• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 8 : பரிசுத்த ஆவியானவர்

[8-20] பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ் செய்யப் பட்டவன் மற்றவர்களை பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வழி நடத்துகிறான் (யோவான் 20:21-23)

(யோவான் 20:21-23)
“இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக: பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்: எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.”
 
 
நீதிமான்களுக்கு கர்த்தர் அளித்த அதிகாரம் என்ன?
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார்.

யோவான் 20ஆம் அதிகாரம் இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கூறுகிறது. நம் கர்த்தர் மீண்டும் உயிர்த்தெழுந்து, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று தம் சீடர்களிடம் கூறினார். இயேசுவின் சீடர்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதை அவரிடமிருந்து வரமாகப் பெற்றார்கள். அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகியவை தம் பாவங்களையெல்லாம் கழுவியது என்று விசுவாசித்தவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ்செய்யும்படி அவர்கள் பெறவும் நித்திய ஜீவனையும் இயேசு வழங்கினார். இயேசுவின் ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு ஒப்பானதாக இருக்கிறது என்று வேதாகமம் கூறுகிறது, இதன் பொருள் அவர் ஞானஸ்நானம் எல்லா மனிதர்களையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தது என்பதாகும் (1 பேதுரு 3:21).
 
 
இயேசு எதற்காக ஞானஸ்நானம் பெற்றார்?
 
இயேசு எதற்காக யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றார்? இயேசு மத்தேயு 3:15 இல் “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்று கூறியதிலிருந்து இக்கேள்விக்கான பதிலை தெளிவாக காணலாம். இங்கே “இப்படி” என்பதன் பொருள் அவர் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பதாகும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கைவைக்கும் முறையைப் போன்றே அவரின் ஞானஸ்நானமும் நடந்தது. அவருடைய ஞானஸ்நானத்திற்கான நோக்கம் உலகின் பாவங்களை இயேசுவின் மீது சுமத்துவதாகும்.
“எல்லா நீதியையும்” என்பதன் பொருள் என்ன? “ஏற்றதாயிருக்கிறது” என்ற சொல் எதைக்குறிக்கிறது? “எல்லா நீதியையும்” என்பது அவரின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களை இயேசு சுமப்பது ஏற்றதாயிருக்கிறது என்பதாகும். “ஏற்றதாயிருக்கிறது” என்பது கர்த்தர் கண்கள் முன்பாக இவையெல்லாம் மிகவும் பொருத்தமாயிருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் மனிதர்களின் பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டதுடன் அவரை விசுவாசிப்போருக்கு அதனை அழித்தும் போட்டார். இயேசு ஞானஸ்நானம் பெற்று அவர்களுடைய பாவங்களுக்கு தீர்ப்பாக சிலுவையில் அறையப்பட்டார். பாவமன்னிப்பிற்கான நற்செய்தி இதுவேயாகும். பாவத்திற்கு கிரயம் செலுத்தியதே கர்த்தரின் நீதியாகும், அது பாவிகளின் எல்லாப் பாவங்களையும் துடைத்துப் போட்டது.
மத்தேயு 3:13-17 இல் எழுதப்பட்டுள்ளது போல் இயேசுவின் ஞானஸ்நான அதிசயத்தை மக்கள் கண்டுகொண்டால், அவர்கள் பாவ மன்னிப்பு பெறுவதுடன் பரிசுத்த ஆவியையும் பெறுவர். இயேசு தம் பிரசங்க வாழ்வில் செய்தவையான - அவரின் ஞானஸ்நானம், சிலுவை மரணம், உயிரோடெழும்புதல் - ஆகியவை கர்த்தர் குறித்தபடி, இரட்சிப்பை நோக்கிச் செல்லும் நீதியின் பாதையை நமக்களிப்பதே. இம்முறையில், இயேசு பாவிகளின் உண்மை இரட்சகரானார். நற்செய்தியாகிய அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகியவை இரட்சிப்பாகும், அது நம் எல்லாப் பாவங்களையும் கழுவியது. 
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய நற்செய்தியை தெரிந்து விசுவாசிக்கும்போது மட்டுமே மக்களால் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியும். இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களயும் ஏற்றுக்கொண்டதால், நம் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது. மக்களுக்காக அவர் சிலுவையில் மரித்தது என் மரணமாகும், அவருடைய உயிர்த்தெழுதல் என்னுடைய உயிர்த்தெழுதலுமாகும். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் ஆகியவை நற்செய்தியாகிய பாவ மன்னிப்பு மற்றும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுதல் என்பதாகும்.
நீங்கள் இயேசுவின் ஞானஸ்நானத்திற்கான காரணத்தைப் படித்து நற்செய்தி மீது விசுவாசம் வைப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்பொழுது உங்கள் பாவங்கள் துடைக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள். இயேசு ஏன் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்? அது உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொள்வதற்காகும். “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்” (மத்தேயு 3:15). ஆமேன். அல்லேலூயா!
இன்று பல பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி என்று சிலர் நம்புகிறார்கள். ஆயினும், உண்மையான அத்தாட்சி என்னவெனில், அழகிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசம், பரிசுத்த ஆவியானவரை உண்மையாகவே பெற்றவர்களின் இருதயத்தில் வரையப்பட்டுள்ளதே.
 
 
நீதிமான்களுக்கு பாவத்தை மன்னிக்கும் அதிகாரத்தை கர்த்தர் கொடுத்துள்ளார்
 
கர்த்தர் தம் சீடர்களுக்கு பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தை “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்” (யோவான் 20:23) என்று கூறி வழங்கினார்.
சீடர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து போதித்தபோது, அதனைக் கேட்டு விசுவாசித்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப் பட்டன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. ஆயினும், இதன் பொருள் அவர்களால் யாருடைய பாவங்களையும் மன்னிக்க முடியும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறார்களா, இல்லையா என்பது பொருட்டல்ல என்பதல்ல. 
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் இயேசுவின் சீடர்களுக்கு யாருடைய பாவங்களையும் மன்னிக்கும்படியான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, எழுதப் பட்டுள்ளவைகளைக் குறித்து அவர்கள் போதிக்கும்போது அதனை விசுவாசிக்க வேண்டும். உங்களுடைய எல்லாப் பாவங்களையும் அகற்றிப் போடுவதற்காக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்களுக்கு அளித்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களால் பாவ மன்னிப்பு பெற்று பரிசுத்த ஆவியானவரை உங்களில் வாசஞ் செய்யும்படி பெற்றுக் கொள்ள முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிப்பதன் மூலம் எல்லா மக்களையும் இரட்சிப்பதற்கான வல்லமையையும் இயேசு நமக்களித்துள்ளார். 
 
 
உலகை ஆளுபவரின் வல்லமை
 
முன்பு நான் வாழ்ந்த இடத்தில் சரியாக போடப்படாத சாலையில் பஸ்ஸில் செல்ல வேண்டியிருக்கும். ஓரிடத்தில் மக்கள் இறங்கி பஸ்ஸை மலைமீது தள்ளவேண்டியிருக்கும். ஒரு முறை கொரிய ஜனாதிபதி ஒரு அனல் மின் நிலையத்தைத் தொடங்கி வைப்பதற்காக அந்த சாலையில் வந்தார். மக்கள் அச்செய்தியைக் கேட்டபோது சாலையை பெருக்கி இரு புறமும் செடிகளை வைத்து அவரை வரவேற்றனர். அந்நாள் வந்தபோது, மோட்டார் சைக்கிள்கள் வழி நடத்திச் செல்ல ஜனாதிபதியின் கார் பின்னால் வந்தது. அவரை வரவேற்க கைகளில் தேசிய கொடியுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். ஜனாதிபதி கூறியதாக இப்படிக் கூறப்பட்டது, “இச்சாலை மிகவும் மோசமானதாக உள்ளது, அதைச் சரியாகப் போடவேண்டும்.” சில நாட்களுக்குப் பிறகு அச்சாலை தாரினால் போடப்பட்டது. 
இங்கு என்ன நடந்தது? கடந்து செல்லும் ஜனாதிபதியின் ஒரு குறிப்பு சாலையின் நிலையை முற்றிலும் மாற்ற போதுமானதாகயிருந்தது. ஜனாதிபதியின் கட்டளைக்கு அத்தனை வல்லமை இருக்கிறது. ஆயினும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமக்களித்த கிறிஸ்து அதிக வல்லமையுள்ளவர் என்பது நமக்குத் தெரியும். நம்முடைய வாழ்வு முழுவதும் நம் பாவங்களிலிருந்து விடுதலையாக்கும் வல்லமை இந்த நற்செய்திக்கு உண்டு என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். 
 
 
பாவத்தை மன்னிப்பதற்கான முழு அதிகாரம்
 
“எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்” அவர்களுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன என்ற நற்செய்தியை இயேசுவின் சீடர்கள் பிரசங்கித்தனர். அவர்கள் மக்களிடம் கூறினர், “இயேசு தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் துடைத்தார். கவலைப்படுவதற்கு எதுவுமேயில்லை. நீ எதிர்காலத்தில் பாவஞ்செய்தே தீருவாயாயினும், யோவானால் ஞானஸ்நானம் பெற்றபின் உனக்காக சிலுவையில் இரத்தஞ் சிந்தியதன் மூலம் இயேசு ஏற்கெனவே உன் தினப்பாவங்களைச் சுமந்து தீர்த்துவிட்டார். இயேசு உன்னை இரட்சித்தார்! நீ இதை விசுவாசித்தேயாக வேண்டும்!”
இயேசுவின் சீடர்கள் மூலம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பாவிகள் கேட்டு விசுவாசித்ததால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலமாக பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன் சீடர்களுக்கு வழங்கினார். இயேசுவின் சீடர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகத்தின் எல்லா மக்களுக்கும் பிரசங்கித்தமையால், விசுவாசிகளால் பாவமன்னிப்பை பெற முடிந்தது. அவர்களுக்கு பாவத்தை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்ததோடு இந்த வரத்தையும் பரிசாக அளித்தார். 
நான் முன்பு பிரசுரித்த நூல்களை அநேக மக்கள் வாசித்து, அவற்றை வாசித்ததன் பிறகு அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டனர். அவர் தம் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே இயேசு சிலுவையில் மரித்தார் என்று சிலர் தம் கண்டுபிடிப்பை காரணம் கூறுகிறார்கள், அவர்கள், “நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” (ஏசாயா 53:5) என்று கூறுகிறார்கள்.
அவருடைய உயிர்த்தெழுதலின் பிறகு அவர்தம் சீடர்களிடம் கூறினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுகொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்” (யோவான் 20:22-23). மக்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு அவர்களுக்கு வழங்கினார்.
நாம் குழப்பத்தினாலும், வெறுமையாலும் பாவத்தினாலும் நற்செய்தியை நம்புவதற்கு முன் கட்டுண்டிருந்தோம். ஆயினும் இப்பொழுது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மீதுள்ள நம்பிக்கையின் மூலம் பாவங்களிலிருந்து விடுதலையானபடியால் நாமே மற்றவர்களுக்கு நற்செய்தியைப்பற்றி பிரசங்கிக்கவேண்டியவர்கள். நம் கர்த்தர் நமக்கு சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் கூட கொடுத்துள்ளார். கர்த்தரிடமிருந்து சமாதானத்தையும் பரிசுத்த ஆவியானவரையும் பெறுவதற்கு, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தை விசுவாசிப்பதன் மூலம் பாவமன்னிப்பைப் பெறவேண்டும். 
நம்மை எது விடுதலையாக்குகிறது என்றால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்பிக்கையே. பரலோக ஆசீர்வாதத்தை எடுத்து வருவது இந்த ஆவிக்குரிய நம்பிக்கையே. ஆனால், மனிதனின் சொந்த சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஏதோ ஒரு நம்பிக்கை அழிவிற்கு வழி நடத்துகின்றது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நாம் பாவ விடுதலைப் பெறுவதால், நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறோம். இத்தகைய நம்பிக்கையைப் பெறவேண்டுமானால், நம்முடைய உலகச் சிந்தனைகளை உதறித்தள்ளிவிட்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நோக்கி நமது விசுவாசத்தைத் திருப்பவேண்டும். 
பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான விசுவாசத்தைப் பெறுவதற்கு, நற்செய்தியாகிய இயேசு ஞானஸ்நானம் பெறப்பட்டதையும் நமக்காக சிலுவையில் மரித்ததையும் ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால், கர்த்தர் நமக்கு பாவமன்னிப்பைத் தந்து, சமாதானத்தையும் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசஞ் செய்வதையும் தந்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை யார் விசுவாசிக்கிறானோ அவன் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தையும், பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசஞ் செய்வதையும் கர்த்தர் தம் சீடர்களுக்கு வழங்கினார். 
நாமும் இந்த நற்செய்தியை விசுவாசித்ததன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அநேகர் இதைப் போல் செய்வதற்கு உதவியுள்ளது. நாம் இந்த நற்செய்தியை நம் அயலாருக்கும், உலகத்தாருக்கும் பிரசங்கிப்பதைக் கேட்டு, யார் அதனை தம் இருதயத்தினுள் எடுத்துச் செல்லுகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் வழங்கப்படுகிறார். நாம் பிரசங்கிக்கும் நற்செய்தியின் மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற ஏதுவாகவில்லை என்றால் அது உண்மையான நற்செய்தி அல்ல. மறுபுறம் பார்க்கும்போது, நாம் பிரசங்கிக்கும் நற்செய்தி அவர்களை பரிசுத்த ஆவியானவரைப் பெற வழிநடத்தினால், அந்நற்செய்தி உண்மயானது.
இத்தகைய நற்செய்தி நமக்கு கிடைப்பதற்கு நாம் எத்தனை ஆசீர்வதிக்கப் பட்டவர்களாகவும் அதற்கு நன்றியறிதல் உடையவர்களாகவும், நாம் இருக்க வேண்டும். நீங்களும் நானும் பிரசங்கித்த நற்செய்தி குறைவற்றதும் உயர்வான ஒன்றாகவும் இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, இன்று, இந்த நற்செய்தியைக் கேட்டு விசுவாசிக்கும் ஒருவனை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே நாம் உலகமெங்கும் அழகிய நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும். மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள உதவவேண்டும். 
 
 
சாத்தானால் ஏமாற்றப்பட்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மறுதலித்தவர்கள்
 
இயேசுவை ஏற்கெனவே விசுவாசிப்பவர்களுக்கு கூட நாம் உதவுகிறோம். அவர்கள் இயேசுவை விசுவாசித்தபோதிலும் அவர்களில் அநேகர் பரிசுத்த ஆவியானவரை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. நாம் அவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற உதவிச் செய்கிறோம். 
இயேசுவை விசுவாசித்தபோதிலும், ஒரு மனிதன் பரிசுத்த ஆவியானவரை பெறவில்லையென்றால் அவன் நம்பிக்கையில் சில பிரச்சினைகள் இருக்கலாம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையின் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே உண்மையான மக்களாக கருதப்படுவர், ஆகவே நாமெல்லாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்தும் அந்த நற்செய்தியை வைத்துக்கொள்ளவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நாம் தெரிந்து கொள்ளவேண்டும், ஏனெனில் இந்த நற்செய்தியின் சத்தியமோ நாம் பரிசுத்த ஆவியானவரை பெறுவதை ஏதுவாக்குகிறது.
மற்றவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்காக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நாம் பிரசங்கிக்கிறோம். ஆயினும், நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்கள் அநேக கஷ்டங்களை சந்திக்க வேண்டியவர்கள். சில கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமில்லாத பல குழப்பமான அனுபவங்கள் அவர்களிடமிருக்கின்றன. ஆகவே, அதிகமான நேரமும், பலியும் அவர்களை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் ஞானம் பெறச் செய்ய தேவைப்படுகிறது.
எல்லோரும் இந்த நம்பிக்கையின் மூலம் பரிசுத்த ஆவியானவரை ஒருவனால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நினைக்கும்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசியாமல் இருப்பது யார்? உண்மையான நற்செய்தி வருமுன், வேறொரு செய்தியினால் சாத்தான் மக்களை வஞ்சித்தான். அவர்கள் தாம் ஏற்கெனவே இயேசுவின் நற்செய்தியை விசுவாசிப்பதாக எண்ணிக் கொண்டிருப்பதால், அத்தகைய மனிதர்கள் விசுவாசிக்கும்படியாக வேறென்ன இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறார்கள். ஆகவே, அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மறுத்து, ஏற்காது இருக்கிறார்கள்.
சாத்தான் அநேக மக்களை குருடாக்கி விட்டபடியினால், அவர்கள் இந்த காலத்தின் நாளில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் முழுவதும் விசுவாசிப்பதில்லை. அதன் விளைவாக இயேசுவை விசுவாசிப்பது இலகுவான காரியம் என்றெண்ணுகின்றனர். ஆயினும், நற்செய்தியின் சத்தியத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்வது அத்தனை இலகுவானதல்ல. உண்மை நற்செய்தியான நீர் மற்றும் ஆவியானது தவறான ஒரு செய்தியினால் திரையிடப்பட்டுள்ளது.
நிறைய மனிதர்கள் தாம் ஆலயஞ்செல்வதன் மூலமும் தாம் இயேசுவை விசுவாசிப்பதாக கூறுவதாலும் பரலோக ராஜ்யத்தினுள் யாராலும் பிரவேசிக்க முடியுமென நினைக்கிறார்கள். ஜெபம் மற்றும் உபவாசம் போன்ற தம் சொந்த முயற்சிகளின் மூலம் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரம் அருளப்படுகிறதென்று பலர் நம்புகிறார்கள். ஆயினும், அவை பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் உண்மையிலிருந்து அதிகத் தொலைவில் உள்ளன. பல பாஷைகளில் பேசுவதும் மற்ற அற்புதங்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்கான அடையாளங்கள் என்று அவர்கள் எண்ணுகின்றனர். 
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்கு உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பது அவசியம் என்பதை அவர்கள் அத்தனையாகப் புரிந்து கொள்வதில்லை. ஆயினும், வேதவாக்கை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே ஒருவனால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று வேதம் கூறுகிறது. பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான அதிசயத்தை கர்த்தர் தம் வார்த்தைகளினுள் பொதித்துள்ளார்.
 
 
பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ் செய்ய வேண்டுமென்பவர்கள்.
 
நான் ஒரு முறை தாய்வான் நாட்டிற்கு நம் ஊழியர்களுடன் சென்றிருந்தேன். அங்கிருந்த மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய நூல்களை எங்களிடம் கேட்டனர். அதுபோலவே, ஜப்பானிலும், ரஷ்யாவிலும் நடைபெற்றது. பரிசுத்த ஆவியானவர் தம்மில் சஞ்சரிப்பதைக் குறித்த புத்தகத்தை அநேகர் விரும்புவதற்கு காரணம், இந்நாளின் மக்கள் பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யும்படி பெறுவதில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருப்பதே. பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசஞ் செய்யப் பெறாததால், அநேக மக்கள் இயேசுவை விசுவாசித்தாலும், அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டோமா என்று நிச்சயமில்லாதிருக்கிறார்கள்.
இயேசுவை விசுவாசிக்கும் அநேக மக்கள் பரிசுத்த ஆவியானவரைத் தாம் பெற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். ஆயினும், அப்படி பரிசுத்த ஆவியானவரை நிரந்தரமாகவும் நித்தியமாகவும் பெற்றுக்கொண்டவர்கள் வெகு குறைவு. இயேசுவின் மீது விசுவாசமிருந்தும் அநேக மக்களால் அப்படிச் செய்ய முடியவில்லை, அதனாலேயே அவர்கள் இப்போது அதனைச் செய்ய முயல்கிறார்கள். 
உலகக் கிறிஸ்தவர்களில் அநேக மக்கள் தாம் பரிசுத்த ஆவியை அனுபவித்ததாகக் கூறுகிறார்கள். சிலர் இயேசுவைக் கனவில் சந்தித்ததாகவும், வேறு சிலர் அவர்கள் பிசாசுகளை விரட்டிய அனுபவம் இருப்பதால் தம்மில் பரிசுத்த ஆவியானவர் இருப்பதாகக் கூறுகின்றனர். தம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த நம்பிக்கையுடைய அநேக மக்கள் இருக்கிறார்கள். ஆயினும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் பரிசுத்த ஆவியானவரை உண்மையாகவே தம்மில் வாசஞ் செய்யப் பெற்ற மனிதர்கள் வெகு சிலர் இருக்கின்றனர். 
சுத்தமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் பரிசுத்த ஆவியின் சஞ்சரிப்பைப் பெறுவதைக் குறித்த நூல்கள் இவ்வுலகில் இல்லாதிருப்பது வித்தியாசமாக இருப்பதாக நான் ஒரு முறை நினைத்தேன். அநேக மக்கள் பரிசுத்த ஆவியானவருடனான அனுபவங்களைக் குறித்து பேசுகிறார்கள், ஆனால், பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைக் குறித்த நூல்கள் இல்லாதிருப்பதேன்? இவ்வுலகை நீளமாகவும், அகலமாகவும் நோக்கினால் அத்தகைய நூல்களைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். 
தாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டதாக தவறாகக் கூறுபவர்கள், இயேசுவை நேரடியாக சந்தித்ததாகவும் பரலோக ராஜ்யத்திற்கும், நரகத்திற்கும் சென்று வந்ததாகவும் கூறுகின்றனர். இயேசு தம்மிடம் “நீங்கள் என்னிடம் சமயமாவதற்கு முன்பே வந்துவிட்டீர்கள். நீங்கள் உலகில் செய்யவேண்டியவைகள் அநேகமாய் இருப்பதால் உங்கள் இடத்திற்கு உடனே செல்லுங்கள்” என்று கூறியதாக கூறுகின்றனர். இத்தகைய சம்பவம் சாத்தியமாகாது. ஆயினும், அவர்கள் சந்தித்த இயேசு உண்மையான இயேசுவா? அவர்கள் இருதயங்களில் பாவங்கள் இன்னமும் இருந்த போதிலும் இயேசு அவர்களைச் சந்தித்தாரா? இயேசு பாவிகளிடம் வாழுகிறாரா? 
இன்று வாழும் அநேக கிறிஸ்தவர்கள் ஒரு படி மேலே இயேசுவை விசுவாசித்தாலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசஞ்செய்வதைப் பெறவில்லை என்பது உண்மையாகும். ஆகவே, பரிசுத்த ஆவியானவரை நம்முள் பெற்ற நாம், மற்றவர்கள் இந்த வரத்தைப் பெற வழி நடத்தும் நற்செய்தியை அவர்களுக்கு பிரசங்கிக்கவேண்டும். எல்லோரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளவேண்டும், அப்படிச் செய்வதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசமிருப்பது அவசியம். நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையின் நற்செய்தி மூலமாக, கர்த்தரிடமிருந்து பரிசுத்த ஆவியானவரை வரமாகப் பெறமுடியும். 
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கர்த்தர் நமக்களித்ததால் கர்த்தருக்கு நாம் நன்றி கூறி அவரைப் புகழவேண்டும். இந்நூலை எழுதும்போது பரிசுத்த ஆவியானவர் என்னில் பரவியிருந்த மகிழ்ச்சியை என்னால் உணரமுடிந்தது. இந்நூலைப் பிரசுரிக்கும்போது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மீதுள்ள நம்பிக்கை மூலமாக நிறைய மக்கள் பரிசுத்த ஆவியானவரைத் தம்முள் வாசஞ்செய்யும்படி பெறுவார்கள். “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” (அப்போஸ்தலர் 19:2) என்று எபேசு சபையின் வருங்காலச் சீடர்களிடம் பவுல் கேட்டான். 
நாமெல்லாரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறவேண்டும். உலக வரலாற்றில் அதிக குழப்பம் நிறைந்த இந்த காலத்தின், உலக கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர். பரிசுத்த ஆவியானவர் என்னை எதைச் செய்ய வழி நடத்துகிறாரோ அப்படியே, வேதாகமுறைப்படி பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது எப்படி என்று நான் பிரசங்கிக்கிறேன். திருப்திகரமான ஒரு வாழ்வை வாழவேண்டுமானல், நீங்கள் பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்யும் சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும். இது பரிசுத்த ஆவியானவரை உங்களிருதயத்தின் ஆழத்திற்குள் பெறுவதற்கான கடைசி வாய்ப்பாகும். 
இயேசுகிறிஸ்து எனக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கொடுத்ததுடன் பரிசுத்த ஆவியானவரின் வரத்தினாலும் என்னை அலங்கரித்ததால் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள உதவும் விதமாக நற்செய்தியைப் பரப்ப கட்டாயப் படுத்தப்படுவதை உணருகிறேன். 
 
 
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிமீது புறஜாதியாரும் விசுவாசம் வைக்கவேண்டும்
 
மற்றவர்கள் பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யும்படியாகப் பெற இயேசுவின் சீடர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்று வேதம் கூறுகிறது. புறஜாதியாரும் கூட பரிசுத்த ஆவியானவரைப் பெறவேண்டுமானால் சீடர்களைப் போன்றே விசுவாசம் வைக்கவேண்டும். மேலும், கர்த்தரின் உலகினுள் நுழைவதற்கேதுவாக, குறிப்பாக புறஜாதியாருக்கு, சீடர்களிடமிருந்ததுபோல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மீது விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஆகவே, புறஜாதியாரான நாம், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்கு உண்மை நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் பேதுருவை, புறஜாதியாரான கொர்நேலியுவுக்கு பரிசுத்த ஆவியானவரைப் பெறத் தேவையான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் அவர்களை ஞானமுள்ளவனாக்குவதற்கு, அனுப்பினான்.
புறஜாதியார் மீதும் பரிசுத்த ஆவியானவரின் வரம் ஊற்றப்பட்டது என்பதை யூத விசுவாசிகள் கேட்டு வியந்தார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கித்து எருசலேம் ஆலயத்திற்கு பேதுரு திரும்பியபோது, விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் அவனை குறைகூறினார்கள். “விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடு போஜனம் பண்ணினீர்!” (அப்போஸ்தலர் 11:3). முதலில் இருந்து என்ன நடந்தது என்று பேதுரு அவர்களுக்கு விளக்கினான். 
அவனுடைய விளக்கம் அப்போஸ்தலர் 11:5-17 இல் உள்ளது. “நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டி அடைந்து ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப் போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கி வந்தது. அதிலே, நான் உற்றுப்பார்த்து கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன். அல்லாமலும்; பேதுருவே, எழுந்திரு, அடித்துப்புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருகாலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். இரண்டாம் தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக, எண்ணாதே என்று மறுமொழி சொல்லிற்று. இப்படி மூன்று தரம் சம்பவித்த பின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. உடனே, செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்கு முன்னே வந்து நினறார்கள். நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடு கூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம். அவனோ தன் வீட்டிலே ஒரு தேவ தூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு; நீயும் உன் வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்த தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான். நான் பேசத் தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினது போலவே, அவர்கள் மேலும் இறங்கினார். யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவு கூர்ந்தேன். ஆதலால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம் பண்ணினது போல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம் பண்ணியிருக்கும் போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம்?”
பேதுரு விருத்தசேதனம் பண்ணப்படாத மக்களிடம் போய் உண்டது மட்டுமல்ல அவர்களுக்கு நற்செய்தியையும் கூறினான், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு நன்றிகள். அவர்கள் இதனைக் கேட்டபொழுது அமைதியடைந்து கர்த்தரை மகிமைப் படுத்தினார்கள். கர்த்தர் அவர்களுக்கு - கொர்நேலியு, அவன் உறவினர் அவன் நண்பர்கள் யாவருக்கும் மனந்திரும்புதலையும் வாழ்வையும் அருளினார். 
 
 
பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான அப்போஸ்தலர்களின் நற்செய்தி
 
அப்போஸ்தலர்களின் அபாயகரமான பணி யாது?
பரிசுத்த ஆவியானவரை அவர்கள் பெற்றுக்கொள்ளும் விதமாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிப்பதே.
 
அப்போஸ்தலர்கள் உண்மையாகவே நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கித்தார்களா? அப்போஸ்தலனாகிய பேதுரு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தானா என்று உறுதி செய்வோம். பேதுரு வேதாகமத்தில் இவ்வாறு கூறினான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, - இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.” (1 பேதுரு 3:21) இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்ததன் மூலம் எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் உண்மையாகவே நம்பினான். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது (மத்தேயு 3:15), எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது என்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டு நம்மை இரட்சிப்பதற்காக மீண்டும் உயிர்த்தெழுந்தார் எனவும் அவன் விசுவாசித்தான். 
இந்நாளில் பேதுருவிடமிருந்த விசுவாசத்தையொத்த நம்பிக்கையுடைய மக்கள் இருக்கிறார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்பவர்கள் பேதுருவைப் போன்றே அதே நற்செய்தியை பிரசங்கிப்பவர்களாக உள்ளனர். இந்த உண்மை இதனைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யப் பெற்றுக் கொள்வதற்கு போதுமானதாக இருக்கிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பேதுரு பிரசங்கித்த போது மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதைப் போலவே, நாம் அதே உண்மையைப் பிரசங்கிக்கும்பொழுது மக்கள் நற்செய்தியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதை நம்மால் காணமுடிகிறது. ஒருவன் இயேசுவை விசுவாசித்தால் பரலோகம் செல்வான் என்றெண்ணுவதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெறமுடியாது, மாறாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெறமுடிகிறது.
தரையில் ஊர்ந்துசெல்லும் பூச்சிகளைப்போல் புறஜாதியாரை பேதுரு கருதினான். சட்டத்தின்படி, இயேசு ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து உயிரோடெழும்புவதற்கு முன்னர் அவர்கள் அசுத்தமான விலங்குகளாக கருதப்பட்டனர். ஆயினும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, புறஜாதியார் கூட பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யும்படி ஆசீர்வதிக்கப்படமுடியும். ஆகவே, பேதுருவுக்கு ஒரு சத்தம் உண்டாகி, “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” (அப்போஸ்தலர் 10:15) என்று கூறியது.
புறஜாதியாரான நம்மால் பரிசுத்த ஆவியானவரைப் பெறமுடியாதிருந்தது, ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதனால், பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ள முடியும். தம் சொந்த சிந்தனைகளினால் நிறைந்த மனிதர்களுக்கு நற்செய்தியை நாம் பொறுமையுடன் பிரசங்கிக்கும்பொழுது அவர்கள் நற்செய்தியை விசுவாசிப்பதையும், முடிவில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதையும் காணமுடிகிறது. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தை அவர்கள் விசுவாசிக்கத் தொடங்கிய பின், அவர்கள் இருதயத்தில் பாவங்கள் இல்லை என்று அவர்கள் அறிக்கைச் செய்வதை நாம் காணலாம். அப்பொழுது மட்டுமே பரிசுத்த ஆவியானவர் அவர்களில் சஞ்சரிக்கிறார். 
நாம் இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கும் பிரசங்கிப்பதன் நோக்கம் அவர்களைப் புரிந்துக்கொள்ளச் செய்வதற்கு மட்டும் அல்ல. அது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள வழி நடத்துவதற்குமாகும் நாம் பிரசங்கிக்கும் நற்செய்தியை விசுவாசிப்பவர்களின் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன என்பது முக்கியமானதாகும். அதே சமயத்தில் அவர்கள் பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ்செய்யும் படி பெறுகிறார்கள் என்பது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் நற்செய்தியை மட்டும் உலக மக்களுக்கு பிரசங்கிக்கவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள வழி நடத்தும் அடுத்த நடவடிக்கையிலும் அதே சமயத்தில் ஈடுபட்டிருக்கிறோம். 
இச்சூழ்நிலையில் தேவைப்படுகிறவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பிரசங்கிக்க வேண்டும். நாம் நற்செய்தியை பிரசங்கித்துவிட்டு நிறுத்திவிட்டோமானால் நம் எல்லா கஷ்டங்களும் வீண். இந்நற்செய்தி மக்கள் பரிசுத்த ஆவியானவரைத் தம்முள் வாசஞ் செய்யப்பெற வழி நடத்துகிறது என்பதை நாம் அறியவேண்டும். இதனை நாம் மனதில் கொண்டு நற்செய்தியைப் பிரசங்கித்தால், பரிசுத்த ஆவியானவரின் அக்கினி இவ்வுலகம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவும். 
ஒரு நற்செய்தியாளர் இந்த நற்செய்தி உலகம் முழுவதையும் பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்தும் என நம்பும்போது அவர் ஊழியமானது மக்களை இயேசுவை நம்பச் செய்வது மட்டுமல்ல என்று அவர் உணருவதுடன், அது மற்றவர்களை பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்த உதவுவதே என்பதை அறிந்து கொள்வார். ஆகவே, இந்த நேரத்தில் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் குறித்து பிரசங்கிப்பது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், நாம் பிரசங்கிப்பதை அவன் காதால் கேட்கவும் இருதயத்தால் விசுவாசிக்கவும் வேண்டும். நாம் பிரசங்கிக்கும் நற்செய்தி மக்கள் வாழ்வில் பெருத்த மாற்றத்தை உருவாக்குகிறது என்பது தெளிவு. நற்செய்தியின் வல்லமை கர்த்தர் அளித்த அதிகாரமாகவும் ஆசீர்வாதமுமாக இருக்கிறது. 
பேதுரு யூதர்களின் நற்செய்தியாளன், அதே சமயம் பவுல் புறஜாதியாரின் நற்செய்தியாளன். ஒரு வீட்டின் மேலிருந்து பேதுரு ஜெபித்துக்கொண்டிருந்த போது பரலோகம் திறந்து அதிலிருந்து ஒரு நாலு மூலைகளிலும் கட்டப்பட்ட மிகப்பெரியத் துணியொன்று அவனை நோக்கி இறங்கியது. அதில் சாப்பிடும்படியாக தடுக்கப்பட்ட சுத்தமில்லாத எல்லா விலங்குகளும் இருந்தன. 
பேதுரு எப்போதும் சாதாரணமான அல்லது சுத்தமில்லாத எதையும் சாப்பிட்டதில்லை. ஆயினும் கர்த்தர் அவற்றைக் கொன்று உண்ணும்படிக் கூறினார். பேதுரு “அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருகாலும் புசித்ததில்லை” என்று கூறி மறுத்தான். அப்போது ஒரு சத்தமுண்டாகி அவனிடம் “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்று கூறியது. இது எதனை அறிவுறுத்துகிறது? இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தபோது உலகின் பாவங்களோடு, புறஜாதியாரின் பாவங்களையும் கூட கழுவிப்போட்டார் என்று கர்த்தர் கூறுகிறார்.
கர்த்தர் அவனிடம் சுத்தமில்லாத விலங்குகளைக் கொன்று அவற்றைச் சாப்பிடும்படி கூறியதன் ஆவிக்குரிய பொருள் என்னவெனில், இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டு, நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொள்ளும்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டு அதற்குத் தீர்ப்பாக சிலுவையில் அறையப்பட்டார் என்பதை விசுவாசிப்பதன் மூலம் புறஜாதியாரும் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும் என்று பேதுருவுக்கு போதிப்பதே.
பேதுரு பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்ட பிறகும் அவற்றை ஆவிக்குரிய கண்களால் பார்க்காமல் சட்டத்தின் முறைப்பாடுகளின்படி நடந்தான். ஆனாலும், பேதுரு கர்த்தர் புறஜாதியாரின் பாவங்களைக் கூட ஏற்கெனவே கழுவி விட்டார் என்று விசுவாசித்து மனந்திரும்பினான். அழகிய நற்செய்தியின் செல்வங்களை பேதுரு இன்னும் ஆழமாக தெரிந்துக் கொண்டான். அவன் கர்த்தரின் வார்த்தைகளைப் பிரசங்கிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்போரின் மீது விழுவதைக் கண்டான்.
இக்காலத்திய நற்செய்தியாளர்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுள்ளார்களா இல்லையா என்று நாமெப்படி பிரித்துணர்வது? அது அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதிலிருக்கிறது. ஒரு நற்செய்தியாளன், கர்த்தரின் வார்த்தையை பிரசங்கிக்கும்போது அந்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் ஒருவன் பரிசுத்த ஆவியானவரை தன்னுள் வாசஞ் செய்யும்படியாக பெற வேண்டும். நற்செய்தியாளனின் இருதயத்தில் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் அவனிடமும் வாசஞ் செய்யும்படி வருவார். நற்செய்தியாளனும் அதனைக் கேட்டுக் கொண்டிருப்பவனும் பால்ய நண்பர்கள் போல் உறவாடத் தொடங்குவார்கள். அவர்கள் கர்த்தரின் அன்பு ஒருவரிலொருவர் இருப்பதைக் காணுவார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்று அவன் கர்த்தரின் மக்களில் ஒருவனாவதை நற்செய்தியாளனால் காணமுடியும்.
நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்போது, அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த உடனேயே பரிசுத்த ஆவியானவர் அவர்களில் இறங்குவதைக் காணலாம். அது இரட்சிப்பிற்கான உணர்விலிருந்து தனியானதல்ல. நாம் ஏன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க வேண்டுமென்பதற்கு இதுவே முக்கிய காரணம். நாம் பிரசங்கிக்கும் நற்செய்தியானது மற்றவர்களை பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்தும் ஒன்று. 
பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப்பட்டவர்கள் கர்த்தரின் பிள்ளைகள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஒரு பிரிவின் கொள்கையல்ல, ஆகவே, நாம் இதைக் குறித்து மற்றவர்களுக்கு பிரசங்கிக்கும்போது, அவர்கள் விசுவாசமுடையவர்களாகி, பரிசுத்த ஆவியானவரை பெற்று கர்த்தரின் பிள்ளைகளாகின்றனர். இது எத்தனை பெரிய ஆசீர்வாதம்! எத்தனை வியப்பளிக்கும் நற்செய்தி! அவருடைய கிரியைகள் எத்தனை மகத்துவமானவை! நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்போர் கர்த்தரின் ராஜ்யத்தைக் கட்ட உதவுகிறார்கள். நாம் நற்செய்தியை மட்டும் பிரசங்கிக்கிறோம், ஆனால் அவர்களோ பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்கிறார்கள். 
சில மக்கள் இயேசுவை விசுவாசிப்பது ஒன்று, பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது வேறொன்று என நினைக்கிறார்கள். ஆகவே, கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவருக்காக இன்னும் ஜெபிக்கிறார்கள். ஆயினும் அவரின் ஊழியர்கள் பிரசங்கித்த நற்செய்தியைக்கேட்டு விசுவாசிப்போர் மீது பரிசுத்த ஆவியானவர் வருகிறார் என்று வேதாகமம் கூறுகிறது. உலகைச் சுற்றிலும் உள்ள மக்கள் பரிசுத்த ஆவியானவருக்காக பேராவலுடன் காத்திருக்கின்றனர். நாம் பிரசங்கிக்கும் நற்செய்தி அவர்களின் ஆசையைப் பூர்த்திச் செய்கிறது. அதனாலேயே நற்செய்தியை உலகெங்கும் பரப்பும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. நாம் நம் பிதாவின் பிள்ளைகளாகவும் உரிமம் பெற்றவர்களாகவும், அவரின் பெரிய பொறுப்புள்ள வேலையின் நம்பிக்கைக்கு பாத்திரராகவும் இருக்கிறோம்.
மக்கள் பரிசுத்த ஆவியானவரை பெறுவதே நம் முக்கியப்பணி என்பதை மனதில் கொண்டு நம்பிக்கையுடன் நற்செய்தியைப் பிரசங்கிக்கவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது, நற்செய்தியாளர் மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்கு முன்பு தான் உண்மையாக விசுவாசிக்கவேண்டிய ஒன்று. அப்பொழுது அதனைக் கேட்பவர்கள் நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வார்கள். இந்தப்படியாக, நற்செய்தியை விசுவாசிப்போரின் மீது நித்திய ஜீவனை நாம் ஊதமுடியும். நம்முடைய இலக்கு அவர்களை இருளின் வல்லமையிலிருந்து விடுவித்து கர்த்தரின் ராஜ்யத்தில் அவர்களைச் சேர்ப்பதே. நற்செய்தியாளர்கள் பாவிகளை இருளின் வல்லமையின் மரணத்திலிருந்து தேவபுத்திரரின் ராஜ்யத்திற்கு மாற்றுபவர்களாயுள்ளனர். பாவிகளைக் கர்த்தரின் பிள்ளைகளாக மாற்றுவது மிக முக்கியமான பணியாகும்.
அநேக மக்களுக்கு பரிசுத்த ஆவியானவரை எப்படிப் பெற்றுக் கொள்வது என்பது தெரியாமல் தம் சொந்த முயற்சிகள் மூலம் அவரைப் பெற முயற்சி செய்கிறார்கள். ஆயினும் அவை வீண் என்று நிச்சயமாகும். விசுவாசம் பாவத்திலிருந்து விடுதலையளிப்பதால் நற்செய்தியின் மீதுள்ள விசுவாசம் போதும்.
நீ எப்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டாய்? ஜெபத்தின் மூலமா? அல்லது கைவைப்பதன் மூலமா? இல்லை, அது வழியல்ல. நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும்போது மட்டுமே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறோம். உலகிலுள்ள எல்லா மக்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் விதமாக நாம் ஜெபித்து நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும்.
“அப்போஸ்தலர்” என்ற சொல்லின் பொருள் “கர்த்தரால் அனுப்பப்பட்டவன்” என்பதாகும். அப்போஸ்தலர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறும் பொருட்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்கிறார்கள். எங்களுடன் சேர்ந்து இந்த வேலையை நீயும் எடுத்துக் கொள்ள விரும்பமாட்டாயா? நம்முள் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யப் பெற்று அதனை எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கவேண்டும். அல்லேலூயா! பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு கர்த்தர் நமக்களித்த நற்செய்தியின் ஒரே சத்தியத்தை புகழுவோமாக!