• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-5] பரிசுத்த ஆவியானவருடன் நீங்கள் நட்பு கொள்ள வேண்டுமா? (1 யோவான் 1:1-10)

(1 யோவான் 1:1-10)
ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சி கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப் பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின் படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப் பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ் செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது”
 

பரிசுத்த ஆவியானவருடன் தொடர்புக் கொள்ளத் தேவையான அடிப்படைத் தகுதி யாது
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து அதனை விசுவாசித்து நம் பாவங்களிலிருந்து நம்மை சுத்தப்படுத்துதலே

நீ பரிசுத்த ஆவியானவருடன் தொடர்பு கொள்ள விரும்பினால், முதலில் கர்த்தருக்கு முன் ஒரு சிறு பாவமும் அவருடன் தொடர்பு கொள்வதை இயலாததாக்குகிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். நீ நினைக்கலாம், “கர்த்தரின் முன் சிறுபாவமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி இருக்க முடியும்?” ஆனால் கர்த்தரிடம் உண்மையான நட்புகொள்ள நீ விரும்பினால் உன் இருதயத்தில் சிறிதும் இருள் இருக்கலாகாது. ஆகவே கர்த்தரிடம் நட்புகொள்ளும் பொருட்டு பாவ விடுதலையளிக்கும் நற்செய்தியை விசுவாசித்து, உன் பாவங்களிலிருந்து உன்னை சுத்திகரிக்க வேண்டும்.
உண்மையிலேயே நீ பரிசுத்த ஆவியானவருடன் நட்பு கொள்ள விரும்பினால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து அதனை விசுவாசித்து உன் பாவங்களை விசுவாசம் மூலம் சுத்திகரிக்க வேண்டும். உனக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாமலோ, அவற்றை உனது இருதயத்திற்குள் எடுத்துச் செல்லாவிட்டாலோ, நீ கர்த்தரிடம் தொடர்பு கொள்வதை நினைக்கக்கூட இயலாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் உன் எல்லாப் பாவங்களையும் இருதயத்திலிருந்து அகற்றுவதன் மூலமே பரிசுத்த ஆவியானவருடன் நட்புகொள்வது சாத்தியமாகும்.
அவருடைய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தால் எல்லாப் பாவங்களையும் எவருடைய மனதிலிருந்தும் அகற்ற முடியும். நீ அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும்போது கர்த்தர் பரிசுத்த ஆவியானவரால் உன்னை ஆசீர்வதிக்கிறார். நீ உண்மையிலேயே கர்த்தருடனும் பரிசுத்த ஆவியானவருடனும் தொடர்பு வைத்திருக்க விரும்புகிறாயா? அப்படியானால் உன் பாவங்களை இனங்கண்டு அவற்றைச் சுத்திகரிக்கும் பொருட்டு அழகிய நற்செய்தியை விசுவாசி. அதன் பிறகு உண்மையாகவே நீ கர்த்தருடன் தொடர்பை வைத்திருக்கலாம். 
நீங்கள் கர்த்தரிடம் தொடர்பு வைத்திருக்க விரும்பினால், யோர்தான் நதியில் யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் விசுவாசிக்கவேண்டும். மக்கள் பரிசுத்த ஆவியானவருடன் உண்மையாகவே தொடர்பு கொள்ள விரும்பினால் பரிசுத்த ஆவியானவர் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரே பரிசுத்தமிக்கவர். ஆகவே அவரால் அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரிடம் மட்டுமே சஞ்சரிக்க முடியும்.
யோவானால் அளிக்கப்பட்ட இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றை நம்பியதன் மூலம் பாவங்கள் கழுவப்பட்டு, இப்பொழுது பரிசுத்த ஆவியானவருடன் நட்பு வைத்திருக்கும் ஒருவரின் பாவ அறிக்கையை நாம் பார்ப்போமாக.
“இவ்வுலகில் அநேகவிதமான மக்கள் வசிக்கிறார்கள், மேலும் அவர்கள் தம் யோசனைகளின் படியும் தம் சொந்த வழிகளிலும் வாழ்கிறார்கள். நானும் அவர்களைப் போன்ற ஒருவன். என்னுடைய வாழ்க்கை என் சிறு வயதுமுதல் சாதாரணமாக இருந்தது. நான் எனது தாயுடன் ஆலயம் சென்றேன். இயற்கையாகவே கர்த்தரை விசுவாசிக்கத் தொடங்கினேன். என்னுடைய தந்தை நாஸ்திகனாவார். மேலும் என்னுடைய விசுவாசத்தைக் குறித்து எப்பொழுதும் குறைச் சொல்லிக்கொண்டிருப்பார். இருந்தாலும் அவரைத் தவிர எல்லோரும் ஆலயம் சென்றுக் கொண்டிருந்தோம். ஆலயம் செல்வது எனது வாழ்வின் மிகப் பெரிய பகுதியாக இருந்தது.
ஆயினும், என்னுடைய வாலிபப் பருவத்தில், படுக்கையாகிவிட்ட என் தந்தையைப் பார்த்து, வாழ்வு மற்றும் மரணம், மோட்சம் மற்றும் நரகம் போன்ற அநேக சிந்தனைகள் எனக்குள் வந்தன. நிறைய மக்கள் நான் கர்த்தரை விசுவாசித்தால் பரலோக ராஜ்ஜியத்திற்குள் என்னால் பிரவேசிக்க முடியுமென்றும் நான் அவரின் பிள்ளையாவேனென்றும் கூறினார்கள். ஆனால் அப்போது நான் அதைக் குறித்த உறுதியுடனிருந்ததில்லை, அவரின் பிள்ளையாவேனென்று எப்போதும் நிச்சயமாக இருந்ததில்லை. பூமியில் நல்ல காரியங்களைச் செய்தால் பரலோக ராஜ்ஜியத்தினுள் நுழைய முடியுமென்று அறிந்தேன். ஆகவே, தேவைப் படுகிறவர்களுக்கு நன்மை செய்ய முயன்றேன். 
ஆனால், என்னுடைய இருதயத்தின் ஒரு புறத்தில், நான் பாவம் செய்தேனென்பது எனக்குத் தெரியும். மற்ற மக்களுக்கு நல்லவனாக நான் தோன்றியிருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி நினைக்கமுடியவில்லை. அதேநேரம், என் பாவங்களுக்காக குற்ற உணர்ச்சியுடையவனாயிருந்தேன். அந்த நேரத்தில், ஆலயம் சென்று ஜெபிப்பதை வழக்கமாகச் செய்தேன். “தயவுசெய்து உண்மையிலேயே உம் பிள்ளையாக அனுமதியும். தயவுசெய்து உண்மையை அறிய எனக்கு உதவும்.” நான் ஜெபிக்கும்போது, என்னிருதயத்தில் புதிய வேண்டுகோள் ஒன்று வளர்ந்தது. அவருடைய வார்த்தைகளைக் குறித்த போதனைகளையெல்லாம் கேட்கும் போது என்னால் வார்த்தைகளை காணவோ அவற்றைப் புரிந்து கொள்ளவோ இயலவில்லை. என்னுடைய வெறுமை நிறைந்த வாழ்க்கை, என் பாவம், மரணம் மற்றும் அனைத்தினாலும் களைப்படைந்தேன்.
என்னிடம் கீழ்க்கண்ட சிந்தனைகளிருந்தன, ‘நான் மறுபடியும் பிறக்க வேண்டும். என்னால் மறுபடியும் பிறக்க முடிந்தால் நான் இப்படி வாழ மாட்டேன்.` இத்தகைய சிந்தனைகள் இருந்தாலும், இப்போது ஆலயம் செல்வது குறைந்து போயிற்று. என்னுடைய வாலிபப்பிராயம் கடந்தது. நான் ஒரு வேலையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயிருந்தது. ஆனால் அது நான் நினைத்ததை விடவும் கடினமாக இருந்தது. நான் மேலும், கவலையில் ஆழ்ந்தேன். நான் எத்தனைக் கஷ்டப்பட்டு முயன்றும், என்னால் சிரிக்க முடியவில்லை. என்னுடைய வெறுமையான இருதயத்துடன் என்னை நோக்கிக் கொண்டு மன அழுத்த நிலையில் விழுந்தேன். அந்நேரத்தில் என் சகோதரனிடமிருந்து நற்செய்தியைக் கேட்டேன்.
“ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து, இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப் பட்ட இயேசு கிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.” (அப்போஸ்தலர் 3:19 ). இதுவே மிகச்சரியான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். நான் முன்பு ஆலயக் கூட்டங்களில் படித்திருந்தது நமது பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தார் என்பதாகும். ஆனால் இந்நற்செய்தி, இயேசு யோவான் ஸ்நானனால் நம்முடையப் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார் என்பதையும், நமது பாவங்களின் தீர்ப்பாக சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறியது.
என்னுடைய வாழ்வு முழுவதும் ஆலயம் சென்றிருந்தேன், கர்த்தரின் பிள்ளைபோல் நடித்தேன். ஆனால் நான் தவறினேன். அவருடைய வேதவாக்கின் பொருளை அறிந்துக் கொள்ள முயன்றேன். ஆனாலும் அதில் தவறினேன். ஆயினும், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேள்விப்பட்டபிறகு நான் அதனை விசுவாசித்தேன்; என்னுடைய எல்லாப் பாவங்களும், என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தவையும் மறைந்து போயின, என்னிருதயம் சமாதானமாயிற்று.
கர்த்தரை தீவிரமாக விசுவாசித்து, ஆலயத்திற்கு தவறாமல் சென்றால், அப்பொழுது பரலோகம் சென்றடைவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் கர்த்தர் தன்னுடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அனுப்பினார். மேலும் என்னுடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டன. அவர் பரிசுத்த ஆவியை வரமாகத் தந்தார். அவருடைய பாவ விடுதலையைப் பெறும் முன்பு பரிசுத்த ஆவியானவரைக் குறித்தோ பல பாஷைகளில் பேசுவதைக் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. நான் வெறுமனே ஆலயத்திற்கு சென்று நான் நல்லவனாகவும் ஆலயப் பணிகள் செய்தாலும் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என்று விசுவாசித்தேன். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் என் பாவங்கள் கழுவப்படும்போது மட்டுமே என்னால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றுணர்ந்தேன்.
நான் முன்பு வாழ்ந்த வாழ்க்கையில், நான் கர்த்தரை விசுவசித்த போதிலும் நான் பாவத்திலேயே இருந்தேன். மண்புழுவைப் போன்ற வாழ்வு வாழ்ந்தேன். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் எனக்குத் தெரியவில்லை. அழகிய நற்செய்தியை வேதாகமம் கூறுவதுபோல் எனக்கு பிரசங்கித்த, அவரின் ஊழியர் மூலமாக, என்னுள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்கிறார் என்று அறிந்து விசுவாசிக்கிறேன்.
பாவ விடுதலைப் பெற்றபிறகு, முதலில் என்னுள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று கண்டு கொள்ளமுடியவில்லை. அவரின் வார்த்தைகளை தொடர்ந்து படித்ததன் மூலம் என் இருதயத்தில் பூத்துக் கொண்டிருக்கும் புதிய விசுவாசத்தை, பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசஞ்செய்வதைப் பெற்றேன் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது அது உண்மையானது, மேலும் பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்கிறார் என்று உணர்ந்து திருப்தியடைந்தேன். அவர் என்னுடைய பாவங்களை மன்னித்தபோது, பாவங்கள் இல்லாதவர்கள் மட்டுமே கர்த்தரின் பிள்ளைகளாகவும் பரிசுத்த ஆவியைப் பெறவும் முடியும் என்று அறிந்தேன்.
அவர் கண்களுக்கு என் முயற்சிகள் சிறந்தவையாகவோ, அல்லது சிறப்பாக வாழ்வதோ நான் பரிசுத்த ஆவியைப் பெற அனுமதிக்காது என்பதையும் அறிந்துள்ளேன். தாம் பாவிகளென்றும் அதனைக் குறித்து என்ன செய்வது என்றும் புரியாதவர்களிடம் கர்த்தர் வருகிறார். யாரவரை உண்மையில் தேவையென தேடுகிறார்களோ அவர்களை அவர் சந்திக்கிறார்.
நான் நன்மை செய்வதாலேயோ என்னை வெறுத்து கர்த்தரை நம்புவதாலேயோ பரலோகம் செல்லமுடியாது என்பதை நான் காணும்படிச் செய்து தம்முடைய அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் என் பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கும் பொருட்டு இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் பரிசுத்த ஆவியானவர் என்னுள் என்றென்றும் வாசஞ்செய்யும் படி அவரைத் தந்தார்.
என்னைத் தம் பிள்ளையாக்கியதற்கும், பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்யும்படி என்னை ஆசிர்வதித்த கர்த்தருக்கு நன்றிகள். கர்த்தர் அப்படிச் செய்திராவிட்டால் என்னிருதயத்தில் இன்னும் பாவமுள்ளவனாகவே இருந்து நரகத்தில் நிரந்தர கைதியாகி ஆக்கினைக்குள்ளாக்கப் பட்டிருப்பேன்.”
அதுபோல, நானும் சிலுவையின் இரத்தத்தை மட்டும் ஒரு காலத்தில் விசுவாசித்திருந்தேன். மேலும் நான் வேண்டிக்கொண்டும் கூட பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியவில்லை. அந்த நேரத்தில், நான் இயேசுவை விசுவாசித்த போதிலும் என்னிருதயத்தில் பாவமிருந்தது, அது பரிசுத்த ஆவியானவரை நான் பெறுவதைத் தடைச் செய்தது. பாவியொருவன் பரிசுத்த ஆவியானவரை தன் இருதயத்தில் பெறமுடியாது. ஆயினும், அநேக பாவிகள், தம் இருதயம் முழுவதிலும் பாவங்களிருந்தாலும் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயற்சி செய்கிறார்கள்.
நீங்கள் உண்மையாகவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்று அவரிடம் தொடர்பு வைக்க விரும்பினால், நீங்கள் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவ விடுதலைப் பெற வேண்டும். நீங்கள் இன்னும் பாவியா? அப்படியானால் ஏற்கெனவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவர்களிடமிருந்து உண்மையான நற்செய்தியைக் கேட்கலாம். பரிசுத்த ஆவியானவரிடம் தொடர்பு வைக்க விரும்புகிறவர்களுக்கு தாகமுள்ள இருதயமும் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினிடத்தில் விசுவாசமும் இருக்க வேண்டும்.
நீதிமான்கள் மட்டுமே ஆலயம் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளைக் கேட்க முடியும். அவர்களால் அழகிய நற்செய்தியைக் கேட்டு விசுவாச வாழ்வு வாழ முடியும். ஆனால் பாவிகளோ தம் சபிக்கப்பட்ட வாழவை, நற்செய்தியைக் குறித்தும் கூட கேள்விப்படாமல், நரகத்திற்காக வாழ்வர். 
ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நீங்கள் கற்க வேண்டும். நற்செய்தியை நீங்களேன் விசுவாசிக்கவேண்டும்? சட்டப்பூர்வமான மதத்திலிருந்து நீங்கள் தப்புவதும் வேத வாக்கின் அடிப்படையிலான அழகிய நற்செய்தி மீது உங்கள் விசுவாசத்தைக் காட்டுவதும் உங்களுக்கு மிகவும் அவசியமானது. இயேசுவின் சீடர்கள் அழகிய நற்செய்தியைப் பின்பற்றினார்கள், மேலும் இப்பொழுது அது பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களுடையதாக இருக்கிறது. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஆதிசபையின் தொடக்கத்தில் அப்போஸ்தலர்களால் பின்பற்றப் பட்டதாகும். எல்லா கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற வேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும். 
யாரெல்லாம் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் மனதில் இன்னமும் பாவமிருக்கிறது. அவர்களால் பரிசுத்த ஆவியானவருடன் தொடர்பு வைக்க முடியாது. அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்காக கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும்.
 
 
வேதாகமம் மீண்டும் மீண்டும் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கூறுகிறது
 
இயேசுவானவர் பரலோகம் ஏறின பிறகே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வது தொடங்கியது. இன்றே இரட்சன்ய நாள், இதுவே அவர் அளவில்லாத கிருபையின் நேரம். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பெறாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரின் தொடர்பு இல்லாது வாழ்ந்தாலும் நாம் மிகவும் துரதிருஷ்டசாலிகள்.
உனக்கு பரிசுத்த ஆவியானவரிடம் நட்பு இருக்கிறதா? உன்னுடையப் பாவங்களால் பரிசுத்த ஆவியானவரிடம் தொடர்பு கொள்வதிலிருந்து தடுக்கப் படுகிறாயா? அப்படியானால் கர்த்தர் உனக்களித்த, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகியவற்றைக் கற்று அவற்றை விசுவாசி. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீ விசுவாசித்தாயானால் பரிசுத்த ஆவியானவர் உன் இருதயத்தில் செல்வதுடன் உன் உற்றத் துணைவனாகவும் இருப்பார். நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்போரின் இருதயத்தில் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வார். நீதிமான்களின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் தன் சித்தத்தை அடிக்கடி வெளிப்படுத்துவார். பரிசுத்த ஆவியானவருடன் பவுலின் ஊழியம் அழகிய நற்செய்தியைப் பரப்புவதாக இருந்தது. 
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவரை நீ எங்ஙனம் கண்டு கொள்வாய்? அதற்கான அறிகுறி என்ன? அதற்கான அறிகுறியானது அவன் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறானா? இல்லையா என்பதிலிருக்கிறது. ஒருவன் அழகிய நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் அறிந்து விசுவாசித்தானானால் அவன் பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்யப்பட்டவன்.
அழகிய நற்செய்தியை விசுவாசிக்காதவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதில்லை. யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மூலம் வரும் மன்னிப்பை விசுவாசிப்பவனெவனோ அவனிடன் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார். நீ பரிசுத்த ஆவியானவரிடம் தொடர்பு வைக்க விரும்புகிறாயா?
பரிசுத்த ஆவியானவரைப் பெறவும் அவருடன் உறவாடவும் எத்தகைய நற்செய்தியை நீ புரிந்து கொள்ளவேண்டும் என்று உனக்குத் தெரியுமா? யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றில் அழகிய நற்செய்தியைக் காணலாம். நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லை என்றால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாது. ஆகவே, பரிசுத்த ஆவியானவர் உங்களில் சஞ்சரிக்க முடியாது. தம்மைப் பெற்றுக்கொள்ள மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் விசுவாசம் வைக்க வேண்டுமென பரிசுத்த ஆவியானவர் கோருகிறார்.
பாவிகளுடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியானவரால் வாசஞ்செய்ய இயலாது. பரிசுத்த ஆவியானவரை நீ பெற வேண்டுமானால் உன் பாவங்களிலிருந்து உன்னை சுத்திகரிக்கும் பொருட்டு முதலில் அழகிய நற்செய்தியை நீ விசுவாசிக்க வேண்டும். மேலும், பரிசுத்த ஆவியானவருடன் நீ உறவாட விரும்பினால் நீ அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கும் அளவிற்கு விசுவாசமுள்ளவனாய் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரால் நீ வழி நடத்தப்பட வேண்டுமானால், அழகிய நற்செய்தியை நீ நேசிக்க வேண்டும். மேலும் நீ எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கு அதைப் பரப்ப முயல வேண்டும். யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கிறார்களோ அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். 
அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும், நீதிமான்களிடம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வது கொடுக்கப்படும். அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும், நீதிமான்களால் மட்டுமே பரிசுத்த ஆவியானவருடன் உறவாட முடியும். பரிசுத்த ஆவியானவர் அங்கீகரிக்கும் அழகிய நற்செய்தியானது யோவான் இயேசுவுக்கு அளித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் நிறைவேறியது. (1 யோவான் 5:3-7) 
பேதுரு கூட அழகிய நற்செய்தியை விசுவாசித்து இப்படி கூறினான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குவதலாயிராமல், தேவனைப்பற்றும் நல் மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது” (1 பேதுரு 3:21). வேதாகமத்தில் நீர் என்று அடிக்கடி வழங்கப்படுவது யோவான் ஸ்நானனால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.
பரிசுத்த ஆவியை யாரெல்லாம் பெறமுடிந்ததோ, அவர்கள் அழகிய நற்செய்தியின் மூலம் பாவ விடுதலைப் பெற்று பாவம் எதுவுமில்லாதவர்கள். அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலோடும் ஆராதிக்க முடியும். (யோவான் 4:23) நீதிமான்களுக்கு பரிசுத்த ஆவியானவர், அவர்கள் தம் வாழ்வை பரிசுத்த ஆவியால் நிறைந்ததாக வாழ உதவுகிறார். பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற்றவர்கள் சதா சர்வ காலமும் பிதாவை ஸ்தோத்தரித்து வாழ முடியும், பரிசுத்த ஆவியானவர் நாம் கர்த்தரின் பிள்ளைகள் என்பதை உறுதிச் செய்கிறார். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குள்ளும், பரிசுத்த ஆவியானவருக்குள்ளும், சதா சர்வ காலமும் வாழ்ந்திருப்போமாக.
 
 
தம்மைத் தாமே வஞ்சிப்போரிடம் பரிசுத்த ஆவியானவர் உறவாடுவதில்லை
 
பரிசுத்த ஆவியானவர் பாவிகளிடம் 1 யோவான் 1:8 இல் கூறுகிறார். “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது” தம்மைத் தாமே வஞ்சிப்போரிடம் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கமாட்டார். பரிசுத்த ஆவியானவர் பாவிகளை அதட்டுகிறார். அவர் கூறுகிறார். “இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தினால் நிறை வேற்றப்பட்ட அழகிய நற்செய்தியை நீ ஏன் விசுவாசிக்கவில்லை?” 
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் பற்றி எதுவுமில்லாத, மறுபடியும் பிறந்த, முதலில் தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டதாக நினைத்த கிறிஸ்தவர் ஒருவரின் அறிக்கையை நோக்குவோமாக. இம்மனிதன் இப்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டவர். இங்கு நாம் பரிசுத்த ஆவியானவர் யாரிடம் சஞ்சரிப்பார் என்று சரியாகச் சுட்டிக் காட்டுவோம். 
“நான் ஏன் இவ்வுலகில் வாழ்கிறேன் என்று உணர்ந்த போது கர்த்தர் எனது இருதயத்தில் வாழத் தொடங்கினார். என்னை நான் பார்க்கும்போது, இந்த உலகின் கொடூரத்திற்கு முன் தனியாக கர்த்தரின் படைப்பாக வாழ நான் எத்தனை பலவீனமுள்ளவன். கர்த்தரை நான் தேடவில்லை. ஆனால் இயற்கையாகவே அவரிருப்பதை ஏற்றுக்கொண்டேன். அவரைப் பார்க்க முடியாது. ஆனால் அவர் இருக்கிறார். “கர்த்தர் உண்மையில் இருக்கிறாரா?” என்று கேட்டதுண்டு தான். ஆனால் இத்தகையச் சிந்தனைக் கூட எனக்கு பயங்கரமாக இருந்தது. ஏனெனில் எல்லாவற்றையும் படைத்தவர் அவரே என்று உறுதியாக நம்பினேன்.
கர்த்தரை அலட்சியப் படுத்தியவர்கள் முட்டாள்களாகத் தோன்றினாலும், சில காரியங்களில் அவர்கள் என்னைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் தாம் விரும்புவனவற்றுக்குள் தாமாக போகும் ஆற்றல் மிக்கவர்களாகத் தோன்றினர். அதே சமயம் நான் பலவீனமுள்ள முட்டாளாக தோன்றினேன். ஆயினும் மரணத்திற்கு பிறகு எனக்கு வாழ்வுண்டு என்ற நம்பிக்கை எனக்கிருந்ததால், கர்த்தரை அதிக மரியாதையுடன் நோக்கினேன். எல்லாவற்றிலும் நான் குறைபாடுள்ளவன் என்று நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு பரலோக ராஜ்யம் சிறந்த இடமா என்று ஆச்சர்யப் பட்டதுண்டு. அந்த கேள்வியானது நான் இன்னும் சிரத்தையாக பரலோகத்தை விரும்பச் செய்தது.
என் பெற்றோர் மதத்தின்படி எங்களை வளர்த்தார்கள், என் உடன்பிறந்தோர் எந்த பக்தியும் இல்லாமல் ஆலயம் சென்று வந்தார்கள். என்னுடைய பக்தி சீக்கிரமாக மறைந்துவிடும் என்று அவர்கள் எண்ணியதால் நான் நடுநிலைப்பள்ளிக்குச் செல்லும்வரை நான் ஆலயம் செல்வதைத் அவர்கள் தடைச் செய்யவில்லை. ஆகவே, நான் ஒவ்வொரு ஆலயமாக சென்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் கல்லூரி செல்லும் வரை என் வீட்டருகிலிருந்த சிறிய ஆலயத்திற்குப் போனேன்.
இந்த ஆலயத்தை நான் தெரிந்தெடுத்தமைக்கான காரணம் அது நற்செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே. இந்த ஆலயத்தின் போதகர் எழுப்புதல் நிறைந்த சுவிசேஷகர், மேலும் வேதாகம வார்த்தைகளுக்கெதிராக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. சிறந்த முறையில் மத வாழ்வு வாழ எனக்கு அநேக காரணங்கள் இருந்தன. என்னுடைய கல்வியினால் நான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டேன்.
என்னுடைய ஆலய உறுப்பினர்களை மக்கள் புறஜாதியார் என்றழைத்த போது, என்னுடைய ஆலயம் சரியானது என்றும், நான் கண்டிப்பாக பரலோகம் செல்வேன் என்றும் விசுவாசித்தேன். அந்த உறுதி நற்செய்தியின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்கள் பாவிகளால் பரலோக ராஜ்யம் செல்லமுடியாது என்றனர். அதே சமயம் மற்ற ஆலய மக்களும் கூட தம் இருதயம் முழுவதும் பாவம் நிறைந்திருப்பதாகக் கூறினர். என்னுடைய ஆலயத்திற்கு செல்லும் முன்னால் நானும் கூட என் ஆலய மக்கள் பாவிகளென்று நம்பினேன். ஆகவே, இந்த விமர்சனத்தை அதிகம் பொருட்படுத்தவில்லை.
ஆயினும், இந்த சுவிசேஷ எழுப்புதலாளர்கள் என்னுடைய கடந்த கால அனுபவத்தில் கண்டவர்களை விட வித்தியாசமானவர்கள். இயேசுவை நாம் சரியான முறையில் விசுவாசித்தால் நாம் பாவமற்றவர்களாக இருப்போம் என்று அவர்கள் கூறினர். பாவமில்லாதவர்கள் யாரோ அவர்களால் மட்டுமே பரலோகம் செல்லமுடியும். மேலும் அவர்கள், இயேசு சிலுவையின் மூலம் நமக்கு தீர்ப்பை எடுத்து வந்தார், ஆகவே, நாம் பாவிகளல்ல, ஆனால் நீதிமான்கள் என்றும் கூறினர். முதலில் இதனை நம்பவில்லை. ஆனால் அதைக் குறித்து நான் நினைத்து பார்த்தபோது, அது அர்த்தம் நிறைந்ததாகப் பட்டது. நான் இளமையானவனாக இருந்தேன். நான் நினைத்தேன், நான் பரலோகம் செல்லவேண்டுமானால் என்னில் பாவமில்லை என்றால் மட்டுமே உள்ளே அனுமதிப்பார், ஏனெனில் கர்த்தர் பாவத்தை வெறுக்கிறார்.
எனக்கு பழக்கமானவற்றிலிருந்து இவ்வாலயத்தின் நம்பிக்கைகள் வேறுபாடுள்ளவையாக இருந்தன. ஆலய ஆராதனைக் கூட சிறிது வித்தியாசமானதாக இருந்தது. பரலோகமானது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே பிரவேசிக்கக் கூடியதாகையால், இவ்வாலய மக்கள் சரியான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. இவ்வாலயம் இயேசுவின் சரீரத்திற்கும், இரத்தத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்ததால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு துண்டு ரொட்டியைக் கடித்து இரசம் குடித்தோம். இந்தச் சடங்கு வேதாகமத்தின் அடிப்படையில் அமைந்ததால் அதனை ஏற்றுக் கொண்டேன். ஆயினும் பிற்காலத்தில், மக்கள் இதன் உண்மைப் பொருளை அறியாமல் இந்தச் சடங்கில் பங்கேற்பதை அறிந்துக் கொண்டேன்.
பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளின் இருதயத்திலும் நீதிமான்களின் இருதயத்திலும் வாசஞ் செய்வதாகவும், அவர் அவர்களுடைய ஜெபங்களையெல்லாம் கேட்கிறார் என்றும் விசுவாசித்தேன். ஆகவே, என்னுள் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிப்பதாக நம்பினேன். கர்த்தர் என்னுடைய துணை என்பதில் மிகவும் உறுதியாகவும் நான் விசுவாசித்த நற்செய்தியை எப்போதும் சந்தேகிக்காதவனாகவும் இருந்தேன். நான் கடினமான நேரங்களைக் கடக்கும்போது, கர்த்தர் என்னருகில் இருப்பது போலெண்ணி அவரிடம் பேசினேன். வேறு யாரிடமும் கூறமுடியாதவற்றை அவரிடம் கூறியபோது அவர் அதைக் கேட்பதாக நம்பினேன். ஆகவே, நான் அவரை நம்பி அவரில் சார்ந்திருந்தேன்.
பல பாஷை பேசும்படியாக எழுப்புதல் கூட்டங்களுக்கு சென்றவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. உபவாச ஜெப ஆராதனைகளில் பங்கேற்பவரைப் பார்த்து சிரித்தேன். அத்தகைய முயற்சிகளைப் பார்க்கும் போது நான் நினைத்தேன். ‘பரிசுத்த ஆவியானவரைப் பெற அவர்கள் ஏன் இத்தகைய பொருளில்லாத முயற்சிகளினூடே செல்லவேண்டும்? பாவமில்லாதபோது மட்டுமே உங்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்து உங்களுடன் எப்போதுமே அவரால் தங்கியிருக்க முடியும். அவர்கள் கண்டிப்பாக பாவிகளே. அவர்களுடைய இத்தனை முயற்சிகளினாலும் அவர் வரமாட்டார்.` அவர்களுக்காகப் பரிதாபப்பட்டேன். அவர்கள் முட்டாள்கள் என்று நினைத்தேன். அதை எனது மனதில் கொண்டு, நற்செய்தியைக் குறித்த என் விசுவாசம் மிகவும் நல்லது என்றும் அவர்களுடைய நம்பிக்கைகள் பொய் என்றும் நினைக்கத் தொடங்கினேன்.
என்னுடைய முரட்டுத்தனமான இருதயம் சிகரத்தை அடைந்தது. பத்து வருடங்களாக, மத வாழ்வை நானே வாழ்ந்தேன். காலப்போக்கில் என் மனதிலும் இருதயத்திலும் கேள்விகள் எழத்தொடங்கின. நான் நினைத்தேன், “நற்செய்தியாகிய சிலுவை இரத்தம் மூலமாக நான் பாவமற்றவன், மற்ற விசுவாசிகளும் அதுபோல் பாவமற்றவர்களா? அவர்கள் உண்மையாகவே நற்செய்தியை விசுவாசிக்கின்றார்களா? இக்கேள்விகளை ஏன் கேட்கத் தொடங்கினேன் என்று எனக்குத் தெரியாது. அக்கேள்விகள் என் மனதிற்கு வந்தன. மேலும் அதைக் குறித்து யாரிடமும் கேட்க முடியவில்லை. இது ஒரு சொந்த நம்பிக்கை, இதனை பலவந்தம் பண்ணக்கூடாது. வேறு யாரிடமும் கேட்க வேண்டுமானால் அது முரட்டுத் தனமான கேள்வியாகத் தோன்றும்.
ஆனால், இக்கேள்விகளை என்னிடமே கேட்கத் தொடங்கினேன். நான் கல்லூரியிலிருக்கும்போது மத மேலாளர்களால் தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்யத் தொடங்கினேன். என் இருதயம் இருளினால் மூடப்பட்டு என்னுடைய நம்பிக்கைகள் வலிமைக் குன்றத் தொடங்கின. என்னுடைய நம்பிக்கைகள் மீது நிச்சயமில்லாமல் போயிற்று. ‘என்னை நான் நீதிமான் என்றழைக்கலாமா? இயேசு என் பாவங்களனைத்தையும் சுத்திகரித்துவிட்டாரா?` இந்த மனக் குழப்பங்களுக்கிடையே, நற்செய்தியாகிய சிலுவையை நினைக்கும்படி என்னைக் கட்டாயப் படுத்தி என் மூளையை நானே சலவைச் செய்தேன். ஆயினும், என்னை அதிகமாக வதைக்கும்போது அதிகமாக தொலைந்துபோனேன். ஆலய ஆராதனைக்குப் போவது இல்லாது போயிற்று. என்னுடைய மற்ற வேலைகள் அதற்கு சாக்காகின. 
என்னுடைய குழப்பங்களுக்கும் ஒழுங்கின்மைக்கும் நடுவே, இறுதியில் உண்மையைச் சந்தித்தேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றிக் கேள்விப் பட்டேன். அது மின்னலைப் போல் வந்தது. அதன் தாக்கம் அதிகமாக இருந்தால் எனக்கு அழ வேண்டும் போலிருந்தது. நற்செய்தியைக் கேட்டபோது அதுவரை நான் விசுவாசித்தவையெல்லாம் பொய்யென ஒப்புக் கொண்டேன். 
என்னுடைய பாவங்களை நான் இயேசுவின் மீது சுமத்தவில்லை. நான் பொருளறியாது இயேசு என் பாவங்களை எடுத்துப்போட்டார், ஆகவே, நானொரு பாவமில்லாத மனிதன் என்று விசுவாசித்தேன். ஆனால் அது அப்படியல்ல. ஞானஸ்நானம் பெறும்பொருட்டு இயேசு ஏன் உலகத்திற்கு வரவேண்டும்? அவர் தாம் ஆட்டுக் குட்டிக்கு ஒப்பானவர் என்பதைக் காண்பிக்கவா? தானொரு மனிதனாக வந்ததை நிருபிக்கவா? அல்லது தான் மரணத்தை ஜெயிக்கப் போவதை தீர்க்கதரிசனம் உரைக்கவா? நான் வெறுமனே கேள்விப்பட்டிருந்த மேலோட்டமான அறிவுப்பெற்றிருந்த ஞானஸ்நானத்திற்கு இத்தனை முக்கியத்துவம் இருக்குமென கனவு கூட கண்டதில்லை. உண்மை எதுவெனில், மனிதகுல பிரதிநிதியான யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அந்த ஞானஸ்நானம் மூலம் நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது.
‘ஓ! அதனால் தான் அவர் நம் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டியானார்!` இப்போழுது எல்லாம் புரிந்தது. “என்னுடைய பாவங்களுக்காய் இயேசு சிலுவையில் தீர்க்கப்பட்டார். அதனாலேயே என்னிருதயத்தில் நான் பாவங்களின்றி இருக்கிறேன்.” எப்பொழுது நற்செய்தியாகிய நீர் (இயேசுவின் ஞானஸ்நானம்), இரத்தம் (சிலுவை), மற்றும் பரிசுத்த ஆவியானவரை (இயேசுவே கர்த்தர்) அறிந்தேனோ, அப்பொழுது என் இருதயத்தை உறுத்திக் கொண்டிருந்த பாவங்கள் மறைந்தன.
நான் இப்பொழுது உண்மையிலேயே பாவமற்ற நீதிமான். இறுதியாக பரிசுத்த ஆவியானவர் என்னிருதயத்தில் சஞ்சரிக்கிறார். சிலுவை மீதிருந்த நம்பிக்கை என்னிருதயத்திலிருந்த பாவங்களைக் கழுவப் போதுமானதாக இருக்கவில்லை. உங்களுடைய பாவங்கள் இயேசுவின் மீது எப்படிச் சுமத்தப்பட்டது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட முடியாது. மேலும் பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்யவும் முடியாது. கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். அழகிய நற்செய்தியின் மூலம் பரிசுத்த ஆவியானவரை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 
எந்த முயற்சியுமில்லாமல், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலமாக நான் மன்னிக்கப்பட்டேன். மேலும் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுதும் எப்பொழுதும் என்னுள் சஞ்சரிக்கிறார். இப்பொழுது பெருமையுடன் என்னைக் குறித்து நான் பாவமில்லாதவன் பரலோக ராஜ்யம் என்னுடையது என்று கூறமுடியும். இந்தச் சந்தர்ப்பத்தில், எந்த செலவுமில்லாமல் இத்தகைய ஆசீர்வாதத்தை அளித்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். அல்லேலூயா!”
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்கள் கர்த்தரின் சந்நிதியில் தாம் பாவமற்றவர்கள் என்று கூறமுடியும். நீங்கள் எத்தனைக் காலமாக இயேசுவை விசுவாசித்திருந்த போதிலும் கர்த்தர் நமக்களித்த அழகிய நற்செய்தியை நீங்கள் விசுவாசிக்காவிட்டால், உங்களிருதயத்தில் நிச்சயமாக பாவமிருக்கிறது. அத்தகைய மனிதர்கள் தம்மைத் தாமே வஞ்சிப்பதுடன் கர்த்தரையும் வஞ்சிக்கிறார்கள். இம்மக்கள் கர்த்தரைச் சந்திக்கவில்லை. பாவியொருவன் பரிசுத்த ஆவியானவருடன் உறவாட விரும்பினால், அவன் தன்னைத்தானே வஞ்சிப்பதை நிறுத்திவிட்டு தான் பாவம் செய்தேன் என்று அறிக்கைச் செய்யவேண்டும். அப்பொழுதே அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தகுதியடைகிறான். அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறத் தகுதியானவர்கள்.
பாவிகளிடம் பரிசுத்த ஆவியானவர் என்ன கூறுகிறார்? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தால் நிறைவேற்றப்பட்ட அழகிய நற்செய்தியை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற வேண்டுமென அவர் அறிவுரை கூறுகிறார். உங்களில் பாவத்தை வைத்துக் கொண்டு நீங்கள் பாவியில்லை என்று கூறினீர்களானால், என்றென்றும் நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியாது. அழகிய நற்செய்தியை விசுவாசிக்காமல், தாம் பாவம் செய்யவில்லை என்று கூறுபவர்கள் கர்த்தரை ஏமாற்றுவதோடு தன்னைத் தானே வஞ்சிக்கிறார்கள். பாவிகள் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே கர்த்தரின் கடுமையான தீர்ப்பிலிருந்து தப்ப முடியும்.
 
 
நீதிமான்கள் தம் பாவத்தை அறிக்கைச் செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவருடன் உறவாட முடியும்
 
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட சிலரிடம் பேசினேன். கர்த்தர் நீதிமான்களுக்கு என்ன கூறினார் என்று பார்ப்போம். 1 யோவான் 1:9 இல், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும், நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வசனம் என்ன கூறுகிறது என்றால், இயேசு தாம் ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கு கிரயமாக சிலுவையிலறையப் பட்டார் என்று பிரகடனம் செய்யும் நற்செய்தியை நினைவூட்டி விசுவாசிப்பதன் மூலம், நம்முடைய சொந்தப் பாவங்களை நம் நொருங்குண்ட இருதயங்களிலிருந்து சுத்திகரிக்க முடியும். நீதிமான் தன் சொந்தப் பாவங்களை கர்த்தரிடம் அறிக்கையிடவேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களால் பரிசுத்த ஆவியானவருடன் உறவாட முடியும். நீதிமான்கள் தம் சொந்த பாவங்களை அறிக்கையிட்டு தொடர்ந்து அழகிய நற்செய்தியை விசுவாசிக்கவேண்டும். 
வெகுகாலத்திற்கு முன், அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நம் எல்லாப் பாவங்களையும் கழுவியது, ஆகவே, நீதிமான்கள் இந்த நற்செய்தியை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் கர்த்தர் நம் பாவங்களனைத்தையும் ஏற்கெனவே மன்னித்துவிட்டார். தம் பாவங்களிலிருந்து விடுதலையாக இருக்கும் பொருட்டு நீதிமான்கள் அழகிய நற்செய்தியை விசுவாசித்தேயாக வேண்டும். தம் சொந்தப் பாவங்கள் மூலம் இருதயம் மாசடையும் போது அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் நீதிமான் அதனை சுத்தகரிக்க முடியும்.
நம் கர்த்தர் தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் வெகு காலத்திற்கு முன் நீதிமான்களின் எல்லா பாவங்களையும் சுத்திகரித்து விட்டார். ஆகவே இதனை விசுவாசிப்போர் உண்மையிலேயே பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்றுள்ளனர். ஆயினும் நீதிமான்கள் தம் பாவங்களை ஒப்புக்கொண்டு கர்த்தர் சந்நிதியில் அதனை அறிக்கைச் செய்யவேண்டும். பிறகு நீதிமான் தன் பாவங்களிலிருந்து விடுதலையாகி இருக்கும் பொருட்டு அழகிய நற்செய்தியை நிறைவேற்றிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தம் ஆகிய விசுவாசத்திற்கு திரும்பவேண்டும். ஆகவே அவர்களால் எப்பொழுதும் புத்தம் புதிய வாழ்வை பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலோடு தொடரமுடியும். தாம் பலவீனர்களாக இருந்தாலும் கர்த்தரை யாரால் எந்தப் பிரச்சினையுமின்று நோக்கிப் பார்க்க முடியுமோ அவர்களாள் கர்த்தருடன் உறவாட முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நன்றிகள்.
 
 
பரிசுத்த ஆவியானவருடன் உறவாடும்போது உண்மையான உணர்வை பெறுவதெப்படி?
 
பரிசுத்த ஆவியானவருடன் உறவாட விரும்பும் அநேக மக்கள் இருக்கின்றனர். அவர்கள் இயேசுவை விசுவாசித்த போதிலும், இந்த விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாதிருக்கிறார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம், எல்லா மக்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுகின்றனர் மேலும் அந்த நொடிப்பொழுது முதல் பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலைப் பெறுகின்றனர்.
அதுபோலவே, நீதிமான் ஒருவன் பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலை பெறுவதற்கான ஒரே வழி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தைத் தெரிந்து விசுவாசிப்பதே. உண்மையான நற்செய்தியில்லாது நீதிமானுக்கும் பரிசுத்த ஆவிக்குமான தொடர்பை வெற்றிக் கொள்ள இயலாது. பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதல் குறித்து என்ன? அழகிய நற்செய்தியின் சத்தியத்தை விசுவாசிப்பதாலேயே அது சாத்தியமாகும்.
 
 
மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பாவஞ் செய்கிறான் என்று கர்த்தர் கூறுகிறார்
 
1 யோவான் 1:10 இவ்வாறு கூறுகிறது, “நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” கர்த்தர் முன் பாவம் செய்யாதவன் ஒருவனுமில்லை. வேதாகமம் கூட “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை” (பிரசங்கி 7:20) என்று கூறுகிறது. எல்லா மனிதர்களும் கர்த்தர் முன் பாவஞ்செய்கிறார்கள். யாரொருவன் தான் பாவஞ்செய்யவில்லை என்று கூறுகிறானோ அவனொரு பொய்யன். தம் மரணப் பரியந்தமும் மக்கள் தம் வாழ்வெல்லாம் பாவம் செய்கிறார்கள். அதனாலேயே அவர்களின் பாவங்களை எல்லாம் தம்மீது ஏற்றுக் கொள்ளும் பொருட்டு யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார். நாம் பாவம் செய்யவில்லையென்றால், கர்த்தரை நம் இரட்சகராக விசுவாசிக்கத் தேவையில்லை.
தாம் பாவம் செய்யவில்லை என்றெண்ணுபவர்களிடம் “என் வார்த்தைகள் உனக்குள் இல்லை” என்று கர்த்தர் கூறுகிறார். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது ஒருவனுக்கு விசுவாசமில்லையென்றால், அவன் அழிவினைப் பெறத் தகுதியானவன். ஒரு நீதிமானோ அல்லது பாவியோ தாம் கர்த்தரின் சந்நிதானத்தில் பாவஞ்செய்யவில்லை என்று கூறினால் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் தகுதி இல்லாதவனாகி விடுகின்றான்.
கர்த்தர் அழகிய நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் அற்புதமான வரமாகக் கொடுத்துள்ளார். அழகிய நற்செய்தியின் மூலம் பாவ மன்னிப்பு பெறும்படியாக நம் பாவங்களையெல்லாம் அறிக்கைச் செய்து மனந்திரும்பினோம். நமக்கு கர்த்தர் ஏற்பாடு செய்த அழகிய நற்செய்தியிடம் பாவமன்னிப்பிற்காக திரும்பி வரவேண்டும். இதன் மூலம் பரிசுத்த ஆவியானவருடன் உறவாட முடியும். உண்மையான பரிசுத்த ஆவியானவருடன் உறவாடும் உணர்வானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலேயே இருக்கிறது. மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே கர்த்தரிடம் உறவாட முடியும்.
ஆதாம் ஏவாளிடமிருந்து பாவத்தைப் பெற்றதால் மனித குலம் கர்த்தரிடமிருந்து அதிக தூரம் சென்றது. ஆயினும் பாவ வித்தைப்பெற்ற நாம் கர்த்தரிடம் உறவாடுதலை மீண்டும் எதிர்பார்க்க முடியும். அதனைச் செய்யும்படியாக இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிடம் திரும்பி, நம்மைக் கர்த்தரிடமிருந்து பிரித்து வைத்திருந்த பாவங்களிடமிருந்து மன்னிப்பு பெறவேண்டும்.
அழகிய நற்செய்தியை விசுவாசிப்போர் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவர் மேலும் கர்த்தர் அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புவார். நீதிமான்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றதால் கர்த்தரோடு உறவாடலாம். ஆகவே, தம் பாவங்களினால் கர்த்தரிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்கள். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நோக்கித் திரும்பி அதனை விசுவாசிக்க வேண்டும். அப்போழுது மட்டுமே அவருடன் உண்மையான உறவாடுதலைத் தொடங்க முடியும்.
அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதால் பரிசுத்த ஆவியானவரை நம்முள் வாசஞ்செய்யப் பெறுகிறோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலமாகவே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப் பெறுகிறோம் என்பதை நாம் தெரிந்திருக்கவேண்டும். மூலப் பாவம் மற்றும் சொந்தப் பாவங்களால் ஆன கர்த்தரையும் நம்மையும் பிரித்த சுவரை உடைப்போமாக. மேலும் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் கர்த்தரிடம் உறவாடுதலை அனுமதிப்போமாக.
நாம் பரிசுத்த ஆவியானவருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். விசுவாசத்திற்கு கீழ்ப்படிந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் புரிந்து கொள்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலைப் பெற்றுக்கொள்ள முடியும். அழகிய நற்செய்தியின் மூலமாக பாவ மன்னிப்பு வருகிறது என்ற நம்பிக்கையை நாம் கொள்ளும்பொழுது பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதல் ஏற்படுகிறது, தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறாதவர்களால், பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதலைப் பெறமுடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் ஒருவராலும் பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலைப் பெற முடியாது.
பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதலைப் பெறுவது உனக்கு கடினமாக இருந்தால், நீ நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதையும் உன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லை என்பதையும் முதலில் ஒத்துக் கொள். நீ பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதலைப் பெற விரும்புகிறாயா? அப்படியானால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் நிறைவேற்றப் பட்ட நற்செய்தியை விசுவாசி. அப்பொழுது மட்டுமே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டு, வெகுமதியாக பரிசுத்த ஆவியை உன்னிருதயத்தில் பெற்றுக்கொள்வாய். இந்த அழகிய நற்செய்தி பரிசுத்த ஆவியானவரை உனக்கு வெகுமானமாக அளிக்கும்.