(ரோமர் 2:1-16)
“ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச் சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ? உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையுயும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார். சண்டைக்காராராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்கு செய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகூலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை. எவர்கள் நியாயப் பிரமாணமில்லாமல் பாவஞ் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப் பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப் பிரமாணத்துக்குட் பட்டவர்களாய்ப் பாவஞ் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப் பிரமாணத்தினாலேயே ஆக்கினைத் தீர்ப்படைவார்கள். நியாயப் பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். அன்றியும் நியாயப் பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப் பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்கு தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.”
சட்டத்தை பின்பற்றுபவர்கள் மற்ற மக்களை நியாயம் தீர்க்கும் அதே நேரம் தாம் சட்டத்தைக் கடைப் பிடிப்பதில்லை
சட்டத்தைக் குறித்து நாம் பேசுவோம். அப்போஸ்தலனாகிய பவுல் சட்டத்தைச் சார்ந்திருக்கும் யூதர்களிடம் கூறினான், “ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச் சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப் பட்டவைகளைச் செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத் தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?” (ரோமர் 2:1-3) சட்டத்தை பின்பற்றுவோர் தாம் கர்த்தரை கனம் பண்ணுவதாக எண்ணுகிறார்கள். இத்தகைய மனிதர்கள் கர்த்தரைத் தம் இதயப்பூர்வமாக விசுவாசிக்காமல், அவர்களுடைய செய்கைகளின் அடிப்படையில் அமைந்த தவறான பெருமையினால் விசுவாசிக்கிறார்கள். இம்மக்கள் மற்றாவர்களைத் தீர்க்க விருப்பமுள்ளவர்களாயிருப்பதோடு அதில் சிறந்தவர்களாயும் உள்ளனர். ஆயினும், அவர்கள் கர்த்தரின் வார்த்தைகளினால் மற்றவர்களை நியாயந்தீர்க்கும் போது அவர்களால் குறைக் கூறப் பட்டவர்களின் அதே தவறை தாமும் செய்து அதே நிலையில் தாமிருப்பதை உணருவதில்லை.
உதாரணமாக, கர்த்தரின் கட்டளைகளின் படி மற்றவர்களை ஔய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கச் சொல்லும் அதேவேளை, அவர்கள் அதனை அப்படி ஆசரிப்பதில்லை. அவர்கள் மற்றவர்களை கட்டளைகளைக் கைக்கொண்டு அதற்கு கீழ்ப்படியக் கூறுவர், ஆனால் அவர்களே அதனைக் கடைப்பிடிப்பதில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் இத்தகைய மனிதர்களுக்காக கூறினான். “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக் கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?” (ரோமர் 2:3)
கர்த்தருக்கு முன்பாக சட்டத்தைப் பின்பற்றுபவர்களால் இரட்சிக்கப்பட முடியாது. சட்டத்தினால் நம்மை விடுவிக்க முடியாது, ஆகவே நம் மத வாழ்க்கை, சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்தால் கர்த்தர் நம்மைத் தீர்ப்பார். சட்டத்தின் அடிப்படையிலான வாழ்வு கர்த்தரின் கோபாக்கினைக்குட்பட்டது. இரட்சிக்கப்படாதவர்களிடம் சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. சட்டத்தின் அடிப்படையில் மற்றவர்களை ஒரு குறிப்பிட்ட வழியில் வாழும்படி அவர்கள் கூறுகின்றனர், ஆனால் இந்நாட்களில் அவர்கள் இத்தகையவற்றைப் பேசக்கூடாது.
முன்பொரு காலத்தில், நம் நாட்டிலுள்ள அநேக கிறிஸ்தவர்கள் அப்படித்தான் இருந்தார்கள், முடியலங்காரம் செய்த பெண்களை, அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று, சட்டப்படி நடக்கும் போதகர்கள் கண்டிப்பர். சட்டத்தின்படி செய்யும் செய்கைகளின் இந்த வழிகளை ஆலய உறுப்பினர்களுக்கு போதித்த போதகர்களின் வழி முறைகளின் படி நாமிருந்தால், முடி அலங்காரம் செய்யப்பட்டவர்கள் தாமாகவே நரகம் செல்வர் என்பதை விசுவாசித்திருப்போம். இது 15-20 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு பெண் லிப்ஸ்டிக் உபயோகித்தால், அத்தகைய போதகர்களின் கூற்றின்படி அவர்கள் தூய்மைப் படுத்தும்படியாக அனுப்பப்பட்டனர்.
இம்மக்களே சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அவர்கள் கர்த்தருக்கு முன் பரிசுத்தமாக இருப்பது போல் காட்டிக்கொண்டு; லிப்ஸ்டிக் உபயோகிக்க வேண்டாம் என்றும், அலங்கரிக்கப்பட்ட தலை வேண்டாமென்றும், மெதுவாக நடக்கும் படியும், வாங்கவோ விற்கவோ வேண்டாம் என்றும் மக்களுக்கு போதிக்கிறார்கள். அவர்களே கபடர்களாக இருந்துக்கொண்டு, சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் விசுவாசிகளிடம் எது சரியானது எது தவறானது என்று கூறுகிறார்கள்.
யூதர்களும் இப்படிப்பட்டவர்களாயிருந்தனர்
யூதர்களும் இப்படிப்பட்டவர்களாயிருந்தனர். அவர்கள் புறஜாதியாரை “அவர்களுக்கு கர்த்தரைத் தெரியாமல் சிலைகளை ஆராதிக்கின்றனர். அவர்கள் நரகத்தில் அழிபவர்கள், மிருகத்தனமான மனிதர்கள்” என்று தீர்த்தனர். ஆயினும், அவர்களே இவ்வுலகின் பொருட்களை அதிகமாக நேசித்ததுடன் கர்த்தரைவிட மற்ற தெய்வங்களை அதிகம் நேசித்தனர்.
“ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச் சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.” யூதர்கள் மற்றவர்களை சட்டத்தின்படி தீர்த்தனர். ஆனால் அவர்களோ தம் சொந்த போதனைகளின்படி வாழவில்லை. அதற்கும் மேலாக கர்த்தரின் நீதியை விசுவாசிக்காதவர்களும், இயேசுவின் இரட்சிப்பை தம்மிருதயத்தில் பெற்றுக்கொள்ளாதவர்களும், கர்த்தரின் வார்த்தைகளின்படி அப்படியே வாழ்வதாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்களும் யூதர்களைப் போன்றவர்களே.
சட்டத்தினரும் தீர்க்கப்படுவர்
இங்குள்ள இளம் வயதுள்ள மக்கள் அநேகமாக இதுபோன்ற வாழ்க்கையை நடத்தியிருக்கமாட்டார்கள். ஆயினும், வயது சென்றவர்கள் சட்டத்தினடிப்படையில் அமைந்த பிரசங்கங்களைக் கேட்டிருக்கலாம். கெட்ட நடத்தையுள்ள பெண்போல், தலையலங்காரம் செய்த பெண்கள் தோன்றுவதால் அவர்கள் போதகர்கள் ஏசுவார்கள். அது போன்றவற்றை போதகர்களால் இப்போது செய்ய முடியாது. ‘நீதிமான்` அல்லது ‘முற்றிலும் பரிசுத்தவானாதல்` என்று கூறுவது வெகுகாலத்திற்கு முன்பே குற்றம் கூறப்படும் இலக்காகிவிட்டது. இந்நாட்களில் அநேக மக்கள் ‘நீதிமான்` என்ற சொற்றொடரை பொதுவாக உபயோகிக்கின்றனர். கிறிஸ்தவம் மாறிவிட்டது என்பதற்கு இது அடையாளம். கள்ளப்போதகர்களினால் சரமாரியாக பொய் சொல்ல முடியாது, ஏனெனில் அவர்களின் சபையாருக்கு கூட உண்மை நற்செய்தி புத்தக வடிவிலும் நாடா வடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமானது என்னவெனில், இயேசுகிறிஸ்துவின் நிறைவான இரட்சிப்பை அலட்சியம் செய்து, சட்டத்ததின்படி மத வாழ்க்கை நடத்தும் சட்டத்தினர் கர்த்தருக்கு முன் நியாயந்தீர்க்கப்படுவர்.
4 ஆம் வசனம் கர்த்தரின் நியாயத்தீர்ப்பைக் குறித்து பேசுகிறது. நாம் அதனை விசுவாசிப்போமாக, “அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ?” சட்டத்தினரை கர்த்தர் தீர்ப்பார். சகோதரர்களே சட்டத்தின்படியான விசுவாசம் கர்த்தரை எதிர்க்கிறது. சட்டத்தினர் கர்த்தரின் அன்பை அவர்களின் செய்கைகள் அடிப்படையிலமைந்த வரைமுறைகளினால் எதிர்க்கிறார்கள். கர்த்தருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தின் மூலம், அவர்களின் பாவங்களையும் அக்கிரமங்களையும் மன்னித்ததாக கூறும் இரட்சிப்பின் நற்செய்தியை, சட்டத்தினர் அலட்சியம் செய்கின்றனர்.
சட்டத்தின்படி மத வாழ்க்கை நடத்துபவர்கள் கர்த்தர் முன் தீர்க்கப்படுவர். ஆயினும் கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக அநேகர் சட்டத்தின்படி மதவாழ்க்கை நடத்துகின்றனர். ‘நாம் இரட்சிக்கப்பட்டுள்ளதால் அவருடைய தீர்ப்பிலிருந்து விலக்கப்பட்டோம்` என்று நாம் எண்ணக்கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல், சட்டத்தினர் இரட்சிப்படைய முடியாதெனவும், அவர்கள் அழிந்து தீர்க்கப்படுவர் என்றும் கூறினான். எத்தகைய மக்கள் சட்டத்தின்படி மதவாழ்க்கை வாழுகிறார்கள் என்று நாமறிந்துகொள்வதன் மூலம் அத்தகையவர்களுக்கு நற்செய்தியை தெரிவிக்க ஒரு திட்டமிடலாம்.
யூதர்கள் உட்பட உலகில் நிறைய சட்டத்தினர் உள்ளனர்
அப்போஸ்தலனாகிய பவுல், இயேசு உலகின் அனைத்துப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்பதைக் குறித்து மட்டும் பேசவில்லை. யூதர்களைப் போன்று சட்டத்தின்படி மதவாழ்வு வாழ்ந்து கர்த்தரை எதிர்ப்பவர்கள் தீர்க்கப்படுவார்கள், என்பதைக் குறித்தும் கூறுகிறான். அவர்கள் கர்த்தரின் அன்பை அலட்சியம் செய்கிறார்கள். அந்த அன்பின் மூலமாக அவர் நமக்கு இரங்கினார். நாம் அவர் கண்களுக்கு இரங்கத்தக்க நிலையில் இருந்தமையால் கர்த்தர் உலகின் அனைத்துப் பாவங்களையும் துடைத்துப்போட்டார் என்று கூறும் நற்செய்தியாகிய பாவக்கிரயம் செலுத்துதலை அவர்கள் அலட்சியம் செய்கின்றனர்.
இத்தகைய மதவாழ்க்கையை நடத்தும் சட்டத்தினர் உங்களைச் சுற்றிலும் இல்லையா? அநேக சட்டத்தினர், கர்த்தர் இந்த உலகிற்கு இரங்கவில்லை என்றும் அவர் நம் பாவங்களைக் கழுவவில்லை என்றும் விசுவாசிக்கின்றனர். அப்படியிருந்தும் கர்த்தருடைய அன்பை ஏற்றுக்கொண்ட சிலர் அவருக்கு முன்பாக ‘நீதிமான்` என்றழைக்கப்படுவர். இந்த நொடிப்பொழுதில் கூட சட்டத்தின் படி நடப்பவர்கள் அவருடைய நீதியை அலட்சியம் செய்து கர்த்தருடைய இரட்சிப்பை தம் சொந்த எண்ணங்களினால் இகழுகின்றனர். இத்தகையோர் அதிக எண்ணிக்கையிலிருப்பதுடன், முன்பு கூறப்பட்டவர்களை கடுப்புடன் பார்க்கவும் செய்கின்றனர்.
கர்த்தரின் தயவு, பொறுமை, நீடிய சாந்தம் ஆகிய ஐசுவரியங்களை, யூதர்கள் செய்தது போன்றே அலட்சியம் செய்யும் அநேக மனிதர்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிறார்கள் என்று, நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறேன். இது சரியா அல்லது தவறா? ஆம், இது போன்ற அநேக மனிதர்கள் இருக்கின்றனர். கர்த்தருக்கு முன் சட்டத்தின்படி வாழும் ஒருவன் மற்றவர்களை இகழுகிறான். சட்டத்தினர் எதனை இகழுகின்றனர்? கர்த்தரின் நிறைவான இரட்சிப்பை அவர்கள் இகழுகின்றனர்.
யூதர்கள் உட்பட இவ்வுலகில் வாழும் அநேக மக்கள், இயேசுவானவர் தேவகுமாரன் என்பதை மறுக்கின்றனர். யூதர்கள் இஸ்ரவேலின் மக்கள். “அவர் எப்படி தேவகுமாரனாக முடியும்? அவர் தீர்க்கதரிசிகளில் ஒருவர்” என்று கூறுகின்றனர். இதுவரை தான் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கின்றனர். இஸ்ரவேலர்கள் தேவகுமாரனை இகழ்ந்ததுடன் “இவன் தேவதூஷணம் சொன்னான்” (மத்தேயு 26:65) என்று கூறி இயேசுவின் கன்னத்தில் தம் கைகளால் அறைந்தார்கள். அவர்கள் இப்பொழுதும் அவரை இகழுகிறார்கள். யூதர்கள் கர்த்தரையும் இகழுகின்றனர், ஏனெனில் அவர்கள் அவரின் குமாரனை விசுவாசிக்கவில்லை. இயேசுவை இஸ்ரவேலர்கள் விசுவாசிக்காததாலேயே அவர்கள் இயேசுவை பொருட் படுத்தவில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. ஆயினும் புறஜாதியாரில் உள்ள சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எதனை இகழுகின்றனர்? அவர்கள், கர்த்தரின் அன்பு, அவரின் நீதி ஆகிய ஐசுவர்யத்தை இகழுகின்றனர்.
சட்டத்தினர் தம் செய்கைகளின் அடிப்படையில் வாழுகின்றனர்
சட்டப்படி வாழ்பவர்களின் பிரிவில், சட்டத்தினர் தம்மைப் பின்பற்றுவோரிடம், வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை திருப்பிக்கொடுங்கள் என்று போதிக்கிறார்கள். அவர்கள் கோபப்படவே கூடாது. கொள்கைகளை எப்படி பிரசங்கிப்பது, எப்படி நடப்பதும் எப்படி சிரிப்பது போன்றவற்றைக் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் தமக்கு வேதவசனங்களைக் குறித்து எல்லாம் தெரியும் என்று எண்ணுவதுடன் தம் மூலப்பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் தம்முடைய அன்றாடப் பாவங்களுக்காக தினந்தோறும் மனம் வருந்தி ஜெபிக்கிறார்கள்.
இதைப் போன்றவைக் கூட சட்டத்தின் அடிப்படையில் அமைந்த விசுவாசமே. இவைகூட, கர்த்தரின் அன்பு மற்றும் இரட்சிப்பின் ஐசுவரியத்தை மக்கள் இகழும்படிச் செய்கின்றன. அவர்கள் கூறுகின்றனர், “உன்னிடம் பாவம் இல்லை என்று கூறுவதில் பெறுமைப் படுகிறாய். நீ நீதிமான் என்கிறாய், இயேசு பாவங்களைக் கழுவிவிட்டார் என்பதை விசுவாசிப்பதன் மூலம், எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டாய் என்று கூறுகிறாய்!” அவர்கள் உண்மையிலேயே நீதிமான்களாக இல்லாவிட்டாலும், தம்மைக் கர்த்தர் நீதிமான் என்றழைப்பதாக எண்ணுகின்றனர். அனைத்து சட்டத்தினரும் இந்த தவறான கிறிஸ்தவக் கொள்கைகளை விசுவாசிக்கின்றனர். ஆகவே நாம் இத்தகைய சட்டத்தினரிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.
இயேசுவை விசுவாசித்த பிறகு, அன்றாடப் பாவங்களுக்கு பாவமன்னிப்பு கேட்டு, மனம் வருந்தி ஜெபிப்பது சட்டமாகுமா? அல்லது அது அப்படியில்லையா? -ஆம், அது அப்படியில்லை.- அது செய்கைகளைக் குறித்த சட்டத்திலிருந்து வந்ததா அல்லது அப்படி இல்லையா? -ஆம், அது அப்படியில்லை.- அது விசுவாசத்தினுடையது அல்ல. வார்த்தைகளின் படி செய்து வாழ்கிறோம் என்று அறிவிக்கும் மனிதர்கள் சட்டத்தினர். நம்மைச் சுற்றிலும் இதுபோன்ற எண்ணிலடங்காத மனிதர்கள் உள்ளனர்.
அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்ததின் மூலம் முழு பாவமன்னிப்பைப் பெற்றான். ஆயினும், சட்டப்படி பழைய ஏற்பாட்டை விசுவாசித்த இஸ்ரவேலர்கள் யூதாயிசத்தை நம்பியிருந்தனர். இம்மக்களில் அனைவரும் சட்டத்தினரா இல்லையா? அவர்களே சட்டத்தைப் பின்பற்றியவர்கள்; ஒருவர் எப்படி நடக்கவேண்டும், ஒருவர் என்ன செய்ய வேண்டும், ஒருவர் என்ன செய்யக்கூடாது என்று வெளியரங்கமான செய்கைகளைப் போதிப்பவர்கள்.
ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் இம்மக்களை கடுமையான சொற்களால் பழி கூறினான். இதனை நல்லவழியில் செய்தான். இன்றைய கிறிஸ்தவர்களும் சட்டப்படியான வாழ்க்கையை நன்கு நடத்துகின்றனர். விசுவாசத்தினால் தாம் பரிசுத்தனானால் கூட, அவர்களின் பாவங்களுக்காக தினமும் மனம் வருந்தி ஜெபிப்பதால் தம் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவர்கள் சட்டத்தினர், அவர்களின் விசுவாசமானது சட்டத்தின்படியானது.
அநேகப் போதகர்கள் பிரசங்கிப்பதில் சிறந்தவர்கள், அவர்கள் “நாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டோம்” என்று கூறுகின்றனர். ஆயினும் அவர்கள் முடிவில் கூறுகின்றனர். “நாம் செய்த பாவங்களை அறிக்கைச் செய்து மனம் வருந்தவேண்டும்.” இப்போதகர்கள் சட்டத்தின்படி வாழ்பவர்கள். அவர்கள் தம் இரட்சிப்பிற்காக தம் செய்கைகளைச் சார்ந்திருக்கும் அதே வேளை, இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதோ, அவரில் சார்ந்திருப்பதோ இல்லை.
நாம் இரட்சிக்கப்படும் முன்னர் சட்டப்படி வாழ்ந்தவர்களா? ஆம். அப்ப்டித்தானிருந்தோம். நாம் மறுபடியும் பிறப்பதற்கு முன், நற்செயல்களைச் செய்வதே நம்மை இரட்சிக்கும் என்று எண்ணினோம். இப்படியாக எண்ணும் அநேக மக்கள் இவ்வுலகில் உள்ளனர். கர்த்தர் அவர்களை மனந்திரும்பும்படி கூறுகிறார். “ஆனபடியால் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:19). ஆயினும் இம்மக்கள் மனந்திரும்பவில்லை. எத்தனை பிடிவாதக்காரர்கள்? ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் பிடிவாதக்காரர்களிடம் மீண்டும் பேசுகிறான்.
சட்டத்தின்படி வாழ்பவர்கள் தாம் சாகும்வரை பாவிகளே என்று அறிவிக்கிறார்கள்
ரோமர் 2:5 நோக்குவோம். “உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே.” தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே சட்டத்தின்படி வாழுபவர்கள் கோபாக்கினையைக் குவித்துக் கொள்கிறார்கள்.
ஆயினும், சட்டத்தின்படி நடப்பவர்கள் எந்த அளவு பிடிவாதக்காரர்களாயிருக்கிறார்கள் என்றால், ஒரு கத்தியை அவர்கள் கழுத்தின் அருகில் வைத்தால் கூட கர்த்தருக்கு முன் தாம் பாவிகள் என்று அறிக்கைச் செய்வார்கள். அபாயத்தை சந்திக்கும் போதும், கர்த்தருக்கு முன் தாம் பாவிகள் என்றே அவர்கள் அறிக்கைச் செய்வர். சில மக்கள் தாம் சாகும் தினம் வரை கர்த்தருக்கு முன்பு நிரந்தரமாக பாவிகளாயிருப்பதாக அறிவிக்கின்றனர். அவர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தாலும் கூட, தம்மால் கர்த்தரின் வார்த்தைகளின்படி வாழமுடியாது என்பதால் தாம் பாவிகளென்று அவர்கள் கூறுகின்றனர்.
கர்த்தர் என்ன கூறுகிறார்? “வார்த்தைகளின் படி உங்களால் வாழமுடியாததாகையால், நான் உங்களை இரட்சித்தேன். உங்கள் எல்லாப் பாவங்களையும் துடைத்து உங்களை முற்றிலும் இரட்சித்தேன்.” என்று அவர் கூறுகிறார். அவகள் இயேசுகிறிஸ்துவின் மீது முற்றிலும் விசுவாசம் கொள்வதுமில்லை அல்லது பாவங்களிலிருந்து விடுவிக்கும்படி கர்த்தருடைய நீதியை ஏற்றுக்கொள்ள முயற்சிப்பதுமில்லை. அதற்கு பதிலாக, தாம் சாகும் நாள்வரை பாவிகளென்று குறிப்பிடுகிறார்கள், ஏனெனில் அவர்கள் சட்டத்தின்படி செய்தல் மற்றும் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தல் ஆகிய இரண்டு மூலமாகவும் இரட்சிக்கப்படவேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களுடைய சொந்த விசுவாசங்களுக்கும் செய்கைகளுக்கும் நியாயம் தீர்க்கப்படவேண்டிய நேரம் வரும் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
“உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே.” (ரோமர் 2:5). அப்போஸ்தலனாகிய பவுல் “நீ எத்தனை பிடிவாதமாயிருக்கிறாய்? உன்னுடைய கடினமான குணப்படாத இருதயத்திற்காக தீர்க்கப்படுவாய் நீ அவரின் கோபத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறாய்” என்று பொருள்படக் கூறினான். இதனை ஒருவன் விசுவாசிக்கிறானா இல்லையா என்றில்லாமல், இயேசுகிறிஸ்து நம் எல்லாப் பாவங்களையும் துடைத்துப்போட்டார். இப்படியாக ஒவ்வொருவரும் அவனின்/அவளின் பாவத்திலிருந்து இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிக்கப்படமுடியும். இயேசுகிறிஸ்து நம் அனைத்துப் பாவங்களையும் கழுவிப்போட்டார் என்பதில் உள்ள நம் உண்மை விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நம்முடைய அன்றாடப் பாவங்களுக்கு அவருடைய பாவமன்னிப்பைப் பெற, நாம் தினமும் மனம் வருந்திக் கொண்டிருந்தபோது, நம்மால் சட்டத்தின்படி வாழமுடியவில்லை. ஆகவே நாம் புற மதங்களை விட்டு இயேசுகிறிஸ்துவினிடம் திரும்பினோம். நாம் சாகும் நாள் வரை பாவம் செய்வோம், ஆகவே தேவன் மீதுள்ள விசுவாசித்தினாலேயேயன்றி சட்டப்படி செய்வதினால் நீதிமானாக முடியாது.
நீ மரிக்கும் வரை கர்த்தருக்கு முன் நீயொரு நீதிமான் என்று அறிவிக்கிறாயா? அல்லது நீ மரிக்கும்வரை பாவியாக வாழ்வதைத் தவிர வேறுவழியில்லை என்று அறிவிக்கிறாயா? -நாம் நீதிமான்களென அறிவிக்கின்றோம்.- மூலைச் சலவை செய்வதனால் இது சாத்தியமாகுமா? சில மக்கள் இதனை மூலைச்சலவை என்று கூறுகின்றனர். இதனைப் போன்ற தவறான போதனைகளுக்குள் யார் விழுவர்? ஒருவருமில்லை.
சிலர் ஒவ்வொரு நாளும் உங்களை இதுபோன்று உறுவேற்றுகிறார்கள் என்று கொள்க. நீங்கள் “அது ஏன்? அப்படியானால்? அப்படியானால் என்ன?” என்று உறுதியாக எதிர்ப்பீர்கள். அநேக மக்கள் இந்த வழியில் பதிலளிப்பதில்லையா? நாம் இருதயப்பூர்வமாக ஒன்றைக் குறித்து நிச்சயமாக நம்பும்போதே அதனை விசுவாசிக்கத் தொடங்குகிறோம். ஒருவன் வேதாகமத்திலிருந்தல்லாமல் அழகிய வார்த்தைகளினால் நம்மை எதையோ நம்பச் செய்ய முயன்றால், அதனால் எந்த பயனும் இருக்காது. கொஞ்சம் கூட அது வேலை செய்யாது. மனிதர்கள் பிடிவாதக்காரர்கள் என்று நமக்குத் தெரியும், ஆனால் அது கர்த்தருடைய வார்த்தைகளானால், நாம் சாதுவாகி உண்மையை விசுவாசிக்கத் தொடங்குகிறோம்.
சட்டப் படியானவர்கள் எத்தனை பிடிவாதக்காரர்கள்
அவர்கள் எத்தனை பிடிவாதக்காரர்கள். தாம் வாழும் கடைசி நொடிவரை அவர்கள் பாவிகள் என்று அறிவிக்கிறார்கள். யூதாயிசத்தை உண்மையிலே விசுவாசிக்கும் அநேக மக்கள் கிறிஸ்தவத்தில் இருகின்றனரா? அல்லது இல்லையா? -அங்கு அநேகர் இருக்கின்றனர்.- “தேவனே, ஒரு பாவி இங்கு வந்தான். தயவு செய்து என் பாவங்களை மன்னியும்” உலகில் ஒரு பில்லியன் மக்களுக்குமேல் கிறிஸ்தவர்களாயிருந்தாலும் கொரியாவில் பத்து மில்லியன் மக்கள் கிறிஸ்தவர்களாயிருந்தாலும், அநேகர் தம் பலவீனத்தையும் அன்றாடப் பாவங்களையும், தம் சொந்த எண்ணங்களினால் பார்ப்பதால் அவர்கள் தம்மை கர்த்தருக்கு முன் பாவிகள் என்று அறிவிக்கின்றனர். இவர்கள் சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள்.
சட்டத்தைக் கடைபிடிப்பவர்கள் பரிசேயரை போன்றவர்கள்
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதற்கு முன் நானொரு சட்டத்தைக் கடைப்பிடிப்பவனாயிருந்தேன், நான் நினைப்பதுண்டு, “நான் தினந்தோறும் பாவஞ்செய்யும்போது எப்படி நீதிமானாக முடியும்?” இப்பொழுது இப்படி நினைப்பதில்லை. உங்களுக்குத் தெரிந்த அநேக மக்கள் பிடிவாதக்காரர்களாயிருக்கலாம். வேதாகமத்தைப் பொறுத்தவரை இம்மக்கள் எங்கு செல்வர்? அவர்களுடைய கடினமான குணப்படுத்த முடியாத இருதயங்களினால் கர்த்தருடைய கோபத்தை சேகரித்ததால் அவர்கள் நரகத்தில் முடிவடைவர். சட்டத்தைப் பின்பற்றுபவர்களும் தம்மை மாற்ற மனம் வருந்த வேண்டும். இயேசுகிறிஸ்து அவர்களின் எல்லாப் பாவங்களையும் துடைத்தார், என்று உண்மையாக விசுவாசிப்பதுடன், நன்றியறிதலுடன் இவ்வுலகில் வாழவேண்டும்.
ஆயினும் மனந்திரும்புவதில் அவர்கள் பிடிவாதமாயிருக்கிறார்கள். இம்மக்கள் இரங்கத் தக்கவர்கள். அவர்கள் மனம் வருந்துவது அவசியமானாலும் அப்படிச் செய்வதில்லை. அநேக மக்கள் பரிசேயரைப் போலவே நடக்கின்றனர். வேதாகமத்தை தம் கையிடுக்கினுள் வைத்துக்கொண்டு “சுகமாக இருக்கிறீர்களா? எப்படி இருந்தீர்கள்?” என்று ஆலயத்திற்கு முன் மக்களை விநயமாக வாழ்த்துகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் மக்களை சந்திக்கும்போது தம் கண்களை அரைவாசி முரட்டுத்தனமாக மூடிக்கொள்கின்றனர். அவர்கள் இயேசுவை விட அதிக தெய்வீகத்தன்மை உடையவர்களாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் அவர்கள் தெய்வீகத் தன்மை உடையவர்களாயிருந்தால் எத்தனை நலமாயிருக்கும்?
சட்டப்படி வாழும் போதகர்களின் மனைவிமார் என்ன கூறுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? “பரிசுத்தம் மற்றும் இரக்கமிக்கவர்” போன்றவற்றை விநயமான சொற்களில் அவர்களின் கணவன்மார் பேசுவதால், அவர்கள் புல்பிட்டிலிருந்து பிரசங்கம் ஒன்றை பிரசங்கிக்கும்போது அதனால் மகிழ்வதாக கூறுகின்றனர். ஆயினும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பியவுடன் மாறிவிடுவர். ஒரு முறை சட்டப்படியாக வாழும் போதகர் ஒருவரின் மனைவி அடுப்பு, போர்வை அரிசி முதலியவற்றை எடுத்துக் கொண்டு புல்பிட்டிற்கு பின்னால் குடித்தனம் நடத்தினாள், ஏனெனில் அவளுடைய கணவன் வீட்டில் அடிதடியாகவும் புல்பிட்டிற்கு பின்னால் மிருதுவானவராகவும் இருந்தார். அவள் அங்கே என்ன செய்கிறாள் என்று போதகர் கேட்டார். அவருடைய மனைவி கூறினாள், அவருடைய சப்தம் இங்கு மிருதுவாகவும் அவர் விநயமாகவும் நடந்துகொள்கிறார், ஆனால் வீட்டில் அவர் மாறுவதோடு அவளை துன்புறுத்தவும் செய்கிறார், ஆகவே அவள் அந்த இடத்தை விரும்புவதாக கூறினாள்.
நற்செய்தியை நாம் பிரசங்கிக்கவேண்டும்
வெளிப்படையாக பேசினால், நான் என் மனைவியிடம் மதிப்பெண்களை இழந்தேன். “நீங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ள ஒன்று நற்செய்தி மட்டுமே” என்று என் மனைவி கூறுவதே அதற்கான காரணம். நான் நிறைவான மனிதனாக இல்லாததால் என்னால் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடியாது. நான் முதலில் சிறப்பாகச் செய்யவேண்டியது கர்த்தரின் வேலையாகும். இரண்டாவது என் குடும்பத்தாரையும் நான் கவணிக்கவேண்டும். மூன்றாவது, மற்றக்குளறுபடிகளின் பின் ஔடவேண்டும். இதுவே நான் வேலை செய்வதற்கான அட்டவனை. இது நான் போதகராக இருப்பதால் மட்டுமல்ல. நற்செய்தியை பரப்ப பொறுப்பெடுத்துக்கொண்டதால் இப்படிச் செய்கிறேன். என்னுடைய மற்றவற்றை கவனித்துவிட்டு நற்செய்திக்கு பணிவிடை செய்ய என்னால் முடியாது. ஆகவே, நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். நற்செய்தியை பிரசங்கித்த பிறகே என்னுடைய மற்றக் காரியங்களைக் கவனிக்கிறேன். என்னுடைய மற்றக் காரியங்களைச் செய்த பிறகு நற்செய்தியை என்னால் பிரசங்கிக்க முடியும் என்று என்னால் எண்ண முடியாது.
சட்டப்படி வாழுகிறவர்கள் புல்பிட்டில் நிற்கும்போது தேவதூதர்களைப் போலுள்ளனர். விசுவாசிகளை அவர்களின் பாவத்தைக் குறித்து அழுகச் செய்யும் விதமாக போதிக்கிறார்கள். இயேசுவை விசுவாசித்த பிறகு ஒவ்வொரு சட்டத்தினரும் பாவமன்னிப்பை பெறவேண்டும். ஏனெனில் அப்பொழுது மட்டுமே அவன்/அவள் பாவமற்றவரானோம் என்று உண்மையாக மகிழ முடியும். ஒருவரின் ஆன்மா இப்படி மட்டுமே மகிழ்ச்சியடைய முடியும். மக்கள் தம் வாழ்க்கையை நடத்தும்போது பாவம் செய்து, செய்யக்கூடாதவற்றையும் செய்வதால், ஒருவன்/ஒருத்தியின் இருதயத்தில் பாவமிருந்தாலும் கூட அது அவனுக்கு/அவளுக்கு நரகத்தை விட மோசமானதாயிருக்கும், கர்த்தர் இத்தகைய மக்களை நியாயம் தீர்க்கிறார்.
அநேக மக்கள் கர்த்தரின் கோபத்தைச் சேர்க்கிறார்கள் என்று கூறுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உண்மையாகவே மனம் வருந்தாமல், மாறாமல், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காமல், உண்மையாகவே விசுவாசிப்பதுபோல் காட்டிக்கொண்டால், அவர்கள் கர்த்தரின் கோபத்தால் தீர்க்கப்படுவர். அவர்களால் கர்த்தரை ஏமாற்ற முடியாது. அவருக்கு முன்போ அல்லது அவர் இல்லாதபோதோ, நம்மிடம் உண்மையாகவே விசுவாசம் இருக்கிறதோ இல்லையோ, அவரை நம்மால் ஏமாற்ற முடியாது. நாம் விசுவாசிக்காவிட்டால் தீர்க்கப்படுவோம். விசுவாசம் இல்லாதவர்களின் மீது கர்த்தரின் கோபம் வெளிப்படுகிறது. நரகத்தில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவர்கள் எரிவர். அநேக மக்கள் தம் விசுவாசத்தினால் நரகத்தில் எரிவர்.
ஆகவே, நாம் நற்செய்தியை பிரசங்கிக்கவேண்டும். நாம் கர்த்தரின் வார்த்தைகளைத் தொடர்ந்து பரப்பவேண்டும். நாம் எப்போது ஒன்று கூடுகிறோமோ அப்போது நாம் நற்செய்தியைக் குறித்து சிந்திக்க வேண்டும், நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் மற்றவர்களைக் கவனிக்கவும் நேரத்தை செலவிடவேண்டும். நற்செய்தியை நாம் பிரசங்கிப்பதற்கான காரணம், அவர்கள் நம்மை துன்புறுத்தியிருந்தாலும், கர்த்தரின் அன்பை இகழ்ந்திருந்தாலும், அவர்களை கர்த்தரின் கோபத்திலிருந்து தப்பிக்க அவர்களுக்கு உதவுவதே.
நமக்கு கீழ்க்கண்டவை தெரிந்திருக்கவேண்டும் நம்மைச் சுற்றியுள்ள அநேக மக்கள் இந்த கோபத்தைப் பெறுவர். அதனை நாம் உண்மையாகவே சாட்சி கூற வேண்டுமா இல்லையா என்று கவனமாக எண்ணிப்பார்க்கவேண்டும், நாம் ஏன் நற்செய்தியை பிரசங்கிக்க நம்மால் முடிந்ததைச் செய்வதுடன், மற்ற மக்களுக்கு ஏன் காணிக்கையை ஏறெடுக்கவேண்டும். அவருடைய கோபத்தினால் அவர்களைத் தீர்க்கட்டும் என்று நாம் விட்டுவிட்டால் கர்த்தர் பிரியப்படுவாரா? அவர்களிருப்பது போல், அப்படியே விட்டுவிட நம்மால் முடியாது. இதனை நன்கு அறிந்து, உலகம் முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிக்கவேண்டும்.
உங்கள் குடும்பத்தில் சட்டப்படி வாழ்பவர் ஒருவர் இருந்தாலும் கர்த்தருடைய கோபத்தால் முழு குடும்பமும் தீர்க்கப்படும். அவருடைய கோபாக்கினை எத்தகையது? பிள்ளைகள் தம் பெற்றோருக்கு கீழ்படியாத போது “நீ கீழ்ப்படியாவிட்டால் அடி வாங்குவாய்” என்று நாம் கூறுகிறோம். அவர்களுடைய பிள்ளைகளின் தொந்தரவைத் தாங்க முடியாதபோது பெற்றோர் தம் பிள்ளைகளை அடிக்கின்றனர். பிள்ளைகள் தம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றனர். அவர்கள் தம் குழந்தைகளானபடியால் பெற்றோர் அவர்களை மன்னிக்கின்றனர். 4 ஆம் வசனத்தில் எழுதப்பட்டுள்ளது “அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ?” ஆயினும் கர்த்தர் எதுவரை பொறுப்பார்? கர்த்தர் 70-80 வருடங்கள் பொறுமையாயிருக்கிறார், ஆனால் மக்கள் இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் தம் பிள்ளைகளை பிரம்பினால் அடிக்கிறார்கள்.
சட்டப்படி வாழ்பவர்களுக்காக கர்த்தர் நரகத்தில் நெருப்பை தயார்படுத்தியுள்ளார்
கர்த்தர் தன் கைகளில் பிரம்பை எடுக்கும்போது அது முடிவாயிருக்கும். கர்த்தர் சட்டத்தினருக்காக உருக்காலையை தயார்படுத்தியுள்ளார். அதில் கொதிக்கும் கற்குழம்பும் கந்தகமும் உள்ளடங்கியுள்ளன. கர்த்தர் தம் கோபாக்கினை மூலம், இறந்தவர்களை அழியாத சரீரமுள்ளவர்களாக உயிரோடெழுப்புகிறார். அவர்கள் நித்தியமாக வலியை உணரும்படியாக அவர்கள் சரீரத்தை அழியாததாக மாற்றி, என்றும் அணைந்துபோகாத உருக்காலையில் அவர்களை எரிக்கிறார். கர்த்தரின் கோபம் அவர்களை நித்திய சரீரமாக உயிர்ப்பித்து, நித்தியமாக துன்புறும்படிச் செய்கிறார். அவர்கள் அதிக வெப்பமுடையவர்களாக, “நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுகிறேனே” (லூக்கா 16:24) என்று கூறினாலும் அவர்கள் மரணமடைவதில்லை.
அவர்கள் தீர்க்கப்படுவது தெளிவானதால் நாம் அவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவேண்டும். நாம் இகழப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும், நம்மைச் சுற்றியுள்ள சட்டத்தினருக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். ஏனெனில், அவர்களை நாம் கோபத்திலிருந்தும் அழிவிலிருந்தும் காக்கவேண்டும். நாம் ஏன் சிறந்தவற்றைச் செய்கிறோம் என்றும், மற்றவர்களை இரட்சிக்க நாம் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறோம் என்றும், நாம் ஏன் நம் ஆலயத்தின் பெரும்பகுதி செல்வத்தை நூல்களின் ஊழியத்திற்கு செலவு செய்கிறோம் என்றும், உங்களுக்கு புரிகிறதா? நம்முடைய ஆலயத்திற்கு மட்டுமே பணத்தைச் செலவு செய்தால் நம்மால் பணக்காரர்களாக இருக்கமுடியும். நம்மால் உண்டு நன்கு வாழ முடியும்.
ஆயினும், நற்செய்தியை உலகம் முழுவதும் பரப்ப அநேக பொருட்கள் தேவைப்படுகின்றன. அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வழியில் மற்ற மக்களும் இரட்சிக்கப்படமுடியும். ஆகவே, நற்செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கிக்க நம்மை அர்பணித்துள்ளோம். நாம் அப்படிச் செய்யாவிட்டால், மற்றவர்களால் பாவமன்னிப்பை பெற சாத்தியமாகுமா?
நாம் உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்திராவிட்டால், கர்த்தர் உங்களை ஏற்கெனவே இரட்சித்திருந்தாலும், நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்க முடியுமா? இல்லை உங்களால் முடியாது. நாம் மறுபடியும் பிறப்பதற்கு முன் நாமனைவரும் சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தோம். நாம் இயேசுவை விசுவாசித்திருந்தாலும் பாவங்களுடனேயே இருந்தோம். இந்த நற்செய்தியைக் கேட்டிராவிட்டால் நாம் இந்த உலகிலேயே அழிந்து போயிருப்போம்.
நாம் அவர்கள் நரகத்திற்கு செல்லவும், அழியவும் விட்டுவிடமுடியுமா? இல்லை. நம்மால் முடியாது. நாம் அவர்களை நரகம் செல்லும்படி விட்டுவிடமுடியாது. ஏனெனில் நமக்கு கர்த்தரின் நற்செய்தியும் இரட்சிப்பும் தெரியும். யார் நரகம் செல்வர் என்றும் நமக்குத் தெரியும். ஆகவே நாம் அவர்களுக்காக கவலைப்பட்டு, ஜெபித்து நற்செய்தியைப் பிரசங்கிக்கிறோம். நாம் இத்தனைப் பணத்தைச் சேகரித்து, இந்த ஊழியத்தில் இவ்வளவு பணத்தைச் செலவு செய்வதற்கான காரணம் கீழ்க்கண்டவாறு: ஒரு ஆத்துமாவை இரட்சிப்பது உலகிலுள்ள அனைத்தையும் பெறுவதற்கு மேலானது.
சட்டத்தினரால் இகழப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும் நாம் நற்செய்தியை பொறுமையுடனும், விடாமலும் பிரசங்கிப்பதற்குமான காரணம், கர்த்தரின் கோபத்தினால் தீர்க்கப்படப்போகும் ஆத்துமாக்களை இரட்சிக்கவே.
நீங்கள் நினைக்கலாம், ‘நீங்கள் உண்மையான நற்செய்தியைக் குறித்து வாசிக்கும்படியான புத்தகங்களை எழுதி தாள்களைப் போல் உலகம் முழுவதும் தூவியிருக்கலாமே.` அது உண்மை நற்செய்தியை பிரசங்கிப்பதற்கான நல்ல வழியாக இருந்திருந்தால் நாம் அதனைச் செய்திருப்போம். ஆயினும் அது சரிவர வேலை செய்யாததால், நாம் எல்லா வித முயற்சிகளையும் செய்வதுடன் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.
நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்களாகிய நாம் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் எதனையும் சம்பாதிக்க முயலவில்லை. எல்லாப் பாவிகளும் நிச்சயமாக நரகத்திற்கு போவார்கள் என்று அவர்களுக்கு தெரியமாகையால், அந்த ஆத்துமாக்களை இரட்சிக்க, அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றனர். ஆயினும் அநேக சட்டத்தினர் கிறிஸதவத்திற்கான தம் அர்ப்பணத்தைக் குறித்து பெருமைப்படுவதுடன், தம் உலக ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளுகின்றனர். சட்டத்தினருக்கு நாம் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பத்துக் கட்டளைகளில், கர்த்தர் ஏன் நம்மை ஔய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கும்படி கூறினார் என்றும், ஔய்வு நாளை அனுசரிக்காதவர்களை ஏன் கல்லெறிந்து கொன்றார்கள் என்றும் நாமறிந்துகொள்ளவேண்டும். இயேசு நம் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்ற நற்செய்தியை ஔய்வுநாள் குறிக்கிறது. இயேசு நம் அனைத்துப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்பதை நம் மனதில் கொள்ளவேண்டும், அதில் தேவன் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்ற குறிப்பும் உள்ளடங்கியுள்ளது.
இந்த பிரசங்கத்தின் மூலம் சட்டத்தினரை நான் கணக்கு தீர்த்ததில் திருப்தியடைந்தது போல் தோன்றுகிறது. ஆனால் நாம் அவர்களை மன்னித்து, அவர்களுக்கு அகன்ற மனதுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். நாம் வாயை மூடிக்கொண்டிருந்தால் அவர்கள் நரகம் செல்லவேண்டியவர்கள். சட்டத்தினர் நம்மை பணத்தால் இகழுவதையோ அல்லது மனித சிந்தனைகளைக் காட்டி நம்மை தூண்டச் செய்வதையோ நற்செய்தியைப் பிரசங்கிக்கும் நம்மால் அனுமதிக்க முடியாது.
நற்செய்தியை நம் குடும்பத்தினருக்கும் மற்ற ஆத்துமாக்களுக்கும் நாம் பிரசங்கிக்க வேண்டும்
நம் நற்செய்தியை மற்றவர்கள் உட்பட அனைவருக்கும் பிரசங்கிக்கவேண்டும். எல்லா ஆத்துமாக்களும் நம் சொந்தக்குடும்ப உறுப்பினர்களைப் போன்றே விலையேறப்பட்டவை என்று நாமறிந்திருக்கிறோம். மற்ற மக்களையும் நாம் விலையேறப்பட்டவர்களாக கருதவேண்டும். ஏனெனில் கர்த்தருக்கு நாம் ஒன்றே.
ஆத்துமாக்கள் நரகத்திற்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருப்பதால், நாம் பிரசங்கிக்கும் போது, இரட்சிப்பின் உண்மையைக் குறித்து பேசுவதை தவிர்க்க முடியாது. அவர்கள் நரகம் செல்வதைத் தடுக்கவேண்டும். நாம் நம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நற்செய்தியை பிரசங்கிப்பதோடு தேவைப்பட்டால் அதனை நூல்களோடு பிரசங்கித்து, நமக்கு தேவைப்படுவதை வேண்டி ஜெபிக்கவேண்டும். நாம் அதனை வெவ்வேறு முறைகளில் பிரசங்கிக்கவேண்டும். ஒரு ஆத்துமா திரும்பிவரும்போது ஒரு விருந்தை தயார் செய்கிறோம். நற்செய்தியை பிரசங்கிக்க எழுப்புதல் கூட்டங்களை நடத்துவதால் ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறோம். நாம் எப்படியோ நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்தாலும் சில சமயங்களில் மக்கள் உலகிற்கு திரும்பிச் சென்றுவிடுகின்றனர். அப்போழுது நாம் மிகவும் துயரப்படுகிறோம். ஆயினும் முடிவில், எந்த ஏமாற்ற உணர்வும் இன்றி நற்செய்தியை மீண்டும் பிரசங்கிக்கிறோம்.
இன்று நீங்கள் ஒன்றைத் தெரிந்துக் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். நம்மைச் சுற்றிலும் அநேக சட்டத்தின்படி வாழும் கிறிஸ்தவர்கள் உள்ளனர், அவர்களுக்கு நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அவர்கள் சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக காட்டிக்கொள்கின்றனர், அவர்களால் ஒவ்வொரு நாளும் பாவம் செய்வதை தவிர்க்க இயலாவிட்டாலும், தினமும் மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம், தம் அன்றாடப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பை பெற முடியுமென எண்ணுகிறார்கள்.
இயேசு ஏற்கெனவே நம் எல்லாப் பாவங்களையும் துடைத்துவிட்டார் என்று கூறும் நற்செய்தியை அவர்கள் புறம்பேத்தள்ளினர். அவர்களுக்கு உண்மையான பாவக்கிரயத்தைப் பற்றி தெரியாததால், தம் அன்றாடப் பாவங்களைத் தவிர்த்து, தம் மூலப்பாவத்தை மட்டும் எடுத்துச் சென்றதாக அவர்கள் எண்ணுகின்றனர். இரட்சிப்பின் உண்மையைக் குறித்து அறியாதவர்கள், சட்டப்படி வாழ்பவர்கள் என்றழைக்கப் படுகின்றனர். நற்செய்தியாகிய கர்த்தரின் நீதியைக் குறித்து அவர்களுக்கு பிரசங்கிப்பதன் மூலம் அவர்களை நாம் இரட்சிக்கவேண்டும்.