(யோவான் 7:37-38)
“பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று சத்தமிட்டு; ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன். வேத வாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.”
பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீரை யாரால் குடிக்க முடியும்?
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள்.
அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்களின் இருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் ஓடும். யோவான் 7:38 கூறுகிறது, “வேத வாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்” இதன் பொருள் என்னவென்றால், கர்த்தர் நமக்களித்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு உண்மையான இரட்சிப்பும் பாவ விடுதலையும் கிடைக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்தல் எப்போது நடக்கிறது? யோவான் அவருக்களித்த ஞானஸ்நானத்தின் மூலம் இயேசுகிறிஸ்து உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்தார் என்று கூறும் அழகிய நற்செய்தியை ஒருவன் கேட்டு விசுவாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ் செய்வதைப் பெற்றுக்கொள்ளமுடியும். அப்பொழுது ஒருவனால் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீரைப் பருக முடியும். அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரிடம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்கிறார். மேலும் அவர்கள் ஒவ்வொரு முறையும் பிரசங்கிக்கும் போதோ அல்லது கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்கும் போதோ, அவர்களுடைய காய்ந்துபோன இருதயத்தில் ஆவிக்குரிய ஜீவத்தண்ணீர் புதிதாக ஓடி அதனை ஈரப்படுத்துவதை உணரலாம்.
பாவிகளை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு கர்த்தர் இவ்வுலகிற்கு வந்தார் என்று கூறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் யாரோ அவர்கள் இருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியின் ஜீவத்தண்ணீர் ஔடுகிறது. பரிசுத்த ஆவியானவர் என்ற சத்தியத்தை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலிருந்து பிரிக்க முடியாது. மேலும் அவர் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிப்போர் மீது தங்கியிருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீரைப் பருக விரும்புவன் எவனோ அவன் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பாவ விடுதலையைக் கண்டிப்பாக பெறவேண்டும். கர்த்தரின் வார்த்தைகளை நம்புவோரின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஜீவ தண்ணீர் இருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் மக்களிடம் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் இருக்கிறது. அது நதியைப் போல் ஓடுகிறது, அவர்கள் இருதயத்தில் ஓடைகள் போல் இருக்கிறது. இந்த நொடியில் கூட, அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து அவர்கள் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்றோரின் இருதயங்களிலிருந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர், ஊற்றிலிருந்து வருவது போல கொப்புளித்து வருகிறது.
ஆயினும் அழகிய நற்செய்தியாகிய சத்தியத்தை விசுவாசியாதோரின் இருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் ஒரு சொட்டு கூட வெளியே ஓடாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து ஒப்புக்கொள்ளும் வரை ஆவிக்குரிய ஜீவத்தண்ணீரானது ஒரு சொட்டு கூட என் இருதயத்திலிருந்து வெளியே வரவில்லை. அச்சமயத்தில், இயேசுவை நான் தீவிரமாக விசுவாசித்திருந்த போதிலும், என் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் போனதால், எனக்கு பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீரைக் குறித்து எதுவுமே தெரிந்திருக்கவில்லை, ஆயினும் இப்பொழுது என்னிடம் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இருப்பதால், பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் என்னிருதயத்திலிருந்து ஓடுகின்றது.
கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்டு அதனை விசுவாசிப்போரின் இருதயங்களிலிருந்தும், எனது இருதயத்திலிருந்தும் இப்போது பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் ஓடுகின்றது. இயேசு “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” என்று கூறியது போல, அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் மறுபடியும் பிறந்தவர்களின் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. மற்றவர்கள் அதிலிருந்து குடிக்கும்படியாக, எனது இருதயத்திலிருந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியுடன் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீரும் சேர்ந்து, இந்நொடியில் கூட வெளியே ஓடுகிறது. கர்த்தர் என்னிருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியின் ஜீவத்தண்ணீரை நதியைப் போல் வெளியேறச் செய்தார். பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்யப் பெற்ற சிலர் மட்டுமே இதற்கு பரிட்சயம் உள்ளவர்கள்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்டுள்ளது போல், அதனைப் பெற்றவர்களேயன்றி வேறு யாருக்கும் அது குறித்து தெரியாது. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிப்போருக்கு மட்டுமே இரகசியமாகிய பரிசுத்த ஆவியானவரின் வாசஞ்செய்தல் மற்றும் ஜீவத்தண்ணீர் குறித்து தெரியும். ஆகவே, யாரிடம் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியவேண்டும். இயேசுவின் நற்செய்தியை விசுவாசிப்போருக்கு மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யும்படி கொடுக்கப்படுகிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான் இயேசுவின் இரத்தத்தை மட்டுமே நம்புபவனாக இருந்தேன்
நான் இயேசுவின் சிலுவை இரத்தத்தை பத்து வருடங்களுக்கும் மேலாக விசுவாசித்தபோதிலும், என்னிருதயத்தில் இன்னும் பாவமிருந்தது. அந்நேரத்தில், இயேசுவின் இரத்தத்தின் முலமே என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்ற விசுவாசமுடையவனாக இருந்தேன். ஆயினும், இத்தகைய விசுவாசத்தின் மூலம் பாவ விடுதலையும் கிட்டவில்லை. பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்வதையும் பெறவில்லை. என் வாழ்வில் குழப்பமும் வெறுமையுமே இருந்தது. நான் ஆலயம் சென்று கொண்டிருந்தது மட்டுமே நான் இயேசுவை விசுவாசிப்பதற்கான ஒரே அடையாளமாக இருந்தது.
அப்பொழுது தான் என் நம்பிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கினேன். “நான் உண்மையாகவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றேனா?” நான் முதல் முதலாக இயேசுவை விசுவாசித்தபோது, அவரின் மீது அதிக அன்பு கொண்டவனாக இருந்தேன். மேலும் பல பாஷை பேசும் வரம் கூட பெற்றிருந்தேன். பிறகு எனக்கு என்னவாயிற்று? அப்பொழுது தீயில் எரிவது போன்ற உணர்ச்சி பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசஞ்செய்வதற்கான அடையாளம் இல்லையென அறிந்து கொண்டேன். மேலும் நான் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளவே இல்லை என்றும் அறிந்துகொண்டேன். நான் இயேசுவை விசுவாசித்த போதிலும், பரிசுத்த ஆவியானவரும் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீரும் என் இருதயத்தில் இருக்கவில்லை.
4கல்வானிச தத்துவத்தின் அடிப்படையில் என் விசுவாசம் அமைந்திருந்தமையால், என்னிருதயம் அனலாக இருக்கிறதா குளிருடன் இருக்கிறதா என்பது முக்கியமில்லை. எனக்கு பதில் தெரிய வேண்டிய கேள்விகள் கீழ் வருமாறு.
4இது ஜான் கால்வினால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவத்தை விவரிக்கும் ஒரு முறையாகும். அது முன்குறித்தல் மற்றும் இரட்சிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அர்மீனிய நிலைக்கு பதிலளிக்கும் வகையில் ஐந்து கோட்பாடுகள் கால்வினிசத்தில் உருவாயின.
கால்வினிசம் போதிக்கின்றது 1. முழு பலவீனம்: அதாவது மனிதனின் அனைத்து அம்சங்களும்: உடம்பு, ஆத்துமா, மனம் மற்றும் உணர்ச்சிகள் பாவத்தினால் தொடப்பட்டவை. 2. தகுதியில்லாத சலுகை: அதாவது கர்த்தரின் சலுகை மனிதரிற்கு அவரின் தேர்வினால் கிடைக்கிறது. மேலும் இதற்கும் மனிதனிற்கு எந்த சம்பந்தமுமில்லை. இது மனிதனுடைய தகுதிக்கு முற்றிலும் பொருந்தாதது. 3. அளவான பாவ விடுதலை: உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களின் பாவங்களையும் இயேசு சுமக்கவில்லை, ஆனால் இரட்சிக்கும்படியாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பாவங்களை மட்டும் அவர் சுமந்தார். 4. தடையில்லாத கிருபை: கர்த்தர் இரட்சிப்புக் கொடுக்கும்படி அழைக்கப்பட்டவர்களை யாராலும் தடுக்க முடியாது. 5. பரிசுத்தவான்களின் தொடர் முயற்சி: ஒருவன் இரட்சிப்பை அவ்வளவு எளிதாகத் தொலைக்க முடியாது. உங்களால் வெகுத் தெளிவாக இப்போதனைகளை நீர் மற்றும் ஆவியின் நற்செய்தியிலிருந்து பிரித்துணரலாம். முக்கியமாக அதன் கொள்கையான அளவான பாவ விடுதலை நற்செய்தியிலிருந்து வேறு படுகின்றது.
1. பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்கிறாரா? - இல்லை அவர் என்னிடமிருக்கிறார் என்பது நிச்சயமில்லை.
2. என்னுள் பாவமிருக்கிறதா - ஆம் இருக்கிறது -
இயேசுவின் சிலுவை இரத்தத்தை நான் விசுவாசித்திருந்த போதிலும், அப்பொழுது நிச்சயமாக என் மனதில் பாவமிருந்தது. நான் இயேசுவை விசுவாசித்து தினந்தோறும் மனம் வருந்தி ஜெபித்தாலும் கூட, இன்னமும் என் மனதில் பாவங்கள் இருந்தன. நான் எத்தனைக் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் கூட என் இருதயத்திலிருக்கும் பாவங்கள் சுத்தமாகக் கழுவப்படவில்லை.
“பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்யும் படி அவரைப் பெறுவது எங்ஙனம்?” என் இருதயத்திலிருக்கும் பாவங்களை கழுவுவதெப்படி? இயேசுவை நான் விசுவாசிக்கத் தொடங்கிய பிறகும், இவை இரண்டும் என் மனதை நச்சரிக்கும் பிரச்சனைகளாக இருந்தன. இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கியபோது பல பாஷை பேசினேன். மேலும் என் பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டதாக நம்பினேன். இயேசுவின் இரத்தம் மீது எனக்கிருந்த விசுவாசத்திற்கு நன்றிகள்.
ஆயினும், காலம் செல்லச் செல்ல, என்னிருதயத்தில் பாவங்கள் மேலும் மேலும் சேர்ந்தது. நான் பாவங்களால் நிறைந்திருந்தேன். இயேசுவின் இரத்தத்தை மட்டும் சார்ந்திருக்கையில் எத்தனை முறை மனம் வருந்தி ஜெபிப்பதாலோ அல்லது உபவாசிப்பதாலோ என்னிருதயத்தில் இருந்து இந்தப் பாவங்களை அகற்ற முடியவில்லை. என்னுடைய சொந்தப் பாவங்களை நினைத்து அதிகம் கவலைப்பட்டேன். அதிகமாக நான் வியாகூலப்பட்டபோது, மிகத்தீவிரமாக இயேசுவைக் குறித்து மற்றவர்களுக்கு போதித்தேன். இயேசுவின் இரத்தத்தை சார்ந்து, முன்பைவிட ஒழுங்காக ஆலயம் சென்று இயேசுவிற்கு பணிசெய்ய முற்றிலும் அர்பணித்தேன்.
ஆயினும் காலம் சென்றபோது, என்னுடைய இருதயத்திலிருக்கும் சொந்தப் பாவங்கள், உண்மை நம்பிக்கையைப் பெறுவதைத் தடைச் செய்தன. இயேசுவை விசுவாசிப்பது முன்பை விட கடினமாக இருந்தது. இயேசுவின் இரத்தத்தின் மீது அதிகம் சார்ந்திருக்க முயற்சித்து, கர்த்தருக்கான என் அர்ப்பண முயற்சிகளை அதிகரிக்க என்னால் முடிந்த அளவு முயன்றேன். ஆயினும், என் இருதயத்தில் இருந்த வெற்றிடம் இன்னும் அதிகரித்தது. இத்தகைய நம்பிக்கை நான் வெறுமையடைந்தேன் என்ற உணர்வையும் சோம்பேறித்தனத்திலும் என்னைவிட்டது, மேலும் வெளித் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கபடவேடம் போடும் கிறிஸ்தவனாகவும் என்னை மாற்றியது. எனக்குள் இவ்வாறு நினைத்தேன். “இப்படி இயேசுவை எல்லோரும் விசுவாசிக்கிறார்கள், நான் மட்டும் அல்ல!” என்னுடைய விசுவாசம் தவறாக வழி நடத்தப்பட்டது என்பதை மறுக்க முயன்றேன். ஆயினும் இயேசுவின் இரத்தத்தினாலும், மனம் வருந்தி ஜெபிப்பதனாலும் என்னுடைய சொந்தப்பாவங்களை கழுவ முடியவில்லை.
அப்படியானால் எத்தகைய விசுவாசம் என் சொந்தப் பாவங்களை சுத்திகரிக்கும்? இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது என்னுடைய எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதை விசுவாசிக்கும் விசுவாசத்தாலேயே என்னுடைய சொந்தப் பாவங்களை கழுவமுடியும். மத்தேயு 3:13-17 இல் அது தான் எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் இயேசுவின் இரத்தத்தினால் என் சொந்தப் பாவங்கள் ஏன் கழுவப்படவில்லை? யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானத்தின் பொருளை உள்ளடக்கியுள்ள அழகிய நற்செய்தியை தெரிந்து நான் அதை விசுவாசிக்கவில்லை.
இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டுவிட்டன என்று இது பொருள் படுகின்றதா? ஆம், அது சரியே. வேதாகமம் இதற்கு “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (யோவான் 3:3-5) என்று சாட்சி கூறுகிறது. இயேசு இவ்வுலகிற்கு வந்து யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது ஏற்றுக்கொண்டார்.
இதனைக் குறித்து இன்னும் சந்தேகமுடையவனாக இருந்ததால் இதனை தெளிவாக்கும்படி பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் ஒப்பிட்டு பார்த்தேன். நான் கண்டறிந்த உண்மை சரியானது. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது, அந்நேரத்தில் என்னுடைய பாவங்கள் கூட அவர் மீது சுமத்தப்பட்டது. இந்த வார்த்தைகளின் மீதிருந்த விசுவாசத்தின் மூலம் பரிசுத்தன் ஆனேன். வேதாகமத்தில் எழுதப்பட்ட சத்திய வார்த்தைகள் இவைதானென்று உணர்ந்தேன். மேலும் இதுவே உலகின் மிக அழகிய நற்செய்தியாகும்.
அதன் மேலாக, இயேசுவின் இரத்தத்தின் மீது மட்டும் விசுவாசம் வைத்தபோது, என்னுடைய பாவங்கள் ஏன் துடைக்கப்படவில்லை என்றும் அறிந்தேன். என்னுடைய சொந்தப் பாவங்களை இயேசுவின் மீது என்னால் சுமத்தமுடியாமல் போனதற்கான காரணம் அவரின் யோர்தான் நதியின் ஞானஸ்நானத்தைக் குறித்து எனக்குத் தெரியாததே. இறுதியில் நான் சத்தியத்தைச் சந்தித்தேன். எனக்காக இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்றும் அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப்போட்டார் என்றும் நம்மைப் பாவங்களிலிருந்து விடுதலையாக்கும் பொருட்டு சிலுவையில் அறையப்பட்டார் என்றும் கற்றேன். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போடவே என்ற சத்தியத்தைக் கற்று விசுவாசித்தேன். நான் இப்போது நீதிமானாய் இருக்கிறேன். இயேசு எனக்களித்த அழகிய நற்செய்தியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், என்னுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டமைக்கும் நன்றிகள்.
ஆலயத்தின் கொள்கைகள் என் பாவங்களைக் கழுவவில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவையே அப்படிச் செய்தன. இந்த சத்தியமானது அழகிய நற்செய்திக்குள் இருக்கிறது. இயேசுவின் இரத்தம் மீதிருந்த நம்பிக்கையின் மூலம் மட்டும் நான் இரட்சிக்கப்பட்டு நீதிமானாகவில்லை, ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதிருந்த நம்பிக்கை என் இரட்சிப்பாயிற்று.
நான் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கத் தொடங்கிய பிறகு பரிசுத்த ஆவியானவர் என் மீது வந்தமைக்கு நான் நன்றி கூற வேண்டியவன். இப்பொழுது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய வார்த்தைகளுடன் சேர்ந்து பரிசுத்த ஆவியானவர் என்னில் வாசஞ்செய்கிறார்.
இந்த அழகிய நற்செய்தியை எனக்கு கொடுத்தமைக்கும் இயேசுவின் அப்போஸ்தலர்களைப் போன்றே அதே நம்பிக்கைகளை பிரசங்கிக்க அனுமதித்தமைக்கும் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். நான் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் ஒரே ஒரு காரியத்தை செய்தாலும், கர்த்தர் பரிசுத்த ஆவியின் வரத்தை எனக்களித்தார். இப்பொழுது இச்செய்தியை உலக மக்களுக்கு அதிக மரியாதையுடனும், தீர்மானத்துடனும் பிரசங்கிக்க முடிகிறது. இயேசுவின் இரத்தத்தை மட்டும் விசுவாசிப்பதால் அவர்கள் பாவங்கள் கழுவப்படமாட்டாது என்று உறுதியுடன் அவர்களுக்கு கூற முடியும்.
யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றைக் கூறும் அழகிய நற்செய்தியை அவர்கள் விசுவாசித்தால் மட்டுமே அவர்களுடைய பாவங்கள் நிச்சயமாக மன்னிக்கப்படும் என்று என்னால் கூறமுடியும். இந்த அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் போது கர்த்தருக்கு முன் மறுபடியும் பிறக்கும் அழகிய நற்செய்தியை உலகின் எல்லா மக்களுக்கும் மரியாதையுடன் என்னால் பிரசங்கிக்க முடியும். நீர் மற்றும் ஆவியாகிய நற்செய்தியை எனக்களித்ததன் மூலம் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீரைப் பருக எனக்களித்த அனுமதிக்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.
உண்மையான நற்செய்தியானது நீர் மற்றும் ஆவியே என்று சோதனைகள் காட்டுகின்றன
உன் பாவங்களிலிருந்து உண்மையாகவே மன்னிப்புப் பெற்று பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைப் பெற்றாயா? இந்த நற்செய்தியானது உண்மையானது என்று உன்னால் எப்படிக் கூற முடியும்? இயேசு நமக்களித்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்க தயாராக இருந்த மக்களிடம் சில சோதனைகளைச் செய்தேன். ஒரு நபரிடம் இயேசுவின் சிலுவை இரத்தத்தை பற்றிய செய்தியை மட்டும் பிரசங்கித்தேன். அவரிடம் இயேசுவின் மீது எந்தப் பாவமுமிருக்காது என்றும் கூறினேன். மற்ற நபரிடம் அழகிய நற்செய்தியாகிய யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவைக் குறித்து போதித்தேன். முடிவு இம்மாதிரியானது. இயேசுவின் இரத்தத்தை மட்டும் விசுவாசித்து பாவ மன்னிப்பு பெற்ற நபர் தன் சொந்தப் பாவங்களுக்காக தொடர்ந்து பாவ மன்னிப்பு பெறவேண்டியிருந்தது. அதே சமயம், மறுபுறம் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த நபர் தானொரு சிறந்த பாவமில்லாத மனிதனாகியதாக கூறினார்.
இயேசு அவரின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்காகத் தீர்க்கப்பட்டார் என்ற உண்மையை அவர் விசுவாசித்ததாலேயே அவர் இருதயம் பாவமின்றி இருக்கப்பெற்றார். யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானம் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவியது என்று கூறும், அழகிய நற்செய்தியை விசுவாசித்ததன் மூலம் கர்த்தரிடமிருந்து அவரால் பரிசுத்த ஆவியைப் பெற முடிந்தது.
அவருடைய இருதயத்தில் பாவமில்லை என்று அம்மனிதனால் கூற முடிவதற்கான காரணம் அவரின் அழகிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவரைத் தன்னிருதயத்தில் பெற்றுக்கொண்டதே. தன்னிருதயத்தில் பாவங்களில்லை என்று சொல்வதற்கான உறுதியை பரிசுத்த ஆவியானவர் அவருக்கு அளித்தார். யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்கும் எல்லோருக்கும் பரிசுத்த ஆவியானவரை அவர்களுள் வாசஞ்செய்யும்படி கர்த்தர் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் யாருக்குள் வாசஞ்செய்கிறார்? யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுத்த ஆவி வரமாக அளிக்கப்படுகிறது.
பெந்தெகோஸ்தே நாளில் நடந்த அதிசயங்களைக் கண்டு, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதைக் குறித்து மக்கள் தவறாகப் புரிந்து கொண்டு அழகிய நற்செய்தியை புறம்பேத் தள்ளிவிட்டார்கள். மக்கள் தாம் மிகுந்த முயற்சி செய்து ஜெபித்து பரிசுத்த ஆவியானவரைத் தேடினால், பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடியும் என்று நினைக்கிறார்கள். அநேக காலமாக, உலகிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியைப் ஒருவர் பெறமுடியும் என்ற உண்மை சிறிதளவேனும் இல்லாதவர்களாக இருந்தார்கள். ஆயினும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைத் தம்முள் வாசஞ்செய்யபட்ட, அநேக கர்த்தரின் ஊழியர்கள், பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் நற்செய்தியைப் பிரசங்கித்தனர். இதன் பயனாக, உலக முழுவதுமுள்ள அநேக மக்கள் அழகிய நற்செய்தியைப் படித்து ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்யப் பெற்றனர்.
அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் மக்கள் பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்வதை அனுபவிக்க கர்த்தர் அனுமதிக்கிறார். வேதாகமம் இப்படிக் கூறுகிறது. “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” (அப்போஸ்தலர் 2:17). ஆயினும், அழகிய நற்செய்தியைத் தெரிந்து கொள்ளாமல் பரிசுத்த ஆவியானவரைத் தம்முள் வாசஞ்செய்யும் படி பெற முயற்சி செய்வது தவறானது என்பதை ஒருவர் புரிந்துக் கொள்ளவேண்டும். யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதைத் தவிர, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெற வேறுவழியில்லை.
நீராலும் ஆவியாலும் ஞானஸ்நானம் பெற்றவனே பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியும் என்று கர்த்தர் கூறுவதாலும் மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் உடையவர்களாக இருப்பதாலும், பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க எல்லோருக்கும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது குறித்தும் பரலோகத்தினுள் பிரவேசிப்பது குறித்தும் நீங்கள் எப்படி நினைக்கலாம்? அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதைத் தவிர பரலோகம் செல்ல வேறு வழிகளில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே உங்களால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியும். நாம் பொருட்கள் வாங்கும் போது பணம் கொடுப்பது போல, அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுகிறோம்.
உண்மையாக நீ பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்யப் பெற வெண்டுமானால், நீ முதலாவதாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து அதனை விசுவாசித்தேயாக வேண்டுமென்று நான் உன்னிடம் கூற விரும்புகிறேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வந்த அனுபவத்தைப் பெறுவாய். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தர், பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ் செய்வதை உனக்குப் பரிசாக அளிக்க விரும்புகிறார்.
நான் இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்கிறேன். மேலும் காலம் செல்லச்செல்ல, கர்த்தர் எனக்களித்த இந்த அழகிய நற்செய்தியே இவ்வுலகின் மிக அழகியதும் விலையேறப்பட்டதுமாகும் என்ற உணர்வு என்னுள் இன்னும் உறுதியாகியது. கர்த்தரிடத்தில் நன்றி உணர்ச்சி உடையவனாக இருக்கிறேன். நீங்களும் அப்படியே உணருகிறீர்களா? பரிசுத்த ஆவியைப் பெற்ற நாம் கர்த்தரால் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாக உணருகிறோம்.
அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்வதைப் பெற்றுக் கொள்வது என்பது குறித்த செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கும் ஆசீர்வாதமான அழகிய நற்செய்தியை எற்றுக்கொள்வதன் மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்களாக முடியும்.
யோவான் 7:38 இல் இயேசு கூறுகிறார். “வேத வாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்.” இதன் பொருள் என்னவெனில் இயேசு அவர்களுக்களித்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் அவர்கள் பாவங்களில் இருந்து விடுதலைப் பெறும்போது மக்கள் பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யும்படி பெறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் அவர்களிருதயத்திலிருந்து நதியைப் போல் ஓடும். அழகிய நற்செய்தியை விரும்புகிறவர்கள் ஆவிக்குரிய ஜீவத்தண்ணீர் வெளியே ஓடுவதை அனுபவிப்பார்கள்.
நீர் மற்றும் ஆவியாகிய நற்செய்தியின் மூலம் மறுபடியும் பிறப்பதற்கு முன் நான் இயேசுவின் வெகுதீவிர விசுவாசியாக இருந்த போதிலும், என்னுடைய இருதயத்திலிருந்து, பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் வெளியே ஓடவில்லை. ஆயினும் நீர் மற்றும் ஆவியாகிய நற்செய்தியை நான் விசுவாசிக்கத் தொடங்கியப் பிறகு வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள படி என்னுடைய இருதயத்திலிருந்து ஜீவத்தண்ணீர் தங்குத் தடையின்றி வெளியே ஓடத்தொடங்கியது. இந்த நொடியிலும் கூட, பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் கர்த்தர் எனக்கு அளித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியுடன் சேர்ந்து ஓடுகிறது. என்னுடைய இருதயத்திலிருந்து வருட முழுவதும் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் தாராளமாக ஓடுகிறது. பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்வதைப் பெற்ற பிறகு, அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும், நற்செய்தியாளனாக என் பணியைத் தொடங்கினேன்.
அழகிய நற்செய்தியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்வதைப் பெற்ற பின்னுள்ள என் நம்பிக்கையின் அறிக்கை
நான் என் முதல் இருபது வயதுகளில் இருக்கும்போது, அது இலையுதிர்காலம் முடிவதற்கு முந்திய நேரமாகும். இலையுதிர்காலம் தவிர்க்க முடியாத என் மரணத்தைப் பற்றி என்னைச் சிந்திக்கச் செய்தது. என்னுடைய இருதயத்திலிருந்த பாவங்களினால் அந்த வருடத்தில் என் வாழ்வு குழப்பம், வெறுமை மற்றும் இருள் சூழ்ந்ததாக இருந்தது. எந்த வழியில் திரும்புவது என்றறியாது, தவறானத் திசைகளில் சென்று கொண்டிருந்தேன். என்னுடைய உடம்பு அதிக சுகவீனத்திற்குட்பட்டபோது என் இருதயத்தில் வெறுமையும் வளர்ந்தது.
என்னுடைய பாவங்களின் பொருட்டு, நான் மிகவும் குழம்பிய நிலையிலிருந்தேன். எனக்கு எது காரணம் என்று கூட உறுதியாகத் தெரியவில்லை. என் வாழ்வின் திடீர் முடிவிற்கு பிறகு வரும் கர்த்தரின் நியாயத் தீர்ப்பின் போது என் பாவ மன்னிப்பிற்காக கெஞ்சுவதைத் தவிர வேறு வழிகள் இல்ல. “ஓ கர்த்தரே, நான் இறப்பதற்கு முன் உம்மீதுள்ள நம்பிக்கையின் மூலமாக என்னுடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறவேண்டும். மேலும், என்னுடைய சுகவீனங்களிலிருந்து என்னை குணப்படுத்தும்!” நான் மீண்டும் மீண்டும் ஜெபித்தேன்.
என்னுடைய குழம்பிய இருதயத்தின் அடி ஆழத்திலிருந்து புதிய எதிர்பார்ப்புகள் அப்பொழுது தான் ஊற்றெடுக்கத் தொடங்கியிருந்தன. கர்த்தருக்காக எதிர்ப்பார்ப்பதன் மூலம் என்னிருதயம் நிரம்பியிருந்தது. அது தீப்பந்தத்தைப் போல் அனலாயிருந்தது. அது குழப்பமில்லை. என்னிருதயத்தில் புதிய எதிர்ப்பார்ப்புகள் காட்டுத் தீயைப் போல் எரிந்தன. அந்நாள் முதல் புதிய மத வாழ்வைத் தொடங்கினேன். என்னுடையப் பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கும்படியாக இயேசு மரித்தார் என்று நம்பினேன்.
பல பாஷை அனுபவமும் குறைந்த நாட்களிலேயே கிடைத்தது. பிறகு இயேசு சிலுவையில் இரத்தஞ்சிந்தியதை நினைத்து கண்ணீர் விட்டேன். அவர் எனக்காக தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தியமைக்கு அதிக நன்றியுணர்வுள்ளவனாக இருந்தேன்.
அதன் பிறகு என்னுடைய பழைய வாழ்க்கையை விட்டுவிட்டேன், மேலும் எனக்கு ஒரு புதிய வேலையும் கிட்டியது. அது நான் புனித ஞாயிற்றுக்கிழமையை ஆசரிப்பதற்கு அனுமதியளித்து. அந்நேரத்தில், என்னிருதயம் இயேசுவின் மீதிருந்த என் அன்பினால் நிறைந்து, என்னுடைய பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கும் பொருட்டு அவர் இரத்தத்தை சிலுவையில் சிந்தினார் என்பதை எப்போதெல்லாம் எண்ணுகிறேனோ, அப்போது முடிவில்லாத நன்றியறிதல் கரை புரண்டோடியது. என் மதத்திற்குரிய ஆவி வளரத் தொடங்கியது. ஆனால், அது முற்றிலும் இயேசுவின் சிலுவை இரத்தம் குறித்த வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருந்தது.
ஆயினும், காலம் செல்லச் செல்ல, என்னுடைய பலவீனத்தினாலும் சொந்தப்பாவங்களிலினாலும், என் மத வாழ்க்கை செல்லரிக்கத் தொடங்கியது. என்னுடைய நம்பிக்கை இயேசுவின் சிலுவை இரத்தத்தின் மீது மட்டுமே இருந்தமையால் என்னுடைய சொந்தப்பாவங்கள் முற்றிலுமாகக் கழுவப்படவில்லை. மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் என்னுடைய சொந்தப் பாவங்களை கழுவி விட முயன்றேன். கர்த்தரின் பாவ மன்னிப்பை எதிர்ப்பார்த்து நான் எதிர்ப்பார்ப்புடன் செய்த ஜெபங்களால் என்னுடைய சொந்தப் பாவங்களை முற்றிலுமாக கழுவ முடியவில்லை. இது கர்த்தரின் சட்டத்தை நான் கடைப் பிடிக்காமையால் வந்தது. என்னுடைய சொந்தப்பாவங்கள் குவியத் தொடங்கின.
மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் என்னுடைய பாவங்கள் முற்றிலுமாக கழுவப்படாவிட்டாலும், வேறு வழியில்லாமல் இப்படியாக ஜெபிக்க வேண்டியிருந்தது. இயேசுவின் சிலுவை இரத்தத்தை நினைத்து, நான் எப்பொழுதெல்லாம் பாவம் செய்தேனோ அவற்றை மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் கழுவிவிட முடியும் என்று நம்பினேன். என்னுடைய மத வாழ்க்கையை அதிகமாக கடைப்பிடிக்க என்னுடைய பலவீனத்தால் சொந்தப்பாவங்களும் அதிகமாகக் குவியத் தொடங்கின. இப்பாவங்களினால் என் பாடுகள் அதிகமாயின.
பரிசேயரைப் போன்ற கிறிஸ்தவனானேன். என்னுடையப் பாவங்கள் எத்தகையதாக இருந்தாலும், டீக்கனாகவும் பிறகு நற்செய்தியாளனுமாக நியமிக்கப்பட்டேன். என்னுடைய சொந்தப் பாவங்களினால் வேதனையை உணரும் போதெல்லாம் நற்செய்தியைப் பிரசிங்கிக்க வெளியேச் சென்றேன். இதுவே என் ஆத்துமாவைக் கழுவும் ஒரே வழியென நினைத்தேன். சுயபலி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த இவ்விசுவாசத்தினால் என் சொந்தப் பாவங்கள் கழுவப்படவில்லை.
சாத்தானால் கட்டுண்டமைப் போன்ற அனுபவங்களைப் பெற்றேன். என்னுடைய சொந்தப் பாவங்களுக்கு நானே தண்டனை வழங்கிக் கொள்ளும் நிலையில் விழுந்தேன். என்னுடைய மீறுதல்களுக்காய் சாவை வேண்டினேன். “நீ பாவம் செய்தாய், நீ செய்யவில்லையா என்ன?” சாத்தான் என் பாவங்களினால் என்னை ஆக்கினைக்குட்படுத்தி தொடர்ந்து துன்பப் படுத்திக் கொண்டிருந்தான்.
என்னுடைய விசுவாசம் உடையக் கூடிய நிலைக்கு வந்தது. மனம் வருந்தி ஜெபிப்பதாலும் இயேசுவின் இரத்தத்தின் மீதுள்ள நம்பிக்கையின் மூலமும் என்னுடைய சொந்தப் பாவங்களை கழுவ முடியாது என்பதை அறிந்தேன். மேலும் இதனால் நான் தவித்துப்போன நிலையில் என்னைக் கண்டேன்.
ஒரு இறையியல் கல்லூரியில் கால்வினிசம் குறித்து படிக்கும்போது, யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானத்தின் காரணம் என்ன என்பதில் அதிக நாட்டமுள்ளவனானேன். யோர்தான் நதியில் இயேசு ஏன் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் என்று நிறையப் பேராசியர்களிடம் கேட்டேன். அவர்களுடைய பதில்கள் ஒரே மாதிரியானவைகளாக இருந்தன. அவருடைய அடக்கத்தைக் காட்டுவதற்கோ அல்லது அவர் தேவகுமாரன் என்று அறிவிப்பதற்காகவோ அவர் ஞானஸ்நானம் பெற்றதாக அவர்கள் கூறினர். ஆயினும், இத்தகைய பதில்கள் என் ஆர்வத்தை தனிக்கவில்லை.
யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானத்தின் சத்தியம் அழகிய நற்செய்தியை நான் தெரிந்துகொள்ளும் படிச் செய்தது
இறையியல் கல்லூரியில் என்னுடைய காலம் முடிந்தது, என்னுடையப் பாவங்கள் இன்னமும் கழுவப்படவில்லை. முன்பெப்பொழுதையும் விட அவற்றின் பாரத்தினால் துன்பப்பட்டேன். அப்பொழுது ஒரு நாள், இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? அவர் ஏன் இப்படி நீதியை நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று கூறினார், என்பது எனக்குப் புரிந்தது. யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானம் மூலம் என்னுடையப் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன என்று கூறும் அழகிய நற்செய்தி அது. அவரின் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம் இந்த உண்மையை நான் அறிந்து கொள்ள கர்த்தர் எனக்கு உதவினார்.
அழகிய நற்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் வாசித்த பிறகு, யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் என்னுடைய எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதென்பதையும், அதற்காக அவர் சிலுவையில் தீர்க்க்கப்பட்டாரென்பதையும் இறுதியாகத் தெரிந்து கொண்டேன்.
இப்பொழுது என்னுள் வாசஞ்செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் உண்மையாகவே வந்து விட்டார் என்பதை அறிந்தேன். இந்த அழகிய நற்செய்தியைப் புரிந்துகொண்டு அதனை விசுவாசித்ததால் என்னிருதயத்திலிருந்த பாவங்கள் யாவும் முற்றிலுமாக மன்னிக்கப்பட்டன. தவிப்பிற்குள்ளும் குழப்பத்திற்குள்ளும் என்னைத் தள்ளிவிட்ட பாவங்கள் இந்த அழகிய நற்செய்தியின் வல்லமையினால் முற்றிலுமாக கழுவப்பட்டன. முடிவில்லாத சுய பலிகள் மற்றும் மனம் வருந்தி ஜெபிப்பதால் துடைக்கப்பட முடியாத பாவங்கள் ஒரேயடியாக முற்றிலும் மறைந்துப் போயின.
இயேசுவின் சிலுவை இரத்தம் மூலம் மட்டுமே உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவ முடியாது என்று நான் கூறும்போது நான் உண்மைப் பேசுகிறேன். யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானமும் பாவ மன்னிப்பிற்கு வழிநடத்தியது. இப்பொழுது அனைவரும் தம் பாவங்கள் கழுவப்பட்டுவிட்டன என்பதைப் புரிந்துக்கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நன்றிகள்.
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நான் விசுவாசிப்பதால் என் இருதயத்தின் உள்ளே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்கிறார், மேலும் கர்த்தர் சாட்சியம் கூறும் வார்த்தைகள், அவர் தம் மகனைக் குறித்து கூறிய சாட்சி, ஆகியவை என்னிருதயத்திலிருந்த பாவங்களை வெளியே ஓட்டிவிடுவதற்கு போதுமாயிருந்தன. அழகிய நற்செய்தி மீது எனக்கிருந்த நம்பிக்கையின் பதிலாக பரிசுத்த ஆவியானவரைப் புறாவைப்போல் என் மீது பெற்றேன்.
அந்நாளிலிருந்து, பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தில் கிரியைப் புரியத் தொடங்கினார். ஆவிக்குரிய வேலைச் செய்யும்படி எனக்கு அதிகாரம் கொடுத்தார். வேறு வார்த்தகளில் கூறுவதானால் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கச் செய்தார். இப்பொழுது என்னிருதயத்தில் பாவங்கள் ஏதுமில்லை. யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் என் பாவ மன்னிப்பிற்கான சாட்சிகளாகி நான் பரிசுத்த ஆவியானவரை என்னுள் வாசஞ்செய்யும்படி பெறவும் வழி நடத்தின. அல்லேலூயா! கர்த்தரிற்கே மகிமையுண்டாவதாக. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தொடங்கிய நாளில் பரிசுத்த ஆவியானவர் அமைதியாக ஒரு புறாவைப் போல் என் மீது இறங்கி வந்து என்னுள் வாசஞ்செய்யத் தொடங்கினார். என் மனதில் சில சமயங்களில் ஒரு புறாவைப் போலவும், சில சமயங்களில் உருக்காலையின் நெருப்பு போலவும் கிரியை செய்யத் தொடங்கினார்.
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் ஏற்றுக்கொண்டு விசுவாசித்தீர்களானால் இப்பொழுது நீங்களும் கூட பரிசுத்த ஆவியானவரை உங்களில் வாசஞ்செய்யப் பெற முடியும், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை என்னுடனே கூட நீங்களும் விசுவாசித்து பரிசுத்த ஆவியைப் பெற்று கர்த்தரைப் புகழ நீங்கள் விரும்பவில்லையா? அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இந்த முழு உலகத்திற்கும் பிரசங்கிக்க என்னுடன் சேர்ந்து வேலை செய்வதை நீங்கள் விரும்பவில்லையா? அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி உங்களைப் பரிசுத்தராக்கி பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்யும்படிச் செய்யும். விசுவாசத்திலிருந்து விசுவாசம் வரை கர்த்தரின் நீதி நற்செய்தியில் வெளிப்ப்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வது அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானவரை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது.
பரிசுத்த ஆவியானவர் எனக்குச் செய்த அதிசயமான காரியங்கள்
பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்யப் பெற்றபின் அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கும்படியாக புதியதொரு ஆலயத்தில் வேலைச் செய்யத் தொடங்கினேன். பரிசுத்த ஆவியானவர் நான் அழகிய நற்செய்தியை வல்லமயுடன் பிரசங்கிக்கும்படிச் செய்தார்.
அந்த சமயத்தில் தான் கீழ்க்கண்ட சம்பவம் நடைப்பெற்றது. நான் வாழ்ந்த நகரத்தில், வெளி நாட்டினருடன் வியாபாரம் செய்த தையல்காரர் ஒருவர் இருந்தார். அவர் டீக்கன் ஆவார். ஒரு முறை யாருடனோ வியாபாரம் செய்ய ஓட்டல் ஒன்றிற்குச் சென்ற அவர் நாங்கள் அங்கு ஒட்டியிருந்த விளம்பரத்தைப் பார்த்தார். அந்த வரவேற்பிதழினால் கவரப்பட்ட அவர் என்னுடன் தொடர்பு கொள்ள முயன்றார். அவர் என்னைச் சந்தித்து, தான் வெகுகாலமாக பாவத்துடன் வாழ்ந்ததாகக் கூறினார். ஐந்து மணி நேரமாக அவரிற்கு நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியை வழங்கியபிறகு, பாவ மன்னிப்பின் சத்தியத்தை அவர் தெரிந்துகொண்டார், அவர் மறுபடியும் பிறந்து, அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்வதையும் பெற்றார்.
ஒரு ஆலயக் கட்டிடத்தைப் பார்க்கச் சென்ற போது நடைபெற்ற கதை இது. நான் ஒரு அதிசய வைக்கும் பெரிய கட்டிடத்தைக் கண்டேன். ஆனால் அந்த சமயத்தில் எங்கள் ஆலயக் கட்டிடமாக அதனை வாடகைக்கு எடுப்பதற்கு போதுமான பணம் என்னிடமிருக்கவில்லை. என்னுடைய கையிருப்பினைக் குறித்து மதிப்பீட்டில் மிகக் குறைவாக இருந்தமையால் அந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுப்பது இயலாத காரியமாகத் தோன்றியது. ஆயினும், என்னுள் இருந்த பரிசுத்த ஆவியானவர், “திடமாயிரு, நம்பிக்கையுடனிரு” என்று கூறினார். அதிசயிக்கத்தக்க விதமாக என்னால் அந்தக் கட்டிடத்தை வாங்கி அவர் பணிச் செய்ய முடிந்தது. பரிசுத்த ஆவியானவரின் உதவிக்கு நன்றிகள். அந்நேரம் முதல் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நான் பிரசங்கிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் செய்தார். அழகிய நற்செய்தியை அனைத்து மக்களுக்கும் பிரசங்கிக்கும்படி என்னிருதயத்தில் வாசஞ்செய்யும் பரிசுத்த ஆவியானவர் இந்நொடியில் கூட ஏவுகிறார். இந்த அழகிய நற்செய்தியைக் குறித்து கேட்டு அதனை விசுவாசிப்போர் பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யும்படியாகப் பெறுவதைக் காண்கிறேன்.
இந்த அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எனக்களித்த திறமைக்காக அவரிற்கு நன்றி செலுத்துகிறேன். பரிசுத்த ஆவியானவர் எனக்குச் செய்தவற்றைக் குறித்து என் வாழ்நாள் முழுவதும் எழுதினாலும் கூட அது முடியாது என்பது எனக்குத் தெரியும். பரிசுத்த ஆவியானவர் என்னிருதயத்திலிருந்து ஜீவத்தண்ணீர் தங்குத்தடையின்றி ஓடும் வாழ்க்கையை நான் வாழச் செய்தார். என்னில் வாசஞ்செய்யும் அவரிற்கு நன்றிகள்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் அவருடன் நடக்கும் ஆலயத்தை பரிசுத்த ஆவியானவர் நட்டார்
அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியாக ஒரு முறை வெளியுலகத்திற்கு சென்றிருந்தேன். அச்சமயத்தில் ஒரு சிறிய நகரத்திற்குள் கர்த்தர் என்னை வழிநடத்தினார். அங்கு கர்த்தருக்காக காத்திருக்கும் சிறிய மக்கள் கூட்டத்தினைச் சந்தித்தேன். அழகிய நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கிக்கும் படி கர்த்தர் என்னை வழிநடத்தினார். அது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யும்படி பெறச் செய்தது. அவர்கள் அழகிய நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்தமையால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். என்னுடன் பணிசெய்யும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். அப்போதிலிருந்து அவர்களுடனே கூட அழகிய நற்செய்தியை இவ்வுலகிற்கு தெரிவிக்கச் செல்லுகிறேன்.
அச்சமயத்தில் அவர்கள் எந்த மதப்பிரிவையும் சாராத, சிறிய மக்கள் கூட்டமாக இருந்தார்கள். கர்த்தருடைய வார்த்தையின் படி அவர்கள் வாழ விழைந்தனர். அவர்கள் தம் பாவங்களுக்கு அடிமையனவர்களாக இருந்தபடியால் கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்டு வியாகூலத்துடன் கூக்குரலிட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் இந்த மக்கள் கூட்டத்தினரிடம் என்னை வழிநடத்தி அழகிய நற்செய்தியை அவர்களுக்கு பிரசங்கிக்கும்படி என்னை ஏவினார். அவர்களையும் என்னையும் சந்திக்கச் செய்ய பரிசுத்த ஆவியானவர் எங்களைத் தயார் படுத்தியதை என்னால் காண முடிந்தது. லேவியராகமத்தில் எழுதப்ப்பட்டுள்ளபடியான பலியிடும் முறையில் தொடங்கி அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி வரை பிரசங்கிக்கும்படி கர்த்தர் என்னை வழி நடத்தினார். அழகிய நற்செய்தியின் வார்த்தைகள் மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றனர்.
கர்த்தர் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் அவர்களுடன் பரிசுத்த ஆவியானவரின் ஆலயத்தை நிறுவினார். அழகிய நற்செய்தியின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் அவர்களை இயேசுவின் சீடர்களாக நியமனம் செய்தார். இப்பொழுது நிறைய ஆடுகள் பரிசுத்த ஆவியானவரைப் பெறவும் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவும் செய்கிறார்கள்.
ஒரு மிஷன் பாடசாலையைத் தொடங்கி சீடர்களை வளர்க்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தினார். கர்த்தரின் பணியாளர்களாக சேவைச் செய்யவும் நம்பிக்கைக்கு கீழ்படிய படிக்கவும் உதவும் பொருட்டு மக்களுக்கு வேதவாக்கைப் போதிக்க கர்த்தர் எனக்கு உதவினார். அவர்கள் செல்லுமிடமெல்லாம் அழகிய நற்செய்தியின் கிரியைகள் நடைபெற அவர் அனுமதித்தார். அவரின் ஆலயங்களை அவர்கள் மூலம் கர்த்தர் நட்டார். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவரின் ஊழியர்கள் பிரசங்கிக்க பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் பாவ மன்னிப்பு பெற்றவர்கள் நீதிமான்களாகி, ஆலயத்தில் ஐக்கியமாகி இவ்வுலகில் நீதியாக வாழும்படியக ஆசீர்வதித்து அவர்களை வழிநடத்துகிறார்.
ஆதிகாலந்தொட்டு மக்களை வஞ்சித்து வந்த சாத்தான், தொடர்ந்தும் அப்படியேச் செய்வான். சாத்தான் மக்களிடம் மனம் வருந்தி ஜெபிப்பது உபவாசமிருப்பது அல்லது கைவப்பது ஆகியவை மூலமாக, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறான். இது முற்றிலும் உண்மையே அல்ல. மக்கள் மனம் வருந்தி ஜெபிப்பதாலோ அல்லது கைவைப்பதன் முலமோ, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியாது. கர்த்தர் நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுவதன் மூலமே அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியும். இதுவே பரிசுத்த ஆவியானவரின் சஞ்சரிப்பைக் குறித்த உண்மயான பொருளாகும். மக்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ள உதவும்படி இயேசுகிறிஸ்துவின் சீடர்களை, அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து அவர்களை வழி நடத்துகின்றார்.
உலக முழுவதும் இலக்கியப் பணி செய்ய பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்துகிறார்
பவுல் தன் நிருபங்களில் அழகிய நற்செய்தியை விட்டுச் சென்றது போலவே, என்னிருதயத்தில் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர்அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எழுதவும் பிரசங்கிக்கவும் ஊக்கியாக இருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே அழகிய நற்செய்தியை உள்ளடக்கிய கிறிஸ்தவ நூல்களை வெளியிடுகிறோம். இது விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்துகின்றது. முதலில் சில பக்கங்களேயுடைய துண்டு பிரசுரங்களில் தொடங்கினோம். ஆனால் சீக்கிரமே அழகிய நற்செய்தியை உள்ளடக்கிய நூல்கள் உலகெங்கும் பரவத் தொடங்கின.
இந்த நூல்களைப் படித்து அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் தன் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று அநேக மக்கள் ஆலயத்திற்குள் பிரவேசிக்க என்னுள் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகின்றார். அதற்கும் மேலாக, அநேக வெளிநாட்டு மொழிகளிலும் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க எங்களை வழி நடத்தினார், அமெரிக்கா உட்பட, உலகைச் சுற்றியுள்ள எறத்தாழ 150 நாடுகளில் இந்த அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க அவர் எங்களை வழி நடத்தினார்.
உலக மிஷினிற்காக ஜெபிக்கும் படி பரிசுத்த ஆவியானவர் ஆலயத்தை ஏவினார். மேலும் அநேக மொழிகளில் இந்த அழகிய நற்செய்தியை மொழிப் பெயர்ப்புச் செய்யவும் எங்களை வழிநடத்தி அதனை இலக்கியப் பணியின் மூலம் பிரசங்கிக்கச் செய்தமையினால் அநேக நாட்டு மக்கள் இவற்றைக் கேட்டு அதனை விசுவாசிக்கிறார்கள். மற்ற நாடுகளிலுள்ள புதிய சீடர்களுடன் சேர்ந்து பணியாற்றவும், அங்கே, அவர்களுடன் இணைந்து அழகிய நற்செய்தியைப் போதிக்கவும் பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தினார்.
இரஷ்ய நாட்டில் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஆவலை பரிசுத்த ஆவியானவர் என்னில் நிரப்பினார். பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைத் தேடும் நற்செய்தியாளர்களைச் சந்திக்கவும் அவர்களுக்காக ஜெபிக்கவும், அழகிய நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கிக்கவும் எங்களை வழி நடத்தினார். அப்பொழுதுதான் அவர்கள் முதன்முதலாக அழகிய நற்செய்தியைக் கேள்விப்பட்டனர். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டு விசுவாசிக்கும்போது, எங்களைப் போலவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டார்கள்.
அவர்களில் ஒருவரான, மாஸ்கோவில் உள்ள தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசியர் ஒருவர், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டபின் கீழ்க்கண்டவற்றை அறிக்கைச் செய்தார்.
“நான் 6 வருடங்களாக கர்த்தரை விசுவாசித்தேன், ஆனால் அவரைப் பற்றி உண்மையாக எதுவும் புரிந்துக் கொள்ளாமல் அவரை விசுவாசித்தேன். ஆயினும், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டவுடன் எனக்குள் ஒரு உறுதியான விசுவாசமும் இருதயத்தில் அமைதியின் சுகமும் கிட்டியது. நான் உண்மையாகவே கர்த்தருக்கு நன்றி கூறினேன். அது நாள் வரை சரியான நம்பிக்கையிலான மத வாழ்வை நடத்தியிருந்தேன் என்று அப்போழுது வரை நினைத்திருந்தேன். என்னுடைய மத வாழ்வு, நம்முடைய பாவங்களுக்காக மரித்த இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதை உள்ளடக்கியதாகவிருந்தது. ஆயினும் கர்த்தர் என் பாவங்களை எல்லாம் சுத்தப்படுத்தினார் என்பது குறித்து எதுவும் தெரியாதவனாக இருந்தேன்.
அப்பொழுது மறுபடியும் பிறந்த போதகர்களைச் சந்தித்து கர்த்தர் நமக்கருளிய அழகிய நற்செய்தியைக் கேட்டு, நான் இன்னும் பாவியாகவே இருப்பதை அறிந்தேன். அழகிய நற்செய்தியைக் குறித்து மேன்மேலும் தெரிந்து கொள்ள விரும்பினேன். மேலும் நீதிமான் என்பதன் பொருள் என்னவென்றும் அறிய விழைந்தேன். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது என் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதுவே, அழகிய நற்செய்தியாகும். என்னுடைய மூலப்பாவங்கள் மட்டுமல்லாமல், என்னுடைய தினப்பாவங்கள் மற்றும் என்னுடைய எல்லா வருங்காலப் பாவங்களும் அவர் மீது ஞானஸ்நானம் மூலம் சுமத்தப்பட்டன என்பதை அறிந்துக் கொண்டேன். இந்த உண்மையான நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்து மறுபடியும் பிறந்தமையால் பெருமகிழ்ச்சியை சம்பாதித்துக் கொண்டேன்.”
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டு விசுவாசித்தமையால் பரிசுத்த ஆவியானவரை இந்த பேராசியர் உட்பட, அநேக இரஷ்யர்கள் பெற்றுக் கொண்டார்கள். இப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் ஆலயம் அங்கு நடப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மூலமாக அழகிய நற்செய்தியை நிறைய மக்கள் விசுவாசித்து வருகிறார்கள். கர்த்தர் இவை யாவற்றையும் செய்தார். ஆகவே, பரிசுத்த ஆவியானவருக்கு எனது சிறப்பு நன்றிகள்.
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தவர்களுக்கு கிட்டியது போன்றே, என்னுள் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் என்னை மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக்கினார். இப்பொழுது நான் அழகிய நற்செய்தியை உலகிற்கு பிரசங்கிக்கிறேன். அழகிய நற்செய்தியைக் குறித்த எங்கள் நூல்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலகமுழுவதுமுள்ள அநேக மொழிகளில் மொழிபெயர்க்க அவர் அனுமதித்தார். இந்த அழகிய நற்செய்தியை நாங்கள் உலகமெல்லாம் நம்மைப் போதிக்கும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியானவருக்கு நன்றிகளைச் செலுத்துகிறேன். நீங்களும் கூட பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்யப் பெறலாம். பரிசுத்த ஆவியானவர் உங்களில் சஞ்சரிக்க வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.
அநேக மக்கள் அவரின் பெயரைச் சொல்லி கூப்பிடுவதாலும் கர்த்தரிடம் தவிப்புடன் ஜெபிப்பதாலும் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயற்சிக்கிறார்கள். ஆயினும் இயேசு நமக்களித்த அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர்த்து, பரிசுத்த ஆவியானவரைப் பெற முயல்வது தவறானதாகும். இயேசுவின் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இல்லாமல் ஒருவரால் பரிசுத்த ஆவியைப் பெறமுடியும் என்பது கள்ளப்போதனையாகும்.
இயேசு அவர்களுக்களித்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்காமல் அவரின் சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்களா? இல்லை, சுத்தமாக இல்லை. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போரிடம் இந்நாட்களில் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் அவர்களின் இருதயங்களிலிருந்து வெளியே ஓடுகிறது. இந்த நொடியில் கூட அழகிய நற்செய்தியுடன் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் என்னிருதயத்திலிருந்து வெளியே ஓடுகின்றது. அல்லேலூயா! கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன்.