• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-16] பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்களின் பணி (ஏசாயா 61:1-11)

2021.04.20 42
(ஏசாயா 61:1-11)
“கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்கு பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார். அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களெனப்படுவார்கள். அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்து கிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய் கட்டுவார்கள். மறு ஜாதியார் நின்று கொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத் தோட்டக்காரருமாயிருப்பார்கள். நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக் காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அனுபவித்து, அவர்கள் மகிமையைக் கொண்டு மேன்மை பாராட்டுவீர்கள். உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாயப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப் பொருளினால் இடப்பட்ட தகன பலியை வெறுக்கிறேன்; நான் அவர்கள் கிரியையை உண்மையாக்கி, அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன், அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தனமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்து கொள்வார்கள். கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களி கூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக் கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக் கொள்ளுகிறதற்கும், ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்படவைகளை முளைவிப்பது போலவும், கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.”
 
 
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்களின் பணி யாது?
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகின் எல்லா மக்களுக்கும் பிரசங்கிப்பதேயாகும்.
 
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட ஒருவன் என்ன செய்யவேண்டும்? அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யப் பெற்றவர்களிடம் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கும் அழகிய நற்செய்தியை கர்த்தர் ஒப்படைத்துள்ளார். கர்த்தர் முன் தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்கிறார்கள். அப்படியானால், பரிசுத்த ஆவியானவரைக் கர்த்தர் வரமாக அளித்தார் என்று நீங்கள் ஏன் எண்ணவேண்டும்.?
அவர்களைத் தம் பிள்ளைகளாக்கினார் என்பதற்கான இறுதி அத்தாட்சியாக, பரிசுத்த ஆவியானவரை அவர் வரமாக அளிக்கிறார். அவர்கள் சாத்தானை மேற்கொள்ளவேண்டுமென்றும் அவர் விரும்புகிறார். யாரெல்லாம் தம் பாவங்களிலிருந்து பாவ மன்னிப்பு பெற்று பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ் செய்யும் படி பெற்றார்களோ அவர்களை கர்த்தர் கீழ்கண்ட பணிகளைச் செய்யும்படிச் செய்கிறார். 
 

ஏழைகளுக்கு அவர்களை நல்ல செய்தியை பிரசங்கிக்கச் செய்கிறார்
 
ஏழைகளுக்கு நற்செய்தி எது? அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றவர்களை ஏழைகளுக்கு அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கும்படி கட்டளையிட்டார். பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டவர்களுக்கு, பரலோகத்தின் மீது நம்பிக்கையிருப்பதால், உலகச் சம்பந்தமானவற்றில் திருப்திக் கொள்வதில்லை. 
கர்த்தர் ஏழைகளுக்கு நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் அளித்து அவர்களின் பாவங்களையும் மன்னித்தார். அதன்பிறகு அவர் அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை அவர்களில் வாசஞ்செய்யும் படி அருளி நிரந்தர உலகிற்குள் அவர்களை அனுமதித்தார். கர்த்தர் நீதிமான்களை ஏழைகளுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்துப் பிரசங்கிக்க கட்டளையிட்டார். கர்த்தர் மற்றும் இயேசுவானவர் மீதான விசுவாசத்தை அவர்கள் பரப்பவும் செய்தார். கர்த்தர் நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்ததற்கான காரணம் உலகின் ஏழைகளுக்கு அழகிய செய்தியை பிரசங்கிப்பதற்காகவே. 
 

உடைந்துபோன இருதயங்களை சுகமாக்க நம்மை அனுப்புகிறார்
 
நம்முடைய மனங்களை கர்த்தர் எப்படிச் சுகமாக்குகிறார்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் உடைந்துபோன இருதயங்களை அவர் சுகமாக்குகிறார். அவர்களுக்கு, வாழ்வு பெறுமதி இல்லாத ஒன்று, அவர்களுடைய சுயநீதியோ நொருங்கியது. அவர்கள் தம் பாவத்தின் நிமித்தம் தாழ்மையும் வேதனையும் நிறைந்த வாழ்வைப் பெற்றுள்ளனர். தம் வாழ்வைக் குறித்த சந்தேகங்களினால், அவ்வப்போது கிழிந்துபோகின்றனர். எல்லா மனிதர்களும் உடல் மற்றும் ஆத்துமாவை மகிழ்ச்சியாகவும் வளமையை சந்தோஷிப்பவர்களாகவும் வாழ விரும்புகின்றனர். ஒருவருடைய உடமைகளை திருடிக்கொண்டுப் போய்விட்டால் எப்படியோ அப்படியே இதுவும் மக்களுக்கு இலகுவாக கிடைப்பதில்லை. 
அதுபோல, யாருடைய இருதயத்தில் பாவமிருக்கிறதோ, அவர்களிடமிருந்து தொடர்ந்து நீதி திருடப்படுகிறது, ஆகவே முடிவில், தம் பாவங்களின் நிமித்தம் அவர்கள் நரகஞ் செல்லுகின்றனர். அத்தகைய உடைந்துபோன இருதயம் உள்ளவர்களுக்காக இரக்கப்பட்டே கர்த்தர் நம்மை அவர்களுக்கு அழகிய நற்செய்தியை பிரசங்கிக்க கட்டளையிட்டார். எந்த வார்த்தைகளால் கர்த்தர் அவர்களை சுகமாக்கினார்? அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் அவர் அப்படிச் செய்தார். அவர் உடைந்துபோன இருதயம் உள்ளவர்களை சுகமாக்கி அவர்களுக்கு நித்திய வாழ்வையும் அருளிச் செய்தார். 
 

பாவத்தினால் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கிறார்
 
அவர் சிறைப்பட்டவர்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறார். இதன் பொருள் என்ன? கர்த்தர் மக்களின் ஆத்துமாக்களை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவித்தார் என்பது இதன் பொருளாகும். பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இப்பணி கொடுக்கப்பட்டுள்ளது, அவர்களால் மற்றவர்களை பாவங்களிலிருந்து விடுவிக்கவும் முடியும்.
மனிதனிடம் சரீரமும் ஆத்துமாவும் உள்ளன. பாவத்தினதும் சட்டத்தினதும் சாபத்தினால் கட்டப்பட்டு அவன் சரீரமும் ஆவியும் வாழுகின்றன. அவன் கர்த்தரை விசுவாசிக்கிறானோ இல்லையோ அவனால் பாவத்தின் சிறையில் வாழ்வதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது. இதனால் அவன் தன் வாழ்நாள் முழுவதும் பாவத்தின் கைதியாக வாழ நியமிக்கப்பட்டவனாகிறான். இப்படியாக வாழ்ந்து முடிவில் அழிந்துபோகிறான். 
இதனாலேயே அவன் இத்தகைய தவிர்க்கமுடியாத வாழ்க்கையை அவன் வாழ்கிறான். அவனை இந்நிலைக்கு உள்ளாக்கியது அவன் தன் பலவீனம் குறித்து சுய அனுதாபப்பட்டமையே. அவர்கள் இறக்கும்படியாக பாவம் செய்வதை தவிர்க்க முடியாதவர்களானபடியால் கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை அவர்களிடத்தில் அனுப்பியதன் மூலம் அவர்கள் தம் சக கைதிகளுக்கு அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கச் செய்து, அக்கைதிகளுக்கு அவர்கள் பாவங்களிலிருந்து விடுதலைக் கொடுத்தார். 
 

துயரப்படுகிறவர்களை ஆறுதல் செய்கிறார்
 
துயரப்படுகிறவர்களுக்கு கர்த்தர் என்ன கொடுத்தார்? பாவ மன்னிப்பின் நற்செய்தியை அவர்களுக்கு அளித்ததன் மூலம், இவ்வுலகில் துயரப்படும் அனைத்து மக்களுக்கும் கர்த்தர் ஆறுதல் வழங்குகிறார். மனித குலத்தை அவர்கள் பாவங்களிலிருந்து மன்னிக்க கர்த்தர் இயேசுகிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்க்கும்படி அவரை யோவானால் ஞானஸ்நானம் பெறச் செய்து சிலுவையில் இறக்கச் செய்தார். நம்முடைய பாவங்களிலிருந்து இவ்வாறு கர்த்தர் நம்மை சுத்தப்படுத்தினார். இப்படியாக கர்த்தர் இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார். 
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதனால் துயரப்படும் அனைவரையும் கர்த்தர் ஆறுதல்படுத்துகிறார். இப்படிச் செய்வதனால் முழுமைப் பெறாத விசுவாசத்தால் அவதிப்படுகிறவர்களை அவர் ஆசீர்வதித்தார். பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டவர்களை, கர்த்தர் அழகிய நற்செய்தியை பிரசங்கிக்க வழி நடத்தி அவர்கள் உடைந்து போன இருதயமுள்ளவர்களை சுகமாக்கவும் பாவத்தின் பிடியிலிருந்து விடுபடவும் செய்கிறார். 
கர்த்தரால் நாம் மன்னிக்கப்பட்டு, பிறகு பாவத்தினால் கட்டுண்டு இருப்பவர்கள் ஆறுதல் படுத்தப்பட்டு, பாவத்திலிருந்து விடுதலைப் பெற அவர்களுக்கு அழகிய நற்செய்தியை பிரசங்கிப்பதே நாம் இவ்வுலகில் வாழ்வதன் நோக்கமாகும். கர்த்தர் நம்மிடம் என்ன கூறுகிறார் எனறால், நம் வாழ்வு மிகவும் குறுகியதாக இருந்தாலும் அவை முற்றிலும் பெறுமதி இல்லாதவை அல்ல. கர்த்தர் பாவங்களுக்கான கிரயத்தை ஏற்பாடு செய்தமை மனித குலத்திற்கு பெரிதான ஆசீர்வாதமாகும் என்பதற்கு இதுவே அத்தாட்சி.
நம் கர்த்தர் துயரப்படுகிறவர்களுக்கு மகிமையின் கிரீடத்தை அளித்தார். இதன் பொருள் தம் பாவங்களிலிருந்து பாவிகள் மன்னிப்பு பெற்றார்கள். இப்படியாக பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடிந்தது. இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு நன்றிகள். ஒருவன் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டால், அவன் மனம் புத்துணர்ச்சியடைந்து, பெரிதான ஆசீர்வாதத்தை உயர்ந்து நோக்குகிறான். கர்த்தர் அவனை மகிமையினால் முடி சூட்டுகிறார். அவர் பாவிகளுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகியவற்றைக் கொடுத்து, அதனை விசுவாசிப்பவர்களைத் தம் பிள்ளைகளாக்கினார். அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் துக்கத்திற்கு பதில் மகிழ்ச்சியை அனுபவிக்கும்படி செய்தார்.
மனிதர்கள் பிறக்கும்போதும், இறக்கும்போதும் அழுவதைப் போன்று, அவர்களின் மகிழ்ச்சி நொடிப்பொழுதே நிலைத்திருக்கும், அவர்கள் மனமோ துக்கத்தினால் நிறைந்திருக்கிறது. ஆயினும், கர்த்தர் அவர்களை சந்தித்து எதிர்ப்பார்ப்புடனும், மகிழ்ச்சியுடனும், மறுபடியும் பிறக்கச் செய்தார். அதுபோலவே, அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் மறுபடியும் பிறந்தவர்கள் புது வாழ்வைத் தொடங்கி புதிய வேலையைப் பெற்றுள்ளார்கள். அத்துடன், கர்த்தருக்கு என்ன தேவையோ அதனை அவர்களால் செய்ய முடிகிறது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகிலுள்ள எல்லா பாவிகளுக்கும் பிரசங்கித்து, அவர்களுடைய இருதயத்திலுள்ள கவலைகளை விரட்டியடித்து அதற்கு பதிலாக எல்லா வழிகளிலும் சந்தோஷித்து, மகிழ்ச்சியாலும் ஆனந்தத்தாலும் வாழச் செய்கிறார்கள்.
கர்த்தரால் தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்கள். அவர் அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கும்படி நீதிமான்களிடம் கூறினார். அவர் யாரென்றும், அவர் கொடுத்த நற்செய்தி என்னவென்றும் அவர் நமக்காக ஏற்பாடு செய்திருக்கும் பரலோக ராஜ்யம் எத்தனை மகிமையுள்ளது என்று பிரசங்கிக்கும்படி அவர்களிடம் கூறினார். அவரால் மன்னிக்கப்பட்டவர்கள் மூலம் கர்த்தரின் மகிமையை நாம் காணலாம். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கு முன்பு தம் வாழ்வில் துயரம் மிகுந்து இருந்தவர்கள் இப்பொழுது சந்தோஷத்தால் பூரிப்படைகிறார்கள். பாவத்தினால் கட்டுண்டவர்கள் இப்போது விடுதலையினால் மகிழ்கிறார்கள், இதுவரை பயனில்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இப்போது நீதியின் வாழ்வு வாழ்கிறார்கள். இவையெல்லாம் கர்த்தரின் மகிமையை பிரதிபலிக்கின்றன. கர்த்தர் நீதிமான்களை, பழைய கட்டிடங்களை கட்டுவோர்களாகவும், முந்தைய இடிபாடுகளை மீண்டும் எழுப்புபவர்களாகவும், உருக்குலைந்து போன நகரங்களை சரிசெய்பவர்களாகவும் வர்ணிக்கிறார். 
இந்த அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆதிசபையின் காலத்தில் அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியாகும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இயேசுவானவர் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கி.பி.300 வரை பிரசங்கிக்கப்பட்டது. நீதிமான்கள் இன்று பிரசங்கிக்கும் நற்செய்தியே அப்போஸ்தலர்கள் அந்த காலத்தில் பிரசங்கித்த பரிசுத்த ஆவியானவரின் நற்செய்தியாகும். ஆயினும் 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த ரோம நாட்டில், கிறிஸ்தவத்தை அந்நாட்டின் மதமாக அறிவித்து அதன் குடிமக்களுக்கு மத சுதந்தரத்தைக் கொடுத்தபோது, நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தை மாசுபடுத்தி மறைந்துபோகச் செய்தார்கள். அதன் பிறகு கிறிஸ்தவம் ஸ்தாபிக்கப்பட்ட மதமாகி மேலும் மேலும் வளரத்தொடங்கியது, உண்மையான நற்செய்தியை பிரசங்கித்த அந்த மக்கள் மறைந்து போயினர். 
உண்மையான கிறிஸ்தவத்தையும் உண்மையான நற்செய்தியையும் விசுவாசித்து பிரசங்கித்த அவர்களின் நம்பிக்கை ஏன் மாறியது? ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரச மதமாக கிறிஸ்தவம் மாறிய பிறகு கிறிஸ்தவர்கள் மீதிருந்த அநேக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ரோம குடிமக்கள் அனுபவித்த உரிமைகளை அவர்கள் பெற்று ஆனந்தமாக வாழ்ந்தார்கள். கிறிஸ்தவர்களால் ரோமப் பிரபுக்களைத் திருமணம் செய்யவும், அரசுப் பணிகளில் நுழையவும் முடிந்தது. இத்தகைய சலுகையால் அவர்களுடைய உயிர்த்தெழுதலின் நம்பிக்கை வெறும் மதமாக குன்றியது. அப்போதிலிருந்து அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மறைந்து, குறைவுள்ள தனியான கிறிஸ்தவம் வளரத்தொடங்கியது. 
மனிதகுலத்தை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டு, வெகுகாலமாக இடிபாடுகளிலிருந்து அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவரின் நிச்சயமான வருகையின் காலத்திலுள்ள கடைசி கிறிஸ்தவர்களாகிய நம்மை பிரசங்கிக்கும்படி கர்த்தர் கட்டளையிடுகிறார். அப்போஸ்தலர்களின் நாட்களில் பிரசங்கிக்கப்பட்ட அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர் மீண்டும் எழுப்புவார். அப்போஸ்தலர்களின் நாட்களிலிருந்த நற்செய்தியானது, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியாகும். இடிந்த நகரங்களை கட்டும் மனிதர்கள் என்று கர்த்தர் நம்மை அழைக்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் கற்று அதனை விசுவாசிக்கும்படிச் செய்து நம்மை அவரின் பண்ணையின் பண்ணையாட்களாக்கினார். 
அப்போஸ்தலர்கள் மூலம் செய்வித்த பணியையே கர்த்தர் நமக்கும் கொடுத்துள்ளார். அவர் என்னையும் உன்னையும் இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கச் செய்தார். “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்.” கர்த்தர் ஏற்கெனவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவர்களை நற்செய்தியைப் பிரசங்கிக்கச் செய்து நமக்கும் பரிசுத்த ஆவியானவரை வழங்கினார். 
கர்த்தர் நம்மை மலர்களால் முடிசூட்டி எல்லா துக்கங்களையும் அகற்றி, துதியின் ஆடையை அணிவித்து நம்மை பூரிப்படையச் செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் தம்மிருதயத்தில் இருப்பவர்கள் அவரை மற்றவர்களும் பெறும்பொருட்டு அழகிய நற்செய்தியை விதைக்கிறார்கள். அதனால் அவர்கள் கர்த்தர் அளித்த நற்செய்தியை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு பெற்று, இறுதியில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
நாம் கர்த்தரின் பணியாளர்களானோம். பரலோக ராஜ்யத்தின் மகிமையினால் நீங்களும் நானும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். ஆயினும், பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்களை அறிந்து கொள்ளவோ, பார்க்கவோ, அல்லது இந்த அழகிய நற்செய்தியை புரிந்துகொள்ளவோ முடியாத குருடர்களாக்கினார். அவர்களால், இயேசுவை மற்றவர்கள் விசுவாசிக்கச் செய்யமுடியும், ஆனால் பரிசுத்த ஆவியானவரை அவர்களால் பெறச் செய்யவே முடியாது. 
பரிசுத்த ஆவியானவர் உள்ளவர்களின் மூலம் கர்த்தர் கீழ்க்கண்டவற்றைச் செய்தார். அவர் அவர்களை அழகிய செய்தியை ஏழைகளுக்கு பிரசங்கிக்கச் செய்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் உடைந்துபோன இருதயம் உடையவர்களை சுகமாக்கச் செய்தார். பாவத்தின் பிடியிலிருந்தவர்களுக்கு இரட்சிப்பாகிய விடுதலையை பரிசளித்ததோடு, துயரப்படுகிறவர்களை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் ஆறுதல் படுத்தினார். தம் பலவீனத்தின் நிமித்தம் பாவக்கட்டுக்குள் இருந்தவர்களை அவர் விடுதலைச் செய்து மகிழ்ச்சியையும் எதிர்ப்பார்ப்பையும் ஈந்து பரலோகத்திற்கு ஏகினார். 
இதனைத் தொடர்ந்து நம்மில் வாசஞ்செய்யும் பரிசுத்த ஆவியானவர் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எல்லா மக்களுக்கும் நாம் பிரசங்கிக்கும்படிச் செய்தார். யாருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவரினுள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாரோ அவர்கள் பாவிகளை பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி இயேசுகிறிஸ்து கூறினார். பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யப் பெற்றவர்களுக்கு, தாம் திட்டமிட்டவைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஒப்படைத்து அதற்கான அதிகாரத்தையும் கர்த்தர் வழங்கினார். எல்லா நீதிமான்களும் தம் பணிச் செய்யும்படி செய்தார். நாம் அவருடைய பணியாட்கள், நாம் கர்த்தரின் ஆலயமாகிய அவரின் பண்ணையில் வேலைக்கமர்த்தப்பட்ட பண்ணையாட்களாவோம். நாம் அவரின் ஊழியர்கள். கர்த்தர் நமக்கு இத்தகைய பெரிதான ஆசீர்வாதங்களை அளித்துள்ளார்.
நம்முடைய சரீரத்தை நோக்கும்போது நம்முடைய பலவீனத்தைத் தெரிந்துகொள்கிறோம். கர்த்தர் நம்மிடம் கிரியை புரிவதால், நாம் அவரை விசுவாசித்து, நம் நம்பிக்கையின் மூலம் அவரின் ஊழியர்களானோம். கர்த்தர் நம்மூலமாக பெரிய காரியங்களைச் செய்வாரென்றும் தம் ராஜரீகத்தை நம்மில் பரப்புவார் என்றும் விசுவாசிக்கிறோம். 
உருக்குலைந்துபோன நகரங்களில் அழிந்து போன கோட்டைகளை மறுபடியும் கட்ட கர்த்தர் தீர்மானித்துள்ளார். அவர் அழிந்துபோனவைகளை மீண்டும் உயர்த்தவும் உருக்குலைந்த நகரத்தை சீர்செய்யப்போவதாகவும் வாக்குத்தத்தம் செய்துள்ளார். உலகம் முழுவதும் நற்செய்தியின் எழுப்புதல் மீண்டும் நடைபெறும் என்று நம்புகிறேன்!
ஆயினும் இது என்னுடைய சித்தமல்ல. கர்த்தர் அதனைக் கூறியிருப்பதாலேயே நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் உள்ளவர்களை உலகம் முழுவதற்கும் அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கும்படிச் செய்தார். நற்செய்தி நிறைவேறும் பொருட்டு தம் குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார், பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற நம்மூலம் மீண்டும் அவர் தம் சித்தஞ்செய்வார் என்று நான் நம்புகிறேன். இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்போர் கர்த்தரின் மகிமையைக் காண்பார்கள். அல்லேலூயா!