• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 3 : நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி

[3-8] பாவ மன்னிப்பு முறையில் இயேசுவின் ஞானஸ்நானம் இன்றியமையாதது (மத்தேயு 3:13-17)

(மத்தேயு 3:13-17)
“அப்போழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைச் செய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”
 
 
யோவான் ஸ்நானனின் ஞானஸ்நானம்
 
மனம் வருந்துதல் என்றால் என்ன?
பரிசுத்தமாகும்படி பாவ வாழ்க்கையை விட்டு இயேசுவை விசுவாசித்தல்.
 
இவ்வுலகின் அநேக மக்களுக்கு இயேசு ஏன் உலகத்திற்கு வந்தார் என்றும், எதற்காக அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார் என்றும் தெரியாது. ஆகவே, இயேசுவின் ஞானஸ்நான நோக்கம் குறித்தும் அவருக்கு ஞானஸ்நானம் செய்வித்த யோவான் ஸ்நானன் குறித்தும் பார்ப்போம்.
யோர்தான் நதியில் யோவான் ஸ்நானன் எக்காரணத்தினால் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் என்று யோசிப்போம். மத்தேயு 3:1-12 இல் மக்களைத் தம் பாவங்களை அறிக்கைச் செய்யவைத்து பாவத்திலிருந்து கர்த்தரிடம் மக்களைத் திருப்புவதற்காக ஞானஸ்நானம் செய்வித்தான்.
“மனம் திரும்புதலுக்கு என்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்;” (11 ஆம் வசனம்) மற்றும் “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்: அவருக்குப் பாதைகளைச் செவ்வைப் பண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.” (3 ஆம் வசனம்) யோவான் ஸ்நானன், ஒட்டக மயிரினால் தயாரிக்கப்பட்ட ஆடையை உடுத்தி, வெட்டுக்கிளிகளைத் தின்று, வனாந்திரத்தில் கூக்குரலிட்டான். அவன் மனம் திரும்பும் ஞானஸ்நானத்தை பாவ மன்னிப்புக்கென்று பிரசங்கித்தான்.
அவன் மக்களிடம் கூக்குரலிட்டான். “மனம் திரும்பு, மனித குல இரட்சகர் வருகிறார்; அவருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள். இரட்சிப்பின் பாதையை செவ்வை பண்ணுங்கள். புற ஜாதியார்களின் தெய்வங்களை ஆராதிப்பதை நிறுத்துங்கள். கர்த்தரை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்.”
எதனிடமிருந்து திரும்புவது? சிலைகளை வணங்குவதிலிருந்தும், பாவ வாழ்க்கையின் மற்ற எல்லா கெட்ட காரியங்களிலிருந்தும் திரும்ப வேண்டும். அதற்கு நாம் என்னசெய்யவேண்டும்? நாம் பரிசுத்தமாக வேண்டுமானால் இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறவேண்டும். யோவான் ஸ்நானன் வனாந்திரத்திலே கூக்குரலிட்டான். “என்னால் ஞானஸ்நானம் பெறுங்கள். உங்கள் பாவங்களைக் கழுவிப் போடுங்கள். உங்கள் இரட்சகர், மேசியா, இவ்வுலகிற்கு வருகின்றார். பழைய ஏற்பாட்டின் பலியாட்டுக் குட்டியைப்போல், அவர் உங்கள் பாவங்களை எடுத்துப்போடுவார். உங்கள் பாவங்களை எல்லாம் கழுவுவார்.”
பழைய ஏற்பாட்டின்படி அன்றாடப் பாவங்கள் பலியின் தலைமீது கைவைப்பதால் மாற்றப்பட்டன. பாவ நிவாரண நாளில் இஸ்ரவேலினுடைய வருடத்தின் பாவங்கள் யாவும் பிரதான ஆசாரியன் ஆட்டின் தலைமீது கைவைப்பதன் மூலம் மாற்றப்பட்டன. பாவ நிவாரண நாள் ஒவ்வொரு வருடமும் ஏழாம் மாதம் பத்தாம் நாளில் வந்தது (லேவியராகமம் 16:29-31).
அதுபோல, உலகின் பாவங்களெல்லாம் இயேசுவின் மீது ஞானஸ்நானம் மூலம் ஒரே தரம் அவைகளைத் துடைத்துப்போடும்படியாக சுமத்தப்படவேண்டும். ஆகவே, யோவான் மக்களை இயேசுவிடம் திரும்பிவந்து, தன்னால் ஞானஸ்நானம் பெறும்படி வேண்டினான்.
யோவான் ஸ்நானன் செய்வித்த ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம் மனம் வருந்துதலாகும். இது இஸ்ரவேல் மக்களை பின்னால் வரப்போகும் இயேசுவிடம் அவர்களை அழைத்து வந்தது. மனம் வருந்துதல் என்பது பாவ வாழ்க்கையிலிருந்து திரும்பி தம் பாவங்கள் மன்னிக்கப்படும் படியாக மேசியாவை விசுவாசிக்க வேண்டுமென்பதே.
இஸ்ரவேல் மக்கள் தம் பாவங்களையெல்லாம் கழுவுவதற்கு வரப்போகும் மேசியாவை எதிர்பார்ப்பதால் விடுதலைப்பெற முடிந்தது. அதுபோலவே நாமும் 2000 வருடங்களுக்கு முன் பரலோகத்தில் இருந்து இறங்கி உலகின் பாவங்களையெல்லாம் கழுவிப்போட்ட இயேசுவை விசுவாசிப்பதால் பாவ விடுதலையை அடையமுடியும். ஆனால் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர்கள் கர்த்தரின் சட்டத்தைக் கைவிட்டு, தவறான பலிகளைச் செலுத்தி மேசியாவை மறந்துபோயினர்.
அவர்களுக்கு கர்த்தரின் சட்டத்தைக் குறித்து நினைவுபடுத்தவும் வரப்போகும் மேசியாவைக் குறித்து நினைவுபடுத்தவும் வேண்டியிருந்ததால், யோவான் ஸ்நானகன், மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். இப்படியாக இயேசுவுக்கும் யோர்தானில் ஞானஸ்நானங் கொடுத்தான்.
நிறைய மக்கள் யோவானிடம் வந்தார்கள். (அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்) விக்கிரகாராதனை செய்தமைக்காகவும், கர்த்தரின் கட்டளைகளைக் கைவிட்டதற்காகவும் மனம் வருந்தினார்கள். ஒரு முறையான பலியில் மூன்று இன்றியமையாத கூறுகள் உள்ளன. அவை, உயிருள்ள ஒரு மிருகம், கை வைத்தல், அதன் இரத்தம். உலகின் மக்களெல்லாம் இயேசுவை விசுவாசித்ததன் மூலம், இரட்சிக்கப்பட்டனர்.
பரிசேயரும் சதுசேயரும் ஞானஸ்நானம் பெற வந்தபோது யோவான் கூக்குரலிட்டான். “விரியன் பாம்புக் குட்டிகளே! வருங் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைக் காட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்” (மத்தேயு 3:7-9).
இந்த பரிசேயரும் சதுசேயரும், குழுக்களான அரசியல்வாதிகளும், விக்கிரகாராதனைக் காரரும், தாம் கர்த்தரின் பிள்ளைகளென்று நினைத்திருந்தனர். ஆனால் அவர்கள் கர்த்தரின் சட்டங்களை நம்பவில்லை. அவர்கள் மற்ற தெய்வங்களையும் தம் சொந்த யோசனைகளையும் நம்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் ஞானஸ்நானம் பெறும்படியாக யோவானிடம் வந்தபோது அவன் கூறினான் “தவறான பலிகளைக் கொடுக்காதீர்கள், பாவத்திலிருந்து திரும்பி மேசியா வந்து உங்கள் பாவத்தைக் கழுவுவார் என்று விசுவாசியுங்கள். இதனை உங்கள் இதயத்தில் விசுவாசியுங்கள்.
மனம் வருந்துதல் என்பது தவறான வழிகளில் இருந்து திரும்புவதாகும். உண்மையான மனம் வருந்துதல் என்பது பாவத்திலிருந்தும், தவறான நம்பிக்கைகளிலிருந்தும் இயேசுவிடம் திரும்பி வருவதாகும். அது அவரின் ஞானஸ்நானம் மூலம் விடுதலையாவதும், அவர் சிலுவையில் தீர்க்கப்படுவதை விசுவாசிப்பதுமாகும்.
இந்தப்படியாக, கர்த்தரின் சட்டத்தையும், பலியிடும் முறையையும் கைவிட்ட இஸ்ரவேல் மக்களிடம் யோவான் ஸ்நானன் அவர்களைக் கர்த்தரிடம் திருப்பும் முகமாகக் கூக்குரலிட்டான். யோவான் ஸ்நானனின் கடமை மக்களை இயேசுவிடம் திரும்ப அழைத்துவருவதாய் இருந்தது. இதனால் அவர்கள் அவரை நம்பி தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட முடியும்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் வரும் பாவ விடுதலையை விசுவாசிக்கிறாயா?
 
இயேசுவின் முன் எல்லா மனிதர்களும் என்ன செய்யவேண்டும்?
தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படும்படியாக அவரை விசுவாசிக்கவேண்டும்.
 
இயேசு தம் பொது ஊழியத்தில் முதல் செய்த காரியம் என்னவென்றால் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதேயாகும். உலகின் எல்லாப் பாவங்களும் இதன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்டது.
இப்படியாக, இயேசுவின் ஞானஸ்நானமே, மனிதர்களை கர்த்தர் இரட்சிப்பதற்கான தொடக்கமாகும். இயேசுவின் இந்த நீதியின் செயல் உலகின் பாவங்களையெல்லாம் கழுவிப்போட்டது. இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்று விசுவாசிப்போரை கர்த்தர் விடுவிக்கிறார்.
இயேசு இவ்வுலகிற்கு வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதால், பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்த நற்செய்தி தொடங்கியது. மத்தேயு 3:15 இல் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் அவரின் ஞானஸ்நானம் மூலம் பரலோக ராஜ்ஜியம் திறந்தது. அது பழைய ஏற்பாட்டில் லேவியராகமம் 1:1-5, 4:27-31 ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள பாவ விடுதலைக்கான பலிமுறையை ஒத்துள்ளது.
பழைய ஏற்பாட்டின் எல்லாவற்றிற்கும் புதிய ஏற்பாட்டில் ஜோடியுள்ளது. “கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது.” (ஏசாயா 34:16)
 
 
புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் எல்லா மனிதர்களின் பாவ விடுதலைக் குறித்து போதிக்கின்றன
 
நம்முடைய அன்றாட பாவங்களுக்கு தினமும் மனம் வருந்தவேண்டுமா?
இல்லை. உண்மையான மனம் வருந்துதல் என்பது தன் எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொண்டு பாவ விடுதலை பெறும்பொருட்டு இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு மனம் திரும்புவதாகும்.
 
பழைய ஏற்பாட்டில் அன்றாட பாவம் பலியின் தலைமீது கைவைத்ததால் பலி மீது இடமாற்றம் செய்யப்பட்டது. பாவிக்கு பதிலாக, அந்தப் பலியானது இரத்தஞ்சிந்தி, தீர்க்கப்படவேண்டும். அதேபோல வருடம் முழுவதும் சேர்ந்த பாவங்களும், கை வைப்பதன் மூலம் பாவ பலிமீது இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் எல்லா மனிதர்களும் அவ்வருட பாவங்களிலிருந்து பாவ மன்னிப்பு பெற முடிந்தது.
புதிய ஏற்பாட்டில், அது போன்றே, இயேசுகிறிஸ்து வந்து உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுகொள்வதற்காக ஞானஸ்நானம் பெற்றார். இப்படியாக பழைய ஏற்பாட்டில் கர்த்தர் தீர்க்க தரிசனம் உரைத்தது நிறைவேற்றப்பட்டது.
கர்த்தரின் சேவகனான, இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானன், இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்டவன். அவன் இயேசு இவ்வுலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்ததைச் சாட்சி கூறுகிறான். யோவான் 1:29 இல் இவ்வாறு கூறுகிறான். “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”
யோர்தான் நதியில், யோவான் ஸ்நானன், இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்ததன் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது செலுத்தினான். இவ்வழியாக, மனிதர்களின் பாவங்களை கர்த்தர் நிவர்த்தி செய்தார். நாம் இப்போது செய்யவேண்டியதெல்லாம் விசுவாசிப்பதே.
உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. அப்போஸ்தலர் 3:19 இல் இயேசுவின் சீடர்கள் கூறுகின்றனர். “ஆனபடியால் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்.”
யோவான் ஸ்நானன், இயேசுவுக்கு ஏன் ஞானஸ்நானம் செய்வித்தான், அவரைப் பின்பற்றும்படி ஏன் கூறினான்? என்று அறியுங்கள் என அவர்கள் வேண்டுகிறார்கள். அவன் கூறினான் “மனந்திரும்பி குணப்படுங்கள். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் வரும் பாவ விடுதலையை விசுவாசியுங்கள். உங்கள் பாவங்களைக் கழுவுங்கள்.”
மேசியா இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம், நம் பாவங்கள் அனைத்தையும் ஒரே தரமாக கழுவினார். உலகின் எல்லா பாவங்களும் இம்முறையில், அவர் மீது சுமத்தப்பட்டது. மத்தேயு 3:13-17 இல் எழுதப்பட்டுள்ளபடி கர்த்தரின் உடன்படிக்கை இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நிறைவேற்றப்பட்டது.
“அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”
கர்த்தரின் இரட்சிப்பை முழுமையாக்கும்படி ஞானஸ்நானம் பெறுவதற்காக இயேசு யோவானிடம் வந்தார். லூக்கா முதல் அதிகாரம் யோவானை, முதல் தலைமை ஆசாரியனான ஆரோனின் சந்ததியன் என்று கூறுகிறது. ஆரோனின் சந்ததியினனான யோவானைக் கர்த்தர் தெரிந்தெடுத்ததற்கான காரணம், எல்லா நீதிகளையும் நிறைவேற்ற மனிதர்களின் பிரதிநிதி அவருக்குத் தேவைப்பட்டது.
இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்குமுன் தலைமை ஆசாரியனின் வீட்டில் யோவானை கர்த்தர் பிறக்கச் செய்தார். வனாந்திரத்திலே கூக்குரலிட்டு யோவான் ஸ்நானன் இயேசுவின் வழியை ஆயத்தம் செய்தான். “மனந்திரும்புங்கள், விரியன் பாம்புக்குட்டிகளே! மனந்திரும்பி குணமடையுங்கள். மேசியா வருவார், அவரிற்காக மாறுங்கள், அல்லது அவர் உங்களை வெட்டி எரிகின்ற நெருப்பில் வீசுவார். அவரின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் நம்புங்கள், மனந் திரும்பி ஞானஸ்நானம் பெறுங்கள், அப்பொழுது நீங்கள் விடுவிக்கப் படுவீர்கள்.”
விடுதலை நற்செய்தி அப்போஸ்தலர் 3:19 இல் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. யோவான் ஸ்நானன் மக்களின் பாவங்களைக் குறித்து குரல் எழுப்பியதைக் கேட்டு அநேகர் மனம் திரும்பினார்கள்.
யோவான் உலகின் பாவங்களையெல்லாம், இயேசுவின் மீது சுமத்தியதால், மனிதகுலத்தின் பாவங்கள் எல்லாம் ஒரே தரமாக துடைக்கப்பட்டது. இயேசு உலகின் பாவங்களை சுமந்தார் என்று யோவான் ஸ்நானன் சாட்சி பகன்றதால்; விடுதலை நற்செய்தியை விசுவாசித்து இரட்சிப்படையலாம் என்பது நமக்குத் தெரியும். நீர் மற்றும் இரத்தம் ஆகியவை நற்செய்தியாகும்.
 
 
இயேசுவுக்கு முன்னோடியாக ஏன் யோவான் ஸ்நானன் வரவேண்டும்?
 
“இதற்காகவே” என்பதன் பொருள் யாது?
1.மிகவும் முறையானது
2.மிகவும் பொருத்தமானது
3.இதுவே ஒரே வழி (வேறு வழிகள் இல்லை)
 
இரட்சகராகிய இயேசுவை விசுவாசித்ததன் மூலம் தம் பாவங்கள் கழுவப்பட்டவர்கள், தம் இரட்சிப்பை இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த மத்தேயுவின் சாட்சி மூலம் தெரிந்து கொள்ளலாம். மத்தேயு 3:15-16 இயேசு யோவானிடம் வந்து “எனக்கு ஞானஸ்நானம் கொடு” என்றார். அதற்கு யோவான் “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா? என்றான்.”
இயேசுவை யாரென உணர்ந்து யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்துவதற்காக, அனுப்பப்பட்ட கர்த்தரின் சேவகன் யோவான் ஆவான். பழைய ஏற்பாட்டில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றவே இயேசு இரட்சகராக வந்ததால், உலகின் எல்லாப் பாவங்களையும் தன் தலைமீது சுமக்கும்பொருட்டு இயேசு தனக்கு ஞானஸ்நானம் பண்ணும்படி யோவான் ஸ்நானனுக்கு கட்டளையிட்டார்.
ஏன்? ஏனெனில் இயேசு தேவகுமாரன், வல்லவர், படைத்தவர், இரட்சகருமாவார். நமது எல்லாப் பாவங்களையும் கழுவும் பொருட்டு அவர் நம்மிடம் வந்தார். ஆகவே, மக்களை இரட்சிக்கும் பொருட்டு அவர் ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்தது.
“இதற்காகவே” இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று நம் பாவங்களையெல்லாம் கழுவினார். நமக்காகத் தீர்க்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். நம்முடைய இரட்சிப்புக்கான சாட்சி இயேசுவின் ஞானஸ்நானமே. பழைய ஏற்பாட்டில் பலியிடப்படும் ஆட்டுக்குட்டிமீது பாவங்கள் சுமத்தப்படும் என்று கர்த்தர் உறுதி கூறியதைப்போல், தேவகுமாரன் ஆட்டுக்குட்டியாகி, நம் பாவங்களை எல்லாம் தம்மீது ஏற்றுகொண்டார்.
அந்தப்படியால், பழைய ஏற்பாட்டில் கை வைப்பதும், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானமும் பாவங்களை இடமாற்றம் செய்கின்றன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள், இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வார்கள்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம் நம் பாவங்கள் அனைத்தையும் கழுவியது
 
இயேசுவில் நாம் எப்படியிருப்பது?
இயேசுவினுள் ஞானஸ்நானம் பெறுவதால்.
 
இயேசு ஞானஸ்நானம் பெறச் சென்றபோது, யோவான் அவரைத் தடைச் செய்ய முயன்றான். “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா? என்றான்.”
இயேசு அவனுக்கு பதிலளித்தார். “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார்.”
இப்பொழுது இடங்கொடு. இப்பொழுது. அவர் யோவானிடம் கூறினார். “எல்லா மக்களின் பாவங்களையும் என் மீது மாற்றவேண்டும். அதன் பிறகு அவர்கள் பாவங்களுக்காக நியாயம் தீர்க்கப்படுவேன். இதனால், யாரெல்லாம் என் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் தம் பாவத்திலிருந்து விடுதலைப் பெறுவார்கள். உலகின் பாவங்களை என் மீது ஞானஸ்நானம் மூலம் செலுத்து. அதனால் இனி இவ்வுலகத்தில் வரப்போகிறவர்களும் ஒரே தரம் பாவ விடுதலைப் பெறுவார்கள். ஆகவே, இப்பொழுது இடங்கொடு.”
இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். இயேசுவின் ஞானஸ்நானம் கர்த்தர் அளித்த விடுதலையளிக்கும் நீதியின் சட்டத்திற்கு ஏதுவாய் இருந்தது. எல்லாப் பாவங்களும் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மீது சுமத்தப் பட்டதால், இயேசுவை நாம் விசுவாசிக்கும் போது நாம் பாவ விடுதலையடைகிறோம். தலையில் கை வைக்கப்பட்டதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டதால், நமக்காக சிலுவையில் மரித்து, இப்போது கர்த்தரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். நீர் மற்றும் ஆவியளிக்கும் பாவ விடுதலையை விசுவாசிப்பதன்மூலம் நாம் இரட்சிக்கப்படலாம்.
அவர் இயேசு. அவர் இவ்வுலகத்தின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார். இயேசு நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு நம் பாவத்திற்கான சம்பளத்தை சிலுவையில் கொடுத்தார் என்பதை விசுவாசிப்பதன் முலம் நாம் இரட்சிக்கப்படலாம். இயேசுவின் ஞானஸ்நானமே பாவ விடுதலை நற்செய்தியின் தொடக்கமாகும்.
பாவ விடுதலை தரும் ஞானஸ்நானம் குறித்து வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் காணலாம். அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் தான் கிறிஸ்துவில் ஞானஸ்நானம் பெற்றதாலும், தான் கிறிஸ்துவினுள் இருப்பதாலும் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டதாக கூறுகிறான். அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் ஆகியவை மூலம் கிட்டிய பாவ விடுதலை மீது தான் வைத்திருந்த விசுவாசத்தைக் குறித்து இங்கே பேசுகிறான்.
 
 
இப்பொழுது இடங்கொடு
 
யோவான் ஸ்நானனின் பாத்திரமென்ன?
மனிதகுலத்தின் தலைமை ஆசாரியனாக, உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்துபவனாய் இருந்தான்.
 
இயேசு கூறினார். “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது” எல்லா நீதியையும் என்பது அவரின் ஞானஸ்நானம் மூலம், எல்லா மனிதர்களையும், இதயப்பூர்வமாக பாவமற்றவர்கள் ஆக்கும்படி அவர்கள் பாவங்களைத் துடைப்பது, என்று பொருளாகும். “அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.” இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றார்.
தலைமை ஆசாரியன் எப்படி தன் கைகளை ஆட்டின் தலைமீது வைத்தானோ, அதுபோலவே, யோவான் ஸ்நானன் இயேசுவின் தலை மீது தன் கைகளை வைத்து உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது சுமத்தினான். யோவான் ஸ்நானனே தலைமை ஆசாரியன். மனித குலத்தின் பிரதிநிதியாக, உலகின் சகல பாவங்களையும், இயேசுவின் மீது சுமத்துவது அவன் இலக்காக இருந்தது. “கர்த்தரே, உலகின் சகலப்பாவங்களையும் உம் ஆட்டுக்குட்டியாகிய இயேசு மீது சுமத்துகிறேன்.” இப்படியாக மனிதர்களின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது.
யோவான் ஸ்நானன் இயேசுவின் தலைமீது தன் கைகளை வைத்தான். அவரை நீரில் முழுக்கினான். இயேசு நீரிலிருந்து வெளியே வரும்பொழுது அவன் தன் கைகளை அப்புறப்படுத்தினான். இயேசுவின் ஞானஸ்நானம் நீதியின் இரட்சிப்புக்காக செய்யப்பட்டது. இயேசு தம் ஞானஸ்நானத்தை விசுவாசிப்போரை இப்படியாக இரட்சித்தார்.
 
 
வானம் திறக்கப்பட்டது அன்றியும் வானத்தில் இருந்து சத்தமும் வந்தது
 
பரலோக ராஜ்ஜியம் எப்போதிலிருந்து திறக்கப் பட்டுள்ளது?
யோவான் ஸ்நானனின் நாட்களிலிருந்து.(மத்தேயு 11:12 )
 
“இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:16-17)
இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் சகல பாவங்களையும் எடுத்துக்கொண்டபோது வானம் அவருக்காக திறக்கப்பட்டது. இப்படியாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக கர்த்தர் செய்த உடன்படிக்கை, யோர்தான் நதியில் இயேசு ஞானஸ்நானம் பெற்றதால் நிறைவேறியது.
இப்படியாக இயேசு, தேவ ஆட்டுக்குட்டியாக, உலகின் எல்லா மக்களையும் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார். உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன. அவர் கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றினார்.
யோவான் 1:29 இல் சாட்சி கொடுக்கப்பட்டுள்ளது. “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” தேவ ஆட்டுக்குட்டியான இயேசு மீது எல்லாப் பாவங்களும் சுமத்தப்பட்டதால், மூன்று வருடங்களுக்குப் பிறகு தோள்களில் சுமையுடன், கொல்கொதாவில் உள்ள சிலுவையை நோக்கி நடந்தார். நம் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களை எல்லாம் தம் மீது ஏற்றுக்கொண்டபிறகு, எங்கெல்லாம் அவர் சென்றாரோ, அங்கு தம்மை நம்பிக்கையுடன் வரவேற்றவர்களிடம் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறினார்.
யோவான் 8:11 இல் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிப்பட்ட பெண்ணிடம் “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை” அவரால் அவளை ஆக்கினைக்குட்படுத்த முடியாது. ஏனெனில் தீர்க்கப்படவேண்டியது இயேசுவே, ஏனெனில் அவர் தம்மீது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். ஆனபடியால், தான் பாவிகளின் இரட்சகர் என்று எல்லா மக்களிடமும் கூறினார்.
ஏனெனில் தேவகுமாரரான அவர், நம் பாவங்களை எடுத்துப்போட்டதால், உலகின் எல்லா விசுவாசிகளும், பரிசுத்தமடையமுடியும். அவர் ஞானஸ்நானம் பெற்றவுடன் வானம் திறந்தது. பரலோக ராஜ்ஜியத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டன. இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்போர் அதனுள் இலவசமாக பிரவேசிக்க முடியும்.
 
 
தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை தம்மீது ஏற்றுக்கொண்ட பிறகு இயேசு சிலுவையில் அறையப் பட்டார்
 
சாத்தானின் தலையை இயேசு எப்படி நசுக்கினார்?
நம் எல்லாப் பாவங்களுக்கும் தீர்க்கப்பட்டு மரித்து, மீண்டும் மரித்தோரிலிருந்து எழும்பியதால்.
 
எல்லாப் பாவங்களும் அவர் தலை மீது சுமத்தப்பட்டதால், இயேசு சிலுவையில் தீர்க்கப்படவேண்டியவராய் இருந்தார். சிலுவையில் தாம் படப்போகும் பாடுகளை நினைத்து அவர் மிகுந்த மனவேதனையுடனும், சஞ்சலத்துடனும் இருந்தார். அவர் வியர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாக மாறும்வரை ஜெபித்தார். அவர் தம் சீடர்களுடன் கெத்சமனே என்ற இடத்திற்குச் சென்றபோது அவர் ஜெபித்தார். “என் பிதாவே, இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்” (மத்தேயு 26:39). “நான் ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் பாவங்களை எல்லாம் ஏற்றேன். ஆயினும் என்னை மரிக்கவிடாதேயும்” ஆனால் கர்த்தர் இதற்கு பதிலளிக்கவில்லை.
பழைய ஏற்பாட்டில் பாவ விடுதலை தினத்தில், தலைமை ஆசாரியனால் இரத்தம் கிருபாசனம் மீது தெளிக்கப்படும்படியாக பலி மிருகம் கொல்லப்படவேண்டும். அதேபோல், இயேசு சிலுவையில் அறையப்படவேண்டும். வேறு வழிகளில் அவற்றைச் செய்யவேண்டாம் என்று கர்த்தர் தீர்மானித்தார்.
பலி பீடம் கர்த்தரின் நியாயத்தீர்ப்பும், பாவப்பலியின் இரத்தம் ஜீவனுமாகும். கிருபாசனத்தின் மேலும் அதன் முன்பும் இரத்தத்தை ஏழு முறை தெளிப்பதென்பதன் பொருள் எல்லா தீர்ப்பும் கடந்தது என்பதாகும். (லேவியராகமம் 16:1-22)
இயேசு கர்த்தரிடம் தன் பாத்திரம் தன்னை விட்டு நீங்கும்படி ஜெபித்தார். ஆனால் பிதா அதனை அனுமதிக்கவில்லை. இறுதியில் இயேசு கூறினார், “என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (மத்தேயு 26:39). அவர் கர்த்தருக்கு சரியெனப்படுவதை செய்யும்படி ஜெபித்தார். அவர் ஜெபம் செய்து முடித்து தன் பிதாவின் சித்தத்தை பின்பற்றினார்.
இயேசு தன் சித்தத்தைக் கைவிட்டு, பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தார் ஏன்? அவர் உலகின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொண்டபிறகு அதற்காக தீர்க்கப்படாவிட்டால், இரட்சிப்பு முழுமை பெற்றிருக்காது. அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கு காரணம் அவர் ஞானஸ்நானம் மூலம் மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டதே. “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23).
இயேசுவின் ஞானஸ்நானமான தலைமீது கைவைப்பதன் மூலம் மனிதர்களை இரட்சிக்கும்படியாக இரட்சகர் ஒருவரை அனுப்பிவைப்பேன் என்ற தமது உடன்படிக்கையை கர்த்தர் நிறைவேற்றினார். இயேசு கர்த்தரின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, நமக்காக தீர்ப்பை ஏற்றார்.
ஆதியாகமம் 3:15 இல் கூறிய தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்: அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” கர்த்தர் ஆதாமிடம், ஏவாளின் வித்தான மேசியாவை அனுப்புவதாக உறுதியளித்தார். மனிதர்களை பாவிகளாகவும் நரகத்திற்குப் போகும்படியும் செய்த சாத்தானின் வல்லமையை அவர் முறியடிப்பார்.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை மரணத்தையும் அறிந்து அதனை விசுவாசித்தால், நம் எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டு நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்படுவோம்.
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை எண்ணும்போது நமது இருதயத்திற்குள் ஆழமான விசுவாசம் இருக்கவேண்டும். இதனை உன் இருதயப்பூர்வமாக விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம் பரலோக நற்செய்தியின் தொடக்கம்
 
தேவன் பரலோகத்திற்கு ஏறுமுன் அளித்த கடைசி கட்டளை என்ன?
அவர் தம் சீடர்களிடம் உலக மக்களெல்லாம் சீடர்களாக்கும்படி பிதாவின் பெயரிலும், குமாரன் பெயரிலும், பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
 
இயேசுவின் ஞானஸ்நானமே நற்செய்தியின் தொடக்கம், தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் எல்லாப் பாவிகளையும் இரட்சித்தார். மத்தேயு 28:19 இல் “ஆகையால் நீங்கள் புறப்பட்டு போய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி, பிதா குமாரர் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து” என்று எழுதப்பட்டுள்ளது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியியானவர், ஆகியோர் மனிதர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்ததையும், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் அவை கழுவப்பட்டதையும்; சாட்சி கொடுக்கும்படி இயேசு தம் சீடர்களிடம் கூறினார்.
இயேசு அவர்களுக்கு உலகமெல்லாம் சென்று சீடர்களை உருவாக்கும்படி அதிகாரம் கொடுத்தார். அவர்களுக்கு இயேசுவின் ஞானஸ்நானத்தைப் பற்றியும் பாவ விடுதலையின் ஞானஸ்நானத்தைப் பற்றியும், உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிப் போட்ட ஞானஸ்நானத்தை பற்றியும் போதிக்கும்படி கூறினார்.
2000 வருடங்களுக்கு முன் இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். அந்த ஞானஸ்நானம் மூலம், உலகின் அனைத்துப் பாவங்களும், நம் பாவங்கள் உட்பட அவரின் மீது சுமத்தப்பட்டது.
எவ்வளவு பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது? நாளைய பாவங்களைக் குறித்து என்ன? நாளைய பாவங்களும் தன் மீது சுமத்தப்பட்டதாக அவர் நம்மிடம் கூறுகின்றார். நம் பிள்ளைகளின் பாவங்கள், எல்லா சந்ததியினரின் பாவங்கள், முந்தையவர்கள், இப்போதுள்ளவர்கள், வருங்காலத்தில் வரப்போகிறவர்கள், அது ஏன், ஆதாமின் பாவமுதல் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன.
அங்கே எப்படி பாவங்கள் இல்லாமல் போயிற்று? நாம் எப்படி பாவங்களின்றி இருக்கமுடியும்? இயேசு தம் ஞானஸ்நானம் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும், உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டதால், விசுவாசிகள் தம்மை பாவங்களிலிருந்து விடுதலை செய்துகொண்டு, பரலோக ராஜ்ஜியத்தை அடையலாம்.
“சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்” (யோவான் 3:21).
இயேசு நம் பாவங்களை எல்லாம் தம் ஞானஸ்நானத்தின் மூலமும், அவரின் சிலுவை இரத்தத்தின் மூலமும், அவரின் மரணம் மூலமும், அவர் உயிரோடெழும்பியதன் மூலமும் கழுவிப்போட்டார். ஆகவே, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை மரணத்தையும் விசுவாசிக்கும்போது நம் எல்லாப் பாவங்களிலிருந்தும், இரட்சிக்கப்படுகின்றோம். இது பாவ விடுதலைக்கான விசுவாசம்.
நாம் கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும், அவரின் இரத்தத்தையும் விசுவாசித்தால், இரட்சிக்கப்படுவோம். நாம் இயேசுவை சரியாக விசுவாசிக்கும்போது, நாம் பாவிகளாக இருப்போமா அல்லது நீதிமான்களாக இருப்போமா? நாம் நீதிமான்களாகவே இருப்போம். நாம் முழுயடையாதவர்கள் என்றாலும் பாவமற்றவர்களாக இருப்போமா? ஆம் நாம் பாவமற்றவர்கள். இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவைத் தீர்ப்பு ஆகியவற்றை விசுவாசிக்க முழுமையானதும், சரியானதுமான நம்பிக்கை வேண்டும். 
 
 
இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதும் பெறுவதும்
 
பரலோக நற்செய்தியின் தொடக்கம் யாது?
இயேசுவின் ஞானஸ்நானம்.
 
மக்கள் முழுமை பெறாதவர்களாகையால், இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பவர்களுக்கு அவர்களின் விசுவாசத்தை உறுதி செய்யும்பொருட்டு போதகர்கள் ஞானஸ்நானம் செய்விக்கிறார்கள். மறுபடியும் பிறந்தவர்கள், இயேசு ஞானஸ்நானம் பெற்றதைப்போன்றே தாமும் ஞானஸ்நானம் பெற்று, விசுவாசத்தை உறுதி செய்யவேண்டும்.
மறுபடியும் பிறந்த ஒருவனின் தலைமீது போதகர் கைவைத்து, அவனின் முடிவு பரியந்தமும், கர்த்தரை ஆராதிக்கும் பொருட்டு கர்த்தர் ஆசீர்வதிக்கவேண்டுமென்று ஜெபிக்கிறார். அதன்பிறகு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் செய்விக்கிறார்.
இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றின் மீது நமக்கிருக்கும் நம்பிக்கையினால் நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம். இந்த ஞானஸ்நானம் இயேசுவின் மீது பாவங்களைச் சுமத்தியதையும், ஞானஸ்நானம் பெற்ற ஒருவன் இயேசுவுடன் மரித்து, அவருடன் உயிரோடே எழும்பியதையும் காட்டுகிறது.
ஒருவன் ஞானஸ்நானம் பெறும்போது இவைகளை அறிவிக்கின்றான். அவை, இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் தன் பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டதை விசுவாசிப்பதையும், இயேசுவுடன் பாவங்களுக்காக தீர்க்கப்பட்டதையும், இயேசுவுடன் மீண்டும் உயிரோடு எழும்பியதையும் அறிவிக்கின்றான். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்,அவனின் சகோதர சகோதரிகள், சாத்தான், முன்பு அவனின் விசுவாசத்தைப் பிரகடனஞ் செய்கிறான். இது நீரினாலும், ஆவியாலும் மறுபடியும் பிறந்ததை அறிக்கைச் செய்வதுமாகும்.
இயேசுவை விசுவாசிக்கும், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்துகொண்டோர் உலகின் எல்லா பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டனர். ஆகவே அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுகிறார்கள்.
“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புதுச்சிருஷ்டியாய் இருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரிந்தியர் 5:17) நம்முடைய பழையவைகள் ஒழிந்து போயின, விசுவாசத்தின் மக்களாக நாம் மீண்டும் பிறந்தோம். இதனை நம் இருதயத்தில் உறுதிப்படுத்தவே, நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம். இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்ததினால் நாம் அவரில் ஞானஸ்நானம் பெற்றோம்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் மூலம் மறுபடியும் பிறந்தபிறகு அவர்களின் வாழ்க்கை
 
மறுபடியும் பிறந்தவர்கள் எதற்காக வாழ்கிறார்கள்?
கர்த்தரின் ராஜ்ஜியத்திற்காகவும், அவரின் நீதிக்காகவும் உலகெங்கும் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கும் அவர்கள் வாழ்கிறார்கள்.
 
விடுதலை மற்றும் மறுபடியும் பிறந்தபிறகு வாழும் வாழ்க்கையானது வேதவாக்கின் மீது நம்பிக்கை சேர்ந்ததாக இருக்கவேண்டும். அவ் வாழ்க்கையானது மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியதும், பாவங்களுக்காக தினமும் மனம் வருந்துவதாகவும் இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக, அது ஒரு விசுவாச வாழ்வாகவும், இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார் என்று தினமும் உறுதியோடும் வாழவேண்டும்.
இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நம் பாவங்கள் எல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டது. மூன்று வருடங்கள் இந்த பாரத்துடன் அவர் வாழ்ந்து நமது எல்லாப் பாவங்களுக்கும் சிலுவையில் தீர்க்கப்பட்டார்.
ஆகவே, விசுவாசிகளாகிய நமக்கு எழுதப்பட்ட வாக்கியத்தின் மீது நம்பிக்கை இருக்கவேண்டும். வெறும் உணர்ச்சிகளில் நம்பிக்கை வைக்கலாகாது. இப்படிச் செய்தால், நாம் விடுதலைப் பெற்று மறுபடியும் பிறந்தவர்களானாலும், தினமும் நம் அன்றாடப் பாவங்களுக்கு கவலைப்பட்டுக்கொண்டிருப்போம்.
நாம் இலக்கிய நோக்கில் பாவத்தை பார்ப்பதை விட்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தத்தை மட்டும் விசுவாசிக்கவேண்டும். இத்தகைய ஒரு வாழ்வையே, விடுதலைப் பெற்ற ஒருவன் நடத்தவேண்டும்.
இயேசுவைக் குறித்து யோவான் ஸ்நானன் என்ன கூறினான்? அவன் கூறினான், “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) அவன் இயேசு, இன்றைய, நாளைய, நேற்றைய மற்றும் மூலப்பாவங்களையும் சுமந்து தீர்த்ததாக சாட்சி கூறுகிறான்.
அவர் அப்பாவங்களையெல்லாம் எடுத்துப் போடவில்லையா? அப்பாவங்கள் அவர் மீது சுமத்தப் படவில்லையா? உலகின் பாவங்கள் நம் பழைய கால பாவங்களையும், நிகழ்கால, மற்றும் எதிர்கால பாவங்களையும் உள்ளடக்கியுள்ளது. இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் விடுதலை உண்டாகிறது என்ற நற்செய்தியை நாம் உறுதிசெய்யவேண்டும்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தின் உண்மைகளை விசுவாசிப்போர் இரட்சிப்படைய வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்போரின் இருதயத்தில் பாவங்கள் இருப்பதில்லை.
ஆயினும் நிறைய மக்கள் தங்களிடம் இன்னமும் பாவமிருப்பதாக நினைக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் தம் பாவங்கள் அவர் மீது செலுத்தப்பட்டதைக் குறித்த அறிவு இல்லை. அவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டார்கள். சாத்தான் அவர்களின் மாமிச சிந்தனைகளின் மூலம் அவர்களிடம் முணுமுணுக்கிறான். “நீ தினமும் பாவம் செய்கிறாய். நீ எப்படி பாவமில்லாதவனாக இருக்க முடியும்?”
அவர்கள் தாம் பாவமற்றவர்களாக இருப்பதற்கு கர்த்தரை மட்டுமே நம்பவேண்டும். அவர்கள் பாவம் செய்து கொண்டிருப்பதால், சாத்தான் அவர்களை பாவிகள் என்று கூறி ஏமாற்றுகிறான். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிக்கும்போது யாருமே பாவிகள் இல்லை.
நாம் இவ்வுலகில் குறையுள்ளவர்களும் பலவீனர்களுமாக இருப்பதால், நம்முடைய செய்கைகளினாலும், காரியங்களாலும் நீதிமான் ஆனோம் என்று எப்பொழுதும் கூறமுடியாது. ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய உண்மையின் மீது விசுவாசித்திருப்பதால் இரட்சிக்கப் பட்டோம் என்று கூறமுடியும். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றால் நம் இருதயம் பரிசுத்தமாகியது என்று புரிந்துகொள்ளும்பொழுது நம்மில் பாவமில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
“நான் விடுவிக்கப்பட்டேன், நீர் என்னை விடுதலையாக்கினீர். நாமெல்லாம் விடுவிக்கப்பட்டோம்” நற்செய்தியை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டு வாழ விரும்புவது மிகவும் மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது. நாம் ஆவியால் வழி நடத்தப்படுகிறோம் என்று அறிந்துகொள்ளவேண்டும்.
விசுவாசிகளாகிய நாம் தினமும் பாவம் செய்கிறோம். ஆனாலும் நாம் பாவிகளில்லை. நம் இருதயத்தில் இயேசுவின் ஞானஸ்நானமும் அவர் இரத்தமும் உள்ளன. நம் இருதயங்கள் பாவம் நிறைந்தவையாக இருந்தன. ஆனால் நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கும்போது நாம் எப்படித் தொடர்ந்து பாவிகளாகவே இருக்கமுடியும்?
“அந்த நாட்களுக்கு பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நாம் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்பதை உரைத்தபின்பு” (எபிரெயர் 10:16).
நம் இருதயங்கள் பாவமற்றுள்ளன. இயேசு நாம் முற்றிலும் விடுதலையடையும்படி தம் ஞானஸ்நானம் மூலமும் அவரின் சிலுவை மரணம் மூலமும் அதை நமக்கு சாத்தியமக்கினார். வேத வாக்கிலிருந்து இரட்சிப்பு முளைவிடுகிறது.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போர் மீண்டும் பாவிகளாகவே முடியாது
 
நாம் பாவம் செய்தால் மீண்டும் பாவிகளாவோமா?
இல்லை. நாம் மீண்டும் பாவிகளாகமட்டோம்.
 
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை நாம் விசுவாசிக்காத நாட்களில் நாம் எத்தனை முறை பாவமன்னிப்புக்காக ஜெபித்தபோதிலும், நம் இருதயங்களில் பாவங்கள் இருந்தன. ஆனால் நாம் உண்மையான நற்செய்தியை விசுவாசிக்கும்போது, நம் பாவங்கள் யாவையும் கழுவப்பட்டன.
“ஏய், எப்படி இந்நாட்களில் நீ பிரகாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறாய்?”
“இதோ பார், என் இருதயத்தில் பாவங்கள் எதுவும் இல்லை.”
“உண்மையாகவா? நீ விரும்பும் அளவு பாவங்களைச் செய்யலாம் என்று நான் யூகிக்கிறேன்.”
“மனிதன் பாவம் செய்வதை தவிர்க்கமுடியாது என்று நீ அறிவாய். மனிதன் அப்படிப்பட்டவன். ஆனால் இயேசு தம் ஞானஸ்நானம் மூலம் பாவங்களைச் சுமந்து, அதற்கான தீர்ப்பை சிலுவையில் பெற்றார். இது காரணம் பற்றியே நற்செய்தியை ஆலயத்தில் கூறும்படி என்னை அர்ப்பணித்தேன். ரோமர் 6ஆம் அதிகாரம் நாம் இதுபோல் வாழ வேண்டும் என்று கூறுகிறது. என்னுடைய இருதயத்தில் பாவங்கள் இல்லாததால், நான் நீதியான செயல்களை செய்ய விரும்புகிறேன். இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை நாம் விசுவாசித்து உலகம் முழுவதும் இந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கவேண்டும்! விடுதலையின் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கும்போது நாம் மீண்டும் பாவியாக முடியாது. நித்திய இரட்சிப்பான இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் நாம் விசுவாசிக்கவேண்டும். நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!”
 
 
ஆவியானவரைப் பெற்றுக்கொள்வது யார்?
 
இயேசுவைக் குறித்து யோவான் ஸ்நானன் பகன்ற சாட்சி யாது?
இயேசுவே தேவ ஆட்டுக்குட்டி, அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். அப்பாவங்களில், கடந்த காலப் பாவங்கள், நிகழ்காலப் பாவங்கள், எதிர்காலப் பாவங்கள் மற்றும் மூலப் பாவங்கள் ஆகியவை அடங்கும்.
 
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போர் இரட்சிப்பை பெறுகின்றனர். நாம் எப்படி ஆவியானவரைப் பெறுகிறோம்? அப்போஸ்தலர் 2:38-39 பதிலளிக்கிறது “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனம் திரும்பி, ஒவ்வொரும் பாவ மன்னிப்புக்கென்று கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி”
இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதென்பது இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து விடுதலையாவதைக் குறிக்கிறது. ஆவி கர்த்தரால் பரிசாக கொடுக்கப்படுகிறது.
இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதென்பது இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து பரிசுத்தமாவதையும் குறிக்கிறது. இந்நம்பிக்கையை நாம் தழுவும்போது நாம் விடுதலையாக்கப்பட்டு நீதிமான்களாகிறோம். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் மூலமாக விசுவாசிகள் உரைந்த பனியைப்போல் வெண்மையாவர்.
“அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” நம்முடைய பாவங்கள் எல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவரில் சுமத்தப்பட்டு அவற்றிற்கு தீர்ப்பாக சிலுவையில் மரித்தார் என்பதை உறுதியாக நம்பும்போது, நம் இருதயங்கள் சுத்தமாக கழுவப்படுகின்றன. இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்கும்போது புதிய வாழ்க்கைத் தொடங்குகிறது. நாம் ஆவியின் வரத்தைப்பெற்று கர்த்தரின் பிள்ளைகளாகிறோம்.
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) கர்த்தர் சிலுவையில் தண்டிக்கப்பட்டதற்கான உண்மை காரணத்தை நாம் அறியவேண்டும். இயேசு தம் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் மூலம் நம் பாவங்கள் எல்லாவற்றையும் துடைத்துபோட்டார் என்பதே உண்மையாகும். நாம் உண்மையை விசுவாசிக்கும்போது பாவ விடுதலைப் பெறுகிறோம்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம் நம்மை விடுதலையாக்குகிறது
 
யார் ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள்?
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசித்து, பாவங்களில் இருந்து விடுதலையானவன் ஆவியைப் பெற்றுக்கொள்கிறான்.
 
பழைய ஏற்பாட்டின் பலியிடும் முறை மூலம் பாவ நிவர்த்தி செய்வது புதிய ஏற்பாட்டில் இயேசு ஞானஸ்நானம் பெற்றதற்கு சமமாகும். இயேசுவின் ஞானஸ்நானமே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் முக்கிய கருவாகும். பழைய ஏற்பாட்டின் பலிமீது கைவைக்கும் முறையை புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் பார்க்கலாம்.
இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்கள் எல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது; இஸ்ரவேலின் பாவங்கள் எல்லாம் போக்காடின் மீது கை வைத்து பாவங்களைச் சுமத்தியது போலாகும்.
நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டுமானால், இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்க வேண்டுமா? ஆம், அப்படியே செய்யவேண்டும்! இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை எடுத்துப்போட்டார் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்கவில்லை என்றால் நம் பாவங்கள் அவர் மீது சுமத்தப்படாது. நம்முடைய இரட்சிப்பு முழுமையடையும் படி நாம் விசுவாசிக்கவேண்டும். இல்லையென்றால் நாம் நீதிமான்களாக முடியாது.
இயேசு தம்முடைய ஞானஸ்நானம் மூலம், மிகவும் பொருந்தத்தக்கதும், நீதியுமான வழியில் உலகின் பாவிகளை இரட்சித்தார். இதற்குமேல் பொருந்தத்தக்க வகையில் அதனைச் செய்யமுடியாது. இயேசுவின் ஞானஸ்நான முறையின் மூலமே உலகின் பாவங்கள் அவரின் மீது சுமத்தப்பட்டதால் நம் இருதயம் நிரந்தரமாக சுத்தமாய் இருக்கும்பொருட்டு நாம் அதனில் நம்பிக்கை வைக்கவேண்டும்.
இயேசுவின் இரத்தம் நம் பாவங்களுக்கான தீர்ப்பு என்பதால், நாம் இதையும் நம்பவேண்டும். இப்படியாக இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போர் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவர்.
பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கேதுவாக இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்கவேண்டும். இதுவே நாம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படும் ஒரே வழி. இதனால் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து நாம் தப்ப முடியும்.
புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும், பழைய ஏற்பாட்டின் பலிமீது கைவைத்தலும் கண்ணாடியின் பிரதி பிம்பங்களாகும். அதுவே புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டையும் இணைக்கும் முடிச்சாகும்.
புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானன் இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் பிறந்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அதுவே “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்” (மாற்கு 1:1). இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் பாவங்களை ஏற்றுக்கொண்ட வேளையில் நற்செய்தி தொடங்கியது.
மனிதர்களை இரட்சிக்கும் வேலை சங்கிலி தொடர் போன்ற நிகழ்ச்சிகளால் நடத்தப்பட்டது. அவை இயேசுவின் பிறப்பு, அவரின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் மற்றும் அவரின் பரலோகத்திற்கு ஏறுதல் ஆகியவையாகும். இந்த தொடர் நிகழ்ச்சிகளை நாம் அறிந்து அவற்றைப் புரிந்துகொண்டு விசுவாசித்தால் நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவோம். இயேசுவின் ஞானஸ்நானமே நற்செய்தியின் தொடக்கம். சிலுவையின் இரத்தத்தால் அது முழுமைப் பெற்றது.
“தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்” (மாற்கு 1:1) அவர் செய்த நீதியின் செயல்களான - அவரின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம், அவரின் உயிர்த்தெழுதல், அவரின் பரலோகம் ஏறல், அவரின் இரண்டாம் வருகை ஆகியவற்றிலிருந்து எதனையும் நீக்கமுடியாது. இது தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நற்செய்தியாகும்.
இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து, தம் ஞானஸ்நானத்தின் மூலம் மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவினார். இதுவே பரலோக நற்செய்தியின் தொடக்கமாகும். இவற்றில் ஏதாவது ஒன்று இல்லாமற் போகுமானால், பரலோக நற்செய்தி நிறைவேறியதாகாது.
ஆகவே, யாரேனும் மறுபடியும் பிறக்க விரும்பினால், அவன் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் நம்பவேண்டும். இந்நாட்களில் அநேகர், இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் குறித்த உண்மையை நம்புவதில்லை. இயேசுவின் ஞானஸ்நானத்தை அவர்கள் மதச்சடங்காக எண்ணுகிறார்கள். இது அபாயமான, தவறான எண்ணமாகும். யாரொருவன் இயேசுவை விசுவாசிக்கிறானோ, அவன் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், இரத்தத்தையும் கூட கண்டிப்பாக விசுவாசிக்கவேண்டும்.
பாவ மன்னிப்புக்காக ஜெபித்தால் நம்முடைய பாவங்கள் எப்படி கழுவப்படும்? இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றபோது, நம்முடைய பாவங்கள் யாவும் அவர் மீது சுமத்தப்பட்டன. அவருக்கு மனிதர்களின் பாவங்களை ஏற்றுக்கொள்வதற்கு வேறு வழிகள் இருக்கவில்லை.
பரலோக ராஜ்ஜியத்திற்குள் போகவேண்டுமானால், நீர் மற்றும் ஆவியால் நாம் மறுபடியும் பிறக்கவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம், ஆவியானவர் இல்லாமல் பாவ விடுதலை இல்லை. இயேசு நிக்கொதேமுவிடம் யோவான் 3:5 இல் கூறியபடி மறுபடியும் பிறந்த சிலர் மட்டுமே கர்த்தரைக் காணமுடியும். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் மட்டுமே உண்மையான இரட்சிப்பு வரும்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமல் நாம் இரட்சிப்படைய முடியுமா?
 
இயேசு எப்படி நம் இரட்சகரானார்?
அவரின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களைத் தம் மீது ஏற்றுக்கொண்டதன் மூலம். 
 
இயேசுவின் பொது ஊழியத்தின் போது அவரின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களையெல்லாம் இவ்வுலகிற்கு வந்து ஏற்றுக்கொண்டார், என்பதையோ, இயேசுவின் புனிதத்துவத்தை குறைவாகவோ, அவர் கன்னிமரியாளுக்கு பிறந்தார் என்பதையோ, இயேசுவின் சிலுவையையோ; விட்டுவிட்டோமானால் கிறிஸ்தவம் வெறும் மூடப்பழக்கங்கள் உள்ள சமயமாகி இருக்கும். அதன் விசுவாசிகள் “என்னை மன்னியும், என்னை மன்னியும், என்னை மன்னியும்” என்று புத்தர்கள் தம் ஆலயத்தில் செய்வது போல; உச்சாடனம் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டோமானால் நம் பாவங்கள் அவரின் மீது சுமத்தப்படவில்லை என்று பொருளாகும். நம் விசுவாசத்திற்கு எந்த மதிப்பும் இராது. ஒரு கடனாளி தன் கடனைக் கட்டாமலேயே, தான் முழுக்கடனையும் கட்டிவிட்டதாக கூறினால் அவனிற்கும் நமக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இது நம்மை பொய்யர்களாக்குகிறது. ஒரு கடனாளி, தன் கடனைக் கட்டாமலேயே, தான் முழுக்கடனையும் கட்டிவிட்டதாக கூறினாலும், இன்னும் அவன் மனசாட்சியின் படியும் சட்டத்தின் படியும் கடனாளியே.
இயேசு தம் ஞானஸ்நான நீரின் மூலம் தம் விசுவாசிகளைக் கழுவி அவர்களைக் கர்த்தரின் பிள்ளைகளாக்கினார். எல்லா விசுவாசிகளும் பரிசுத்தமாகும்படி யோவான் ஸ்நானன் மூலம் உலகின் பாவங்களனைத்தையும் தான் ஏற்றுக்கொண்டார். இதனை நாம் தெரிந்து விசுவாசித்தோமானால் நம் இருதயம் நிரந்தரமாக, சுத்தமாக இருக்கும்.
கர்த்தருடைய கிருபைக்கு நன்றிகள். லூக்கா 2:14 கூறுகிறது “உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள்.” நீர் மற்றும் இயேசுவின் இரத்தம் ஆகியவை மீது நாம் வைக்கும் நம்பிக்கையானது நமக்கு முழு இரட்சிப்பை அளித்து கர்த்தரின் பிள்ளைகளுமாக்குகிறது. இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நம்மை இரட்சித்தது. இவ்விரண்டையும் யார் நம்புகிறார்களோ அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
இயேசுவின் செய்கையிலிருந்து எவற்றையும் அசட்டை செய்யமுடியாது. ஒரு சிலர் அப்போஸ்தலனாகிய பவுல் சிலுவையை மட்டும் பெருமைப் பாராட்டுவதாகக் கூறி இரத்தத்தை மட்டும் விசுவாசிக்கிறார்கள். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவையில் அடங்கியுள்ளது.
ரோமர் 6 ஆம் அதிகாரத்தில் பவுல் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றதையும், கிறிஸ்துவுக்குள் மரித்ததையும் நாம் பார்க்கலாம். கலாத்தியர் 2:20 இல் “கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாமிசத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்பு கூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.”
மேலும் கலாத்தியர் 3:27-29 இல் “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப் பேரும் கிறிஸ்துவை தரித்துக்கொண்டீர்களே. யூதன் என்றும் கிரேக்கன் என்றும் இல்லை, அடிமை என்றும் சுயாதீனன் என்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.”
இயேசுவுக்குள் ஞானஸ்நானம் என்பது, அவர் உலகில் செய்த இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் உட்பட எல்லாவற்றையும், நம்புவதாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் நம்புவதானது, இயேசு 2000 வருடங்களுக்கு முன்பே நம் பாவங்கள் அனைத்தையும் துடைத்துப்போட்டார் என்பதையும் விசுவாசிப்பாதாகும். இரட்சிப்பு வேறு எந்த வழிகளிலும் இல்லை.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்கும்போது நாம் கர்த்தரால் இரட்சிக்கப்படுகிறோம்
 
பாவ மன்னிப்பு ஜெபங்களை ஏறெடுப்பதால் நம் பாவங்கள்கழுவப் படுமா?
இல்லை. இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்ற போது எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டன என்பதை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பாவ மன்னிப்பு சாத்தியம்.
 
“நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப் பண்ணப்படும்.” (ரோமர் 10:10)
“உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப் பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே.” (கலாத்தியர் 3:27) நம் விசுவாசம் இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறவும், கிறிஸ்துவுக்குள்ளாக்கவும், கர்த்தரின் பிள்ளைகளாக்கும்படியும் வழி நடத்துகின்றது. இயேசு இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றபோது, நம் எல்லாப் பாவங்களும், உலகின் எல்லாப் பாவங்களும் அவரின் மீது சுமத்தப்பட்டது.
விசுவாசம் நம்மை கிறிஸ்துவுடன் ஒன்றாக்கியது. அவர் மரித்தபோது நாமும் மரித்தோம். அவர் உயிரோடெழுந்தபோது நாமும் உயிரோடெழுந்தோம். இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம், அவரின் உயிர்த்தெழுதல், அவரின் பரலோகம் ஏறல், அவரின் இரண்டாம் வருகை ஆகியவற்றை இப்பொழுது நாம் விசுவாசிப்பதால் பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்து நித்தியமாக வாழலாம்.
இயேசுவின் இரத்தத்தை மட்டுமே மக்கள் விசுவாசிக்கும்போது அவர்கள் தம் இருதயத்தில் இருக்கும் பாவத்தினால் அவதிப்படுவதைத் தவிர்க்க முடியாது. ஏன்? அவர்களுடைய பாவங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, பாவமிருந்த இருதயத்தை துப்புரவாக்கி, அவர்களை நிரந்தரமாக பனியைப்போல் வெண்மையாக்கும், இயேசுவின் ஞானஸ்நானத்தின் பொருளைக் கேட்டோ, ஏற்றுக்கொண்டோ இல்லாமையே.
உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும், இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றை நீ விசுவாசிக்கிறாயா? மாற்றமுடியாத இவ்வுண்மையை தயவு செய்து விசுவாசியுங்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தில் விசுவாசமில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீண். இயேசுவின் ஞானஸ்நானம் மீது விசுவாசமில்லாவிட்டால் உன் பாவங்களிலிருந்து உனக்கு விடுதலைக் கிட்டாது. நீ தேவையில்லாத காதலில் ஈடுபட்டிருக்கிறாய்.
சிலுவையை மட்டும் நம்புபவர்கள் கூறுகிறார்கள். “இயேசு என் கர்த்தர், என் இரட்சகர், எனக்காக சிலுவையில் மரித்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார். பரலோகம் செல்வதற்கு முன்னால் 40 நாட்கள் தம் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி பகன்றார். இப்பொழுது கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். நம்மை நியாயம் தீர்க்கும்பொருட்டு இரண்டாம் முறை அவர் வருகிறார். அவரைச் சந்திக்கும்படி, என்னை முற்றிலுமாக மாற்றும்படி இயேசுவிடம் ஜெபிக்கிறேன். ஓ. அன்புள்ள இயேசுவே, என் கர்த்தரே.”
அவர்கள் தம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். பாவமற்று இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது. “நான் இயேசுவை விசுவாசிக்கிறேன், ஆனால் என் இருதயத்தில் பாவமிருக்கிறது; இயேசுவை நான் நேசிக்கிறேன், ஆனால் என் இருதயத்தில் பாவமிருக்கிறது; என்னால், ‘மணவாளனே, தயவுசெய்து வாரும்` என்று கூறமுடியாது, ஏனெனில் என்னில் பாவமிருக்கிறது. இரட்சிப்புக்குறித்த நிச்சயம் என்னிடமில்லை. நான் கடினமாகவும், மனம் வருந்தியும் ஜெபித்தால்தான் இயேசு என்னிடம் வருவார். என் முழு இருதயத்தாலும் அவரை நான் நேசிக்கிறேன். ஆனால் என் இருதயத்தில் பாவங்கள் இருப்பதால் அவரைச் சந்திக்கும் துணிச்சல் என்னிடமில்லை.”
“நீ முழுமையடையாதவன் என்று ஏன் எண்ணுகிறாய்?” என்று இயேசு அத்தகைய மக்களிடம் கேட்டால், அவர்கள் பதிலளிப்பார்கள், “கர்த்தரே நான் தினமும் பாவம் செய்வதால் நான் நீதிமானல்ல. ஆகவே, பாவிகளை நீர் அழைக்கும்போது தயவு செய்து என்னையும் அழையும்”
கர்த்தர் படைத்தவர், நியாயாதிபதியான அவர் பாவிகளை ஏற்றுகொள்வதோ, அவர்களை தமது பிள்ளைகளாக்குவதோ இல்லையென்று அவர்களுக்குத் தெரியாது.
மணவாளன் வந்து மணவாட்டியின் பாவப்பிரச்சினைகளைத் தீர்த்துப்போட்டார். இது குறித்து மணவாட்டிற்கு சரிவர தெரியாததால், அவள் கடும் வேதனையடைந்தாள். நாம் மாமிசத்தால் பாவம் செய்யும்பொழுது நாம் பாவிகள் என்று நினைப்பதால், கர்த்தர் மீது நமக்கு நம்பிக்கை இருப்பதில்லை. வேதவாக்கின் உண்மை தெரியாததாலோ, புரியாததாலோ, நம் இருதயத்தில் இருக்கும் பாவங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.
 
இருதயத்தில் இருக்கும் பாவங்களினால் சிலர் துன்பப் படுவதேன்?
பாவங்கள் அனைத்தையும் நீக்கிப்போட்ட இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த கருத்தைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, அல்லது இந்த உண்மையை அவர்கள் ஏற்க மறுப்பது.
 
மணவாளன் இவ்வுலகின் பாவங்களை நீக்கினார். எங்கே? அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது. இதனை விசுவாசியாதவர்கள் தொடர்ந்தும் பாவிகளாகவே இருக்கின்றனர். அவர்கள் கைவிடப்பட்ட மணவாட்டிகள்.
மணவாளன் மணவாட்டியிடம் கேட்கிறார், “நீ என்னுடைய மணவாட்டியாக இல்லாதபோது, நீ எப்படி என்னை நேசிக்கலாம்? நீ என்னை மணவாளன் என்று அழைக்கும் முன், உன் எல்லாப் பாவங்களும் கழுவப் பட்டிருக்க வேண்டும்.”
இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமல் விடுதலைப் பெறுவோமா? இல்லை. நாம் கர்த்தரின் சாயலில் உருவாக்கப் பட்டோம், ஆகவே நம் இருதயத்தில் நீதியை எதிர்பார்க்கிறோம். நம்முடைய மனசாட்சி நீதியுடன் இருக்க விழைகிறது. ஆனால் நம்முடைய இருதயங்கள் சுத்தம் பண்ணப்படாதிருந்தால், நாம் பாவமில்லாதவர்கள் என்று நினைக்கவே முடியாது. இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் ஏற்று அதனை விசுவாசித்தால், நாம் பாவமற்றவர்கள் என்றும், நாம் நீதிமான்கள் என்றும் கூறலாம்.
நம்முடைய இருதயங்களில் பாவங்களை வைத்துக் கொண்டு நம்மை பாவமற்றவர்கள் என்று நாம் கருதுவதால், நம் மனசாட்சி எப்பொழுதும் பரிசுத்தமடையாது. கர்த்தர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார். கர்த்தர் பொய் சொல்வதில்லை.
கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேலர்களைக் கணக்கெடுக்கும் படி கூறினார். இதனால் அவர்கள் அவருக்குத் தம் வாழ்விற்கான கிரயத்தைக் கொடுக்க முடியும். செல்வந்தர்களும் அரை ஷேக்கலுக்கு மேல் கொடுக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் ஏழைகளும் இத்தொகைக்கு குறைவாக கொடுக்கக்கூடாது. எல்லோரும் கிரயம் கொடுத்தேயாக வேண்டும்.
ஆகவே, அவன் வாழ்க்கைக்கு கிரயம் கொடுத்த இயேசுவை அவன் விசுவாசிக்காவிட்டால், அவன் எப்படி பரிசுத்தனாக முடியும்? அப்படிப்பட்டவன் இருதயத்தில் பாவத்துடன் தொடர்ந்து வாழ்கிறான்.
இயேசுவின் இரத்தத்தை மட்டுமே நாம் விசுவாசித்தால், நம்மிருதயத்தில் பாவமிருக்கிறது; நாம் பாவிகளென்று அறிக்கைச் செய்யவேண்டும். ஆனால் நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை ஆகிய இரண்டையும் விசுவாசிக்கும்போது நம்மில் பாவமில்லை என்று கூறமுடியும். இரட்சிப்பும் நித்திய ஜீவனும் நம்முடையவை.
 
 
ஆவியானவருக்கு எதிராக தூஷனம் செய்தல்
 
எத்தகையப் பாவம் மனிதனை நரகாக்கினைக்குள்ளாக்குகிறது?
ஆவியானவருக்கு எதிரான பாவங்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தைவிசுவாசிக்காததே அத்தகைய பாவமாகும்.
 
ரோமர் 1:17 கூறுகிறது. “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” தேவநீதி நற்செய்தியில் வெளிப்படுத்தப்படுகிறது. இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, தம் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மூலமாக, நம் எல்லாப் பாவங்களையும் கழுவினார். இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நற்செய்தியின் வல்லமையாகும். இயேசு நம் பாவங்களையெல்லாம் ஒரே தரம் கழுவினார்.
விசுவாசித்தால் இரட்சிப்பும், விசுவாசிக்காவிட்டால், நித்திய நரகமும் கிட்டும். பரலோகத்திலிருக்கும் நம் பிதா, தம் ஒரே நேசகுமாரனை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்து, பாவ நிவர்த்தி செய்யும் பொருட்டு, இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தார். இப்படியாக அவரை விசுவாசிப்பவன் தன் மீறுதல்களையெல்லாம் சுத்தமாக்க முடியும்.
இவ்வுலகில் எஞ்சியிருக்கும் ஒரே பாவமானது, இயேசுவின் ஞானஸ்நானத்தையும், இரத்தத்தையும் விசுவாசியாததே. இதனை விசுவாசிக்காதது ஆவிக்கெதிரான தூஷனமாகும். இந்த பாவத்திற்கு தீர்ப்பை கர்த்தரே வழங்குவார். அவிசுவாசியை நரகாக்கினைக்குட்படுத்துவார். இதுவே மிகக் கொடிய பாவமாகும். இந்த பாவத்தை உங்களில் யாராவது செய்தீர்களானால், மனம் வருந்துங்கள். மேலும் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து விடுதலைப் பெறுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் நித்திய அழிவை பெறுவீர்கள்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் வரும் விடுதலையின் சாட்சியினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களா? யோவான் 1:29 இல் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று எழுதப்பட்டுள்ள யோவானின் சாட்சியைப் பெற்றீர்களா? எபிரெயர் 10:18 இல் “இவைகள் மன்னிக்கப் பட்டதுண்டானால், இனி பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப் படுவதில்லையே.” என்று கூறப் பட்டுள்ளபடி, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசிக்கிறீர்களா?
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தை இதயபூர்வமாக விசுவாசிப்போருக்கு கர்த்தர் உறுதிகூறுகிறார். அவர்களை கர்த்தர் தம் பிள்ளைகளாக்குகிறார். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்போர், இயேசுவின் நீதியின் அன்பால் விடுதலையடைவர்.
கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள் வேதவாக்கை பிரசங்கிக்கிறார்கள். உலக சம்பந்தமானவர்களும், கர்த்தரால் அனுப்பப்படாதவர்களும் தம் சொந்த யோசனைகளைப் பிரசங்கிக்கிறார்கள். இவ்வுலகில் தேவ வாக்கை பிரசங்கிக்கும் அநேகர் இருக்கின்றனர். கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் குறித்தும், அவரின் இரத்தம் குறித்தும், பேசுகிறார்கள்.
தம்முடைய சொந்த வாக்கியங்களைப் பேசுவோர் தம் சொந்த யோசனைகளை மட்டுமே தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர் “நாம் மூலப் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றோம், நாம் அன்றாட பாவங்களுக்கு மனம் வருந்த வேண்டும்.” நாம் படிப்படியாக பரிசுத்தமாக வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஒருவன் தன்னாலே பரிசுத்தனாக முடியுமா? நம் நற்குணத்தின் பலத்தினாலும், நம் சொந்த முயற்சிகளினாலும் பரிசுத்தமடைய முடியுமா? நம்முடைய பாவங்களைக் கர்த்தர் கழுவிப்போட்டதால் பரிசுத்தமானோமா? அல்லது பாவ விடுதலையை நாமே முயற்சித்து பெற்றதால் பரிசுத்தமானோமா?
உண்மையான விசுவாசமே நம்மை பரிசுத்தமாக்குகிறது. கரியை ஆயிரம் முறைக் கழுவினாலும் வெள்ளையாக்க முடியாதல்லவா? கறுப்புத் தோலை வெள்ளைத் தோலாக்க முடியுமா? எத்தனை சோப்புகளினாலும் நம் பாவங்களை கழுவ முடியாது. நமது சொந்த நீதியானது குப்பை நிறைந்த பை. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து நீதிமானானோமா? அல்லது இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டும் விசுவாசித்து நீதிமான் ஆனோமா?
உண்மையான விசுவாசமானது, இயேசுவின் ஞானஸ்நானத்தின் நீரினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் வருகிறது. இரட்சிப்பு நம் சொந்த செய்கைகளினால் வருவதில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் மீது நமக்குள்ள விசுவாசமே நம்மை விடுதலையாக்கி, நம்மை நீதிமான்களாக்குகிறது.
பிதா தம் குமாரனின் கைகளில் எல்லா மக்களையும் ஒப்படைத்திருக்கிறார். இயேசுவை நம்புவோருக்கு நித்திய ஜீவன் உண்டாவதாக. குமாரனில் விசுவாசிக்கவேண்டும் என்பதன் பொருள், அவரின் ஞானஸ்நானம், இரத்தம் மூலம் கிட்டும் பாவ விடுதலையை விசுவாசிப்பதாகும். விசுவாசிப்போர் நித்திய ஜீவனுடன் கர்த்தரின் பிள்ளைகளாவர். இரட்சிக்கப்பட்டோர் கர்த்தரின் வலது பக்கத்தில் என்றென்றும் வாழ்வர்.
விசுவாசமென்பது இயேசுவின் ஞானஸ்நானத்துடன் அவரின் பிதாவிடம் உள்ள ஒருமைப்பாட்டையும், ஆவியானவர் மீதுள்ள விசுவாசத்தையும் குறிக்கிறது. உண்மை வசனம் நம்மை மறுபடியும் பிறக்க அனுமதியளிக்கிறது. நாம் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதால் இரட்சிக்கப்பட்டோம்.
நம்பிக்கையுடன் இருங்கள். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பது பாவ விடுதலையை சம்பாதிப்பதாகும். உண்மையான நற்செய்தியை விசுவாசித்து, பாவ மன்னிப்பு பெறுங்கள்.