• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 7 : முன்குறித்தல் மற்றும் தெரிந்து கொள்ளப் படுதல் ஆகிய கோட்பாடுகளில் உள்ள தவறுகள்

[7-1] தெரிந்துக்கொள்ளப்படுதல், முற்குறித்தல் ஆகிய தத்துவங்களில் உள்ள தவறான வாதம் (ரோமர் 8:28-30)

(ரோமர் 8:28-30)
“அன்றியும் அவருடைய தீர்மானத்தின் படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவராய் இருக்கும்பொருட்டு தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்; எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.”
 
 
கர்த்தர் நம்மில் ஒரு சிலரைத்தான் தெரிந்தெடுக்கிறாரா?
இல்லை. இயேசு கிறிஸ்துவுக்குள் நம் அனைவரையும் தெரிந்தெடுக்கிறார்.
 
மறையியல் தத்துவத்தில் முன்குறித்தல் மற்றும் தெரிந்துக்கொள்ளபபடுதல் ஆகியவை கிறிஸ்தவ கொள்கையின் அடிப்படைத் தத்துவமாகும். இது நிறைய பேரை இயேசுவை நம்புவதற்கு வழி நடத்தி வேதவாக்கை தவறாக புரிந்துக் கொள்ளும்படி செய்திருக்கிறது. இந்த தவறுதலாக வழி நடத்தப்பட்ட தத்துவம் நிறைய குழப்பத்தை விளைவித்துள்ளது.
முன்குறித்தலைக் குறித்து உண்மையற்ற இறையியல் என்ன கூறுகிறது என்றால் கர்த்தர் தமக்கு பிடித்த மக்களை தேர்ந்தெடுத்தார். அதே சமயம் அவருக்கு பிடிக்காதவர்களை ஆக்கினைக்குள்ளாக்கினார். இதன்பொருள் என்னவென்றால் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அவர்கள் பரலோகத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அதே சமயம் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்படாத மற்றவர்கள் நரகத்தில் எரியப்படுவதற்கு தயாராக இருப்பவர்கள்.
கர்த்தர் நம்மில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்தால், “நான் இரட்சிக்கப்படும்படி தேர்வு செய்யப்பட்டுள்ளேனா? என்ற மனவேதனை மிக்க கேள்விக்கு நாம் ஆளாவோம். இயேசுவை நம்புவது நமக்கு வேண்டாத வேலையாகிவிடும். ஆகவே, இந்த தத்துவம் நிறைய மக்களை, அவர்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை விசுவாசத்திற்கு மேலாக எண்ணுபடியாகச் செய்தது.
இதனை நாம் நம்பினால் சந்தேகங்களிலிருந்து விடுபட்டு கர்த்தரை மட்டும் எப்படி நம்புவது? கர்த்தர் நம்மை தேர்ந்தெத்தார் என்று எப்படி நாம் நிச்சயம் செய்வோம்? அவர் “தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன்? புற ஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புற ஜாதிகளுக்கும் அவர் தேவன் தான்.” (ரோமர்3:29) என்று கூறினாலும், கர்த்தர் தாம் தெரிந்துகொண்டவர்களுக்கு மட்டுமே தேவனாயிருப்பார்.
நிறைய மக்கள் முன்குறித்தல் மற்றும் தெரிந்தெடுத்தல் ஆகியவற்றை சரிவர தெரிந்துக்கொள்ளாததால், அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் தாம் அழிந்துப்போவோம் என்று பயப்படுகிறார்கள்.
எபேசியர்1:3-5 கூறுகிறது, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக.”
ஆகவே, முன் குறித்தல், தெரிந்துகொள்ளப்படுதல் ஆகியவற்றின் இறையியல் கருத்துக்களை நாம் மறு ஆய்வு செய்யவேண்டும். முன் குறித்தல், தெரிந்துக் கொள்ளப் படுதல் ஆகியவற்றைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது என்று நாம் முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும். நீராலும் ஆவியாலும் இரட்சிக்கப்படுதலைக் குறித்த விசுவாசத்தையும் வலுப்படுத்தல் வேண்டும்.
ரோமர் நம்மிடம் என்ன கூறுகிறது. சில இறையியலாளர்கள் புதிதாக “நிபந்தனையற்ற தேர்வு” என்ற விசித்திரமான கொள்கையினை தயாரித்துள்ளனர். இறையியல் கர்த்தரா? அப்படியானால்? இறையியல் கர்த்தரே அல்ல.
இவ்வுலகைப் படைக்கும் முன்னரே, எல்லா மனிதர்களையும் இயேசுவுக்குள் தெரிந்துகொண்டு, நம்மை நீதிமான்களாக்கி இரட்சிக்க தம் மனதை ஆயத்தப்படுத்தியிருந்தார். இயேசு நம்மை நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் நேசிக்கிறார். அவரை பாகுபாடுபார்க்கும் கர்த்தராக சித்தரிக்காதீர்கள். அவிசுவாசிகள் தம் சொந்த யோசனைகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால் விசுவாசிகள் எழுதப்பட்டுள்ள வேதவாக்கினை தம் நம்பிக்கைக்கு அஸ்திவாரமாக்குகிறார்கள்.
 
 
பழைய ஏற்பாட்டில் தெரிந்துக் கொள்ளப் படுதல்
 
நிபந்தனையற்ற தேர்வு என்ற தத்துவம் சரியானதா?
இல்லை. நம் தேவன் அத்தகைய குறுகிய மனம் உள்ளவரல்ல. கர்த்தர் இயேசுவுக்குள் எல்லா பாவிகளையும் தேர்ந்தெடுக்கிறார். குறிப்பிட்ட சிலரை மட்டுமல்ல.
 
ஆதியாகமம் 25:21-26 இல் ஈசாக்கின் இரண்டு மகன்களான ஏசாவையும் யாக்கோபையும் குறித்துப் படிக்கிறோம். கர்த்தர் இரண்டு மகன்களும் தம் தாயின் கர்ப்பத்திலிருக்கும் போதே யாக்கோபைத் தெரிந்தெடுத்தார்.
வேதவாக்கை தவறுதலாக புரிந்துக்கொண்டவர்கள் மேற்கண்ட சம்பவத்தை நிபந்தனையற்ற தேர்வுக்கு அடிப்படையாக கருதுகிறார்கள். இது கிறிஸ்தவத்தில் தலைவிதியை ஏற்படுத்தும் கர்த்தர்களை கலப்பதாகும்.
“நிபந்தனையற்ற தேர்வு” மூலம் கர்த்தர் நம்மை தேர்ந்தெடுக்கிறார் என்றும் அது இயேசுகிறிஸ்துவுக்குள் இல்லையென்றும் நாம் நம்பினால் அது நாம் தலைவிதியைப்பற்றி போதிக்கும் கர்த்தர்களையும் சிலைகளையும் ஆராதிப்பதற்கு சமமாகும். நம்முடைய தேவன் தலைவிதியைப்பற்றி கூறும் கர்த்தர் இல்லை. தலைவிதியைப்பற்றி கூறும் கர்த்தர்களை நாம் நம்பினால், கர்த்தரின் திட்டங்களை நாம் மறுப்பவர்களாகி சாத்தானின் வலையில் சிக்குவோம்.
கர்த்தரின் சித்தத்திற்குரிய மக்கள் கீழ்படியாதவர்களாக இருந்தால், கொல்லப்படும்படிக்கு உள்ள மிருகங்களுக்கு அவர்கள் மேலானவர்கள் அல்ல. விசுவாசிகளாகிய நாம் மிருகங்கள் அல்லாததால் நாம் உண்மையான விசுவாசிகளாக வேண்டும். நாம் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள சத்தியத்தை வாசித்து நம்பவேண்டும். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள சத்தியத்தை முதலில் நினைக்கவில்லையென்றால் அது நம்மை சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பதாகும்.
உண்மையான விசுவாசத்தைப் பெற, நாம் முதலில் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள உண்மையை நினைவு கூற வேண்டும். மேலும் கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்தவர்களின் நம்பிக்கையையும் பின்பற்றவேண்டும்.
கல்வானிச தத்துவம், பகுதி பாவ விடுதலையை குறித்து குறிப்பிடுகிறது. இது கர்த்தரின் அன்பும், கர்த்தரின் பாவ விடுதலையும் சிலருக்கு பொருந்தாது என்று குறிப்பிடுகிறது. இது சரியாகுமா?
வேதாகமம் கூறுகிறது, “எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.” (1 தீமோத்தேயு 2:4) பாவ விடுதலை ஆசீர்வதமானது குறிப்பிட்ட சிலருக்குத்தான் பொருந்தும் என்றால், நிறைய விசுவாசிகள் இயேசுவை நம்புவதை விட்டு விலகிவிடுவர். இப்படிப்பட்ட குறுகிய மனப்பாவம் உடைய கர்த்தரை யார் தான் நம்புவர்?
நம் கர்த்தர் குறுகிய மனப்பாவம் உடையவரல்ல என்று நமக்குள் உறுதியான நம்பிக்கை இருக்கவேண்டும். அவரே சத்தியத்தின் கர்த்தர், அன்பு மற்றும் நீதியுமுள்ளவர். இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறத்தலைக் குறித்து விசுவாசிக்க வேண்டும். இந்தப்படியாக நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படலாம். நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்களுக்கு இயேசுவே இரட்சகர்.
கல்வானிசத்தைப் பொருத்தவரை, ஔரிடத்தில் பத்துபேர் இருந்தார்கள் என்றால், சிலர் கர்த்தரால் இரட்சிக்கப்படுவர், மற்றவர்கள் நரகத்தின் அக்கினியில் எரியும்படிக்கு விட்டுவிடப்படுவர். இது முற்றிலும் தவறானதாகும்.
கர்த்தர் சிலரை நேசிக்கிறார் மற்றவர்களை தள்ளிவிடுகிறார் என்பது அபத்தமாகும். கர்த்தர் இன்று நம்முடன் இருக்கிறார் என்று கொள்ளுங்கள். அவர் வலது பக்கத்திலிருப்பவர்களைத் தெரிந்துகொண்டு தம் இடப்பக்கம் இருப்பவர்களை நரகத்திற்கு ஒப்புக்கொடுக்கும்படியாகவும் தீர்மானம் செய்தால், நாம் அவரை கர்த்தர் என்போமா?
தள்ளிவிடப்பட்டவர்கள் இதை எதிர்த்து கூக்குரலிடமாட்டார்களா? படைக்கபட்ட எல்லாம் “கர்த்தர் எப்படி ஒருதலைப் பட்சமாக இருக்கலாம்?” என்று சத்தமிட்டு அழுவார்கள். நிபந்தனையற்ற தேர்வு என்பது தவறானது. ஏனெனில் கர்த்தர் இயேசுவுக்குள் எல்லா மனிதர்களையும் தெரிந்து கொண்டார்.
ஆகவே, யாரேனும் இயேசுவின் பேரினால் கர்த்தரால் அழைக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அப்படியென்றால் கர்த்தர் தம்மிடம் யாரை அழைக்கிறார்? பாவிகளையே அவர் அழைக்கிறார். நீதிமான்களை அல்ல. தம்மை நீதிமான் என்று கருதுபவர்களை அவர் அழைப்பதில்லை.
கர்த்தரின் பாவ விடுதலை ஆசீர்வாதம் பாவிகளுக்கும் நரகத்திற்கு தீர்க்கப்பட்டவர்களுக்கும் உடையது. தேர்வு என்பது கர்த்தர் பாவிகளைத் தம் நீதியின் பிள்ளைகளாக்கும்படி அழைப்பதாகும்.
 
 
கர்த்தர் நீதியாயிருக்கிறார்
 
கர்த்தர் குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் நேசிக்கிறாரா?
இல்லை. கர்த்தர் குறுகிய மனப்பாவம் உடையவரில்லை. கர்த்தர் நீதியாயிருக்கிறார்.
 
கர்த்தர் நீதியாயிருக்கிறார். நிபந்தனையின்றி தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை மட்டும் நேசிக்கும் கர்த்தர் அவரல்ல. அவர் பாவிகளை இயேசுவின் பெயரால் அழைத்தார். இயேசு அளிக்கும் பாவ விடுதலையின் மூலம் இரட்சிக்கப்படாமல் அவர் அளிக்கும் பாவ மன்னிப்பை பெறாமல், இறைவனின் அன்பையும் இரட்சிப்பையும் குறித்து நமக்கு எப்படித் தெரியும்? அவரை நீதியற்ற கர்த்தராக சித்தரிக்க வேண்டாம்.
எபேசியர் 1:3-5 ஐ வாசிக்கும்போது எது காணாமல் போயிற்று என்று கண்டறிய முயலுங்கள். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குறிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக.” இதில் எது காணாமல் போயுள்ளது? காணாமல் போன சொற்கள் “இயேசு கிறிஸ்துவுக்குள்” என்பதாகும்
கல்வானிசம் கூறும் நிபந்தனையற்ற தேர்வு வேதாகம சொற்களுடன் தொடர்பில்லாதது. வேதம் கூறுகிறது. “அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே.”
நீரினாலும் ஆவியினாலும் கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று கர்த்தர் மனிதகுலத்தை தெரிந்துகொண்டார். பாவிகளாக மட்டுமே பிறக்க முடிந்தவர்கள் பாவ விடுதலைப் பெற்று அவர் பிள்ளைகளாக முடிந்தது. யாரெல்லாம் இரட்சிக்கபட வேண்டும் என்று அவர் தயாரித்த பட்டியலில் எல்லா மனிதர்களையும் சேர்த்து, இயேசுவுக்குள் அவர்களை தெரிந்துகொண்டார்.
நிபந்தனையற்ற தேர்வினை முக்கியத்துவப்படுத்தும் அநேக இறையியலாளர்கள், சிலர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். நிறைய மக்கள் சம்பந்த சம்பந்தமில்லாத தத்துவங்களின் குழப்பத்திற்குள் மாட்டிக்கொள்கிறார்கள். தவறான இறையியலாளர்கள் நிபந்தனையற்ற தேர்வின் மூலம் சிலரைத் தேர்வு செய்வதாகவும் மீதி பேரை எறிந்து விடுவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அவர் வார்த்தையின் உண்மைப்படி எல்லா பாவிகளையும் அவர் இயேசுவுக்குள் தெரிந்தெடுத்தார். நிறைய மக்கள் கள்ளப் போதனைகளுக்கு தம் அதீத நம்பிக்கைகளினால் இரையாகிறார்கள்.
இயேசுவுக்குள் எல்லா மனிதர்களையும் இரட்சிக்க கர்த்தர் தீர்மானித்தார் என்பதையும் இயேசுவை விசுவாசிக்கும் எல்லோருக்கும் பாவ விடுதலை பொருந்தும் என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ளுதல் வேண்டும். அப்படிச் செய்வதனால், நாம் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படவும், கர்த்தரின் பிள்ளைகளாகவும், நீதிமான்களாகவும், நித்திய ஜீவனைப் பெற்றவர்களாகவும், கர்த்தருடைய நீதியின்மீது நம்பிக்கையுடையவர்களாகவும் இருப்போம்.
 
 
யாக்கோபு ஏசா ஆகியோரின் வாழ்க்கையில் தெரிந்துகொள்ளப்படுதல்
 
கர்த்தர் யாரை தெரிந்தெடுக்கிறார்? குறிப்பிட்ட சிலரை மட்டும்தானா?
இல்லை. கர்த்தர் எல்லோரையும் கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டார். ஆகவே, யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கிறார்களோ, அவரின் ஞானஸ்நானம் மூலம் பாவம் இல்லாதவர்களும் ஆனவர்களோ அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.
 
ஆதியாகமம் 25:19-28 இல், ஏசாவும் யாக்கோபும் தம் தாயான ரெபேக்காளின் கர்பத்தில் ஒன்றாக சங்கடப்படுகிறார்கள். கர்த்தர் ஆதியாகமம் 25:23 இல் “அதற்கு கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.”
பாவிகள் இந்த வார்த்தைகளை முன் குறித்தல் தெரிந்துகொள்ளப்படுதல் என்ற தத்துவங்களாகத் திரித்துவிட்டனர். மேலும் இயேசுவை நம்புவோர் அநேகரை தாம் தெரிந்தெடுக்கப்பட்டோமா இல்லையா என்ற குழப்பத்திலும் ஆழ்த்தினர். தம்மை தெரிந்து கொள்ளப் பட்டவர்களாக அவர்கள் கருதும்போது தாம் இரட்சிக்கப் பட்டதாக நினைத்து நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பது குறித்து நாட்டமில்லாதவர்களாகி விடுகின்றனர்.
நிபந்தனையற்ற தேர்வு என்ற கருத்து, இயேசுவை விசுவாசித்த அநேகரை பாவ விடுதலையிலிருந்து திசை திருப்பி நரகாக்கினைக்கு உள்ளாக்கியுள்ளது. அது கர்த்தர் நீதியற்றவர் போன்ற தோற்றத்தையும் தோற்றுவித்தது.
ஏனெனில் அநேக இறையியலாளர்கள் தம் மனதில் ஊற்றெடுத்த தம் சொந்த யோசனைகளைப் போதிப்பதால் இயேசுவை விசுவாசித்த அநேக மக்கள் பாதுகாப்பற்றுப் போனார்கள். தாம் தெரிந்தெடுக்கப்பட்டவர்களா அல்லது அவர்களின் பாவ விடுதலை முன் குறிக்கப்பட்டதா என்று குழம்பினர்.
யாக்கோபு, ஏசா ஆகிய இருவரில் கர்த்தர் யாரைத் தேர்ந்தெடுத்தார்? அவர் யாக்கோபை இயேசுவுக்குள் தேர்ந்தெடுத்தார். ரோமர் 9:10-11 இவ்வாறு கூறுகிறது. அவர்கள் ஒருவனுக்கு உண்டானவர்களும், இன்னும் பிறவாதவர்களும், நல்லது கெட்டது எதுவும் செய்யாதவர்களாக இருந்தாலும் கர்த்தர் யாக்கோபை அவன் சகோதரனுக்கு பதிலாக அழைத்தார்.
கர்த்தர் யாக்கோபை தெரிந்தெடுத்ததற்கான காரணம் அவன் செய்த நற்காரியங்களினால் அல்ல. அது கர்த்தரின் தேர்வாய் இருந்தது. வேதாகமம் நமக்குக் கூறுகிறது. இயேசு பாவிகளை அழைக்கவே வந்தார். நேர்மையாக வாழ்பவர்களுக்காக அல்ல.
எல்லா மக்களும் ஆதாமின் சந்ததியினர் ஆனபடியால் பிறவியிலேயே அவர்கள் பாவிகள். தாவீது தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பாவியாக இருந்ததாகவும், தான் துர்குணத்தில் பிறந்ததாகவும் கூறுகிறான். “இதோ நான் துர்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.” (சங்கீதம் 51:5)
அவர்களின் மூதாதையர்கள் செய்த பாவங்களின் நிமித்தம் அவர்கள் பிறவியிலேயே பாவிகளாக இருக்கிறார்கள். ஆகவே இவ்வுலகில் பிறக்கும் யாவரும் வித்தியாசமில்லாது பாவியாகிறார்கள், பாவியாக வாழ்கிறார்கள், பாவ கனிகளைச் சுமக்கிறார்கள்.
ஒரு குழந்தை எந்த ஒரு பாவத்தையும் இதுவரையில் செய்யவில்லை என்றாலும் அவன் பாவ வித்தில் பிறந்தவன். அவனிடம் தீய சிந்தனைகள், விபச்சாரம், கள்ளத்தொடர்பு, கொலை ஆகியவை இதயத்தில் இருக்கின்றன. அவன் தன் மூதாதையர்களின் பாவங்களுடன் பிறந்தவன். தாம் பிறக்கும் முன்னமே எல்லா மனிதர்களும் பாவிகள்.
கர்த்தர் நம்மை பாவமற்றவர்களாக படைத்தமைக்கான காரணம் கீழ்வருமாறு. மனிதகுலம் இறைவனின் படைப்பாகும். ஆனால் கர்த்தரிடம் நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சித்து தம் பிள்ளைகளாக்கிக் கொள்வதற்கான திட்டங்கள் இருந்தன. அதனாலேயே அவர் ஆதாமைப் பாவம் செய்ய அனுமதியளித்தார்.
அதன் பயனாக நாம் பாவிகளானதால் கர்த்தர் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவரின் ஒரே புத்திரரான இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் மனிதனின் சகல பாவங்களையும் இயேசு சுமந்து தீர்க்க அனுமதியளித்தார்.
கர்த்தரின் மனப்போக்கு மனிதகுலத்தை இயேசுவின் ஞானஸ்நானம் மூலமும், அவர் சிலுவை இரத்தம் மூலமும் விடுதலைப் பண்ணும்படியாகவும், இயேசுவை நம்புகிறவர்கள் அவர் பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுப்பதுமாய் இருந்தது.
அவர் ஆதாமை கிறிஸ்துவுக்குள் அவன் பாவங்களை கழுவலாம் என்ற உறுதிமொழியுடன் பாவம் செய்ய அனுமதியளித்தார்.
தவறான போதனையை விசுவாசிக்கும் பாவிகள் கூறுகிறார்கள், யாக்கோபையும் ஏசாவையும் பாருங்கள். அவர் ஒருவனைத் தேர்ந்தெடுத்து மற்றவனை நிபந்தனையில்லாது கைவிட்டார். கர்த்தர் நம்மை நிபந்தனையின்றி தேர்ந்தெடுக்கவில்லை. அவர் நம்மை கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்தார். நாம் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை மட்டுமே பார்க்கவேண்டும். ரோமர் 9:10-12 கூறுகிறது “இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே, ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலும் இருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலை நிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.” கர்த்தர் யாக்கோபை இயேசுவுக்குள் தெரிந்துகொண்டார். யாக்கோபு பாவிகளின் மாதிரியாவான். அவன் எந்த தகுதியுமில்லாத நீதிமான்களில் இருந்து ஒதுக்கி வைக்கப் படுபவனுமாக இருந்தான்.
கர்த்தர் ஏன் அழைத்தார்? அவர் யாக்கோபை அழைத்ததற்கு காரணம் அவருக்கு அவன் பாவியென்றும் கர்த்தர் முன் நீதிமானாய் இல்லாதவன் என்றும் அவன் அவரைச் சார்ந்திருந்தான் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தம் சொந்த குமாரரான இயேசுவின் பெயரினால் யாக்கோபை அழைத்து, அவனைத் தன் பிள்ளையாக்கும் பொருட்டு நற்செய்தியாகிய நீரினாலும் ஆவியினாலும் பாவங்களிலிருந்து விடுவித்தார். கர்த்தர் யாக்கோபை அழைத்து பாவ விடுதலை மூலம் அவனை ஆசீர்வதித்தார்.
கர்த்தர் பாவிகளை இயேசுவின் மூலம் பாவ விடுதலைப்பெறச் செய்து நீதிமான்களாக்கும் பொருட்டு அவர்களை அழைத்தார். இது கர்த்தரின் திட்டமாகும்.
 
 
நிபந்தனையற்ற தேர்வு என்பது தவறான கொள்கை.
 
கர்த்தர் யாக்கோபை நேசித்ததேன்?
ஏனெனில் கர்த்தருக்கு யாக்கோபு நீதிமானல்ல என்று தெரியும்.
 
நிபந்தனையற்ற தேர்வை அடிப்படியாகக் கொண்டு எழுதப்பட்ட கதைப்புத்தகம் ஒன்றினை அண்மையில் படித்தேன். ஒரு வயதான மூதாட்டி வாலிபன் ஒருவனின் கனவில் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி அழைத்தாள். அவனும் சென்றான். அந்த கிழவி அவனிடம் கர்த்தர் அவனை தெரிந்தெடுத்திருப்பதாக கூறினாள்.
அந்த வாலிபன் அக்கிழவியிடம் கர்த்தரை தான் விசுவாசிக்காத போதிலும் கர்த்தர் என்னை எப்படி தேர்ந்தெடுத்தார் என்று கேட்டான். அவள் அவனிடம் அவர் விசுவாசியாதபோதிலும் நிபந்தனையற்று, கர்த்தர் அவனைத் தேர்ந்தெடுத்தார் என்றாள்.
இது உண்மையல்ல. கர்த்தர் எப்படி சிலரை நரகாக்கினைக்கென்றும் எப்படி சிலரை இரட்சிப்புக்கென்றும், தேர்ந்தெடுப்பார்? கர்த்தர் இயேசுவுக்குள் அனைவரையும் தேர்ந்தெடுத்தார்.
இயேசுவல்லாத இறையியல் தேர்வு தத்துவம் தவறானது. ஆனால் அநேக இறையிலாளர்கள் தம்மில் சிலரை மட்டும் கர்த்தர் தெரிந்தெடுத்ததாக கூறுகிறார்கள். அது உண்மையல்ல. கர்த்தர் இயேசுவுக்குள் அனைவரையும் இரட்சிக்க விரும்புகிறார். யாரெல்லாம் பாவ விடுதலை தரும் நீரையும் ஆவியையும் இயேசுவுக்குள் விசுவாசிக்கவில்லையோ அவர்கள் மட்டும் இரட்சிக்கப்பட மாட்டார்கள்.
எல்லா மக்களும் தம் குமாரன் இயேசு மூலம் இரட்சிக்கப்படவேண்டும் என்று கர்த்தர் முன் குறித்தார். அவர் இவ்வுலகைப் படைக்கும் முன்னமே நம்மை அவர் பிள்ளைகளாக வேண்டுமென்று விரும்பினார். இயேசுவின் பாவ விடுதலைமூலம் இவ்வுலகின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் மனித குலத்தை இரட்சிக்க அவர் திட்டமிட்டார். வேதாகமத்தில் எழுதப்பட்டபடி இதுவே உண்மையாகும்.
இயேசுவுக்குள் மறுபடியும் பிறந்த நீதிமான்களே, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். இறையியலாளர்கள் தம்மில் சிலரை மட்டும் கர்த்தர் தெரிந்தெடுத்ததாக கூறுகிறார்கள். உதாரணமாக அவர்கள் புத்த மதக்குருக்கள் கர்த்தரால் தெரிந்துக் கொள்ளப் படாதவர்களில் உள்ளடங்குவார்கள் என்கின்றனர். ஆனால் கர்த்தர் அவர்களையும் இயேசுவுக்குள் தெரிந்து கொண்டார்.
இயேசுவின் மூலமாக அல்லாது கர்த்தர் நிபந்தனையற்று சிலரைத் தெரிந்தெடுத்திருந்தால் நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியிருக்காது. இயேசுவல்லாது கர்த்தர் ஒரு சிலரைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டிருந்தால் பாவிகள் இயேசுவை நம்பவேண்டியிருக்காது. அப்படியானால் அவரின் அன்பு, சத்தியம், மீட்பு என்பவை எப்படி நிறைவாகும்?
கர்த்தரின் ஊழியக்காரர்கள் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு காரணம் எதுவும் இருக்கிறதா? கர்த்தர் நிபந்தனை ஏதுமில்லாத பாவ விடுதலைப் பெற்றோரையும், நித்தியாக்கினைக்கு உள்ளானோரையும் இயேசுவின் மூலமில்லாது தெரிந்தெடுத்தார் என்பது பொருத்தமாகத் தோன்றுகிறதா?
கர்த்தர் யாக்கோபை இயேசுவுக்குள் தெரிந்தெடுத்தமை அவர் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தமை ஆகியவற்றிற்கான காரணம், அவருக்கு இவ்விருவரும் படைக்கப்படும் முன்பே யாக்கோபு இயேசுவை விசுவாசிப்பான் என்றும் ஏசா இயேசுவை நம்பமாட்டான் என்றும் தெரிந்திருந்தது.
இவ்வுலகில் அநேகப்பாவிகள் இயேசுவை விசுவாசிக்கிறார்கள். சிலர் ஏசாவைப்போலும் சிலர் யாக்கோபைப் போலும் இருக்கிறார்கள்.
கர்த்தர் ஏன் யாக்கோபை நேசித்தார்? யாக்கோபிற்கு தான் நீதிமானல்ல என்பதும் எந்த மதிப்பும் இல்லாதவன் என்றும் தெரிந்திருந்தது. ஆகவே, தான் பாவியென்பதை கர்த்தர் முன் ஒப்புக்கொண்டு அவன் கர்த்தருடைய கிருபையை வேண்டி நின்றான். அதனாலே தான் கர்த்தர் யாக்கோபை இரட்சித்தார்.
ஆனால் ஏசா தன்னைத்தானே அதிகம் நம்பினான். தன்னை கர்த்தருக்கு மேலாகக் கருதியதால் கர்த்தரின் கிருபைக்கு காத்திருக்கவில்லை. ஆகவே கர்த்தர் தான் யாக்கோபை நேசிப்பதாகவும் ஏசாவை வெறுப்பதாகவும் கூறினார். இதுவே சத்திய வாக்காகும்.
கர்த்தர் நாம் இயேசு மூலமாக இரட்சிக்கப்பட வேண்டுமென்று முன் குறித்திருந்தார். எல்லாப் பாவிகளும் செய்யவேண்டியது இயேசுவை நம்புவது மட்டுமே. அப்பொழுது கர்த்தரின் சத்தியமும் நீதியும் அவர்கள் இருதயத்தில் பொறிக்கப்படும். பாவிகளாகிய நாம் இயேசுவை நம் முழு இருதயத்தாலும் நம்பி அவர் மூலம் இரட்சிக்கப்படுவத்தைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. நாம் செய்யவேண்டியதெல்லாம், இயேசுவின் மூலம் வரும் பாவ விடுதலையை விசுவாசிப்பதே.
 
 
சிறிது சிறிதாக பரிசுத்தமாதல் என்ற தவறான தத்துவம்
 
சிறிது சிறிதாக பாவியொருவன் நீதிமானாக முடியுமா?
இல்லை. அதற்குச் சாத்தியமில்லை. கர்த்தர் ஒரேயடியாக அவரின் ஞானஸ்நானம், சிலுவை மரணம் மூலமாக பாவ விடுதலை அளித்ததன் மூலம் பாவிகளை நீதிமான்களாகவும், களங்கமில்லாதவர்களுமாக ஆக்கினார்.
 
சிறிது சிறிதாக பரிசுத்தமாதல் என்ற தத்துவத்தின் மூலம் பாவிகள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப் படாவண்ணம் சாத்தான் அவர்களை வஞ்சிக்கிறான். சிறிது சிறிதாக பரிசுத்தமாதல் என்பதற்கு அவர்கள் கூறும் பொருள் இயேசுவை விசுவாசிக்கும்போது பாவிகள் மெதுவாக பரிசுத்தமாகிறார்கள் என்பதாகும்.
இத்தத்துவம் இப்படிபோகிறது. பாவிகள் உடனடியாக நீதிமான்களாக முடியாது. அவர்கள் இயேசுவை விசுவாசிக்கும்போது மூல பாவங்களிலிருந்து மட்டுமே இரட்சிக்கப்படுகிறார்கள். சொந்த பாவங்கள் மனம் வருந்தி ஜெபிப்பதால் கழுவப்படுகின்றது. இப்படியாக மக்கள் படிப்படியாக பரிசுத்தமடைகிறார்கள்.
இத்தத்துவத்தின் தீர்க்கமுடியாத பிரச்சனை படிப்படியாக பரிசுத்தமடைகிறார்கள் என்பதாகும். அது மிகவும் பெரிதுபோல் தோன்றுகிறது. இது இயேசுவை விசுவாசித்து, பரிசுத்தமுள்ள கிறிஸ்தவன் ஆகலாம் என்று அர்த்தமாகிறது. அவர்களுக்கு இது பாதுகாப்பு உணர்ச்சியை அளித்து நிறைய கிறிஸ்தவர்களை வஞ்சித்துள்ளது. இதன் காரணமாகவே நிறைய கிறிஸ்தவர்கள் உன்னைவிட நான் பரிசுத்தன் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் தாம் ஒரு நாளில் எப்படியாவது மாறி அதன்பிறகு பாவம் செய்வதில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாவியாகவே ஜீவிக்கிறார்கள். அவர்கள் இறந்தபிறகு பாவிகள் என்று கர்த்தருக்கு முன்பாக தீர்க்கப்படுகிறார்கள்.
வேதாகமம் கூறும் உண்மை வார்த்தையை படியுங்கள் ரோமர் 8:30, “எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்கள் ஆக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.”
மேலும் 29ஆம் வசனத்தில் “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவராய் இருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.” முதலில் நோக்கும்போது நீதிமானாவதற்கு படிகள் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் நீதி ஒரேயடியாக வழங்கப்படுகிறது என்று வசனம் கூறுகிறது.
“எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்கள் ஆக்கியுமிருக்கிறார்” இயேசு யோர்தான் நதியில், தாம் பெற்ற ஞானஸ்நானம் மூலமும், அவரின் சிலுவை மரணம் மூலமும் பாவிகளை அழைத்து அவர்களை நீதிமான்களாக்கினார்.
ஆகவே, இயேசு அளிக்கும் பாவ விடுதலையை விசுவாசிக்கிறவன் கர்த்தரின் மகிமைப்படுத்தப்பட்ட பிள்ளையாகிறான். பாவிகளை விடுவிப்பதும் அவர்களைத் தம் பெயரால் மகிமைப்படுத்துவதும் கர்த்தரின் சுத்த கிருபையாகும்.
இதனைத்தான் கர்த்தர் கூறுகிறார். ஆனால் சில கிறிஸ்தவர்கள் நம்மை ரோமர் 8:30 ஐ பார்க்குமாறு கூறுகிறார்கள். “புனிதமடைய சில படிகள் இருக்கின்றன, இதன் பொருள் நாம் படிப்படியாக மாறுவோம் என்பதா?” இப்படித்தான் அவர்கள் வஞ்சிக்கிறார்கள். அவர்கள் மக்களிடம், ஒரு பாவி காலப்போக்கில் நீதிமானாகிவிடுவான் என்று எதிர்காலத்தில் கூறுகிறார்கள்.
ஆனால், வேதாகமம் எதிர்காலத்தில் கூறவில்லை. ஆனால் இறந்த காலத்தில் கூறுகிறது. நாம் நீதிமான்களாக்கப்பட்டோம் என்று கோருகிறது. எதிர்காலம் குறித்து சொல்லுவதிலும் இறந்த காலத்தைக் குறித்து சொல்வதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
நாம் வேதாகமத்தை முற்றிலும் நம்பவேண்டும். அதில் எழுதப்பட்டபடிப் பார்த்தால் நாம் கர்த்தரின் பிள்ளைகளாக ஒரேயடியாக மாறினோம். இது படிப்படியாக பரிசுத்தமாதல் தத்துவத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.
படிப்படியாக பரிசுத்தமாதல் தத்துவம் நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது மூல பாவங்கள் மட்டும் மன்னிக்கப்படுவதாக கூறுகிறது. இது என்ன ஆலோசனை வழங்குகிறது என்றால் நாம் ஒரு மத வாழ்க்கை நடத்தி தினமும் நம் பாவங்களுக்காக மனம் வருந்தவேண்டும். மேலும் இப்படிச் செய்தால் நாம் கர்த்தர் முன்னால் நிற்கும்போது நீதிமான்களாயிருப்போம்.
நிறைய மனிதர்கள் இந்த தத்துவத்தை நம்புவதால், இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கியபோதிலும், அவர்கள் பாவிகளாகவே உள்ளனர். அதனாலேயே இந்த, படிப்படியான பரிசுத்தமாகுதல் தத்துவம் பொய்யானதாகும்.
நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாகவும் அவரின் பிள்ளைகளுமாகிறோம் என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. இப்பூமியில் குழந்தைகள் பிறப்பதுபோல, கர்த்தரின் பிள்ளைகளும் தாம் இயேசுவின் பாவவிடுதலையை அறிந்து அதனை விசுவாசிக்குபோது பரிசுத்தர்கள் ஆகிறார்கள். தவறான படிப்படியாக பரிசுத்தமாகும் தத்துவம் பொய்யில் ஊற்றெடுத்ததாகும்.
 
 
எல்லாப் பாவங்களில் இருந்தும் முழு விடுதலை
 
முழுவதுமாக பரிசுத்தமாக வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
நீர் மற்றும் ஆவியளிக்கும் பாவ விடுதலையை நம்ப வேண்டும்.
 
ரோமர் 8:1-2 கூறுகிறது, “ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாமிசத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.” கர்த்தர் எல்லாப் பாவிகளையும் நீதிமான்களாக்கியதையும், பாவம் மற்றும் மரணம் குறித்த சட்டத்திலிருந்து இயேசுவிடம் வருவோரை விடுதலையும் செய்கிறார்.
வேதாகமம் முழு பாவ விடுதலைக் குறித்து எபிரெயர் 9:12 இல் கூறுகிறது. “வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபன்னினார்.” இதன்பொருள் என்னவென்றால் இயேசுவை விசுவாசிப்பவர்கள் பாவ விடுதலை பெற்று பரலோகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
நாம் நீர் மற்றும் ஆவியினாலே கிறிஸ்துவுக்குள் பாவ விடுதலை பெறும் நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்தால் நம் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். தம்முடைய மூல பாவங்களே மன்னிக்கப்பட்டன என்று நம்பும் பாவிகள் உண்மையில் இரட்சிப்படைய முடியாது. இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கிய பிறகு அவர்கள் தம் பாவங்களிலிருந்து பரிசுத்தமடையும் பொருட்டு தினமும் மனம் வருந்தி புலம்ப வேண்டும் என்று கருதுகிறார்கள்.
அவர்களுடைய தவறான நம்பிக்கை அவர்களைப் பாவத்திற்கு வழி நடத்துகிறது, தம்முடைய பாவச்செயல்களிலிருந்து விடுதலைப் பெறும்பொருட்டு அவர்களுடைய தவறான நம்பிக்கை தினமும் அவர்களைப் புலம்ப வைக்கிறது. நரகத்திலிருந்து நம்மை இரட்சிக்கும் உண்மை நம்பிக்கை இதுவல்ல.
அவர்கள் இயேசுவை விசுவாசித்து பாவ விடுதலைப் பெற்றிருந்தால் அவர்கள் நீதிமான்களாகவும் கர்த்தரின் பிள்ளைகளுமாவார்கள். உண்மையான பாவ விடுதலை விசுவாசிகளை நீதிமான்களாகவும் அவர்களைக் கர்த்தரின் பிள்ளைகளாகவும் ஒரேயடியாக மாற்றுகிறது.
விசுவாசிகள் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் மரணம் அடையும்வரை மாமிசம் பாவம் செய்துகொண்டேயிருக்கும். ஆனால் அவர்கள் இருதயம் கர்த்தரின் நீதியினால் ஊறியுள்ளது. நாம் இதனை எப்போதும் தவறுதலாகப் புரிந்துகொள்ள முடியாது.
நாம் நற்செய்தியை விசுவாசிக்குபோது பரிசுத்தமாகி நீதிமானாவோம் என்று வேதாகமம் கூறுகிறது.
உண்மையான நற்செய்தியை அறிவதற்கு எபிரெயர் 10:9-14 ஐ நோக்குவோமாக. “தேவனே; உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அன்றியும் எந்த ஆசாரியனும் நாடோரும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒரு காலும் நிவர்த்திச் செய்யக்கூடாத ஒரே வித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ பாவங்களுக்கு ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.”
“இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப் பட்டதினாலே, அந்த சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்.” இது நிகழ்காலத்தில் எழுதப் பட்டுள்ளது. எதிர்காலத்தில் அல்ல.
முழுவதுமாக பரிசுத்தமாகவேண்டுமென்றால், நாமெல்லாம் இயேசு நல்கிய பாவ விடுதலைத்தரும் நீரையும் ஆவியையும் விசுவாசிக்கவேண்டும்.
 
 
இயேசு நிரந்தர விடுதலையை ஈந்தருளினார்
 
ஒரு மனிதன் எதனால் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கத் தகுதியாகிறான்? (1தெசலோனிக்கேயர் 5:16)
ஏனெனில் இயேசு அவனின் பாவங்களை அகற்றிப்போட்டதால், அவன் அவர் முன்பு தாழ்மையாகவும், அவர் கிருபைக்கு நன்றியறிதல் உள்ளவனாகவும் இருக்கவேண்டும்.
 
இயேசு அளித்த நிரந்தர விடுதலையை நாம் விசுவாசித்தால், நாம் நீதிமானாகிறோம். வேதாகமம் கூறுகிறது. “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:16-18).
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். நாமெப்படி எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பது? நிரந்தர பாவ விடுதலையைப் பெற்றவர்கள், சந்தோஷமாக இருக்கமுடியும். ஏனெனில் அவர்கள் பாவமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு, இயேசு தம் பாவங்களை யோர்தானில் எடுத்துப்போட்டார் என்ற அறிவு பாதுகாப்பளிக்கிறது. அவர்கள் இயேசு முன் தாழ்மை உடையவர்களாகவும், அவருடைய கிருபைக்கு நன்றி உடையவர்களாகவும், எப்பொழுதும் சந்தோஷம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
“எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள்” (ரோமர் 4:7). இதன் பொருள் நம் இருதயத்தில் பாவங்கள் இருந்தபோதிலும் அவை மூடப்பட்டன என்பதல்ல. நம் இருதயங்கள் சுத்தீகரிக்கப்பட்டன. இயேசு நம் பாவங்கள் அனைத்தையும் கழுவி நம்மை நிரந்தரமாக இரட்சித்தார்.
நித்திய பாவ மன்னிப்பு குறித்து புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர் கூறினார். “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.” (மத்தேயு 3:15)
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வெள்ளாடோ, செம்மறியாடோ மனிதர்களின் பாவத்தை அவற்றின் தலை மீது கைவைப்பதன் மூலம் எப்படி ஏற்றுகொண்டதோ, அதுபோல இயேசு சரியானதும், பொருந்தக்கூடியதுமான வழியில் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு மனிதர்களைச் சுத்தமாக்கினார்.
இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று இயேசு கூறினார். இயேசு மிகவும் சரியான முறையில் ஞானஸ்நானம் பெற்றார். அதன் மூலம் மனிதர்களின் சகல பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டார். இப்படியாக அவர் நம்மை இரட்சித்தார்.
மத்தேயு 3:15 இல் இயேசு உலகின் சகல பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்று எழுதப்பட்டுள்ளது. கர்த்தரின் நீதி நிறைவாயிற்று. இந்த நிரந்தர பாவ மன்னிப்பு முறைக் குறித்து நாம் அதிக கவனம் செலுத்தக் கூடாது. அவரின் விடுதலைக் குறித்த வார்த்தைகளை ஏற்கவேண்டும். “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங்கீதம் 32:1).
யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் அவர் ஞானஸ்நானம் பெற்றபோது நம் இதயங்களின் பாவங்களையும், மாமிசத்தின் பாவங்களையும் கழுவிப்போட்டார். இந்த மோசமானதும், கேடுகெட்டதுமான உலகில் நாம் செய்யும் பாவங்களுக்காக அவர் நியாயந்தீர்க்கப்பட்டார். நம் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார்.
இந்தப் பாவ மன்னிப்பு முறையை யார் நம்புகிறார்களோ அவர்கள் நீதிமான்களாகவும், களங்கமில்லாதவர்களும் ஆகிறார்கள். இயேசு நித்திய வாழ்வு உடையவராதலால், யாரெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் பாவ விடுதலையை நம்புகிறார்களோ, அவர்கள் நீதிமான்களாகவே இருக்கிறார்கள்.
நாம் இப்பொழுது நம்பிக்கையுடன் கர்த்தர் முன் நின்று “கர்த்தரே எப்படி இருக்கிறீர்? நான் உம்முடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசுவை விசுவாசிப்பதால் நானும் உமது குமாரன். நன்றி பிதாவே. என்னை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றிகள். இது எனது சொந்த முயற்சிகளினாலல்ல. இயேசுவுக்குள் நீர் மற்றும் ஆவியை நம்பியதன் மூலம் மறுபடியும் பிறந்தமையால் கிடைத்தபேராகும். நீர் இவ்வுலகின் எல்லா பாவங்களிலிருந்தும் என்னை இரட்சித்தீர். நீர் “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.” (மத்தேயு 3:15) என்று கூறியதை விசுவாசிக்கிறேன். இயேசுவின் ஞானஸ்நானம் மூலமும் அவரின் சிலுவையின் மூலமும் நான் உமது பிள்ளையானேன். இதற்கு நான் மிகுந்த நன்றி உடையவனாய் இருக்கிறேன்.”
உங்கள் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்திவிட்டீர்களா? உங்கள் பாவங்களனைத்தையும் அவர் தம்மீது ஏற்றுக்கொண்டார். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை ஆகியவற்றிற்கு நன்றி கூறும்படியாக வேதம் கூறுகிறது. பாவிகள் அவற்றை நம்புவதன்மூலம் பரிசுத்தம் அடைகிறார்கள்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானத்திற்கும் பாவ விடுதலைக்கும் உள்ளத் தொடர்பு
 
இயேசுவின் ஞானஸ்நானத்திற்கும் பாவ விடுதலைக்கும் உள்ளத் தொடர்பு என்ன?
பழைய ஏற்பாட்டில் பலிமீது கை வைப்பதன்மூலம் பாவ விடுதலை கிடைத்ததுபோல இயேசுவின் ஞானஸ்நானம் அமைந்திருக்கிறது.
 
ஒரு மனிதன் இயேசுவை விசுவாசித்தாலும் அவன் பாவியாகவே வாழ்வதாக கற்பனைச் செய்க. அவன் ஆலயத்தில் “அன்புள்ள கர்த்தரே, தயவு செய்து கடந்த வாரம் நான் செய்தப் பாவங்களையெல்லாம் மன்னியும். ஓ கர்த்தாவே, இன்றையப் பாவங்களை மன்னியும். நான் இயேசுவை விசுவாசிக்கிறேன்” என்று ஜெபிக்கிறான்.
இந்த ஜெபம் மூலம் அந்நாளின் பாவங்கள் அவனுக்கு மன்னிக்கப்பட்டதாக கருதுவோம். ஆனால் அவன் அன்றாட வாழ்க்கையில் மீண்டும் பாவம் செய்கிறான். ஆகவே அவன் மீண்டும் பாவியாகிறான்.
இயேசு தேவாட்டுக்குட்டியாக தம் ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவிகளின் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு சிலுவை மரணம் மூலம் அவர்களுக்கு விடுதலைக் கொடுத்தார். பாவ மன்னிப்பு பெரும் பொருட்டு பாவிகள் கீழ்க்கண்டவற்றை விசுவாசிக்கவேண்டும்.
இறைவனின் நீதியை நிறைவேற்ற யோவான் ஸ்நானனிடமிருந்து இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது இயேசு தம்மீது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். உலகின் எல்லா பாவங்களும் கழுவப்பட்டன. இவ்வுண்மையை நம்புவோர் விடுவிக்கப்படுவர். மத்தேயு 3:13-17 இல் எழுதப்படுள்ளதுபோல், “இதற்காகவே” இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று இதனை விசுவாசிப்போருக்கு இரட்சகரானார்.
இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் ஒரேயடியாக எடுத்துப்போட்டார் என்று உண்மையான நற்செய்தி நம்மிடம் கூறுகிறது. ஆனால் நாம் தினமும் பாவ விடுதலைப் பெறுவதாக தவறான இறையியல் கூறுகிறது. எதனை நாம் நம்புவது? நாம் முற்றிலும் விடுவிக்கப்பட்டோமா? அல்லது நாம் தினமும் விடுவிக்கப்படுகிறோமா? இயேசு நம்மை முற்றிலும் விடுதலையாக்கினார் என்பது தெளிவு. நீர் மற்றும் ஆவியினால் பாவ விடுதலை முற்றிலுமாக கிடைக்கிறது என்ற நம்பிக்கையே உண்மையான விசுவாசமாகும். நாம் தினமும் பாவ விடுதலைப் பெறவேண்டும் என்று விசுவாசிப்பவர்களுக்கு விடுதலை எப்போதுமில்லை.
இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவை மரணத்தினாலும் விடுதலையளிக்கிறார் என்று நம்புவதன் மூலமே தமக்கு உண்மையான பாவ விடுதலைக் கிடைக்கிறதென்பதை அவர்கள் அறியவேண்டும். நாம் செய்யவேண்டியதெல்லாம், கர்த்தருக்கு நன்றி செலுத்திவிட்டு உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பதேயாகும்.
தவறாக விசுவாசத்தில் வழி நடத்தப்பட்டோர் கூறுகிறார்கள், நாம் நம்முடைய மூலப் பாவங்களிலிருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டோம். ஆகவே, நாம் நாள்தோறும் செய்யும் பாவங்களிலிருந்தும் பாவ விடுதலைப் பெறவேண்டும். ஆகவே, நாம் “படிப்படியாக” நீதிமான்களாக முடியும். இவை யாவும் முற்றிலும் தவறானவை.
இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை மரணமும் பாவ மன்னிப்பை முற்றிலும் நிவர்த்தி செய்தன, இதுவே உண்மை. நமது பாவங்கள் யாவும் இயேசுவின் மீது யோவான் ஸ்நானனால் சுமத்தப்படவேண்டியதும், இயேசு நம்மை இரட்சிக்க சிலுவையில் அறையப்பட வேண்டியதுமாய் இருந்தது.
“என்னை மன்னியும்” என்று நாம் பாவம் செய்தபின் கூறுவது கர்த்தரின் நீதிக்குப் பொருந்தாது. கர்த்தரின் சட்டம் பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறுகிறது, கர்த்தர் நீதியும் பரிசுத்தமும் மிக்கவர் என்பதை நாம் அறியவேண்டும்.
“மிகவும் வருந்துகிறேன். தயவுசெய்து என்னை மன்னியும்.” என்று கர்த்தரிடம் பாவம் செய்தபிறகு ஜெபிப்பவர்களுக்கு கர்த்தரின் நீதியைப்பற்றி தெரியாது. அவர்கள் மன்னிப்புக்காக ஜெபிக்கிறார்கள். இது அவர்கள் மனசாட்சி உறுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகும். ஒருவன் தினமும் பாவம் செய்து அவன் மனசாட்சியை ஆறுதல்படுத்த மீண்டும் மீண்டும் தன் மீறுதல்களுக்காக மனம் வருந்துவது சரியாகுமா? பாவ விடுதலைக்கான ஒரே வழி இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றை விசுவாசிப்பதே. இதனை நாம் இதயப்பூர்வமாக விசுவாசிக்கவேண்டும். இதுவே கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி.
பாவ விடுதலைக் குறித்து மேல் விபரங்களைப் பார்ப்போமாக. எபிரெயர் 9:22 கூறுகிறது. “நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங் குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்தீகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.”
கர்த்தருடைய நீதியின் சட்டப்படி, பாவங்கள் இரத்தத்தினாலேயே கழுவப்பட வேண்டும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ விடுதலையில்லை. இதுவே கர்த்தருடைய நீதியின் சட்டமாகும். பாவத்திற்கான விலை கொடுக்காமல் பாவ மன்னிப்பு இல்லை.
கர்த்தரின் சட்டம் நீதியுள்ளது. இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெறப்பட்டு பாவிகளாகிய நாம் இரட்சிப்படையும் பொருட்டு சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். நம்முடைய மீறுதல்களையெல்லாம் தம்முடைய ஞானஸ்நானம் மூலம் தம்மீது ஏற்றுக் கொண்டு நம்முடைய அந்த பாவங்களுக்காய் இரத்தஞ்சிந்தினார். நமக்காக அவர் பாவத்திற்கு கூலி கொடுத்தார்.
 
பாவ விடுதலை முற்றிலும் கொடுக்கப்படுகிறதா அல்லது தினமும் கொடுக்கப்படுகிறதா?
முற்றிலும் கொடுக்கப்படுகிறது. இயேசு தம் ஞானஸ்நானம் மூலமாக அனைத்துப் பாவிகளின் பாவங்களையும் சுமந்து தீர்த்தார்.
 
மத்தேயு 3:15 இல் பொருத்தமான முறையில் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, அதன் மூலமாக நம் பாவங்கள் அனைத்தையும் கழுவி, நம்மை இவ்வுலகின் பாவங்களிலிருந்து விடுதலைச் செய்யும்பொருட்டு சிலுவையில் மரித்தார்.
தினந்தோறும் நாம் பாவ மன்னிப்புக் கேட்பது, அவரைத் தினமும் நம் பாவங்களுக்காக மீண்டும் மரிக்கச் சொல்வதுபோலாகும். நாம் கர்த்தருடைய நீதியின் சட்டத்தை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இயேசு நம்மை பாவங்களிலிருந்து விடுவிக்கும்பொருட்டு மீண்டும் மீண்டும் மரிக்கத்தேவையில்லை.
பாவிகள் தம் பாவங்களுக்காக மீண்டும் மீன்டும் பாவ மன்னிப்பைக் கேட்டு இயேசுவை விசுவாசிப்பதை கர்த்தர் அவமரியாதையாக கருதுகிறார். “கர்வம் நிறைந்த முட்டாள்கள்! என் மகனான இயேசுவை இரண்டாவது முறை ஞானஸ்நானம் பெற்று மீண்டும் சிலுவையில் அறையப்படும்படி அவர்கள் கேட்கின்றனர்! இயேசு அளிக்கும் விடுதலையை விசுவாசித்த போதிலும் தம்மைப் பாவிகள் என்று அழைக்கிறார்கள்! அவர்களை எனது நீதியின் சட்டத்தின் மூலம் தீர்க்கட்டும். எரியும் பாதாளத்திற்கு அவர்களை நான் அனுப்பட்டும். என்னுடைய ஒரே பேரான குமாரனை இரண்டாவது முறையாக நான் கொல்ல வேண்டுமா? உங்களுடைய சொந்த பாவங்களுக்காக என்னுடைய குமாரனைக் கொல்லும்படி கேட்கிறீர்களா? உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும்படி ஏற்கெனவே எனது குமாரனை பலி கொடுத்துள்ளேன். ஆகவே உங்கள் சொந்தப் பாவங்களுக்காக தினமும் பாவ மன்னிப்புக் கேட்டு என்னை கோபமூட்டாதீர்கள். நீர் மற்றும் ஆவி அளிக்கும் பாவ விடுதலையின் நற்செய்தியை விசுவாசியுங்கள். அது போதும். ”
இன்னும் பாவத்துடனே இருப்போரிடம் உண்மையான நற்செய்தி பிரசங்கிக்கப்படும். ஆலயத்திற்கு செல்லவும், தவறான நம்பிக்கையை கைவிட்டு விசுவாசத்தின் மூலம் பொய்யை வென்று பாவ விடுதலையை அடையும்படி இயேசு கூறுகிறார்.
உன் இருதயத்தில் விசுவாசித்து இரட்சிக்கப்பட இதுவே சரியான நேரம். இதனை நம்புகின்றாயா?
 
 
நம்பிக்கையின் முடிவு உண்மையிலல்ல, வேலையில் இருக்கிறது
 
அநேக கிறிஸ்தவர்கள் ஒரே மாதிரியாக வாழ்வதிலிருந்து ஏன் தவறுகிறார்கள்?
தம் சொந்த காரியங்களைச் சார்ந்திருப்பதனால்.
 
விடுவிக்கப்படாத பாவிகள் இயேசுவை விசுவாசித்து தொடர்ந்து பாவிகளாகவே இருந்தபோதிலும் அவர்கள் 3-5 வருடங்களுக்கு பிரகாசித்தார்கள். அவர்கள் தொடக்கத்தில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அவர்கள் நம்பிக்கை மங்கிப்போய் விடுகின்றது. உங்கள் சொந்தக்காரியங்கள் மூலம் இயேசுவை நம்பினீர்களேயானால் உங்கள் ஆர்வம் சீக்கிரத்தில் மங்கிப்போகும்.
குருடனால் பார்க்கமுடியாது. ஆகவே, அவர்கள் தம் மற்ற உணர்வுகளில் சார்ந்து அதன் மூலமாக அறிவைப்பெறுகிறார்கள். அவர்கள் கண்கள் நீரினால் நிரம்பும்போது அதனைப் பாவ கிரயமாக பாவிகள் எண்ணுகின்றனர். உண்மையான பாவக்கிரயம் உணர்ச்சி மட்டுமல்ல.
ஆவியில் குருடாக இருப்பவர்கள் எழுப்புதல் கூட்டங்களுக்குச் செல்வதன் மூலம் முதலில் பெற்ற நேசத்தை மீண்டும் பெறலாம் என்றெண்ணுகின்றனர். ஆனால் அவ்வுணர்ச்சியை அவர்கள் மீண்டும் பெறமுடியாது. அதுபோல பாவக் கிரயத்தை இவ் வழிகளில் பெறமுடியாது. தொடக்கக் காலத்திலிருந்து இதனை தெளிவாக நம்பியிருந்தால், பாவகிரயமும் அவரின் கிருபையும் நாட்கள் செல்லச் செல்ல அதிகப்பிரகாசமாக இருக்கும்.
ஆனால் போலியான மன்னிப்பு தொடக்கத்தில் பிரகாசமாகவும் அதன் பிறகு கவர்ச்சியிழந்ததுமாகி விடுகின்றது. ஆர்வமிகுதி சீக்கிரமே காணாமல் போய்விடுகின்றது. ஏனெனில் ஆவியில் குருடானவர்கள் உண்மையான நற்செய்தியைத் தொடக்கத்திலிருந்தே உணரத்தவறி விடுகின்றனர்.
உயர்வான எழுத்தாளனும், பரிசேயனும் தம் கையிடுக்கில் வேதாகமத்தை எடுத்துச் செல்கின்றனர், அவர்கள் கர்த்தரின் ஜெபத்தைத் தியானிக்கிறார்கள். அப்போஸ்தலர்களின் கருத்துக்களை தியானிக்கிறார்கள். எப்பொழுதும் ஜெபத்திலே தரித்திருக்கிறார்கள். அவர்கள் ஆலயங்களில் உயர்ந்த பதவிகளைப் பெறும்போது உணர்வுகளில் உற்சாகமடைகிறார்கள். அவர்கள் பாவங்கள் திரளுகின்றன. இறுதியில் கர்த்தரால் தள்ளிவிடப் படுகின்றனர். வெளியரங்கமாக மத ஒழுங்குகளினால் வெள்ளைப் பூசப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் உள்ளேயோ பாவங்கள் அழுகி நாற்றம் எடுக்கின்றன. இது நம்பிக்கையின் விளைவாகும். இது மதஞ்சார்ந்த வேலைகளினால் வருவது.
 
 
விசுவாசத்தினால் நாம் நீதிமானானோம்
 
இவ்வுலகின் எல்லாப் பாவங்களுக்கும் பாவ நிவாரணம் நிறைவேறிற்றா?
ஆம். இயேசுவின் ஞானஸ்நானம் மூலமும், அவரின் சிலுவை மரணம் மூலமும் அது நிறைவேறிற்று.
 
இப்பொழுது எபிரெயர் 10:16-18 ஐப் படிப்போமாக. “அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது; நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்த பின்பு, அவர்களுடைய பாவங்களையும், அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனி பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.”
நாம் இயேசு ஞானஸ்நானம் பெற்ற நீரினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் விடுவிக்கப்பட்டுவிட்டதால் மீண்டும் பாவங்களுக்கு பரிகாரம் செய்யவேண்டியதில்லை. முதலில் நாம் கேட்கும்போது இது வித்தியாசமாகத் தெரியும். ஆனால் இது வேதாகமத்திலுள்ள வார்த்தைகளுடன் பொருந்துகிறது. அது மனிதர்களையொத்த வார்த்தையா? வேதாகமம் எல்லவற்றையும் அளக்கும் அளவு கோளாகும்.
“நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்” நீங்கள் விடுதலையானபின் எப்படி உணருகிறீர்கள்? உங்கள் இருதயம் பாவங்களின்றி இருக்கிறது, நீங்கள் புத்துணர்ச்சிப் பெற்றதை உணருகிறீர்கள், நீங்கள் நீதிமானாகிவிட்டீர்கள். நீங்கள் வெளிச்சத்தில் வாழ்வீர்கள்.
எபிரெயர் 10:17 இல் கர்த்தர் கூறுகிறார். “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை.” விடுதலையானவர்களின் பவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நினைப்பதில்லை என்று கர்த்தர் கூறுகிறார். ஏன்? இயேசு மிகவும் பொருத்தமான வகையில் “இப்படியாக” ஞானஸ்நானம் பெற்றார். நம் பாவங்களை தம்மீது ஏற்றபின், அவர் தம்மை நம்புவோருக்காக நியாயம் தீர்க்கப்பட்டார்.
அவர் நம் பாவங்களுக்கான விலையைக் கொடுத்துவிட்டார். நாம் அப்பாவங்களை நினைவு கூறலாம். ஆனால் அவற்றைக் குறித்த குற்ற உணர்ச்சியினால் அவதிப்படத் தேவையில்லை. நாம் நம்முடைய பாவங்களுக்காக மரிக்கத் தேவையில்லை. ஏனெனில் இயேசு நம் பாவங்களையெல்லாம் கழுவி சிலுவையில் நமக்காக இரத்தஞ்சிந்தினார்.
எபிரெயர் 10:18 கூறுகிறது, “இவைகள் மன்னிக்கப் பட்டதுண்டானால், இனிப் பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.” இதன் பொருள் என்னவென்றால் அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் துடைத்துவிட்டார் என்பதாகும். மேலும் இயேசுவுக்குள் மறுபடியும் பிறந்தவர்கள் பாவத்திற்காக எந்தப் பலியையும் கொடுக்க வேண்டியதில்லை.
“ஓ கர்த்தரே! தயவு செய்து என்னை மன்னியும். நான் இயேசுவை விசுவாசித்தாலும் இன்னும் நான் துயரத்தில் இருப்பதற்கு காரணம், நான் இன்னும் பரிபூரண விடுதலையடையாததே. நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால் எனது மனமோ மொத்தமாக பாவத்தினால் அழுகிப்போயிருக்கிறது.” நாம் இதுபோல் ஜெபம் செய்யத்தேவையில்லை.
பாவிகள் அதனைப்புரியாமலேயே பாவம் செய்கிறார்கள். அவர்களுக்குத் தாம் என்ன பாவம் செய்தோம் என்றே புரிவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு கர்த்தரின் உண்மைச் சட்டத்தைக் குறித்து தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மனசாட்சிக்கெதிராக பாவம் செய்யக்கூடாது என்பதே. ஆனால் கர்த்தருக்கு முன்பாக பாவம் என்பது என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. இயேசுவை நம்பாததும், ஒரு பாவம் என்று கர்த்தர் கூறுகிறார்.
யோவான் 16:9 இல் கர்த்தருக்கு முன்பாக எது பாவம் என்று கூறுகிறார். “அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும்” அவரை நம்பாதது கர்த்தருக்கு எதிரான பாவமாகும். யோவான் 16:10 நீதி எதுவென்று கூறுகிறது. “நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினாலே நீதியைக் குறித்தும்” இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு உலகை ஏற்கனவே பாவங்களிலிருந்து விடுதலையாக்கினார் என்பதும், மீண்டும் நம்மை இரட்சிக்க இரண்டாம் முறை ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இறப்பது அவசியமில்லை.
அவரின் பாவ மன்னிப்பை விசுவாசிப்பவர்களை பரிசுத்தமாகும் படியும் நீதிமானாகும்படியும் அவர் அழைத்தார். இவ்வுலகின் பாவ மன்னிப்பு இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றால் நிறைவேற்றப்பட்டது. பாவிகளை இரட்சிக்க வேறு பாவ மன்னிப்புகள் தேவையில்லை.
“நாம் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேரொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை.” (அப்போஸ்தலர் 4:12) இயேசு இவ்வுலகிற்கு இறங்கி வந்தார், யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். பாவிகளை விடுவிக்கும்பொருட்டு சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். இதனை உங்கள் இதயத்தில் விசுவாசித்து இரட்சிக்கப்படுங்கள். இயேசு உங்களை நீரினாலும், ஆவியினாலும் பரிசுத்தப்படுத்தினார்.
இயேசு நீரினாலும், ஆவியினாலும் நம் மாம்சத்திலுள்ள பாவங்களைத் தூர எறிந்தார். நாம் நம் விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்டோம். நாம் இந்த சத்தியத்தை விசுவாசித்தால், நாம் இந்த நற்செய்தியை இயேசுவுக்குள் விசுவாசித்தால், நாம் நிரந்தர நீதிமான்களாகிவிடுவோம். இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் இவை இரண்டும் அடிப்படை உண்மையின் கூறுகளாகும்.
 
 
பாவிகள் தம் பாதுகாப்பிற்காக பயன் படுத்தும் வசனங்கள்
 
நம் பாவங்களை அறிக்கை செய்வதால் விடுதலை அடைகிறோமா? இல்லை நாம் ஏற்கனவே விடுதலைப் பெற்றுள்ளோமா?
கர்த்தர் பாவமன்னிப்பை நிரந்தரமாக ஈந்தருளினார்.
 
1 யோவான் 1:9 கூறுகிறது. “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
நாம் வெறும் பாவ அறிக்கைச் செய்தால் போதுமானது என்றிருந்தால் நன்றாக இருக்கும். இதனை மனதில் வைத்து, சில இறையியலாளர்கள் புதிய ஒரு கொள்கைக்கு அநேக ஆலோசனைகளைக் கூறினர். எப்பொழுதெல்லாம் ஒருவன் பாவ அறிக்கைச் செய்கிறானோ அப்போதெல்லாம் மன்னிக்கப்படுகிறான் என்றார்கள். இது அவ்வளவு சுலபமானதா? ஒவ்வொரு முறையும் நாம் பாவ அறிக்கைச் செய்யும்போதும் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இயேசு கூறவில்லை.
நாம் வெறுமனே பாவ அறிக்கைச் செய்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுமா? நாம் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுவிட்டோமா? எதனை நாம் நம்புவோம். இதனைக் குறித்து வழக்காடுவோர் எதனை நம்புகிறார்கள் என்றால் அவர்கள் எப்பொழுதெல்லாம் பாவ அறிக்கைச் செய்கிறார்களோ அப்போதெல்லாம் நம் பாவங்கள் மன்னிக்கப்படும். ஆயினும், பாவங்கள் அவர்கள் இருதயத்திலேயே இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பாவ விடுதலைக் குறித்த உண்மையான வசனங்கள் தெரியாது. இயேசுவை விசுவாசிக்கும் பாவிகள் எப்பொழுதெல்லாம் தங்கள் சொந்த பாவங்களின் மன்னிப்புக்காக ஜெபிக்கிறார்களோ அப்பொழுது அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பது பொருளற்றது.
இதன் காரணமாக, பாவ விடுதலைக் குறித்த அவர் வசனங்களுக்குச் செவிசாய்க்க வேண்டும். உண்மையையும் பொய்யையும் பிரித்துணர வேண்டும். நாம் எப்படி போதிக்கப்பட்டோம் என்பதைக் குறித்து கவலைப்படக் கூடாது.
பாவிகள் 1 யோவான் 1:9 ஐ தவறுதலாக புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் அன்றாடப் பாவங்களின் மன்னிப்புக் குறித்து இவ்வசனம் கூறுவதாகத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். இப்போதனையை கவனமாக வாசிப்போமாக “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்.” நாம் நம் மூலப் பாவங்களிலிருந்து மட்டும் இரட்சிக்கப்பட்டோம் என்று நினைக்கிறீர்களா? நம் சொந்தப் பாவங்களை அறிக்கைச் செய்து அவர் உண்மையும் நீதியும் உள்ளவராகவும், பாவ மன்னிப்பு அளிப்பவராகவும் இருப்பதாக நினைக்கிறீர்களா? இதுவெல்லாம் தவறான யோசனைகள். இவை நம் மாமிசத்திற்குரியவவை.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் குருதியையும் நம்பும்போது மேற்கண்டவைகள் உண்மையானவை அல்ல என்று நமக்குப் புரியும். வெகு காலத்திற்கு முன்னால் அவரின் ஞானஸ்நானம் மூலமும் அவரின் சிலுவை இரத்தம் மூலமும் எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டன.
ஆவியின்படி விசுவாசிப்பதற்கும், தவறான யோசனைகளின்படி விசுவாசிப்பதற்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. தம் சொந்த யோசனைகளின்படி விசுவாசிப்பவர்கள் தம் பாவங்கள் தினமும் கழுவப்படவேண்டுமென்று எண்ணுகிறார்கள். ஆனால் நீர் மற்றும் இரத்தம் அளிக்கும் பாவ விடுதலையை விசுவாசிப்போர் தாம் இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் இரத்தத்தினாலும் முற்றிலுமாக விடுதலைப் பெற்றதை அறிவார்கள்.
ஒவ்வொரு நாளும் அறிக்கைச் செய்து புதிதாக பாவ விடுதலைப் பெறவேண்டும் என்று நம்புபவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தம் மூலம் பாவ விடுதலை கிடைக்கிறது என்று நம்பாததால் பாவம் செய்தவர்களாகிறார்கள்.
நீங்கள் இயேசுவின் ஞானஸ்நானம் அவர் இரத்தம் ஆகியவற்றின் மூலம் முற்றிலும் விடுதலையானவரா? விடுதலையடையாதவர்கள் தம் பாவங்களைத் தினமும் அறிக்கைச் செய்வதால் இரட்சிப்பை வெற்றிக் கொள்ள முயல்கிறார்கள். இது வருங்காலத்தில் அவர்கள் செய்யப்போகும் சொந்த பாவங்களை என்ன செய்வது என்ற பிரச்சனைக்குள்ளாக்குகிறது.
அவர்கள் தம் வருங்காலப் பாவங்கள் குறித்து அறிக்கைச் செய்ய முயலலாம். அவர்கள் அப்படிச் செய்வது அவர்கள் இயேசுவின் மீது குறைவாக விசுவாசம் வைத்திருப்பதைப் பறைச் சாற்றுகிறது. இம்மக்கள் நற்செய்தியான பாவ விடுதலையைக் குறித்து குருடர்களாக இருக்கின்றனர். இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும், நியாயத்தீர்ப்பை தம் மீது ஏற்றுக்கொண்டு நம்மை பாவங்களிலிருந்து விடுதலையாக்கினார். நாம் அவரை நம்புவதன் மூலம் விடுதலையாகிறோம்.
உங்கள் வருங்காலப் பாவங்களை அறிக்கைச் செய்து இரட்சிப்படைய நினைத்தால் உங்களுக்கும், நீரினாலும் ஆவியினாலும் மறுபடி பிறவாத அவிசுவாசிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாவிகள் பாவ அறிக்கையின் மூலம் விடுதலையடைய முடியாது. ஆகவே, “நானொரு விடுதலைபெறாத பாவி” என்று நேர்மையாக அறிக்கைச் செய்து, நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றைக் கேட்டு விசுவாசித்தால், கர்த்தர் உன் எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை விடுதலையாக்குவார்.
ஆனால் நீங்கள் நற்செய்தியாகிய பாவ விடுதலையை நம்பாமல் புலம்பும் ஜெபத்தில் ஒளிந்திருந்தீர்கள் என்றால், இயேசு மறுபடியும் நியாயாதிபதியாக இவ்வுலகத்திற்கு வரும்பொழுது கடுமையாகத் தீர்க்கப்படுவீர்கள்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியளிக்கும் பாவ விடுதலையை நம்பாதவர்கள் நியாயம் தீர்க்கப்படுவார்கள். அவர்கள் தம் அறிக்கைக்குப் பின்னால் ஒளிந்திருந்தால் அவர்கள் தீர்க்கப்படுவர். ஆகவே இரட்சிப்புத் தினத்திற்காக காத்திருக்கவேண்டாம். நீர் மற்றும் ஆவியைக் குறித்த ஆசீவதிகப்பட்ட நற்செய்தியை விசுவாசியுங்கள்.
 
 
முறையான பாவ அறிக்கையும் உண்மை விசுவாசமும்
 
ஒரு பாவியின் முறையான பாவ அறிக்கை யாது?
தான் ஒரு பாவியென்றும், தான் உண்மையான நற்செய்தியை நம்பாவிட்டால் நரகத்திற்கு போவேன் என்றும் அறிக்கைச் செய்யவேண்டும்.

கர்த்தர் பாவ விடுதலையை முற்றிலுமாக நமக்கு வழங்கினார். ஒரு உண்மைச் சம்பவத்தின் மூலம் இதனை விளக்குகிறேன். ஒரு வடகொரியா உளவாளி தென்கொரியா வருகிறான். இங்கே மக்கள் எத்தனை வளமையாக இருக்கிறார்கள் என்று கண்டு, அவன் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தன்னை வெளிப்படுத்த விரும்புகிறான்.
அவன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, இப்படி அறிக்கைச் செய்யமுடியும். “நான் வட பகுதியைச் சேர்ந்த உளவாளி” அல்லது “நான் தெற்கே வந்தது இன்னாரைக் கொலை செய்வதற்கு, இதனைத் தகர்ப்பதற்கு வந்தேன், அதனை ஏற்கெனவே தகர்த்து விட்டேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டேன். ஆகவே நான் உண்மையில் இப்போது உளவாளி இல்லை.”
இது ஒரு முறையான பாவ அறிக்கையாகுமா? அவன் உண்மையில் அறிக்கைச் செய்யவேண்டுமானால் அவன் கூறவேண்டியதெல்லாம் “நான் ஒரு உளவாளி” இந்த சிறு வாக்கியம் எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இது அவன் ஒரு மோசமானவன் என்பதையும் நியாயம் தீர்க்கப்படவேண்டியவன் என்பதையும் உணர்த்துகிறது. இந்த சிறு வாக்கியம் மூலம், அவன் எதற்காக அனுப்பப்பட்டானோ அது குறித்து நினைக்காமல் அவன் மன்னிக்கப்படுவான்.
அதுபோல் ஒரு பாவி கர்த்தரிடம் “நான் இன்னமும் விடுதலை அடையாத ஒரு பாவி. நான் தீர்க்கப்பட்டு நரகத்தில் தூக்கியெறியும் பொருட்டு நியமிக்கப் பட்டவன். தயவுசெய்து இரட்சியும்.“ என்று அறிக்கைச் செய்து இயேசுவை விசுவாசித்தால் அவன் விடுவிக்கப்படுவான். இயேசு ஞானஸ்நானம் பெற்று நமக்காக இரத்தம் சிந்தினார். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவரின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பை நம்புவதே.
வெளி 2:17 கூறுகிறது. “அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும் அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததமுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.” உண்மையான நற்செய்தியைப் பெறும் ஒருவனுக்கு இயேசுவின் நாமம் தெரியும் என்று வேதம் கூறுகிறது. முற்றிலுமாக விடுதலையான ஒருவனுக்கே நீதிமானாவதன் இரகசியம் தெரியும்.
மேற்கண்ட இரகசியம் தெரியாதவர்கள் எத்தனை அழுது ஜெபித்தாலும் அத்தனைப் பேரும் இன்னும் பாவிகளே. பாவ அறிக்கைச் செய்யவேண்டும் என்பதன் பொருள் தினமும் பாவ மன்னிப்பிற்காக ஜெபம் செய்யவேண்டும் என்பதல்ல. ஒருவன் 10வருடங்களாக கிறிஸ்தவனாய் இருந்தாலும், அவன் தினமும் கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்டவனாய் இருந்தாலும் இன்னும் அவன் ஒரு பாவியே. அவன் இன்னும் கர்த்தரின் பிள்ளையாகவில்லை.
இரட்சிக்கப்பட தாம் பாவிகள் என்பதை அறிக்கைச் செய்து இயேசுவின் பாவ விடுதலையை விசுவாசிக்கவேண்டும். இதுவே உண்மையான விசுவாசம்.
 
 
1 யோவான் 1:9 நம் பாவங்களை பட்டியலிடும் படி கூறவில்லை.
 
நம் பாவங்களை தினமும் அறிக்கைச் செய்யவேண்டுமா? அல்லது ஒரு முறை மட்டும் இரட்சிக்கப்படும்படி அறிக்கைச் செய்யவேண்டுமா?
ஒரு முறை மட்டும்.
 
ஒரு திருடனோ, கொலையாளியோ தம் காரியங்களை அறிக்கைச் செய்தால் விடுவிக்கப்படுவார்களா? பாவ அறிக்கைச் செய்வதனால் மட்டும் பாவிகள் விடுதலை அடைவதில்லை. நீராலும் ஆவியாலும் இயேசுவுக்குள் மறுபடியும் பிறக்கும் ஆசீர்வாதமான நற்செய்தியால் மட்டுமே நாம் விடுவிக்கப்படுகின்றோம். சிலர் கிறிஸ்தவர்களை கீழ்க்கண்டவாறு அறிக்கைச் செய்யுமாறு தவறாக வழி நடத்தியுள்ளனர்.
“அன்புள்ள கர்த்தரே, இன்று ஒருவனுடன் சண்டைப் போட்டேன். நான் பாவம் செய்தேன். நான் ஒருவனை ஏமாற்றினேன். நான் சிலவற்றைத் திருடினேன்.”
இவர்கள் இப்படியே கூறிக்கொண்டுபோனால் கர்த்தர் கூறுவார் “அமைதியாயிரு, பாவி, அதனாலென்ன?”
“தயவுசெய்து நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டிரும். கர்த்தரே, நீர் என் பாவங்களை அறிக்கைச் செய்யும்படிக் கூறினீரே. உம்முடைய இரக்கத்திற்காக கெஞ்சுகிறேன்.”
இத்தகைய ஜெபங்களை கர்த்தர் கேட்க விரும்புவதில்லை. அவர் நீர் மற்றும் ஆவியளிக்கும் பாவ விடுதலையை நம்புவோரின் ஜெபத்தைக் கேட்க விரும்புகிறார். அவர்கள் தம் பாவங்களை ஒப்புக்கொண்டு மறுபடியும் பிறத்தலைக் குறித்த நற்செய்தியை விசுவாசிப்பவர்களாக இருக்கிறார்கள்.
அகஸ்டின் தன் தாயின் நெஞ்சில் உறங்கும்போது பாவங்களுக்காக மனம் வருந்தியதாகக் கூறினார். அவர் அத்தகைய பாவ அறிக்கைத் தம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்பினார். இதனைக் குறித்து நம்மால் சிரிக்க மட்டுமே முடியும். வெறும் பாவ அறிக்கை உதவாது.
கர்த்தர் கூறுகிறார், “கூச்சல் போடாதே. நீ பாவம் செய்தாயா என்று மட்டும் கூறு. உன்னிடம் பாவமுண்டானால் அதனைப் பற்றி பேசுவதை நிறுத்து. இதுவரை நீ தவறானவைகளை விசுவாசித்திருக்கிறாய். ஆகவே, உண்மையைப் போதிக்கும் ஔர் ஆலயத்திற்குப் போ. முறையான வழியில் நற்செய்தியாகிய பாவ விடுதலையை விசுவாசித்து பாவ விடுதலை அடைவாயாக. இல்லையென்றால் நான் வந்து உன்னைத் தீர்ப்பேன்.”
மன்னிப்புக்காக மனம் வருந்தி ஜெபித்தல், மற்றும் இதர வழிகளில் இரட்சிக்கப்பட பாவ அறிக்கை செய்வது தவறாக வழி நடத்தப்பட்ட, உண்மையல்லாத விசுவாசமாகும்.
1 யோவான் 1:9 இல் நாம் நம் பாவங்களை ஒப்புகொள்ளும்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தம் நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் என்று எழுதப்பட்டுள்ளது.
 
 
என்னைவிட்டு அகன்று போங்கள்
 
அக்கிரமம் செய்வது என்றால் என்ன?
ஒருவன் இருதயத்தில் பாவம் நிறைந்தவனாக இருந்து அவன் இயேசுவை விசுவாசிப்பது அக்கிரமமாகும்.
 

கிறிஸ்தவ பாவிகளிடம் தவறான விசுவாசம் இருக்கிறது. அவர்கள் இயேசுமுன் அக்கிரமம் செய்கிறார்கள். “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:22-23).
சத்தியமில்லாத ஒன்றை நம்புபவன் மரித்து கர்த்தர் முன் நின்று கூறுகிறான், “நீர் எப்படி இருக்கிறீர் ஆண்டவரே? நான் கீழிருந்து உம்மை நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை அழகாய் நீர் இருந்தீர், இப்போது நேரடியாகப் பார்க்கும்போது மிகவும் அழகாய் இருக்கிறீர். நன்றி ஆண்டவரே. நீர் என்னை இரட்சித்தீர். என் இதயத்தில் பாவம் இருந்தபோதிலும் என்னை பாவமற்றவனாக நீர் கருதினீர். என்னை நீர் பரலோகத்திற்கு அழைத்துச்செல்வதாக உறுதியளித்ததால் நான் இங்கு வந்தேன். இப்பொழுது அநேக பூக்களிருக்கும் அங்கே நான் போகிறேன். வணக்கம். உம்மை அங்கு காணுவேன்.”
அவன் பூங்காவை நோக்கி நடக்கிறான். இயேசு அவனை இடைமறிக்கிறார். “கொஞ்சம் பொறு! இவன் இருதயத்தில் பாவமிருக்கிறதா என்று பார்ப்போம். நீ ஒரு பாவியா?”
“நிச்சயமாக என்னிடம் பாவமிருக்கிறது. ஆனால் நான் உம்மை நம்பவில்லையா?”
“நீ என்னை விசுவாசித்தபோதிலும் உன்னில் பாவமிருக்கிறதா?”
“நிச்சயமாக, என்னிடம் பாவங்கள் உள்ளன.”
“என்ன? உன்னிடம் பாவமிருக்கிறதா? ஜீவப் புத்தகத்தை எடுத்து வாருங்கள். செய்கைகளின் புத்தகத்தையும் எடுத்து வாருங்கள். அவன் பெயரைப் பாருங்கள். அவன் பெயர் எப்புத்தகத்தில் இருக்கிறது என்று பாருங்கள்”
நிச்சயமாக அவன் பெயர் செய்கைகளின் புத்தகத்தில் இருக்கிறது.
“நீ பூமியில் செய்த பாவங்களை அறிக்கைச் செய்வாயாக”
அவனப்படிச் செய்யத் தயங்கினாலும் அவனை வாய் திறந்து பாவங்களை அறிக்கைச் செய்ய வைக்கிறார்.
“ஆம். நான் இந்த பாவங்களைச் செய்தேன்”
அவனால் தன் வாயை மூட முடியவில்லை. அவன் குழப்பத்தில் இருந்தான்.
“சரி, அது போதும்! அவன் நரகத்திற்கு செல்வதற்கேதுவான அனைத்தையும் செய்துள்ளான். அவன் அங்கு செல்ல மிகவும் தகுதியானவன். எரிகிற அந்த இடத்திற்கு அவனை அனுப்புங்கள்.”
பூக்கள் பூத்திருக்கும் இடத்திற்கு அவன் அனுப்பப்படவில்லை. ஆனால் நெருப்பும் கந்தகமும் நிறைந்துள்ள இடத்திற்கு அனுப்பப்பட்டான். அவன் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுகையில் பற்கள் நடுங்கின.
“உம்மை நான் நம்பினேன். உம் நாமத்தினால் தீர்க்கத் தரிசனம் உரைத்தேன். உம் நாமத்தினாலே பிரசங்கம் செய்தேன். உமக்குச் சேவை செய்ய என் வீட்டை விற்றேன். அநாதைகளுக்கு உதவினேன். உமது நாமத்தில் நிலைத்திருந்தேன். அதிகாலையில் ஜெபித்தேன். நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்தேன். நான் பரலோகம் செல்லத் தக்கவன்.”
அவன் பற்கள் தாடை வரை உடைந்து போகும்படி பற்கடிப்புடையவனாய் இருந்தான். அவன் நரகத்தை அடைந்தபோது, இயேசுவுக்குள் பாவ விடுதலை அடைவதன் உட்பொருள் தெரியாத அநேக கிறிஸ்தவர்களை கண்டான். நற்செய்தியைத் தவறாக புரிந்துகொண்டவர்களை அவர் கைவிடுகிறார்.
 
 
செய்கையின் புத்தகத்தில் போலி விசுவாசிகளின் பாவங்கள் எழுதப் பட்டுள்ளன
 
பாவிகளின் பாவங்கள் எங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன?
அவர்கள் இருதயங்களிலும் செய்கையின் புத்தகத்திலும்.
 
நாம் இயேசுவை விசுவாசிக்கிறோமோ இல்லையோ தம் இருதயத்தில் பாவமுள்ளவர்களை அவர் அழித்துப்போடுகிறார். ஒருவனின் இருதயத்தில் துகளளவு பாவமிருப்பதாக அவர் கண்டால் நியாயத்தீர்ப்பு நாளில் நரகாக்கினை அடைவான். பாவ விடுதலை பெறாத பாவிகளிடம் கர்த்தர் வேண்டுவதெல்லாம், அவர்கள் பாவ விடுதலைப் பெறும்பொருட்டு, தாம் விடுதலை பெறவில்லை என்பதை அறிக்கைச் செய்ய வேண்டும் என்பதே.
ஒரு பாவியின் பாவங்கள் அவன் இருதயத்தில் பதிந்துள்ளன. நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்கள் தம் பாவங்களை நினைவு கூரலாம். ஆனால் அவைகள் தம் இருதயங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டன. அவர்களே நீதிமான்கள்.
மறுபடியும் பிறவாதவர்களின் இருதயங்களில் பாவங்கள் அப்படியே இருக்கின்றன. ஆகவே அவர்கள் கர்த்தர் முன் பாவிகள். அவர்கள் ஜெபம் செய்ய முழங்கால் படியிடும்போது, அவர்கள் பாவங்கள் கர்த்தரிடமிருந்து அவர்களைக் குறித்து கர்த்தர் அவர்கள் ஜெபங்களை கேட்பதிலிருந்து தடுக்கிறது. அவர்கள் எந்த காரியங்களுக்காக ஜெபித்தாலும் அவர்கள் பாவங்கள் அப்படியேதான் இருக்கின்றன. தம் பாவங்களை அறிக்கைச் செய்வதிலும் மீறுதல்களுக்காக மனம் வருந்துவதிலும் அவர்கள் காலத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் பாவங்கள் 10வருடங்களுக்கு முந்தியவையோ 11வருடங்கள் பழமையானவையோ, 20 வருடங்களுக்கு முன் செய்தவையாகவோ இருக்கலாம்.
தம் ஜெபங்களில் மீண்டும் மீண்டும் அவர்கள் புலம்பவேண்டுமா? அவர்கள் அதை ஏன் செய்கிறார்கள்? அவர்களுக்கு அப்படிச் செய்வதில் விருப்பமில்லாவிட்டாலும் அவர்கள் எப்போதெல்லாம் ஜெபம் செய்யத் தொடங்குகிறார்களோ, அப்போது தாம் கர்த்தர் முன்பு பாவியாக இருப்பதை நினைந்து, அப்படிச் செய்கிறார்கள். தம் பாவங்களிலிருந்து முதலில் விடுதலை பெற்று பரிசுத்தமாக ஜெபிக்கவேண்டுமென்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
இரும்பு ஆணியின் மூலம் அவர்கள் பாவங்களை கர்த்தர் அவர்களின் இருதயங்களில் எழுதி விடுவதால் அப்பாவங்கள் எப்போதும் அழிக்கப்பட முடியாதவை. அதன் பயனாக கர்த்தர் முன்பு வரும்போதெல்லாம் பாவ அறிக்கைச் செய்ய வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, இயேசு நல்கிய முழு நற்செய்தியின் ஒரு பகுதியை மட்டும் நம்புகிறவர்களின் வாழ்வு மிகவும் கடினமானதாக இருக்கிறது. அவர்கள் வாழ்வு நரகத்தில் முடிகிறது.
எரேமியா 17:1 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது”.
இஸ்ரவேல் மக்களில் யூதா என்பது உயர்ந்த கோத்திரத்தைக் குறிக்கும் பெயராகும். வேதாகமம் யூதர்களை மனிதகுலத்தின் பிரதிநிதியாக கூறுகிறது. ஆகவே யூதா என்பது எல்லா மக்களும் என்று பொருள்படும்.
யூதாவின் பாவங்கள் இரும்பெழுத்தாணியினாலும், எஃகை வெட்டக்கூடிய வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டுள்ளது. வைரமே இவ்வுலகத்தின் மிகவும் உறுதியான பொருளாகும். ஒரு இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் நம் பாவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு முறை பதிவு செய்யப்பட்டால் அவற்றை அழிக்கமுடியாது. நாம் உண்மையாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்கும் வரை அவற்றைக் கழுவ முடியாது.
தம்முடைய சிந்தனைகளிலிருந்து கிடைக்கும் விடுதலை, கிறிஸ்தவ கொள்கைகளை விசுவாசித்தல், இறையியலை மனப்பாடம் செய்தல், தம்மை ஆலயங்களுக்கு அர்பணித்தல் ஆகியவையெல்லாம் பாவங்கள் இதயத்தில் இருந்தால் பிரயோசனம் இல்லாததாகும்.
இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாது பாவங்கள் அழிக்கப்பட கூடாததாகையால், பாவிகள் தாம் ஜெபிக்கும்போதெல்லாம், “கர்த்தரே! நான் ஒரு பாவி” என்று நினைவு கூறுகிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு நெருங்கி வாழ எத்தனை முயன்றாலும், ஆலயத்தில் எத்தனைக் கடமைகளைச் செய்தாலும், எத்தனை இறையியல் மற்றும் கொள்கைகளைப் படித்தாலும், அவர்கள் மனதில் இன்னமும் பாவங்கள் இருக்கின்றன.
அவர்கள் மலைகளுக்குச் செல்கிறார்கள். அந்நிய பாஷைகளில் பேச முயல்கிறார்கள். எரியும் அக்கினியைக் காண விழைகிறார்கள். இவையாவும் பயனற்றது. உன் இருதயத்தில் பாவமிருந்தால் ஒரு நாளும் நீ அமைதியாய் இருக்க முடியாது.
எரேமியா 17:1 இல் கூறப்பட்டுள்ளதுபோல் நம் பாவங்கள் பலிபீடக் கொம்புகளில் எழுதப்பட்டுள்ளது. பரலோகத்தில் ஜீவப்புத்தகமும், செய்கையின் புத்தகமும் உள்ளன. பாவிகளின் பாவங்கள் செய்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளமையால் அவர்கள் தம் மீறுதல்களிலிருந்து தப்ப முடியாது. கர்த்தர் நம் பாவங்களைச் செய்கையின் புத்தகத்திலும், நம் மனசாட்சியின் பலகையிலும் எழுதி அவர் சட்டத்தின் மூலம் அவற்றை நமக்கு உணர்த்துகிறார்.
இந்த பதிவு செய்யப்பட்ட பாவங்களை, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் நமக்காக சிந்திய இரத்தம் ஆகியவற்றை நம்புவதன் மூலம் முற்றிலுமாக அழித்து இரட்சிக்கப்படவேண்டும். அப்பொழுது நாம் நித்திய ஜீவனை அடையத் தயாராய் இருப்போம். நம் பெயர் ஜீவப் புத்தகத்தில் எழுதப்படும்.
 
 
உன் பெயர் ஜீவப் புத்தகத்தில் இருக்கிறதா?
 
யார் பெயர் ஜீவப் புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளது?
இதயத்தில் பாவமில்லாதவர்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
 
ஜீவ புத்தகத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் பெயர் அங்கே இடம்பெறாவிட்டால் இயேசுவை நம்புவதில் பயனில்லை அல்லவா? உண்மையில் பாவ விடுதலை வேண்டுமானால் நீர் மற்றும் ஆவியால் கிடைக்கும் மறுபிறப்பை நீ நம்பவேண்டும்.
இயேசு இவ்வுலகிற்கு இறங்கி வந்தார். இவ்வுலகின் எல்லா பாவங்களையும் கழுவும்பொருட்டு தம் 30ஆம் வயதில் இயேசு ஞானஸ்நானம் பெற்றார். நம்மை விடுவிக்கும்பொருட்டு சிலுவையில் மரித்தார். மத்தேயு 3:15 இல் பதிவ் செய்யப்பட்டுள்ளபடி “இதற்காகவே” அவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டார். நம் பெயர் ஜீவப்புத்தகத்தில் இடம் பெறும் பொருட்டு நாம் இதை நம்பவேண்டும்.
நாம் மரித்து கர்த்தர் முன் நிற்கும்போது, அவர் “இவனின் பெயர் ஜீவப்புத்தகத்தில் இருக்கிறதா என்று பார்” என்பார்.
“அங்கே இருக்கிறது, கர்த்தரே”
“சரி, எனக்காக பூமியில் கஷ்டப்பட்டு கண்ணீர் வடித்தாய், இனி அப்படி நடக்காவண்ணம் நான் உனக்குச் செய்வேன்”
கர்த்தர் அப்படிப்பட்ட ஒருவனுக்கு நீதியின் கிரீடம் ஒன்றினைப் பரிசாக சூட்டுகிறார்.
“நன்றி கர்த்தரே. நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்”
“தேவ தூதர்களே, இவனுக்கு முடி சூட்டுங்கள்”
“கர்த்தரே, என்னை இரட்சித்தது எனக்குப் போதும். இக்கிரீடம் எனது தகுதிக்கு மீறியதாகும். நன்றி. நீர் என்னை இரட்சித்ததற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உமது பிரசன்னத்தில் இருப்பது எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது.”
“தேவ தூதர்களே, இந்த 10,000 ஆன எனது குமாரனை முழங்கால் படியிட்டு உங்கள் முதுகுகளில் தூக்கிச் செல்லுங்கள்”
தேவ தூதர்கள், “சரி ஆண்டவரே” என்பார்கள்
“தயவு செய்து எனது முதுகில் உட்காருங்கள்”
“இது எத்தனை நன்றாய் இருக்கிறது. இதனை சரியாக செய்கிறேனா? நாம் செல்வோமாக.” அவர்கள் கவனமாக அடியெடுத்து வைக்கிறார்கள்.
“நீங்கள் மெதுவாக நடந்துவர விரும்புகிறீர்களா?”
“ஓ இந்த இடம் அழகாய் இருக்கிறது. இது எத்தனை பெரிய இடம்”
“கோடிக்கணக்கான ஆண்டுகளாக இங்கும் அங்கும் போய்க் கொண்டிருக்கிறேன், ஆனால் இதன் முடிவை நான் இன்னும் காணவில்லையே.”
“இது உண்மையா? நான் உனக்குப் பாரமாய் இருப்பேன். நீ என்னைக் கீழே விடலாம்.“
“இங்கே நாம் வலிமை குன்றி போவதில்லை.”
“நன்றி. ஆனால் இப் பரலோக ராஜ்ஜியத்தின் தரையில் கால் வைக்க நான் விரும்புகிறேன். எனக்குமுன் வந்த நீதிமான்களெல்லாம் எங்கிருக்கிறார்கள்?”
“அவர்கள் அங்கே இருக்கிறார்கள்”
“நாம் அங்கே செல்வோம்”
“அல்லேலூயா! அவர்கள் ஒருவரை ஒருவர் அரவணைத்துக்கொண்டு ஆனந்தமாக வாழ்ந்தனர்.”
அதே சமயம் ஒருவன் இயேசுவை விசுவாசித்தபோதிலும் இதயத்தில் பாவமுள்ளவனாக வாழ்ந்து, மரித்து கர்த்தர் முன் நிற்கிறான். அவன் தான் இயேசுவை விசுவாசிப்பதாகவும், தானொரு பாவி என்பததையும் ஒப்புக்கொள்கிறான்.
கர்த்தர் கூறுகிறார். “இவனின் பெயர் ஜீவப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.”
“இப்புத்தகத்தில் இல்லை ஆண்டவரே.”
“அப்படியானால் செய்கையின் புத்தகத்தில் பாருங்கள்”
“அவன் பெயரும் அவன் பாவங்களும் இங்கேயுள்ளன.”
“அப்படியானால் அவனை எரிபொருளைபற்றிய கவலையில்லாத இடத்திற்கு அனுப்பிவையுங்கள். அங்கே அவன் நித்தியமாக வாழட்டும்.”
“ஓ, கர்த்தரே, இது ரொம்ப மோசம்”
அவன் இதனை மோசம் என்று கூறுகிறான். இயேசுவை வெகு தீவிரமாக விசுவாசித்தாலும் அவன் ஏன் நரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்?
இதற்கு காரணம் அவன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டதும், நற்செய்தியின் பாதி சத்தியத்தைக் கேட்டதுமேயாகும். இயேசுவின் பாவ விடுதலைக் குறித்த முழுப் பொருளைத் தவறாகப் புரிந்துகொண்டு வாழ்ந்தோமானால், நாமும் நரகம் சென்றடைவோம்.
இந்த மனிதன் இயேசுவை விசுவாசித்தான். ஆயினும் அவன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டான். தானொரு பாவி என்று அவன் நினைத்தான். அவன் முழு நற்செய்தியை கேட்டிருந்தால் அவன் விசுவாசம் தவறானது என்று உணர்ந்திருப்பான். அவன் தன் சொந்தக் கருத்துக்களை விசுவாசித்திருந்ததால் தோல்வியடைந்தான்.
நீங்கள் பரலோக ராஜ்ஜியத்திற்கு போக விரும்பினால், நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பதைக் குறித்து விசுவாசிக்கவேண்டும். மத்தேயு 3:15 இல் எழுதப்பட்டுள்ளது போல் “இதற்காகவே” இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். நீங்கள் நீர் மற்றும் ஆவியளிக்கும் இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும்.
 
செய்கையின் புத்தகத்தில் யாருடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது?
யாருடைய இருதயங்களில் பாவம் இருக்கிறதோ, அவர்கள் பெயர் அங்கே எழுதப்பட்டுள்ளது.
 
நல்ல பண்புள்ளவன் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததைப் போன்று நீ எல்லாவற்றையும் விசுவாசித்தால், உன் முடிவு நரகம். நரகத்தில் சிறந்த பண்புள்ள பல மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பரலோகத்தில் வெகு சிலர் போராட்டக்காரர்கள் - தாம் விசுவாசித்தவற்றிற்காக போராடியவர்கள் இருக்கிறார்கள்.
பரலோகத்தில் இருப்பவர்களுக்கு தாம் பாவிகளாக இருந்தோம் என்றும், நாம் நரகத்திற்கு போக ஆயத்தமாக இருந்ததையும், ஆனால் அவர்கள் பாவங்கள் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றால் கழுவப்பட்டதை நன்றியுடன் நம்பினர்.
பரலோகத்தில் குவியல் குவியலாக காதுகளும் வாய்களும் இருப்பதாக கூறுகின்றனர். ஏனெனில் நிறைய மனிதர்கள் இயேசுவுக்குள் விடுவிக்கப்படுதலை தம் வாயிலும் காதிலும் மட்டுமே விசுவாசித்தனர். கர்த்தர் எரியும் கந்தகத்தில் அவர்கள் உடலை வீசிப்போட்டார் என்று கூறுவர்.
இயேசுவை விசுவாசித்தபோதிலும் மனதில் பாவத்துடன் இருக்கும் ஒருவன் கர்த்தரிடம் “கர்த்தரே!, மக்கள் என்னை நீதிமான் என்றனர், ஏனெனில் நான் இயேசுவை விசுவாசித்தேன். என் மனதில் பாவங்கள் இருந்தாலும் அவரை நான் நம்பினேன். நீர் என்னை பாவமற்றவன் என்று கருதுவீர் என்று நம்பினேன். அதனையே நான் படித்து விசுவாசித்தேன். மற்ற எல்லா மனிதர்களும் எப்படி விசுவாசித்தார்களோ நானும் அதையே செய்தேன். நான் வந்த இடத்தில் அதுவே மிகப்பெரும் நம்பிக்கையாக எல்லோராலும் நம்பப்படுகிறது.”
கர்த்தர் பதிலளிக்கிறார். “தம் இருதயத்தில் பாவங்களுடன் இருப்பவர்களை என்னால் மன்னிக்க முடியாது. நான் ஆசீர்வாதமான நீர் மற்றும் ஆவியின் மூலமாக உன் பாவங்கள் எல்லாவற்றையும் கழுவினேன். ஆனால் நீ அவற்றை விசுவாசிக்க மறுத்தாய். தேவ தூதர்களே, இந்த துடுக்கான மனிதனை நரகத்தின் நெருப்பில் போடுங்கள்.”
இயேசுவை விசுவாசித்தாலும் தம் இருதயத்தில் பாவமிருப்பதாக யாராவது கருதினால் அவன் முடிவு நரகமாகும். உண்மையான நற்செய்திக்கு செவி கொடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறு. இல்லாவிட்டால் நீ நரகத்தில் எரிவாய்.
உன்னிடம் பாவங்களை வைத்துக்கொண்டு என்னிடம் பாவங்கள் இல்லை என்றாயானால் நீ கர்த்தரை ஏமாற்றுகிறாய். பாவிகளுக்கும் நீதிமான்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை முடிவில் நாம் பார்க்க முடியும். நான் உன்னை பாவ விடுதலை பெறு என்று ஏன் கூறினேன் என அப்பொழுது உணர்வாய்.
அப்பொழுது முழு விடுதலையை (இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம்) விசுவாசித்தவர்களுக்கும், அப்படிச் செய்யாதவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை நீ பரலோகத்திற்கும் நரகத்திற்கும் உள்ள சந்திப்பில் நிற்கும்போது உணருவாய். இது ஒரு பெருத்த வித்தியாசமாகும். சிலர் பரலோக ராஜ்ஜியத்தினுள் செல்வார்கள். சிலர் நரகத்திற்குச் செல்வார்கள்.
நீ இயேசுவை விசுவாசித்தாலும் இன்னும் பாவியாய் இருக்கிறாயா? அப்படியானால் நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறக்கவேண்டியவன் என்பதை உணர்ந்துகொள். தம் இருதயத்தில் பாவமுள்ளவர்களை கர்த்தர் நரகத்திற்கு அனுப்புகிறார். முற்றிலுமான பாவ மன்னிப்பை விசுவாசிப்போர் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
அதனை இப்போதே செய். அதனைப் பிறகுச் செய்யலாம், என்று நினைத்தால் சமயமாகிவிடும். ஆயத்தமாயிரு, நரகத்தில் முடிவு உண்டாவதற்கு முன், நீர் மற்றும் ஆவி நல்கும் பாவ விடுதலையை நம்பி பரிசுத்தனாகு.
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக! நாம் அவரின் கிருபைக்கும், பாவிகளாகிய நம்மை நீதிமான்களாக்கியதற்கும் நன்றி செலுத்துகிறோம். அல்லேலூயா!
 
 
இயேசு: நீதிமான்களுக்காக வழக்காடுபவர்
 
மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் நம் பாவங்கள் கழுவப்படுமா?
இல்லை. கண்டிப்பாக முடியாது. இப்படித்தான் சாத்தான் நம்மை வஞ்சிக்கிறான்.
 
1 யோவான் 2:1-2 ஐ வாசிப்போமாக. “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியவரே; நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.”
இங்கு என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று உங்களால் பார்க்கமுடிகிறதா? விசுவாசித்தாலும் தன் மனதில் பாவங்களுள்ள யாராவது அங்கே இருக்கிறார்களா? உங்கள் இருதயத்தில் பாவங்களை வைத்துக்கொண்டு இல்லை என்பீர்களானால் நீங்கள் கர்த்தரை ஏமாற்றுகிறீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றுகிறீர்கள்.
ஆயினும் நீங்கள் இயேசுவைப் புரிந்து கொண்டு, அவர் யோர்தான் நதியில் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போடுவதற்கு அவர் செய்ததை விசுவாசித்தீர்களானால் நீங்கள் பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலைப் பெறுவீர்கள். அப்பொழுது நீ “கர்த்தரே, நீரினாலும் ஆவியினாலும் உம்மில் நான் மறுபடியும் பிறந்தேன். என்னிடம் பாவமில்லை. உம்முன்னால் வெட்கமின்றி என்னால் நிற்கமுடியும்.”
அப்பொழுது கர்த்தர் பதிலளிப்பார், “ஆம், சரியாக கூறினாய். ஆபிரகாம் என்னில் விசுவாசமாய் இருந்து தானொரு நீதிமான் என்று நம்பியதைப்போன்று, நீயும் நான் உன் பாவங்களைக் கழுவிப்போட்டதால் நீதிமானாவாய்.”
ஒருவன் இயேசுவை விசுவாசித்தபோதிலும் அவன் இருதயத்தில் பாவமிருக்கிறது. அத்தகைய ஒருவனை கற்பனை செய்க. அவன் கூறுகிறான். “நான் இயேசுவை விசுவாசிக்கிறபடியால், என் இருதயத்தில் சிறிய பாவங்கள் இருந்தாலும் நான் பரலோகம் செல்லுவேன்.”
அவன் பரலோகத்திற்குள் அனுமதிக்கப் பட இத்தனை விரும்புகிறான். நியாயாசனம் முன்பு நின்றிருந்தாலும் எதிர்க்க முயற்சி செய்கிறான், ஏன்? அவனுக்கு ஆசீர்வதிக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதைக் குறித்து தெரிந்திருக்கவில்லை.
தான் பூமியில் வாழும் காலம் முழுவதும் நானொரு பாவி என்று அறிக்கைச் செய்ய வேண்டும். “நானொரு பாவி. நான் நரகத்திற்கு போவேன். தயவுசெய்து இரட்சியும்” ஒரு பாவி மனம் வருந்தி ஜெபிப்பதால் இரட்சிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக தானொரு பாவியென்பதை ஒப்புக்கொண்டு விடுதலையாகும்பொருட்டு நீர் மற்றும் ஆவியளிக்கும் பாவ விடுதலையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நம்மூலப் பாவங்கள் மட்டுமே இயேசுவுக்குள் மன்னிக்கப்பட்டன என்பதும் நம் சொந்தப் பாவங்களுக்காக தினமும் மனம் வருந்தி இரட்சிப்படைய வேண்டுமென்பதும் போலி நற்செய்தியாகும். இது நம்மை நேராக நரகத்திற்கு வழி நடத்துகிறது. இப்போலி, நற்செய்தியை நம்பி நரகத்திற்கு தம் வாழ்வை அழித்துக் கொண்டவர்கள் அநேகம். இம்முறைமை இந்நாட்களில் எங்கும் பரவியுள்ளது.
நீ தவறான நற்செய்தியில் விழுந்திருந்தாயானால் அது உனக்குத் தெரியுமா? உன் கடனெல்லாவற்றாயும் தீர்த்தபிறகும் நீ இன்னமும் கடனாளியாக இருப்பாயா? இது குறித்து சிந்தனைச் செய். இயேசுவை விசுவாசிக்கும் அதே நேரம் உன்னைப் பாவியாகக் கருதினால் அது அவரை முழுவதுமாக நம்பியதற்கு அடையாளம் ஆகுமா? நீ விசுவாசி மற்றும் பாவியா? அல்லது விசுவாசி மற்றும் நீதிமானா?
உனக்குள் அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியும். உன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன என்றும் நீ நம்பலாம்; அல்லது உன் மீறுதல்களுக்காக தினமும் வருந்தி ஜெபிக்கவேண்டும் என்றும் நீ நம்பலாம். நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அது நீ பரலோகம் செல்வாயா? அல்லது நரகம் செல்வாயா என்று தீர்மானிக்கும். உண்மையான நற்செய்தியை அறிவிக்கும் சுவிஷேகனுக்கு செவி கொடு.
போலி நற்செய்தியை நம்புவோர், அதிகாலை ஜெபக்கூட்டங்களில், பாவ மன்னிப்பு கேட்டு இன்னமும் ஜெபிக்கிறார்கள். எல்லா புதன்கிழமை ஆராதனைகளிலும், எல்லா முழு இரவு ஜெபங்களிலும் தம் பாவங்களைக் கழுவ முயற்சி செய்கிறார்கள்.
“கர்த்தரே, நான் பாவம் செய்தேன். இவ்வாரத்தில் நான் பாவம் செய்தேன்” இப்படி அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு செய்த பாவங்கள் நினைவுக்கு வருகின்றது. மீண்டும் பாவ மன்னிப்புக்காக அவர் ஜெபிக்கிறார். இது ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியான நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறத்தலை அசட்டை செய்வதாகும்.
நம் பாவங்களுக்கு இரத்தக்கிரயம் செலுத்தவேண்டும், எபிரெயர் 9:22 கூறுகிறது. “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.” உங்களிடம் இன்னும் பாவம் இருக்கிறது என்றால் அவரை மீண்டும் இரத்தஞ் சிந்தச் சொல்லுகிறீர்களா? முழு பாவ விடுதலையை யாரெல்லாம் நம்ப மறுக்கிறார்களோ அவர்கள் இயேசுவின் பாவ விடுதலையைப் பொய்யாக்கும் களங்கத்திற்குள்ளாக்குகிறார்கள். அவர்கள் இயேசு நம்மை முற்றிலும் விடுவிக்கவில்லை என்றும் அவர் ஒரு பொய்யர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இயேசுவுக்குள் விடுதலைப் பெற, நீர் மற்றும் ஆவியால் கிட்டும் பாவ விடுதலையின் உண்மையை நம்பவேண்டும், நூறு, ஆயிரம், பல லட்சம் ஜெபங்களால் உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறமுடியுமா? உண்மையான நற்செய்தி நம்மை முற்றிலும் விடுதலையாக்குகிறது. நீதிமானாகு, பரலோக இராஜ்யத்திற்கு போ, நித்தியமாக நீதிமானாய் வாழ்.
இயேசுவுக்குள் புதிய வாழ்வு வாழ்வேன். பழையவைகள் ஒழிந்துபோயின நான் புதிய படைப்பானேன். வீணாக்கிய பழமை போயிற்று. ஓ, இயேசு நம் உண்மை வாழ்வு. இயேசுவிக்குள் புதிய வாழ்வு வாழ்வேன்.
நீ இயேசுவுக்குள் புதிய வாழ்வு வாழ்வாய். நீ விரும்புவதுபோல் அழகாய் இல்லாவிட்டாலும், நீ மிகவும் குள்ளமாக இருந்தாலும், தொப்பை வயிற்றையுடையவனாயிருந்தாலும், நீர் மற்றும் ஆவியினால் வரும் மறுப்பிறப்பு நற்செய்தியால் ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருந்தால் சந்தோஷமாக வாழ்வாய். உன் மூக்கு அதன் வடிவத்தில் இல்லாவிட்டால் என்ன? நீ குள்ளமாயிருந்தால் என்ன? நாம் நிறைவடையாதவர்களாக இருப்பதாலே, இயேசுவுக்குள் நீர் மற்றும் ஆவியாலே மறுபடியும் பிறப்பதை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டோம். ஆனால் யாரெல்லாம் கர்வம் நிறைந்தவர்களோ, அவர்கள் முடிவு நரகம்.
நன்றி கர்த்தாவே. நான் எப்பொழுதும் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். நாம் நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதை விசுவாசிப்பதால், நாம் பரலோகத்தில் வரவேற்கப்படுவோம்.
 
 
பொய் நரகத்திற்கு கொண்டு செல்கிறது
 
நீதிமானிற்கான கிரீடம் முடிவில் யாருக்கு கிடைக்கும்?
பொய்யை மேற்கொள்பவனுக்கு.
 
பொய் நம்மைத் தினமும் மன்னிப்புக் கேட்டு மனம் வருந்தி ஜெபிக்கச் சொல்கிறது. ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்ன கூறுகிறது என்றால் நாம் முற்றிலும் பாவ மன்னிப்பு பெற்றவரானோம், நாம் செய்யவேண்டியதெல்லாம் இதனை நம்புவதே.
உண்மை எது? நாம் தினமும் மனம் வருந்த வேண்டுமா? அல்லது இயேசு ஞானஸ்நானத்தை மிகவும் பொருந்தத் தக்க முறையில் பெற்று நம்மை பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுவித்தார் என்பதை நம்புவது சரியா? உண்மை யாதெனில் இயேசு நம் பாவங்களை முற்றிலும் எடுத்து போட்டார். இந்தச் சரியான முறையில் அவர் நம்மை இரட்சித்தார்.
ஆவிக்குரிய போரில் உண்மையல்லாதவைகளை நாம் வெற்றிக்கொள்ளவேண்டும். நிறைய பேர் உண்மையல்லாதவற்றைப் பின்பற்றுகிறார்கள். “பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: இரு புறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்.” (வெளி 2:12-13)
“ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்க கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.” (வெளி 2:17)
அங்கே நிறைய பொல்லாப்பான ஆவிகள் திரிகின்றன, பொய் உண்மையைப் போல் தோற்றமளிக்கிறது. சாத்தான் பிரகாசமான தேவதூதனைப் போல் தோன்றுகிறான். யாரொருவன் நீர் மற்றும் ஆவியால் வரும் இரட்சிப்புக் குறித்த உண்மையை அறிந்தும் அதனை ஏற்கவில்லையோ அவனைக் கர்த்தரால் காப்பாற்றமுடியாது. அத்தகையோன் நிச்சயமாக நரகத்தில் முடிவடைவான்.
இயேசுவின் இரட்சிப்பு குறித்து எல்லோரும் அவர்களுக்குள்ளே தீர்மானிக்க வேண்டும். யாரும் உன் முன்னால் முழங்கால் படியிட்டு விசுவாசித்து விடுதலையாகு என்று கெஞ்சப் போவதில்லை.
உன் பாவங்களிலிருந்து நீ இரட்சிக்கப்படவேண்டுமானால் நீர் மற்றும் ஆவியளிக்கும் இரட்சிப்பை விசுவாசி. அவர் அன்பினால் அளித்த இரட்சிப்பையும், நம்மை இரட்சித்த கிருபையையும் குறித்து நன்றியறிதலுடையவனாயிருந்தால் அதனை நம்பு. நீ நரகத்திற்கு நியமிக்கப்பட்ட பாவியாயிருந்தால் நீர் மற்றும் ஆவியை விசுவாசி. நீர் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், ஆவி அவரின் சிலுவை மரணத்தையும் குறிக்கிறது. நீ அப்பொழுது நீதிமானாவாய்.
நீ உன்னைப் பாவியென்று கருதவில்லையானால், இயேசுவை நம்புவதன்மூலம் விடுவிக்கப்பட வேண்டியதில்லை. பாவிகள் மட்டுமே நீர் மற்றும் ஆவி நல்கும் நற்செய்தியாகிய மறுபடியும் பிறத்தலை விசுவாசிப்பதன் மூலம் விடுதலைப் பெறுவர். இயேசு பாவிகளுக்கு இரட்சகராகவும், கலங்கியவர்களுக்கு ஆறுதலுமாக இருக்கிறார். அவர் நம்மையெல்லாம் படைத்தவர். அவரே அன்பின் எஜமானர்.
நான் உங்களிடம் நீர் மற்றும் ஆவியினால் கிட்டும் நற்செய்தியாகிய மறுபிறப்பை விசுவாசிக்கும்படி வேண்டுகிறேன். அதனை நம்புங்கள். நீங்கள் இயேசுவே இரட்சகர், நண்பர், மேய்ப்பன் மற்றும் உங்கள் கர்த்தர் என்பதில் உறுதியாய் இருங்கள். பாவிகள் இயேசுவை விசுவாசிக்கவேண்டும். உங்கள் வாழ்வு நரகத்தில் முடிவடைய வேண்டாமென்றால் இதனை நீங்கள் கண்டிப்பாக நம்பவேண்டும். இரட்சிப்பின் நற்செய்தியை விசுவாசியுங்கள் என்று கர்த்தர் நம்மிடம் கெஞ்சப்போவதில்லை.
நீ பரலோக இராஜ்யத்திற்குள் அனுமதிக்கப்படவேண்டுமா? அப்படியானால் நீர் மற்றும் ஆவியால் கிட்டும் நற்செய்தியாகிய மறுபிறப்பை விசுவாசி. இயேசு கூறினார். “நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன், என்னில் விசுவாசமாய் இரு.” என்னை நரகத்தில் எரியுங்கள் என்று நீ கூறுகிறாயா? அப்படியானால், அதனை நம்பாதே. உனக்கு ஏற்கெனவே நரகத்தில் ஔரிடம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக கர்த்தர் கூறுகிறார்.
கர்த்தர் கெஞ்சுவதில்லை. ஒரு வியாபாரி தன்னிடமுள்ள பொருட்களை விற்கும் பொருட்டு பாகுபாடு இல்லாது எல்லா மக்களையும் வரவேற்கிறான். ஆனால் கர்த்தர் விடுதலையான அனைவருக்கும் பரலோக ராஜ்ஜியத்தை இலவசமாகக் கொடுக்கிறார். கர்த்தர் நீதியுள்ளவர்.
மக்கள் உலகின் கடைசிக்காலம் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆம். நானும் அப்படியேதான் நினைக்கிறேன். நீராலும் ஆவியாலும் கிட்டும் நற்செய்தியாகிய மறுபடியும் பிறத்தலை விசுவாசியாமல் இருப்பது முட்டாள்தனமாகும்.
நீராலும் ஆவியாலும் கிட்டும் நற்செய்தியாகிய மறுபடியும் பிறக்கும் இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை விசுவாசித்திருங்கள். நாம் ஒன்றாக பரலோக ராஜ்ஜியத்திற்குள் போவோம். என்னுடன் இயேசு நடமாடும் இடத்திற்கு வரமாட்டீர்களா என்ன?
 
நீ ஒரு பாவியா? அல்லது நீதிமானா?
ஒரு நீதிமானின் இருதயத்தில் பாவம் இருப்பதில்லை.
 
ரோமர் 8:1-2 இலிருந்து வாசிப்போம். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாய் இருந்து, மாமிசத்தின் படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.”
இயேசு தம் ஞானஸ்நானம் மூலமும் அவரின் சிலுவை மரணம் மூலமும் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். ஆக்கினைத் தீர்ப்படைய வேண்டிய அனைத்துப் பாவிகளையும் இரட்சித்தார். கர்த்தரின் இரட்சிப்பு இரண்டு காரியங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று சட்டம், மற்றது அன்பு. சட்டம் நாம் பாவிகளென்பதைப் போதிக்கின்றது. சட்டத்தின் படி பாவத்தின் சம்பளம் மரணம். சட்டத்தினால் நாம் இரட்சிப்படைய முடியாது. அது நம் பாவ சுபாவத்தையும் முடிவினையும் குறித்து போதிக்கிறது. அது நாம் பாவிகள் என்பதை நமக்குத் தெரிவிக்கிறது.
பாவத்திற்கு கூலி கொடுப்பதற்காக, இயேசு இவ்வுலகிற்கு இறங்கி வந்தார். நம்மைத் தீர்ப்பிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு நம் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்டு அதற்கு கிரயமாக தன் உயிரை ஈந்தார். கர்த்தரின் இந்த அன்பே நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தது.
நாம் பொய்யை வெற்றிக் கொள்ளவேண்டும். யாரெல்லாம் பொய்யை வெற்றி கொள்கிறார்களோ, அவர்களுக்கு நீர் மற்றும் ஆவியினால் கிட்டும் மறுபடியும் பிறத்தலின் ஆசீர்வாதத்தை நல்கினார்.
இயேசுவை நம்புவதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டோம். அவரின் வார்த்தைகளை நம்பி, நாம் நீதிமான்களாகவும், உண்மையை அறிந்துகொண்டவர்களும் ஆனோம். உங்கள் இதயத்தில் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கும் உண்மையை விசுவாசியுங்கள். நீங்கள் இரட்சிக்கபடுவீர்கள்.