• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-18] விசுவாசிகளினுள் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்ய ஏதுவாக்கும் சத்தியம் (யோசுவா 4:23)

2021.04.20 30
(யோசுவா 4:23)
“உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாகவற்றிப் போகப் பண்ணினது போல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிபோகப் பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.”
 
 
யோர்தான் நதியின் சம்பவம் நமக்கு போதிப்பது என்ன?
இயேசுகிறிஸ்து பாவத்தினால் உண்டான மரணத்தை முற்றிலும் அழித்து விட்டாரென்றும் அதன் தொடர்ச்சியாக மனிதர்களுக்கான நியாயத் தீர்ப்பிலிருந்தும் விடுவித்தார் என்பதைக் குறித்து அது போதிக்கிறது.
 
பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெற அனுமதிக்கும் அழகிய நற்செய்தியைக் குறித்து பேச விரும்புகிறேன். மோசேயின் மரணத்திற்கு பிறகு இஸ்ரவேலின் தலைவனாக யோசுவாவை கர்த்தர் நியமித்தார், மோசே பழைய ஏற்பாட்டு சட்டத்தின் பிரதிநிதியாக இருந்தான். இஸ்ரவேல் மக்களுடன் யோர்தானைக் கடந்து கானான் தேசத்திற்குள் மோசே வந்திருந்தானானால், யோசுவாவுக்கு மக்களின் தலைவனாவதற்கான அவசியம் இருந்திருக்காது. ஆயினும் கர்த்தர் மோசேயை கானான் தேசத்திற்கு அருகில்வரை அனுமதித்தும் அவனை அதில் பிரவேசிப்பதிலிருந்து தடுத்தார்.
 
 
நம் கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் நமக்களித்தார்
 
பழைய ஏற்பாட்டு சட்டத்தின் பிரதிநிதியாக இருந்த மோசேயால் இஸ்ரவேல் மக்களை காணானுக்குள் அழைத்துச் செல்ல முடியவில்லை. அவன் சட்டத்தின்படி வழி நடத்தும்படி அப்படிச் செய்திருந்தானானால், அது நம் இரட்சிப்புக் குறித்த கர்த்தரின் திட்டத்திற்கு எதிரானதாக இருந்திருக்கும். யாராலும் சட்டத்தை கடைப்பிடிக்க இயலாததால், கர்த்தரின் சட்டத்திற்கு முன்பாக யாரும் பாவமின்றி இருக்க முடியாது. சட்டமானது பாவத்தைக் குறித்து அறிவுறுத்துகிறது. (ரோமர் 3:20) 
கர்த்தர் மனிதனுக்கு சட்டத்தை கொடுத்ததற்கான காரணம் அவனுக்கு பாவத்தைக் குறித்த அறிவை வழங்கவே, சட்டத்தை அவனின் குருவாக்கி அவன் நம்பிக்கையினால் தீர்க்கப்படும்படி கிறிஸ்துவை நோக்கி வழி நடத்தினார். (கலாத்தியர் 3:24) இயேசுவை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழிகாட்டியாக சட்டம் இருந்ததால், மக்களுக்கு இயேசுவானவர் தேவைப்பட்டார், இதனாலேயே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். கர்த்தர் யோசுவாவிற்கு கூறியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்து கானானுக்குள் பிரவேசிக்கும்படி கட்டளையிடும்படி கூறினார். 
மோசேயின் மரணத்திற்குப் பிறகு தலைவனான யோசுவாவுடன் கானான் நாட்டுக்குள் பிரவேசிக்கும்படி கர்த்தர் அவர்களை வழி நடத்தினார். யோசுவா மக்களின் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டான், அவன் கூறினான், “நீங்கள் பாளையத்தை உருவ நடந்து போய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜன பதார்த்தங்களை ஆயத்தம் பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்க கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே, இந்த யோர்தானைக் கடந்து போவீர்கள் என்று சொல்லச்சொன்னான்” (யோசுவா 1:11)
மோசேயினால் ஆகாது என்று நிருபணமான பின்பு கானானுக்குள் பிரவேசிக்கும்படி கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டார். கர்த்தர் யோசுவாவுக்கு இவ்வாறு கட்டளையிட்டார், “உடன்படிக்கை பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைப் பெறுங்கள் என்றான். பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்தி விடுவார் என்பதையும், நீங்கள் அறிந்து கொள்வதற்கு அடையாளமாக” (யோசுவா 3:8-10)
மோசேயின் மரணத்திற்கு பிறகு, கர்த்தர் யோசுவாவை இஸ்ரவேலின் தலைவனாக்கி இஸ்ரவேல் மக்களுடன் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி அவர் அவனுக்குக் கட்டளையிட்டார். யோசுவா என்ற பெயரின் அர்த்தம் “இரட்சகன்” ஆகும். இது “இயேசு” அல்லது “ஓசியா” ஆகியவற்றை ஒத்ததாகும். கர்த்தரின் ஊழியனான யோசுவா, உடன்படிக்கைப் பெட்டியை சுமந்துகொண்டு யோர்தான் நதியை தாண்டுமாறு ஆசாரியர்களுக்கு கட்டளையிட்டதுடன் மக்களை வழி நடத்தவும் செய்தான். உடன்படிக்கைப் பெட்டியை தாங்கிய ஆசாரியர்கள் தம் கால்களைத் தண்ணீரில் வைத்தபோது (அறுவடை சமயத்தின் போது யோர்தான் நதி கரைபுரண்டோடுவது வழக்கம்), மேலிருந்து வரும் தண்ணீரானது நின்றதுடன், சார்தான் என்ற நகரத்திற்கு அப்பாலிருக்கும் ஆதாம் வரை உயர்ந்தது. ஆகவே, அரபா என்று அழைக்கப்படும் உப்புக் கடலுக்கு சென்று கொண்டிருந்த தண்ணீர் தடைப்பட்டதால், எரிகோவுக்கு எதிர்புறம் மக்களால் தாண்டிச் செல்ல முடிந்தது. (யோசுவா 3;15-16)
இந்தச் சம்பவம் மூலம் பாவத்தினால் மரணத்தை முற்றிலுமாக ஒழித்ததுடன் மனிதர்களுக்கு கிடைக்கும் தீர்ப்பையும் ஒழித்ததை கர்த்தர் நமக்கு போதிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோவான் ஸ்நானனால் இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் நம்முடைய இரட்சகராகிய அவர் மனிதகுலத்தின் எல்லாப் பாவத்தையும் சுமந்து தீர்த்தார். இதன் மூலமாக, பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்து கானான் நாட்டிற்கு அவர்களை வழி நடத்தியதன் மூலம் அவர் மனித குலத்தை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
 
 
மனிதகுலம் சுத்திகரிக்கப்பட்ட இடம் யோர்தான் நதியாகும்
 
பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ள யோர்தான் நதியைச் சுற்றி நடக்கும் சரித்திர சம்பவங்களான யோர்தானைத் தாண்டுதலானது மனித குலத்தின் பாவங்களிலிருந்து தோன்றிய சாபத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் இரட்சிக்கப்படுவதை நோக்கி வழி நடத்திய மிக மிக முக்கியமான சம்பவமாகும். 
யோர்தான் நதி மரண நதி என்று வழங்கப்படுகிறது. அது சென்று சேருமிடம் சாக்கடல். யோர்தான் என்னும் சொல்லின் பொருள் “கீழாக மட்டுமே ஓடும் ஆறு, மரணத்தை நோக்கி ஓடும் ஆறு” அல்லது “முழுகும், அமுக்கும், கட்டாயமாக விழச் செய்து விழுந்து போதல்” என்பதாகும். இது மனிதகுல பாவத்தின் வரலாறைத் தெளிவாகச் சுட்டிகாட்டுகிறது. இந்நதியில், இயேசு, அவர் ஞானஸ்நானம் மூலமாக, மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத பாவ நதிகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு, இப்பாவங்களுக்கு மனிதர்களின் இடத்திலிருந்து நியாயத்தீர்ப்பைப் பெற்று சிலுவையில் மரித்தார். 
ஆதாம் மற்றும் ஏவாள் சந்ததியாராகிய நாம் எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்? படைக்கப் பட்டவைகளெல்லாம் பாவத்துடன் பிறந்திருப்பதால், அவை பாவம் செய்கின்றன. அதற்கு சம்பளமாக அவை மரணத்தை நோக்கி, அணிவகுத்து செல்லுகின்றன. மனிதகுல வரலாறு முழுவதும், படைக்கப் பட்டவையெல்லாம் அவற்றின் பிறப்பிலிருந்து அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. அவை தம் இயற்கையான பாவ சுபாவத்தை கட்டுப்படுத்த எத்தனை கஷ்டப்பட்டு முயன்றாலும் அவற்றால் அது முடியாததாகையால் அவற்றின் பாவங்களுக்கான இறுதி தீர்ப்பை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. 
ஆயினும், கர்த்தர் பாவத்தையும் நியாயத்தீர்ப்பையும் கத்தரித்தார். யோர்தான் நதியைக் கடப்பதன் மூலம் இஸ்ரவேல் மக்களை கானான் நாட்டிற்குள் எடுத்துச் செல்ல யோசுவாவை கர்த்தர் வழி நடத்தினார். இது யோசுவாவைக் குறித்த கர்த்தரின் சித்தமாயிருந்தது. இச்சம்பவம் எதனைச் சொல்லுகிறதென்றால், பாவத்திலிருந்து நாம் விடுபட வேண்டுமானால், மரணம் என்னும் பாவத்தின் சம்பளத்தைச் செலுத்தவேண்டும். இந்தக் கிரயத்தின் மூலம், நாம் சுத்திகரிக்கப்பட்டு பரலோகத்தினுள் பிரவேசிக்கிறோம். 
பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கைப் பெட்டியை தூக்கிக்கொண்டிருந்த ஆசாரியர்கள் தம் காலை நீரில் வைத்ததும் நீர் ஓடுவது நின்றுபோய் வெட்டாந்தரையானது. இது இஸ்ரவேல் மக்களை இந்நதியினை கடக்கும்படிச் செய்தது. அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு மட்டும் இந்த பாவ மன்னிப்பு வழங்கப்படுகிறது. மனிதர்களுக்காக பாவத்தின் சம்பளத்தை செலுத்தியது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும், இந்த அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படிப் பெற்றோம். 
 
 
படைத்தலைவன் நாமான் 
 
2 ராஜாக்கள் 5-ஆம் அதிகாரத்தில் வரும் நாமான் என்பவன் சிரியாவின் படைகளின் மதிப்புமிக்கத் தலைவனாக இருந்து அவன் நாட்டை பகைவர்களிடம் இரட்சித்தான். அவன் குஷ்டரோகியாய் இருந்தபடியால் அந்த சாபத்தின் நிமித்தம் எல்லாவற்றையும் இழக்கும் நிலையிலிருந்தான். பின்னால், தான் இந்த சாபத்திலிருந்து காப்பாற்றப் படமுடியும் என்ற அழகிய நற்செய்தியை கேள்விப்பட்டான். இஸ்ரவேலில் வாழும் கர்த்தரின் சேவகன் ஒருவனை சந்தித்தால் அந்நோயிலிருந்து குணமாவான் என்று அவனிடம் கூறப்பட்டது. ஒரு வேலைக்கார சிறுமி இந்தச் செய்தியைக் கூறினாள். அவள் கூறினாள், “அவள் தன் நாச்சியாரைப் பார்த்து, என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கி விடுவார் என்றாள்.” ( 2 ராஜாக்கள் 5:3 )
அவன் இந்த செய்தியை நம்பி இஸ்ரவேலுக்குச் சென்றான். அவன் எலிசாவின் வீட்டு முகப்பிற்கு வந்து சேரும்பொழுது எலிசா அவனிடம் ஒரு சேவகனை அனுப்பி “நீ போய் யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (1 ராஜாக்கள் 5:10). அதிசயமான குணமாக்குதலை எதிர்ப்பார்த்த நாமான், கோபமடைந்து தன் நாட்டிற்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்தான். ஆயினும், அவன் வேலைக்காரியின் மனப்பூர்வமான வேண்டுதலின் நிமித்தமாக எலிசாவிற்கு கீழ்படிந்து யோர்தான் நதியில் முழு உடம்பையும் ஏழு தரம் முழுகினான். அங்கே, அவன் சரீரம் சீரமைக்கப்பட்டு, சிறுபிள்ளைபோல் தோலினை உடையவனானான்.
அதன்படி, நம்முடைய பாவங்களிலிருந்து நாம் கழுவப்பட வேண்டுமானால், முதலில் நம்முடைய சொந்த சிந்தனைகளை மறுத்து வேதாகமத்தில் என்ன கூறியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிந்து கொண்டோம். அப்பொழுது அழகான ஆசீர்வாதங்களைப் பெறுவோம். இரட்சிக்கப்பட யார் விரும்புகிறார்களோ அவர்கள் வேதவாக்குக்கு முழுவதுமாக கீழ்படிந்து அதனை முற்றிலும் விசுவாசிக்க வேண்டும். 
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய நற்செய்தியின் மூலம் உலகின் பாவங்களெல்லாம் கழுவப்பட்டுவிட்டன என்று வேதாகமம் கூறுகிறது. கீழ்படிதல் இல்லாத நாமானைப்போல் நாமும் சிந்திக்கக்கூடாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில்லாமல் நம் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப் படமுடியாது. ஆகவே, நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் மன்னிக்கப்படவேண்டுமானால், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்க வேண்டும். ஏழு முறை நீரில் முழுகி, நாமான் சுத்தமானது போல, அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை விசுவாசிப்பதன் மூலம் நம் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவோம் என்று நாம் விசுவாசிக்கவேண்டும். 
யோர்தான் நதியில் நடந்த அதிசயமானது ஆதாமின் சந்ததியினருக்கு, பாவ நதியைத் துண்டித்து நியாயத்தீர்ப்பை முடிவிற்கு கொண்டுவந்ததான ஆசீர்வாதத்தைப் பரிசளித்தது. சாத்தானின் மூலம் வஞ்சிக்கப்பட்டு ஆதாமும் ஏவாளும் பாவஞ்செய்ததினால் மனிதகுலம் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆயினும், யோர்தான் நதியின் சம்பவம் அழகிய நற்செய்தியாகவும், மனித குலத்தை ஏதேன் தோட்டத்திற்கு திரும்புவதற்கு வழி நடத்தவும் செய்கிறது.
 
 
யோர்தான் நதியின் சம்பவம்
 
யோர்தானில் இயேசு எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்ற அழகிய நற்செய்தி வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்” (மத்தேயு 3:15) இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது எல்லாப் பாவங்கள் அவர்மீது சுமத்தப்பட்டது என்று வேதாகமம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதர்களை கட்டுவித்திருந்த பாவச் சங்கிலியை அறுத்தது இயேசுவின் ஞானஸ்நான சடங்கின் மூலமே. இப்படியாக இயேசு பாவத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து அவரின் சிலுவை இரத்தம் மூலமாக இரட்சிப்பை அருளினார். 
நம்மை பாவங்களிலிருந்து கழுவிய ஞானஸ்நான நதி யோர்தானாகும். கர்த்தரின் சட்டமான “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23) என்பதை நம்மால் நிறைவேற்ற முடிந்தது. ஏனெனில் இயேசுவானாவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதன் மூலமும் சிலுவையில் மரித்ததன் மூலமும் கிரயம் செலுத்திவிட்டார். இதுவே கர்த்தர் மனித குலத்திற்களித்த அழகிய நற்செய்தியாகும்.
ஆதாமின் காலமுதல் மனிதர்களின் பாவங்கள் தொடர்ந்து வந்தன, ஆனால் யோர்தான் நதியில் இயேசுபெற்ற ஞானஸ்நானம் மூலமும் அவரின் சிலுவை இரத்தம் மூலமும் அவை நிறுத்தப்பட்டன. எந்தப் பாவங்களும் மிஞ்சியில்லாமைக்கு இயேசுவுக்கு நன்றி செலுத்த வேண்டும். எத்தனை ஆசீர்வாதமுள்ளதும் அழகியதுமான செய்தி இது. நாம் இந்த அழகிய நற்செய்தியை விசுவாசித்ததன் மூலம், சுழியெடுத்தோடும் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு, நம் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு கர்த்தரின் விடுதலையின் சட்டத்தினால் பரிசுத்தமானோம். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவையே நற்செய்தியாகுமாதலால் அது மனிதகுலத்தை இரட்சிக்கிறது. இதனை நாம் உன்மையாகவே விசுவாசிக்க வேண்டும். “விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” (ரோமர் 14:23), என்று கர்த்தர் கூறுகிறார். அதுபோலவே, இந்த அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகிறோம். 
யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது எல்லாப்பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டுவிட்டாலும் உன் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறதா? இயேசு இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். வேதாகமத்தில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமுமே உன் பாவங்களைத் துடைத்து உன்னைச் சாவிலிருந்து தவிர்ப்பதுடன் சாபங்களிலிருந்தும் தவிர்க்கிறது. ஞானஸ்நானம் என்பதன் பொருள் “கழுவப்படுதல், நீரினுள் அமிழ்த்தப்படுதல், அடக்கம் பண்ணப்படுதல், சுமத்துதல், மற்றும் மாறுதல்” என்பதாகும்.
இயேசு அளித்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் எல்லா மனிதர்களின் பாவங்களும் மன்னிக்கப்பட முடியும். அதனாலேயே இயேசு தம்மை ‘பரலோகத்தின் வழி` என்று அழைத்தார். அவரை விசுவாசிப்பதன் மூலம் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிப்பதுடன் நித்திய ஜீவனையும் பெறுவோம். அவரே, நம் தேவன், அவர் பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ் செய்யும்படி கொடுத்தார். அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தை விசுவாசிப்பதன் மூலம் நம் பாவங்களுக்கான எல்லா நியாயத்தீர்ப்பிலிருந்தும் தவிர்க்கப்பட்டோம்.
ஆசாரியர்கள் விசுவாசத்துடன் உடன்படிக்கைப் பெட்டியுடன் தம் கால்களை நீரில் வைத்ததனால் சாபம் தீர்ந்து ஆறானது வெட்டாந்தரையானது. இதுவே, கர்த்தரின் திட்டமாகும். இந்த திட்டத்தை இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நிறைவேற்றியது. இது எத்தனை அழகிய நற்செய்தி. இதுவே இரட்சிப்பின் சட்டம். இது இல்லாது நமது இரட்சிப்பிற்கு சாத்தியமில்லை. இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்களால் யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்திற்குள் பிரவேசிக்க முடியும். நீர் முற்றிலுமாக வற்றிப்போனது என்பதன் பொருள் உலகின் எல்லாப் பாவங்களும் இயேசு மீது சுமத்தப்பட்டது என்றும் அதற்காக அவர் நியாயந்தீர்க்கப்பட்டார் என்பதுமாகும். இந்நற்செய்தியே பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி அளிக்கிறது
மனிதனைப் படைத்த கர்த்தருக்கு, சாதாரண ஒரு மனிதனின் அறிவு 110 இலிருந்து 130 புள்ளிகள் வரையே இருப்பது தெரியும். ஆகவே, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்கான உண்மையை அவரால் குழப்பமுடியாது. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் கர்த்தர் அவர்களின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார். நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியை விசுவாசிப்பதன் மூலம் அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற ஏதுவாக்கினால் அவர்களுக்கு இதைக் குறித்துத் தெரியும். அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தை நீயும் உணர்ந்துகொள்வாய்.
வேதாகமத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதின்படி பார்த்தால், மனந்திரும்பி ஜெபிப்பதால் மட்டும் நம்மால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் விதம்விதமாக ஜெபிப்பதன் மூலம் பரிசுத்த ஆவி என்று ஒன்று கிடைக்கப்படுகிறது. அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே பரிசுத்த ஆவி வழங்கப்படுகின்றது, அது அவர்களை கர்த்தரின் பிள்ளைகளாக்கத் தேவைப்படுகின்றது. அதனைக் கூறுவதானால், ஒருவன் கர்த்தரின் பிள்ளையாகிவிட்டான் என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் அவனுள் வாசஞ்செய்வதே அத்தாட்சியாகும். அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்களை அவரின் பிள்ளைகள் என்று உறுதிப்படுத்த பரிசுத்த ஆவியானவரை கர்த்தர் அளிக்கிறார். 
மக்கள் இயேசுவை விசுவாசித்தபோதிலும், அவர்களுக்கு இந்த நற்செய்தியைக் குறித்து தெரியாமலோ அல்லது விசுவாசிக்காமலோ இருந்தால், அவர்கள் பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது என்பது குறித்து மன உறுதியுடன் இருக்கமுடியாது. ஆகவே, இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமுமே அவர்கள் பாவங்களைத் துடைத்த அழகிய நற்செய்தி என்பதை மக்கள் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். 
உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு சுமந்து தீர்த்தார் என்பதற்கு சாட்சி கூறுவது யார்? யோவான் ஸ்நானகன் கூறுகிறான். அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களையெல்லாம் அவர் சுமந்தார் என்பதே கர்த்தரின் திட்டமாக இருந்தது. (லேவியராகமம் 4:13-21, 16:1-30). அவருடைய திட்டங்களை செயல்படுத்தியது யார்? இயேசு. இந்த திட்டத்தின் நிறைவேறுதலைக் குறித்து உறுதியளிப்பவர் யார்? பரிசுத்த ஆவியானவர். திரியேகக் கர்த்தர் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் நம்மை அவர் பிள்ளைகளாக்க பாவக்கிரயஞ்செலுத்துதலை நிறைவேற்றினார். நம்மில் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர், இயேசுகிறிஸ்து கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றியபோது நாம் இரட்சிக்கப்பட்டோம் என்பதற்கு உறுதி கூறுகிறார். 
இவ்வுலகில் உள்ளவைகள் மூச்சடைக்கும் அளவிற்கு குழப்பமானவைகளா? உங்கள் சிந்தனைகள் எத்தனைக் குழப்பமானவை? ஒருவன் தன் சொந்த யோசனைகளை விட்டுவிடும்வரை அவனால் அழகிய நற்செய்தியை விசுவாசிக்க முடியாது. அநேக மக்கள் விசுவாசிக்கும் இன்றைய நாளின் கிறிஸ்தவக் கொள்கையானது ‘மூலப் பாவம் போய்விட்டது, ஆனால் ஒருவன் மனம் வருந்தி ஜெபிக்கும்போதே சொந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்.` என்பதாகும். ஆயினும் இது முழுமையான உணமையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது; அது போலியான நற்செய்தியாகும். இந்த போலியை நீங்கள் விசுவாசித்தால், உங்களால் வேதாகமத்தை தொடக்கத்திலிருந்து முடிவு வரை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாது என்பதோடு, காலம் செல்லச்செல்ல இயேசுவை விசுவாசிப்பது மென்மேலும் கடினமென்பதை உணர்வீர்கள். அதனாலேயே, கிறிஸ்தவர்களினுள் வித்தியாசமான நற்செய்தியை விசுவாசிப்பவர்களும், வெவ்வேறு கர்த்தரும் உள்ளனர். 
‘ஜெபிப்பதன்` மூலம் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யும்படி பெற்றதாக சில மக்கள் கூறுகின்றனர். இது உண்மைப் போல் தோன்றுகிறது. ஆனால், இயேசு ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து வெளியே வந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவரின் மீது புறாவைப் போல் இறங்கி வந்தார் என்று வேதம் கூறுகிறது. இதுவே உண்மையான நற்செய்தியாகும். இந்த நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வருகிறார். 
அத்துடன், சில மக்கள் தாம் மனம் வருந்தி ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டதாகக் கூறுகின்றனர். பாவ மன்னிப்புக்காக மக்கள் கெஞ்சிக்கொண்டிருந்தால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவாரா? கர்த்தர் நீதிபரராய் இருக்கிறார். அவர் அவர்களுக்காக இரங்குவதால், பரிசுத்த ஆவி அவர்களிடம் வந்துவிடாது. மக்கள் எத்தனை கஷ்டப்பட்டு அழுது ஜெபித்தாலும், பரிசுத்த ஆவியானவரால் அவர்களிடம் வரமுடியாது. கர்த்தர் அவர்களை இரட்சிக்கும்படி அவர் திட்டத்தை நிறைவேற்றியதை நம்புவோர் மீது அவர் வருகிறார். நீ எத்தனை நேரம் கர்த்தருக்காக அழுகிறாயோ அல்லது எத்தனை கடினமாய் நீ ஜெபிக்கிறாய் என்பதாலோ உன்னால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை மனதில் வைத்திரு. பரிசுத்த ஆவியானவர் மனித சித்தங்களுக்கு அப்பாற்பட்டவர். 
இவ்வுலகில் மனிதர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் கூட மாறலாம், ஆனால் அழகிய நற்செய்தியையோ, பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதற்கான சட்டத்தையோ மாற்ற முடியாது; அவை எப்போதும் மாறுவதில்லை. அழகிய நற்செய்தியை மக்கள் புரிந்துகொள்ளவில்லையெனில் அவர்களால் உணமையான விசுவாசத்தை கடைபிடிப்பதற்கு திரும்ப முடியாது. இதனாலேயே அநேக மக்களால் பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ் செய்யும்படிப் பெறமுடியவில்லை. நீ இயேசுவை விசுவாசித்திருந்தும் அழகிய நற்செய்தியைப் பற்றி தெரியாததால் அழிந்து போனாய் என்று எத்தனையாய் துன்பப்படுவாய்? இயேசுவின் அழகிய நற்செய்தி சிலருக்கு முட்டுக்கட்டையாகவும் எதிர்க்கும் கல்லாகவும் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது.
யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளும்போது உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்வதைப் பெறுவீர்கள். ஞானஸ்நானம், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுந்ததன் மூலம் எல்லாப் பாவிகளையும் அவர் இரட்சித்தார். இயேசு நமக்கு கொடுத்த விடுதலை, நீதியின் முறையான இரட்சிப்பாகும். அவர் பாவிகளின் உண்மை இரட்சகரானதுடன், பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தையும் உறுதிச் செய்தார். 
 
 
நீங்கள் அதனை விசுவாசிப்பதனால் மட்டுமே
 
ஆசாரியர்கள் தம் கால்களை யோர்தானில் வைத்தபோது, அது வறண்ட நிலமானது என்று பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. நீர் நின்று போனது அதிசயமானது, ஆனால் இன்னும் அநேக அதிசயங்கள் காத்திருக்கின்றன. நதியானது கட்டாந்தரையாகிப் போனது மிகுந்த அதிசயமானது. இச்சம்பவம் கர்த்தர் இரட்சிப்பார் என்ற உறுதியை அளித்தது, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலமான பாவ மன்னிப்புக்கு அது வழி நடத்தியது. கட்டாந்தரையானது எப்படி உலகின் பாவங்களெல்லாம் மன்னிக்கப்படும் என்பதைக் குறிக்கிறது, இயேசுவின் ஞானஸ்நானத்திற்கும் அவரின் சிலுவை மரணத்திற்கும் நன்றிகள். அனைத்துப் பாவங்களும் ஆதாமிடமிருந்து மனிதகுலத்திற்கு சென்றது. ஆனால், சாபமாகிய நியாயத்தீர்ப்பு இயேசுவின் ஞானஸ்நானத்துடன் முடிவடைந்தது. இப்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசத்தின் மூலம் பாவ மன்னப்புப் பெற்று பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பெறுவதே. யோர்தான் நதியில் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மூலம் அவர் உன் பாவங்களையெல்லாம் எடுத்துபோட்டார் என்ற அழகிய உண்மையை நீ விசுவாசிக்கிறாயா?
உலகின் பாவங்களை எடுத்துப்போடும்படியாக இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்பதை நீ விசுவாசிக்க வேண்டும். அத்துடன், அவரின் ஞானஸ்நானமானது எத்தனை முக்கியமானது என்று புரிந்துகொண்டு விசுவாசி. ஆசாரியர்கள் யோர்தானில் காலை வைக்கவில்லை என்றால் இஸ்ரவேல் மக்களால் வெற்றிகரமாக கானானுக்குள் பிரவேசித்திருக்கமுடியாது. கானானுக்குள் பிரவேசிப்பதற்கான முதல் வேலை யோர்தான் நதியைக் கடப்பதாகும். ஆகவே, உடன்படிக்கைப் பெட்டியுடன் நதியைக் கடக்கும்போது, கானான் நாட்டுக்குள் பிரவேசிக்க முடிகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் ஒருவன் தன் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற முடியும் என்று இது போதிக்கிறது. 
இயேசுவின் ஞானஸ்நானம் கர்த்தரின் வேலை என்று வேதாகமம் கூறுகிறது. இது ஆசாரியர்களுடன் தொடர்புள்ளதாக நடந்தது. ஆசாரியர்கள் தம் கால்களை நீரில் வைத்தபோது, யோர்தான் நதியின் தண்ணீர் நின்று போனதுபோல், இந்த நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் உலக மக்கள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டார்கள்.
இந்த அழகிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வது அருளப்பட்டது. இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும், பாவ மன்னிப்பு மற்றும் பரிசுத்த ஆவியானவரை நீ பெற வழி நடத்துகின்றன. பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்யப் பெறுவதற்கு அழகிய நற்செய்தியான நீர் மற்றும் ஆவியானது இன்றியமையாததாகும்.