• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 1-1] ரோமர் 1 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம்

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை வேதாகமத்தின் பொக்கிஷம் என்று குறிப்பிடலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் ஒருவன் கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்வது எப்படியென்று இது கூறுகிறது. ரோமரை யாக்கோபின் நிரூபத்துடன் ஒப்பிடும்போது முதலாவதை ‘பொக்கிஷத்தின் வார்த்தைகள்` என்றும் இரண்டாவதை ‘வைக்கோலின் வார்த்தைகள்` என்றும் யாரோ வரையறுத்துள்ளனர். ஆயினும் ரோமரைப் போன்றே யாக்கோபும் கர்த்தரின் வார்த்தையே. ஒரே வித்தியாசம் என்னவெனில் ரோமர் வேதாகமத்தின் பொதுவான சாராம்சத்தை அளிப்பதால் அது விலையேறப்பட்டது. அதே சமயம் யாக்கோபின் நிரூபம் கர்த்தரின் சித்தத்திற்கேற்றபடி நீதிமானை வாழச் செய்வதால் இதுவும் விலையேறப்பட்டது.
 
 
பவுல் என்னும் மனிதன் யார்?
 
ரோமர் 1:1-7 ஐ முதலில் வாசிப்போமாக. “இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப் பட்டவனுமாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரித்தவான்களாகும்படி அழைக்கப் பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது, நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. இயேசுகிறிஸ்துவைக் குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்: பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவ குமாரனுமாயிருக்கிறார். அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப் பட்டவர்களாகிய உங்களையும், தமது நாமத்தினிமித்தம், விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப் பண்ணும் பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச் செய்திருக்கிறார்.”
இந்த வசனங்களை “ரோம் நகரின் கிறிஸ்தவர்களுக்கான பவுலின் வாழ்த்துக்கள்” என்று கருதலாம். கர்த்தரின் நீதியாக வந்த இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று பவுல் தன் வாழ்த்தில் குறிப்பிடுகிறான்.
‘பவுல் என்பவன் யார்?` என்பதைக் குறித்து 1 ஆம் வசனம் கூறுகிறது. தமஸ்குவிற்கு செல்லும் வழியில் உயிரோடெழும்பிய தேவனை சந்தித்த அவன் யூதனாவான். புறஜாதியாரிடம் நற்செய்தியைக் கூற கர்த்தரால் தெரிந்துக் கொள்ளப்பட்ட பாத்திரம் (அப்போஸ்தலர் 9:15) அவனே.
 
 
பழைய ஏற்பாட்டின் பலியிடும் முறைகளின் அடிப்படையிலும் தீர்க்கத்தரிசனங்களின் அடிப்படையிலும் உண்மை நற்செய்தியை பவுல் பரப்பினான்
 
இரண்டாம் வசனத்தில், பழைய ஏற்பாட்டு வார்த்தைகளின் அடிப்படையில் அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியைப் பரப்பினான். “தேவனுடைய சுவிசேஷம்” என்பதை “தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி” என்று வரையறுக்கிறான். இந்த வசனத்தின் மூலமாக அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பழைய ஏற்பாட்டின் பலியிடும் முறையின் அடிப்படையில் போதித்ததை நாம் காணலாம். மேலும், 2 ஆம் வசனம் மூலம், அவன் நற்செய்திக்கு பணியாற்ற தெரிந்துக்கொள்ளப்பட்டதை நாம் காணலாம்.
“தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில்” என்ற சொற்றொடரானது பலியிடும் முறையில் தோன்றிய அல்லது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களின்படி கர்த்தர் இயேசுகிறிஸ்துவை அனுப்பச் செய்த உறுதியைக் குறிக்கிறது. மோசே, ஏசாயா, எசேக்கியேல், எரேமியா மற்றும் தானியேல் உட்பட எல்லா தீர்க்கதரிசிகளும் இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, உலகின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரிப்பார் என்பதற்கு சாட்சி பகன்றனர்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய நற்செய்தி எத்தகையது? தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து கூறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவன் பிரசங்கித்தான்.
சில மக்கள் பழைய ஏற்பாட்டின் வார்த்தைகள் ஏற்கெனவே முடிவடைந்ததாக கூறுகின்றனர். மற்றவர்களும் கூட அதனையே கூறுகின்றனர். அவர்கள் மத்தேயு 11:13ஐ ஆதாரமாக காட்டுகின்றனர். சில நன்கு அறிமுகமான நற்செய்தியாளர்கள் பழைய ஏற்பாட்டை முற்றிலுமாக அலட்சியம் செய்கின்றனர்.
ஆயினும், கர்த்தர் பழைய ஏற்பாட்டில் நமக்கு ஒரு உறுதியளித்து அதனை புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து மூலம் நிறைவேற்றினார். ஆகவே, விசுவாச உலகில் பழைய ஏற்பாடு இல்லாது புதிய ஏற்பாடு இருக்க முடியாது, அது போலவே பழைய ஏற்பாட்டின் வார்த்தைகளானது புதிய ஏற்பாட்டின் வார்த்தைகளின்றி முழுமையாகாது.
அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தரின் நற்செய்திக்காக தெரிந்தெடுக்கப்பட்டவன். நல்லது, இப்போது கேள்வி என்னவென்றால், “அவன் போதித்த நற்செய்தி எத்தகையது?” பழைய ஏற்பாட்டின் அடிப்படையில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து நம்மெல்லாரையும் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்பதைக் குறித்து அவன் பிரசங்கித்தான். ஆகவே, நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிக்கும்போது, அதனை பழைய எற்பாட்டின் பலியிடும் முறை மற்றும் அதன் தீர்க்கத்தரிசனங்களின் அடிப்படையில் பிரசங்கிக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உண்மை என்று விசுவாசிப்பதோடு, புதிய ஏற்பாடானது பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்த வார்த்தைகளின் நிறைவேற்றுதல் என்றும் விசுவாசிப்பார்கள்.
புதிய ஏற்பாட்டின் தொடக்கம் முதலே, இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்திற்கும் அவரின் சிலுவை இரத்தத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். பழைய ஏற்பாட்டின் முக்கியக் கருப்பொருளாக, பாவியொருவன் பாவ விடுதலையைப் பெறும் முறையாக பலியிடும் முறை இருக்கிறது. ஒருவன்/ஒருத்தி அவனின்/அவளின் கையை அதின் தலை மீது வைத்து அவர்கள் தம் பாவங்களிலிருந்து மன்னிப்புபெற அதனைச் சாகும்படி இரத்தம் சிந்தச் செய்தார்கள்.
அப்படியானால், பழைய ஏற்பாட்டில் பாவப்பரிகாரமாக கைவத்தலும் பலி மிருகத்தின் இரத்தமும் இருக்கும்போது, புதிய ஏற்பாட்டில் இதைக் குறித்து என்ன இருக்கிறது? இயேசு பெற்ற ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் அங்கிருக்கிறது. அதற்கு மேலும், பழைய ஏற்பாடு கூறும் தலைமை ஆசாரியன் (லேவியராகமம் 16:21) புதிய ஏற்பாட்டின் யோவான் ஸ்நானனுக்கு ஒப்பானவன்.
3 ஆம் வசனமும் 4 ஆம் வசனமும் “இயேசு எத்தகையவர்?” என்ற கேள்வியைக் குறித்து பேசுகிறது. இந்த வசனம் அவரின் பொதுவான குணத்தை விளக்குகிறது. இயேசுகிறிஸ்து தாவீதின் குடும்பத்தில் பரிசுத்த ஆவியானவரின் மூலம் பிறந்தார். அவர் மரித்தவர்களிலிருந்து உயிரோடு எழுந்தமையால் கர்த்தரின் மகனாக அங்கீகரிக்கப்பட்டார். ஆகவே நீரையும் இரத்தத்தையும் அவரை விசுவாசிப்போருக்கு கொடுத்தமையால் அவர்களின் இரட்சகரானார். இயேசுகிறிஸ்து அவரை நம்புவோருக்கு இரட்சிப்பின் கர்த்தவராகவும், இராஜாதி இராஜாவாகவும், பரலோகத்தின் நிரந்தர தலைமை ஆசாரியருமானார்.
சில கிறிஸ்தவ கொள்கைகளில் இயேசுவின் இறைத்துவம் மறுக்கப்பட்டுள்ளது. அக்கொள்கைகள் “அவர் ஒரு தலைச் சிறந்த வாலிபர்” என்று கூறுகின்றன. மேலும் புதிய கொள்கையின்படி “எல்லா மதங்களிலும் இரட்சிப்பு இருக்கிறது.” ஆகவே, சில சுதந்தரமான இறையியல் கல்லூரிகளில் பேய்கள், பெளத்தம் கத்தோலிக்கம் மற்றும் உலகின் அனைத்து மதங்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள். இந்த சுதந்தரக் கொள்கை அல்லது புதியக் கொள்கை என்றழைக்கப்படும் இது எல்லாவற்றிற்கும் மரியாதை செலுத்தவேண்டுமெனக் கூறுவதோடு, எல்லா மக்களும் ஐக்கியமாகி “ஒன்றாக” வேண்டுமெனக் கூறுகிறது.
ஆயினும், தொடக்கத்தில் கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று வேதாகமத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தக் கர்த்தர் யார்? அது இயேசுகிறிஸ்துவேயாகும். “கிறிஸ்து” என்ற பெயரின் பொருள் எண்ணெயினால் அபிஷேகிக்கப்பட்டவர் என்பதாகும். பழைய ஏற்பாட்டில் ஒரு அரசனோ தீர்க்கதரிசியோ தலைமை ஆசாரியனால் தலையில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். ஆகவே இயேசுவானவர் ராஜாதி ராஜா என்று அழைக்கப்படுகிறார். இயேசுவை கர்த்தர் இல்லை என்று மறுப்பவன் கர்த்தரின் விசுவாசியல்ல.
இந்நாட்களில், பல மத அடிப்படையில் உலகின் அனைத்து மக்களின் நம்பிக்கையும் உலகப் பொதுவான கிறிஸ்தவ சபையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் பெளத்தம் மற்றும் கன்பூசியனிசம் போன்ற உலக மதங்களின் ஒவ்வொரு கூறையும் ஒன்று சேர்த்து அதனைப் புகழ்ந்து ஆராதிக்கின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் கிறிஸ்தவ வழியில் அப்படிச் செய்கின்றனர். நல்லது. ஒரு அருமையான எல்லாம் கலந்த உணவு கிட்டியது. ஆயினும், விசுவாசத்தைப் பொறுத்தமட்டில் அதிக சுத்தமானதே மிகச் சிறந்தது.
ஆகவே, 3 மற்றும் 4 ஆம் வசனங்களிலுள்ள ‘இயேசு யார்?` என்ற கேள்விக்கு பதில் அவரே தேவ குமாரனாக தன் வல்லமையின் மூலம் மரித்தோரிலிருந்து உயிரொடெழுந்தவர் என்பதாகும். கிறிஸ்து நம் தேவனும் இரட்சகருமானார். 5 மற்றும் 6 ஆம் வசனங்கள் கர்த்தரின் மூலமாக பவுல் எப்படி அப்போஸ்தலனான் என்று கூறுகிறது. இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிப்பை அவர்கள் பெறும்படியாக நற்செய்தியைப் பிரசங்கிக்கும் சாட்சியாக அவன் மாறினான்.
 
 
அப்போஸ்தலனாகிய பவுலிடமுள்ள அதிகாரம் என்ன?
 
7 ஆம் வசனத்தில் எழுதப்பட்டுள்ளதைப் போன்று இயேசுவின் விசுவாசிகளை கர்த்தரின் பெயரால் ஆசீர்வதிக்கும் அதிகாரம் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இருந்தது. அப்போஸ்தலனின் அதிகாரம் என்பது இயேசுகிறிஸ்துவின் பெயரால் எல்லா மக்களையும் ஆசீர்வதிக்கும் ஆவிக்குரிய வல்லமை என்று பொருள்படும்.
ஆகவே, “நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” என்று பவுலினால் கூறமுடிந்தது.
இந்த ஆசீர்வதிக்கும் தன்மையைக் குறித்து சற்று அதிகமாக சிந்திக்க விரும்புகிறேன். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு மக்களை ஆசீர்வதிக்கும் தன்மை இருந்ததாக தெரிகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலய ஆராதனையை முடிக்கும்போது ஆசீர்வாதம் கூறி முடிக்கிறோம். “பரிசுத்தவான்களுக்கு இத்தகைய ஆசீர்வாதத்தைக் கொடுக்க கர்த்தர் விரும்புகிறார்.” ஆசீர்வாதத்திற்கான சரியான சொற்கள் கீழ்வருமாறு.
எண்ணாகமம் 6:22 இலிருந்து தொடங்குவோமாக. “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது ன்னவென்றால் நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது, கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.”
தலைமை ஆசாரியனான ஆரோனும் அவனுடைய மகன்களும் “நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியது” என்று அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் இஸ்ரவேலரை இப்படியாக ஆசீர்வதித்தால், வேதாகமத்தில் கூறப்பட்டது போல கர்த்தர் ஆசீர்வதிப்பார். பவுலின் அனைத்து நிருபங்களையும் நோக்கினால் அவன் “கர்த்தரின் கிருபை உங்களுடனிருப்பதாக” என்று அடிக்கடி கூறியிருப்பதை நாம் காணலாம். இது ஆசீர்வதிப்பது அவனல்ல, கர்த்தரே ஆசீர்வதிப்பவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் தனது நிருபத்தை முடிக்கும்போதெல்லாம் பரிசுத்தவான்களை ஆசீர்வதித்தான்.
கர்த்தரின் மக்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும் அதிகாரம் பவுலிடம் இருந்தது. இந்த அதிகாரம் எல்லா கிறிஸ்தவ போதகர்களுக்கும் கொடுக்கப்படவில்லை. மாறாக அது கர்த்தரின் ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. கர்த்தரின் ஊழியர்கள் உண்மையாகவே ஆசீர்வாதத்தைக் கொடுக்க விரும்பி ஆசீர்வாதம் கூறும்போது, அந்த ஆசீர்வாதத்திற்கேற்ப கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
பரலோகத்தின் அதிகாரத்தை கர்த்தர் தம் ஊழியர்களுக்கு மட்டுமின்றி மறுபடியும் பிறந்த எல்லா பரிசுத்தவான்களுக்கும் கொடுக்கிறார். கர்த்தர் கூறுகிறார் “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்.” (யோவான் 20:23) எல்லா நீதிமான்களுக்கும் கர்த்தர் இத்தகைய அதிகாரத்தை வழங்கினார். ஆகவே, ஒருவன் மறுபடியும் பிறந்த பரிசுத்தவானுடனோ அல்லது அவரின் ஊழியர்களிடமோ போரிடக்கூடாது. ஏனெனில் அது கர்த்தருடன் போராடுவதற்கு ஒத்ததாகும். ஆசீர்வதிக்கும் அதிகாரத்தையும் சபிக்கும் அதிகாரத்தையும் அவர் தம் அப்போஸ்தலர்களுக்கு கொடுத்ததோடு அவருடைய ஊழியர்களுக்கும் நீதிமான்களுக்கும் கூட இந்த அதிகாரத்தை அளித்துள்ளார்.
 
 
ஆவிக்குரிய பரிசை பரிசுத்தவான்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் அப்போஸ்தலனாகிய பவுல்
 
ரோமர் 1:8-12 ஐ வாசிப்போமாக. “உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். நான் ஜெபம் பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறதைக் குறித்து தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்கு கொடுக்கும் படிக்கும், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலையடையும் படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே, எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.”
முதலில், அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தருக்கு எதற்காக நன்றி கூறினான்? ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக அவன் கர்த்தருக்கு நன்றி கூறினான். அவர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள். அவர்கள் மூலமாக மற்ற மக்களுக்கு நற்செய்தி போதிக்கப்பட்டது.
9 ஆம் 10 ஆம் வசனத்தில் ஒருவர் இத்தகைய கேள்வியைக் கேட்கலாம். “தன்னுடைய ஊழிய பயணத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எதற்காக ரோமாபுரி செல்ல விரும்பினான்?” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அந்நேரத்தில் ரோமாபுரியில் பிரசங்கிக்கப்பட்டால், அது உலகமுழுவதும் பரவிவிடும் என்பதே அதன் காரணம். இப்போது முழு உலகமும் அமெரிக்காவை நோக்கிப் பார்ப்பதைப் போன்று, பழைய காலத்தில் ரோம் நகரமானது உலகின் மையமாக இருந்தது. “எல்லா பாதைகளும் ரோமாபுரிக்கே” என்று ஒரு கூற்று உண்டு.
அமெரிக்காவில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அநேக வேலைகளைச் செய்கிறோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியைக் குறித்து அமெரிக்காவில் நாம் பரப்பினால், அநேக மிஷினரிகள் அங்கு தோன்றி அழகிய நற்செய்தியை மற்றவர்களுக்கு போதிக்கும் வகையில் உலகம் முழுவதும் செல்வர். ஆகவே, பவுல் ரோமாபுரிக்கு செல்ல விரும்பினான்.
 
 
பவுல் கூறும் ஆவிக்குரிய ஈவு
 
10 ஆம் வசனத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது “நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்.”
நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படி என்று பவுல் கூறியதன் பொருள் என்ன? ஆவிக்குரிய வரம் என்று இங்கு குறிப்பிடப்படுவது நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். 11 ஆம் வசனத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது “உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடே கூட நானும் ஆறுதலையடையும் படிக்கும்” சில ஆவிக்குரிய வரங்களை மக்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் ஸ்திரப்படுவதோடு பவுலுக்கும் அவர்களுக்கும் உள்ள விசுவாசத்தினால் ஆறுதலடைய வேண்டுமென அவன் கூறியதற்கு காரணம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவர்களுக்கு கூறுவதனால், மக்கள் இளைப்பாறி, ஆறுதலடைந்து, ஆசீர்வாதங்களைப் பெற்று, ஒரே மாதிரியான விசுவாசம் உள்ளவர்களோடு தொடர்பு வைப்பதை பவுல் விரும்பினான்.
அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களோடு மீண்டும் சேர்ந்து ஒருவரின் விசுவாசத்தில் ஒருவர் உற்சாகப்படுத்தப் படுவோம் என்று கூறுவது அவன் ரோமாபுரி சபையில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து மீண்டும் பிரசங்கிக்க ஆவலாயிருந்தான் என்பதைக் காட்டுகிறது. இப்பொழுது, இந்த ஆலய உறுப்பினர்கள் யாவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் புரிந்துக் கொண்டு அதனை மிக உறுதியாக விசுவாசித்தபோதிலும், சில சாதாரண கிறிஸ்தவர்கள் காலம் செல்லச் செல்ல நற்செய்தியை விசுவாசிக்காதது போல் தோன்றுகிறது. இதுபோல் ரோமத் திருச்சபை புத்துணர்வை வேண்டி நின்றிருக்கலாம்.
அதனால், அப்போஸ்தலனாகிய பவுல் ஒருவருக்கொருவர் உள்ள விசுவாசத்தின் மூலம் உற்சாகப்படுத்தலாம் என்று கூறினான். குறிப்பாக, நாம் கர்த்தர் முன்பாக இளைப்பாறுதல் பெறுவதோடு நம்முடைய இருதயமும் சமாதானம்பெற முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நன்றிகள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இல்லை என்றால் நம்மால் சமாதானமாக ஔய்வெடுக்க முடியாது.
அதன் மேலும், அங்கு எழுதப்பட்டுள்ளது. “நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்.” இந்த ஆவிக்குரிய வரமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஒருவன்/ஒருத்தி விசுவாசிக்கும்போது அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதோடு கர்த்தரின் பிள்ளையுமாக முடியும்.
ஆயினும், அவர்கள் எப்படியோ இயேசுவை விசுவாசித்தபோதிலும் அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாமல் சிறந்த முறையில் வாழ்வதாலே, விசுவாசத்துடன் புகைப்பிடிப்பதையும் குடிப்பதையும், எந்த மோசமான செயல்களையும் செய்யாமல் மக்கள் வாழ்ந்தால் அதனால் அவர்களுக்கு என்ன பயன்? அவர்களுடைய செயல்களுக்கும் கர்த்தரின் நீதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கர்த்தருடைய நீதியானது மனிதர்களை விட மிகவும் உயர்ந்தது. மக்களை ஆலயத்தை நோக்கி இழுப்பது எளிது. ஆனால் அவர்களின் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு பரலோகத்தின் ஆவிக்குரிய வரங்களினால் தரிக்கப்பட்டு கர்த்தரின் பிள்ளைகளாகும் விதமாக அந்த புதிய விசுவாசிகளுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து போதிப்பது மிகவும் முக்கியமானது.
ரோமாபுரியிலுள்ள பரிசுத்தவான்கள் தன் விசுவாசத்தின் மூலமாக உற்சாகமூட்டப் படவேண்டும் என அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பினான். ஆகவே அவன் கூறினான், “உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடே கூட நானும் ஆறுதலடையும் படிக்கும்” ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் ஒவ்வொரு ஆலயத்திலும் அவர்களுக்கு விசுவாசம் உண்டாகும்படி உண்மை நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. இதனால் அவர்களால் அவன் விசுவாசத்தின் மூலமாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தில் நிலைப்பட முடிந்தது. நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியைக் குறித்தும் உண்மையில் அது என்னவென்றும் அவன் ரோமாபுரியிலுள்ள ஆலயத்தில் பிரசங்கிக்க வேண்டியிருந்தது.
இதுவே இன்றைய உலகின் நற்செய்தியாளர்களிடமிருந்து, அப்போஸ்தலனாகிய பவுலை வேறுபடுத்துகிறது. ரோம் நகர ஆலயத்திற்கு அவன் எழுதிய நிருபத்தில், ஆவிக்குரிய சில வரங்களை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் மக்கள் நிலைப்படவும், ஒருவருக்கொருவரின் விசுவாசத்தின் மூலம் மக்களும் அவனும் உற்சாகப்படுத்தப்படவும் அவன் விரும்பியதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். இதனையே இந்நாட்களின் ஆலயங்களிலுள்ள போதகர்கள் அப்போஸ்தலனாகிய பவுலிடமிருந்து கற்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் பிரசங்கித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் ஒருவரால் உண்மை சகோதரர்களை தவறானவர்களிடமிருந்து பிரித்துணர முடியும்.
இந்நாட்களில், ஆலயங்கள் புதிய மக்களை 6 மாத கால அளவிற்கு கொள்கைகளின் போதனைகளைப் பெறச் செய்து, ஒரு வருடங்களுக்குள்ளாக அவர்கள் ஞானஸ்நானம் செய்விக்கப் படுகிறார்கள். அவ்வளவுதான். அவர்களுக்கு இயேசு நிறைவேற்றிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெரியுமா தெரியாதா என்பதை பார்க்காது அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்கள் ஆலயத்தின் உறுப்பினர் ஆகிவிட்டபோதிலும், அவர்கள் கர்த்தரின் நீதியைப் பெற்ற பிள்ளைகளாக முடியவில்லை. இன்றைய ஆலயங்களின் போதகர்கள் கேட்கும் ஒன்று அவர்களுடைய புதிய உறுப்பினர்களை பத்துக்கட்டளைகளையும் அப்போஸ்தலர்களின் கொள்கைகளையும் மனப்பாடம் செய்யச் சொல்வதே. புதிய உறுப்பினர்கள் மனப்பாட பரீட்சையில் தேறிவிட்டால் அவர்கள் இவ்வாறு கேட்கப்படுகிறார்கள். “நீ குடிப்பதை நிறுத்தி விடுவாயா? புகை பிடிப்பதை விட்டுவிடுவாயா? தசமபாகத்தை ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்போகிறாயா? நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வாயா?”
ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆலயங்கள் கர்த்தரின் நீதியை விட்டுத் தூரமாகிப் போனதற்கு காரணம் என்னவெனில் அவர்கள் மனிதநீதியை விரட்டிச்செல்வதே. இந்நாட்களில், ‘ஆசியாவின் எருசலேம்` என்றழைக்கப்படும் கொரியாவில் கூட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆலயத்தில் புகழும் பெருவிழா அல்லது இசை நிகழ்ச்சி போன்ற சிறப்பு விழாக்கள் நடக்கும் போது மட்டுமே ஆலயத்திற்கு செல்லுகிற ஒரு காலம் வந்துவிட்டது. மக்கள் வந்தார்கள் என்றாலும், வாலிபர்களுக்கு கொடுக்கப்படும் சாதாரண பிரசங்கங்களில் இக்கருத்துக்கள் கூறப்படுகின்றன. ‘புகைப்பிடிக்காதே, நல்வாழ்க்கை வாழ், ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்தமானதாக ஆசரி, ஆலய வேலைக்கு உன்னை அர்ப்பணி.` இதில் கர்த்தரின் நீதியைக் குறித்து எதுவும் கூறப்படுவதில்லை.
மனிதர்கள் பாவம் செய்வதில் மிகவும் வேகமானவர்களானதாலும் பாவஞ்செய்யாமலிருப்பது உடைந்து போவதாயிருப்பதாலும், அவனோ/அவளோ கர்த்தரைச் சார்ந்திருக்க வேண்டும். ஆகவே, மக்கள் கர்த்தரின் ஆலயத்திற்குள் வரும்போது, அவர்கள் கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்ளும் விதமாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நாம் அவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும். நாம் குறைவுள்ளவர்களாயிருந்தாலும் நீயும் நானும் கர்த்தரின் நீதியினால் பாவமில்லாதவர்களாக்கப்பட்டோம் என்பதை உண்மையில் அவர்களுக்கு கூறவேண்டும்.
இதனை மனதில் வைப்பதில் நிச்சயமாக இருக்கவும். கர்த்தரின் நீதியை விசுவாசித்து அவன்/அவள் பாவமில்லாமலான பிறகே கர்த்தரின் சித்தப்படி ஒருவரால் வாழமுடியும். ஒருவன்/ஒருத்தி தன் சொந்த பிரச்சினைகள் தீர்ந்த பிறகு நற்செய்தியை பிரசங்கிக்க முடியும். நம்முடைய பாவப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னால் நாம் மற்றவர்களுக்கு நற்செய்தியை பரப்பும் வேலையைச் செய்யக்கூடாது. ஒருவன்/ஒருத்தி தன் சொந்த பாவப் பிரச்சினையைத் தீர்க்காமல் மற்றவர்களுக்கு உண்மையான நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியவே முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல் உண்மையாகவே மற்றவர்களுக்கு ஆவிக்குரிய வரங்களை பகிர்ந்தளித்ததாக கூறப்பட்டுள்ளது. பவுல் கூறிய வரமானது இக்காலத்திய கிறிஸ்தவத்தில் பெந்தேகோஸ்தே இயக்கம் கூறும் பல பாஷைகளில் பேசுதலோ அல்லது குணப்படுத்துதலோ அல்ல. அநேக கிறிஸ்தவர்கள், வித்தியாசமான அதிசயங்களான காட்சிகளைக் காணுதல், தீர்க்கதரிசனம் கூறுதல், மற்ற மொழிகளில் பேசுதல், நோய்களைக் குணமாக்குதல் ஆகியவற்றை வரங்களாக கருதுகின்றனர்.
ஆயினும், இவை பரலோகத்திலிருந்து வந்த ஆவிக்குரிய வரங்கள் அல்ல. ஜெபிக்கும் போது காட்சிகளைக் காணுவது நிச்சயமாக ஆவிக்குரிய வரம் இல்லை. ஒருவன் காட்டுத் தனமாக கத்துவது அல்லது குகையினுள் ஒருவன் மூன்று நாட்களாக தூங்க முடியாமல் அவன்/அவள் வித்தியாசமான ஒலிகளைக் கேட்கும்போது பைத்தியம் பிடித்தது போலாவது கர்த்தரின் வரம் இல்லை. ஒருவன் தன்னால் மற்ற மொழிகளில் பேச முடியும் என்று கூறிக்கொண்டு, திருகிய நாவினால் ‘லா-லா-லா-லா` என்று வித்தியாசமான வார்த்தைகளைக் கத்திக் கொண்டு நினைவின்றி தரையில் விழுவது ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் காட்சியல்ல. இது மன நோய் மருத்துமனையில் மனநோயாளி காட்டுத் தனமாக மாறுவதற்கு ஒத்தது. ஆயினும் ‘வசீகரிக்கும் எழுப்புதலாளர்கள்` என்று கூறிக்கொள்பவர்கள், தம்மால் கிறிஸ்தவர்களுக்கு மற்ற மொழிகளை எப்படிப் பேசுவது என்றும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வது எப்படி என்றும் கற்றுக்கொடுக்க முடியுமென்றும் கூறுகிறார்கள். அவர்கள் மிகவும் தவறான ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் விசுவாசம் நிச்சயமாக சரியானதல்ல.
நாம் பக்தியுடன் கர்த்தரின் ஆவிக்குரிய வேலையைச் செய்து தேவனைப் பின்பற்றினால் நம்முடைய இருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவ தண்ணீர் ஔடும். நாம் உலகச் செய்கைகளைக் குறைத்து அதற்கு பதிலாக ஆவிக்குரிய செயல்களைப் பின்பற்றினால் நம்மிருதயங்களில் பரிசுத்த ஆவியானவரின் நீர் பெருக்கெடுத்து ஔடும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம் ஆவிக்குரிய பரிசாகிய பாவ விடுதலையை கிறிஸ்தவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய ஆலயங்களின் நாற்காலிகளின் மூலமாக அநேக கிறிஸ்தவர்கள் நரகத்தை நோக்கிப் போய்க்கொண்டிக்கிறார்கள் என்று யாரோ கூறியுள்ளார். இது இன்றைய ஆலயங்கள் கர்த்தருடைய நீதியை பிரசங்கிப்பதற்கு மனித நீதியை உற்சாகப்படுத்துவதைக் குறிக்கிறது.
சகோதரர்களே, ஒருவன் ஆலயத்திற்கு ஒழுங்காகச் சென்று அதிகமான மனித நீதியை குவித்திருந்தாலும், இதன் பொருள் அத்தகைய செய்கைகளினால் ஒருவனால்/ஒருத்தியால் ஆவிக்குரிய வரத்தைப் பெறமுடியும் என்பதல்ல. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் கர்த்தரின் நீதியை நம் இருதயத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் ஆவிக்குரிய வரத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
13 இலிருந்து 17 ஆம் வசனம் வரை வாசிப்போமாக. “சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்தது போல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வரப் பலமுறை யோசனையாயிருந்தேன். ஆயினும், இது வரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. கிரேக்கருக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.”
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரி செல்ல விரும்பினான். ஆயினும் அவன் தடைச் செய்யப்பட்டிருந்ததால் அவனால் அப்படிச் செல்ல முடியவில்லை. ஆகவே, அவனின் மிஷனரி பணியின் கதவு திறப்பதற்கு ஜெபம் செய்து கேட்க வேண்டியிருந்தது. அதுபோலவே நாமும் கூட உலகம் முழுவதும் இலக்கிய ஊழியம் மூலம் நற்செய்தியை பிரசங்கிக்க ஜெபம் செய்ய வேண்டும். நாம் ஜெபிக்கும் போது மட்டுமே கர்த்தரின் இருதயம் மனதிரங்கும். கர்த்தர் நமக்காக கதவைத் திறந்து பாதையை அமைக்கும் போது மட்டுமே உலகமுழுவதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்மால் பிரசங்கிக்க முடியும்.
 
 
அனைத்து மக்களிடமும் கடன்பட்ட பவுல்
 
யாரிடம் கடன்பட்டதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான்; மேலும் அவன் 14 மற்றும் 15 ஆம் வசனங்களில் கூறும் கடன் என்பதின் பொருள் யாது? கிரேக்கர்களுக்கும் மூடர்களுக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிக்க கடன்பட்டிருப்பதாக அவன் கூறினான். ஞானிகளுக்கும் அஞ்ஞானிகளுக்கும் கூட கடனாளியானதாக அவன் மேலும் கூறினான். ஆகவே அவனால் முடிந்த மட்டும் ரோமாபுரியில் இருக்கும் இந்த மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க அவன் விரும்பினான்.
ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் ஆலயத்திற்கு நிருபம் எழுதியதற்கான காரணம் உண்மை நற்செய்தியைப் பிரசங்கிக்கவே. ரோமாபுரியின் ஆலயத்தின் உள்ளிருக்கும் மக்களின் இருதயங்களில் கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது விசுவாசத்தினால் உறுதியாக இல்லாததை அவன் கண்டதால், நற்செய்தியை ஆவிக்குரிய வரம் என்று அவன் கூறுகிறான். ஆகவே, அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்கெனவே ஆலயத்தில் உள்ளவர்களுக்கும் உலகின் எல்லா மக்களுக்கும் பிரசங்கித்திருந்தான். அவன் ஞானிகளுக்கும், அஞ்ஞானிகளுக்கும், கிரேக்கருக்கும் எல்லா மூடருக்கும் கடன்பட்டிருப்பதாகக் கூறினான்.
பவுல் எத்தகைய விதமான கடன்பட்டிருந்தான்? உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க அவன் கடன்பட்டிருந்தான். உலகின் அனைத்து மக்களிடமும் பெற்ற கடனை அடைத்துவிட வேண்டுமென அவன் வலியுறுத்தினான். அது போலவே இப்போதுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பெற்றிருக்கும் மக்களும் கூட நற்செய்தியைப் பரப்புவதற்கு கடன்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செலுத்த வேண்டிய கடன் என்னவெனில் நற்செய்தியைப் பரப்புவதே. இது காரணத்தினாலேயே இக்காலத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் முழு உலகிலும் பரப்பவேண்டும்.
சிலுவையின் இரத்தம் மட்டுமே இரட்சிப்பிற்கான எல்லாம் என்று மக்கள் தவறாக எண்ணுகிறார்கள். ஆயினும், வேதாகமம் சாட்சி கூறும் பரலோகத்தின் நற்செய்தியானது அப்போஸ்தலனாகிய பவுல் சாட்சி பகன்ற நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். ஆகவே, ரோமர் 6 ஆம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்துவுக்கு உள்ளாக தான் ஞானஸ்நானம் பெற்று அவருடன் மரித்ததாக பவுல் கூறினான். சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்த சாதாரண கிறிஸ்தவர்கள் ரோமச் சபையில் இருந்தபடியினால், இயேசு பெற்ற ஞானஸ்நானத்திற்குள் மறைந்திருக்கும் இரகசியத்தை அவர்களுக்கு பிரசங்கிக்க பவுல் விரும்பினான். அதுபோலவே, நாமும் கூட அதிக காலமாக ஆலயத்தினுள் இருந்தும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கேட்க இயலாத அவர்களுக்கு அதனைப் பிரசங்கிக்க வேண்டும்.
பாவமிருக்கிறதா இல்லையா என்று கிறிஸ்தவர்களைக் கேட்கும் போது இக்கேள்வியே பயனற்றது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் தம் தனித்தன்மையைத் தள்ளிவிடுகிறார்கள். ஆயினும் குறிப்பாக இக்கேள்வியானது பெரிதும் முக்கியமானதும் அதிகம் மதிப்புள்ளதுமாகும். பாவங்களினிமித்தம் மனிதர்கள் நரகம் செல்ல முன் குறிக்கப்பட்டவர்களாயிருந்ததால், யாரால் அவர்களிடம் இத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு பதிலளிக்க முடியும்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் மறுபடியும் பிறந்த தன்னிருதயத்தில் பாவம் இல்லாத ஒருவனால்/ஒருத்தியால் மட்டுமே இக்கேள்வியை மக்களிடம் கேட்டு அதற்கு சரியான பதிலை அவர்களுக்கு கொடுக்க முடியும். பாவிகள் முன்பு கேட்டிராத வல்லமையின் நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் நற்செய்தியை மறுபடியும் பிறந்தவர்கள் பாவிகளுக்கு பிரசங்கிப்பதன் மூலம் மட்டுமே அவர்களை மறுபடியும் பிறந்தவர்களாகச் செய்ய முடியும்.
சகோதரர்களே, ஒருவன் இயேசுவை விசுவாசித்தபோதிலும், நீர் மற்றும் பரிசுத்த ஆவியினாலே அவன் மறுபடியும் பிறக்கவில்லையென்றால் அவனால் கர்த்தரின் இராஜ்யத்தைக் காணவோ அதனுள் நுழையவோ முடியாது. ஆகவே நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் பாவிகள் பாவமன்னிப்பை பெற அனுமதிக்கும் மக்களுக்கு நன்றியுடையவர்களாக இருங்கள். அப்பொழுது நீங்கள் பெரிய ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.
 
 
பவுல் வெட்கப்படாத நற்செய்தி
 
16 ஆம் வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் வெட்கப்படாத நற்செய்தி எத்தகையது? அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். இந்த நற்செய்தியை விசுவாசிப்பவர்களை இரட்சிக்கும் கர்த்தரின் வல்லமை இதில் இருப்பதால், பவுல் இதனை “என் சுவிசேஷம்” (ரோமர் 2:16, 16:25) என்றழைப்பதுடன் அதனைக் குறித்து வெட்கப்படாமல் பெருமையடைவதாக கருதினான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவன் வெட்கப்படாததற்கு காரணம் இந்த நற்செய்தி மக்களை முற்றிலும் பாவமில்லாததாக்கி கர்த்தரிடமிருந்து மனிதர்களை பிரித்த தடையை அழித்தது.
நற்செய்தியாகிய சிலுவையின் இரத்தத்தை மட்டும் மக்கள் விசுவாசித்தால் பாவங்கள் கழுவப்படுவது சாத்தியமாகுமா? இத்தகைய விசுவாசத்தால் இதுவரைச் செய்த பாவங்களைக் கழுவுவது சாத்தியமாகும் என்பது போல் தோன்றினாலும் நம்முடைய எதிர்காலப் பாவங்களை கழுவுதல் இயலாது. ஆகவே இத்தகைய விசுவாசமுள்ளவர்கள் தினமும் மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் தம் பாவங்களைக் கழுவ முயற்சி செய்கின்றனர். அவர்கள் இருதயம் பாவங்களினால் நிறைந்திருக்கிறது எனவும் அவர்கள் பாவஞ்செய்வதை தவிர்க்க இயலாதவர்கள் என்றும் அறிக்கைச் செய்கிறார்கள். பாவத்தை தம்மில் கொண்டுள்ள இந்த கிறிஸ்தவ பாவிகளால் நற்செய்தியை மற்றவர்களுக்கு சிறப்பாக கூறமுடியாது, ஏனெனில் அவர்களிடமுள்ள ‘நற்செய்தியானது` அவர்களுக்கான ‘நல்ல செய்தி` இல்லை.
கிரேக்க மொழியில் நற்செய்தியானது ‘யூஜெலியன்` என்று அழைக்கப் படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்த நற்செய்திக்கு இவ்வுலகிலுள்ள எல்லாப் பாவங்களையும் உடைத்தெரியும் திறமை இருக்கிறது. உண்மையான நற்செய்தியானது டைனமைட்டைப் போன்றது. இந்த உண்மை நற்செய்தியே இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் ஒழித்தது. ஆகவே, பாவத்தை ஒழிக்கக்கூடிய திறமையுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த பவுலைப் போன்ற மனிதர்கள் அதனைக் குறித்து வெட்கப்படவில்லை. இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் கூட நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு வெட்கப்படுவதுபோல் தோன்றுகிறது. ஆயினும் கர்த்தரின் நீதியைப் பெற்றுள்ள மக்களே நற்செய்தியைப் பிரசங்கிக்கும்போது மரியாதையுடனும் மகிமையுடனும் நிற்க முடியும்.
அப்போஸ்தலனாகிய பவுவிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் போது சிறிதளவு வெட்கமும் இருக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் அவன் பிரசங்கித்தது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். இது ஏனெனில் அதனை நம்புவோருக்கு இந்த அழகிய நற்செய்தியானது இரட்சிப்பிற்கான கர்த்தரின் வல்லமையாகும்.
அவனுக்கோ/அவளுக்கோ யார் பிரசங்கித்தார்கள் என்பது முக்கியமில்லை, ஆனால் இந்த நற்செய்தியை விசுவாசிக்கும் ஒருவன்/ஒருத்தி பாவ நிவிர்த்தி செய்ய இந்த நற்செய்தி வல்லமையுள்ள நற்செய்தியாகவுள்ளது. இந்த நற்செய்தியை அவன்/அவள் தன் முழு இருதயத்துடன் ஏற்றுக்கொண்டால் இதனைக் கேட்பவர்களுக்கு இவ்வுலகின் அனைத்துப் பாவங்களும் முற்றிலுமாக கழுவப்பட்டுவிட்டது. ஆயினும், நற்செய்தியாகிய சிலுவை இரத்தமானது மக்களுக்கு நிறைவான இரட்சிப்பைக் கூறுவதில்லை, அது கூறுவது என்னவென்றால், அது அவர்களின் மூலப்பாவத்தை மட்டுமே அகற்றியதாகவும் அவர்களுடைய அன்றாட மீறுதல்களை தினமும் மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலமே கழுவமுடியும் என்று இது மக்களுக்கு கூறுகிறது. அது பாவ ருசியை அதனைக் கேட்பவர்களுக்கு விட்டுச் செல்கிறது.
இயேசுவானவரின் வல்லமை போதுமானதாக இல்லாததால் அவர் பாவங்களின் ஒரு பாகத்தை மட்டுந்தான் எடுத்துக் கொண்டாரா? இயேசுவிற்கு மனிதர்களைப் பற்றி நன்கு தெரியுமாகையால் அவர் எத்தகைய பாவத்தையும் விட்டுச் செல்லவில்லை. அவர் நீர், இரத்தம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக எல்லாப் பாவங்களையும் எடுத்துச் சென்றார். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றைக் கேட்டு விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நற்செய்தியானது முழுமையான இரட்சிப்பை அளிக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
ஆகவே, யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் உட்பட அனைவருக்கும் நற்செய்திக்கு ஒரேமாதிரியான வல்லமை உண்டு. நற்செய்தியை அவர்களுக்கு போதிக்கும்பொழுது இயேசுவை அவர்கள் விசுவாசிப்பதினால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஒரே மாதிரியான இரட்சிப்பை அவர்களுக்கு அனுமதிக்கிறது. மறுபுறம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர்த்து வேறு எதனையாவது யாராவது பிரசங்கித்தால், அவனோ/அவளோ கர்த்தரின் கோபத்தைப் பெறுவர். ஆகவே பவுல் கூறினான், “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” (கலாத்தியர் 1:8) அப்போஸ்தலனாகிய பவுல் அனைத்து நற்செய்திகளிலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே உண்மையானது என்று தெளிவாக கூறினான்.
ஒருவன் புற ஜாதியானோ, அல்லது ஒரு யூதனோ, அல்லது ஒருவன் இஸ்லாம், கன்பூசியனிசம், பெளத்தம், தாவோயிசம், சூரியக் கர்த்தர் என்று எதை விசுவாசித்தாலும் ஒவ்வொரு தனிப்பட்டவனும் நற்செய்தியைக் கேட்கும் ஒரு வாய்ப்பைப் பெறுகிறான். அதற்கு மேலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியானது அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவதற்கான ஒரு வாய்ப்பைத் தருகிறது. ஆகவே இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்றும் அவர் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் என்றும், நம்மை இரட்சிப்பதற்காக அவர் மனித மாமிசத்தில் உலகத்திற்கு வந்தார் என்றும் யோவானால் ஞானஸ்நானம் பெற்று நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டாரென்றும், சிலுவையில் மரித்ததன் மூலம் நம்முடையப் பாவங்களுக்கான தீர்ப்பைப் பெற்றார் என்றும் நாம் பிரசங்கிக்க வேண்டும்.
ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து வெட்கமடையவில்லை. சிலுவையை மட்டுமே குறித்த நற்செய்தியே வெட்கப்படக்கூடிய நற்செய்தியாயினும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது வெட்கப்படக் கூடிய ஒன்றேயல்ல; அது தெளிவானதும் கர்வப்படக் கூடியதும், மரியாதை உடையதுமான பெருக்கெடுத்து ஓடும் வல்லமையான நற்செய்தியாகும். இந்நற்செய்தியை விசுவாசிக்கும் யாரும், அவனோ! அவளோ கர்த்தரின் பிள்ளையாகிவிடுவதால் பரிசுத்த ஆவியானவரின் முழுமையை அவர்கள் பெறுவர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எப்பொழுதும் வெட்கப்படக் கூடிய நற்செய்தி அல்ல என்று நான் உங்களுக்கு மறுபடியும் கூறுகிறேன். ஆயினும், சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்கச் சொல்லும் நற்செய்தியானது வெட்கக்கேடானது.
கிறிஸ்தவர்களே, சிலுவையின் இரத்தத்தை மட்டுமே கூறும் நற்செய்தியை நீங்கள் பிரசங்கிக்கும் போது வெட்கப்படுகிறீர்களா? இயேசுவின் ஞானஸ்நானம் உள்ளடங்காத இரத்தத்தினை மட்டுமே கொண்ட நற்செய்தியை நீங்கள் பிரசங்கித்து விசுவாசித்தபோது நீங்கள் வெட்கப்பட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அதுபோன்ற பயனில்லாத நற்செய்தியைப் பிரசங்கித்ததால் வெட்கப்பட்டீர்கள், நீங்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கூக்குரலிடவேண்டும் அல்லது “இயேசுவை விசுவாசியுங்கள், இயேசுவை விசுவாசியுங்கள்!” என்று தெருக்களுக்கு சென்று கத்துவதற்கு முன்பாக மற்ற மொழிகளில் வெறிப்பிடித்த ஜெபங்களை ஏறெடுத்து உங்கள் உணர்ச்சிகளை நிரப்ப வேண்டியதாயிருக்கிறது.
உணர்ச்சி வெள்ளப்பிராவகம் எடுத்து ஓடும்போது ஒருவரால் இப்படிச் செய்யமுடியும், ஆனால் உணர்ச்சியில்லாத மனதுடையவனால் அப்படிச் செய்யவே முடியாது. இதனாலேயே சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்கள் ஊழியத்திற்காக தெருக்களுக்கு போகும்போது அவர்கள் இடைவிடாது சத்தமிட்டு மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறார்கள். ஒலிபெருக்கியை தம் வாயின் அருகில் வைத்துக்கொண்டு “இயேசு, பரலோகத்திற்கு, நம்பிக்கையின்மை, நரகத்திற்கு” என்ற வார்த்தைகளைக் கத்துகிறார்கள். ஆயினும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர் அருமையான மனிதனாக நற்செய்தியை கூறுகிறார்: அவருடைய வேதாகமத்தை திறந்து பிடித்துக் கொண்டு தேநீர் பருகியவாறு மற்றவருடன் பேசுகிறார்.
 
 
நற்செய்தியாகிய கர்த்தரின் நீதியைக் குறித்து என்ன கூறப்பட்டிருக்கிறது?
 
17 ஆம் வசனத்தில் கிறிஸ்துவின் நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது என்ன என்று கூறப்பட்டுள்ளது? கர்த்தரின் நற்செய்தியில் “கர்த்தரின் நீதி” வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது கூறப்பட்டுள்ளது. உண்மை நற்செய்தியில் கர்த்தரின் நீதி முழுமையாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே, விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதிமான் விசுவாசத்தினால் மட்டுமே வாழ்வான் என்றும் கூறப்பட்டுள்ளது. சிலுவையின் இரத்தத்தை மட்டுமே கூறும் நற்செய்தியில் கர்த்தரின் நீதி இல்லை.
சகோதரர்களே, ஒருவனின்/ஒருத்தியின் மூலப் பாவங்களுக்கு ஏற்கெனவே அவன்/அவள் மன்னிப்பு பெற்றிருந்தாலும் ஒருவன்/ஒருத்தி தினமும் மனந்திரும்பி தம் அன்றாடப் பாவங்களுக்காக ஜெபிக்க வேண்டுமென கூறப்பட்டிருப்பதோடு, ஒருவன் படிப்படியாக பரிசுத்தமாகி இறுதியில் முழுமையான நீதிமானாவான் என்ற இக்கூற்றுகளில் கர்த்தரின் நீதி உள்ளடங்கியுள்ளதா? இது கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒன்றல்ல. கர்த்தருடைய நீதியை வெளிப்படுத்தும் ஒன்று முழுமையான ஒன்று. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது தொடக்கத்திலிருந்து முடிவு வரை சரியான நற்செய்தியைப் பற்றி பேசுகிறது.
உங்களுடைய வெட்கக்கேடான பக்கத்தை மறைக்கும்படி ஒவ்வொரு வாரமோ அல்லது மாதமோ அத்திமர இலைகளினால் புதிய ஆடைகளைச் செய்வதைப் போன்று, ஒவ்வொரு நாளும் நீங்கள் பாவம் செய்வதால் தினமும் நீங்கள் மனம் வருந்தி ஜெபிக்கிறீர்கள். அன்றாடம் மனம் வருந்தி ஜெபிக்கும் ஒருவன் மீண்டும் மீண்டும் பாவியாவதானது அத்திமர இலைகளினால் அவனின்/அவளின் வெட்கக்கேடான உடம்பை மறைப்பதைப் போன்றது. சிலுவையின் இரத்ததினால் மட்டுமே ஆன நற்செய்தியை விசுவாசிப்பவர்களின் மத வாழ்வு இத்தகையதே. கர்த்தர் இலவசமாக கொடுத்த தோலாடையை அணிய விரும்பாத முட்டாள்களான அவர்கள், அத்திமர இலைகளினாலான மறைப்புகளை அணிவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் விளைவே இயேசுவின் சிலுவை இரத்தமாகும், நம்முடையப் பாவங்களை இயேசு தன் மீது எடுத்துக்கொண்டது சிலுவையில் இரத்தம் சிந்தியதன் மூலம் அல்ல. அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, உலகின் எல்லா பாவங்களையும் சுமந்து கொண்டு சிலுவைக்கு வந்து அந்த உலகின் பாவங்களுக்காக கிரயம் செலுத்துவதற்காக மரித்தார், ஆகவே சிலுவையானது அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் விளைவாகும். இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம் பாவங்களை ஏற்றுக்கொண்டதால், சிலுவையில் அவர் இரத்தம் சிந்தியது நம் எல்லாப் பாவங்களுக்கும் கிரயஞ்செலுத்த அவர் செய்த கடைசி செயலாகும். அவர் ஞானஸ்நானம் செய்யப்பட்டதால் சிலுவையில் அவர் பாவங்களின் எல்லா சாபங்களையும் பெற்றுக்கொண்டார்.
அப்படியானால் கர்த்தரின் நீதியை நாம் பெற்றுக்கொள்வது எப்படி? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிப்பதன் மூலம் அதனை நாம் பெற்றுக்கொள்ளலாம். “அப்படியானால் நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் விசுவாசியா?” என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். அப்பொழுது உடனடியாக இந்த கேள்விக்கு தெளிவாக “ஆமாம்” என்று என்னால் பதிலளிக்க முடியும். கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான இரகசியம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதே.
இதற்கான காரணம் என்னவெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே உண்மையானதும் அதுவே கர்த்தரின் அன்பையும் அவரின் நீதியையும் வெளிப் படுத்துவதுமாய் இருக்கிறது. மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தர் மனிதர்களுக்கு இலவசமாய்க் கொடுத்த பாவமன்னிப்பாகும், இதுவே அவரின் பிள்ளைகளாகும் வழியாகவும், பரிசுத்த ஆவியானவரை ஒருவன் பெற்றுக்கொள்ளச் செய்யும் அழிவில்லாத வாழ்வைப் பெறும் ஆசீர்வாதமாகவும் உலகின் ஆவிக்குரிய மற்றும் உலக சம்பந்தமான ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் தான் பிரசங்கித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் கர்த்தரின் நீதி முற்றிலும் விளங்கிற்று என்று கூறினான். ஆகவே, கர்த்தரின் நீதியைக் குறித்து எதுவும் தெரியாமல் மனித நீதியை பெரிதாக காட்டுவது கர்த்தருக்கு முன் பாவம் செய்வதாகும். அதற்கு மேலும், சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து கர்த்தரின் நீதியை உள்ளடக்காமல் இருந்தால் அந்த நற்செய்தி தவறானதாகும்.
கர்த்தரின் நீதியானது அவர் கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறிக்கிறது. பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் ஜோடியாக சேர்ந்து நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கிறது. பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டை தயார் செய்கிறது. புதிய ஏற்பாடானது பழைய ஏற்பாட்டில் உள்ளடக்கியுள்ள வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறது. அவருடைய நீதியானது முற்றிலும் வெளிப்பட்ட உண்மை நற்செய்தியை நமக்கு கொடுத்ததன் மூலம் கர்த்தர் நம்மை உலகின் பாவங்களிலிருந்து இரட்சித்தார். இப்படியாக அவர் மனிதர்களை எல்லாப் பாவத்திலிருந்தும் இரட்சித்தார்.
இப்பொழுது, முழு உலகமும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நோக்கித் திரும்பவேண்டும். மக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் ஒரே நற்செய்தியானது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும். சகோதரர்களே, முழு உலகமும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குத் திரும்பவேண்டும். கர்த்தரின் நீதியை உள்ளடக்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு அவர்கள் திரும்ப வேண்டும்.
இதற்கு காரணமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் ஒரே உண்மையாகும். கர்த்தருடைய நீதியை உள்ளடக்கிய நற்செய்தியாலேயே நம்மை இரட்சித்து, நம்மை பாவமற்றவர்களாகச் செய்து, கர்த்தரின் பிள்ளைகளாக நம்மை பாவமற்றவர்களாகச் செய்து, கர்த்தரின் பிள்ளைகளாக நம்மை மாற்ற முடியும். அதற்கு மேலும், நம்முடைய இருதயத்திற்குள் உள்ள பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் பிள்ளைகளை பாதுகாப்பதோடு, இந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபித்து, நம்மை ஆசீர்வதித்து, நம்முடன் எப்போதும் தங்கியிருந்து நமக்கு பரிசாக அழிவில்லாத வாழ்வையும் தருகிறார். இந்த நற்செய்தியை திரும்பிக் கூட பார்க்காத அநேக மக்கள் இருக்கின்றனர் என்பதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து தெளிவாக புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவேண்டும். இயேசு மிக அமைதியானவரானபடியால் அவர் யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானமானது ஏதோ ஒன்றல்ல. அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதற்கான காரணம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொள்ளவே. ஸ்திரீகளுக்குள்ளே பிறந்தவர்களில் சிறந்தவனான யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது தன் கைகளை இயேசுவின் தலைமீது வைத்தான். இது பழைய ஏற்பாட்டில் தலைமை ஆசாரியன் களங்கமில்லாத பலி மிருகத்தின் தலை மீது கைவைத்தமைக்கு சமமானதாகும் (லேவியராகமம் 16:21). இயேசுவின் சிலுவை மரணமானது பாவங்களை அவர் தன் சரீரத்தில் சுமந்ததன் விளைவாகும். இது பலிமிருகமானது கைவைத்தலுக்குப் பிறகு அப்பலியானது இரத்தம் சிந்தி மரிப்பதற்குச் சமமாகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியானது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அசல் நற்செய்தியில் ஒரு பகுதியைவிட்டுவிட்டு மற்ற நற்செய்திகளைப் பிரசங்கித்தால் அது தவறான விசுவாசமாகும். இயேசு இவ்வுலகிற்கு வந்த பிறகு முதன் முதலில் செய்த முக்கியமான காரியமானது யோவானால் ஞானஸ்நானம் பெற்றதே. கிறிஸ்துவின் ஞானஸ்நானம் வெறும் குறியீடு என்று நீங்கள் நம்புவதோ, இயேசு தாழ்மையானவரானபடியால் ஞானஸ்நானம் பெற்றார் என்று நீங்கள் நினைப்பதோ தவறானதாகும்.
வேதப்புரட்டன் எத்தகையவன்? தீத்து 3:10 இல் எழுதப்பட்டுள்ளது, “வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்ன பின்பு அவனை விட்டுவிலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத் தீர்புடையவனாய் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.” பிரிவினைக்காரன் தனக்கு தானே தண்டனை அளிப்பவன். தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளுபவர் அவனிடம்/ அவளிடம் பாவமிருக்கிறது என்று அறிக்கைச் செய்கிறார்கள். ஆகவே, “நானொரு பாவி” என்று கூறும் கிறிஸ்தவன் ஒருவன் பிரிவினைக்காரன், அதாவது அவனொரு வேதப்புரட்டன். “வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்ன பின்பு அவனைவிட்டு விலகு” என்று எழுதப்பட்டுள்ளது.
இத்தகைய கிறிஸ்தவன் வளைந்து அழுகிப் போனவனாயிருப்பதினாலே பாவமில்லாத பரிசுத்தவான் இத்தகைய வேதப்புரட்டனின் அருகில் செல்லக்கூடாது. அவனே தன்னைத்தானே தண்டனைக்குள்ளாக்கிக் கொள்பவன் ஏனெனில் அவனுடைய சொந்த விசுவாசமும் மதவாழ்வும் அழுகிப் போனவை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமில்லாதவனாக இருக்க விரும்பாதவனாகவும், கர்த்தருக்கு முன்பு முழு இரட்சிப்பை புறம்பேத் தள்ளிவிட்டு, தொடர்ந்து பாவஞ்செய்துக்கொண்டு, அவன்/அவள் தான் இன்னும் பாவிகளென்று கூறிக்கொண்டிருப்பவர்கள், கர்த்தருக்கு முன்பு மன்னிக்கப்பட முடியாத பாவத்தை செய்பவராவார். அவனோ/அவளோ இயேசுவை விசுவாசித்தபோதிலும் தன்னைத் தானே ஆக்கினைக்குள்ளாக்குபவர் அவனிடம்/அவளிடம் பாவமிருப்பதால் அவனோ/அவளோ தன்னை ஒரு பாவி என்றழைக்கின்றனர். அவர்கள் நரகத்தை நோக்கிச் செல்லும் வேதப்புரட்டர்கள்.
‘இது என்னுடைய தவறு` என்று கூறும் ஸ்டிக்கர்களை சில கிறிஸ்தவர்கள் தம் கார்களின் பின்புறம் ஒட்டியுள்ளனர். இதனை மனித கண்களால் பார்க்கும் போது நல்ல வகையான கூற்றுபோல் தெரிந்தாலும், உண்மையில், அது ஒருவனின் சொந்த தவறு என்று கூறுகிறது, இப்படி நரகத்திற்கு செல்வது போன்றவை பிரிவினைக்காரனுடையதாவதால், சாபத்தைப் பெறுவது ஒருவனின் சொந்த தவறாகிறது. ‘இது என்னுடைய தவறு` என்று புரியாதவிதமாக கூறுவது அவன் நல்ல முறையில் வாழப்போகிறான் என்று கூறுவதாகும். ஆயினும், அத்தகைய கூற்றுகளை ஆதரிப்போர், அவனால்/அவளால் நல்ல முறையில் வாழ முடியும் என்று எண்ணுவோராவர். இது மனிதர்களை மீறுதல்களின் வித்து என்று கூறும் கர்த்தரின் வார்த்தைகளுக்கு சவால் விடுவதாகும். இத்தகைய மனிதச் சிந்தனைகளை பின்பற்றி ஔடுவோர் அவற்றிற்காக எல்லா விதமான சாபங்களையும் பெறுவர்.
ஏதேனும் ஒரு காரணத்தைப் பற்றி உங்களில் யாராவது சுய தண்டனைப் பெற்றதுண்டா? அப்படியானால் நீங்கள் என்னுடைய ரோமர் 3 ஆம் அதிகாரத்தைக் குறித்த பிரசங்கத்தை கவனமாக கேட்கவேண்டும். அது பாவக்கிரயம் செலுத்துவது, சரியெனக் காட்டும் தத்துவத்தைக் குறிக்கவில்லை என்று அறிவிக்கிறது. ரோமர் இதனைக் குறித்து விபரமாக கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலுக்கு என்றாவது ஒரு நாள் மக்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியுமாகையால் அவன் முன்பே பாவமில்லாதவனாவது, உண்மையிலே பாவமில்லாதவனாவது என்றும் பாவியை நீதிமான் என்று கூறக்கூடாது என்றும் கூறினான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே உண்மையானது எனவும் அவன் தெளிவாக கூறினான். ஆகவே, சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்போர் ரோமரை வாசிக்கும்போது அதனை அறியாதவர்களாகவும் வாயடைத்துப் போவதும் இயற்கையே.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபமானது அத்தனைச் சிறந்த வேதவசனமாகும் ஏனெனில் அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து சாட்சி கூறுகிறது. அவனோ/அவளோ விசுவாசத்திற்குள் வருவதற்கு முன்பே பாவியாயிருந்தாலும் இயேசுவை விசுவாசித்தப் பிறகு நீதிமானாக வேண்டும். ஒருவன் தன்னுடைய இருதயத்தில் எந்தப் பாவங்களும் இல்லாதவனானால் அவன் உண்மையிலேயே நீதிமானாகிறான். இப்படியாக ஒருவன் சரியான விசுவாசத்தைப் பெறுகிறான்.
இந்த நொடியில் கூட மக்களின் விசுவாசம் முழுமையானதாக இல்லாவிட்டாலும், மறுபடியும் பிறந்த சபையின் மூலம் நீர் மற்றும் ஆவிக்கான வார்த்தைகளுக்கு அவர்கள் செவி கொடுத்தால் அவர்கள் விசுவாசம் முழுமையாகும். இந்த பிரசங்கங்களின் மூலமாக தயவு செய்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து உண்மை வார்த்தைகளை நிச்சயம் செய்வீர்களாக.
கர்த்தர் நம்மை பரலோகத்தின் செல்வங்களினால் அரவணைப்பார் என்று நான் நம்புகிறேன்.