(அப்போஸ்தலர் 19:1-3)
“அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.”
வேதாகமம் ஏன் “யோவான் ஸ்நானன் கால முதல் இது வரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பல வந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்” என்று கூறுகிறது.
அழகிய நற்செய்தியின் மேல் விசுவாசம் வைப்பதன் மூலம் மனிதர்களால் பரலோக ராஜ்யத்தினைப் பெறமுடியும். யோவானின் ஞானஸ்நானம் மூலமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமும் இயேசு இவ்வுலகின் பாவங்களைத் துடைத்துப் போட்டார்.
பவுல் பிரசங்கித்த நற்செய்தி யாது? அவன் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் குறித்த நற்செய்தியைப் பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 19:1 கூறுகிறது, “அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான்.” ஆயினும் இயேசுவின் ஞானஸ்நானத்தை தவிர்த்து இயேசுவை மட்டும் இம்மக்கள் விசுவாசித்தனர். பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப்பெற வழி நடத்தும் அழகிய நற்செய்தியைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. அதனாலேயே பவுலின் கேள்வியாகிய “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்பது எபேசுவிலிருந்த சில சீடர்களுக்குத் தெரியாத கேள்வியாக இருந்தது. மற்ற மக்கள் “நீங்கள் இயேசுவை விசுவாசித்தீர்களா?” என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கக் கூடும். ஆனால் பவுல் அசாதாரமான ரீதியில் இக்கேள்வியைக் கேட்டதற்கான காரணம் அவர்கள் தம் விசுவாசத்தை, அழகிய நற்செய்தியின் மூலம் திருத்தி அதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்கே. பவுலின் ஊழியம் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை பிரசங்கிப்பதாக இருந்தது. பவுல், பேதுரு மற்றும் யோவான் ஸ்நானன் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் குறித்து சாட்சி பகருகின்றனர்.
நற்செய்தியாகிய ஞானஸ்நானம் குறித்து அப்போஸ்தலர்கள் கூறும் சாட்சியத்தைப் பார்ப்போமாக, “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” (ரோமர் 6:2-3) மேலும் “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப் பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” (கலாத்தியர் 3:27 ).
அப்போஸ்தலனாகிய பேதுருவும் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் குறித்து 1 பேதுரு 3:21 இல் சாட்சியம் கூறுகிறான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.”
அப்போஸ்தலனாகிய யோவானும் அழகிய நற்செய்தியைக் குறித்து 1 யோவான் 5:5-8 இல் சாட்சியம் கூறுகின்றான். “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.”
அழகிய நற்செய்தி முழுமைப் பெற யோவான் ஸ்நானன் ஒரு சிறந்த இடம் வகித்தான். வேதாகமம் யோவான் ஸ்நானனைக் குறித்து மல்கியா 3:1-3 மற்றும் மத்தேயு 11:10-11 இல் கூறுகிறது. யோவான் ஸ்நானன் மனித குல பிரதிநிதியாக இருந்தான். பழைய ஏற்பாடு கூறும் வரப்போகிற எலியா தீர்க்கதரிசியும் இவனே. பழைய ஏற்பாட்டில் கை வைப்பதன் மூலம் ஒரு மனிதனின் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்ட பாவ பலியானது தன் இரத்தத்தை சிந்தும் படியாகக் கொல்லப்பட்டது. ஆயினும் புதிய ஏற்பாட்டில், தன் ஞானஸ்நானத்தில் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது ஏற்றுக்கொண்டு பாவக்கிரயமாக அவர் சிலுவையில் இரத்தம் சிந்தியதன் மூலம் இயேசு தாமே பாவப்பலியானார். யோர்தான் நதியில் யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்த பொழுது அவன் உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது சுமத்தியதால் இயேசு மனித குலத்தை இரட்சித்தார்.
மனிதர்களை இரட்சிக்கும்படி கர்த்தர் இரண்டு நற்காரியங்களைத் திட்டமிட்டு அவற்றை நிறைவாக்கினார். முதலாவது கன்னி மரியாளின் சரீரம் மூலம் இயேசு பிறந்து, ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களை கழுவிப் போடும்படியாக சிலுவையில் அறையப்பட்டார். இரண்டாவது காரியம் எலிசபெத்திற்கு யோவானைப் பிறக்கச் செய்தமையாகும். மனிதர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு, இவ்விரண்டையும் நிகழச் செய்தார். இதுவே திரியேகத்தில் கர்த்தர் செய்த திட்டமாக இருந்தது. கர்த்தர் யோவான் ஸ்நானனை இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக இவ்வுலகிற்கு அனுப்பினார். பிறகு மனித குல இரட்சகரான இயேசுவை, தம் பாவங்களுக்கு தீர்க்கப்படுவதிலிருந்து மக்கள் விடுதலையாகும்படியாக, இவ்வுலகிற்கு அனுப்பினார்.
இயேசு யோவான் ஸ்நானனிற்கு மத்தேயு 11:9 இல் சாட்சி பகன்றார். “எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கத்தரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” மேலும் மறு நாளில், இயேசுவின் மேல் உலகின் பாவங்களையெல்லாம் சுமத்திய யோவான் ஸ்நானன், சாட்சி பகன்றான். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29)
இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்த யோவானைக் குறித்து வேதாகமத்தில் அநேக குறிப்புகள் உள்ளன. அவனைக் குறித்து அதிக அறிவைப் பெற நாம் பிராயாசைப் படவேண்டும். இயேசு இவ்வுலகிற்கு வருமுன்பே யோவான் ஸ்நானன் வந்துவிட்டான். கர்த்தரின் திட்டப்படி, அவனுடையப் பாத்திரம் அழகிய நற்செய்தியை நிறைவேற்றுவதாக இருந்தது. வேதாகமம் கூறுகிறது, யோவானிடமிருந்து இயேசு உலகின் பாவங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டார். மேலும் கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றும் பொருட்டு யோவான் அவற்றை அவர்மீது சுமத்தினான்.
அவன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்ததால் நாம் அவனை யோவான் ஸ்நானன் என்கிறோம். யோவானால் அளிக்கப்பட்ட இயேசுவின் ஞானஸ்நானம் என்பதன் அர்த்தம் என்னவாயிருக்கிறது. “ஞானஸ்நானம்” என்ற வார்த்தை “கழுவுதல்” என்பதைக் குறிக்கின்றது. அவரின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களெல்லாம் அவரின் மீது சுமத்தப்பட்டதால், அவையாவும் கழுவப்பட்டன. “இயேசுவின் ஞானஸ்நான அர்த்தமானது பழைய ஏற்பாட்டில் பாவ பலியானது “தன் மீது கைவைக்கப் படுவதைப்” போன்ற அதே அர்த்தமாகும். ஞானஸ்நானம் என்பதன் ஆவிக்குரிய பொருள் என்னவெனில் “கடத்துவது” “கழுவப்படுதல்” அல்லது “அடக்கம் செய்யப்படுதல்” என்பதாகும். யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானம் உலகிலுள்ள எல்லா மக்களின் பாவங்களையும் அகற்றும் பாவ விடுதலைக்கான ஒரு செயலாகும்.
பழைய ஏற்பாட்டில் பாவ பலிகளின் மீது பாவங்களை இடமாற்றம் செய்யும் முறையான கைவத்தலின் முக்கியத்துவத்தைப் போன்று இயேசுவின் ஞானஸ்நானமும் முக்கியமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரவேல் மக்கள் தம் வருடாந்திர பாவங்களை, பாவ விடுதலைத் தினத்தில் தலைமை ஆசாரியன் பாவ பலி மீது தன் கைகளை வைப்பதன் மூலம், அதன் மீது செலுத்தினர். இயேசு ஞானஸ்நானம் பெற்றது அவரின் சிலுவை மரணம் செய்யும் காரியங்களையே பழைய ஏற்பாட்டின் இப்பலிகள் செய்தன.
இஸ்ரவேலின் பாவங்களை அகற்றும் பொருட்டு பாவ விடுதலைத் தினத்தை கர்த்தர் ஏற்படுத்தினார். ஏழாம் மாதம் பத்தாம் நாளில், மக்களின் ஒரு வருடப் பாவங்களை, தலைமை ஆசாரியன், மக்களின் பாவங்களுக்கு நிவாரணம் செய்யும்பொருட்டு தன் கைகளை பாவ பலி மீது வைப்பதால் அதன் தலை மீது செலுத்திய கர்த்தர் ஏற்பாடு செய்த பலியிடும் முறை இதுவேயாகும். இதுவே பாவிகளின் பாவங்களையெல்லாம் பாவ பலியின் மீது செலுத்துவதற்கான ஒரே வழியாக இருந்தது. மேலும் கைவைப்பதன் மூலம் பாவங்களை இடமாற்றம் செய்வதும் கர்த்தர் ஏற்பாடு செய்த சர்வகால சட்டமாகும்.
“அதின் தலையின் மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்திரத்துக்கு அனுப்பிவிடக்கடவன், அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன் மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக் கடாவை வனாந்திரத்திலே போக விடக்கடவன்.” (லேவியராகமம் 16:21-22).
பழைய ஏற்பாட்டில், தன் பாவங்கள் மன்னிக்கப்படும் படியாக, தன் பாவங்களை பாவ பலியின் தலை மீது தன் கைகளை வைப்பதன் மூலம் சுமத்தினான். பாவ விடுதலை தினத்தில், தலைமை ஆசாரியனான ஆரோன், இஸ்ரவேலரின் பிரதிநிதியாக, இஸ்ரவேலரின் பாவங்களை பாவ பலி மீது சுமத்தும் பொருட்டு தன் கைகளை அதன் தலை மீது வைத்தான்.
புதிய ஏற்பாட்டில் யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் (கிரேக்கத்தில் பேப்டிஸ்மா எனப்படுவது “கழுவுதல், அடக்கம் பண்ணப்படுதல், கடத்துதல்” என பொருள்படும்) அதே ஆவிக்குரிய அர்த்தத்தை இது கொண்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் பாவங்களை தன் கைகளை பாவ பலியின் மீது வைப்பதன் மூலம் கடத்தியதைப் போன்று, யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு அளித்த ஞானஸ்நானம் மூலம் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. நம் பாவங்களின் நிவாரணமாக இயேசு சிலுவையில் மரித்தார். இதுவே உண்மையான அழகிய நற்செய்தியாகும்.
இஸ்ரவேல் மக்களுக்காக தலைமை ஆசாரியன் பாவ விடுதலைக்கான பலி காணிக்கையைச் செலுத்தியது போன்று, ஆரோனின் சந்ததியினனான, யோவான் ஸ்நானன், மனிதகுலத்தின் பிரதிநிதியாக இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்து தன் கடமையை செய்தான். அதன் மூலம் மனிதர்களின் அனைத்துப் பாவங்களையும் அவர் மீது சுமத்தினான். கர்த்தர் தன் அன்பினால் வந்த ஆச்சர்யமான திட்டத்தை சங்கீதம் 50:4-5 இல் கீழ்க்ண்டவாறு விவரிக்கின்றார். “அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.” ஆமேன், அல்லேலூயா.
சபையின் வரலாறு ஆதிசபையின் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் கிறிஸ்மஸ் கொண்டாடப் படவில்லை என்று கூறுகிறது. ஆதி சபையின் கிறிஸ்தவர்களும் இயேசுவின் அப்போஸ்தலர்களும் யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் செய்யப்பட்ட இயேசுவின் ஞானஸ்நான தினமான ஜனவரி 6-ஐ “இயேசுவின் ஞானஸ்நான நாளாக” கொண்டாடினர். இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு அவர்கள் தம் விசுவாசத்தில் ஏன் அப்படி அழுத்தம் கொடுத்தனர்? இதன் பதில் அப்போஸ்தலர்களின் கிறிஸ்தவ முறையின் முக்கிய திறவுகோலாகும். இங்கு விசுவாசிகள் பெறும் நீரின் ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் ஞானஸ்நானம் ஆகியவைக் குறித்து நீங்கள் குழப்புவதை நான் விரும்பவில்லை.
இந்நாட்களிலுள்ள விசுவாசிகள் பெறும் ஞானஸ்நானத்திற்கும் யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெற வேண்டுமானால், இயேசுவின் சீடர்களையொத்த விசுவாசம் நம்மனைவரிடமும் இருக்கவேண்டும். யோவானால் இயேசு பெற்ற அவரின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி அவரைப் பெறவேண்டும்.
ஆதிசபையானது இயேசுவின் ஞானஸ்நானத்தை மிக முக்கியச் சடங்காக நினைத்தது. இது அவர்களுடைய ஞானஸ்நானம் குறித்த அச்சாரமான நம்பிக்கையாகும். இந்நாட்களில் கூட இயேசு யோவான் மூலம் பெற்ற ஞானஸ்நானமானது நம் இரட்சிப்பின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்று கருதவேண்டும். மேலும், நாம் சரியான விசுவாசத்திற்கான சரியான அறிவை பெற்று அதைப் பேன வேண்டும். அது என்ன கூறுகிறதென்றால் யோவானால் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் நிமித்தம் சிலுவையிலறையப் படவேண்டும். இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் மரித்தார். நமது இரட்சகராகும் பொருட்டு உயிரோடெழும்பினார் என்பதை விசுவாசிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யத் தொடங்குவார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இயேசுவின் யோவானால் பெற்ற அவர் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றிற்கு இனிமையான நற்செய்தியில் இத்தகைய சிறப்பு பொருள்கள் உள்ளன.
நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான தவறற்ற வழி அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசிப்பதே. இயேசுவின் ஞானஸ்நானம் மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரே தரம் கழுவியது. இந்த பாவ விடுதலையைத் தரும் ஞானஸ்நானமே நாம் பரிசுத்த ஆவியைப் பெற நம்மை வழி நடத்துகிறது. சில மக்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தின் வல்லமையை உணராததால், அவர்கள் அதனை வெறும் சடங்காக பொருள் கொண்டுள்ளனர்.
இயேசுவின் ஞானஸ்நானம் நற்செய்தியின் ஒரு பாகமாகும். இது அவர் உலகின் பாவங்களை எப்படி எடுத்துக் கொண்டார் என்பதையும், அதற்கான தீர்ப்பை சிலுவையில் இரத்தஞ்சிந்தியதின் மூலம் ஏற்றுக்கொண்டதையும் கூறுகிறது. யாரெல்லாம் இந்த அழகிய நற்செய்தியின் வார்த்தைகளை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் கர்த்தரின் உடமையான சபையின் உறுப்பினராகி, பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களுக்கு கர்த்தர் அளிக்கும் பரிசு பரிசுத்த ஆவியாகும்.
அவரின் ஞானஸ்நானம் மூலம், இயேசு “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) ஆனார். யோவான் 1:6-7 கூறுகிறது, “தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்கச் சாட்சியாக வந்தான்.” நம்முடைய பாவங்கள் அனைத்தையும் எடுத்துப் போட்ட இயேசுவை நம் இரட்சகராக விசுவாசிக்கும்படி, வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி யோவானின் ஊழியத்தையும் சாட்சியத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகராக நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியும். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நம் பலமுள்ள விசுவாசம் அவன் சாட்சியத்தால் இருதயத்தில் எழுதப்படவேண்டும். ஆகவே உண்மையான அழகிய நற்செய்தியை முழுமையாக்க, யோவானளித்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்க வேண்டும்.
மத்தேயு 11:12 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “யோவான் ஸ்நானன் கால முதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்.” இவ்வசனம் வேதாகமத்தின் மிகக் கடினமான வசனமாகும். ஆயினும் நாம் “யோவான் ஸ்நானன் காலமுதல்” என்ற வாக்கியத்தை கூர்ந்து நோக்கவேண்டும். அது யோவானின் ஊழியமானது நம்மை இரட்சிக்கும் இயேசுவின் ஊழியத்துடன் நேரடித் தொடர்புள்ளதை பறைசாற்றுகிறது.
இயேசு நாம் மிகத் தைரியசாலியான பலவந்தம் பண்ணுபவனாக பரலோக இராஜ்ஜியத்திற்குள் நுழைய விரும்புகிறார். நாம் தினமும் பாவம் செய்கிறோம், நாம் எளிதாக நொருங்கிப் போகக்கூடியவர்கள். ஆனால் நம் துணிச்சலான விசுவாசத்தினால் நாம் பரலோக ராஜ்ஜியத்தினுள் நுழைவதை அவர் அனுமதிக்கிறார். நம் கபடத் தனத்தை அவர் உதாசீனப் படுத்துகிறார். இந்த வசனங்கள் பரலோக ராஜ்ஜியத்தை மக்கள் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறுகிறது. இது இயேசு தாம் யோவானால் ஞானஸ்நானம் பெற்றதன் மூலமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமும் உலகின் பாவங்களைத் துடைத்துப்போட்டார் என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் குருதி மீது வைக்கும் உறுதியான விசுவாசத்தின் மூலம் பரலோக இராஜ்ஜியத்தைப் பெறலாம் என்று பொருள்படுகிறது.
இயேசுவின் ஞானஸ்நானம் எல்லாப் பாவங்களை எடுத்துப் போட்டது, அதன் மீதுள்ள விசுவாசம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவதை உறுதிச் செய்கிறது. நாம் இந்த நற்செய்தியை அண்டை அயலாரிடமும், உலகிலுள்ள எல்லாருக்கும் கூறவேண்டும். இவ்வுலகின் பாவங்கள் யாவும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்று கூறும் அழகிய நற்செய்தியின் மீது விசுவாசத்துடனிருக்க வேண்டும். நம் விசுவாசத்தின் மூலம் விடுதலையின் ஆசீர்வாதத்தையும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதையும் பெறவேண்டும்.
இயேசுவின் ஞானஸ்நானம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டது. அவரின் இரத்தம் அதற்கான தீர்ப்பு. அழகிய நற்செய்தியான நீர் மற்றும் ஆவியைக் குறித்து விசுவாசிகள் அல்லாதாரிடமும் நாம் விளக்கிக் கூறவேண்டும். அப்படிச் செய்வதனால் மட்டுமே, அவர்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்குள் வந்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வர். நீங்கள் இதை விசுவாசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். யோவானளித்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் மீது நாம் வைக்கும் விசுவாசத்தினால் மட்டுமே மனிதன் தன் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற முடியும்.
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் நம்முடைய ஒரு சகோதரனாவது சகோதரியாவது பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப் பெற்று அவர்கள் எல்லோரும் கர்த்தரின் பிள்ளைகளாகின்றனர். அழகிய நற்செய்தியின் மீது பவுல் கொண்டிருந்த அதே விசுவாசத்தை நீயும் கொண்டிருக்க வேண்டும். அழகிய நற்செய்தியைக் கொடுத்த கர்த்தருக்கு நன்றிகள் கூறி அவரைத் துதிக்கிறேன். ஆமேன்.