• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-15] சத்தியத்தைத் தெரிந்துக் கொள்ளும்போதே பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ் செய்வதைப் பெறமுடியும் (யோவான் 8:31-36)

(யோவான் 8:31-36)
“இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராய் இருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். அவர்கள் அவருக்கு பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவனெவனும் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்”
 
 
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி பெற நாம் என்ன செய்யவேண்டும்?
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதுடன் விசுவாசத்தினால் வாழவேண்டும்.
 
உண்மை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இயேசு கூறினார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்” (யோவான் 14:6). ஆகவே, இயேசுவை தெரிந்துகொள்வது சத்தியத்தை தெரிந்துகொள்வதாகும். பரிசுத்த ஆவியானவர் உன்னுள் வாசஞ்செய்கிறாரா? அழகிய நற்செய்தியின் மீதுள்ள உன் நம்பிக்கைக்கு நன்றிகள். இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் அழகிய நற்செய்தியின் உருவமாகும் என்பதை தெரிந்துகொண்டு அதை விசுவாசிக்க வேண்டும். 
“மறுபடியும் பிறத்தல்” என்ற வாக்கியத்தை மக்கள் இன்று அடிக்கடி உபயோகப்படுத்துகின்றனர். “மக்கள் மறுபடியும் பிறக்கவேண்டும். அரசியல் மறுபடியும் பிறக்கவேண்டும். மதம் மறுபடியும் பிறக்கவேண்டும்.” “முன்னேற்றம்” என்பதற்கு ஒப்பானதாக இந்த வாக்கியத்தை உபயோகிக்கிறார்கள். ஆயினும், மறுபடியும் பிறப்பது என்பது சரீர சுபாவத்தை முன்னேற்றுதல் அல்ல. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கேட்டு விசுவாசித்து, பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றுக் கொள்வதானது மறுபடியும் பிறத்தல் என்பதன் பொருளாகும். 
 

நம்மை மறுபடியும் பிறக்கச் செய்ய அனுமதிக்கும் சத்திய வார்த்தைகள் யாது? 
 
மனிதன் எதற்காக மறுபடியும் பிறக்கவேண்டும்? மனிதன் முழுமைப் பெறாதவனாக இருக்கிறான். ஆகவே, கர்த்தரின் பிள்ளையாக மறுபடியும் பிறப்பதற்கு அவன் பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவது மிகவும் அவசியம். நிறைய மனிதர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசஞ்செய்யாததை நாம் காணலாம். நிக்கொதேமு யூதர்களின் அதிகாரியாக இருந்தான். நிக்கொதேமு யோவான் 3 ஆம் அதிகாரத்தில் வருகிறான். இவன் யூத மதத்தின் தலைவனாகவும் கர்த்தர் அளித்த கட்டளைகளை காக்க முயல்பவனாகவும் இருந்தான். அவன் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தைக் குறித்து அறியாமல் மக்களின் மதத் தலைவனாக கடமையாற்றினான். 
 பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பெறுவதற்கு அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியானவரை விசுவாசித்து விசுவாசத்தில் வாழ வேண்டும். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்திய வார்த்தைகள விசுவாசிக்கத் தொடங்கும் போது மனிதன் பரிசுத்த ஆவியானவரை தன்னில் வாசஞ்செய்யும் படி பெறமுடியும். இயேசு கூறினார், “பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே; பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?” (யோவான் 3:12)
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கீழே காணலாம். நம் தேவன் இவ்வுலகில் பிறந்து, 30-ஆம் வயதில் யோவானால் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு சிலுவையில் மரித்து, மீண்டும் உயிரோடெழுந்து நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுதலையாக்கினார். இயேசு யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்று விசுவாசிப்போர்களுக்கு அவர் இரட்சகரானார். இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்போர்களுக்கு பாவ மன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்யும்படியும் தந்தருளினார். 
தம்முடைய இருதயங்களில் இன்னமும் பாவமிருப்பவர்கள், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை விசுவாசித்து அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பெறவேண்டும். கர்த்தருக்கு முன்பாக மனிதனால் பாவம் செய்ய முடியாததாகையால் இயேசுவை இரட்சகராக எற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் கழுவினார். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கேட்டு விசுவாசிப்பதன் மூலம் எல்லாப் பாவிகளும் இரட்சிக்கப்பட முடியும். இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரம் மூலம் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 
“சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், உயர்த்தப்படவேண்டும்” (யோவான் 3:14). பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்தபோதிலும், வனாந்திரத்திலே பாம்புகளால் கடிக்கப்பட்ட போதிலும், தவிப்புடன் இறந்தாலும், கம்பின் மேலுள்ள வெண்கல பாம்பைப் பார்த்து நிறையப் பேர் வாழ்ந்தார்கள்.
அது போலவே, நாம் பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றிருக்கிறோம். அழகிய நற்செய்தியை விசுவாசிப்போருக்கு, பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யும்படிக்கு இயேசு கொடுக்கிறார். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நாம் தெரிந்துகொள்ளாத படி சாத்தான் மறைத்து உண்மையின் ஆவியை நாம் பெற்றுக் கொள்வதைத் தடுக்கிறான். ஆயினும், நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மீதுள்ள விசுவாசத்தின் மூலம், கர்த்தர் நமக்கு பாவமன்னிப்பு அளித்ததோடு, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி நமக்களித்து ஆசீர்வதித்தார்.
இந்த அழகிய நற்செய்தியை விசுவாசித்ததால் நீங்கள் கூட பரிசுத்த ஆவியானவரை உங்களில் வாசஞ்செய்யும்படி பெற்றுக்கொள்ளலாம். கர்த்தருக்கு முன்பு அழகிய நற்செய்தியானது உண்மையானது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? உண்மையான நற்செய்தியாகிய இதனை விசுவாசித்து, பரிசுத்த ஆவியானவரை உங்களில் வாசஞ்செய்யும்படி பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
நம்மை எல்லாப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் சத்தியத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டுமென கர்த்தர் நம்மிடம் கூறினார். “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32). நம்மை இரட்சித்து பரிசுத்த ஆவியானவரை நம்மில் சஞ்சரிக்கச் செய்யும் அழகிய நற்செய்தியைக் குறித்த சத்தியத்தை நீ அறிவாயா? இந்த நற்செய்தியை நீ ஏற்றுக்கொண்டால், பரிசுத்த ஆவியானவரை உன்னில் சஞ்சரிக்கும்படி நிச்சயமாகப் பெற்றுக்கொள்வாய்.