது உனக்கு வேண்டும்? தாழ்வாரத்தைப் பெருக்குவதா? அல்லது சாவாதா?”
தீர்மானம் செய்யும்படி நெருக்கப்பட்டபோது அவன் கூறினான், “ஓய்வு நாளில் வேலை செய்வதைப் பார்க்கிலும் நான் சாவது நலம்.”
“நீ உன் தீர்மாணத்தைச் செய்தாய். அதன்படி செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியானது.”
அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள். அவன் மரணத்திற்கு பிறகு அவனின் அசைக்கமுடியாத மத நம்பிக்கையை நிறைவு கூறும் வண்ணம் ஆலய மூப்பர்கள் அவனை டீக்கனாக நியமித்தார்கள்.
அவனின் மன உறுதி இத்தகையதாக இருந்தாலும், அவன் மத நம்பிக்கை தவறாக வழி நடத்தியது. அவன் ஏன் வெளிப்புறத்தைப் பெருக்கி, அந்த சிப்பாய்களுக்கு நற்செய்தியைக் கூறியிருக்கமுடியாது? ஏன் இத்தனை உறுதியாக இருந்து சாகவேண்டும்? ஔய்வு நாளில் வேலை செய்யாதிருந்தால் கர்த்தர் அவனைப் புகழுவாரா? இல்லை.
நாம் ஆவிக்குரிய வாழ்க்கை நடத்தவேண்டும். கர்த்தரின் முன்பு நம் செய்கைகள் அல்ல, நம் நம்பிக்கையே முக்கியம். ஆலயத் தலைவர்கள் சூடல் பே போன்றவர்களுக்கு விழா எடுக்க விரும்புகிறார்கள். தம்முடைய பிரிவின் மேன்மையை பறைசாற்ற அவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் இயேசுவிடம் சவாலிட்ட கபட பரிசேயரைப் போன்றவர்கள்.
மரபு சார்ந்தவர்களிடமிருந்து நாம் படிப்பதற்கு எதுவுமில்ல. ஆவிக்குரிய நம்பிக்கையை நாம் படிக்கவேண்டும். இயேசு ஏன் ஞானஸ்நானம் பெறவேண்டும் சிலுவையில் ஏன் இரத்தஞ்சிந்தவேண்டும் என்று தியானிக்கவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குறித்த இயல்பியலை ஆராயவேண்டும்.
முதலில் இக்கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க முயல வேண்டும். பிறகு எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தியைப் பரப்பவேண்டும். ஆகவே அவர்கள் மறுபடியும் பிறந்தவராவார்கள். ஆவிக்குரிய வேலைகளுக்கு நம் வாழ்வை அர்ப்பணிக்கவேண்டும்.
ஒரு போதகர் உன்னிடம் “இந்த வாலிபன் சூடல் பே போலிரு. ஔய்வு நாளை பரிசுத்தமாக ஆசரி” என்றால், அவர் உன்னை ஞாயிறுதோறும் ஆலயத்திற்கு வரவழைக்க மட்டும் முயல்கிறார்.
இங்கே இன்னுமொரு கதையிருக்கிறது. அங்கே ஒரு பெண்ணிருந்தாள். அவள் ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்ல வேண்டுமென்றால் நிறைய சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது. அவள் கணவனின் பெற்றோர் கிறிஸ்தவர்களல்ல. அவள் ஆலயத்திற்குச் செல்வதைத் தடுக்க மிகவும் முயன்றனர். ஆவளை ஞாயிற்றுக்கிழமையும் வேலைச் செய்யக்கூறினர். அவள் சனிக்கிழமை இரவில் வயல் வெளிகளுக்குச் சென்று நிலா வெளிச்சத்தில் வேலை செய்தாள். அப்பொழுது அவள் வீட்டாருக்கு அவளை ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்லாதே என்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லை.
ஆலயம் செல்வது மிகவும் அவசியம் தான். ஆனால் நாம் எத்தனை விசுவாசமாக இருக்கிறோம் என்று காட்டுவதற்காக எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைச் செய்ய வருவது போதுமா? உண்மையான நம்பிக்கை நீர் மற்றும் ஆவியில் மறுபடியும் பிறப்பதிலிருக்கிறது. ஒருவன் மறுபடியும் பிறக்கும்போது உண்மை விசுவாசம் தொடங்குகிறது.
கர்த்தரின் சட்டப்படி வாழ்வதானால் பாவங்களிலிருந்து உன்னால் இரட்சிக்கப்பட முடியுமா? இல்லை. சட்டத்தை அசட்டைப் பண்ணும்படி நான் உன்னிடம் கூறவில்லை. ஆனால் சட்டத்தின் எல்லாப் பிரிவுகளையும் மனிதர்களால் கடைப்பிடிப்பது இயலாத காரியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
யாக்கோபு 2:10 கூறுகிறது. “ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லவற்றிலும் குற்றவாளியாய் இருப்பான்.” ஆகவே, முதலில் எப்படி நீர் மற்றும் ஆவி மூலம் மறுபடியும் எப்படி பிறப்பது என்பது குறித்து நீ யோசி. பிறகு நற்செய்தியை கேட்கக்கூடிய ஆலயத்திற்கு போ. நீ மறுபடியும் பிறந்தபிறகு விசுவாச வாழ்வை வாழலாம். பிறகு, கர்த்தர் உன்னை அழைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் முன் போகலாம்.
போலியான ஆலயத்திற்குச் செல்லுவதன் மூலம் உன் நேரத்தை வீணாக்காதே. தவறான காணிக்கைகளைச் செலுத்தி உன் பணத்தை வீணாக்காதே. போலி ஆயர்களினால் நீ நரகம் போவதைத் தடுத்து நிறுத்தமுடியாது. முதலில் நீர் மற்றும் ஆவி குறித்த நற்செய்தியை கேட்டு மறுபடியும் பிற.
இயேசு இவ்வுலகிற்கு வந்த காரணத்தை யோசித்துப்பார். நாம் சட்டப்படி வாழ்ந்து பரலோகத்திற்குள் பிரவேசிக்கமுடியும் என்றால், அவர் இவ்வுலகிற்கு வரவேண்டியது அவசியமே இல்லை. அவர் வருகைக்குப்பின், ஆசாரித்துவம் மாறிற்று. மரபு சார்ந்த வாழ்க்கை பழமையானது. நாம் இரட்சிக்கப்படும் முன்னால் சட்டத்தின்படி வாழ்ந்தால் மட்டுமே இரட்சிக்கப்படுவோம் என்று நினைத்தோம். ஆனால் இது உண்மையான விசுவாசத்தின் அடையாளமாக இப்போதில்லை.
இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைத் தம் அன்பினாலும், தம் ஞானஸ்நான நீரினாலும், தம் இரத்தத்தினாலும், ஆவியினாலும் இரட்சித்தார். அவர் நம்முடைய இரட்சிப்பை யோர்தானில் தன் ஞானஸ்நானம் மூலமும் சிலுவையில் அவர் இரத்தம் மூலமும், அவர் உயிரோடெழுந்ததன் மூலமும் நிறைவேற்றினார்.
கர்த்தர் முந்தைய விதிமுறைகளை அப்புறப்படுத்தினார். ஏனெனில் அவை பலவீனமும் பயனற்றதுமாகும். “நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை. அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்.” (எபிரேயர் 7:19-20) இயேசு ஆணையிட்டு எல்லாப் பாவங்களிலிருந்தும் தன் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தால் நம்மை இரட்சித்தார். மரபு சார்ந்த கொள்கையின்மூலம் இரத்த சாட்சியாக மரிப்பது கனியற்ற சாவு. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதே உண்மையான நம்பிக்கையாகும்.
நம்மிடம் கனி தரும் விசுவாசம் இருக்கவேண்டும். “உன் ஆத்துமாவிற்கு எது நல்லது என்று நினைக்கிறாய்? ஆலயத்திற்கு நாள் தவறாமல் சென்று சட்டப்படி வாழ்வதா? அல்லது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பது குறித்து போதிக்கும் கர்த்தரின் ஆலயத்திற்கு செல்வது நல்லதா? எந்த ஆலயமும் எந்தப் போதகரும் உன் ஆத்துமாவிற்கு அதிக நன்மையைக் கொண்டுவருகிறது? இனைப்பற்றி யோசித்து உனது ஆத்துமாவிற்கு நன்மை பயக்கும் ஒன்றைத் தேர்ந்தெடு.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றிய வார்த்தைகளைக் கொண்டிருக்கும் போதகர் மூலம் கர்த்தர் உன் ஆத்துமாவை இரட்சிக்கிறார். அவரவர் ஆத்துமாவிற்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும். ஒரு உண்மையான அறிவுள்ள விசுவாசி வேதவாக்கிற்கு தன் ஆத்துமாவை ஒப்புவிக்கிறான்.
இயேசு ஆணையின் மூலம் ஆசாரியரானார்
லேவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆணையின் மூலம் ஆசாரியர்கள் ஆக்கப்பட்டார்களா?
இல்லை. இயேசு மட்டுமே ஆணையின் மூலம் ஆசாரியரானவர்.
எபிரெயர் 7:20-21 கூறுகிறது, “அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியராய் ஆனார். ஆனதால் இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ.”
சங்கீதம் 110:4 கூறுகிறது. “நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலும் இருப்பார்.” கர்த்தர் ஒரு உறுதிகொடுத்தார். நம்முடன் அவர் ஔர் உடன்படிக்கைச் செய்து அதனை எழுத்தில் நமக்கு காண்பித்தார். “மெல்கிசேதேக்குக்கு ஒப்பான நிரந்தர ஆசாரியராவேன். மெல்கிசேதேக்கு நீதியின் ராஜாவும், சமாதானத்தின் ராஜாவும், நிரந்தர தலைமை ஆசாரியனுமாவான். உன்னை இரட்சிக்குபொருட்டு மெல்கிசேதேக்கையொத்த நிரந்தர தலைமை ஆசாரியராவேன்.”
இயேசு இவ்வுலகிற்கு வந்து உடன்படிக்கைக்கு நிச்சயம் அளிப்பவராய் இருந்தார். (எபிரெயர் 7:22) காளைகளினதும், ஆடுகளினதும் இரத்தத்திற்கு பதிலாக தம்மையே, நம் எல்லாப் பாவங்களையும் கழுவும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் இரத்தஞ் சிந்தினார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு தலைமை ஆசாரியன் மரிக்கும்போது அவன் மகன் 30 வயதாகும்போது ஆசாரியத்துவத்தைக் கொண்டுச் சென்றான். அவன் வயதானவன் ஆகும்போது அவன் மகன் 30 வயதை அடைந்தால் அவன் ஆசாரித்துவத்தை தன் மகனுக்கு கொடுத்தான்.
அங்கே அநேக சந்ததியினர் தலைமை ஆசாரியனுக்கு கீழிருந்தனர். ஆகவே, தாவீது அவர்களுக்கு ஒரு முறைமையை ஏற்படுத்தினான். அதன்படி ஒருவர் பின் ஒருவராக சுழல் முறையில் அவர்கள் ஆசாரியரானார்கள். ஆரோனின் எல்லா சந்ததியாரும் ஆசாரியராக நியமிக்கப்பட்டதால் கர்த்தரை சேவிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். லூக்கா கூறுகிறான். “அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். ....அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவ சன்னதியிலே ஆசாரிய ஊழியஞ் செய்துவருகிற காலத்தில்ஸ.,”
இயேசு இவ்வுலகிற்கு வந்து ஆராதனைச் செய்யும் ஆசாரித்துவத்தை முற்றிலுமாக எடுத்துக்கொண்டார். அவர் நல்ல காரியங்கள் வரும்பொருட்டு ஆசாரியராக வந்தார். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பதால் கிட்டும் இரட்சிப்பை நிறைவேற்றினார்.
ஆரோனின் சந்ததியினர் பலவீனமானவர்களாகவும் மாமிசத்தில் குறைவுள்ளவர்களாகவும் இருந்தார்கள். ஒரு தலைமை ஆசாரியன் மரிக்கும்போது என்னவாகும்? அவன் மகன் ஆசாரியத்துவத்தை எடுத்துக் கொள்வான். ஆனால் அத்தகைய பலிகள் மனிதகுலத்தின் இரட்சிப்பிற்கு போதிய உறுதியை அளிக்கவில்லை. மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் உண்மையான முழு நம்பிக்கையாகாது.
புதிய ஏற்பாட்டின் காலத்தில் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் நித்திய நித்தியமாக ஜீவிப்பதால் தொடர்ந்து பலி கொடுத்துகொண்டிருக்க தேவையில்லை. தம்முடைய ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களை எடுத்துப்போட்டார். அவரை விசுவாசிப்பவர்கள் எல்லாம் முற்றிலும் பாவமற்றவர்களாகும்பொருட்டு அவர் தம்மை பலியாக்கி சிலுவையில் அறையப்பட்டார்.
இப்பொழுது அவர் உயிருடன் கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்து நம்மைக் குறித்து சாட்சி பகருகின்றார். “அன்புள்ள பிதாவே, அவர்கள் இன்னும் முழுமை பெறாதவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் என்னை விசுவாசிக்கிறார்கள். அவர்களுடைய பாவங்களை வெகு நாட்களுக்கு முன்பு எடுத்துப் போடவில்லையா?” இயேசுவே நம் இரட்சிப்பின் நிரந்தர ஆசாரியர்.
உலகின் ஆசாரியர்கள் முழுமையானவர்களே அல்ல. அவர்கள் மரிக்கும்போது அவர்களின் மகன்கள் ஆசாரித்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள். நம் கர்த்தர் என்றும் ஜீவிக்கிறார். அவர் நிரந்தர இரட்சிப்பை கீழ் கண்டவாறு நிறைவேற்றினார். நமக்காக இவ்வுலகத்திற்கு வந்தார். யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார். நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் சிலுவையில் இரத்தஞ்சிந்தினார்.
“இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனி பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.” (எபிரெயர் 10:18) முடிவு பரியந்தமும் நமது இரட்சிப்பை குறித்து இயேசு சாட்சி சொல்லுகிறார். நீ நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்துவிட்டாயா?
“பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாய் இருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராய் இருக்கிறார்.” (எபிரெயர் 7:26) “நியாயப் பிரமாணமானது பலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப் பிரமாணத்திற்கு பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.” (எபிரெயர் 7:28)
நான் இங்கு என்ன கூறவிரும்புகிறேன் என்றால் களங்கமில்லாத இயேசுகிறிஸ்து தன் ஞானஸ்நான நீரின் மூலமும், தன் சிலுவை இரத்தம் மூலாமாகவும் நம்முடைய பாவங்களை ஒரே தரம் கழுவினார். அவர் நம்மை செய்கைகளின் சட்டம் மூலமாக இரட்சிக்கவில்லை, ஆனால் நம்முடைய பாவங்கள் அனைத்தையும் எடுத்து அதற்காக நித்திய தீர்ப்பு பெற்றதன் மூலம் நம்மை இரட்சித்தார்.
அவர் நம்மை நித்திய இரட்சிப்பு மூலம் இரட்சித்தார் என்பதை விசுவாசிக்கிறாயா? அப்படிச் செய்வாயானால், நீ இரட்சிக்கப்படுவாய். அப்படியில்லையென்றால் இயேசுவின் நித்திய இரட்சிப்புக் குறித்து நீ படிக்கவேண்டியது நிறைய உள்ளது.
உண்மையான விசுவாசம் நற்செய்தியான நீர் மற்றும் ஆவியின் மூலமாக வருகிறது. இது தேவ வசங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நித்தியமான பரலோக தலைமை ஆசாரியரான இயேசுகிறிஸ்து தம் ஞானஸ்நானம் மூலமும், சிலுவை இரத்தம் மூலமும் நம் நித்திய இரட்சகரானார்.
நம் விசுவாசத்தை முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டும்
“இயேசுவில் விசுவாசித்தல்” என்பதன் பொருள் யாது?
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மீது வைக்கும் நம்பிக்கை.
இயேசுவை நாம் எப்படி சரியான வழியில் நம்புவது? அவர் மேல் எப்படி நேரடி விசுவாசம் வைப்பது? என்று நாம் யோசிக்கவேண்டும். இயேசுவை சரியான வழியிலும் முறையான வழியிலும் நாம் விசுவாசிப்பதெப்படி? நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதன் மூலம் நாம் அதைச் செய்யலாம்.
சரியான விசுவாசம் இயேசுவின் செய்கைகளை விசுவாசிப்பதாகும். அவரின் செய்கைகள் அவரின் ஞானஸ்நானமும், அவரின் இரத்தமுமாகும். நம்முடைய தவறான சிந்தனைகளை இவற்றில் கலக்ககூடாது. இதனை உண்மையென்று நீ நம்புகிறாயா? உன் ஆவிக்குரிய நிலை என்ன? உன்னுடைய சொந்த முயற்சிகளிலும், செயல்களிலும் அதிகம் சார்ந்திருக்கிறாயா.
இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கி அதிக காலமாகவில்லை. ஆனால் பத்து வருடங்களாக மரபு சார்ந்து வாழ்ந்ததால் அவதிப்பட்டேன். அதன் பயனாக இத்தகைய வாழ்வு என்னைக் களைப்படையச் செய்தது. அக்காலங்களில் என்னைக் குறித்து நினைவுபடுத்தக்கூட மறந்து போனேன். என் மனைவி இங்கே உட்கார்ந்திருக்கிறாள். அது எத்தனைக் கொடுமையானது என்று அவளுக்குத் தெரியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கூறுவேன், “அன்பே, இன்று நாம் சந்தோஷமாய் இருப்போம்.”
“ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை.”
அவள் ஆடைகளைக் கூட ஞாயிற்றுகிழமைகளில் துவைப்பது இல்லை. ஒரு ஞாயிறு என்னுடைய முழுக்கால் சட்டைக் கிழிந்துபோயிற்று. ஆனாலும் கூட அவள் திங்கள் கிழமை வரை பொறுங்கள் என்றாள். இப்படியிருந்தாலும் கூட ஓய்வு நாளைச் சரியாக கடைப்பிடிக்கிறோம் என்று மேலும் குறிப்பாக இருந்தேன். ஆனால் அது மிகவும் கடினமானது நாம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்ந்திருந்ததே இல்லை. ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது வெகு கடினம். இன்னும் அந்த நாட்களை நினைவு கூறுகிறேன்.
அன்புள்ள நண்பர்களே, இயேவை உண்மையாக விசுவாசிக்க வேண்டுமானால், அவரின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் கிடைக்கும் பாவ மன்னிப்பை நாம் விசுவாசிக்கவேண்டும். உண்மையான விசுவாசம் என்பது இயேசுவின் இறைத்துவம், மனிதத்துவம் மற்றும் அவர் இவ்வுலகில் செய்த அனைத்துக் காரியங்களையும் விசுவாசிப்பதாகும். உண்மையான விசுவாசி அவரின் எல்லா வார்த்தைகளையும் நம்புகிறான்.
இயேசுவில் விசுவாசித்தல் என்பதன் பொருள் யாது? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை நம்புவதே அதுவாகும். இது எத்தனை எளிதானது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், வேதாகமத்தைப் படித்து நற்செய்தியை விசுவாசிப்பது மட்டுமே. சரியான வழியை நாம் நம்பவேண்டும்.
“நன்றி கர்த்தாவே! என்னுடைய செய்கைகளினால் அல்ல என்று இப்போது அறிந்தேன். சட்டத்தின் பாவ அறிவு கிட்டியது (ரோமர் 3:20) அவற்றையெல்லாம் இப்போது அறிந்திருக்கிறேன். சட்டம் நல்லதாகையாலும், அது கர்த்தரின் கட்டளையாகையாலும் அவற்றைக் கடைப்பிடித்து வாழவேண்டுமென்று நினைத்தேன். இதுவரை மிகவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்தேன். ஆனால் இப்போது சட்டத்தின் படி வாழ நினைப்பது முடியாத ஒன்று எனப் புரிகிறது. கர்த்தரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது முடியாத ஒன்று என்று இப்போது தெரிகிறது. ஆகவே கர்த்தரின் சட்டம் மூலமாக, என் இதயம் முழுவதும் தீய சிந்தனைகளாலும், மீறுதல்களாலும் நிறைந்திருப்பதை இப்போது உணருகிறேன். பாவத்தைப் பற்றிய அறிவைப் பெறும்படியாகவே சட்டம் கொடுக்கப்பட்டது என்று இப்போது புரிந்துகொண்டேன். ஓ, நன்றி, கர்த்தரே! உம் சித்தத்தைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு உம் சட்டத்தைக் கடைப்பிடிக்க கடும் முயற்சி செய்தேன். நான் எனக்கே இத்தகைய முயற்சிகள் மூலம் முரடனாய் இருந்திருக்கிறேன். நான் மனம் வருந்துகிறேன். இப்பொழுது இயேசு ஞானஸ்நானம் பெற்றதையும் என்னுடைய இரட்சிப்புக்காக இரத்தஞ் சிந்தியதையும் அறிந்திருக்கிறேன்! நான் விசுவாசிக்கிறேன்.”
நீங்கள் கபடம் இல்லாமலும் சுத்தமாகவும் விசுவாசிக்கவேண்டும். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளவைகளை மட்டுமே நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறப்பதற்கான ஒரே வழி இதுவே.
இயேசுவில் எதனை விசுவாசிப்பது? எதனையாவது குறிப்பிட்ட காலத்திற்குள் செய்துமுடிக்கவேண்டுமா? நம்முடைய விசுவாசம் நீ வேலை செய்யவேண்டிய மதமா? மக்கள் கர்த்தர்களை படைத்தார்கள். அக்கர்த்தர்களுக்கு பொருந்துமாறு மதங்களையும் படைத்தார்கள். ஒரு இலக்கினையடையும்பொருட்டு மக்கள் காரியங்கள் செய்வதற்கான ஒரு முறையே மதமாகும்: மனிதனின் நல்ல பக்கத்தை காட்டுவதற்காகும்.
அப்படியானால் விசுவாசம் என்பது என்ன? அதன் பொருள் கர்த்தரை நம்புவதும், அவரை நோக்கி பார்ப்பதுமாகும். நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தை நோக்கிப் பார்த்து, அவர் அளித்த ஆசீர்வாதத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இது உண்மையான நம்பிக்கையாகும். இதுவே நம்பிக்கைக்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு. இவற்றை வேறுபடுத்தி அறிய உன்னால் முடியும் என்றால், நீ நம்பிக்கையைப் புரிந்துகொண்டமைக்காக 100 புள்ளிகள் பெறுவாய்.
மறுபடியும் பிறவாத இறையியலாளர்கள் நாம் இயேசுவை விசுவாசிக்கவேண்டுமென்றும், பக்தியுடன் வாழவேண்டுமென்றும் கூறுகிறார்கள். ஒருவன் பக்தியுடன் இருந்தால் அவன் விசுவாசியாவானா? நாம் நல்லவர்களாக இருக்கவேண்டும். மறுபடியும் பிறந்தவர்களான நம்மைத் தவிர வேறு யார் பக்தி வாழ்வு வாழ்கிறார்கள்.
இங்கு குறிப்பிடுவது என்னவென்றால் இதனை அவர்கள் பாவிகளிடம் கூறுகிறார்கள். சராசரி பாவியினுள் 12 வகையான பாவங்கள் இருக்கின்றன. அவன் எப்படி பக்தியுடன் வாழ முடியும்? அவன் மனம் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிட்டாலும் அவன் இதயம் அதனைச் செய்யாது. ஒரு பாவி ஆலயத்தைவிட்டு வெளியே வரும்போது, பக்தியாக வாழ வேண்டுமென்பது வெறும் தத்துவமாகி, அவன் உணர்ச்சிகள் அவனைப் பாவத்திற்கு வழி நடத்துகின்றன.
ஆகவே, நம் இருதயத்தினுள் நாம் தீர்மானிக்கவேண்டும். சட்டத்தின்படி வாழப் போகிறோமா அல்லது இயேசுவின் ஞானஸ்நானம், அவர் சிலுவை இரத்தம் ஆகியவற்றை நம்பி இரட்சிக்கப்படவேண்டுமா? பரலோகத்தின் பிரதான ஆசாரியரான இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.
இயேசுவை நம்புவோருக்கெல்லாம் அவரே தலைமை ஆசாரியர் என்பதை நினைவுகொள்ளுங்கள். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் மூலமே உண்மையான இரட்சிப்பு வருகிறது என்பதை அறிந்து நாமெல்லாம் இரட்சிக்கப்படுவோமாக.
உலகின் முடிவு குறித்து மறுபடியும் பிறந்தவர்கள் கவலைப் படுவதில்லை
மறுபடியும் பிறந்தவர்கள் உலகின் முடிவு குறித்து ஏன் கவலைப் படுவதில்லை?
ஏனெனில் அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிமீது வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களைப் பாவமற்றவர்களாக்குகிறது.
நீங்கள் உண்மையில் மறுபடியும் பிறந்தவர்கள் என்றால் உலகின் முடிவு குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கொரியாவின் அநேக கிறிஸ்தவர்கள் அக்டோபர் 28, 1992 இல் உலகம் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறினார்கள் அது எத்தனைக் கொடுமையானதும், மோசமான நாளுமாக இருக்கப்போகிறது என்றும் அவர்கள் கூறினர். அவர்களுடைய கூற்றெல்லாம் பொய்யானது. உண்மையில் மறுபடியும் பிறந்தவன் கடைசி நொடிவரை பக்தியுடன் நற்செய்தியைப் பரப்புவான். உலகம் எப்போதானாலும் முடிவுக்கு வரட்டும். நாம் செய்யவேண்டியதெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப்பற்றி பிரசங்கிப்பதேயாகும்.
மணவாளன் வரும்போது நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்த மணவாட்டிகள் அவரை மிகுந்த சந்தோஷத்தோடே சந்திப்பார்கள். அவர்கள் “ஓ, நீர் கடைசியாக வந்துவிட்டீர் என் மாமிசம் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால் நீர் என்னை நேசித்து, என் பாவங்களிலிருந்து என்னை இரட்சித்தீர். ஆகவே, எனது இதயத்தில் பாவங்கள் இல்லை. நன்றி, கர்த்தாவே!. நீரே என் இரட்சகர்.” என்று கூறுவார்கள்.
இயேசுவே நீதிமான்களுக்கு ஆவிக்குரிய மணவாளர். இவ்விவாகம் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் மணவாளன் மணவாட்டியை நேசிப்பதாலாகும். மற்ற வழிப்படியல்ல. பூமியில் அப்படி நடைபெறுவதை அறிந்திருக்கிறேன். ஆனால் பரலோகத்தில் மணவாளனே விவாகம் நடைபெறவேண்டுமா என்று தீர்மானிப்பவர். மணவாளனாகிய இயேசுவே, அவரின் அன்பினாலும், இரட்சிப்பினாலும், மணவாட்டி எப்படிப்பட்டவளாக இருந்தாலும் விவாகத்திற்காக தேர்ந்தெடுப்பவர். பரலோகத்தில் விவாகம் இப்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மணவாளனிற்கு மணவாட்டியை பற்றி எல்லாம் தெரியும். அவருடைய அன்புள்ள மணவாட்டி மிகுந்த பாவியாக இருந்ததினாலே, அவர்களுக்காக இறங்கி தம் ஞானஸ்நானத்தினால் அவர்கள் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சித்தார்.
நம் கர்த்தராகிய இயேசு ஆரோனின் சந்ததியினராக இவ்வுலகிற்கு வரவில்லை. உலகப்படியான பலியைக் கொடுப்பதற்காக அவர் பூமிக்கு வரவில்லை. இந்த வேலையைச் செய்வதற்கு ஆரோனின் சந்ததியினாரான அநேக லேவிகள் இருந்தனர்.
பழைய ஏற்பாட்டு பலிகளின் முக்கியமான பாத்திரம் இயேசுவேயல்லாமல் வேறொருவரும் இல்லை. ஆகவே, இவ்வுலகிற்கு உண்மையானது வந்தமையால் நிழல் என்னவாயிற்று? நிழல் ஒதுக்கி வைக்கப்பட்டது.
இயேசு இவ்வுலகிற்கு வந்தபோது ஆரோன் செய்ததுபோல அவர் எந்த பலியையும் கொடுக்கவில்லை. தம்மையே மனித குலத்துக்காக ஞானஸ்நானம் மூலமும் பாவிகளின் இரட்சிப்புக்காக இரத்தஞ்சிந்தியும் தம்மை பலியாக்கினார். இரட்சிப்பை அவர் சிலுவையில் நிறைவேற்றினார்.
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போருக்கு இரட்சிப்பு சாதாரண சொற்களால் வருவதல்ல. இயேசு தெளிவில்லாத வழிகளில் நம்மை பாவ விடுதலைச் செய்யவில்லை. அதனை மிகத்தெளிவாகச் செய்தார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) இயேசு இவ்வுலகிற்கு வந்து தம் ஞானஸ்நானம், தம் மரணம், உயிரோடு எழும்புதல் ஆகியவை மூலம் நம்மை இரட்சித்தார்.
பழைய ஏற்பாடு இயேசுவின் முன் மாதிரியாகும்
புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியதற்கான காரணம் என்ன?
முதல் உடன்படிக்கை கடைப்பிடிக்கமுடியாததும், பயனற்றதுமாக இருந்தது.
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் தலைமை ஆசாரியர்கள் போன்று இயேசு பலியாராதனைகளைச் செய்யாவிட்டாலும், அவர் சிறந்த ஆசாரித்துவத்தை, நிரந்தர பரலோக ஆசாரித்துவத்தைக் கடைப்பிடித்தார். மனிதர்களாகிய நாம் பிறந்ததிலிருந்தே இவ்வுலகில் பாவம் நிறைந்தவர்களாக இருந்ததாலே, அவர்கள் பாவிகளாயினர்; அவர்கள் கர்த்தரின் சட்டத்தினால் நீதிமான்களாக முடியாது. ஆகவே கர்த்தர் புதிய உடன்படிக்கையைச் செய்தார்.
பரலோகத்திலுள்ள நம் பிதா தம் ஒரே பேறான குமரனை இவ்வுலகிற்கு அனுப்பி, அதற்கு பதிலாக நம்மிடம், இயேசுவின் ஞானஸ்நானம், அவர் இரத்தம், அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவை மீது நம்பிக்கை வைக்கும்படி கூறினார். இது கர்த்தரின் இரண்டாவது உடன்படிக்கையாகும். இரண்டாம் உடன்படிக்கைப்படி நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தர் நம்மிடம் நற்காரியங்களை எதிர்பார்க்கவில்லை. அவர் நம்மிடம் இரட்சிக்கப்பட இப்படி வாழவேண்டும் என்று கூறவில்ல. அவர் குமாரன் மூலம் வரும் இரட்சிப்பை மட்டும் விசுவாசிக்கும் படி கூறுகிறார். எல்லாவற்றிற்கும் மேல் அவரின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை நம்பும் படி நம்மிடம் கேட்கிறார். நாம் ஆமாம் என்று கூறவேண்டும்.
வேதகமத்தில், யூதாவின் குடும்பத்தினர் ராஜ்யத்தை ஆண்டனர். சாலொமோன் ராஜாவரை இஸ்ரவேலின் அரசர்கள் எல்லாம் யூதாவின் வீட்டில் பிறந்தவர்களாகவே இருந்தனர். ராஜ்யம் இரண்டாக பிளவுபட்ட போதிலும், கி.மு.586 இல் முற்றிலும் அழியும்வரை, தெற்கு ராஜ்யம் யூதா குடும்பத்தாரின் வசம் இருந்தது. இவ்வழியாக, யூதர்கள் இஸ்ரவேல் மக்களைக் குறிக்கின்றனர். லேவியின் கோத்திரத்தார் ஆசாரியர்கள். இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் குறிப்பிட்ட வேலையிருந்தது. யூதா கோத்தித்தாரிடமிருந்து இயேசு வெளிப்படுவார் என்று கர்த்தர் அவர்களிடம் உறுதியளித்தார்.
யூதா கோத்திரத்தாருடன் அவர் ஏன் இந்த உடன்படிக்கையைச் செய்யவேண்டும். இவர்களுடன் உடன்படிக்கைச் செய்வது உலக மக்கள் அனைவருடன் உடன்படிக்கைச் செய்வதற்கு ஒத்ததாகும். ஏனெனில் இஸ்ரவேல் மக்கள் உலக மக்களைக் குறிக்கிறார்கள், இயேசு புதிய உடன்படிக்கையை நிறைவேற்றினார், அது அவரின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவை உலகமக்களுக்கு அளிக்கும் இரட்சிப்பாகும்.
மனம் வருந்துவதால் பாவங்களைக் கழுவ முடியாது
மனிதர்களின் பாவங்கள் மனம் வருந்தலினால் கழுவப்படுமா?
இல்லை.
எரேமியா 17:1 இல் ஒருவனின் பாவங்கள் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. “யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும், எழுதப்பட்டு, அவர்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.”
நம் பாவங்கள் நம்மிருதயத்தில் பதிந்திருக்கிறது. அதனாலேயே நாம் பாவிகள் என்று நமக்குத் தெரிகிறது. ஒருவன் இயேசுவை நம்புவதற்கு முன்னால், அவனுக்குத் தான் ஒரு பாவி என்று தெரியாது. ஏன்? ஏனெனில் கர்த்தரின் சட்டம் அவன் இருதயத்தில் இல்லை, ஆகவே, இயேசுவை ஒரு முறை விசுவாசிக்கும் போது கர்த்தருக்கு முன் பாவியென்று புரிந்துகொள்கிறான்.
சிலர் 10 வருடங்கள் சென்றபிறகே தாம் ஒரு பாவி என்று புரிந்து கொள்ளுகிறார்கள். “ஓ, அன்பானவர்களே! நானொரு பாவி! நான் இரட்சிக்கப்பட்டதாக நினைத்தேன்! ஆயினும் நான் பாவியாகவே இருந்தேன்!” நாம் உண்மையில் எப்படியிருக்கிறோம் என்று கடைசியாக ஒரு நாள் பார்த்தோமானால் இதனைப் புரிந்து கொள்வோம். பத்து வருடங்களாக மிக்க மகிழ்ச்சியுடனிருந்தனர். திடீரென உண்மையைக் காண்கின்றனர். இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களுடைய உண்மையானப் பாவங்களும், மீறுதல்களும் கர்த்தரின் சட்டம் மூலமாக கடைசியாக தெளிவாக உணர்த்தப்படுகின்றது. அத்தகைய மனிதன் மறுபடியும் பிறக்காமலேயே 10 வருடங்களாக இயேசுவை விசுவாசித்திருக்கிறான்.
தன் இருதயத்தில் உள்ள பாவங்களை ஒரு பாவியால் அழிக்க முடியாதாகையால், கர்த்தர் முன் அவன் பாவியாகவே இருக்கிறான், சிலருக்கு 5 வருடங்கள் பிடிக்கிறது. சிலர் இதனை உணருவதற்கு 10 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் 30 வருடங்களுக்குப் பிறகு உணருகிறார்கள், சிலர் 50 வயதிற்கு பிறகு உணருகிறார்கள். சிலர் முடிவு மட்டும் இதனை உணருவதேயில்லை. “அன்பான கர்த்தரே, என் மனதில் கட்டளைகளை வைக்கும் முன் வரை நல்லவனாக இருந்தேன். சட்டத்தை நன்றாகக் கடைப்பிடிக்கிறேன் என்று உறுதியாக இருந்தேன். ஆனால் இப்போது அன்றாடம் பாவம் செய்திருப்பதாக உணருகிறேன். அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டதுபோல், “முன்னே நியாயப் பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.” (ரோமர் 7:9) நான் இயேசுவை விசுவாசித்த போதிலும் பாவியாகவே இருந்தேன்.”
உன்னுடைய சொந்தப் பாவங்களே வேத வாக்கின் படி நீ வாழ்வதிலிருந்து உன்னைத் தடுக்கின்றன. கர்த்தர் உன் பாவங்களை அங்கே எழுதியிருப்பதால், நீ ஜெபிக்கும் பொருட்டு தலை வணங்கும்போது, உன் எல்லாப் பாவங்களும் வெளிப்படும். “ஆச்சரியம்! நீ செய்த பாவம் நானே.”
“இரண்டு வருடங்களுக்கு முன் உன்னிலிருந்து விடுதலைப் பெற்றேனே. திடீரென்று நீ எப்படி மீண்டும் வந்தாய்? நீ ஏன் ஒழிந்து போகவில்லை?”
ஓ, இப்படியிருக்காது! நான் உன் இதயத்தில் பதிந்துள்ளேன். நீ என்ன நினைத்தாலும் சரி, நீ இன்னும் பாவியாகவே இருக்கிறாய்.”
“இல்லை! இல்லை!”
ஆகவே, இரண்டு வருடங்களுக்கு முன்பு செய்த பாவத்திற்காக அந்த பாவி மீண்டும் மனம் வருந்துகிறான். “தயவு செய்து என்னை மன்னியும், கர்த்தரே. நான் முன்பு செய்த பாவங்களினாலே இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என் பாவங்களுக்காக மனம் கசந்து அழுதேன். ஆனால் இன்னும் அவை என்னுள் இருக்கின்றன. தயவு செய்து என்னை மன்னியும், நான் பாவஞ் செய்தேன்.”
இப்படி மனங்கசந்து அழுவதால் அப்பாவங்கள் போய்விடுமா? மக்களின் பாவங்கள் அவர்கள் இருதயத்தில் எழுதப்பட்டுள்ளபடியால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகியவை இல்லாமல் அவற்றை அழிக்கமுடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மட்டுமே உண்மையில் பாவ விடுதலை பெற முடியும். இயேசுவின் உண்மை நற்செய்தியை நாம் விசுவாசிப்பதன் மூலமே நாம் இரட்சிக்கப்படமுடியும்.
நானே உன் இரட்சகர்
புதிய உடன்படிக்கைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
அதனை நம் இருதயத்தில் நம்பி உலகமெல்லாம் அது குறித்து பிரசங்கிக்க வேண்டும்.
பரலோகத்திலுள்ள நம் கர்த்தர் புதிய உடன்படிக்கை ஒன்றினை நம்முடன் செய்தார். “நான் உன் இரட்சகராய் இருப்பேன், நீர் மற்றும் இரத்தத்தின் மூலமாக உன்னை இவ்வுலகின் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலயாக்குவேன். என்னை விசுவாசிப்போரை நிச்சயமாக ஆசீர்வதிப்பேன்.”
கர்த்தரின் இந்த புதிய உடன்படிக்கையை நம்புகிறாயா? நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும், இரட்சிப்படையலாம். மறுபடியும் பிறக்கலாம். அதற்கு நாம் நீர் மற்றும் ஆவியினால் கிட்டும் அவர் இரட்சிப்பையும், அவரின் சத்திய உடன்படிக்கையயும் விசுவாசிக்கவேண்டும்.
ஒரு வைத்தியர் நம் நோயை சரியாக கண்டுபிடிக்கவில்லையென்றால் அவரை நம்பமாட்டோம். ஒரு வைத்தியர் முதலில் தன் நோயாளியின் நோயைக் கண்டுபிடித்து அதற்கு சரியான மருந்தைக் கொடுக்கவேண்டும். அங்கே அநேக வகையான மருந்துகள் இருக்கின்றன. ஆனால் எதைப் பயன்படுத்துவது என்று மருத்துவருக்கு தெரிந்திருக்கவேண்டும். ஒருமுறை மருத்துவர் அவன்/அவள் நோயைக் கண்டுபிடித்துவிட்டால் அங்கே அநேக மருந்துகள் அவர்களைக் குணப்படுத்த உள்ளன. ஆனால் தவறான கண்டுபிடிப்பினால் எல்லா வகையான நல்ல மருந்துகளும் நோயாளியின் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.
அதுபோல, நீ இயேசுவை விசுவாசிக்கும்போது வேதவாக்கின் மூலம் உன் ஆவியின் நிலைமையை சரியாக கண்டு பிடிக்க வேண்டும். வேதவாக்கின் மூலம் உன் ஆவியை பரிசோதித்தால் அதன் சரியான நிலை உனக்குத் தெரியவரும். ஆவிகளின் மருத்துவர் யாரையும் தள்ளிவிடாது, எல்லோரையும் குண்மாக்குகிறார். அவர்கள் எல்லாம் மறுபடியும் பிறக்கமுடியும்.
“நான் பாவ விடுதலை பெற்றுள்ளேனா என்று எனக்குத் தெரியவில்லையே” என்று நீங்கள் கூறினால் அதன் பொருள் நீங்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. ஒரு போதகர் இயேசுவின் உண்மைச் சீடராக இருந்தால் அவர் தம்மை பின்பற்றுவோரின் பாவப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்களுக்கு உதவ வேண்டும். பிறகு அவர்களுடைய விசுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி செய்து, ஆவியில் அவர்களை வழி நடத்துவார். அவரால் தம்மைப் பின் பற்றுவோரின் ஆவிக்குரிய நிலையை சரியாக அறிந்துகொள்ள இயலவேண்டும்.
இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போடும்படி இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் வந்து ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்தார். அவர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைக் கொடுத்தபோது உன் பாவங்களை மட்டும் விட்டுவிட்டாரா? நீர் மற்றும் ஆவியின் வார்த்தை எல்லா விசுவசிகளின் பாவத்தையும் கழுவிப்போடுகிறது.
நற்செய்தியானது டைனமைட் போன்றது. அது உயர்ந்த கட்டிடங்களிலிருந்து மலைகள் வரை எல்லாவற்றையும் தகர்த்து விடுகிறது. இயேசுவின் செய்கையும் இதற்கொப்பானது. அவர் தம்மை நம்புவோரின் எல்லாப் பாவங்களையும் அவரின் நற்செய்தியான நீர் மற்றும் ஆவியின் மூலமாக அழித்தார். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து வேதாகமம் கூறியுள்ளபடி பார்ப்போமாக.
பழைய ஏற்பாட்டில் கை வைப்பதான நற்செய்தி
பழைய ஏற்பாட்டின்படி கை வைப்பதற்கான காரணம் என்ன?
பாவங்களை பாவ பலிகளின்மீது சுமத்துவதே அதன் காரணம்.
லேவியராகமம் 1:3-4 இல் நற்செய்தியாகிய பாவ விடுதலையின் சத்தியத்தைப் பார்ப்போமாக. “அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சன்னதியில் தான் அங்கீகரிக்கப்படும்படி அவன் அதை ஆசரிப்புக் கூடார வாசலில் கொண்டுவந்து, அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப்படுபடி தன் கையை அதின் தலையின் மேல் வைத்து.”
இந்த வசனங்கள் கூறுவதாவது, தகனப்பலிகள் ஆசரிப்புக்கூடார வாசலில், கர்த்தருக்கு முன்பாக, பலிகளின் தலை மீது கை வைத்து பலி செலுத்தவேண்டும். அப்பலி மிருகங்கள் உயிருடனும், எந்த ஒரு களங்கமும் இல்லாமல் இருக்கவேண்டும்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு பாவி, தம் அன்றாட பாவங்களிலிருந்து விடுதலை பெறும்பொருட்டு தன் கைகளை பலி மிருகத்தின் தலையில் வைத்தான். கர்த்தருக்கு முன் பாவ பலியாக அதனைக் கொன்றான். ஆசாரியன் அதன் இரத்தத்தை எடுத்து, தகன பலி பீடத்தின் மேலுள்ள கொம்புகளில் அதையிட்டான். அதன்பிறகு மீதியான இரத்தத்தை பலி பீடத்தரையில் கொட்டினான். இவற்றினால் அப்பாவி தன் அன்றாட பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றான்.
ஒரு வருடத்திற்கான பாவத்தைக் குறித்து லேவியராகமம் 16:6-10 இல் எழுதப்பட்டுள்ளது. “பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவ நிவர்த்தி செய்யும்படிக்கு தன்னுடைய பாவ நிவாரண பலியின் காளையைச் சேரப்பண்ணி அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டு வந்து, ஆசரிப்புகூடார வாசலிலே கர்த்தருடைய சன்னதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் குறித்து கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக் கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவை பாவ நிவாரண பலியாக சேரப்பண்ணி, போக்காடாக விடப்பட சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவை, அதைக் கொண்டு பாவ நிவர்த்தி உண்டாக்கவும், அதை போக்காடாக வனாந்திரத்திலே போக விடவும், கர்த்தருடைய சன்னதியில் உயிரோடே நிறுத்தி,” வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல், போக்காடு என்பதன் பொருள் “வெளியில் போடுவதற்காக.” ஆகவே, அவ்வருடத்தின் பாவங்கள் ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே மன்னிக்கப்பட்டது.
லேவியராகமம் 16:29-30 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைபடுத்துவதுமன்றி ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக் கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவ நிவர்த்தி செய்யப்படும்.”
இஸ்ரவேலர்கள் ஒரு வருடத்தின் பாவங்களுக்காக பாவ நிவர்த்தி செய்த நாள் இதுவாகும். இதனை எப்படிச் செய்வது? முதலாவதாக தலைமை ஆசரியனான ஆரோன் அங்கிருக்கவேண்டும். இஸ்ரவேல் மக்களுக்கு பிரதிநிதியாக இருந்தது யார்? ஆரோன். கர்த்தர் ஆரோனையும் அவன் சந்ததியாரையும் தலைமை ஆசாரியர்களாக நியமித்தார்.
ஆரோன் தானும் தன் குடும்பத்தாரும் பாவ நிவர்த்தி பெறும்பொருட்டு காளையைப் பலி கொடுத்தான். அவன் காளையைக் கொன்று அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை கிருபாசனம் முன்பு ஏழுமுறை தெளித்தான். முதலில் அவனும் அவன் குடும்பத்தாரும் பாவ நிவர்த்தி செய்யவேண்டியிருந்தது.
பாவ நிவர்த்தி என்பது ஒருவனின் பாவங்களை பலிமீது சுமத்தி பலி மிருகத்தை அவனுக்காக கொல்லுவதாகும். பாவியே சாகவேண்டியவன். ஆனால் அதற்கு நிவர்த்தியாக அவன் பாவங்களை பலி மீது செலுத்தி அதைக் கொல்கிறான்.
தன் பாவங்களையும் அவன் குடும்பத்தார் பாவங்களையும் கழுவிய பின் கர்த்தருக்கு முன் ஒரு ஆட்டை பலியாகவும், மற்றதை வனாந்திரத்திலே போக்காடாகவும், இஸ்ரவேல் மக்கள் முன் செய்தான்.
ஒரு ஆடு பாவப்பலியாக பலி கொடுக்கப்பட்டது. ஆரோன் தன் கையை பலியாட்டின் தலை மீது வைத்து அறிக்கைச் செய்தான். “ஓ கர்த்தரே, உம்முடைய இஸ்ரவேல் மக்கள் பத்துக் கட்டளைகளையும், 613 சட்டங்களையும் கடைப்பிடிக்கத் தவறினார்கள். இஸ்ரவேலர்கள் பாவிகளானார்கள். நான் இப்போது இந்த ஆட்டின்மீது கடந்த வருட பாவங்களையெல்லாம் சுமத்தும் நிமித்தம் கை வைக்கிறேன்.”
அவன் ஆட்டின் கழுத்தை வெட்டி, ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள மகா பரிசுத்த இடத்திற்கு இரத்தத்துடன் சென்றான். அங்கு சிறிது இரத்தத்தைக் கிருபாசனம் மீதும், அதன் முன்பும் ஏழு முறை தெளித்தான்.
மகா பரிசுத்த இடத்திற்குள் உடன்படிக்கையின் பெட்டி இருக்கிறது. அதன் உரையானது கிருபாசனம் என்றழைக்கப்படுகிறது. அதனுள் இரண்டு கற்பலகைகளில் பத்து கட்டளைகளும், ஒரு தங்க பாத்திரத்தில் மன்னாவும், ஆரோனின் கோலும் இருந்தன.
ஆரோனின் கோல் உயிரோடு எழும்பியதைக் குறிக்கிறது. இரண்டு கற்பலகைகள் கர்த்தரின் நீதியையும், தங்கப் பாத்திரத்திலுள்ள மன்னா அவர் ஜீவ வார்த்தைகளையும் குறிப்பிடுகின்றன.
உடன்படிக்கைப் பெட்டியின் மீது உறை ஒன்றிருந்தது. இரத்தம் கிருபாசனத்தின் முன் ஏழு தரம் தெளிக்கப்பட்டது. தலைமை ஆசாரியனின் ஆடையின் கரையில் தங்க மணிகள் பிணையப் பட்டிருந்ததால், அவன் இரத்தத்தை தெளிக்கும்போது அவை ஔசை எழுப்பின.
லேவியராகமம் 16:14-15 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன். பின்பு ஜனத்தினுடைய பாவ நிவாரணப்பலியான வெள்ளாட்டுக் கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாக கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்தது போல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து.”
ஒவ்வொரு முறை அவன் இரத்தத்தைத் தெளிக்கும்போதும், மணிகள் ஓசை எழுப்பின. வெளியே கூடி இருந்த அனைத்து இஸ்ரவேல் மக்களும் அதனைக் கேட்க கூடியதாக இருந்தது. அவர்களுடைய பாவங்களுக்கு தலைமை ஆசாரியனே பாவ நிவர்த்தி செய்யவேண்டியிருந்ததால், இந்த மணியோசையின் பொருள் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதாம். அது இஸ்ரவேல் மக்களுக்கான ஆசீர்வாதமான ஓசையாக இருந்தது.
மணிகள் ஏழுதரம் ஒலித்தபோது, அவர்கள் கூறினார்கள் “நான் விடுவிக்கப்பட்டேன். முழுவருட பாவங்களை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்பொழுது விடுதலையாகிவிட்டேன்” மக்கள் தம் வாழ்க்கைக்கு மீண்டும் போயினர். குற்ற உணர்ச்சி இல்லாது சென்றனர். அந்த மணிகளின் ஓசையைப் போன்றதே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பது.
நாம் நீர் மற்றும் ஆவியின் நற்செய்தியாகிய பாவ விடுதலையைக் கேட்டு அதனை இதயப்பூர்வமாக விசுவாசித்து, வாயினால் அறிக்கைச் செய்தால், இதுவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி குறித்த விவரமாகும். மணி ஏழுதரம் ஒலி எழுப்பியபோது, இஸ்ரவேலர்களின் வருட பாவங்கள் கழுவப் பட்டன. அவர்கள் பாவங்கள் கர்த்தருக்கு முன்பாக கழுவப்பட்டன.
இஸ்ரவேலர்களுக்காக ஒரு ஆட்டை பலியிட்டபின், தலைமை ஆசாரியன் மற்ற ஆட்டை எடுத்துக்கொண்டு ஆசரிப்புகூடாரத்திற்கு வெளியே காத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் சென்றான். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் தலைமை ஆசாரியனான ஆரோன் தன் கைகளை அந்த ஆட்டின் தலைமீது வைத்தான்.
லேவியராகமம் 16:21-22 இல் “அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடக்கடவன். அந்த வெள்ளாட்டுக்கடா, அவர்களுடைய அக்கிரமங்களை எல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.”
தலைமை ஆசாரியனான ஆரோன், தன் கைகளை மற்ற ஆட்டின் (போக்காடு) தலைமீது வைத்து கர்த்தர் முன்பாக இஸ்ரவேலர்களின் பாவங்களை அறிக்கைச் செய்தான். “ஓ, கர்த்தரே, இஸ்ரவேலர்கள் உமக்கு முன்பாக பாவம் செய்தார்கள். நாம் பத்து கட்டளைகளையும் 613 சட்டப்பிரிவுகளையும் பின் பற்றவில்லை. ஓ கர்த்தரே, நான் இஸ்ரவேல் மக்களின் வருட பாவத்தை இந்த ஆட்டின் தலைமீது சுமத்துகிறேன்.”
எரேமியா 17:1 ஐப் பொருத்தவரையில் பாவங்கள் இரண்டு இடங்களில் பதிந்திருக்கின்றன. ஒன்று செய்கையின் புத்தகத்திலும் மற்றது இதயப் பலகையிலுமாகும்.
ஆகவே மக்கள் பாவ விடுதலைப் பெறவேண்டுமானால், அவர்கள் பாவங்கள் செய்கையின் புத்தகத்திலிருந்தும், இருதயப்பலகயிலிருந்தும் அழிக்கப்பட வேண்டியதாயிருந்தது. பாவ விடுதலைத் தினத்தில் ஒரு ஆடு நியாயத்தீர்ப்பு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பாவத்திற்காகவும் மற்றது இருதயப்பலகையில் வரையப்பட்டுள்ள பாவங்களுக்குமாகும்.
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் ஏன் பலியிடும் முறையை இஸ்ரவேலர்களுக்கு நியமித்தார்?
ஒரு இரட்சகர் ஒரே முறையில் பொருந்ததக்க வகையில் அவர்கள் பாவங்களை துடைத்தெடுப்பார் என்பதற்காகவே.
தன் கைகளை ஆட்டின் தலைமீது வைத்ததன்மூலம், தலைமை ஆசாரியன் மக்களுக்கு, அவர்கள் வருடாந்திர பாவங்கள் அந்த ஆட்டின் மீது சுமத்தப்பட்டதை உணர்த்தினான். ஆட்டின் தலையில் பாவங்கள் சுமத்தப்பட்டவுடன் பொருத்தமான ஒருவன் அந்த ஆட்டை வனாந்திரத்திற்கு கூட்டிச் சென்றான்.
பாலஸ்தீனம் பாலைவனத்திலான நிலமாகும். இஸ்ரவேல் மக்களின் பாவங்கள் சுமத்தப்பட்ட ஆடானது இதனைச் செய்வதற்கென்றே நியமிக்கப்பட்ட ஒருவனால், நீரோ, புல்லோ இல்லாத பாலைவனத்திற்குள் வழி நடத்தப்பட்டது. மக்கள் எழுந்து நின்று போக்காடானது வனாந்திரத்திற்குள்ளே போவதைப் பார்த்தார்கள்.
அவர்கள் தமக்குள் கூறிக்கொண்டார்கள். “நான் செத்திருக்க வேண்டியவன். ஆனால் என்னுடைய பாவங்களுக்காய் இந்த ஆடு சாகிறது. பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் எனக்கு பதிலாக இந்த ஆடு சாகிறது. ஆடே, உனக்கு நன்றிகள். உன்னுடைய சாவின் பொருள் நான் ஜீவித்திருப்பது” அந்த ஆடு பாலைவனத்திற்குள் கொண்டுச் செல்லப்பட்டது. இஸ்ரவேலர்கள் ஒரு வருடம் செய்த பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டார்கள்.
உன் இருதயத்திலுள்ள பாவங்கள் பாவ பலியில் இடமாற்றம் செய்யப்பட்டதால், நீ சுத்தமானாய். அது அத்தனை இலகுவானது. உண்மையை நாம் புரிந்துகொண்டால் அது வெகு இலகுவானது.
அந்த ஆடு தொடுவானத்தில் காணாமற்போயிற்று. அதனை விடுவித்தபின் அவன் தனியாக திரும்பி வந்தான். இஸ்ரவேலரின் ஔராண்டு பாவம் முழுவதும் போயிற்று. அந்த ஆடு வனாந்தரத்திலே, நீர், புல், ஆகியவையின்றி அலைந்தது. அத்துடன் இஸ்ரவேலர்களின் ஔராண்டு பாவங்களுடன் அந்த ஆடு மரித்தது.
பாவத்தின் சம்பளம் மரணம். கர்த்தரின் நீதி நிறைவேற்றப்பட்டது. கர்த்தர் இஸ்ரவேலர்கள் ஜீவித்திருக்கும்படியாக அந்த ஆட்டை பலியிட்டார். இஸ்ரவேலர்களின் இந்த ஆண்டின் எல்லா மீறுதல்களும் தெளிவாகக் கழுவப்பட்டன.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு நாளின் பாவமும் ஒரு வருடத்தின் பாவமும் இவ்வாறாக கழுவப்பட்டதைப் போன்று கர்த்தரின் உடன்படிக்கைப்படி நம் பாவங்கள் ஒரே தரம் மன்னிக்கப்பட வேண்டியதாய் இருந்தது. அவர் மேசியாவை உலகிற்கு அனுப்பி நம் ஜீவிய பாவங்கள் அனைத்தையும் கழுவுவதாக புதிய உடன்படிக்கைச் செய்தார். இந்த உடன்படிக்கை இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் செயல் படுத்தப்பட்டது.
புதிய ஏற்பாட்டின் படி நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறத்தல்
இயேசு ஏன் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார்?
நீதியை நிறைவேற்றுவதற்காக உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கவும்; பழைய ஏற்பாட்டின் பலியின் தலையில் கை வைப்பதுபோல் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானம் அமைந்தது.
மத்தேயு 3:13-15 ஐ வாசிப்போமாக. “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைச் செய்து; நான் உம்மாலே ஞானஸநானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.”
இயேசு யோர்தானுக்குச் சென்றார். அங்கு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். இதன் மூலம் நீதியை நிறைவேற்றினார். அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் பெரியவன்.
மத்தேயு 11:11-12 கூறுகிறது. “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; யோவான் ஸ்நானன் காலமுதல் இது வரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது.”
கர்த்தரால் யோவான் ஸ்நானன் மனித குலப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கிறிஸ்துவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்டான். அவன் ஆரோனின் சந்ததியினனும் கடைசித் தலைமை ஆசாரியனுமாவான்.
இயேசு தன்னிடம் வருகிறதைக் கண்டு, யோவான் ஸ்நானன், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?” என்றான்.
“இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” அவருடைய நோக்கம் மனித குலத்தைப் பாவத்திலிருந்து விடுதலை செய்து அவர்களை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றுவதாயிருந்தது. இயேசு யோவானிடம் கூறினார். “நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கும் நற்செய்தியை நாம் நிறைவேற்றவேண்டும். ஆகவே, எனக்கு இப்போது ஞானஸ்நானம் செய்.”
யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். இயேசு உலகின் பாவங்களை எல்லாம் சுமந்து தீர்க்க அது பொருத்தமாக இருந்தது. அவர் மிகவும் பொருத்தமான முறையில் ஞானஸ்நானம் பெற்றதால் நாமும் முறைப்படி நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். நம் பாவங்கள் அனைத்தையும் தம் மீது ஏற்கும்படியாக இயேசு ஞானஸ்நானம் பெற்றார்.
இயேசு இவ்வுலகில் பிறந்து அவர் ஞானஸ்நானம் பெறும்போது அவரின் வயது 30. இது அவரின் முதல் இறைப்பணியாகும். உலகின் எல்லாப் பாவங்களையும் துடைத்ததன் மூலம் நீதியை நிறைவேற்றி மக்களை பரிசுத்தமாக்கினார்.
இயேசு இவ்வுலகிற்கு வந்து நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் பொருட்டு மிகவும் பொருந்ததக்க வகையில் ஞானஸ்நானம் பெற்றார். “இதனால்” எல்லா நீதிகளும் நிறைவேறின.
கர்த்தர் கூறினார், “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாய் இருக்கிறேன்” (மத்தேயு 3:17) இயேசுகிறிஸ்துவுக்கு தாம் மனித குலத்தின் பாவங்களைச் சுமக்கப் போவதும் சிலுவையில் இரத்தஞ்சிந்தி மரிக்கப்போவதும் தெரிந்திருந்தாலும் அவர் தம் தந்தையின் சித்தத்திற்கு “என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (மத்தேயு 26:39) என்றார். தந்தையின் சித்தம் மக்களின் சகல பாவங்களையும் கழுவி உலக மக்களுக்கு இரட்சிப்பை அருளுவதாக இருந்தது.
ஆகவே, இயேசு, கீழ்ப்படிதலுள்ள மகனாக, தன் தந்தையின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார்.
யோவான் 1:29 “மறுநாளிலே இயேசுவை தன்னிடத்திலே வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” இயேசு உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து கொல்கொதா மலைமீது சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” என்று யோவான் ஸ்நானன் சாட்சி கொடுக்கிறான்.
உன்னிடம் பாவமிருக்கிறதா? இல்லையா? நீ நீதிமானா? அல்லது பாவியா? உண்மை யாதெனில் இயேசு நம் பாவங்கள் அனைத்தையும் ஏற்று நம் அனைவருக்காகவும் சிலுவையில் அறையப்பட்டார்.
இவ்வுலகின் பாவங்கள் யாவும் எப்போது இயேசு மீது சுமத்தப்பட்டது?
யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசு நம் பாவங்களை ஏற்றுக்கொண்டார்.
நாம் இந்த பூமியில் பிறந்தபிறகு 1 முதல் 10 வயது வரையிலும் கூட பாவஞ்செய்கிறோம். இயேசு அந்தப் பாவங்களை எடுத்துப்போட்டார். நாம் 11 முதல் 20 வயதிலும் கூட பாவஞ்செய்கிறோம். நம் இதயத்தில் செய்த பாவங்கள், நம் செய்கைகளினால் செய்த பாவங்கள், இவையனைத்தையும் அவர் எடுத்துப்போட்டார்.
நாம் 21 முதல் 45 வயது வரை கூட பாவஞ்செய்கிறோம். இயேசு அதையும் எடுத்துப்போட்டார். உலகின் எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு, சிலுவையில் அறையப்பட்டார். நாம் பிறந்த நாள் முதல் மரண பரியந்தமும் பாவஞ்செய்கிறோம். ஆனால் அவர் அவையாவற்றையும் எடுத்துப்போட்டார்.
“இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” எல்லாப் பாவங்களையும், ஆதாம் தொடங்கி முதல் மனிதன் முதல், உலகின் கடைசி மனிதன் வரை - எல்லாப் பாவங்களையும் அவர் சுமந்து தீர்த்தார். அவர் யாருடைய பாவத்தைச் சுமப்பது என்று தெரிந்தெடுக்கவில்லை.
நம்மில் சிலரை மட்டுமே நேசிக்க அவர் தீர்மானிக்கவில்லை. அவர் மாமிசமாக இவ்வுலகிற்கு வந்து, எல்லாப் பாவங்களையும் தம் மீது சுமந்து சிலுவையில் அறையப்பட்டார். நம் எல்லாருக்காகவும் நியாயம் தீர்க்கப்பட்டு உலகின் பாவங்களை நிரந்தரமாக துடைத்தார்.
அவரின் இரட்சிப்பிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. “உலகின் எல்லா பாவங்களையும்” என்பதில் நம் பாவங்களும் அடங்கும். இயேசு அவற்றை எடுத்துப்போட்டார்.
அவருடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் துப்புரவாக்கினார். தம் ஞானஸ்நானத்தின் மூலம் அவைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக சிலுவையில் தீர்க்கப்பட்டார். இயேசு சிலுவையில் மரிக்கும் முன்பு “ முடிந்தது” (யோவான் 19:30), என்று கூறியதன் பொருள் மனிதர்களின் இரட்சிப்பு முழுமையடைந்தது என்பதாகும்.
இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? மாமிசத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. இரத்தம் ஒருவனை பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறது. (லேவியராகமம் 17:11) இயேசு ஏன் ஞானஸ்நானம் பெறவேண்டும். ஏனெனில் உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொள்ள அவர் விரும்பினார்.
“அதன் பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: ‘தாகமாயிருக்கிறேன்` என்றார்” (யோவான் 19:28). பழைய ஏற்பாட்டில் கர்த்தர் செய்த உடன்படிக்கைகள், யோர்தான் நதியில் தம் ஞானஸ்நானம் மூலமும், சிலுவை மரணத்தாலும், நிறைவேறிற்று என்று கண்டு இயேசு மரித்தார்.
பாவ மன்னிப்பு அவர் மூலம் நிறைவேற்றப்பட்டது என்று உணர்ந்து “எல்லாம் முடிந்தது” என்றார். அவர் சிலுவையில் மரித்தார். அவர் நம்மை பரிசுத்தர்களாக்கினார். மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிரோடெழும்பினார், பரலோகத்திற்கு ஏரிச்சென்றார். அங்கு இப்போது கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் மூலம் அனைத்துப் பாவங்களும் கழுவப்படுதலே ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறத்தல் ஆகும். அதனை விசுவாசி. உன் பாவங்கள் அனைத்தும் உனக்கு மன்னிக்கப்படும்.
தினமும் மனம் வருந்தி அழுவதால், நம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெறமுடியாது. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் மூலம் ஒரே தரம் பாவ மன்னிப்பு ஈயப்பட்டது. கூறுகிறது, “இவைகள் மன்னிக்கபட்டதுண்டானால், இனிப் பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.” (எபிரெயர் 10:18).
இப்பொழுது நாம் செய்யவேண்டியதெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் மூலம் பாவ மன்னிப்பு உண்டாயிருக்கிறது என்று விசுவாசிப்பதே. இதனை நம்பி இரட்சிக்கப்படு.
ரோமர் 5:1-2 கூறுகிறது, “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற படியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர் மூலமாய் நாம் இந்த கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலை கொண்டிருந்து, தேவ மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம்.”
நாம் ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புவதைத் தவிர வேறு நியாயமான வழிகள் இல்லை.
கர்த்தரின் சட்டம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
சட்டத்தினால் பரிசுத்தமடைய முடியுமா?
இல்லை. நம்மால் முடியாது. சட்டம் பாவம் குறித்து நமக்கு அறிவுறுத்துகிறது.
எபிரெயர் 10:9 இல் இவ்வாறு எழுதப் பட்டுள்ளது, “தேவனே; உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.” சட்டத்தினால் நாம் பரிசுத்தனாகமுடியாது. அது நம்மை பாவியாக்கும்.
ரோமர்3:20 கூறுகிறது, “பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்” ஆபிரகாமுடன் கர்த்தர் உடன்படிக்கைச் செய்து 430 வருடங்களுக்கு பிறகு மோசே மூலமாக கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு சட்டங்களை வழங்கினார். அதனைக் கொடுத்ததற்கு முக்கியமான காரணம், இஸ்ரவேலர்கள் கர்த்தருக்கு முன் எது பாவம் என்று அறிந்துகொள்வதற்காகவே. கர்த்தரின் சட்டம் இல்லையென்றால் மனிதர்களுக்கு பாவத்தைப்பற்றி எந்த அறிவும் இருந்திருக்காது. கர்த்தர் நமக்கு சட்டத்தைக் கொடுத்தபடியால் பாவத்தைப் பற்றி புரிந்து கொள்கிறோம்.
சட்டத்தின் ஒரே நோக்கம், கர்த்தர் முன் நாம் பாவிகள் என்று நமக்கு அறிவுறுத்துவதே. இந்த அறிவு மூலம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் மறுபடியும் பிறந்து இயேசுவினிடம் திரும்பி வர வேண்டும். இந்நோக்கம் பற்றியே கர்த்தர் சட்டத்தை நமக்குத் தந்தருளினார்.
கர்த்தரின் சித்தம் செய்யவே இயேசு வந்தார்
கர்த்தர் முன்பு நாம் என்ன செய்யவேண்டும்?
இயேசுவின் மூலமாக கர்த்தரின் பாவ மன்னிப்பை விசுவாசிக்கவேண்டும்.
“தேவனே; உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.” (எபிரெயர் 10:9) சட்டத்தினால் முற்றிலுமாக நாம் பரிசுத்தமாக முடியாது என்பதால் கர்த்தர் நம்மைச் சட்டத்தின் மூலமாக விடுதலைச் செய்யாமல் அவரின் முழுமையான பாவ மன்னிப்பு மூலம் பரிசுத்தமாக்கினார். கர்த்தர் நம்மை தம் அன்பினாலும் நீதியினாலும் இரட்சித்தார்.
“இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அன்றியும் எந்த ஆசாரியனும் நாடோரும் ஆராதனைச் செய்கிறவனாயும், பாவங்களை ஒரு காலும் நிவர்த்திச் செய்யக்கூடாத ஒரே வித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ பாவங்களுக்கு ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து.” (எபிரெயர் 10:10-12)
இயேசு கர்த்தரின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். ஏனெனில் அவரின் பாவ மன்னிப்புக்கான செய்கை முடிவடைந்தது. அவர் செய்யவேண்டியது வேறு எதுவும் இல்லை. அவர் மீண்டும் ஞானஸ்நானம் பெறப்போவதுமில்லை. மீண்டும் தம்மைப் பலியாகக் கொடுக்கப் போவதுமில்லை.
இப்பொழுது உலகின் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டுவிட்டன. அவர் செய்யவேண்டியதெல்லாம் தம்மை நம்புவோருக்கு நித்திய ஜீவனை அளிப்பது மட்டுமே. தம் ஆவியின் மூலம், நீர் மற்றும் ஆவியளிக்கும் இரட்சிப்பை விசுவாசிப்போரை தம் முத்திரை பதித்து காக்கிறார்.
இயேசு இவ்வுலகிற்கு வந்தார். உலகின் எல்லா பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார். சிலுவயில் மரித்தார். இந்தப்படியாக அவர் தம் செய்கையை நிறைவேற்றினார். இப்பொழுது இயேசுவின் செய்கை முடிந்தது. அவர் கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
இயேசு நம்மை நிரந்தரமாக இரட்சித்ததை நாம் விசுவாசிக்கவேண்டும்.
கர்த்தரின் பகைவரானோர்
கர்த்தரின் பகைவர் யார்?
இயேசுவை விசுவாசித்தபோதிலும் தன் இருதயத்தில் பாவமுள்ளவன்.
எபிரெயர் 10:12-13 இல் கர்த்தர் கூறுகிறார். “இவரோ பாவங்களுக்கு ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.” அவர் அவர்களுடைய கடைசி தீர்ப்புவரை காத்துக்கொண்டிருப்பதாக கூறுகிறார்.
அவருடைய பகைவர்கள் இன்னும் கூறுகிறார்கள் “கர்த்தரே தயவுசெய்து என்னுடைய பாவங்களை மன்னியும்” சாத்தானும் அவனைப் பின்பற்றுவோரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் அவரிடம் தொடர்ந்து பாவ மன்னிப்பு கேட்டுவருகின்றனர்.
நம் கர்த்தராகிய தேவன் அவர்களை இப்போது நியாயந்தீர்க்கப் போவதில்லை. ஆனால் அவர் இரண்டாம் முறை வரும் அந்நாளிலே அவர்கள் தீர்க்கப்பட்டு நித்திய நரகாக்கினை அடைவார்கள். அவர்கள் மனம் திருந்தி பாவ மன்னிப்பு மூலம் நீதிமான்கள் ஆவார்கள் என்று கர்த்தர் அவர்கள் மீது பொறுமையாக, அந்நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் சுமந்து தீர்த்தார். அவரை நம்பும் நமக்காய் மரித்தார். என்றாவது ஒரு நாள் தம்மை விசுவாசித்தவர்களை அழைத்துக்கொள்ளும் படியாக அவர் இரண்டாம் முறை தோன்றுவார். “ஓ, தயவுசெய்து சீக்கிரம் வாரும், கர்த்தரே!” பாவமற்றவர்களை நிரந்தரமாக தம்முடன் பரலோக ராஜ்ஜியத்தில் வாழ வைக்கும்பொருட்டு இரண்டாம் முறை வந்து எடுத்துக்கொள்வார்.
தம்மைப் பாவிகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், இயேசுவின் இரண்டாம் வருகையின்போது பரலோகத்தில் தமக்கு இடமில்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள். கடைசி நாளில் அவர்கள் தீர்க்கப்பட்டு எரியும் நரகத்தில் எறியப்படுவார்கள். இந்தத் தண்டனை நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறத்தலை ஏற்க மறுப்பவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
உண்மையல்லாதவைகளை நம்பிக் கொண்டிருப்பவர்களை இயேசு தம் பகைவர்களாக கருதுகிறார். அதனாலே இந்தப் பொய்களுடன் நாம் போரிடவேண்டியவர்களாக இருக்கிறோம். அதனாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதை நாம் விசுவாசிக்கவேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்
நம்முடைய கடன்கள் எல்லாம் (பாவங்கள்) முழுவதுமாக செலுத்தித் தீர்த்தபிறகும் நம் பாவங்களுக்கு விடுதலை பெறவேண்டுமா?
இல்லை. இல்லவே இல்லை.
எபிரெயர் 10:15-16 கூறுகிறது. “இதைக் குறித்து பரிசுத்த ஆவியானவரும் நமக்கு சாட்சி சொல்கிறார்; எப்படியெனில்; அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் ஏழுதுவேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்பதை உரைத்த பின்பு.”
நம் பாவங்கள் யாவற்றையும் துடைத்த பின்பு அவர் கூறினார். “நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது” இந்த உடன்படிக்கை என்ன? “நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்” முதலில் நாம் சட்டப்படி மரபுசார்ந்த வாழ்க்கை வாழ முயற்சித்தோம். ஆனால் சட்டத்தினால் நாம் இரட்சிப்படையவில்லை.
பிறகு ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதை இதயபூர்வமாக நம்பும்போது நாம் ஏற்கெனவே இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்று அறிந்தோம். யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
இயேசுவே இரட்சிப்பின் கர்த்தர். “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை” (அப்போஸ்தலர் 4:12) இயேசு இவ்வுலகிற்கு இரட்சகராக வந்தார். நம்முடைய செய்கைகளினால் நாம் இரட்சிக்கப்பட முடியாததாகையால், இயேசு நம்மை இரட்சித்து அதனை நம் இதயப் பலகைகளில், தம்முடைய இரட்சிப்பின் சட்டத்தினாலும், அன்பினாலும் இரட்சித்ததாக எழுதியுள்ளார்.
“அவர்களுடைய பாவங்களையும், அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனி பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.” (எபிரெயர் 10:17-18)
நம்முடைய அக்கிரமங்களை அவர் இப்பொழுது நினைப்பதில்லை. நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். விசுவாசிகளாகிய நம்மிடம் மன்னிக்கப் படும்படியாக பாவங்கள் எதுவுமில்லை. நம்முடைய கடன்களெல்லாம் மொத்தமாக செலுத்தப்பட்டுவிட்டதால், இப்பொழுது செலுத்துவதற்கு எதுவுமில்லை. இயேசுவின் ஊழியத்தை நம்புவதன் மூலம் மக்கள் இரட்சிக்கப் பட்டார்கள். இயேசு நம்மைத் தம்முடைய ஞானஸ்நானத்தினாலும், சிலுவை இரத்தத்தாலும் இரட்சித்தார்.
இப்பொழுது நாம் செய்யவேண்டியதெல்லாம், நீரையும் இயேசுவின் இரத்தத்தையும் நம்புவதே. “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32) இயேசுவினுள் இரட்சிப்பை நம்புங்கள். மூச்சுவிடுவதைவிட பாவ மன்னிப்பு பெறுவது இலகுவானது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உள்ளவைகளையெல்லாம் உள்ளபடியே நம்புவது மட்டுமே. இரட்சிப்பு என்பது வேதவாக்கை விசுவாசிப்பதாகும்.
இயேசுவே நம் இரட்சகர் (இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம்) என்று விசுவாசி. இரட்சிப்பு உன்னுடையது என்று விசுவாசி. உன்னுடைய சொந்த யோசனைகளை கைவிட்டு இயேசுவின் இரட்சிப்பை விசுவாசி. நீங்கள் உண்மையில் இயேசுவை விசுவாசிக்கும் படியாகவும், அவருடன் நித்திய வாழ்வு வாழவும் ஜெபிக்கிறேன்.