• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 2-1] ரோமர் 2 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம்

2021.04.21 27
இவ்வுலகில் இரண்டு குழுவினர், யூதரும் கிறிஸ்தவர்களும் கர்த்தரை விசுவாசிக்கின்றனர். இம்மக்களில் இயேசுவை விசுவாசிப்பவர்களும் அவரை விசுவாசியாதவர்களும் இருக்கின்றனர். இயேசுவை விசுவாசிக்காதவர்களின் நம்பிக்கையை பயனற்றது என்று கர்த்தர் கருதுகிறார். ஆயினும், கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் மிகவும் முக்கியமான பிரச்சினை, இயேசுவை அவர்கள் எப்படியோ விசுவாசித்தபோதிலும், அவர்கள் தம் பாவங்களுக்கு கிரயம் செலுத்தாததாகும். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 2 ஆம் அதிகாரத்தில் இக்கருத்தை யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கு மட்டுமல்லாது இந்நாளின் கிறிஸ்தவர்களுக்கும் கூறுகிறான்.
 
 
யூதர்கள் மற்றவர்களை இலகுவாக தீர்த்தனர்
 
ஒரே மாதிரியான நம்பிக்கையுள்ள யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அப்போஸ்தலனாகிய பவுல் கண்டிக்கிறான். ரோமர் 2:1 இல் பவுல் “மற்றவர்களைக் குற்றவாளியாக தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி” என்று யூதர்களாயும் கிறிஸ்தவர்களாயும் இருப்பதால், மேலானவர்கள் என்ற விஷமேறியவர்களைக் கடிந்துக் கொள்கிறான். கர்த்தரை விசுவாசித்தபிறகும் மறுபடியும் பிறவாதவர்களுக்கு கூட சட்டத்தின்படி எது தவறானது என்று அவர்களின் இருதயத்தின் மனச்சாட்சியினால் அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே அவர்கள் மற்றவர்களைத் திருடாதே என்று கூறுகிறார்கள். ஆயினும் அவர்கள் விபசாரம் செய்கிறார்கள். தேவனின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில்லை. ஆயினும், தம்மை கர்த்தரை விசுவாசிப்பவர்கள் என்று கூறிக்கொண்டு, மற்றவர்களை வழிநடத்துகிறார்கள். யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் உள்ள இந்த மக்களே மறுபடியும் பிறவாதவர்கள்.
கர்த்தரை விசுவாசிப்பவர்கள், கர்த்தரின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக மேன்மை பாராட்டி, மற்றவர்களை சிலையை வணங்காதே என்றும், கொலை செய்யாதே என்றும் கூறுகிறார்கள். ஆகவே கர்த்தரின் சட்டத்தை உடைப்பதால் அவர்கள் கர்த்தரை அவமரியாதைச் செய்கிறார்கள்.
கர்த்தருடைய நீதியைத் தெரியாத மக்கள் இயேசுவை விசுவாசிப்பதோடு இயேசுவே தம் இரட்சகர் என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் விசுவாசம் கர்த்தரின் நீதியின் அடிப்படையில் அமைந்ததல்ல. ஆகவே அவர்களின் அனைத்துப் பாவங்களையும் ஏற்கெனவே துடைத்துப்போட்ட கர்த்தரின் நீதியை அவர்கள் எதிர்க்கின்றனர். கர்த்தரை உண்மையாகவே விசுவாசிப்போரை எதிர்க்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. அநேக மக்கள் தம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்வதைக் காணலாம், ஆனால் இயேசுவின் அன்பைக் குறித்தோ ஆவிக்குரிய விருத்தசேதனத்தைக் குறித்தோ அவர்கள் அறியாமல், கர்த்தரின் நீதியை உள்ளடக்கிய நற்செய்தியை புறம்பேத் தள்ளிவிடுகின்றனர். அவர்கள் கர்த்தரின் சித்தத்தைக் கடைப்பிடிப்பதாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக இயேசு தம்மை தேவகுமாரன் என்று கூறியது தேவதூஷனம் என கூறி அவரைச் சிலுவையில் அறைந்தனர்.
வெளியரங்கமான யூதன் யூதனல்லவென்றும் உள்ளரங்கமான யூதனே அசல் யூதனென்றும் அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். அவர்கள் தம்மை கர்த்தரின் மக்களென்றும் தம்நாடு கர்த்தரின் நாட்டின் ஒரு பகுதி என்றும் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் யூதர்களால் இயேசு தம் இரட்சகர் என்பதை மறுத்து கர்த்தரை விசுவாசிக்க எப்படி முடிந்தது?
அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். “எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” (ரோமர் 2:29). ஆவிக்குரிய விருத்தசேதனத்தை விசுவாசிப்பவர்களே உண்மை விசுவாசிகள். அவர்கள் விசுவாசத்தினால் நீதிமான் ஆனார்கள்.
கர்த்தரின் விசுவாசிகள் யாரிடமிருந்து பாராட்டுதலையும், புகழையும் பெறுவர்? அதனை அவர்கள் கர்த்தரிடமிருந்து பெற வேண்டும். “இப்படிப் பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.” (ரோமர் 2:29) கர்த்தருடைய நீதியை நாம் விசுவாசித்தால், நாம் அவரின் புகழுதலை வென்று அவரிடமிருந்து சன்மானத்தையும் பெறுவோம். உன்னுடைய இருதயத்தில் பாவத்தை தக்கவைத்து இயேசுவை வெளியரங்கமாக விசுவாசித்தால், நீ கர்த்தருடைய நீதியை உண்மையில் விசுவாசிக்கவில்லை; நீ அவரை பரியாசம் செய்கிறாய். ஆகவே, அவிசுவாசி பெறும் தீர்ப்பை நீ பெறுவாய்.
கர்த்தரின் உண்மையை அலட்சியம் செய்வது யார்? கர்த்தரின் வார்த்தைகளை விட மனிதரின் வார்த்தைகளை வெகுவாக கடைபிடிப்பவர்களே அவர்கள். அவர்கள் தம்மை கிறிஸ்தவத்தின் வெவ்வேறு மதக்குழுக்களில் சேர்த்து கர்த்தரை எதிர்க்கின்றனர். அவர்கள் தாம் ஐக்கியமானதின் வல்லமையினால் கர்த்தரின் நீதியின் இரட்சிப்பிற்கு எதிராக அதனை புறக்கணித்து நிற்கின்றனர். இத்தகைய மனிதர்கள் மீது எத்தகைய தண்டனைகள் வருமென்று உன்னால் யூகிக்க முடிகிறாதா?
 
 
கர்த்தரை எதிர்ப்போருக்கான தண்டனை
 
8 மற்றும் 9 ஆம் வசனங்கள் கூறுகின்றன. “சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்கு செய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகூலமும் உண்டாகும்.”
தீமை செய்யும் மனிதர்களின் ஒவ்வொரு ஆத்துமாக்களின் மீதும் உபத்திரவமும் வியாகூலமும் வரும். இங்கு வியாகூலம் என்ற வார்த்தை அவர்கள் நரகத்தில் பெறும் தண்டனையைக் குறிக்கிறது. தீமை செய்பவர்களின் மீது உபத்திரவமும் நரகத்தில் வியாகூலமும் காத்திருக்கிறது.
கர்த்தரை புறக்கணிப்போர் எத்தகைய சாபம் பெறுவர்? அவரின் அன்பை புறம்பேத் தள்ளுபவர்கள் மீது பயங்கரமான தீர்ப்பைக் கர்த்தர் கொண்டுவருகிறார். ஆவிக்குரிய விருத்தசேதனத்தினால் வரும் கர்த்தரின் அன்பை எதிர்ப்பவர்களால், உடல் மற்றும் மனதில் சமாதானமாக எப்படி வாழமுடியும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்? சில மக்கள் இப்பொழுதும், மரித்தபிறகும் அழிந்துபோன வாழ்வு வாழ்பவர்களாயுள்ளனர், ஏனெனில் அவர்கள் கர்த்தரின் கோபத்திற்கு பாத்திரமானவர்கள். அவர்கள் கர்த்தரின் நீதியை எதிர்த்தமையினாலே உண்மையான திருப்தியை தம் இருதயங்களில் தக்கவைக்க முடியாது. இயேசுவை தாம் விசுவாசிப்பதாக ஆலயம் சென்று அறிக்கைச் செய்தாலும், ஆவிக்குரிய விருத்தசேதனத்தினால் அன்பு வருகிறதென்று அவர்கள் அறியாததால், தம் பாவங்களுக்கு கிரயம் செலுத்தாமல் அவர்கள் துன்புறுவர்.
இயேசுவை வெறுமனே விசுவாசிப்பதால் இந்த இரகசியம் உங்களுக்குத் தெரியாது. கர்த்தரை தவறாக விசுவாசிப்போரே, கர்த்தருடைய நீதியாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை புரிந்து அதனை விசுவாசித்து ஆலோசனையுள்ளவர்களாயிருங்கள். அப்பொழுது உங்களைத் துன்புறுத்தும் சாபத்திலிருந்து உங்களால் விடுதலையடைய முடியும்.
ஒரு மனிதன் இயேசுவை விசுவாசித்தபோதிலும், தன்னிருதயத்தில் பாவமிருப்பதாக கூறினால், அதன் பொருள் அவன் தவறான வழியில் விசுவாசிக்கிறானென்றும், அவன் கர்த்தருடைய நீதியை உள்ளடக்கியுள்ள உண்மை நற்செய்தியை விசுவாசிக்க வேண்டுமெனவும் பொருள்படுகிறது. மக்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்து இயேசுவை விசுவாசித்தாலும் அவரை எப்படியோ விசுவாசித்து தம்மிருதயத்தில் பாவங்களை தக்கவைத்துக் கொண்டிருந்தால் அது பொருட்டல்ல. அவர்கள் கர்த்தரின் நீதியை அலட்சியம் செய்யும் பாவத்தைச் செய்கின்றனர். கர்த்தரை விசுவாசிப்பதால் கிட்டும் சரியான பதில் என்ன? உண்மையாகவே இயேசுவை உங்கள் இரட்சகராக விசுவாசித்தால், நீங்கள் நிச்சயமாக பாவமற்றவர்களாயிருப்பீர்கள். ஆயினும், நீங்கள் இயேசுவை விசுவாசித்தப் பிறகு உங்களிருதயத்தில் பாவமிருந்தால், நீங்கள் கர்த்தரின் நீதியை முழுவதும் புரிந்துகொள்ளவில்லை என்று பொருளாகிறது.
எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்த தேவன் ஏற்கெனவே மாமிசமாக வந்து, பாவிகளை இரட்சித்து. அவரை விசுவாசிப்போருக்கு இரட்சகருமானார். அப்படியானால், உண்மையாகவே நீர் மற்றும் பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கும் ஒருவரிடம் பாவமிருக்கிறதா? இயேசுவை அவனோ/அவளோ முதலில் விசுவாசிக்கத் தொடங்கியதிலிருந்து, கர்த்தரின் நீதியை அவனோ/அவளோ உண்மையாக விசுவாசித்தால், அத்தகைய நபர் பாவமின்றி இருப்பார். இயேசுவை எப்படியோ விசுவாசித்து, அவனோ/அவளோ கர்த்தரின் நீதியை அலட்சியம் செய்தால், அவனின்/அவளின் இருதயத்தில் பாவம் வந்துவிடுகிறது.
ஆகவே, இப்பொழுதே நீ அடம்பிடிப்பதை விட்டுவிடவேண்டும். “நான் இயேசுவைத் தவறாக நினைத்திருந்தேன்! அப்படியனால் நான் எந்த வகையில் இயேசுவை அறிந்து விசுவாசிப்பது? இயேசுவை விசுவாசிக்கையில் அவரின் சிலுவை முக்கியமானது என்று புரிந்துகொண்டேன், அவரின் ஞானஸ்நானமும் கூட முக்கியமானது. இயேசுகிறிஸ்து தம் ஞானஸ்நானத்தினால் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டதால் அதற்கான கொடூரத்தண்டனையாக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை புரிந்துகொண்டேன்.” இவ்வுண்மைகளை நீங்கள் அறிந்துகொண்டு அவற்றை விசுவாசிக்கவேண்டும்.
தேவனுக்கு எதிராக அடம்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அதற்கேற்றவாறு கர்த்தரின் தண்டனையைப் பெறுவர். அதன் விளைவானது எரியும் நரகத்திற்குள் தள்ளப்படுவதாகும். ஆகவேதான் மத்தேயு 7:22 கூறுகிறது, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்” தேவன் மீண்டும் வருகையில், வெளியே இயேசுவை விசுவாசிப்பதைப் போல் காட்டிக்கொண்டு, கர்த்தரின் நீதியை விசுவாசிக்காமல் தம்மிருதயங்களில் பாவங்களைக் கொண்டிருப்பவர்கள், கர்த்தர் முன் தீர்க்கப்படுவார்கள். அவர்கள் தேவனிடம் கூறுவார்கள், “நான் உம்மை நன்கு விசுவாசிக்கவில்லையா? நான் உமது பெயரால் பிசாசுகளை விரட்டி பல பாஷகளில் பேசவில்லையா? நான் உம்மை ஆராதிக்கவில்லையா தேவனே?”
ஆயினும், தேவன் கூறுவார், “அக்கிரமச் செய்கைக்காரனே, என்னை விட்டு அகன்று போங்கள் (இது கர்த்தரின் நீதியை விசுவாசிக்காதவர்களைக் குறிக்கிறது)! நான் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்ததன் மூலம் உன் எல்லாப் பாவங்களையும் துடைத்ததை விசுவாசிக்காமல், என்னை விசுவாசித்ததாக நீ எப்படிக் கூறலாம்? பொய்யனே, நீ நிரந்தர எரியும் நெருப்பிற்குச் சென்றடைவாய். கள்ளத்தீர்க்கத்தரிசியின் பாவம் உன்னுடையது, நீ அநேகரை நரகத்திற்கு வழி நடத்தினாய்” அவருடைய நீதியை விசுவாசிக்காமலும் தம் அடத்தை விட்டுவிடாமலும் இருப்பவர்கள் கர்த்தரின் பயங்கரமான உக்கிரத்தைப் பெறுவார்கள்.
இத்தகைய விசுவாசத்திற்கான மிகப்பெரிய உதாரணம் யூதராவர், அவர்கள் இன்னமும் கூட கர்த்தருக்கு முன் அடம்பிடிப்பவர்களாயுள்ளனர். இது நாள் வரையிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக, கர்த்தரின் நீதியை அவர்கள் விசுவாசிப்பதில்லை. புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களில் கூட, அநேக அடம்பிடிக்கும் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தாம் ஒவ்வொருமுறையும் மனம் வருந்தி ஜெபிக்கும்போது, அன்றாடப் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறுகிறார்கள். அவருடைய உக்கிரத்தை தவிர்க்க, இம்மக்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காமல் அடம்பிடிப்பதை விட்டுவிடவேண்டும்.
ஒவ்வொரு நாளும் இயேசுவின் பாவமன்னிப்புக்காக, அவர்கள் கொடிய குற்றத்தைச் செய்து அதற்காக வருந்தி ஜெபித்தால் அவர் அதனை மன்னிப்பாரா? அவர் மன்னிப்பதில்லை. பழைய ஏற்பாட்டின் கடைசி தலைமை ஆசாரியனும் மனிதகுலத்தின் பிரதிநிதியுமான யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு 2000 வருடங்களுக்கு முன் ஞானஸ்நானம் செய்வித்தான். மேலும் அவர் சிலுவையில் இரத்தம் சிந்தினார். இப்படியாக அவர் கர்த்தரின் நீதியை நிறைவேற்ற, மனிதர்களின் அனைத்துப்பாவங்களையும் ஒரேதரமாக துடைத்தார்.
இயேசு நம் பாவங்களை எங்கு பெற்றுக்கொண்டார்? இயேசு யோர்தான் நதியில் யோவான் ஸ்நானன் மூலமாக ஞானஸ்நானம் பெற்றபோது மனிதர்களின் அனைத்துப் பாவங்களையும் ஒரே தரம் தன் மீது சுமந்தார். அவர் கொல்கொதாவிற்கு சென்று சிலுவையில் இரத்தம் சிந்தியதின் மூலம் அனைத்துப் பாவங்களுக்குமான கொடியதண்டனையை பெற்றதினால் விசுவாசிகளை நித்தியத்திற்கும் அவர் இரட்சித்தார். ஆனால் அனைத்து கிறிஸ்தவ பாவிகளும் அடம்பிடிப்பவர்களாகவும் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காதவர்களாகவும் இருக்கின்றனர். சிலுவை இரத்தத்தின் மூலம் அவர்களின் இருதயங்களிலுள்ள எல்லாப் பாவங்களும் ஏற்கெனவே கழுவப்பட்டுவிட்டதென்றால், அவர்கள் மரிக்கும் வரை ஏன் பாவமன்னிப்பு கேட்கிறார்கள். அவர்கள் அடமாயிருக்கிறார்கள். இயேசுவின் சிலுவை இரத்தம் முக்கியமானது. ஆனால் இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானமும் முக்கியமானது, எனவே கர்த்தரின் நீதியைப் பெற மக்கள் இவற்றை விசுவாசித்து ஒருமுறை பாவமன்னிப்பு பெறவேண்டும்.
எல்லாருமே அடம்பிடிப்பவர்களே! ஆனால் கர்த்தர் முன் அவரின் நீதியை புறம்பேத் தள்ளி அடம்பிடிப்பதை விட்டுவிடவேண்டும். கர்த்தரை விசுவாசிப்பவர்கள் அவரின் வார்த்தைகளை விசுவாசித்து அவற்றிற்கு கீழ்ப்படியவேண்டும். நானும் கூட அடம்பிடிக்கும் நபர் தான், ஆனால் கர்த்தருக்கு முன் அடம்பிடிப்பதை விட்டுவிட்டு, அவரின் கிருபையினாலே நீதிமானானேன்.
உண்மையான மனந்திரும்புதலானது ஒருவன் தான் அடம்பிடிப்பதை விட்டு கர்த்தரின் நீதியை மனதில் ஒப்புக்கொண்டு பாவமன்னிப்பை பெறுவதாகும். நாம் மன்னிப்பு பெற்ற பிறகு, நம்முடைய தவறான வழிகளை மாற்றி நம் தவறுகளை ஒத்துக்கொண்டு, கர்த்தருக்கு முன் ஆவிக்குரிய விதமாக நல்லதொரு வாழ்வு வாழ முயலவேண்டும். பின்பகுதியான மனம் திரும்புவதானது, மறுபடியும் பிறந்த பரிசுத்தவானின் உண்மை வாழ்வாகும்.
இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தரின் நீதியைக் குறித்து தெரியாவிட்டால் அவர்கள் அழிக்கப்படுவர். இம்மக்கள் அவர்களின் அடம்பிடிக்கும் வழிகளை கைவிட்டு மனந்திரும்பி தம் பாவங்களுக்கு கிரயமாக இயேசுவின் ஞானஸ்நானத்தையும் சிலுவையையும் விசுவாசிக்க வேண்டும். (அப்போஸ்தலர் 3:19). கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் ஒருமுறை பாவமன்னிப்பைப் பெறும்படியாக தேவன் நமக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார். நாம் கர்த்தருக்கு செவிமடுத்து அவரின் வார்த்தைகளை கேட்கவேண்டும். அப்பொழுது இயேசு தம் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணம் மூலமாக, நம் பாவங்களை நிவிர்த்தி செய்தார் என்ற உண்மையை விசுவாசிப்பதன் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு நிறைவான நீதியின் மக்களாக முடியும், ஒரு நபர் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும்போது, அவனின்/அவளின் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு பரிசுத்தஆவியை பரிசாகப் பெறுவார். இயேசுவின் எல்லா அப்போஸ்தலர்களும் சீடர்களும் கர்த்தரின் நீதியை விசுவாசித்து ஒரே நேரத்தில் பாவமன்னிப்பைப் பெற்றனர். நீங்களும் கூட உண்மைக்கு முன் அடம் பிடிப்பவர்களாய் இருக்கக்கூடாது. சரியான நேரங்களில் நீங்கள் அடம்பிடிக்க வேண்டும். ஆவிக்குரிய விருத்தசேதனைத்தைக் குறித்து நீங்கள் நன்கு அறியவில்லை என்றால் நீங்கள் அதனைக் கற்று அதனை விசுவாசிக்கவேண்டும். அது உங்களை அடமாயிருக்க விடாது. நீங்கள் மனந்திரும்பி விசுவாசிக்கவேண்டும்.
ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் உண்மை தெரியாமல் மக்கள் உண்மையை தள்ளிவிட்டு அதனைச் கேலி செய்கின்றனர். “அது தவறானது! ஒரு நபர் ஒவ்வொரு நாளும் பாவங்கள் செய்யும் போது, அவர் எப்படி நீதிமானாக முடியும்? இயேசுவை விசுவாசிப்பவர்கள் பாவங்களுடனிருந்தாலும் கர்த்தர் அவர்களை நீதிமான் என்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவே சரியெனக் காட்டும் தத்துவம். உங்களின் இருதயத்தில் உண்மையிலேயே எந்தப்பாவமும் இல்லாததால் நீங்கள் நீதிமான் என்றழைக்கப்படுவீர்கள்.” ஆயினும், அது மிகத்தவறான போதனை என்று நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
வேதாகமத்தில் நற்செய்தியாகிய ஆவிக்குரிய விருத்தசேதனம் மூலமாக, பாவமன்னிப்பு கிட்டுகிறது என்று கர்த்தர் கூறினார், “நான் உங்கள் எல்லாப் பாவங்களையும் துடைத்தேன். நீங்கள் இப்போது பாவமில்லாதவர்கள். நான் உங்கள் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டதினாலே, நீங்கள் நீதிமான்கள்.” “நீங்கள் என்னுடைய நீதியை விசுவாசிக்கிறீர்களா? ஆவிக்குரிய விருத்தசேதனத்தைக் குறித்த வார்த்தைகளை நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் என் மக்களில் ஒருவராவதுடன் பாவமற்றவருமாவீர்கள்.” கர்த்தர் தாமளித்த முழு விடுதலையைக் குறித்து பேசுகிறார், ஆனால் சாதாரணக் கிறிஸ்தவர்கள், ஆவிக்குரிய விருத்தசேதனத்தை விசுவாசிக்கும், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களை இகழ்ந்து கேலி பேசுகிறார்கள். அவர்கள் கூறுகின்றனர், “அவன்/அவள் விடாமல் தொடர்ந்து பாவம் செய்யும் போது எப்படி ஒரு நபரால் நீதிமானாக முடியும்? நீங்கள் ஒரு நபரை சரியெனக்காட்டும் தத்துவத்தின் மூலமே ‘பாவமில்லாதவன்` என்றழைக்க முடியும். ஒருவனை நாம் எப்படி பாவமில்லாதவன் என்று உண்மையாக நினைப்பது? ஒரு நபரால் தினமும் பாவம் செய்வதை தவிர்க்க முடியாது.” அவர்கள் இதுபோல் இகழ்ந்து அடமாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதில்லை.
நல்லதை செய்வதில் பொறுமையாக இருப்பவர்களுக்கு, அழியாத வாழ்வைக் கர்த்தர் அளிக்கிறார். பொறுமையாக தொடர்ந்து நல்லவற்றை செய்து மகிமை, மரியாதை, அழியாத்தன்மை ஆகியவற்றை எதிர்ப்பார்ப்பவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாகின்றனர். ஆனால் அப்படிச் செய்யாதவர்களோ தண்டனைப் பெறுவர். ஒவ்வொருவரும் கர்த்தரின் பிள்ளையாகவும், நித்திய வாழ்வு வாழவும் விரும்புகிறார்கள். நித்தியமாக வாழவும் பாவமற்ற வாழ்வு வாழவும் விரும்புவோருக்கு இயேசு நித்திய ஜீவனை அளிக்கிறார்.
“தேவன் உண்மையாகவே வேண்டுவது என்னவெனில் ஆவிக்குரிய விருத்தசேதசனத்தின் மூலம் பாவமன்னிப்பை விசுவாசிப்பதினால், என் மனசாட்சிக்கு வெட்கக்கேடில்லாத ஒரு வாழ்வை வாழவேண்டும். நான் பாவமற்றவனாக விரும்புகிறேன். தயவுசெய்து என் எல்லாப் பாவங்களிலிருந்தும் என்னை இரட்சியும்” கர்த்தரின் நீதியின் இரட்சிப்பைத் தேடி, தம் எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பை பெற விரும்புகிறவர்களின் அனைத்து விருப்பங்களையும் கர்த்தர் கேட்டு, கர்த்தரின் நீதியின் நற்செய்தியை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களின் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கிறார். நித்தியமாக வாழ விரும்புவோருக்கு, கர்த்தர் நித்தியவாழ்வை அளிக்கிறார்.
 
 
ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது என்ன?
 
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் பாவமன்னிப்பு நிறைவேற்றப்பட்டது என்று இது பொருள்படுகிறது. தேவாட்டுக்குட்டியின் இரத்தம் என்பது கொடிய தண்டனையையும், யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானம் என்பது உலகின் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதையும் குறிக்கிறது. இன்றும் கூட கிறிஸ்தவத்தால் பழைய ஏற்பாட்டை அலட்சியம் செய்யமுடியாது; ஏனெனில் அப்பொழுது அதனால் புதிய ஏற்பாட்டை விசுவாசிக்க முடியாது. வேதவசனங்களில் ஆவிக்குரிய விருத்தசேதனமும் பஸ்கா பண்டிகையின் ஆட்டுக்குட்டியும் நெருங்கிய தொடர்புள்ளவை என்பதை நாம் காணலாம்.
1 யோவான் 5:6 இல், இயேசு “ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்” என்று கூறப்பட்டுள்ளது. இயேசு நீரினால் மட்டுமல்ல இரத்தத்தினால் மட்டுமல்ல, இவை இரண்டினாலும் வந்தார். உன்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக நீர், இரத்தம் மற்றும் ஆவியில் உள்ளடங்கியுள்ள ஆவிக்குரிய விருத்தசேதனத்தை நீ விசுவாசிக்கவேண்டும்.
யாத்திராகமம் 12 ஆம் அதிகாரத்தை நான் வாசிக்கும்போது, ஆவிக்குரிய விருத்தசேதனத்தைக் குறித்து சில கேள்விகள் எழுந்தன. யாத்திராகமம் 12 ஆம் அதிகாரம் என்ன பொருள்படுகிறது? இந்த அதிகாரத்தை முழுதுமாக கவனமாய் பார்த்ததுடன், அது சம்பந்தப்பட்ட வேதாகமத்திலுள்ள வசனங்களை மீண்டும் மீண்டும் தொடர்பு படுத்தினேன். இஸ்ரவேலர்கள் விருத்தசேதனம் பெற்றதால் அவர்களால் பஸ்கா பண்டிகையில் பங்கேற்க முடிந்ததையும் அறிந்தேன், புதிய ஏற்பாட்டில், இயேசு காரணமில்லாமல் சிலுவையில் இரத்தம் சிந்தாமல், அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றதால் இரத்தம் சிந்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டப்படியாக பஸ்கா பண்டிகையைக் குறித்து கர்த்தர் இஸ்ரவேலருக்கு இரண்டு சட்டப்பிரிவுகளைக் கூறினார்: முன்பே விருத்தசேதனத்தைப் பெற்று, பிறகு பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாமிசத்தை சாப்பிடவேண்டும். இது பழைய ஏற்பாட்டின் ஆவிக்குரிய விருத்தசேதனமாகும்! புதிய ஏற்பாட்டில், யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்கள் இயேசு மீது சுமத்தபட்டதால், அவர் சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்று கூறப்பட்டுள்ளது. ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டதன் உண்மையை ஏற்றுக்கொள்வதே இவற்றின் விளைவு என்று கண்டுக்கொண்டேன். இயேசுகிறிஸ்து யோர்தானில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்; அதனாலேயே உலகின் பாவங்களை சுமந்தமையால் நம்மிடத்திலிருந்து அவற்றிற்கான தீர்ப்பை பெற சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது.
இந்த உண்மையை நீங்கள் உங்கள் இருதயத்தில் எற்றுக்கொள்ளும்போது எல்லாப் பாவங்களிலிருந்தும், அக்கிரமங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டதை நீங்கள் உணரலாம். எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரு நபர் இரட்சிப்பை பெற, அவன்/அவள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கவேண்டும். இதனால் நமக்கு ஆவிக்குரிய விருத்தசேதனத்தை அளிக்கமுடியும். இந்த உண்மையை மக்கள் உணர்ந்துக்கொள்ளவேண்டும். பாவக்கிரயத்தை பொறுத்தவரை பழைய ஏற்பாட்டின் ஆவிக்குரிய விருத்தசேதனமும், புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும் ஒரு ஜோடியை உருவாக்குவதன் உண்மையை வாசர்களாகிய நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு தாம் பாவம் செய்ததால் தண்டனை பெறவில்லை, ஆனால் அவர் ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களை தம் உடம்பில் ஏற்றுக்கொண்டதால் அவர் சிலுவையில் மரித்தார். இதுவே ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெற்றவர்களின் விசுவாசமாகும்.
ஆவிக்குரிய விருத்தசேதனம் மூலமாக கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களிடம் பாவமில்லை ஏனெனில் அவர்கள் உண்மையாகவே இயேசுவை விசுவாசிக்கிறார்கள். எப்படியோ இயேசுவை விசுவாசிப்பவர்களை குறித்து பரிதாபப்படுகிறேன், அவர்கள் இன்னமும் கர்த்தரிடமிருந்து ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெறவில்லை. யோவான் அவருக்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது இயேசு உலகின் அனைத்துப் பாவங்களையும் எடுத்துக்கொண்டார் என்ற உண்மையை அவர்கள் விசுவாசிக்கவேண்டும்.
துரதிருஷ்டவசமாக, அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டு சிலுவையை மட்டும் விசுவாசிக்கிறார்கள். இப்படியாக, கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நம்பிக்கை அவர்களிடமில்லை. கர்த்தர் வேதவசனங்களில் கூறியவற்றில் எதனை விசுவாசிக்க வேண்டுமென நாமறியவேண்டும்.
இறையியாலளர்களின் போதனைகளையும் தத்துவங்களையும், அவை எப்படிப்பட்டவையாயினும் கிழித்து போட்டு, அவரின் நீதியை நோக்கி நம்மை வழி நடத்தும் கர்த்தரின் வார்த்தைகளை மட்டும் நாம் விசுவாசிக்கவேண்டும். இது ஏனெனில் அவரின் நீதியில்லாத வார்த்தைகள், கர்த்தரின் உண்மையான வார்த்தைகளல்ல. ஆவிக்குரிய விருத்தசேதனமில்லாத நற்செய்தி முழுமையில்லாதது. அதனாலேயே பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனத்தைக் குறித்தும், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்தும் கர்த்தர் அதிக முறை பேசினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தையும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தையும், புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானத்திற்கும் இரத்தத்திற்கும் ஒப்பானதாக அது கூறுகிறது. ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொள்ள நாம் இந்த உண்மையை விசுவாசிக்கவேண்டும். ஆயினும், இந்த உண்மையை நாம் விசுவாசிக்கவில்லையெனில், கர்த்தரின் இராஜ்யத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவோம்.
கர்த்தரின் நீதி, அவரின் சிலுவை இரத்தத்தினால் மட்டுமா நிறைவேற்றப்பட்டது? அது அப்படியல்ல. கர்த்தரின் நீதியானது, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றால் முழுமைப்படுத்தப்பட்டது. ஆகவே, நம்மிருதயங்களில் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை, அவரின் சிலுவையின் இரத்தம் சிந்துதலினால் மட்டுமின்றி, யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமும் நாம் பெற்றுக்கொண்டோம். இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் உண்மையாகவே துடைத்துப்போட்டு, சிலுவையில் பரிகாரமாக மரித்ததால் ஆவிக்குரிய விருத்தசேதனம் நமக்கு சாத்தியமாயிற்று.
 
 
விருத்தசேதனம் என்பது துண்டிப்பதைக் குறிக்கிறது
 
மேசியாவாகிய இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்கான கொடூர தீர்ப்பாக காயப்பட்டு நசுக்கப்படுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் கூறினான். ஆகவே, மேலே செல்வதற்கு முன் சிலவற்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கிறிஸ்து ஏன் சிலுவையில் அறையப்படவேண்டும்?
பழைய ஏற்பாட்டில், பாவியொருவன் அவனின்/அவளின் கைகளை பலியாட்டுக்குட்டியின் மீது, தன் பாவங்களை அதன் மீது சுமத்தும்படி வைத்து, அதன் பிறகு அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்ல வேண்டும். அதன்பிறகு ஆசாரியன் பலியிலிருந்து சிறிது இரத்தத்தை தன் விரல்களினால் எடுத்து, தகன பலிபீடத்தின் மீதிருக்கும் கொம்புகளில் இட்டு மீதி இரத்தத்தை மேடையின் கீழ்க் கொட்டினான் (லேவியராகமம் 4:27-30) பழைய ஏற்பாட்டின் ஒரு பாவியால், அவனின்/அவளின் பாவங்களை இவ்வழியாக நிவிர்த்திச் செய்யலாம். அப்படியானால் தேவாட்டுக்குட்டியாக வந்த இயேசு (யோவான் 1:29) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது போல் மனிதகுலத்தின் பாவங்களை எடுத்துக்கொண்டு, நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்க அவர் தலையில் கைவைக்கப்படவேண்டுமல்லவா?
அப்படியானால், எப்பொழுது மற்றும் எப்படி இயேசு உலகின் பாவங்களை எடுத்துக்கொண்டார்? அது மத்தேயு 3:13-17 இல் யோர்தானில் யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்ததைக் கூறவில்லையா? இது பழைய ஏற்பாட்டின் லேவியராகமத்தில் பாவியொருவன் “தன் கையை அதின் தலையின் மேல் வைத்து” (லேவியராகமம் 1:4, 3:8, 4:29) பாவங்களைச் சுமத்தினான் என்பதை ஒத்ததாகும். பழைய ஏற்பாட்டின் தலைமை ஆசாரியன் இஸ்ரவேலின் எல்லாப் பாவங்களையும் தன் பாவங்களையும், ஆட்டுக்குட்டியின் தலை மீது கைவைத்து அதன் மீது சுமத்தினான். (லேவியராகமம் 16:21) பிறகு, அவன் அதின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து தகன பலிபீடத்தைச் சுற்றியுள்ள தரையிலும் கொட்டினான். இம்முறையில் அவர்கள் பாவநிவாரணத்தைப் பெற்றனர்.
இத்தகைய வழியில், யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தினாலும், அவரின் சிலுவை இரத்தத்தினாலும் நம் பாவ நிவாரணம் சாத்தியமாக்கப்பட்டது. இதுவே வேதாகமத்திற்குள் கர்த்தர் நமக்கு கொடுக்க விரும்பும் கர்த்தரின் நீதியும் ஆவிக்குரிய விருத்தசேதனமுமாகும். ஆகவே, கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நமது பாவங்கள், யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தினால் துண்டிக்கப்பட்டன. புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானத்தின் பொருளையும் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தையும் அறிந்துக்கொண்டால், நாம் கர்த்தரின் நீதியினை விசுவாசிக்கத் தொடங்கி, நம்மிருதயங்களில் உண்மையாகவே ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெறுவோம்.
 
 
புதிய ஏற்பாட்டின் உண்மையான ஆவிக்குரிய விருத்தசேதனம்
 
மத்தேயு 3:13-15 ஐப் பார்ப்போமாக “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக : இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.”
யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு யோர்தானில் ஞானஸ்நானம் கொடுத்தான். அவன் தன் கைகளை இயேசுவின் தலையின் மீது வைத்து அவருக்கு ஞானஸ்நானம் செய்வித்தான் (ஞானஸ்நானம் செய்வித்தல், கிரேக்கத்தில் ‘பேப்டிஸோ` என்றழைக்கப்படுக்றது, இது அமுக்குதல் அல்லது நீரில் முழுக்குதல் என்று பொருள்படும்)
நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரிக்க முதலில் அவர் நம் பாவங்களை ஞானஸ்நானம் மூலம் ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. ஆகவே அவர் யோவானால் முதலில் ஞானஸ்நானம் பெற்றார். பிறகு நீரினுள் அமிழ்த்தப்பட்டார். அவர் ஏன் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்? அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, கர்த்தரின் எல்லா நீதிகளும் நிறைவேற்றப்படும் என்பதே அதன் காரணம். அவர் ஞானஸ்நானத்தின் மூலம் மனிதர்களின் பாவங்களை ஏற்றுக்கொண்டது நீதியும் பொருந்தக்கூடியதுமாகும், இதனால் அவர் நம் கர்த்தரும் இரட்சகருமானார். அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் தம் சரீரத்தில் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து சிலுவையில் மரித்தது இயேசுவிற்கு பொருத்தமானதாகும்.
இயேசு தம் பொது வாழ்வில் முதல் செய்த காரியம் ஞானஸ்நானம் பெற்றதே. ‘பேப்டிஸ்மா` என்று கிரேக்கத்தில் அழைக்கப்படும் ஞானஸ்நானம் “கழுவப்படுதல், அடக்கப்படுதல், இடமாற்றுதல் மற்றும் வேறிடம் செலுத்துதல்” என்று குறிக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டில், ஏழாம் மாதம் பத்தாம் நாள் இஸ்ரவேலர்களின் பாவ நிவாரண நாளாகும், மேலும் இஸ்ரவேலர்களின் அனைத்துப் பாவங்களையும் சுமத்துவதற்கு ஆரோன் தன் கைகளை பலியாட்டுக்குட்டியின் மீது வைத்தான். இரண்டு ஆடுகளில் ஒன்று கர்த்தருக்கும் மற்றது இஸ்ரவேலர்களுக்கு முன் பாவநிவாரண பலியாகவும் (லேவியராகமம் 16) கொடுக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டில், இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது நம் அனைத்துப் பாவங்களையும் பெற்றுக்கொண்டார்.
அவர் ஞானஸ்நானம் பெற்றதற்கு மறுநாள், யோவான் அவரை தம் விரலினால் சுட்டிக்காட்டி “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்று கூறினான்.
அவரின் இரத்தம் மீதுள்ள விசுவாசத்தினால் மட்டும் ஆவிக்குரிய விருத்தசேதனம் சாத்தியமில்லை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும்.
1 யோவான் 5:4 இல் தொடங்கி, கீழ்க்கண்டவற்றைப் பார்ப்போம். “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப் பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அநதச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.” (1 யோவான் 5:4-12)
ஆவிக்குரிய விருத்தசேதனத்திற்கான அத்தாட்சியென்ன? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றை நம் இரட்சிப்பாக விசுவாசிக்கும் நம்பிக்கையே அது. உலகை வெற்றி பெற்று அதனை மேற்கொண்டது நீர் மற்றும் ஆவியாகும். “இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.” இந்த சாட்சிகள், கர்த்தர் நம் கர்த்தரும் மீட்பரும் என்று காட்டி, கர்த்தர் இவ்வுலகிற்கு மனித மாமிசத்தில் வந்து, தன் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் தம் சரீரத்தில் ஏற்றுக்கொண்டு, நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி, நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இப்படியாக விடுவித்தார் என்று சாட்சியும் கூறுகின்றன.
புதிய ஏற்பாட்டில், நற்செய்தியாகிய ஆவிக்குரிய விருத்தசேதனம் நீரையும் இரத்தத்தையும் உள்ளடக்கியுள்ளது. புதிய ஏற்பாட்டில் நீர் என்பது இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தையும் இரத்தம் என்பது அவரின் சிலுவை மரணத்தையும் குறிக்கிறது. இயேசுவின் ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தின் ஜோடியாகும். இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானமானது, அதனால் அவர் மீது, நம் பாவங்கள் சுமத்தப்பட்டன என்பதற்கான அத்தாட்சியாகும். இந்த உண்மையை விசுவாசிப்பவர்கள் கர்த்தர் முன் நின்று கர்த்தரே, நீரே என் இரட்சகர். நான் உம்முடைய நீதியை விசுவாசிப்பதாலே என்னிடம் பாவமில்லை. நான் உம்முடைய பழுதற்ற பிள்ளை, நீர் என் கர்த்தர்.” என்று கூற முடியும். இப்படி மன உறுதியுடன் உன்னைக் கத்தச் செய்த அடிப்படையான வேதவாக்கு எது? கர்த்தரின் நீதியை உருவாக்கும் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றிலுள்ள விசுவாசமே அது. கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டும் கர்த்தரின் நீதியை என்னுடைய நீதியாக ஏற்றுக்கொள்ளச் சாத்தியமாக்கமுடியாது. அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகியவை அதனை உருவாக்கிற்று.
நம்முடைய இரட்சிப்பிற்கு இயேசுவின் ஞானஸ்நானம் இன்றியமையாதது என்று கூறும் வசனத்தைப் பார்ப்போம். 1 பேதுரு 3:21 இந்த உண்மைக்கான அத்தாட்சியாகும். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.”
சந்தேகத்திற்கிடமில்லாத நம் இரட்சிப்பின் அத்தாட்சியைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறான். இயேசுவின் ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமாகும். இதனை புரிந்துகொள்கிறீர்களா? பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்கள் தம் நுனித்தோலைத் துண்டித்து விருத்தசேதனம் செய்துக்கொண்டதைப் போன்று, புதிய ஏற்பாட்டில், இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று, உலகின் அனைத்து பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, நம்மை ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெற ஏதுவாக்கினார். ஞானஸ்நானமும் சிலுவை இரத்தமும் கர்த்தரின் நீதியைப் படைத்தன. ஆவிக்குரிய விருத்தசேதனம் மற்றும் ஞானஸ்நானம் என்பவை ஒன்றையே குறிக்கின்றன. இயேசுவின் ஞானஸ்நானம் நம் எல்லோருக்குமான ஆவிக்குரிய விருத்தசேதனம் என்று சுட்டிக்காட்டுவதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
“அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது நம்மையும் இரட்சிக்கிறது” கர்த்தரின் நீதியை நாம் பெற்றுக்கொள்வது எப்படி? இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று விசுவாசிப்பதன் மூலம், கர்த்தரின் நீதியை நாம் பெற்றுக்கொள்ளலாம். மத்தேயு 3:15 கூறுகிறது. “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” மனிதர்களின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் தலைமீது சுமத்தப்பட்டதாலே பாவிகளின் பாவங்கள் முற்றிலுமாகத் துடைக்கப்பட்டது. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை விசுவாசிக்கும் ஒவ்வொரு விசுவாசியும் நீதிமானாகிறான். உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்துகொண்டு இயேசுகிறிஸ்து நியாயத்தீர்ப்பின் இரத்தத்தைச் சிந்தினார்; மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களும் இப்படியாக நிவிர்த்தி செய்யப்பட்டது. ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் பாவங்களை இயேசு எடுத்துக்கொண்டு, நம்மிடத்திலிருந்து அவர் கொடிய தண்டனையை பெற்றார் என்பதை விசுவாசிப்பதென்பது, விசுவாசிகளிடன் கர்த்தரின் நீதியை எடுத்துவரும் உண்மையை விசுவாசிப்பதுமாகும். இந்த உண்மையை விசுவாசிப்பீர்களாக.
யோவான் 1:29 கூறுகிறது, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” இயேசு கர்த்தரின் குமாரனும் நம்மைப் படைத்தவருமாவார். அவர் பாவிகளின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டு அவரின் விருத்தசேதன உறுதிமொழியை நிறைவேற்றினார். கர்த்தரின் நீதியான ஆவிக்குரிய விருத்தசேதனத்தை எடுத்து வருவது இந்த உண்மை விசுவாசமே. இயேசுவே உண்மையில் நீதியாவர். நாம் இயேசுவிற்குள் விருத்தசேதனத்தைப் பெற ஏதுவாக்கிய அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்திற்கு நன்றி செலுத்தவேண்டும்.
1 பேதுரு 3:21 தொடருகிறது, “மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து” ஒருவனின்/ஒருத்தியின் மாமிச அழுக்கானது அவனோ/அவளோ இயேசுவை அவனின்/அவளின் இரட்சகராக விசுவாசிப்பதால் நீக்கப்பட்டது. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் மூலம் உங்கள் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்று நீங்கள் விசுவாசிப்பதன் மூலம் பாவமன்னிப்பைப் பெறலாம். இயேசுவே இரட்சகர் என்று அறிக்கைச் செய்வதால் பாவமன்னிப்பை உங்கள் இருதயத்தில் பெறுகிறீர்கள். அது விசுவாசியின் இருதயத்தில் நடைபெறுகிறது. இரட்சகரை உங்கள் இருதயத்தினால் விசுவாசித்தீர்களனால், உங்கள் பாவங்கள் நிவிர்த்திச் செய்யப்படுவீர்கள், அதே நேரம் உங்கள் சரீரம் இன்னமும் அழுக்காகவும் தினமும் அக்கிரமம் செய்துக்கொண்டுமிருக்கும்; ஆனால் அங்கு பாவமில்லை. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்று விசுவாசிப்பதால், கர்த்தரின் நீதியைப் பெறுவதோடு உங்களிருதயத்தில் ஒரு பாவமும் இல்லாதிருக்கும்.
 
 
அதனை உங்களுடையதாக்கும்படி உண்மையை விசுவாசிக்கவேண்டும்
 
யோவான் 1:12 கூறுகிறது, “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை எற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.”
நீங்கள் பெற்று, ஏற்றுக்கொண்ட வார்த்தைகள் எவை? கர்த்தரின் குமாரன் செய்தவற்றை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். கர்த்தரின் பணியென்ன? கர்த்தரின் குமாரன் பாவசரீரத்தின் சாயலில் உலகிற்கு வந்தார், அவர் முப்பது வயதுடையவராக இருந்த போது உலகின் பாவங்களை ஏற்றுக்கொள்ள ஞானஸ்நானம் பெற்று நமக்கு ஆவிக்குரிய விருத்தசேதனம் செய்தமையால் நம் பாவங்கள் துடைக்கப்பட்டது. பிறகு அவர் தேவாட்டுக்குட்டியாக சிலுவையில் மரித்து நமக்கு பாவநிவிர்த்திச் செய்தார். தேவன் எல்லாப் பாவிகளுக்கும் நிரந்தர பாவ பலியாகி, நம்மை நித்தியமாக இரட்சித்தார். இதுவே உண்மை விசுவாசமாகும். இந்த உண்மையை விசுவாசிப்பதன் மூலம் நாம் நீதிமான்களானோம்.
கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே நம்மால் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெறமுடியுமா? இல்லை, நம்மால் முடியாது. இயேசுவின் ஞானஸ்நானம் நம்மிலிருந்து பாவத்தை துண்டித்தது, அவர் சிலுவையில் பெற்ற தீர்ப்பாகிய இரத்தஞ்சிந்துதல் உனக்கும் எனக்குமான கொடிய தண்டனையாகும். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தமாகிய கர்த்தரின் நீதியாகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதால், பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு தீர்ப்பிலிருந்து தவிர்க்கப்பட்டோம். இயேசுவை இரட்சகராகப் பெறுவதால் பாவியின் இருதயத்திலுள்ள எல்லாப் பாவங்களும் துடைக்கப்படமுடியும். ஆவிக்குரிய விருத்தசேதனத்தை உங்களிருதயத்தில் பெறுங்கள். அப்போழுது, கர்த்தரின் நீதி உங்களுடையதாகும்.
 
 
உண்மையான ஆவிக்குரிய விருத்தசேதனம் இருதயத்தில் நடைபெறவேண்டும்
 
ரோமர் இரண்டாவது அதிகாரத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” உங்கள் இருதயத்தினுள் நீங்களே எப்படி விருத்தசேதனம் செய்துகொள்வீர்கள்? இயேசுகிறிஸ்து மனித சரீரத்தில் இவ்வுலகிற்கு வந்தாரென்றும், “உலகின் பாவங்களையெல்லாம்” எடுத்துக்கொள்ள ஞானஸ்நானம் பெற்றாரென்றும், சிலுவையில் இரத்தம் சிந்தி அவர் மரித்தாரென்றும், நம் நித்திய இரட்சகராகும் பொருட்டு மீண்டும் உயிரோடெழுந்தார் என்றும், நாம் விசுவாசிப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது. ஆவிக்குரிய விருத்தசேதனத்தை உங்களிருதயத்தில் பெறவேண்டுமானால் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கவும். அப்பொழுது நீங்கள் உண்மையாகவே கர்த்தரின் பிள்ளைகளில் ஒருவராவீர்கள். நீதிமான் எனப்படும் நபர் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசித்து, அவனின்/அவளின் பாவங்களிலிருந்து அவனும்/அவளும் விடுதலைப் பெற்றவராவர்.
இயேசு தம் 29 ஆம் வயதுவரை தன் குடும்பத்தாரை ஆதரித்து தனிப்பட்ட வாழ்வு வாழ்ந்தார். ஆனால் அவருக்கு 30 வயதாகும்போது, அவர் தம் பொதுவாழ்வைத் தொடங்கினார். அவர் தம் பொதுவாழ்வின் போது, மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் துடைத்து, எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து விடுதலையாக்கினார். பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவித்து அவர்களை நீதிமானாக்கும்படி இயேசு செய்த முதல்காரியம் ஞானஸ்நானம் பெற்றதுவே. “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.” (மத்தேயு 3:13). இயேசு ஞானஸ்நானம் பெற ஏன் முயன்றார்? எல்லாப் பாவிகளின் பாவங்களையும் ஏற்றுக்கொள்ள அவர் இதைச் செய்தார் என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். அவரின் ஞானஸ்நானத்தின் உண்மைப் பொருளை நாம் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது. அவற்றை அவர் மீது சுமத்துவதன் மூலம் இயேசு பாவிகளின் பாவங்களை சுமக்கும்பொருட்டு, தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி யோவானைக் கேட்டார்.
இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் யார்? யோவான் எல்லா மனிதர்களினதும் பிரதிநிதியாவான். இது மத்தேயு 11:11-14 இல் நன்கு விளக்கப்பட்டுள்ளது. “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோக ராஜ்ஜியத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான் ஸ்நானன் காலமுதல் இது வரைக்கும் ப்ரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்துண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன் தான்.”
யோவான் ஸ்நானனின் நாள் முதல், கர்த்தரின் உடன்படிக்கையின் காலம் முடிவுற்றது. இது ஏனெனில், அவரின் வாக்குத்தத்தை நிறைவேற்றவேண்டிய நபராகிய இயேசு வந்துவிட்டார். அப்படியானால் பழைய ஏற்பாட்டின் வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வேண்டிய நபர்கள் யார்? அது இயேசுவும் யோவான் ஸ்நானனுமாகும். யோவான் ஸ்நானன் இயேசு மீது பாவங்களைச் சுமத்தினான். யோவான் ஸ்நானன் பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியாவான், அவன் புதிய ஏற்பாட்டில் வந்த தேவஆட்டுக்குட்டியின் மீது பாவங்களைச் சுமத்துவதற்காக அனுப்பப்பட்டான். பலியிடும் முறையில் நியமிக்கப்பட்ட சட்டத்தின் படி, இயேசுவின் தலையில் தன் கைகளை வைத்து, இந்த வேலையை யோவான் நிறைவேற்றினான், இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் எல்லாப் பாவங்களும் துண்டிக்கப்பட்டு இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. “இப்படியாக” எல்லா மனிதர்களின் இருதயங்களிலும் கர்த்தர் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைக் கொடுத்தார்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை உங்கள் பாவப்பரிகாரமாகப் பற்றிக்கொள்ளுங்கள். இயேசு ஏற்கெனவே உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதறகான அனைத்து தீர்ப்புகளையும் ஏற்றுக்கொண்டார். இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தி நம் எல்லாப் பாவங்களையும் நிவிர்த்தி செய்தார் என்ற உண்மை நற்செய்தி, கர்த்தரின் நீதியாகும். கர்த்தரின் நீதியை நம் இருதயங்களில் ஏற்றுக்கொள்வதன் மூலம் இப்போது நம்மால் பாவமன்னிப்பு பெறமுடியும். அதனைப் பெற்றால் உங்களால் “ஆபிரகாமின் குமாரனாகிய வம்ச வரலாறில்” நுழைய முடியும். கர்த்தரின் நீதியை ஏற்கெனெவே தெரிந்த மக்களும் இருக்கிறார்கள். அதனைத் தெரியாதவர்கள் இயேசுகிறிஸ்துவிற்கு வெளியே இருக்கிறார்கள். சூரியன் மறையப் போகிறான். இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பி அவருள் நுழையவும். ஞானஸ்நானத்தை விசுவாசிக்கும் உங்கள் விசுவாசமானது, கல்யாணப் பந்திக்கு ஏற்பாடு செய்த உங்களின் எண்ணெய் ஆகும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதன் மூலம், நீங்கள் இரகசியத்தைப் புரிந்துக் கொண்டு, தேவனாகிய இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரைச் சந்திக்க எண்ணெயைத் தயாரிக்க முடியுமென நம்புகிறேன்.
இயேசு ஞானஸ்நானம் பெற்றார், ஆகவே அவரால் ஒவ்வொருவரின் பாவத்தையும் துடைக்க முடிந்தது. இயேசு தாமே கர்த்தரும் தேவகுமாரனுமானவர், நம்மை படைத்தவரும் அவரே. அவர் தம் தந்தையின் விருப்பப்படி, நம்மை கர்த்தரின் பிள்ளைகளாக தத்தெடுக்கும்படி பூமிக்கு வந்தார். பழைய ஏற்பாட்டின் அனைத்து தீர்க்கத்தரிசனங்களும் பேசுவது யாரைக் குறித்து? அவை இயேசுவைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறுகின்றன. அவர் உலகிற்கு வந்து நம் பாவங்களைச் சுமந்து அதனை எப்படி அழிப்பார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அவை. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு ஏற்ப இயேசு 2000 வருடங்களுக்கு முன் பூமிக்கு வந்த ஞானஸ்நானம் பெற்றபோது, நம் பாவங்கள் யாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அவர் ஆதாம் ஏவாள் முதல் கடைசி மனிதன் வரை அனைத்து மனிதர்களின் பாவங்களையும் சுமந்தார்.
உங்களிருதயத்தில் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” (ரோமர் 2:29) இயேசுவின் ஞானஸ்நானத்தை நீங்கள் விசுவாசிக்கும்போது இருதயத்தில் விருத்தசேதனத்தை தானாகவே பெறுவீர்கள். இருதயத்தில் விருத்தசேதனம் என்பது, இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் பாவங்கள் அனைத்தும் அவர் மீது சுமத்தப்பட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலம், நம் இருதயங்களிலுள்ள பாவங்களை அழிப்பது என்று பொருள்படுகிறது. இருதயத்தில் விருத்தசேதனத்தைப் பெற்றுக் கொண்டீர்களா? இருதயத்தினால் விருத்தசேதனத்தை விசுவாசிக்கும் போது “எல்லாப் பாவங்களும் விசுவாசத்தின் மூலம் சுத்திகரிக்கப் படுகிறது.”
 
 
ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் உண்மையை உங்கள் இருதயத்தில் உண்மையாகவே ஏற்றுக் கொண்டீர்களா?
 
யேசு இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்து ஏறத்தாழ 2000 வருடங்களாகிறது. இந்த நிகழ்வை நாம் ஏற்றுக்கொண்டு அதனை நம்மிருதயத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும். “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” கர்த்தரின் நீதியை விசுவாசித்து நாமெல்லாம் விடுதலையைப் பெற்றுக்கொண்டோம். கர்த்தரின் நியாயத்தீர்ப்பு பூமிக்கு வந்தாலும் நாம் பயப்படோம். கர்த்தரின் நீதியை விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் கர்த்தரின் தீர்ப்பை பெறுவதில்லை. கர்த்தரின் நீதியை தம்மிருதயத்தில் பெற்றுக்கொள்ளாதவர்களின் மீது கர்த்தரின் நீதி பாய்கிறது.
இன்று கிறிஸ்தவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் அவர்கள் கெட்டுப்போவது ஏன்? அவர்கள் ஏன் கவலையுடன் வாழுகின்றனர். இயேசுவின் இரத்தத்தை மட்டும் தம் இரட்சிப்பிற்காக அவர்கள் விசுவாசிப்பதே அதற்கான காரணம். உங்களுடைய அடம்பிடித்தலால் கர்த்தரை நீங்கள் கவலைக்குள்ளாக்கியதை ஒப்புக்கொண்டு, இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்ற உண்மைக்குத் திரும்பவேண்டும். அப்பொழுது உங்களிருதயத்தில் விருத்தசேதனம் உண்டாகும்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை விசுவாசித்தீர்களென்றால், உங்கள் இருதயத்தில் ஆவிக்குரிய விருத்தசேதனம் உண்டாவதால், நீங்கள் கர்த்தரின் தீர்ப்பை பெறாமல் அவரின் பிள்ளைகளில் ஒருவராவீர்கள். கர்த்தர் உங்கள் கர்த்தராவதோடு நீங்கள் அவரின் மக்களில் ஒருவராவீர்கள். உங்களில் யாராவது இயேசுவை நம்பி, அவரின் இரத்தத்தை மட்டும் சார்ந்திருப்பவர்களாக இருப்பீர்களானல் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். சிலுவையின் இரத்தத்தினால் மட்டுந்தான் நம் ஆவிக்குரிய விருத்தசேதனத்தையும் கர்த்தரின் நீதியையும் பெற்றோமா? நம்முடைய இரட்சிப்பானது இரத்தத்தினால் மட்டுமின்றி, இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் மற்றும் ஆவியினால் உண்டாயிற்று.
 
 
இயேசுவுடன் ஐக்கியமானதன் மூலம் கர்த்தரின் நீதி பெறப்பட்டது
 
ரோமர் 6:3-8 ஐ வாசிப்போமாக. “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல் நாமும் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால், அவருடனே கூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.”
வசனம் 5 கூறுகிறது, “ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப் பட்டிருப்போம்.” பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதாகமம் கூறுகிறது, அதாவது யாரிடம் பாவமிருக்கிறதோ அவர்கள் அழிந்து நரகம் செல்வர். நீங்கள் இயேசுகிறிஸ்துவை முழுமையாக விசுவாசிக்கும் முன்பு உங்களிடம் பாவமிருக்கவில்லையா? -ஆம்.- உங்களிடம் சிறிதளவு பாவமிருந்தாலும் கூட நீங்கள் நரகம் சென்று “அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே” (வெளி 21:8) தண்டனைப் பெறுவீர்கள். பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை நாம் கிரயமாக கொடுக்கவேண்டுமானால் நம்மால் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படவே முடியாது. ஆகவே கர்த்தர் இயேசுவை இப்பூமிக்கு அனுப்பி எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தி, நமக்கு பதிலாக அவரைத் தீர்த்தார்.
அவர் நம்மை இத்தனையாய் நேசித்தமையால் நம்மை இரட்சித்தார். பிதாவாகிய கர்த்தர் தம் ஒரே பேறான குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பி, ஞானஸ்நானம் மூலம், உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தி அவர் பாவநிவிர்த்தியாக இரத்தம் சிந்தும் பொருட்டு, சிலுவையில் அறையச் செய்தார். இதனை விசுவாசிப்பதால் இயேசுவுடன் நாம் ஐக்கியமானோம். பாவத்தின் சம்பளம் மரணம். நம் அனைவரின் இருதயங்களிலும் பாவமிருந்தபடியால் அப்பாவங்களுக்காக நாம் நரகம் செல்லவேண்டியவர்கள். நரகத்திற்குச் செல்லவேண்டிய நமக்கு பதிலாக, இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் நமக்காக தண்டனைப் பெற்று, அதனைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடைய ஞானஸ்நானம், நம் அனைத்துப் பாவங்களை ஏற்றுக்கொண்டதால், அவருடைய மரணம் நம் மரணமுமாகும். இயேசுவுடன் ஐக்கியமாவதற்கான விசுவாசம் இதுவே.
அநேக மக்கள் இப்போதும் கூட “மத” வழியில் விசுவாசிக்கிறார்கள். அவர்கள் ஆலயம் சென்று பாவ அறிக்கைச் செய்து பாவமன்னிப்பை வேண்டி கண்ணீர் வடிக்கிறார்கள். அதனை இப்போதே விட்டுவிட்டு கர்த்தரின் நீதியை விசுவாசிக்கத் தொடங்குங்கள், அப்பொழுது கர்த்தரின் சமாதானத்தை உங்களிருதயத்தில் பெறுவீர்கள். நம்மை இரட்சிக்கும்படியாக இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தார். நீங்கள் இந்த நற்செய்தியை விசுவாசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பாவநிவிர்த்தியைக் குறித்து மோசேயின் மூலம் கர்த்தர் நமக்கு கற்றுக்கொடுத்தார். மோசே கர்த்தரின் கட்டளையான அவரின் மக்களான இஸ்ரவேலரை விடுவிக்கும்படி, எகிப்திற்குச் செல்வதை எற்றுக்கொண்டான். ஆகவே அவன் எகிப்திற்கு தன் மனைவி மற்றும் அவன் பிள்ளையுடன் கழுதை மீது சென்றான். அவ்விரலில், கர்த்தரின் தூதுவன் தோன்றி மோசேயைக் கொல்ல முயன்றான். அப்பொழுது அவன் மனைவியாகிய சிப்போராள் கூறான ஒர் கல்லை எடுத்து, உடனே தன் மகனின் நுனித்தோலை அறுத்து, அதனை மோசேயின் கால்களில் வீசி “நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.” (யாத்திராகமம் 4:25)
இந்த வசனத்தின் உண்மை இப்படி. மோசேயின் மகன் கூட விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் கர்த்தரின் மக்களில் ஒருவனாக கருதப்படான்; ஆகவே கர்த்தர் அவனைக் கொல்லப்போகிறார். இஸ்ரவேலர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் அவர்கள் கர்த்தரின் மக்களாக கருதப்பட்டார்கள் என்று கர்த்தர் கூறினார். பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமானது அவர்கள் கர்த்தரின் மக்களாக இருப்பதற்கான அடையாளமாகும். கர்த்தர் இதனை மேசேயிற்கு உணர்த்தவேண்டியிருந்தது. ஆகே மோசேயின் மனைவி அவள் மகனின் நுனித்தோலை வெட்டி அதனை எறிந்து “நீர் எனக்கு சம்பந்தமான புருஷன்!” என்று கூறினாள். மோசேயின் மகன் விருத்தசேதனம் செய்யாதவனாக இருந்தபடியால் கர்த்தர் மோசேயைக் கொல்ல முயன்றார்.
ஒருவன் ஆபிரகாமின் சந்ததியினனாக இருந்தால் கூட அவன் விருத்தசேதனம் செய்யாதவனாக இருந்தால், அவன் இஸ்ரவேலிடமிருந்து விலக்கி வைக்கப்படுவான். விருத்தசேதனம் செய்தவர்களாலே பஸ்கா ஆட்டுக்குட்டியின் இறைச்சியை சாப்பிடவும், அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை கதவுக்கு மேலுள்ள உத்திரத்திலும், கதவின் நிலைகளிலும் பூச முடிந்தது. அது போல, ஆவிக்குரிய விருத்தசேதனம் பெற்றவர்களாலேயே நற்கருனை ஆராதனையில் பங்கேற்கமுடியும். இந்த நம்பிக்கை இல்லாதவர்களால் கர்த்தரின் நீதியினுள் பிரவேசிக்க முடியாததால், அவர்களால் கர்த்தரின் மகிமையில் பங்கேற்க முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல் யூதனாவான். அவன் பிறந்து எட்டு நாட்களில் விருத்தசேதனம் செய்யப்பட்டு கமாலியேலின் பாதங்களுக்கு கொண்டுவரப்பட்டான். அவன் பழைய ஏற்பாட்டை நன்கு கற்றவன். ஆகவே, இயேசுகிறிஸ்து ஏன் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றார் என்றும், அவர் ஏன் சிலுவையில் அறையப்படவேண்டும் என்றும் அவன் நன்கு புரிந்தவனாயிருந்தான். ஆகவே, அவனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக்குறித்து உறுதியுடன் பிரசங்கிக்க முடிந்தது. ஆகவேதான் அவன் “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” (ரோமர் 2:29) என்று கூறினான்.
அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து அடிக்கடி பேசினான்தான். அது ஏனெனில் நம் பாவங்களை எடுத்துக்கொண்டு இயேசு நமக்கு ஆவிக்குரிய விருத்தசேதனத்தைச் செய்வித்தாலும்; அவர் சிலுவையில் பலியிடப்படவில்லையெனில், வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அவர் நியாயத்தீர்ப்பை பெறவில்லையெனில், நாம் இரட்சிக்கப் படமுடியாது. அதனால் தான் சிலுவையைக் குறித்து பவுல் அடிக்கடி பேசினான். சிலுவையானது நம் ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் முடிவும் நிறைவேறுதலுமாகும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆயினும், இந்நாளின் அநேக கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணத்தைக் குறித்து கொஞ்சம் கூட தெரியாததால் நரகத்தில் அழிவுற்றனர். ஒவ்வொரு சந்ததியினருக்கும் ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் மீதுள்ள விசுவாசித்தின் வல்லமை சரியாக கூறப்பட்டிருந்தால் இந்நாளின் கிறிஸ்தவம் இத்தகையதாக இருக்காது.
சில மக்கள் இயேசுவை முதலில் சந்திக்கும்போது பெரும் நன்றியுடையவர்களாயுள்ளனர். ஆனால் அவர்களின் தவிர்க்க முடியாத பாவ எரிச்சலினால், காலம் செல்லும்போது மோசமான பாவிகளாகிவிடுகின்றனர். இயேசுவை முதலில் விசுவாசித்து பத்து ஆண்டுகளாயிருக்கலாம். ஆனால் அவர்கள் மோசமான பாவிகளாயிருப்பர். இயேசுவை விசுவாசித்த பிறகும் அவர்களால் பாவிகளாயிருக்க முடியுமா? அவர்கள் இப்பாடலை வார்த்தைகளில் மட்டும் பாடுகிறார்கள்.
“♫அழுகை என்னை இரட்சிக்காது! ♫என் முகம் முழுவதும் கண்ணீரால் குளித்தாலும், ♫அவற்றால் என் பயங்களை அகற்ற முடியவில்லை, ♫வருடக்கணக்கான பாவங்களையும் கழுவமுடியவில்லை! ♫அழுகை என்னை இரட்சிக்காது! ♫கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் என்னை இரட்சிக்கும்! ♫மனித குமாரனை நான் விசுவாசிப்பேனாக, அவர் செய்தவற்றை நம்புவேனாக, ♫அவர் கால்களை நோக்கி ஓ கர்த்தரே எனக்கு உதவும்: ♫கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் என்னை இரட்சிக்கும்.♫”
அவர்கள் “அழுகை என்னை இரட்சிக்காது. கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் என்னை இரட்சிக்கும்” என்று பாடுகிறார்கள். ஆனால் அது சொற்களில் மட்டுமே, அவர்கள் பாவம் செய்யும்போதெல்லாம் கண்ணீர் வடித்து ஜெபிக்கிறார்கள். “கர்த்தரே, தயவுசெய்து என்னை மன்னியும். இப்பொழுது நீர் என்னை மன்னித்தால், இப்போதிலிருந்து நான் நல்லவனாயிருப்பேன்.” கிறிஸ்தவன் பாவம் செய்யும்போது, அவன்/அவள் பாவ அறிக்கைச் செய்து, பாவமன்னிப்பு கேட்டு அழுகிறார்கள். பிறகு தாம் நன்றாக இருப்பதாக உணருகிறார்கள். ஆனால் இதனை வருடக்கணக்காக செய்துகொண்டிருக்கும் ஒரு நபர், அவன்/அவள் இருதயத்தில், பத்து வருடங்களுக்கு முன் இயேசுவை அவன்/அவள் முதலில் விசுவாசித்தபோது இருந்ததைவிட, அதிக பாவமுள்ளவராயிருக்கிறார். அந்நபர் வருத்தத்துடன் கேட்கிறார், “நான் ஏன் இத்தனைச் சீக்கிரமாக இயேசுவை விசுவாசித்தேன்? நான் 80 வயதானவனாகும்போதோ, என்னுடைய கடைசி மூச்சிற்கு முன்போ அவரை விசுவாசித்திருக்கலாம். நான் மிகவும் சீக்கிரமாய் விசுவாசித்துவிட்டேன்.” அவன்/அவள் கர்த்தரின் சித்தப்படி வாழ்ந்திருக்க வேண்டும், ஆனால் அப்படி வாழாததினாலே அப்படியாயிற்று.
ஒவ்வொருவரின் பாவத்திற்கும் ஒரு தண்டனை இருக்கவேண்டும். அதனாலேயே இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் தீர்க்கப்பட்டார். நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்க தம் விலையேறப்பட்ட இரத்தத்தைச் சிந்தினார். மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து உயிரொடெழுந்தார். பிதாவாகிய கர்த்தர் இயேசுவை மீண்டும் உயிருடன் எழுப்பினர். ஆவிக்குரிய விருத்தசேதனத்தை விசுவாசிப்பவரால் நற்செய்தியை பரப்பவும் அதன்படி வாழவும் முடியும். நாம் கர்த்தரின் பிள்ளைகளாகவேண்டுமென்பதற்கும் அது கர்த்தரின் நீதி என்பதற்கும் ஆவிக்குரிய விருத்தசேதனமே அத்தாட்சியாகும். நம்முடைய பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதற்கு அவரின் ஞானஸ்நானமே அத்தாட்சி, அவருடைய விலையேறப்பட்ட சிலுவை இரத்தம் நமக்காக அவர் தீர்க்கப்பட்டு பாவநிவிர்த்தி செய்தமைக்கு அத்தாட்சியாகும்.
நீங்கள் இயேசுவை விசுவாசித்தபோதிலும் உங்களிருதயத்தில் பாவத்துடனேயே இருக்கிறீர்களா? அது வேதப்புரட்டனின் விசுவாசமாகும். தீத்து 3:10 கூறுகிறது, “வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்ன பின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலை தவறி, தன்னிலேதானே ஆக்கினைத் தீர்ப்புடையவனாய்ப் பாவஞ் செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே” வேதப் புரட்டலாயிருக்கிற விசுவாசத்தையுடையவர்கள் தனக்குத்தானே தண்டனை அளிக்கும் பாவிகளாயிருக்கிறார்கள். அவர்கள் மரணத்தினால் பயமுறுத்தப்பட்டாலும் தாம் பாவிகளாயிருக்கிறோம் என்று வலியுறுத்துகிறார்கள். தாம் தவறாக புரிந்துகொண்டவற்றை மாற்றமுடியாதென அவர்கள் பிடிவாதமாயிருக்கிறார்கள். கர்த்தர் இந்தப் பாவிகளிடம் கூறுகிறார், “நீ வேதப்புரட்டன், நீ ஒரு பாவி; நீ என்னுடைய பிள்ளையல்லாததோடு, நீ நரகத்தின் நித்தியமான, நெருப்பில் நுழைவாய்.”
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகியவற்றின் ஆவிக்குரிய விருத்தசேதனத்தையோ அல்லது கர்த்தரின் நீதியையோ இதுவரை ஒத்துக்கொள்ளாமல், இயேசுவை விசுவாசிப்பவர்கள் வேதப்புரட்டர்களாயிருப்பதோடு தம் பாவங்களைக் குறித்து கர்த்தருக்கு முன் அறிக்கை செய்வதைத் தவிர, வேறு எதுவும் செய்ய இயலாதவர்களாய் உள்ளனர். இயேசுவின் நீதியைக் குறித்து விசுவாசிக்காத பாவிகளால் அவரின் இராஜ்யத்திற்குள் நுழைய முடியாது.
இயேசுவை விசுவாசித்தபிறகு நீதிமான்களாகியவர்களுக்கு தம்மிருதயத்தில் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியிருக்கிறது. அந்த அத்தாட்சிகள் கீழ்வருமாறு: கர்த்தராகிய இயேசு மனித சரீரத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தினார். உலகின் பாவங்களை தன் மீது எடுத்துக்கொள்ளும் விதமாக இயேசு பூமிக்கு வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார்; ஆவிக்குரிய விருத்தசேதனத்தை விசுவாசிப்போரின் நம்பிக்கையை முழுமைப்படுத்த அவர் சிலுவையின் தீர்ப்பைப் பெற்றார். அவர் இறந்தவர்களிலிருந்து மூன்று நாட்களில் உயிரோடெழுந்து, நம் ஜீவனுள்ள இரட்சகரானார். இதுவே கர்த்தரின் நீதியின் மிகச்சரியான இரட்சிப்பாகும், இது இரத்தத்தினால் மட்டும் அல்ல, நீரினாலும் இரத்தத்தினாலும் ஆயிற்று. இவையே நம்முடைய நிறைவான இரட்சிப்பிற்கு சாட்சியாக இருக்கும் ஆவிக்குரிய விருத்தசேதனத்தின், இறுதியான அத்தாட்சியாகும்.
எனக்கன்பான கிறிஸ்தவர்களே, இயேசுவின் இரத்தத்தினால் மட்டும் நம்முடைய இரட்சிப்பு சாத்தியமாக்கபட்டது என்றில்லாமல், நீரினாலும், இரத்தத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் அது சாத்தியமாக்கப்பட்டது என்று உங்களிருதயத்தில் ஏற்றுக்கொள்ளவும். கர்த்தர் உலகின் பாவங்களை முழுமையாகத் துண்டித்ததுடன் நமக்கான ஆக்கினையையும் அழித்துப்போட்டார். என்னுடைய பாவங்களை மட்டும் துண்டித்துப்போடாமல், ஆதாமில் தொடங்கி பூமியின் கடைசி மனிதன் செய்த பாவம் வரை, உலகின் பாவங்களையெல்லாம் துண்டித்துப் போட்டார். அவற்றையெல்லாம் தம் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் சுமந்து தீர்த்தார். நீரினாலும் இரத்தத்தினாலும் வந்த இயேசுவினால் நிறைவேற்றப்பட்ட கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களை, ஆவிக்குரிய விருத்தசேதனத்தை பெறுவது இரட்சிக்கும்.
யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானமானது உலகின் எல்லாப் பாவங்களையும் துண்டித்தது. இப்போது வந்த ஆவிக்குரிய விருத்தசேதனத்தை விசுவாசிப்போர்களின் இருதயங்களில் பாவம் இருக்க முடியாது. இயேசு மரித்தோரிடமிருந்து உயிரோடெழுந்ததுடன், பாவத்தினால் இழந்துபோன ஆத்துமாக்களை தன் நீதியினால் எழுப்பினார். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம், மற்றும் ஆவியாகியவற்றுடன் கர்த்தர் நம்மை நோக்குகிறார், மேலும் நாம் ஆவிக்குரிய விருத்தசேதனத்தினால் இரட்சிக்கப்படலாம். விசுவாசிப்பவர்களுக்கு இயேசுவினுள் ஆவிக்குரிய விருத்தசேதனமானது, படைத்தலுக்கு முந்தைய கர்த்தரின் திட்டமாகும். இப்பொழுது கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நீங்கள் ஆவிக்குரிய விருத்தசேதனத்தையும் பெற்றுக்கொண்டீர்கள்.