• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 3-2] விசுவாசத்தினால் மட்டுமே பாவங்களிலிருந்து இரட்சிப்பு (ரோமர் 3:1-31)

(ரோமர் 3:1-31)
“இப்படியானால் யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன? அவர்களுடைய விசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக் கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும். ஆனாலும் என்ன? அவர்களைப் பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப் படுத்தினோமே. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி, ஏகமாய்க்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும், இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழியிலிருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்¨, என்று எழுதியிருக்கிறதே. மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால் எந்த மனுஷனும் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவ நீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக் குறித்து நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியயைக் காண்பிக்கும் பொருட்டாகவும். கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். இப்படியிருக்க, மேன்மைப் பாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியா பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப் பிரமாணத்தினாலேயே. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன்? புற ஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம், புற ஜாதிகளுக்கும் அவர் தேவன் தான். விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துகிறோமே.”
 
 
மக்களுடைய அவிசுவாசம் தேவனுடைய இரட்சிப்பை ஒன்றுமில்லாததாக்காது
 
சட்டத்தை நிறைவேற்றியதும் கர்த்தரின் கிருபையின் விடுதலையும் நம் செய்கைகளின் மூலம் நமக்குக் கொடுக்கப்படாமல், விசுவாசத்தின் மூலம் நமக்கு கொடுக்கப்பட்டது என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். கர்த்தரின் இரட்சிப்பின் மூலம் நாம் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு நீதிமான்களானோம். “இப்படியானால் யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன? அவர்களுடைய விசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்கமாட்டாது.” (ரோமர் 3:1-4)
யூதர்களுக்கு கிட்டிய அதிக வாய்ப்பு என்னவெனில் கர்த்தரின் வார்த்தை அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் தம் மூதாதையர்களின் மூலமாக கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு வாழ்ந்தார்கள். கர்த்தர் தம் வார்த்தையை அவர்களுக்கு கொடுத்ததாலும், அது சந்ததி சந்ததியாக வந்தமையாலும், யூதர்கள் தம்மை புறஜாதியாரை விட உயர்ந்தவர்கள் என்று எண்ணினர். ஆயினும் யூதர்களை அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலைச் செய்த இயேசுவை அவர்கள் விசுவாசிக்காததால் கர்த்தர் அவர்களை விட்டு விலகினார் என்று வேதாகமம் கூறுகிறது.
பவுல் கூறினான், “சிலர் விசுவாசியாமற் போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?” மக்களின் அவிசுவாசத்தால் கர்த்தரின் நீதியை ஒன்றுமில்லாததாக்க முடியாது. “கர்த்தருடைய உண்மை” என்பது “கர்த்தரின் நேர்மை” என்று பொருள்படும். யூதர்கள் கர்த்தரின் நேர்மையையும் பாவத்திலிருந்து இரட்சிப்பையும் விசுவாசிக்காததால் அது ஒன்றுமில்லாது போகாது என்று அவன் பொருள் படக்கூறினான். கர்த்தரின் வார்த்தையின் உறுதிமொழியை, விசுவாசிப்பவரை அவர் இரட்சிக்கிறார், என்பதை அவர்கள் விசுவாசிக்கா விட்டாலும் அது ஒன்றுமில்லாததாகாது.
யூதர்கள் விசுவாசிக்காவிட்டால் புறஜாதியார் அதனை விசுவாசிப்பார்கள். யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் கூறுகிறார். ஆகவே, கர்த்தர் தம் வார்த்தையை அவர்களுக்கு கொடுத்திருந்தாலும், கர்த்தரின் உறுதிமொழிக்கேற்ப சத்தியத்தின் வார்த்தை நிறைவேற்றப்பட்டது என்பதை யூதர்கள் விசுவாசிக்காததால் கர்த்தர் யூதர்களை விட்டுவிலகினார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூற்று கீழ்கண்டவாறு: கர்த்தர் எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பாகிய பரிசை வழங்கினார். கர்த்தர் அதனை பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணியதாகவும், அவர் தம் ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை உலகிற்கு அனுப்பியதன் மூலம் அதனை நிறைவேற்றியதாகவும் அவர் கூறுகிறார். சில மக்கள் கர்த்தரின் நற்செய்தியை விசுவாசிக்கிறார்கள், ஆனால் மற்றவர்கள் விசுவாசிப்பதில்லை. ஆகவே அவர் வாக்குத்தத்தம் செய்ததுபோல, விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் பிள்ளையாக ஆசீர்வதிக்கப்படுவர். எத்தனை மக்கள் என்பதைப் பொறுத்து கர்த்தரின் ஆசீர்வாதம் நிறுத்தப் பட்டுவிடுவதில்லை.
 
 
உண்மையை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் அவரின் பெரிதான அன்பைப் பெறுவார்கள்
 
சத்தியத்தின் வார்த்தைகளை யாரெல்லாம் கேட்டு அதனை விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் கர்த்தரின் பெரிதான அன்பைப் பெறுவார்கள், ஆனால் அவிசுவாசிகள் கர்த்தரைப் பொய்யர் என்கின்றனர். கர்த்தர் தன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார், ஆயினும் அவிசுவாசிகள் கர்த்தரின் இரட்சிப்பிலிருந்து விலக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் பாவமன்னிப்பின் கிருபையை விசுவாசிப்பதில்லை.
பவுல் கூறினான், “அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்க மாட்டாது” கர்த்தர் ஒருமுறை வாக்குத்தத்தம் பண்ணி அவரின் இரட்சிப்பையும் மகிமையையும் நேர்மையாக எல்லா மக்களுக்கும், ஈவாக வழங்கினார்.
கர்த்தரின் ஈவு எதுவென்று வேதாகமம் கூறுகிறது? பிதாவாகிய கர்த்தர் தம் அன்பு மகனை அனுப்பி அவர் மூலமாக பாவமன்னிப்பை விசுவாசிப்பவர்களுக்கு, தம் பிள்ளைகளாகும் கிருபையை அளித்தார். உலகம் உருவாவதற்கு முன்பே அவரின் நீதியின் மூலமாக எல்லா மக்களுக்கும் தம் பிள்ளைகளாகும் மகிமையை கொடுக்கவும் பாவத்திலிருந்து இரட்சிக்கவும் திட்டமிட்டார். இதனை அவர் உண்மையாக நிறைவேற்றினார். ஆகவே, கர்த்தரின் வார்த்தைக்கேற்ப விசுவாசிகள் ஆசீர்வதிக்கப்படுவர், அவிசுவாசிகளோ அதற்கேற்றபடி தீர்க்கப்படுவர்.
அவிசுவாசிகள் நரகம் செல்வது மிகவும் சரியே. அவரின் வார்த்தை மீதுள்ள விசுவாசத்தால் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு கர்த்தர் ஒரு சட்டத்தை ஏற்படுத்தினார். மக்கள் விசுவாசிக்காவிட்டாலும், கர்த்தரின் உண்மை எப்போதும் ஒன்றுமில்லாததாகாது என்றும் அவர் கூறுகிறார். கர்த்தரின் இரட்சிப்பின் உண்மையை ஏற்றுக்கொண்டதால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம். கர்த்தர் கூறுகிறார், “நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.” (ரோமர் 3:4)
ஒவ்வொரு மனிதனும் பொய்யன். கர்த்தர் உண்மையானவர். ஏன்? ஏனெனில் கர்த்தர் “நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி” என்று கூறினார். கர்த்தர் தாம் முன்னமே வாக்குத்தத்தம் பண்ணுகிறவர் என்றும், ஆசீர்வதிக்கப் படப்போகிறவர்களை ஆசீர்வதிப்பதாகவும், சபிக்கப் படப்போகிறவர்களை சபிப்பதாகவும் கூறுகிறார். விசுவாசிகளை ஆசீர்வதிப்பதும், அவிசுவாசிகளை சபிப்பதும் கர்த்தருக்கு சரியானது. கர்த்தர் கூறுகிறார், “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.”
“நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று” தம்முடைய வார்த்தையின்படி மக்களை இரட்சிப்பதாக அவர் கூறுகிறார். வார்த்தை மாமிசமாகி, நமக்குள் சஞ்சரித்து, நம்மை இரட்சித்தது. ஆகவே தேவன் தன் வார்த்தைகளின் நீதியுள்ளவரானார்
எழுதப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தையினால் தேவன் சாத்தானை முறியடித்தார். தேவன் தனக்கு முன்பாகவும், சாத்தான் மற்றும் அனைத்து ஆவிக்குரியவர்களுக்கு முன்பாகவும் நீதியும் நேர்மையும் மிக்கவரானார், ஏனெனில் அவர் வாக்குத்தத்தம் பண்ணியதை நிறைவேற்றினார். ஆயினும், மனிதர்கள் உண்மையானவர்களல்ல. அவர்கள் மோசமான நிலையிலிருக்கும்போது அதற்கேற்றார்போல் அவர்களின் நடத்தை மாறிவிடுகிறது. அதே நேரம் கர்த்தர் தன் வாக்குத்தத்தத்தை எப்போதும் முறித்ததில்லை. ஆகவே நம் விசுவாசம் கர்த்தரின் வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டுமென அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான்.
 
 
நம்முடைய அநீதி கர்த்தருடைய நீதியை விளங்கப் பண்ணுகிறது
 
ரோமர் 3:5 கூறுகிறது, “நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?” மனிதர்கள் அநீதியானவர்கள், ஆனால் அவர்களின் அநீதியானது கர்த்தரின் நீதியாகிய இரட்சிப்பை விளங்கச் செய்தால், நாம் என்ன கூறுவோம்? நம்முடைய பாவங்கள் கர்த்தரின் நீதியை விளங்கப்பண்ணினால் நாம் என்ன கூறுவோம்?
நம்முடைய பாவங்களினாலும் அநீதியினாலும் கர்த்தரின் நீதி அதிகப்படியாக வெளிப்பட்டது. கர்த்தர் உண்மையாகவே நேர்மையானவர். அவரே நம் இரட்சிப்பின் தேவனும், இரட்சகரும், உண்மைக் கர்த்தருமானவர், அவர் நம்மை தம் வார்த்தையினால் இரட்சிப்பதாக வாக்குத்தத்தம் பண்ணி அதனை நிறைவேற்றினார். நம்முடைய பலவீனத்தினால் கர்த்தரின் நீதி வெளிப்பட்டால் நாம் என்ன சொல்லுவோம்? நாம் மரிக்கும்வரை பாவம் செய்வதால், நம் தவறுகள் கர்த்தரின் நீதியை அதிகமாக வெளிப்படுத்தின.
கர்த்தர் அன்பின் தேவன் என்று நமக்கு எப்படித் தெரியும்? நம்முடைய தவறுகளினால் அதனை நாம் அறியலாம். நம் வாழ்க்கையில் நாம் மரிக்கும் கடைசி நாள் வரை பாவம் செய்வதால் நம் மூலமாக கர்த்தரின் அன்பு வெளிப்பட்டது, உலகின் பாவங்களை ஒரே தரமாக துடைத்து விட்டதாக தேவன் கூறினார். பாவம் செய்யாத நல்ல மக்களை கர்த்தர் நேசித்தால் அவர் அன்பு குறைவுள்ளதாக இருக்கும். அவருடைய உண்மையான அன்பினால், நேசிக்கவே முடியாத பாவிகளாகிய நம்மை எற்றுக்கொண்டார்.
மனிதர்களாகிய நாம் அநீதியானவர்கள், கர்த்தருக்கு துரோகம் செய்பவர்கள். நாம் அவரை விசுவாசிப்பதில்லை கர்த்தருக்கு முன்பு அன்பு நிறைந்த பக்கம் நம்மிடமில்லை. பாவிகள் தீமையானவற்றையே செய்பவர்கள், ஆனால் இயேசுவோ நம்மை நம் எல்லா பாவங்களிலிருந்தும் மீறுதல்களிலிருந்தும் இரட்சித்து நம்மீதுள்ள கர்த்தரின் அன்பை நிறைவேற்றினார்.
மனிதர்கள் சாத்தானின் வஞ்சனையினால் பாவம் செய்து நரகம் செல்லவிருந்தபோது சாத்தானின் இருளிலிருந்தும் சாபத்திலிருந்தும் நம்மை இரட்சிக்க கர்த்தரின் நீதி மற்றும் அன்பினால் தம்முடைய ஒரே பேறான குமாரனை நம்மிடம் அனுப்பியதாக அவர் கூறுகிறார். அதுவே கர்த்தரின் அன்பும் இரக்கமும் ஆகும்.
“நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்?” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். விசுவாசிகளின் சிந்தனைகளும் அவிசுவாசிகளின் சிந்தனைகளும் இந்த வசனத்தில் பிரிக்கப்படுகிறது. பரலோக ராஜ்யத்தினுள் செல்லவும், கர்த்தரினால் ஆசீர்வதிக்கப்படவும் ஏதுவாக அவிசுவாசிகள் நல்லவர்களாக இருக்க முயல்கிறார்கள். ஆனால் பவுல் ஒரு மாறுபட்ட கருத்தை தெரிவிக்கிறான். “நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்?” மனிதர்களாகிய நம்மால் கர்த்தருக்கு முன்னால் பாவம் செய்வதை விட்டு அவரின் நீதியை செய்யமுடியாது என்பதோடு, நம்முடைய தீய தன்மை கர்த்தரின் உண்மை அன்பை விளங்கப்பண்ணியது என்றும் பவுல் கூறுகிறான். ஆம் அது உண்மை. மனிதர்களெல்லாம் மோசமானவர்கள், அவர்களால் நீதிமானாயிருக்கமுடியாது, ஆனால் தேவன் அவர்களை அவர்களின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார்.
 
 
கர்த்தருடைய நீதியினால் இரட்சிக்கப்பட்டோம்
 
மனிதர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது என்றும் அவர்கள் பாவங்களின் பொறியில் சிக்கியிருப்பதாகவும் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். தேவன் அத்தகைய பாவிகளை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்து அவர்களை நேசித்தார். நம்மால் தினமும் பாவம் செய்வதை தவிர்க்க முடியாததாகையால் நமக்கு அவரின் நிறைவான அன்பு தேவைப்படுகிறது. இயேசுவின் முழு அன்பினாலும், அவரின் இலவச கிருபையினாலும், இயேசுகிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பின் வரத்தினாலும், நாம் இரட்சிக்கப்பட்டோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் தான் இரட்சிக்கப்பட்டது கர்த்தரின் நீதியால் என்று கூறுகிறான். எல்லா பாவிகளையும் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்க கர்த்தர் செய்தது அவரின் நீதியை காட்டுகிறது. நற்செய்தியை விசுவாசித்தது, தன்னை இரட்சித்ததாக பவுல் கூறுகிறான். கர்த்தரின் நீதி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் வெளிப்பட்டது. கர்த்தர் நமக்காகச் செய்த நீதியின் செய்கையில் நமது இரட்சிப்பு சார்ந்திருக்கிறது. ஆகவே, விசுவாசத்தினால் பாவிகள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டனர். மறுபடியும் பிறக்காதவர்கள், தாம் பரலோக ராஜ்யம் செல்வதற்காக, நல்லவற்றைச் செய்யவேண்டுமென எண்ணுகிறார்கள்.
நாம் தீமையானவற்றை, வேண்டுமென்றே செய்வோம், என்று பவுல் பொருள்படும்படி கூறவில்லை, ஆனால் கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்ளாமல் நற்காரியங்களைச் செய்ய முயன்றால் மக்கள் நரகம் செல்வர். நரகம் செல்வதிலிருந்து தப்பிக்கும்படி அவர்கள் மாற்றம் பெறும்படி மனம் திரும்பி கர்த்தர் அளித்த இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தருக்கு முன் நற்காரியங்களைச் செய்வது யார்? யாருமில்லை. அப்படியானால் ஒரு பாவி அவனின்/அவளின் பாவங்களிலிருந்து விடுதலையாவது எப்படி? அவன்/அவள் தன் சொந்த யோசனைகளை மாற்றவேண்டும். விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்டதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் தாம் இரட்சிக்கப்படலாம் என்று மக்கள் எண்ணுகிறார்கள். அதனாலேயே அவர்களை விடுவிக்க முடியாது. இயேசுவை விசுவாசித்து நிறைவான பாவமன்னிப்பைப் பெற்று தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் கர்த்தரின் நீதியைக் குறித்து பெருமைப் பாராட்டி அதனை மேன்மைப்படுத்துவர்.
ஆயினும், இயேசுவை விசுவாசித்தும் மறுபடியும் பிறவாதவர்கள் தாம் நல்ல செயல்களைச் செய்தால் பரலோக ராஜ்யம் செல்ல முடியும் என்றும், நல்ல காரியங்களைச் செய்யாவிட்டால் நரகத்திற்குச் செல்வோம் என்றும் எண்ணுகிறார்கள். அவர்களுடைய விசுவாசம் தவறானது. அப்போஸ்தலனாகிய பவுலின் விசுவாசம் மறுபடியும் பிறந்தவனின் விசுவாசத்தைப் போன்றது. மறுபடியும் பிறவாதவர்கள் இயேசுவை விசுவாசிப்பதாக எண்ணினாலும் அவர்களிடம் இருப்பது தவறான விசுவாசமாகும். ஏனெனில் அவர்கள் தம் விசுவாசத்தில் தம் செய்கைகளைச் சேர்க்க முயலுகிறார்கள். நம் விசுவாசத்தில் நம் நற்செயல்களைச் சேர்த்ததால் நாம் இரட்சிக்கப்படவில்லை, மாறாக, இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றால் ஆன கர்த்தரின் நீதியை விசுவாசித்து இரட்சிக்கப் பட்டோம்.
 
 
நீதிமான் வேண்டுமென்றே பாவம் செய்ய முடியாது
 
“நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்?” நம்முடைய அநீதி தேவனுடைய நீதியையும் அவரின் அன்பையும் விளங்கப்பண்ணுவதாக வேதாகமம் கூறுகிறது. “அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப் படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.” (ரோமர் 3:7-8). அவிசுவாசிகளின் பெயர் தீர்ப்பின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது, அவர்கள் நெருப்பின் கடலில் எறியப்படுவார்கள். ஆகவே அவர்கள் மனந்திரும்பி குணப்படவேண்டும், மேலும் நீர் மற்றும் இரத்தத்தினால் நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான் “கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது.” மக்கள் எதிர்க்கின்றனர். “இயேசு ஏற்கெனவே அவிசுவாசிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்பதை விசுவாசிக்காததால் அவர்கள் மீது கோபாக்கினையைச் செலுத்தி நரகத்திற்கு அனுப்பக் கர்த்தர் அநீதரில்லையா?” என்கின்றனர். ஆனால் பவுல் கூறுகிறான், “கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? உண்மையை அவிசுவாசிகள் விசுவாசிக்காததால் அவர்கள் நரகம் செல்வது சரியானது. கர்த்தர் அநீதரல்ல.”
ரோமர் 3:7 கூறுகிறது “அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப் படுவானேன்?” அப்பொழுது மக்கள் கூறலாம், “என்னது? உங்களிடம் பாவமன்னிப்பு இருப்பதால் நீங்கள் வேண்மென்றே பாவம் செய்வீர்களா? கர்த்தருடைய நீதியால் இரட்சிக்கப்பட்டதால் நிறைய பொய் பேசுவீர்கள். வேண்டுமென்றே அதிக பாவம் செய்வீர்களா?” கர்த்தரின் நீதியைத் தெரியாமலோ அவரின் அன்பை விசுவாசிக்காமலோ, தம் தீய இருதயத்தினால் அப்படிச் செய்கிறார்கள் என்று வேதாகமம் கூறுகிறது.
நம்முடைய பாவங்களினாலும் பொய்களினாலும் கர்த்தரின் உண்மை அவரின் மகிமையால் அதிகரித்திருக்கிறது என்று பவுல் கூறுகிறான். ஆனால் மக்கள் பவுலுக்கு எதிராக தம் சொந்த சிந்தனைகளினால் குழப்பினர், “செய்கையில்லாமல் விசுவாசத்தினால் மட்டும் நீங்கள் இரட்சிக்கப்பட்டதாக விசுவாசித்தால் அநேகப் பாவங்களைச் செய்வீர்கள்” என்றனர். பாவம் செய்ய வேண்டுமென்றே மக்கள் பாவம் செய்கின்றனர் என்பது உண்மையாகாது. அவர்கள் பாவிகளாக பிறந்ததினால் பாவம் செய்வதை அவர்களால் தவிர்க்க இயலாது. ஆப்பிள் மரம் ஆப்பிள் கனியைக் கொடுப்பது இயற்கை. பாவத்துடன் பிறந்த மனிதன் தொடர்ந்து பாவம் செய்வது இயற்கையானது என்று வேதாகமம் கூறுகிறது. தேவன் நீதியினால் அவர்களை இரட்சித்தார், தேவனின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே அவர்களால் விடுதலைப் பெறமுடியும்.
“நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்” (ரோமர் 3:8). கள்ளப்போதகர்களினால் வஞ்சிக்கப்பட்டவர்கள் இந்த வழியில் தாம் இயேசுவை விசுவாசிப்பதாக நம்புகிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுலால் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன் ரோமர் நிருபம் எழுதப்பட்டது. இந்நாளின் அவிசுவாசிகளைப் போல், அக்காலத்திலும் அநேக மக்கள் இப்படியாகவே நினைத்தார்கள். பவுலின் காலத்தின் அவிசுவாசிகளைப் போண்று, இக்காலத்திலும் விசுவாசிக்கின்றனர், அவர்கள் “உங்கள் எதிர்காலப் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றும், நீங்கள் பாவமில்லாதவர்கள் என்றும், பாவமன்னிப்பு பெற்றவர்கள் என்பதாலும் வேண்டுமென்றே பாவம் செய்வீர்களா?” என்று கேட்கிறார்கள்.
மாமிசத்தின் நம்பிக்கையில்லா சிந்தனைகளின்படி அவிசுவாசிகள் செய்கின்றனர். அவர்கள் மாமிசத்தின் தவறான சிந்தனைகளின் காரணத்தினால், அவர்களால் கர்த்தரின் இரட்சிப்பு எனும் சத்தியத்தினுள் பிரவேசிக்க முடியாது. பாவமன்னிப்பு பெற்ற பிறகு நீதிமான்களும் கூட பாவம் செய்கிறார்கள் தான், ஆனால் அதற்கொரு எல்லை இருக்கிறது. அவர்கள் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பதற்கு முன்னால், பாவிகளுக்கு தாம் பாவம் செய்கிறோம் என்றும், அவர்கள் செய்தது பாவம் என்றும் அறியாததால் பாவிகள் தொடர்ந்து பாவம் செய்கிறார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஆயினும், நீதிமானால் துணிகரமாக பாவம் செய்ய முடியாது, ஏனெனில் அவன் கர்த்தரின் அரசாட்சியில் இருக்கிறான் என்று வேதாகமம் கூறுகிறது.
சில மக்கள் அப்போஸ்தலனாகிய பவுலிடம் கேட்டனர், “கர்த்தர் உன்னை இரட்சித்ததால், நல்லது வரும்பொருட்டு தீயவற்றை நீ செய்யவேண்டாமா? கர்த்தரின் நீதி அதிகமாக வெளிப்பட நீ அதிக தீயவற்றைச் செய்.” அவர்களுக்கு வரும் ஆக்கினை நீதியானது என்று பவுல் கூறுகிறான். அவர்கள் தீர்க்கப்பட்டு நரகம் செல்வது சரியானது என்று பொருள்படும்படி அவன் கூறினான். ஏன்? ஏனெனில் அவர்கள் விசுவாசத்தை சார்ந்திராமல் தம் செய்கையில் சார்ந்திருக்கிறார்கள்.
 
 
கர்த்தரின் நீதியானது எப்பொழுதும் ஒன்றுமில்லாததாகாது
 
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான், “சிலர் விசுவாசியாமற் போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?” அவர்கள் கர்த்தரின் இரட்சிப்பை விசுவாசிக்கவில்லை என்ற காரணத்தால் அது கர்த்தரின் இரட்சிப்பை ஒன்றுமில்லாததாக்குமோ? விசுவாசித்தால் அவர்கள் இரட்சிக்கப்படுவர், விசுவாசிக்காவிட்டால் கிருபையின் பாவமன்னிப்பை அவர்கள் இழப்பர். கர்த்தருடைய நீதி உறுதியாக இருக்கிறது. புரிந்துகொள்கிறீர்களா? நரகம் செல்பவர்கள் விசுவாசிப்பதை தேர்ந்தெடுக்காததால் நரகம் செல்ல தாமாகவே முன் வந்தனர். கர்த்தரின் செய்கைகளும் பாவத்திலிருந்து கிருபையின் இரட்சிப்பும் எப்பொழுதும் ஒன்றுமில்லாததாகாது. அவை உறுதியாக நிற்கின்றன.
தேவனின் இரட்சிப்பிற்கு, செய்கையின் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த மனித முயற்சிகளுடன் எந்த தொடர்புமில்லை. விசுவாசிகளுடன் மட்டுமே அது தொடர்புடையது. கர்த்தரின் சத்தியத்தின்படி விசுவாசிகள் இரட்சிக்கப்பட்டனர், ஆனால் அவரின் சத்தியத்தை புறம்பேத்தள்ளியதால் அவிசுவாசிகள் இரட்சிக்கப்படாமல் நரகம் செல்லுவர். கர்த்தர் “தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும்” (ஏசாயா 8:14) அனுப்பினார். அவன்/அவள் எத்தனை மோசமானவர்களாக இருந்தாலும் யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் நீதிமானாக்கப்பட்டு, அழியாத வாழ்வையும் பெற்றுக் கொண்டனர். அவன்/அவள் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் பாவத்தின் சம்பளத்தின் காரணத்தால் நரகம் செல்வர். பாவமன்னிப்பை விசுவாசிக்காதவர்களுக்கு இயேசு இடறுதலின் கன்மலையும் தடுக்கும் கல்லுமாக இருப்பார்.
 
 
பாவமுள்ள நீதிமான் யாருமில்லை
 
நல்லவர்களைப் போல் காட்டிக் கொள்பவர்களுக்கு இரட்சிப்பிற்கான விசுவாசத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பேசுகிறான். ஆகவே, விசுவாசத்தைக் குறித்து கூறும் கர்த்தரின் வார்த்தையாக மக்கள் ரோமர் நிருபத்தை கருதுகின்றனர். தம்மை நீதிமான் என்று கூறுக்கொள்பவர்களைக் குறித்து சில மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர். இயேசுவினால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டால் அவர்கள் நீதிமான்கள், ஏனெனில் அவர்களின் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன, “இயேசு உண்மையுள்ளவர்” என்பதன் பொருள் “அவர் பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து உண்மையாகவே இரட்சித்தார்” என்பதாகும். சில மக்கள் தம்மை “விடுதலையான” பாவிகள் என்கின்றனர், ஆனால் கர்த்தருக்கு முன் அத்தகைய மக்கள் இருக்க முடியாது. அவன்/அவள் தன் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு ஒரு நபரால் எப்படி இன்னமும் பாவியாக இருக்க முடியும்? இயேசு நம்மை இரட்சித்ததால் நாம் இரட்சிக்கப்பட்டவர்கள், இயேசு நம்மை இரட்சிக்காவிட்டால் நாம் பாவிகள். இரட்சிப்பிற்கு “நடுவானது” எதுவுமில்லை.
பாவமுள்ள நீதிமான் யாரும் உள்ளார்களா? பாவமுள்ள நீதிமான் யாருமில்லை. அவனிடம்/அவளிடம் பாவமிருந்தால் அந்நபர் பாவி. அவன்/அவள் இயேசுவை விசுவாசித்தால் அந்நபர் நீதிமானும் பாவங்களுமற்றவர். அன்றாட மற்றும் எதிர்காலப் பாவங்களை நாமெப்படி சரிசெய்கிறோம். மக்கள் தாம் தினமும் மரிக்கும் வரை பாவம் செய்வதால் தாம் தப்பிக்க முடியாத பாவிகள் என்று எண்ணுகின்றனர். ஆயினும், எதிர்காலப்பாவங்கள் உட்பட உலகின் பாவங்களை இயேசு யோர்தான் நதியில் ஏற்றுக்கொண்டு அதற்காக சிலுவையிலறையப்பட்டார் என்ற நற்செய்தியை விசுவாசிப்பதால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம்.
“பாவமுள்ள நீதிமான்” என்பது பொருளற்றது. அவனின்/அவளின் கடன் முற்றிலுமாக கொடுக்கப் பட்டுவிட்டால் கூட அவன்/அவள் இன்னமும் கடனில் இருக்கிறார் என்று நினைப்பது சரியா? அதிக காசு வைத்திருக்கும் ஒரு மனிதன் இருந்தான், அவன் மகன் வளர்ந்து வரும்போது அந்த நகரத்திலுள்ள அனைத்து கடைகளிலும் கடனுக்கு மிட்டாய் வாங்கும் மோசமான பழக்கத்தில் விழுந்தான். ஆயினும், அவன் பணக்காரத் தந்தை எல்லா கடைகளுக்கும், அவன் மகனின் வாழ்வு முழுவதற்குமான பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டான். அவன் மரிக்கும் வரை பணம் செலுத்தாமல் தினமும் மிட்டாய் சாப்பிட்டு மகிழ்ந்திருந்தாலும் அவனால் கடனாளியாகவே முடியாது.
யோர்தான் நதியில் ஒரே தரமாக நம் பாவங்களை தம் மீது ஏற்றுக்கொண்டு, தன் நீதியினால் தேவன் நம்மை இரட்சித்தார். அவர் நம் அனைவரையும் நிறைவாக இரட்சித்தார் ஆகவே, எத்தனை பலவீனர்களாக இருந்தாலும் நாம் மீண்டும் பாவிகளாகவே முடியாது. அவர் செய்ததை நாம் மறுக்காவிட்டால் நீதிமானாவோம் என்று கர்த்தர் கூறுகிறார்.
 
 
மனித மனதினால் நற்செய்தியை விசுவாசிக்கவோ மறுபடியும் பிறக்கவோ முடியாது
 
‘விடுதலையான` பாவிகள் என்று தம்மைக் குறித்து கூறும் கிறிஸ்தவர்கள் தம் மனித மனத்தினால் யோசிக்கின்றனர். ஆவிக்குரிய மனதுள்ளாவராவதற்கு கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கவேண்டும். மனித சிந்தனையுள்ள மனம் மனிதர்களுடையது. அது மனிதர்களின் அறிவு. மாமிசத்தினால் பாவம் செய்யாதிருக்க முடியாது, ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையை விசுவாசிப்பதால் நாம் நீதிமானாக முடியும்.
இயேசுவை விசுவாசித்த பிறகு பாவமே செய்யாத ஒரு புனிதமான நபரால் பரலோக ராஜ்யத்திற்குள் செல்ல முடியுமா? அல்லது அது இரட்சிப்பினால் மட்டும் ஒரேதரமாக சாத்தியமாயிற்றா? பாவக்கிரயத்தின் கிருபையால் உண்மையாகவே பாவிகள் நீதிமான்களாக்கப் பட்டார்களா? உன்னுடைய மனித மனதினால் உன்னால் நீதிமானாவது சாத்தியமில்லாத ஒன்று. மாமிசத்தினால் நீதியுடையதாக முடியாது. மாமிசத்திற்கு எப்பொழுதெல்லாம் பசியெடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் அதற்கு உணவு தேவை.
மாமிசத்திடம் இச்சைகளும் ஆசைகளுமிருப்பதால் அதனால் பரிசுத்தமாவது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே, இயேசுவின் நீர் மற்றும் இரத்தத்தை விசுவாசிப்பதினால் மட்டும் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம். இனிமேல் பாவம் செய்யாது பனியைப் போல் நம்மை நாமே சுத்தமாக்கிக் கொண்டால் பரலோக ராஜ்யத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியுமா? மாமிசத்தின் இச்சைகளும் விருப்பங்களும் உள்ள மனிதன், பாவத்தைத் தவிர்த்து பரிசுத்தமாகலாம் என்று நினைப்பது கர்வமான சிந்தனையாகும், அதற்கு சாத்தியமேயில்லை.
மனித மனங்களால் அவர்கள் விசுவாசத்தைக் குறித்து சிந்திப்பதால் அவர்களால் நற்செய்தியை நம்பவோ மறுபடியும் பிறக்கவோ முடியாது. இயேசு கூறினார், “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.” (யோவான் 3:6)
மனித மனதினால் நீதிமானாவது சாத்தியமேயில்லை. இயேசுவை இன்றுவரை விசுவாசித்து எத்தனையாய் மனம் வருந்தினாலும், நாளை நீங்கள் பாவம் செய்யப்போவதால் அது சாத்தியமேயில்லை என்று நினைக்கலாம். ‘இப்போது கூட நான் தொடர்ந்து பாவம் செய்தாலும் என்னிடம் பாவமில்லை என்று நானெப்படி கூறமுடியும்?` மாமிசம் செய்வது போல், மனித மனதினால் நீங்கள் சிந்தித்தால் நீங்கள் நீதிமானாவது சாத்தியமாகுமா? மாமிசத்தால் பரிசுத்தமாவதற்கு சாத்தியமேயில்லை.
 
 
ஆயினும், கர்த்தரால் நம்மை நீதிமானாக்கமுடியும்
 
ஆயினும், மனிதர்களால் முடியாவிட்டாலும் கூட கர்த்தரால் நம்மை நிறைவாக இரட்சிக்க முடியும். கர்த்தரால் நம் மனசாட்சியை சுத்தமாக்கி, நம்மை நீதிமான்களென்றும், அவரே நம் பிதாவும் இரட்சகரும் ஆவார் என்று கூறச் செய்ய முடியும். உங்கள் இருதயத்தினால் உண்மை வார்த்தையை விசுவாசிப்பதிலிருந்து நம்பிக்கைத் தொடங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அது சத்திய வார்த்தையிலிருந்து தொடங்குகிறது. நம்மிருதயங்களினால் உண்மை வார்த்தையை விசுவாசிப்பதினால் நாம் நீதிமானாக்கப் பட்டோம். மாமிசத்தின் செய்கைகளினால் நம்மை நீதிமானாக்கவே முடியாது.
ஆயினும், அவர்கள் தம் சிந்தனைகளினால் அகப்பட்டுக் கொண்டுள்ளதால், மறுபடியும் பிறவாதவர்களால் தம் சொந்த சிந்தனைகளிலிருந்து விடுபட முடியாது. அவர்கள் தம் மனித மனங்களினால் சிந்திப்பதால் தாம் நீதிமான்கள் என்று கூறமுடியாது. அதற்கு மாறாக, நாம் நீதிமான்கள் என்று கூறுவதற்கான விசுவாசம் கர்த்தரின் வார்த்தையின் சத்தியத்தை தெரிந்துகொள்வதிலிருந்து தொடங்குகிறது. நீங்கள் உண்மையாகவே மறுபடியும் பிறக்கவேண்டுமானால், இன்னொரு மறுபடியும் பிறந்தவரின் உண்மை வார்த்தையை கேட்பதாலேயே மறுபடியும் பிறக்க முடியும், ஏனெனில் மறுபடியும் பிறந்தவரிலுள்ள பரிசுத்த ஆவியானவர் உண்மையுடன் செயலாற்ற விரும்புவதோடு “எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.” (1 கொரிந்தியர் 2:10). மக்கள் நீதிமானின் மூலம் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு மறுபடியும் பிறக்கமுடியும், ஏனெனில் மறுபடியும் பிறந்த நீதிமானுள் ஆவியானவர் சஞ்சரிக்கிறார். அதனை உங்கள் மனதில் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். மறுபடியும் பிறக்கும் கிருபை உங்களுக்கு வேண்டுமானால், மறுபடியும் பிறந்த நீதிமானை நீங்கள் சந்திக்க வேண்டும்.
ஆபிரகாம் இஸ்மவேலையும் ஈசாக்கையும் பெற்றெடுத்தான். இஸ்மவேல் அடிமைப் பெண்ணிற்கு பிறந்தவன். ஈசாக்கு பிறக்கும்போது இஸ்மவேல் 14 வயதுடையவனாயிருந்தான். சுதந்திரமான பெண்ணிற்கு பிறந்த ஈசாக்கை இஸ்மவேல் துன்புறுத்தினான். யாருக்கு புத்திர சுவீகார உரிமை இருக்கிறது? சுதந்திரமான பெண்ணிற்கு பிறந்த ஈசாக்கிற்கே புத்திர சுவீகார உரிமை இருக்கிறது.
இஸ்மவேல், ஈசாக்கை விட மூத்தவனும் மாமிச பலமுள்ளவனாகவும் இருந்தாலும், ஈசாக்கிற்கு புத்திர சுவீகார உரிமை இருந்ததோடு அது அங்கீகரிக்கப்பட்டுமிருந்தது. ஏன்? ஈசாக்கு கர்த்தரின் கர்த்தரின் வார்த்தைக்குப் பிறகு பிறந்தான். மனித சிந்தனைகளினால் உருவாக்கப்பட்ட விசுவாசம் மணற்கோட்டையைப் போன்றது. மக்கள் கர்த்தரின் வார்த்தையின் சத்தியத்தைப் கற்று அதனை விசுவாசிக்கும் போது மட்டுமே மறுபடியும் பிறக்கமுடியும்.
“ஆனாலும் என்ன? அவர்களைப் பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப் படுத்தினோமே. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:9-10). இந்த வசனங்கள் என்ன கூறுகின்றன? மறுபடியும் பிறப்பதற்கும், மறுபடியும் பிறந்ததற்கும் பிறகுள்ள மனிதநிலைகளை இவ்வசனங்கள் குறிக்கின்றனவா? மறுபடியும் பிறப்பதற்கு முன் நாமெல்லாம் பாவிகளாயிருந்தோம். “நீதிமான் ஒருவனாகிலுமில்லை” என்பதே, இயேசு உலகின் எல்லா பாவங்களையும் துடைப்பதற்கு முன்பிருந்த மனித குலத்தின் நிலையாகும், இயேசுவை விசுவாசிக்காமல் யாராலும் பரிசுத்தமடைய முடியாது.
“படிப்படியாக பரிசுத்தமாதல்” என்பது உலக மதங்களைப் பின்பற்றும் சிலைகளை வணங்குபவர்களிடமிருந்து வந்தது. “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” என்று வேதாகமம் கூறுகிறது. தனக்குத்தானே பயிற்சியளிப்பதன் மூலம் எப்படி பரிசுத்தவனாக முடியும்? ஒரு மனிதனால் அவனாலோ/அவளாலோ நீதிமானாக முடியாது. தன்னால் நீதிமானாகிப் போகிறவனும் இல்லை, நீதிமானானவனும் இல்லை. அவன்/அவள் முயற்சிகளினால் பாவமில்லாமலாகியது யாருமில்லை. கர்த்தரின் வார்த்தை மீதுள்ள விசுவாசத்தினாலேயே அது சாத்தியமாகும். வேதாகமம் கூறுகிறது, “உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை” (ரோமர் 3:11).
 
 
அவர்களெல்லாரும் வழிதப்பி போனார்கள்
 
“எல்லாரும் வழி தப்பி, ஏகமாய்க்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும், இல்லை” (ரோமர் 3:12). கர்த்தருக்கு முன் மனிதன் பயனுள்ளவனா? கர்த்தர் முன் மனிதன் பயனற்றவன். மறுபடியும் பிறக்காத அனைவரும் கர்த்தர் முன் பயனற்றவர்கள். அவர்கள் அவராலே படைக்கப் பட்டவர்களாயிருந்தாலும் மழையை அனுப்பவில்லை என்று வானத்தை நோக்கி விரலை நீட்டி கர்த்தரை சபித்து போராடுவதில்லையா?
“எல்லாரும் வழி தப்பி, ஏகமாய்க்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும், இல்லை.” என்று கர்த்தர் கூறினார். அவன்/அவள் இருதயத்தில் பாவமிருக்கும் நபரால் எப்படி கர்த்தரை மகிமைப்படுத்த முடியும்? தம் பாவப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத பாவிகளால் எப்படி கர்த்தரை புகழ முடியும்? பாவியால் எப்படி கர்த்தரைப் புகழமுடியும்? பாவிகளால் கர்த்தரை மகிமைப்படுத்த முடியாது.
புகழும் ஊழியங்கள் பரவியுள்ளன. வெளிப்படுத்தின விசேஷத்தில் இருந்து வேத வசனங்களை மேற்கோள் காட்டி நற்செய்தி பாடல்களில் பாடல் வரிகளை பாவிகள் எழுதுகின்றனர். “சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வெளி 5:13). தேவன் புகழப்படத்தக்கவர்தான், ஆனால் நீதிமானால் மட்டுமே கர்த்தரைப் புகழ முடியும். பாவிகள் புகழுவதை கர்த்தர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? பாவிகள் புகழ்வது காயீனின் காணிக்கையைப் போன்றது. அவர்கள் தேவனைப் புகழுவதாக நினைத்தாலும் அவர்கள் புகழ்வது வீண், அது வெறும் வானத்தை நோக்கி பாடப்படுகிறது. ஏன்? ஏனெனில் கர்த்தர் அவற்றினால் மகிழ்வதில்லை. பாவிகளின் ஜெபத்தை கர்த்தர் கேட்பதில்லை (ஏசாயா 59:1-2).
எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. “எல்லாரும் வழி தப்பி” என்பது கர்த்தரின் வார்த்தையை தள்ளிவிட்டு தம் சொந்த யோசனைகளை அவர்கள் விசுவாசித்தனர் என்று பொருள்படுகிறது. உண்மையான தீர்ப்பு கர்த்தரின் வார்த்தையிலிருந்து வருகிறது. கர்த்தரே தீர்ப்பளிக்கிறார். மனிதனால் நீதி செய்ய முடியாது. “எல்லாரும் வழிதப்பி” என்ற வார்த்தைகளின் பொருள் அவர்கள் சொந்த யோசனைகளுக்கு திரும்பிவிட்டனர் என்பதாகும். “நான் இப்படி எண்ணுகிறேன், இதுபோன்று விசுவாசிக்கிறேன்” என்பது போன்று எப்பொழுதும் பேசுவார்கள். தம் யோசனைகளை விட்டு விடாதவர்கள் தம் யோசனைகளுக்கு வழி விடுகிறார்கள். ஆகவே, அவர்கள் கர்த்தரின் வார்த்தைக்கு திரும்புவதில்லை.
மறுபடியும் பிறக்காதவர்கள் தமக்குத்தாமே நீதிபதிகள் என்று எண்ணுகின்றனர். கர்த்தரின் வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது என்னவென்பது அவர்களுக்கு முக்கியமானதல்ல. அவர்கள் தம் சொந்த யோசனைகளைப் பற்றிக்கொண்டு அவர்களுக்கு எது சரி எது தவறு என்று தோன்றுகிறதோ அதைப் பொருத்து தீர்க்கிறார்கள். “நான் இப்படி நினைக்கிறேன், இந்த விதமாக விசுவாசிக்கிறேன். அது நான் நினைப்பதை போன்றில்லை” என்று கூறுகிறார்கள். அவர்களால் எப்படி உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்? எல்லா மனிதர்களும் தம் சொந்த யோசனைகளுக்கு வழி தப்பினர் என்று கர்த்தர் கூறுகிறார். நாம் தேவனிடம் திரும்பிவரவேண்டும். நீதியின் வழியில் நாம் இரட்சிக்கப்படவேண்டும். சத்தியத்தின் வார்த்தைக்கு முன் நாம் நியாயம் தீர்க்கப்படவேண்டும். அப்படியானால் நீதி என்பது என்ன?
 
 
நாம் கர்த்தரின் வார்த்தையால் மறுபடியும் பிறக்கவேண்டும்
 
நீதிமானென்பது கர்த்தரின் வார்த்தையாகும், அதுவே உண்மை. கர்த்தரின் வார்த்தை சட்டமாகும், அது ‘அளவுகோல்` என்று குறிப்பிடப்படுகிறது. கர்த்தரின் வார்த்தையானது வரையறை அல்லது அடையாளம் என்பதை நாமறியவேண்டும். “ஆதியிலே வார்த்தை இருந்தது” (யோவான் 1:1). பரிசுத்த ஆவியானவருடனும், பிதாவாகிய கர்த்தரிடமும் இருந்தது யார்? அவர் கர்த்தராகிய வார்த்தை. வார்த்தையே கர்த்தருமாகும். இயேசுகிறிஸ்து நம்மை இரட்சிக்கும் ராஜாதி ராஜாவுமானவர், அவரே வார்த்தை நம் கர்த்தர்.
ஆதியில் வார்த்தை கர்த்தரிடம் இருந்தது என்று எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடமிருந்தது யார்? வார்த்தை. ஆகவே அந்த வார்த்தை நம் இரட்சகரும் கர்த்தருமாகிய இயேசுவேயாகும். இரட்சகரே கர்த்தர். அவரின் சரியான சுபாவத்தின் குறியீடு வார்த்தையாகும். ஆகவே கர்த்தரின் வார்த்தை என்பது நம் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் வார்த்தை கர்த்தருமாகும். கர்த்தரின் வார்த்தையை அவனின்/அவளின் சொந்த மனித சிந்தனைகளினால் மனிதன் புரிந்து கொள்ள முயல்வது அறிவீனமாகும்.
ஆகவே, கர்த்தரின் வார்த்தையில் உறுதியாகவும் விசுவாசித்துடனும் இருக்கும் நபரை கர்த்தரால் பயன்படுத்த முடியும். கர்த்தரின் வார்த்தையில் உறுதியாக நிலைநிற்கும் நபர் கர்த்தருக்கு முன் உண்மையும் உபயோகமும் உள்ளவர், கர்த்தர் அத்தகையவரை ஆசீர்வதிக்கிறார்.
நன்மையானதை ஒருவனால் செய்யமுடியுமா? நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என்று கர்த்தராகிய வார்த்தை கூறுகிறது. ஆயினும், ‘நற்செயல் புரியும் ஒரு நபர் இருப்பதாக படுகிறது` என்று சிலர் எண்ணலாம். கர்த்தர் முன் மக்கள் கபட்டுத்தனமாக விளையாடுகிறார்கள். நாம் மறுபடியும் பிறப்பதற்கு முன் எந்த நீதியும் இல்லாதவர்களாயிருந்தோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா மனிதர்களும் கர்த்தருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர். அவர்கள் தாம் புனிதமானவர்கள், நல்லவர்கள், இரக்கமுள்ளவர்கள் என்று காட்டிக்கொள்ளும்போது அவர்கள் ஒருவரை ஒருவர், அது ஏன் கர்த்தரையும் கூட ஏமாற்றுகிறார்கள். கர்த்தர் ஒருவரே நல்லவர். மறுபடியும் பிறப்பதோடு அவரின் அன்பையும் நீதியையும் விசுவாசிக்கும் முன், நல்லவன் என்பது போல் காட்டிக்கொள்வது, கர்த்தருக்கு எதிரானதாகவும் அவரின் உண்மைக்கு எதிராக கிளர்ந்தெழுவதையும் போன்றது.
கொடிய பாவிகள் மட்டுமே கர்த்தரால் தீர்க்கப்படுவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? மறுபடியும் பிறவாதவர்களால், அவன்/அவள் கிறிஸ்தவனாக இருந்தாலும் கூட கர்த்தரின் கோபாக்கினையிலிருந்து தப்பிக்க முடியாது. ஆகவே உன் கபட்டுத்தனமான வாழ்க்கையை விட்டுவிட்டு கர்த்தரின் வார்த்தையைக் கேளுங்கள். மறுபடியும் பிறக்கவும். அப்பொழுது கர்த்தரின் நியாயத்தீர்ப்பிற்கு தப்புவீர்கள்.
மறுபடியும் பிறக்காதவர்களில் நல்லவனாக இருக்கவேண்டுமென பிடிவாதமாக இருக்கும் தீய நபரை நீங்கள் கண்டதுண்டா? மக்கள் நல்லவர்களாக இருக்கவேண்டுமென பிடிவாதமுள்ளவர்களாயுள்ளனர். இதனைக் கற்றுக் கொடுத்தது யார்? சாத்தான். மனிதனால் அசலில் நல்லவனாக இருக்க முடியாது. ஒரு மனிதன் கர்த்தர் முன்பாக அவனின்/அவளின் எல்லாப் பாவங்களிலிருந்தும் துடைக்கப்படும்போது அவனால் ஒரு நல்வாழ்க்கையை நடத்த முடியும். அப்படியானால், வேண்டுமென்றே தீயச் செயல்களைச் செய்யும்படி கர்த்தர் கூறினாரா? இல்லை. நாம் பிறப்பதற்கு முன்பே பாவத்தினால் நோய்ப்பட்டிருப்பதாலும் நாம் நரகத்திற்கு செல்லவேண்டியவர்களாய் இருப்பதாலும் பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். நாம் இரட்சிக்கப்படும்படியாக, அவரின் உண்மை வார்த்தையைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.
 
 
அவிசுவாசிகளின் மூலமாக சாத்தான் எப்போதும் பொய் பேசுகிறான்
 
“அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழியிலிருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே” (ரோமர் 3:13-18).
“தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்” எல்லா மக்களும் வஞ்சிப்பதில் சிறந்தவர்கள், கர்த்தர் சாத்தானைக் குறித்து பேசுகிறார், “அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (யோவான் 8:44). மறுபடியும் பிறவாதவர்கள் “நான் உண்மையே பேசுகிறேன், அதுவே சத்தியம்” என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் பேசுவதெல்லாம் பொய்.
தாம் கூறுவது சரியென்று அழுத்துபவர்கள் பொய்யராவார். “நானொரு பொய்யன், ஏமாற்றுக்காரன்” என்று மற்றவர்களை ஏமாற்ற முயலும்போது எந்த ஏமாற்றுக் காரனாவது கூறுவதைக் கேட்டிருக்கிறீர்க்ளா? அவர்கள் கூறுவதெல்லாம் உண்மைப் போல் பேசுகிறார்கள். அவர்கள் திருப்தியளிக்கும் வகையில் பேசுவார்கள், “நான் உங்களுக்கு சிலதைக் கூறுகிறேன். உங்கள் பணத்தை இதில் முதலீடு செய்தீர்களென்றால், பெரிய லாபத்தை பெற முடியும். நீங்கள் ஒரு மில்லியன் டாலர்களை முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டுத் தொகையை சிறிது காலத்திலேயே சம்பாதித்து விடுவீர்கள் என்பதோடு இரண்டு வருடங்களில் பத்து மில்லியன் டாலர்களை சம்பாதித்து விடுவீர்கள். இது ஒரு அருமையான முதலீடு. இதில் முதலீடு செய்ய வேண்டுமா?” மறுபடியும் பிறக்காதவர்கள் தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
சாத்தான் பொய்ப் பேசும் போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். மறுபடியும் பிறக்காத பிரசங்கியார் ஒருவர் சொல்லுவதெல்லாம் பொய். ஒரு பெரிய தசமபாகத்தை காணிக்கையாகக் கொடுத்தால் பணக்காரனாகலாம் என்று அவன்/அவள் கூறுகிறார்கள். அவனோ/அவளோ மூப்பரானால் பணக்காரராகலாம் என்று வேதாகமத்தில் எந்த வசனமாவது கூறுகிறதா? மக்கள் ஏன் மூப்பராக முயலுகிறார்கள்? அவர்கள் மூப்பரானால் கர்த்தர் அவர்களுக்கு உலகத்தின் ஆசீர்வாதங்களை அருளுவார் என்று அவர்கள் விசுவாசிக்கும் படி வழிநடத்தப்பட்டதாலே, அவர்கள் மூப்பர்களாகும்படி முயற்சி செய்கிறார்கள். மூப்பரானால் செல்வத்தின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று விசுவாசிப்பதால் அவகள் வஞ்சிக்க ப்பட்டவர்களாயினர். அவர்கள் வஞ்சகத்தின் பொறியில் சிக்கிக்கொண்டனர்.
இத்தகைய பொய்யினால் வஞ்சிக்கப்பட்டு நீங்கள் எப்போதாவது மூப்பரானதுண்டா? மூப்பரான பிறகு அநேக மக்கள் பிச்சைக்காரர்களைப் போல் வாழ்ந்துள்ளனர். என்னைச் சுற்றிலும் அப்படிப்பட்டவர்கள் இருப்பதை நானறிவேன். மறுபடியும் பிறக்காத கள்ளத் தீர்க்கதரிசிகள், பணக்காரர்களை தம் ஆலயங்களின் மூப்பராக நியமிக்கின்றனர். ஏன்? மூப்பர்கள் தம் ஆலயங்களுக்கு பெரும் தொகையைக் கொடுக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். சில சமயங்களில் காசு இல்லாதவர்களையும் மூப்பர்களாக நியமிக்கின்றனர். ஏனெனில் அவர்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவோராக்க அவர்கள் விரும்புகின்றனர்.
“அவன்/அவள் மூப்பரனால் செல்வங்களினால் ஆசீர்வதிக்கப்படுவர்” என்ற பொதுவான கூற்று பொய்யாகும். வேதாகமத்தில் இதைக் குறித்து கூறப்படவில்லை. கர்த்தரின் ஊழியர்கள் செல்வங்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிலாக துன்புறுத்தப்படுவார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. தேவன் கூறுகிறார், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33).
“அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது” என்று வேதாகமம் கூறுகிறது. மனிதர்களிடம் பாம்பின் விஷம் இருக்கிறது. நீதிமான்களிடம் மறுபடியும் பிறக்காதவர்கள் என்ன கூறுகிறார்கள்? வேதாகமம், “அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழியிலிருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே” என்று கூறுகிறது.
 
 
சட்டத்தின் நோக்கம் என்ன?
 
“இப்படியாயிற்று என்று எழுதப்பட்டிருக்கிறது” என்ற வசனத்தின் பொருள் அது பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பதாகும். அப்போஸ்தலனாகிய பவுல் பழைய ஏற்பாட்டை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறான். “அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழியிலிருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.” என்று கூறினான். மறுபடியும் பிறப்பதற்கான வழி தெரியாமல் நரகம் சென்று கொண்டிருப்பவர்களுக்காக பரிதாபப்படுகிறேன்.
ரோமர் 3:19 கூறுகிறது “மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.” சட்டத்தின்படி கர்த்தர் கோபாக்கினையைச் செலுத்துகிறார். “நியாயப் பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப் பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே” என்று பவுல் கூறியதற்கு காரணம், மறுபடியும் பிறவாதவர்களுக்கே கர்த்தர் சட்டத்தைக் கொடுத்தார், அவர்களுக்கு பாவத்தைக் குறித்து தெரியாததாலும், அவர்கள் பாவத்தை பாவம் என்று கருதாததாலும், பாவத்தைக் குறித்து அவர்களுக்கு அறிவூட்ட, அதனைக் கடைப்பிடிக்க முடியாத அவர்களுக்கு சட்டத்தைக் கொடுத்தார். நாம் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென கர்த்தர் அதனைக் கொடுக்கவில்லை. அப்படியானால் சட்டத்தை அழித்துவிட்டதாக கர்த்தர் கூறுகிறாரா? இல்லை. பாவத்தைக் குறித்து நாம் அறிந்து கொள்ளும் விதமாக மோசே மூலமாக கர்த்தர் சட்டத்தை நமக்குக் கொடுத்தார். நாம் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் அதனைக் கொடுக்கவில்லை. நாம் எப்படிப்பட்ட பாவிகள் என்று நமக்கு போதிப்பதே கர்த்தரின் சட்டத்திற்கான வேலையாகும்.
 
 
செய்கையின் சட்டத்தினால் யாராலும் நீதிமானாக முடியாது
 
ரோமர் 3:20 கூறுகிறது. “இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால் எந்த மனுஷனும் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை.” செய்கையின் சட்டத்தினால் மாமிசம் தீர்க்கப்படாது என்பது மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். “செய்கையின் சட்டத்தினால் மாமிசம் தீர்க்கப்படாது” என்று அப்போஸ்தலனாகிய பவுலும் கர்த்தரின் அனைத்து சேவகர்களும் கூறுகின்றனர். சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இப்போது யாருமில்லை. அதனை யாரும் எதிர்காலத்திலும் கடைப்பிடிக்க போவதில்லை. ஆகவே செய்கையின் சட்டத்தினால் நாம் தீர்க்கப்படமாட்டோம் என்று நாம் அறிக்கைச் செய்ய வேண்டும். நம்முடைய செய்கைகள் நம்மை நீதிமானாக்காது.
அப்போஸ்தலனாகிய பவுல் இதனை அறிந்து விசுவாசித்தான். இச்சட்டத்தைக் கடைபிடிப்பதால் நாம் சரியானவர்களென்று தீர்க்கப்படுவோமா? இச்சட்டத்தினால் நம்மைச் சரியானவர்களாக்க முடியுமா? இயேசுவை விசுவாசித்த பிறகு, நற்செயல்களின் மூலம் நம் சரீரம் சரியானதாகி பரலோக ராஜ்யத்திற்குள் செல்ல முடியும் என்று, வேத வசனங்களை வாசிக்கும்போது நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை. இது உண்மையல்ல. இது பொய். படிப்படியாக சரியானவர்களாக மாறி ஒருவன் கர்த்தரின் ராஜ்யத்திற்குள் செல்கிறான் என்பது பொய். மறுபடியும் பிறக்காத அனைத்து மக்களும் தம் செயல்களினால் கர்த்தரின் வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நினைப்பதால் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களாயுள்ளனர். அது அவர்களை சட்டத்தைக் கடைபிடிக்க முயற்சி செய்ய வைத்து, தினமும் பாவ மன்னிப்புக்காக ஜெபிக்கச் செய்கிறது. அது அவர்கள் ஆடையில் முதல் பட்டனைத் தவறாக போட்டது போன்றது. நாம் பாவிகளென்ற அறிவைச் சட்டம் அளிக்கிறது. பாவிகள் சட்டத்தைக் கடைப்பிடிக்க முயல்வது அவர்களின் அறியாமையினாலும் சொந்த சிந்தனைகளினாலுமாகும், அது சத்தியமான இரட்சிப்பிற்கு எதிராகவும் மாமிசத்திலிருந்தும் வெளிப்படுகிறது. அது தவறான கண்ணோட்டமுள்ள விசுவாசமாகும்.
நாம் சரியாவதற்கு படிப்படியாக மாறுகிறோம் என்று கூறும் பரிசுத்தமாதலின் கொள்கை மற்ற உலக மதங்களிலும் காணப்படுகிறது. பௌத்த மதத்தில் கூட அது போன்ற தத்துவம் உள்ளது. நிர்வாணக் கொள்கையானது கிறிஸ்தவத்தின் படிப்படியாக பரிசுத்தமாகும் தத்துவத்திற்கு சமமானதாகும். அநேக மக்கள், தம் மாமிசம் அதிகமதிகமாய் பரிசுத்தமாகி பரலோக ராஜ்யத்திற்குள் செல்லமுடியுமென கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில் தேவன் நம் ஆத்துமாக்களை ஒரே தரமாக சுத்தமாக்கினார்.
நீதிமான்களால் கூட சரீரத்தினால் பரிசுத்தமடைய முடியாது. ஆவியானவர் இல்லாதவர்களால் பரிசுத்தமடைய முடியாது. அவர்கள் அதிகம் நற்செயல்களைச் செய்ய முயன்றால் அதிகப்படியான பாவிகளாகிவிடுகின்றனர். அது, ஏனெனில் அவர்கள் இருதயங்களில் பாவமிருக்கிறது. அவர்களின் உள்ளே பாவத்தினால் நிரம்பியிருப்பதால், வெளியே எத்தனைக் கடினமாய் சுத்தமாக்க முயன்றாலும் அவர்களினுள்ளேயிருந்து ஏதோ ஒரு அழுக்கு வந்து அவர்களை அழுக்காக்குகிறது. பாவி ஒருவன் இருப்பது இப்படித்தான்.
பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்டவர்களின் நிலை அவர்களின் நிலைக்கு எதிரானது. அவர்களால் தம் மாமிசத்தினால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாவிட்டாலும் அவர்களால் தூய்மையான வாழ்வு வாழமுடியும். பாவிகள் தம் பிறப்பிலிருந்தே பாவ நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதால் தம் வாழ்நாள் முழுவதும் பாவத்தைப் பரப்புகிறார்கள், ஏனெனில் பாவம் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக வெளிவருகிறது. அவர்களுடைய பாவங்களை ஒரே தரமாக அழிக்கும், குணப்படுத்தும் அடியொன்றைப் பெறுவதைத் தவிர தேர்ந்தெடுப்பதற்கு வேறெதுவுமில்லை. இந்த அடியானது நற்செய்தியாகிய கர்த்தரின் சத்தியமாகும். பாவமன்னிப்பு வார்த்தையை கேட்பதன் மூலம் அவர்களால் தம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற முடியும். மறுபடியும் பிறப்பதற்கான வார்த்தையை நீங்கள் கேட்டு பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்.
சட்டத்தின்படி முழுமையாக யாரால் வாழ முடியும்? அவன்/அவள் மறுபடியும் பிறந்தவராயிருந்தாலும் சட்டத்தின்படி யாரால் நிறைவாக வாழமுடியும்? யாராலும் முடியாது. “பாவத்தை அறிகிற அறிவு நியாயப் பிரமாணத்தினால் வருகிறபடியால்” என்று ரோமரில் எழுதப்பட்டுள்ளது. அது அத்தனை இலகுவானது. அறியாமையின் காலத்தில் ஆதாமும் ஏவாளும் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு பாவத்திற்கு விற்கப்பட்டனர். கர்த்தரின் வார்த்தையைத் தெரியாத சந்ததியினருக்கு பாவம் கையளிக்கப்பட்டது. அவர்கள் பாவத்தை சுவீகரித்துக் கொண்டிருந்தாலும், தாம் பிறவிப் பாவிகளென்பது அவர்களுக்குத் தெரியாது.
ஆபிரகாம் மற்றும் யாக்கோபின் காலத்திற்கு பிறகு மூதாதையரான ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப் பட்டிருந்தும், இஸ்ரவேலர்கள் அவிசுவாசத்தையும் பாவத்தையும் மறந்து போயினர். ஆகவே கர்த்தர் அவர்களுக்குத் தன்னுடைய சட்டத்தைக் கொடுத்தார். அதனால் அவர்கள் பாவத்தைக் குறித்து அறிந்து, அவரின் வாக்குத்தத்தை விசுவாசித்து பாவமன்னிப்பை பெறவேண்டுமென அவர் விரும்பினார். இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
 
 
இப்பொழுது சட்டமில்லாமல் கர்த்தரின் நீதி வெளிப்பட்டிருக்கிறது
 
ரோமர் 3:21 கூறுகிறது, “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவ நீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக் குறித்து நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.” சட்டமில்லாமல் கர்த்தரின் நீதி வெளிப்பட்டிருக்கிறது என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். “அதைக் குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கத்தரிசனங்களும் சாட்சியிடுகிறது” என்ற சொற்கள் பழைய ஏற்பாட்டைக் குறிக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே கர்த்தரின் நீதியாகும், அது பலியிடும் முறையினால் வெளிப்படுத்தப்பட்டது. பாவ பலியின் மூலம் பாவமன்னிப்பை பெறச் செய்யும் நீதியை நற்செய்தி வெளிப்படுத்துகிறது.
ரோமர் 3:22 கூறுகிறது, “அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.” நம் விசுவாசங்கள் நம்மிருதயங்களில் உள்ளன. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரும் இயேசுகிறிஸ்துவே. எபிரேயர் 12:1 கூறுகிறது. “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரும் இயேசுவே. நம் கர்த்தராகிய சத்திய வார்த்தையை விசுவாசிக்கிறோம். நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படவும், விசுவாசத்தினால் வாழவும், மறுபடியும் பிறந்த ஊழியர்களின் மூலம் வேதாகமத்தின் உண்மை வார்த்தைகளைக் கற்று அதனை விசுவாசிக்கவேண்டும். நாம் இயேசுவை நம்மிருதயங்களினால் விசுவாசிக்கவேண்டும்.
“அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.” என்று கர்த்தர் கூறுகிறார். ஆகவே, நம்மிருதயங்களினால் உண்மை வார்த்தையை விசுவாசித்ததால் நீதிமான் ஆனோம், நம் வாயினால் அறிக்கைச் செய்ததினால் முழுமையான இரட்சிப்பிற்கான உறுதியைப் பெற்றோம். நம்முடைய சொந்த செய்கைகளினால் நாம் இரட்சிக்கப்பட்ட முடியாது, விசுவாசத்தினாலேயே அது ஆகும். தேவனுக்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நன்றி செலுத்த வேண்டும்.
உங்களுடைய பாவங்கள் எல்லாம் துடைக்கப்பட்டு விட்டாலும், உங்கள் செயல்களினால் கட்டுப்பட்டு விட்டாலும், உங்கள் செயல்களினால் கட்டுப் பட்டிருக்கிறீர்களா? கர்த்தரை உங்கள் இருதயத்தினால் விசுவாசித்தால், உங்கள் மாமிசத்தின் பலவீனம் எதுவாயினும் நீங்கள் நீதிமான்கள். “நீங்கள் நீதிமான்கள்” என்று பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் வார்த்தையைக் குறித்து உங்கள் இருதயத்தில் கூறுகிறார். ஏனெனில் நாம் வார்த்தையை கேட்கும்போது சத்தியவார்த்தையை நாம் புரிந்துகொள்ளும்படி அவர் வழி நடத்துகிறார். கர்த்தரின் வார்த்தையைக் கேட்ட பிறகு, நீங்களும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டீர்களா?
“அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.” உண்மையாகிய கர்த்தரின் வார்த்தையை யாரெல்லாம் கற்று விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் அவனின்/அவளின் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படலாம்.
 
 
உலகின் தொடக்கத்திலிருந்து அதன் முடிவு வரை செய்யப்பட்ட அனைத்துப் பாவங்களையும் இயேசு கழுவினார்
 
ரோமர் 3:23-25 கூறுகிறது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியயைக் காண்பிக்கும் பொருட்டாகவும்.”
எல்லோரும் பாவம் செய்து கர்த்தரின் மகிமையற்றவர்களாகிப் போனோம் என்று வேதாகமம் கூறுகிறது. பாவிகள் நரகம் செல்லுகையில், அவரின் இரக்கத்தினாலும் அன்பினாலும் நாம் இலவசமாக சரியாக்கப்பட்டு பாவமன்னிப்பைப் பெற்றோம். நாம் கர்த்தரின் மகிமையை அடைந்து சரியானவர்களானோம். கர்த்தர் இயேசுவை விசுவாசத்தின் மூலம் கிருபாதார பலியாகும்படிச் செய்தார்.
வசனங்கள் 25 மற்றும் 26 கூறுகிறது, “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியயைக் காண்பிக்கும் பொருட்டாகவும். கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.” “ஏற்படுத்தினார்” என்ற சொல்லின் பொருள், பிரபஞ்சம் முழுவதற்கும் பாவமன்னிப்பிற்கான கிருபாதார பலியாகும் பொருட்டு கர்த்தர் தம் மகனான இயேசுவை அனுப்பினார் என்பதாகும்.
இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டார். இயேசுவே அல்பாவும் ஒமேகாவுமானவர். உலகின் தொடக்கத்தையும் முடிவையும் குறித்து சிந்திப்போமாக. உலகின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை செய்யப்பட்ட நம் எல்லாப் பாவங்களையும் கழுவிய விசுவாசத்தின் மூலம் கர்த்தர் நம்மை விடுதலை செய்தார். சத்தியத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக இயேசுவை கர்த்தர் ஏற்படுத்தினார். நான் நற்செய்தியை விசுவாசிக்கும் வரை இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை, “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்.”
இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் நம் அனைத்துப் பாவங்களையும் இயேசு கழுவினார் என்ற வார்த்தையை நாம் விசுவாசிக்கும் போது நம் அனைத்துப் பாவங்களும் அகற்றப்பட்டது. நாம் பாவமன்னிப்பை ஒரேதரமாகப் பெற்றோம், ஆனால் நம் சரீரம் தொடர்ந்து பாவம் செய்துகொண்டேயிருக்கும். நம்முடைய பலவீனத்தினால் மாமிசம் பாவம் செய்கிறது. “முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்து” என்று வேதாகமம் கூறுகிறது. மாமிசம் இப்போது செய்யும் பாவங்களையும் எதிர்காலப் பாவங்களையும் கர்த்தர் முற்காலத்தில் நடந்த பாவங்களாக கருதுகிறார்.
ஏன்? நம்முடைய இரட்சிப்பின் மனித தொடக்கமாக இயேசுவின் ஞானஸ்நானத்தைக் கர்த்தர் செய்தார். இயேசுகிறிஸ்து பாவமன்னிப்பை ஒரேதரமாக நிறைவேற்றியதால், கர்த்தரின் பார்வையில் மாமிசத்தின் இப்போதையப் பாவங்கள் இறந்த காலத்தின் பாவங்களாகும். “முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதை” என்ற வார்த்தைகளின் பொருள் “அவர் ஏற்கெனவே உலகின் பாவங்களுக்கான கூலியைச் செலுத்துவிட்டார்” என்பதாகும். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையால் உலகின் அனைத்துப் பாவங்களும் ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுவிட்டது.
ஆகவே, உலகின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை செய்யப்பட்ட அனைத்துப் பாவங்களையும் கர்த்தர் துடைத்துவிட்டார். ஆகவே கர்த்தரின் பார்வையில் எல்லாப் பாவங்களும் முன்பு செய்யப்பட்டவை. தேவகுமாரனால் ஏற்கெனவே துடைக்கப்பட்ட பாவங்களை உலகின் மனிதர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். 2002 ஆம் வருடத்தில் செய்யப்படப்போகும் பாவங்களை 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு ஏற்கெனவே கழுவிவிட்டார். இதனை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?
உங்களின் மற்றும் எனது பாவங்கள் உட்பட உலகின் பாவங்களை கர்த்தர் ஏற்கெனவேத் துடைத்துவிட்டார். இதன் பொருளைக் காண்கிறீர்களா? இது புரியாவிட்டால் நீங்கள் நற்செய்தியை மற்றாவர்களுக்கு பிரசங்கிக்கும்போது குழப்பமடைவீர்கள். “முற்காலத்தில் நடந்தப் பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்து” என்ற வார்த்தைகளின் பொருள், அவர் எல்லாப் பாவங்களையும் முன் கூட்டியே பார்க்கிறார், ஏனெனில் அவர் அவற்றை 2000 வருடங்களுக்கு முன் அழித்தார். இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதால், மனிதர்களின் எல்லாப் பாவங்களும் முன்பே தீர்க்கப்பட்டுவிட்டன. இயேசு உலகிற்கு அனுப்பப்பட்டு ஒரே தரமாக எல்லா மனிதர்களையும் நிறைவாக சரியானவர்களாக்கியதால் கர்த்தர் பாவங்களைப் பொறுத்துக் கொண்டார். ஆகவே, உலகின் அனைத்து மக்களாலும் செய்யப்படும் பாவங்களின் மீது கர்த்தர் பலி கூறுவதில்லை, அவை ஏற்கெனவே அவரால் துடைக்கப்பட்டுவிட்டது, ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் மீதுள்ள அவர்களின் அவிசுவாசத்தின் மீது பலி கூறுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதை நீங்கள் புரிந்துக்கொள்கிறீர்களா? இரட்சிக்கப்பட்ட நமக்கு அது முக்கியமானது. மறுபடியும் பிறவாதவர்கள் நரகம் செல்வர் ஏனெனில் அவர்கள் அதனை அலட்சியம் செய்கின்றனர். வார்த்தையைக் குறித்து கேட்டு சரியான அறிவைப் பெறவேண்டும். அது உங்கள் விசுவாசத்திற்கு மிகவும் உதவியாக இருப்பதோடு நீங்கள் மற்ற மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் உதவும்.
 
 
மேன்மை பாராட்டல் எங்கே?
 
வேதாகமம் கூறுகிறது, “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியை காண்பிக்கும் பொருட்டாகவும்.” கர்த்தர் இயேசுவை கிருபாதார பலியாக ஏற்படுத்தியதால், இறந்த காலத்தின் பாவங்களெல்லாம் ஏற்கெனவே துடைக்கப்பட்டது என கர்த்தர் நமக்கு போதிக்கிறார். ஆகவே நாம் விசுவாசத்தினால் நீதிமான்களானோம்.
வசனம் 26 கூறுகிறது, “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.” “இக்காலத்திலே” கர்த்தர் உலகிற்கு அழியா வாழ்வைக் கொடுத்ததினால் உலகம் அழியாது. இக்காலத்தில் கர்த்தர் தன் நீதியை விளங்கப்பண்ணும்படி இயேசுகிறிஸ்துவை அனுப்பி அவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றினார். கர்த்தர் தம் நீதியை விளங்கப்பண்ணினார், கர்த்தர் தன் ஒரே பேறான குமாரனை அனுப்பி, இரட்சிப்பின் சத்தியத்தின் மூலம் அவரின் அன்பைக் காண்பிக்க, அவரை ஞானஸ்நானம் செய்து சிலுவையிலறையப்படச் செய்தார்.
தேவன் பாவிகளுக்கு இரட்சகராக வந்தார். வசனம் 26 கூறுகிறது, “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்” கர்த்தர் நீதிபரரானதால் உலகின் பாவங்களை ஒரே தரமாக அழித்தார். நம்முடைய இருதயங்களினால் இயேசுவை நாம் விசுவாசிப்பதால் நம்மிடம் பாவமில்லை. உண்மையாகவே இயேசுவை விசுவாசிப்பவர்களிடம் பாவமில்லை, ஏனெனில் அவர் அவர்களைக் கழுவியதுடன், எதிர்காலப் பாவங்களிலிருந்தும் அவர்களை இரட்சித்தார். இயேசுவை நமது இருதயங்களால் இரட்சிப்பது நம்மை இரட்சிக்கிறது. அவரின் இரட்சிப்பின் மீதுள்ள விசுவாசத்தில் நம்முடையச் செய்கைகள் 0.1% கூட உள்ளடக்கப்படவில்லை.
ரோமர் 3:27-31 கூறுகிறது, “இப்படியிருக்க, மேன்மைப் பாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியா பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப் பிரமாணத்தினாலேயே. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன்? புற ஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம், புற ஜாதிகளுக்கும் அவர் தேவன் தான். விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துகிறோமே.”
“நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துகிறோமே” என்ற சொற்களின் பொருள், நம் செய்கைகளினால் இரட்சிக்கப்பட முடியாது என்பதாகும். நாம் குறைவுள்ளவர்களும் பலவீனர்களுமாயிருப்பதால், சட்டத்தின்படி நாம் நரகம் செல்ல வேண்டியவர்கள். ஆயினும் நாம் அவரின் வார்த்தையால் இரட்சிக்கப்பட்டதால், கர்த்தரின் வார்த்தை நம்மை நீதிமானாகவும் நிறைவான்வர்களாகவும் ஆக்கிற்று. நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் அவர் நம்மை முற்றிலும் விடுதலையாக்கினார் என்றும் தேவன் நம்மிடம் கூறுகிறார். இயேசு நம்மை இரட்சித்தார் என்று விசுவாசிப்பதன் மூலம் நாம் கர்த்தரிடம் நெருங்கிச் சேர முடியும்.
“இப்படியிருக்க, மேன்மைப் பாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியா பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப் பிரமாணத்தினாலேயே.” கர்த்தர் ஏற்படுத்திய சட்டத்தைக் குறித்து நாமறிய வேண்டும், அவரின் ராஜ்யத்தில் சட்டம் என்றென்றுமிருக்கும். “எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப் பிரமாணத்தினாலேயே,” என்று கர்த்தர் கூறுகிறார். இதனைக் கிரகித்துக் கொண்டீர்களா? கர்த்தர் நம்மை உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். சத்தியத்திற்கேற்றபடி விசுவாசிக்கும்போது நாம் இரட்சிக்கப்படுவோம். செய்கைகளின் சட்டத்தினால் நம்மை இரட்சிக்க முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
ரோமர் 3 ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் மூலம் விசுவாச சட்டத்தைக் குறித்து கர்த்தர் கூறுகிறார். “அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?” (ரோமர் 3:3) விசுவாசிகள் விசுவாசத்தினால் நிலைநிற்கின்றனர். அவிசுவாசிகள் விழுந்து போகின்றனர். சத்தியத்தின் நற்செய்தியின் மீது முழுவிசுவாசம் இல்லாதவர்கள் எவர்களோ, அவர்கள் இயேசுவை விசுவாசிப்பதாக நினைத்தாலும் நரகம் செல்வர்.
 
 
கர்த்தர் நம்மனைவரையும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார்
 
தம் சொந்த யோசனைகளின்படி விசுவாசிப்பவர்கள் விசுவாச சட்டத்தில் இடறும்படி கர்த்தர் அவரின் சட்டத்தை எற்படுத்தினார். கர்த்தர் நம்மனைவரையும், நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். ரோமர் 3 ஆம் அதிகாரம் விசுவாச சட்டத்தைக் குறித்து பேசுகிறது. உண்மை வார்த்தையை விசுவாசித்ததினால் நாம் இரட்சிக்கபட்டோம். விசுவாசத்தினால் பரலோக ராஜ்யத்தை சுவீகரித்ததோடு சமாதானத்தையும் பெற்றோம். அவிசுவாசிகளால் சமாதானமாக இருக்க முடியாது. அதற்கு பதிலாக அவர்கள் நரகம் செல்லுவர். அதற்கான காரணம் என்ன? முதலாவது, அவர்கள் கர்த்தரின் சத்திய வார்த்தையைப் பெற்றுக் கொள்ளாததினால், கர்த்தரின் வார்த்தையின் சட்டத்தினால் தீர்க்கப்படுவர். இரட்சிப்பு கர்த்தரின் அன்பிலிருந்து வருகிறது. உண்மையை நாம் அறிந்திருந்து, நம்மிருதயங்களால் கர்த்தர் செய்தவற்றை விசுவாசிப்பதாலே நாம் இரட்சிக்கப்பட்டோம். இதனைப் புரிந்து கொள்கிறீர்களா?
இந்த விசுவாசத்தையும் அவரின் ஆலயத்தையும் இவ்வுலகிற்கு கொடுத்தமைக்காக கர்த்தரைப் புகழ்கிறேன். சத்தியத்தையும், விசுவாசத்தையும், வார்த்தையையும் கொடுத்த தேவனுக்கு நன்றி கூறுகிறேன். இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் கொண்டிருந்தான். அவன் பாவமன்னிப்பின் இரகசியத்தை தன் ஆலயத்திற்கு வெளிப்படுத்தினான். என் இருதயத்தினுள்ளிருந்து அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
அவரின் ஞானஸ்நானத்தினாலும் சிலுவை மரணத்தினாலும் நம்மை இரட்சித்தமையால் நாம் தேவனுக்கு நன்றி கூறவேண்டும். இந்த விசுவாசமும் அவரின் ஆலயமும் இல்லாவிட்டால் நமக்கு நரகம் செல்வதைத் தவிர தேர்ந்தெடுப்பதற்கு வேறெதுவுமில்லை. நாம் பாவிகளாயிருந்தோம், இயற்கையாக நாம் இரட்சிக்கப் படமுடியாது, ஆனால் நீதிமானாகும்படி நம்மிருதயத்தில் விசுவாசித்தோம். அவரின் நீதியை நம்மிருதயத்தில் விசுவாசித்தமையால் நாம் அவரின் பிள்ளைகளானோம், வாயினால் அறிக்கைச் செய்தமையால் இரட்சிக்கப்பட்டோம்.