(மத்தேயு 25:1-12)
“அப்பொழுது, பரலோக ராஜ்ஜியம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாய் இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். எண்ணெயையோ கூடக் கொண்டு போகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத் தாமதித்த போது, அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடு ராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப் படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தி உள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக; அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய், உங்களுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியான வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து, ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்கு திறக்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யப் பெற்ற கன்னிகைகள் என்று குறிப்பிடப் படுவது யார்?
பரிசுத்த ஆவியானவர் யாரிடத்தில் வருகிறார்?
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து தம் பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களின் மீது அவர் வருகிறார்.
மேற்கண்ட வசனங்களில், ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளையும் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளும் இருக்கிறார்கள். ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளிடம் அவர்களின் எண்ணெயைக் கேட்கிறார்கள். புத்தி உள்ளவர்கள் புத்தி இல்லாதவர்களிடம் கூறினார்கள். “அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.” ஆகவே, புத்தி இல்லாதவர்கள் எண்ணெயை வாங்கச் சென்றபோது, புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள், தம் விளக்கில் எண்ணெய் இருந்தபடியால், அவர்களால் திருமணத்திற்கு செல்ல முடிந்தது. அப்படியானால் நாம் எப்படி எண்ணெயை ஏற்பாடு செய்வது? நாம் செய்யவேண்டியதென்னவெனில் பாவங்கள் மன்னிக்கப்பட்ட இருதயங்களுடனே அவருக்காக காத்திருப்பதே.
மக்களிடம் இரண்டு விதமான நம்பிக்கைகள் இருப்பதைக் காணலாம். ஒன்று நற்செய்தியாகி பாவமன்னிப்பின் மீதான விசுவாசம். இது பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வழி நடத்துகிறது. மற்றது தம் சொந்த மத முறைகளில் விசுவாசிப்பது. தம் பாவங்கள் கர்த்தரால் மன்னிக்கப்பட்டதா இல்லையா என்பதை இவர்கள் பொருட்படுத்துவதில்லை.
தம் சொந்தப் பிரிவுகளின் மீது விசுவாசம் வைத்திருப்பவர்களுக்கு அழகிய நற்செய்தி பாரமாகவே இருக்கிறது. மணவாளன் வரும்போது எண்ணெய் வாங்கச் சென்ற புத்தியில்லாத கன்னிகைகளைப்போல், ஒவ்வொரு ஆலயத்திற்கும், பரிசுத்த ஆவியைப் பெறச் சென்று கொண்டிருப்பவர்கள் வேறு யாரையுமல்ல, அவர்கள் தம்மைத் தாமே வஞ்சிக்கிறார்கள். அத்தகைய மனிதர்கள் நியாயத் தீர்ப்பு நாளுக்கு முன் தம் இருதயங்களில் அழகிய நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும் என்ற குறிப்பைக் குறித்து அறிவில்லாதவர்களாக உள்ளனர். தம்முடைய உயர்வுகளின் மூலமாக கர்த்தரைக் கவருவதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள பெரும் முயற்சிகளில் ஈடுபட்ட டீக்கன் ஒருவரின் பாவ அறிக்கையைப் பார்ப்போமாக. இப்பாவ அறிக்கை உங்களுக்கு உதவும்.
“பரிசுத்த ஆவியானவரைப் பெற அனைத்தையும் செய்தேன். என்னுடைய நம்பிக்கையில் தொடர்ந்து என்னை அர்ப்பணஞ்செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆகவே, ஒவ்வொரு ஜெபவீடாகச் சென்றேன். இவற்றில் ஒரு ஜெப வீட்டில் ஆராதனையின் ஔரங்கமாக எலக்ட்ரிக் பியானோவையும், மேளத்தையும் உபயோகித்தார்கள். பரிசுத்த ஆவியானவரைப் பெற விரும்பியவர்களை ஒவ்வொருவராக அந்த ஆராதனையை நடத்திய போதகர் அழைத்து, அவர்களின் நெற்றியில் அறைவதன் மூலம், அவர் பல பாஷையில் பேசத் தொடங்கினார். அவர் மைக்கைச் சுற்றி சுற்றி வந்து “நெருப்பைப் பெற்றுக்கொள், நெருப்பு, நெருப்பு” என்று கூக்குரலிட்டு மக்களின் தலைகளில் கைகளை வைத்தார். அதனால் அவர்கள் வலிப்பு வந்து மயங்கினர். இத்தகைய பரிசுத்த ஆவியானவரைப் பெறும் நடைமுறைகள் சரியானது தானா என்ற சந்தேகம் என்னுள் இருந்த போதிலும் நான் ஏற்கெனவே இக்கூட்டங்களுக்கு அடிமையாகி விட்டிருந்தேன். இப்படி இருந்தாலும் கூட, பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதில் நான் வெற்றி பெறவில்லை.
அந்த அனுபவத்திற்கு பிறகு, மலைகளுக்குச் சென்று பைன் மரத்தைப் பிடித்துக் கொண்டு இரவு முழுவதும் அழுது ஜெபித்தேன். ஒரு குகைக்குள்ளிருந்தும் ஜெபித்தேன். அதுவும் வேலை செய்யவில்லை. அதன் பிறகு, 40 நாட்கள் தொடர்ந்து முழு இரவு ஜெபம் செய்தும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. அப்பொழுது ஒரு நாள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய ஒரு கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டேன். இந்த கருத்தரங்கு வாரம் ஒரு முறையென ஏழு வாரங்கள் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கு கர்த்தரின் அன்பு, சிலுவை, இயேசுவின் உயிர்த்தெழுதல், கை வைத்தல், ஆவியின் கனிகள், மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியதாக இருந்தது. கருத்தரங்கின் நிகழ்ச்சிகள் முடிவு பெறும் வேளையில், கருத்தரங்கின் பிரசங்கியார் தன் கைகளை என் தலைமீது வைத்து பரிசுத்த ஆவிக்காக ஜெபித்தார். அவர்கள் கூறியபடியெல்லாம் செய்தேன். சிறிது ஓய்வெடுத்து என் கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி “லா-லா-லா-லா” என்று மீண்டும் மீண்டும் கத்தினேன். திடீரென “லா-லா-லா-லா” என்றழுது கொண்டிருக்கும்போது அந்நிய பாஷையைத் தடையின்றி பேசத் தொடங்கினேன். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டமைக்காக அநேக மக்கள் என்னை வாழ்த்தினார்கள். ஆனால் நான் வீட்டில் தனியாக இருந்தபோது பயந்தேன். ஆகவே, அக்கருத்தரங்கின் தொண்டனாக வேலைச் செய்யத் தொடங்கினேன். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொண்டு செய்ய வேண்டுமென்று, என்னுடைய வேலைகளைச் செய்வதற்கு நாடு முழுவதும் சென்றேன். நான் என்னுடைய கைகளை சுகமில்லாதவர்கள் மீது வைத்தபோது, அவர்கள் சுகம் பெற்றது போல் தோன்றியது. ஆனால் பிறகு அவர்கள் படுக்கையில் விழுந்தார்கள். பிறகு என் கண்களுக்கு முன் காட்சிகளைக் கண்டேன். மேலும் என்னால் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும் என்றும் கண்டேன். ஆச்சர்யமாக, எனது தீர்க்கதரிசனங்கள் உண்மையாயின. அந்நேரமுதல், நான் எல்லா இடங்களுக்கும் அழைக்கப்பட்டு புகழ் பெற்றவர்களைப் போன்று உபசரிக்கப்பட்டேன். ஆயினும் என்னுள் பயமிருந்துக் கொண்டேயிருந்தது. பின்பு ஒரு நாள், ஒரு குரல் என்னிடம் கூறியது. “இதுபோல் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் கொண்டிராமல், உன் குடும்பத்தார் இரட்சிப்படைய உதவும் பொருட்டுச் செல்” ஆயினும் அந்த இரட்சிப்பு என்ன என்பது எனக்குத் தெரியாது, மற்றவர்கள் கூறியவை மட்டுந்தான் எனக்குத் தெரியும். பரிசுத்த ஆவியானவர் அளித்த வரத்தை நான் உபயோகப் படுத்தாவிட்டால் அதனை அவர் எடுத்துப் போடுவார் என்றனர். ஆனால் மறுபுறத்தில், என்னுடைய திறமைகளை உபயோகப்படுத்த பயந்தேன். அதே நேரம் அப்படிச் செய்வதை நிறுத்தவும் முடியவில்லை.
ஒரு நாள், ஒரு பெண் மந்திரவாதி இயேசுவை விசுவாசிக்க விரும்புகிறாள் என்று கேள்விப்பட்டு என் நண்பர்களுடன் அவளிடம் சென்றேன். நாங்கள் அவளிடத்தில் வருகிறோம் என்று முன்கூட்டியே அவளிடம் கூறவில்லை. ஆனால் அந்த பெண் மந்திரவாதி எங்களுக்காகத் தன் கதவருகே காத்திருந்ததுடன் “நீங்கள் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றும் கூறினாள். திடீரென எங்கள் மீது நீரைத் தெளித்து “கிழக்கின் மந்திரத்திற்கும் மேற்கின் மந்திரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை.” என்றாள். அவள் எங்களை இயேசுவின் மந்திரவாதிகள் என்றழைத்தாள். அவள் எங்களை நோக்கி, “இவன் பயந்த சுபாவம் உள்ளவன், அவன் அப்படிப்பட்டவன் அல்ல” என்றாள். அந்த பெண் மந்திரவாதி கூறியது என் தலையில் இடியைப் போல் இறங்கியது. நான் செய்தவைகளெல்லாம் இந்த பெண் மந்திரவாதி செய்கிறவற்றிலிருந்து எந்த வேறுபாடும் இல்லாதவை என்று நினைக்கத் தொடங்கினேன். என்னுடைய பாவங்கள் என்னிருதயத்தில் இன்னுமிருந்ததால் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லை.”
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது நமது திறமைகளுக்கு அப்பாற்பட்டது என்று கற்றோம். இத்தகைய விசுவாசம் கர்த்தரின் நற்செய்தியை அடிப்படையாக கொண்டிராததால், இத்தகைய மத வாழ்க்கையில் வாழுபவர்களின் விளக்குகளில் எண்ணெய் இல்லை.
வேதாகமம் கூறும் விளக்கானது ஆலயத்தைக் குறிக்கின்றது. மேலும் எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கின்றது. பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளாமல் ஆலயம் செல்லுபவர்களை முட்டாள்கள் என்று வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது. அது கர்த்தரின் ஆலயமா இல்லையா என்றில்லை.
முட்டாள்கள் தம் உணர்வுகளையும், உடம்புகளையும் ஒவ்வொரு நாளும் எரிக்கிறார்கள். முட்டாள்கள் தன் உணர்வுகளை உடம்புடன் கர்த்தர் முன் எரிக்கின்றனர். நம்முடைய உணர்ச்சிகளை 20cm இருக்கிறதென்றும் நாளொன்றுக்கு 1cm உபயோகப்படுத்துகிறோம் என்றால், நம்முடைய உணர்வுகளெல்லாம் 20 நாட்களில் காலியாகிவிடும். அவர்களின் நம்பிக்கைக்குப் பின்புறம் இருக்கும் உணர்ச்சிகள் அதிகாலை ஜெபம், முழு இரவு ஜெபம், உபவாச ஜெபம் மற்றும் எழுப்புதல் கூட்டங்கள் மூலம் புதிய பலத்தைப் பெறுகின்றன. அதே நேரம் அவர்கள் உணர்வுகளும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எரிகிறது. அவர்கள் தம் உணர்ச்சிகளை எரிக்கும் முடிவில்லாத முறைக்கு அடிமைகளாகிவிட்டனர்.
அவர்களுடைய உணர்வுகள் இயேசுவின் பெயரில் எரிகின்றன. அவர்கள் ஆலயத்திற்குச் சென்று தம் உணர்ச்சிகளை எரிக்கின்றனர். ஆனாவ் அவர்கள் இருதயமோ வெறுமையாக எதையோ தேடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால் அவர்களுடைய நம்பிக்கை உடம்பின் உணர்ச்சிகளிலிருந்து வருகிறது; ஆகவே, நெருப்பு அணையாமல் இருக்கும் பொருட்டு தம் உணர்ச்சிகளை உறுதிப் படுத்துவதற்கு தொடர்ந்து தேவையிருக்கிறது. ஆயினும், இத்தகைய விசுவாசத்தால் அவர்களால் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியாது. தம் உணர்ச்சிகளை எரிப்பது பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வழி நடத்தாது.
கர்த்தரின் சந்நிதானத்தின் முன் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்கு சரியான விசுவாசத்தை ஆயத்தம் செய்யவேண்டும். அப்பொழுது மட்டுமே பரிசுத்த ஆவியானவரைப் பெறத் தகுதியானவர்களாவோம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள நம்மைத் தகுதியாக்கும் விசுவாசத்தை சம்பாதிப்பது எப்படி? இயேசு யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றால் நிறைவேற்றப்பட்ட அழகிய நற்செய்தில் உண்மை அடங்கியிருக்கிறது.
கர்த்தர் நம்மை “பொல்லாதவர்களின் சந்ததியும்” (ஏசாயா 1:4) என்கிறார். இதனை நமக்கானதாக ஏற்றுக் கொள்ளவேண்டும். மக்கள் 12 விதமான பாவங்களுடன் பிறந்தனர் (மாற்கு 7:21-23). மனிதர்கள் தாம் பிறந்த நேரம் முதல் தாம் மரணமடையும் நாள் வரை பாவஞ் செய்வதிலிருந்து தப்ப முடியாது.
யோவான் 1:6-7 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்கச் சாட்சியாக வந்தான்.” யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்து உலகின் எல்லா பாவங்களையும் அவர் மீது சுமத்தி, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29) என்றான். நாமெல்லாரும் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். இயேசுவிற்கு யோவான் அளித்த ஞானஸ்நானத்திற்கு நன்றிகள். யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுக்காமல், அவர் உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என பிரகடனப் படுத்தாமலிருந்தால், இயேசு நம் பாவங்களையெல்லாம் அவருடன் சிலுவைக்கு எடுத்துச் சென்றார் என்று அறிந்திருக்க மாட்டோம். நமக்கு பரிசுத்த ஆவியானவரைப் பெறும் வழியும் தெரிந்திருக்காது. யோவானின் சாட்சிக்கு நன்றிகள். அதன்மூலம் இயேசு நம் பாவங்களை எடுத்துப் போட்டதால் பரிசுத்த ஆவியானவரை நம்மால் பெறமுடிந்தது.
இந்த விசுவாசத்தின் மூலமாக, மணவாளனாகிய இயேசுவை வரவேற்க நாம் மணவாட்டியாகி, அவரை வரவேற்க முழு ஆயத்தமாக இருக்கிறோம். நாமே இயேசுவை விசுவாசிக்கும் கன்னிகைகள், நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற முழு ஆயத்தமாக இருக்கிறோம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உன் முழு இருதயத்துடன் விசுவாசிக்கின்றாயா? யோவானால் பண்ணப்பட்ட ஞானஸ்நானத்தின் மூலம் உன் பாவங்களையெல்லாம் இயேசு கிறிஸ்து சுமந்து தீர்த்தார் என்பதை நம்புகிறாயா? வேதாகமம் கூறுகிறது, “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலேயே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17). நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்காக, இயேசு யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்கவேண்டும். இயேசு இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார். யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார், சிலுவையில் மரித்து மீண்டும் உயிரோடெழும்பினார் என்பதை விசுவாசிப்பதன் மூலமே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றும் கூட, இரண்டு வகையான விசுவாசிகள் இருக்கின்றனர். அது பத்து கன்னிகைகளின் கதைக்கொப்பான இரண்டு வகையாகும். நீ எந்தப் பக்கத்திலிருக்கிறாய்? நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் பரிசுத்த ஆவியை நீ பெற்றுக் கொள்ள வேண்டும். நீ ஆலயத்திற்குச் சென்றும், பரிசுத்த ஆவியானவர் உன்னிடத்தில் வரும்படி நீ காத்துக் கொண்டிருப்பதை அறிகிறாயா? பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான சரியான வழியை நீ அறியவேண்டும்.
எத்தகைய நம்பிக்கைகளினால் நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியும்? மந்திரத்தில் ஆர்வம் கொள்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியுமா? கோமா நிலையில் இருந்து கொண்டு பரிசுத்த ஆவியானவரை உன்னால் பெற முடியுமா? வெறிமிக்க மதங்களை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியுமா? உன்னுடைய பாவங்களை மன்னிக்குபடி கர்த்தரிடம் நீ இடைவிடாது ஜெபிக்கவேண்டுமா? வேதாகமம் கூறுகிறது, இயேசு ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து மேலே வருகையில், கர்த்தரின் ஆவியானவர் புறாவைப் போல் இறங்கி வந்தார். நம்முடைய பாவங்களையெல்லாம் சுமக்கும்படியாகவும், நம்முடைய மீறுதல்களுக்காய் சிலுவையில் கிரயஞ்செலுத்த அறையப் படப் போவதாகவும் நம்மிடம் கூறுவதற்காக ஞானஸ்நானம் பெற்றார்.
உலகின் பாவங்களையெல்லாம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவைக்குச் சென்றார். ஆகவே, நாம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறோம். இதுவே உண்மையாகும். யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார், சிலுவையில் நம் பாவங்களுக்காய் தீர்க்கப்பட்டு மீண்டும் உயிரோடெழும்பினார். நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் பொருட்டு, யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் (மத்தேயு 3:13-15), பரிசுத்த ஆவியானவர் அமைதியாகப் புறாவைப் போன்று, அவர் ஞானஸ்நானத்தை விசுவாசித்து சுத்தமானோர் மீது இறங்குவதைக் காணலாம்.
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்கு, யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பது மிகவும் அவசியம். ஒருவன் பாவ மன்னிப்பை நம்பும்போது பரிசுத்த ஆவியானவர் அவன் மீது புறாவைப் போன்று அமைதியாக வருகின்றார். பரிசுத்த ஆவியானவரை ஏற்கெனவே பெற்றுக்கொண்டவர்கள் பாவ மன்னிப்பின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமே அது சாத்தியமாயிற்று என்பதை அறியவேண்டும். யாரெல்லாம் பாவ மன்னிப்பை தம் இருதயப்பூர்வமாக நம்புகிறார்களோ அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகின்றார்.
இயேசுகிறிஸ்து நித்திய வாழ்வின் அப்பமாகவும் இரசமாகவும் வந்தார். (மத்தேயு 26:26-28, யோவான் 6:53-56). இயேசு ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து வெளியே வந்தவுடன் பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது” (மத்தேயு 3:17).
கர்த்தர் திரியேகமாயிருக்கிறார் என்று விசுவாசிப்பது இலகுவானது. கர்த்தர் இயேசுவின் பிதா, இயேசு கர்த்தரின் மகன். பரிசுத்த ஆவியானவரும் கர்த்தரே. திரியேகமும் நமக்கு ஒரே கர்த்தரே.
வெறும் சிலுவையை விசுவாசிப்பதாலோ, நீதியின் செயல்களைச் செய்வதன் மூலம் உங்களை பரிசுத்தப்படுத்த முயற்சிப்பதாலோ, உஙகளால் பரிசுத்த ஆவியைப் பெறவே முடியாது என்பதை நீங்கள் அறியவேண்டும். நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவரின் மீது சுமத்துவதற்காக யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தான் என்பதையும் நம்முடையப் பாவங்களுக்கு பிரயச்சித்தமாக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும் நீங்கள் விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். சத்தியம் எத்தனை தெளிவானதாகும் உண்மையாகவும் இருக்கிறது! மன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரையும் பெறுவது கடினமானதல்ல.
கர்த்தர் இலகுவான வார்த்தைகள் மூலம் நம்முடன் பேசுகிறார். ஒரு சாதாரண மனிதனில் புத்திசாலிதனம் 110 இலிருந்து 120 ஆகும். அவருடைய நற்செய்தி சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளுமளவு இலகுவானது. 4 அல்லது 5 வயதுள்ள சிறிய பிள்ளைகளுக்கு கூட அழகிய நற்செய்தியானது புரிந்து கொள்வதற்கு கடினமானதல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்வதைக் குறித்து கர்த்தர் இன்னும் உயர்ந்த முறையில் கூறியிருந்தால், நாம் அவரை புரிந்து கொண்டிருப்போமா? கர்த்தர் நீதியாக நம் பாவங்களை மன்னித்து அதனை நம்புவோருக்கு பரிசுத்த ஆவியானவரை வரமாக அளித்தார்.
கைகளை வைப்பதனாலோ அல்லது மனம் வருந்தி ஜெபிப்பதாலோ நம்மால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். பரிசுத்த ஆவியானவர் உபவாசம் இருப்பதாலோ, அர்ப்பணிப்பதாலோ, முழு இரவும் மலைகளில் ஜெபிப்பதாலோ வருவதில்லை. எத்தகைய விசுவாசத்தின் பலனாக பரிசுத்த ஆவியானவர் நம்முள் வர முடியும்? இயேசு இவ்வுலகிற்கு வந்தார். எல்லாப் பாவங்களையும் சுமக்கும்பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார், சிலுவையில் மரித்தார், மேலும் உயிரோடெழும்பினார் என்பனவற்றை விசுவாசிக்கும் விசுவாசமே அது.
நாம் இதனை உண்மையாகவே நம்ப வேண்டுமா?
நாம் ஏன் பாவ மன்னிப்பு பெறுவதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெறவேண்டும்? கர்த்தரின் இராஜ்யத்தின் பிரஜைகளாகும் பொருட்டு அவரின் ஆவியைப் பெறவேண்டும். ஆகவே, பரிசுத்த ஆவியானவரை நாம் பெறும்படியாக, இயேசுவை நம் இரட்சகராகவும், அவரின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசித்து, கடைசியாக நம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறவேண்டும்.
தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களுக்கு கர்த்தர் ஏன் பரிசுத்த ஆவியானவரை அருளிச் செய்கிறார்? அவர்களை தம் மக்களாக முத்திரைக் குத்துவதே அதன் காரணம். கர்த்தரின் வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவை நம்புபவர்களுக்கு முத்திரைக் குத்தவே பரிசுத்த ஆவியானவரை அத்தாட்சியாக அவர்களுக்கு கொடுக்கிறார்.
நிறைய மனிதர்கள் தவறான விசுவாசத்தைக் கடைபிடிக்கிறார்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பி பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது மிகவும் சுலபமான காரியம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுகொண்ட நமக்கு அது இலகுவானது. அதே சமயம் பாவமன்னிப்பு பெறாதவர்களுக்கு அது முற்றிலும் இயலாத காரியம். அவர்களுக்கு உண்மை தெரியாததால் பரிசுத்த ஆவியை பெறுவதற்கு மற்ற வழிகளான மதந்தரும் கோமா மற்றும் வெறித்தனமான நடவடிக்கைக்குள் தம்மை மூழ்கடிப்பதன் மூலம் தேடுகின்றனர். சாத்தான் விதைத்த விதையானது அவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கும், மேலும் மூட மதத்தின் பாதிப்பிற்குள் விழவும் வைக்கும் என்பது குறித்து அவர்கள் அறிவில்லாதவர்களாக இருக்கின்றனர்.
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை நம்பி பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்கிறார். கர்த்தரின் இரட்சிப்பை விசுவாசிப்போர் மட்டுமே, “என்னிடம் பாவம் இல்லை” என்று அறிக்கை செய்யமுடியும். ஒருவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லையென்றால், அவனால் தன்னில் பாவமில்லை என்று கூறமுடியாது. அதுபோல, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து பாவ மன்னிப்பைப் பெற்றவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை தம் பிள்ளைகளுக்கு அடையாளமாக கர்த்தர் தந்தருளினார்.
இயேசுவின் ஞானஸ்நானமும் அவர் இரத்தமும் நம் பாவங்களை எடுத்துப்போட்டது என்று சாட்சி கூறுவது யார்? இயேசு, அவரின் சீடர்கள், மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் அங்ஙனம் சாட்சியம் கூறுகிறார்கள். எல்லா மக்களையும் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கத் திட்டமிட்டது யார்? பரிசுத்த பிதாவானவர் திட்டமிட்டார். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தியது யார்? இயேசு நடைமுறைப் படுத்தினார். இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்று உறுதி கூறுபவர் யார்? பரிசுத்த ஆவியானவர்.
கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக்க விரும்புவதால், நம் பாவங்களையெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலமாக இரட்சிக்க தீர்மானத்துடனுள்ளார். ஆகவே, தெய்வீக திரியேகம் நம் இறுதி இரட்சிப்பை உறுதிசெய்து பாவ மன்னிப்பை அங்கீகரிக்கிறது.
மத்தேயு 3:17 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” பரிசுத்த ஆவியையுடைய மக்கள் கர்த்தரின் மக்கள். அவர்கள் அவருடைய பிள்ளைகள். “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” இயேசுவே கர்த்தர். பிதாவாகிய கர்த்தர் கூறுகிறார். “உன் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுமானால், உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவால் நிரந்தரமாக அகற்றப்பட்டதென்றும், என்னுடைய ஒரே நேசகுமாரன் என்றும் விசுவாசித்து பரிசுத்த ஆவியைப் பெற்று, என்னுடைய பிள்ளையாகு.” இதனை விசுவாசிப்போர் பாவ மன்னிப்பு பெற்று கர்த்தரின் மகனாகவும் மகளாகவும் மாறுவர். அவர்களைத் தம் பிள்ளைகள் என்று முத்திரைப் பதிக்க அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை பரிசாக அளிக்கிறார். நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய இரண்டையும் ஒரு சேர விசுவாசித்ததன் மூலம் நம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற்றோம்.
மக்கள் தம் இருதயத்தை வெறுமையாக்கி நற்செய்தியாகிய பாவ மன்னிப்பை விசுவாசிக்காதபோது, அவர்கள் தம் மூலப் பாவங்கள் ஏற்கெனவே போய்விட்டன. ஆயினும் தம் சொந்த பாவங்களுக்காக இடைவிடாது மனம் வருந்தி ஜெபிக்க வேண்டுமென்று எண்ணத் தொடங்குகின்றனர். அவர்கள் இத்தகையச் சிந்தனைகளுக்கு பலியானால், வேதாகமம், புரியாததாகவும், குழப்பமானதுமாகி விடுகிறது. ஆகவே அவர்கள் சீடர்களின் விசுவாசத்தைக் கைவிட்டு வேறு வகையான நம்பிக்கைகளுக்குள் சென்றுவிடுகிறார்கள்.
சிலர் “ஜெபம் மூலம்” பரிசுத்த ஆவியானவர் தம்முள் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் வேதாகமத்தின் அடிப்படையில் இது முழு உண்மையல்ல. இது அபத்தமானதாகத் தெரியலாம். ஆனால் வேதம் கூறுகிறது. யோவானால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து வெளியே வரும்போது பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் அவர் மேல் இறங்கி வந்தார். இது எதனை நிருபிக்கின்றது என்றால், நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு, இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இவ்வுலகின் பாவங்களை சுமக்கும்படி யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவற்றிற்காக சிலுவையில் தீர்க்கப்பட்டார். மேலும் நம் இரட்சகராகும் பொருட்டு உயிரோடெழும்பினார் என்பனவற்றை விசுவாசிக்க வேண்டும்.
நாம் இந்த உண்மையை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரைப் பெறும்போது கர்த்தர் என்ன கூறுகின்றார்? அவர் கூறுகிறார் “நீ என் மகன், இவன் என்னுடைய அன்பான மகன், இவனில் பிரியமாயிருக்கிறேன்.” கர்த்தர் எதிர்காலத்தில் இயேசுவை விசுவாசித்து பாவமன்னிப்பு பெறுபவர்களிட்ம் கூட இப்படியே கூறுவார். இந்த உண்மை கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக்குவதாக கூறிய வாக்குதத்தமாகும்.
ஆனால் மக்கள் இன்னமும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றன என்று நினைக்கிறார்கள். உன்னுடைய அழுகை மற்றும் உலகச் சம்பந்தமான முயற்சிகளினால் பரிசுத்த ஆவியானவர் உன் மீது வருவார் என்று நினைக்கிறாயா? கர்த்தரின் கிரியைகள் அவர் சித்தத்திற்குட் பட்டவை, மேலும் தம் பாவங்களுக்காய் பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே அவர் பரிசுத்த ஆவியை அளிக்கிறார். அவர் கூறுகிறார். “உன்னுடைய பாவங்களனைத்தையும் சுமக்கும்படியாக என் மகனை ஞானஸ்நானம் பெற்றவனாக்கினேன். அவற்றிற்கு தீர்ப்பாக சிலுவையில் அறையப்படும்படிச் செய்தேன். என் மகனை உன் இரட்சகராக நியமனம் செய்தேன். என் மகனால் நிறைவேற்றப்பட்ட பாவ மன்னிப்பை நீ ஏற்றுக் கொண்டால், அப்பொழுது பரிசுத்த ஆவியை உன்னிடத்தில் அனுப்புவேன்.”
நம் பிதா அவர் விரும்புவதைச் செய்கிறார். ஒருவன் இரவு முழுதும் முழங்காலிட்டு தன் நுரையீரல் வெடிக்குமளவு அவரிற்காய் அழுதாலும் கர்த்தர் அவனுக்கு நிச்சயமாக பரிசுத்த ஆவியானவரை அனுப்பமாட்டார். அவர் அவனை இப்படியாக அதட்டுவார். “நீ இன்னும் சரியான அறிவை ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் நீ தொடர்ந்து தவறான நம்பிக்கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறாய். பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது, நீ உண்மையான நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை தடைச் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வுலகில், சூழ்நிலைக்கேற்றவாறு மனிதர்களின் தீர்மானங்கள் மாறும், ஆனால் கர்த்தர் நியமித்த பாவமன்னிப்பும் பரிசுத்த ஆவியானவரை அளிப்பதும் குறித்த சட்டங்கள் மாற்ற முடியாதவை. இந்த தவறான நம்பிக்கைகளினுள் விழுந்தாயானால், சரியான பாதையை மீண்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். கீழ்படிதலில்லாதவர்களுக்கு இயேசு முட்டுக் கட்டையாக இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. (1 பேதுரு 2:8)
இயேசுவை விசுவாசிக்கும் மக்களுக்கு, அவர் ஏன் ஞானஸ்நானம் பெற்றார் என்று தெரியாவிட்டால் அவர்கள் பாவ விடுதலையின் நற்செய்தியில் அறைவாசியையே நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் நிச்சயம் நரகத்திற்குள் விழுவார்கள். ஆகவே, நீங்கள் முதலில் இயேசுவை விசுவாசிக்கும்போது, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இதன் மூலமாகவே பாவ மன்னிப்பு நற்செய்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளும் போது பரிசுத்த ஆவியையும் கூடப் பெறுவீர்கள்.
இயேசுவின் பூலோக வாழ்க்கை குறித்து பார்ப்போம். இயேசு ஒரு மனிதனாக அவதரித்து தன் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தம் மீது ஏற்றுக்கொண்டார். நம்மை நரகத்தின் அக்கினியிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு சிலுவையில் மரித்து, நம்முடையப் பாவங்களுக்காக தீர்க்கப்பட்டார். அவரை விசுவாசிப்போர் பரிசுத்த ஆவியானவரை வரமாகப் பெறுவார்கள்.
ஆகவே, பரிசுத்த ஆவியானவரைப் பெறும் பொருட்டு உண்மையான பாதையைப் பின்பற்ற வேண்டும். எது தேவையெனில் உண்மையின் வார்த்தையின் படி நினைப்பது. இதனை நாம் பின்பற்றும்போது, இயேசு உன்னை தன்னில் வைத்து ஆசீர்வதிப்பார். யாரெல்லாம் இருதயத்தை வெறுமையாக்கி அவர் வார்த்தைகளை நம்புகிறார்களோ அவர்கள் பாவ மன்னிப்பை பெறுவதன் பொருட்டு சத்தியத்தில் வாழ்வதோடு, பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தவும் படுவர். மேலும், பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் மற்றவர்களையும் சத்திய பாதையில் வழி நடத்தலாம்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நிறைவேற்றப்பட்ட பாவ விடுதலையை விசுவாசி. அப்பொழுது மட்டுமே அவரை விசுவாசத்துடன் நாம் பற்றி, பாவ மன்னிப்பு ஆசீர்வாதத்தைப் பெற்று, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப் பெற்று நித்திய வாழ்வைப் பெறுவோம். இயேசுவே மன்னிப்பின் தேவன். அவர் தன் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணம் மூலம் உலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார். இயேசு நம் பாவங்களைச் சுத்திகரித்து நற்செய்தியாகிய சத்தியத்தை விசுவாசித்தோருக்கு பரிசுத்த ஆவியை அளித்தார். உண்மை நம்பிக்கையை கடைபிடிப்பதன் மூலம் நீங்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெறலாம்.