• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 1-4] நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான் (ரோமர் 1:17-18)

2021.04.21 23
(ரோமர் 1:17-18)
“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய் தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.”
 
 
விசுவாசத்தினால் நாம் வாழவேண்டும்
 
“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதப்பட்டுள்ளது. நாம் விசுவாசத்தினால் வாழுகிறோமா இல்லையா? நீதிமான் வாழும் ஒரே வழியானது விசுவாசம் மட்டுமே. விசுவாசம் நீதிமானை வாழ அனுமதிக்கிறது. நாம் கர்த்தரை விசுவாசிக்கும்போது நம் வாழ்க்கையை எல்லாவற்றுடனும் தொடரலாம். நீதிமான் மட்டுமே விசுவாசத்தினாலே வாழுகிறான். ‘மட்டுமே` என்ற சொல்லின் பொருள் நீதிமானைத் தவிர வேறு யாராலும் விசுவாசத்தினால் வாழமுடியாது என்பதே. அப்படியானால் பாவிகளின் கதி என்ன? பாவிகளினால் விசுவாசத்தினால் வாழமுடியாது. இப்போது நீங்கள் விசுவாசத்தினால் வாழுகிறீர்களா? நாம் விசுவாசத்தினால் வாழவேண்டும்.
உண்மையான விசுவாசத்தை கற்பதற்கு அதிக காலம் பிடிக்கிறது. நாம் அறிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் நாம் கர்த்தரை விசுவாசிக்கும் போது வாழுகிறோம், அவரை விசுவாசிக்காதபோது மரிக்கிறோம் என்பதே. நீதிமான் விசுவாசத்தினால் வாழ்வதே விதி என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
பறவைகளுக்கு இறக்கைகள் இருக்கின்றன. ஆனால் அவை அவற்றை உபயோகிக்கவில்லை என்றால், அவை பூமியில் உலவும் விலங்குகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்படும். ஆகவே நீதிமான்கள் விசுவாசத்தினால் வாழ நியமிக்கப்பட்டவர்கள். நீதிமான்கள் விசுவாசத்தினால் வாழவேண்டும் என்று கர்த்தர் விதித்தார். அவர்கள் விசுவாசத்தினால் வாழத்தவறினால், அவர்களின் ஆவி இறந்துபோகும்.
ஒரு கிறிஸ்தவனின் வாழ்வும் உண்மையான வழியும் விசுவாசத்திலிருந்தே தொடங்குகிறது. நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்த பிறகு நீதிமான்களால் மனித சமூகத்தில் எப்படி மீண்டும் வாழமுடிகிறது. விசுவாசத்தினால் வாழ்வதே நமக்கான ஒரே வழி என்று நாம் அறிந்திருக்கவேண்டும்.
இதனைப் புரிந்து கொள்கிறீர்களா? இதுவே நீதிமானின் வாழ்வு. விசுவாசம் இல்லாவிட்டால் நாம் மரிப்போம், கடினமான வேளைகளுடன் ஒத்துப்போகும் வல்லமை இருக்காது. விசுவாசத்தின்படி வாழாமலும் விசுவாசத்தை உபயோகிக்காமலும் ஒரு நபர் இருந்தால், அவர் கஷ்டத்திற்கு உள்ளாகும்போது, முடிவில் அவனோ/அவளோ மரித்துப் போவர். ஒருவன் கர்த்தர் மீது விசுவாசம் வைத்து “தேவனே, நான் உம்மை விசுவாசித்திருக்கிறேன்” என்று அறிக்கைச் செய்யும்போது அவனோ/அவளோ அருகதையற்றவர்களாகவும் பலவீனர்களாகவும் இருந்தாலும், வாழமுடியும். கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தினால் அவனாலும்/அவளாலும் வாழமுடியும். அவனும்/அவளும் அவரை விசுவாசிப்பதற்கேற்ப கர்த்தர் உதவி செய்வதோடு கிரியை புரிகிறார்.
 
 
நம்முடைய எல்லைகளை உணரும்போது, நாம் விசுவாசிப்பதைக் கற்கிறோம்
 
நீங்கள் விசுவாசத்தினால் வாழ்ந்தீர்களா இல்லையா என்று எண்ணவேண்டுமென நான் விரும்புகிறேன். அவனோ/அவளோ மறுபடியும் பிறந்தவுடனேயே விசுவாசத்தால் வாழத் தொடங்குவதில்லை. அவனோ/அவளோ முதலில் சூழ்நிலைக்கேற்றவாறு வாழுகிறார்கள். ஆகவே அவனோ/ அவளோ விசுவாசத்தினால் எப்படி வாழ்வது என்பதை முதலில் கற்பதில்லை. ஏன்? ஏனெனில் ஒருவர் தன் சொந்த கைகளினாலும் கால்களினாலும் பணம் சம்பாதித்து இவ்வுலகில் வாழமுடியும், இதற்கு கர்த்தர் மேல் உள்ள விசுவாசத்தை பயன்படுத்துவது தேவயற்றது. நம்முடைய சரீர பலத்தினாலும் முயற்சியினாலும் நம்மால் வாழ முடியுமா என்று ஆச்சர்யப்படும்போது நம்முடைய எல்லைகளை உணருகிறோம். நம்மால் வாழமுடியாது என்று உணருகிறோம். அப்படியானால் நாம் வாழ்வதெப்படி? நாம் விசுவாசத்தைப் பயன் படுத்தவேண்டும். நாம் விசுவாசத்தை பயன்படுத்தி கர்த்தரை விசுவாசிக்காவிட்டால் நம்மால் உண்மையாகவே வாழமுடியாது.
சிறுசிறு காரியங்களின் மூலமும் நாம் விசுவாசத்தினால் வாழவேண்டும். “தேவனே! நான் உம்மை நம்பியிருக்கிறேன், தயவுசெய்து எனக்கு உதவும்” என்று கூறவேண்டும். கர்த்தரிடம் இக்கட்டான நேரங்களில் “தேவனே! நான் உம்மை நம்பியிருக்கிறேன், நீ எனக்கு உதவுவீர் என்று நம்புகிறேன், நான் உம்மை நம்பியிருக்கிறேன்.” என்று கூறுவதன் மூலம், அது ஒரு சிறிய காரியமாக இருந்தாலும் நம்மால் விசுவாசத்தினால் வாழமுடியுமென நிரூபிக்கின்றோம்.
நாம் விசுவாசிக்கும்போது மட்டுமே பலமடைவதை உணருவதோடு, அவற்றைச் செய்து முடிக்கும் எதிர்ப்பார்ப்பையும் பெறுகிறோம். ஆயினும் நாம் கர்த்தரை விசுவாசிக்காதபோது, கர்த்தர் அதனை நாம் செய்வதற்காக அனுமதித்தார் என்பதை உணர்ந்துகொள்வதில்லை. ஆகவே நாம் விசுவாசத்தை பட்டறியாததால் தோற்றுப்போகிறோம். விசுவாசத்தினால் இலகுவாக ஒரு பிரச்சினையைத் தீர்க்கலாம் என்றாலும் அதனை நம்மால் தீர்க்க முடியாது. விசுவாசத்தினால் வாழ்வதென்பது எல்லா வழிகளிலும் நல்லது, ஆகவே விசுவாசத்தினால் எப்படி வாழ்வது என்று நாம் கற்கவேண்டும்.
பழைய ஏற்பாட்டின் மக்கள் விசுவாசத்தினால் வாழ்ந்தார்கள், மேலும் புதிய ஏற்பாட்டிலும் கூட மக்கள் விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுவது சரியானதே. நம்முடைய இரட்சிப்பில் நாம் எப்படி உறுதியுடனிருக்கிறோம்? இயேசுகிறிஸ்து செய்தவற்றை விசுவாசிப்பதால் நாம் நீதிமானானோமா? ஆம் அப்படித்தான். அவரை விசுவாசிப்பதன் மூலம் நாம் வாழும்போது கர்த்தர் நமக்கு உதவுகிறார். முதலில், கர்த்தரை விசுவாசித்து நீ வேண்டுவதைக் கேள், அப்பொழுது கர்த்தர் உதவுவார். கர்த்தர் நமக்கு இரட்சிப்பை அருளியதுபோல் மற்றவற்றையும் நமக்குத் தருகிறார். நம்முடைய வாழ்வின் எல்லாப் பாகத்திலும் விசுவாசம் கிட்டுகிறது. அதுவே உயிர், நீதிமானின் உயிர் விசுவாசத்தில் இருக்கிறது. விசுவாசம் உயிராகும். அது மாமிசத்தின் இரத்தத்தைப்போன்றது. மனிதன் அவனின்/அவளின் மாமிசத்தில் இரத்தமில்லாதபோது மரித்துபோவது போல் மறுபடியும் பிறந்த ஒரு நபரிடம் விசுவாசம் இல்லாதபோது அவனின்/அவளின் ஆவி மரித்துப்போகிறது. கர்த்தரை நாம் விசுவாசிப்பதுடன் “கர்த்தரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன், நீர் எனக்கு உதவி பிரச்சினையைத் தீர்ப்பீர் என்று விசுவாசிக்கிறேன்” என்று அறிக்கைச் செய்யவேண்டும்.
அந்த விசுவாசமே முதலில் கர்த்தரின் இராஜ்யத்தைத் தேடுகிறது. நமக்கு என்ன தேவை என்று தேடுவதற்கு முன்பு கர்த்தர் நம் ஜெபத்திற்கு கண்டிப்பாக பதிலளிப்பார் என்று விசுவாசிக்கவேண்டும். நாம் விசுவாசத்தினால் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. பூமியில் நாம் வாழும்போது ஒரு நாளில் நம் சரீரத்திலுள்ளவைகள் தீர்ந்து போகும். நாம் அபாயத்தையோ தவிர்க்க முடியாத சூழ்நிலையையோ ஒரு நாள் சந்திப்போம். அந்நேரத்தில் நம்மிடமிருக்கவேண்டிய மிக முக்கியமானது கர்த்தரிடமுள்ள விசுவாசமாகும். கர்த்தர் நம்மை இரட்சித்தார் அவர் நமக்கு உதவுகிறார் மற்றும் அவர் நல்லவர் என்பனவற்றில் விசுவாசமிருக்கவேண்டும்.
அதற்கு மேலும், அது கர்த்தருக்கு ஏற்புடையதாக இருந்தால் நாம் எதற்காக ஜெபித்து எதனைத் தேடுகிறோமோ அதனை கர்த்தர் கொடுக்கிறார் என்ற விசுவாசம் நமக்குத் தேவை. நம் சரீரத்திலுள்ளவைகள் தீர்ந்த பிறகு விசுவாசம் அவர் கிருபையினுள் வாழ நம்மை வழி நடத்துகிறது. கர்த்தருக்கு முன்பு நாம் எதைச் செய்ய விரும்புகிறோமோ, அதற்கு கர்த்தரின் மீதுள்ள விசுவாசம் ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கிறது.
 
 
சிறிய காரியங்களின் மூலம் விசுவாசத்தை நாம் பயன்படுத்த வேண்டும்
 
நாம் வாழவேண்டியது எப்படி? இப்படி நாம் ஜெபிக்கவேண்டும். “கர்த்தரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன், என்னிடம் இதனில் குறைபாடுள்ளது, ஆகவே எனக்கு உதவும், தேவனே.” நம்முடைய மூல பலவீனத்தைக் குறித்து நான் பேசவில்லை. நாம் விசுவாசத்தினால் வாழ்வோமாக. “என் அன்றாட வாழ்க்கைக்கு இவையெல்லாம் தேவைப்படுகிறது. தயவுசெய்து எனக்கு இரங்கும், தேவனே. நீர் அதனை எனக்குச் செய்வீர் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறவேண்டும். விசுவாசத்தினால் வாழும் ஒரு நபர் சிறிய காரியங்களில் தொடங்கி கர்த்தரைத் தேடவேண்டும். உதாரணமாக “தேவனே, என்னிடம் பற்பசை இல்லை, தயவுசெய்து எனக்கு பற்பசை தாரும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்.” ஆகவே, நாம் அவரை நம்பி அவரைத் தேடும்போது கர்த்தர் பதிலளிக்கிறார் என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
பாவிகள் எதனால் வாழுகின்றனர்? பாவிகள் தம் சொந்த பலத்தினால் வாழுகிறார்கள், ஆனல் நீதிமான்களோ விசுவாசத்தினால் வாழுகின்றனர். நீதிமான் விசுவாசத்தினால் வாழுகிறான் என்று நாம் அறியும்போது நம் வாழ்வில் விசுவாசத்தைப் பயன்படுத்தலாம். நம்மிடம் இருப்பதனால் நாம் வாழவில்லை, ஆனால் விசுவாசத்தினால் வாழுகிறோம். இதனைக் காண்கிறீர்களா? “நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கட்டும்.” நீதிமானிற்கு அதிகம் தேவைப்படுவது விசுவாசமே, ஆனால் நம்மிடமுள்ள அனைத்தும் தீர்ந்த பிறகே விசுவாசத்தை உபயோகப்படுத்துகிறோம்.
நம்முடைய பலமும் மற்ற அனைத்தும் முடிவுற்ற பிறகே நாம் விசுவாசத்தை உபயோகிக்கிறோம். ஆயினும், விசுவாசத்தினால் வாழ்வதே உண்மை என்றும் அது அவரின் உறுதிமொழியின் அடிப்படையில் அமைந்த கர்த்தரின் கட்டளை என்றும், அது நம் வாழ்க்கையில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றும் நாம் அறிந்துகொள்ளவெண்டும். விசுவாசத்தினால் வாழுங்கள். கர்த்தரை விசுவாசித்து அவரைத் தேடுங்கள். அப்பொழுது நமக்கு தேவையானதை நாம் பெற்றுக்கொள்ளலாம். நம்முடைய சிறு காரியங்களின் மூலம் விசுவாசத்தினால் எப்படி வாழ்வது என்று கற்று அதன் பிறகு படிப்படியாக உறுதியான விசுவாசம் கொள்ளலாம்.
தாவீது கோலியாத்தை ஐந்து கூழாங்கற்களினால் விசுவாசத்தின் மூலம் கொன்றான். கர்த்தர் தன்னுடன் இருக்கிறார் என்ற விசுவாசத்தினால் அவன் கோலியாத்தைக் கொன்றான், அவன் நினைத்தான், ‘கர்த்தரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன், அவனைக் கொல்வது உமது சித்தமாயிருக்கிறது` அவன் கோலியாத்திடம் கூறினான் “நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.” (1 சாமுவேல் 17:45). ஆபிரகாம் அழைக்கப்பட்டபோது, தனக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்களை விட்டு விசுவாசத்தினால் வெளியே வேறொரு இடத்திற்குச் செல்ல கீழ்ப்படிந்தான்; தான் எங்கே போகிறோம் என்று அறியாமலேயே வெளியே சென்றான்.
நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கட்டும். நான்கு நற்செய்திகளிலும் ‘விசுவாசத்தினால் வாழவும்` என்பது போன்ற அநேக சொற்றொடர்கள் உள்ளன. ஆயினும், கிறிஸ்தவ வாழ்க்கையான, நீதிமானின் வாழ்க்கை என்பது விசுவாசத்தினால் வாழ்வது என்று எத்தனை மக்களுக்குத் தெரியும்? நாம் சார்ந்திருக்கும் பொருட்களையும் உடலின் வலிமையையும் நாம் விட்டுவிடவேண்டும் என்று நான் கூறவில்லை. விசுவாசத்தினால் வாழ்வதற்கு உலகிலுள்ள ஏதோ ஒன்றில் சார்ந்திருக்கும் மனதை நீங்கள் கைவிடவேண்டும் என்று ஆலோசனைக் கூறினேன். அப்படியானால் எதை விசுவாசிப்பது? கர்த்தரை நாம் விசுவாசித்து நமக்கு வேண்டியதை தேடும்போது கர்த்தர் கிரியை புரிகிறார். அவர் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் என்றும் ஆலயத்தின் தலைவரையும் விசுவாசிப்பீர்களாக. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் விசுவாசத்தினால் வாழவேண்டும் ஏனெனில் நாம் தன்மையில் நீதிமானாயிருக்கிறோம்.
இதயப்பூர்வமாக நாம் சார்ந்திருப்பவற்றை விட்டுவிடவேண்டும். நாம் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும், விசுவாசத்தினால் கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும், அது எத்தனைக் கடினமானது என்பது பொருட்டல்ல. நாம் விசுவாசத்தினால் வாழ்ந்து அதனை அனுபவிக்க வேண்டும். அப்பொழுது நாம் தேவனுடன் அரசாள்வோம், உலக மக்களால் நாம் கடிந்துகொள்ளப்படமாட்டோம். கர்த்தர் “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி” (சங்கீதம் 23:5) என்று கூறுகிறார். மிகப்பெரிய கைமாறானது கர்த்தருக்கு முன் ஆசீர்வாதத்துடனிருப்பதே. சூழ்நிலையின் முன்னேற்றத்தினால் அல்லது விசுவாசத்தினால் வாழவேண்டும்.
நீங்கள் எப்போதாவது விசுவாசத்தினால் வாழ்ந்ததுண்டா? கணக்கிலடங்காத மக்கள் விசுவாசத்தினால் வாழவேயில்லை, ஆனால் தாம் ஜெபிக்கும்போது கர்த்தரின் செய்கைகளை அனுபவித்த மக்கள் இருக்கின்றனர். இதனை ஒருமுறை மட்டுமில்லாமல் தொடர்ந்து அனுபவிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும். நீதிமான் வாழவேண்டிய வழி இதுவே. நாம் இவ்வுலகிலுள்ளவற்றின் மீது சார்ந்திருக்காமல் கர்த்தரை விசுவாசிக்கவேண்டும். அதுவே நீதிமானின் வாழ்க்கையாகும். நாம் அதுபோன்று வாழவேண்டும். நாம் விசுவாசத்தினாலே மட்டுமே வாழமுடியும் என்பதோடு கர்த்தரின் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறுவோம்.
 
 
கர்த்தருக்கு முன் நமக்கு அதிகம் தேவைப்படுவது விசுவாசமே
 
விசுவாசம் கொள்வது மிகவும் கடினம்போல் தோன்றுகிறது, ஆனால் அது மிகவும் இலகுவானது. கர்த்தர் மீதுள்ள விசுவாசித்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நாம் கர்த்தரை மட்டுமே விசுவாசிக்கவேண்டும். மக்கள், கர்த்தரை விசுவாசிப்பது கடினம் என்று எண்ணுகிறார்கள், ஆனால் உண்மையில் அது அத்தனைக் கடினமானதல்ல. நான் என் தந்தையை “தந்தை” என்றழைக்கிறேன். அத்துடன் அவர் என்னுடைய உண்மையான தந்தையாக இருப்பதால் அவரை என் தந்தை என்று விசுவாசிக்கிறேன். அவர் என் தந்தையாயிருப்பது என்னுடைய சொந்த விசுவாசத்தினால் ஏற்பட்டதல்ல. கர்த்தர் மீதுள்ள விசுவாசம் இந்தப்புள்ளியிலிருந்து தொடங்குகிறது. நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன் ஏன்? ஏனெனில் கர்த்தர் எப்பொழுதும் நீதிமான்களுடன் இருப்பதோடு, அவர்களை நேசித்து அவர்களின் தந்தையும் இரட்சகருமாகிறார். இரண்டாவதாக, நாம் அவரில் விசுவாசமாயிருந்தால் சிறுபிள்ளை அவனின்/அவளின் தேவையை அவனுடைய/அவளுடைய தந்தையிடம் கேட்பது போல, நமக்கு வேண்டியதை நாம் அவரிடம் கேட்கிறோம். கடைசியாக பிதாவாகிய கர்த்தர் நாம் தேடுவதற்கு பதிலளிக்கிறார். கர்த்தரை விசுவாசிப்பதானது இந்த சாதாரண உள்ள உறுதியின் அடிப்படையில் தொடங்குகிறது.
நாம் விசுவாசத்தினால் வாழவேண்டும், ஏனெனில் கர்த்தர் அல்ஃபாவும் ஒமேகாவும், முதலும் கடைசியுமாக இருக்கிறார். நம்முடைய வாழ்வெல்லாம் விசுவாசத்துடன் தொடர்புடையது. நாமெல்லாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டோம். விசுவாசத்தின் மூலமாக அவரால் கவனிக்கப்பெற்றோம். அந்த விசுவாசமே “கர்த்தரே, நான் உம்மை நம்பியிருக்கிறேன். என்னைப் பொறுப்பெடுத்து தயவுசெய்து கவனித்துக்கொள்ளும்” என்று கூற அனுமதிக்கிறது. சாத்தானுடைய பயமுறுத்தல்களினால் நாம் பலவீனமாகவும் பயத்துடனும் இருக்கும்போது நாம் என்ன செய்யவேண்டும்? நாம் கர்த்தரை விசுவாசிக்கவேண்டும், “கர்த்தரே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.” என்று கூற வேண்டும். நாம் தவறாக எண்ணலாம், அதன் பலனாக நாம் சாத்தானால் பிடிபட்டு முறியடிக்கப்படலாம். இந்த நிகழ்வைப் பொறுத்தமட்டில், “கர்த்தரே, தயவுசெய்து என்னைப் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும். நான் உம்மை விசுவாசிக்கிறேன். கண்டிப்பாக என்னை பொறுப்பெடுத்துக்கொள்ளும்” என்று கூறி ஜெபித்து கர்த்தரை விசுவாசித்தால், கர்த்தர் நம் தந்தையாக இருப்பதால் அவர் நம்மைப் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். நாம் தவறான ஜெபங்களை ஏறெடுத்தாலும், அவருக்கு நம்மைத் தெரிந்திருப்பதால், கர்த்தர் நம்மை எப்படியோ பொறுப்பெடுத்துக்கொள்கிறார். மிகவும் முக்கியமானது என்னவென்றால் விசுவாசிப்பதே. அது மிகவும் இலகுவானது. கர்த்தர் கொடுத்த விசுவாசத்தை உபயோகி, அப்பொழுது அவர் உன்னை விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு வழி நடத்துவார். கர்த்தர் இருந்தாலும் கூட நாம் விசுவாசிக்காவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை. நாம் கர்த்தரை விசுவாசித்தால் விசுவாச வாழ்வு வாழ வருகிறோம்.
 
 
விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு
 
ரோமர் 1:17 கூறுகிறது “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” நம்முடைய விசுவாசத்தை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தினால் நாம் விசுவாசத்தின் மக்களாவோம். நீங்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டுமென நாம் விரும்புகிறேன். நாம் கர்த்தரை விசுவாசிக்காவிட்டால் அவர் உண்மையாகவே இருந்தால் கூட கர்த்தர் இல்லை. கர்த்தர் உயிருடனிருக்கிறார், அவர் நம்மை இரட்சித்தார் என்று நாம் விசுவாசிக்கும்போது நீங்கள் விசுவாசத்திலிருந்து விசுவாசத்தை அடைகிறீர்கள்.
நீங்கள் விசுவாசமிக்க நபராகும் போது, கர்த்தருடையது விசுவாசத்தினால் உங்களுடையதாகிறது. ரோமர் 1:17 இல் வேதாகமம் கூறுவது என்னவென்றால் விசுவாசத்தின் தொடக்கமும் முடிவும் விசுவாசமாகும். “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது” ஆகவே, கர்த்தர் நம்மை இரட்சித்தார் என்று விசுவாசிக்கும்போது நம்மால் இரட்சிக்கப்படவும் விசுவாசத்தின் மக்களாகவும் முடியும். நாம் விசுவாசிக்காவிட்டால் விசுவாசத்தின் பிள்ளைகளாக நம்மால் முடியாது. அவரை விசுவாசிக்கையில் நாம் நேர்மையாக நம் வாழ்வுக்கு தேவையானவற்றைத் தேடும்பொழுது கர்த்தர் பதிலளிக்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 1:17 இல் கூறுவது, அந்த வசனம் சிறிதானாலும் மிகவும் முக்கியமானது. நீதிமான் எப்படி வாழ்வது என்று நீங்கள் புரிந்துகொண்டீர்களா? “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” விசுவாசமானது பாவிகளுக்கின்றி, நீதிமான்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.
இயேசு அவர்களின் இரட்சகர் என்ற விசுவாசமே பாவிகளுக்கு முதலில் தேவைப்படும் ஒன்றாகும். ஆயினும் மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் நம் வாழ்வில் விசுவாசத்துடனிருக்கலாம். நாம் வாழும்போது ஒன்றிரண்டு காரியங்கள் மட்டும் தேவைப்படுகிறதா? இல்லை. மிகவும் முக்கியமானதோ, அவசியமானதோ நாம் செய்ய வேண்டியவை அநேகம் இருக்கின்றன. எல்லாக் காரியங்களிலும் நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான். இதனை நீ புரிந்து கொள்கிறாயா? நாம் விசுவாசத்தினால் வாழவேண்டும். நாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டோம். அபாயங்களிலிருந்து விசுவாசத்தினால் காக்கப்பட்டோம். நாம் விசுவாசத்தினால் ஜெபிக்கும்போது கர்த்தர் பதிலளிக்கிறார். நாம் பலவீனர்களாக இருந்தாலும் நாம் விசுவாசத்தினால் வாழ்ந்து ஜெபிக்கவேண்டும். எல்லாவற்றிலும், திருமணத்திலிருந்து நற்செய்தியைப் பிரசங்கிப்பது வரை எல்லாவற்றிற்கும் விசுவாசம் தேவை. நற்செய்தியை யாருக்காவது நாம் பிரசங்கிக்கும்போது விசுவாசம் நம்மை இப்படி ஜெபிக்கச் செய்கிறது. “கர்த்தரே, நீர் அந்த ஆத்துமாவை இரட்சித்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன்.” நாம் விசுவாசத்தினால் அனைத்தையும் செய்கிறோம்.
நற்செய்தியை விசுவாசமில்லாமல் நம்மால் பிரசங்கிக்க முடியாது. விசுவாசத்தினாலேயே நம்மால் பிரசங்கிக்க முடியும். நற்செய்தியை நாம் விசுவாசத்தின் மூலம் பிரசங்கிக்கும்போது மக்கள் இரட்சிக்கப்படுவர். நீங்கள் எப்போதாவது விசுவாசத்தினால் வாழ்ந்ததுண்டா? தாம் விசுவாசத்தினால் வாழவேண்டும் என்று தெரியாமல், விசுவாசமில்லாமல் வாழும் மக்கள், கடினமானவற்றைச் சந்திக்கும்போது கற்பாறையில் மோதிக் கொள்கிறார்கள். அவர்கள் தம் வல்லமையை காலி செய்த பிறகே தேடுகிறார்கள், ஆகவே முடிவில், அவர்கள் ஏதோ ஒன்றில் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விசுவாசத்தின் மேல் மன உறுதி இருப்பதில்லாததோடு, “என்னால் சாகமுடியாதாகையால் நான் விருப்பமில்லாமல் வாழுகிறேன்” என்று அவர்கள் கூறுவது போல் விருப்பமில்லாமல் வாழுகிறார்கள்.
ஆனால் நீதிமான்கள் விசுவாசத்தினால் கறாராகவும் நல்லவற்றை நாடுபவர்களாகவும் தம் வாழ்வை வாழுகிறார்கள்; அவர்கள் விசுவாசித்து, தேடி பதில் பெறுகிறார்கள். நம்மிடம் விசுவாசம் இல்லை என்றால் தேவையில்லாத சிந்தனைகளும் அவிசுவாசமும் அங்கிருக்கும். அப்பொழுது நம்மால் ஆலயத்துடன் நடக்க முடியாது. விசுவாசமில்லாமல் கர்த்தருடன் எப்படி நம்மால் நடக்கமுடியும்? மாமிசத்தில் விசுவாசிப்பதற்கு எதுவும் இருக்கிறதா? எதுவுமில்லை. நாமெப்படி விசுவாசிக்கமுடியும்? நாம் கர்த்தரை விசுவாசிக்காவிட்டால் நம்மால் விசுவாசத்துடனிருக்க முடியாது. நாம் விசுவாசத்தில் வாழும்போது ஆலயத்தைப் பின்பற்ற முடியும், மேலும் விசுவாசத்தினால் வாழ்வது விசுவாசத்தினாலேயே. இதனைக் காண்கிறீர்களா? கர்த்தரை விசுவாசிக்கிறீர்களா? அப்படியனால் உங்களுக்கு வேண்டியதை தேடுங்கள். கர்த்தரை விசுவாசியுங்கள், அப்பொழுது எல்லாம் நன்கு நடக்கும். நாம் விசுவாசத்தினால் வாழ்வது எப்படி, என்பதை அறியாததே ஒரே பிரச்சினை.
நம்முடைய எஞ்சியிருக்கும் வாழ்வை விசுவாசத்துடன் வாழ வழி நடத்திய கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.