• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-14] பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான உண்மையான மனம் வருந்துதல் யாது? (அப்போஸ்தலர் 2:38)

(அப்போஸ்தலர் 2:38)
“பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.”
 
 
பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான உண்மையான மனம் வருந்துதல் யாது?
அது அழகிய நற்செய்தியான நீர் மற்றும் ஆவிக்குத் திரும்பி இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதாய் இருக்கிறது.

அப்போஸ்தலர் 2 இல் பேதுருவின் பிரசங்கம் மக்களை ஆழமாக அசைத்து அவர்களின் பாவங்களுக்காக மனம் வருந்தச் செய்தது என்று வேதம் கூறுகிறது. அவர்கள் இருதயம் அறுப்புண்டு பேதுருவிடமும் மற்ற அப்போஸ்தலர்களிடமும், “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு பேதுரு பதில் கூறுகிறான், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” ( அப்போஸ்தலர் 2:38 ) 
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்பிக்கை இன்றியமையாதது என்று பேதுருவின் பிரசங்கம் நமக்கு காட்டுவதுடன் உண்மையான மனம் வருந்துதல் என்ன என்றும் காட்டுகிறது. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதுடன் வேத வசனங்களை நெருக்கமாகப் பார்ப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரை பாவ மன்னிப்புடன் பெறுகிறோம் என்பதைக் குறித்து நாம் தெரிந்திருக்கவேண்டும். 
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவதற்கு நம்மிடமிருக்கவேண்டிய முதல் காரியம் என்னவென்றால் வேதாகமம் கூறும் மனம் வருந்துதலின் மீது விசுவாசம் இருக்க வேண்டும். ஆயினும், இந்த மனம் வருந்துதலை சாதாரண வருந்துதலாக வரையறுக்காமல் இருக்கும் பொருட்டு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இங்கே மனம் வருந்துதல் என்பது இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தைக் குறிக்கிறது. மக்கள் கர்த்தரை சிலுவையிலறைந்ததைக் குறித்து மனம் வருந்தியதை வேதாகமத்தில் காணலாம். அவர்கள் வருந்தி பேதுருவிடம் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டதுடன் பேதுரு அவர்களிடம் மனம் வருந்துங்கள் என்று கூறுமுன்பே தம் பாவங்களை ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் பேதுரு கூறிய மனம் வருந்துதல் வெறும் பாவத்திற்காக வருந்துதலோ அதனை ஒப்புக்கொள்வதோ இல்லையெனவும், இயேசு கிறிஸ்துவை ஒருவனின் இருதயத்திற்குள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் கொடுத்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதே அது எனவும் நாம் காணலாம். இதுவே மனம் வருந்துதலின் உண்மைச் சுபாவமாகும். 
நம்மிருதயத்தில் பாவத்திற்கான சுயவருந்துதல் இல்லாதிருக்கும் முன்னமே இயேசுகிறிஸ்துவின் அன்பு நம்மிடம் வந்தது. இதன் பொருள் என்னவெனில், இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது நம் பாவங்களைச் சுமந்து தீர்த்தார் என்றும், சிலுவையில் மரித்தார் என்றும், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழும்பினார் என்றும் இது பொருள்படும். இந்த வழியின் மூலமாக அவர் நம் பாவங்களையும், அக்கிரமங்களையும் கழுவிப்போட்டார். 
உண்மையான மனம் வருந்துதல் என்பது இந்த உண்மையை விசுவாசிப்பதாகும். நம்முடைய பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டு கெஞ்சினால், நம் பாவங்கள் போய்விட்டன என்று நினைக்கிறாயா? இது உண்மையான மனம் வருந்துதல் இல்லை. உண்மையான மனம் வருந்துதல் என்பது அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்பதன் மூலம் நம் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதாகும். மனம் வருந்துதலின் மூலம் நாம் பாவமன்னிப்பு பெறவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அது போல முழு பாவ மன்னிப்புப் பெற நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் நாம் விசுவாசிக்க வேண்டும். 
இயேசுவை விசுவாசித்தோருக்கு, “இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்” பேதுரு ஞானஸ்நானம் கொடுத்தான். இயேசு மனித குலத்தின் பாவங்களை ஏற்றுக்கொள்ளும்படி ஞானஸ்நானம் பெற்றார். அவருடைய ஞானஸ்நானமும் சிலுவை மரணமும், அழகிய நற்செய்தியை முழுமைப் பெறச் செய்ததோடு விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யப்பெறுமாறும் செய்தது. (மத்தேயு 3:!5-17). இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதன் மூலம் மனித குலம் பரிசுத்தமாக முடியும். சுருக்கமாகக் கூறினால், நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பாவ மன்னிப்புப் பெற்றவர்கள் பரிசுத்த ஆவியையும் பெற்றுக் கொண்டார்கள். 
 
 
பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தை ஜெபம் அழைத்து வருமா?
 
மக்கள் எத்தனை கஷ்டப்பட்டு முயற்சித்தாலும் அவர்களால் பாவ மன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்வதையும் பெற முடியாது. பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யவேண்டுமானால், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் நிறைவேற்றப்பட்ட அழகிய நற்செய்தியை விசுவாசிப்பது மிகவும் அவசியமாகும். யாருடைய பாவங்கள் முற்றிலுமாக கழுவப்பட்டதோ, அவர்களுக்கு கர்த்தரின் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகிறார். 
நற்செய்தியின் மீதுள்ள விசுவாசம் என்பதன் பொருள் இயேசுகிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஒப்புக்கொள்வதேயாகும். அப்போஸ்தலர் 2:38 கூறுகிறது, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” சரியான மனந்திரும்புதல் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யும்படி கொடுக்கப்படுகிறார் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறான். பாவ மன்னிப்பும் பரிசுத்த ஆவியானவரை வாசஞ்செய்யும்படி பெறுவதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. 
வேதாகமம் கூறுகிறது, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி” (அப்போஸ்தலர் 2:38-39) 
ஒருவனுடைய இருதயம் புனிதமாகி பாவங்களற்று இருக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தின் மீதே அவனால் பரிசுத்த ஆவியானவரைப் பெறமுடியும். ஆகவே, இயேசுகிறிஸ்து நமக்களித்த நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்ற போது உலகின் பாவங்களெல்லாம் கழுவப்பட்டது என்று கூறும் அதிசயமான நற்செய்தியை விசுவாசிப்பதால் கிடைக்கும் நம் பாவ மன்னிப்பினால் நாம் பரிசுத்தனாக வேண்டும். அப்பொழுது மட்டுமே நம்மால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியும். பரிசுத்த ஆவியானவர் மனிதர்களிடம் வாசஞ் செய்யவேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாயிருக்கிறது. “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 4:3). 
மனிதர்களின் முயற்சியினாலோ, பலிகளினாலோ, நற்குணத்தை பெற்றிருப்பதாலோ, பாவ மன்னிப்பு அருளப்படுவது இல்லை, மாறாக, பரிசுத்த திரியேகர், யோவானளித்த ஞானஸ்நானம் மூலம் நிறைவேற்றிய அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே அது கிடைக்கிறது. அழகிய நற்செய்தியை விசுவாசித்து பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்கு கர்த்தராகிய பரிசுத்த திரியேகர், பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்யும்படி அருளிச்செய்கிறார்.
பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு கூறியவற்றைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் இருதயம் குத்துண்டவர்களானார்கள். “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” (அப்போஸ்தலர் 2:37) என்று கூக்குரலிட்டார்கள். இது அவர்கள் மனந்திரும்பி இயேசுவை தம் இரட்சகராக விசுவாசிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பேதுரு பிரசங்கித்த உண்மையான மனந்திரும்புதலைக் கேட்டு அதனை விசுவாசித்தமையால் அவர்கள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டனர். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதைப் பொறுத்து பாவ மன்னிப்பு மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டது.
இயேசுவின் ஞானஸ்நானத்திற்கான காரணம் அவர் இவ்வுலகின் பாவங்களைச் சுமப்பதற்காகவே. பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான ஒரே நிர்பந்தம் இதன் மீது விசுவாசம் வைப்பதே. இயேசுவின் ஞானஸ்நானத்தின் அடிப்படையில் அமைந்த சத்தியத்தின் நற்செய்தியை யார் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை வாசஞ்செய்யும்படி கர்த்தர் அருளிச் செய்கிறார். “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்கு திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்” (மத்தேயு 3:16). அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கும்; அப்போஸ்தலர்கள் மீது பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்தமைக்கும் சிறப்பான தொடர்புண்டு. 
இயேசுவின் பெயரால் மக்கள் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள் என்று அப்போஸ்தல நடபடிகள் கூறுகிறது. பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவது கர்த்தரின் சிறப்பான வரம் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரை வரமாகப் பெறும்பொருட்டு, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நம் எல்லா பாவங்களும் கழுவப்படவேண்டும். 
அப்போஸ்தல நடபடிகள் கூறுவதன்படி “மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 2:40) என்று கூறும் பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள், அவன் ஆலோசனைக்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஆதிசபையின் காலத்தில் அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதை வேதாகமத்திலிருந்து அறிகிறோம். பரிசுத்த ஆவியானவரைப் பெற இதுவே முக்கியமான நிர்பந்தமாகும். ஒருவன் பாவ மன்னிப்பை வேண்டினால், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம், ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசம் ஆகியவை இன்றியமையாதவை. 
 
 
உண்மையான மனந்திரும்புதலின் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்தும் நம்பிக்கை
 
அப்போஸ்தலர் 3:19 ஐப் பார்ப்போம். “கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.” மனந்திரும்புதலை நாம் எவ்வாறு வரையறுப்பது? அதனைக் குறித்து மீண்டும் நினைப்போம். 
வேதாகமத்தில், மனந்திரும்புதல் என்பது விடுதலைக் குறித்த விசுவாசத்திற்கு திரும்புதல் என்று பொருள்படும். அந்நாட்களில் மக்கள் தாம் விரும்பிய படி நடந்ததுடன் கர்த்தர் படைத்த பொருட்களையும் ஆராதித்தனர். ஆனால், இயேசுகிறிஸ்து அவர்களை அவர்கள் பாவங்களிலிருந்து நீராலும் தன் இரத்தத்தாலும் இரட்சித்ததை உணர்ந்தபிறகு, அவர்கள் மாற்றப்பட்டவர்களாயினர். இதுவே, வேதாகம மனம் வருந்துதல் ஆகும். உண்மை மன்ந்திரும்புதல் என்பது அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினிடத்தில், திரும்புவதாயிருக்கிறது. 
பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு உண்மை மனந்திரும்புதல் வேண்டுவது என்ன? அது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம், ஆகியவற்றை விசுவாசிப்பதை வேண்டுகிறது. “கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும்” மக்களிடம் இத்தகைய விசுவாசமிருந்தால், அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரைப் பெறுவார்கள். இயேசு தம்முடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மூலம் உலகின் எல்லாப்பாவிகளையும் புனிதர்களாக்கியதால், இந்த அழகிய நற்செய்தியை நாமும் விசுவாசித்து, பாவ விடுதலைப் பெற்று பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளவேண்டும். 
இயேசுவை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யும்படி பெறவேண்டுமானால், ஒருவனுடைய பாவங்கள், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் ஆகியவை மீதுள்ள விசுவாசத்தின் மூலம் அவரின் மீது சுமத்தப்படவேண்டும். இயேசு நம் எல்லோருடைய பாவங்களையும் எடுத்துக்கொண்டு நம் பாவங்களுக்கு தீர்ப்பாக சிலுவையில் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ் செய்யும்படி பெற ஏதுவாக்க, இதுவே சரியான விசுவாசமும் உண்மையான மனந்திரும்புதலுமாகும். 
தம்முடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப் பட்டவர்களின் மீது பரிசுத்த ஆவியானவர் வருகிறார். பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை கர்த்தர் ஏன் பரிசாகக் கொடுக்கிறார்? பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தமாக இருப்பதினால், அவர்களிடம் சஞ்சரித்து அவரின் பிள்ளைகளாக முத்திரைப் பதிக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் கர்த்தராவார். பிதா, குமாரர், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் ஒரே கர்த்தரே ஆவர். அவர்கள் மூவர், ஆனால் இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு அவர்கள் ஒரே கர்த்தரே. நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்க பிதாவினிடம் திட்டமிருந்தது. அதன்படி குமாரனாகிய இயேசு இவ்வுலகிற்கு வந்து, உலகின் பாவங்களை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து பிறகு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றைக் குறித்து சாட்சி கூறுவதன் மூலம் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகிறார்.
பரிசுத்த ஆவியானவர் மூலம் இரட்சிக்கப் பட்டவர்கள் மீது கர்த்தர் முத்திரைப் பதிக்கிறார். இயேசு இவ்வுலகின் பாவங்களை சுமந்து தீர்த்தார் என்ற நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை அருளிச்செய்கிறார். கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை, அவர்களை தம் பிள்ளைகளாக முத்திரைப் பதித்தமைக்கு வாக்குறுதியாக கொடுக்கிறார். அழகிய நற்செய்தியை விசுவாசிப்போருக்கு, பரிசுத்த ஆவியானவர், அவர்கள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டார்கள் என்பதற்கு இறுதி அத்தாட்சியாவார்.
பரிசுத்த ஆவியானவர் யாரிடம் இருக்கிறாரோ அவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாவர். பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யும்படி பெற்றவர்கள் தாம் இளைப்பாறுதல் அடைந்ததை எப்போதும் உணருவர். அவர்களிடம், வேத வாக்கினைக் குறித்தும், இயேசுவின் ஞானஸ்நானம் குறித்தும், அவரின் சிலுவை இரத்தம் குறித்தும் உறுதியான விசுவாசம் இருக்கிறது. உண்மையாகவே, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். யார் சரியானபடி மனந்திரும்புகிறார்களோ அவர்களின் இருதயங்களில் பாவமில்லாதிருப்பதோடு பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப்பெற்றிருப்பர். 
பாவமன்னிப்பைக் கொண்டுவரும் மனந்திரும்புதல் இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. நீங்கள் அத்தகைய மனம் வருந்துதலின் ஊடே சென்றிருக்கிறீர்களா? நீங்கள் மனந்திரும்பி உண்மை நம்பிக்கைகளை கைக் கொண்டீர்களானால், உங்களாலும் அழகிய நற்செய்தியைப் பெற முடியும். உங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளுமாறு உங்களுக்கு ஆலோசனைக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரை உங்களில் வாசஞ்செய்யும்படி பெறுவதற்கு வழி நடத்தும் அழகிய நற்செய்தியை விசுவாசித்து மனந்திரும்புவதற்கு தயாராக இருக்கிறீர்களா?