• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 1-5 ] நீதியின்மையால் உண்மையை அமுக்கி வைப்பவர்கள் (ரோமர் 1:18-25)

(ரோமர் 1:18-25)
“சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லா வித அவ பக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. தேவனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது: தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப் படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள். அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்! ஆமேன்.”
 
 
கர்த்தருடைய கோபம் யார் மேல் வெளிப்படுகிறது?
 
நாம் பிரசங்கிக்கும் நற்செய்தியையே, அப்போஸ்தலனாகிய பவுலும் பிரசங்கித்ததை, நாம் காணலாம். கர்த்தருடைய கோபம் யார்மேல் வெளிப்படுகிறது? தம்முடைய சொந்த சிந்தனைகளினால் உண்மையைத் தடுத்து தம்மில் பாவத்தை வைத்துக்கொண்டு நீதியின்மையால் உண்மையை அமுக்கி வைக்கும் பாவிகளிடம் கர்த்தரின் கோபாக்கினைத் தீர்ப்பு வெளிப்படுகிறது.
நீதியின்மையால் உண்மையைத் தடுப்பவர்களின் மீது முதலில் கர்த்தரின் ஆக்கினை வெளிப்படுகிறது என்று அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாகக் கூறினான். அவர்கள் கர்த்தரால் தீர்க்கப்படுவார்கள். கர்த்தரின் கோபம் எத்தகைய கோபம்? கர்த்தருடைய கோபம் அவர்கள் மாமிசத்தையும் ஆவியையும் நரகத்தினுள் எறியும்.
மனிதர்களிடம் ஆவியும் இருக்கிறது எனவே மாமிசம் மட்டுமே நியாயந்தீர்க்கப்படும் என்று நாம் எண்ணலாகாது. ஆகவே கர்த்தர் மாமிசத்தையும் ஆவியையும் தீர்க்கிறார். சில நபர்கள் தம் பூலோக சிந்தனைகளினால் கர்த்தரின் உண்மையைத் தடுக்கிறார்கள். தம்மில் பாவங்களுள்ளவர்கள் நீதிமான்களுக்கு எதிராயிருக்கிறார்கள். கர்த்தருக்கு பயப்படாத, இருதயம் கடினமாகிப் போனவர்கள் மீது கர்த்தரின் கோபமும் அவரின் தீர்ப்பும் வெளிப்படுகிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 1:17 இல் “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று கூறுகிறான். தம் பாவத்தினிமித்தம் உண்மையைத் தடுப்பவர்களின் மீது, கர்த்தரின் தீர்ப்பும் கோபாக்கினையும் வருகிறது என்றும் அவன் கூறினான்.
 
 
அவிசுவாசிகள் கர்த்தரின் கோபாக்கினையிடனடியில் உள்ளனர்
 
கர்த்தர் இரட்சிப்பின் உன்மையை உலகமுழுவதற்கும் கொடுத்தார். கர்த்தரின் உண்மையும் அன்பும் பூமி முழுவதும் பரவியிருக்கிறது. ஆகவே, கர்த்தரின் அன்பையும் நேசத்தையும் அலட்சியம் செய்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. உண்மை நற்செய்தியை விசுவாசிக்காமல் அதற்கு எதிராக நடப்பவர்களை எல்லாம் கர்த்தர் தீர்ப்பார்.
உண்மை நற்செய்தியின் அன்பை பெற்றுக்கொள்ளாத மக்களைக் குறித்து எண்ணுவோமாக. நீர், புற்கள், மரங்கள், வானம், பறவைகள் போன்றவற்றைக் கர்த்தர் படைத்தார் என்று காண்கிறோம். கர்த்தர் படைத்திருக்காவிட்டால் இவையெல்லாம் எப்படி வந்திருக்கும்? வேதாகமம் கூறுகிறது “ஏனெனில் எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டு பண்ணினவர் தேவன்” (எபிரேயர் 3:4) தேவனையும் உண்மையின் வார்த்தைகளையும் விசுவாசிக்காதது அவர்களின் தவறில்லையா?
ஆகவே, பாவமன்னிப்பு கிருபையை விசுவாசிக்காத மக்களை கர்த்தர் தீர்ப்பது மிகவும் சரியானதே. அவர்கள் பரிணாமக் கொள்கையை வலியுறுத்துகிறார்கள். பிரபஞ்சமானது தானாகவே உருவாயிற்று என்று அவர்கள் எண்ணுகிறார்கள். 15 பில்லியன் வருடங்களுக்கு முன் பெருவெடிப்பு என்ற வெடிப்பு முதலில் தோன்றியதாகவும் அதன்பிறகு ஒரு குறிப்பிட்ட உயிரினம் தோன்றியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த உயிரினமானது படிப்படியாக மீனாக மாறி அது விலங்காக மாறி கடைசியில் மனிதனாக மாறியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த தத்துவம் சரியானதாக இருந்தால் இன்னுமொரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் வருடங்களுக்குள் வேறு ஏதாவதாக மாறிவிடும்.
“எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை.” (ரோமர் 1:20) மக்கள் இயற்கையின் அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் நோக்கும்போது கர்த்தர் இருப்பதை தெளிவாக காணமுடிந்தாலும் கர்த்தரை மறுத்து அவரைப் புறம்பேத்தள்ளிவிடுகிறார்கள், கர்த்தரை விசுவாசிக்காதவர்கள் அவரின் கடும் கோபத்திற்கு ஆளாகிறார்கள். அநேக மக்கள் கர்த்தரை மகிமைப்படுத்தவோ நன்றியறிதலுடையவர்களாகவோ இல்லாதிருப்பதால், தன் எண்ணங்களைத் தாறுமாறாக்கிக் கொள்கிறார்கள். அவர்களுடைய முட்டாள்தனமான இருதயம் இருளாகிப் போனது; தம்மை அறிவாளிகள் என்று அறிவிக்கிறார்கள், ஆனால் அவர்கள் முட்டாள்களாகினர், அவர்கள் அழிந்து போகாத கர்த்தரின் மகிமையின் உருவத்தை அழிந்து போகும் மனிதனாக, பறவையாக நாலுகால் விலங்காக, ஊர்வனவாக சித்தரிக்கின்றனர். கர்த்தரின் நியாயத்தீர்ப்பு அவர்களுக்காக காத்திருக்கிறது. மறுபடியும் பிறக்காத அனைத்து மக்களும், அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் விசுவாசிக்காவிட்டாலும் அவர்கள் கர்த்தரின் தீர்பிற்குட்பட்டவர்கள்.
 
 
அவிசுவாசிகளை தேவன் அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்
 
“இதினிமித்தம் அவர்கள் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள். அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்! ஆமேன். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அனுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அனுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அனுபவியாமல், ஒருவர் மேலொருவர் விரகத்தாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சனமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்கு தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்” (ரோமர் 1:24-27)
இந்த வசனங்கள் எதைக் கூற முயலுகின்றன. தாம் விரும்பும்படி படைக்கப்பட்டவைகளை ஆராதித்து சேவைசெய்து பாவம் செய்யும் மனிதர்களை கர்த்தர் விட்டுவிடுகிறார். அவர்களைச் சாத்தனிடம் ஒப்படைத்துவிடுகிறார். தான் விரும்பும்படிச் செய்ய கர்த்தர் சாத்தானை அனுமதிக்கிறார். ஆகவே எப்படியாயினும் நாம் கர்த்தரை விசுவாசித்து இரட்சிக்கப்படவேண்டும். “அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அனுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அனுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அனுபவியாமல், ஒருவர் மேலொருவர் விரகத்தாபத்தினாலே பொங்கி” இது கர்த்தரை மறுப்பது போன்றது என்பதோடு இதுவே எயிட்ஸை தோற்றுவிக்கிறது.
இயற்கை சுபாவத்தை கர்த்தர் கொடுத்தார். ஒரு ஆண் ஒரு பெண்ணோடு வாழவேண்டும். ஆயினும் ஆணும் ஆணும் பாலுறவு கொள்வதும், பெண்ணும் பெண்ணும் பாலுறவு கொள்வதும், கர்த்தர் அளித்த இயற்கை சுபாவத்தை அவர்கள் மறுப்பதைக் காட்டுகிறது. ரோமர் நிருபம் ஏறத்தாழ 1900 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் தம் இயற்கையான அனுபோகத்தை விட்டு தாம் விரும்பும்படிச் செய்தால் அதற்கு தண்டனைப் பெறுவர் என்று முன் கூறினான். இந்நாட்களின் கர்த்தரின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. ஒரு பாலின சேர்க்கைக்காரர்களிடம் எயிட்ஸ் இருப்பதை நாம் அறிவோம்.
அவர்கள் செய்யும் பாலியல் பாவங்களுக்கு இது மிகச் சரியான தண்டனையாகும். தம்முடைய இயற்கை பாலியல் அனுபோகத்தை மாற்றிய ஆண்களிடம் கர்த்தரின் கோபம் வெளிப்பட்டது. அவர்கள் எய்ட்ஸை தண்டனையாக பெறுவது சரியானது. இந்த நோய் நிச்சயமாக கர்த்தரின் மீதுள்ள அவிசுவாசத்தாலேயே வந்தது. கர்த்தர் அவிசுவாசிகளுக்கு தாறுமாறான மனதைக் கொடுக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அது கர்த்தரின் சாபமாகும். அவர்கள் கர்த்தரின் நீதியை எதிர்க்கிறார்கள்
கர்த்தரைத் தம் மனதில் தங்க வைக்காத மனிதர்கள் கீழ்க்கண்வர்களைப் போன்றவர்கள். “அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும் பொருளாசையினாலும், குரோதத்தினாலும், நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவ பகைஞருமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்விலாதவர்களுமாய் உடன்படிக்கைகள் மீறுகிறவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப் படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.” (ரோமர் 1:29-32).
‘அத்தகைய காரியங்களைச் செய்பவர்கள்` அதே போன்ற தீமையைச் செய்பவர்களை என்ன செய்வார்கள்? அவர்களை ‘அங்கீகரிப்பார்கள்.` கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும் நீதிமான்களை கர்த்தருக்கு எதிரான மனிதர்கள் என்ன செய்வார்கள்? “நீ வேதப்புரட்டன்” என்று கூறி நீதிமான்களை துன்புறுத்துவார்கள். நீதிமான்கள் இயேசுவை விசுவாசித்த பிறகு அவர்களுடைய நீதியின் நிமித்தம் துன்பப்படுத்தப்படுவார்கள். அவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.
மாமிசத்தினால் அலைபவர்களைக் குறித்து மக்கள் அனுதாபப்படுவார்கள். ஆயினும், கூறுவதற்கு வித்தியாசமாயிருக்கிறது, மற்றவர்கள் இயேசுவை விசுவாசித்து பாவமன்னிப்பின் மூலம் நீதிமான்களாவதை அவர்கள் எதிர்த்து தடுக்கிறார்கள். இது பாவத்திற்கு ஊழியம் செய்து வாழ்வதைப் போன்றது, ஏனெனில் அவர்கள் கர்த்தரை நம்புவதுமில்லை சத்திய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதுமில்லை.
ஆகவே, அவிசுவாசிகளும் சாத்தானும், நம்மை இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க அனுமதித்தாலும், நாம் முழு பரிசுத்தமானவர்கள் என்றும் முழு பாவமன்னிப்பு பெற்றவர்கள் என்றும் கூறுவதில்லை. அவிசுவாசிகளும், கீழ்ப்படியாதவர்களும் இருதயத்தில் பாவமிருந்தாலும் இயேசுவை விசுவாசித்து நரகம் செல்லட்டும் என்று யோசித்து அதனைக் கூறுகிறார்கள். மக்கள் தாம் பாவிகளாயிருந்து இயேசுவை விசுவாசிப்பதில் பரவசமடைகின்றனர். கர்த்தரைக் குறித்து தெரியாமல் அவரை விசுவாசிப்பவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்தாலும் அவர்கள் கர்த்தரை தம் அறிவில் பெற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்க்கின்றனர். அவர்கள் கர்த்தரின் நீதியை எதிர்க்கின்றனர். அவர்கள் சாத்தானையும் எல்லாப் பாவங்களையும் கூட ஆராதிக்கின்றனர். மறுபடியும் பிறக்காதவர்கள், இயேசுவை விசுவாசித்தாலும் கூட அவர்களும் அத்தகையவர்களே. மறுபடியும் பிறக்காத அநேக சாதரண கிறிஸ்தவர்கள் உள்ளனர். தம்மிருதயத்தில் பாவங்களுடன் இயேசுவை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் உண்மை வார்த்தைகளை எதிர்ப்பதுடன், இயேசுகிறிஸ்துவின் சத்தியத்தை விசுவாசித்து அதனால் பரிசுத்தமாகி பாவமன்னிப்பு பெற்ற மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.
 
 
மறுபடியும் பிறக்காதவர்கள் மறுபடியும் பிறந்தவர்களை எதிர்க்கின்றனர்
 
நீதியின்மையால் உண்மையை அமுக்கி வைக்கும் மனிதர்கள் மீது கர்த்தரின் கோபம் வெளிப்படும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் வேதாகமத்தில் கூறுகிறான். கர்த்தருக்கு ஏற்றவை அல்லாதவைகள் மீதும், நீதியில்லாதாவர்கள் மீதும் பரலோகத்திலிருந்து கர்த்தரின் தீர்ப்பு வெளிப்படும் என்று அவன் கூறுகிறான். உண்மையைப் பொறுத்தே அனைத்தும் செய்யப்படுகிறது. நம்முடைய எல்லாப் பாவங்களையும் கர்த்தர் துடைத்துப்போட்டார் என்பதே உண்மை. உண்மைக்கெதிராக அதனைத் தடுப்பவர்கள் மீது கர்த்தரின் நியாயத்தீர்ப்பு வெளிப்படும். கர்த்தரின் வார்த்தையின் மூலமாக மறுபடியும் பிறவாத அனைத்து விசுவாசிகளும் கர்த்தரால் தீர்க்கப்படுவர் என்று நாம் அறிகிறோம். இயேசுவை விசுவாசித்தாலும் மறுபடியும் பிறவாதவர்களை கர்த்தர் நியாயம் தீர்ப்பார்.
மறுபடியும் பிறக்காத விசுவாசிகள் மறுபடியும் பிறந்தவர்களின் மீது, இருதயம் முழுவதும் குரோதம் நிறைந்தவர்களாய் அவதூறு சொல்வர். அவர்கள் குரோதம் நிறைந்தவர்களாகவும் ஒருவருக்கொருவர் முனுமுனுப்பவர்களாயும் இருக்கிறார்கள். பாவமன்னிப்பு பெற்ற நீதிமான்களுக்கு எதிராக முனுமுனுக்கும் பாவிகள் நியாயந்தீர்க்கப்படவேண்டியவர்கள். நான் எதனைக் கூறுகிறேன் என்று அறிந்தீர்களா? அவர்களுக்காக நாம் அனுதாபப்படவேண்டும். “தம்மிடம் பாவமில்லை என்று அவர்கள் கூறிக்கொள்வது வித்தியாசமானது. அது வித்தியாசமாக ஒலிக்கிறது.” என்று முனுமுனுப்பதன் மூலம், தாம் அவருக்கு எதிரானவர்கள் என்று அறியாமலேயே அவர்கள் கர்த்தரைத் தம் பாவங்கள் மூலம் எதிர்க்கிறார்கள்.
தம் தீமையினிமித்தம் கர்த்தருக்கு எதிரானவர்களின் மீது தீர்ப்பு வெளிப்படும். அப்படிச் செய்பவர்களினால் அம்மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்கள் முனுமுனுப்பவர்களையும் அவதூறு கூறுபவர்களையும் சரியானவர்களென ஒப்புக் கொள்கிறார்கள். மறுபடியும் பிறவாத கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் முனுமுனுத்து நீதிமானகள் மீது அவதூறு பேசுகிறார்கள். அவர்கள் நீதிமான்களின் பின்னால் கடித்து அவர்களை வெறுப்பதுடன், தம்மில் பெருமைக் கொண்டு, ஒன்றாகச் சேர்ந்து தீமையானவைகளை திட்டமிடுகிறார்கள். அவர்கள் எப்படி தீமையானவற்றைத் திட்டமிடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து தீயக்காரியங்களைச் செய்கிறார்கள். “இயேசுவை நன்கு விசுவாசிப்போம். சரியான விசுவாசத்தை நாம் பெறுவோம். நாம் உலகின் வெளிச்சமாயிருப்போம்.” என்ற சொற்றொடர்கள் மூலம் நீதிமான்களை எதிர்க்கின்றனர். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து இத்தகையப் பாவங்களைச் செய்கின்றனர். ஏனெனில் தனியாக பாவம் செய்வது மகிழ்ச்சியளிக்காது.
ஆகவே, பூமியிலுள்ள அரசர்கள் கர்த்தருக்கு எதிரனவர்களானபடியால் சங்கீதம் 2:4 இல் கர்த்தர் கூறினார், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார், ஆண்டவர் அவர்களை இகழுவார்” ‘ஓ! அது மகிழ்ச்சியாயிருக்கிறது. நீ விட்ட சவால் எதுவானாலும் எனக்கும் ஒன்றும் ஆகாது. நீங்கள் நியாயம்தீர்க்கப்பட எனக்கு வாய்ப்பளித்தீர்கள்.` இது நகைப்புக்குரியதாக இருப்பதால் நியாயத்தீர்ப்பின் நேரத்திற்காக கர்த்தர் காத்திருக்கிறார்.
 
 
நீதிமான்களை தீர்ப்பவர்கள் கர்த்தரால் தீர்க்கப்படுவர்
 
மறுபடியும் பிறவாதவர்கள் கர்த்தரின் உண்மைக்கு எதிரானவர்களாகும்போது பாவம் செய்கிறார்கள். மறுபடியும் பிறந்தவர்களின் மாமிசத்திலும் கூட, குரோதமும் குறைபாடுகளும் உள்ளன. ஆயினும், அவற்றில் வேறுபாடு இருக்கிறது. நாம் கர்த்தரையும் அவரின் உண்மையையும் நம்புகிறோம். கர்த்தரின் மூலமாக பாவமன்னிப்பை பெற்றோம். ஆயினும் அவர்கள் கர்த்தரை விசுவாசிப்பதேயில்லை. அம்மக்கள் ‘நீதிமான்களுக்கும் கர்த்தரின் உண்மைக்கும்` எதிரானவர்கள். “ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச் சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.” (ரோமர் 2:1)
அப்போஸ்தலனாகிய பவுல் மறுபடியும் பிறக்காத, சட்டத்தில் ஒட்டிக்கொண்ட யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் பேசுகிறான். “கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, கர்த்தருக்கு மட்டுமே ஆராதனைச் செய்” என்று கூறி மற்றவர்களை அவர்கள் தீர்க்கிறார்கள், ஆனால் அவர்களோ சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. கர்த்தர் மட்டுமே நீதியாக தீர்க்கிறார். மறுபடியும் பிறந்த அவரின் பிள்ளைகளாலும் கர்த்தரின் வார்த்தைகளைப் பொறுத்து தீர்க்கமுடியும்.
நீதிமான்களை ஏனோதானோவென்று இத்தகைய மக்கள் தீர்ப்பதால், அவர்கள் கண்டிப்பாக நியாயந்தீர்க்கப் படவேண்டியவர்கள். மறுபடியும் பிறக்காத அனைவரையும் கர்த்தர் நியாயம் தீர்ப்பார், அதாவது அது யூதர்களும் சட்டப்படியான கிறிஸ்தவர்களுமாகும். மறுபடியும் பிறவாமல் கர்த்தருக்கு கீழ்ப்படியாவிட்டால் நரகத்திற்கு செல்வோம் என்றும் கர்த்தர் கூறியபடி செய்தால் பரலோகம் செல்வோம் என்றும் விசுவாசித்து சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மதவாழ்க்கை நடத்துபவர்கள் மீது கர்த்தரின் கோபம் வெளிப்படுகிறது. விசுவாச நபர் அவனோ/அவளோ இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தபிறகு நீதிமானாகிறார். நாம் பித்துணரப்படவேண்டும். மறுபடியும் பிறக்காமல் பக்தியுடன் வாழ்ந்து கர்த்தரை விசுவாசிக்க முடிந்தவர்கள் நீதிமான்களை தம் சொந்த வரைமுறைகளின் படி தீர்க்கிறார்கள்.
ஆயினும், கர்த்தர் அவர்களை கண்டிப்பாகத் தீர்ப்பார். தம் சொந்த வரைமுறைகளின்படி தம்மைத்தாமே தீர்க்கிறார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். ஓ! நீதிமான்களை தீர்க்கும் பாவமன்னிப்பு பெறாத, தவறான விசுவாசமுள்ள, கர்த்தரின் உண்மையின் இரக்கத்தைப் பெறாத மனிதர்களே, நீங்கள் கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியுமென நினைக்கிறீர்களா? இவர்கள் கர்த்தரால் நியாயம் தீர்க்கப்படுவர்.
 
 
கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நீதியானது
 
“இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” (ரோமர் 2:2) அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும், மறுபடியும் பிறக்காமல் மற்ற மக்களை தீர்ப்பவர்களுக்கு எதிராக, சத்தியத்தின்படியே தேவனுடைய நியாயத்தீர்ப்பு இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். கர்த்தர் இம்மக்களை நரகத்திற்கு அனுப்புகிறாரென்றும், அவருடைய சத்தியத்தின்படி நியாயந்தீர்க்கிறார் என்றும் நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய சத்தியம் சரியானதாலும், அவருடைய நியாயத்தீர்ப்பு பிழையற்றதானதாலும் அவர் பாவிகளை நரகத்திற்கு அனுப்புகிறார். ஒருவன் நரகம் போகிறானா இல்லையா என்பது ‘கர்த்தர் சிலரை நேசிக்கிறார், மற்றவர்களையோ வெறுக்கிறார்` என்ற முன்குறிக்கப்படுதல் என்ற தத்துவத்தின் பிரசங்கத்தின் அடிப்படியில் அமைந்ததல்ல. உலகம் உருவாகும் முன்பே கர்த்தர் எல்லா மனிதர்களையும் இயேசுவுக்குள் தெரிந்துக்கொண்டார். (எபேசியர் 1:4).
இயேசுகிறிஸ்து அவனின்/அவளின் எல்லாப் பாவங்களையும் துடைத்துப்போட்டர் என்று யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாவமன்னிப்பை பெறுகிறார்கள். கர்த்தர் இதனை முன்குறித்தார், ஆகவே மறுபடியும் பிறவாத அனைவரும், அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் கூட, நரகம் செல்வர். கர்த்தரின் நியாயத்தீர்ப்பின்படி அவர்கள் நரகம் செல்வர், இதுவே உண்மையாகும்.
பாவிகளை நரகத்திற்கு அனுப்பும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு சரியானது ஏன்? அவர்கள் கர்த்தரின் பெரிதான அன்பை புறம்பேத்தள்ளியதாலும், கர்த்தரின் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளாததாலும், அவரை விசுவாசிக்காததாலும், மறுபடியும் பிறக்காத அவர்களை சத்தியத்தின்படி நரகத்திற்கு அனுப்புவது அவருக்குச் சரியானது.
“கர்த்தர் ஏன் எனக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவில்லை?” என்று சிலர் கூறலாம். அவர் போதிக்கவில்லையா? கர்த்தர் எத்தனையோ முறை உனக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார். உன் கண்களை அகலத்திறப்பதன் மூலம் இரட்சிப்பை பெற முயற்சி செய். சில ஆலயங்கள் இவ்வுலகில் உண்மை நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றன. ஆயினும், உண்மையாகவே நீங்கள் தேடினால் சத்தியத்தை நீங்கள் சந்திப்பீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் உண்மையாகவே அதனைக் கண்டுபிடிக்க முயல்கிறேன்! மறுபடியும் பிறப்பதற்கு முன், பிரசங்கம் ஒன்றைச் செய்துவிட்டு ஜெபித்தேன் “ஓ, தேவனே, இத்தகைய மக்களுக்கு உம்முடைய வார்த்தைகளைப் பிரசங்கித்தாலும் கர்த்தருக்கு முன்பாக நான் ஒரு பாவி, மக்களுக்கு நான் எதைக் கூறினேனோ அதை எனக்கும் கூறினேன். நானொரு பாவி. தயவாக என்னைச் சந்தியும், தயவுசெய்து என்னை இரட்சியும்.”
சத்தியத்தைக் கண்டறிய எத்தனை முயற்சித்தேன் என்று எனக்குத் தெரியாது. அவரைத் தேடுகிறவர்களைச் சந்திக்க கர்த்தர் ஆவலாயிருக்கிறார். அவரைத் தேடாத மக்களை விடுவிக்க கூட கர்த்தர் விரும்புகிறார். “எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்” (ரோமர் 9:25). அவர் நம்மை இரட்சிக்க இவ்வுலகிற்கு வந்த இரட்சகர் என்று கர்த்தர் கூறுகிறார். கர்த்தரை சிரத்தையுடன் தேடிய மக்கள் அவரைக் கண்டடைவர். மற்றவர்கள் கர்த்தரைத் தேடவில்லை. ஆனால் நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்கள் அவர்களிடம் வந்து நற்செய்தியைப் பிரசங்கித்தமையால் கர்த்தரைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பை பெற்றார்கள். சிலர் நற்செய்தியின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருப்பர், ஆனால் மற்றவர்கள் அப்படி இருக்கமாட்டார்கள். நரகம் செல்லும் மனிதர்கள் அங்கு முடிவடைவர், ஏனெனில் அவர்கள் நல்ல செய்தியை புறக்கணித்தனர்.
கர்த்தரின் சத்தியத்தை பொறுத்தமட்டில், நரகம் செல்லத் தகுதியானவர்கள் அங்கு செல்வது சரியானது. சரியான புரிந்துகொள்ளுதலினிமித்தம் பரலோக இராஜ்யம் செல்ல விரும்புகிறவர்கள் பெரிதான காரியங்கள் எதனையும் செய்திராவிட்டாலும் அங்கு செல்வர், இவையெல்லாம் கர்த்தரின் சரியான நியாயத்தீர்ப்பினால் நடக்கிறது.
கர்த்தர் ஒரு நபரை நரகத்திற்கும் மற்றவர்களை பரலோக இராஜ்யத்திற்கும் ஏனோதானோவென்றும், சில மனிதர்களை அவர் அதிகம் விரும்புகிறார் என்ற கணக்கிலும் அனுப்புவதில்லை. அதற்கு மாறாக, சத்தியத்தின் சரியான நியாயத்தீர்ப்பின்படி அவர் நியாயம் தீர்க்கிறார். ஆகவே நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்கவேண்டும் “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ?” (ரோமர் 2:3-4)
 
 
அவரின் அன்பின் மூலமாக இயேசு ஏற்கெனவே உலகின் எல்லாப் பாவங்களையும் துடைத்துப் போட்டார்
 
அப்போஸ்தலனாகிய பவுல் பாவிகளுக்கும் யூதர்களுக்கும் சட்டப்படியான கிறிஸ்தவர்களுக்கும், இயேசுவின் அன்பைப் பெறாதவர்களுக்கும், மறுபடியும் பிறக்காதவர்களுக்கும், அவர்கள் தீர்க்கப்படுவார்கள் என்று கூறினான். அவர்கள் நரகம் செல்லவேண்டியவர்கள். ஆனால் நற்செய்தி எதைக் கூறுகிறது? ரோமர் 2:4 இல் கர்த்தர் கூறுகிறார், “அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ?” கர்த்தரின் அன்பு எல்லா மக்களுக்கும் சரியாகத் தோன்றி நீதியாக பரவியது.
கர்த்தரின் இரட்சிப்பின் கிருபையிலிருந்து யாரும் விட்டுவிடப்படவில்லை. இயேசு உலகின் எல்லாப் பாவங்களையும் துடைத்தார். இயேசு நம்மை நிறைவாக பரிசுத்தமாக்கினார். அவர் மூலப்பாவத்தை மட்டும் துடைத்துவிட்டு, நம்முடைய அன்றாடப் பாவங்களுக்காக தினமும் பாவமன்னிப்பு கேட்டு ஜெபிக்கும்போது அவற்றை மன்னிக்கிறாரா? இல்லை. தேவன் உலகின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்துப்போட்டார். ஆனாலும் கூட, கர்த்தருக்கு எதிரானவர்கள் அவருடைய சிறப்புத்தன்மையையும், அன்பையும் அலட்சியம் செய்கிறார்கள். “இயேசு நம்மை எப்படி இரட்சித்தார்? நான் தொடர்ந்து பாவம் செய்துக்கொண்டிருந்தாலும் ‘என்னிடம் பாமில்லை` என்று எப்படிக் கூறமுடியும்? அது பொருளற்றது. அவரே இரட்சகரும் தேவனும் கர்த்தருமாக இருந்தாலும், நான் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருக்கும்போது அவர் எப்படி என் எல்லாப் பாவங்களையும் துடைத்தார்?”
இப்படியாக மக்கள் தம் மாமிசத்தின்படி எண்ணுகிறார்கள், ஆயினும் கர்த்தர் தம் அன்பின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார். தேவன் இவ்வுலகிற்கு வந்து நம் அனைத்துப் பாவங்களையும் நிறைவாக கழுவினார். தேவனுக்கு மனிதர்களின் குறைகளும் பலவீனங்களும் தெரியும். (மாமிசத்திற்கு மீண்டும் மீண்டும் பாவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை). ஆகவே அவர் தம் ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தியதன் மூலமும், உலகின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்தார். தேவனுக்கு மாமிசத்தின் பலவீனங்கள் தெரியும். “நீ மரிக்கும்வரை மீண்டும் மீண்டும் பாவம் செய்வாய் என்று எனக்குத் தெரியுமாகையால் நான் உன்னை இரட்சித்தேன்.”
தேவன் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார். நம்மை விடுவித்ததன் மூலம் தேவன் நம் அனைவரையும் ஏற்றுக்கொண்டார். தேவன் பாவிகளின் பாவத்திற்கு கூலி கொடுத்து அவரின் நீதியின் வல்லமையினால் பரிசுத்தமாக்கினார். (இயேசு யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார்). தேவன் தன் உயிரின் (இரத்தம்) மூலம் நம் பாவங்களுக்கு கூலி கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், அவரின் பிள்ளைகளாகவும் அனுமதித்து பரலோக இராஜ்யம் செல்லவும் ஏதுவாக்கினார். தேவன் பாவிகளை அவரின் நீதியின் பிள்ளைகளாக மாற்றினார்.
 
 
அவிசுவாசிகள் மனம் திரும்பி தேவனை நோக்கி தம் இருதயங்களைத் திருப்பவேண்டும்
 
“அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ?” (ரோமர் 2:4) தேவனுடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் ஆகியவைகளை அசட்டைப் பண்ணுகிறவர்களை நரகத்திற்குச் செல்லும்படியாக அவர் தீர்க்கிறார். இயேசுகிறிஸ்து உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்பதும் நற்செய்தி உலகமெங்கும் பரவியிருக்கிறது என்பதும் நிச்சயம். ஆயினும் மக்கள் இன்னமும் நரகம் செல்லுகிறார்கள் ஏனெனில் அவர்கள் அதனை விசுவாசிக்கவில்லை. நாம் கர்த்தருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் ஆகியவைகளை அசட்டை செய்து நரகத்திர்கு செல்லவேண்டுமென்றாலும் இயேசு நம் எல்லாப் பாவங்களையும் கழுவு நம்மை இரட்சித்து நாம் நரகம் செல்வதைத் தடுத்தார். நாம் நரகம் செல்ல விரும்பினாலும் அவர் அதைத் தடுத்தார்.
ஆகவே, நாம் இரட்சிக்கப்படும்படியாக இயேசுவின் நீரையும் இரத்தத்தையும் விசுவாசிக்கவேண்டும். விசுவாசித்து இரட்சிக்கப்படுங்கள். கர்த்தரின் அன்பையும் அவரின் இரட்சிப்பையும் அலட்சியம் செய்பவர்கள், நரகம் செல்வர். தேவதயவின் செல்வத்தையும் அவர் இரட்சிப்பின் இரக்கத்தையும் அலட்சியம் செய்பவர்களுக்கு கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட இடம் நரகம். அவிசுவாசிகள் நரகம் செல்வதற்கான பயணச் சீட்டை ஏற்கெனவே வாங்கிவிட்டனர். நரகம் செல்வதற்கு தயாராக இருக்கும் மக்கள் மனம் திரும்பி அவர்கள் இருதயங்களை தேவனை நோக்கித் திருப்பவேண்டும். உங்களுக்கு உண்மை நற்செய்தியின் மீது விசுவாசம் இல்லையெனில் பரலோக இராஜ்யத்திற்கு குட்-பை கூறிவிடலாம்.
 
 
மக்கள் கர்த்தரின் அன்பை தள்ளிவிடுவதால் நரகம் செல்லுகின்றனர்
 
“உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே.” (ரோமர் 2:5) குணப்படாத இருதயமுள்ளவர்களும் மனந்திரும்பாதவர்களும் நரகம் செல்வர். கர்த்தரின் பெரிதான அன்பை புறம்பேத்தள்ளிவிட்டதற்காக சிலர் நரகம் செல்வர். கடினமான இருதயத்தினால் உண்மையை உதாசீனப்படுத்தி தம் சொந்த யோசனைகளின்படி நடப்பவர்களின் பாவத்திற்கேற்ற கூலியாக அவர்கள் நரகஞ்செல்வர். கர்த்தரின் அன்பை பெற்றுக்கொள்ள மறுப்பவர்களும், படிப்படியாக பரிசுத்தமாவதற்கு மனம் வருந்தி தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருப்பவர்களும் நரகம் செல்வர். நியாயத்தீர்ப்பு வெளிப்படும் நாள்வரையிலும் கர்த்தரின் கோபத்தைச் சேர்க்கும் அவர்களுக்கு, கர்த்தரின் அன்பை மறுத்ததற்காக நீதியின்படியான நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது.
சாத்தான் நம்மை கெட்டுப்போகச் செய்வதற்கு முன்பே பாவிகளை இரட்சித்து அவர்களை நீதிமானாக்க கர்த்தர் தீர்மானித்தார். இது கர்த்தரின் விடுதலை செய்யும் திட்டமாகும். நம்மை இரட்சித்து பரிசுத்தமாக்குவதற்கு கர்த்தர் தம் மகனை அனுப்பினார். ஆயினும், பாவிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கர்த்தரின் அன்பை மறுத்ததன் மூலம் அவரின் கோபத்தை விளிம்புவரை நிரப்பியுள்ளனர். அவர்கள் அவருடைய நீதியின் நியாயத்தீர்ப்பு வெளிப்படும் அவரின் கோபாக்கினையின் நாளில் தீர்க்கப்படுவர். தம்மிருதயங்களில் பாவமுள்ளவர்களை நரகத்திற்கு அனுப்புவது கர்த்தரின் நீதியின் நியாயத்தீர்ப்பாகும்.
ஏன்? ஏனெனில் கர்த்தர் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவி உலகிலுள்ள ஒவ்வொருவரையும் விசுவாசத்தினால் இரட்சிக்கும்படிச் செய்தார். அவர்கள் நரகம் செல்லுவதற்கு உறுதியாகவும் சுயமாகவும் வேலைச் செய்கின்றனர். ஆனால் இறுதியில் அவர்கள் தம் முட்டாள்தனத்திற்காக வருந்துவர். பாவிகள் கர்த்தருடைய பெரிதான அன்பை எற்றுக்கொள்ளாவிட்டால் நரகம் செல்வர்.
அவர் தமது சொந்த அதிகாரத்திற்கேற்ப சில மக்களை நரகத்திற்கும் மற்றவர்களை பரலோக இராஜ்யத்திற்கும் அனுப்புகிறார் என்றெண்ணி, கர்த்தர் சரியில்லாதவர் என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆயினும் இது உண்மை அல்ல. அவரின் அன்பையும் உண்மையையும் மறுப்பதில் அடம்பிடிப்பவர்களுக்காக கர்த்தர் நரகத்தைச் செய்தார். அதனால் அவர்கள் செல்வதற்கு அங்கு நிறைய இடமுண்டு.
நரகம் நெருப்பினாலும் கந்தகத்தினாலும் எரியும் கடல் என்று வேதாகமம் கூறுகிறது. பாவத்துடனிருப்பதை விரும்புகிறவர்களுக்காக அழுக்கு நிறைந்த நெளியும் புழுக்கள் அங்கிருக்கின்றன. “இல்லை, இல்லை. நான் இந்த இடத்தை வெறுக்கிறேன்” என்று அவர்கள் கூக்குரலிடலாம். ஆனால் கர்த்தர் கூறுவார், “நான் உன் எல்லாப் பாவங்களையும் கழுவினேன், ஆனால் நீ பாவத்துடனிருப்பது ஒரு விஷயமில்லை என்று கூறினாய். ஆகவே இப்புழுக்களை உனக்கு நண்பர்களாக பரிசளித்தேன், ஏனெனில் பாவமன்னிப்பு பெறுவதை நீ விரும்பவில்லை.” “இல்லை, இதனை வெறுக்கிறேன், தேவனே.”
“இதனை வெறுத்தாலும் கூட, இதனைத்தான் நீ கேட்டாய். நான் நீதியின் தேவன். உனக்கு தேவைப்படுவதை நான் கொடுத்தேன். தம்மிருதயத்தில் பாவங்களுடனிருக்க விரும்பும் அனைவருக்கும் நரகத்தைக் கொடுக்கிறேன்.” இதுவே கர்த்தரின் சரியான தீர்ப்பு. இவ்வுலகில் வாழும்போது மனிதர்கள் பாவஞ்செய்வர். ஆனால் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்ட கர்த்தரின் இரட்சிப்பின் நற்செய்தியை அவர்கள் அலட்சியம் செய்யக்கூடாது.
கடின இருதயமுள்ளவர்களாயிருப்பதினாலே மக்கள் நரகத்திற்குச் செல்லுகிறார்கள். கர்த்தருக்கு முன் நாம் அடம்பிடிக்கக்கூடாது. அவர் ஏற்கெனவே உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்பதை நாம் விசுவாசிக்கவேண்டும். அது கண்களுக்குத் தெரியாவிட்டாலும் நீ அதனை விசுவாசிக்கவேண்டும்.
 
 
கர்த்தர் நம்மை ஏற்கெனவே நேசித்ததாக நம்மிடம் கூறுகிறார்
 
கர்த்தர் நம்மை ஏற்கெனவே நேசித்ததாக நம்மிடம் கூறுகிறார். “நான் ஏற்கெனவே உன் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டேன்” நீ இந்தக் குறிப்பை விசுவாசிக்கவேண்டும். கர்த்தர் தான் வானத்தையும் பூமியையும் படைத்ததாக கூறும்போது நாம் அதனை விசுவாசிக்கவேண்டும், ஏனெனில் கர்த்தரின் வார்த்தைகள் உண்மையானவை. கர்த்தரின் வார்த்தைகளின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நம்பிக்கைத் தொடங்குகிறது. மக்கள் தம்முடைய சிறிய தலையினால் புரிந்துகொள்ள முடிவதை மட்டுமே விசுவாசிக்கின்றனர், அது புரியாதபோது அதனை நம்பமறுக்கின்றனர். கர்த்தர் எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்பதை நம்பாத அவிசுவாசிகள் நரகத்திற்குச் செல்வர். அவர்கள் நரகத்திற்குச் செல்ல தம் மனதை தயார் செய்துள்ளனர்.
ஒரு பிரபலமான கிறிஸ்தவர் வெட்டவெளிச்சமாக ஒரு முறைக் கூறினார். “நான் மரிக்கும்வரை, கர்த்தருக்கு முன் நானொரு பாவி என்று அறிக்கைச் செய்கிறேன்” அவர் மரித்து நிச்சயமாக நரகம் சென்றார். அவர் கர்த்தரிடம் கூறினார், “கர்த்தருக்கு முன் நானொரு பாவி, அவருக்கு முன் என்னால் நீதிமானாயிருக்கமுடியாது என்று பிரகடனம் செய்கிறேன்.” அவருடைய மரணம் வரைத் தொடர்ந்து பாவியாகவே இருந்தார். அவருடைய கடைசி மூச்சு வரை கர்த்தரின் அன்பையும் உண்மையையும் புறக்கணித்தார். அப்பொழுது தேவன் கூறினார். “உன்னுடைய சொந்த விசுவாசத்தின் மேல் இத்தனை விசுவாசமாயிருந்தாய்! உன்னுடைய விசுவாசத்தின்படி நீ நரகம் செல்வதே உனக்குச் சரியானது. நான் உன்னை நரகத்திற்கு அனுப்புகிறேன். ஏனெனில் பாவிகளால் பரலோக இராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியாது.”
 
 
நான் விசுவாசித்திருந்தால்
 
“நான் மரிக்கும்வரை நானொரு பாவி என்று பிரகடனம் செய்கிறேன்.” என்று கூறிய மனிதர் நரகம் சென்றார். கர்த்தரால் கூட இந்த மனிதர்களுக்கு உதவ முடியாது. நாளை மறுநாள் அவர்கள் நரகத்தில் முடிவடைவார்கள் என்ற போதிலும், அவர்கள் தம்மை பாவிகள் என்று மட்டும் பிரகடனப்படுத்தவில்லை, ஆனால் அவர்களை நம்பிய விசுவாசிகளுக்கும் கற்றுக்கொடுத்தனர், “நாம் மரிக்கும் வரை பாவிகளே, நாம் கர்த்தருக்கு முன் நிற்கும்போது கூட பாவிகளாகவே இருப்போம்.” ஆகவே அநேக விசுவாசிகளும் கூட அதே மத வழியையே உபயோகப்படுத்துவர். பாவிகள் நரகம் செல்லுவர் என்று கர்த்தர் கூறினார். ஆயினும் இன்றைய கிறிஸ்தவத்தில் எண்ணிலடங்கா கிறிஸ்தவர்கள் இந்த போதனையையே பின்பற்றுகின்றனர். அந்தப் பாவிகள் எப்பொழுதும் வருந்திக்கொண்டே இருப்பர் என்று கர்த்தர் கூறினார், நரகத்தின் நெருப்பில் தம் பற்களைக் கடித்துக் கொண்டு “நான் நம்பியிருந்தால்; நான் அதனை நம்பியிருந்தால்.” என்று கூறுவர்.
“என்னுடைய சொந்த சிந்தனைகளைக் கைவிட்டு இயேசு என் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்பதை நான் விசுவாசித்திருந்தால், பரலோக இராஜ்யத்திற்கு சென்றிருப்பேன்!” “நான் விசுவாசித்திருந்தால்; இதனை மட்டும் நான் விசுவாசித்திருந்தால்” இதனைப் போன்று நரகத்தில் அழப்போகும் அநேக மக்கள் இருக்கப் போகின்றனர். அவர்கள் கூறுவர், “நான் விசுவாசித்திருந்தால், நான் உண்மையைப் பெற்றிருந்தால், நான் அவரின் மகனாயிருப்பேன். நான் ஏன் அவ்வளவு அடம்பிடித்தேன்....”
அந்நேரத்தில் நீதிமான்களாகிய நாம் கர்த்தரிடம் கேட்போம், “கர்த்தரே, பாவிகள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தயவுசெய்து எங்களுக்கு காண்பியும். அவர்கள் நீதிமான்களாகிய எம்மை துன்புறுத்தினர்” “இல்லை, அது உங்களுக்கு உகந்ததல்ல என் பிள்ளைகளே, ஏனெனில் உங்கள் இரக்கம் அவர்கள் மீது இருப்பதால் உங்கள் இருதயம் துன்புறும். உங்களுக்குத் தெரிந்த மக்கள் துன்புறுவதை பார்க்க உண்மையாகவே விரும்புகிறீர்களா?” “தயவுசெய்து ஒரு முறை மட்டும் காட்டும்!” அவர் பெருந்தன்மை உள்ளவராதலால் தேவன் நமக்கு ஒரு முறைக் காட்டுவார். ஆகவே அதனைப் பார்ப்போம் என்று கொள்வோம். அங்கு நிறைய இத்தகைய கூக்குரல்கள் கேட்கும்: “நான் விசுவாசித்திருந்தால், நான் விசுவாசித்திருந்தால்.” அப்பொழுது நாம் ஆச்சர்யப்படுவோம், “இது என்ன சத்தம்? அவர்கள் பாடுகிறார்களா?” “அவர்கள் பாடுகிறார்களா வருந்துகிறார்களா என்று கவனமாக கேளுங்கள்.” அந்த நெருப்பிலுள்ள ஆண்களும் பெண்களும் “நான் விசுவாசித்திருந்தால்” என்று வருந்தி பல்லவி பாடிக்கொண்டிருப்பர்.
சரியான வழியில் அடமாக இல்லாதிருந்தால், அடம்பிடிக்கும் மக்கள் நரகத்திற்குச் செல்வர். உண்மையைத் தொடர்ந்து பற்றிக்கொண்டேயிருக்கவேண்டும். மனிதன் தீர்மானமில்லாதவனாக இருக்கக்கூடாது. நாம் உறுதியாக தொடர்ந்து நிற்க வேண்டியவற்றில் உறுதியாக தொடர்ந்து நிற்கவேண்டும். நாமனைவரும் சரியான வழியில் உறுதியாக நிற்கவேண்டும். தேவைப்படும்போது நம்முடைய உறுதியை உடைக்கவேண்டும்.
 
 
மனிதனின் செய்கைகளுக்கேற்ப கர்த்தர் திருப்பிக்கொடுக்கிறார்
 
“தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையுயும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார்” (ரோமர் 2:6-7). கர்த்தர் ஒவ்வொரு நபரின் அவனின்/அவளின் செய்கைகளுக்கேற்றவாறு அவனுக்கு/ அவளுக்கு திருப்பிக் கொடுக்கிறார். ‘கொடுத்தல்` என்பதன் பொருள் ‘செய்கைக்கேற்ற சன்மானம்` என்று பொருள்படும். மகிமை, மதிப்பு, அழியாத வாழ்வு ஆகியவற்றைத் தேடிக்கொண்டு நல்லவற்றைச் செய்ய பொறுமையைக் கைக்கொள்ளும் நபர் எத்தகையவர்? இயேசுவின் நிறைவான நற்செய்தியை நம்பும் அவனோ/அவளோ அது.
உலகில் அநேக மக்கள் இருக்கின்றனர், மற்ற மனிதர்கள் என்ன கூறுகிறார்கள் எனபதைக் குறித்து கவலைப்படாமல் அவரின் உண்மையை நம்பி நீதியில் தொடர்ந்திருப்போருக்கு கர்த்தர் அழியாத வாழ்வைக் கொடுக்கிறார். நீதிமானாக விரும்புவதோடு நித்தியமாக மகிழ்ச்சியான வாழ்வை நடத்த விரும்புவோருக்கு கர்த்தர் பரலோகத்தின் மகிமையைக் கொடுக்கிறார். அவர்கள் தொடர்ந்து நல்லவற்றைச் செய்து, மகிமை, மதிப்பு அழியாத வாழ்வு ஆகியவற்றைத் தேடுகின்றனர்; அவர்கள் கர்த்தரின் மகன்களாக விரும்புகின்றனர். அவர்கள் விடாமல் நல்லவற்றைச் செய்வதைத் தொடர்ந்து கர்த்தரின் நீதியைப் பின்பற்ற விழைகிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு அழிவில்லாத வாழ்வைக் கொடுக்கிறார். கர்த்தர் அவர்களை நித்தியமாக வாழ அனுமதித்து அவர்களைத் தம் பிள்ளைகளாக்குகிறார். கர்த்தரின் மகன்கள் அவர் இராஜ்யத்தின் கர்த்தர்கள்.
“சண்டைக்காராராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை வரும்.” (ரோமர் 2:8). “அவர்களுக்கோ” என்பது ஆசீர்வதிக்கப்பட்டவர்களை எதிர்க்கும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது. அவரின் நீதிக்கு கீழ்ப்படியாமல் சண்டைக்காரராயிருந்து சத்தியத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் மீது கர்த்தரின் உக்கிரமான கோபாக்கினை வரும். கர்த்தர் அவர்களை நரகத்திற்கு அனுப்புகிறார். மறுபடியும் பிறவாமல் சத்தியத்திற்கும் கீழ்ப்படியாமல் சண்டைக்காரர்களாயிருக்கும் குழுவாகிய அவர்கள் உண்மைக்கு எதிராயிருக்கிறார்கள்.
மறுபடியும் பிறவாதவர்கள் சண்டைக் காரர்களாயிருந்து குழுக்களை அமைக்க விரும்புகிறார்கள். கொரிய வரலாறு முழுவதும், நம் மூதாதையர்கள் குழுக்களை அமைத்து அரசியல் பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் போர் புரிந்தனர். யார் அரசரனார் என்பதைப் பொருத்து அரசாளும் குழு தீர்மானிக்கப்படும். ஒரு லீ குடும்பத்தைச் சேர்ந்தவர் அரசரானால், லீ குடும்பத்தினர் உயர்ந்த சமூகப் பதவிகளில் அமர்த்தப்படுவர், மற்றவர்களோ நாடு கடத்தப்படுவர் அல்லது துன்புறுத்தப்படுவர். சிங்காசனம் கிம் குடும்பத்தினருக்கு மாறும்போது எல்லாம் முற்றிலுமாக மாறிவிடும். மக்கள் ஏதோ ஒரு நீதியான காரணத்திற்கல்லாமல் தம் சொந்த நலன்களுக்காக பிரிவுகளை உருவாக்கினர்.
இப்போதைய கிறிஸ்தவமும் இதைப் போன்றதே. அவர்கள் பிரிவுகளையும் கோத்திரங்களையும் உருவாக்கினர். எதற்காக? ஒரு குழுவாக சத்தியத்திற்கு கீழ்ப்படியாமலிருக்க. இயேசு உலகின் பாவங்களைக் கழுவி விட்டாலும் கூட தம்மிடம் பாவமிருப்பதாக ஒரே குரலில் கூறுகிறார்கள். அவர்கள் நீதிமான்கள் போன்றும் இரட்சிக்கப்பட்டவர்கள் போன்றும் காண்பிக்கிறார்கள், ஆனால் அவர்கள் சத்தியத்திற்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள், நீதிமான்களை வேதப்புரட்டர்கள் என்று கண்டிக்கிறார்கள், பாவத்தை கொண்டிருப்பதற்கு தமக்கு உரிமை இருப்பதாக கூறுகின்றனர். நீதிமான்களுடன் சண்டையிடும் பாவிகள் தவறானவர்கள் என்றும் அவர்களனைவரும் நரகத்திற்குச் செல்லவேண்டும் என்று தேவன் கூறுகிறார்.
சத்தியத்திற்கும் கர்த்தருக்கும் கீழ்ப்படிபவர்கள் தேவனின் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவர். நீதிமான்களாகிய நாம் சத்தியத்திற்கேற்றவாறு கர்த்தரின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்கிறோம்.
 
 
கிறிஸ்தவ பிரிவுகளால் நம்மை பரலோக இராஜ்யத்திற்கு அனுப்பமுடியுமா?
 
பிரிவுகளின் அமைப்பினால் நம்மை பரலோக இராஜ்யத்திற்கு அனுப்பமுடியாது. “ஒரு மத அமைப்பினால் உங்களை பரலோக இராஜ்யத்திற்கு அனுப்ப முடியாது” என்று என் மனைவி தன் மாமியாரிடம் கூறி அவரின் கோபத்தை தூண்டினார். வெளிப்படையாக கூறினால் இந்தக் கூற்றினால் என் தாயார் ஏன் கோபம் கொண்டார் என்று இதுவரை எனக்குத் தெரியாது. ஒரு மத அமைப்பினால் உங்களை பரலோக இராஜ்யத்திற்கு அனுப்ப முடியும் என்று எண்ணுகிறீர்களா? கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்பதன் மூலம் தனித்தனியாக நாம் இரட்சிக்கப்பட்டு பரலோக இராஜ்யத்திற்கு செல்கிறோம். பிரஸ்பைட்ரியன் ஆலய மதக்குழுவால் உங்களை பரலோக இராஜ்யத்திற்கு அனுப்பமுடியுமா? பரிசுத்த சபையால் முடியுமா? ஏழாம் நாள் ஔய்வுக்காரர்களின் ஆலயத்தால் முடியுமா? இல்லை. இயேசு நமக்காக ஏற்பாடு செய்த பாவமன்னிப்பை விசுவாசிக்கும்போது மட்டுமே நம்மால் பரலோக இராஜ்யத்திற்குள் செல்லமுடியும்.
 
 
கர்த்தரின் ஆலயத்திற்கு நாம் கீழ்ப்படியவேண்டும்
 
கிறிஸ்தவர்களில் நரகம் செல்லப்போகிற பாவிகளையும் பரலோக இராஜ்யம் செல்லப்போகிற நீதிமான்களையும் அப்போஸ்தலனாகிய பவுல் பிரித்தான். நற்செய்தியானது யூதருக்கும் கிரேக்கருக்கும் எல்லோருக்கும் சமமானது. இங்கு, கிரேக்கர் புறஜாதியாரையும் யூதர் இஸ்ரவேலரையும் குறிக்கின்றனர். கர்த்தர் மனிதர்களின் வெளித்தோற்றத்தைப் பார்ப்பதில்லை. இருதயப்பூர்வமாக அவரின் வார்த்தைகளை விசுவாசிக்கும் மனிதனையே அவர் பார்க்கிறார். இயேசுவே கர்த்தர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு நம் இரட்சகர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்த்து தீர்த்தார் என்று விசுவாசிக்கும்போது மட்டுமே நம்மால் பரலோக இராஜ்யத்திற்கு செல்லமுடியும். நாமிதற்கு துரோகம் செய்யாமல் இதனை விசுவாசிக்கவேண்டும். நமக்குள்ளிருக்கும் பரிசுத்த ஆவியானவர் நம் விசுவாசத்திற்கு நாம் துரோகம் செய்யாதபடி செய்து பயங்கரம் நம்மீது வருகையில் நம் எதிரிகளை முறியடிக்க உதவுகிறார். நாம் கவனமாக இருக்கவேண்டும்.
நாலு விதமான நிலங்களைக் குறித்த கதை வேதாகமத்தில் இருக்கிறது, அவற்றில் சில இரட்சிக்கப்படமுடியாதவர்களைக் குறிக்கிறது. அந்த நிலங்களில் தூவப்பட்ட விதைகள் சிறிது முளைத்தவுடனேயே கருகிவிட்டன. அந்த மக்களும் காய்ந்து போன விதைக்கு ஒப்பானவர்கள். அதற்கும் அதே விளைவே. அதாவது மரணம். அப்படியானால், நம்மாலேயே நம் விசுவாசங்களை கடைப்பிடிக்கமுடியுமா? இல்லை. எந்த கஷ்டத்திற்கும் எல்லா ஆவிக்குரிய சுகவீனங்களுக்கும், நாம் உண்மையான திராட்சை தோட்டத்தில் வாழ்ந்திருக்கும்போது, கர்த்தர் நமக்கு தொடர்ந்து போராட பலத்தைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே நம்மால் நம் விசுவாசத்தைக் கடைப்பிடிக்க முடியும்.
கர்த்தரின் ஆலயம் திராட்சைத் தோட்டமாகும். தேவன் நமக்கு, ஆசீர்வாதங்கள், தீர்வுகள் ஆறுதல்கள் மற்றும் கர்த்தரின் ஆலயத்தில் நாமிருக்கும்போது வரும் துன்புறுத்தல்களைச் சகிக்கும் விசுவாசம் ஆகியவற்றைத் தருகிறார். நாம் திராட்சைத் தோட்டத்தில் இல்லாவிட்டால் நம் கதி என்னவாகும். நாம் சீக்கிரமாக மரித்துபோவோம். நீதிமான்களின் இருதயங்களால் சாத்தானின் தாக்குதல்களைத் தொடர்ந்து சகிக்க முடியாது, அவர்களிடம் எத்தனை திறமைகள் வல்லமைகள் இருந்தாலும் அவர்கள் ஆலயத்தில் தாமாக ஐக்கியமாகாவிட்டால் சுகவீனமடைவர். இதனைக் காண்கிறீர்களா? அவர்கள் படிப்படியாக விழுந்து மேலும், பயனற்றவர்களாகிப்போவர். வேதாகமம் கூறுகிறது, “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.” (மத்தேயு 5:13).
நீதிமான்கள் கூட ஆலயத்திலிருந்து தூரமாக வாழ்ந்தால் அவர்கள் எதற்கும் சரியில்லாதவர்கள். அவர்கள் ஆலயத்தினுள் வாழ்ந்திருக்கும்போது அவர்களின் விளக்கை பிரகாசிக்கச் செய்யவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கவும் முடியும். அவர்கள் ஆலயத்திலிருந்து தூரமாக வாழும்போது அழிந்து போவர், மேலும் அவர்கள் ஆலயத்திற்கு தூரமாகும்போது உலகை மேற்கொள்ள முடியாமல் உலகினுள் சாம்பலாகிப் போகின்றனர். உங்கள் சொந்த விசுவாசங்களை எவ்வளவு நேரம் உங்களால் உயரே பிடித்திருக்க முடியும்? உங்களால் கர்த்தரின் ஆலயத்திலிருந்து தூரமாக எத்தனை நேரம் நிற்க முடியும், கர்த்தரின் ஊழியர்களால் கூட அப்படியிருக்க முடியாது. ஆயினும், நாம் திராட்சைத் தோட்டத்தில் வாழும்போது, நம் வீடு இரட்சிக்கப்படுவதோடு, நம்மூலமாக அநேக மக்கள் பாவமன்னிப்பை பெறுவர். மனித ஆசையை முடித்த பிறகு லோத்து எங்குச் சென்றான்? அவன் சோதோமிற்குச் சென்றான். அவன் அங்கு நன்றாக வாழ்ந்தான். அதன் பலன் என்ன? அவன் அழிந்து போனான். லோத்தின் அனைத்துச் சந்ததியினரும் அழிந்து போனதாக வேதாகமம் கூறுகிறது. மோவாபியர்களும் அம்மோனியர்களும் லோத்தின் மகள்களிலிருந்து தோன்றியவர்கள்.
கர்த்தருக்கு எதிரான சந்ததியினர் நீதிமானாகிய லோத்திற்கு ஏன் பிறந்தனர்? அவன் ஆலயத்திலிருந்து பிரிந்து சென்றமையே. கர்த்தர் அவருடைய ஆலயத்தை ஏற்பாடு செய்ததினால் என்னுடைய கடினமான வேலைகளில் நான் தோல்வியடையவில்லை. நீதிமான்கள் கூடும் ஆலயத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பதோடு, ஔவ்வொரு தனி பரிசுத்தவானுக்கும் அவர் மேய்ப்பவராகி ஆலயத்தின் தேவனுமாகிறார். அது அவருடைய வாக்குத்தத்தமும் உறுதிமொழியுமாய் இருக்கிறது.
“எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப் பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப் பிரமாணத்துக்குட் பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலேயே ஆக்கினைத் தீர்ப்படைவார்கள். நியாயப் பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். அன்றியும் நியாயப் பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப் பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்கு தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” (ரோமர் 2:12-15).
இந்நாட்களில் ஆலயம் போகாத ஒருவருக்கு சட்டத்தை தெரியாது, அவனுக்கு/அவளுக்கு சட்டத்தைக் குறித்து தெரியாததால் அவனுடைய/அவளுடைய மனச்சாட்சி சட்டமாகிவிடுகிறது. அவனுடைய/அவளுடைய மனச்சாட்சியைப் பொருத்து அது சரியானது அல்லது தவறானது என்று அவனுக்கோ/அவளுக்கோ தெரிந்திருந்தாலும் அவனோ/அவளோ தீயவற்றையே செய்கிறார்கள். அப்பொழுது, அது பாவமாகிவிடுவதால் அவனோ/அவளோ பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட கர்த்தரைத் தேடவேண்டும். உண்மையாகவே அவரைத் தேடுகிறவர்களை கர்த்தர் சந்திக்கிறார்.
கர்த்தருக்கு முன் நாம் அவரின் இரக்கத்தை எதிர்ப்பார்த்து அவரை விசுவாசிக்கவேண்டும். நம்முடைய பெருமையை கைவிட்டு அவரை விசுவாசிக்கவேண்டும், விசுவாசத்தினால் நாம் வாழவேண்டும். நாம் கர்த்தரின் ஆலயத்தை விட்டு விலகக்கூடாது. நாம் தேடி, விசுவாசித்து ஆலயத்தில் தங்கியிருக்கவேண்டும். நாம் குறைவுள்ளவர்களும் பலவீனமானவர்களாகவும் இருந்தாலும், நாம் ஆலயத்தில் தங்கியிருக்கும் போது கர்த்தர் நம்மை வெளியேற்றுவதில்லை.
 
 
யூதர்களின் பாவங்கள்
 
பரலோக இராஜ்யத்திற்கு செல்பவர்களை அவர்களிலிருந்து பிரித்த பிறகு, யூதர்களுக்கு நற்செய்தியை, அப்போஸ்தலனாகிய பவுல் முழு அளவில் போதிக்கத் தொடங்கினான்.
“நீ யூதனென்று பெயர் பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்தது, தேவனைக் குறித்து மேன்மை பாராட்டி, நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே. நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தக்காரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும், பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையையும், சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே? இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா? விபசாரம் செய்யக் கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?” (ரோமர் 2:17-22).
கீழ்க்கண்டவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும். முதலாவதாக கர்த்தர் யூதர்களிடம் பேசினார், ஆகவே அவர்களிடம் கர்த்தரின் வார்த்தையும் பலியிடும் முறையும் இருந்தது. அவர் யூதர்கள் மூலம் மேசியாவை அனுப்புவதாக உறுதியளித்து அவரின் யூத ஊழியர்களின் மூலம் அத்திட்டத்தினைக் காண்பித்தார். ஆயினும், யூதர்கள் கர்த்தருக்கு எது பிரியமானது என்றும் அவருடைய சட்டம் எதுவென்றும் புரிந்துக் கொண்டதாக எண்ணி தீவிரமாக கர்த்தரின் வார்த்தைகளை வாய்ப்பாடாகச் சொல்லி அதனை மனனஞ்செய்தார்கள். அப்படியிருந்தாலும், அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “நீ யூதனென்று பெயர்பெற்று, நியாயப் பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து தேவனைக் குறித்து மேன்மைப் பாராட்டி” யூதர்கள் கர்த்தரைக் குறித்து மேன்மைப் பாராட்டினாலும், பலிகளைச் செலுத்தி ஒழுங்காக ஆராதித்தாலும், யூதர்கள் இரட்சிக்கப்படவில்லை. இயேசுவை முழுமையாக தம் இரட்சகர் என்று விசுவாசிக்காதவர்கள் அவிசுவாசிகளுக்குச் சமமானவர்களே. பலியிடும் முறையில் கூறப்பட்டபடி அவர் அவர்களை இரட்சிப்பதாக உறுதியளித்ததையோ அல்லது இயேசுவை இரட்சகராகவோ அவர்கள் விசுவாசிக்கவில்லை என்று பொருள்படுகிறது.
இரட்சகராகிய இயேசுவை யூதர்கள் விசுவாசிக்காததால் அவர்கள் நரகம் செல்வர். ஆட்டின் தலைமீது அவர்கள் மீண்டும் மீண்டும் கைவைப்பது பயனற்றது. பழைய ஏற்பாட்டின் மல்கியாவின் காலத்தில் ‘கைவைத்தல்` என்பது ‘சுமத்துதல்` என்று பொருள்பட்டது என்பதை அவர்கள் உண்மையாக விசுவாசிக்கவில்லை. அவர்கள் தாவீதின் காலத்தில் இதனை நன்கு விசுவாசித்தார்கள், ஆனால் சாலமோனின் காலத்தில் அவர்கள் விசுவாசம் தவறாகத் தொடங்கியது. ராஜ்யம் இரண்டாக பிரிந்தபோது, ஆலயத்தில் கடமைக்காக பலியாராதனையை ஏறெடுத்த அதே சமயம் மற்றக் கர்த்தர்களான பாகாலையும் அசீராவையும் அவர்கள் ஆராதித்தனர். கடமைக்காக பலியாராதனையை ஏறெடுப்பது கர்த்தரை நம்பாததற்கு ஒப்பாகும். நாம் கர்த்தரை விசுவாசித்து அவரின் வார்த்தைகளில் தங்கியிருக்கும்போது கர்த்தர் திருப்தியடைகிறார்.
ஆசரிப்புக்கூடாரத்தின் பலியிடும் முறையில், ஒருவனின் பாவமானது அவன் பலி மிருகத்தின் தலை மீது கைவைக்கையில் அதன்மீது சுமத்தப்பட்டது. அவர்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரிந்திருந்தாலும், மற்றவர்களுக்கு போதித்து, அவர்கள் அதனை விசுவாசியாதிருந்தார்கள். அது யூதர்களுடைய பாவமாகும். கர்த்தரின் வார்த்தைகளின் எழுத்து வரை அறிந்து அவரின் வார்த்தைகளின் உண்மையை விசுவாசியாமல், அந்த வார்த்தைகளை மற்றவர்களுக்கு பிரசங்கிப்பது யூதர்களின் பாவமாயிருந்தது.
அது கர்த்தரை விசுவாசிக்காததற்கு சமமானது. அது ஒரு கொடிய பாவம். “நீ யூதனென்று பெயர் பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்தது, தேவனைக் குறித்து மேன்மை பாராட்டி, நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே. நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தக்காரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும், பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையையும், சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே?” விசுவாசமில்லாமையால் வந்த யூதர்களின் பாவத்தை பவுல் சுட்டிக்காட்டினான்.
 
 
இருதயத்தில் பாவங்களுடன் இயேசுவை விசுவாசிப்பது கர்த்தரை மாசுபடுத்துவதாகும்
 
யூதர்களின் அந்தத் தவறு இன்றுள்ள அநேக கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். யூதர்களும் அவர்களைப் போன்றே தம் எல்லாப் பாவங்களையும் இயேசு துடைத்து பரிசுத்தமாக்கினார் என்று விசுவாசிப்பதில்லை. “நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மை பாரட்டுகிற நீ நியாயபிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம் பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.” (ரோமர் 2:23-24) இயேசுவை தவறான வழியில் நாம் விசுவாசிப்பது கர்த்தரின் பெயரை மாசுபடுத்துவதாகும். இயேசு செய்தவற்றை மிகச் சரியாக விசுவாசித்து நாம் மறுபடியும் பிறக்கவில்லையென்றால் அது கர்த்தரின் பெயரை மாசு படுத்துவதாகும்.
மறுபடியும் பிறக்காமல் இயேசுவை விசுவாசிப்பது கர்த்தரை இகழுவதாகும். “நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்: நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே. மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்த சேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா? சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா? ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின் படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப் பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.” (ரோமர் 2:25-29) நாமனைவரும் இயேசுவின் வார்த்தைகளை இதயப்பூர்வமாக பெற்றுக் கொள்ளவேண்டும்.
 
 
எது முன்னால் வந்தது, விருத்தசேதனமா அல்லது சட்டமா?
 
எது முன்னால் வந்தது, விருத்தசேதனமா அல்லது சட்டமா? இஸ்ரவேலருக்கு முதலில் கர்த்தர் கொடுத்தது எது? விருத்தசேதனம். கர்த்தர் ஆபிரகாமை விருத்தசேதனம் பண்ணும்படிக் கூறினார். ஆபிரகாம் 99 வயதுடையவனாயிருந்தாலும் மகன் இல்லாதவனாயிருந்தான். ஆயினும், ஆபிரகாம் 75 வயதினனாக இருக்கும்போது கர்த்தர் அவனுக்கு உறுதியளித்தார். கர்த்தர் ஆபிரகாமிடம் கூறினார், “வெளியே வா, வானத்திலுள்ள நட்சத்திரங்களின் அளவிற்கு உன் சந்ததியினரைப் பெருகப்பண்ணுவேன்.” ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்து 25 வருடங்கள் காத்திருந்தான். ஆகவே அவன் 100 வயதுடையவனானபோது அவனுக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டான். அவன் மனச்சோர்வு அடைந்தாலும், காத்திருக்குபோது அநேக தவறுகளைச் செய்தாலும் 25 வருடங்கள் காத்திருந்தான். கர்த்தர் அவனுக்கும் அவன் மகன்களுக்கும், ஆவிக்குரிய பரலோக இராஜ்யத்தைக் குறிக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாகிய கானானைக் கொடுப்பதாக உறுதியளித்தார்.
கர்த்தர் பரலோக ராஜ்யத்தை ஆபிரகாமிற்கு உறுதியளித்த பிறகு, அவன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனும் விருத்தசேதனம் செய்ய வேண்டுமென கூறினார். விருத்தசேதனம் கர்த்தருக்கும் அவனுக்கும் உள்ள உடன்படிக்கைக்கான அடையாளம் என்று கர்த்தர் கூறினார். ஆகவே ஆபிரகாம் விருத்தசேதனம் செய்துக் கொண்டான். அவன் குடும்பத்திலிருந்த அனைத்து ஆண்களும் அப்படியே செய்துக்கொன்டார்கள். சத்தியத்தின் நற்செய்தியை பெற்று அதனை விசுவாசிக்கும் அந்த நம்பிக்கையானது விருத்தசேதனத்திற்கு ஒப்பானதாகும்.
 
 
இஸ்ரவேலர்கள் இருதயத்தில் விருத்தசேதனம் பண்ண மறுத்தனர்
 
ஆயினும் ஆபிரகாமின் சந்ததியினரான இஸ்ரவேலர்கள் தாம் விருத்தசேதனம் செய்துகொண்டதைக் குறித்து பெருமைப்பட்டு, புறஜாதியாரிடம் மூர்க்கத்தனமாக கேட்டனர். “நீ விருத்தசேதனம் செய்துகொண்டாயா?” நாம் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யவேண்டும். இயேசு இவ்வுலகின் பாவங்களைத் துடைத்தார் என்பதை பெற்று அதனை நம்மிருதயங்களில் விசுவாசிக்கும்போது நாம் இரட்சிக்கப் படுகிறோம்.
இஸ்ரவேலைப் போன்று எந்த நாடும் இத்தனைமுறை படையெடுக்கப்படவில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் ஆழ்ந்த துயரத்தில் வீடின்றி வாழ்ந்தனர். கர்த்தர் இஸ்ரவேலை மிதித்துப்போட்டார். ஏன்? ஏனெனில் அவர்கள் விசுவாசிக்கவிலை.
கர்த்தர் இஸ்ரவேலை நேசித்தாலும் கர்த்தர் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்பதை அவர்கள் விசுவாசிக்கவேண்டுமென விரும்பினாலும், அவர்கள் விசுவாசிக்காததால் கர்த்தரின் பெயரை அவர்கள் மாசுபடுத்தினர். அவர் இஸ்ரவேலின் மேய்ப்பராயிருந்து அவர்களின் பகைவரை முறியடித்து, அவர்களை ஆசீர்வதித்து, நேசித்து, அவர்களுக்கு மகிமையை அளிக்க விரும்புகிறார்.
அவர்கள் கர்த்தரை தம் இருதயங்களினால் விசுவாசித்து பாவமன்னிப்பை பெற்றால் அனைத்து மக்களையும் தமது பிள்ளைகளாக்கி அவர்களை மகிமைப்படுத்துவதாக கர்த்தர் உறுதியளித்தார். இஸ்ரவேலின் உதாரணம் மூலம், உலகின் அனைத்து மக்களையும் அவர்கள் அவரின் உறுதிமொழியைப் பெறாவிட்டால் நரகத்திற்கு அனுப்புவதாக எச்சரிக்கைச் செய்கிறார்.
அவனோ/அவளோ தம் செய்கைகளில் குறைபாடுடையவர்களாக இருந்தபோதிலும், இயேசு உறுதியளித்த நற்செய்தியாகிய அவரின் உண்மையை யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள் என்று கர்த்தர் உறுதியளித்தார். கர்த்தரின் நியாயத்தீர்ப்பை தவிர்ப்பதற்கான ஒரே வழி நற்செய்தியை விசுவாசிப்பதே. அதனை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்பட்டு அதனால் நரகத்தை தவிர்க்க இயலும்.
தேவனின் இரக்கம் எல்லா ஆத்துமாக்களின் மீதும் இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.