(ஏசாயா 9:6-7)
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும் தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”
விசுவாசிகளினுள் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்ய அனுமதிப்பது யாது?
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே அனுமதிக்கிறது
பரிசுத்த ஆவியானவரைப் பெறும் பொருட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மீது விசுவாசம் வைக்கவேண்டும். நம்முடைய கர்த்தருக்கு, அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன் என்ற பெயர்கள் உள்ளன. நம்முடைய தேவன் பரலோகத்தின் வழி என்றும் குறிக்கப்படுகிறார். இயேசுகிறிஸ்து எல்லோருக்கும் அழகிய நற்செய்தியை பரிசாக அளித்தார்.
ஆயினும், இவ்வுலகில் இன்னமும் அநேகர் இருளில் வாழுகின்றனர். அவர்கள் இந்த இருளிலிருந்து தப்பமுயல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அழகிய நற்செய்தியைக் குறித்து எதுவும் தெரியாததால், அவர்கள் தம் பாவங்களிலிருந்து என்றென்றும் தப்ப முடியாது. அவர்கள் தம் போலியான கொள்கைகளின் நம்பிக்கையின்று உதிர்ந்து போவார்கள். அதற்கு மாறாக, உண்மையை தேடுபவர்கள், அழகிய நற்செய்தியை எதிர்கொண்டு, கர்த்தரின் ஆசீர்வாதத்தினால் நிரம்பிய வாழ்க்கையை தம் எஞ்சிய வாழ்நாளில் பெறுவர். அவர்கள் அழகிய நற்செய்தியைக் கண்டு தம் பாவங்களினின்று சுத்திகரிக்கப்பட உதவும்படியாக என்னை அனுமதித்தது எனக்கு கிடைத்த சிறப்பு ஆசீர்வாதமாக கருதுகிறேன்.
அவருடைய ஆசீர்வாதம் இல்லையெனில் பாவத்திலிருந்து சுதந்திரம் கிட்டுவது சாத்தியமாகாது. நாம் கர்த்தரைச் சந்தித்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றால் அதிகம் ஆசீர்வதிக்கப் பட்டோராவோம். வருந்தத்தக்க விதமாக இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலமாக கர்த்தரின் ஆசீவாதம் கிட்டுகிறது என்பதை அறியாத மக்கள் அநேகம்.
கர்த்தரின் ஆசீர்வாதம், அவரின் ஒரே பேரான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவால் நமக்களிக்கப்பட்ட அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பதிலாகக் கிடைக்கிறது. இயேசு நம்மை இவ்வுலகின் பாவங்களிலிருந்து இரட்சித்து நம்மைத் தம் கிருபையால் ஆசீர்வதிப்பவர். யாராலும் நம்முடையப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கவோ, நம் இருதயத்திலிருக்கும் குற்ற உணர்வை அழிக்கவோ முடியாது. யாரால் தன் சொந்த பாவங்களிலிருந்து தன்னைத்தானே இரட்சித்து நித்திய அழிவின் வேதனையிலிருந்தும் இரட்சித்துக் கொள்ள முடியும்?
கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதி மொழிகள் 16:25) மக்கள் தமக்காக மதங்களை ஏற்படுத்திக் கொண்டு, அழிவையும் மரணத்தையும் நோக்கித் தம்மைச் செலுத்துகிறார்கள். அநேக மதங்கள் நீதியைக் குறித்து பேசுவதாக பெருமைப் பாரட்டி மக்களை பாவங்களிலிருந்து இரட்சிக்க தம் சுய வழிகளைக் காட்டுகின்றனர். ஆனால் கர்த்தர் நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மட்டுமே நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கமுடியும். இயேசுவே இரட்சகர். அவரால் மட்டுமே பாவிகளைப் பாவங்களிலிருந்து இரட்சிக்க முடியும்.
யோவான் 14:6 இல் நம் கர்த்தர் கூறுகின்றார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.” மரண வழிகளில் சென்று கொண்டிருப்பவர்களுக்காக தன் சொந்த மாமிசத்தையும் இரத்தத்தையும் கொடுத்தார். அவர் தாமே சத்திய வாழ்வின் வழி என்றும் கூறுகிறார். கர்த்தர், இயேசுவின் அழகிய நற்செய்தியை ஒருவன் விசுவாசிக்கா விட்டால், அவன் பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்று கூறுகிறார்.
பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமானால், நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இயேசுவே நம் இரட்சகர் என்று விசுவாசிக்க வேண்டும்.
பழைய இஸ்ரவேலில் ஒரு முறை!
“உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதா தேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின் மேல் யுத்தம் பண்ண வந்தார்கள். அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற் போயிற்று” (ஏசாயா 7:1)
இஸ்ரவேல் ஒரே நாடாக இருந்தது. ஆயினும் இஸ்ரவேல் தெற்கு வடக்கு என்று இரண்டாகப் பிரிந்தது. கர்த்தரின் ஆலயம் தெற்கு யூதாவிலுள்ள எருசலேமில் இருந்தது. அதனை ரெகொபெயாம், சாலமோனின் மகன் அரசாண்டான். பின்பு சாலமோனின் வேலையாட்களில் ஒருவனான யெரொபெயாம், வடக்குப் பகுதியில் இன்னொரு நாட்டை உருவாக்கினான். ஆகவே, இஸ்ரவேல் இரண்டாகியது. அந்நேரமுதல் கர்த்தர் மீதிருந்த விசுவாசம் சிதிலமடையத் தொடங்கியது. அப்பொழுது சிதிலமடைந்த நம்பிக்கையே இப்போதுள்ள புரட்டு மதங்களின் மூலமாகும். யெரொபெயாம் இங்ஙனம் வேதப்புரட்டர்களின் மூலகர்த்தாவானான். அவனுடைய சிங்காசனத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் அவன் இருந்ததால் கர்த்தரின் சட்டங்களை அமல் படுத்தினான். இப்படியாக அவன் வேதப்புரட்டர்களின் தந்தையானான். அவன் தன்னுடைய இஸ்ரவேல் மக்களுக்காக வித்தியாசமான மதம் ஒன்றை வடக்கு இராஜ்யத்தில் உருவாக்கினான். அவன் தெற்கு இராஜ்யமான யூதேயாவைக் கைப்பற்றவும் முயன்றான். 200 வருடங்களானாலும் கூட இரண்டு இராஜ்யங்களுக்கும் இருந்த பகைமை மாறவில்லை.
ஆகவே, கர்த்தர் ஏசாயாவின் மூலம் பேசினார், “நாம் யூதாவுக்கு விரோதமாய்ப் போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக் கொண்டு, அதற்கு தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்; நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப் பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக் கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவள வேண்டாம். கர்த்தராகிய ஆண்டவர். அந்த ஆலோசனை நிலை நிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை; சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொருங்குண்டு போம். எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்” (ஏசாயா 7:5-9).
அரசனாகிய ஆகாஸிற்கு அவ்வேலையில் கர்த்தர் ஏசாயாவின் மூலம் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆனால் ஆகாஸிற்கு அவரின் மேல் விசுவாசம் இருக்கவில்லை. சிரியாவின் படைக்குமுன்னால் தன்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று ஆகாஸ் கவலைப் பட்டான். இப்போது சிரியாவும் இஸ்ரவேலும் அணிவகுத்து தன் மீது படையெடுக்கிறார்கள் எனக் கேட்டபோது, இன்னும் நடுங்கினான். ஆனால் கர்த்தரின் ஊழியனான ஏசாயா, அவனிடத்தில் வந்து கூறினான் “இன்னும் அறுபத்தைந்து வருடத்தில், வடக்கு இஸ்ரவேல் நொறுங்கிபோகும், இரண்டு அரசர்களும் தீட்டிய தீய சதி எப்போதும் உண்மையாகாது.”
கர்த்தருடைய ஊழியன் ஆகாஸ் ராஜாவிடம், கர்த்தரிடமிருந்து அடையாளத்தைத் தேடும்படி கூறினான். “ நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக் கொள் என்றுச் சொன்னார்” (ஏசாயா 7:11). “அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று ஏன் தேவனையும் விசனப் படுத்தப் பார்க்கிறீர்களோ? அதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.” இது அவருடைய தீர்க்க தரிசனமாக இருந்தது; அது அவர் தம் மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பார் என்பதாகும்.
கர்த்தரின் பகைவன் யார்?
மனிதகுலத்தின் எதிரி பாவமாகும். பாவத்தின் மூலகர்த்தா சாத்தான். நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிப்பவர் யார்? தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தவிர இரட்சகராக யார் இருக்க முடியும்? மனிதனின் சரீரம் அடிப்படையில் பலவீனமாக இருப்பதால் அவனால் பாவம் செய்யாமல் இருக்க முடியாது. அவன் சாத்தானின் சக்திக்கு கீழிருக்கிறான். இன்னமும் மிக அதிகமான மக்கள் குறிசொல்பவர்களிடம் சென்று, இக்கள்ளத் தீர்க்கதரிசிகள் கூறுவதுபோல் மிகச் சரியாக வாழ்கின்றனர். இது அவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறவர்கள் என்பதற்கு நேரடி அத்தாட்சியாகும்.
கர்த்தர் ஏசாயாவிற்கு இரட்சிப்பின் அத்தாட்சியைக் கொடுத்தார். அவர் கூறினார் ஒரு கன்னி கர்பவதியாகி குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாயாக. இயேசுவை பாவ சரீரத்திற்கு ஒப்பாய் உலகத்திற்கு அனுப்பி சாத்தானின் கட்டுப்பாட்டிலிருந்து அவர் பாவிகளை இரட்சிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாக இருந்தது. இந்த தீர்க்கதரிசனத்தின்படி, கன்னி மரியாளுக்கு மனிதனாக பிறந்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.
இயேசுவானவர் நம்மிடம் வந்திருக்க வில்லையெனில், நாம் இன்னும் சாத்தானின் அரசாட்சிக்கு உட்பட்டிருந்திருப்போம். ஆயினும், இயேசு இவ்வுலகிற்கு வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்று, எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் அழகிய நற்செய்தியைக் கொடுக்கும் வகையில் சிலுவையில் மரித்தார். ஆகவே, அநேக மக்கள் இந்த அழகிய நற்செய்தியை விசுவாசித்து, பாவ மன்னிப்பு பெற்று கர்த்தரின் பிள்ளைகளானார்கள்.
இன்றும் கூட, அநேக இறையியலாளர்கள் இயேசுகிறிஸ்து கர்த்தரா அல்லது மனிதனா என்று வாதிடுகிறார்கள். பழமை இறையியலாளார்கள் “இயேசு கர்த்தரே” என்கிறார்கள். ஆனால் புதிய இறையியலாளர்கள் இயேசு யோசேப்பின் கள்ளப்புத்திரன் என்று எதிர்த்து வாதாடுகிறார்கள். இது எத்தனை புலம்பலுக்குரிய வார்த்தை.
சில புதிய இறையியலாளர்கள் இயேசுவிற்கு நீரின்மேல் நடக்கும் திறம் இருந்தது என்பதை தம்மால் நம்ப முடியாது என்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள், “இயேசு தொடுவானத்தில் தாழ இருந்த மலைகளில் நடந்தார், அவரின் சீடர்கள், அவரை வெகு தொலைவிலிருந்து பார்த்து, அவர் நீரின் மேல் நடக்கிறார் என்று நினைத்தனர்.” இந்நாளின் இறையியல் மேதைகள் புதிய இறையியல் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள், இவர்கள் இறையியலில் பெரிய மனிதர்கள் இல்லை. அவர்கள் வேதாகமத்தில் எதைப் புரிந்து கொள்ளமுடியுமோ அதை மட்டும் விசுவாசிப்பதற்கு தெரிந்து கொள்கிறார்கள்.
வேறு ஒரு உதாரணம் கூற வேண்டுமானால், இயேசு இரண்டு மீன்களாலும் ஐந்து அப்பத்தாலும் 5000 மக்களை போஷித்ததாக கூறுகிறது. ஆனால் அவர்கள் இந்த அதிசயத்தைக் குறித்து சந்தேகமுடையவர்களாயுள்ளனர். அவர்கள் கீழ்க்கண்ட வாக்கியங்கள் மூலம் அதனை விளக்குகிறார்கள். “மக்கள் இயேசுவைப் பின்பற்றி பட்டினியால் செத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, இயேசு தம் சீடர்களிடம் மீதியிருக்கும் எல்லா உணவையும் சேகரிக்கும்படி கூறினார், அப்பொழுது ஒரு சிறுவன் தன் உணவை அவனாகவே முன் வந்து அவரிடன் கொடுத்தான். மேலும் மற்றவர்கள் எல்லாம் தம் உணவைத் தொட்டு உணவை எடுத்துச் சென்றனர். அவர்கள் சாப்பாட்டை எல்லாம் சேகரித்து உண்டதால், பன்னிரண்டு கூடை சாப்பாடு மிச்சமாயிற்று.” இத்தகைய இறையியலாளர்கள் தம்முடைய குறுகிய புத்திக்குள் கர்த்தரின் வார்த்தைகளை அடக்க முயல்கிறார்கள்.
கர்த்தர் அளித்த சத்தியத்தை விசுவாசிப்பது வெறுமனே கர்த்தர் கொடுத்த அழகிய நற்செய்தியின் மீது நம்பிக்கைக் கொள்வதே. ஒரு காரியத்தை புரிந்துகொள்ள முடிவதால், அதனை நம்புவோம் என்பது விசுவாசம் என்று பொருள்படாது. ஆனால் அது ஒரு காரியத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் விசுவாசிப்பதாகும். நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதோ இல்லையோ, நாம் அவரை நம்பி எழுதியுள்ளபடி அவரின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இயேசு மனித குமாரனாக வந்தார் என்பது, நம்முடையப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க அவர் அனுப்பப்பட்டார் என்று பொருள்படும். கர்த்தராகிய இயேசு, நம்மை இரட்சிக்கும்படியாக இவ்வுலகிற்கு வந்தார். அவர் மனுபுத்திரனாகவும், கன்னிகைக்கு பிறந்தவருமாயிருப்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் கூறினான்.
ஆதியாகமம் 3:15 இல் கர்த்தர் சர்ப்பத்திடம் கூறுகிறார். “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” இதன் பொருள், கர்த்தர் இயேசுவை அனுப்ப, மனித ரூபத்தில் அவரை அனுப்ப, மனித குலத்தை அவர்கள் பாவங்களிலிருந்து மீட்கும் இரட்சகராக அனுப்ப திட்டமிட்டார்.
வேதாகமத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப் பிரமாணம்” (1 கொரிந்தியர் 15:55-56). மரணத்தின் கூர் பாவம். ஒரு மனிதன் பாவம் செய்யும்போது, மரணம் அவனைத் தன் அடிமையாக்குகிறது. கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஸ்திரீயின் வித்தானவர் உன் தலையை நசுக்குவார்” இதன் பொருள் யாதெனில் சாத்தான் கொண்டுவந்த பாவம் என்ற கூரை இயேசு அழித்துப் போடுவார் என்பதாகும்.
இயேசு இவ்வுலகிற்கு வந்து, உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்க்கும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று அதற்குத் தீர்ப்பாக சிலுவையிலறையப் பட்டார். அழகிய நற்செய்தியை விசுவாசித்தவர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தார். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, சாத்தானின் வல்லமையிலிருந்து மக்களை இரட்சிப்பதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். இன்றைய நவீன உலகத்தில், கர்த்தரின் எதிரிகள் இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்காதவர்களே.
இயேசு ஏன் இவ்வுலகில் பிறந்தார்?
நம்முடையப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் பொருட்டு கர்த்தர் நியாயப்பிரமாணத்தையும் அழகிய நற்செய்தியையும் தந்தார். அதுபோலவே, மக்கள் தம் பாவங்களை அறிந்துகொள்ளும் பொருட்டு நியாயப் பிரமாணத்தைக் கொடுத்தார். மக்கள் பாவங்களுக்கும் நியாயப்பிரமாணத்திற்கும் அடிமைகளான போது, நியாயப்பிரமாணத்தின் நீதியின் தேவையை நிறைவேற்றும்படி நம் கர்த்தர் இவ்வுலகினுள் வந்தார்.
இயேசு நியாயப் பிரமாணத்தின்படி பிறந்தார். அவர் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் பிறந்தார். மக்கள் நியாயப்பிரமாணத்தை அறிந்து கொள்ளவேண்டியதன் காரணம் என்னவெனில் அவற்றிற்கான பாவமன்னிப்பை பெறுவதற்கேயாகும். தம் உடையில் அழுக்கிருக்கிறது என்று அறியும்போதே மக்கள் அவற்றைச் சுத்தம் செய்கிறார்கள். அதுபோலவே, பாவங்களை அறிந்து கொள்ளும் விதமாக, மக்கள் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தை அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. அங்கே நியாயப்பிரமாணம் இல்லையென்றால், பாவத்தைப் பற்றிய எந்த உணர்வும் இராது, மேலும் இயேசு இவ்வுலகிற்கு வரவேண்டிய அவசியமும் இருந்திராது.
கர்த்தரின் நியாயப்பிரமாணத்தை அறிந்திருந்தீர்களானால், உங்களுக்கு அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நமக்கு நியாயப்பிரமாணம் தெரிந்திருப்பதால் நம்முடையப் பாவங்களைக் குறித்து நம்மால் அறிய முடிகிறது. நம்முடையப் பாவங்களை நாம் அறிந்த பிறகே இயேசுவானவர் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கும்படியாக அதனை எடுத்து வந்தார். கர்த்தர் நமக்கு நியாயப்பிரமாணத்தை அளித்திருக்கவில்லை என்றால், நாம் பாவிகளாக இருந்திருக்க மாட்டோம், ஆகவே, நியாயத்தீர்ப்பு தேவைப்பட்ட்டிருக்காது. ஆகவே கர்த்தர் நமக்கு நியாயப்பிரமாணத்தைத் தந்து எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும்படியாக அழகிய நற்செய்தியைப் பரிசளித்தார்.
நியாயப்பிரமாணமானது படைத்தவரிற்கும் படைக்கப் பட்டவைகளுக்குமிடையே இருக்கும் இரட்சிப்பிற்கான நியாயப்பிரமாணமாகும். இதுவே அன்பின் சட்டமாகும். கர்த்தர் மனிதனிடம் கூறினார், “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (ஆதியாகமம் 2:17). இதுவே கர்த்தரிட்ட சட்டமாக இருந்தது. இந்த சட்டம் கர்த்தரின் அன்பின் அடிப்படையில் அமைந்து நம் பாவங்களிலிருந்து கர்த்தர் நம்மை மீட்கும் நியாயப்பிரமாணமுமானது. இரட்சிப்பின் சட்டம் பாவ மன்னிப்பு எனும் அஸ்திவாரத்தின் மீது அமைந்தது. கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். அவர் நம்மைப் படைத்தவர் எல்லாப் படைப்புகளும் அவர் சித்தப்படி உருவாயின. இதன் பொருள் என்னவெனில் கர்த்தர் நித்தியமானவர் எனவே மக்கள் இரட்சிப்பின் நியாயப்பிரமாணத்தை விசுவாசிக்க வேண்டும். அது அழகிய நற்செய்தியினால் நிறைவேறியது.
நித்திய தேவன் மிகவும் நல்லவராக இருக்கிறார். கர்த்தரின் அன்பானது தனது ஒரே பேறான புத்திரனையே பலியாகக் கொடுக்கச் செய்தது. குமாரன் பாவிகளனைவரின் இரட்சகரானார். கர்த்தர் நம்மைப் படைத்து நம்முடையப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும்படி அழகிய நற்செய்தியைக் கொடுத்திராவிட்டால் அவருக்கெதிராக குறைச் சொல்லத் தொடங்கியிருப்போம். கர்த்தர் நம்மை அழிவிலிருந்து காக்க விரும்புவதால் இரட்சிப்பின் சட்டத்தை ஏற்படுத்தினார். நியாயப்பிரமாணத்தின் மூலம் நம் பாவங்களை நம்மால் உணரமுடிகிறது. நேரடியாக அவற்றைப் பார்க்க முடிகிறது, இயேசுவின் அழகிய நற்செய்தியை விசுவாசிக்க முடிகிறது. கர்த்தருடைய வார்த்தைகளை நாம் குழப்பம் செய்யும்போது, சட்டத்திற்கு முன் பாவிகளாக அறிவிக்கப்படுகிறோம். அதன் பிறகு, அவரின் பாவ மன்னிப்பு கிருபையை வேண்டி கர்த்தர் முன் கெஞ்ச முழங்கால் படியிடுகிறோம்.
இயேசு ஒரு ஸ்திரீக்கு பிறந்து மக்களை அவர்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கும் பொருட்டு உலகிற்கு வந்தார். கர்த்தரின் திட்டத்தை நமக்காக நிறைவேற்ற இயேசு இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார். அவருடைய அழகிய நற்செய்தியை விசுவாசிக்கிறோம். ஆகவே, கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.
சிலர் குறை சொல்லுகிறார்கள் “நான் பாவத்தில் விழுந்து என்னுடைய தவறுகளினால் துன்பப்படும்படி என்னை ஏன் பலவீனனாகப் படைத்தார்?” கர்த்தர் நாம் துன்பப்படுவதை விரும்பவில்லை. நாம் இயேசுவின் நற்செய்தி மீது சந்தேகமுள்ளவர்களாயிருப்பதால் கர்த்தர் நம்மீது துன்பத்தை அனுமதிக்கிறார். கர்த்தர் நமக்குத் துன்பத்தையும் அழகிய நற்செய்தியையும் சேர்த்துக் கொடுத்துள்ளார். ஆகவே அவருடையப் பிள்ளைகளாக அவரைப் போன்றே வல்லமையுடையவர்களாக நாமிருப்போம். இது அவருடையத் திட்டமாகும்.
ஆனால் பிசாசுகள் கூறுகின்றன, “இல்லை! இல்லை! கர்த்தர் ஒரு சர்வாதிகாரி! நீ நினைப்பது போல் வாழ். சுதந்திரமாயிரு! உன்னுடைய முயற்சிகளின் மூலம் செல்வம் திரட்டு!” கர்த்தர் மீதுள்ள மனிதகுலத்தின் நம்பிக்கையைத் தடுக்க பிசாசானவன் முயல்கிறான். கர்த்தரிடமிருந்து தூரமாக வாழ்வதைத் தெரிந்து கொண்டவர்கள், அவர் இரட்சிப்புத் திட்டத்தின் தடையாவர். இயேசு இவ்வுலகிற்கு வந்து சாத்தானுடைய வல்லமையின் கீழிருப்பவர்களை அவர்களின் பாவங்களை விடும்படி அழைக்கிறார். நாம் கர்த்தரிடமிருந்து தொலைவில் வாழக் கூடாது.
மனிதன் நரகத்திற்கு செல்லவேண்டிய பிறவிப்பாவி
இவ்வுலகில் மாறாது நிலைத்திருக்கும் உண்மை எதுவுமில்லை. ஆனால் இயேசுவின் அழகிய நற்செய்தியானது மாறாத ஒன்று. ஆகவே, மக்கள் அந்த உண்மையின் மீது சார்ந்திருந்து சாத்தானின் வல்லமைகளிலிருந்து விடுதலைப் பெறமுடியும். மனிதகுலம் ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தைச் சுவீகரித்துள்ளது. மேலும் கிறிஸ்துவின் தலையீடு இல்லாவிட்டால் அவர்கள் நரகத்தின் நெருப்பில் அழிந்துப் போவார்கள். அதற்குமாறாக, அவர் பலியாகியதன் மூலம் கர்த்தரின் பிள்ளைகளாகும்படி மனிதன் வல்லமைப் பெற்றான். அதற்காக நன்றிகள். “இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்தது போல அது இருண்டிருப்பதில்லை” (ஏசாயா 9:1). கர்த்தர் தம் குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார், மேலும் அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரை மகிமைப் படுத்துகிறார்.
“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசாயா 9:2). இன்று, இந்த வார்த்தைகள் உனக்கும் எனக்கும் சத்தியமாக வருகின்றன. அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் இவ்வுலகில் பெறமுடியாத நித்திய ஜீவனைப் பெறும் படியான ஆசீர்வாதம் பெறுவோம். இயேசுகிறிஸ்து மனிதகுலத்தை உலகின் பாவங்களிலிருந்து இரட்சித்து, இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரிற்கு, நித்திய ஜீவனையும் பரலோக ராஜ்ஜியத்தையும் அளித்தார்.
நம்பிக்கை இழந்தவர்கள் மீது நற்செய்தியாகிய வெளிச்சத்தை அவர் பிரகாசிக்கச் செய்தார்
மனிதன், ஒரு தவளையைப் போல் சிறிதுகாலம் இவ்வுலகில் இருந்து சீக்கிரமாக மறைகிறான். அவனுடைய வாழ்வு செடிகளையும் புல்லையும் போலிருக்கிறது. புல் தன் வாழ்வுக் காலத்தை வருடத்தின் சில வருடங்கள் மட்டும் வைத்திருந்து கர்த்தரின் கட்டளைப்படி மறைந்து போகிறது. புல்லின் வாழ்க்கையைப் போல் நம் வாழ்வு மாயையானது. ஆனால் கர்த்தர் இந்த அழகிய நற்செய்தியை நம் சோர்ந்து போன ஆவிக்கு அளித்து நம்முடைய நீதியின் நிமித்தம் நம்மை அவரின் பிள்ளைகளாக்கினார். இது எத்தகைய அதிசயமான கிருபை. நம்முடைய மாய வாழ்வு நித்திய வாழ்வானது, அதற்காக கர்த்தருக்கு நன்றிகள். நாமும் அவரின் பிள்ளைகளாகும் உரிமையை ஆசீர்வாதமாகப் பெற்றோம்.
இங்கு அழகிய நற்செய்தியை விசுவாசித்ததன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு ஆத்துமாவின் அறிக்கையை காணலாம்.
“கர்த்தரை விசுவாசிக்காத ஒரு குடும்பத்தில் நான் பிறந்தேன். ஆகவே எனது தாயார் தன் முன் சிறிது நீரை வைத்துக்கொண்டு வானம் மற்றும் பூமியிலுள்ள தெய்வங்களை என் குடும்பத்தின் வளமைக்காக பூஜிப்பது எத்தனை அழகானது என்ற சிந்தனையுடன் வளர்ந்தேன். நான் வளர்ந்து வரும்போது என்னுடைய பெருமானம் எனக்குத் தெரியாது. நான் ஜீவிப்பதன் காரணமும் எனக்குத் தெரியவில்லை. இது நான் வாழ்வதும் சாவதும் ஒரு பொருட்டல்ல என்று நான் சிந்திக்கும்படிச் செய்தது. என்னுடைய பெருமதி எனக்குத் தெரியாததால், நான் தனிமையில் வாழ்ந்தேன்.
இத்தகைய வாழ்வு என்னைச் சோர்ந்து போகச் செய்ததால், திருமணம் செய்துக் கொள்ள அவசரப்பட்டேன். என்னுடைய மனைவி மிகவும் நல்லவள். நான் எதற்கும் ஆசைப்படாததால் அமைதியான, இனிமையான வாழ்வு வாழ்ந்தேன். எனக்கு ஒரு குழந்தைப் பிறந்தது. அந்த நேரமுதல் என்னுள் பாசம் உருவானதைக் கண்டேன். என்னுடைய சொந்த ஆசைகளைத் தொலைக்கத் தொடங்கிய அதே நேரம் என்னை நெருங்கியவர்களின் மறைவு பயத்தை உருவாக்கியது.
ஆகவே, நான் கர்த்தரைத் தேடத் தொடங்கினேன். நான் உடைந்து போவதும் பலவீனனுமாக இருந்தேன். ஆகவே, நான் நேசிப்பவர்களைப் பாதுகாக்கும், நித்தியமான ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. ஆகவே, நான் ஆலயம் செல்லத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய விசுவாசம் நீர்க்குவளையின் முன் நின்று ஜெபிக்கும் என் தாயுடையதிலிருந்து வித்தியாசமாக இருந்தது - என்னுடைய ஜெபம் என்னுடைய தெளிவில்லாத பலத்தினாலும் எதிர்ப்பார்புகளினாலும் அமைந்திருந்தது.
ஒருமுறை அருகிலிருந்த ஆலயத்தில் நடந்த சிறிய கூட்டம் ஒன்றிற்குச் சென்றேன், நான் அங்கு ஜெபித்தபோது எனது கண்களிலிருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது. நான் வெட்கமடைந்து அழுவதை நிறுத்த முயன்றேன். ஆனால் கண்ணீர் தொடர்ந்து வடிந்தது. என்னை சுற்றியிருந்த மக்கள் என் தலை மீது கை வைத்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்காக வாழ்த்து கூறினார்கள். நான் மிகுந்த கோபமுடையவனானேன். கர்த்தரின் வார்த்தைகளுடன் பரிச்சயம் ஏதுமில்லாதவனாகவும், அவரின் மீது வைத்திருந்த நம்பிக்கை தெளிவில்லாததாகவும் இருந்ததால், இச்சக்தி பரிசுத்த ஆவியானவர் அளித்தது என்பதில் எனக்கு எந்த உறுதியும் இருக்கவில்லை.
நான் சென்று கொண்டிருந்த ஆலயம் பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கத்துடன் சம்பந்தப்பட்டது. எனக்கு கிடைத்த அனுபவத்தை பலரும் பெற்றார்கள். அநேகமாக எல்லோரும் பல பாஷைகளில் பேசினார்கள். ஒரு நாள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவர் என்று மக்கள் கூறிய போதகர் நடத்திய எழுப்புதல் கூட்டமொன்றிற்கு அழைக்கப்பட்டேன். அப்போதகர் அநேக மக்களை ஆலயத்தில் கூட்டி யாரோ ஒருவரின் சைனஸிடிஸ் வியாதியை குணமாக்கப் போவதாகவும், அதற்கான வல்லமை தன்னிடமிருப்பதாகவும் கூறினார். ஆயினும், சைனஸிடிஸ் வியாதி மருத்துவமனையில் இலகுவாக சுகமாக்கக் கூடிய ஒன்று என நினைத்தேன். அவர் எப்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார் என்பதை அறிவதில் அதிக ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அப்போதகர் சுகமாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார் போன்றிருந்த நிலையில், அவரால் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன், அவன் அல்லது அவளின் பல்கலைக் கழகத் தேர்வில் வெற்றி பெறுவானா இல்லையா என்று தம்மால் கூற முடியுமென்று பெருமைப் பாராட்டத் தொடங்கினார். நிறைய மக்கள் அவை கர்த்தரின் சக்திபோல் எண்ணி அவரைப் புகழத் தொடங்கினர்.
என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போதகரிடமிருந்த வல்லமை, பரிசுத்த ஆவியானவருடன் எந்த சம்பந்தமில்லாதது என்பது குறித்து என்னால் எதுவும் கூற இயலவில்லை. அவரால் சைனஸிடிஸ் வியாதியைச் சுகமாக்க முடியுமா, அல்லது ஒருவரின் சோதனையின் வெற்றியை முன்னறிவிக்க முடியுமா என்பது முக்கியமானதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே, அவர் செய்த அற்புதங்கள் போன்றவற்றை பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் என்று என்னால் ஏற்க முடியவில்லை.
என் மனதிலிருந்த கர்த்தரின் வல்லமையும் அன்பும் நான் பார்த்தவற்றிலிருந்து வேறுபட்டவை. அந்தக் காரணத்தினால், அந்த ஆலயத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டு அந்த போதகரின் வல்லமையை விசுவாசிக்கும் மக்களையும் தவிர்த்தேன். அதன் பிறகு, சிறிது அமைதியான ஆலயத்திற்குச் செல்லத் தொடங்கினேன், அதனைத் தெரிந்தெடுத்தமைக்கான காரணம் இந்த ஆலயம் அதிகம் வேதவாக்கினைப் பற்றியிருப்பதாக நினைத்ததே. நான் நியாயப் பிரமாணத்தைப் படித்ததால் அதன் மூலம் நான் நீதிமனல்ல என்று கண்டேன். கர்த்தர் நான் பயப்படும் பொருளானார், மேலும் அவர் சந்நிதியில் எனக்கு எந்த மரியாதையும் இல்லையென்பதையும் அறிந்து அதனால் பரிசுத்த ஆவியானவர் என்னைத் தவிர்க்கிறார் என்பது போலும் தோன்றியது.
ஏசாயா 59:1-2 இல் எழுதப்பட்டுள்ளது. “இதோ இரட்சிக்கக் கூடாதபடிக்கு கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை; கேட்க கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.” இது என்னுடைய நிலைக்குப் பொருந்துவதாகத் தோன்றியது. நான் அவரின் பிள்ளையாவதும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதும் இயலாத காரியமாகியது. ஏனெனில் நான் செய்த அல்லது நினைத்த காரியங்களெல்லாம் பாவமிகுந்தவை.
நான் கர்த்தருக்கு பயந்து, தொடர்ந்து மனம் வருந்தி ஜெபித்தேன். யாரும் அப்படிச் செய்யும்படி என்னிடம் கூறவில்லை. ஆனால் கர்த்தரின் சந்நிதியில் மரியாதை மிக்கவனாக நிற்கும்படி அப்படிச் செய்தேன். நான் பாவம் நிறைந்தவனாக இருந்தபடியால், நான் இன்னும் சிரத்தையுடன் மனம் வருந்தி ஜெபிக்கத் தொடங்கினேன். ஆனால் இந்த ஜெபங்கள் என் பாவங்களைக் கழுவத் தவறின. அவருக்கு நான் காண்பித்ததெல்லாம் என்னுடைய நினைவுகளையும் சிரத்தையையுமே, ஆனாலும் என்னிடம் பாவங்கள் அப்படியே இருந்தன. அந்நேரமுதல் கர்த்தருக்கெதிராக குற்றஞ் சொல்லத் தொடங்கினேன். அவருடைய கண்களுக்கு முன்பாக சிறந்தவனாக இருக்க விரும்பினேன். ஆனால் நேரடியாக அந்த சிறப்பைப் பெறமுடியவில்லை. ஆகவே, எனது குற்றஞ்சொல்வதும் பாவங்களும் குவியத் தொடங்கின.
இந்த மதக் குழப்பத்திற்குள் நான் இருந்த சமயம், என் தந்தைக்கு ஸ்ட்ரோக் வந்தது. அவர் இறப்பதற்கு முன் 40 நாட்கள் ஆபரேஷன் அறையிலும் மருத்துவமனைப் படுக்கையி;லும் துன்பப்பட்டார். ஆனால் ஒரு முறை கூட என் தந்தைக்காக ஜெபிக்க முடியவில்லை. நானொரு பாவி, ஆகவே, நான் நினைத்தேன், நான் என் தந்தைக்காக ஜெபித்தால் அது அவரின் வேதனையைத் தான் அதிகமாக்கும். என்னுடைய குறைந்த விசுவாசத்தை எண்ணி விசனப்பட்டேன். கர்த்தரைப் பின்பற்ற விரும்பினேன். ஆயினும், அது முடியவில்லை. ஆகவே, நான் தொடர்ந்து குறை கூறி கடைசியாக அவரிலிருந்து முற்றிலும் விலகினேன். என்னுடைய மதவாழ்க்கை இப்படியாக முடிந்தது. அவரை விசுவாசித்தால், அவருடைய ஆவியானவர் என்னில் சஞ்சரிப்பார், நானும் சமாதானமடைவேன் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதன் பிறகு, என் வாழ்வு இன்னும் பொருளில்லாது போயிற்று. நான் பயத்திலும் துக்கத்திலும் வாழ்ந்தேன்.
ஆயினும் கர்த்தர் என்னைக் கைவிடவில்லை. கர்த்தரின் வார்த்தைகள் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்ட ஒரு விசுவாசியைச் சந்திக்கச் செய்தார். இந்த நபர் மூலமாக இயேசு, யோவானிடம் பெற்ற ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டு அதற்காக சிலுவையில் தீர்க்கப்பட்டார் என்று அறிந்தேன். ஆகவே, இவ்வுலகின் அனைத்துப் பாவங்களும், எனது பாவங்கள் உட்பட மன்னிக்கப்பட்டன. நான் இவற்றைக் கேட்டு புரிந்து கொண்டபோது, என்னுடையப் பாவங்களெல்லாம் சுத்திகரிக்கப்பட்டதைக் கண்டேன். கர்த்தர் என் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற உதவினார். எனக்கு பரிசுத்த ஆவியானவரை ஆசீர்வாதமாக அளித்தார். மேலும் ஒரு அமைதியான வாழ்வையும் அருளிச் செய்தார். அவர் அமைதியாக என்னை வழி நடத்தி, நன்மையையும் தீமையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்து இவ்வுலகின் இச்சைகளை மேற்கொள்ளும் வல்லமையையும் தந்தார். அவர் என் ஜெபங்களுக்கு பதிலளித்து நீதியானதும், பெறுமானமுள்ள வாழ்வை வாழவும் உதவினார். பரிசுத்த ஆவியானவரை எனக்களித்தமைக்காக உண்மையாகவே கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.”
நாமெல்லாரும் கர்த்தரின் கிருபையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களும் பரிசுத்த ஆவியைப் பெறக் கூடியவர்களுமாக இருக்கிறோம். அவர் அழகிய நற்செய்தியை நமக்குக் கொடுத்ததால் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். கர்த்தர் நீதிமான்களை இத்தகைய மகிழ்ச்சியை அருளிச் செய்தார். கர்த்தரின் இரட்சிப்பு, அன்பு மற்றும் கிருபை எத்தனை விலையேறப்பட்டவை என்பதை நாம் அறிவோம். அவற்றிற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பரலோக இராஜ்யத்தின் அழகிய நற்செய்தியின் மூலம் கர்த்தர் நமக்கு மகிழ்ச்சியை அளித்தார். இது பணத்தால் வாங்க முடியாத ஒன்றாகும். கர்த்தர் பரிசுத்த ஆவியானவரையும் அழகிய நற்செய்தியையும் நமக்கு அனுப்பியதன் காரணம் நாம் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் இருப்பதற்காகும். அழகிய நற்செய்தி நம் வாழ்வை ஆசீர்வாதம் உள்ளதாக்குகிறது. கர்த்தர் அழகிய நற்செய்தியை நமக்களித்து நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை அனுபவிப்பதால் ஆனந்தமடைகிறார்.
லூக்காவில் எழுதப்பட்டுள்ளபடி, மரியாள் கூறினாள், “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை... இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது என்றாள்” (லூக்கா 1:37-38) தேவதூதன் பேசிய கர்த்தரின் அழகிய வார்த்தைகளை மரியாள் விசுவாசித்த நொடியில், அவள் கர்ப்பவதியானாள். அது போல, அவர்களுடைய விசுவாசத்தின் மூலம், நீதிமான்கள் தம்மிருதயத்தில் அழகிய நற்செய்தியைக் கர்பந்தரிப்பார்கள்.
“மீதியானியரின் நாளில் நடந்தது போல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின் மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப் போட்டீர்” (ஏசாயா 9:14) நம் வாழ்வில் துன்பம், சுகவீனம் மற்றும் நசுக்கப்படுதல் சாத்தானால் வருபவை. அவனை வெல்லும்படியான சக்தி நம்மிடமில்லை. ஆனால் கர்த்தர் நம்மை நேசிப்பதால் அவர் சாத்தானுடன் போரிட்டு அவனை முறியடித்தார்.
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்” (ஏசாயா 9:6-7).
இயேசு பெற்றுத் தந்த அழகிய நற்செய்தியின் மூலம் அவரின் பிள்ளைகளாக நம்மை மகிமைப் படுத்துவதாக கர்த்தர் வாக்குத்தத்தம் அருளியுள்ளார். அவர் வாக்குத்தத்திற்கேற்ப சாத்தானை முறியடித்து அவனின் வல்லமைகளிலிருந்து நம்மை விடுவித்தார்.
கர்த்தர் தம் வாக்குத்தத்தத்தின்படி பூமிக்கும் தம் வல்லமையுடன் பாவத்தின் இருளை எடுத்துப் போடுவதற்காக வந்தார். ஆகவே, நாம் கர்த்தரை, அதிசயமானவர் என்றழைக்கிறோம். அவர் அநேக அற்புதமான காரியங்களை நமக்காகச் செய்துள்ளார். மனு புத்திரனாக இவ்வுலகிற்கு வரும் கர்த்தரின் தீர்மானம் மிகவும் அதிசயமானது. “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சீவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசாயா 1: 18).
கர்த்தர் நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சித்து நித்திய பாவ மன்னிப்பை வழங்குவதாக வாக்குத்தத்தம் செய்தார். இயேசுவானவர் அதிசயமானவர் என்று குறிப்பிடப்படுகிறார். அதற்கேற்றபடி அற்புதமான செய்கைகளை நமக்குச் செய்துள்ளார். “அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன்.” ஆலோசனைக் கர்த்தராகிய கர்த்தர், அழகிய நற்செய்தியின் மூலம் நம் இரட்சிப்பைத் திட்டமிட்டு நம் பாவங்களிலிருந்து நித்திய காலமாக இரட்சிக்கும் அவர் திட்டத்தை செயல்படுத்தினார்.
கர்த்தரின் முட்டாள்தனம் மனிதனின் புத்திசாலித் தனத்தை விடச் சிறந்தது. நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சிக்கும்படியாக இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதும் அதற்காக அவர் சிலுவையில் மரிப்பதும் கர்த்தரின் ஞானமாகும். இது அவர் நமக்காகச் செய்த அதிசயச் செயலாகும். அன்பின் நியாயப்பிரமாணமே நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தது. அன்பின் நியாயப்பிரமாணமே நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்தும் சத்தியத்தின் நற்செய்தியாகிய நீர் மற்றும் அவரின் இரத்தமாகும்.
ஏசாயா 53:10 இல் கர்த்தர் கூறுகிறார். “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட் படுத்தினார்” கர்த்தரின் சித்தத்தின்படிச் செய்யும் பொருட்டு இயேசு தம் ஆத்துமாவைப் பலியாக ஒப்புவித்தார். அவர் தன் மகனான, இயேசுகிறிஸ்துவின் மீது உலகின் பாவங்களையெல்லாம் சுமத்தி, அதற்கான தீர்ப்பினை அவர் பெறும் விதமாக சிலுவையின் பாடுகளை அனுபவிக்கச் செய்தார். இந்த அழகிய நற்செய்தியே ஒரே தரமாக மனித குலத்தைப் பாவங்களிலிருந்து இரட்சித்தது.
கர்த்தரின் பலியிடும் முறை
யோவான் இயேசுவுக்கு அளித்த ஞானஸ்நானம் மூலம் அவர் எத்தனைப் பாவங்களை ஏற்றுக்கொண்டார்?
தொடக்கத்திலிருந்து முடிவு வரையான , கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களையெல்லாம் எற்றுக்கொண்டார்.
வேதாகமம் தினப்பாவத்திற்காக செய்யவேண்டிய பலியைப் பற்றி கூறுகிறது. பாவியான ஒருவன் களங்கமில்லாத ஒரு மிருகத்தை கொண்டுவந்து அவன் பாவங்களை அதன் மீது சுமத்தும்படியாகத் தன் கைகளை அதின் தலைமீது வைக்கவேண்டும். அப்பலியை அவன் கொன்று அதன் இரத்தத்தை ஆசாரியரிடம் கொடுக்கவேண்டும். தலைமை ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து பலிபீடத்தைச் சுற்றியுள்ள கொம்புகளில் விட்டு மீதியை மேடையின் அருகேயுள்ள தரையில் கொட்டினான்.
இந்த வழியின் மூலம், அவனின் தினப்பாவங்கள் மன்னிக்கப்படலாம். கைவைப்பதே பாவியொருவன் தன் பாவங்களையெல்லாம் பலி மிருகத்தின் மீது சுமத்துவதற்கான வழியாகும். யாரெல்லாம் இப்பலி முறையின் படி பலி கொடுக்கிறார்களோ அவர்களால் தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறமுடிந்தது. இந்தப்பலி கொடுக்கும் முறையே, இயேசு எல்லாப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொள்ளும்வரை, நம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறும் வழியாக இருந்தது.
கர்த்தர் பாவமன்னிப்புத் தினத்தை ஏற்பாடு செய்தார். ஆகவே, இத்தினத்தில் இஸ்ரவேல் மக்கள் தாம் ஒரு வருடம் வரைச் செய்த பாவத்திலிருந்து விடுதலைப் பெறமுடிந்தது. ஏழாம் மாதம் பத்தாம் திகதியிலே இப்பலி ஏறெடுக்கப்பட்டது. போக்காட்டின் மீது எல்லா இஸ்ரவேலர்களின் ஒரு வருடப் பாவத்தையும் சுமத்த தலைமை ஆசாரியனான ஆரோனை கர்த்தர் நியமித்தார். கர்த்தரின் திட்டப்படி இச்சடங்கு நடைபெற்றது. கர்த்தரின் ஞானத்தின் மூலமும் மனிதர்களின் மீது அவர் வைத்த அன்பினாலும் இப்பாவ மன்னிப்பு வந்தது. இது அவரின் வல்லமையாகும்.
“தகனப் பலி பீடத்திலுள்ள கொம்புகள்” “ஜீவப்புத்தகத்தைக்” குறிப்பிடுகின்றன (வெளி 20:12), இப்புத்தகத்தில் மனிதகுலத்தின் பாவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சர்வாங்க தகன பீடத்தின் மீதுள்ள கொம்புகளில் பாவ பலியின் இரத்தத்தை ஆசாரியன் இடுவதற்கான காரணம் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள மீறுதல்களையும் அவர்கள் பெயர்களையும் அழிப்பதுவே. இரத்தம் மாமிசத்தின் ஜீவனாயிருக்கிறது. இஸ்ரவேலரின் பாவங்களை போக்காடு சுமந்து பாவத்திற்கு கிரயமாக அது கொல்லப்படுகின்றது. அவர்களுடைய பாவங்களுக்கு தீர்ப்பாக ஒரு பலி மிருகத்தைக் கொள்ளச் செய்தார். இது அவரின் நம்மீதுள்ள ஞானம் மற்றும் அன்பின் அடையாளமாகும்.
கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு ஒரு பாவ பலியாக இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் வந்தார். இயேசு தம்மைப் பலிகொடுத்ததன் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டார். இந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து வார்த்தைகளைப் பார்த்தோமானால், “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்.” அல்லது அவர் உலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார்.” என்றிருப்பதைக் காணலாம்.
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்” (ஏசாயா 9:6-7)
இயேசு கர்த்தரின் சித்தத்தின்படி உலகின் பாவங்களை எல்லாம் தன் மீது சுமந்து எல்லா விசுவாசிகளுக்கு சமாதானத்தை அருளிச் செய்வது ஆச்சர்யமானதும் அதிசயமானதுமான வாக்குத்தத்தமாகும். கர்த்தரின் வாக்குத்தத்தம் அன்பின் வாக்குத்தத்தமாகும். இதன் மூலம் உலக மக்களுக்கு சமாதானம் உண்டுபண்ண அவர் திட்டமிட்டார். இதுவே கர்த்தர் நமக்களித்த வாக்குத்தத்தம், இதையே அவர் செய்தார்.
மத்தேயு 1:18 கூறுகிறது, “ இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது, அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.” “இயேசு” என்பதன் பொருள், தம் மக்களின் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சிப்பவர் என்பதாகும். கிறிஸ்து என்பதன் பொருள் அபிஷேகிக்கப்பட்ட இராஜா, அரசன் ஆகும். இயேசுவிடம் பாவமிருக்கவில்லை. நம் அரசரும் இரட்சகருமான அவர் தம் மக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்க கன்னி மரியாளிடத்தில் பிறந்தார்.
“அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது” (மத்தேயு 1:21-22).
இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் ஏற்றார்
மத்தேயு 3:13-17 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான், இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”
இவ்வசனங்களில் யோவான் ஸ்நானனைக் காணலாம். இயேசுவானவர் யோவானால் ஏன் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். கர்த்தரின் திட்டப்படி பாவங்களை ஏற்றுக்கொள்ள, உலகின் எல்லாப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொள்ள இயேசுவானவர் ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்தது.
இங்கே “கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்,” (ஏசாயா 9:7) “கர்த்தத்துவம்” என்பதன் பொருள் இயேசுவானவர் பரலோகத்தின் அதிபதியும் உலகின் அரசருமாக இருப்பதால் அவரிடம் அதிகாரமும் வல்லமையும் இருக்கிறது. இந்த அதிகாரம் இயேசுவிற்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் பாவங்களை எடுத்துப் போடும்படியாக இயேசு அதிசயமான ஒரு காரியத்தைச் செய்தார். அந்த அதிசயமான ஒரு காரியம் என்னவென்றால் அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்று கூறியதன் பொருள் உலகின் பாவங்களை இப்படிச் சுமப்பது சரியானதும் பொருத்தமானதாகவும் இருக்கிறது என்பதாகும்.
ரோமர் 1:17 கூறுகிறது, “விசுவாசத்தினால் உண்டாகும் தேவ நீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” கர்த்தரின் நீதி நற்செய்தியால் வெளிப் படுத்தப் பட்டுள்ளது. உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி உண்மையாகவே கர்த்தரின் நீதியை வெளிப்படுத்துகிறாதா? ஆம்! உண்மையான நற்செய்தி யாதெனில் இயேசு இவ்வுலகின் பாவங்களையெல்லாம் தம் ஞானஸ்நானத்தினாலும் சிலுவை மரணத்தின் மூலமும் எடுத்துப்போட்டார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகிய அழகிய நற்செய்தியிலேயே கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டது. இயேசு இவ்வுலகின் பாவங்களை எப்படி எடுத்துப் போட்டார்? யோர்தான் நதியில் யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது அவர் உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டார்.
“எல்லா நீதியையும்” என்பது “டிகாய்சூன்” என்று கிரேக்க மொழியில் வழங்கப்படுகிறது. இதன் பொருள் யாதெனில் இயேசு மனிதகுலத்தின் பாவங்களையெல்லாம் மிகச் சரியானதும் அதிசயமானதுமான முறையில் எடுத்துப்போட்டார் என்பதே. இயேசு இவ்வுலகின் பாவங்களைத் துடைப்பதற்கு யோவானால் ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருந்தது.
மனித குலத்திற்கு அமைதியைக் கொண்டு வருவதற்கு இயேசுவின் ஞானஸ்நானம் மிகவும் அவசியமென்பது கர்த்தருக்குத் தெரியும். இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று அவரின் இரத்தத்தை சிலுவையில் சிந்தியிருக்கவில்லையென்றால் அவர் நமது இரட்சகராகியிருக்க முடியாது. உலகின் பாவங்களை எடுத்துக் கொள்ளும்படியாக இயேசு தம்மை பாவ பலியாகக் கொடுத்தார்.
ஏசாயா 53:6 இல் கர்த்தர் கூறுகிறார். “நாமெல்லாம் ஆடுகளைப் போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்.” கர்த்தரின் சித்தத்தை செய்யும்படியாக உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. இதற்காகவே இயேசு பாவ பலியாகும் விதத்தில் மனித சரீரத்தில் உலகத்திற்கு வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றவும் அவரின் ஜீவ அன்பைக் காண்பிக்கவும் இயேசு மனிதகுலத்தின் பாவங்களை ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்ப்பையும் பெற வேண்டியதிருந்தது. இயேசு ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து வெளியே வரும்போது கர்த்தர், “இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்றார்.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும்” (ஏசாயா 9:6). இயேசு தேவகுமாரன் ஆவார். இயேசுவே இந்த பிரபஞ்சத்தைப் படைத்த சிருஷ்டிக்கர்த்தா. அவர் வல்லமையுள்ள தேவனின் குமாரன் மட்டுமல்ல, அவர் படைப்பவரும் சமாதானத்தின் இராஜாவுமாக இருக்கிறார். இயேசுவே மனித குலத்திற்கு சந்தோஷத்தைக் கொடுத்த கர்த்தர்.
இயேசுவே சத்தியத்தின் தேவன். அவர் நம் பாவங்களை எடுத்துப் போட்டு, நம்மை இரட்சித்து நமக்கு சமாதானத்தையும் அருளினார். இவ்வுலகில் பாவங்கள் இருக்கின்றனவா? இல்லை, இங்கு பாவங்களில்லை. இயேசு தம்முடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மூலமாக இவ்வுலகின் பாவங்களையெல்லாம் கழுவிப் போட்டார் என்று கூறும் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதே, அங்கே பாவங்களில்லை என்று உறுதியுடன் நாம் சொல்வதன் காரணமாகும். இயேசு நம்மிடம் பொய் சொல்லவில்லை இயேசு பாவத்திற்கான கிரயத்தை தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தால் செலுத்தினார். இதனை விசுவாசிக்கும் யாவரும் அவரின் பிள்ளைகளாகும்படி அனுமதித்து நம்மனைவருக்கும் சமாதானத்தைக் கொடுத்தார். அவர் நம்மை தம் விசுவாசத்தின் பரிசுத்த பிள்ளைகளாக நித்தியமாக வாழச் செய்தார். நான் கர்த்தரைப் புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!
யோவான் 1:29 கூறுகிறது, “மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” யோவான் ஸ்நானன் மூலம் ஞானஸ்நானம் பெற்றதனால் உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்ட இயேசு, அந்த ஞானஸ்நானத்திற்கு மறுநாளிலே யோவான் முன் சென்றார். யோவான் இயேசுவைக் குறித்து “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் ஆட்டுக்குட்டி” என சாட்சி பகர்ந்தான். அவன் மீண்டும் யோவான் 1:35-36 இல் சாட்சி பகன்றான். “மறு நாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டு பேரும் நிற்கும் போது, இயேசு நடந்து போகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்!”
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்த மேசியாவான தேவ ஆட்டுக்குட்டியாக வந்தது இயேசுவே. மேசியாவான இயேசுகிறிஸ்து நமக்கு அதிசயமானவராக, ஆலோசனைக் கர்த்தாவாக, வல்லமையுள்ள தேவனாக நம்மிடம் வந்து நம்மை எல்லாப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார். யோவானின் ஞானஸ்நானம் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கு சம்பளம் கொடுத்து, சமாதானத்தின் இராஜாவாகி நமக்காக பாவக் கிரயத்தைக் கொடுத்து சமாதானத்தையும் அருளினார். “இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”
ஒரு காலத்தில் மக்கள் தம் பாவங்களினால் மரிப்பதைத் தவிர வேறு வாய்ப்புகள் இருந்ததில்லை. மக்கள் தம் பாவ சுபாவத்தினால் கணக்கில்லாத பாவங்களைப் புரிந்து நரகத்திற்குச் செல்வது முன் குறிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வாழ்க்கை துன்பமிக்கதாக இருந்தது; ஒருவர் கூட பரலோகம் செல்வதற்கோ, அதைக் குறித்து கனவு காண்பதற்கு கூட அவர்கள் பலவீனர்களாக இருப்பதனால், அது முடியாதிருந்தது. நம்முடைய தேவனகிய இயேசுகிறிஸ்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது அவர்கள் பாவங்களனைத்தையும் ஏற்றுக்கொண்டு, அதற்கு தீர்ப்பாக சிலுவையிலறையப்பட்டார். மரணத் தருவாயில் கிறிஸ்து கூறினார். “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) இயேசு மனிதகுலத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சித்தமைக்கு இக்கூக்குரல் அவரின் சாட்சியாகிறது, மேலும் யாரெல்லாம் அழகிய நற்செய்தியை விசுவாசித்தார்களோ அவர்களை முற்றிலும் விடுவித்தார்.
“இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” உலகின் பாவங்களெல்லாம் எங்கிருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அவைகள் இயேசுவின் சரீரத்தில் இல்லையா? நம்மை இவ்வுலகில் சிறுமைப் படுத்திய பாவங்களும் மீறுதல்களும் எங்கே? அவையெல்லாம் இயேசுகிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டது. நம்முடையப் பாவங்கள் எங்கே? கர்த்தத்துவம் தம் தோலின் மேலிருக்கும் அவரின் மாமிசத்தில் அவை இருக்கின்றன; வல்லமையுள்ள தேவனின் மாமிசத்தில் அவை இருக்கின்றன.
பிறப்பு முதல் இறப்பு வரையான எல்லாப் பாவங்களும்
நம் வாழ்நாள் முழுவதும் நாம் பாவம் செய்கிறோம். நாம் பிறந்த நாள் முதல் 20 வயதாகும் வரை பாவஞ்செய்கிறோம். இந்த 20 வருடங்களாக நாம் செய்தப் பாவங்கள் எங்கே போயின? அவை இயேசுகிறிஸ்துவின் மாமிசத்திற்குள் இருக்கின்றன. நாம் 21 முதல் 40 வயது வரைச் செய்த பாவங்களும் கூட இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டன. ஒரு மனிதன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தான் என்பது ஒரு பொருட்டல்ல. அவன் வாழ்நாள் தொடங்கி முடியும் வரை செய்த பாவங்கள் இயேசுகிறிஸ்து மீது சுமத்தப் பட்டது. மனித குலம் செய்த பாவங்கள், ஆதாமில் தொடங்கி, கடைசியாக உலகில் வாழப் போகும் மனிதன் வரைச் செய்த எல்லாப் பாவங்களும் இயேசுவிடம் சென்றுவிட்டன. நம்முடையப் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளினது பாவங்கள் கூட ஏற்கெனவே இயேசுவின் மீது சுமத்தப்பட்டன. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அனைத்துப் பாவங்களும் இயேசு மீது இடமாற்றம் செய்யப்பட்டது.
உலகில் இன்னும் பாவங்களிலிருக்கின்றனவா? இல்லை. ஒன்று கூட விடப்படவில்லை. இயேசுகிறிஸ்து அளித்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதால் ஒரு பாவம் கூட விடப்படவில்லை. உன்னிருதயத்தில் பாவமிருக்கிறதா? இல்லை. ஆமேன்! இயேசுகிறிஸ்து நம் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்னும் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கிறோம். இந்த அதிசயமான காரியத்தை செய்த நம் வல்லமையுள்ள இயேசுவைப் புகழ்வோமாக.
நாம் இழந்துபோன வாழ்வை அவர் மீட்டுத் தந்தார். நாம் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதால் நம்மால் கர்த்தருடன் வாழ முடிகிறது. கர்த்தரின் எதிரிகள் கூட இருண்ட காட்டில் ஒளிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லாத பாவிகள் கூட - அழகிய நற்செய்தியை இப்போது விசுவாசிப்பதன் மூலம் தன் பாவங்களிலிருந்து இரட்சிப்பைடைய முடியும்.
யோவானால் அவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையிலறையப்பட்டு உயிரோடெழும்பியதால், கர்த்தர் நம் பாவங்களையெல்லாம் சுத்தமாக கழுவி விட்டார் என்று அழகிய நற்செய்தி போதிக்கிறது. இயேசுவின் நற்செய்தியை நாம் விசுவாசிப்பதால் நாம் கர்த்தரின் பரிசுத்தமான பிள்ளைகளானோம். இயேசு தன் சொந்த சரீரத்தையே நம் பாவங்களுக்கான பலியாகக் கொடுத்தார். அவர், மகத்துவமுள்ள தேவனின் குமாரன், ஒரு பாவத்தையும் அவர் இவ்வுலகத்தில் ஒரு காலத்திலும் செய்திராவிட்டாலும் உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிப்போரை இரட்சிக்கிறார். ஏசாயா 53:5 கூறுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.”
இயேசு மூலப்பாவம் மற்றும் சொந்தப் பாவம் உட்பட எந்த ஒரு மீறுதல்களையும் விட்டுவிடாமல் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார். பாவத்திற்கான கிரயத்தை தம் சிலுவை மரணம் மூலம் அவர் கொடுத்ததன் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். இந்த அழகிய நற்செய்தியின் மூலம் இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் கழுவினார். நாம் புது வாழ்வை இயேசுவின் மூலம் கண்டோம். இந்த அழகிய நற்செய்தியை நம்புபவர்கள் இனிமேலும் ஆவி இறந்து போனவர்களல்ல. இயேசு நம் பாவத்திற்கான கிரயத்தைக் கொடுத்ததால் நம்மிடம் நித்திய ஜீவனிருக்கிறது. இயேசுவின் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதால் நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம்.
இயேசுகிறிஸ்து தேவகுமாரன் என்று நம்புகிறீர்களா? மேலும் அவர் உன் இரட்சகர் என்றும் நம்புகிறாயா? ஆம். இயேசு நம் வாழ்வு. அவரின் மூலம் நாம் புது வாழ்வைக் கண்டோம். நம்முடையப் பாவங்களினாலும் மீறுதல்களினிமித்தமும் நாம் மரிக்க வேண்டியவர்கள். ஆனால், இயேசு அதற்கான கூலியைத் தன் ஞானஸ்நானம் மூலமும் அவரின் சிலுவை மரணம் மூலமும் கொடுத்து விட்டார். அவர் நம்மை பாவ அடிமைத் தனத்தினின்றும், மரணத்தின் வல்லமையினின்றும், சாத்தானின் கட்டுகளிலிருந்தும் விடுவித்தார்.
நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்த தேவனே நம் கர்த்தர். இயேசுவை விசுவாசிக்கும் எல்லோருக்கும் அவர் இரட்சகரானார். எபிரேயர் 10:10-12, 14 மற்றும் 18 இல், கர்த்தர் நம்மைப் புனிதப் படுத்தியதையும், அதனால் பாவத்திற்கான கிரயத்தை மேலும் கொடுக்க வேண்டியதில்லை என்பதையும் காணலாம். இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நாம் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைகிறோம். நாம் நம்முடையப் பாவங்களுக்காகவும் மீறுதல்களுக்காகவும் இறக்க வேண்டியவர்கள். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை விசுவாசிப்பதால் பரலோகத்திற்குள் பிரவேசித்து நித்திய ஜீவனை அனுபவிக்க முடிகிறது.
“நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவான் 10:11). அவரின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் மூலம் நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டு நம் தேவன் இவ்வுலகிற்கு வந்தார். இந்த உண்மையை விசுவாசித்து பாவ விடுதலையைப் பெறறவர்கள் யாரோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வாசஞ்செய்தலையும் கொடுக்கிறார். நன்றி கர்த்தாவே. உம்முடைய நற்செய்தி அழகிய நற்செய்தியாகும். அதனால் விசுவாசிகளுக்குப் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தைக் கொடுக்க முடியும். அல்லேலூயா! நான் கர்த்தரை மகிமைப் படுத்துகிறேன்.