• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-13] பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் வரங்களும் பணிகளும் (யோவான் 16:5-11)

(யோவான் 16:5-11)
“இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்கு போகிறேன்; எங்கே போகிறீர் என்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களிருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாய் இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தை கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினாலே, நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார்”
 
 
பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் என்ன?
பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்திற்கு உணர்த்துதல்.

ஆதியாகமம் 1:2 இல் எழுதப்பட்டுள்ளது, “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.” இந்த வசனத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் குழப்பமும் பாவமும் நிறைந்த இருதயங்களில் சஞ்சரிப்பதில்லை என்றும், அழகிய நற்செய்தியை விசுவாசிக்கிறவர்களின் இருதயங்களில் மட்டும் வசிக்கிறார் என்பதையும் காணலாம். ஆயினும் அநேக மக்கள் அவர்களின் குழப்பத்தினாலும் வெறுமையினாலும் பைத்தியக்காரத்தனமான நம்பிக்கைகளுக்குள், தம் இருதயத்தினுள் பாவங்கள் இருந்த போதிலும் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறி விழுந்து போகிறார்கள். 
உணர்ச்சி வசப்பட்ட ஒரு நிலையில் கிடைக்கும் ஆவி சரியான ஆவியல்ல. சாத்தானின் கிரியைகள் அக்கிரமச் செய்கைக்காரர்களான மத வெறி கொண்ட விசுவாசிகளிடம் இருக்கிறது. மத வெறி கொண்ட மக்கள் சாத்தானின் தந்திரங்கள் மற்றும் வல்லமைக்குள் இலகுவாக விழுந்து போகிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தனித்துவம் நிறைந்த கர்த்தர், அவர் ஞானவானும், உணர்ச்சிகளுள்ளவரும் திடச்சித்தம் உள்ளவருமாயிருக்கிறார். அவர் பிதாவான கர்த்தருடனும் குமாரரான இயேசுகிறிஸ்துவுடனும் இவ்வுலக படைப்பில் பணியாற்றியிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் எத்தகைய பணிகளை இவ்வுலகில் செய்தார் என்று பார்ப்போம்.
 
 
பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்து உலகிற்கு உணர்த்துகிறார்
 
பரிசுத்த ஆவியானவர் செய்யும் முதல் வேலை என்ன? அவர் பாவங்களைக் குறித்து உலகிற்கு உணர்த்துகிறார். அழகிய நற்செய்தியாகிய இயேசு யோவானிடம் பெற்ற ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசியாதவர்களே அவரால் உணர்த்தப்படும் மக்கள். அவர் எல்லாப் பாவிகளுக்கும் பாவத்தைக் குறித்து உணர்த்துகிறார். மேலும் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து விசுவாசிக்காதவர்களின் பாவங்களையும் உணர்த்துகிறார். 
 
 
அவர் கர்த்தரின் நீதியைக் குறித்து உலகிற்கு உணர்த்துகிறார்
 
இரண்டாவதாக அவர் செய்யும் காரியம் என்ன? அவர் கர்த்தரின் நீதியைக் குறித்தும் இயேசு பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதை வெற்றிக்கொண்டது குறித்தும் சாட்சி பகருகின்றார். யோவான் 16:10 கூறுகிறது, “நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக் குறித்தும்” கர்த்தரி நீதி என்பதன் வேதாகமப் பொருள் என்னவென்று நாம் அறிய வேண்டும். அதன் பொருள் இயேசு யோவானிடம் பெற்ற ஞானஸ்நானம் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பது உண்மை மற்றும் அவரை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் கிருபையினால் நீதிமான்களும் ஆவார்கள் என்பதாகும். இயேசு யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்று உலகின் எல்லா பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார், அதற்காக சிலுவையில் இரத்தஞ்சிந்தினார், மீண்டும் உயிரோடெழும்பி பாவிகளின் இரட்சகருமானார். கர்த்தர் நமக்களித்த அழகிய நற்செய்தி இதுவேயாகும். கர்த்தரின் சித்தப்படி இயேசு நீர் மற்றும் இரத்தம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்து, நம் வாழ்வின் எஜமானரானார். 
நற்செய்தியாகிய யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தை மக்கள் விசுவாசிக்க பரிசுத்த ஆவியானவர் உதவுவதோடு, அவர்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறவும் உதவுகிறார். கர்த்தர் திரியேகமாக செய்யும் காரியங்கள் முழுமையானவை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அழகிய நற்செய்திக்காக காரியமாற்றுகிறார். கர்த்தரின் அன்பினை மக்கள் நம்பும்படியும் செய்கிறார். உண்மையான அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது உண்மையே என்று அவர் உறுதியளிக்கிறார். 
 
 
நீதியைக் குறித்தும் உலகிற்கு உணர்த்துகிறார்
 
பரிசுத்த ஆவியானவரின் மூன்றாவது நடவடிக்கை என்ன? அவர் சாத்தானின் வேலைகளை முறியடிக்கிறார். சாத்தான் மக்களின் சிந்தனைகளில் முணுமுணுக்கிறான், அவன் கூறுகிறான், “நீ இயேசுவை விசுவாசிக்கலாம், ஆனால் கிறிஸ்தவம் என்பது உலகின் அநேக மதங்களில் ஒன்று.” இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தை மக்கள் விசுவாசிப்பதிலிருந்து சாத்தான் தடுப்பதினால் அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் கூட அவர்கள் பாவங்களிற்கு மன்னிப்புக் கிடைக்க முடியாதபடி அவன் செய்கிறான். சாத்தான் கிறிஸ்தவத்தை “சாதாரண” ஒரு மதமாக குறைப்பதால், அநேக மக்கள் இயேசுவை விசுவாசிப்பது நல்ல மக்களாக வாழவே என்று சாத்தானின் வஞ்சனைக்குள் விழுகிறார்கள். ஆயினும் இயேசுவை விசுவாசிப்பதன் முக்கிய நோக்கம் மறுபடியும் நீதிமான்களாக பிறக்கவே. 
உங்களிடம் தவறான நம்பிக்கை இருக்கக்கூடாது. நீங்கள் எத்தனையாய் இயேசுவின் மீது விசுவாசமாயிருந்தாலும் தவறான நம்பிக்கை உங்களைப் பரிசுத்தனாக்காது. உங்களிடம் தவறான விசுவாசம் இருக்குமேயானால், சாத்தானின் பொய்களால் உங்களுக்கு இயேசுவைப் பற்றி தெளிவாகத் தெரிந்துக்கொள்ளவோ, அவரைக் காணவோ முடியாது. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்பட்டவர்களின் இரட்சிப்புக்கு பரிசுத்த ஆவியானவர் உறுதியளிப்பவராய் இருக்கிறார். இருதயத்தில் பாவங்கள் உள்ளவர்களின் எல்லா நம்பிக்கைகளும் வீண். 
பரிசுத்த ஆவியானவர் அழகிய நற்செய்திக்கு சாட்சி கூறுகிறார். இயேசு உலகின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது சுமக்கும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று அப்பாவத்திற்கு கிரயமாக சிலுவையில் அறையப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் இந்த உண்மைக்கு சாட்சி கூறுகிறார். உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் உலக மக்கள் எல்லாம் தம் பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறும்படி பரிசுத்த ஆவியானவர் அறிவுறுத்துகிறார். ஆயினும், அழகிய நற்செய்தியை தம் இருதயத்தினுள் எடுத்துச் செல்லாதவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் உணர்த்தி தீர்ப்பளிக்கிறார். 
 
 
ஆசீர்வதிக்கப்பட்ட விசுவாசம் எல்லோரிடமும் இருக்கவேண்டும் 
 
ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை யாது? பாவ மன்னிப்பின் மூலம் பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெற வழி நடத்தும் நம்பிக்கையே அது. ஆயினும், அவர்கள் எத்தனை காலமாக இயேசுவை விசுவாசிப்பதை கைகொண்டிந்த போதிலும் உலகம் முழுவதும் அநேக கிறிஸ்தவர்களின் இருதயத்தில் பாவமிருப்பதைக் காணலாம். அதிக காலம் அவர்கள் இயேசுவை விசுவாசித்தால் அவர்கள் அதிக பாவிகள் ஆகின்றனர். பல பாஷைகளில் பேசுதல், மற்றும் காட்சிகளைக் காணுதல் ஆகியவை பரிசுத்த ஆவியானவரை அவர்கள் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி என்று அவர்கள் நினைப்பதே அவர்கள் தம் பாவங்களிலிருந்து விடுதலையடைவதைத் தடுக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். அவர்கள் பாவங்களுக்கான தண்டனையைக் குறித்து அறியாதவர்களாக உள்ளனர். 
இவ்வுலகில் உள்ள அநேக மக்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை சாத்தனுடையதிலிருந்து பிரித்துணர முடியாது. சாத்தானின் கிரியைகள் மக்களை குழப்பத்திற்குட்படுத்துகின்றன, அவர்களுக்கு போலியான விசுவாசத்தை அளித்து அவர்களை அழிவை நோக்கி வழி நடத்துகிறான். கர்த்தருக்கு எதிராக இதனை சாத்தான் வெற்றிக் கொள்ள முல்கிறான். சாத்தான் மக்களை மூட விசுவாசங்களின் ஆளுகைக்குள் விழச் செய்து அவர்களைத் தம் அடிமைகளாக்குகிறான். அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்வதை விட அற்புதங்களையும் அதிசயங்களையும் உணர்வது அதிக பெறுமதி வாய்ந்தது என்று நினைக்கச் செய்வதை அவர்களிடம் விதைக்கிறான். 
ஆயினும், பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் உலகத்தை வேத வாக்கு மூலமாக மக்கள் காணும்படிச் செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் மூலமாக, கர்த்தர் மனிதனைப் படைத்தார் என்றும், கர்த்தர் அவர்களை நேசிக்கிறார் என்றும், கர்த்தர் அவர்களை இரட்சிக்க விரும்புகிறார் என்றும் அவர்கள் அறிந்து அதனை விசுவாசிக்கிறார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் பாவிகளை இயேசுகிறிஸ்து இரட்சிக்க வேண்டும் என்பது அவரின் திட்டமாயிருப்பதுடன் அவரின் அன்பினுள் விசுவாசத்துடன் வாழவும் வரவேற்கிறார். 
1 பேதுரு 3:21 கூறுகிறது, “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது - இரட்சிக்கிறது” மேலும், 1 பேதுரு 1:23 கூறுகிறது, “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.” 
பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பாவத்தைக் குறித்த உண்மையையும், நீதியையும், நியாயத்தீர்ப்பையும் குறித்து மனிதர்களுக்கு ஒளியூட்டி அவர்களை இந்த உண்மைகளை விசுவாசிக்கும்படிச் செய்கிறது. கர்த்தரின் நியாயத்தீர்ப்பைக் குறித்தும், அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதன் மூலம் அவர்கள் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற முடியும் என்றும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை அறியச் செய்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மீது அவர்களுக்கு விசுவாசம் இருக்கும் வரை தான் அவர்களினுள் இருப்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் அறிவையும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அளிக்கிறார்.
இதுவரை பரிசுத்த ஆவியானவரின் செய்கைகளைக் குறித்துப் பார்த்தோம். இயேசுவின் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் பாவ மன்னிப்பு பெறுவதனால் இவ்வுலகின் எல்லா மக்களும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப்பெறுவதோடு கர்த்தரின் அன்பையும் பெறுவர். 
 
 
பரிசுத்த ஆவியானவரின் தனித்துவம்
 
பரிசுத்த ஆவியானவர் வல்லமையுள்ள தேவன். அவர் தனித்துவத்திற்கான முக்கிய அம்சங்களைப் பெற்றுள்ளார். அவையாவன, ஞானஸ்நானம், உணர்ச்சி மற்றும் சித்தம். பரிசுத்த ஆவியானவர் ஞானமுடையவராக இருப்பதினால், அவர் கர்த்தரின் காரியங்களை ஆழமாகவும் (1 கொரிந்தியர் 2:10), மனிதர்களின் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிறார். 
பரிசுத்த ஆவியானவரிடம் உணர்ச்சி உள்ளதால் அவர் கர்த்தரின் வார்த்தைகளை நம்புவோரிடம் பிரியமாகவும், அவிவிசுவாசிகள் மீது ஆழமான வெட்கமும் உடையவராக இருக்கிறார். மேலும், நீதிமான்கள் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக கர்த்தரின் அன்பை உணரலாம். 
பரிசுத்த ஆவியானவர் “ஆறுதல் அளிப்பவர்” என்ற பெயருள்ளவராகவும் இருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் எதிரிகளை வென்று, வெற்றியைப் பெற நீதிமான்களின் கஷ்டங்களில் உதவுகிறார். நம்மிடம் உள்ளதுபோன்றே அவர் ஞானத்தையும் உணர்ச்சியையும் சித்தத்தையும் கொண்டுள்ளார். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போரிடம் சஞ்சரிக்கிறார். 
 
 
பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் கீழ்வருமாறு
 
பரிசுத்த ஆவியானவர் பாவ மன்னிப்பின் உண்மைகளை மனிதர்களை உணரச்செய்து விசுவாசிகளின் இருதயங்களில் சஞ்சரிக்கிறார். அவருடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் இயேசுவானவர் உலகின் பாவங்களை சுமந்து தீர்த்தார் என்ற உண்மையை சாட்சியம் கூறுவது அவர் பணியாகும். (1 யோவான் 5:6-8). அவர் தம் ஊழியர்களையும் பரிசுத்தவான்களையும் அவர்கள் பிரச்சினைகளில் இருக்கும்போது ஆறுதல்படுத்தி மீண்டும் எழுந்து நிற்க சக்தியையும் அளிக்கிறார். அவர்களுக்குத் தாம் எதற்காக ஜெபம் செய்யவேண்டுமென்று தெரியாதபோது அவரே பரிந்து பேசுகிறார். (ரோமர் 8:26). அவர் கர்த்தரின் ஆலயத்தினுள் நீதிமான்களுக்கு இளைப்பாறுதல் அளித்து அவரின் வார்த்தைகளின் மிகுதிக்கு அவர்களை வழி நடத்துகிறார் (சங்கீதம் 23).
 
 
வேதாகமத்துடன் தொடர்புள்ள பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள்
 
பரிசுத்த ஆவியானவர் நீதிமான்கள் உண்மையைத் தெரிந்து அதனை அவர்கள் இருதயத்தில் விசுவாசித்து அதனை மற்றவர்களுக்கு பிரசங்கிக்கும்படியாக வழி நடத்துகிறார். “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக” (2 தீமோத்தேயு 3:16). “கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடியில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்” (ஏசாயா 34:16).
“வேதத்திலுள்ள எந்த தீர்க்கத்தரிசனமும் சுய தோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கத்தரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்” (2 பேதுரு 1:20-21). 
நாம் வாசிக்கும்படியாக வேதவாக்கினை எழுத கர்த்தரின் ஊழியர்களை பரிசுத்த ஆவியானவர் ஊக்குவித்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர் மக்களுக்கு அறிமுகம் செய்து அதைக் குறித்து உலகம் முழுவதும் பிரசங்கிக்க நம்மை வழி நடத்துகிறார். ஆகவே, நீதிமான்கள் அநேக வழக்குகளினால் தம் வாழ்வில் துன்பப்பட்டாலும், அவர்களால் அவற்றை மேற்கொள்ள முடியும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்கு நன்றிகள். 
 
 
ஆவியானவரின் வரங்களும் கனிகளும்
 
பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் என்பதன் பொருள் அழகிய நற்செய்தியை மற்றவர்களிடம் பரப்புவதற்காக பரிசுத்தவான்களுக்கு அவர் கொடுக்கும் திறமைகளாகும். ஆகவே, பரிசுத்தவான்கள் தம்மை கர்த்தரின் பணிக்கு அவர் அளித்த வரங்களின் மூலம் அர்ப்பணம் செய்கின்றனர், அவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்த பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார். “ஆவியினுடைய அனுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (1 கொரிந்தியர் 12:7).
பரிசுத்த ஆவியானவரின் வரங்களுக்கான நோக்கம் யாதெனில் பரிசுத்தவான்களை விசுவாசத்தினால் தரிப்பித்து அவர்களுக்கு முன்புள்ள ஓட்டத்தை ஓட அவர்களுக்கு உதவுவதே. (எபேசியர் 4:11-12) பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் ஊழியர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் நற்செய்தியைப் பரப்புவதற்கான திறமைகளைக் கொடுக்கிறார். கர்த்தரின் ஆலயம் இயேசுகிறிஸ்துவினால் பரிசுத்தமாக்கப் பட்ட பரிசுத்தவான்களின் சமுதாயமாக இருக்கிறது (1 கொரிந்தியர் 1:2). 
இயேசுகிறிஸ்து ஆலயத்தின் தலைவராக இருப்பதினால், பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் நிலை மற்றும் கடமைக்கேற்றவாறு நடந்துகொள்ளவேண்டும். அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு ஊழியம் செய்யும்படியாக, பரிசுத்த ஆவியானவர் ஆவிக்குரிய ஞானத்தையும் திறமையையும் பரிசுத்தவான்களுக்கு கொடுக்கிறார். கர்த்தர் நமக்களித்த நற்செய்தியின் மகிமையை வெளிப்படுத்த எல்லாவற்றையும் செய்கிறார். அவர் கூறுகிறார், “ஆகையால் நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 10:31). 
 
 
ஆவியானவரின் வேறுவகையான வரங்கள்
 
12 வகையான பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் உள்ளன. ஒவ்வொரு வகையானவர்களுக்கும் வேறுபட்ட வடிவங்களில் இந்த வரங்கள் அளிக்கப்பட்டிருப்பதை வேதாகமத்தில் நாம் காணலாம். ரோமர் 12:6-8, 1 கொரிந்தியர் 12:8-10, மற்றும் எபேசியர் 4:1 ஆகியவற்றில் வரங்களைக் குறித்த பெரிய பட்டியல் ஒன்று காணப்படுகிறது. கீழ்க்கண்ட ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் 1 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில் பேசப்படுகிறது.
1) வார்த்தைகளைக் குறித்த அறிவு: நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக் குறித்து அறிந்து கொள்ள ஆவிக்குரிய தூண்டுதலை இது அளிப்பதன் மூலம் இந்த அழகிய நற்செய்தியை நாம் பிரசங்கிக்கும்படியும் செய்கிறது.
2) வார்த்தைகளைக் குறித்த ஞானம்: நீதிமானின் வாழ்க்கையில் வரும் பல்வேறு பிரச்சினைகளையும் எழுதப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தைகளின் மூலம் தீர்க்கும் திறமை.
3) விசுவாசம்: பரிசுத்தவான்களுக்கு பரிசுத்த ஆவியானவர் உறுதியான நம்பிக்கையையும், மன உறுதியையும் கொடுக்கிறார். இதனால், பாவங்களிலிருந்தும் ஆத்துமாக்களை இரட்சிக்கும் அற்புதத்தை அவர்களால் செய்யமுடிகிறது. ஒரு நீதிமானால் இந்த விசுவாசத்தின் மூலம் பாவ மன்னிப்பு பெறமுடிவதுடன் நம்பிக்கையின் வல்லமையினால் ஆவிக்குறிய குறைபாடுகளை சுகமாக்கலாம்.
4) சுகமாக்குதல்: வேதவாக்கின் மீதுள்ள நம்பிக்கையின் மூலமாக நீதிமான்களைக் குணமாக்கும் திறனை பரிசுத்த ஆவியானவர் வழங்குகிறார்.
5) அற்புதங்களைச் செய்தல்: இது கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்தவான்கள் கர்த்தரின் ஊழியத்தைச் செய்ய அனுமதிக்கும் ஆச்சர்யமான வரமாகும். அற்புதமானது விசுவாசத்தின் மூலம் இயற்கைக்கு மேலாக நடக்கும் ஒன்றாகும். இது இயற்கை விதிகளை குறித்த மனிதனின் அறிவிற்கு எட்டாத ஒன்று.
6) தீர்க்கதரிசனம்: இந்நேரத்தில், கர்த்தரின் வார்த்தையை யார் விசுவாசித்து அதற்கு கீழ்ப்படிகிறார்களோ, அவர்களால் எழுதப்பட்டுள்ளபடி தீர்க்கதரிசனம் கூறமுடியும். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் அமையாத ஒருவர் கூறும் வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருக்கமுடியாது. பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப்பெற்ற கர்த்தரின் ஊழியர்கள், கர்த்தரின் சரீரமாகிய கர்த்தரின் ஆலயத்தின் மூலம், கர்த்தரின் வார்த்தைகளை பிரசங்கிப்பதின் மூலம் அவர்களை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கச் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் இந்த திறமையை கர்த்தரின் ஊழியர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் கொடுத்துள்ளார்.
7) ஆவிகளைப் பிரித்துணறுதல்: இது ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டனவா என்று கண்டுணறும் திறனாகும். இந்த வரம் இல்லையென்றால் சாத்தான் நம்மை சாம்பல் தட்டிற்கு வழி நடத்திவிடும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வுலகம் சாத்தானின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கர்த்தர் நமக்கு கொடுத்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலமே இவ்வரத்தினைப் பெறமுடியும். மேலும் நம்மால் இந்தப்படியாக உலகின் சோதனைகளையும் பாரங்களையும், தீமைகளையும் மேற்கொள்ள முடியும். உண்மையான நற்செய்தியை நீதிமான் விசுவாசிப்பதன் மூலம் இந்த வரத்தைப் பெறுகிறான். இதன் மூலமாக ஒருவனின் இருதயத்தில் பாவமிருக்கிறது என்று அவனால் கூறமுடியும்.
8) பல பாஷை பேசுதல்: பல பாஷைப் பேசுவதைக் குறித்து வேதம் நம்மிடம் கூறுகிறது. “அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாய் இருக்கும்.” (1 கொரிந்தியர் 14:19) தன்னாலேயே புரிந்து கொள்ள முடியாத அந்நிய பாஷையில் பேசுவதைவிட வேதவாக்கை புரிந்துகொள்வது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒரு பரிசுத்தவான் தெரிந்துகொள்ளவேண்டும். ஆகவே, அவன் பல பாஷை பேசுவதை தவிர்க்க வேண்டும்.
9) அந்நிய பாஷைகளை மொழி பெயர்த்தல்: ஆதி சபையின் காலத்தில் சீடர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி இந்த வரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இக்காலத்தில் மொழி பெயர்த்தல் மற்றும் அர்த்தம் சொல்லுதல் ஆகிய ஊழியம் மூலமாக நற்செய்தியின் செய்தியை பல்வேறு மொழிகளிலும் பரிசுத்த ஆவியானவர் பரப்புகிறார். ஒருவர் நற்செய்தியை எல்லா மொழிகளிலும் பிரசங்கிக்க முடியும்போது அர்த்தம் கூறுபவர் ஒருவர் தேவையில்லை. ஆயினும், நாம் மொழிகளினால் தடைபடுவதை எதிர்கொள்ளும்போது, கர்த்தரின் பணியை நிறைவேற்றும் பொருட்டு அர்த்தம் கூறுபவர்களை அனுமதிக்கிறார். கர்த்தர் குழப்பத்தினுள்ளோ அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலைகளிலோ பணியாற்றுவதில்லை. பரிசுத்த ஆவியானவர் அழகிய நற்செய்தியில் பணியாற்றுவதோடு பரிசுத்தவான்கள் நற்செய்தியை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கவும் வழி நடத்துகிறார்.
 
 
பரிசுத்த ஆவியானவரின் கனிகள் என்ன?
 
பரிசுத்த ஆவியானவரின் கனிகளைக் குறித்து வேதம் கூறுகிறது. “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” (கலாத்தியர் 5:22-23).
1) அன்பு: அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிப்பதன் மூலம் நீதிமான் எல்லா பாவிகளையும் இரட்சிப்பது உண்மையான அன்பாகும். ஏனெனில் நீதிமான்கள் அழகிய நற்செய்தியை கொண்டிருக்கிறார்கள், அதுவே, இயேசுவின் உண்மையான அன்பாகும். அவர்கள் நற்செய்தியாகிய உண்மை அன்பைக் குறித்து பிரசங்கிப்பதோடு மற்ற ஆத்துமாக்களிடம் உண்மையான அன்பு வைத்துள்ளனர்.
2) சந்தோஷம்: நாம் மறுபடியும் பிறக்கும்போது நம் இருதயத்தில் அடி ஆழத்திலிருந்து பொங்கி எழும் விவரிக்கமுடியாத மகிழ்ச்சி இதுவாகும். தன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீதிமானின் இருதயத்தில் சந்தோஷம் இருக்கிறது. (பிலிப்பியர் 4:4) நீதிமான்களின் இருதயத்தில் சந்தோஷம் இருப்பதால், அவர்களால் தம் சந்தோஷத்தை மற்ற மக்களிடம் பகிர்ந்துகொள்ளும் திறமை இருக்கிறது. 
3) சமாதானம்: நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது வைத்த நம்பிக்கையின் மூலம் தன் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற்ற நீதிமானின் இருதயத்தில் சமாதானம் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நீதிமான்களை அழகிய நற்செய்தியின் சமாதானம் குறித்து பிரசங்கிக்கச் செய்கிறார். சமாதானத்தின் அழகிய நற்செய்தியை கேள்விப்பட்ட மக்கள் உலகின் பாவங்களை மேற்கொள்ள மற்றவர்களை வழி நடத்தி, இரட்சிப்பைக் குறித்து வல்லமை நிறைந்த விசுவாசம் மற்றும் உறுதியைப் பெறச் செய்கிறார்கள். கர்த்தருக்கும் மக்களுக்கும் சமாதானம் உண்டுபண்ணும் நீதியின் மக்கள் கர்த்தரின் குமாரர். (மத்தேயு 5:9) என்று அவர்கள் அழைக்கப்படுவதோடு மற்றவர்கள் பாவமன்னிப்பு பெறவும் வழி நடத்துகிறார்கள் (நீதிமொழிகள் 12:10). பரிசுத்த ஆவியானவர் நீதிமான்களை நீதியின் வாழ்க்கை நடத்தி மற்றவர்களை சமாதானத்தினால் ஆசீர்வதித்து அழகிய நற்செய்தியை பரப்பும்படி செய்கிறார். 
4) நீடிய பொறுமை: உண்மை நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் தம் பாவங்களிலிருந்து விடுதலைப்பெற்ற நீதிமான்களின் இருதயத்தில் நீடிய பொறுமையின் கனிகள் உள்ளன. பரிசுத்த ஆவியானவருடன் நீண்ட கால உறவாடலை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இக்கனியை நாம் பெறலாம். நீதிமான்களிடம் நீடிய பொறுமை நிறைந்த இருதயம் இருக்கிறது. 
5) தயவு: நாம் முழு பாவத்துடன் இருந்தபோது கர்த்தர் நம்மிடம் இரக்கமாய் இருந்தார். மேலும், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் நம் பாவங்களிலிருந்து அவர் விடுதலை தந்தார். நாம் மற்றவர்களை நேசித்து இரக்கமுடையவர்களாக இருக்கவேண்டும். ஏனெனில், இயேசு நமக்கு இறங்கியதுடன் நம் பாவங்களையும் துடைத்தார், நாம் அவரை விசுவாசித்ததால் அவரின் கிருபையை பெற்றோம். நீதிமான்களின் இருதயங்களில் தயவு நிறைந்திருப்பதுடன், அழகிய நற்செய்தியின் கனிகளும் உள்ளன. 
6) நற்குணம்: நற்குணம் என்பது “சிறந்த பண்பு” என்று அர்த்தமாகும். நீதியின் மக்கள் இருதயத்தின் அடி ஆழத்தில் நற்குணத்தையும் கர்த்தரின் மீது விசுவாசத்தையும் கொண்டிருக்கிறார்கள்.
7) விசுவாசம்: விசுவாசமென்பதன் பொருள் இருதயம் முழுவதும் கர்த்தரின் விசுவாசம் இருப்பதாகும். இயேசுவிடம் பக்தியாக இருப்பதன் மூலம் பரிசுத்தவானிடம் விசுவாசம் வருகிறது. 
8) சாந்தம்: மற்றவர்களை முழுமையாக அறிந்துகொள்ளும் திறமையும் அவர்களை அன்பாகவும் இனிமையாகவும், நம்மிருதயத்தில் வைத்திருப்பதும் சாந்தமாகும். நீதிமான்களுக்கு தம் எதிரியை நேசிக்கும் இருதயமும் அவர்களின் பாவ விடுதலைக்காக ஜெபிக்கும் தன்மையும் இருக்கிறது. 
9) இச்சையடக்கம்: ஒருவன் தன்னை கட்டுப்படுத்தும் திறமை இச்சையடக்கமாகும், ஒரு கட்டுப்பாடில்லாத வாழ்வினை நடத்துவதைத் தவிர்க்க இச்சையடக்கமும், தன்னடக்கமும் நிறைந்த வாழ்வு நடத்த வேண்டும்.
 
 
பரிசுத்த ஆவியானவரால் நிரம்புதல்
 
பரிசுத்த ஆவியானவரால் நிரம்புவதின் விளைவு என்ன? இந்த ஆசீர்வாதத்தை பரிசுத்தவான்கள் பெறுவது இயேசுகிறிஸ்துவின் சீடர்களைப் போல் அவர்கள் வாழவும் கர்த்தரின் ஆலயத்தில் அவர்கள் இணையவும் அனுமதிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நீதிமான்களை நீதியின் கருவிகளாக மாற ஏதுவாகச் செய்து கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்ற தம்மை அர்ப்பணிக்கச் செய்கிறார். நீதிமான்களின் சித்தம் கர்த்தரின் சித்தத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்கள் தம் உடமைகளையும், தாலந்துகளையும் தாமாகவே அர்ப்பணம் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் நீதிமான்கள் உலகின் பாவங்களை மேற்கொள்ளும்படி வாழ வழிநடத்துவடன் வெற்றியுணர்வையும், சந்தோஷம் மற்றும் மன உறுதியையும் ஆவிக்குள் வறுமை இல்லாமையும், தோல்வி மற்றும் தவிப்பு ஆகியவை இல்லாமலும் செய்கிறார். (ரோமர் 7 ஆம் அதிகாரம்) 
“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும், எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார்” (அப்போஸ்தலர் 1:8) பரிசுத்த ஆவியானவரின் நிறைவு நீதிமான்களை நற்செய்தியைப் பிரசங்கிக்க வழி நடத்துகிறது. 
பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வோருக்கு வல்லமையான நம்பிக்கையுணர்ச்சியை கர்த்தர் கொடுத்துள்ளார். இயேசுவின் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பாவ மன்னிப்பு பெற்றவர்கள் அவரின் பிள்ளைகளாகும் உரிமையை கர்த்தர் கொடுத்தார். (யோவான் 1:12) விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் பிள்ளைகளாகிய நீதியின் மக்களால் இவ்வுலகில் அழகிய நற்செய்தியை பிரசங்கிக்க முடியும். 
பாவ மன்னிப்பு நற்செய்தின் மூலம், சாத்தானை முறியடிக்கும் திறமை நீதிமான்களிடம் இருக்கிறது. அவர்களிடம் ஆவிக்குரிய சுகவீனத்தை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது (மாற்கு 16:18), சாத்தானின் வல்லமைகளை மிதித்துப்போடும் வல்லமையும் (லூக்கா 10:19), பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்கும் வல்லமையும் இருக்கிறது (வெளி 22:14). கர்த்தரின் வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பதன் மூலம், நீதிமான்கள் அரசர்களையொத்த அதிகாரத்துடன் வாழ்வார்கள். (2 கொரிந்தியர் 6:17-18).
பரிசுத்த ஆவியானவர் நீதிமான்களை உலகின் இச்சைகளை அகற்றிப்போடும்படிச் செய்கிறார். அவர் நம்மை உண்மையான நற்செய்தியை பிரசங்கிக்கும்படி வழி நடத்துகிறார். (கலாத்தியர் 5:6) 
பரிசுத்த ஆவியானவர் அழகிய நற்செய்தியை நீதிமான்கள் படித்து விசுவாசித்து அதனை மற்றவர்களுக்கு போதிக்கவும் செய்கிறார். (1 தீமோத்தேயு 4:13)
நீதிமான்களை தினமும் கர்த்தரின் ஆலயத்தில் பரிசுத்த ஆவியானவர் கூட்டிச் சேர்க்கிறார். (எபிரேயர் 10:25)
நீதிமான்கள் தம் பாவங்களை அறிக்கைச் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் செய்கிறார். (1 யோவான் 1:9) உண்மையின் வெளிச்சத்தால் அவர்கள் இருதயத்தினை வெளியரங்கப்படுத்துகிறார். (எபேசியர் 5:13). 
பரிசுத்த ஆவியானவர் நீதிமான்களின் வாழ்வில் சரியான பாதையில் செல்ல அவர்களை வழி நடத்துகிறார். (சங்கீதம் 23). 
பரிசுத்த ஆவியானவர் நீதிமான்களிடம் அவர்களின் வரங்களை குளிரச்செய்யாமலிருக்கும்படி கூறுகிறார். (1 தெசலோனிக்கேயர் 5:19).
பரிசுத்த ஆவியானவர் அதிசயமான நற்செய்தியின் மூலம் பெரிய காரியங்களைச் செய்கிறார். (மாற்கு 16:17-18) 
கர்த்தரின் சபையில் அவர்களை இணைப்பதன் மூலம் நீதிமான்கள் கர்த்தரின் சீடர்களைப் போல் வாழ பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழி நடத்துகிறார். அழகிய நற்செய்தியை பிரசங்கித்து பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஆவிக்குரிய வாழ்வு வாழ நீதிமான்களை அவர் வழி நடத்துகிறார். அதிசயமான நற்செய்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் செய்யும் காரியங்கள் இவைகளே. (1 பேதுரு 2:9)
இந்நொடியிலும் பரிசுத்தவான்களின் இருதயத்தில் அவர் கிரியைச் செய்கிறார். அல்லேலூயா!