• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-9] நம்மை சுத்திகரித்த அவரின் ஞானஸ்நான நற்செய்தி (எபேசியர் 2:14-22)

(எபேசியர் 2:14-22)
“எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப் பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கத்தரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப் பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக் கல்லாயிருக்கிறார்; அவர் மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்”
 
 
வறுமையினால் தத்தெடுக்கப்பட்டப் பிள்ளை
 
அவன் செய்த பாவங்கள்?
கர்த்தரிடமிருந்து மனிதனைப் பிரித்தது எது?
 
கொரிய யுத்தம் முடிந்து அறை நூற்றாண்டு காலம் முடிந்துவிட்டது. ஆனால் அது நிறைய காயங்களை கொரிய மக்களிடம் விட்டுச் சென்றது. கொரிய யுத்தம் முடிந்த பிறகு அநேக சிறுவர்கள் வெளிநாட்டவர்களால் தத்தெடுக்கப்பட்டனர். அந்நேரத்தில் ஐக்கிய நாட்டுப்படை கொரியா வந்து அநேக உதவிகளைச் செய்திருந்தாலும், அவர்கள் சென்றபோது அநேக சிறுவர்கள் தந்தையில்லாதவர்களாயினர்.
அநேக ஐக்கிய நாடுப் படையினர் இங்கு தங்கள் மனைவி மக்களுடன் இருந்த போதிலும் அவர்கள் தம் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லுகையில் அவர்களை இங்கு விட்டுவிட்டுச் சென்றனர். மீண்டும் இக்குழந்தைகள்அவர்கள் தாய்மாரினால் கைவிடப்பட்டு அனாதை ஆசிரமங்களில் சேர்ந்து தத்தெடுக்கும் பொருட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் வளர்ப்பு பெற்றோரைப்பெற்று நன்கு வளரும்படி அதிர்ஷ்டமுடையவர்களாக இருந்தனர்.
அவர்கள் வளர்ந்து வரும்போது, தாம் தம் பெற்றோரைப் போலவோ அல்லது பக்கத்து வீட்டார் போலவோ இன்றி வித்தியாசமான தோற்றம் உள்ளவர்களாக இருப்பதை உணர்ந்து கொண்டனர். மேலும் தாம் அதிகத் தொலைவிலிருக்கும் கொரியா என்ற நாட்டிலிருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்துகொண்டனர். “என் பெற்றோர் ஏன் என்னை கைவிட்டனர்? அவர்கள் என்னை வெறுத்ததனால் தான் என்னை இத்தனை தொலைவிலுள்ள இந்த நாட்டிற்கு அனுப்பினார்களா? அவர்களுடைய இளம் மனதினால் என்ன நடந்ததுன்று அந்த குழந்தைகளால் அறியமுடியவில்லை.
அவர்களுடைய உண்மையான பெற்றோர்கள் மீது ஒரு வித ஆர்வமும் வெறுப்பும் ஒன்றாக அவர்களைச் சந்திக்கும் காத்திருப்புடன் வளர்ந்தது. ‘என்னுடைய பெற்றோர் எப்படியிருப்பார்கள்? அவர்கள் எப்படி என்னைக் கைவிடலாம்? அவர்கள் என்னை வெறுத்தமையால் இப்படிச் செய்தார்களா? இல்லை. இதற்கான ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.` அவர்கள் அநேக தப்பர்த்தங்களையும் அதிக அளவு வெறுப்புடையவர்களாகவும் இருந்தனர். அதனைக் குறித்து எதுவும் நினக்கவேண்டாம் என்றும் சிலவேலைகளில் தீர்மானித்தனர். அவற்றைக் குறித்து முற்றிலும் அறியுமுன்பே, காலம் செல்லச் செல்ல பிள்ளைகள் வாலிபர்களாக வளர்ந்தார்கள். அவர்கள் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று தம் சொந்த குடும்பங்களை நிறுவினர்.
ஒரு உள்ளூர் தொலைகாட்சி நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சியின் மூலம் இக்குழந்தைகள் மீது எனக்கு ஆர்வம் உண்டாயிற்று. இந்நிகழ்ச்சியில், இப்பொழுது ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தத்தெடுக்கப்பட்ட பெண்ணை ஒரு தொலைக்காட்சி நிருபர் பேட்டிக் கண்டார். அந்தப் பெண் இறையியல் படிக்கும் இருபது வயது பெண்ணாவாள். முதலில் தான் ஒரு தத்தெடுக்கப்பட்டவள் என்று யாருக்கும் தெரியக் கூடாதென்று விரும்பியதால் நிருபர்களைச் சந்திப்பதை அறவே தவிர்க்க முயன்றாள். அந்நிருபர் இந்தப் பேட்டியானது வெளிநாட்டவர்கள் தத்தெடுக்கும் அலையினை நிறுத்த உதவும் என்று அவளைப் புரிந்து கொள்ளச் செய்து அவளைச் சம்மதிக்கச் செய்தார். அப்பெண் சம்மதித்தாள்.
நிருபரின் ஒரு கேள்வியானது, “உன்னுடைய உண்மையான பெற்றோரை நீ சந்தித்தால் அவர்களிடம் என்ன பேசுவாய்? எதைத் தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது?” என்பதாயிருந்தது. அப்பெண் பதில் கூறினாள். “அவர்கள் ஏன் என்னைத் தத்தெடுக்கும் நிலையில் விட்டார்கள் என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் என்னை வெறுத்தார்களா என்று கேட்கவேண்டும்.” அவளைப் பெற்றத் தாய் தொலைக்காட்சியில் அப்பெண்ணின் பேட்டியைப் பார்த்து, தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தன் மகளை சந்திக்கவேண்டுமெனக் கூறினாள். இப்படியாகவே இருவரும் சந்தித்தார்கள்.
தாயானவள் மிகவும் நேரத்துடனே விமான நிலையம் சென்று தன் மகளின் வரவிற்காக காத்து நின்றாள். இளம் பெண் வெளியேறும் கதவின் மூலம் வந்த போது, அவள் தாயால் அங்கு நின்று அழ மட்டுமே முடிந்தது.
இந்த இருவரும் இது வரை முகமுகமாகச் சந்தித்ததில்லை. தாய் தன் வளர்ந்த மகள் தொலைக்காட்சியில் வரும்போது அவளைப் பார்த்ததுவே முதல் முறை. அவர்கள் இருவரும் இரு வேறு மொழிகளைப் பேசினாலும், அவர்கள் தம் இருதயங்களால் பேச முடிந்தது. மேலும் தம் உணர்ச்சி மிக்க பார்வைகளின் பரிமாற்ற மூலமும் பேச முடிந்தது. அவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் தொட்டுக் கொண்டனர். அதேசமயம் தாயானவள் தான் செய்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் அழுவதும், சாரி என்று மீண்டும் மீண்டும் கூறுவதேயாகும்.
தாயானவள் தன் மகளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களிருவரும் ஒன்றாகச் சாப்பிட்டவர்கள். மகள் ஜெர்மன் மொழியிலும் தாய் கொரிய மொழியிலும் பேசியதால் பேச்சுமூலமாக அவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளவில்லை. ஆயினும் அவர்கள் தாயும் மகளுமாகையால் அது அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவியது. அவர்கள் வார்த்தைகளின்றி அநேக சம்பாஷனைகளில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் சைகைகளின் மூலமாக தம்மை வெளிப்படுத்தியும், ஒருவரின் முகத்தை மற்றவர் தொட்டும் கண்களினாலும் தம் இருதயங்களினாலும் பேசினார்கள்.
அவள் ஜெர்மனிக்கு திரும்பும்போது, தன் தாய் தன்னை நேசித்தாள் என்பது அவளிற்கு தெரிந்திருந்தது. அவளைப் பேட்டிக் கண்ட அதே நிருபர் அவள் புறப்படும் முன் மீண்டும் அவளிடம் பேசினார். “ஏன் என்னைத் தத்தெடுக்கும்படி விட்டாய் என்று என் தாயிடம் நான் கேட்கத் தேவையில்லை. இப்பொழுதும் கூட என் தாய் வறுமையிலேயே வாழ்கிறாள். இந்நாட்டிலுள்ள செல்வந்தர்கள் வெளிநாட்டுக் கார்களை ஓட்டுமளவிற்கு பணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் என் தாய் இன்னும் வறுமையிலேயே வாழுகிறாள்.” அவள் மேலும் கூறினாள், “நான் அந்தக் கேள்வியை என் அம்மாவிடம் கேட்டு அதற்கான பதிலைப் பெறாவிட்டாலும், என்னை வறுமையிலிருந்து தப்புவிக்கவே என்னை அவள் வெளியே அனுப்பினாள் என்று தெரிந்துகொண்டேன். அதனாலேயே அக்கேள்வியை அவளிடம் கேட்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை, மேலும் என் எல்லா சந்தேகங்களும் வெறுப்பும் என்னை விட்டுப் போயின.”
 
 
தம் இருதயத்திலுள்ள பாவங்களினிமித்தம் மக்கள் கர்த்தரிடமிருந்து தூரமாகிப் போனார்கள்
 
நாம் எப்படி கர்த்தரிடமிருந்து பிரிந்து அவரிடம் சேரக்கூடாதவர்களானோம்? தத்தெடுக்கும்படியாக விடப்பட்ட பெண் தன் தாய் வறுமையிலிருந்து அவளைக் காப்பாற்றும் பொருட்டு அப்படிச் செய்ததைத் தெரிந்துக் கொண்டாள். இது கர்த்தரைப் பொருத்த மட்டில் உண்மையா? கர்த்தர் நம்மைத் தம் சாயாலாகவேப் படைத்தார். நம்மை அவனிடமிருந்து பிரித்தது எது? இதற்கான பதில், சாத்தான் மனிதனை பாவம் செய்யும்படி இச்சிக்கச் செய்தான், பாவம் நம்மைக் கர்த்தரிடமிருந்து பிரித்தது.
முதன் முதலில் கர்த்தர் மனிதனைத் தன் சாயலாகவேப் படைத்து, தம் படைப்பின் மீது அன்பு கூர்ந்தார். கர்த்தரால் அன்பு செலுத்தும் ஒரு பொருளாக மனிதன் படைக்கப்பட்டு மற்ற எல்லாப் படைப்புகளிலிருந்தும் உயர்ந்தவனாக இருந்தான். ஆயினும், சாத்தான் என்று பெயர் பெற்ற விழுந்துபோன தேவதூதனொருவன் மனிதனைக் கர்த்தரிடமிருந்து பிரிக்க வேலைச் செய்தான். சாத்தான் மனிதனை கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்காமலிருக்கும்படி இச்சைக்குட் படுத்தினான். மேலும் நன்மைத் தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனிகளை அவன் சாப்பிடும்படிச் செய்தான்.
அவனின் பாவத்தினால், இப்படியாக மனிதன் கர்த்தரிடமிருந்து பிரிக்கப்பட்டான். மனிதன் கர்த்தருக்கு கீழ்படியாதவனாக இருந்தான். மனிதன் கர்த்தர் அனுமதித்த நித்திய ஜீவனைத் தரும் ஜீவ விருட்சத்தின் கனிகளைச் சாப்பிடவில்லை. ஆனால், அதற்கு பதிலாக நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தின், வேண்டாம் என்று கூறப்பட்ட கனியை உண்டான். இதன் விளைவு மனிதன் கர்த்தரிடமிருந்து பிரிந்து போனதாகும்.
முன்பு கர்த்தரின் அன்புக்கு பாத்திரமாயிருந்த மனிதன் கீழ்படியாமையால், தன் மூர்க்கத்தனத்தினால் கர்த்தரிடமிருந்து பிரிந்தான். அவன் இருதயத்தில் குடி கொள்ளவந்த பாவத்தினால், மனிதன் கர்த்தரிடமிருந்து பிரிக்கப்பட்டான். அதன் பிறகு, வெகுகாலமாக மனிதன் கர்த்தரிடமிருந்து தனியாக வாழ்ந்து அவரைக் குறித்து முனுமுனுக்கத் தொடங்கினான். “கர்த்தர் நம்மைப் படைத்த பிறகு அவர் ஏன் கைவிட்டார்? நாம் பாவம் செய்ய அவர் எப்படி அனுமதியளித்தார்? நம்மை பலவீனராக்கி நரகத்திற்கேன் அனுப்பினார்? அவர் நம்மைப் படைக்காமலிருந்தால் அதிக நலமாயிருந்திருக்கும்.” நாம் மறுபடியும் பிறக்கும் முன் அநேக கேள்விகளுடனும் ஆர்வங்களுடனும், சந்தேகம் மற்றும் வெறுப்புடன் வாழ்ந்தோம்.
தத்தெடுக்கப்பட்ட பெண்ணை தொலைகாட்சி நிகழ்ச்சியில் நான் கண்டபோது, அப்பெண் தன் சொந்தத் தாயுடன் கொண்டிருந்த உறவினைப் போலவே மனிதனுக்கும் கர்த்தருக்கும் உறவு இருந்ததை உணர்ந்துக் கொண்டேன். எந்தச் சோதனையே, தவறாகப் புரிந்து கொள்வதோ, சாபமோ அல்லது எந்த விதமான பாவங்களோ எத்தகையச் சூழ்நிலையிலும் மனிதனைக் கர்த்தரிடமிருந்து பிரிக்க முடியாது. கர்த்தருக்கும் மனிதனுக்குமுள்ள உறவு அன்பின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், தவறாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதைப் புரிந்து கொண்டேன். 
அத்தாய் வெறுப்பின் நிமித்தம் தன் மகளை அனுப்பாததைப் போன்றே, கர்த்தர், மனிதனிலிருந்து வெறுப்பினால் பிரியவில்லை. ஆனால் பாவம் அப்படிச் செய்தது. கர்த்தர் மனிதனை வெறுப்பதற்கோ அல்லது மனிதன் கர்த்தரை வெறுப்பதற்கோ காரணங்கள் ஏதுமில்லை. நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கிறோம். சாத்தானின் தந்திரத்தில் அகப்பட்டு பாவியாகிப் போனதே மனிதன் கர்த்தரிடமிருந்து பிரிந்துப் போனதற்கான காரணம்.
 
 
கர்த்தர் நம்மை இயேசு மூலம் அணைத்துக் கொண்டார்
 
“முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப் பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி” (எபேசியர் 2:13-15). யோவானால் கர்த்தர் ஞானஸ்நானம் பெற்று நியாயப் பிரமாணங்களை களையும் படியாக உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். மனிதனை அவன் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் படியாக தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தி, கர்த்தர் மனிதனை அணைத்துக் கொள்ளும்படிச் செய்தார். அவரால் சுத்திகரிக்கப் பட்டவர்களைக் கர்த்தர் அரவணைத்துக் கொள்கிறார்.
நீரில்லாத உலகத்தை நீங்கள் கற்பனைச் செய்ததுண்டா? சில காலங்களுக்கு முன் கொரியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகிய இன்சான் என்னும் நகரத்தில் நடைப்பெற்ற வேதாகமக் கூட்டம் ஒன்றிற்குச் சென்றேன். அங்கு அந்த சமயத்தில் சில நாட்களாக குழாயில் தண்ணீர் வரவில்லை. நான் நினைத்தேன், “மனிதர்கள் நீரின்றி வாழ முடியாது.”
ஒரு மாத காலம் கர்த்தர் இவ்வுலகில் நீரில்லாமல் செய்தால், நாற்றம், குப்பை, மற்றும் தாகம் ஆகியவற்றால் நகரங்களில் வாழ்வது இயலாததாகிவிடும். கர்த்தர் நமக்களித்த நீரின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நீரானது மனிதர்களுக்கு எத்தனை அவசியமானதோ, அப்படியே, யோர்தான் நதியில் யோவான் மூலம் இயேசு பெற்ற ஞானஸ்நானமும் இன்றியமையாதது.
யோவானால் ஞானஸ்நானம் பெறும் பொருட்டு இயேசு இவ்வுலகினுள் வரவில்லை யென்றால், இயேசுவை விசுவாசிப்பவர்கள் பாவ மன்னிப்பை எங்ஙனம் பெற முடியும்? நீரில்லாவிட்டால் மக்களால் எப்படி வாழ முடியாதோ, அப்படியே, யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்திராவிட்டால் உலக மக்கள் தங்கள் பாவத்தினால் மரித்திருப்பர்.
ஆயினும், இயேசுவின் ஞானஸ்நானம் நம் பாவங்களனைத்தையும் எடுத்துப் போட்டது, நம்முடைய இருதயங்கள் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிப்பினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்று நாம் உறுதியாக உணரலாம். நம் விசுவாசத்திற்கு இயேசுவின் ஞானஸ்நானம் தேவையானது. அதற்கு மேலும், பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றுக்கொள்ள அவரின் ஞானஸ்நானம் இன்றியமையாதது.
இயேசுவின் சீடனாகிய, பேதுரு கூறுகிறான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல் மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்போழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது” (1 பேதுரு 3:21). பேதுருவின் வாக்கியம் கூறுகிறது, இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் படியாகத் தம் இரத்தத்தைச் சிந்தினார். உலகின் பாவங்களையெல்லாம் கழுவிய இயேசுவின் ஞானஸ்நானமே உண்மையான நற்செய்தியாகும்.
வெண்கலத்தொட்டியைப் பற்றி யாத்திராகமம் 30:17-21 இல் உள்ள வசனங்களைப் பார்ப்போம். “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி; கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக. அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக் கடவர்கள். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலி பீடத்தினிடத்தில் ஆராதனை செய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக் கடவர்கள். அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக் கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கு அவன் சந்ததியாருக்கும் நித்தியக் கட்டளையாயிருக்கும் என்றார்.”
ஆசரிப்புக் கூடாரத்திலே வெண்கலத் தொட்டி ஒன்றிருந்தது, அது ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் நடுவே இருந்தது. அதில் கழுவுவதற்காக நீர் இருந்தது. இந்த தொட்டி ஆசரிப்புக் கூடத்தில் இருந்திராவிட்டால், பலி செலுத்தும் ஆசாரியர்கள் எத்தனை அழுக்கு நிறைந்தவர்களாக இருந்திருப்பர்.
மக்களுக்காக அன்றாடப் பாவபலிகளை ஏறெடுக்கும் ஆசாரியர்கள் மீது, பாவபலியின் மீது கைவைத்து அதனைக் கொல்வதன் மூலம் எத்தனை இரத்தமும் அழுக்கும் படிந்திருக்கும்? ஆசரிப்புக் கூடாரத்தில் இந்த வெண்கலபாத்திரம் இல்லாதிருந்தால் ஆசாரியன் அதிகம் அழுக்குப் படிந்தவனாயிருப்பான்.
கர்த்தரின் அருகில் அவர்கள் வரும்போது சுத்தமான கைகளுடன் அவர்கள் வரும்பொருட்டு அவர்களுக்கு கர்த்தர் இந்தத் தொட்டியை ஆயத்தஞ் செய்தார். தம் கையை பலி மிருகத்தின் தலை மீது வைப்பதன் மூலம் பாவிகள் தம் பாவங்களை அதின் மேல் சுமத்தினர். அவர்கள் சார்பாக ஆசாரியர்கள் கர்த்தரிற்கு அவற்றைப் பலியிட்டார்கள். கர்த்தர் இந்த வெண்கலத் தொட்டியை, ஆசாரியர்கள் சாகாமலிருக்கும் பொருட்டு, தம் கைகளை கழுவி பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்படியாக, ஆயத்தஞ்செய்தார். மிருகத்தின் இரத்தம் படிந்திருக்கும்போது ஆசாரியர்களாலேயே பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடியவில்லை. இதனாலேயே மக்களுக்காக பலிகளை ஏறெடுத்தபின் கர்த்தரினருகில் செல்வதற்காக ஆசாரியர்கள் தொட்டியிலுள்ள நீரினால் அழுக்கையெல்லாம் கழுவ வேண்டியிருந்தது.
 
 
உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் கழுவியது
 
யோர்தான் நதியில் யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது இடமாற்றம் செய்யப்பட்டது. அவர் முற்றிலுமாக நீரில் மூழ்கியது அவரின் மரணத்தையும், அவர் நீரிலிருந்து வெளியே வந்தது அவர் உயிரோடெழும்பியதையும் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் உலகின் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொள்ள இயேசுவானவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்று அதற்கு கிரயஞ் செலுத்த சிலுவையில் மரித்தார். அவருடைய மரணம் நம் பாவங்களிற்கான கூரையையும் அவர் உயிரோடெழும்பியது நமக்கு நித்திய ஜீவனையும் அளித்தது.
இயேசு தன் ஞானஸ்நானம் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்பதை நாம் விசுவாசித்திராவிட்டால், நம்மிருதயங்கள் பாவம் நிரம்பியதாக இருந்திருக்கும், அப்பொழுது, நாமெப்படி கர்த்தரின் அருகில் செல்லமுடியும்? பாவ மன்னிப்பின் நற்செய்தியானது ஒரு பிரிவின் கொள்கையல்ல அது கர்த்தரின் சத்தியமாகும்.
முழுமையான அறிவில்லாமல் நம் விசுவாசத்தை வழி நடத்த முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மீது நாம் கவனம் செலுத்தவில்லையென்றால் நம்மால் உலகை மேற்கொள்ள முடியாது. தம்முடைய உயிரைத் தக்க வைத்துக்கொள்ள எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீரானது அவசியமானது போல், நமக்கு பாவ மன்னிப்பும் இயேசுவின் ஞானஸ்நான நீரும் விசுவாச வாழ்வு வாழவும் பரலோக இராஜ்யத்தினுள் நுழையவும் அவசியாமாகிறது. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் பொருட்டு, இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்து மீண்டும் உயிரோடெழும்ப வேண்டியதாயிருந்தது. இதுவே நாம் நம் முழு இருதயத்துடனும் விசுவாசிக்க வேண்டிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும்.
இயேசு சிலுவையில் மரிக்கும் படியாக அறையப்பட்டாலும் அத்தகையத் தண்டனை பெறும்படி அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. நம்முடைய பாவங்களைக் கழுவும் பொருட்டு அவர் இவ்வுலகினுள் வந்தார். 30 ஆம் வயதில் ஞானஸ்நானம் பெற்றார். 33 ஆம் வயதில் அவர் சிலுவையில் மரித்ததன் மூலம் நம் இரட்சகரானார். நாம் எத்தனை உடைந்துபோகிறவர்களாகவும் பாவிகளாகவும் இருந்தாலும் மனித குலத்தை தம் பிள்ளைகளாக்கவே கர்த்தர் விரும்பினார். அதனாலேயே இயேசு ஞானஸ்நானம் பெற்றார். கர்த்தர் நமக்கு பாவமன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரின் வரத்தையும் ஒரே நேரத்தில் தந்தார்.
“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்” (யோவான் 3:3-5). நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவும் பொருட்டு இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்பதை நீஙகள் அறிந்து விசுவாசிக்க வேண்டும். ஒரு, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும் கூட அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் இயேசுகிறிஸ்து எடுத்துப்போட்டார் என்ற உண்மையை தியானிக்காவிட்டால் சீக்கிரமாகவே அவனிருதயத்தில் கறைபடும். நாம் இவ்வுலகத்தினர் ஆனபடியால், நம் தின வாழ்க்கை மூலமாக நாம் கறைபடக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆகவே நாம் எப்பொழுதும் விசுவாசத்தில் வாழவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் அவர் இரத்தம், அவர் உயிரோடெழும்பியது ஆகியவற்றை எல்லாம் தியானிக்க வேண்டும். இந்நம்பிக்கை நாம் பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் நாள் வரை நம்மை நிலைப்படுத்தும்.
இயேசுவிற்கு ஞானஸ்நானம் பெற்று இறப்பதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. ஆகவே, நாம் அவர் அப்படிச் செய்ததன் மூலம் நமக்கு இரட்சிப்பை பெற்றுத் தந்தார் என்பதை விசுவாசிக்கவேண்டும். உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாகும் பொருட்டு இந்த அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ய வேண்டியதில்லை.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை வழங்கிய கர்த்தருக்கு நாம் நன்றி கூறுகிறோம். கர்த்தர் நமக்களித்த மிகப்பெரிய பரிசு யாதெனில், அவர் தம் ஒரே பேறான குமாரனை அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலமாக நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும்படியாக அனுப்பியதே ஆகும்.
நாம் கர்த்தருடன் நெருங்கி சேரமுடியாமைக்கும் அவரிடமிருந்து தூரமாக வாழ்வதற்குமான காரணம் நம் இருதயங்களில் பாவமிருப்பதே. உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது ஏற்றுக்கொள்ளவே யோவானால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றார். கர்த்தரிற்கும் மனிதனிற்கும் இடையே உள்ள சுவற்றை தகர்த்தெரியவே அவர் சிலுவையில் மரித்தார். கர்த்தருக்கும் மனிதனுக்குமான உறவு அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலமாக மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இந்த வெகுமதிகளுக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம், உலகின் பெற்றோர் தம் பிள்ளைகள் மேல் காட்டும் அன்பு பெரியது. ஆனால் இயேசுவால் பாவிகளை இரட்சித்த கர்த்தரின் அன்பு ஈடு இணையற்றது.
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய இரண்டுமே முக்கியமானவைகள். உலகில் நீரில்லையெனில் உயிருள்ள எதுவும் பிழைத்திருக்க முடியுமா? இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாது தன்னிருதயத்தில் பாவமில்லாத ஒரு மனிதனும் இருக்க முடியாது. இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இறந்திருக்க வில்லையெனில், யாரொருவரும் பாவ மன்னிப்பைப் பெற்றிருக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக இயேசு ஞானஸ்நானம் பெற்று நமது விலையேறப்பெற்ற பலியானார். நாம் குறைவுள்ளவர்களாகவும் தவறு செய்யக்கூடியவர்களாகவும் இருந்தாலும் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.
இயசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றை விசுவாசிக்கும் மக்கள் கர்த்தருக்கு நெருக்கமாகவும் அவரை ஜெபிக்கவும் புகழவும் முடியும். இப்பொழுது நம்மால் கர்த்தரைப் புகழவும் அவரை ஆராதிக்க முடிவதற்குமான காரணம் நாம் அவரின் பிள்ளைகளானதே. இது கர்த்தரின் கிருபையும் ஆசீர்வாதமுமாகும். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை உண்மையாகவே அதிசயமானவை. நாமெல்லாரும் இரட்சிப்பையும் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்வதையும் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பெறலாம்.