• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-1] வேதவாக்கான உறுதிமொழிக்குள் பணியாற்றும் பரிசுத்த ஆவியானவர் (அப்போஸ்தலர் 1:4-8)

(அப்போஸ்தலர் 1:4-8)
“அன்றியும் அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி; யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி; ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்; பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப் பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”
 
 
பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்வது கர்த்தரின் ஈவா அல்லது நம் முயற்சிகளுக்காக கொடுக்கப் பட்டதா?
எவனொருவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, மற்றும் கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேற்றப் பட்டவனோ, அவனுக்கு அது பரிசாக வழங்கப்படுகிறது.

ஒருமுறை ஜெபம் மூலமாக, பரிசுத்த ஆவியைப் போன்ற அக்கினியைப் பெறுவது போல் அனுபவித்தேன். ஆனால் இந்த நெருப்பு அதிக நேரம் தங்கவில்லை, தொடர்ந்து சேர்த்த பாவங்களினால் இது அவிந்து போயிற்று. ஆயினும், இப்பொழுது பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய உண்மையை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். இவர் சர்வகாலமும் உங்களுடனிருப்பார், பாவங்களினால் அவிந்துபோகும் போலி ஆவி மூலமல்ல, உண்மையான நற்செய்தி மூலமாக அவரைக் காட்ட விரும்புகிறேன். இப்பொழுது நான் இச்செய்தியின் மூலமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் பரிசுத்த ஆவியானவர் ஜெபத்தினால் பெறப்படக் கூடியவர் இல்லை, அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் மட்டுமே கிட்டுபவர்.
இந்நூலின் மூலமாக 1பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ் செய்வதைப் பெறும்படியாக உங்களை வழி நடத்த விழைகிறேன். நான் அளிக்கும் செய்தியை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் செலுத்துகிறார் என்பதை அறிந்து கொள்வீர்கள். இந்நேரத்தில் நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்வதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரின் முழு விருப்பமாயிருக்கிறது. இந்நூலின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ் செய்வதைக் குறித்து நீங்கள் கற்பதுடன் அவரைப் பெற்றும் கொள்ளலாம். இந்நூல் உங்களுக்கு போதவில்லை என்றால், இதற்கு முன் நான் எழுதிய இரண்டு நூல்களையும் படிக்கும்படி உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் கர்த்தருக்கு முன்பாக, இந்நூலின் மூலம் சரியான நம்பிக்கைப் பெற்றவராவீர்கள். 
 
1பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் பிறந்தவர்கள் இதயத்தில் வாசஞ்செய்கிறார், அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததன் மூலம் தம் பாவங்களனைத்தும் மன்னிக்கப் பட்டவர்கள். ஒருமுறை பரிசுத்தன் ஒருவனுள் அவர் வந்தால், அவனுள் சதாகாலமும் தங்குகிறார், அவன் நற்செய்தியை விசுவாசித்து கொண்டிருக்கும் வரை அவனை விட்டு அவர் விலகுவதில்லை, அவர் பரிசுத்தவான்களுக்கு உண்மையைத் தெளிவு படுத்தும் வேதாகமத்தின் படி கர்த்தரின் சித்தம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வழிநடத்துகிறார். உலகின் இச்சைகளையும் கஷ்டங்களையும் மேற்கொள்ளத் தேவையான வலிமையை அளிக்கிறார், மேலும் ஆவிக்குரிய கனிகளை அவர்கள் பெற்று வாழ அனுமதிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதன் மூலமாக பரிசுத்தவானின் சரீரத்தை கர்த்தருக்குள் தாம் வாழும் ஆலயமாக மகிமைப்படுத்துகிறார். (அப்போஸ்தலர் 2:38-39, யோவான் 14:16, 16:8-10, 1கொரிந்தியர் 3:16, 6:19, கலாத்தியர் 5:22-23).
 
பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் இயேசுவின் சீடர்கள்மீது இறங்கியது போல், தாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அநேக கிறிஸ்தவர்கள் முயல்கிறார்கள். சில மனிதர்கள் இந்த முறையைப் பற்றிக் கூறி அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளனர். அவர்கள் பரிசுத்த ஆவியானவரை மனித முயற்சிகளினால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது போல் காட்டுகிறார்கள். காட்சிகளைக் காணுதல், அதிசயங்களைச் செய்தல், இயேசுவின் குரலைக் கேட்டல், பல பாஷைகளில் பேசுதல், சுகமளித்தல், பிசாசுகளை விரட்டுதல் போன்றவை வேண்டுமென விரும்புகிறார்கள். எப்படியாயினும் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கிறது, மேலும் அவர்கள் தீய ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் (எபேசியர்:1-2). இப்போதும் கூட நிறைய மக்கள் தாம் தீய ஆவியின் வல்லமையின் கீழிருப்பது தெரியாமல் தொடர்ந்து வாழ்கிறார்கள். அதனாலேயே சாத்தான் இச்சைக்குள்ளாக்கி மக்களை உண்மையில் வெறும் மாயைகளான அதிசயங்கள் அற்புதங்கள் போன்ற முறைகளைக் காண்பித்து வஞ்சிக்கிறான். 
கர்த்தர் தம் சீடர்களுக்கு கட்டளையிட்டார். “நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல், என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்” (அப்போஸ்தலர் 1:4). அப்போஸ்தலர் நடபடிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட பரிசுத்த ஆவியானவரைப் பெறுதல் “அனுபவித்தல்” “ஒப்புக்கொடுத்தல்” அல்லது “மனம் வருந்தி ஜெபித்தல்” ஆகியவற்றினால் அல்ல, ஆனால் “கர்த்தரின் வாக்குத்தத்தத்திற்கு காத்திருத்தல்” மூலமாக அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப் படுகிறார். இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் மனிதனின் அதீத ஜெபங்களினால் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைப் பெற்றுக் கொள்ள முடியாது. அது கர்த்தரும் குமாரராகிய இயேசுவும் மனிதர்களுக்களித்த, அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது முழு நம்பிக்கை வைப்பதன் மூலம் மட்டுமே கிடைக்கிறது, இயேசு நமக்களித்த, நற்செய்தியை நாம் விசுவாசிப்பதன் மூலமே உண்மையில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வது நிகழும். நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெறும்படியாக கர்த்தர் உண்மையாகிய நீரையும் ஆவியையும் அளித்தார் (1 யோவான் 3:3-5).
“பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தம்” என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் அநேகத்தரம் திரும்பத் திரும்ப வருகிறது. பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தைக் குறித்து “இனிமையான நற்செய்தியை விசுவாசிப்பதன் பலனாக கிடைக்கும் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பதாக கர்த்தரின் வாக்குத்தத்தம் இருக்கிறது” என தனது பிரசங்கத்தில் (அப்போஸ்தலர் 2:38-39) பேதுரு கூறுகிறான். 
பாவ மன்னிப்பை யாரெல்லாம் பெறுகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வாசஞ்செய்தல் பரிசாகக் கொடுக்கப்படுகிறது, இதனுள் கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறியமை உள்ளடங்கியுள்ளது. புதிய ஏற்பாடு கூறும் பரிசுத்த ஆவியானவரை கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள விட்டுக் கொடுத்தலினால் பெறக்கூடிய ஒன்றல்ல, ஆனால் அது கர்த்தரின் வாக்குத்தத்தமான பரிசாக இருக்கிறது. ஆகவே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வது, அப்போஸ்தல நடபடிகளில் வெளிப்படுத்தப்பட்டது போல, ஜெபத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. (அப்போஸ்தலர் 8:19-20).
இயேசு நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களிடம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வருகிறார். இயேசு தமது சீடர்களிடம் பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் வாசஞ் செய்யும் படியாக அவரை அனுப்புவதாக வாக்குத்தத்தம் செய்தார். “யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” (அப்போஸ்தலர் 1:5). ஆகவே, அவருடைய சீடர்கள் கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறும்படியாகக் காத்திருந்தனர்.
பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெற்ற வேதாகமத்தில் உள்ளவர்களின் விசுவாசத்தை நோக்கும்போது, அது கர்த்தரின் சித்தப்படி நடந்ததேயல்லாமல் அவர்களின் முயற்சியினாலல்ல என்பதை நாம் அறிந்துகொள்ளவோண்டும். அப்போஸ்தல நடபடிகளில் சீடர்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொண்டது மனித முயற்சிகளினாலோ அல்லது ஆவிக்குரிய வெற்றிகளினாலோ நிகழவில்லை.
அவரின் சீடர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வருவது, அப்போஸ்தலர் நடபடிகளில் காணப்படுவதுபோல், சீக்கிரமாக உண்மையாகியது. அது இயேசுவானவர் கூறியபடியே “சில நாளுக்குள்ளே” நிகழ்ந்தது. ஆதி சபைக்கு அக்காலத்தில் கிடைத்த முதல் ஆசீர்வாதம் இதுவேயாகும். வேத வசனங்களைப் பார்க்கும்போது, உபவாசம் இருப்பதால் கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை என்பதையும், அது ஜெபத்தினாலோ, சுய -பலியினாலோ அல்லவென்றும், இயேசுவின் மீது வைத்த நம்பிக்கையினால் மட்டுமே கிட்டியது என்பதைக் காணலாம். இயேசு பரலோகம் ஏறியவுடன், விசுவாசிகள் பாவ மன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதையும் ஒரே நேரத்தில் பெற்றார்கள். 
 
 
இயேசுவின் சீடர்கள் மீது பரலோகத்தில் இருந்து பரிசுத்த ஆவியானவர் திடீரென வந்தார்!
 
“பெந்தகோஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒரு மனப்பட்டு ஔரிடத்தில் வந்திருந்தார்கள்” (அப்போஸ்தலர் 2:1). கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறும்படி அவர் பரிசுத்த ஆவியானவரை அனுப்பும்படியாக இயேசுவின் சீடர்கள் குழுமி காத்திருந்தனர். கடைசியாக பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது வந்தார்.
“அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.” (அப்போஸ்தலர் 2:2-4)
பரிசுத்த ஆவியானவர் “திடீரென பரலோகத்திலிருந்து” அவர்கள் மீது வந்தார். இங்கே “திடீரென” என்ற சொல்லின் பொருள் இது மனிதர்களின் சித்தத்தின் மூலம் வந்ததல்ல என்பதாகும். மேலும், “பரலோகத்திலிருந்து” என்ற வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவர் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்குகின்றன. மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதை மனித சித்தத்தினாலும் முயற்சிகளினாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற யோசனையையும் எதிர்க்கின்றது. “பரலோகத்திலிருந்து” என்ற வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரை ஜெபத்தின் மூலம் பெறலாம் என்பது பொய்யான கூற்று என்பதைக் காட்டுகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரலோகத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் திடீரென வந்தார் என்பது பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்வது உலகப் பூர்வமான, பல பாஷைகளில் பேசுதல் அல்லது சுய பலிகளினால் நிகழ்ந்ததல்ல. இயேசுவின் சீடர்கள் “இனிமையான நற்செய்தியை எல்லா நாட்டு மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக முதலில் பல பாஷைகளில் பேசினார்கள். இதற்காண காரணம் என்னவெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன், யூதரல்லாத மற்ற பாஷைக்காரர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் முகமாக அனுமதிக்கப்பட்டது. எல்லா நாட்டுக்காரர்களும், அநேக சீடர்கள் கலிலேயாவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் தம் பாஷைகளில் பேசுவதைக் கேட்டார்கள்.
“அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு” (அப்போஸ்தலர் 2:3-4). இங்கே நாம் பரிசுத்த ஆவியானவர் “ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது” என்ற வாக்கியம் மீது கவனம் செலுத்தவேண்டும். சீடர்கள், பரிசுத்த ஆவியானவர் வரும்பொருட்டு ஓரிடத்தில் காத்திருந்தார்கள், அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து ஏற்கெனவே மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தனர்.
இந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் இப்பந்தியை தவறுதலாகப் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வருகையானது காற்று வீசும் சத்தத்துடன் தாம் ஜெபிக்கும்போது நிகழும் என்று நம்புகிறார்கள். ஆயினும், பரிசுத்த ஆவியானவரைக் குறித்த இந்த தவறான கருத்து அவர்களின் அறிவின்மையாலும் குழப்பத்தினாலும் வருகின்றது. பரிசுத்த ஆவியானவர் மக்களிடையே வரும்போது இத்தகைய ஒலிகளை உருவாக்குகிறாரா? இல்லை, அவர் அப்படிச் செய்வதில்லை.
மக்கள் தம் காதுகளில் கேட்கும் ஒலியானது சாத்தான் மக்களின் ஆத்துமாக்களை குதறும்போது உருவாகும் ஒலியாகும். அவன் மாயையான காரியங்களைச் செய்யும்போது இத்தகைய ஒலிகளை உருவாக்குகிறான், போலிக் குரலில் பேசிக் கள்ள அற்புதங்களைச் செய்து மக்களை குழப்பத்திற்குத் தள்ளும் பொருட்டு பரிசுத்த ஆவியானவரைப்போல் நடிக்கிறான். மக்கள் இதனை பரிசுத்த ஆவியானவரின் வருகையின் அடையாளம் என்று தவறாகப் புரிந்து கொள்கின்றனர். மக்கள் பரிசுத்த ஆவியானவர் “ஷ்ஷ்ஷ்~” என்ற காற்றின் பேரொலியுடன் வருவதாகவும் நினைக்கின்றனர். இவை பிசாசுகளினால் உருவாக்கப் பட்டவை. அப்போஸ்தலரில் குறிப்பிடப் படுவதைப் போன்ற பரிசுத்த ஆவியானவரின் வருகையானது, இனிமையான நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் கிட்டப் பெறுகிறது.
 
 
பேதுருவின் விசுவாசமானது (1 பேதுரு 3:21) அவன் பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ் செய்வதைப் பெறுவதற்கேதுவாக சரியானதாக இருந்தது.
 
அப்போஸ்தலர் 2-இல் முதல் பெந்தகோஸ்தே நாளில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம், கர்த்தர் அவர்கள் மேல் பரிசுத்த ஆவி வந்தமை அவர்கள் ஏற்கெனவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாத்திருந்தனர் என்பதை குறிப்பிட்டுக் காட்டவேயாகும். ஆனால் மக்கள் பொதுவாக “பெந்தேகோஸ்தே” என்ற சமயம், பரிசுத்த ஆவியானவர் பரலோகத்திலிருந்து இயற்கைக்கு மேலான அறிகுறிகளுடனும் பேரிரைச்சலுடனும் இறங்கியதைக் குறிப்பதாக நினைக்கின்றனர்.
அதனாலேயே இந்நாட்களின் எழுப்புதல் கூட்டங்களில், இடைவிடாத ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும், தலையின் மீது கை வைப்பதாலும் பரிசுத்த ஆவியைப் பெறமுடியும் என்று விசுவாசிக்கிறார்கள். பேய் பிடித்தல் மயங்கி விழுதல், பல நாட்களாக பரவசமடைந்த நிலையிலிருத்தல், கட்டுக்கடங்காத நடுக்கம் போன்ற விசித்திர சம்பவங்கள் பரிசுத்த ஆவியானவரின் செய்கைகளல்ல.
பரிசுத்த ஆவியானவர் பகுத்தறிவுள்ளவர், அவர் மனிதனின் தனித்துவத்தை அசட்டை செய்பவர் அல்ல. அவர் மனிதனிடம் கர்வமாக நடந்து கொள்வதில்லை. ஏனெனில் அவர் அறிவு, உணர்வு மற்றும் சித்தமுடைய கர்த்தராக இருக்கிறார். அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகியவற்றின் வேதவாக்கை விசுவாசிக்கும்போது மக்களிடம் வருகிறார் (அப்போஸ்தலர் 2:3).
யோவேல் தீர்க்கதரிசியின் முன்குறிப்பின்படி பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மீதினில் வந்ததாக பேதுரு சாட்சி கூறுகிறான். அது கர்த்தரின் வாக்குத்தத்தமாக இருந்தது. அது தம் பாவங்களுக்கு பரிகாரம் செய்தவர்களின் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்குவார் என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகின் மக்களையெல்லாம் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டு “இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தார் என்பதை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் தம்மில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதைப் பெறுவார்கள். பேதுருவின் பிரசங்கம், யோவேலின் தீர்க்கத்தரிசனத்துடன் இணைந்து இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? நாம் ஏன் அதனை விசுவாசிக்க வேண்டுமென்று நாம் தெரிந்துகொள்ளவேண்டுமென காட்டுகின்றது. இந்த உண்மையைத் தெரிந்துகொள்ளுதல் கிறிஸ்தவர்களை பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வழி நடத்துகின்றன.
பேதுரு சாட்சி கூறும் அழகிய நற்செய்தியை நீ விசுவாசிக்கிறாயா? (1 பேதுரு 3:21) அல்லது இந்த அழகிய நற்செய்திக்கு சம்பந்தமிலாத மூட நம்பிக்கை உடையவனாக இருக்கிறாயா? கர்த்தரின் சித்தத்தை தவிர்த்து உன் சொந்த முயற்சிகள் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயல்கிறாயா? யாரேனும் கர்த்தரை விசுவாசித்து தம் பாவங்களைக் கழுவும் பொருட்டு மனம் வருந்தி ஜெபித்தாலும், பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறுவதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும், நீ பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வாசஞ்செய்யும்படி காத்திருக்கிறாயா? உன் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை சஞ்சரிக்கச் செய்ய காரணியாயிருக்கும், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் குறித்த உண்மையான பொருள் உனக்குத் தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வாசஞ்செய்வது நீ நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நீ அறிந்து கொள்ளவேண்டும். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போர்களுக்கு மட்டுமே உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப்பெற அனுமதிக்கப்படுவர். கர்த்தருக்கு நாம், அவர் கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்காக நன்றி செலுத்துவோம். இந்நற்செய்தி பரிசுத்த ஆவியானவர் நம்மில் சஞ்சரிப்பதைப் பெறவிடுகிறது.