(ரோமர் 1:16-17)
“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது. விசுவாசத்தினால் உண்டாகும் தேவ நீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.”
கர்த்தரின் நீதியை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்
அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்து வெட்கப்படவில்லை. அவன் மிகவும் உறுதியாக நற்செய்தியைக் கூறினான். ஆயினும், அநேக மக்கள் இயேசுவை விசுவாசித்தாலும் அவர்கள் அழுதுகொண்டிருப்பதற்கு காரணம் அவர்களுடையப் பாவங்களே. அது அவர்கள் கர்த்தரின் நீதியை ஒத்துக்கொள்வதில் காட்டும் அறிவின்மையினால் ஆகும். நம்முடைய நீதியை விட்டுவிட்ட்டு கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதினால் நாம் இரட்சிக்கப்படுவோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியைக் குறித்து வெட்கப்படாதது ஏன்? முதலாவது அதில் கர்த்தரின் நீதி வெளிப்பட்டிருப்பதே.
நற்செய்தியானது ‘யூகெல்லியன்` என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படுகிறது, இதன் பொருள் ‘நல்ல செய்தி` என்பதாகும். இயேசுகிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது இரவில் தம் மந்தைகளைக் காவல் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு தேவதூதன் தோன்றி “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” (லூக்கா 2:14) என்று கூறினார்கள். அது ஒரு நல்லச் செய்தி ‘சமாதானம் மனுஷர்மேல் பிரியம்` கர்த்தரின் நற்செய்தியானது நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்ததுடன் உலகின் பாவங்களையும் கழுவிப்போட்டது. இயேசு தம் அனைத்துப் பாவங்களையும் கழுவினார். சானிக்குவியலில் புழுக்களைப் போல் நெளிந்து சேற்றில் பாவம் செய்துக் கொண்டிருந்தவர்களின் பாவங்களை இயேசு தாமே கழுவினார்.
முதன் முதலாக, தேவநீதி நற்செய்தியில் வெளிப்பட்டிருப்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவிய நற்செய்தியில் கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கர்த்தருடைய நீதியானது நம்மை பரிசுத்தவான்களாகவும் நீதிமான்களாகவும் அனுமதிக்கிறது. அது நம்மை அழிவில்லாத வாழ்வைப் பெறவும் பாவமில்லாதவர்களாகவும் அனுமதித்தது.
மனிதர்களின் நீதி என்ன? நாம் கர்வமடையும்படி எதுவும் நம்மிடமிருந்தால் கர்த்தரின் முன் நாம் அதனை காட்டிக்கொள்கிறோம். நல்லவற்றைச் செய்து ஒருவன் தன் சொந்த பெருமைகளைக் குவிப்பது மனித நீதியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆயினும், இயேசுவின் நீதி செயல்புரிந்து நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்து நற்செய்தியில் கர்த்தரின் நீதி வெளிப்பட அனுமதித்தது. இதுவே கர்த்தரின் நீதியாகும்.
இந்த நாட்களில், கர்த்தரின் நீதியைத் தெரியாமலேயே அநேக கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர், “இயேசுவை விசுவாசியுங்கள் அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்பட்டு செல்வமுடையவராவீர்கள்.” ஆயினும், இவையெல்லாம் கர்த்தரின் நீதியாகிய நற்செய்தியின் போதனை அல்ல. நற்செய்தியானது மற்றெல்லாவற்றைவிடவும் நன்கு பிரபலமானதாக இருந்தாலும், அநேக மக்கள் அதனைக் குறித்து அறிந்து அதனைப் புரிந்துக் கொள்ளாதவர்களாயுள்ளனர். வேதாகமே மிகவும் அதிகம் விற்கும் நூல் என்றாலும் மக்களுக்கு அதிலுள்ளவை சரியாக தெரியாது என்பதற்கு இது ஒத்ததாகும். இவ்வுலகில் மிகவும் விலையேறப்பெற்றதும் அதிக லாபமானதும் எதுவென்றால், அது கர்த்தர் நமக்கு கொடுத்த நற்செய்தியேயாகும்.
“தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது” கர்த்தருடைய நீதியானது பாலைவனச் சோலைப் போன்றது. அநேகப் பாவங்களை செய்த அந்தப் பாவிகளிடத்தில் இயேசு வந்து அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார். ஆயினும் மக்கள் தம் சொந்த நீதியை நிலைநிறுத்த முயலுகையில், உலகின் பாவங்களைக் கழுவிப்போட்ட அவர் அளித்த நீதியின் வரத்தைப் புறக்கணித்தனர்.
மக்கள் தம்முடைய சொந்த செயல்களின் மூலம் (ஆராதனை, அர்ப்பணித்தல், உற்சாகம், காணிக்கை, மனம் வருந்தி ஜெபித்தல், உபவாசம் ஜெபம், ஔய்வு நாளை ஆசரித்தல், கர்த்தரின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்க முயற்சித்தல்) ஒவ்வொன்றையும் செய்து, கர்த்தரின் வரத்தை புறக்கணிப்பவர்கள் அவரின் நீதியைப் புறக்கணிப்பவர்களாவர். ஒருவன் தன்னுடைய சொந்த நீதியை விட்டுவிடும்போதே கர்த்தரின் நீதியை அவனால் பெறமுடியும்.
அவர்கள் அத்திமர இலைகளை ஒன்றாகத் தைத்து தமக்கு ஆடைகளை செய்துக் கொண்டார்கள்
ஆதியாகமம் 3:21 இல் எழுதப்பட்டுள்ளது, “தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.”
முதல் மனிதனாகிய ஆதாம் சாத்தானின் தந்திரத்திற்குள் விழுந்து கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான். அவர்கள் பாவம் செய்தபிறகு உடனடியாக செய்த காரியம் என்னவெனில் அத்திமர இலைகளைத் தைத்து தமக்கு ஆடைகளை உருவாக்கியதே, அத்திமர இலைகளினால் நெய்யப்பட்ட ஆடையானது தோலினால், உருவாக்கப்பட்ட ஆடைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. இதுவே ‘மனிதனின் நீதிக்கும்` ‘கர்த்தரின் நீதிக்கும்` உள்ள வேறுபாடு. ஆதியாகமம் 3:7 கூறுகிறது. “அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக் கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.” முள்ளங்கி இலைகளை நீங்கள் பின்னியதுண்டா? கொரியர்களாகிய நாம் முள்ளங்கியிலிருந்து இலைகளைத் துண்டித்து அவற்றை வைக்கோலினால் தைத்து காய வைப்போம். பனிக்காலத்தில் அரைத்த பீன்சுடன் அதனைச் சேர்த்து சமைப்போம். அது மிகவும் சுவையானது!
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு ஆடைகள் தயாரிப்பதற்காக அத்திமர இலைகளைப் பின்னினார்கள். இது போன்றச் செய்கைகள் - நற்செயல்கள், சுய சோதனை, சுய பலி - இவையெல்லாம் மனிதநீதியை உருவாக்குகின்றன. அவர்கள் அத்திமர இலைகளினால் தமக்குச் சொந்தமாக ஆடைகளைத் தயாரித்தது கர்த்தருக்கு முன்பு தம் பாவங்களை நற்செயல்களால் மறைக்க முயலும் பாவக்கிரயத்தைக் காட்டுகிறது. ஒருவனின் நீதியைப் பின்னுவது - ஒருவனின் அர்ப்பணம், சுயகாணிக்கை, சுய சோதனைகள், சேவைகள், மனம் வருந்தி ஜெபித்தல் ஆகியவை மூலம் ஆடை செய்து, ஒருவனின் மனதிலுள்ள பாவங்களை அதனால் மூடுவது ‘விபசாரமாகும்` இது கர்த்தருக்கு முன் பெருமைப் பாராட்டுவதைச் சேர்க்கிறது.
ஆடை செய்வதற்காக அத்திமர இலைகளை ஒன்றாக தைப்பதின் மூலமாக கர்த்தருக்கு முன்னதாக நம் இருதயங்களில் உள்ள பாவங்களை மறைக்க முடியுமா? நம்முடைய நற்செயல்களினால் நம்முடைய பாவங்களை நம்மால் மறைக்க முடியுமா? முடியாது. ஒரு நாளிலேயே இலைகளை விழத்தொடங்கும், மூன்றாவது நாளிலே, அனைத்து இலைகளும் விழுந்துவிடும். இலைகளிலிருந்து செய்யப்படும் ஆடைகள் வெகுகாலத்திற்கு இருக்காது. அத்திமர இலைகளை ஒன்றாக தைத்து ஆடைகளைத் தயாரிக்கிறவர்களால், அதாவது, தம்முடைய சொந்த செயல்களினால் கர்த்தருக்கு நன்றாக ஊழியம் செய்வதின் மூலமாக நீதிமான்களாக இருக்க முயற்சி செய்கிறவர்களால், பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது. நம்முடைய சொந்த செயல்களுடைய நீதிகளினால் பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது.
ஆதாமும் ஏவாளும் அத்தி இலைகளினால் ஆடைகள் செய்து அதனில் மறைந்து கொள்ள முயலும் போது, கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டார். “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” தோட்டத்தின் மரங்களில் மறைந்து கொண்டு அவன் கூறினான், “எனக்கு பயமாக இருக்கிறது, ஏனெனில் நான் நிர்வாணமாக இருக்கிறேன்; என்னை நானே மறைத்துக் கொண்டேன்.” பாவமுள்ள மனிதன் மரங்களுக்கு ஊடாக மறைந்து கொள்ள முயல்கிறான். வேதாகமத்தில் மரங்கள் பொதுவாக மக்களைக் குறிக்கின்றன. இருதயத்தில் பாவமுள்ள அவனோ/அவளோ மனிதர்களுக்கிடையே அவனை/அவளை மறைத்துக்கொள்ள முயலுகின்றனர். அவனும்/அவளும் மிகவும் பின்னால் இல்லாமல் நடுவில் உள்ள சீட்டில் உட்காரவோ அல்லது அதிக மக்கள் குழுமும் ஆலயத்தின் முற்பகுதியில் உட்காரவோ விரும்புகிறார்கள். ஏன்? ஏனெனில் அவனோ/அவளோ மனிதர்களுக்கிடையே அவனை/அவளை மறைத்துக் கொள்ள முயலுகின்றனர்.
ஆயினும், அவனாலோ/அவளாலோ கர்த்தருக்கு முன்பாக, அவனின்/அவளின் பாவத்தை மறைக்க முடியாது. அவனும்/அவளும் அவனுடைய/அவளுடைய சொந்த நீதியை விட்டுவிட்டு தேவனுடைய நீதியை விசுவாசிப்பதால் அவனுடைய/அவளுடைய பாவங்கள் மன்னிக்கப் படவேண்டும். மேலோட்டமான விசுவாசமுள்ளவர்களும் உண்மையை விசுவாசிக்காதவர்களும் கூட பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க விரும்புகிறார்கள், அவர்கள் தம்மை தம்மைப் போன்றவர்களுக்கிடையில் மறைத்துக் கொண்டுள்ளார்கள், தம் நற்செயல்களினால் தம் பாவங்களை மறைக்க முயல்பவர்களுடன் அவர்களும் நரகத்தில் முடிவடைவார்கள். கர்த்தருக்கு முன்பாக தாம் பாவிகள் என்று வெளிப்படுத்தி கர்த்தருக்கு தம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
கர்த்தர் அத்தி இலைகளினால் ஆடைகள் தயாரித்த ஆதாமிடம் கேட்டார், “நீ ஏன் பழக்கத்தை எடுத்தாய்? உன்னைச் சாப்பிடச் செய்தது யார்?” “ஓ, கர்த்தரே நீ என்னுடன் இருக்கும்படியாக கொடுத்த பெண் அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன்” “ஏவாளே நீ ஏன் அப்படிச் செய்தாய்?” “பாம்பு என்னை மோசம் செய்தது, ஆகவே நான் சாப்பிட்டேன்.” ஆகவே தேவராகிய கர்த்தர் பாம்பை நோக்கிக் கூறினார் “நீ அத்தகைய ஒரு காரியத்தைச் செய்ததால், நீ மந்தைகளின் மேல் சபிக்கப்பட்டாய், வெளிகளிலுள்ள எல்லா மிருகங்களின் மேலும் நீ சபிக்கப்பட்டாய்; உன் வயிறினால் ஊர்ந்து செல்வாயாக, உன் வாழ்நாள் முழுவதும் மண்ணைத் தின்பாய்” என்றார். அதனாலேயே பாம்புகள் வயிற்றினால் ஊர்ந்துச் செல்லுகின்றன. மீண்டும் கர்த்தர் ஆதாமிடமும் ஏவாளிடமும் கூறினார், “நீங்களும் கூட பாவம் செய்தீர்கள். உங்களை மோசம் செய்து பாவம் செய்யப் பண்ணியவர்களும், உங்களைப் பாவம் பண்ணச் செய்த சாட்டைக்காரர்களும் அதேமாதிரியான பாவிகளே.” இந்நாட்களில் கள்ளத்தீர்க்க தரிசிகள் பொய் நற்செய்திகளை “அக்கினையைப் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறி பிரசங்கிக்கிறார்கள். அவர்களால் வஞ்சிக்கப் படுபவர்களும் அந்தக் கள்ளத் தீர்க்கதரிசிகளும் ஒரே மாதிரியாகவே பாவிக்கப்படுவர். அவர்கள் நரகம் செல்வர்.
தேவன் ஆதாமிற்கும் அவன் மனைவிக்கும் தோலில் ஆடையை உருவாக்கினார்
கர்த்தர் நினைத்தார் “சாத்தானால் மோசஞ்செய்யப்பட்டு பாவஞ்செய்த ஆதாமையும் ஏவாளையும் அப்படியே அவர்கள் இருக்கும் விதமாக விட்டுவிடமாட்டேன். நான் ஏற்கெனவே மனிதனை என்னுடைய சாயலில் உருவாக்கி அவர்களை என்னுடைய குமாரராக்கத் தீர்மானித்தேன், ஆகவே நான் அவர்களை இரட்சித்து என் திட்டத்தை நிறைவேற்றுவேன்.” இத்திட்டம் கர்த்தரிடமிருந்தது. ஆகவே கர்த்தர் அவர்களின் பாவங்களை ஒரு மிருகத்தின் மீது செலுத்தி, அதனைக் கொன்று, அதன் தோலை உரித்து அதினால் ஒரு ஆடையைத் தயாரித்து அந்த ஆடையினால் ஆதாமை ஏவாளையும் தரிப்பித்தார். அதனை நம் இரட்சிப்பிற்கான அடையாளமாகச் செய்தார். குறிப்பாக அத்தி இலையில் செய்யப்பட்ட இலை உடையானது ஒரு நாள் கூட இருக்காது. அதனை மீண்டும் மீண்டும் பழுது பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் அழிவில்லாத வாழ்வினால் தரிப்பித்தார், “ஆதாமே ஏவாளே, வாருங்கள், நான் புதிதாக விலங்கின் தோலிலிருந்து ஒரு ஆடையைச் செய்தேன். அதனைத் தரித்திருங்கள். இந்த தோலானது உங்களுக்காக மரித்த விலங்கின் தோலாகும்.” ஆதாமிற்கும் ஏவாளுக்கும் புதிய வாழ்க்கையைக் கொடுக்கும் விதமாக கர்த்தரின் நீதியால் ஆசீர்வதிக்கப்பட்ட தோலாடையின் மூலமாக தேவன் ஆதாமையும் ஏவாளையும் தரிப்பித்தார். கர்த்தர் தம் விசுவாசிகளை அவருடைய நீதியின் இரட்சிப்பினால் தரிப்பித்தது போல் தேவனாகிய கர்த்தர் ஆதாமிற்கும் அவன் மனைவிக்கும் தோலினால் ஆடைச் செய்து அதினால் அவர்களைத் தரிப்பித்தார்.
ஆயினும், அத்தி இலைகளினால் செய்யப்பட்ட இலை ஆடையான மனிதர்களின் இரட்சிப்பானது கர்த்தரின் இரட்சிப்பிலிருந்து அதிக தொலைவிலுள்ளது. கர்த்தர் நம்மை தோலாடையால் உடுத்துவித்தார், அதுவே கர்த்தரின் நீதியாகும். அவரின் மாமிசத்தையும் இரத்தத்தையும் நமக்காகக் கொடுத்து கர்த்தருடைய நீதியினால் தேவன் பாவக்கிரயத்தை உடுத்துவித்தார். நம்முடைய இடத்திலிருந்து எல்லாத் தீர்ப்பையும் பெற்றுக்கொள்ளும் விதமாக அவர் தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்காக சிலுவையில் அறையப்பட்டார். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலமாக கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிக்கும்போது அவர் நம்மை பாவமன்னிப்பு பெறச் செய்கிறார். பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் நற்செய்தி இதுவே.
கர்த்தரின் நீதியைப் புறக்கணித்து இந்த உலகில் தம் சொந்த நீதியை நிலைநாட்ட முயற்சிக்கும் அநேக மக்கள் உள்ளனர். அவர்கள் தம்முடைய சொந்த நீதியை விட்டுவிடவேண்டும். ரோமர் 10:1-4 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்து சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. எப்படியென்றால் அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்படியாதிருக்கிறார்கள். விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாக கிறிஸ்து நியாயப் பிரமானத்தின் முடிவாயிருக்கிறார்.”
இஸ்ரவேலர்கள் கர்த்தரின் நீதியை விட்டுவிட்டு தம் சொந்த நீதியை நிலைநிறுத்துவதற்காக தம் சட்டங்களை வலுயுறுத்தினார்கள். பாவங்களைக் குறித்த அறிவு மனிதனுக்கு உண்டாகும் படி கர்த்தர் அவனுக்குச் சட்டத்தைக் கொடுத்தார். பத்துக்கட்டளைகள் மூலமாக மக்களுக்கு பாவத்தைக் குறித்த அறிவு இருக்கிறது, ஆசரிப்புக் கூடாரத்தின் பலியிடும் முறையின் மூலமாக, அவரின் நீதியின் இரட்சிப்பை விசுவாசிக்கும்போது அவர்கள் பாவமன்னிப்பு பெற்றார்கள். ஆகவே, ஆசரிப்புக் கூடாரத்தின் பலி காணிக்கையானது புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே கர்த்தரின் பிரதிநிதி என்பதைக் குறிக்கிறது. ஆயினும், இஸ்ரவேலர்களுக்கு கர்த்தரின் நீதியைக் குறித்து தெரியாது.
இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்?
இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவும் விதமாக இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். கிறிஸ்து தாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு சற்று முன் யோவான் ஸ்நானனிடம் கூறினார் “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.” (மத்தேயு 3:15) இதனாலேயே கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார். மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவும் விதமாக அவர் ஞானஸ்நானம் பெற்றார். ஞானஸ்நானம் பெற்றதால், அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) அவர் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு பாவக்கிரயமாக சிலுவையில் அறையப்பட்டார். ஆயினும், இயேசு பாவிகளின் நிறைவான இரட்சகரானார் என்பதை ஏற்றுக்கொள்ள இஸ்ரவேலர்கள் மறுத்தனர்.
இஸ்ரவேலர்கள் தம்மை கர்த்தரின் நீதிக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. ஆனால் அவரை விசுவாசிப்போருக்கு இயேசுவே நீதியின் முடிவாயிருக்கிறார். சட்டத்தின் முடிவு எனபது இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார் என்று பொருள்படுகிறது. எல்லா விசுவாசிகளும் பரிசுத்தமாகும் பொருட்டு கிறிஸ்து சட்டத்தின் சாபமாக தீர்க்கப்பட்டார். அவர் சட்டத்தின் சாபத்தை முடிவிற்கு கொண்டு வந்தார். இயேசு மனிதர்களை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவித்தார். மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களையும் கழுவுவதற்காக இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக்கொள்ள யோவானால் ஞானஸ்நானம் பெற தம் சரீரத்தை யோவானுக்கு கொடுத்து, அவன் உலகின் அனைத்துப் பாவங்களையும் அவர் சரீரத்திற்குள் சுமத்தியதன் மூலம், அதனை ஏற்றுகொண்டார். இப்படியாக அவர் எல்லா மக்களையும் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார். அவர் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவை மரணம் மூலமும் உலகின் பாவங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் சட்டத்தின் சாபத்தின் தீர்ப்பை முடிவு செய்தார். அவர் நம்மை தீர்ப்பிலிருந்தும் சட்டத்தின் சாபத்திலிருந்தும் சிறப்பாக இரட்சித்தார்.
இதுவே சட்டத்தின் முடிவும் கர்த்தரின் இரட்சிப்பின் நீதியின் தொடக்கமுமாகும். கிறிஸ்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று, உலகின் பாவங்களைச் சுமந்து கொண்டு சிலுவையை நோக்கிச் சென்றார். இயேசுவின் இரட்சிப்பின் நீதியை ஒருவன் உண்மையாக விசுவாசித்தால் அவனின் இருதயத்தில் பாவமிருப்பது எப்படிச் சாத்தியமாகும். “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது” இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமுமே கர்த்தரின் நீதியாகும். கர்த்தரின் நீதியை விசுவாசிக்கவேண்டுமானால் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் விசுவாசிக்கவேண்டும்.
இயேசுவின் ஞானஸ்நானத்தினால் கர்த்தரின் நீதி மிகச் சரியாக நிறைவேற்றப்பட்டது. நீங்கள் அதனை விசுவாசிக்க வேண்டுமென விரும்புகிறேன். அப்பொழுது உங்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் பாவிகளுக்கு நீதியைக் கொடுத்து அவர்கள் பாவமற்றவர்களாயினர். மேலும், கர்த்தரின் தீர்ப்பின் நீதியானது இயேசுவின் சிலுவை மரணமாகும். “கிறிஸ்துவே சட்டத்தின் முடிவாயிருக்கிறார்.” சட்டமிருக்கும்வரை தீர்ப்பினையடையாதவர்களுக்கு கர்த்தரின் தீர்ப்புவரும். கர்த்தரின் சட்டம் பாவத்தை வெளிப்படுத்துவதுடன் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் நிரூபிக்கின்றது, அது சாபமும் நரகமுமாகும். ஆகவே, இயேசுவின் ஞானஸ்நானமும் இரத்தமும் சட்டத்தின் சாபத்தை முடிவு செய்தன. இயேசு நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டதுடன் எல்லா நீதியையும் நிறைவேற்ற சட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தார்.
முட்டாள்கள் விளக்கை எடுத்துச் சென்றபோதிலும் அவர்களிடம் எண்ணெய் இருக்கவில்லை
மத்தேயு 25:1-13 ஐ நோக்குவோமாக. நமது தேவனின் வருகையான மணவாளனுக்காக காத்திருந்த பத்து கன்னிகைகள் கதை இருக்கிறது. வேத வசனத்தின் மூலம் கர்த்தரின் நீதி என்ன என்று பார்ப்போமாக.
“அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாய் இருந்தார்கள். புத்தி இல்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டு போகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத்தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப் படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்கு வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே, அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.”
பரலோக ராஜ்யம் தங்கள் கைகளில் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுப் போகப் புறப்பட்ட பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. பரலோக ராஜ்யத்திற்குள் செல்வது யார்? பத்துக் கன்னிகைகளில் பரலோக ராஜ்யத்திற்குள் சென்றது யார்? இயேசுவை அவர்கள் விசுவாசித்த போதிலும், சில கன்னிகைகளினால் ஏன் பரலோக ராஜ்யத்திற்குள் செல்லமுடியவில்லை? மேற்கண்ட வசனங்களின் மூலம் தேவன் நமக்கிதைச் சொல்கிறார். பத்து கன்னிகைகளில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாகவும் மற்ற ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் விளக்கை எடுத்துக்கொண்ட போதிலும் எண்ணெயை கூட எடுத்துப்போகவில்லை. விளக்குகள் “ஆலயங்களைக்” குறிக்கின்றன. அவர்கள் தம் விளக்குகளுடன் சென்றாலும் எண்ணெயை எடுத்துப்போகவில்லை என்பது ஆலயங்களுக்கு செல்வோர் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் போவதை ஒத்தது (வேதாகமத்தில் எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது).
முட்டாள்கள் செய்தது என்ன? அவர்கள் விளக்கை எடுத்துச் சென்றார்கள், ஆனால் எண்ணெய் இல்லை இயேசுவை விசுவாசித்த போதிலும் மறுபடியும் பிறக்காத ஒருவன் ஆலயத்திற்கு பக்தியுடன் செல்கிறான். “என்னுடைய ஆலயம் உண்மையாகவே கட்டுப்பாடுடையது” என்று எல்லோரும் கூறுகிறார்கள். இவ்வுலகிலுள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் அப்படிக் கூறுகிறார்கள். அவர்களின் ஆலயத்தைத் தோன்றுவித்தவர்களைக் குறித்தும் அவர்கள் பிரிவிலுள்ள சில குணங்களைக் குறித்தும் அவர்கள் பெருமை பாராட்டுகிறார்கள். தம் விளக்கை எடுத்துக்கொண்டு அவர்களுடன் எண்ணெயை எடுத்துச் செல்லாதவர்கள் முட்டாள்கள், ஆனால் புத்தியுள்ளவர்களோ தம் விளக்குகளையும் பாத்திரங்களில் எண்ணெயையும் எடுத்துச் சென்றார்கள்.
மனிதகுலம் என்பது என்ன? ஒரு மனிதன் கர்த்தருக்கு முன் ஒரு பாத்திரமாவான். அவன்/அவள் ஒரு புழுதி. மனிதன் புழுதியினால் ஆனவன். ஆகவே மனிதகுலமானது கர்த்தரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பாத்திரம். புத்தியுள்ளவர்கள் தம் விளக்குகளோடு பாத்திரங்களில் எண்ணெயையும் எடுத்துச் சென்றார்கள்.
எண்ணெய் இல்லாது விளக்கை மட்டுமே உடைய புத்தியில்லாத கன்னிகைகளின் உணர்வுகள் எரிந்துபோகும்
இயேசுவை விசுவாசிக்கும் மக்களினூடே புத்தியில்லாத கன்னிகைகள் இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. அவர்கள் விளக்கை எடுத்துச் செல்கிறார்கள், ஆனால் எண்ணெய் இல்லை. அவர்கள் மறுபடியும் பிறக்கவில்லை என்பதே இதன் பொருள். எண்ணெயில்லாமல் திரி எத்தனை நேரம் எரியும்? இங்கு நாம் தெரிந்துக் கொள்ளவேண்டியது என்னவெனில், திரி எத்தனைச் சிறந்ததாக இருந்தாலும் எண்ணெய் இல்லாவிட்டால் விளக்கு சீக்கிரமாக அனைந்து போகும். மறுபடியும் இன்னும் பிறக்காத சில விசுவாசிகள் முதலில் கர்த்தர் மீது அனலுள்ள அன்பைக் கொண்டுள்ளார்கள். இது 4 அல்லது 5 வருடங்களுக்கு இருக்கிறது. பிறகு கர்த்தர் மீதுள்ள அனலுள்ள அன்பு அவிந்து போகிறது. அவர்கள் பாவமன்னிப்பைப் பெறவிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மறுபடியும் பிறக்காதவர்களும், எண்ணெய் (பரிசுத்த ஆவி) இல்லாதவர்களும், இப்படிக் கூறுகிறார்கள்: “வெகு காலத்திற்கு முன் நல்ல விசுவாசமுடையவனாயிருந்தேன். முதலில் நான் நல்லவனாக இருந்தேன், ஆனால் இப்போது அப்படியில்லை. நீயும் கூட சீக்கிரமாகவே என்னைப் போலாவாய்.” கள்ளத்தீர்க்கதரிசிகளும் போலி பரிசுத்தவான்களுமான அவர்கள் மறுபடியும் பிறக்காமல் மதவாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களுடைய விசுவாசம் எண்ணெயின் (பரிசுத்த ஆவியின்) அடிப்படையில் அமையாததால் அவர்கள் இரட்சிப்பின் மீது விசுவாசம் வைக்கவேண்டும். அவர்களுடைய விசுவாசம் அவர்களின் உணர்வுகளின் அடிப்படையில் அமைந்தது. அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நீர் மற்றும் இரத்தத்தை விசுவாசித்து இரட்சிப்பைப் பெறுவதன் மூலம் கர்த்தரின் எண்ணெயை பரிசாகப் பெறுகிறார்கள். திரியானது மனித இருதயத்தைக் குறிக்கிறது.
மேற்கண்ட வசனங்களில், கன்னிகைகள் மணவாளனுக்காக காத்திருக்கின்றனர். இங்கு நாம் இஸ்ரவேலர்களின் கலாச்சார பின்னனியை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். அவர்களுடைய திருமணச் சடங்குகள் இரவில் நடக்கும், அதே நேரம் அது மணவாளனுடைய வருகையிலிருந்து தொடங்குகிறது. ஆகவே மணவாட்டி தன் மணவாளனுக்காகக் காத்திருக்கவேண்டும். இஸ்ரவேலர்களின் திருமணச் சடங்கு இத்தகையது.
“மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.” அப்பொழுது ஒரு சத்தம் கேட்டது, “இதோ, மணவாளன் வருகிறார்!” உடனே மணவாட்டிகள் எழுந்து தங்களை சீர்படுத்தினர். மணவாளனுக்காக பத்து கன்னிகைகள் காத்திருந்தபோது “இதோ, மணவாளன் வருகிறார்” என்ற ஒலியுடன் மணவாளன் வந்தார். “அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்” புத்தியில்லாதவர்கள் எப்போதுமே முட்டாள்தனமாகவே இருப்பர். மணவாளன் வருகிறதற்கு முன்பே அவர்கள் எண்ணெயைத் தயார் செய்திருக்க வேண்டும். விளக்கின் திரி பலவீனமாக இருந்தாலும், எண்ணெயுள்ள விளக்கு அனையாது.
விளக்கைப் பிடித்திருந்த புத்தியில்லா கன்னிகைகள் திரியை மட்டுமே எரித்தார்கள். இதன் பொருள் என்னவெனில் அவர்களின் இருதயம் மட்டுமே எரிந்தது. “நான் மறுபடியும் பிறக்கவேண்டும், மறுபடியும் பிறந்த மனிதனின் வாழ்வை வாழவேண்டும்” இப்படி ஒழுங்காக அவர்கள் தம் இருதயத்தை எரிக்கிறார்கள். நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, இரவில் வீட்டு அறைகளை மண்ணெண்ணெய் விளக்குகள் ஒளியூட்டும். ஒரு துண்டு பேப்பரை விளக்கில் எரியச் செய்தால், கண் சிமிட்டும் நேரத்திற்குள் அது எரிந்துவிடும். நெருப்பானது ஒரு அடி உயரத்திற்கு மிகவும் பிரகாசமாக இருக்கும், ஆனால் அது சீக்கிரமே அனைந்து போகும்.
எண்ணெய் இல்லாமல் தம் சொந்த இருதயத்தை (உணர்வுகள்) எரிக்கும் புத்தியில்லாத கன்னிகைகள் நரகத்திற்குச் செல்வார்கள், அவர்கள் தேவனை சந்திக்கும் நேரம் வரும்போது அவர்களின் விசுவாச நெருப்பு அனைந்து போகும். அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இல்லை. அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் இல்லாவிட்டாலும் தாம் சரியானவர்கள் என்று எண்ணுகிறார்கள். “வாரும், எரியும் ஆவியானவரே, வாரும்” அவர்கள் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். பிறகு பெண்கள் நடனமாடுவர் (அவர்கள் அதனை பரிசுத்த ஆவியானவரின் நடனம் என்கின்றனர்), அவர்கள் தம் நெஞ்சை படபடவென அடித்துக் கொண்டு “வாரும், தயவுசெய்து வரும்” என்பர். அவர்கள் புத்தியில்லாத மதியீனர்கள். இரட்சகருக்கு முன்பாக நாம் பாவத்துடனிருந்தால் நாம் புத்தியில்லாதவர்கள்
இயேசுவை விசுவாசித்தபோதிலும் நம் இருதயங்களில் பாவமிருந்தால் நாம் புத்தியில்லாத கன்னிகைகளைப் போன்றவர்கள். புத்தியில்லாத கன்னிகைகளாய் இருக்காதீர்கள்.
பாவத்துடனிருக்கும், மணவாட்டியை தேவனால் எப்படி திருமணம் செய்துக்கொள்ள முடியும்?
தேவன் பரிசுத்தமான கர்த்தர். மணவாளன் தேவ புத்திரனாகிய பாவமில்லாத கர்த்தராக இருக்கிறார். ஆயினும், உன்னிடம் பாவமிருக்கும்போது தேவனைச் சந்திக்க நீ எப்படி முயற்சி செய்யலாம்? உன் இருதயத்தில் பாவத்தை வைத்துக்கொண்டு நீ கர்த்தரை சந்திக்கவேண்டும். இது மிகவும் மதியீனமானதும், புத்தியில்லாத செயலுமாகும்.
நம்முடைய மணவாளனாகிய இயேசு இவ்வுலகிற்கு வந்து மணவாட்டிகளைப் பரிசுத்தமாக்கினார்: அவர் தன் ஞானஸ்நானத்தின் மூலம் மணவாட்டிகளின் எல்லாப் பாவங்களையும் கழுவி அவர்களை நீதியின் மக்களாக மாற்றினார். அவர் அவர்களை தம் மணவாட்டிகளாக அவருள் தெரிந்து கொண்டார். நேரம் சரியானபோது அவர்களின் ஐந்து பேர் கூறினர், “தயவுசெய்து வாருங்கள்.” ஆயினும் அவர்களில் ஐந்து பேர் இன்னமும் இருட்டிலேயே நிற்கிறார்கள். அவர்களுடைய முகம் கருமையாக இருக்கும்போது அவர்களுக்கு திருமணச் சடங்குகள் எப்படியாகும்? மணவாளன் வந்து கூறினார், “எப்படியிருக்கிறீர்கள்?” பின்னாலுள்ள ஐந்து மணவாட்டிகளின் முகங்களும் அவர்களின் பாவங்களினால் கருமையடைந்தது. அவர்களுடைய இருதயத்தினுள் இங்கும் அங்கும் பாவங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அவர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினர்.
தன்னுடைய பாவங்களினால் அழுதுகொண்டிருக்கும் மணவாட்டியை தேவன் எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும்? “நன்றி, தேவனே, நீர் என்னை இவ்வாறு பரிசுத்தமாக்கினீர்.” இத்தகைய ஒரு நபர், அவன்/அவள் பலவீனமுள்ளவர்களாக இருந்தாலும், மணவாளன் அவனை/அவளை நேசிப்பதால் அவனின்/அவளின் பலவீனங்களையும் பாவங்களையும் கழுவிப்போட்டதால் அவனோ/அவளோ தன் ஆவிக்குரிய மணவாளனிடத்தில் மகிழ்ச்சியுடைவராயிருப்பார்.
வழக்கமாக மணவாளன் தன் மணவாட்டியை அலங்கரிக்கும் பொருட்டு அழைத்துச் செல்வான், ஆடைகளையும் சிறந்த வாசனைத்திரவியங்களையும் அலங்காரப் பொருள்களையும் அனுப்புவான். பிறகு, மணவாட்டி பொருள்களினால் தன்னை அலங்கரித்துக் கொண்டு மணவாளனைச் சந்திக்க தயாராயிருப்பாள்.
நம்முடைய தேவன், நாம் அவரை மணவாட்டியாக சந்திக்கும்படி வழிநடத்த மணவாளனாக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார். யோர்தான் நதியில் நம் பாவங்களுக்கு கிரயமாக தம் சரீரத்தைக் கொடுத்தார். “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14). தேவன் தாமே நம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துக் கொண்டபடியினால், தேவனை விசுவாசிப்பதன் மூலம் இரக்கம், உண்மை மற்றும் பாவமன்னிப்பின் முழுமையைப் பெறுவோம். மணவாளன் யோர்தான் நதியில் மணவாட்டியின் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். தேவன் அவர்களுடைய இடத்திலிருந்து சிலுவையில் தீர்க்கப்பட்டதன் மூலம் மணவாட்டிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
பரிசுத்த ஆவியானவரை பொருளினாலும் சோதனையினாலும் பெற்றுக்கொள்ள முடியுமா?
மணவாளன் அருகில் வந்தபோது அவர்களின் விளக்குகள் அனைந்துபோனபடியால், புத்தியில்லாத கன்னிகைகள் புத்தியுள்ளவர்களிடம் எண்ணெயை தம்முடன் பகிருமாறு கேட்டார்கள். பரிசுத்த ஆவியானவரை நம்மால் பங்கு போடமுடியுமா? பரிசுத்த ஆவியானவரைப் பணத்தால் வாங்கமுடியுமா? பாவமன்னிப்பை நற்செய்கைகளினாலும், சோதனைகளினாலும் பணத்தாலும் நம்மால் வாங்கமுடியுமா? புத்தியுள்ளவர்கள் எழுப்புதல் கூட்ட போதகர்களிடமிருந்து பரிசுத்த ஆவியானவரை வாங்கிக் கொள்ளும்படி கூறினார்கள். அவர்களிடமிருந்து ஏற்கெனவே வாங்கிவிட்டதாக புத்தியில்லாதவர்கள் நினைத்தார்கள். அவர்கள் எண்ணெயை பணத்தால் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அவர்கள் உற்சாகத்துடன் மதவாழ்க்கை நடத்தினார்கள். பெரிய காணிக்கைகளும் ஊழியங்களும் கட்டுப்பாடான ஆலயத்திற்குச் செல்வதும் மீண்டும் மீண்டும் ஜெபிப்பதும் எதையோ தரும் என்று எண்ணுகிறார்கள்.
அவர்கள் செய்வது எதுவாயிருந்தாலும், உலகத்தின் பொருள்களின் மூலம், தேவன் கொடுத்த பாவமன்னிப்பை யாராலும் வாங்க முடியாது. தேவனுக்கு முன்பு வந்து நிற்கும் வரை புத்தியில்லாதவர்கள் தம் உணர்ச்சிளை எரிக்க முயலுகிறார்கள். ஐந்து புத்தியில்லா கன்னிகையில் ஒருத்தி மதவாழ்க்கையைத் தொடங்குகிறாள். அவள் கூறுகிறாள். “நான் உம்மைப் பின்பற்றுவேன், நான் ஜெபிப்பதற்கும், மனம் வருந்தி ஜெபிப்பதற்கும் மலைகளுக்குச் செல்லுவேன். அவருக்கு ஊழியம் செய்யச் செல்வோமாக, நற்செய்தியைப் பிரசங்கிக்க வெளிநாடு செல்வோமாக.”
மிகுந்த ஆரவாரத்துடன் கடைசியில் மணவாளன் வந்தார். மணவாளன் வந்தபோது புத்தியில்லாதவர்கள் எண்ணெய் வாங்கச் சென்றனர். ஆனால் பாவமன்னிப்பு பெற்ற, எண்ணெயை (பரிசுத்த ஆவியானவரை) தயாராக வைத்திருந்த கன்னிகைகள் திருமண விருந்திற்குச் சென்றார்கள். மணவாளன் அனைத்தையும் ஏற்பாடு செய்தபின் மணவாட்டிகளைச் சந்தித்தார். பிறகு அவர் கதவைப் பூட்டினார். இயேசு ஏனோதானேவென்று ஐந்து கன்னிகைகளை தேர்ந்தெடுக்கவில்லை. வேதாகமத்தில் ‘ஐந்து` என்ற எண் ‘இரக்கம்` என்று பொருள்படும். ஐந்து கன்னிகைகள் இரக்கத்தின் மூலம் பாவமன்னிப்பு பெற்று அவருடைய இரக்கத்தையும் அவரின் நீதியின் செயல்களையும் விசுவாசிப்பவர்களைக் குறிக்கிறது. அவர்கள் மணவாளன் அவர்களுக்காகச் செய்தவற்றை அறிந்து அவர்களை நீதிமானாக்கிய கர்த்தரின் நீதியை விசுவாசிக்கவும் செய்கிறார்கள். ஆயினும் மற்ற கன்னிகைகள் திரும்பிவந்து கூறினர். “தேவனே, தேவனே, எங்களுக்குத் திறவும்.” ஆனால் அவர் பதில் கூறினார், “மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களை அறியேன்.”
நம்முடைய பாவங்கள் துடைக்கப்படும் போதே பரிசுத்த ஆவியானவரின் ஈவை நாம் பெறமுடியும்
எண்ணெயை ஏற்பாடு செய்தவர்களால் கர்த்தரைச் சந்திக்க முடியாது. கர்த்தரின் நீதியை விசுவாசித்து பரலோக இராஜ்யத்திற்காக காத்திருந்தவர்களையும் பாவமன்னிப்பைத் தம் இருதயங்களில் பெற்றவர்களையும் பரலோக இராஜ்யத்திற்கு தேவன் அழைத்துச் செல்வார். தேவன் உறுதிமொழியின் சொற்களைக் கூறினார். “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும், பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” நாம் பாவமன்னிப்பு பெற்ற பிறகு என்னவாகும்? வேதாகமம் கூறுகிறது, “அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப்போஸ்தலர் 2:38). நற்செய்தியாகிய கர்த்தரின் நீதியை நீங்கள் பெற்றால், உங்களிருதயத்தில் உள்ள பாவங்கள் துடைக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் உங்களினுள்ளே வருவார். கர்த்தரின் பரிசுத்த ஆவியானவரை நாம் தொட்டு உணரமுடியாது. ஆயினும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நம்முடன் பரிசுத்த ஆவியானவர் இருப்பதினாலும் கர்த்தருடைய வார்த்தை நம் இருதயத்தில் இருப்பதாலும் நம்மிடம் பாவங்களில்லை என்று கூறமுடியும். உண்மையாகவே அது இருக்கிறது. தேவனுடைய நீதியைப் பெற்றுக்கொள்ளும் ஒருவன் பலவீனமாக இருந்தாலும் அவன் நீதிமானாகிறான். ஆயினும், தேவனுடைய நீதி இல்லாதவன் தொடர்ந்து பாவியாகவே இருக்கிறான்.
அங்கு கர்த்தரின் நீதி வெளிப்பட்டது
தேவன் நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தார். அவர் தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தார். அவர் ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து நம்முடைய அனைத்துப் பாவங்களுக்காகவும் தம் இரத்தத்தைச் சிந்தி கொடூர தண்டனையைப் பெற்றார். அப்போஸ்தலர்களாகிய யோவான், பேதுரு மற்றும் பவுல் ஆகியோர் இதைக் குறித்து என்ன கூறுகிறார்கள்? அவர்கள் எல்லோரும் இயேசுவின் சரீரத்தையும் இரத்தத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தைப் பற்றியும் கூறுகிறார்கள். மத்தேயு 3:13-17 இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து விவரிக்கிறது. பாவிகளை பாவமற்றவர்களாக்கவும் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவவும் இயேசுவானவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றார்.
1 பேதுரு 3:21 ஐ நோக்கிப் பார்ப்போமாக. பேதுரு அவரின் ஞானஸ்நானமானது இரட்சிப்பிற்கு ஒப்பனையானதாக இருக்கிறது என்று சாட்சி கூறினான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல் மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.” (1 பேதுரு 3:21-22)
இங்கு “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.” அவரின் சரீரத்தினால் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொள்ளச் செய்த இயேசுவின் ஞானஸ்நானமானது நமது இரட்சிப்பின் அத்தாட்சியாகவுள்ளது. அவர் சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்ற குறிப்பு நமது பாவங்களுக்காக நாம் தீர்க்கப்பட்டோம் என்பதற்கு அத்தாட்சியாகவுள்ளது. நான் என்ன கூறுகிறேன் என்று கவனிக்கிறீர்களா? ஆகவே வேதாகமம் இயேசுவானவர் நீர், இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் மூலம் வந்தவர் என்று கூறுகிறது (1 யோவான் 4:6-9). தலைமை ஆசாரியனான ஆரோன் தம் மக்களுடையப் பாவங்களை பவியின் மீது சுமத்த அதன் மீது கை வைத்ததைப் போலவே இயேசு இவ்வுலகிற்கு மனித சரீரத்தில் அனுப்பப்பட்டு நம் எல்லாப் பாவங்களையும் சுமந்தார்.
ஞானஸ்நானமாகிய நீர் நம் இரட்சிப்பிற்கு ஒப்பனையாக இருக்கிறது. அது அழுக்கான மாமிசத்தை அகற்றுவதல்ல என்று எழுதப்பட்டுள்ளது. நாம் பாவமன்னிப்பு பெற்றபிறகு பாவம் செய்யமாட்டோம் என்பது இதன் பொருளல்ல. இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிப்பதன் மூலம் நாம் பாவமன்னிப்பைப் பெறுகிறோம். அப்படியானால் நாம் மாமிசத்தால் மீண்டும் பாவம் செய்வதில்லையா? ஆம், நாம் செய்கிறோம். அநேக மக்கள் பாவமன்னிப்பைத் தவறாகப் புரிந்துக்கொண்டு இப்படிச் சிலவற்றைக் கூறுகிறார்கள். “உன்னிருதயத்தில் பாவங்கள் இல்லையெனில், நீ மீண்டும் பாவம் செய்யமாட்டாய்.” இது தவறாகப் புரிந்து கொண்டமையாகும். வேதாகமம் கூறுகிறது “ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை” (பிரசங்கி 7:20). சரீரமானது இன்னமும் பலவீனமானதே. அது இறக்கும் வரை பலவீனமாகவே இருக்கிறது. “மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து.” இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நம்முடைய மனசாட்சியானது தேவனை நோக்கி நல்ல மனசாட்சியாக மாறிவிடுகின்றது. அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம் தேவன் நம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்பதில் உள்ள நம் விசுவாசத்தினால், நம் மனசாட்சியால், தேவனும் இரட்சகருமாகிய நம் கர்த்தரைக் கூப்பிடமுடியும்.
நமது இருதயத்திற்கான ஆவிக்குரிய உணவு இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமுமாகும்
நமது இருதயத்திற்கான உணவு இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமுமாகும். இருதயத்திற்கான உணவும் நம் பாவங்களைக் கழுவியதற்கு ஒப்பனையானதும் இயேசுவின் ஞானஸ்நானமேயாகும். ஆகவே, அப்போஸ்தலனாகிய பேதுரு ஞானஸ்நானமானது நம் இரட்சிப்பிற்கு ஒப்பனையாக இருக்கிறது என்று கூறினான்.
1 பேதுரு 1:22-23 ஐ நோக்குவோமாக, “ஆவியினால் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூறுங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.” ஆமேன்.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் விசுவாசித்ததினால் நாம் மறுபடியும் பிறந்து பாவமன்னிப்பு பெற்றோம். தேவனின் எழுதப்பட்ட வார்த்தைகளை விசுவாசித்தமையால் நாம் மறுபடியும் பிறந்தோம். ‘என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே` நாம் மறுபடியும் பிறந்தோம். அல்லேலூயா! மறுபடியும் பிறப்பதானது என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான வார்த்தையினால் ஏற்படுகிறது. கர்த்தரின் வார்த்தையானது பீரங்கியைப் போன்றது, அது அளவுகோல் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதுவே இரட்சிப்பின் அடையாளமாகும். கர்த்தரின் இரட்சிப்பிற்கான அளவுகோல் எப்பொழுதும் மாறாது.
யோவான் ஸ்நானன் யோவான் 1:29 இல், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான். யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்ற தேவாட்டுக்குட்டியானவர் ஜீவ அப்பமாவார், அவர் நம்மைத் தம் சரீரத்தினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்தார்.
கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்ததால் நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டோம். வேதாகமம் கூறுகிறது, “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” மற்றும் “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” (ரோமர் 10:17, 1:17). நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் நாம் நீதிமானாகலாம்.
நீங்கள் பரிசுத்தமானீர்களா? -ஆமேன்.- -உங்களிடம் பாவங்களெதுவும் இல்லையா? அதுவே நற்செய்தி, நல்ல செய்தி, கிரேக்கத்தில் ‘யூகெல்லியோன்.` கர்த்தரின் நீதி என்ன? அவரின் சரீரத்தையும் இரத்தத்தையும் நமக்காக கொடுத்து நம் எல்லாப் பாவங்களையும் தேவன் துடைத்தார் என்ற குறிப்பே அது. கர்த்தரின் நீதி நம்மை பரிசுத்தவான்களாக அனுமதித்தது. பாவமில்லாத இயேசு உலகின் பாவங்களை சுமந்து பாவிகளுக்காக சிலுவையிலறையப்பட்டது கர்த்தரின் நீதியாகும். அதுவே இயேசுவின் ஞானஸ்நான நீராகும், அது உலகின் எல்லாப் பாவங்களையும் சுத்தமாக்கியது, அவரின் ஞானஸ்நானம் மூலம் இயேசுவானவர் உலகின் பாவங்களை சுமந்து அதற்காக சிலுவையில் அறையப்பட்டார் என்ற குறிப்பின் மூலம் கர்த்தரின் நீதி அளிக்கப்பட்டுள்ளது. கர்த்தரின் நீதியானது அவரின் ஞானஸ்நானத்தையும் மரணத்தையும் உள்ளடக்கியுள்ளது, சிலுவை நம் தீர்ப்பிற்கு ஒப்பனையாக இருக்கிறது. இதுவே நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரின் நீதியாகும்.