• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 3 : நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி

[3-9] விசுவாசத்தினால் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவோமாக (மத்தேயு 7:21-23)

(மத்தேயு 7:21-23)
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”
 
 
நானே அதுவாக இருக்கலாம்....
 
கர்த்தாவே! கர்த்தாவே! என்பவர்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியுமா?
இல்லை. கர்த்தரின் சித்தத்தை செய்பவர்கள் மட்டுமே.
 
இயேசுகிறிஸ்து கூறினார். “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” இவ்வார்த்தைகள் அநேக கிறிஸ்தவர்களின் இருதயத்தில் பீதியை உண்டாக்கி, அவர்களைப் பிதாவின் சித்தத்தைக் கஷ்டப்பட்டு செய்யும்படிச் செய்தது.
பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க தாம் செய்ய வேண்டியதெல்லாம் இயேசுவை விசுவாசிப்பதே என்று அநேக கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மத்தேயு 7:21 நம்மிடம் சொல்வது என்னவென்றால், அவரை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று கூறுபவர்களில் எல்லோரும் பரலோக ராஜ்ஜியத்தினுள் நுழைவதில்லை.
இந்த வசனத்தைப் படிக்கும் அநேகர் “அது நானாக இருக்கலாம்” என்று ஆச்சரியத்திற்குள்ளாவார்கள். “இது அவிசுவாசிகளைக் குறித்து இயேசு கூறியதாக இருக்கலாம்” என்று தம்மை தாமே சிலர் திருப்திபடுத்திக் கொள்வார்கள். ஆனால், இந்த சிந்தனை அவர்கள் மனதில் குடிகொண்டு, அவர்களை நச்சரித்துக்கொண்டேயிருக்கும்..
ஆகவே, அவர்கள் வசனத்தின் “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான்” என்ற பகுதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். “என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே” என்ற வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு அதனை தம்மால் செய்யமுடியும் என்றெண்ணி, தவறாமல் தசம பாகம் கொடுப்பது, அதிகாலையில் ஜெபிப்பது, பிரசங்கம் செய்வது, நற்செய்கைகளில் ஈடுபடுவது, பாவம் செய்யாதிருப்பது. . . இவற்றையெல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு முயற்சி செய்கிறார்கள். இத்தகையவரைப் பார்க்கும்போது என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது.
இந்த வசனத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளாததாலேயே அநேக மக்கள் தவறு செய்கிறார்கள். ஆகவே, இந்த வசனத்தைப் பற்றி தெளிவாக விளக்க விரும்புகிறேன், அதனால் கர்த்தரின் சித்தம் என்ன என்று நாம் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் வாழ முடியும்.
முதலாவதாக, கர்த்தரின் சித்தம் எனப்படுவது மக்களை பாவங்களிலிருந்து விடுவிக்கும்பொருட்டு அவரின் குமாரர், மக்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும்.
எபேசியர் 1:5 இல் எழுதப்பட்டுள்ளது, “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நம்மை மறுபடியும் பிறக்கச்செய்ய அனுமதிக்கும்படியாக, இயேசு நம் பாவங்களையெல்லாம் கழுவி விட்டார் என்ற உண்மையான நற்செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவரின் நோக்கம். அவரின் குமாரரான இயேசுவின் மீது நம் பாவங்களையெல்லாம் சுமத்தி நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் நாம் பிறக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். இதுவே கர்த்தரின் சித்தமாகும்.
 
 
“கர்த்தாவே! கர்த்தாவே!” என்பதைக் குறித்து
 
இயேசுவை விசுவாசிக்கும்போது நமக்கு தெரிந்திருக்கவேண்டியது என்ன?
கர்த்தரின் சித்தம்.
 
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” (மத்தேயு 7:21)
கர்த்தரின் சித்தத்தை இரண்டு வழிகளில் அறிய வேண்டியவர்களாக இருக்கிறோம். முதலாவது, அவருடைய சித்தத்தின்படியே நாம் பாவ மன்னிப்பு பெற்றோம் என்பதையும் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தோம் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டாவதாக, அவ்விசுவாசத்திற்கேற்றபடி செய்யவேண்டும்.
பூமியிலுள்ள எல்லா மனிதர்களின் பாவங்களையும் துடைத்துப்போட வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாகும். சாத்தான் நம் மூதாதையரான ஆதாமை பாவத்தில் விழும்படிச் செய்தான். ஆனால், கர்த்தரின் சித்தம் மனிதனின் எல்லாப் பாவங்களையும் கழுவுவதாக இருந்தது. விசுவாசத்துடன் தசம பாகம் செலுத்துவதோ, அதிகாலையில் ஜெபம் செய்வதோ, கர்த்தரின் சித்தமல்ல என்பதையும், பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பதே அவர் சித்தம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாமெல்லாம் பாவக்கடலில் மூழ்கிபோகக்கூடாது என்பதும் அவரின் சித்தமாக இருக்கிறது.
வேதாகமம் கூறுகிறது. ‘கர்த்தரே, கர்த்தரே` என்று கூப்பிடும் எல்லோரும் பரலோக ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்கமாட்டார்கள். இதன் பொருள் என்னவென்றால், இயேசுவை மட்டும் நாம் விசுவாசிக்காது, நம்மிடமிருந்து கர்த்தர் எவற்றை எதிர்ப்பார்க்கிறார் என்பதனை அறிவதுமாகும். பாவங்களிலிருந்து நம்மை மீட்பதும் அவர் சித்தமாயிருக்கிறது. ஆதாம் மற்றும் ஏவாளின் சாசனப்படி நாம் பாவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் அறிந்திருக்கிறார்.
 
 
கர்த்தரின் சித்தம்
 
கர்த்தரின் சித்தம் யாது?
நம்மைப் பாவங்களிலிருந்து விடுவித்து தம் பிள்ளைகளாக்குவது.
 
மத்தேயு 3:15 கூறுகிறது, “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றவே நம்மை எல்லாப்பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும் பொருட்டு இயேசு இவ்வுலகிற்கு வந்தார். யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, கர்த்தரின் சித்தம் நிறைவேறிற்று.
அவர் நம்மை இரட்சித்து தம் பிள்ளைகளாக்கும்படி விரும்புகிறார். அப்படிச் செய்வதற்கு அவர் குமாரன் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. எல்லோரையும் அவர் பிள்ளைகளாக்குவது அவர் சித்தமாய் இருந்தது. ஆகவே சாத்தானின் பொறியிலிருந்து மக்களைக் காப்பாற்ற, அவர்களின் எல்லாப் பாவங்களையும் சுமக்கும்படி அவரின் சொந்த குமாரரை இவ்வுலகத்திற்கு அனுப்பினார். மக்கள் அவரின் பிள்ளைகளாகும்படி தம் ஒரே குமாரரைப் பலியாக மக்களுக்கு ஈந்ததும் அவரின் சித்தமாகும்.
இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் மரித்ததால் கர்த்தரின் சித்தம் நிறைவேறிற்று. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நமது எல்லாப்பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதையும், தம் சிலுவை மரணத்தின் மூலம் நம் மீறுதல்களின் தீர்ப்பினை ஏற்றார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாய் இருக்கிறது.
“அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). கர்த்தர் தம் மக்களை பாவங்களிலிருந்து இரட்சித்தார். அதனைச் செய்வதற்கு, இயேசு செய்த முதல் வேலை யாதெனில் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாகும்.
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்” (மத்தேயு 3:15). இயேசு இவ்வுலகிற்கு வந்தது, தம் ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டது, சிலுவையில் மரித்தது, உயிரோடு எழும்பியது; இவையெல்லாம் கர்த்தரின் சித்தங்களாகும்.
இவற்றை நாம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். நிறைய மக்கள் மத்தேயு 7:21 ஐ வாசித்து, மரணம் முடிவு என்று தெரிந்தாலும், கர்த்தரை சேவிப்பதும், உலகிலுள்ள உடமைகளையெல்லாம் ஆலயம் கட்டுவதற்கு கொடுப்பதும் கர்த்தரின் சித்தம் என்றெண்ணுகிறார்கள்.
உடன் கிறிஸ்தவர்களே, இயேசுவை விசுவாசிக்கும் நமக்கு முதலில் தெரியவேண்டியது கர்த்தரின் சித்தம் என்னவென்று புரிந்துகொண்டு அதன்படி செய்வதேயாகும். அவரின் சித்தத்தை அறிந்து கொள்ளாமல், உன்னை ஆலயத்திற்கு அர்ப்பணிப்பது தவறாகும்.
முறையான ஆலயங்களில் விசுவாசத்துடன் வாழ்வதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும் என்று மக்கள் தமக்குள் கேட்டுக்கொள்கிறார்கள், நானும் ஒரு பிரஸ்பைட்டியன் ஆலயத்தில் கல்வானிசம் பயின்று, ஒரு முழுமையான மதப்போதகரைப் போன்ற தாயால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டேன். “முறையான ஆலயம்” என்றழைக்கப்படும் ஆலயத்தில் பயின்றேன்.
மிகப்பெரிய ரபியான கமாலியேலிடம் சட்டமும், பெஞ்சமின் கோத்திரத்தில் பிறந்ததையும் குறித்து தான் பெருமைப் பாராட்ட முடியும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். பவுல் மறுபடியும் பிறப்பதற்கு முன்னால், இயேசுவை விசுவாசிப்போர்களை கைது செய்வதற்காக தன் வழியில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் அவன் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் இயேசுவிடம் விசுவாசம் கொண்டு, நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறத்தலை ஆசீர்வாதமாகப் பெற்று நீதிமானானான்.
 
 
செய்கைக்கு முன்பு கர்த்தரின் சித்தத்தை நாமறிந்திருக்க வேண்டும்.
 
இயேசுவை விசுவாசிக்கும் முன் எது அவசியம்?
அவருடைய சித்தத்தை முதலில் அறிந்திருக்க வேண்டும்.
 
நம்முடைய பரிசுத்தமே கர்த்தரின் சித்தமாகும். “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகி இருந்து.” (1 தெசலோனிக்கேயர் 4:3) நீர் மற்றும் ஆவியால் நாம் முற்றிலும் பரிசுத்தமாக்கப்படுவதும், விசுவாச வாழ்வு வாழவேண்டியதும் கர்த்தரின் சித்தமென்று நாம் அறிந்திருக்கிறோம்.
யாரொருவன் இயேசுவை விசுவாசித்தபோதிலும் தன் இருதயத்தில் இன்னும் பாவியாய் இருந்தால், அவன் தேவனுடைய சித்தத்தின்படி வாழவில்லை என்று அர்த்தமாகும். இயேசுவினுள் கண்ட இரட்சிப்பின் மூலம் நாம் பரிசுத்தப்படுவது அவர் சித்தத்தின் தேவையாய் இருக்கிறது. இதனை நாமறிய வேண்டியது அவர் சித்தஞ்செய்வதாகும்.
நான் உங்களிடம் “நீங்கள் இயேசுவை விசுவாசித்தபோதிலும், உங்கள் இருதயத்தில் பாவமிருக்கிறதா?” என்று கேட்டால், அதற்கு உங்கள் பதில் ஆமாம் என்றிருந்தால், அதன்பொருள் நீங்கள் இன்னமும் கர்த்தரின் சித்தத்தை தெளிவாக அறியவில்லை என்பதே. நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்பிக்கையின் மூலம் நாம் இரட்சிக்கப்படுவதும், பரிசுத்தமடைவதும் கர்த்தரின் சித்தமாயிருக்கிறது.
கீழ்ப்படிதலுள்ள மகன்களின் தந்தை ஒருவன் இருந்தான். ஒரு நாள், மிகவும் கீழ்ப்படிதலுள்ள தன் மூத்த மகனை அழைத்து “மகனே, வயல்வெளி மூலம் கிராமத்திற்குச் செல்...” என்று கூறினான்.
அவன் கூறி முடிக்குமுன் “சரி. அப்பா” என்று மகன் கூறிச்சென்றான். தான் என்ன செய்யவேண்டும் என்று கண்டறிய சிறிதும் பொறுத்தானில்லை. அவன் சென்றுவிட்டான்.
தகப்பன் சத்தமிட்டு அவனை அழைத்து, “மகனே, நீ மிகவும் கீழ்ப்படிதலுடன் இருப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் அங்கு நீ எனக்கு என்னசெய்யவேண்டுமென்று அறிய வேண்டும்.”
மகன் கூறினான், “அது சரி, அப்பா. நான் உங்களுக்கு கீழ்ப்படிவேன். என்னைவிட யார் உமக்கு அதிகம் கீழ்ப்படிவர்?”
கடைசியில் அவன் வெறுங்கையுடன் திரும்பி வந்தான். அவன் தகப்பனுக்கு என்ன காரியமாகவேண்டும் என்பது அவனுக்குத் தெரியாததால், அவன் தந்தையின் சித்தத்தை செய்ய அவனுக்கு வழியில்லை. அவன் குருட்டுத்தனமாக கீழ்ப்படிந்தான்.
இயேசுவைக் குறித்து நாம் அறிந்திராவிட்டால், நாமும் அந்தப்படியே இருப்போம். நிறைய பேர் தம்மை அர்ப்பணிப்பர், நிறையபேர் இறையியல் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள், தசம பாகத்தை நம்பிக்கையுடன் செலுத்துகிறார்கள், இரவு முழுவதும் ஜெபிக்கிறார்கள். உபவாசம்... இவற்றையெல்லாம் கர்த்தரின் சித்தம் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.
தம் இருதயத்திலிருக்கும் பாவங்களுடனே அவர்கள் இறக்க நேரிட்டால், பரலோகத்தின் வாசலில் அவர்கள் திருப்பிவிடப்படுவர். கர்த்தரின் சித்தத்தைச் செய்ய அவர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தாலும், கர்த்தருக்கு என்னவேண்டும் என்பது குறித்து அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
 
அக்கிரமம் என்பதன் பொருள் என்ன?
நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் குறித்து எதுவும் தெரியாது; இயேசுவை பாவியாக இருந்துகொண்டு விசுவாசிப்பது.
 
“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கத் தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்றுப் போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:22-23).
சில காரியங்களை நாம் செய்யவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர் நம்மிடமிருந்து விசுவாசத்தைக் கேட்கிறார். நிறையபேர் தீர்க்கதரிசனம் கூறுவார்கள், பிசாசுகளை விரட்டுவார்கள், அவரின் பெயரால் அதிசயங்களைச் செய்வார்கள். அவர்களுக்கு நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாது.
அதிசயங்களை செய்வதென்பது அவர்களைப் பொருத்தவரையில் ஆலயங்களை கட்டுவது, தன் சொத்தையெல்லாம் விற்று ஆலயத்திற்கு செலுத்துவது, தன் வாழ்வை கர்த்தருக்காக கொடுப்பது ஆகியவையாகும்.
அவருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் கூறுவதென்பது தலைவராக இருப்பதாக பொருள்படும். அத்தகைய மக்கள் பரிசேயரைப் போன்றவர்கள். பரிசேயர்கள் தாம் சட்டப்படி வாழ்வதாகக் கூறிக்கொண்டு இயேசுவை துன்புறுத்துவார்கள். இது முறையான ஆலயங்களிலுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தும்.
பிசாசுகளை விரட்டுவதென்பது அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகும். அவர்கள் விசுவாசத்தில் அத்தனை ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், கடைசியில்; நான் உங்களை அறியேன், என்று கர்த்தர் கூறுவார். தமக்கு அவர்களைப் பற்றி தெரியாதபோது, அவர்களுக்குத் தம்மைப் பற்றி எப்படித் தெரியும் என்று கர்த்தர் கேட்பார்.
கர்த்தர் கூறுகிறார், “நான் ஒருக்காலும் உங்களை அறியேன்; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்.” அந்நாளிலே மக்கள் கூட்டம், அவரிடம் அழும். “கர்த்தரே, நான் விசுவாசிக்கிறேன். நீர் என் இரட்சகர் என்று நான் விசுவாசிக்கிறேன்.” தாம் அவரை நேசிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கின்றது. கர்த்தர் அவர்களை அக்கிரமச் செய்கைக்காரரே (விடுதலைப் பெறாத பாவிகள்) என்றழைக்கிறார். அவர்களை அகன்றுப் போகும் படியும் கூறுகிறார்.
அந்நாளிலே, மறுபடியும் பிறவாதவர்கள் மரித்து இயேசுவின் முன்னால் நிற்கும்போது கூறுவார்கள். “நான் தீர்க்க தரிசனம் உரைத்தேன், ஆலயங்களைக் கட்டினேன். உமது நாமத்தினால் 50 மிஷினரிகளை அனுப்பினேன்.”
அப்பாவிகளுக்கு இயேசு கூறுவார், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள்.”
“நீர் என்ன கூறுகிறீர்? உம்முடைய பெயரால் நான் தீர்க்கதரிசனம் கூறியது உமக்குத் தெரியாதா? ஆலயத்தில் நிறைய வருடங்கள் பணியாற்றியுள்ளேன். . . மற்றவர்களுக்கு உம்மை விசுவாசிப்பதைக் குறித்து கற்றுகொடுத்திருக்கிறேன். உமக்கு எப்படி என்னைப் பற்றி தெரியாதிருக்கலாம்?”
அவர் பதிலளிப்பார், “உன்னை எனக்குத் தெரியாது. என்னைத் தெரிந்ததாக கூறும் உன் இருதயத்தில் பாவமிருக்கிறது. என்னைவிட்டு அகன்று போ!”
இருதயத்தில் பாவங்களை வைத்துக் கொண்டு அவரை விசுவாசிப்பது கர்த்தர் முன் அக்கிரமச் செய்கையாகும். அந்தப்படியே அவரின் இரட்சிப்பின் விதியின்படி விசுவாசிக்காததும் அக்கிரமச் செய்கையாகும். அவரின் சித்தத்தை அறிந்து கொள்ளாததும் அக்கிரமச்செய்கையாகும். அவரின் சித்தத்தை அறியாமல் அவரின் சித்தத்தை செய்ய முயல்வதும் அக்கிரமச்செய்கையாகும். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கும் ஆசீர்வாதத்தைக் குறித்து தெரிந்துக் கொள்ளாததும் அக்கிரமச் செய்கையாகும். அவருடைய சித்தத்திற்கு கீழ்படியாமல் அவரைப் பின்பற்றுவதும் அக்கிரமச் செய்கையாகும். அக்கிரமச் செய்கையும் ஒரு பாவமாகும்.
 
 
வேதாகமத்தில் காணப்படும் கர்த்தரின் சித்தம்
 
கர்த்தரின் பிள்ளைகள் யார்?
பாவங்கள் இல்லாத நீதிமான்கள்.
 
நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறத்தலைக் குறித்த நற்செய்தியை விசுவாசிக்கவேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாகும். உண்மையான நற்செய்தி நம் மறுபிறப்பைக் காப்பாற்றும். நாம் அவரின் பிள்ளைகளாக, அவருடைய நற்செய்திக்காக வாழ்கிறோம் என்பதும் அவரின் சித்தமாகும். நமக்கு கர்த்தரின் சித்தம் இன்னதென்று தெரியவேண்டும். ஆனால் அநேகருக்கு நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதான நற்செய்தி தெரியாது.
நான் மக்களிடம் நீங்கள் ஏன் இயேசுவை விசுவாசிக்கிறீர்கள் என்று கேட்டால், அநேகர், தம் பாவங்களிலிருந்து இரட்சிப்படைய இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறுகிறார்கள்.
நான் கேட்பேன், “அப்படியானால் உங்கள் இருதயத்தில் பாவமிருக்கிறதா?”
அவர்கள் கூறுகிறார்கள், “ஆமாம். இருக்கிறது.”
“அப்படியானால், நீங்கள் இரட்சிக்கப்பட்டவரா, இல்லையா?”
“ஆமாம், நான் இரட்சிக்கப்பட்டவன்.”
“தன் இருதயத்தில் பாவமிருக்கும் ஒரு பாவி பரலோக ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்க முடியுமா?”
“இல்லை, அவனால் முடியாது.”
“அப்படியானால், நீங்கள் பரலோக ராஜ்ஜியம் போவீர்களா? அல்லது எரியும் நரகத்திற்கு போவீர்களா?”
அவர்கள் தாம் பரலோக ராஜ்ஜியத்திற்கு செல்வதாக கூறுவர், ஆனால் அவர்களால் செல்லமுடியுமா? அவர்கள் நரகத்திற்கே செல்வார்கள்.
தம் இருதயத்தில் பாவங்கள் இருந்தாலும் தாம் இயேசுவை விசுவாசிப்பதால், பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்றும், இதுவே தாம் செய்யவேண்டிய கர்த்தரின் சித்தமென்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் கர்த்தர் பாவிகளை பரலோக ராஜ்ஜியத்திற்குள் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
கர்த்தரின் சித்தம் என்ன? இயேசுவை விசுவாசிப்பதும், இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் மூலம் பாவ விடுதலையின் ஆசீர்வாதத்தை விசுவாசிப்பதும் கர்த்தரின் சித்தம் என்று வேதம் கூறுகிறது.
நீர் மற்றும் ஆவியின் மூலம் மறுபடியும் பிறக்கும் ஆசீர்வாதத்தை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாவார்கள். அவரின் பிள்ளைகளாவது நமது மகிமையாகும். அவரின் பிள்ளைகள் நீதிமான்கள்.
கர்த்தர் நீதிமான் என்றழைக்கும்போது, அவர் ஒரு கிறிஸ்தவ பாவியை நீதிமான் என்று கருதுகிறாரா? கர்த்தர் பொய்ச் சொல்பவர் அல்ல. ஆகவே அவரின் முன்னால், நீ ஒரு பாவி அல்லது நீதிமான். அங்கே, ‘பாவமில்லாதவனாகக் கருதலாம்` என்பது அறவே கிடையாது. நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியை விசுவாசிப்போரை மட்டுமே பரிசுத்தமாகும்படி அவர் அழைக்கிறார்.
 
நாம் எப்படி கர்த்தரின் பிள்ளைகளாக முடியும்?
நீர் மற்றும் இரத்தம் பற்றிய நற்செய்தியை ஏற்றுக்கொள்வதால்.
 
கர்த்தர் இவ்வுலகின் பாவங்கள் அனைத்தையும் தம் குமாரனின் மீது சுமத்தியதால், அவரின் சொந்த மகன் கூட சிலுவையில் தீர்க்கப்படவேண்டியதாயிருந்தது. கர்த்தரால் பொய்ச் சொல்ல முடியாது. “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) அவருடைய குமாரன் மரித்தபோது, பூமியின் மீது மூன்று மணி நேரம் இருள் கவிழ்ந்தது.
“இயேசு: ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்” (மத்தேயு 27:46).
உலகின் அனைத்து மக்களையும் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு தம் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றார். தான் கர்த்தரால் கைவிடப் படப்போவதையும் சிலுவையில் அறையப்பட போவதையும் அவர் அறிந்திருந்தாலும், மனிதர்களின் பாவங்களை அவர் ஏற்றுக்கொண்டார். ஆகவே யோர்தான் நதியில் இயேசு ஏற்றுக்கொண்ட பாவங்களுக்காக கர்த்தர் தன் குமாரனாகிய இயேசுவைத் தீர்த்தார். மேலும் மூன்று மணி நேரங்களுக்கு தம் முகத்தையும் திருப்பிவிட்டார்.
“அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப் பேர்களோ, அத்தனைப் பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).
நீங்கள் கர்த்தரின் பிள்ளைகளா? நாம் நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறக்கும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டதால் நாம் மறுபடியும் பிறந்தவர்களானோம். நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறந்தவர்கள் நீதிமான்கள். நாமெல்லாம் இப்போது நீதிமான்களானோம்.
“தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31) நீதிமானாயிருக்கும் ஒருவன், கர்த்தருக்கு முன்பும், மக்களுக்கு முன்பும் தன்னை நீதிமான் என்றழைக்கையில், விடுதலையடையாதோர் அவனைத் தீர்க்க முயற்சிக்கிறார்கள். ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான் “தேவன் தெரிந்துக்கொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.” (ரோமர் 8:33) கர்த்தர் இயேசு மூலமாக நம் பாவங்கள் எல்லாவற்றையும் கழுவி விட்டு, பரிசுத்தமானவன், நீதிமான், என் பிள்ளைகள் என்றழைக்கிறார். நாம் அவரின் மகிமையின் பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தார்.
நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறந்தவர்கள் கர்த்தரின் பிள்ளைகள். அவர்கள் நிரந்தரமாக அவருடன் வாழ்வார்கள். அவர்கள் இப்பூமியின் வெறும் உயிரினமில்லை. அவர்கள் பரலோகத்திற்கு சொந்தமான தேவனின் பிள்ளைகள்.
இப்பொழுது அவர்கள் கர்த்தருடைய நீதியின் புத்திரர்கள். யாராலும் அவர்கள் மீது குற்றஞ்சொல்லவோ, தீர்க்கவோ கர்த்தரிடமிருந்து பிரிக்கவோ முடியாது.
இயேசுவை விசுவாசிக்கவேண்டுமானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். வேதாகமத்தைத் தெரிந்திருக்க வேண்டும். கர்த்தரின் சித்தத்தை அறிந்து அவரை விசுவாசிப்பது மிகவும் அவசியம். அப்பொழுது நம்மால் அவரின் சித்தப்படிச் செய்யமுடியும்.
 
 
பாவிகள், நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பது கர்த்தரின் சித்தமாகும்
 
ஒரு பாவியைப் போல் இயேசுவை கர்த்தர் அனுப்பியதேன்?
எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்படும்பொருட்டு.
 
நீராலும் ஆவியாலும் நாம் மறுபடியும் பிறப்பதும், விடுதலைப் பெற்றோராவதும் கர்த்தரின் சித்தமாக இருக்கிறது. “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” (1 தெசலோனிக்கேயர் 4:3)
நாம் இரட்சிக்கப்படும்பொருட்டு, நம் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட, கர்த்தர் தன் குமாரனை அனுப்பியது கர்த்தரின் சித்தமாகும். நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறக்க வைக்கும் இதுவே ஆவியானவரின் சட்டமாகும். அது நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக்கிற்று.
நாம் விடுவிக்கப்பட்டவர்கள். இப்பொழுது உங்களால் கர்த்தரின் சித்தத்தை உணர்ந்துகொள்ளமுடிகிறதா? நம்மை விடுவிப்பது அவரின் சித்தமாகும். நாம் உலகத்தோடு ஒப்புரவாகப் போவதை அவர் விரும்பவில்லை. ஆனால் அவரின் வார்த்தைகளை மட்டும் விசுவாசிக்க வேண்டுமென்றும், அவரை மட்டும் சேவிக்கவேண்டுமென்றும் விரும்புகிறார்.
மறுபடியும் பிறந்தவர்கள், நற்செய்தியை சாட்சி கொடுக்க வேண்டுமென்பதும், ஆலயத்தில் இருக்கவேண்டுமென்பதும், மற்ற ஆத்துமாக்களைத் திரும்ப கர்த்தரிடம் அழைத்துவரும் பணியில் அர்ப்பணிக்கவேண்டுமென்பதும் கர்த்தரின் சித்தமாயிருக்கிறது.
நாம் பாவம் செய்வது வேண்டுமென்றே அல்ல. அதன் காரணம் நாம் பலவீனர்களாக இருப்பதே. ஆனால் இயேசு அப்பாவங்களை நீக்கிப்போட்டார். கர்த்தர் யோவான் ஸ்நானன் மூலம், உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது சுமத்தினார். இக்காரணம் பற்றியே தம் குமாரனை அனுப்பி யோவானால் ஞானஸ்நானம் பெறும்படிச் செய்தார். இதனை விசுவாசிப்பதால் நாம் இரட்சிக்கப்பட்டோம். இது கர்த்தரின் சித்தமாகும்.
 
 
கர்த்தரால் அனுப்பப்பட்ட இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாகும்
 
இயேசு ஏன் பாவிபோல் வந்தார்?
மனிதர்களின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக்கொள்வதற்காக.
 
கர்த்தரால் அனுப்பப்பட்டவரை விசுவாசிப்பது, கர்த்தரின் சித்தம் என்று வேதம் சொல்லுகிறது. “அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாய் இருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவை புசித்தார்களே என்றார்கள்.” (யோவான் 6:28-31).
இயேசுவிடம் மக்கள் கூறினர். கானான் நாட்டிற்கு செல்லும் வழியில் கர்த்தர் மோசேயிற்கு ஒரு அடையாளத்தைக் காண்பித்தார். இஸ்ரவேலர்களுக்கு பரலோகத்திலிருந்து மன்னாவைக் கொடுத்தார். அதனால் அவர்கள் கர்த்தரை நம்பினார்கள். (யோவான் 6:32-39) மக்கள் இயேசுவிடம் கேட்டனர், “தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.”
கர்த்தருக்கேற்ற செய்கைகளை செய்யவேண்டுமானால் தன்னை அவர்கள் நம்பவேண்டுமென்று இயேசு கூறினார். நம் கர்த்தரின் செய்கைகளை நம்பவேண்டுமானால், இயேசுவின் செய்கைகளை நம்பவேண்டும். நற்செய்தியை விசுவாசிப்பதும், பிரசங்கிப்பதும் மட்டுமல்ல, அதன்படி வாழ்வதும் கர்த்தரின் சித்தமாக இருக்கிறது.
கர்த்தர் நமக்கு கட்டளையிடுகிறார். “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி, பிதா குமாரர் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைகொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” (மத்தேயு 28:19-20).
இயேசு தெளிவாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி கூறுகிறார். அவர் பிதாவிற்காகவும், ஆவியானவருக்கும் செய்தவைகளெல்லாம், அவரின் ஞான்ஸ்நானத்தில் அடங்கியிருக்கிறது. நாம் இதனை அறிந்துக் கொள்ளும்பொழுது கர்த்தரை விசுவாசிக்கவும், இயேசு இவ்வுலகில் செய்தவற்றை நோக்கவும், இவை குறித்து ஆவியானவர் எப்படி சாட்சி கொடுக்கிறார் என்பதையும் அறிய முடியும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து சாட்சி சொல்ல கர்த்தர் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். ஆகவே, நாம் வேதவாக்கை விசுவாசித்தால் மட்டும் இரட்சிக்கப்படுவோம்.
 
 
கர்த்தரின் வேலையைச் செய்தல்
 
நம் வாழ்வின் நோக்கம் என்ன?
கர்த்தரின் சித்தத்தின்படி உலகமெங்கும்போய் நற்செய்தியை பரப்புவதே.
 
நாம் கர்த்தருடைய வேலையைச் செய்ய வேண்டுமென்றால், முதலில் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் நம்பவேண்டும். கர்த்தரால் அனுப்பப்பட்டவரை விசுவாசிப்பதே கர்த்தருக்காக நாம் செய்யும் வேலையாகும். இயேசுவை விசுவாசிக்கும் பொருட்டு, அவர் நம்மை நீரினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்தார் என்பதை நாம் முதலில் விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தரின் சித்தமானது நாம் இயேசுவை விசுவாசித்து நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் முற்றுப் பெறுகிறது. இதன் மூலமாக நாம் கர்த்தரின் வேலையைச் செய்கிறோம். அவர் கூறினார் நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறத்தலான ஆசீர்வாதத்தை விசுவாசிப்பவர்கள் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்க முடியும்.
கீழ்க்கண்ட முக்கியமான உண்மைகளை அறிந்து பரலோக ராஜ்ஜியத்தில் நம்மிடத்தைப் பெறுவோமாக. கர்த்தரின் உண்மையான சித்தத்தை அறிந்துகொள்ளுதல், இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதை அறிந்து விசுவாசித்தல், பரலோக ராஜ்ஜியத்தின் விரிவிற்காக வாழ்தல், மற்றும் நீ மரணமடையும்வரை நற்செய்தியை பிரசங்கித்தல்.
சக கிறிஸ்தவர்களே! நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பவர்களே, கர்த்தரின் வேலையைச் செய்பவர்கள். கர்த்தரால் அனுப்பப்பட்டவரை விசுவாசிப்பதே கர்த்தருக்கான வேலையாகும். கர்த்தரால் அனுப்பப்பட்டவரின் மீது நம் பாவங்கள் சுமத்தப்பட்டடதையும், இயேசு நம் இரட்சகர் என்பதையும் விசுவாசிப்பது கர்த்தரின் சித்தப்படி செய்வதாகும்.
மனிதனைப் பாவத்திலிருந்து விடுவிப்பதான இயேசுவின் செய்கை, அவர் யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றதாலும், நமக்காக சிலுவையில் மரித்ததாலும் நிறைவேற்றப்பட்டது. கர்த்தருக்கான இரண்டாம் கட்டவேலை யாதெனில், அவரால் அனுப்பப்பட்டவரை நம்புவதும், உலகின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொண்ட இரட்சகரை நம்புவதும், நற்செய்தியை உலகமெங்கும் பிரசங்கிப்பதுமாகும்.
மறுபடியும் பிறந்தவர்களான நாம், உலகின் முடிவு வரையும் நற்செய்தியின் படி வாழ்ந்து பிரசங்கிக்கவேண்டும்.
 
கர்த்தரின் சித்தம் தெரியாமல் இயேசுவை விசுவாசிப்பவர்கள் எங்கே போவார்கள்?
அவர்கள் நரகத்திற்குப் போவார்கள்.
 
“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:22-23).
இந்த வசனங்கள் கர்த்தர் முன்பு பாவிகள் யார், அக்கிரமச்செய்கைக்காரர் யார் என்று மிகவும் தெளிவாக கூறுகிறது.
‘கர்த்தரே, கர்த்தரே` என்று அநேக மறுபடியும் பிறவாதவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இருதயத்தில் பாவமிருப்பதால் அவர்கள் வேதனையில் உள்ளார்கள். ஆகவே, அவர்கள் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டு ‘கர்த்தரே, கர்த்தரே` என்று அறைவாசி குற்றஞ்சொல்வது போலவும், ஜெபத்திற்கு பொருந்தாத விதத்திலும் அழைக்கிறார்கள்.
ஜெபத்தில் சத்தமிட்டால் அவர்கள் மனசாட்சி சுத்தமாகும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது அப்படியாகாது: ஏனெனில் அவர்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது. அவர்கள் மலைகளுக்குச் சென்று ஜெபிக்கிறார்கள், கர்த்தர் வெகு தூரத்திலிருப்பது போல வியாகூலமாக சத்தமிட்டு அழுகிறார்கள். நம்மிடம் முழுமையான விசுவாசம் இல்லாவிட்டால் அடிக்கடி ‘கர்த்தரே, கர்த்தரே` போடவேண்டியதுதான்.
மறுபடியும் பிறவாதோராலான சபைகளில், நற்செய்திப் பெட்டி உடைந்துபோகும்படியாக மிகவும் ஆவலுடன் ஜெபிக்கிறார்கள்.
‘கர்த்தரே, கர்த்தரே` என்று கூறுபவர்களில் எல்லோரும் பரலோக ராஜ்ஜியம் போக முடியாது என்று வேதாகமத்தில் நாம் பார்க்கலாம். நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பவர்களுக்கு, கர்த்தரின் வேலையைச் செய்யும்படி அவர்களை வழி நடத்தும் நம்பிக்கை இருக்கிறது.
இருதயத்தில் பாவத்தை வைத்துக்கொண்டு, அவரின் பெயரைக் கூப்பிடுவது, அக்கிரமச்செய்கை என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் மலைகளில் நடக்கும் ஜெபக்கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறீர்களா? சில பெண் டீக்கன்கள் ஒரேயடியாக அழுவார்கள். அவர்கள் அவரின் பெயரை அழைக்கிறார்கள், ஏனெனில் இயேசுவை சத்தியத்தில் அவர்கள் சந்தித்ததில்லை. ஆவியானவரை அவர்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டதில்லை, நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கவில்லை. அவர் பெயரை மிகவும் அவசரமாகக் கூப்பிடும் காரணம், தாம் நரகத்திற்குச் செல்வோம் என்ற நிரந்தர பயம் அவர்களிடம் உள்ளதே.
ஒருவன் தன் வாழ்வை ஆலயப்பணிகளைச் செய்யும்பொருட்டு மிஷனரியாகவோ, போதகராகவோ அர்ப்பணித்து வாழுகிறான். இறுதியில் அவன் கர்த்தரால் கைவிடப்பட்டான் என்று கொள்க. பெற்றோராலோ, வாழ்க்கைத் துணையினாலோ கைவிடப்படுதலே ஒருவனுடைய இதயத்தை உடைத்துவிடும். ஆனால், நம் கர்த்தரால், ராஜாதிராஜாவால், நம் ஆத்துமாவின் நீதிபதியால், கைவிடப்பட்டால் நாம் எங்கே போவோம்
இந்நிலை உங்களில் ஒருவருக்கும் வராதிருப்பதாக. தயவுசெய்து நீர் மற்றும் ஆவியைக்குறித்த நற்செய்தியைக் கேட்டு விசுவாசியுங்கள். நாம் மறுபடியும் பிறப்பதும், நீர் மற்றும் ஆவி குறித்த நற்செய்தியில் வாழ்வதும் கர்த்தரின் சித்தமாக இருக்கிறது.
கிறிஸ்தவர்களாகிய நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை, உண்மையாக விசுவாசித்து வேதாகமத்தின் சத்தியத்திலிருந்து பலத்தைப் பெறவேண்டும். அப்பொழுது மட்டுமே கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து நாம் இரட்சிக்கப்படமுடியும்.