(தீத்து 3:1-8)
“துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமன நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், ஒருவனையும் தூஷியாமலும் சண்டைபண்ணாமலும் பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. ஏனெனில் முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம் பண்ணுகிறவர்களும், பகைக்கப் படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர் மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்துத் திட்டமாய்ப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.”
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழ்வது எப்படி?
கர்த்தரின் சித்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற படி நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும்.
இயேசுவை விசுவாசிப்பவர்களும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற்றவர்களும் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். கிறிஸ்தவர்களிடமிருந்து, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்வினையே கர்த்தர் கேட்கிறார். அவருடைய கட்டளைகளின் படி நாம் நடக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழுவது எப்படி? இதைக் குறித்து பவுல் என்ன கூறுகிறான் என்று கவனிப்போம்.
பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்வு வாழ எது தேவைப்படுகிறது?
தீத்து 3:1 இல் பவுல் கூறுகிறான். “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகல விதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்.” முதன்முதலாக நம்மை துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்திருக்கும் படி அவன் கூறினான். மேலும் கீழ்படியவும் நற்செயல்களைச் செய்யத் தயாராக இருக்கும்படியும் அவன் கூறினான். உலகின் சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படியாவிட்டால் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்வை நாம் வாழ முடியாது என்று அவன் கூறினான். அப்படி இருந்தாலும், இவ்வுலகை ஆளுபவர்களும் அவர்கள் சட்டங்களும் சத்தியத்திற்கு எதிரானவையாக இருந்தால் அவற்றிற்கு கீழ்படியாமலிருக்க வேண்டும். சட்டங்கள் நம் சத்தியத்தை பலவந்தப் படுத்தாவிட்டால், நற்செய்தியை சமாதானத்திற்காக ஊழியஞ் செய்யும் பொருட்டு அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும்.
நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யும்படி அவரைப் பெற்றவர்களாக இருக்கிறோம். நல்ல சட்டங்களை நாம் உடைத்தோமானால் நாமெப்படி பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ முடியும்? ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை வாழவேண்டுமானால் இவ்வுலகின் சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்யப் பெற்றவர்கள் சமுதாய விதிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். உலகின் சட்டங்களை நாம் கடைப்பிடிப்பதன் மூலமே கர்த்தருடன் நாம் நடக்க முடியும்.
நம்மில் ஒருவர் ஆலயம் செல்கையில் கிரிமினல் குற்றம் புரிகிறார். அவரால் கர்த்தரை இலகுவாக சேவிக்க முடியுமா? அவர் சட்டத்திற்கு புறம்பாக நடந்திருக்கையில் கர்த்தரின் போதனைப்படி அவரால் இவ்வுலகில் எங்ஙனம் வாழ முடியும்? ஆவிக்கேற்றபடி நடக்கும்போது சமுதாய விதிகளை நாம் மீறக்கூடாது. சட்டத்தை மீறுவதால் எந்த நன்மையும் வராது. சட்டத்திற்கு கீழ்ப்படிவதன் மூலம் சமாதானத்தை நிலை நிறுத்த வேண்டும். நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்போது மிக நேர்மையாக நடக்க கடும் முயற்சி செய்யவேண்டும். பரிசுத்த ஆவியானவரில் நிறைந்து வாழுவதற்கு, பரிசுத்தவான்கள் சமுதாய விதிகளுக்கேற்ப நடப்பது ஞானமாகும்.
நம்மிருதயத்தில் தாழ்மையை நிலை நிறுத்த வேண்டும்
பவுல் கூறினான், “ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தைக் காண்பிக்கவும்.” பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ, நாம் யாரைப் பற்றியும் தீமையாக பேசாமலும், சமாதானம் செய்கிறவர்களாகவும், சாந்தமுள்ளவர்களாகவும், எல்லா மனிதர்களுக்கும் தாழ்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
மறுபடியும் பிறந்தவர்களின் இருதயத்தில், தாழ்மை, அடக்கம் மற்றும் சாந்தம் ஆகியவை உள்ளன. நம்மில் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவராலே இது சாத்தியமாயிற்று. நாம் ஒருவரோடொருவர் சண்டையிடுவதன் மூலம் நற்செய்திக்கு கேடு வரச் செய்யக்கூடாது. அப்படியானலும், சமுதாய விதிகள் நற்செய்திக்கு எதிராகச் செல்லும் போது அதனை எதிர்க்க வேண்டும். அப்படிச் செய்யத் தேவையில்லாதபோது நாம் சமாதானம் மிக்கவர்களாக வாழவேண்டும். மற்றவர்கள் நம்மை, “அவன் சிங்கத்தைப் போல் மூர்க்கமாகத் தோன்றினாலும், அவன் உண்மையாகவே, புறாவைப் போல சமாதானமுள்ளவன். அவனின் கிறிஸ்தவ நம்பிக்கை அவனை மரியாதை அளிப்பவனும் நல் உணர்வுள்ள மனிதனாகவும் செய்கிறது.” என்று நினைக்கவேண்டும்.
மாம்ச இச்சையின்படி சாந்தமும் இல்லை தாழ்வும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப் பெறுவதாலும், நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்த தேவனாலும், நாம் மற்றவர்கள் மீது சாந்தமுள்ளவர்களாக இருக்கலாம். ஒரு மகா பாதக செயலை எனக்குச் செய்தவனை மன்னிப்பது உண்மையான “மன்னிப்பாகும்” மேலும் அவனை என் உள் மனதிலிருந்து தாழ்மையுடன் நடத்தினேன் என்றால் அது உண்மையான “தாழ்மை” ஆகும். ஒருவன் மீது உண்மையாகவே வெறுப்பை வைத்துக்கொண்டு தாழ்மையாக நடப்பது போல் காட்டுவது உண்மையான தாழ்மையாகாது. தாழ்மையும் மன்னிக்கும் சுபாவமும் இருதயம் முழுவதும் கொண்டிருப்பது மறுபடியும் பிறந்தவர்களில் நற்குணங்களாகும்.
மற்றவர்கள் நம்மிடம் தவறாக நடந்து கொள்ளும்போது நாம் சாந்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் நற்செய்தியைத் தடுக்க முயற்சிக்காதவரை, நாம் அனைவரிடமும் சாந்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் அப்படிச் செய்தால் சாந்தமெனும் வெளிச்சத்தை சத்தியமெனும் வெளிச்சத்தால் மாற்றம் செய்ய வேண்டும். கர்த்தரின் சத்தியத்தின் மீதே சாந்தகுணம் உள்ளது. ஆகவே, அதனை எதிர்ப்பவர்கள் இடையூறு செய்பவர்கள் அல்லது கர்த்தரின் வார்த்தையை அவதூறாக பேசுபவர்கள் ஆகியோர் சாந்த குணத்தினால் நடத்தப்படுவதற்கு ஏற்றவர்களல்ல.
தன்னை எதிர்ப்பவர்களை கர்த்தர் மன்னிப்பதில்லை மாறாக அதற்கு அவர்கள் ஒரு விலை கொடுக்கச் செய்கிறார். கர்த்தர் ஆபிரகாமிடம் கூறினார், “உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்” (ஆதியாகமம் 12:3). சத்தியமாகிய நற்செய்தியை எதிர்ப்பவர்களை இரட்சிக்க எந்த வழியுமில்லை. அவர்களுக்கு வரும் கேட்டை அவர்களால் தவிர்க்க முடியாததோடல்லாமல் அவர்களின் மூன்றாம் சந்ததியினர் வரை அழிந்து போவதையும் அவர்களால் தவிர்க்க முடியாது.
நாமேன் பொறுமை உள்ளவர்களாகவும் தாழ்மையுடனும் இருக்கவேண்டும்? தீத்து 3:3 இல் எழுதப்ட்டுள்ளபடி “முற்காலத்தில் நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழி தப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும், பொறாமையோடும், ஜீவனம் பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்” மறுபடியும் பிறப்பதற்கு முன் நாமும் இந்த மனிதர்களைப் போன்றே இருந்தோம். ஆகவே, நாம் அவர்களிடத்தில் பொறுமையுடனும் மன்னிக்கிறவர்களாயும் இருக்கவேண்டும். ஏனெனில் நாமும் முன்பு அவர்களைப் போன்றே இருந்தோம்.
தீத்து 3:4-8 இவ்வாறு கூறுகிறது, “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமான போது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறு ஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய் பொழிந்தருளினார். இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்து திட்டமாய்ப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.”
வேதாகமத்தைப் பொருத்தவரை, நம்முடைய நற்செய்கைகளினிமித்தம் கர்த்தர் நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கவில்லை. அவர் நம்மை நேசித்ததாலும் இரங்கியதாலுமே மறுபடியும் பிறக்கும் ஆசீர்வாதத்தை நமக்களித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு இவ்வுலகிற்கு வந்தார், ஞானஸ்நானம் பண்ணப்பட்டார், சிலுவையில் மரித்தார், மறுபடியும் உயிரோடெழும்பினார், இப்படியாக நம் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார். இயேசு மீண்டும் உயிரோடெழும்பி கர்த்தரின் வலது பக்கத்தில் இப்போது அமர்ந்திருக்கிறார். மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பியதால் உலகில் நிறைவேறாது இருந்தவைகளெல்லாம் நிறைவேறிற்று.
நம் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக பரிசுத்த ஆவியானவரைத் தந்து கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தார். உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போடும்படியாக இயேசுகிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பெற்று நம் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்படியாக சிலுவையில் மரித்தார். நாம் இரட்சிக்கப்பட்டு நீதிமான்களானோம்.
வேதாகமம் மேலும் கூறுகிறது, “நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக.” இதன் பொருள் என்னவெனில், கர்த்தரின் வாரிசான நாம், அவரின் சொத்துக்களையும் மகிமையும் பெற்றவர்களானோம். இத்தகைய ஆசீர்வாதமான வாழ்வு வாழ பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசித்து, உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப்பெற்று நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும்.
ஆகவே, பாவ மன்னிப்பைப் பெற்ற நாம், மற்றவர்களின் நன்மைக்காக செயல் புரிய வேண்டும். இவ்வுலகின் சட்டங்களைக் கடைப்பிடித்தவாறு கர்த்தரை நோக்குவோருக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். நம்மிடம் தவறாக நடந்து கொள்ளும் மக்களை மன்னித்து அவர்களை நற்குணத்துடனும் தாழ்மையுடனும் உபசரிப்பதன் மூலம் அவர்கள் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு இடையூறு செய்யாமல் இருக்கச் செய்யவேண்டும். “இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்” நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரம்பும்படி காத்திருப்பவரானால், பவுல் நம்மிடம் கூறியதை நினைவில் கொள்ளவேண்டும். இவை சிறப்பானதாக தோன்றாவிட்டாலும், இவைகள் மிக முக்கியமான வார்த்தைகள்.
நாம் இவ்வுலகில் வாழ்வதால், இவ்வுலகின் சட்டங்களுக்கு கீழ்ப்படியாததினால் மற்றவர்களுடன் மோதிக் கொண்டிருந்தால் பரிசுத்த ஆவியானவரால் நாம் நிரப்பப்பட முடியாது. ஆகவே, கர்த்தரின் வார்த்தைகளுடன் மோதாத சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். இவ்வுலகின் சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். நம்மிடம் விசுவாசம் இருந்தால் கூட, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை வாழ சட்டத்திற்கு கீழ்படிவதே சிறந்த தேர்வாகும். நாம் நற்காரியங்களைச் செய்ய, இவ்வுலகின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நம் சுற்றத்தாருடன் ஒத்துப்போக வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டுமா?
எபேசியர் 5:8-11 கூறுகிறது, “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளையாய் நடந்து கொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள்.” இவ்வசனங்கள் நம்மை ஒளியின் பிள்ளைகளாக நடந்து ஆவியின் கனிகளைத் தாங்கும்படி கூறுகிறது.
பிறகு எபேசியர் 5:12-13 கூறுகிறது, “அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப் பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.” பவுல் இங்கே என்ன கூறுகிறான் என்றால் வெளியே வந்தவையெல்லாம் வெளிச்சத்தினால் வெளியே வந்தவை. நீதிமான் ஒருவனால் நீதியாக வாழமுடியவில்லை என்றால், அவன் கர்த்தராலோ அல்லது தன்னாலோ வெளியரங்கமாக்கப்படுவான். ஒருவன் இருளின் வேலைகளைச் செய்கிறான் என்று கண்டு, ஒளியினால் அவன் கடிந்து கொள்ளப்படும்போது என்ன நடக்கிறது? தன் தவற்றை ஒப்புக்கொண்டபின் அவன் கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது அவன் இருதயம் இலகுவாகிறது. “அவைகளெல்லாம் கடிந்து கொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.” வெளிச்சத்தினால் வெளியரங்கமாகிறது நல்லது. அப்போது நம் மீறுதல்களை ஒப்புக்கொண்டு கர்த்தரிடம் திரும்பலாம்.
பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்வை வாழ வேண்டுமானால் நம்மிருதயத்தில் இரக்கம் வேண்டும். ஒருவனுடைய இருதயத்தில் பாவங்கள் இல்லாவிட்டாலும், அவன் இரக்கமில்லாதவனாக இருக்க வேண்டுமென்பது அதன் பொருளல்ல. நம்மிருதயத்தில் நற்குணமும் இரக்கமும் உள்ளவர்களாக நாம் வாழவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஞானத்துடனும் ஜெபத்துடனும் அதனைக் குறித்து தெரியாத மக்களிடம் போதிப்பதன் மூலம் அவர்கள் அதனை அறிந்து அவர்கள் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவர். மற்றவர்களை நாம் துன்புறுத்தவும் கூடாது. நாம் நற்செய்தியில் உண்டு, உறங்கி, வாழ்ந்து மற்றவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ, காலத்தின் முக்கியத்தைக் குறித்து எண்ணி ஞானமுள்ள மனிதர்களைப் போன்று அழகிய நற்செய்திக்கு ஊழியஞ் செய்யவேண்டும். நாம் இந்த உலகத்தை நேசிக்கும்போது, இருளின் தந்திரங்களுக்கு ஆளாவதால், கர்த்தரின் வேலையைச் செய்வதில் அசிரத்தையடைய வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, நாம் கர்த்தரின் மீது நம் கண்களைப் பதித்து அவருக்குத் தேவையானதை நாம் செய்யவேண்டும். கர்த்தர் நமக்களித்த இரட்சிப்பை நாம் விசுவாசிக்கும் அதே நேரம், எந்நேரமும் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். ஆவியினால் ஞானம் பெற்ற ஒருவன் இவ்வுலகை இருள் மூடும் முன்னதாக அழகிய நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிக்கும் படி தன்னை அர்ப்பணிக்கவேண்டும்.
கர்த்தரின் சித்தத்தைப் புரிந்து கொள்ளுதல்
கர்த்தருக்கு எது பிரியமானது என்று கண்டறிய நாம் முயற்சிக்க வேண்டும். அவரின் ஆலயம் மற்றும் வார்த்தைகள் மூலம் என்ன செய்ய விரும்புகிறார் என்று நாம் அறியவேண்டும். கர்த்தர் பிரியப்படும்படி நம்மால் என்ன செய்யமுடியும் என்று அறிந்து நம்மீதான அவரின் சித்தம் என்னவென்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
தம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களே மறுபடியும் பிறந்தவர்கள், மேலும் மறுபடியும் பிறந்தவர்களே பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப்பெற்றவர்கள். தம்மில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருப்பவர்கள் உண்மையாகவே பரிசுத்த மக்களாகவும் கர்த்தரின் பிள்ளைகளுமாவர். அவர்கள் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும். இது எல்லா பரிசுத்தவான்களினதும் கடமையாகும். நாம் நம்முடைய திறமைகளையும் சக்தியையும் நமக்காக வீனில் உபயோகிக்கக் கூடாது. அதனை மற்றவர்களின் தேவைக்காக உபயோகப் படுத்தவேண்டும். காலம் எனும் நதியில் செல்லும்போது கர்த்தரின் கிரியைகளை நாம் தடைச் செய்பவர்களாக இருக்கக்கூடாது.
நாம் பரிசுத்தமாக்கப்பட்டு, தேவ அன்பின் மூலம் மறுபடியும் பிறத்தலைப் பெற்றால், அவரின் வேலையை தொடர்ந்து செய்யும் பொருட்டு நல்லவனாக இருக்கவேண்டும். அவரை விசுவாசிப்பதன் மூலம் கர்த்தரின் பிள்ளைகளாகியிருந்தால், நாம் நற்குணமிக்க மனிதர்களாயிருக்க தகுதியானவர்கள்.
கர்த்தரின் பிள்ளைகளின் சரீரமானது முற்றிலும் குறைவற்ற நிலைக்கு வெகுதூரத்தில் இருந்தாலும்; கர்த்தரின் சித்தத்தை அறிந்து நற்செயல்களைச் செய்தால் அது கர்த்தரைப் பிரியப்படுத்தும். மறுபடியும் பிறந்தவர்கள் கூட தமக்காகவே வாழ்ந்தார்கள் என்றால் அவர்கள் மற்றவர்களுக்கு தீமைச் செய்பவர்களாக இருக்கிறார்கள். “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினால் நிறைந்து” (எபேசியர் 5:18) இதன் பொருள் என்னவென்றால் சரீர இச்சையினால் குடிகாரனாகாமல் நற்செயல்களைச் செய்ய வேண்டுமென்பதே.
எபேசியர் 5:19-21 இல் பவுல் கூறுகிறான். “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும், ஞானப் பாட்டுகளினாலும், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.” பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை நமக்கு வேண்டுமானால், இரட்சிப்பின் நற்செய்தியை விசுவாசிப்பதுடன் அதனை பிரசங்கம் செய்து கர்த்தர் நமக்குச் செய்தவற்றை வெளிப் படுத்தவேண்டும்.
நாம் ஜெபிக்கும் போதெல்லாம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார். மேலும் நாம் அவரை ஒரே குரலில் புகழும்படியாக எல்லா ஆசீர்வாதங்களையும் சங்கீதங்களிலும், பாமாலைகளிலும் ஆவிக்குரிய பாடல்களிலும் பதிவு செய்துள்ளார். நாம் அவற்றை அறிந்து, நன்றியுடன் அவரைப் புகழவேண்டும். இரட்சிக்கப் படாதவர்களுக்கும் ஒருவருக்கு ஒருவர் ஜெபிக்கும்போதும், பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். நம்முடைய உள்ளிருதயங்களிலிருந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவதோடு நம்மை இரட்சித்த இயேசுவானவருக்கும் மரியாதைச் செலுத்த வேண்டும். இத்தகைய சிந்தனைகள் நம் மனதில் இருக்கும்போது, நம்மால் நம் தவறுகளை உணர்ந்து கொண்டு நம்முடைய பாவங்களை அவர் சுத்தப்படுத்தியதை வியந்து அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். பரிசுத்த ஆவியானவரில் நிறைந்த வாழ்க்கை வாழ்வது என்பது இதுவே.
நம் எஞ்சிய நாட்களெல்லாம் அழகிய நற்செய்திக்கு ஊழியஞ் செய்யவேண்டும்
அழகிய நற்செய்தியின் பெரிதான மகிமைக்காக நற்செயல்களைத் திட்டமிட்டு அதன்படி செய்யவேண்டும். கர்த்தரின் ஆலயத்தில் சேர்ந்து, ஒவ்வொருவரின் ஆத்துமாவையும் இரட்சிக்கும்படி நாம் ஒன்று கூடி கர்த்தரிடம் ஜெபிக்கவேண்டும். நிறைய மக்கள் தேவனை நோக்கிப் பார்த்தாலும் அவர்களுக்கு அழகிய நற்செய்தியைக் குறித்து எதுவும் தெரியாததால் அவர்கள் மறுபடியும் பிறக்காதவர்களாக இருக்கின்றனர். “தேவனே, இவர்களையும் இரட்சியும்.” என்று இம்மக்களுக்காக ஜெபிக்கவேண்டும். நம் சொந்த காரியங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடாமல், இழந்து போனவர்களை இரட்சிக்கும்படி நற்செய்திக்கு ஊழியம் செய்ய சொத்துக்களை காணிக்கையாக கொடுக்க வேண்டும். மற்றவர்களின் ஆத்துமாக்களுக்காக வாழ்வதும் தேவனுடைய இராஜ்யம் விரிவடையும் பொருட்டு வாழ்வதும் நற்பணிகளாகும்.
இத்தகையப் பணிகளை செய்வதன் பொருள் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்வதாகும். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை என்பது பல பாஷை பேசும் திறமை மற்றும் அதிசயங்களைச் செய்தல் ஆகியவை அல்ல. மாறாக அது கர்த்தரை எப்படிப் பிரியப்படுத்துவது என்பதை அறிவதில் இருக்கிறது. அதன் பொருள் கர்த்தர் நமக்களித்த இரட்சிப்பை விசுவாசிப்பது, கர்த்தரை புகழ்ந்து மகிமைப் படுத்தும்படியாக கவிதைகளையும் சங்கீதங்களையும் உபயோகப்படுத்துவது என்பதாகும். நம் முழு இருதயத்துடனும் அவருக்கு நன்றி கூறி, புகழ்ந்து அவரை மகிமைப்படுத்துவதும் நீதியின் ஆயுதங்களாக நம் சரீரம் மூலம் அவருக்கு ஊழியஞ்செய்வதும் கர்த்தரின் சித்தமாகும், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது என்பதன் பொருள் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்வதாகும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழ, நாம் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய வேண்டும். ஒருவர் நமக்கு அறிவுரை வழங்கினால், அவர் என்ன கூறுகிறார் என்று நாம் கேட்க வேண்டும். அதேபோல், நான் அவருக்கு அறிவுரை வழங்கினால், அதனை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அதனைக் கேட்க வேண்டும். அது போல, ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து கர்த்தரின் பணியை செய்வதன் மூலம் ஆவியில் நிறைந்த வாழ்க்கை ஒன்றை வாழவேண்டும்.
ஆவியில் நிறைந்த வாழ்க்கை என்பது இயேசு கிறிஸ்துவை மகிமைப் படுத்துவதாகும்
ஆவியில் நிறைந்த வாழ்க்கை ஒன்றை வாழ்வது என்பது இயேசுகிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொள்வதாகும். இதன் பொருள் என்னவென்று எபேசியர் 6:10-13-ஐ வாசிப்பதன் மூலம் கண்டு கொள்வோமாக. “கடைசியாக, என் சகோதரரே கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும், திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.”
ஆவியால் நிறைந்த வாழ்க்கை என்பதன் பொருள் என்ன? அதன் பொருள் கர்த்தரில் உறுதியாகவும், அவர் வல்லமையின் மீது நம்பிக்கையும் வைப்பது என்பதாகும். அதன் பொருள் நம்முள் வாசஞ்செய்யும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் வாழ்வதென்பதும், நம் சொந்த சித்தத்தின் படியல்ல என்பதுமாகும். மேலும் அது ஜெபவாழ்க்கை வாழ்வது என்றும் பொருள்படும். ஜெபத்தின் மூலம், கர்த்தர் அளிக்கும் அநேக திறமைகள் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு நம்மால் தீவிரமாக வாழ முடியும். இத்தகைய வாழ்க்கை வாழ்வதென்பதன் பொருள் கர்த்தரின் கவசத்தை அணிவதாகும். நாம் மிகவும் பலவீனர்களாக இருப்பதினால், நாம் அவருடன் நடக்க முயற்சித்தாலோ, கர்த்தருக்கு ஊழியஞ்செய்து கீழ்ப்படிய முயற்சித்தாலோ, கர்த்தரின் வார்த்தைகளைப் பற்றிக் கொள்ளாவிட்டால், நாம் ஆவியினால் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ முடியாது.
கர்த்தரின் வார்த்தைகளின் மீதான நம்பிக்கையானது நம் ஆவிக்குரிய வல்லமையை அதிகரிக்க அவசியமானதொன்றாகும். நம்மிடம் விசுவாசமிருந்தாலும் கூட, “அது கர்த்தரின் வேதவாக்கில் பதிவு செய்யப் பட்டுள்ளதைப் போன்றது என்று எனக்கு உறுதியாகத் தெரியும்” என்று கூறி கர்த்தரின் முழு போர்க்கவசத்தையும் அணியவேண்டும். இத்தகைய நம்பிக்கையே நம்மை பரிசுத்த ஆவியானவரில் நிறைந்த வாழ்க்கை வாழ நம்மை ஏதுவாக்குகிறது.
இத்தகைய வாழ்வு வாழ உங்களில் யாருக்காவது பிரச்சினைகள் உள்ளனவா? அப்படியானால் வேதவசனங்களை நினைவு கூர்ந்து கர்த்தரின் கவசத்தை அணியுங்கள். கர்த்தர் தம்முடைய முழுக்கவசத்தையும் நாம் அணியும்படிக் கூறினார். இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தினுள் எடுக்கும்போது, கர்த்தரின் முழுக்கவசத்தையும் அணிந்து கொள்வதென்றால் என்ன என்று அறிந்துகொள்வீர்கள். நம்முடைய சுற்றத்தார் எப்படியிருந்தபோதிலும், மற்றவர்கள் என்ன கூறினாலும், நாம் வேதவாக்கியத்தைப் பற்றிக் கொள்ளவேண்டும். இப்படியாக பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்.
இந்த நம்பிக்கையை நாம் எங்கிருந்து பெற்றுக்கொள்வது? வெளிப்படுத்தின விசேஷம் 3:22 கூறுகிறது, “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.” ஆவியானவர் சபையாரிடம் என்ன கூறுகிறார் என்று நாம் கேட்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் கர்த்தரின் ஊழியர்களாக இல்லாவிட்டால், கர்த்தரின் வார்த்தைகளை கேட்பதற்கோ அல்லது பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்வதற்கோ இயலாது. பரிசுத்த ஆவியானவர் யார் மூலமாகப் பேசுகிறார்? கர்த்தர் தம் ஆலயத்தின் ஊழியர்கள் மூலமாக பரிசுத்தவான்களிடமும் உலகின் எல்லா மக்களிடம் பேசுகிறார்.
இதனைக் கூறுவது எதற்கென்றால், கர்த்தரின் ஆலயத்தில் பிரசங்கிக்கப்படுபவை நிச்சயமாகவே வேதவாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இத்தகைய விசுவாசத்தை மனதில் கொண்டு சபையின் பிரசங்கங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். போதகரிடம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யவில்லை என்றால், அவர் தன் சொந்த யோசனைகளைப் பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ் செய்யப் பெற்ற போதகர், பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டில் கர்த்தரின் வார்த்தைகளைப் பிரசங்கிக்கிறார். அவர் அப்படிச் செய்யாமல், வேதாகம அடிப்படையில்லாத வசனங்களைப் பிரசங்கித்தால், பரிசுத்த ஆவியானவர் அவர் இருதயத்தில் சஞ்சரிப்பதால், போதகர் அப்படிப் பேசுவதை நிறுத்துவார்.
பரிசுத்த ஆவியானவரே கர்த்தர். கர்த்தர் அவரின் ஊழியனிடத்தில் சஞ்சரிப்பதால் ஊழியனின் வல்லமை மிகவும் பெரியது. புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து பேதுருவிடம் கூறுகிறார். “பரலோகராஜ்யத்தின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன்” (மத்தேயு 16:19). பரலோகத்தின் திறவு கோல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க நற்செய்தியே திறவு கோலாகும். கர்த்தர் வேதவாக்கியத்தைப் பிரசங்கிக்கும் அதிகாரத்தை பேதுருவுக்கு மட்டும் கொடுக்கவில்லை. கர்த்தரின் எல்லா ஊழியர்களுக்கும், அவர்கள் மறுபடியும் பிறந்தவர்களாக பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற்றவர்களாக இருந்தால், அவர்களுக்கும் அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு கர்த்தரின் முழுக்கவசத்தையும் நாம் அணிந்துக் கொள்ளவேண்டும். நம்மிடம் விசுவாசமில்லை என்றால், ஆலயத்தின் மற்றும் கர்த்தரின் ஊழியர்களின் அதிகாரம் மீது விசுவாசம் வைத்து ஆலயத்தின் போதனைகளைத் தினமும் மனதில் கொள்ளவேண்டும். இன்று நீ கேட்கும் பிரசங்கமானது உனக்கு பிரயோசனமில்லாததாகவோ, உன் வாழ்வுடன் சம்பந்தப் பட்டதில்லாததாக இருந்தாலும் கூட, அவற்றைக் கண்டிப்பாக கேட்டு இருதயத்திற்கு கொண்டு செல்லவேண்டும். உன் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் வார்த்தைகளை வேதாகமத்தில் தேடு. அவற்றைப் பற்றிக்கொள். இவ்வழியாக நீ ஒரு பக்திமானாக இருப்பாய். அப்பொழுது உன்னால் பரிசுத்த ஆவியானவர் நிரம்பிய ஒரு வாழ்வை வாழ்வதுடன் கர்த்தருடன் நடந்து உலகின் அந்தகாரத்தை ஆட்சி செய்யும் அதிகாரிகளுடனும் கொள்கைகளுடனும் போராடி வெற்றிகொள்.
உலகை ஆளுபவர்களுக்கு நீ கீழ்படிய வேண்டும் என்று கூறிவிட்டு இப்போது நீ உலக அந்தகாரத்தை ஆளுபவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று நான் கூறுவதையிட்டு நீ குழப்பமடைந்திருக்கலாம். ரோமர் ஆண்ட நாட்களில், ரோமச் சக்கரவர்த்தி தன்னை கர்த்தராக அழைத்து, எல்லா மக்களும் அவனை கர்த்தராகப் பாவிக்கும்படி சட்டமியற்றினான். இதனை கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாது, ஏனெனில் இது வேதவாக்கிற்கு எதிரானதாகும். ஆகவே, அக்காலக் கிறிஸ்தவர்களுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. அவன் தானொரு கர்த்தர் போன்று மக்களை தன் முன் மண்டியிடச் செய்தான்.
சாத்தானுடன் செய்யும் போரில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், நாம் கர்த்தருடைய வார்த்தைகளைப் பற்றிக் கொண்டு அதனை விசுவாசிக்கவேண்டும். கர்த்தரின் வார்த்தைகளின்படி நாம் வாழ்ந்தோமானால், அவருடைய ஆசீர்வாதத்தை நாம் பெறுவதற்கு சாத்தானையும் அடிக்க முடியும். நாம் இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தால் கூட கர்த்தரின் வார்த்தைகளை நாம் பற்றிக்கொள்ளாவிட்டால், சாத்தானுடன் நாம் நடத்தும் போரில் தோல்வியடைவோம். கர்த்தர் நம்மை எச்சரிக்கிறார். “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ஜிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத் தேடிச் சுற்றித் திரிகிறான்” (1 பேதுரு 5:8) கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்காத ஒருவன் பிசாசினால் இலகுவாக தாக்கப்படுகிறான்.
கர்த்தரின் வார்த்தைகளினால் அல்லாமல் இயேசுவானவரால் கூட சாத்தானுடன் போரிட முடியவில்லை. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:4). எழுதப்பட்டவைகளின் மீது விசுவாசம் வைத்ததன் மூலம் அவர் பிசாசை விரட்டியடிக்க முடிந்தது. நம்மைக் குறித்து என்ன? நாம் ஞானத்தில் குறைவுள்ளவர்களும் இயேசுவிடம் ஒப்பிடக்கூடாதவர்களாகவும் இருக்கிறோம். ஆகவே, கர்த்தரின் வார்த்தைகளை இன்னும் உறுதியாகப் பற்றிக் கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும்.
“நான் இந்த வார்த்தைகள் சரியானவை என்று நினைக்கிறேன். ஆனால் அவற்றை முழுவதுமாக என்னால் விசுவாசிக்க முடியாது” என்று நாம் கூறக்கூடாது. நாம் வார்த்தைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும். “எழுதப் பட்டுள்ளது போன்றே அவை உண்மையாகவே நடக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.” இதுவே சரியானபடியான நம்பிக்கையாகும். மேலும் இது கர்த்தரின் முழுக்கவசத்தையும் நாம் அணிய ஏதுவாகச் செய்கிறது. “கர்த்தர் கூறியபடி எல்லாம் நடக்கும்” என்று கூறும் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கர்த்தருடைய வார்த்தைகளைப் பற்றிக்கொண்டு அதனில் சார்ந்திருந்தால், அவனின் விசுவாசத்திற்கேற்ப காரியங்கள் சாத்தியமாகும். சாத்தான் நம்மை இச்சிக்க முயன்றால் “நான் வேதவாக்கினை விசுவாசிக்கிறேன், அவருடைய வார்த்தைகளே சரியான பதில்” என்று நாம் கூறுவதன் மூலம் அவன் நிச்சயம் விலகிப்போவான். பிசாசுடனான போரில் வெல்வதற்கான வழி இதுவே.
வேத வாக்கினை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்
“ஆகையால் தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகுபடிக்கு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தை தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்து போடத் தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமெனும் தலைச் சீராவையும் தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்” (எபேசியர் 6:13-17)
இந்த வசனங்களில், “சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்” என்பதில் இடையில் கட்டப்படும் பட்டியுடன் கர்த்தரின் வசனம் ஒப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் நம் மனதை வேதவாக்கினால் கட்டவேண்டும் என்பதே. சத்தியத்தின் வார்த்தைகளை நாம் பின்பற்றும்படி அவர் கூறுகிறார். அப்படிச் செய்வதனால் கர்த்தருடன் ஒரு மனதுடன் இருக்க முடியும். வேதவாக்குடன் நம்மை இருக்கமாக ஒருமனப்பட்டவர்களாக இருக்கும்போது, இயற்கையாகவே, நாம் விசுவாசிப்பவர்களாகி, “எல்லாம் நல்லபடியாக மாறும். கர்த்தர் கூறியபடி எல்லாம் சாத்தியமாகும்” என்று கூறுவோம்.
அடுத்ததாக நீதியின் மார்க்கவசத்தை நாம் அணியவேண்டும். கர்த்தர் நம்மை இரட்சித்தார் என்று கூறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியென்னும் மார்க்கவசத்தை நாம் அணியவேண்டும். நாம் நம் இடையை சத்தியத்தால் கட்டி, நீதியின் மார்க்கவசத்தை அணியவேண்டும். விலையேறப்பட்ட பொருள்களால் செய்யப்பட்ட மார்க்கவசத்தை அணியவேண்டும். கர்த்தர் நம் எல்லாப் பாவங்களையும் மன்னித்தார் என்ற நம்பிக்கையினால் அவற்றை அணியவேண்டும். நம் முழு இருதயத்தோடும் வேதவாக்கை விசுவாசிக்கவேண்டும். சமாதானத்தை அளிக்கும் நற்செய்தியாகிய இரட்சிப்பை பிரசங்கிக்கவும் வேண்டும்.
எல்லா வார்த்தைகளையும் பற்றிக்கொண்டு சமாதான நற்செய்தியின் ஆயத்தம் என்னும் பாதரட்சையை காலில் அணிந்து கர்த்தரின் சமாதானத்தை அனைத்து மக்களிடமும் கொடுக்கும் இரட்சிப்பின் நற்செய்தியைப் பிரசங்கிக்கச் செல்ல வேண்டும். நாம் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டதுண்டானால், அந்த நம்பிக்கையை வாயினால் அறிக்கைச் செய்யவேண்டும். எப்பொழுதெல்லாம் பாவமும் தீயவைகளும் நம்மில் வெளிப்படுகிறதோ, அப்பொழுது கர்த்தர் நம் பாவங்களையெல்லாம் ஏற்கெனவே மன்னித்துவிட்டார் என்ற சத்தியத்தை நினைவு கூறுவதன் மூலம் அவற்றை அழிக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் அவற்றைச் செய்தார். நாம் மகிமையின் வாழ்வை கர்த்தருக்கு நன்றி கூறுவதன் மூலம் வாழவேண்டும். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க வேண்டும், அது பாவத்திலிருந்து விடுதலையடைய ஒருவனுக்கு சமாதானத்தைக் கொடுக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, நம்பிக்கை என்னும் கேடயத்தால் தீயவற்றுடன் போர் புரிய வேண்டும், சாத்தான் நம்மைத் தாக்கும்போது, ஒரு கையில் நம்பிக்கை எனும் கேடயத்தையும் மறுகையில் சத்தியவார்த்தைகளையும் பிடித்து அவனை விரட்டியடிக்க வேண்டும்.
பிறகு இரட்சிப்பு எனும் தலைச்சீராவை அணியவேண்டும். நாம் இரட்சிப்பின் வார்த்தைகளை இவ்வாறு கூறி ஏற்றுக் கொள்ளவேண்டும். “நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் என் எல்லாப் பாவங்களிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். இப்படியாக கர்த்தர் என் பாவங்களை மன்னித்தார்.” நம் தலையில் சத்தியத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் வேதவாக்கையும், இரட்சிப்பு எனப்படும் தலைச்சீராவையும் ஆவிக்குரிய பட்டயத்தையும் சாத்தானுக்கு எதிரான ஆயுதங்களைக் கொள்ள வேண்டும்.
சாத்தான் நம்மைத் தாக்கினால், நாம் பட்டயத்தை எடுத்து, அவனை நொருங்க அடிக்க வெண்டும். “கர்த்தர் இதனைக் கூறினார்! நான் அதனை விசுவாசிக்கிறேன்!” வேதவாக்கின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் சாத்தானை விரட்டுகிறோம். வேதவாக்கை விசுவாசித்து ஆவிக்குரிய பட்டயத்தை நீங்கள் உருவினால், “ஐயோ! இது எப்படி துன்புறுத்துகிறது.” என்று கூக்குரலிட்டு ஓடுவான். வேதவாக்கினை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே சாத்தானின் எத்தகைய தாக்குதலிலும் அவனை அடித்து நொறுக்க முடியும்.
அத்தகைய ஒரு மத வாழ்வை நீங்கள் வாழவேண்டும். “என்னுடைய சரீரம் நிறைவற்ற நிலையிலிருந்து அதிக தொலைவில் இருந்தாலும், நானொரு பாவ விடுதலைப் பெற்ற கர்த்தரின் மனிதன். கர்த்தர் என்னிடம் கூறிய வார்த்தைகளைப் பற்றிக்கொண்டு, விசுவாசத்தினால் வாழுகிறேன்.” என்று அறிக்கைச் செய்யவேண்டும். இத்தகைய விசுவாசம் நம்மிடமிருந்தால், அவன் நம்மைத் துன்புறுத்தி நம் விசுவாச வாழ்வினை இடையூறு வரும் ஒவ்வொருமுறையும் சத்தியத்தின் பட்டயத்தால் சாத்தானை விரட்டி அடிக்கலாம். வெறும் உலகச் சொற்கள் மூலம் சாத்தானை திருப்பித் தாக்கினால் அவன் கண்ணிமையைக் கூட இமைக்க மாட்டான். ஆகவே, “கர்த்தர் இதைத்தான் கூறினார்” என்று அவனுடன் போரிட வேண்டும். அப்பொழுது கர்த்தரின் வார்த்தையின் அதிகாரத்திற்கு அவன் சரணடைவான்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழ வேண்டுமானால், நாம் கர்த்தரிடம், நம் ஆலயமும் எல்லாப் பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் விதமாக தம்மை அர்ப்பணிக்கும்படி ஜெபிக்கவேண்டும். “நற்செய்தியின் இரகசியத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தட்டும்” என்பது போன்ற ஜெபத்தை ஏறெடுப்பதன் மூலம், நற்செய்திக்கு ஊழியம் செய்யும் வாழ்வு வாழ்வோம். இது பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும். பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வது மிகவும் அவசியமாகும். நாம் உண்மையான பரிசுத்தவான்களாக வேண்டுமானால், நாம் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்வை வாழவேண்டும். பாவ விடுதலையைப் பெறுவது எல்லா ஆத்துமாக்களுக்கும் எத்தனை அவசியமோ, அதுபோல மேற்கண்ட வகையான ஒரு வாழ்வு எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் அவசியமானதாகும். இதுவே கர்த்தரின் கட்டளை.
தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டும் எப்படி ஒரு விசுவாச வாழ்வை நடத்துவது என்று தெரியாதவர்கள், பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்வை வாழவேண்டுமென்று தெரிந்து கொள்ளவேண்டும். கர்த்தருக்கு தேவையானது இதுவே. பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்வை வாழவேண்டும். இதுவே கர்த்தரின் சித்தாமாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கை வாழும்போது பரிசுத்தவான்கள் நற்செயல்கள் புரிவதன் மூலம் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி உயர்த்தப்படுகிறார்கள். அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதை நேசிப்பவர்களும் தேவனிடம் ஜெபிப்பவர்களாகவும், வேதவாக்கைப் பற்றிக்கொண்டு அதனை விசுவாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இரட்சிப்பின் தலைச்சீராவையும் நீதியின் மார்க்கவசத்தையும் நாம் அணிந்து, “நான் எப்பொழுதும் நீதிமான்” என்று கூறி சாத்தானை விரட்டி அடிக்கவேண்டும்.
பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ்செய்யப் பெற்றிருப்பதால், அவர்கள் ஆவிக்கேற்றபடி நடக்கவும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெறவும் முடிகிறது. விசுவாச ஜெபத்தின் மூலமாக சம்பாதித்த கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் மூலம் அவர்கள் அவரின் பணியைச் செய்கிறார்கள். அவர்கள் சாத்தானை முறியடிக்கும் வரை ஆவிக்கேற்றபடி நடந்து கர்த்தரின் முன் நிற்கவேண்டும். கர்த்தரின் முழுக்கவசத்தையும் அணிந்து கொள்ள முடிபவர்கள் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் மட்டுமே, அவர்களால் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை வாழமுடிகிறது.
“மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” ( எபேசியர் 6:12 ). மறுபடியும் பிறந்தவர்களின் யுத்தம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் இல்லை. ஆயினும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற்றவர்களின் போராட்டம் கெட்ட ஆவிக்குரிய விருந்தாளிகளோடும், நம் விசுவாச வாழ்விற்கு இடையூறு செய்பவர்களோடும், நற்செய்திக்கு ஊழியஞ் செய்யாமல் நம்மைத் தொந்தரவு செய்பவர்களுடனும் இருக்கிறது.
கர்த்தரின் நற்செய்திக்காக ஆவிக்குரிய யுத்தம் புரிய வெளியே செல்லும்போது, நாம் தலைச்சீராவையும் ஆவியின் கவசத்தையும் அணியவேண்டும். இந்த யுத்தத்தில் சாதாரண உடைகளை அணிந்தோமானால், நாம் காயமடைவோம். ஆகவே, நாம் கவசம் அணியவேண்டும். பட்டயங்கள் கேடயங்கள், தலைச்சீரா ஆகியவை நமக்குத் தேவை. யுத்தத்தில் வெற்றிபெற, யுத்தத்திற்கு முன் எக்குறையுமின்றி ஆயத்தமாக இருக்கவேண்டும். மார்க்கவசத்தை அணிந்து, இடையில் பட்டி அணிந்து இரண்டு கால்களிலும், பாத ரட்சை அணியவேண்டும். மேலும், ஒரு கையில் பட்டயமும் மறு கையில் கேடயமும் எடுத்து, நம் எதிரியை முறியடிக்க வேண்டும். இதுவே பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையாகும்.
அழகிய நற்செய்தியை நாம் வைத்திருக்க வேண்டும்
பவுல் நமக்கு கூறினான், “உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்” (2 தீமோத்தேயு 1:14). நற்பொருள் என்பது யாது? நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே அதுவாகும். தீத்து 3:5 கூறுகிறது, “ மறு ஜென்ம முழுக்கினலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” இவ்வுலகில் நாம் செய்த பாவங்களனைத்தையும் கர்த்தர் கழுவி, சிலுவையில் மரித்து மீண்டும் உயிரோழும்பினார். இந்த அழகிய நற்செய்தியை நாம் வைத்திருக்க வேண்டும். நாம் இரட்சிப்பாகிய தலைச் சீராவையும் நீதியாகிய மார்க்கவசத்தையும், நமது இடையை உண்மையாலும் அணிய வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும்.
இப்படியாக நாம் போராயுதங்கள் தரித்த பின், சாத்தானுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறவேண்டும். அப்பொழுது நாம் வெற்றி பெற்று அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். நமக்கு உரிமையான கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிக்கும் நாள் வரை நாம் சாத்தானுடன் நிறைய ஆவிக்குரிய யுத்தங்களைப் புரிந்து அவனிடமிருந்து வெற்றிகளைப் பெறவேண்டும். எதிராளியிடமிருந்து அதிகமான யுத்தங்களை வெல்லும்பொழுது, அடுத்த யுத்தத்தை வெல்வது எளிதானதாக இருக்கும். அவருடைய ராஜ்யம் உயர்ந்து வளர நாமனைவரும் ஜெபிக்க வேண்டும். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்வை நாம் சம்பாதித்திருப்போம்.
நம்முடைய பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டோம் என்பதில் திருப்தியடையாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். நற்செய்திக்காகவும் நம் நற்செயல்களுக்காகவும், வேதவாக்கினை நாம் நம்பவேண்டும். நாம் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு கர்த்தரின் வார்த்தைகளின்படி வாழ்ந்து, அதனை விசுவாசித்து, சாத்தானுக்கு எதிரான யுத்தத்தில் தோற்று அழிந்து போகாமல் இருக்க வேண்டும்.
என்னைப் புரிந்து கொண்டீர்களா? அப்பொழுது மட்டுமே நம் வாழ்வு பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையாக இருக்கும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் சேவித்து அதில் தரித்திருந்து, கர்த்தரின் வார்த்தைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நான் எதிர்ப்பார்க்கிறேன். சாத்தானிடமிருந்து ஆத்துமாக்களை இரட்சிக்கும் பணியை நாமெல்லோரும் செய்வோமாக. கர்த்தர் மறுபடியும் வரும்வரை நம்மால் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை வாழமுடியும். கர்த்தர் நமக்கு கொடுத்த இரண்டாவது கட்டளை பரிசுத்த ஆவியானவரின் முழுமையை நாம் பெற்றுக்கொள்வதே. அவருக்கு நன்றி கூறு. நம்முடைய இருதயங்களிலுள்ள பாவ மன்னிப்பின் மூலம் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தை நாம் பெற முடியும். அங்கே பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரமில்லையென்றால், பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை என்னால் தொடங்க முடியாது. பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கை நடத்த அனுமதித்த கர்த்தருக்கு நன்றிகள்.
பரிசுத்த ஆவியானவரை உனக்குள் வாசஞ்செய்யும்படியாக பெற்றுக்கொள்ள முடியும் என்று விசுவாசிக்கிறாயா? நம்முடைய பாவங்களிலிருந்து பாவ மன்னிப்பு பெற்றவர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப்பெறுவோம். ஆனால் யாரெல்லாம் தம் பாவங்களை அழிக்கவில்லையோ அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யும்படி பெறமுடியாது. யாருக்கெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெரியாதோ, யார் அதை விசுவாசிக்க வில்லையோ அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் சஞ்சாரம் செய்வதில்லை. பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ்செய்யும்படி பெறாத எல்லா மக்களும் நரகத்திற்குள் வீசப்படுவர்.
நம்முடைய இருதயத்தில் பாவமில்லாததால், நம்மிடம் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரம் இருக்கிறது. நம்முடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதால், நம்மால் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ முடிகிறது. பரிசுத்த ஆவியானவரால் வாசஞ் செய்யப் பெற்ற நாம், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருக்கும் படியாக, ஆவியானவரின் விருப்பங்களுக்கு கீழ் படியவேண்டும். அதிகமாக நாம் ஆவியானவரின் விருப்பங்களுக்கு கீழ்படியும்போது, முழுச் சீருடையணிந்த வீரனைப் போல் நம் விசுவாசம் உறுதிப்படும். ஆனால் ஆவியானவருக்கு கீழ்படியவில்லையெனில், நம்முடைய கவசத்தை கழட்டிவிட்டதை ஒத்ததாகும் நம் நிலை.
பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் மூலமாக வளர்ந்து, விசுவாசம் மிக்கவனாவோமாக. பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளைக் கேட்கும்போது, நமது விசுவாசம் வளர்கிறது. ஏனெனில் “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17). என்று கர்த்தர் கூறுகிறார். ஆகவே, சாத்தான் நம்மைத் தாக்கினாலும், இந்த வார்த்தைகளின் மீதுள்ள நமது விசுவாசத்தால், நாம் பாதுகாக்கப் பட்டுள்ளோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் கிட்டும் நம்பிக்கையின் கேடயத்தினை கொண்டுள்ளவர்களை சாத்தான் தாக்க மாட்டான். விசுவாசத்தின் மக்கள் வல்லமைப் பெற்றிருப்பதால், தம் விசுவாசத்தின் மூலம் சாத்தானின் தாக்குதல்களை முறியடிக்கிறார்கள்.
விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை நடத்துவோம். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை என்பது உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிப்பதைக் குறிக்கிறது. அத்தகையதே பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையாகும்.