• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-17] நாம் பரிசுத்த ஆவியானவர் மீது நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் (ரோமர் 8:16-25)

(ரோமர் 8:16-25)
“நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவினுடைய கூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனே கூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும். மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது. அதுவுமில்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்படுகிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.”
 
 
இது நம்பிக்கையில்லாத சமயம்
 
நீதிமான்கள் பரிசுத்த ஆவியானவர் மீது எதிர்பார்ப்பு வைத்திருப்பதேன்?
மறுபடியும் பிறவாதவர்கள் இந்த உலகம் விழும்போது அத்துடன் அழிந்து போவார்களாயினும் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகிய நாம் புதிய வானத்தையும் பூமியையும் பெறுவோம்.
 
இப்பொழுது இவ்வுலகில் உண்மையான வருங்காலம் குறித்த நம்பிக்கையிருக்கிறதா? இல்லை, அங்கில்லை. அது இயேசுவினிடம் மட்டுமே இருக்கிறது. எல்லாக்காரியங்களும் அனுதினமும் வேகமாக மாறுகின்றன. இந்த மாறுதல்களுடன் ஒத்துப்போக மனிதர்கள் மிகக் கடினமாக முயல்கின்றனர். அவர்கள் ஆவிக்குரிய சத்தியத்தையோ மகிழ்ச்சியையோ குறித்து அக்கறை இல்லாதிருக்கிறார்கள். அதற்கு பதிலாக, தோல்வியைத் தவிர்க்க முயன்று இவ்வுலகின் ஊழியர்களாக வாழ்கிறார்கள்.
புதிய வேலைகள் வருகின்றன. பழைய வேலைகள் ஒழிந்து போகின்றன. அதுபோல, மக்களும் அதிகப்படியான மாறுதல்களுக்குள் செல்லுகின்றனர். ஆகவே, அவர்கள் பரபரப்பான; என்ன நடக்குமோ என்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். படிப்படியாக, இந்த உலகின் மீதுள்ள நம்பிக்கை மறைந்து போகின்றது. இதற்கான ஒரு காரணம் என்னவெனில் அவர்கள் தம் எதிர்காலம் குறித்த எந்த நிச்சயமுமில்லாமல் வாழுகின்றனர். நாம் இத்தகைய நிலையற்ற உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
 
 
பரிசுத்த ஆவியானவருக்குள்ளான நித்திய ஜீவனில் நம்பிக்கைக் கொள்ளவேண்டும்
 
உண்மையான எதிர்காலம் குறித்த நம்பிக்கையைப் பெறுவது எப்படி? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை உலகினில்லை, அது பரலோகத்திலிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் பரலோக ராஜ்யத்தின் மீதான நம்பிக்கையைக் குறித்துப் பேசினான். பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்யும் படியாக பெற்ற நாம் பரலோகக் காரியங்களில் நம்பிக்கை உடையவர்களாக இருப்போம். யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் பாவிகளாகிய நம்மை இரசிக்க இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து பாவங்களை எடுத்துப் போட்டதை விசுவாசிப்பதால் நாம் அப்படிச் செய்கிறோம். பாவ மன்னிப்பு நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தர் பவலோக ராஜ்யத்தைக் குறித்த நல்ல எதிர்ப்பார்ப்பை வழங்கினார்.
ரோமர் 8:19-21 கூறுகிறது, “மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத் தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்கு கீழ்ப்பட்டிருக்கிறது.” எல்லா படைப்புகளும் அழிவு மற்றும் மரணத்திலிருந்து விடுதலையடைவதையே எதிர்ப்பார்க்கின்றன. 
இவ்வுலகிலுள்ள எல்லாமே குறைவுள்ளவை, ஆகவே அவர்கள் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு பற்கடிப்புடன் காத்திருந்தனர். மேலும் அவர்கள் அழிவின் கட்டிலிருந்து விடுதலையாகி நித்தியமாக வாழ்வதை விரும்பினர். எல்லா ஜீவராசிகளும் அழுகியும் மறைந்தும் போகாமல் நிரந்தர வாழ்வைப் பெறும் நாளுக்காக காத்திருக்கின்றன. 
ஒரு நாளில் கர்த்தரின் சிருஷ்டிகளெல்லாம் புதுப்பிக்கப்படும். இவ்வுலகில் பூக்கள் உதிர்ந்து அழுகிப்போனாலும், புதிய உலகத்தில் எப்போதும் பூத்திருந்து எப்பொழுதும் வாடிப்போகாதிருக்கும். பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யப்பட்ட நாமும் இந்த உலகை காணுவோம். 
இயேசு மீண்டும் வருவதாகவும், பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தைப் பெற்றிருந்தவர்களை மீண்டும் எழுப்புவதாகவும், அழுகிப்போகாத நித்திய சரீரத்தை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்து, நித்திய ஜீவனை அளிப்பதாகவும் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர்கள் கர்த்தருடன் பரலோகத்தில் எப்போதும் வாழ்வார்கள் என்றும் உறுதி கூறியுள்ளார். அந்நாளுக்காக இவ்வுலகில் உள்ள எல்லா சிருஷ்டிகளும் காத்திருக்கின்றன. அந்நாள் வரும்போது, தேவ புத்திரர்களுடனும், நம்முடனும் அவை என்றென்றும் வாழ்ந்திருக்கும்.
 
 
இவ்வுலகை நம்பிக்கையின் மூலம் பார்த்தல்
 
நீதிமான்களின் இக்கனவு எப்பொழுது நனவாகும்? நம் தேவன் திரும்பி வரும்போழுது இது நனவாகும். உலகை நோக்கும்போது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். வெவ்வேறு இடங்களில் பஞ்சம், கொள்ளை நோய், பூமி அதிர்ச்சி, போர் ஆகியவை இருக்குமென்று இயேசு கூறினார். (மத்தேயு 24:7) ஆனால் முடிவு இன்னும் வரவில்லை. இவ்வுலகின் கடைசி நாளில், நம் கர்த்தர் மீண்டும் வந்து, உலகச் சம்பந்தமானவைகளை புதிதாக்கி, அழியாத ஆவிக்குரிய சரீரத்தை நமக்குக் கொடுப்பார். இதன் பொருள் செடிகளும் விலங்குகளும் கூட சாகாத் தன்மையைப் பெறும். இதனை விசுவாசிப்பதன் மூலம், புதிய நம்பிக்கையுடன் உலகை நோக்கவேண்டும். 
இவ்வுலகில், பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யப் பெற்றவர்கள் கூட மற்ற படைப்புகளுடன் கூட சேர்ந்து கவலைப்படுவதுடன், நம் சரீரத்திலிருந்து அவரின் பிள்ளைகளாக மகிமையின் விடுதலையைப் பெற ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அழுகாததும், அழியாததுமான அவரின் பிள்ளையாக அவர் இரண்டாம் வருகையின்போது நம்மை மாற்றுவார். ஆதலால், புதிய நம்பிக்கையுடன் உலகை எதிர்நோக்கவேண்டும். 
உலகம் ஒரு நாளில் அழிந்து போகுமாயினும், கர்த்தர் திரும்பி வரும்போது எல்லாம் புதுப்பிக்கப்படும். அதனை நம்பி எதிர்ப்பார்ப்புடன் வாழவேண்டும். நீங்கள் கதைகளில் படித்ததுபோல், புதிதாக்கப்பட்ட உலகமானது மகிழ்ச்சியானதும் அதிசயமானதுமான அழகிய உலகமாய் இருக்கும். அத்தகைய உலகில் ஆயிரம் வருடங்கள் வாழப்போவதைக் குறித்து நினைத்துப் பாருங்கள். பரலோக ராஜ்யத்தினுள் அவரின் பிள்ளைகளாக நாம் பிரவேசிக்கும்போது நித்திய ஜீவனுள்ளவர்களாகவும் நாம் இருப்போம். அத்தகைய எதிர்ப்பார்ப்புடன் நாம் வாழவேண்டும். 
இவ்வுலகின் மீது எந்த நம்பிக்கையும் இருக்கிறதா? இல்லை. இந்த உலகின் மீது நம்பிக்கையில்லாததால், மக்கள் மனம் போன வழியில் மகிழ்ச்சியாக வாழுகின்றனர். தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நீதிமான்களானவர்களுக்கு நம் கர்த்தர் பரலோக நம்பிக்கையை அளித்துள்ளார். “அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.” இதன் பொருள் என்னவென்றால் நாம் இயேசுவின் வருகைக்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் கர்த்தருடைய வார்த்தைகளை விசுவாசித்ததன் மூலம் இரட்சிக்கப்பட்டோம். 
நம்முடைய பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப் பட்டுள்ளதால், நம் ஆத்துமாவினுள் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்யும்படி பெற்றோம். அதாவது, இயேசுவானவரால் மன்னிக்கப் பட்டவர்களின் இருதயங்களில் பாவத்திற்கு பதிலாக பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். அப்படியானால், நம் சரீரம் என்னவாகும்? நம்முடைய பலவீனமான சரீரங்கள் மீண்டும் எழுந்து புதிய வாழ்வான நித்திய வாழ்வையும் பெறும். இயேசு மீண்டும் வரும்பொழுது நாம் கர்த்தருடன் என்றென்றைக்கும் வாழ்ந்திருப்போம். மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே அத்தகைய நம்பிக்கைக்கு உரிமைப் பெற்றவர்கள், ஆகவே நம் ஆவியும் நம் சரீரமும் சிறந்தவையாகும். நம்முடைய மாமிசம் நித்தியத்தைப் பெறுவதால், நாம் எப்போதும் சுகமில்லாதவர்கள் ஆவதில்லை. நம்முடைய உலகச் சரீரங்கள் பலவீனமானவை, ஆகவே, நம்மால் சிறந்த வாழ்வை வாழ்வது இயலாத காரியம். ஆனால் அதன்பிறகு நாம் சிறந்த வாழ்வை வாழ்வோம். தேவனுடைய இரண்டாம் வருகையை எதிர்நோக்குவோம். பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ் செய்யும்படியாகப் பெற்றவர்களுக்கு அத்தகைய நம்பிக்கையும் வாழ்வும் கிட்டும். 
நீதிமான்களின் நம்பிக்கை பரலோகத்தில் மட்டுமல்ல, இப்பூமியிலும் கூட அது நனவாகும். பெரும்குழப்பத்திற்கு பிறகு இவ்வுலகம் விழுந்தவுடன் நம் தேவன் மீண்டும் வருவார் என்று வேதாகமம் கூறுகிறது. அவர் நிச்சயமாக வருவார். அவர் முதல் தடவை வந்தபோது பாவிகளினிமித்தம் அவர் ஞானஸ்நானம் செய்யப்பட்டு, அவர்களை நீதிமான்களாக்கும்படி சிலுவையில் மரித்து, இறுதியாக பரலோகம் ஏகினார். 
அப்பொழுது அவர் இயேசுவை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரை தம்முள் பெற்று ஜீவித்த பரிசுத்தவான்களை எழுப்பி அவர்களை அழிவின் பிடியிலிருந்து விடுவிப்பார். அழுகிப்போகாததும், பலவீனமடையாததுமான புதிய பரலோக சரீரத்தை அவர் அவர்களுக்குக் கொடுப்பார். அதன்மேலும், அவர்கள் அவரை அந்தரத்தில் சந்திக்கும்படி மேகங்களின் மேல் ஏறுவார்கள், மேலும் அவர் எல்லாவற்றையும் புதிதாக்குவார்.
அதன்பிறகு, நாம், நம் தேவனாகிய இயேசுவுடன், நற்செய்திக்காக ஊழியஞ்செய்தமைக்கு பதிலாக, ஆயிரம் வருடங்கள் புதிய உலகில் வாழ்ந்து அவருடன் அரசாட்சி செய்வோம். இது பரலோகம் செல்வோர்களுக்கான ஒத்திகையாகும். இதுவே பரலோகம் மற்றும் உண்மையைக் குறித்த நம்பிக்கையாகும். அப்போழுது, குறையுள்ளவை எல்லாம் நிறைவுள்ளதாகி, அழுகிப் போகிறவைகள் எல்லாம் அழுகிப் போகாதவையுமாகும். “அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்” (1 கொரிந்தியர் 15:42) என்ற வார்த்தைகள், இயேசுகிறிஸ்துவின் மூலம் அந்நேரத்தில் நிறைவேற்றப்படும். 
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பட்டிருப்பதால் நாம் நம்பிக்கையுடன் இருப்போமாக! எல்லாமே பலவீனமாகி இறந்துபோனாலும் இது முடிவல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். கர்த்தர் இவ்வுலகை மீண்டும் புதியதாக்குவார் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கவேண்டும். நாம் புதிய வானம், புதிய உலகம் குறித்த நம்பிக்கையுடன் வாழ வேண்டும். இந்நம்பிக்கையுடன், நம்மால் நற்செய்தியை பிரசங்கிக்க முடிகிறது. 
நாம் உலகின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டதால், பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்கிறார். அதேபோல, நம்மில் உள்ள பரிசுத்த ஆவியானவர் தேவனின் வருகையை எதிர்நோக்குகிறார். நாம் நம்பிக்கையுடனும் இருதயத்தினுள் நொந்து போகாமலும் வாழுவதற்காக அவர் பிதாவாகிய கர்த்தரிடம் மன்றாடுகிறார். 
 
 
பரிசுத்த ஆவியானவரின் மீதுள்ள நம்பிக்கையில் நாம் வாழவேண்டும்
 
நீதிமான்களின் இடம் எங்குள்ளது? அது 5ஆயிரம் வருட அரசாட்சியில் இருக்கிறது. அவர் பரலோக ராஜ்யத்துடன் மீண்டும் இவ்வுலகிற்கு வந்து பூமியை புதிதாக்குவதோடு ஆயிரம் வருட அரசாட்சியையும் கட்டுகிறார். ஆகவே, அந்நாள் வரும்வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். இந்த உலகம் அழியும் போது நம் சரீரத்தை நம் கர்த்தர் சரியானதாக்குவார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். மகிமையான மறுதினத்தைக் குறித்து விசுவாசத்துடன் இருக்கவேண்டும். 
5அவர் வாக்குத்தத்தம் செய்தபடி, இயேசுகிறிஸ்து இரண்டாம் முறை இந்த உலகத்திற்கு, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை முதலில் உயிரோடெழுப்புவார். இதன் பிறகு, உயிருடன் இருக்கும் மற்றும் உயிரோடெழுப்பப்பட்ட எல்லா பரிசுத்தவான்களையும் அழுகிப்போகாததும் நித்தியமுமான நிரந்தர சரீரமாக மாற்றி, எல்லா பரிசுத்தவான்களையும் மேகம் மீது அந்தரத்தில் நம் கர்த்தர் சந்திப்பார். (1 தெசலோனிக்கேயர் 4:16-17, 1 கொரிந்தியர் 15:51-53). 
மீதியிருக்கும் பாவிகள் மீது ஏழு பாத்திரங்களிலுள்ள அவரின் உக்கிரத்தை ஊற்றிய பிறகு எல்லாவற்றையும் அவர் புதிதாக்குவார். புதிதாக்கப்பட்ட பூமியில் அவர் தன் ராஜ்யத்தை நிறுவி, உயிரோடெழுப்பப்பட்டவர்களுடன் சேர்ந்து ஆயிரம் வருடங்கள் அரசாள்வார். (வெளி 20:4-5). ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகு, அவர் இறந்து போனவர்களை எல்லாம் நியாயந்தீர்த்து அவர்களை எரியும் நரகத்தினுள் தள்ளிவிடுவார். (வெளி 20:11-15). புதிய எருசலேமாகிய அவருடைய பரலோக நகரத்திற்கு அவர் மக்களை வழி நடத்தி, அவர்களுடன் என்றென்றும் சஞ்சரிப்பார். (வெளி 21:1-4).
பரிசுத்த ஆவியானவரை தன்னில் வாசஞ்செய்யப் பெற்றிருந்ததால், நமக்கிருக்கும் எதிர்பார்ப்பு பவுலிடமும் இருந்தது. நம்முடைய மனதில் ஒரே எதிர்பார்ப்புடன் வாழ்கிறோம். ஆயிரம் வருட அரசாட்சிக்கும் பரலோக ராஜ்யத்திற்கும், காத்திருக்கிறோம். மறுபடியும் பிறவாதவர்களெல்லாம், இவ்வுலகத்துடன் சேர்ந்து அழிந்து போவார்கள், ஆனால், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களான நாம் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பெறுவோம். இந்த எதிர்ப்பார்ப்பு உண்மையாகவே நனவாகும். நம்முடைய சரீரம் குறைவற்றதாகி புதிய உலகில் ஆயிரம் வருடம் இயேசுவுடன் வாழ்ந்து அரசாள்வோம். அந்நாளை எதிர்நோக்கி, இவ்வுலகில் பயமேதுமின்றி எதிர்ப்பார்ப்புடன் வாழலாம்.
நாம் பொறுமையுடன் காத்திருப்போமாக. நம்முடைய வாழ்க்கை களைப்பானதாக இருந்தாலும், நாம் கர்த்தரை விசுவாசிப்பதால் நம் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். இந்த நம்பிக்கையில்லாதவர்கள் ஏற்கெனவே இறந்தவர்கள். கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்து தயவு செய்து நம்பிக்கையுடன் இருப்பதுடன் உங்கள் கனவுகளையும் பராமரிப்பீர்களாக. 
பாவ மன்னிப்பு எத்தனை உண்மையானதோ, அதுபோலவே நமக்கும், படைக்கப்பட்ட யாவற்றுக்கும் நம் சரீரம் மாறுதல் அடைந்து நித்திய ஜீவனை பெறுவது உண்மையாகும். நம்முடைய எதிர்பார்ப்பும் எதார்த்தமானது. நீங்கள் விசுவாசிப்பதன் மீது நம்பிக்கை வையுங்கள். எதிர்ப்பார்ப்புடன் இருப்பவர்கள் அழகாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். நம்பிக்கையில்லை என்றால் மக்கள் மகிழ்ச்சி இல்லாதவர்களாகிறார்கள். எந்த கனவும் இல்லாதவர்களிடம் மகிழ்ச்சி இல்லை. நம்மால் மகிழ்ச்சியான வாழ்வை நடத்த முடியும் ஏனெனில் புதிய வானம் புதிய பூமியாகிய பரலோக ராஜ்யம் மற்றும் ஆயிரம் வருட அரசாட்சி குறித்து நம்மிடம், வருங்காலம் குறித்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. 
நீதிமான்களிடம் இந்த நம்பிக்கை இருப்பதுடன் பரிசுத்த ஆவியானவரிலுள்ள இந்த நம்பிக்கையை பிரசங்கிக்கவேண்டும். இவ்வுலகம் முழுவதும் நற்செய்தி பரவுகிறது என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கவேண்டும். உஙகளிடம் உறுதியான விசுவாசம் இருந்தால், உலகம் அத்தனை பெரிதானது அல்ல என்பதை அறிந்து கொள்வீர்கள். நம்முடைய தொடக்கம் முக்கியமானதாக இல்லாவிட்டாலும், நம்மிடம் நம்பிக்கையும் அதற்கேற்ற செயல்பாடும் இருந்தால் நம்மால் உலகமுழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியும். பவுல் செய்தபடியே நாமும் விசுவாசிக்க வேண்டும்.
நம்பிக்கையுள்ளவர்கள் இந்த அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கும் பணியில் விசுவாசமுள்ளவர்களாக இருப்பர். இந்த நம்ப முடியாத காலத்தில் நற்செய்தி பரவும் என்று நம்பவேண்டும். களைப்படைந்தவர்களுக்கும், எதிர்காலம் இல்லாவதவர்களுக்கும், ஏழ்மை மற்றும் தாழ்மையானவர்களுக்கு அழகிய நற்செய்தியை நாம் பிரசங்கிக்க வேண்டும். பரலோக ராஜ்யத்தைக் குறித்த நம்பிக்கையை அவர்களுக்கு பிரசங்கித்து அவர்களை இருளிலிருந்து விடுவிக்கவேண்டும். நீர் மற்றும் ஆவியாகிய நற்செய்தியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களாலேயே பரலோக ராஜ்யத்தினுள் நுழைய முடியும். அவர்கள் நம்பிக்கைப் பெற நாம், கர்த்தரின் உலகம் திருடனைப் போல் திடீரென, இந்த கஷ்டமான காலத்திற்கு பின் வரும் என்று ஊக்கமளிக்க வேண்டும்.
மறுபடியும் பிறந்த ஊழியர்களே, பரிசுத்தவான்களே, உங்களுடைய பரலோகம் குறித்த எதிர்ப்பார்ப்பில் உறுதியுடனிருந்து, இவ்வுலகின் முடிவுவரை இந்த நற்செய்தியை பிரசங்கியுங்கள். இந்த உலகம் எத்தனை சீக்கிரமாய் விழுந்தாலும் அவர்களிடம் இந்த உலக வாழ்க்கைக்கும் மேலாக ஏதோ ஒன்று இருப்பதால், நம்பிக்கையுடனிருக்கும் அவர்கள் அழிந்து போவதில்லை. அவர்களுக்கு கர்த்தர் அளித்த இரண்டாம் வாழ்க்கை நிச்சயமாக உண்டு.