• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 3-1] ரோமர் 3 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம்

2021.04.21 24
மக்களின் விசுவாசம் கர்த்தரின் மீதுள்ள விசுவாசத்தை ஒன்றுமில்லாததாக்காது என்று பவுல் கூறினான். 2 ஆம் அதிகாரத்திற்கு தொடர்ச்சியாக, இந்த அதிகாரத்திலும் யூதர்களுக்கு புறஜாதியாரை விட சிறப்பு எதுவுமில்லை என்று, அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறான். இந்த அதிகாரத்தில், பாவிகளை அவரின் நீதியைப் பெறச் செய்து, அவர்களை உண்மையாக வாழ வழிநடத்தும், கர்த்தரின் நீதியின் சட்டத்தைக் குறித்து பேசுவதற்குமுன், பவுல் சட்டத்தையும், கர்த்தரின் நீதியின் சட்டத்தையும் ஔப்பிடுகிறான். பாவங்களில் இருந்து இரட்சிப்பு நம் செய்கைகளினால் அல்லவென்றும் அது கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் வருகிறதென்றும் அவன் இந்த அதிகாரத்தில் அழுத்தமாக கூறுகிறான்.
யூதர்களும் மற்ற மக்களும் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காவிட்டாலும் கூட, அவர்களுடைய அவிவிசுவாசத்தால் அவருடைய நீதியை எதுவுமில்லாததாக்க முடியாது என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். கர்த்தரால் பொய் பேச முடியாது, அவர் நீதியின் மீதுள்ள விசுவாசம் மறையாது. யூதர்கள் அவரின் நீதியை விசுவாசிக்காததால், அதன் விளைவு ஒன்றுமில்லாததாகாது.
மக்கள் விசுவாசிக்காததால் பவுல் பிரசங்கித்த கர்த்தரின் நீதி ஒன்றுமில்லாததாகாது. பாவிகளுக்கு கர்த்தர் கொடுத்த இரட்சிப்பை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் கர்த்தரின் நீதியைப் பெறுவார்கள், இந்த நீதியானது மனிதர்களின் நல்லொழுக்கத்திற்கோ அல்லது சிந்தனைகளுக்கோ மேலான நிறைவுடையது.
கர்த்தரின் நீதியை விசுவாசிக்காது அவரைப் பொய்யராக்கியவர்களை பவுல் குறை கூறினான். அவரின் நீதியின் மூலமாக, மக்களை அவர்கள் பாவங்களிலிருந்து, முற்றிலும் இரட்சித்ததாக கர்த்தர் கூறினார். ஆனால் அவர்கள் இதனை விசுவாசிக்கவில்லை, ஆகவே, அவர் பொய்யராக்கப்பட்டார். அவர்களுடைய அவிவிசுவாசத்தினால் கர்த்தருடைய நீதி பாதிக்கப்படவில்லை.
 
 
கர்த்தரின் நீதி எப்படி வெளிப்பட்டது?
 
கர்த்தரின் நீதியை விசுவாசிக்காதவர்கள் அவர்களின் பாவங்களுக்காக தீர்க்கப்படுவர். அவர் கொடுக்கும் இரட்சிப்பினால் கர்த்தரின் நீதியை நாம் உறுதி செய்யலாம். அவருடைய நீதியை விசுவாசிப்பவர்கள் பாவமன்னிப்பு பெறுவதுடன் அழியாத வாழ்வையும் பெறுவார்கள். ஆகவே, கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தை நம்புவதால் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட முடியும்.
கர்த்தரின் நீதி தவறானதல்ல, அது உண்மையானது. கர்த்தருக்கு முன் ஒவ்வொருவரும் பொய்யர். ஆனால் கர்த்தர் தம் வாக்குத்தத்தத்திற்கேற்ப செய்கிறார், வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார். ஆகவே, கர்த்தரின் மீதுள்ள விசுவாசம் மனித பொய்களை மேற்கொண்டு வெற்றி பெறுகிறது. மனிதர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் தான் கூறியவற்றை மாற்றுவதில்லை, ஆனால் மனிதர்கள் தம் சூழ்நிலைகளுக்கேற்ப தம் நிலைகளை அடிக்கடி மாற்றுகிறார்கள். கர்த்தர் தாம் மனிதர்களுக்கு கூறியவற்றை எப்போதும் உண்மையாக கடைப்பிடிக்கிறார்.
ரோமர் 3:5 கூறுகிறது, “நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்?” மனிதர்களுடைய நீதி கர்த்தருடைய நீதியை வெளிப்படுத்துகிறது.
நம்முடைய பலவீனத்தில் கர்த்தரின் நீதி வெளிப்படுகிறது. இது ஏனெனில், எழுதப்பட்டுள்ளது போல், பாவிகளை அவர்களின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க இயேசுவே நீதியின்படிச் செய்தார். ஆகவே மனிதர்களின் குறைபாடுகளால் கர்த்தரின் நீதி இன்னும் அதிகமாக பிரகாசிக்கிறது. இந்த உண்மையை கர்த்தரின் நீதியினால் நிரம்பிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் காணலாம். இதற்கான காரணம் என்னவென்றால் எல்லா மக்களும் தாம் மரிக்கும்வரை பாவம் செய்வர், கர்த்தரின் அன்பு அந்தப் பாவங்களை விடவும் பெரிதானது. கர்த்தரின் அன்பு, நொறுங்கிப்போகக்கூடிய அனைத்து பாவிகளையும், அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கிறது.
நம் தேவன் உலகின் எல்லாப் பாவங்களையும் மேற்கொண்டு, பாவ மன்னிப்பின் மூலம் தன் இரட்சிப்பை நிறைவேற்றினார். ஒருவராலும் பாவ வாழ்க்கை வாழ முடியாது. மக்கள் நரகம் செல்லவேண்டியவர்களாதலால், கர்த்தர் அவர்களை தம் அன்பினால் பொறுப்பெடுத்துக் கொள்கிறார், இதுவே அவரின் நீதியாகும்.
மக்களாகிய நாம் பிறந்த நாளிலிருந்தே பொய்யர்களாயிருப்பதுடன், கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்காததால், அவரின் நீதியைப் புறக்கணித்தோம். கர்த்தரின் முன்பு மனித குலம் அழிவிலிருந்தது, ஏனெனில் அவரின் பார்வையில் அவர்களில் ஒருவனின் செய்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை அல்ல. அவர் நம்மீது இரக்கம் கொண்டதால், அவரின் அன்பினால் நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தார். எல்லோரும் பாவம் செய்து சாத்தானின் வஞ்சனையினால் கெட்டுப்போனதினாலே எல்லா மனிதர்களும் நரகம் செல்ல வேண்டியவர்களாய் இருந்தார்கள். ஆயினும், பிசாசின் கைகளிலிருந்தும், இருளின் வல்லமையிலிருந்தும், மக்களை இரட்சிக்க, கர்த்தர் தன் ஒரே பேறான குமாரனை அனுப்பினார்.
மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஒழுக்கமாக வாழ முயலலாம். ஆனால் அவன்/அவள் தன் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்வதை தவிர்க்க முடியாதென்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். ஆயினும், அந்நபரின் தீயத்தன்மை கர்த்தரின் நீதியையும் அன்பையும் மேலும் வெளிப்படுத்தும். உண்மையில் மனிதர்களிடம் நீதியில்லாதிருப்பதினால் அப்போஸ்தலனாகிய பவுலைப் போன்ற தூதர்கள் அவசியமானார்கள். கர்த்தரின் நீதியை அவனறிந்து அதனை விசுவாசித்தமையால், பரிசுத்த ஆவியானவரை தன்னில் வாசஞ்செய்யப் பெற்றான். அதனாலேயே அவனால் அவரின் நீதியைக் குறித்து பிரசங்கிக்க முடிந்தது.
 
 
பவுல் பிரசங்கித்த நற்செய்தியானது கர்த்தரின் நீதியின் அடிப்படையிலமைந்தது
 
பவுல் பிரசங்கித்த நற்செய்தியானது கர்த்தரின் நீதியின் அடிப்படையிலமைந்தது. கர்த்தர் பாவிகளை நேசித்து பாவங்களிலிருந்து இரட்சித்தமையால், பவுல் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. கர்த்தரின் விடுதலையளிக்கும் அன்பு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இருக்கிறது. ஆகவே, பாவமன்னிப்பானது கர்த்தரின் நீதியின் மீதுள்ள நம் விசுவாசத்திலிருக்கிறது. ஆயினும், மக்கள் தாம் இரட்சிக்கப்பட கர்த்தருக்கு முன் நல்விதமாக வாழவேண்டும் என்று பொதுவாக நினைப்பதே சிக்கல். மனிதர்கள் தம்மின் அடிப்படை உள்ளுணர்ச்சிகளின் அடிப்படையில் நல்லவராயிருக்க முடியாது; வெளியே நல்லவன் போல் இருப்பதே கர்த்தரின் நீதியை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக மாறுகிறது. கர்த்தர் கொடுத்த நற்செய்தியாகிய ஆவிக்குரிய விருத்தசேதனத்தை ஏற்றுக்கொள்வதற்கு நல்விதமாக வாழுதல் என்ற நிலையான சிந்தனையை மக்கள் உடைத்தெரியவேண்டும்.
பூமியிலுள்ள யாராலும் உண்மையாகவே நல்லவர்களாக இருக்கமுடியாது. அப்படியானால் பாவிகள் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்படைவது எப்படி? இரட்சிக்கப்பட நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்ற சிந்தனையை அவர்கள் தூர எறியவேண்டும். அநேக மக்கள் தம் சிந்தனைகளையும் அளவுகோல்களையும் விட்டுவிட மனதில்லாதவர்களாயுள்ளனர்; ஆகவே அவர்களின் பாவங்களிலிருந்து அவர்களால் முற்றிலும் இரட்சிப்படைய முடியாது. நற்செய்தியாகிய ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் மூலம் வெளிப்பட்ட கர்த்தரின் நீதியானது, கர்த்தரின் அன்பையும், அவரின் பெரிதான நீதியையும் விளக்குவதற்கு, நம் நீதியின்மை உதவியது என்று நம்மை அறியச் செய்தது. அந்தக் காரணத்தினாலேயே, கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் தம் சொந்த நீதியைக் குறித்தல்லாமல், அவரின் நீதியைக் குறித்து பெருமைப் பாராட்டுகிறார்கள். நீதிமான் கர்த்தரின் நீதியைக் குறித்து பெருமைப்பாராட்டுவதுடன், அவரின் நீதியையும் உயரமாக உயர்த்துகிறான், ஏனெனின் அது கர்த்தரிடம் இருந்து வந்தது.
தாம் நற்காரியங்களைச் செய்தால் பரலோகம் செல்வோம் என்றும் ஆனால் அவர்கள் இயேசுவை விசுவாசித்த பிறகு நல்விதமாக வாழவில்லை என்றால் கர்த்தரின் நீதியை அடையவே முடியாது என்றும், விசுவாசத்தின் சட்டத்தின்படி நடப்பவர்களுக்கு, சட்டத்தின் பாத்திரம் என்னவென்று அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினான், சட்டமானது கண்ணாடி போல் மனிதர்களின் பாவங்களை வெளிப்படுத்துகிறது. மக்களிடம் பெரிதான விசுவாசமிருக்கிறது, ஆனால் அது தவறானது என்று பவுல் பிரசங்கிக்கிறான். இது கர்த்தரின் நீதிக்கான பவுலின் போதனையும் வழிகாட்டுதலுமாகும்.
இயேசுவை விசுவாசித்த பிறகு தம்மால் நீதிமான்களாகவும் பாவமில்லாமலும் இருக்க முடியும் என்று நினைக்காத கள்ளப்போதகர்களைப் பின்பற்றுவோரிடம் பவுல் பேசுகிறான். கர்த்தரின் நீதியை விசுவாசித்து ஆக்கினையிலிருந்து தப்பும்படி பவுல் அவிவிசுவாசிகளுக்கு போதிக்கிறான். இயேசுவின் நீர் மற்றும் இரத்தத்தின் இரட்சிப்பை விசுவாசிக்காமலிருப்பவர்கள் தீர்ப்பிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று பவுல் கூறினான், ஏனெனில் அவர்கள் கர்த்தரை விசுவாசிக்காததால் அவர்களைத் தீர்ப்பது சரியானதே. பயங்கரமான தீர்ப்பிலிருந்து விடுதலையாக பாவிகள் கர்த்தரின் நீதிக்கு திரும்பி அவரின் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவன் கூறுகிறான்.
 
 
கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிப்பதால் அதிகப் பாவங்களைச் செய்யலாமா?
 
வசனம் 7 கூறுகிறது, “அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?” பாவமில்லாதவர்கள் என்று நாம் அழைக்கப்பட்டால் தாராளமாக நாம் பாவம் செய்யலாமா? பவுல் இதனை விளக்குகிறான். கர்த்தர் தன் நீதியினால் உன்னை இரட்சித்ததால் நீ தாராளமாக பொய்பேச அனுமதிக்கப்படுவாயா? அப்படி விசுவாசிப்பாயானால், கர்த்தரின் நீதியைக் குறித்து உனக்குத் தெரியாது எனவும், அவரின் நீதியை மாசுபடுத்துகிறாய் எனவும் அறிந்து கொள்.
இன்றும் கூட, அநேக மக்கள் தம் இருதயங்களால் கர்த்தரின் நீதியை மாசுபடுத்துகிறார்கள்; பழைய காலத்திலிருந்து அது வேறுபட்டதல்ல. பவுல் இந்த வேத வசனங்களை 2000 வருடங்களுக்கு முன் எழுதினான், அதற்கு முன்பே கூட, தம் சொந்த வழிகளில் சிந்திக்கும் மக்கள் இருந்தனர்.
இன்றும் கூட, மறுபடியும் பிறக்காத கிறிஸ்தவர்கள், ஒருவர் பாவமில்லாதவரானால், அவன்/அவள் தேவைக்கேற்ப பாவம் செய்யலாம் என்று தவறாக புரிந்துகொண்டுள்ளனர். மறுபடியும் பிறக்காதவர்கள் நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்த நீதிமான்களை தம் மாமிச சிந்தனைகளின்படி குற்றப் படுத்துகிறார்கள். மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களைக் குறித்து அவதூறு பேசுகிறார்கள். சாதாரண கிறிஸ்தவர்கள் தம் விசுவாசமில்லாத யோசனைகளினால் உண்மையாகவே மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களை மாசுபடுத்துகிறார்கள். உண்மையான விசுவாசத்தை மனித மாமிசத்தினால் புரிந்துகொள்ளமுடியாது. பாவமானது உன் வாழ்வு முழுவதும் செய்யப்படும் ஒன்று. நீதிமானும் நீதி இல்லாதவனும் பாவம் செய்கிறார்கள். ஆயினும் கர்த்தரின் நீதியை புறம்பேத் தள்ளுபவர்கள் பாவத்துடனும், அதனை விசுவாசிப்பவர்கள் பாவமற்றும் இருக்கிறார்கள்.
அவிசுவாசிகளுக்கு பவுல் கூறுகிறான். “சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்க மாட்டாது” (ரோமர் 3:3-4) மனிதர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காததால், அவர்களின் அவிசுவாசம் அவரின் நீதியை ஒன்றுமில்லாததாக்காது. ஒரு நபர் கர்த்தரின் நீதியை விசுவாசித்தால், அவன்/அவள் இரட்சிக்கப்படுவர். ஆயினும் ஒரு நபர் அப்படி விசுவாசிக்காவிட்டால், அவனால்/அவளால் அவரின் நீதியைப் பெறமுடியாது. அவ்வளவுதான். கர்த்தருடைய நீதியானது என்றென்றும் உறுதியுடன் நிற்கும். நரகத்திற்குச் செல்பவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசிக்காதமையால் அவர்களால் தம் பாவங்களை கழுவமுடியாது. விசுவாசிகளை மறுபடியும் பிறக்கச் செய்யும் கர்த்தரின் நீதியானது, மக்கள் அதனை விசுவாசிக்காததால், ஒன்றுமில்லாததாகாது.
 
 
கர்த்தரின் நீதியைப் பெறுவது மனித முயற்சிகளைப் பொருத்ததல்ல
 
நம் தேவனின் நீதியைப் பெறுவதில் நம் மனித முயற்சி எதுவும் செய்வதிற்கில்லை. கர்த்தரின் நீதியே, நம் பாவக்கிரயம் என்ற நம் விசுவாசத்துடன் தொடர்புடையது. உண்மையான நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் ஒரு நபர் கர்த்தரின் நீதியை விசுவாசத்தினால் பெறுவான், ஆனால் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காத ஒரு நபர் கர்த்தரின் வார்த்தையின் உண்மைக்கேற்ப தீர்ப்படைவான்.
ஆகவே, கர்த்தரின் நீதிக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு கர்த்தர் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பி அவரை அவர்களுக்கு முட்டுக்கல்லாகவும் எதிர்கல்லுமாக்கினார். இயேசு அவர்களின் இரட்சகராகி கர்த்தரின் நீதியை அவர்களுக்கு கொடுத்து, முட்டுக்கல்லாகவும் எதிர்கல்லுமாக இருந்தாலும், அநேக மக்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்க விரும்பாததால் தாமாகவே நரகத்தைக் கேட்கிறார்கள். மிகமிக மோசமான ஒருவனுக்கு கூட நீதிமானாவதற்கும் அழிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கும் ஒரு வழி கொடுக்கப்பட்டது. ஒருவன்/ஒருத்தி அவர்களை பாவத்திற்கு கிரயம் செலுத்தும் கர்த்தரின் நீதியை விசுவாசித்து, அவன்/அவள் மறுபடியும் பிறவாவிட்டால், அநேக காரியங்களைச் செய்யும் ஒருவனைக் கூட அழிவிலிருந்து காக்க முடியாது.
பாவத்தின் சம்பளம் மரணமானதினாலே, பாவமுள்ள யாவரும் தீர்ப்பிற்குள்ளாவர். கர்த்தருடைய நீதியை விசுவாசிக்காமல், தம் சொந்த நீதியை ஏற்படுத்த முயன்று, பரலோகத்திற்குள் நுழைய முயல்பவர்களுக்கு இயேசு முட்டுக்கல்லாகவும் எதிர் கல்லாகவுமானார். ஆகவே, மக்கள் எப்படியோ இயேசுவை விசுவாசித்தாலும், அவர்கள் கெட்டுப்போவதற்கான காரணம் அவரின் நீதியை விசுவாசிக்காததே.
சில மக்கள் தாம் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்ட பாவிகள் என்று கூறுகின்றனர், ஆனால் இரட்சிக்கப்பட்ட பாவிகள் என்று எதுவும் கிடையாது. பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டபின் எப்படி ஒருவனால் பாவியாக இருக்கமுடியும்? பாவத்திலிருந்து ஒருவன் இரட்சிக்கப்பட்டால் அவன் பாவமற்றவன், பாவத்திலிருந்து இரட்சிக்கப்படாதவன் பாவமுள்ளவன். பரலோக இராஜ்யத்தில் பாவத்துடன் ஒருவன் கூட இருப்பதில்லை. கர்த்தர் கூறுகிறார் “ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை” (சங்கீதம் 1:5).
தாம் தினமும் பாவம் செய்துக் கொண்டிருந்தாலும் எப்படி தம்மால் நீதிமானாக முடியும் என்ற பெரிய கேள்வியை மக்கள் தமக்குள் கேட்டுக்கொள்கிறார்கள். ஆயினும், அதனைப் பற்றி அவர்கள் கவலைப்படவேண்டாம். யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, உலகின் எதிர்காலப் பாவங்களுட்பட எல்லாப் பாவங்களையும் தேவன் சுமந்து தீர்த்து கர்த்தரின் எல்லா நீதியையும் அவர் நிறைவேற்றினதாலே, அக்கர்த்தரின் நீதியை விசுவாசித்து நீதிமான்களாவது சாத்தியமாகிற்று. கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதன் மூலம் பாவிகள் நீதிமான்களாக முடியும். உங்களுடைய கடன்கள் யாவும் கொடுக்கப்பட்டுவிட்டாலும் கூட, நீங்கள் இன்னமும் பாவிகளாகவே இருக்கிறீர்களா?
தேவன் தம்முடைய நீதியினால் நம் எல்லாப் பாவங்களையும் அழித்துப் போட்டார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது முழு விசுவாசம் இருப்பவர்களை தேவன் இரட்சித்தார், அவர்கள் எத்தனை பலவீனர்களாக இருந்தாலும், அவர்கள் மீது எந்த ஆக்கினையும் வராது. கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதினால் நாம் நீதிமான்களாக முடியும்.
 
 
மனித சிந்தனைகள் நம்மை மரணத்திற்கு வழி நடத்துகின்றன
 
மனித சிந்தனைகள் நம்மை மரணத்திற்கு வழி நடத்துகின்றன. அவை மனித மனதிலிருந்து உருவானவை. சாத்தானால் மனித சிந்தனைகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். தம் மாமிசத்தினால் பாவம் செய்வதைத் தவிர மனிதர்கள் செய்வதற்கு வேறெதுவுமில்லை. ஆயினும் மனிதன், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசத்தினால் நீதிமானாகிறான். பாவம் செய்வதைத் தவிர்ப்பதினால் ஒருவனால் நீதிமானாகிவிடமுடியாது. பரிசுத்தமான நிலையை அடைய சரீர சம்பந்தமான மாறுதல்களையடைவதால் ஒருவன் முற்றிலும் பாவமற்றவனாக முடியாது. கர்த்தருக்கு முன் எந்தப் பாவமும் செய்யாததினால் பரிசுத்தவான் ஆனேன் என்று ஒரு கிறிஸ்தவன் எண்ணி, அவன்/அவள் பரலோகம் செல்லலாம் என்றெண்ணுவது முட்டாள்தனம்.
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதன் மூலமாக நம் பாவங்களிலிருந்து ஒரேதரமாக இரட்சிக்கப்படலாம். மேலும், விசுவாசியை மறுபடியும் பிறக்க வழி நடத்தும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் கிருபையை ஒருவன்/ஒருத்தி விசுவாசத்தால், அவனின்/அவளின் பாவத்திலிருந்து ஒவ்வொரு பாவியும் முற்றிலும் இரட்சிக்கப்படமுடியும். மனிதப்பக்கத்திலிருந்து நோக்கினால் பாவமற்றவனாவது சாத்தியமில்லாத ஒன்று போல் தோன்றுகிறது. ஆயினும், கர்த்தரின் வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தினால் அது சாத்தியமாகிறது. மனித சரீரத்தின் மூலம் ஒருவனால் பாவம் செய்யாமல் வாழ முடியாது. ஆனால் ஒருவன் கர்த்தரின் நீதியை உண்மையாக விசுவாசிக்கும்போது அவனிருதயம் பாவமில்லாததாகிறது. மனித சரீரம் தன் ஆசைகளைத் திருப்தி செய்யவேண்டியிருக்கிறது, மனித சரீரத்தால் பாவம் செய்வதில் இருந்து விலக முடியாது, ஏனெனில் அது தொடர்ந்து இன்பத்தை வேண்டுகிறது. கர்த்தர் உண்மைப் பேசுகிறார். தேவன் நமக்கு கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே நீதிமானாக முடியும். நம்முடைய மாமிசத்தினால் நற்செயல்களைச் செய்வதினால் நம்மால் பரலோக இராஜ்யத்திற்குள் செல்லமுடியாது. கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே நம்மால் பரலோகத்தினுள் நுழைய முடியும்.
 
 
ஆவிக்குரிய மனதிற்கும், மனித மனதிற்கும் வேறுபாடுள்ளது
 
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகவும், நீதிமான்களாகவும், பாவமில்லாதவர்களாகவும் விசுவாசம் தேவை என்ற உண்மையை மனித மனங்களினால் புரிந்து கொள்ள முடியாது. அது ஏனெனில், ஒருவன்/ஒருத்தி மனம் வருந்தி தம் பாவங்களுக்காக ஜெபித்தாலும் அவன்/அவள் மறுநாளிலே மீண்டும் பாவம் செய்வர் என்று அவை எண்ணுகின்றன.
ஆயினும், மனித செயல்களால் ஒரு நபரால் நீதிமானாவது சாத்தியமே இல்லையென்றாலும், கர்த்தரின் நீதியின் மூலம் அது முற்றிலும் சாத்தியமாகிறது. ஏனெனில் ஒருவன் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் விசுவாசித்து அவரின் நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும். கர்த்தரின் நீதிக்கு அனைத்து மக்களின் பாவங்களையும் போக்குவதற்கான வல்லமை இருக்கிறது. அது நம்மை நீதிமானாகவும் கர்த்தரை பிதாவே என்றழைக்கவும் அனுமதிக்கிறது. ஆகவே, கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்திலிருந்தே உண்மையான விசுவாசம் தொடங்குகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உண்மை விசுவாசம் மனித மனதிலிருந்து தொடங்குவதில்லை, அது சத்திய வார்த்தைகளின் மீதுள்ள விசுவாசத்திலிருந்து தொடங்குகிறது.
மறுபடியும் பிறக்காத அநேக மக்களால் தம் சொந்த சிந்தனைகளிலிருந்து தப்பிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் அதனுள்ளே அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள். இம்மக்களால் தாம் நீதிமான் ஆனோம் என்று ஒருக்காலும் கூறமுடியாது, ஏனெனில் அவர்கள் தாம் இயேசுவை விசுவாசிப்பதாக கூறினாலும் அவர்கள் தம் மனித மனதினால் மட்டுமே யோசிக்கிறார்கள். கர்த்தரின் நீதியை உள்ளடக்கியுள்ள ஆவிக்குரிய விருத்தசேதனத்தை அவன்/அவள் விசுவாசிக்கும்போது மட்டுமே, இயேசு முன் அவனால்/அவளால் தான் பாவமற்றவர் என்று கூறமுடியும்.
ஆகவே, ஒருவர் கர்த்தரின் நீதியை பெற விரும்பினால், உண்மையாகவே மறுபடியும் பிறந்தவர்களின் சத்திய வார்த்தைகளை, அவன்/அவள் கேட்டு, அவற்றை அவர்களின் இருதயங்களால் விசுவாசிக்கவேண்டும். சகோதரர்களாகிய நீங்கள் இந்த உண்மையை உங்கள் மனதில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மறுபடியும் பிறந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற உண்மையாகவே விரும்பினால், அவரின் நீதியை விசுவாசிக்கும் மறுபடியும் பிறந்த ஒருவரை உங்களைச் சந்திக்கும்படி கர்த்தர் அனுமதிப்பார்.
 
 
நீதிமான்கள் ஒருவருமில்லை என்று நீங்கள் கூறுகிறார்களா?
 
வசனம் 9 மற்றும் 10 கூறுகின்றன, “ஆனாலும் என்ன? அவர்களைப் பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப் படுத்தினோமே. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.” நீதிமான் யாரும் இல்லை நீதிமான் யாரும் இல்லை, இல்லை ஒருவனும் இல்லை என்று எழுதப்பட்டுள்ளது.
இதன் பொருள் என்ன? நாம் மறுபடியும் பிறப்பதற்கு பின்னால் மற்றும் முன்னால் உள்ள நம் நிலையை இவ்வார்த்தைகள் பேசுகின்றனவா? மறுபடியும் பிறப்பதற்கு முன் நாமனைவரும் பாவிகளாயிருந்தோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” என்ற வார்த்தைகள், இயேசு உலகின் எல்லாப் பாவங்களையும் ஒழிப்பதற்கு முன்னிருந்த நிலையைக் குறிக்கின்றன. இயேசுவை விசுவாசிக்காமல் யாராலும் நீதிமானாக முடியாது.
வேதப்புரட்டலான மதங்களையும் சிலைகளையும் ஆராதிக்கும் மக்கள் மூலமாக ‘படிப்படியாக பரிசுத்தமாதல்` என்ற வார்த்தைகள் நடைமுறைக்கு வந்தன. “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” பாவி ஒருவன் தனக்குத்தானே பயிற்சி பெறுவதாலும், பண்புள்ளவனாவதாலும் நீதிமானாக முடியுமென நீங்கள் எண்ணுகிறீர்களா? தனக்குத்தானே ஒருவனால் நீதிமானாக முடியாது.
“நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” ஒருவன் தன் சொந்த, நல்விதமான வாழ்க்கை மூலம் நீதிமான் ஆனான் என்றோ, நீதிமான் ஆவான் என்றோ இல்லை. இங்கு ஒருவன் கூட அவனின்/அவளின் சொந்த முயற்சியில் பாவமில்லாதவன் ஆனதில்லை. கர்த்தரின் நீதியை உள்ளடக்கிய ஆவிக்குரிய விருத்தசேதனத்தை விசுவாசிப்பதின் மூலமே அது சாத்தியமாகும்.
வசனம் 11 கூட கூறுகிறது, “உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை.” அவனின்/அவளின் தீயவற்றை புரிந்துகொள்கிறவன் யாருமில்லை. வேறுவார்த்தைகளில் கூறுவதானால் அவன்/அவள் நரகத்திற்கு அனுப்பப்படுவர் என்ற உணர்வுள்ளவர்கள் யாருமில்லை. ஒரு பாவியால் அவன்/அவள் தான் பாவியாக இருக்கிறேன் என்பதை புரிந்துகொள்ளக்கூட முடியவில்லை. அவனின்/அவளின் சொந்தப் பாவங்களினால் அவன்/அவள் நரகம் செல்வர் என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளாது ஒரு பாவி பாவ வாழ்வு நடத்துகிறான். பாவத்தினால் தான் நரகம் செல்ல வேண்டியவன்/வேண்டியவள் என்று அறிந்து ஒரு நபர் பாவத்திலிருந்து இரட்சிப்படைய முயலுகிறார். ஆயினும் ஒருவர் கூட கர்த்தருக்கு முன் தன் பாவ சுபாவத்துடனிருப்பதையோ அல்லது அவன்/அவள் நரகம் செல்லவேண்டியவர்கள் என்பதையோ உணர்வதில்லை.
கர்த்தருக்கு முன் நாம் பயனுள்ளவர்களா அல்லது பயனற்றவர்களா? மறுபடியும் பிறக்கும்வரை அனைத்து மனிதகுலமும் பயனற்றது. நாமெல்லாம் அவருக்கு நன்றி கூறி நீதிமான்களானாலும், நாமெல்லாம் கர்த்தருக்கு எதிராக ஒரு காலத்தில் சண்டையிட்ட மக்களில்லையா, சத்தியத்தை விசுவாசிக்க மறுக்கவில்லையா, அவரை பலி கூறவில்லையா?
அப்படியானால், ஒரு பாவியால் எப்படி கர்த்தரை மகிமைப் படுத்தமுடியும்? அவனின்/அவளின் சொந்த பாவப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவராத ஒரு பாவியால் கர்த்தரை எப்படி புகழமுடியும்? பாவியின் நிலையிலிருந்து கர்த்தரைப் புகழ்வது, உண்மையாக பக்தியுடன் அவரை ஆராதிப்பதாகாது: பாவியால் எப்படி கர்த்தரைப் புகழமுடியும்? ஒரு பாவியால் கர்த்தருக்கு மகிமையளிக்க முடியாது, அத்தகைய ஒருவனிடமிருந்து அவர் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை.
இந்நாட்களில் புகழும் ஊழியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஆயினும், கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தரைப் புகழ முடியும். பாவியொருவனின் புகழுதலினால் கர்த்தர் பிரியப்படுவார் என்று எண்ணுகிறீர்களா? பாவி புகழ்வது காயீன் காணிக்கைச் செலுத்துவதைப் போன்றது. பொருளில்லாத புகழ்ச்சியையும் பாவிகளின் பாவம் நிறைந்த இருதயங்களையும் கர்த்தர் ஏன் எற்றுக்கொள்வார்?
வசனம் 12 கூறுகிறது, “எல்லாரும் வழி தப்பி, ஏகமாய்க்கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும், இல்லை.” “வழிதப்பி” போன அந்தப்பாவிகளுக்கு கர்த்தர் அவர்களுக்காகச் செய்த பெரிய செயல்கள் தெரியாது, அவர்கள் அவரையோ அல்லது சத்தியத்தின் வார்த்தையையோ விசுவாசிப்பதுமில்லை. அதற்கு மேலும், பாவிகள் கர்த்தரின் வார்த்தையை கடைப்பிடிக்க மறுத்து அதனை விசுவாசிக்காததுடன், தம் சொந்த சிந்தனைகளின் அடிப்படையில் தம் மனித எண்ணங்களில் எப்பொழுதும் யோசிக்கிறார்கள். ஆகவே, கர்த்தருக்கு முன் எது சரி எது தவறு என அவர்களால் பிரித்துணர முடியாது.
கர்த்தரின் நீதியை உள்ளடக்கியுள்ள சத்தியத்தின் வார்த்தைகளினாலேயே சரியாக முடிவெடுப்பது சாத்தியமாகிறது. சரியான முடிவுகலும் சரியான தீர்ப்புகளும் கர்த்தரின் நீதியினுள்ளேயே செய்யப்படுகின்றன. எல்லா சட்டத்தின்படியான தீர்ப்புகளும் மனிதனின் உள்ளே சார்ந்திருக்காமல், கர்த்தரின் நீதியினுள் இருக்கின்றன என்று நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். மனித சிந்தனைகளெல்லாம் வழி தப்பி கர்த்தரின் நீதியை புறம்பேத்தள்ளிவிட்டன. “வேதாகமம் கூறுவது எதுவானாலும், நான் இப்படி எண்ணுவதுடன், என் சொந்த யோசனைகளின் படி விசுவாசிக்கிறேன்” என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால், இது போன்ற தன் சொந்த யோசனைகளை விட்டுவிடாதவன் தன் மேம்பட்ட மனதின் பிடிவாதத்தால் கர்த்தரின் நீதியை புறம்பேத் தள்ளுகிறான் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். ஆகவே, இப்படி எண்ணுவது அவனைக் கர்த்தரின் நீதிக்கு திரும்ப அனுமதிக்காது.
 
 
மனித மனம் ஆவியை மரணத்திற்கு வழி நடத்துகிறது
 
மறுபடியும் பிறக்காதவன் தனக்குத்தானே நீதிபதியாயிருக்கிறான். இத்தகைய மக்கள், வேதாகமத்தில் எழுதியிருக்கும் கர்த்தரின் வார்த்தைகளைக் குறித்து உண்மையாகவே கவலைப்படுவதில்லை, மாறாக, அவர்களின் சொந்த சிந்தனைகளிலிருந்து எதுவும் வேறுபட்டால் அதனைத் தவறு என்று கூறுவதோடு, அவர்களின் சொந்த யோசனைகளுடன் ஒத்துப்போகும் பகுதி வார்த்தைகளை மட்டும் ஒத்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் தம் சொந்த யோசனைகளிலும், தம்மிலும் வழி தப்பி போனார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு நபர் அவன்/அவள் பாவத்திலிருந்து மிகச் சரியான வழியில் விடுதலைப் பெற விரும்பினால், அவனுக்கு/அவளுக்கு கர்த்தரின் நீதியும் நியாயமும் தேவைப்படுகிறது. அப்படியானால் அவரின் நியாயம் என்ன?
கர்த்தரின் நியாயம் கர்த்தரின் நீதியாகும். கர்த்தரின் நீதியின் நியதிக்கு, கர்த்தரின் வார்த்தைகளே வரைமுறை என்றும் உங்களுக்குத் தெரியவேண்டும். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). “அந்த வார்த்தை” என்றழைக்கப்படும் நபர் யார்? பிதாவாகிய கர்த்தருடனும், பரிசுத்த ஆவியானவருடனும் இருந்த நபர் யார்? அது நம் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவேயாகும். இயேசுகிறிஸ்து நம் இரட்சகரும் ராஜாதி ராஜாவுமானார். இயேசுவே கர்த்தர்.
தொடக்கத்தில் வார்த்தையிருந்தது என்று யோவானில் கூறப்பட்டுள்ளது, அந்த வார்த்தை தேவனோடிருந்தது. ஆம் தேவனாகிய இயேசுவே நம் இரட்சகர். வார்த்தைக் கர்த்தராகவும் அவர் தன் தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார் (எபிரெயர் 1:3). இரட்சகரே கர்த்தராவார். ஆகவே வார்த்தையே கர்த்தராக இருப்பதால், அவருடைய நீதியின் வார்த்தைகள் மனிதர்களாகிய நமது சிந்தனைகளிலிருந்து வேறுபட்டது. பாவிகள் கர்த்தரின் நீதியை அலட்சியம் செய்பவர்களாக இருக்கும்போது, அவர்கள் கர்த்தரின் நீதியை தம் புரிந்துகொள்ளுதலின் மூலமே அறிய முயல்வார்கள், என்பதை நீங்கள் உணரவேண்டும். கர்த்தரின் நீதியில் ஒட்டிக்கொண்டு வாழும் ஒருவன் பயனுள்ள ஒருவனானதால், கர்த்தரால் அவன் நன்கு பயன்படுத்தப்படுவான். கர்த்தரின் வார்த்தையை இறுகப்பற்றிகொள்ளும் ஒருவன் விசுவாசியாகவும், கர்த்தர் முன்பாக பயனுள்ளவனாகவும் இருப்பான். இத்தகைய மனிதன் ஆசீர்வதிக்கப் பட்டவனாயும் இருப்பான்.
அனைத்து மக்களும் தம் சொந்த யோசனைகளினாலும், பாவங்களினாலும் கர்த்தரை எதிர்த்துப் போரிடுகிறார்கள். ஒருவன் தன்னை பரிசுத்தமாகவும் நல்லவனாகவும் காட்டிக்கொள்வதோ அல்லது மற்றவர்கள் மீது தயவாகவும் கருணையாகவுமுள்ளதாக காட்டிக்கொள்வதோ கபட்டுச் செய்கைகள் என்றும், அது கர்த்தரை வஞ்சிக்கும்படி மனித சிந்தனைகளாலும் வந்தது என்றும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நல்லவன் போல் காட்டிக்கொள்வது கர்த்தருக்கு எதிரானதாகும். அவரைத் தவிர நல்லவர் யாரும் இல்லை. ஒரு கிறிஸ்தவன் மறுபடியும் பிறவாமல் அவர் நிறைவேற்றிய அன்பையும் அவரின் நீதியையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அது கர்த்தருக்கு எதிரானதும் சத்தியத்திற்கு கீழ்ப்படியாததுமாகும்.
இவ்வுலகில் பெரிய பாவங்களைச் செய்வோர் மட்டும் தான் கர்த்தரின் ஆக்கினைக்குள்ளாவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? கர்த்தரின் நீதியை விசுவாசிக்காத யாவரும் அவரின் சீற்றத்தின் விளைவிலிருந்து தப்ப முடியாது.
இயேசுவை உண்மையினால் விசுவாசிக்காதவன், தான் நல்வாழ்க்கை நடத்துவதாக ஒரு தவறான கருத்தில் நிரம்பியவனாக இருக்கிறான். அத்தகைய ஆலோசனைகளைப் போதித்தது யார்? அப்படிச் செய்தது சாத்தானே. ஆயினும், மனிதர்கள் தம் பிறப்பிலிருந்தே நல்வாழ்க்கை வாழ முடியாதவர்கள். ஆகவே, நாம் பாவமன்னிப்பை பெறவேண்டுமென கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. இரக்கம் பெரிதாக வேண்டுமென இது பொருள்படுகிறதா? கண்டிப்பாக இல்லை. மனிதர்கள் பிறந்தது முதல் பாவத்தினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளதால், அழுகிய பாவத்தின் காயங்களினால் அவர்கள் நரகம் செல்ல வேண்டியவர்கள். ஆகவே, இயேசு அவர்களுக்காக ஏற்கெனவே தயார் செய்த பாவமன்னிப்பை பெறுமாறு கர்த்தர் அவர்களிடம் கூறினார். அவர் நம் இரட்சிப்பின் கர்த்தர், உண்மையாகிய அவரின் நீதியின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பை நம்மிருதயத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அவர் நம் அனைவருக்கும் அறிவுரைக் கூறுகிறார்.
 
 
இயற்கையாக மனிதர்கள் யார்?
 
வசனங்கள் 13-18 கூறுகின்றன, “அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழியிலிருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்¨, என்று எழுதியிருக்கிறதே.”
“தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்” அந்த மக்கள் எவ்வளவு நன்றாக வஞ்சிக்கிறார்கள்! யோவானில் “அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (யோவான் 8:44) என்று எழுதப்பட்டுள்ளது. “நான் உண்மைப் பேசுகிறேன், இதுவே உண்மை. நீங்கள் என்னைப் புரிந்துகொள்கிறீர்களா?” மறுபடியும் பிறவாத நபர் உண்மை என்று உறுதியாக கூறும் அனைத்து வார்த்தைகளும் பொய்யே.
மறுபடியும் பிறக்காத ஒரு நபர் மக்களுடன் பேசும்போது, அவனால்/அவளால் பொய் பேசுவதை தவிர்க்க முடியாது. அவன்/அவள் தான் கூறுவது உண்மையே என்று, அவன்/அவள் கூறுகிறார். இது அவன்/அவள் பொய் பேசுகிறார், அவன்/அவள் அதனை உண்மையென கூறி மக்களை வஞ்சிக்கிறார் என்பதற்கான மறைந்திருக்கும் அத்தாட்சியாகும். இன்னும் மறுபடியும் பிறக்காத ஒரு நபர் கூறுபவனவெல்லாம் பொய்யே, ஏனெனில் அவன்/அவள் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதில்லை.
வஞ்சகன் தான் செய்வது கள்ளத்தனமானது என்று மக்களிடம் கூறிவிட்டு அதனைச் செய்வதில்லை. அது உண்மையானது போன்றே அவன் பேசுகிறான். மக்களை நம்பச் செய்வதற்காக உண்மையாகவும், நல்லதாகவும் அவர்களிடம் பேசுகிறான். “மிக, மிக, மிக உண்மையை உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் இதில் சிறிது பணத்தை முதலீடு செய்தீர்களானால், டன் கணக்கான பணத்தை திரும்பப் பெறுவீர்கள் ஒரு மில்லியன் டாலரை முதலீடு செய்யுங்கள், ஒரு வருடத்திற்குள் நீங்கள் முதலீடு செய்ததுடன் இரண்டு மில்லியன் டாலரைப் பெறுவீர்கள். அடுத்த இரண்டு வருடங்களில் நீங்கள் அவ்வளவு பணத்தைப் பெறுவீர்கள். இது புதிய வகையான வியாபாரம், அது முற்றிலும் பாதுகாப்பானது. அநேக மக்கள் காத்திருப்பதால், உடனடியாக உங்கள் மனதை தயார் செய்து முன் வரவும்” இப்படித்தான் வஞ்சகன் மக்களிடம் கூறுகிறான். பாவமன்னிப்பு பெறாத ஒரு நபர் அவனின்/அவளின் நாக்கினால் வஞ்சனை செய்கிறார்கள் என்பதை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.
சாத்தான் பொய்பேசும்போது தன் சொந்தத்திலிருந்து எடுத்துப் பேசுகிறான் என்று வேதாகமம் கூறுகிறது. பாவத்திலிருந்து மறுபடியும் பிறக்காத ஒருவன் கூறும் எல்லாம் பொய். சபையின் உறுப்பினர்கள் பெரிய அளவு தசம பாகத்தை ஆலயத்திற்கு கொடுத்தால், அவர்கள் பணக்காரராவார்கள் என்று மறுபடியும் பிறவாத போதகர்கள் அவர்களை வஞ்சிப்பது, ஆச்சர்யமான ஒன்றல்ல. மேலும், ஒரு நபர் ஆலய மூப்பரானால் ‘கர்த்தரின் தடுக்க முடியாத ஆசீர்வாதத்தினால்` செல்வந்தனாவார் என்றும் அவர் கூறலாம். மூப்பராவதற்கு மக்கள் ஏன் அத்தனைக் கஷ்டப்பட்டு முயல்கிறார்கள்? அவன்/அவள் மூப்பரானால் கர்த்தர் அவர்களை பொருட் செல்வத்தால் நிரப்புவார் என்று கள்ளப்போதகர்கள் பொய் கூறுவதே அதற்கான காரணம். மூப்பராக முயற்சி செய்த பிறகு தம் சொத்துக்களையெல்லாம் இழந்த அநேக கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூப்பராக விரும்பியதால், வஞ்சிக்கும் போதகர்களுக்கு அதிகப்படியான அர்ப்பணத்தைக் கொடுத்துவிட்டனர்.
ரோமர் 3:10 ஐ மீண்டும் கவனமாக நோக்குவோமாக. “அந்தப்படியே” என்ற சொற்றொடர், அதற்கு பின் வரும் வசனங்கள், பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டவை என்று, நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. மேலும் விளக்கமளிப்பதற்கு பதிலாக வேதவாக்கை அப்படியே பவுல் கூறுகிறான். “அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.” (சங்கீதம் 5:9). “அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஔடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்த தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிர நினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது” (ஏசாயா 59:7). மக்கள் கர்த்தரின் நீதியை அறியாமல் நரகம் செல்வது பரிதாபத்திற்குரியது.
வசனம் 19 கூறுகிறது, “மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.”
சட்டம் கோபாக்கினையை எடுத்து வருகிறது (ரோமர் 4:5) மறுபடியும் பிறவாதவர்கள் தம்மைப் பாவிகள் என்று அறிந்து கொள்வதற்கு கர்த்தர் சட்டத்தைக் கொடுத்தார். ஒவ்வொரு பாவியும் அவனால்/அவளால் அவரின் சட்டத்தின்படி வாழமுடியாதவர்கள் என்று சட்டம் போதிக்கிறது. சட்டத்தில் நாம் வாழுவதற்காக கர்த்தர் அதனை நமக்குக் கொடுக்கவில்லையென தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கர்த்தர் சட்டத்தை ஒன்றுமில்லாததாக்கினரா? இல்லை, அவர் அப்படிச் செய்வதில்லை. நாம் பாவிகளா என்று நமக்கு போதிக்கும்பொருட்டு மோசேயின் மூலம் சட்டத்தைக் கொடுத்ததாக கர்த்தர் கூறினார். சட்டத்தின் மூலம் நாம் இயற்கையாகவே பாவம் நிரம்பியவர்கள் என்று புரிந்துகொள்ளவேண்டுமென அவர் விரும்புகிறார், அதனைக் கடைபிடிப்பதற்காக கொடுக்கப்படவில்லை. மனிதர்களாகிய நாம் எத்தனை குறைவானவர்கள் என்றும் தவறானவர்கள் என்றும் சுட்டிக் காட்டுவதே சட்டத்தின் பாத்திரமாகும்.
ஆகவே வசனம் 20 கூறுகிறது. “இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால் எந்த மனுஷனும் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை.” சட்டத்தின் செய்கைகளினால் எந்த மனிதனும் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை. பவுலுக்கு மாத்திரமல்ல, கர்த்தரின் மற்ற எல்லா ஊழியர்களுக்கும் “எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” என்பது பொருந்தும். சட்டத்தை ஒருவனாலும் கடைப்பிடிக்க முடியாது. ஒருவனும் அதனைக் கடைபிடிக்க மாட்டான். ஒருவனும் அதனைக் கடைப்பிடிப்பதில்லை. ஆகவே முடிவானது, சட்டத்தின் படி செய்வதால் ஒருவனால் நீதிமானாக முடியாது என்பதே.
சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நீதிமான்களாக மாறிவிடமுடியுமா? நாம் இந்த வசனங்களைப் பார்க்கும்போது, படிப்படியாக பரிசுத்தமாகி, இயேசுவின் விசுவாசிகளாகிய பிறகு நம் செயல்களால் நல்வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் பரிசுத்தமடைவோம் என்று இலகுவாக எண்ணலாம். ஆயினும் இது உண்மையே அல்ல. படிப்படியாக பரிசுத்தமாவதன் மூலம் ஒருவனால் பரலோக ராஜ்யத்தினுள் செல்லமுடியுமென்பது முற்றிலும் தவறானது.
மறுபடியும் பிறவாத அனைவரும் கர்த்தரின் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுண்டவர்களாய் இருக்கிறார்கள், அது பாவம் மற்றும் மரணம் குறித்த சட்டமாகும் (ரோமர் 8:2) அது ஏனென்றால், ஒரு நபர் கிறிஸ்தவனான பிறகு அவன்/அவள் கர்த்தரின் வார்த்தைப்படி வாழவேண்டும் என அவன்/அவள் எண்ணுகிறார். கிறிஸ்தவர்கள் தம் செயல்களில், சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருப்பதாக உணருகிறார்கள், ஆனால் உண்மையில், அவர்களால் சட்டத்தின்படி வாழவே முடியாது. அதனாலேயே அவர்கள் தினமும் மனம் வருந்தி ஜெபிக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்தவம் என்னும் எதற்கும் உதவாத மதத்தின் குழப்பத்திற்குள் விழுவதை உணறுவதில்லை. இத்தகைய மதவாழ்வை வாழ்வது தொடக்கத்திலிருந்தே தவறானது என்று இது நிரூபிக்கிறது. மக்களைப் பாவிகளென்று அவர்களுக்கு போதிக்க மட்டுமே சட்டமிருந்தாலும், கர்த்தரின் சட்டத்தினை தவறாகப் புரிந்துக்கொண்டு, அதனைக் கடைப்பிடிக்க முயல்வது, கிறிஸ்தவ மதத்தினரை கர்த்தரின் நீதியுடன் மோத வழி நடத்துகிறது.
கிறிஸ்தவத்தின், படிப்படியாக பரிசுத்தமாதல் என்ற கொள்கை, உலகின் பிறமதங்களின் மதக் கொள்கைகளுக்கு சமமானது. பௌத்த மதத்தில் நிர்வான நிலையை அடையும் கொள்கையைப் போன்று, ஒருவன் இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கிய பிறகு, அவனின் மாமிசமும் ஆன்மாவும் சிறிது சிறிதாக பரிசுத்தமாகி, இறுதியில் பரலோகம் செல்லுமளவு பரிசுத்தமாகிவிடுமென்று, சிறிதுசிறிதாக பரிசுத்தமாதல் தத்துவம் கூறுகிறது.
பாவம் என்ற நோயுடன் பிறந்தவன் அவனின் முழுவாழ்க்கையிலும் பாவத்தை பரப்பும் வேலையை மட்டுமே செய்கிறான். இதற்கான காரணம் அவன் ஏற்கெனவே பாவ நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதே. பாவத்தின் வைரஸ், ஒருவனின் சரீரத்திலிருந்து அவன் பரப்புவதை விரும்பாவிட்டால் கூட, வெளிவருகிறது. இந்நோய்க்கு ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது. கர்த்தரின் நீதியை உள்ளடக்கியுள்ள நற்செய்தியாகிய சத்தியத்தின் வார்த்தைகளை கேட்டு அதனை விசுவாசிக்க வேண்டும். ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெற நம்மை ஏதுவாக்கும் உண்மை பாவமன்னிப்பின் வார்த்தைகளை ஒருவன் கேட்டு, அதனை விசுவாசித்தால், அவன் இரட்சிக்கப்படுவது மட்டுமின்றி நித்திய ஜீவனையும் கூட பெறுவான்.
ஒருவன்/ஒருத்தி மறுபடியும் பிறந்த பிறகு கூட சட்டத்தின்படி நிறைவாக வாழும் ஒருவன் எப்படி இந்த உலகில் இருக்கமுடியும்? யாருமிருக்க முடியாது. வேதாகமம் கூறுகிறது, “பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்” (ரோமர் 3:20). இந்த உண்மை தெளிவானதாகவும் இலகுவானதாகவும் இல்லையா? ஆதாமும் ஏவாளும் விசுவாசிக்காததினால் கர்த்தரின் வார்த்தைகளை விட்டுவிட்டு, அறியாமையின் காலத்தில் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தில் விழுந்ததோடு, இந்த நிகழ்வுக்கு பிறகு எல்லாப் பாவங்களையும் தம் சந்ததியாரின் மீது சுமத்தினர். ஆயினும், அனைத்து மக்களும் தம் மூதாதையர்களிடமிருந்து பாவங்களைச் சுவீகரித்துக் கொண்டாலும், தாம் பாவிகளாக பிறந்தோம் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
ஆபிரகாமின் காலமுதல், கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம், அனைத்து மக்களும் பாவ மன்னிப்பை பெற, மனிதகுலத்திற்கு அவர் நீதியைக் குறித்து உறுதியான அறிவைக் கொடுத்தார்.
 
 
சட்டத்தைப் பற்றி மட்டுமல்லாது கர்த்தரின் நீதியைக் குறித்தும் பேசுகிறான்
 
வசனங்கள் 21-22 கூறுகின்றன, “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவ நீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக் குறித்து நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.”
கர்த்தரின் நீதி வெளிப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது, “அதைக் குறித்து நியாயப்பிரமானமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.” “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும்” என்பது பழைய ஏற்பாட்டைக் குறிக்கிறது. ஆசரிப்புக் கூடாரத்தின் பலியிடும் முறையில் வெளியாக்கப்பட்ட நற்செய்தியாகிய கர்த்தரின் நீதியைக் குறித்து இப்பொழுது பவுல் பேசினான். பாவ பலியின் மூலம் ஒருவன் பாவ மன்னிப்பை பெறலாம் என்ற கர்த்தரின் நீதியை, வேதவாக்கு நமக்குத் தெளிவாக காட்டுகிறது, பவுலின் விசுவாசமும் கூட வேதவாக்குகளில் வெளியாக்கப்பட்ட கர்த்தரின் நீதியின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது.
இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசமுள்ளவர்கள், பாகுபாடின்றி கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று பவுல் அறிவிக்கிறான். ஒருவன் இரட்சிக்கப்பட்டானா இல்லையா என்பது அவன் விசுவாசத்தையும் அவிசுவாசத்தையும் பொறுத்தது. “இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.” என்று கர்த்தரின் நீதி வெளிப்பட்டது என அவன் கூறினான்.
உண்மை விசுவாசம் என்ன? விசுவாசிக்கப்படும் பொருள் யாது? இயேசுகிறிஸ்துவே அது. எபிரேயர் 12:2 கூறுகிறது, “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” மறுபடியும் பிறந்த பரிசுத்தவானிடமிருந்து கர்த்தரின் உண்மையை நாம் கற்று, இந்த உண்மையை விசுவாசிப்பதின் மூலம் இயேசுகிறிஸ்துவுக்குள் இரட்சிப்பைப் பெற்று, கர்த்தரின் வார்த்தைகளின் மீதுள்ள விசுவாசத்தினால் வாழவேண்டும். இருதயத்தினால் தேவனின் நீதியை விசுவாசிப்பதென்பது உண்மை நம்பிக்கை கொள்வதாகும்.
ரோமர் 10:10 கூறுகிறது, “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.” இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் நம்மிருதயங்களினால் விசுவாசிப்பதன் மூலம் நாம் நீதிமான்களாக முடியும். மேலும் நம் விசுவாசங்களை வாயினால் அறிக்கை செய்யும்போது நம் இரட்சிப்பு உறுதிபடுத்தப்படுகிறது. பாவமன்னிப்பை நம் செய்கைகளினால் பெறமுடியாது, அதனை கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் பெற்றுக்கொள்ளளாம்.
வசனங்கள் 23-25 கூறுகின்றன, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியயைக் காண்பிக்கும் பொருட்டாகவும்.”
எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள் என்று வேதம் கூறுகிறது. பாவிகளுக்கு நரகம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆயினும், கிறிஸ்து இயேசுவிலும் கர்த்தரின் நீதியிலும் உள்ள விடுதலையின் மூலமாக மக்கள் பாவமன்னிப்பை இலவசமாக பெற்றார்கள். கர்த்தருடைய நீதியை விசுவாசித்ததினால் மக்கள் பாவமற்றவர்களானார்கள். இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக கர்த்தர் அவரை ஏற்படுத்தினார்.
வசனங்கள் 25-26 ஐ நோக்கிப் பார்த்தால், அங்கு எழுதப்பட்டுள்ளது, “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியயைக் காண்பிக்கும் பொருட்டாகவும். கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.”
இங்கு, “தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்” என்ற சொற்றொடர் இயேசுகிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்ட கர்த்தரின் நீதியைக் குறிக்கிறது. இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தியதற்கு காரணம், அவர் மரிப்பதற்கு முன்பாக, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்று, கர்த்தரின் எல்லா நீதியையும் நிறைவேற்றியதே (மத்தேயு 3:13-17 ஐப் பார்க்கவும்). மனிதகுலத்திற்கும் அவருக்கும் சமாதானம் உண்டுபண்ணுவதற்காக, பிதாவாகிய கர்த்தர், பூமியின் பாவங்களுக்கு கிருபாதாரபலியாக இயேசுவை ஏற்படுத்தினார். இயேசுவே கர்த்தரின் நீதியின் அவதாரம்.
யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானம் மூலம் இயேசு உலகின் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். இயேசு அல்பாவும் ஒமேகாவுமாயினார். தொடக்கத்திலிருந்து முடிவரை செய்யப்பட்ட உலகின் பாவங்களை தேவன் துடைத்தார் என்று கூறும் வார்த்தைகளை ஒருவன்/ஒருத்தி விசுவாசித்தால், அனைவரும் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படலாம் என்பது இதற்கு பொருளாகும்.
இயேசு நிறைவேற்றிய கர்த்தரின் நீதியானது, கர்த்தருடன் நாம் சமாதானமாக இருக்கும் படி அனுமதித்தது. கர்த்தருடன் சமாதானமாக இருப்பவன் மட்டுமே பரலோகத்திற்குள் நுழைவதற்காக இது ஏற்படுத்தப்பட்டது, நான் உண்மையின் நற்செய்தியை விசுவாசிக்கத் தொடங்கிய பிறகே கீழ்க்கண்ட வசனம் எனக்குப் புரியத் தொடங்கியது. “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியயைக் காண்பிக்கும் பொருட்டாகவும்.” அவரின் பொறுமையின் காலத்தில் இயேசுவின் மூலமாக கர்த்தரின் நீதியைப் புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்கலானேன்.
கர்த்தருடைய நீதி இறந்தகால வினைமுற்றில் நிறைவேற்றப்பட்டது, அது ஏற்கெனவே முழுமையாக்கப்பட்டதைக் குறிக்கிறது. இயேசு தம்முடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தால் நம் அனைத்துப் பாவங்களையும் அழித்தார் என்று கூறும் உண்மை வார்த்தைகளை விசுவாசித்ததால், நாம் பாவமன்னிப்பைப் பெற்றோம். நம்முடைய ஆத்துமாக்கள் ஒரேதரமாக பாவமன்னிப்பை பெற்றாலும் நம் சரீரங்களுக்கு பாவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நாம் இந்நாளில் உலகில் செய்யும் பாவங்களை “முற்காலத்தில் நடந்த பாவங்கள்” என்று கர்த்தர் குறிப்பிடுகிறார்.
ஏன்? இரட்சிப்பின் தொடக்கமாக, கர்த்தர் இயேசுவின் ஞானஸ்நானத்தை ஏற்படுத்தினார். இயேசுகிறிஸ்து நிறைவேற்றிய கர்த்தரின் நீதியின் மூலம் பாவமன்னிப்பு ஒரேதரமாக நிறைவேற்றப்பட்டது. கர்த்தரின் பார்வையில், இந்நேரத்தில் நாம் மாமிசத்தினால் செய்துகொண்டிருக்கும் பாவங்கள் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் ஏற்கெனவே அழிக்கப்பட்ட பாவங்களாகும். கர்த்தரின் பார்வையில் உலகின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டன. ‘முற்காலத்தில் நடந்த பாவங்கள்` என்பது ‘பாவத்தின் சம்பளம் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது என கருதவேண்டும்` என்று பொருள்படும். உலகின் எல்லா பாவங்களும் எனப்படுவது, தேவன் பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம், ஏற்கெனவே கழுவப்பட்ட பாவங்களைக் குறிக்கிறது.
ஆகவே, உலகம் தோன்றியது முதல் அது அழியும் வரை மனிதகுலம் செய்த அனைத்துப் பாவங்களும், ஆதாமின் காலமுதல் உலகின் கடைசி நாள்வரையுள்ள பாவங்களும், இப்போது மக்கள் செய்துகொண்டிருக்கும் பாவங்களும், இயேசு முன்பு அழித்த “முற்காலத்தில் நடந்த பாவங்களாகும்.” கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் பாவமில்லாதவர்களாக உள்ளனர். உண்மை என்னவெனில் முன்பு செய்த பாவங்களை ஏற்கெனவே சுமத்தியாயிற்று. கர்த்தரின் பார்வையில் இந்த நொடிப்பொழுதில் நாம் செய்துகொண்டிருக்கும் பாவங்கள் கூட ‘முற்காலத்தில் நடந்த` பாவங்களில் ஒரு பகுதியாகவும் அது மன்னிக்கப்பட்டதாகவும் உள்ளது. உலகின் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட அனுப்பப்பட்ட தேவகுமாரனால், இவ்வுலகின் மக்கள் செய்யும் பாவங்கள் அழிக்கப்பட்டன. நாம் இப்பொழுது செய்யும் பாவங்கள் கர்த்தரால் ஏற்கெனவே அழிக்கப்பட்ட பாவங்கள். இதன் பொருள் என்னவென்று புரிந்துகொள்கிறீர்களா?
கர்த்தரின் நீதியினால், உலகின் பாவங்களை தாம் ஏற்கெனவே துடைத்துவிட்டதாக இயேசு கூறினார். இந்த வசனத்தின் பொருளை உண்மையாக புரிந்து கொள்ளாவிட்டால் இதனை ஒருவர் தவறாக புரிந்து கொள்ளக்கூடும். கர்த்தரே யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் தீர்க்கப்பட்டதால், அவரின் பார்வையில், மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்கள் ஏற்கெனவே தீர்ப்புக்குட்படுத்தப்பட்டுவிட்டது. இயேசு இவ்வுலகிற்கு வந்து ஒரேதரமாக மக்களை முழுமையாக பரிசுத்தப்படுத்தியதால், பாவத்தைக் குறித்து கவலைப் படவேண்டாம் என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
கர்த்தரின் நீதியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்ட ஒருவனுக்கு இந்த வசனங்களில் பவுல் கூறும் உண்மை மிகவும் முக்கியமானது. ஆயினும், மறுபடியும் பிறக்காத மக்கள் கர்த்தரின் நீதியை அலட்சியம் செய்வதால் நரகத்திற்கே செல்வர். சகோதரரே, நீங்கள் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு முழுமையாக புரிந்துகொள்ளவேண்டும். அதுவே, உங்கள் விசுவாசத்தை நிலைப்படுத்த நல்லது என்பதோடு மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் முடியும். முடிவில் தன் நீதியை தெரிவிக்க பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உணர்த்துகிறார் (யோவான் 16:8) என்று உங்களுக்குத் தெரியுமா?
இயேசுவின் இரத்தத்தினாலும், விசுவாசத்தினாலும் கர்த்தர் இயேசுவை கிருபாதார பலியாக்கினார், அவருடைய பொருமையினால் அவரின் நீதியை விளங்கப்பண்ண முன்பு செய்யப்பட்ட பாவங்களை கர்த்தர் அவர் மீது சுமத்தினார். இயேசுவை கிருபாதாரப் பலியாக கர்த்தர் நியமித்ததன் மூலம் முன்பு செய்யப்பட்ட பாவங்களும் கூட ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் நமக்கு போதிக்கிறார். ஆகவே, கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதினால் நாம் நீதிமானானோம்.
வசனம் 26 இல் எழுதப்பட்டுள்ளது, “இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியை காண்பிக்கும் பொருட்டாகவும்.” ‘இக்காலத்தில்` நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் அனுமதிக்கிறார், உலகை ஆக்கினைக்குள்ளாக்குவதை அவர் விரும்பவில்லை. ‘இக்காலத்திலே` கர்த்தர் ‘தமது நீதியைக் காண்பிக்க` கர்த்தர் இயேசுகிறிஸ்துவை அனுப்பினார், தேவன் தன் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் கர்த்தரின் நீதியை விளங்கப்பண்ணினார். கர்த்தர் தம் ஒரே பேரான குமாரனை இவ்வுலகிற்கு வரச்செய்து ஞானஸ்நானம் பெறச் செய்து சிலுவையில் அறைந்ததன் மூலம் அவரின் அன்பையும் நீதியையும் நமக்கு காண்பித்தார்.
கர்த்தர் தன் எல்லா நீதியையும் இயேசுவின் மூலம் நிறைவேற்றினார். கர்த்தரின் நீதியிலிருக்கும் எல்லா விசுவாசிகளும் நீதிமான்கள். உலகின் பாவங்களை ஒரே தரமாக துடைக்கும் நீதியின் செய்கையை நம் கர்த்தர் நிறைவேற்றினார். அப்படியானால் கர்த்தரின் நீதியை நம் இருதயங்களினால் விசுவாசிக்கலாமா? நாம் அவருடைய நீதியை விசுவாசிக்கும்போது நீதிமான்களாக இருக்கிறோம் என்று கர்த்தர் கூறுகிறார். ஏன்? இயேசு நம் எல்லாப் பாவங்களையும் கழுவிய நீதியின் செய்கையை ஏற்கெனவே செய்துவிட்டதால் அவரின் விசுவாசி பாவமற்றவன் இல்லையா? கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவன் நீதிமான், ஏனெனில் அவனிடம்/அவளிடம் பாவமில்லை. நாம் நம் முழு வாழ்க்கையிலும் செய்த பாவங்களை தேவன் துடைத்து போட்டதால் கர்த்தரின் நீதியை நம்மால் விசுவாசிக்க முடிகிறது. அப்படியில்லையெனில், நம்மால் கர்த்தரின் நீதியை பெறவே முடியாது.
 
 
பெருமை பாராட்ட கர்த்தரின் நீதி மட்டுமே இருக்கிறது
 
வசனங்கள் 27-31 கூறுகின்றன, “இப்படியிருக்க, மேன்மைப் பாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியா பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப் பிரமாணத்தினாலேயே. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன்? புற ஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம், புற ஜாதிகளுக்கும் அவர் தேவன் தான். விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துகிறோமே.”
சட்டத்தை நிலை நிறுத்துகிறோம் என்பது நம் செய்கைகளினால் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் படமுடியாது என்று பொருள்படுகிறது. நாம் பலவீனமும் குறைவானதுமான படைக்கப்பட்டவைகள், ஆனால் கர்த்தரின் வார்த்தை மூலமாக, அவரின் நீதியினால் நம்மை நிறைவாக்கினார். கர்த்தரின் நீதியின் வார்த்தையை விசுவாசித்தல் நம்மை இரட்சித்தது. நாம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்ட பிறகு கூட “நீ குறையுள்ளவன், ஆனாலும் உன்னைப் பரிசுத்தப்படுத்தினேன். ஆகவே கர்த்தரின் நீதியினால் அவரை நெருங்கிச் சேர்.” என்று நம் தேவன் நம்மிடம் பேசுகிறார்.
வசனம் 27 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “இப்படியிருக்க மேன்மைப்பாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப் பிரமாணத்தினாலேயே.” கர்த்தர் ஏற்படுத்திய அவரின் நீதியின் சட்டத்தை ஒருவன் தெரிந்துகொண்டு அவரின் நீதியின் சட்டத்தை விசுவாசிக்க வேண்டும். “எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப் பிரமாணத்தினாலேயே.”
கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும்போது மட்டுமே நம் பாவங்களில் இருந்து நாம் விடுதலையாகிறோமே தவிர நம் சொந்த செய்கைகளினாலே அல்ல என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ரோமர் 3 ஆம் அதிகாரம் இப்பகுதியை அப்போஸ்தலனாகிய பவுலின் மூலம் பேசுகிறது. “அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்கமாட்டாது.” கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கிறவன் உறுதியாக நிற்பான், ஆனால் கர்த்தருடைய நீதியை விசுவாசியாதவன் விழுந்து போவான்.
ரோமர் 3ஆம் அதிகாரம் கர்த்தரின் நீதியை தெளிவாக வெளிப்படுத்துகிறது. தம் சொந்த யோசனைகளை விசுவாசிப்பவர்களை விழச் செய்ய கர்த்தர் தன் நீதியின் சட்டத்தினை நிறுவினார் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கர்த்தர் நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் முற்றிலும் இரட்சித்தார். ஆகவே, கர்த்தரின் நீதியை வெளிப்படுத்தும் அவரின் வார்த்தையை விசுவாசிப்பதன் மூலம் நாம் நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படலாம். அவரின் நீதியை விசுவாசிப்பதன் மூலம் கர்த்தரின் ராஜ்யத்தை சுவீகரிப்பதுடன் அவருடன் சமாதானமாகவும் இருக்கலாம்.
கர்த்தருடைய நீதியை விசுவாசிக்காதவர்களால் தம் இருதயங்களில் சமாதானத்துடன் இருக்க முடியாது. ஒருவன் ஆசீர்வதிக்கப்பட்டவனா இல்லை சபிக்கப்பட்டவனா என்பது அவன் கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கிறானா இல்லையா என்பதிலிருக்கிறது. கர்த்தரின் நீதியின் வார்த்தைகளை ஒருவன் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அவனும்/அவளும் கர்த்தரின் வார்த்தைகளின்படி நியாயம் தீர்க்கப்படுவர். இரட்சிப்பு கர்த்தரின் அன்பிலிருந்து தொடங்கிற்று, அவரின் நீதியை விசுவாசிப்பதினால் நம் பாவங்களிலிருந்து இரட்சிப்பைப் பெறுகிறோம். கர்த்தரின் நீதியின் மேல் இந்த விசுவாசத்தை நமக்களித்த தேவனை நாம் புகழுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுலின் விசுவாசம் நம்மிடமிருக்கிறது என்பதால் நன்றி கூறுவோமாக. தேவனை நாம் புகழுகிறோம்.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து, எல்லா பாவங்களிலுமிருந்து நாம் விடுதலையானதால், அவரைப் புகழ்ந்து அவருக்கு நன்றி கூறுவோமாக. இரட்சிப்பு, விசுவாசம், அல்லது கர்த்தரின் ஆலயம், ஆகியவற்றில் அது இல்லாதிருந்தால், நம்மால் பாவமன்னிப்பை பெற்றிருக்கவே முடியாது. நாம் உண்மையாகவே இருதயத்தினால் கர்த்தரின் நீதியை விசுவாசித்தோம், இரட்சிப்பைக் குறித்து வாயினால் அறிக்கைச் செய்தோம். நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும், தம் நீதியால் இரட்சித்த கர்த்தருக்கு நாம் நன்றி கூறுகிறோம்.