• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-19] தேவாலய திரைச் சீலையைக் கிழித்த அழகிய நற்செய்தி (மத்தேயு 27:45-54)

2021.04.20 22
(மத்தேயு 27:45-54)
“ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தாணி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காலானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி அவருக்கு குடிக்கக்கொடுத்தான். மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாக கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கண்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பின்பு இவர்கள் கல்லறையைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். நூற்றுக்கு அதிபதியும், அவனோடே கூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும் பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.”
 
 
இயேசு சிலுவையில் தம் ஆவியை ஒப்படைத்தபோது தேவாலயத் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது ஏன்?
அவருடைய ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டதை விசுவாசிப்போர்களுக்கு கர்த்தரின் ராஜ்ஜியம் திறக்கப்பட்டதே அதன் காரணம்

இந்த அழகிய நற்செய்தியின் உண்மையை புரிந்துகொள்ளவேண்டுமானால், பழைய ஏற்பாட்டில் கர்த்தருக்கு முன்பு மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட நடத்தப்பட்ட வழி முறைகளைக் குறித்து முதலாவது ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும். கீழ்கண்ட உண்மையை அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.
பழைய ஏற்பாட்டு லேவியராகமம் 16 ஆம் அதிகாரத்தில் பதியப்பட்டுள்ள பாவ விடுதலைக்கான பலி கொடுக்கும் முறைப்படி, தலைமை ஆசாரியன் உயிருடன் உள்ள ஆட்டின் தலைமீது கைவைப்பதன் மூலம் மக்கள் அவ்வருடம் முழுவதும் செய்த பாவத்தை அதன் மீது சுமத்தினான். அதன் பின் இஸ்ரவேலர்களின் சார்பாக, அந்த பலியானது கொல்லப்பட்டு தலைமை ஆசாரியன் அதின் இரத்தத்தை கிருபாசனத்தில் தெளித்தான். இது இஸ்ரவேலர்களில் எல்லாப் பாவங்களுக்கும் விடுதலையைக் கொடுத்தது. அது போல், தலையில் கைவைத்தல், இரத்தம் மற்றும் வேதவாக்கை விசுவாசிப்பவர்களால் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடிந்தது. 
ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் முதல் பகுதிக்கு மட்டும் எப்பொழுதும் சென்று ஆராதனைச் செய்தார்கள். ஆனால் பரிசுத்த ஸ்தலமான இரண்டாம் பகுதிக்குள், வருடத்திற்கு ஒரு முறை தலைமை ஆசாரியனால் நுழைய முடிந்தது, அவன் அறியாமையினால் மக்களும் தானும் செய்த பாவங்களுக்கு பலி செலுத்தி, அதின் இரத்தத்தை எடுத்துச் செல்லவேண்டியிருந்தது. (எபிரேயர் 9:6-7) அதுபோல், தலைமை ஆசாரியானாலும் கூட பரிசுத்த ஸ்தலத்திற்குள், கைவைப்பதன் மூலம் கிடைக்கப்பட்ட பலியின் இரத்தமில்லாமல் செல்லக்கூடாததாக இருந்தது. 
 
 
புதிய ஏற்பாடு கூறுவது போல் இயேசுகிறிஸ்து நமக்காகப் பலியானார். 
 
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமே ஒருவன் பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியும் என்று புதிய ஏற்பாட்டில் நம்மிடம் கூறப்பட்டுள்ளது. தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக எப்பொழுது இரண்டாகக் கிழிந்தது? இயேசு இவ்வுலகிற்கு வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்று அவர் சிலுவையில் அறையுண்டபோது அது நடைபெற்றது. 
இதற்கு என்ன காரணம் கூறப்பட்டுள்ளது? தேவாட்டுக்குட்டி என்ற பெயருடன் இயேசு இவ்வுலகிற்கு பலியாக வந்தார், யோவானால் ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களைச் சுமந்து, அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, மனிதகுலத்தினை அவர்கள் பாவங்களிலிருந்து சுத்தம் செய்தார். திரைச் சீலை இரண்டாக கிழிந்தது என்பது நம்மையும் கர்த்தரையும் பிரித்த மனிதர்களின் பாவமானது அவரின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மூலம் அகற்றப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
பாவத்தின் சம்பளமான மரணம் மூலம், இயேசு தாமே தடையை உடைத்தெரிந்தார். இவ்வுலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கும் பொருட்டு இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். தேவாலய திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தமைக்கு இதுவே காரணம். கைவைப்பதை நம்பி ஆசாரியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தினுள் நுழைய முடிந்ததைப் போன்று, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மீதுள்ள நன்றியறிதலோடு நம்மால் இப்பொழுது பரலோக ராஜ்ஜியத்தினுள் நுழைய முடியும். 
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது “ஏலீ! ஏலீ! லாமா சபக்தாணி?” என்று சத்தமிட்டு கூப்பிட்டார். இதன் பொருள் “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?” (மத்தேயு 27:46) என்பதாகும். அவர் தம் ஆவியை விட்டபோது, “எல்லாம் முடிந்தது!” (யோவான்19:30 ) என்று கூறினார். ஒரு நொடிப்பொழுது இயேசுவானவர் சிலுவையில் தொங்கும்போது தம் பிதாவினால் கைவிடப்பட்டார், ஏனெனில் அவர் யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் பாவங்களை தம்மீது பெற்று அதனைச் சுமந்து கொண்டிருந்தார். 
மனிதர்களின் இரட்சிப்புக்காக அவர் மரித்தார். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றின் விளைவாக, அவர் மீது விசுவாசமுள்ளவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். நாம் பிறவியிலேயே பாவிகளாய் இருப்பதாலும் ஆக்கினைக்குட்படுத்தப்பட வேண்டியவர்களாய் இருப்பாதாலும், நம் எல்லாப் பாவங்களையும் இயேசுவானவர் தாம் ஞானஸ்நானம் பெற்றபோது ஏற்றுக்கொண்டார். 
நம்முடைய பாவங்களையெல்லாம் இயேசுவானவர் அகற்றிப்போடும்வரை பரலோக ராஜ்யத்தின் கதவுகள் மூடியே இருந்தன. யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தபோது தேவாலயத்தின் திரைச் சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்ததன் மூலம் யாரெல்லாம் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கிறார்களோ அவர்களால் பரலோக தேவாலயத்தினுள் பிரவேசிக்க முடிந்தது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மீது எனக்கு விசுவாசம் இருப்பதற்காக கர்த்தரிடம் நன்றியறிதலுடையவனாக இருக்கிறேன். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் அவர் நிறைவேற்றிய அழகிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தினால் இப்போது என்னால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும். என்னுடைய சொந்த வலிமைகளாலோ வெற்றிகளாலோ முயற்சிகளாலோ இரட்சிப்பை என்னால் பெற்றிருக்க முடியாது. 
நம்மை பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லும் ஆசீர்வாதமானது வெறும் ஜெபங்களினாலும், காணிக்கைகளினாலும், ஒப்புக்கொடுப்பதாலும் பெறப்படவில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே ஒருவன் இரட்சிக்கப்படமுடியும். அழகிய நற்செய்தியின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமே ஒருவனால் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியும். பரலோகத்தின் வாசல் இயேசுவே. ஒருவனின் அர்ப்பணிப்புள்ள காணிக்கைகளினாலோ, உலகச் சம்பந்தமான முயற்சிகளினாலோ, மற்ற நற்செயல்களினாலோ பரலோகத்திற்கான அனுமதி சன்மானமாக அளிக்கப்படவில்லை. பரலோக ராஜ்யத்தினுள் நீதிமான்கள் பிரவேசிப்பதற்கு உண்மையிலேயே தேவையான ஒன்று, யோர்தான் நதியில் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசமே. 
நீரையும் (யோர்தான் நதியில் இயேசு பெற்ற ஞானஸ்நானம்) மற்றும் அவரின் இரத்தம் (சிலுவை) ஆகியவை பரலோக ராஜ்யத்தை நோக்கி உன்னை வழி நடத்தும். ஒருவன் இயேசுவை விசுவாசித்தபோதிலும் அவன் மனதில் இன்னும் பாவங்கள் இருந்தால் அவன் ஒன்றை விசுவாசிக்க வேண்டும்: நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே அது. “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32).
நம்முடைய சரியான மரண நேரம் நமக்குத் தெரியாது. ஆனால் இயேசுவுக்கு எல்லாம் தெரியும். அவருக்கு நம்முடைய பாவ சுபாவங்கள் தெளிவாகத் தெரியுமாகையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவை இரத்தம் மூலமும் நம் பாவங்களையெல்லாம் கழுவிவிட்டார்.
 
 
தேவாலய திரைச் சீலையைக் கிழித்த அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கவேண்டும்
 
மனிதகுலத்தை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்க இரட்சகர் ஒரு கன்னியிடம் பிறந்தார். அவர் 30 வயதாகும்போது, யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானம் மூலம், இயேசு உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துக் கொண்டார். அவர்களின் பலவீனத்தாலும் குறைபாடுகளாலும் விளைந்த மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டமைக்கு இயேசுவுக்கு நன்றிகள். அவரின் ஞானஸ்நானமும் இரத்தமும் மனிதர்களின் இரட்சிப்பிற்கான நிரந்தர திறவு கோலாக இருக்கிறது. இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். மேலும் இந்த நற்செய்தி மீது விசுவாசமுள்ளவர்களால் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியும்.
இயேசு சிலுவையில் தம் ஆவியை விட்டபோது தேவாலய திரைச் சீலை இரண்டாக கிழிந்தது. இயேசு சிலுவையில் மரித்தபோது தேவாலய திரைச் சீலை எப்படி இரண்டாக கிழிந்து போக முடியும்? அதற்கான காரணம் அழகிய நற்செய்தியின் மூலம் அவர் மனிதர்களுக்கு இரட்சிப்பை வென்றதே.
இஸ்ரவேலரின் ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து பழைய ஏற்பாட்டில் நாம் படிக்கலாம். அவர்கள் தகன பலிக்கான மேடையையும் தொட்டியையும் வைத்தார்கள். இந்த தொட்டிக்கு பிறகு, ஆசரிப்புக் கூடாரமும், ஆசரிப்புக் கூடரத்தினுள் திரைச் சீலைக்கு பின் உட்ன்படிக்கை பெட்டியும் இருந்தது. அங்கு கர்த்தரும் அவருடைய மகிமையும் நிறைந்திருந்தன. இத்திரைசீலை எத்தனை உறுதியாகப் பின்னப்பட்ட்டிந்ததென்றால், அதன் நான்கு மூலகளிலும் குதிரைகளைக் கட்டி இழுத்தாலும் கிழியாத அளவு உறுதியாக இருந்தது. சாலமோன் ராஜா ஆசரிப்புக் கூடாரத்தை ஆலயமாக மாற்றினாலும், அடிப்படை அமைப்பு மாறவில்லை. திரைச்சீலை மகா பரிசுத்த ஸ்தலம் செல்வதை தடை செய்தது. ஆயினும் இயேசு சிலுவையில் இரத்தஞ்சிந்தி மரித்தபோது அது மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்து போயிற்று. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நிறைவேற்றப்பட்ட அழகியதும் குறைவற்றதுமான நற்செய்தி எத்தகையது என்பதற்கு இது சாட்சி கூறுகிறது.
கர்த்தர் மனிதர்களை அழகிய நற்செய்தியின் மூலம் அனைத்ததன் மூலம் எல்லா மனிதர்களையும் பாவ மன்னிப்பினால் ஆசீர்வதித்தார். இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்ததன் மூலம், தன்னை பலியிட்டதால் பாவங்களுக்குக் கிரயஞ் செலுத்தினார். வேதாகமம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒருவன் பலியின் இரத்தத்துடன் தேவாலயத்திற்குள் நுழைந்து பாவ விடுதலைப் பெற்றதுபோல், இயேசுவாகிய நம் பலியின் மூலம் கர்த்தரிடம் வந்து நம்மீறுதல்களை மன்னிக்கப்பெறலாம். இதுவே உண்மையாகும். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற சொற்கள் அழகிய நற்செய்தி எத்தனை குறைவற்றது என்று நமக்கு காண்பிக்கிறது. 
பரலோகத்திற்கான வழி அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதாகும். தேவாலய திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது கர்த்தரின் ராஜ்யம் திறக்கப்பட்டதைக் குறிக்கிறது. நாம் இந்த நற்செய்தியைக் குறித்து தெரிந்து இதனை விசுவாசிக்கும்போது “ஓ, இயேசு என் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். ஓ, இயேசு பாவத்திற்கான கிரயத்தையும் சிலுவையில் செலுத்தினார்” என்று கூறுவதன் மூலம் பரலோக வாசல் நமக்கு முன்பாகத் திறக்கப்படும். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசத்தால் பாவ விடுதலைப் பெற்றோருக்கு பரலோகம் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. இயேசுவின் இரத்தம் பாவிகளை மரணத்திலிருந்து இரட்சித்தது, மேலும் ஞானஸ்நானமானது மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வழியாக இருந்தது. 
இயேசு சிலுவையில் ஆவியை விட்டபோது பூமி நடுங்கியது கற்பாறைகள் பிளந்தன. அப்பொழுது, இயேசுவின் இரத்தம் பூமியில் துளித்துளியாக விழுந்து தாழ்வான பகுதியை நோக்கி ஓடியது. இயேசு சிலுவையில் மரித்தபோது, மனிதர்களின் பாவங்கள் அகற்றப்பட்டு, அழகிய நற்செய்தி நிறைவேற்றப்பட்டதால் எல்லா விசுவாசிகளும் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க தகுதி பெற்றனர். மறுபடியும் பிறப்பதென்பதன் உண்மை இதுவே. 
இயேசுகிறிஸ்து உண்மையில் மனிதனில்லை என்று மறுக்கும்படியாக அநேக கல்விமான்கள் ஆராய்ச்சி செய்தனர். ஆனால் என்னிலடங்காத வரலாற்று சான்றுகளுக்கு முன் அவர்களுடைய கொள்கைகளால் நிலைநிற்க முடியவில்லை. அவர்களில் பலர், அவர்கள் கொள்கைகளை விட்டுவிட்டு இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய நற்செய்தியை விசுவாசிக்கத் தொடங்கினர். இயேசு வாழ்ந்ததற்கான சான்றுகள் மிக மிக அதிகமானவை என்று அறிந்து கொண்டார்கள். இயேசுவின் பிறப்பு, ஞானஸ்நானம், மரணம், உயிர்த்தெழுதல், பரலோகம் ஏறல் மற்றும் இரண்டாம் வருகை என்ற பெயர்களுடைய நற்செய்தியைத் தெரிந்து விசுவாசித்து இயேசுவை தம் இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். 
இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் காணவில்லை. 2000 வருடங்களுக்கு முன்பு நடந்தவைகளை நம் கண்கள் காணவில்லை. ஆயினும், எழுதப்பட்டிருப்பவைகளின் மூலம், அழகிய நற்செய்தியுடன் யாராலும் தொடர்புகொள்ள முடியும். இயேசு தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையிலிருந்த பாவமெனும் தடையை உடைத்ததால், கர்த்தரின் ராஜ்யத்தின் திரைச் சீலை மேலிருந்து கீழாக இரண்டாய் கிழிந்தது. 
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மூலம் நிறைவேறிய அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவனால், பரலோக ராஜ்யத்தினுள் இப்போது நுழைய முடியும். அழகிய நற்செய்தி என்று வழங்கப்படும் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தமானது பரலோக ராஜ்யத்தின் திறவுகோல் என்று உங்களிடம் நம்பிக்கையிருக்கிறதா? 
நானே ஒரு காலத்தில் பாவியாயிருந்தேன், நான் அழகிய நற்செய்தியைக் குறித்து அறியாதவனாக, இயேசுவை இரட்சகராக நம்பிக்கொண்டிருந்தேன். ஆயினும், அவருடைய நிபந்தனையில்லாத அன்பைக் குறித்து ஒரு நாள் வேதாகமத்தில் படிக்க நேர்ந்தது. எனக்காக அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எனக்காக சிலுவையில் மரித்து, எனக்காக உயிரோடெழுந்தார் என்பதை அறிந்தேன். அவர் நம்மீது வைத்த அன்பின் நிமித்தமாக யோர்தான் நதியில் தாம் பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அதற்கு கிரயஞ்செலுத்திய சிலுவை மரணம் மூலம் இயேசு நம்மை இரட்சித்தார். இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் நம்மால் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. 
இது மனிதர்களுக்கான கர்த்தரின் மகத்தான நீதியாயிருப்பதோடு வரலாற்றின் அதிமுக்கிய நிகழ்ச்சியுமாகும். அவருடைய பணிகளான - அவர் பிறப்பு, யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானம், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் - ஆகியவை நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படியாக செய்யப்பட்டன. நம்முடைய மரணத்திற்குப் பிறகு நாம் நரகம் செல்லவேண்டியவர்கள். ஆனால் இயேசு நரகத்தில் நாம் நிரந்தரமாக வாழ்வதைத் தவிர்த்ததுடன் அழகிய நற்செய்தியை பரலோக ராஜ்யத்தின் வழியாகவும் கொடுத்தார். 
அன்புள்ள சகோதரரே, இயேசு சிலுவையில் மரித்தபோது, போர்ச்சேவகன் ஒருவன் அவர் விலாவினில் ஈட்டியால் குத்தினான். உடனே இரத்தமும் நீரும் வெளியே வந்தது. இது வேதாகமத்தில் எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே ஆகும். இது அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் குறித்து சாட்சி கூறுகிறது.
இயேசுவின் சிலுவை இரத்தம் உன்னை உன் பாவங்களிலிருந்து இரட்சிக்க போதுமானதாக கருதுகிறாயா? இயேசுவின் ஞானஸ்நானம் குறைந்த முக்கியத்துவம் உடையது அல்லது உனது இரட்சிப்பிற்கான ஒரு சம்பவம் என்று நினைக்கிறாயா? இப்படி விசுவாசித்தாயானால் தயவுசெய்து மனந்திரும்பு. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து அதனைக் கர்த்தரின் சத்தியமாக நாம் கொள்ளவேண்டும். 
 
 
உன்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்பட வேண்டுமா?
 
நம்முடைய கடன் தீர எப்படி பணம் கட்டவேண்டுமோ அப்படியே, நம்முடைய பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியை விசுவாசிக்கவேண்டும். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தை விசுவாசிக்காத பாவத்தை நாம் செய்யலாகாது. நாம் இயேசுவின் மீது நேரடியாக பாவங்களை சுமத்தவில்லை என்றாலும், யோவான் ஸ்நானன் என்ற இடையாள் அதனைச் செய்தான்.
இயேசு சிலுவையில் மரித்தபோது, எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களின் சிலரின் கல்லறைகள் திறவுண்டன. மேலும் இயேசு உயிர்த்தெழுந்து கலிலேயாவிற்கு சென்றார். இந்த அதிசயமான சம்பவம் உண்மையிலேயே நடைபெற்றது. ஆனால் அநேக மக்கள் அதனை விசுவாசிக்கவில்லை.
நீதிமான்களாகிய பாவ விடுதலைப் பெற்ற நமக்கு பரலோக ராஜ்யத்தை கர்த்தர் அருளினார். நாம் இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறந்தோம். அது சரீர பலத்தினாலோ, மத முயற்சிகளினாலோ அல்ல, அது அழகிய நற்செய்தி மீதுள்ள நம் விசுவாசத்தின் மூலம் ஆகியது. இந்நற்செய்தி புணையப்பட்ட கதையல்ல. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டன. அவரிடம் பாவங்கள் எதுவும் இருக்கவில்லை, ஆனால் அவர் தம் ஞானஸ்நானத்தின் மூலம் ஏற்றுக்கொண்ட நம் பாவ விடுதலைக்காக சிலுவையில் மரிக்கவேண்டியிருந்தது. 
இயேசு ஆவியை விட்டபோது, பூமி அதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன. நூற்றுக்கு அதிபதியும் அவனுடனே கூட இயேசுவின் சரீரத்தைக் காவல் காத்தவர்கள் பூமி அதிர்ச்சியையும் அத்துடன் நடைபெற்றவையையும் உணர்ந்து அதிக பயம் கொண்டு, “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” (மத்தேயு 27:54) என்று சாட்சி பகன்றார்கள். 
யோசேப்பு என்ற அரிமத்தியா ஊரைச் சேர்ந்த ஒருவன் இயேசுவின் உடம்பை எடுத்து, அதனைச் சுத்தமான லினன் துணியில் சுற்றி அவனுடைய கல்லறையில் வைத்தான். தலைமை ஆசாரியனும் பரிசேயரும் அந்த கல்லறையை மூன்று நாட்கள் காவல் செய்யும் படி கட்டளையிட்டார்கள். 
ஆயினும், அழகிய நற்செய்தியை விசுவாசிப்போருக்கு புதிய வாழ்வை கொடுக்கும்படியாக இயேசு உயிரோடெழுந்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தம் சீடர்களிடம் அவர்களைச் சந்திப்பதாகக் கூறியிருந்ததால் அவர் அவர்களைச் சந்திக்க கலிலேயா சென்றார். இவையெல்லாம் - அவர் பிறப்பு, ஞானஸ்நானம், சிலுவை மரணம், உயிரோடெழும்புதல், பரலோகம் சென்றமை, அவரின் இரண்டாம் வருகை - ஆகிய இவையெல்லாம் அழகிய நற்செய்தியை விசுவாசிப்போருக்கு ஏற்படுத்தப் பட்டவை. நான் இயேசு உயிருள்ள தேவனின் குமாரனும் எனது இரட்சகரும் என்று சாட்சி கூறும் சாட்சியமானேன். 
 
 
உண்மையான நற்செய்தி யாரின் மூலம் பிரசங்கிக்கப்படுகிறது?
 
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை விசுவாசிப்பவர்கள் உண்மையின் அழகிய நற்செய்தியை குறித்து சாட்சி கூறுகிறார்கள். தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்ட இந்த மக்களின் சாட்சி மூலம் அழகிய நற்செய்தி பரவுகிறது. நற்செய்தியை விசுவாசிப்பதினால் பாவத்திலிருந்து ஒருவன் விடுதலை பெறும்போது, கர்த்தரின் ஆவியானவர் அவனை ஆளுகைச் செய்யத் தொடங்குகிறார், மேலும் அவன் சித்தம் எதுவாயினும் அவன் மாறுதலையடையத் தொடங்குகிறான். ஆவியை வெல்லும் வேதவாக்குகள் நீதிமானைத் தொடர்ந்து சீரமைத்து மேலும் உறுதியான நம்பிக்கையை அளிக்கிறது. அதற்கு பதிலாக அவன் கர்த்தரை மகிமைப் படுத்துகிறான். வேதவாக்கு அவனுள் பதிந்துள்ளமையால், அவனுள் ஒவ்வொரு நாளும் மாறுதல் ஏற்படுவதை அவனால் அனுபவிக்க முடிகிறது. இப்படி அவன் மாறுதலையடைந்ததைக் காணும் மக்கள் “அவன் உண்மையாகவே மாறுதலடைந்த மனிதன். அவன் ஒரு சிறந்த கிறிஸ்தவனாகவும் கர்த்தரின் பிள்ளையுமானான்” என்று சாட்சி கூறுவார்கள்.
இந்த அழகிய நற்செய்திக்கு பிசாசானவனும் அடிபணிந்து அதனை ஏற்றுக்கொள்வான். “நான் இழிவுறுத்தப்பட்டேன்.” என்று அவன் கூறுகிறான். “ஆனால் இவ்வுலகில் பாவமில்லை என்பது உண்மையே, ஒருவனின் இருதயத்திலும் பாவமில்லை.” ஆகவே, சாத்தான் மக்களின் சிந்தனைகளில் கிரியைச் செய்து, அவர்களுடைய விசுவாச வாழ்வில் தலையிடுகிறான். அவர்கள் நற்செய்தியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதிலிருந்து தடுப்பதே பிசாசின் வேலையாயிருக்கிறது.
இயேசுவுடன் சாத்தான் செய்த போரில் அவன் முற்றிலுமாக தோல்வியடைந்தான். மக்களின் மனதை கட்டுபடுத்தியதன் மூலமாக இயேசுவை சிலுவையில் அறைவதில் சாத்தான் வெற்றி பெற்றான். ஆயினும், அவர் ஞானஸ்நானம் பெற்றபோதிலும், அவற்றிற்கு கிரயஞ்செலுத்த சிலுவையில் மரித்தபோதிலும் உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்துவிட்டிருந்தார். இது காரணத்தினால் நற்செய்தியை விசுவாசிக்கும் யாவரையும் முற்றிலுமாக இரட்சித்தார். 
மனிதர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்க கர்த்தர் நடைமுறைப்படுத்திய திட்டத்தை சாத்தானால் எதிர்க்க முடியவில்லை. அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் மனிதர்களின் பாவங்களுக்கு இயேசு கிரயஞ்செலுத்தி அழகிய நற்செய்தியை முழுமையாக்கினார். இப்போது உலகில் எந்த பாவங்களும் இல்லை. அவர் தம் ஞானஸ்நானம் மூலம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அவரின் சிலுவை மரணம் மூலம் எல்லாப் பாவங்களையும் “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) என்று கூறி முடிவிற்கு கொண்டு வந்தார். அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரைக் குற்றப்படுத்தும் வல்லமை சாத்தானிடம் இல்லை. இயேசு தம் பிறப்பு, ஞானஸ்நானம், சிலுவை மரணம் மற்றும் உயிரோடெழும்புதல் ஆகியவை மூலம் சாத்தானை முறியடித்தார். 
உன்னிருதயத்தில் இன்னும் பாவங்கள் இருக்கின்றனவா? இல்லை. உண்மையான அழகிய நற்செய்தியின் மீதிருக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் “என்னிருதயத்தில் பாவங்களில்லை” என்று கிறிஸ்தவர்களால் கூறமுடியும். அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தை விசுவாசிப்பவனின் இருதயத்தில் ஒரு கிராம் பாவம் கூட இருக்க முடியாது.
நம்முடைய இருதயத்தில் இப்போது அழகிய நற்செய்தி வரையப்பட்டுள்ளது. நாம் இப்பொழுது கர்த்தர் முன்பாக மனசாட்சியின் உறுத்தலில்லாமல் நிற்கலாம். யோர்தான் நதியில் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உங்கள் பாவங்களையெல்லாம் அவர் எடுத்துப்போட்டார் என்பதை நீங்களெல்லாம் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், கர்த்தரிடத்தில் உங்கள் நன்றியறிதலும் மகிழ்ச்சியும் முழுமையானதாக இருக்கும். அழகிய நற்செய்தி மீது நாம் வைத்த விசுவாசத்தின் மூலம், நாம் பரிசுத்தமாக்கப் பட்டு இவ்வுலகில் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்றோம். நாம் கர்த்தருக்கு நன்றி கூறுவோமாக.
“இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம். குமாரனகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:13-14). அல்லேலூயா! கர்த்தருக்கே மகிமை.
அழகிய நற்செய்தியின் மூலமாக இரட்சிப்பின் கதவை இயேசு திறந்துவிட்டார். தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்ததுபோல், அழகிய நற்செய்தியின் வல்லமையினால் உன் இருதயத்திலிருக்கும் தடையை ஒரேயடியாக உடைத்துப்போட வேண்டும். அழகிய நற்செய்தி உனக்காகவும் எனக்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பரலோக ராஜ்யத்தினுள் நுழைய முடியும் என்பதோடு, பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெற அனுமதிக்க அதுவே சிறந்த சத்தியமாகும்.