• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 1-3] நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கட்டும் (ரோமர் 1:17)

2021.04.21 25
(ரோமர் 1:17)
“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப் படுகிறது.”
 
 
நாம் விசுவாசத்தினாலே வாழவேண்டும்
 
நீதிமான் எதினால் வாழ்வான்? விசுவாசத்தினால், நீதிமான் விசுவாசத்தினால் வாழ்வான். குறிப்பாக ‘விசுவாசம்` என்ற சொல் மிகவும் உபயோகிக்கப்படுகிறது, ஆனால் இதுவே வேதாகமத்தின் முக்கியக் கரு. நீதிமான் விசுவாசத்தினால் மட்டுமே பிழைப்பான். நீதிமான் எதினால் வாழ்வான்? அவர்கள் கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தினால் வாழ்வர். நம்முள் சரீரமும் பரிசுத்த ஆவியானவரும் வாசஞ்செய்வதால், இந்த அத்தியாயம் நம்மை ஒளிப்பெற்றவர்களாக்கும் என்று நம்புகிறேன். நாம் வேதாகமத்தின் நேரடி பொருளை புரிந்துகொண்டாலும் அதில் மறைந்துள்ள பொருளை அறியாததால், நம்முடைய சொந்த யோசனைகளின்படி வேதவசனத்தைப் பொருள்கொள்கிறோம். நம்மிடம் சரீரமும் ஆவியும் ஒரே நேரத்தில் இருக்கிறது. ஆகவே, வேதாகமம் கூறுகிறது, நீதிமான்களாகிய நாம் பாவமன்னிப்பைப் பெற்றவர்களாதலால், நாம் விசுவாசத்தினால் வாழவேண்டும்.
 
 
ஆனால் பிரச்சினை என்னவெனில் சரீரத்தால் நன்மைச் செய்ய முடியாது
 
நம்மிடம் சரீரமும் இருப்பதே பிரச்சினை. ஆகவே அநேக நேரங்களில் நம் சரீரத்திற்கேற்றவாறே தீர்க்கிறோம். மாமிசத்தின் நிலையான யோசனைகளினால் சில சமயங்களில் தீர்த்து பிரித்துணருகிறோம், இதனால் விசுவாசம் என்று வரும்போது நாம் அவருடைய வார்த்தைகளை முழுவதும் விசுவாசிப்பதில்லை. ஆயினும், நீதிமான் விசுவாசத்தினாலே மட்டுமே பிழைப்பான் என்று வேதாகமம் கூறுகிறது. அப்படியானால் இதன் பொருள் என்ன? ‘விசுவாசத்தினால் வாழாத நீதிமான்கள் எங்கிருக்கிறார்கள்? என்று நீங்கள் எண்ணலாம். இந்த வசனத்திற்கேன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? இது வேதாகமத்தில் உள்ள அநேக வசனங்களில் ஒன்றல்லவா?`
இன்று, இந்த வசனத்தைக் குறித்து உங்களுக்கு கூற விரும்புகிறேன். நாம் விசுவாசத்தினால் பிழைத்திருக்க வேண்டும். ஏதாவது ஒன்றைக் குறித்து நன்றாக நமக்குத் தெரியும் என்று நம் நினைப்பில் எண்ணினாலும் அதனை விளக்க முயலும்வரை நம் அறிவீனத்தை உணர்ந்து கொள்வதில்லை. பாவி யாருக்கு எதிராகப் போராடுகிறான்? மறுபடியும் பிறக்காத ஒரு நபர் அவனின்/அவளின் சொந்த சிந்தனைகளுக்கு எதிராகவும் அவனின்/அவளின் மாமிசத்திற்கு எதிராகவும் போராடுகிறார். மறுபடியும் பிறந்த ஒரு நபர் எதனுடன் போராடுகிறார்? ஒரு நபருக்குள் உள்ள ஆவியும் அவன் சரீரமும் ஒன்றுடன் ஒன்று போரிடுகின்றன. நமக்கு தெரிந்ததை நான் ஏன் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம், ஆனால் அதைக் கூறுவது சிறந்ததாகையால் இதனை மீண்டும் மீண்டும் விளக்குகிறேன்.
மறுபடியும் பிறந்த பரிசுத்தவானில் கூட, அவனின்/அவளின் மாமிசமும் ஆவியும் ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து போராடுகின்றன, ஏனெனில் அவனுக்கும்/அவளுக்கும் கூட மாமிசமிருக்கிறது. மாமிசத்தின் ஒரு பாகத்தில் உணர்வை உந்தும் ஒரு பாகம் இருக்கிறது, இது ஆடம்பரமாக வாழுவதை விரும்புகிறது, அதே நேரம், விசுவாசத்தினால் வாழுவதற்கு பதிலாக எல்லாப் பிரச்சினைகளையும் அதுவே சமாளிக்க முயற்சி செய்கிறது. நீதிமானின் சரீரத்தில் கூட உணர்வை உந்தும் பாகமிருக்கிறது, அதுவும் கூட ஆடம்பரமாக வாழ விரும்புகிறது, அது கர்த்தர் அவர்களை எப்படி விசுவாசத்தின்படி வாழக்கூறினாரோ அதிலிருந்து அதிக தூரமாய், எந்த தவறும் செய்யாமல் சிறந்த நிலையை அடைய முயற்சி செய்கிறது.
ஆகவே, ஆவிக்குரிய செய்கைகள் உட்பட எல்லாவற்றிலும் நீதிமானின் மாமிசம் சிறந்த நிலையை அடைய விரும்புகிறது, ஒவ்வொரு ஆவிக்குரிய பிரச்சினையிலும் தலையிடும் அதே நேரம் மாமிசத்தின் சிறந்த நிலையை அடையவும் அது விரும்புகிறது. ஆனால் ஒருவனால் மாமிசத்திற்கேற்றவாறு விசுவாச வாழ்வு ஒன்றை வாழ முடியுமா? பவுல் கூறியது போல், “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையை செய்கிறேன்” (ரோமர் 7:19) மாமிசம் நன்மையைச் செய்யாது. மாமிசத்தால் தீயவற்றைத் தவிர வேறெதையும் செய்யமுடியாவிட்டாலும் நம்முடைய மாமிசத்தில் உள்ள உணர்வை உந்தும் பாகமானது கர்த்தர் முன் பெரிதாக வாழ விரும்புகிறது.
 
 
நம்மால் மாமிசத்தின் மூலம் விசுவாச வாழ்வை நடத்த முடியாது
 
ஆகவே மிகச்சரியாகக் கூறினால், மாமிசத்தின் மூலம் அர்ப்பணமுள்ள வாழ்வை வாழ முயல்வது சரியான விசுவாசத்திலிருந்து அதிக தொலைவிலிருப்பதாகும். வேதாகமத்திலிருந்து நோக்கும்போது நம்மிடம் கர்த்தரைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளும் உள்ளுணர்வுகளும் உள்ளன. மாமிசத்தினால் சிறந்த நிலையை அடைந்து எந்தப் பிரச்சினயும் இல்லாமல் விசுவாச வாழ்வை மாமிசத்தினால் வாழ்வது இயலாத காரியம். மனித மாமிசமானது மண்ணைப் போன்றது. வேதாகமம் கூறுகின்றது, “நாம் மண்ணென்று நினைவு கூறுகிறார்” (சங்கீதம் 103:14) அது நீராவியைப் போன்றது, அது சிறிது நேரமே தோன்றி மறைந்து போகிறது, ஏனெனில் அது குறைவுள்ளது.
மறுபடியும் பிறந்தவனின் சரீரத்திற்கும் மறுபடியும் பிறக்காதவனின் சரீரத்திற்கும் பாவம் செய்யாமலிருப்பதற்கான திறமை இருக்கிறதா? மறுபடியும் பிறந்த ஒரு நபரால் பாவம் செய்வதை தவிர்க்க முடியுமா? மாமிசத்தால் பாவம் செய்யாது இருக்க முடியுமென்றால் நாம் விசுவாச வாழ்வு வாழத் தேவையில்லை. அப்படியானால் சரீரத்தின் பலத்தினாலே நம்மால் வாழ முடியுமா? அது சாத்தியமல்ல என்பது நமக்கு நன்கு தெரியும். பிரச்சினையானது நாம் அதனை அறிந்து அதனை அடையாளம் காண்கிறோமா என்பதில் இருக்கிறது, நாம் மறுபடியும் பிறந்தவர்களா மறுபடியும் பிறக்காதவர்களா என்பதைப் பொருத்தல்லாமல் மாமிசம் பலவீனமாக இருப்பதால் அது தொடர்ந்து பாவம் செய்கிறது.
நம்முடைய மாமிசத்தைக் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? நம்மைக் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? உங்களுக்கு உங்களைக் குறித்து 100% தெரியுமென்று எண்ணலாம், ஆனால் உங்கள் சுயரூபம் உண்மைப் பண்பிலிருந்து அதிக தொலைவிலுள்ளது, ஏனெனில் நீங்கள் உங்களைப் பாவம் நிறைந்தவரென்று உண்மையில் விசுவாசிப்பதில்லை. உங்களைக் குறித்து எத்தனை சதவிகிதம் உங்களுக்குத் தெரியுமென்று எண்ணுகிறீர்கள்? 50% கூட அதிகமானது. மக்கள் தம்மைக் குறித்து அதிகப்படியாக 10% அல்லது 20% மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தம்மைக் குறித்து 100% தெரியுமென்று எண்ணினாலும் உண்மையில் அவர்களுக்குத் தெரிந்திருப்பது 10% அல்லது 20% மட்டுமே. அவர்கள் தாம் மிக மோசமான செயல்களைச் செய்திருக்கிறோம் என்று எண்ணும்போது வெட்கமடைந்து தேவனைப் பின் தொடர்வதை விட்டுவிடுகிறார்கள். பிறகு தம்மால் முடிவுவரை விசுவாசத்தைக் கடைபிடிக்க முடியுமா இல்லையா என்ற கேள்வியைக் கேட்டு, அது முடியாது என்ற முடிவிற்கு வருகிறார்கள்.
மனித மனதின் குழாயிலிருந்து பெருமளவில் அழுக்கான நீரும் குப்பையும் வரும். அவர்களுக்கு விசுவாச வாழ்வு வாழ்வது சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றுகிறது. “ஓ! தேவனைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்று நான் எண்ணுகிறேன். என்னுடைய பாவங்கள் ஒரேதரமாக துடைக்கப்பட்டுவிட்டதால் என் சரீரம் நன்றாகும் என்று எண்ணினேன், ஆனால் இன்னும் என் சரீரம் பலவீனமுள்ளதாகவே இருக்கிறது மேலும் சிறந்த நிலைக்கு அருகே சிறிதாகவே இருக்கிறேன், நான் வெகு நாட்களாக மறுபடியும் பிறந்தவனாக இருந்தாலும் குறைபாடுள்ளவன். மாமிசமானது அசிங்கமானதும் பயனற்றதுமாகும்.” நம்மைக் குறித்து நமக்கு எதுவுமே தெரியாது, குறிப்பாக நாம் நம் மாமிசத்தின் குறைகளை ஒத்துக்கொள்வதேயில்லை. அநேக மனித சிந்தனைகள் மாமிசத்திலிருந்து வருவதைக் காணும்போது நாம் விசுவாச வழ்வை நடத்தமுடியாது என்பதே அதன் விளைவாகும். நம்மால் மாமிசத்தின் மூலம் விசுவாச வாழ்வை நடத்தவே முடியாது. மனித மாமிசம் யாது? மனிதனின் மாமிசம் படிப்படியாக பரிசுத்தமாகி அதன் சொந்த சோதனைகளினால் நிறைவான வாழ்வை கர்த்தருக்கு முன்னால் வாழமுடியுமா? இதற்கு முற்றிலும் சாத்தியமேயில்லை. மாமிசம் அதன் கடைசி மூச்சு வரை பாவஞ்செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
 
 
அப்படியானால் நீதிமான் எப்படி வாழ்வான்?
 
“கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளைக் கொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின் படியேயும் நீங்கள் செய்யாமல், அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜன பலியையும், பான பலியையும், பாவ நிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்த வேண்டும். அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவ நிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவ நிவாரண பலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும். ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக் கடவன். அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவ நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும். இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவசெய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.” (எண்ணாகமம் 15:22-29)
“கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளை கொடுத்த நாள் முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியும் நீங்கள் செய்யாமல்” வேதாகமத்தில் “அறியாமல் பாவஞ்செய்தல்” என்ற சொற்றொடர்கள் அதிகமுள்ளன. மாமிசமானது அறியாமலேயே பாவம் செய்கிறது, அது எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்கிறது. குறைவில்லாதவராகும்படி மாமிசத்திற்கு சாத்தியமிருந்ததா என்று உங்களிடம் கேட்கிறேன். நமக்கு பாவமன்னிப்பு கிடைத்தாலும் கூட அதனால் குறையில்லாததாக முடியாது. நாம் விடுதலையான உடனேயே சரீரமானது குறைவில்லாதது போல் முதலில் தோன்றுகிறது. ஆனால் அது நம்மைப் பற்றி எதையும் கூறவிடாமல் நம்மை ஒளித்து வைக்கிறது. மாமிசமானது குப்பையை ஆடையாக அணிந்து எல்லா நேரமும் பாவஞ்செய்கிறது. மாமிசமானது எப்போதும் பாவஞ்செய்கிறது, அதனைக் கர்த்தர் வெறுக்கிறார். எண்ணமுடியாத அளவிற்கு மாமிசம் பாவம் செய்யவில்லையா? கர்த்தர் விரும்பும்படி மாமிசம் எப்போதும் நடக்கிறதா? கர்த்தர் விரும்பாததையே மாமிசம் செய்கிறது. மாமிசம் கட்டுப்படுத்த முடியாதவாறு எப்போதும் பாவம் செய்கிறது.
கர்த்தரின் சட்டமானது பத்துக்கட்டளைகளையும் அதனில் விரிவான 613 விரிவான சட்ட விளக்கங்களையும் கொண்டுள்ளது. “உனக்கு என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இருக்க வேண்டாம். உனக்கு சிலைகளைச் செய்யாதே. உன் தேவனாகிய கர்த்தரின் பெயரை வீணில் உபயோகிக்காதே. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைவுகொள். உன் தகப்பனுக்கும் தாயிற்கும் மரியாதைச் செலுத்து. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. திருடாதே, உன் அயலானுக்கு எதிராக கள்ளசாட்சிக் கூறாதே, பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக.” முதல் நான்கு கட்டளைகளும் கர்த்தருடன் தொடர்பு கொள்ள உபயோகிக்க வேண்டியவை. ஐந்தாம் கட்டளைத் தொடங்கி பத்தாம் கட்டளைவரையுள்ளவற்றை மனிதர்களுடன் தொடர்பு கொள்ள உபயோகிக்க வேண்டும். ஆனால் சட்டத்திற்கு கீழ்ப்படிய மாமிசம் விரும்புகிறதா?
பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கு சாலையில் வெள்ளைக் கோடுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் சாலை விதிகளைக் கடைப்பிடிக்க மாமிசம் விரும்புவதில்லை. மற்ற மனிதர்கள் தம்மைப் பார்க்கிறார்கள் என்ற பயத்தினாலேயே மக்கள் வெள்ளைக் கோடுகளுக்கிடையே சாலையைக் கடக்கிறார்கள். அவர்களுக்கு சாலை விதிகளைக் கடைபிடிக்க விருப்பமிருப்பதில்லை. யாருமில்லாதபோது சாலைக் குறிப்புகளை மீறி சாலைகளைக் கடக்கின்றனர்.
மாமிசம் தானாகவே பாவம் செய்கிறது. அவர்கள் நன்கு கற்றவர்களானால் மற்றவர்கள் பார்க்கிறார்களா இல்லையா, என்பதை எண்ணாது சாலைவிதிகளைக் கடைபிடிப்பர். ஆயினும் அவற்றிற்கு சிறிதளவே மாமிசம் சரியென்கிறது. சாலை விதிகளின்படி நாம் சாலையைக் கடப்பதை வெறுக்கும் அதே நேரம் அவற்றிற்கு முடிந்த வரை கட்டுப்படாமல் இருக்க முயல்கிறோம்.
அப்படியானால் கர்த்தர் நமக்கு சட்டத்தைக் கொடுத்ததற்கான நோக்கம் என்ன? சட்டமானது பாவத்தைக் குறித்த அறிவை நமக்கு அளிக்கிறது. (ரோமர் 3:20) சட்டத்தின் மூலம் நாம் எப்போதும் பத்துக் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாத பாவிகள் என்பதை அறியவருகிறோம். நாம் எப்போதும் பாவம் செய்கிறோம். சட்டமானது நம்மிடமிருந்து கெட்டவற்றை எதிர்ப்பார்க்காமல் நல்லவற்றையே எதிர்பார்க்கிறது. அப்படியிருந்தாலும் கூட சட்டத்தைக் கடைப்பிடிக்க மாமிசத்திற்கு பலம் இல்லாததால் நம் சரீரம் எப்போதும் பாவம் செய்கிறது. நீதிமான் விசுவாசத்தினாலே வாழ்வான் என்று வேதாகமம் கூறுகிறது. ஆயினும் இப்படிப்பட்ட மாமிசத்தைப் பெற்ற நீதிமான் விசுவாசத்தின் மூலம் எப்படி வாழ்வான்? அவர்களால் மாமிசத்திற்கேற்ற சட்டப்படியும் வாழமுடியாது. அப்படியானால் அவர்கள் எப்படி வாழுவார்கள்? நீதிமான் கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தினால் வாழுவான்.
ஆவியானது கர்த்தரின் சித்தத்தைப் பின்பற்ற விரும்புகிறது. ஆயினும் மாமிசமானது பத்து கட்டளைகளின் எல்லாப் பிரிவுகளுக்கும் கீழ்ப்படியாமல் எப்பொழுதும் பாவம் செய்கிறது. மாமிசம் ஒவ்வொரு பாவமாக சுற்றி சுற்றிச் செய்கிறது, இன்றொரு பாவம் நாளையொரு பாவம். மற்றெல்லாப் பாவங்களையும் விடச் சில குறிப்பிட்ட பாவங்களைச் செய்ய மாமிசம் அதிகம் விரும்புகிறது. மனிதனின் மாமிசமானது அவனின்/அவளின் வாழ்வு முழுவதும் பாவம் செய்கிறது. இது சரியா அல்லது தவறா?
ஐந்தாவது கட்டளையை நோக்குவோமாக. “உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.” அதனை எல்லா நேரத்திலும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் அதனை மக்கள் கடைப்பிடிக்க முயல்வது தெளிவாக தெரியும். ஆகவே அதனைக் குறித்து பேசுவதை விட்டுவிடுவோம். அடுத்தது “கொலை செய்யாதிருப்பாயாக” நாம் அனைவரும் மனதால் மற்றவர்களைக் கொல்லுகிறோம். சிலர் தம் மாமிசத்திற்கு இசைந்து உண்மையாகவே கொல்கிறார்கள். ஆயினும் இதனை விட்டுவிடுவோம், ஏனெனின் கொலைச் செய்வது கொடியதொரு பாவம். மற்றவை “விபசாரம் செய்யாதிருப்பாயாக.” மற்றும் “களவு செய்யாதிருப்பாயாக” இப்பாவங்களை நம் அன்றாட வாழ்க்கையில் இலகுவாக செய்கிறோம். சில மக்களுக்கு களவு செய்வதும் விபசாரம் செய்வதும் ஒரு கலையாக இருக்கிறது. பாவம் செய்வதை அவர்கள் அன்றாட பழக்கமாக்கிவிட்டனர். அவர்கள் எதனையும் இச்சிப்பதில்லையா? (இச்சிப்பது கூட பாவம் என்று வேதாகமம் கூறுகிறது) அவர்கள் மற்றவர்களின் உடமைகளை அதனிடத்திலிருந்து எடுத்துக்கொள்வதில் (களவு) திறமைசாலிகளாயுள்ளனர். மாமிசமானது தனக்கு வேண்டிய நேரத்தில் இத்தகைய தீமைகளைச் செய்கிறது.
பத்து வகையான பாவங்களில் நாம் வெறும் இரண்டு பாவங்களை மட்டும் செய்வதாக கொள்வோம். இது நம்மை கர்த்தர் முன் நீதிமானாக்குகிறதா? -இல்லை. அது அப்படிச் செய்வதில்லை.- சிறிய அளவு பாவமும் ஒரு பாவம் என்பதால் நம் மாமிசத்தின் மூலம் கர்த்தர் முன் நாம் நீதியுடையவர்களோ, நீதிமான்களோ இல்லை. நாம் இறக்கும் வரை கர்த்தர் முன் மாமிசத்தால் பாவம் செய்வதைத் தவிர வேறுவழியில்லை. ஆகவே, ஒரு நாளாவது கர்த்தருக்கு முன் நீ சுத்தமானவனாகவும், பரிசுத்தமானவனாகவும் இருந்திருக்கிறாயா? ஆவியிலிருந்து பிரித்து மாமிசத்தை மட்டும் நோக்குவோமாக. மாமிசத்தின் மூலம் நிறைவு பெற்று கர்த்தர் முன் எப்போதும் பாவம் செய்வதில்லையா? ஒருவன் தூங்கும்போது கூட பாவம் செய்கிறான். அவன் கனவில் கூட ஆபாசமான படங்களை பார்த்து ஆனந்தமடைகிறான். அவன் கற்பனையின் மூலம் அழகிய பெண்களை யோசிக்கிறான். நாமெல்லாம் பாவம் செய்கிறோம்.
கர்த்தர் நம்மை செய்யவேண்டாம் என்று கூறுவதை மாமிசம் செய்கிறது. அவர் செய் என்பதை அது செய்வதில்லை. நம்முடைய பாவங்கள் துடைக்கப்பட்டால் கூட நம் மாமிசம் அப்படியே இருக்கிறது. நாமெப்படி நிறைவுள்ளவர்களாவது? நம்முடைய மாமிசம் முழுமையாகாவிட்டால் பரிசுத்தமாவதற்கான வழியென்ன? ஆயினும், அது இயேசுகிறிஸ்துவின் மூலம் சாத்தியமில்லையா?
நாமே அப்பபாவங்களைச் செய்தவர்கள். இயேசு முன் பாவம் செய்தோமா? -ஆம். நாம் பாவம் செய்தோம்.- நாம் இப்போது பாவம் செய்கிறோமா இல்லையா? -ஆம் செய்கிறோம்.- பாவம் செய்வதை நாம் தொடருகிறோமா? -ஆம், நாம் செய்கிறோம்.- நாம் இந்த மாமிசத்துடன் இருக்கும் கடைசி நாள் வரை பாவம் செய்கிறோம். கடைசி மூச்சு வரை பாவம் செய்வதை தவிர்க்க முடியாத பாவிகள் நாம். அப்படியானால் நம் பாவங்களிலிருந்து நாம் விடுதலையாவது எப்படி? முதலாவது, இதுவரை நீங்கள் மறுபடியும் பிறந்ததில்லை என்றால், உங்கள் பாவங்களைத் துடைக்க கர்த்தர் முன் நீங்கள் பாவிகள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். விடுதலையானதற்கு பிறகு, நாம் பாவிகள் என்று அறிக்கைச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் நாம் பாவம் செய்தோம் என்று ஒத்துக்கொள்ளவேண்டும். நல்லது என்ற அடிப்படையில் சில வேளைகளில் மாமிசத்தின் மூலம் நாம் நல்லவற்றைச் செய்தாலும், சட்டத்தின் மூலம் நாம் பாவம் செய்யும்போது, அது நம்மை நோக்கி பிரதிபலிக்கும்போது, நாம் நம் பாவங்களை ஒத்துக்கொள்ளவேண்டும். பாவத்தை பாவம் என்று நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்.
 
 
விசுவாசத்தின் மூலம் நாம் பரிசுத்தமாக்கப் படுகிறோம்
 
அதனை ஒத்துக்கொண்ட பிறகு பாவப் பிரச்சினையை நாமெப்படி கையாள்கிறோம்? நம்மை விடுவிக்கும் பொருட்டு யோவான் ஸ்நானன் மூலம் ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் இயேசு நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு சிலுவையில் தீர்க்கப்பட்டார் என்பதை விசுவாசிப்பதால் நாம் பரிசுத்தமாகிறோமா? -ஆம்.- இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நாம் மாமிசத்தின் மூலம் செய்த பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது என்பதை விசுவாசிக்கும் போது, நாம் பரிசுத்தமாகிறோம். அப்படியானால் “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற வசனத்தின் பொருள் என்ன?
விசுவாசம் கொள்வதானது ஆவியை நம்புவதிலிருக்கிறது, மாமிசத்தை நம்புவதில் அல்ல. கர்த்தரையும் அவரின் வார்த்தையையும், அவரின் சட்டத்தையும் அவரின் விடுதலையையும் விசுவாசிப்பதால் மட்டுமே நம்மை பரிசுத்தமாக்க முடியும் என்பதோடு அவரின் மீது விசுவாசமுள்ளதால் நீதிமான் ஆனபிறகு நாம் நிறைவுள்ளவர்களாவோம். இது உண்மையா இல்லையா? இது உண்மை. நாம் பாவமன்னிப்பு பெற்று நீதிமானானால் கூட, நம் சரீரமானது இன்னும் பலவீனமுள்ளதும் நிறைவிலிருந்து அதிக தூரத்தில் உள்ளதுமாக இருக்கிறது. “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும் இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.” (ரோமர் 10:10) என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுலினுடையதைப்போல், மாமிசமானது எப்போதும் பலவீனமானதும் குறைவானதாகவும் இருக்கிறது. ஆகவே, மாமிசத்தின் மூலம் நம்மால் நீதிமானாவதோ அல்லது படிப்படியாக நீதிமானாவதோ முடியாது. மாமிசத்தினால் நீதியின் வாழ்வை வாழமுடியாது.
கர்த்தரை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே நீதிமானால் வாழமுடியும். அதாவது, கர்த்தர் நமக்களித்த பாவமன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அவரின் நீதியின் மேல் நித்தியமாக சார்ந்திருக்கும் அதேவேளை நாம் பரிசுத்தமாகி நீதிமானாகவே இருக்கமுடியும். மேலும் அவரின் மீதுள்ள விசுவாசத்தினால் அழிவில்லாத வாழ்வை வாழலாம். நம்முடைய வாழ்வு கர்த்தரின் மீதுள்ள விசுவாசத்தைப் பொருத்திருக்கிறது. நாம் விசுவாசத்தினால் பரிசுத்தமாவதோடு, விசுவாசத்தினாலும் அதனால் வாழ்வதாலும் கர்த்தரின் நீதியைப் பராமரிக்க முடியும். மாமிசமானது நீதியுடையதாக இல்லாவிட்டாலும் படிப்படியாக பரிசுத்தமாக முயல்வது முட்டாள்தனம், ஏனெனில் அதற்கு வாய்ப்பே இல்லை. அவரை நம் கர்த்தராகவும், தேவனாகவும், நம் மேய்ப்பராகவும் விசுவாசிப்பதால் கர்த்தரின் உதவியை பெறுவதால் மட்டுமே நம்மால் வாழமுடியும்.
ஆகவே, பழைய ஏற்பாட்டின் ஆபகூக்கைக் குறிப்பிட்டு “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” கர்த்தரின் நீதி என்ன? அது மனிதர்களின் நீதியைப் போன்றதா? சிறிது சிறிதாக பாவங்களைக் குறைப்பது நம்மைப் பரிசுத்தப்படுகிறதா? இயேசுவை விசுவாசித்த பிறகோ அல்லது விசுவாசத்தைப் பெறுவதாலோ நாம் பாவம் செய்வதால், நாம் நிறைவானவர்களா?
நற்செய்தியினால் மட்டுமே கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நம் சரீரத்தின் மூலம் நாம் நீதிமானாகவே முடியாதாகையால் பாவமன்னிப்பு மட்டுமே நம்மை நிறைவாக பரிசுத்தப்படுத்தும். “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” நாம் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாகிறோம் என்று இது பொருள்படுகிறது. நீதிமானானபின் கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நீதிமான் வாழ்வான். நீதியுள்ளவன் நீதிமானாகி, கர்த்தரின் நீதியைப் பராமரித்து விசுவாசத்தின் மூலம் அவரின் எல்லா ஆசீர்வாதத்தையும் பெறுவான்.
 
 
விசுவாசத்தினால் நாம் வாழவேண்டும்
 
விசுவாசத்தினால் வாழ்வதென்பது அதைப்போன்றது. மனிதனின் சித்தமானது எத்தனை உறுதியாக இருந்தாலும் மணல் கோட்டையைப் போன்று இலகுவாக நொறுங்கிவிடுகின்றது. அவனோ/அவளோ “கர்த்தரே இதனைச் செய்வேன்” என்று கூறலாம். ஆயினும், மாமிசத்தால் அதனைச் செய்யமுடியாது. பாவமன்னிப்பை நாம் பெற்ற பிறகு, பாவம் சட்டம் ஆகியவற்றிலிருந்து விடுதலைப் பெற்ற வார்த்தைகளின் மீதும் கர்த்தரின் மீதும் உள்ள விசுவாசத்தினால் நாம் வாழுகிறோம். அதிக காலம் விசுவாச வாழ்வு வாழ்வதன் மூலம் சரீரமானது நல்ல பண்புள்ளதும் உயரமானதும் நேர்த்தியானதுமாகி விடுகிறதா? எப்பொழுதும் இல்லை. ஆகவே விசுவாச வாழ்க்கை என்பது கர்த்தரை முற்றிலும் விசுவாசிப்பதாகும். நற்செய்தியின் மீதுள்ள முழு விசுவாசத்தினால் நாம் நீதிமானானதோடு அவர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றோம்.
நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்க வேண்டும். அதாவது, நாம் கர்த்தர் மீதுள்ள நம்பிக்கையினால் வாழுகிறோம். இதனை நம்புகிறீர்களா? -ஆமாம்- உங்கள் சரீரத்திலிருந்து அநேகவற்றை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டதுண்டா? ‘நான் வெறும் 20% மட்டுமே எதிர்ப்பார்க்கிறேன், என்னுடைய மாமிசம் மற்றப் பகுதிகளில் சரியில்லாவிட்டாலும், இப்பகுதியில் அது நன்றாகவே இருக்கிறது` என்று நீங்கள் எண்ணியதுண்டா? ஆயினும், நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கட்டும் என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தர் மாமிசத்தினால் ஒருவன் பிழைக்க முடியாது என்று கூறுகிறார்; 0.1% கூட பிழைக்க முடியாது. பாவம் செய்யமாட்டேன் என்றும் தேவன் வரும்வரை விசுவாசத்துடனிருப்பேன் என்ற மனமும், சிறிதளவாவது மாமிசத்தின் மீது எதிர்ப்பார்ப்பும் இருக்கிறதா?
நாம் எத்தனைப் பாவங்களைச் செய்திருந்தாலும், இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருப்பதால் நாம் நீதிமான்கள். நாம் இயேசுவை விசுவாசிக்காவிட்டால், நாம் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் மாமிசத்தின்படி நாம் பாவிகளே. நாம் இயேசுவை 100% விசுவாசித்ததால் நாம் பரிசுத்தமானோம், ஆனால் நாம் அவரை 100% விசுவாசிக்காததால் பாவிகளானோம். நாம் மிகச் சிறிய அளவு பாவம் செய்தால் கர்த்தர் பிரியப்படுவாரா? நாம் மாமிசத்தின் மூலம் நீதிமானானால் அது கர்த்தரைப் பிரியப்படுத்துமா?
 
 
நம்மை நீதிமானாக்கிய கர்த்தரின் நீதி
 
ரோமர் 3:1-8 ஐ வாசிப்போமாக. “இப்படியானால் யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன? அவர்களுடைய விசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக் கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.” (ரோமர் 3:1-8)
அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?” ஒரு மனிதனை அவனின்/அவளின் மாமிசம் பாவம் செய்தாலும் கூட அவருடைய கிருபையினால் இரட்சித்தால் கர்த்தர் அநீதராவதோடு தவறானவருமாகிவிடுவாரா? “நாம் பலவீனர்கள் என்று அதிகம் அறிக்கைச் செய்யும்போது நம் எல்லாப் பாவங்களிலிமிருந்தும் இரட்சிக்க கர்த்தரின் நீதியும் அதிகமாகிறது” என்று அப்போஸ்தலனாகிய பவுல் அவனை கடிந்துகொள்பவர்களிடம் கூறினான். ஒருவன்/ஒருத்தி தன் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்துக் கொண்டிருந்தாலும் அவர்களால் பரிசுத்தமாக முடியும் என்பதைக் கேட்டு ஆச்சர்யப்படுகிறவர்களிடம் அப்போஸ்தலனாகிய பவுல் பேசுகிறான். மனிதனின் பலவீனமானது கர்த்தரின் நீதியை வெளிப்படுத்தவே என்று அவன் கூறுகிறான். சாகும்வரை தம் மாமிசத்தின் பலவீனத்தினால் பாவம் செய்வதைத்தவிர வேறு எதையும் செய்ய முடியாத மனிதர்கள் அவர்களின் பலவீனத்தின் மூலம் பெரிதான கர்த்தரின் நீதியைக் காட்டுகிறார்கள்.
97% கர்த்தரின் உதவியுடனும் 3% அவனின்/அவளின் சொந்த முயற்சியின் மூலமும் இரட்சிக்கப்படுவதனால்; கர்த்தருடைய நீதியுடன் சேர்த்து அவனின்/அவளின் முயற்சி மூலம் நீதி கிடைத்தால் அது கர்த்தரின் நீதி என்று பொருளாகாது. இயேசுவின் மூலம் சாகும் வரை தொடர்ந்து பாவம் செய்கிறவர்களை கர்த்தரால் மட்டுமே முழுமையாக இரட்சிக்கமுடியுமென பவுல் கூறுகிறான். ஆகவே நம்முடைய நீதியானது கர்த்தரின் நீதியின் செல்வத்தை வெளிப்படுத்துகிறது. மாமிசத்தினால் அது மரிக்கும் வரை பாவம் செய்வதை தவிர்க்க முடியாது; அதனால் ஒரு நாள் கூட நிறைவாக இருக்க முடியாது. இயேசு இந்த குறைபாடுள்ள பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்பது கர்த்தரின் நீதியை அதிகமாய் வெளிப்படுத்துகிறது. ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.” (ரோமர் 3:8).
நம்மால் மாமிசத்தின் மூலம் நீதிமானாக முடியுமா? பாவமன்னிப்பு பெற்ற பிறகு நம் சரீரத்தால் குறைவற்றதாகி விடமுடியுமா? மாமிசத்தால் முடியாது. உன்னாலும் என்னாலும், எந்தக் கேள்வியையும் கேட்காமல், உலகின் அனைத்து மக்களையும் தவிர்த்து, மாமிசத்தினால் நீதிமானாக முடியுமா? -இல்லை.- ஆனால் தேவன் நம்மை முற்றிலுமாக இரட்சித்தாரா இல்லையா? -ஆம்- தேவன் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக இரட்சித்தார். நாம் இயேசுவை நம் இதயப் பூர்வமாக விசுவாசித்ததால் நாம் பாவத்துடனிருப்போமா? -இல்லை.- நாம் எத்தனை அநீதியுள்ளவர்களாயிருந்தாலும் நம்மிடம் பாவமில்லை.
தேவன் கூறினார், “அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம் பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின் பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம். அது அவருடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். உன் சிரசின் பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.” (மத்தேயு 5:33-37) ஆணையிடுவதே பாவம் ஏனெனில் நம்மால் நாம் செய்த ஆணையைக் கடைப் பிடிக்க முடியாது. ஆகவே பின்னால் இதைச் செய்வேனென்று ஆணையிடவோ உறுதியளிக்கவோ வேண்டாம், அவருடைய வார்த்தைகளை விசுவாசித்தால், நீங்கள் வாழ்வீர்கள். அவருடைய நீதியை விசுவாசித்தால் நீங்கள் நீதிமான்களாவீர்கள், மேலும் அவரை நம்பினால் தேவன் உங்களுக்கு உதவுவார்.
நிறைய மாயைகள் இருக்கின்றன. நாம் மாமிசமானவர்கள் ஆனதாலே, மாமிசத்திற்கேற்ற விதிகள் இருப்பதோடு அதற்கேற்றவாறு தீர்க்கிறோம். ஆகவே, கர்த்தருடைய வார்த்தைகள் மீது விசுவாசத்துடன் தொடர்பில்லாத நீதிபதி நம்முள்ளே இருக்கிறார். நம்முள்ளே இரண்டு நீதிபதிகள் இருக்கின்றனர். ஒன்று நாமே, மற்றது இயேசுவனவர், ஆகவே இருவரும் நமக்குள்ளிருந்து ஆட்சி புரியமுயல்கிறார்கள். நாம் மாமிசத்தினால் ஆனவர்களானபடியால் நாம் மாமிசத்திற்கேற்ற சட்டங்களைச் செய்து அதன் மூலம் நியாயம் தீர்க்கிறோம். மாமிசம் நம்மிடம் கூறுகிறது, “நீ பாவம் செய்தால் கூட நல்லவனே. உன்னுடைய மாமிசமானது 100% நீதியில்லாவிட்டாலும் நான் உன்னை நீதிமான் என்று அங்கீகரிக்கிறேன்.” மாமிசத்தின் நீதிபதி எப்போதும் உனக்கு சிறந்த மதிப்பெண்களை அளிக்கிறார்.
ஆயினும், கர்த்தரின் நீதியின் நீதிபதி நாம் 100% பாவமில்லாமல் இருக்கவேண்டாமென்கிறார். அவர் பரிசுத்தர். விசுவாசத்தின் மூலம் பாவமன்னிப்பு பெறுவதன் மூலமே நம்மால் நீதிமானாக முடியும். ஆகவே அவருடைய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் ஏற்கெனவே கர்த்தரின் நீதியை அடைந்துவிட்டார்கள். கர்த்தரை நம்புவோரே உண்மையில் விசுவாசித்திருப்பர். அவர்கள் கர்த்தருடைய உதவியினால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பர். நீதிமான் விசுவாசத்தினால் பிழைத்திருக்கட்டும். இதன் பொருள் என்னவென்றால் அவிசுவாசிகளாலும் மாமிசத்தின்படி வாழ்பவர்களாலும் வாழ்ந்திருக்க முடியாது. ஒரு பெரிய ஔவியத்தின் சிறிய பகுதியை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். சூப்பானது வெள்ளை நிறமாகும் வரை எலும்பை மீண்டும் மீண்டும் கொதிக்கச் செய்வதைப் போன்று மீண்டும் மீண்டும் அதன் பொருளை விளக்கமாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
 
நமக்கு நம்பிக்கை வேண்டும்
 
வேதாகமத்தை தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானது, ஆனால் அதனை எத்தனையாய் விசுவாசிக்கிறோம் என்பது மிக மிக முக்கியமானது. வேதாகமத்திலுள்ள கர்த்தரின் படைப்பை மட்டும் சில மக்கள் விசுவாசிக்கிறார்கள். சில மக்கள் கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தாரென்றும் இயேசு மட்டுமே மூலப்பாவத்தைக் கழுவினார் என்றும் விசுவாசிக்கிறார்கள். அவர்களுடைய அன்றாடப் பாவங்கள் ஒவ்வொரு நாளும் கழுவப்படவேண்டுமென விசுவாசிக்கிறார்கள். மாமிசத்தின் சட்டத்திற்கேற்ப அவர்கள் சொந்த தீர்ப்பை வழங்குகிறார்கள். நாம் எத்தனையாய் விசுவாசிக்கிறோம்? நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கட்டும். நீதிமானாவதும் வாழ்வதும் விசுவாசத்தினாலேயே சாத்தியமாகிறது. தொடக்கத்திலிருந்து முடிவு வரை கர்த்தர் மீது நமக்கு விசுவாசம் தேவை.
ஆகவே நீ எத்தனையாய் விசுவாசிக்கிறாய்? ‘நான் சரியானவன், என் சரீரம் நல்லது அல்லது கர்த்தரை விசுவாசிப்பதற்கு நான் மிகவும் பலவீனமானவன்` என்றெண்ணி, இந்த மனித சிந்தனைகளினால் கட்டுண்டு, நீ விரும்புவதைப் போல் உன்னை அளக்கிறாயா? இன்று 80% உனக்கு நீயே கொடுத்து நாளை 95% கொடுத்து வேறு சில நாட்களில் ‘நான் பிறந்திருக்காவிட்டால் நலமாயிருந்திருக்கும்` என்றெண்ணி 5% கொடுப்பது போன்று நீயே உனக்கு மதிப்பெண் கொடுத்ததுண்டா? -ஆம்- நான் அப்படியே செய்தேன்.
நான் சிலவேளைகளின் அப்படித் தீவிரமாக இருப்பேன். நான் என்னை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கும்போது, நான் நினைப்பேன், “நான், கர்த்தரை அறிந்து அவரை விசுவாசியாமல் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும். விசுவாசத்தினால் பக்திவாழ்வு வாழ்வது கடினமாவதைப் போல் தோன்றுகிறது. இதுவரை அது பயங்கரமானதாக இருந்துள்ளது. நான் எதிர்காலத்தைப் பார்ப்பதா அல்லது இறந்த காலத்தை நினைவுப்படுத்துவதா என்ற குழப்பத்திலிருக்கிறேன். இதுவரை எப்படியோ விசுவாச வாழ்வு வாழ்ந்தது மதிப்பிற்குரியது. ஆனால் தேவனே, இப்போது முதல் உம்முடன் என்னால் நடக்க முடியாது. உம்மை அறிந்து கொண்டதிலிருந்து நான் பாவத்தைக் குறித்து எத்தனை உணர்ச்சி மிக்கவன் ஆகிப்போனேன். உம்மை நான் அறிந்ததினாலே அநேக சிந்தனைகளும் கட்டுப்பாடுகளும் என்னிடமிருந்து வந்தன. உம்மைக் குறித்து சரியாக தெரிந்து கொள்ளாமல் வெறுமனே உம்மைப் பின்பற்றினேன். ஆனால் இப்பொழுது உம்மைப் பின்பற்ற சுயதைரியம் என்னிடமில்லை ஏன்? அது ஏனெனில் கர்த்தர் பரிசுத்தமானவர் என்றும் நிறைவானவர் என்றும் எனக்குத் தெரியும். ஆ! கர்த்தரே, இனிமேலும் உம்மைப் பின்பற்ற முடியாது. எனக்கு தைரியமில்லை.”
ஆகவே, கர்த்தர் நம்மை விசுவாசத்தினால் வாழும்படி கூறினார். ஏனெனில் அவருக்கு நம்மை நன்கு தெரியும். அவர் கூறுகிறார், நீதிமானாயிருப்பதை நீ பராமரிப்பதோடு விசுவாசத்தினால் ஆசீர்வதிக்கப் பட்டவனாய் இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உன் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது. சட்டத்தின் மூலம் உன் மாமிசத்தை பிரதிபலித்தால் நீ எப்போதும் பாவம் செய்து கொண்டேயிருப்பாய். ஆகவே உன்னால் பாவம் செய்யாமலிருக்க முடியாது என்பதை ஒத்துக்கொள். உன்னுடைய எல்லாப் பாவங்களையும் உன் இரட்சகர் ஏற்றுக்கொண்டாரா இல்லையா? -ஆம், அவர் செய்தார்.- உன்னுடைய எல்லாப் பாவங்களும் உன் இரட்சகர் மீது சுமத்தப்பட்டதா இல்லையா? -இல்லை.- தேவன் உன்னை இரட்சித்தாரா இல்லையா? -ஆம்- அப்படியானால் மேகமூட்டமுள்ள இருண்ட நாட்கள் இந்த செய்யுளைப் போன்று வெளிச்சமுள்ளதாயிருக்கும்: “இன்று என் ஆத்துமாவில் வெளிச்சமுண்டாயிற்று.”
 
 
நம்மால் மீண்டும் பாவியாக முடியாது
 
நம் எதிர்காலத்தை நாம் நினைக்கையில் அது நம்பிக்கையில்லாததாக இருக்கலாம், ஆனால் தேவனை விசுவாசத்துடன் நோக்குகையில் அது வெயிலாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறது. ஆகவே, நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கட்டும் என்று கர்த்தர் கூறினார். இதனை நீ நம்புகிறாயா? -ஆம்.- - விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டதோடு அதனாலேயே நாம் வாழுகிறோம். நாம் யாரை விசுவாசித்திருக்கிறோம்? கர்த்தரை விசுவாசிப்பதன் மூலம் நாம் வாழுகிறோம். நீதிமானால் மட்டுமே விசுவாசத்தினால் பிழைத்திருக்க முடியும். அதனை நீ விசுவாசிக்கிறாயா? -ஆம்.- மாமிசத்திற்கு நன்கு பயிற்சியளிப்பதால், கர்த்தரின் நீதியை உன்னால் பராமரிக்க முடியுமா? -இல்லை.- மாமிசம் தீமை செய்யும்போது கர்த்தரின் நீதி மதிப்புக்குறைந்ததாகி விடுகிறதா? நாம் மீண்டும் பாவியாகிறோமா? -இல்லை.-
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியார் 2:18 இல் கூறினான். “நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.” இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவனின்/அவளின் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்றும் அவனுக்காக/அவளுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று விசுவாசிக்கும் ஒரு நபர், மீண்டும் பாவியாவதேயில்லை. இயேசு மறுக்காத ஒரு நபர் ஒரேதரமாக பரிசுத்தமாக்கப்பட்டு பாவமில்லாதவராகிறார், ஏனெனில் அவனுடைய/அவளுடைய அனைத்துப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதால் அவனோ/அவளோ மீண்டும் பாவியாவதில்லை. இதனைப் புரிந்து கொண்டீர்களா? -ஆம்.-
நம்மை இரட்சித்த கர்த்தர் நம்முடைய தேவனும் தந்தையுமாகவிருக்கிறார். உலகின் முடிவுவரை கர்த்தர் நம்முடன் இருந்து நமக்கு உதவுகிறார். அதனாலேயே அவர் “விசுவாசத்தினால் வாழ்ந்திரு. என்னை விசுவாசித்தால் நான் உனக்கு உதவுவேன். மறுபடியும் பிறந்தவர்களுக்கு தேவதூதர்கள் சேவைப்புரிவார்கள்.” என்று கூறினார். நம்மைக் குறித்த அனைத்தையும் அவர்கள் தேவனிடம் கூறுகிறார்கள். கர்த்தர் நம்மை அவர்களின் பிள்ளைகளாக்கினார். நாம் இயற்கையாகவே பாவிகள், மாமிசத்தின் செய்கைகளினால் நம்மால் நீதிமானாக முடியாது, மாறாக விசுவாசத்தினால் நாம் நீதிமான் ஆனோம்.
நாம் தேவனுக்கு நன்றி கூறுகிறோம். விசுவாசத்தினால் தேவன் நம் மேய்ப்பரும் தந்தையுமானார்.