(ரோமர் 2:17-29)
“நீ யூதனென்று பெயர் பெற்று, நியாயப் பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்தது, தேவனைக் குறித்து மேன்மை பாராட்டி, நியாயப் பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே. நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தக்காரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும், பேதைகலுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையையும், சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே? இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக் கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா? விபசாரம் செய்யக் கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மை பாரட்டுகிற நீ நியாயபிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம் பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே. நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்: நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே. மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப் பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்த சேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப் படுமல்லவா? சுபாவத்தின் படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா? ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின் படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.”
நாம் இருதயத்தினால் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்
“இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” இருதயத்தில் விசுவாசிக்கும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம். “உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின் படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.” (ரோமர் 2:29). நம்மிருதயங்களில் பாவ மன்னிப்பு இருக்கவேண்டும். நம்மிருதயங்களில் பாவமன்னிப்பு இல்லாவிட்டால், அதற்கு பெருமானமில்லை. மனிதன் ‘உள்ளே ஒருவனும் வெளியே ஒருவனும்` ஆக உள்ளான். ஒவ்வொருவரும் பாவமன்னிப்பை உள்ளரங்கமாகப் பெறவேண்டும்.
அப்போஸ்தலனாகிய பவுல் “இருதயத்தினல் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” என்று யூதர்களிடம் கூறினான். அப்படியானால் யூதர்கள் எதனை விருத்தசேதனம் செய்தார்கள்? அவர்கள் மாமிசத்தின் ஒரு பகுதியை விருத்தசேதனம் செய்தார்கள். ஆயினும், அப்போஸ்தலனாகிய பவுல் “இருதயத்தினால் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” என்று கூறுகிறான். யூதர்கள் வெளியரங்கமாக விருத்தசேதனம் செய்தனர், ஆனால் பவுலோ இருதயத்தின் விருத்தசேதனமே விருத்தசேதனமாகும் என்று கூறுகிறான். நாம் கர்த்தரின் பிள்ளைகளாகும் போது அவர் நம்மிருதயங்களில் பேசுவார்.
பவுல் வெளியரங்கமான விருத்தசேதனத்தைக் குறித்து பேசுவதில்லை. ஆனால் நம் இருதயத்திற்கான விருத்தசேதனத்தைப் பற்றியும் பாவமன்னிப்பைப் பற்றியுமே பேசுகிறான். அவன் “சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன?” (ரோமர் 3:3) என்று கூறும்போது “சிலர் இருதயத்தில் விசுவாசிக்காவிட்டால்” என்று பொருள்படக் கூறினான். அவன் வெளிப்படையாக பேசாமல் “இருதயத்தினால் விசுவாசிக்கவேண்டுமென” கூறினான். அப்போஸ்தலனாகிய பவுல் என்ன கூறினான் என்றும், பாவமன்னிப்பு என்பது என்னவென்றும் நாம் அறிந்தவர்களாயிருக்கவேண்டும். கர்த்தரின் வார்த்தையின் மூலம் நம்மிருதயத்தில் பாவமன்னிப்பை பெறுவது எப்படி என்றும் கற்றறிய வேண்டும்.
“சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன?” என்பது “மாமிசத்தின்படி ஆபிரகாமின் சந்ததியினராலும், யூதர்கள் இயேசுகிறிஸ்துவை தம் இரட்சகராக விசுவாசிக்காவிட்டால் என்ன?” என்று பொருள்படும். அவர்களுடைய விசுவாசம் கர்த்தரின் மீதுள்ள நம்பிக்கையை செயலற்றதாக்குகிறதா? ஆபிரகாமின் சந்ததியினர் செய்த பாவங்கள் உட்பட எல்லாப் பாவங்களையும் கர்த்தர் துடைத்துப்போட்டார் என்பது ஒன்றுமில்லாததாகிவிடுமா? இல்லவே இல்லை. உலகின் பாவங்களை தம் ஞானஸ்நானத்தினாலும் சிலுவை மரணத்தினாலும் எடுத்துபோட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று, மாமிசத்தின்படி ஆபிரகாமின் சந்ததியினரான யூதர்கள் விசுவாசித்தால், அவர்கள் இரட்சிக்கப்படமுடியும் என்று பவுல் கூறுகிறான். இயேசுகிறிஸ்துவின் மூலம் வரும் இரட்சிப்பும் கர்த்தரின் கிருபையும் ஒன்றுமில்லாததாகாது என்றும் அவன் கூறுகிறான்.
ரோமர் 3:3-4 கூறுகிறது, “சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன? அவர்களுடைய விசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.” தேவன் தன்னுடைய வாக்குத்தத்தத்தை தாமே நிறைவேற்றி விசுவாசிகளை பரிசுத்தப்படுத்தியதுடன், அவர் தம் வார்த்தைகளினாலும் உறுதியளித்தார். தம் நீதியைக் காட்டி அவர் தீர்க்கப்பட்டபோது, தான் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றிய அவரின் வார்த்தை மூலமாக இயேசுவை விசுவாசிப்போரை, சரியெனக் காட்ட கர்த்தர் விரும்புகிறார். நம் இருதயங்களில் பாவமன்னிப்பு பெற்ற நாமும் கூட, அவரின் வர்த்தைகளால் தீர்க்கப்படவும், நாம் தீர்க்கப்படும்போது அவர் வார்த்தைகளினால் அதை மேற்கொள்ளவும் விரும்புகிறோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உள் மற்றும் வெளித்தன்மையைக் குறித்து பேசுகிறான்
பவுல் தன்னுடைய “உள் மற்றும் வெளித்தன்மையைக்” குறித்து பேசுகிறான். நம்மிடம் கூட உள்தன்மையும் வெளித்தன்மையும் இருக்கிறது அது மாமிசமும் ஆவியுமாகும். நாமும் அவனைப் போன்றவர்களே. இப்பொழுது பவுல் அதனைக் குறித்து கூறுகிறான்.
ரோமர் 3:5 கூறுகிறது “நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்?” அவனுடைய வெளித்தன்மை சுத்தமானது என்று பவுல் பொருள் கொள்ளவில்லை. அவன் மரிக்கும்வரை அவன் சரீரம் அழுக்கு நிறைந்ததும் பாவம் செய்வதுமாகவே இருக்கும். இது உலகின் அனைத்து மக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆயினும், கர்த்தர் இம்மக்களை இரட்சித்திருந்தால் அது அவருடைய நீதியை விளங்கப்பண்ணாதா? மனிதர்களுடைய வெளித்தன்மை சரியில்லாததாக இருந்தாலும், அவர்களை இரட்சித்தால் கர்த்தர் நீதியில்லாதவரா? ஆகவே, பவுல் கூறினான், “நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக் கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?” (ரோமர் 3:5-6) நம்முடைய வெளித்தன்மை சுத்தமாக இருப்பதால் நாம் இரட்சிக்கப்படவில்லை என்று பவுல் விளக்குகிறான்.
நம்மிடம் வெளித்தன்மையும் உள்தன்மையும் இருக்கிறது. ஆயினும் பவுல் இருதயத்தின் உண்மை நிலையைக் குறித்து கூறுகிறான், “சிலர் விசுவாசிக்காவிட்டால் என்ன? அவர்களுடைய அவிவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் செய்யுமா? இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” பாவம் செய்வதும் சரியில்லாததுமான நம் வெளித்தன்மையின் அடிப்படையில் நம் நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு நாள் நீதிமானாகவும் மறுநாள் பாவியாகவும் இருந்தால், அது உண்மையான விசுவாசமில்லை.
வெளித்தன்மையான மனிதன் மரிக்கும் வரை பாவம் செய்கிறான்
அப்போஸ்தலனாகிய பவுல் தன் வெளித்தன்மையின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. தம் பாவங்கள் துடைக்கப்பட்டவர்களிடம் கூட உள்தன்மையும் வெளித்தன்மையும் இருக்கிறது. அவர்கள் தம் வெளித்தன்மையைக் காணும்போது எப்படி உணருகிறார்கள்? ஏமாந்துபோவதை அவர்களால் தவிர்க்க முடியாது. நம்முடைய வெளித்தன்மையைப் பார்ப்போம். சில சமயம் நாம் நல்லவர்கள், ஆனால் சில நேரம் நாம் வெறுக்கத்தக்கவர்கள். ஆனால் நம் வெளித்தன்மை இயேசுகிறிஸ்துவினுடனே சிலுவையில் அறையப்பட்டது என்று வேதாகமம் கூறுகிறது. நம்முடைய வெளித்தன்மை மரித்தது, இயேசு நம் வெளித்தன்மையின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்தார்.
இரட்சிக்கப்பட்டவர்களாகிய நாம் நம்முடைய வெளித்தன்மையைப் பார்க்கும்போது அடிக்கடி ஏமாற்றத்திற்குள்ளாகிறோம். நம்முடைய வெளித்தன்மை சிறப்பாக பணியாற்றும் போது நம்பிக்கையுடனிருக்கிறோம், ஆனால் அவை நம் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றாத போது ஏமாந்துபோகிறோம். நம்முடைய வெளித்தன்மையால் நாம் ஏமாந்துபோகும்போது, நம் விசுவாசம் உடைந்துபோயிற்று என்று யோசிக்கத் தலைப்படுகிறோம். ஆயினும் இது சரியல்ல. நம்முடைய வெளித்தன்மை ஏற்கெனவே இயேசுவுடன் சிலுவையில் மரித்தது. பாவமன்னிப்பு பெற்றவர்கள் கூட தம் சரீரத்தினால் தொடர்ந்து பாவம் செய்வர். அது பாவமில்லையா? ஆம் அது பாவமே, ஆனால் அது செத்த பாவம். தேவனுடன் அப்பாவங்கள் சிலுவைக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அவை மரித்துப் போயின. சரீரம் செய்யும் பாவங்கள் அத்தனை மோசமான பிரச்சினையல்ல, ஆயினும் நம் இருதயங்கள் கர்த்தருக்கு முன் சரியாக இல்லாததே மிகப்பெரிய பிரச்சினை.
இதயத்தினால் நாம் கர்த்தரை விசுவாசிக்கவேண்டும்
பாவமன்னிப்பை பெற்றபிறகு நீதிமானுக்கு அநேக மீறுதல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே, ஒவ்வொரு நொடியும் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாத, வெளியரங்கமான மனிதனின் அடிப்படையில் இரட்சிப்பை வைத்தோமானால், கர்த்தரின் இரட்சிப்பு குறைவற்றதாகிவிடும். நம் மாமிசத்தின் செய்கைகளின் அடிப்படையில் நாம் நம்பிக்கை வைத்தோமானால், அது ஆபிரகாம் கொண்டிருந்த, கர்த்தரின் மீதிருந்த நம்பிக்கையிலிருந்து நம் நம்பிக்கையை விலக்கிவிடும்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” நம்முடைய வெளிமனிதர்களின் செய்கைகளின் படியில்லாமல், இருதயத்தில் விசுவாசித்தபடியால் நாம் பரிசுத்தமாக்கப்பட்டு நீதிமானானோம். நம்முடைய வெளிமனிதர்கள் கர்த்தர் கூறியபடி நடக்கிறார்களா இல்லையா என்பதை பரிசுத்தமாதல் சார்ந்திருப்பதில்லை. இதனைப் புரிந்துக் கொள்கிறீர்களா? பிரச்சினை என்னவெனில் நம்மிடம் வெளித்தன்மையும் உள்தன்மையும் இருப்பதுடன் அவை ஒன்றுடன் ஒன்றாகும். ஆகவே, சில சமயங்களில் வெளி மனிதனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தலைப்படுவோம். நம்முடைய வெளித்தன்மைகள் நன்கு பணியாற்றும்போது உறுதியுடனிருப்போம், அவை அப்படிச் செய்யவில்லையெனில் ஏமாற்றமடைவோம். இது சரியான விசுவாசமில்லை என்று பவுல் கூறினான்.
“இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” எது சரியான உண்மை? எப்படி நாமறிந்து இருதயத்தினால் விசுவாசிப்பது? மத்தேயு 16 இல் இயேசு பேதுருவிடம் கேட்டார், “நான் யார் என்று நீ கூறுகிறாய்?” அப்பொழுது பேதுரு தன் விசுவாசத்தை அறிக்கைச் செய்தான், “நீரே கிறிஸ்து, உயிருள்ள தேவனின் குமாரன்” என்றான். பேதுரு இருதயத்தினால் இப்படி விசுவாசித்தான். இயேசு கூறினார், “சீமோன் பேதுருவே உனக்கு ஆசீர்வாதம் உண்டாகட்டும். உன் மாமிசமும் இரத்தமும் இதனை உனக்கு வெளிப்படுத்தாமல், பரலோகத்திலிருக்கிற என் பிதா இதனை வெளிப்படுத்தினார்.” பேதுருவின் விசுவாசம் சரியானது என்று இயேசு கூறினார்.
ஆபிரகாமிற்கோ மகன் இருக்கவில்லை. கர்த்தர் அவனைத் தம் வார்த்தைகளினால் வழி நடத்தி அநேக நாடுகளுக்கு தகப்பனாயிருக்கப் போகும் ஒரு மகனை அவனுக்கு கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். கர்த்தர் அவனுக்கு கர்த்தராகவும், அவனுக்கு பின் வரும் அவன் சந்ததியாருக்கும், கர்த்தராக இருப்பார் என்றும் அவர் கூறினார். கர்த்தருக்கும் ஆபிரகாமிற்கும் உள்ள உடன்படிக்கையின் அடையாளமாக அவன் குடும்பத்தினரும் அவன் சந்ததியாரும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமென கர்த்தர் ஆபிரகாமிற்கு கூறினார். “மாமிசத்தின் ஒரு பகுதியை வெட்டிய தழும்பு நான் உங்கள் கர்த்தர் என்பதற்கான உடன்படிக்கை” என்று கர்த்தர் கூறினார், ஆபிரகாம் இந்த உடன்படிக்கையை இதயப்பூர்வமாக விசுவாசித்தான். கர்த்தர் தன் கர்த்தராகவும் தன் இருதயத்தை அவர் ஆசீர்வதிப்பார் என்றும் விசுவாசித்தான். அவனுக்கு பின் வரும் சந்ததியினருக்கு கூட அவர் கர்த்தராக இருப்பார் என்றும் அவன் விசுவாசித்தான். அவனும் கூட கர்த்தரை விசுவாசித்தான்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இருதயப்பூர்வமாக நாம் விசுவாசித்ததால் நீதிமான்களாக்கப் பட்டோம்
கர்த்தர் நம் கர்த்தர், அவரே இரட்சகர் என்று இதயப்பூர்வமாக விசுவாசித்தமையால் நாம் நீதிமான்களாக்கப் பட்டோம். நம் இருதயங்களினால் விசுவாசித்தமையால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நாம் வேறெதினாலும் இரட்சிக்கப்படவில்லை. கர்த்தர் நம் கர்த்தர் என்றும், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மூலாமாக அவர் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்தார் என்று நம் இருதயத்தினால் விசுவாசித்தமையால் நாம் நீதிமான்களானோம். இருதயங்களினால் விசுவாசிப்பது, நம்மை இரட்சிக்கும். ஆகவே வேதாகமம் கூறுகிறது. “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்” (ரோமர் 10:10).
நாம் இந்த நேரத்தில் தெளிவாக்க வேண்டியது என்னவெனில், நம் மாமிசத்தின் செய்கைகளினால் அல்ல, நம் இருதயத்தில் விசுவாசிப்பதே நம்மை நீதிமானாக்கிற்று. “நான் உங்கள் பாவங்களையெல்லாம் துடைத்தேன், ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் பாவம் செய்வதை தவிர்த்தாலே என் பிள்ளைகளாவீர்கள். அப்படிச் செய்யத்தவறினால் உங்களால் என் பிள்ளைகளாக முடியாது” என்று கூறி, இயேசு நம் வெளித்தன்மைக்கு ஒர் நிபந்தனையை விதித்திருந்தால் நாம் நீதிமான்களாகியிருக்க மாட்டோம்.
நம் இருதயத்தினால் விசுவாசித்ததினாலே நாம் நீதிமான்களானோம். நம்முடைய வெளி மனிதனிற்கு கர்த்தர் நிபந்தனைகளை விதித்திருந்தால் நாம் நீதிமான்களாகியிருப்போமா? இயேசு யோர்தானில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமும், உன்னிடத்தில் இருந்து, சிலுவையில் அறையப்பட்டு தீர்க்கப்பட்டதினால், உன் பாவங்களை எடுத்துக்கொண்டு கர்த்தர் உன்னை இரட்சித்தார் என்பதை விசுவாசிக்கிறாயா? இதனை எப்படி விசுவாசிக்கிறாய்? அதனை உன் இருதயத்தினால் விசுவாசிப்பதில்லையா? “நான் உன் சிறிய தவறுகளை மன்னிப்பேன் ஆனால் உன் பெரிய தவறுகளை மன்னிக்கமாட்டேன். இந்த நிபந்தனையை மீறினால் உன் விடுதலையை நான் ரத்து செய்வேன்” என்று கர்த்தர் கூறியிருந்தால் உன்னால் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருக்க முடியுமா?
வெளி மனிதனை உள் மனதிலிருந்து நாம் பிரிக்கவேண்டும்
வெளி மனிதனாகிய நம் மாமிசம் எப்போதும் பலவீனமாக இருப்பதால், தானாக அதனால் கர்த்தரின் நீதியைப் பெறமுடியாது. இருதயத்தினால் விசுவாசிப்பவர்களை இரட்சிப்பதாக அவர் உறுதி கூறியிருந்ததால் கர்த்தருக்கு முன் நாம் இருதயத்தினால் விசுவாசித்தன் மூலம் நீதிமான்களாக்கப்பட்டோம். நாம் கர்த்தர் செய்தவற்றை ஒப்புக்கொண்டு, அதனால் பாவங்களைத் துடைத்தார் என்பதை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதை கர்த்தர் பார்க்கும்போது கர்த்தர் நம்மை நீதிமான்களாக்குவார். அது கர்த்தரின் உடன்படிக்கையாகும், அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி நம்மை இரட்சித்தார்.
அவர் நம்மிருதயத்தில் விசுவாசத்தைப் பார்க்கும்போது நாம் அவரின் மக்களாகிறோம் என்று கர்த்தர் கூறுகிறார். வெளிமனிதனை உள் மனிதனிலிருந்து நாம் பிரிக்கவேண்டும். வெளி மாமிசத்தின் செய்கைகளை இரட்சிப்பின் அடையாளமாக நாம் வைத்தோமானால் இவ்வுலகிலுள்ள யாரும் பாவமன்னிப்பை பெறமுடியாது. “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” இயேசுகிறிஸ்துவை நம்மிருதயங்களில் விசுவாசிப்பதால் இரட்சிக்கப்பட்டோம். இதனை புரிந்து கொள்கிறீர்களா? “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்” (ரோமர் 10:10). அப்போஸ்தலனாகிய பவுல் வெளி மனிதனை உள்மனிதனிலிருந்து தெளிவாக பிரிக்கிறான்.
வெளிமனிதன் நாயின் மலத்தை விட மோசமானவன். அதற்கு பெறுமதி எதுவுமில்லை. ஆபிரகாமை நாம் உதாரணமாக பயன்படுத்தவேண்டியதில்லை. நீங்கள் உங்களையே பாருங்கள். எந்த பெருமதியுமில்லாத உங்கள் மாமிசத்தைப் பாருங்கள். சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றுக்கொள்ளவும் செல்வாக்குடன் வாழவும் மாமிசம் தந்திரமாக முயல்கிறது. மாமிசம் அதன் விருப்பத்தை செய்வதைத் தவிர வேறு ஏதாவது செய்கிறதா? அது நினைத்து செயல்படுவதற்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கவேண்டுமானால், மாமிசமானது ஒரு நாளில் பன்னிரண்டு முறைக்கு மேல் தண்டனைப் பெறும், மாமிசம் கர்த்தருக்கு எதிரானது.
அதிர்ஷடவசமாக, கர்த்தர் நம் வெளிமனிதனைப் பொருட்படுத்தவில்லை, அவர் நம் உள் மனிதனை மட்டுமே நேசிக்கிறார். இயேசுவே நம் இரட்சகர் என்று நம்மிருதயங்களில் உண்மையாகவே விசுவாசிக்கும் போது அதனைக் கர்த்தர் கண்டு நம்மை இரட்சிக்கிறார். நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் நம்மை இரட்சித்ததாக கூறுகிறார்.
நம்முடைய சொந்த சிந்தனைகள் மூலமாக நாம் இரட்சிப்படைய முடியாது
நம்முடைய சொந்த யோசனைகளை நோக்கிப்பார்ப்போம். நம்முடைய யோசனைகளினால் விசுவாசித்தால் மட்டும் போதும் என்று நாம் எண்ணுகிறோம். ‘கர்த்தர் என்னை இரட்சித்தமையால் நான் இரட்சிக்கப்பட்டேன்` என்றெண்ணினது போல், மாமிசத்தின் யோசனைகளின் மூலம் நாம் விசுவாசிக்க முடியும். ஆயினும், நாம் நம் சிந்தனைகளினால் இரட்சிக்கப்படமுடியாது. மனித மனம் எப்பொழுதும் மாறுவதுடன் எப்பொழுதும் தீமையை செய்கிறது. இது சரியா? மனித மனம் அதன் இச்சைக்கேற்றபடி இதனையும் அதனையும் செய்கிறது.
ஒருவன்/ஒருத்தி விசுவாசத்தை அவனின்/அவளின் சிந்தனைக்கு விடுகிறான் என்று கொள்வோம். அவனும்/அவளும் தம் இரட்சிப்பைக் குறித்து உறுதியுடன் இருக்கமுடியும், அவனின்/அவளின் தற்போதைய சிந்தனையானது அவனின்/அவளின் முந்தைய சிந்தையாகிய, ‘இயேசு நம் எல்லாப் பாவங்களையும் யோர்தான் நதியில் சுமந்து தீர்த்தார்,` என்பதுடம் ஒத்துப்போகலாம். ஆயினும் மாமிசத்தின் சிந்தனைகள் நிலையாக இருக்காததாகையால் அவனோ/அவளோ, தம் சிந்தனைகளில் இரட்சிப்பைக் குறித்து சிறிது சந்தேகம் வந்தாலும், அவனால்/அவளால் தம் இரட்சிப்பைக் குறித்து உறுதியாக இருக்க முடியாது. மாமிச சிந்தனையினால் உருவான, தவறாக கட்டப்பட்ட விசுவாசமானது சந்தேகத்தினால் தாக்கப்படும்போது கீழே விழுந்துவிடுகிறது.
நம்முடைய சொந்த சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்த விசுவாசத்தில் சார்ந்திருப்போமானால், நம்மால் அவரையும் சத்தியத்தையும் உண்மையாக விசுவாசிக்க முடியாது. அத்தகைய விசுவாசமானது மணலில் கட்டப்பட்ட வீட்டைப் போன்றது, “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது” (மத்தேயு 7:27)
ஆகவே, தன்னுடைய சிந்தனைகளினால் விசுவாசிப்பவன் கர்த்தரின் வார்த்தைகளின் அடிப்படையில் அமைந்த விசுவாசத்திலிருந்து அதிக தொலைவிலிருக்கிறான். கர்த்தர் கூறினார், “நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும்” (ரோமர் 3:4) நம்முடைய இரட்சிப்பு அவருடைய வார்த்தையின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கவேண்டும். அந்த வார்த்தை மாமிசமாகி நம்முடன் சஞ்சரித்தது, கர்த்தரே அந்த வார்த்தையானவர். மனித சாயலிலேயே அந்த வார்த்தை பூமிக்கு வந்தது. இயேசு நம்மை இரட்சித்ததுடன் அவரின் 33 வருட வாழ்வுக்கு பிறகு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார், மேலும் அவர் தம்முடைய ஊழியர்களுக்கு முன்பே கூறிய பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலான அவரின் உறுதிமொழிகளை எழுதும்படி அப்போஸ்தலர்களை வழி நடத்தவும் செய்தார். கர்த்தர் தாம் கூறியவற்றையும், செய்தவற்றையும் வேதாகமத்தில் எழுதினார். கர்த்தர் வார்த்தைகளில் இருப்பதோடு அதில் தோன்றவும் செய்கிறார், அவர் வார்த்தைகளினால் பேசுவதோடு, வார்த்தைகளினால் நம்மை இரட்சிக்கவும் செய்தார்.
“சில சமயங்களில் இரட்சிக்கப்பட்டது போலிருக்கிறது, ஆனால் சில சமயங்களில் தேவனின் இரட்சிப்பை விசுவாசிக்க முடியவில்லை” என்று நினைத்து கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்காமலிருக்கும் அதே வேளை, நம் சிந்தனைகளினால் நிறைவான பாவமன்னிப்பை பெறமுடியாது. சிந்தனைகளால் நம் இரட்சிப்படைய முடியாது ஏனெனில் நம் சிந்தனைகள் மாறிக்கொண்டே இருப்பதுடன் அது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை.
ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம் என்று கூறினான். மேலும் அவருடைய நீதியை நம் இருதயத்தால் விசுவாசிக்கிறோம். நம்முடைய இருதயம் அவர் வார்த்தையை விசுவாசிக்கும்போது, கர்த்தர் இதனை பழைய எற்பாட்டில் வாக்குத்தத்தம் செய்தார் என்றும், அதனை அவர் நிறைவேற்றினார் என்றும் இருதயம் சாட்சி கூறுகிறது. அவருடைய வார்த்தையினால் அவர் நம்மை புதிய ஏற்பாட்டில் இப்படியாக இரட்சித்தார். அவருடைய வார்த்தைகளை நம்மிருதயங்களினால் விசுவாசிப்பதால், நாம் இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் பிள்ளைகளானோம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம் இருதயத்தினால் விசுவாசிப்பதால் நாம் நமது பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம்
நாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டோம், ஏனெனில் நம்மிருதயத்தால் கர்த்தரை ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் நம் மனித மனதின் சிந்தனைகளால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். வெளி மனிதனின் செய்கைகளினாலோ சிந்தனைகளினாலோ அல்ல, நம் இருதயங்களின் விசுவாசத்தினாலேயே நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம். நம்முடைய இருதயங்களினால் அவர் வார்த்தையை விசுவாசித்ததால் நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம் என்பது தெளிவு. உங்கள் இருதயத்தினால் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டீர்களா? இயேசு உங்கள் இரட்சகர் என்று உங்கள் இருதயத்தினால் விசுவாசிக்கிறீர்களா? தேவ குமாரனை விசுவாசிப்பவன் எவனோ அவன் தனக்கு சாட்சியாகவும் இருக்கிறான். சொந்த அனுபவங்களின்றி, இயேசு உங்களை நிறைவாக இரட்சித்தார் என்ற சாட்சியின் வார்த்தை உங்களிடம் இருக்கிறதா? கர்த்தரின் வார்த்தை உங்களிருதயத்தில் இருக்கிறதா? உங்களுக்கு பாவமன்னிப்பை வழங்கிய வார்த்தை உங்களிடம் இருக்கிறதா? உண்மையாக விசுவாசிப்பது, விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுவதாகும்.
நம்மிருதயங்களினால் கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கும்போது, பாவமன்னிப்பை நாம் பெற்றுக்கொள்கிறோம். ஆயினும் நம் வெளிமனிதனைப் பார்க்கும்போது அடிக்கடி ஏமாற்றமடைகிறோம். அப்போது கர்த்தரிடமுள்ள விசுவாசத்திலிருந்து பின்வாங்க மனதுள்ளவர்களாயிருக்கிறோம். உண்மையை முழுவதும் புரிந்துக் கொள்ளாதவர்கள் மாயையில் இருக்கின்றனர். அநேக கிறிஸ்தவர்கள் தம் செய்கைகளினால் விசுவாசத்தின் அடையாளத்தை அமைக்கின்றனர். அது ஒரு பெரிய தவறு. நம்முடைய சொந்த யோசனைகளினால் நம் விசுவாசத்தை அளக்கக்கூடாது. நம்முடைய மாமிசம் பயனற்றதாகையால் நம் விசுவாசத்திற்கான அடிப்படையை மாமிசத்தின் மீது அமைக்க கூடாது. ஒருவன்/ஒருத்தி கர்த்தரின் வார்த்தைகளை இருதயத்தினால் விசுவாசிக்கும் போது ஒருவர் நீதிமானாக்கப்படுகிறார் என்று, பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் நமக்கு கூறுகின்றன. நாம் யோசனைகளாலோ செய்கைகளாலோ பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படவில்லை, ஆனால் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டோம். மாமிசத்தின் செய்கைகளால் நாம் இரட்சிக்கப்படமுடியாது. நாம் பாவம் செய்கிறோமோ அல்லது நற்காரியங்களைச் செய்கிறோமோ, அவற்றிற்கு கர்த்தர் மற்றும் அவரின் மகிமையுடன் எதுவும் செய்வதற்கில்லை.
ஆகவே, உண்மையான விசுவாசம் என்பது, கர்த்தரின் வார்த்தையின் இரட்சிப்பின் சத்தியத்தை இருதயத்தால் விசுவாசித்து, இரட்சிக்கப்படுவதாகும். நம்முடைய இருதயங்கள் தவறானவையாக இருக்கும்போது நம் விசுவாசங்களும் தவறானவைகளாயுள்ளன, நம்முடைய இருதயங்கள் சரியானவைகளாக இருக்கும்போது நம் விசுவாசங்களும் சரியானவைகளாக இருக்கின்றன. சரியான நடத்தை சரியான விசுவாசத்திலிருந்து வருகின்றது. தவறான நடத்தை இருதயம் பலவீனமாக இருப்பதினால் வரலாம். ஆனால் முக்கியமானது கர்த்தர் இருதயத்தை நோக்கிப்பார்க்கிறார் என்பதே. கர்த்தர் இருதயத்தை நோக்குவதுடன் அதனை ஆராயவும் செய்கிறார். நாம் உண்மையாகவே இருதயத்தினால் விசுவாசிக்கிறோமா இல்லையா என்று நோக்குகிறார். நீங்கள் புரிந்துகொண்டீர்களா? கர்த்தர் நம்மிருதயங்களை நோக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? கர்த்தர் நம்மிருதயங்களை நோக்கும் போது நம்மிருதயங்களினால் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறோமா என்று கர்த்தர் பார்க்கிறார். நீங்கள் இருதயத்தினால் விசுவாசிக்கிறீர்களா?
கர்த்தர் நம்மை உற்று நோக்கும்போது நாம் இருதயத்தினால் விசுவாசிக்கிறோமா இல்லையா என்று கவனித்துப்பார்க்கிறார். அவர் நம் இருதயங்களினுள் நோக்குகிறார். கர்த்தரின் பிரசன்னத்தில் நம்மிருதயங்களை நாம் சோதிக்கவேண்டும். இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம். நீங்கள் இருதயத்தினால் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தர் இருதயத்தை நோக்கிப் பார்க்கிறார். நாம் உண்மையாகவே நம்மிருதயங்களினால் விசுவாசிக்கிறோமா இல்லையா என்று அவர் பார்க்கிறார். நமக்கு உண்மையாகவே சத்தியத்தை தெரியுமா என்றும் நாம் அதனைக் கடைப்பிடிக்கிறோமா இல்லையா என்றும் அவர் பார்க்கிறார். நம்மிருதயங்களில் விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்றும், அவரை நாம் பின்பற்ற விரும்பி அவர் வார்த்தைகளை விசுவாசிக்கிறோமா இல்லையா என்றும் அவர் பார்க்கிறார்.
மறுபடியும் பிறந்த சரியான நொடிப்பொழுதுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் மத அமைப்பு இருக்கிறது
இயேசுகிறிஸ்து என்ன செய்தார் என்பதைக் குறித்த சரியான அறிவும் அதனை இருதயத்தால் விசுவாசிப்பதும் முக்கியமானதாகும். தம் ஆலயத்தில் உள்ள சகோதர சகோதரிகள் இரட்சிக்கப்பட்டார்களா இல்லையா என்று கூறும் மத அமைப்பு உள்ளது. அந்த மத அமைப்பில் உள்ள ஆத்துமாக்களுக்காக வருந்துகிறேன். அவர்கள் என்னைப் புரிந்துக் கொண்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்களுக்கு பிரசங்கிக்க அனுமதிக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் பாவங்கள் துடைக்கப்பட்டவனா? -ஆமேன்.- அதனை உங்கள் இருதயத்தினால் விசுவாசிக்கிறீர்களா?
நம்முடைய விசுவாசம் சரியானதல்ல என்று கூறும் சில மக்கள் இருக்கின்றனர். எழுதப்பட்டுள்ளதைப் போன்றே நாம் வார்த்தையை விசுவாசிக்காமல் அறிவியலால் நிருபிக்கப்பட்டவைகளை மட்டுமே விசுவாசிக்க வேண்டுமென அவர்கள் கூறுகின்றனர். அதுவே நிறைவான விசுவாசம், நிறைவான இரட்சிப்பு என்று அவர்கள் கூறுகின்றனர். மறுபடியும் பிறந்தவர்களுக்கு அவனின்/அவளின் மறுபடியும் பிறந்த நேரம் (மணி, திகதி, மாதம்) சரியாக தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஹூவாங் சகோதரர் அவர்களில் ஒருவரை சந்தித்தபோது, அந்த நபர் சகோதரர் ஹூவாங் எப்பொழுது மறுபடியும் பிறந்தார் என்று கேட்க, சகோதரர் ஹூவாங் தனக்கு மிகச்சரியான திகதியும் மணிநேரமும் தெயாதென்றும் ஆனால் கடந்த வருடத்தின் ஒரு சமயத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததினால் மறுபடியும் பிறந்ததாக கூறினார். அப்பொழுது அவர் ஹூவாங் சகோதரர் இரட்சிக்கப்படவில்லை என்று கூறினார்.
நாம் எப்போது மறுபடியும் பிறந்தோம் என்று பின்னோக்கி பார்த்தால் சரியான மணிநேரம் திகதி மற்றும் மாதத்தைக் கூறமுடியும் தான். அது A.M. அல்லது P.M. ஆ அல்லது காலையா, மத்தியானமா, பகல் சாப்பாட்டு நேரமா இரவு சாப்பாட்டு நேரமா என்று கூட கூறமுடியும். சரியான நேரத்தை நீங்கள் நினைவு கூறாதது ஒரு பொருட்டல்ல.
இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்
யோர்தான் நதியில் நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு, நம்முடைய இடத்திலிருந்து பாவங்களுக்கு தீர்க்கப்பட இயேசு சிலுவையிலறையப்பட்டார். நம்முடைய அக்கிரமங்களுக்காக நொறுக்கப்பட்டு மீறுதல்களுக்காய் நசுக்கப்பட்டார். நம்முடைய உள் மற்றும் வெளி மனிதனின் அனைத்துப் பாவங்களையும் சுமந்தார். சில மக்கள் வஞ்சகத்துடன், நாம் இரட்சிக்கப்படவில்லை என்று கூறினாலும் கூட, ஆவி மரித்தோரிலிருந்து எழுந்ததால், அவர் விரும்பும்படி தேவனை நாம் பின்பற்ற முடியும்.
வெளிமனிதனைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? பாவமன்னிப்பை நாம் பெற்ற பிறகு, மேலும் மேலும் தவறுகள் வெளிப்படுவதைப் போல் தோன்றுகிறது. நம்முடைய எல்லாத் தவறுகளும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை; அதிக குறைபாடுகள் வெளிப்படுத்தப்படும். ஆயினும், கர்த்தரே நம் கர்த்தர் என்றும், இயேசு யோர்தானில் தன் ஞானஸ்நானத்தினால் நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, சிலுவையில் அறையப்பட்டார் என்றும் விசுவாசிப்பதால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.
அறிவியலால் நிருபிக்கப்பட்டவைகளையே விசுவாசிக்க வேண்டும் என்பவர்களோடும், மறுபடியும் பிறந்த நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுடனும் நம்மை ஒப்பிட முடியாது. தெளிவாக, அவர்கள் இரட்சிக்கப்படவில்லை. நீதிமான்களாவதற்கு நாம் இருதயங்களினால் விசுவாசிக்கிறோம். இயேசுகிறிஸ்து இரட்சகர் என்று விசுவாசிக்கிறாயா? ஆமேன். விசுவாசம் அப்புள்ளியிலிருந்து தொடங்குகிறது, அந்நேரத்திலிருந்து தேவன் நம்மிருதயங்களை வழிநடத்துகிறார். நாம் தேவனின் நீதியின் பிள்ளைகளென்றும் நம்முடைய நம்பிக்கைகள் சரியானதென்றும் அவர் கூறுகிறார். அவர் நம் இருதயங்களை ஆசீர்வதித்ததுடன் அவரை நம் இருதயங்களினால் விசுவாசத்தில் பின்பற்றுவதையும் விரும்புகிறார். நம்மிருதயங்களின் விசுவாசத்தின் மூலம் அவருடன் நடக்கும்போது கர்த்தர் நம்மை வழி நடத்துவதுடன் ஆசீர்வதிக்கவும் செய்கிறார்.
“இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” நம்மிருதயங்களினால் விசுவாசித்ததால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நற்செய்தியை அவர்களின் இருதயங்களினால் விசுவாசித்தமையால் இரட்சிக்கப்பட்டதாக பூமியின் அநேக மக்கள் கூறுகின்றனர். ஆயினும் உண்மையில், அவர்கள் விசுவாசத்தில் தம் செய்கைகளைச் சேர்க்கிறார்கள். வெளி மனிதனின் செய்கைகள் அவர்களின் விசுவாசத்திற்கான முக்கிய நிபந்தனை என்று அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் இருதயத்தினால் விசுவாசிப்பதையும் தம் சொந்த நற்செயல்களையும் கலப்பதால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசம் அவர்களை இரட்சிப்பை நோக்கி வழி நடத்தமுடியாது என்று கூறுகின்றனர்.
அதன் பயனாக, வெளி மனிதன் எப்படி நல்லவற்றைச் செய்கிறான் என்பதிலும் எத்தனை முறை மனம் வருந்தி ஜெபிக்கிறார்கள் என்பதிலும் அவர்கள் குறிப்பாயிருக்கிறார்கள். அவர்கள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டதாக எண்ணினாலும் அவர்களுக்கும் இரட்சிப்பிற்கும் வெகுதூரம்.
கர்த்தர் இதயத்தைப் பார்க்கிறார்
நீதிமான்களாவதற்காக நாம் நம்மிருதயங்களில் விசுவாசிக்கிறோம். அது வெளி மாமிசத்திலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கும் நம் செய்கைகளுக்கும் எந்த தொடர்புமில்லை. இரட்சிப்பிற்கோ, நம் செய்கைகளுடன் எந்த தொடர்பும் இல்லை. உங்கள் எல்லாப் பாவங்களும் துடைக்கப்பட்டுவிட்டது என்று அறிந்த பிறகு புத்துணர்வுடன் உள்ளீர்களா? மகிழ்ச்சியுடன் தேவனுக்கு பணிசெய்ய விரும்புகிறீர்களா? நற்செய்தியை மகிழ்ச்சியுடன் பிரசங்கம் செய்வீர்களா? அவருடைய அழகிய பணியில் உங்களை ஈடுபடுத்துவீர்களா? நாம் நம்முடைய இருதயங்களினால் விசுவாசிக்கும் போது கர்த்தர் நம் நம்பிக்கையை அங்கீகரிப்பதால் இருதயம் நன்றியுணர்வுள்ளதாகவும் மகிழ்ச்சியடைகிறது. ஆகவே, கர்த்தருக்கு முன் இருதயம் மிகவும் முக்கியமானது.