• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-4] சீடர்களைப் போன்றே விசுவாசமுள்ளவர்கள் (அப்போஸ்தலர் 3:19)

(அப்போஸ்தலர் 3:19)
“ஆனபடியால் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்”
 
 
அப்போஸ்தலர்களிடமிருந்த விசுவாசம் எத்தகையது?
அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்தார்கள்.
 
இயேசுவின் சீடர்களை உற்று நோக்கினால், அவர்களின் விசுவாசத்தின் அளவு அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெற்ற பின் முன்பிருந்த விசுவாசத்தைவிட அதிகமிருந்ததை காணலாம். அவர்களுடைய சரீரத்தில் எந்த மாறுபாடும் இல்லாவிட்டாலும், பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு, இயேசுகிறிஸ்துவின் ஒளியினால் அவர்கள் வாழ்வு முற்றிலும் மாறியது.
நான் வாழும் நகரம் மலைகளும் ஏரிகளும் நிறைந்தது. இத்தகைய அழகிய காட்சிகளைக் காணும்போது, நான் திருப்தியடைந்து, இத்தகையவற்றைப் படைத்த இறைவனுக்கு ஆச்சர்யத்துடன் நன்றி செலுத்துகிறேன். பிரகாசமாக சூரிய ஒளியை எதிரொளிக்கும் பளிங்கு போன்ற நீர் என் இருதயத்தை நிரப்புகிறது. என்னைச் சுற்றியுள்ள உலகம் தங்கத்தால் ஆனது போலுள்ளது.
ஆனால், அங்கே அழகிய காட்சிகளைக் காட்ட முடியாத இடங்களும் உள்ளன. ஆனால் அங்கு நீர் சூரிய ஒளியில் சேற்றைப் போலுள்ளது. அத்தகைய காட்சிகளில் உயிர்ப்பில்லை. இத்தகைய ஒரு ஏரியைக் காணும்போது, என் பாவங்களைக் கழுவிப் போட்டதும் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசஞ் செய்யும் படியும் பெற்றுத் தந்த கர்த்தரின் அழகிய நற்செய்திக்கு நன்றி தெரிவிக்கிறேன். 
சேறு நிரம்பிய ஒரு ஏரியினால் எப்படி சூரிய ஒளியினால் பிரகாசிக்க முடியாதோ, அப்படியே நம் இயற்கையின் பாவ சுபாவத்தால், கர்த்தரின் ஒளிக்கு மிகவும் தூரமாகி, இலக்கில்லாத ஓரிடத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்... ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ் செய்யப் பெற்றால் நாம் கர்த்தரின் பிள்ளைகளாக வெளிப்பட்டு, மற்றவர்களுக்கு நற்செய்தியை போதிக்கச் செல்வோம். நாம் அவருடைய ஒளியை ஏற்றுக் கொண்டதால், நாமும் ஒளியாக பிரகாசிப்போம்.
அப்படியே, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின், அவருடைய சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று ஒளியின் பிள்ளைகளாகவும் அப்போஸ்தலர்களுமானார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஒளி அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்பதால் நிறைய மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற விரும்புகிறார்கள்.
 
 
அப்போஸ்தலனாகிய பவுலின் விசுவாசம்
 
பவுலிடமிருந்த விசுவாசம் எத்தகையது? தன்னுடைய விசுவாச அறிக்கையில் பவுல் இவ்வாறு கூறுகிறான். அவன் கமாலியேலினால் கற்றவனாகி முற்றிலும் பயிற்சி பெற்றவனாக இருந்தான். கமாலியேல் அக்காலத்தின் சிறந்த சட்ட ஆசிரியனாக இருந்தான். அவன் தன் மூதாதையர்களின் சட்டத்திற்கேற்ப மிகவும் கண்டிப்புள்ளவனாகவும் இருந்தான். அவனுடைய சட்டங்கள் மூலம் தன் பாவங்களிலிருந்து இரட்சிக்கப் பட முடியவில்லை என்றும் அவன் அறிக்கைச் செய்கிறான். மேலும் குறிப்பாக நம் இரட்சகரான இயேசுவை துன்பப் படுத்துபவனாகவும் இருந்தான். ஒரு நாள், அவன் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் இயேசுவினால் சந்திக்கப்பட்டு அவர் நற்செய்தியைக் கூறும் சுவிசேஷகனானான். இயேசுகிஸ்து தேவனுடைய குமாரன் என்பதையும், அவர் இவ்வுலகிற்கு வந்து உலகின் பாவங்களையெல்லாம் துடைக்கும் படியாக ஞானஸ்நானம் பெற்று, அப்பாவங்களனைத்திற்குமான தீர்ப்பாக சிலுவையில் இரத்தஞ்சிந்தியதன் மீதும் அவனுக்கு விசுவாசமிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாவ மன்னிப்பு குறித்த விசுவாசம் அவன் இருதயத்திலிருந்தது.
இயேசுவின் சீடர்கள் யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவையின் இரத்தமானது அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களை மன்னிப்பதற்கே என்று விசுவாசித்தார்கள். பவுலும் கூட சீடர்களின் அத்தகைய விசுவாசத்தில் பங்கெடுத்தான். ஆகவே அவன் தன் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டான்.
கலாத்தியர் 3:27 பவுல் கூறினான். “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப்பேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” இயேசுவின் ஞானஸ்நானமே, தன் இரட்சிப்பு என்று அறிக்கைச் செய்கிறான். மேலும் பேதுரு, 1பேதுரு 3:21 இல் கூறுகிறான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல் மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.” இவ்வசனத்தின் மூலம் அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தை தெளிவாக விளக்கினான். இயேசுவின் சீடர்கள் அவர் யோவான் மூலம் பெற்ற ஞானஸ்நானத்தினால் உலகின் எல்லப் பாவங்களும் சுத்திகரிக்கப் பட்டது என்று விசுவாசித்தார்கள். அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. இந்த உண்மையை அவர்கள் விசுவாசிப்பதால் இப்படியாக சட்டத்தின் சாபத்தின் கீழ் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்ததில்லை.
அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய இரண்டையும் விசுவாசித்தார்கள். இந்த விசுவாசமானது சீடத்துவத்திற்கான வெற்றியின் அடிப்படைத் தகுதியாக இருந்தது என்பது தெளிவாகிறது. அப்போஸ்தலர் 1:21-22 கூறுகிறது. “யோவான் ஞானஸ்நானங் கொடுத்த நாள் முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும், அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனே கூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக் குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.” இயேசுவின் சீடராவது யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதிலிருந்து தொடங்கியது.
நம்முடைய பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட நமக்கு வேண்டிய உண்மை, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையே. “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனைப் பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” (கலாத்தியர் 3:27). இப்படியாக யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் பவுல் விசுவாசித்தான்.
தீத்து 3:5 ஐப் பார்ப்போம். “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின் படியே, மறு ஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” இங்கே “மறு ஜென்ம முழுக்கினாலும்” என்ற வாக்கியம், யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த போது உலகின் பாவங்களனைத்தும் சுத்திகரிக்கப்பட்டது என்று பொருள் படும். அதுபோல, உன் பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமானால், யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் முலம் உன் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன எனக்கூறும், அழகிய நற்செய்தியை நீ விசுவாசித்தேயாக வேண்டும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும்படியாக இரத்தம் சிந்தியதற்கான காரணம், யோவான் அவருக்களித்த ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லோரின் பாவங்களையும் அவர் ஏற்றுக்கொண்டதே.
இந்த உண்மையை நம்புவது, பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவதற்கு போதுமானது. யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும், தானும் விசுவாசித்ததாக பவுல் அறிக்கைச் செய்கிறான்.
எபிரேயர் 10:21-22 ஐப் பார்ப்போமாக, அது கூறுகிறது, “தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச் சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” இங்கு “சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம்” என்பது இயேசு யோவானால் பெற்ற, மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் சுத்திகரித்த ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.
ஆகவே, பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில், அழகிய நற்செய்தியின் முக்கியக் கரு அவரின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் என்பதை நாம் காணலாம். நீங்களும், பவுலின் விசுவாசத்தில் பங்கெடுக்க வேண்டும்.
இன்று, அநேக கிறிஸ்தவர்கள், இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் பாவங்கள் யாவும் கழுவப்பட்டன என்பதை அறியாமலேயே அவரை வீணில் விசுவாசிக்கிறார்கள். சில இறையியலாளர்கள், தம் பாவங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு மக்களே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்கிறார்கள். அநேகமாக இத்தகைய முடிவுகள், வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி உண்மையானதும் அழகியதுமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவர்கள் அறியாமையால், கூறப்பட்டவை. நாம் நீரினால் ஞானஸ்நானம் பெறும்போது இந்த வெறும் சடங்கினால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட முடியாது. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகிய நற்செய்தி மீதுள்ள நம்பிக்கை நம் பாவங்களிலிருந்து நம்மை சுத்தமாக்கியது. அழகிய நற்செய்தியை விசுவாசிக்கிறவர்கள் மட்டும் தம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டனர். அவரின் இரத்தத்தை விசுவாசித்ததன் மூலம், அவர்கள் பாவக்கிரயம் செலுத்தியாயிற்று. இந்த நம்பிக்கை இருப்பவர்களால் மட்டுமே பரிசுத்த ஆவியைப் பெறமுடியும்.
“துர் மனச் சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” (எபிரேயர் 10:22). எபிரேயரை எழுதியவர் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம் என்று நம்மிடம் கூறுகிறார். நீங்களும் அழகிய நற்செய்தியினுள் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் கர்த்தரை சேருவீர்களாக.
இன்று பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவதை கிறிஸ்தவர்கள் உண்மையாக விரும்புகிறார்கள். ஆனால் எவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அவர்களினுள் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார். அநேகருக்கு இதனைப் பற்றி தெரியாது. ஆகவே, அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் குருதியை விசுவாசிக்கமலேயே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். இயேசுவை விசுவாசிப்பவர்கள், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் இன்னும் விசுவாசிக்கவில்லை என்றால் அவர்களால் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியாது. அதற்கான காரணம் அவர்கள் சுத்த இருதயம் இல்லாதவர்களாக இருப்பதே.
பவுல் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்தான். ஆகவே, அவன் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டான். மேலும், இந்நம்பிக்கையையும் பரப்பினான், அதற்காக வேதப்புரட்டன் என்று துன்புறுத்தப்பட்டான். பரிசுத்த ஆவியானவர் அவன் இருதயத்தில் வாசஞ்செய்ததால், அவன் முடிவு பரியந்தமும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்ப முடிந்தது. “என்னை பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கு பலனுண்டு” (பிலிப்பியர் 4:13). பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதற்கு நன்றிகள், அவன் கர்த்தரிடம் செல்லும் மட்டும் பரிசுத்த ஆவியானவரின் பாதுகாப்பில் கர்த்தருக்கு பணி செய்து வாழ்ந்தான். பவுலிடமிருந்த அதே நம்பிக்கையைப் பெற்றவர்களால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரைப் பெறமுடியும்.
பவுலின் விசுவாசத்தைப் பார்ப்போமாக. கொலோசெயர் 2:12 இவ்வாறு கூறுகிறது. “ஞானஸ்நானத்திலே அவரோடே கூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும் அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடே கூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.” யோவானால் ஞானஸ்நானம் பெற்ற இயேசுவை விசுவாசித்ததன் மூலம் தன்னுடையப் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டான்.
 
 
பழைய காலத்திலிருந்து கிறிஸ்தவம் எப்படி மாறியுள்ளது?
 
இயேசுவுக்குள் பரிசுத்த ஆவியை பெற்று சீடரான ஒரு சகோதரியின் அறிக்கையை இப்போது காண்போம்.
“நான் வயதாகிக் கொண்டிருந்தாலும் குழந்தை பிறக்கும் வாய்ப்பில்லாதிருந்தேன்; ஆகவே, ஜெபம் மூலம் ஆசீர்வாதத்தைப் பெறும்பொருட்டு ஒரு ஆலயத்திலிருந்து இன்னொரு ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். நான் வீட்டில் தனிமையில் இருக்கும்போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒரு குழந்தை வேண்டி ஜெபிப்பேன், இத்தகைய மத வாழ்க்கை என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.
இத்தகைய ஒரு மத வாழ்க்கையை நான் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஒரு வயதான கிழவியைச் சந்தித்தேன். நான் கர்த்தரிடம் குழந்தைக் கேட்டு ஜெபிக்க வேண்டுமானால், அவளின் கைவைத்தலின் ஜெபத்தை நான் பெற வேண்டுமென்றாள். நான் இக்கிழவியைக் குறித்து அவள் கர்த்தரின் தூதன் என்று கேள்விப்பட்டதால் அவள் என் தலைமீது கைவைக்க அனுமதித்தேன். அக்கணத்தில், முன்பு எப்போதும் அனுபவித்திராத அனுபவத்தை உணர்ந்தேன். என் நாக்கு உருளத் தொடங்கியது. மேலும் நான் வேறு பாஷையில் பேசிக் கொண்டிருந்தேன். மேலும் ஏதோ ஒரு வித்தியாசமான உஷ்னமான சக்தி மேலிழுப்பதை உணர்ந்தேன்.
இந்த அனுபவத்தை பரிசுத்த ஆவியானவரை நான் பெற்றுக் கொண்டேன் என்றும் என்னுடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளித்தார் என்றும் எடுத்துக் கொண்டேன். என் தலை மீது கை வைத்த பெண் பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெற்றிருப்பதுபோலும், அவளால் தீர்க்க தரிசனம் மற்றும் சுகமளிக்கும் வல்லமை இருப்பது போலும் காணப்பட்டது. கர்த்தரின் வார்த்தைகளை அவள் எங்கும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உபயோகித்து, அவள் அநேக போதகர்களும் கல்விமான்களும், கைவைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள உதவியுள்ளாள்.
அப்போதிலிருந்து, நான் அத்தகைய கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினேன். அத்தகைய ஒன்று 3“மறுபடியும் / புதிதாக்கும் எழுப்புதல் இயக்கம்” என்றழைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் என்னுடைய ஒரு வழக்கமான ஜெபத்தின் போது, என்னுடம்பு முழுவதும் நடுங்குவதைக் கண்டேன். மேலும் எனது இருதயம் கர்த்தரின் மீதும் சுற்றத்தார் மீதுமுள்ள அன்பினால் அனலாகியது. மற்றவர்களுக்கும் இப்படியே நடந்தது, அவர்களும் மயங்கவும் பல பாஷைகளில் பேசவும் தொடங்கியிருந்தார்கள். பிசாசினால் பிடிக்கப்பட்ட சிலர் அங்கிருந்தனர். அக்கூட்டத்தை வழி நடத்தியவர் பிசாசுகளை விரட்டியடித்தார். இந்த மறுபடியும் புதிதாக்கும் / எழுப்புதல் இயக்கத்தின் நோக்கம், நடுக்கம், தீர்க்கதரிசனம், பிசாசுகளை விரட்டுதல், மற்றும் பல பாஷை பேசுதல் போன்றவற்றின் மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரை அனுபவிக்க உதவுவதாகும். இத்தனை அனுபவங்கள் இருந்தபோதிலும் என்னிடம் பாவங்களிருந்தன. மேலும் என் இருதயத்திலிருந்த பாவங்கள் என்னை பயப்படச் செய்தும் வெட்கப்படுத்தியும் கொண்டிருந்தது.
 
3உண்மையான மறுபடியும் புதிதாக்குதல் என்பது இயற்கையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவசியமனதோர் பதியாகும். மேலும் இது ஆவிக்குரிய கனிகள் சாட்சியாகக் கொண்டு ஆவிக்குரிய வளர்ச்சியை கொண்டு வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக, சில இயக்கங்கள் “மறுபடியும் புதிதாக்குதல்” என்ற சொல்லை மீண்டும், வேதாகமம் விளக்கும் ஆவிக்குரிய வளர்ச்சி முறைக்கும் சற்றும் ஒத்திராத வண்ணம், வரையறுத்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளை உருவாக்கும் அவர்களுடைய “மறுபடியும் புதிதாக்குதல்”, சந்தேகத்திற்கிடமான தோற்றங்களைக் கண்டுள்ளது. மேலும் அவை வேதாகமத்திற்கு மேல் அல்லது வேதாகமத்திலில்லாத போதனைகளையும் கிரியைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளது.
இவையெல்லாம் சர்ச்சைக்குரிய மறுபடியும் புதிதாக்குதல் /எழுப்புதல் இயக்கங்களின் சில பிரச்சினை அளிக்கும் போதனைகளும் நடைமுறைகளுமாகும் : வேத வசனங்களுக்கும் மேலாக வசீகரிக்கும் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் தவறான பிரகடணம், தவறான போதனைகள், கன்னித்தீர்க்கத்தரிசனம் கள்ள அடையாளங்களும், அற்புதங்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும். மேலும், இவ்வியக்கங்களின் மிகவும் அபாயமான காரியம் யாதெனில் அவர்கள் அநேக மக்களை பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது குறித்து, அழகிய நற்செய்தியை ஒதுக்கி தள்ளிவிட்டு, அவர்களை உண்மையினைத் தப்பாக பொருள் கொள்ளும்படிச் செய்துள்ளனர்.
 
ஆகவே, நான் ஜெபிக்கும்போதெல்லாம், என்னுடைய பாவப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென சிரத்தையாக ஜெபித்தேன். நான் பாவியாக இருந்தாலும் மக்கள் என்னை தேவதூதராக கருதுவதை அறிக்கைச் செய்தேன். என்னிடம் நல்ல விசுவாசம் இருப்பதாக நினைத்தேன். ஆனால் அது தவறு. என்னுடைய தவறை நான் உணர்ந்திராவிட்டால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிராது.
அதன்பிறகு, நீர் மற்றும் ஆவியைக் குறித்து போதிக்கும் சிலரைச் சந்தித்தேன். மேலும் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்து பாவ மன்னிப்பு பெற்றேன். இப்பொழுது நான் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறேன். நான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டேன். கர்த்தருக்கு நன்றிகள். உலகிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் அழகிய இந்த நற்செய்தியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன். நம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.”
இங்கே நாம் கற்றது யாதெனில், பரிசுத்த ஆவியானவரை நாம் பெறவேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி வேண்டும். உங்கள் பாவங்களிலிருந்தும் நீங்கள் மன்னிப்பு பெற வேண்டுமானால், யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானத்தின் மீது கண்டிப்பக விசுவாசம் இருக்க வேண்டும். எபேசியர் 4:5 ஐப் பார்ப்போமாக. “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” இங்கே ஒரே கர்த்தரும் ஒரே கர்த்தரும் இருப்பதாக இது கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும் பொருட்டு யோவான் இயேசுவுக்கு அளித்த ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நாமனைவரும் விசுவாசிக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் எப்போதும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யமாட்டார்.
பரிசுத்த மற்றும் சுத்த இயக்கத்தினர் பரிசுத்த ஆவியானவரை பெற உதவுவர் என்று படித்து அதனை விசுவாசிக்கும் சில மக்கள் இருந்தனர். ஆயினும், இத்தகைய இயக்கங்களில் சேர்வதால், பரிசுத்த ஆவியானவர் நம்மில் சஞ்சரிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பரிசுத்த மற்றும் சுத்த இயக்கத்தினரால் தான் நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா? இது சாத்தியம் என்றால், இந்த விசுவாசத்தைப் பற்றிக் கொள்வது உங்களுக்கு ஞானமாகும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இப்படி வந்தார் என்றால், நம்மை இரட்சிக்கும் பொருட்டு இயேசுவானவர் இறங்கி வந்தது தேவைப்பட்டிருக்காது, யோவானால் ஞானஸ்நானம் பெற்றது தேவைப்பட்டிருக்காது அல்லது சிலுவையில் அறையப்பட்டிருக்கவும் மாட்டார்.
உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பைத் தந்த நற்செய்தியாக இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்தமையால் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப்பெற்றதை வரமாகப் பெற்றோம். உண்மையான நற்செய்தியினால் யாருடைய பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டு அவை மன்னிக்கப்பட்டதோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்வது பரிசாக வழங்கப்பட்டது.
இன்றைய நாட்களில், மறுபடியும் புதிதாக்கல் / எழுப்புதல் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் மரத்துப் போகும் வரை மனம் வருந்தி ஜெபித்தால் பரிசுத்த ஆவியானவரை பெற அது உதவும் என்று நினைக்கிறார்கள். ஒருவன் இருதயத்தில் பாவமிருந்தாலும் கூட, அவன் பாவ மன்னிப்பு வேண்டி ஜெபித்தானானால், அவன் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
உலகெங்கிலும் பரவியுள்ள பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கம் 1800களில் அமெரிக்க நாட்டில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தொழில் புரட்சிக்கு பிறகு வந்தது. அப்போது மக்களின் பண்பாடும், ஸ்திரத்தன்மையும் அழிந்திருந்தன. அதிக மன அழுத்தத்தினால் அநேக மக்களின் இருதயங்கள் சிதைந்திருந்த போது இவ்வியக்கம் சிறந்த பருவத்தை அடைந்தது. அந்நேரம் தொடங்கி கர்த்தரின் வார்த்தைகள் மீதிருந்த விசுவாசம் குன்றி, ஒரு புதிய மதவியக்கம் வளரத்தொடங்கியது. பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கத்தின் குறிக்கோள் பரிசுத்த ஆவியானவரை (கர்த்தரை) உடல் ரீதியாக அனுபவிப்பதும் கர்த்தரின் கிரியைகளைக் கண்களால் காண்பதும் கர்த்தரின் வார்த்தைகளை உடல் மற்றும் மனரீதியாக அனுபவிப்பதுமாகும். 
இவ்வியக்கத்தின் முக்கியக் குறைபாடு என்னவெனில் இது விசுவாசிகளைக் கர்த்தரின் வார்த்தைகளிலிருந்து தூரமாக்குவதுடன் உடல் ரீதியான ஆசீர்வாதங்களுக்காக முயற்சி செய்யும் மதமாக இருக்கிறது. இதன் பயனாக, இவ்வியக்கத்தைப் பின்பற்றுவோர் மந்திரவாதத்திற்கு வாதாடுவோராயினர். இன்றும் கூட, பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கத்தில் இணைந்துள்ளவர்கள், இயேசுவின் மீது ஒருவன் விசுவாசம் வைத்தால் அவன் செல்வந்தனாவான். அவனுடைய சுகவீனம் குணமாகும். அவன் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்று பல பாஷை பேசுவதோடு மற்றவர்களை சுகமாக்கும் வல்லமையையும் கொண்டிருப்பான் என்று கருதுகிறார்கள். பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவ்வியக்கமானது மக்கள் அழகிய நற்செய்திகளை விசுவாசிப்பதிலிருந்தும், பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யும் படியாக அவர்கள் பெறுவதற்கும் தடையாகிப்போனது.
புதிய கிறிஸ்தவமானது லூத்தர் மற்றும் கால்வினின் விசுவாசத்தினுள் 500 வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆயினும் கிறிஸ்தவ எல்லைகளுக்குட்பட்டு, பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைக் குறித்த வேதாகம ஆராய்ச்சி உறுதியாக நிறுவப்படவில்லை. இதில் பிரச்சினை என்னவென்றால் புதிய கிறிஸ்தவம் தொடங்கியதிலிருந்து, அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளாமல் இயேசுவை விசுவாசித்தனர். எல்லாவற்றையும் மோசமாக்க, மக்கள் கிறிஸ்தவத்தின் தவறான கொள்கைகளை வலியுறுத்தத் தொடங்கினர். அவர்கள் உடம்பின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். உலகின் பாவங்களை சுமந்து தீர்க்கும்படியாக யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்கிறதும் அப்பாவங்களுக்காகத் தீர்க்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறதுமான அழகிய நற்செய்தியை எல்லா கிறிஸ்தவர்களும் விசுவாசிக்க வேண்டும். இந்நம்பிக்கை உன்னைப் பரிசுத்த ஆவியானவரைப் பெறச்செய்யும்.
இன்று, கிறிஸ்தவம் இப்படி சிதைந்து போனதற்கான காரணம் யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய உண்மைகளை மக்கள் அலட்சியம் செய்யும் மனப்பாவம் கொண்டிருப்பதே. இயேசு நம்மை உண்மையைத் தெரிந்துகொள்ளும்படிச் சொல்கிறார். யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசத்தின் பொருள் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பதாகும். பரிசுத்த ஆவியை நீ பெற்றுக் கொள்ள வேண்டுமானால், யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது உன் பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன என்பதையும் அவருடைய இரத்தம் தீர்ப்பாகவும் உன் பாவங்களை மன்னிக்கவும் கொடுக்கப்பட்டது என்பதையும் விசுவாசி. அப்பொழுது நீ பரிசுத்த ஆவியானவரைப் பெறுவாய்.
அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரத்தத்தை மட்டும் பாவ விடுதலையின் நற்செய்தியாக விசுவாசிக்கிறார்கள். உங்களில் யாரேனும் அவரின் இரத்தத்தை மட்டும் விசுவாசித்து பாவத்திலிருந்து விடுதலை அடைய முடியுமா? அது உன்னால் முடியுமா? அது முடியும் என்று நீ நினைத்தால், இயேசுவின் ஞானஸ்நானம் குறித்து உண்மையான பொருளைப் பற்றிய உன் அறிவு தெளிவில்லாதது. அப்படியாயின் உன்னிருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது. எப்பொழுது இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய இரண்டையும் இணைத்து விசுவாசிக்கிறாயோ அப்பொழுது உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரைப் பெறுவாய். இதுவே நாம் உலகை மேற்கொள்ள உதவும் ஒரே உண்மையான நற்செய்தி என்று வேதம் கூறுகிறது. “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது” (1 யோவான் 5:8). ஆகவே, நம்முடையப் பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்பட வேண்டுமென்பது கர்த்தரின் விருப்பமாக இருந்த படியால், கர்த்தர் இயேசுவை யோவானால் ஞானஸ்நானம் பெறச் செய்து அவரை சிலுவையில் அறைந்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். 
இயேசுவை விசுவாசித்த போதிலும் அநேக கிறிஸ்தவர்கள் பாவ மன்னிப்பு பெறாதமைக்கு காரணம் அவர்கள் யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மூலம் அழகிய நற்செய்தியானது நிறைவேற்றப்பட்டது என்பதை விசுவாசிக்காததேயாகும். இவ்விரண்டையும் யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் தம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரை தம்மிருதயத்தில் வாசஞ்செய்யப் பெறுவர்.
தம்முடைய பாவங்கள் கழுவப்பட்டன என்பதை மக்கள் அறியும் போது அவர்கள் இருதயம் சமாதானமும் அசையாத நீரின் அமைதியையும் பெறுகிறது. பரிசுத்த ஆவியானவர் ஒருவனின் இருதயத்தில் வாசஞ்செய்யத் தொடங்கிய கணமுதல் சமாதானம் ஒரு நதியைப் போல் இருதயத்தினுள்ளும் வெளியிலும் பிரவாகிக்கின்றது. இந்த உண்மையை நாம் விசுவாசிப்பதன் மூலம் கர்த்தரை சந்திப்போம். மேலும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது குறித்த நற்செய்தியைப் பரப்புவதன் மூலம் ஆவியானவருடன் நடப்போம். நம்முடைய இருதயம் இத்தகைய அமைதியை இதுவரைப் பெற்றதில்லை. நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்கத் தொடங்கிய நேரமுதல் நம்முடைய வாழ்வு இனிமையானதாகவும் நம் இருதயம் மகிழ்ச்சி உடையதாகவுமானது. இந்த அழகிய நற்செய்தியிலிருந்து நம்மால் திரும்ப முடியாது. பரிசுத்த ஆவியானவர் எப்போதும் நம்மிருதயத்தில் இருக்கிறார். தம் வார்த்தைகளைப் பரப்பும்படியும் அவற்றை நம்புவோரை பரிசுத்த ஆவியைப் பெறவும் அனுமதியளிக்கிறார்.
நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்தமையால், பரிசுத்த ஆவியானவரால் ஆசீர்வதிக்கப்பட்டோம். இப்பொழுது நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படியாக இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தின்மேல் விசுவாசம் வை. உலகின் பாவங்களை சுமக்கும்படியாக இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் என்றும் அவர்களின் பாவங்களுக்குத் தீர்ப்பாக அவர் சிலுவையில் மரித்தார் என்றுமுள்ள கர்த்தரின் வார்த்தைகளை உலகின் எல்லா மக்களும் விசுவாசிக்கத் தொடங்குவதானது மிகவும் முக்கியமானது. அவர்கள் அப்படிச் செய்யும்போது, கடைசியாக அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள்.