(எபேசியர் 5:6-18)
“இப்படிப் பட்டவைகளினிமித்தமாக கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள்; இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்து கொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்போழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்து கொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல் ஆவியினால் நிறைந்து.”
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த நம் வாழ்க்கையை பராமரிக்க நாம் என்ன செய்யவேண்டும்?
நம்மை நாமே வெறுத்து, சிலுவையை சுமந்து, நம் தீய சிந்தனைகளை மறுத்து, நற்செய்தியைப் பிரசங்கிக்க நம்மை அர்ப்பணிக்கவேண்டும்.
“பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையைப் பராமரிக்க,” நற்செய்தியை பிரசங்கிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ, பரிசுத்த ஆவியானவரை நம் இருதயத்தில் வாசஞ்செய்யப் பண்ணும் ஆசீர்வாதத்தை முதலில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப்பெற இத்தகைய விசுவாசம் நம்மிடம் இருக்கவேண்டும். அதாவது, கர்த்தர் நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முதலில் விசுவாசிக்க வேண்டும். இந்த விசுவாசம் இருக்கும்போது, பரிசுத்த ஆவியானவரை நம்மில் சஞ்சரிக்கச் செய்யும் ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம்.
பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப் பட்டவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை அவசியமா? ஆம் அவர்கள் அப்படி இருக்க வேண்டும். ஆனால் அவர்களில் சிலரால் இத்தகைய வாழ்வு வாழமுடியாததேன்? அதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய சொந்தப் பிரச்சினைகள் கர்த்தரின் கிரியைகளை முந்துவதாகும். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை நாம் பராமரிக்க வேண்டுமானால், நாம் வேதவாக்கைக் கற்று அதனை விசுவாசிக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில், எத்தகைய வாழ்வையும் நம்பிக்கையையும் நாம் பெற்றிருக்க வேண்டுமென்று வேதாகமத்தைப் பார்ப்போம்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை சில மனிதர்களால் வாழ முடியாததற்கு காரணம் என்ன?
முதலில், அவர்கள் தம்மைத் தாமே வெறுக்காமையே காரணம் என்று நாம் கூறமுடியும். தன்னை வெறுப்பவனே கர்த்தருடன் நடக்கமுடியும் என்று வேதாகமம் கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை ஒருவனின் சொந்த பலத்தினால் வெற்றிக் கொள்வது இயலாதகையால், தன்னை வெறுக்கும் பொருட்டு பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதை ஒவ்வொருவரும் விசுவாசிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யப்பெற்ற சிலரால் கூட, கர்த்தரின் ராஜ்யம் குறித்த வாஞ்சையில்லாவிட்டால் தம்மை வெறுப்பது அவர்களுக்கு மிகக் கடினாமான காரியம். ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை வாழும் பொருட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு பணி செய்யவேண்டும். அப்பொழுது மாத்திரமே ஒருவன் தன்னை வெறுத்து நீதியின் சேவகனாக வாழ முடியும்.
மத்தேயு 16:24-26 கூறுகிறது, “அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”
மறுபடியும் பிறந்த சில மனிதர்களால் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்வை வாழமுடியாமைக்கான காரணம் என்னவென்றால் அவர்களால் தம் மாமிச இச்சையை மறுக்க முடியாமையே. பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப் பெற்ற மக்கள் கூட தம் மாம்ச இச்சையை விட்டால் தான் பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்ற முடியும். கர்த்தரைப் பின்பற்ற வேண்டுமானால் நம் வாழ்விலிருக்கும் அநேக மாம்ச சம்பந்தப்பட்ட காரியங்களை நாம் விட்டுவிடவேண்டும். கர்த்தர் கூறினார், “அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்.”
சரீர சம்பந்தமுள்ள இன்ப உணர்ச்சி உள்ளவர்களுக்கோ மரணம், ஆனால் ஆவிக்குரிய மனமுள்ளவர்களுக்கோ ஜீவனும் சமாதானமும் உண்டாயிருக்கிறது. ஆவிக்கேற்றபடி நடக்க விரும்பும் மக்கள் மாம்சத்தின்படி வாழ்வதை வெறுக்க வேண்டும். இந்த துணிச்சலான பலியைச் செலுத்தும் ஒருவனாலேயே பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை பராமரிக்க முடியும். இதுவே பரிசுத்த ஆவியானவர் முழுமை பெறும் சத்தியம்.
எதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள், கர்த்தரையா அல்லது உலகத்தையா? உங்களுடைய தேர்வைப் பொறுத்து, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையையோ, அல்லது இச்சைகள் நிறைந்த வாழ்வையோ உங்களுடையதாக்கிக் கொள்வீர்கள். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை உண்மையாகவே நீ விரும்பினால், அதனைத் தேர்ந்தெடுப்பது நீயே. கர்த்தர் நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்து பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதை நமக்கு பரிசாக அளித்தார். ஆனல் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என்பதை நீ தீர்மானிக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து வாழும் வாழ்வைப் பெற கர்த்தர் யாரையும் தெரிந்தெடுக்கவே முன்குறிக்கவோ இல்லை. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம்முடைய சித்தத்தைப் பொறுத்தே பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்வு அமையும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழ நீ சித்தமாயிருக்கவேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழ நீ சித்தமாயிருந்தால் கர்த்தர் அதனை அனுமதிப்பார். அவர் உனக்கு உதவிகளைச் செய்து உன்னை ஆசீர்வதிப்பார். அது உனக்கு வேண்டாமென்றால், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து வாழும் வாழ்க்கையை நீ விட்டு விடவேண்டும்.
“நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமே பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ள முடியுமே தவிர அது உன் சித்தப்படியல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை பராமரிப்பது முற்றிலும் உன் விருப்பம்.
ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை உனக்கு வேண்டுமானல், உன்னுடைய சொந்த விருப்பத்தை சோதித்து கர்த்தரின் உதவியைக் கேள். உண்மையாகவே நாம் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்வு வாழ விரும்பினால், கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து நம் விருப்பங்களை நிறைவேற்றுவார். ஆனால் நம் இலக்கை அடையும் பொருட்டு, மாம்ச இச்சையை மறுக்கவேண்டும்.
இரண்டாவதாக, நாம் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டுமானால் நம் சொந்த சிலுவையை சுமக்கவேண்டும். கடினமான சூழ்நிலையில் கூட கர்த்தரின் சித்தப்படி நடந்து வாழவேண்டும். இதுவே பரிசுத்த ஆவியானவரில் நிறைந்த நீதியின் வாழ்க்கை என்பதன் பொருளாகும்.
மூன்றாவதாக, கர்த்தர் கூறினார், “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” இதன் பொருள் தேவனைப் பின்பற்றுதல் நம் வாழ்விலிருந்து வேறுபடுகின்றது. குறிப்பாக, நாம் அவரைப் பின்பற்றினால் நம் ஆவியின் மாமிசமும் செழித்திருக்கும், ஆனால் நாம் அவரைப் பின்பற்ற விரும்பாது சொந்த வாழ்வு வாழ்வதை நாம் தேர்ந்தெடுத்தால், நம் ஆவியும் மாமிசமும் நாசமடையும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை நம்மால் ஏன் வாழ முடியாது? அதன் காரணம் என்னவெனில், நம் சிந்தனைகளான, மாம்ச இச்சையை மறுப்பதில்லை. நாம் இயேசுவைப் பின்பற்றும்போது ஆவியானவர் நம் உள் மனிதனை உறுதிப்படுத்துவதால், அவரால் நம்மை பலத்துடன் வழி நடத்த முடியும்.
எபேசியர் 5:11-13 கூறுகிறது, “கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்து கொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.” கிறிஸ்தவர்கள் கனியற்ற அந்தகாரக் கிரியைகளுடன் உறவாடக் கூடாது. ஆனால் நாம் கனியற்ற அந்தகாரக் கிரியைகளில் ஈடுபடும்போது, அதை வெளிப்படுத்தும்படி கர்த்தர் கூறுகிறார். நாம் அந்தகாரத்தில் செய்யும் கிரியைகளைக் கடிந்து கொள்ளவேண்டும், ஏனெனில், அத்தகைய காரியங்கள் இரகசியமாக அவர்களால் செய்யப்படுகின்றன. அவற்றைப் பேசுவது கூட வெட்கக் கேடானது. ஆனால், வெளியே தெரிந்த காரியங்கள் எல்லாம் ஒளியினால் பிரகடனம் செய்யப்படுகிறது.
இத்தகைய வெட்கக் கேடானவைகளை வெளிப் படுத்தக் கூடியதும் பேசக்கூடியதும் யார்? மற்றவர்கள் என்றால், உன் சகோதரர்களோ, சகோதரிகளோ அல்லது கர்த்தரின் ஊழியர்களாலோ இவற்றை வெளிப்படுத்த முடியாது, நீயே இவற்றை வெளிப்படுத்த வேண்டும். வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே நம் தீய செய்கைகள் சரியானவையல்ல என்றும், நம் மூலமாகவோ அல்லது நம்மை தலைமைத் தாங்குபவர் மூலமாகவோ, நம்முடைய கனியற்ற அந்தகாரக் கிரியைகளை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துமாறு வழிநடத்த வேண்டும்.
இந்த உலகில், வெளியரங்கமாகியவையெல்லாம் கடிந்து கொள்ளப்பட்டது. ஆனால் கர்த்தரின் உலகத்தில் வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. நாம் சரியான நிலைக்கு மிகத் தொலைவிலிருப்பதால், நம்மை அறியாமலேயே இவ்வுலகில் அநேக பாவங்களைச் செய்கிறோம். ஆயினும், வேதவாக்காகிய வெளிச்சத்தை நம்மீது விழச்செய்தால், சில பாவங்களைக் குறித்து தெரிந்து அவற்றை ஒப்புக்கொள்ள முடியும். இப்படியாக முடிவில்லாத நன்றிகளை கர்த்தருக்குச் செலுத்துகிறோம்.
இயேசு நம் எல்லாப் பாவங்களையும் மீறுதல்களையும் எடுத்துப் போட்டதாலும், அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது, கர்த்தரின் எல்லா நீதிகளும் நிறைவேறியதாலும், கர்த்தரின் நீதியின் மூலமாக, வெளிச்சத்தினால், நாம் வெளிப்படுத்த முடிகிறது. யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது கோடிக்கணக்கான மனிதர்கள் செய்த பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. அவரே, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாகி, அவற்றிற்கு தீர்ப்பாக சிலுவையில் மரித்து மீண்டும் உயிரோடெழும்பினார். இயேசு மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிட்டார். “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) என்று அவர் கூறியதன் மூலம் மனிதகுலம் முழுவதும் இரட்சிக்கப்பட்டது. இயேசு செய்தவைகளின் மீது நாம் நம்பிக்கை வைப்பதன் மூலம் நாம் பரிசுத்தமடைகிறோம். நம்முடையப் பாவங்கள் மன்னிக்கப்பட்டதால் நம்மால் மீண்டும் வெளிச்சத்திற்குள் வந்து கர்த்தரை நீதியுடன் பின்பற்ற முடிகிறது.
காலத்தைப் பிரயோஜனப் படுத்திக் கொள்ளுமாறு கர்த்தர் கூறுகிறார்
பரிசுத்த ஆவியால் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று பவுல் கூறுகிறான். எபேசியர் 5:16-17 கூறுகிறது. “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்.” நாம் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கை வாழவேண்டுமென்றால், புத்தியில்லாதவர்களாக இருக்காமல், காலத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கவேண்டும். கர்த்தரின் சித்தம் என்னவென்பதை அறிந்து அதன்படி செய்யவேண்டும். மாம்சத்திற்கேதுவான வாழ்க்கையா அல்லது கர்த்தருக்கு அர்ப்பணித்த வாழ்க்கையா: எது சிறந்தது என்று நாம் முடிவு செய்யவேண்டும்.
நாம் மறுபடியும் பிறந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் நம்மில் சஞ்சரிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பெற்றோமானால், அதன் பொருள் கர்த்தர் நம் எஜமானரும் நம் அரசருமாக இருக்கிறார் என்பதாகும். அவரே நம் ஒரே இரட்சகர், நாம் அவரை நம் கர்த்தராக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரே நம் ஒரே எஜமானர். அவரே நம்மைப் படைத்த ஒரே எஜமானர். அவர் என்னுடைய பாவங்களை மன்னித்து என்னை ஆசீர்வதித்தார். அவரே என் அரசராக இருந்து என்னுடைய வாழ்வானாலும் சரி சாவானாலும் சரி, ஆசீர்வாதமாக இருந்தாலும் சரி சாபமாக இருந்தாலும் சரி அதனை அரசாள்வது அவரே. கர்த்தரே நம் எஜமானர் என்பதை ஒப்புக்கொண்டு நம் வாழ்நாள் முழுவதும் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்.
பிலிப்பியர் 2:5-11 என்ன கூறுகிறது என்று பார்ப்போம். “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”
பவுல் கூறினான், “இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.” இதுவே இயேசுகிறிஸ்துவின் இருதயம் என்று அவன் கூறினான். பவுல் இயேசுவின் “இந்த சிந்தை” என்றுக் கூறினான். அவரே கர்த்தர், நம்மைப் படைத்தவர், தன் பிதாவின் சித்தப்படி அவர் தம் மக்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி இவ்வுலகிற்கு வந்தார். தேவன் இவ்வுலகிற்கு வந்து யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானம் மூலம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். அவர் சிலுவையில் மரித்தபோது இவ்வுலகின் பாவங்களும் அவருடன் ஒழிந்து போயின, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிரோடெழுந்து நம் இரட்சகரானார்.
நம்மைப் படைத்த, இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்த காரணம் நம்மை இரட்சிப்பதே. அவர் தம் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மூலமாக தம் அன்பினை நமக்கு காண்பித்தார். அவரே படைத்தவராக இருந்தாலும் தம்மையே படைக்கப்பட்டது போல் தாழ்த்தி பாவங்களிலிருந்து மன்னிப்பை நமக்கு வழங்கிய அவரின் அன்பை வியந்து, படைக்கப்பட்டவைகள் அவர் முன்பு முழங்கால் படியிடவேண்டும். அதனாலேயே படைக்கப் பட்டவைகள் எல்லாம் அவரே உண்மை இரட்சகர் என்று அறிக்கைச் செய்யவேண்டும். அவர் நம்மைப் படைத்த கர்த்தர் மட்டுமல்ல அவரே, நமக்கு மிக உயர்ந்த நீதியின் கர்த்தராக இருக்கிறார் என்று நம்மை அறிக்கையிடச் செய்தார்.
நாம், கர்த்தரை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றுக் கொண்ட நாம், “கர்த்தரே என் உண்மையான ஒரே எஜமானர்” என்று விசுவாசித்து இயேசுகிறிஸ்துவை நம் இருதயத்தில் அன்பு செலுத்தவேண்டும். நம்முடைய எஜமானர் நாமல்ல அது இயேசுகிறிஸ்துவே என்ற விசுவாசம் நம்மில் இருக்கவேண்டும். அவரே நம்மைப் படைத்தவரும் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தவராகவும் இருக்கிறார். அவரே எஜமானர் என்றும் ஆசீர்வாதமான புதிய வாழ்வை நமக்கு ஏற்படுத்தி வாழச் செய்தார் என்றும் நமக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து, நமக்காக வேலைசெய்கிறார் என்பதை நாம் விசுவாசித்தேயாக வேண்டும்.
அநேக மக்கள் தாம் மறுபடியும் பிறந்த பிறகு கூட தம் எஜமானரை மாற்ற விரும்புவதில்லை. அநேகர் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெற்றாலும், அவர்கள் தமக்குத்தானே எஜமானர்களாக இருப்பதாக கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கையே கர்த்தரைப் பின்பற்றும் வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்க்கையை ஒரே நாளில் சம்பாதிக்க முடியாது. ஆனால் இயேசுவே நம் வாழ்வின் எஜமானர், அவரே நம்மையும் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் படைத்தவர் என்று நாம் விசுவாசிக்கும்போது அது சாத்தியமாகிறது. நம் கர்த்தராகிய இயேசுவை ஆராதிக்க நம்மிடம் விசுவாசமிருக்கவேண்டும். அவரே நம் எஜமானரும் கர்த்தரும், நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தவரும் பரலோக ராஜ்யத்தில் நித்திய ஜீவனுடன் வாழ்வதையும் தந்தவர்.
நம் மனதில் இந்த உண்மையை பெற்றிருக்க வேண்டும். அநேகர் தமக்குத்தாமே எஜமானர்களாக வாழுகின்றனர். அவர்கள் தம்மை ஆளுவதை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். ஆகையால் இப்போதே நம் எஜமானரை மாற்றிக்கொள்ள சரியான சமயம், நாம் கர்த்தரைக் குறித்து நன்கு தெரிந்தவர்களானோம். ஆகவே, நம்முடைய எஜமானர் கர்த்தராகவே இருக்கவேண்டும்.
நம் எல்லோருடைய இருதயங்களிலும் பாவமிருக்கின்றது. நம்முடைய தவறான செய்கைகளுக்காக நாம் நரகாக்கினை பெற வேண்டியவர்கள். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் கர்த்தரைக் கண்டுகொண்டோம். கர்த்தர் நம்மை மிகவும் நேசித்தார். அவர் இவ்வுலகிற்கு வந்து யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நம்முடைய உண்மையான இரட்சகராகும் பொருட்டு சிலுவையில் மரித்தார். கர்த்தர் மீதுள்ள நம் விசுவாசத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் விடுதலையடைந்தோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்யப்பெற்றோம்.
வேதாகமம் கூறுகிறது, “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” ( ரோமர் 8:9 ) நாம் அவருடைய பாவ விடுதலையை பெற்றுக்கொண்டபோது, அதாவது பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதைப் பெற்றுக் கொண்டபோது, நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம். பரிசுத்த ஆவியானவர் நம் கர்த்தர் மேலும் பரிசுத்த ஆவியானவர் குறிப்பது போல் கர்த்தரின் நீதியில் நாம் நடக்கவேண்டும். அப்படி வாழ்வதற்கு, நம் மீதான நம்மின் எஜமானத்துவத்தை விட்டுவிடவேண்டும். நாம் இயேசுவை சந்தித்து அவரல் விடுதலைப் பெற்ற பின்பு, அவரையே, நம் ஒரே எஜமானராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
நம் இருதய சிம்மாசனத்தை இயேசுவிடம் ஒப்படைக்கவேண்டும்
நம்முடைய வாழ்க்கைக்கு நாமே எஜமானர்களாக இருந்தால் கர்த்தரைப் பின்பற்ற முடியாது. நாம் நம்முடைய எஜமானர்களாயிராவிட்டால் கர்த்தர் அவருக்கு பணிசெய்ய கட்டளையிடும்போது “ஆமாம்” என்று எந்த தாமதமும் இன்றி கூறுவோம். இல்லையென்றால், “நான் அதையேன் உமக்குச் செய்யவேண்டும்?” என்று கூறுவோம். தனக்குத்தானே எஜமானாயிருப்பவன் “அவர் தனக்கு வேண்டியதை என்னிடம் வேண்டுகோளாக கேட்க வேண்டும்” என்றெண்ணி கர்த்தர் அவன் செய்யப் பணித்ததை செய்ய மறுப்பான். அத்தகைய மனிதனுக்கு, கர்த்தரின் போதனைகள் கிலேசத்தை உண்டு பண்ணுபவையாகவும் உள்ளன.
ஆயினும், பரிசுத்த ஆவியானவரால் நாம் நிரப்பப்பட வேண்டுமானால், அவரின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். அடிக்கப்படுமிடத்திற்கு இழுத்துச் செல்லப்படும் பசுக்கள் நாமல்ல. ஆனால் கர்த்தரைப் பின்பற்ற விருப்புடன் இருக்க வேண்டும். நாம் நம் கர்த்தராகிய இரட்சகரை பின்பற்றவேண்டும். அவர் நம்மை நீதியின் பாதையில் நடத்துவார். கர்த்தரே தேவனானாவர், அவர் நம்மை இரட்சித்ததன் மூலம் ஆசீர்வதித்தார். அவரை நம் எஜமானாராக கருதி அவரின் விதிகளைக் கடைப்பிடித்தால், நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவோம். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் ஆளுகையை இயேசுவிடம் ஒப்படைத்து, அவருக்கு எல்லாவற்றிற்கும் மேலான இடத்தை அளித்தீர்கள் என்றால், உங்கள் வாழ்வில் கிருபையும் ஆசீர்வாதமும் பெறுவீர்கள்.
பலத்த புயல் காற்றுக்கு எதிராக ஒருவன் படகோட்டுவதையும் இயேசு அவனுக்கு பின்னால் நிற்பதையும் போன்ற படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நம்முடைய வாழ்வில் ஏற்படும் சவால்களைச் சந்தித்து கர்த்தரின் பணியை நாம் செய்வது போல தோன்றினாலும், உண்மையாக நம்மை கரம் பிடித்து வழிநடத்துவது நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே. வல்லமையுள்ள தேவன் நம் வாழ்வை கண்காணிக்கிறார். அவர் நம்மை இரட்சித்தார். அவர் நம்மை சாத்தானிடத்திலிருந்து பாதுகாத்து, அவருடைய ஆளுகை நம்மீது இருக்கும்படி நம்மை வழி நடத்துகிறார்.
அவர் நம் எஜமானரானபடியால், அவர் நம்மை கண்காணித்து நம்மை ஆசீர்வதிக்கிறார். நாம் அவரை நம் எஜமானராக ஒப்புக்கொள்ளவில்லையென்றால், அவர் தம் வேலயைச் செய்ய முடியாது. கர்த்தர் தனித்துவம் உடையவராதலால், நாம் அவருக்கு உழியஞ்செய்ய முன் வந்து உதவி கேற்கும்வரை, அவர் நமக்காக எதுவும் செய்யப்போவதில்லை.
அவரிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொடு
நம்மீதான எஜமானத்துவத்தை நிறைவேற்றும் பொருட்டு எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புக்கொடு. அவருக்கு ஊழியஞ்செய்து அவர் நம் எஜமானர் என்பதை ஒப்புக்கொள். நாம் குறைவற்ற நிலைக்கு அதிக தொலைவிலிருப்பதால் நாம் அவரிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்து எல்லாப் பொறுப்புகளையும் அவரிடம் விட்டு விடவேண்டும். நம் குடும்பங்கள், அன்றாட வாழ்க்கைகள் மற்றும் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புக்கொடுத்தால், நாம் கர்த்தரிடம் இருந்து ஞானத்தைப் பெற்று, அவர் விரும்பும் வாழ்வை வாழ்ந்து கர்த்தர் நமக்கு கொடுத்த விசுவாசம் மற்றும் வல்லமை மூலம் நம் பிரச்சினைகளையெல்லாம் சமாளிப்போம்.
அப்பொழுது நமது பாவங்கள் நம் எஜமானருடையவைகளாகிவிடும். அதன் பொருள், நாம் நம் வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றினால் அவர் நம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். நாம் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை வாழமுடியும். மேலும் அவரிடமுள்ள சமாதானத்தையும் அனுபவிக்க முடியும். விசுவாசமிக்க கிறிஸ்தவர்களாக, கர்த்தர் முன் முழங்காலிட்டு அவரை எஜமானராக ஒப்புக்கொண்டு அவருக்கு நாம் ஊழியஞ்செய்யவேண்டும்.
பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு எத்தகைய விசுவாசம் நம்மிடம் இருக்கவேண்டும் என பிலிப்பியர் 3:3 கூறுகிறது என்று பார்ப்போம். “ஏனெனில் மாம்சத்தின் மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைச் செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுகிற நாமே விருத்த சேதனமுள்ளவர்கள்.” இங்கு “விருத்தசேதனமுள்ளவர்கள்” என்றழைக்கப்படுவது, யாரொருவன் கர்த்தரை ஆவிக்குள் ஆராதித்து, இயேசுகிறிஸ்துவுக்குள் களி கூர்ந்து, மாமிசத்தின் மீது நம்பிக்கையில்லாதவனாக இருப்பவனைக் குறித்ததாகும்.
விருத்தசேதனம் பண்ணப் பட்டவர்களாக வாழவேண்டும் என்பதன் பொருள் யோவானால் ஞானஸ்நானம் பெற்ற இயேசுகிறிஸ்துவின் மீது, நம் இருதயங்களிலுள்ள பாவங்களைத் துண்டித்து சுமத்த வேண்டும் என்பதாகும். பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப் படுகிறவர்களின் வாழ்வு ஆவிக்குறியது. அவர்கள் கர்த்தருக்கு ஊழியஞ் செய்து கிறிஸ்து இயேசுவினுள் களிகூறுகிறார்கள், அவர்கள் கூறுகிறார்கள். “இத்தகைய மகிமையான வாழ்விற்கு என்னை இயேசு வழி நடத்தினார். அவர் என்னை நீதிமானாக்கி என்னை ஆசீர்வதித்தார். அவரைத் தொழுது கொள்ள தேவையான எல்லா கிருபையையும் எனக்களித்தார்.” இது போல் நாம் வாழ வேண்டும். இதுவே பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கையாகும். பவுல் கூறினான். “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரியந்தியர் 10:31)
பிலிப்பியர் 3:13-14 இவ்வாறு கூறுகிறது. “சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” கர்த்தர் நமக்கு பின்னான வாழ்க்கையை மறந்து, முன்னுள்ளவற்றை அடையும்படி கூறுகிறார். நம்முடைய இலக்கை நோக்கி தொடரவேண்டும். நம்முடைய நீதியின் செயல்கள் அல்லது தவறான செய்கைகளைப் பொருட்படுத்தாமல், நமக்கு பின் சென்றவைகளை மறந்து நமக்கு முன்னுள்ளவைகளை அடைந்து இலக்கை நோக்கி தொடரவேண்டும். இந்த இலக்கானது இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, அவரைப் பற்றிக்கொண்டு அவரை சேவிப்பதாகும்.
நாம் நிறைவுள்ள நிலைக்கு அதிக தொலைவிலிருக்கிறோம். ஆகவே, நம் சரீரத்தின் இச்சைகளை உணர்ந்தோமானால் கீழே விழும் வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறோம். ஆயினும் கர்த்தரை நோக்கிப் பார்த்து அவரின் மீது விசுவாசம் வைத்தால், நம் எல்லா பலவீனத்தையும் மீறுதல்களையும் அழித்து விடலாம். இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தபோது நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது. அவரின் உயிர்த்தெழுதலின் மூலம் அவர் நம் இரட்சகரானதால் நாம் புது வாழ்வு கொடுக்கப்பட்டோம். அவரின் மீதுள்ள நம்பிக்கைக்கு நன்றிகள். ஆகவே, நமக்கு பின் சென்றவைகளையெல்லாம் அழித்துவிட்டு, நமக்கு முன்னுள்ளவைகளை அடைந்து, நம் இலக்கை நோக்கி தொடரவேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை பராமரித்தல்
நமக்கு முன்னுள்ளவைகளை அடைந்து, நம் இலக்கை நோக்கி தொடர வேண்டும். உங்களுடைய பழைய காரியங்கள் பாரமாக இருக்குமானால், கூடிய சீக்கிரம் அவற்றை மறந்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன். நம்முடைய பலவீனங்களினால் அநேக காரியங்களை நம்மால் செய்யமுடியாது. ஆனால் அது முக்கியமல்ல ஏனெனில் முக்கியமானவைகள் எதிர்காலத்தில் இருக்கின்றன. எதிர்காலம் முக்கியமானதாகையால், நம் ஆளுகையை இயேசுகிறிஸ்துவிடம் நம்பிக்கையின் மூலம் ஒப்படைத்து அவரால் வழிநடத்தப்படவேண்டும். நாம் எதிர்காலத்தில் எப்படி வாழ்வோம் என்பதைக் குறித்து அவர் முடிவெடுக்க விட்டுவிட்டு அவருக்கு பிரியமானதைச் செய்வோம்.
சீடர்களைப் போல் நாம் வாழவேண்டும்.
பாவ மன்னிப்பின் மீதுள்ள விசுவாசத்தின் மீது நாம் உறுதியாக இருப்பதன் மூலமே பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழ முடியும். இது மிகவும் முக்கியமானது. 2 தீமோத்தேயு 2:1-10 ஐ பார்ப்போம். “ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி. நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய்த் தீங்கனுபவி. தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள மாட்டான். மேலும் ஒருவன் மல்லயுத்தம் பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடைய வேண்டும். நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக் கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். தாவீதின் சந்நிதியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக் கொள். இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன் போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவ வசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. ஆகையால், தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.”
தீமோத்தேயுவில் பவுல் கூறியது போல பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் கூறுகிறார். “நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்கு போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.”
“நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.” இங்கே கிருபையில் பலப்படு என்பதன் பொருள் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்பிக்கையை, அவரை விசுவாசிப்பதன் மூலமும் அவரைப் பற்றிக் கொள்வதன் மூலமும், பலப்படுத்த வேண்டுமென்பதே. அவருடைய ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொள்ளும் பொருட்டு
இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, சிலுவையில் மரித்து, மீண்டும் உயிரோடெழும்பி நம் இரட்சகரானார். இதன்பொருள் நாம் கர்த்தரிடமுள்ள கிருபையில் பலப்பட்டு அவருக்கு நன்றியறிதல் உடையவர்களாக இருக்கவேண்டுமென்பதே. கர்த்தர் நம்மை இரட்சித்தார் ஆகவே கர்த்தரின் பரிசாக இரட்சிப்பை நம் விசுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவேண்டும். இது பாவமன்னிப்பின் மூலம் கிட்டிய இரட்சிப்பாகும். தினமும் அதிகாலையில் ஜெபம் செய்வதோ, அல்லது ஆலயம் கட்டுவதற்கு பணம் கொடுப்பதோ, ஒரு பொருட்டல்ல. இவை இரட்சிப்பைப் பெற்றுத் தருவதை விடுத்து அநேக கொடுதல்களைச் செய்யும்.
பாவமன்னிப்பு மூலம் கிட்டும் நம் இரட்சிப்பு என்பது நம்முடைய செயல்கள் எப்படிப்பட்டதாயினும், இயேசுகிறிஸ்து, நம் பாவங்களையெல்லாம் சுமக்கும் பொருட்டு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் துடைக்கும்படியாக சிலுவையில் மரித்தார். நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சிக்கும்படியாக அவர் உயிரோடெழும்பினார். போதகர்களும் கூட, சாதாரண மனிதர்களைப் போன்றே, இந்நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்பட்டனர். இப்படியாக யாரொருவன் இயேசுகிறிஸ்துவை தம் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறானோ அவன் பாவமன்னிப்பைப் பெறுகிறான். ஆகவே இரட்சிப்பின் கிருபையின் மீது நாம் உறுதியடைந்து நம் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தலாம்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மீதுள்ள நம்பிக்கை மீது உறுதியானவர்களாக வேண்டும். நம் வாழ்க்கையில் சிலவற்றை நம்மால் எடைபோட முடியாது. நாம் மிகவும் பலவீனமானவர்கள். அதனாலேயே நாம் இரட்சிப்பின் கிருபையில் வலுப்பெற்றவர்களாக வேண்டும். எப்பொழுதெல்லாம் தோல்வியடைகிறோமோ அப்போது நம் நம்பிக்கை மீது கீழ்க்கண்டவாறு தியானிக்க வேண்டும். “நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் கர்த்தர் என்னை இரட்சித்தார். இயேசு நீர் மற்றும் ஆவி மூலமாக என் பாவங்களை மன்னித்தார். நாம் நற்செய்தியை விசுவாசித்ததால் நீதிமானானோம். மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பெற்றதன் மூலம் நம்மை வலுப்படுத்தினோம். நாம் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததன் மூலம் வலுப்பெற்றோம். நம்முடைய விசுவாசத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களானோம்.
பவுல் கூறினான், “ஆகையால் நீங்கள் புசித்தாலும் குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 10:31). இது மிகவும் முக்கியமானது. நம் வாழ்வை கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்பது இதன் பொருள். “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும்,” நாம் சாப்பிடவேண்டும், குடிக்கவேண்டும் அவருடைய பணியைச் செய்யும் பொருட்டு உறுதியாக இருக்கவேண்டும். நற்செய்தியைப் போதிக்க ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் நல்லவற்றை சாப்பிடவேண்டும்.
“தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக் கொள்ள மாட்டான்” (2 தீமோத்தேயு 2:4) நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நீங்கள் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை வாழவேண்டும். நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக வாழும்படியாக நம் வாழ்வை வழி நடத்தும் போது நம்மால் விசுவாச வாழ்வு வாழமுடிகிறது. இப்படி விசுவாச வாழ்வு வாழுபவர்களின் வாழ்க்கை பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும், உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த, காணிக்கைகளை நற்செய்திக்காக பயன்படுத்த வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை நீ பராமரிக்க வேண்டுமானால், உன்னை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, அவரின் பணிக்கு கிடைக்கப்பட்டு, உன் பணத்தை நற்செய்திக்காக செலவு செய்து கர்த்தரிடம் உன் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்வாயாக. நாம் இத்தகைய வாழ்வு நடத்த விரும்பினால், நாம் விசுவாசத்தில் வாழ்ந்து நற்செய்திக்கு ஊழியஞ்செய்ய உறுதியான சித்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
நிறைய மனிதர்கள் இதுவரை தமக்கேற்ற வாழ்வு வாழ்ந்துள்ளனர். அவர்கள் சுவர்களை எழுப்பி சொத்துக்களை குவித்து தமக்குத்தாமே எஜமானர்களாக உள்ளனர். ஆயினும், இப்போழுது நாம் கர்த்தருக்காக வாழவேண்டும், கர்த்தரை நம்முடைய ஒரே எஜமானராக்க வேண்டும். கர்த்தர் கூறுகிறார் “தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.” நல்ல சேவகனாக வாழ்வது என்பது சட்டத்தைப் பின்பற்றுவது என்று பொருள்படும். நம்முடையப் பிரச்சினைகளை கர்த்தரே தீர்க்கிறார். அவரின் விசுவாசமுள்ள சேவர்களாயிருந்தால் அவர் நம்மை பாதுகாத்து வழி நடத்துகிறார். அவர் நம்மை முதலாவது கர்த்தருடைய ராஜ்யத்தையும் அவரின் நீதியையும் தேடும்படி கூறுகிறார். (மத்தேயு 6:33).
வேதவாக்கில் தவறேதுமில்லை. அவரை நாம் பின்பற்றினால் அவர் வார்த்தைகளின் சத்தியத்தை நாம் அனுபவிக்கலாம். முதலில் உங்களிருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பதை நினைவில் வைத்திருங்கள். பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ் செய்யப் பெற்றிராத ஒருவனால் தன் சொந்த சிம்மாசனத்தை கர்த்தருக்கு அளிக்க முடியாது. ஆயினும், பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ்செய்யப் பெற்றவனால் அவன் இதய சிம்மாசனத்தை கர்த்தருக்கு கொடுக்க முடிவதால் அவனால் பரிசுத்த ஆவியானவரின் நிறைவேறுதலை அனுபவிக்க முடிவதோடு அவன் இருதயத்தில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெறுகிறான்.
உன்னால் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை புரிந்துகொண்டு அதனை விசுவாசித்தாலேயே பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்வது உண்மையாகும். பரிசுத்த ஆவியானவரின் நிறைவேறுதலும், ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வும் வாழவேண்டுமானால், நீ கர்த்தரை அரசராக சேவித்து அவர் ராஜ்யத்தின் நன்மைக்காக வாழ வேண்டும். அப்பொழுது நீ பரிசுத்த ஆவியால் நிரம்புவாய். உன் இருதயம் பூரணமடையும். நீ கர்த்தரின் இராஜ்யத்தின் பிள்ளையானபடியால் நீ ஆசீர்வாதத்தை வெற்றிக் கொள்வாய். அதனால் உன் வெற்றிகரமான வாழ்வு பராமரிக்கப்படும்.
கர்த்தரை விசுவாசிப்பதன் மூலம், பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரை தம்முள் வாசஞ் செய்யப் பெற்ற மக்கள் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று நான் செய்தி சொன்னேன். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை என்றால் என்னவென்று நான் வரையறுத்து இத்தகைய வாழவை பராமரிப்பது எப்படி என்று விளக்கினேன். உங்களுடைய நம்பிக்கையின் மூலம் உங்கள் சிங்காசனத்தை கர்த்தருக்கு கொடுக்க வேண்டுமென்றும் விசுவாசத்தின் மூலம் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்றும், பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை பராமரிக்க வேண்டுமென்றும் விளக்கமளித்துள்ளேன்.
மீண்டும் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யப் பெறுதல், மறுபடியும் பிறத்தல் ஆகியவை ஒருவரின் முடிவல்ல. பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்வை தொடரவேண்டும். அத்தகைய ஒரு வாழ்வை வாழ்வதன் மூலமே நம் ஆத்துமாவும் சரீரமும் ஆசீர்வதிக்கப்படும் என்பதை தெளிவாக அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.
இத்தகைய வாழ்வு உடனே கிட்டாது. கர்த்தரை நம் எஜமானராவும் நம் இருதயத்தில் சிறந்த இடத்தை அவருக்கு கொடுப்பதன் மூலமே அது கிட்டும். கர்த்தர் நம்மை இரட்சித்து ஏற்கெனவே பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கையைக் கொடுத்துள்ளார். அவ்வாழ்க்கை நற்செய்திக்கு சேவகம் செய்வதாகவும் இருக்கிறது. அவரும் தம் வேலைகள் மற்றும் பொறுப்பை நம்மிடம் கொடுத்துள்ளார். ஆகவே, நாம் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வினை வாழ முடிகிறது.
நீ உன்னை அவருக்கு ஒப்புவித்து அவருக்கான வாழ்வை வாழவேண்டும். இந்த அழகிய நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலம் அவருக்கு ஊழியஞ்செய். அப்பொழுது உன்னிருதயம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும். மேலும் சமாதானமும் கிருபையும், உன்னிடமிருந்து ஓடும். அவர் திரும்ப வரும் நாளில், நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாயும், கர்த்தரின் முன் பெருமையுடனும், அவரின் சன்மானத்தை வென்றவனாகவும் நிற்பாய். நீயும் நானும் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை இரசிக்க வேண்ம். விசுவாசத்தின் மூலம் இத்தகைய வாழ்வு பெற தீவிரமாக முயற்சி செய்யவேண்டும். இப்படியாகவே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட வாழ்வு பராமரிக்கப் படுகின்றது.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை வாழும்படியாக உன்னிருதயத்திலுள்ள சிம்மாசனத்தை கொடுத்துவிட்டாயா? உன்னிருதயத்தின் சிறந்த இடத்தை அவருக்கு அளிப்பாய் என்று எதிர்ப்பார்க்கிறேன். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்வு வாழ உன்னிடம் சித்தம் இருக்கவேண்டும். அப்பொழுது அவர் உன்னை ஆசீர்வதிப்பதால் உன்னால் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை நடத்த முடியும்.