(ரோமர் 3:10-31)
“அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி, ஏகமாய்க்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும், இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழியிலிருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால் எந்த மனுஷனும் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை. இப்படியிருக்க, நியாயப் பிரமாணமில்லாமல் தேவ நீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக் குறித்து நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியயைக் காண்பிக்கும் பொருட்டாகவும். கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். இப்படியிருக்க, மேன்மைப் பாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியா பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப் பிரமாணத்தினாலேயே. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன்? புற ஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம், புற ஜாதிகளுக்கும் அவர் தேவன் தான். விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துகிறோமே.”
மாமிசத்தினால் மனிதர்கள் மேன்மை பாராட்டுவதற்கு எதுவுமில்லை
ரோமர் 3:10-12 கூறுகிறது, “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி, ஏகமாய்க்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும், இல்லை.” தேவனுக்கு முன்பாக சரீரத்தினால் நாம் அனைவரும் முழுப்பாவிகள். மாமிசத்தினால் ஒருவனால் நீதிமானாகமுடியுமா? கர்த்தரின் முன் நீதியின் சரீரங்கள் இயற்கையாக இருக்க முடியுமா? மனிதனால் தன் மாமிசத்தின் மூலம் நீதிமானாக முடியாது. இயேசுகிறிஸ்துவின் மூலம் மாமிசம் பாவங்களிலிருந்து விடுதலை செய்யப்படாவிட்டால் அதனால் நீதியுடனிருக்க முடியாது.
தம் பாவங்கள் துடைக்கப்பட்டவர்களுக்கு மாமிசத்தினால் பெருமைப் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை. பாவங்கள் துடைக்கப்பட்ட நாம் கூட மாமிசத்தினால் வழி தப்புவதை தவிர்க்க முடியாது, நம் மாமிசத்திற்கு நல்லதைச் செய்யும் திறனில்லை, நான் தேவனுக்கு ஊழியம் செய்து ஆவிக்குரிய பணிகளைச் செய்யாவிட்டால் நாம் நல்வாழ்க்கை வாழுகிறோம் என்று கூறமுடியாது. “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (யோவான் 3:6) என்று இயேசு கூறியதைப் போல் மாமிசம் தன் இச்சைகளில் நடக்கவும், ஆவியானது ஆவியானவரில் நடப்பதிலும் பிரியமாயிருக்கும். மாமிசத்தினால் ஆவியாக மாற முடியாது.
எல்லா மனிதகர்களும் பாவியாக பிறந்தனர். பாவத்தினால் வாழ்ந்து, பயனில்லாது இறந்து நரகத்தின் எரியும் கடலில் எறியப்பட்டனர். அவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படியாக கர்த்தர் உலகிற்கு தன் ஒரே பேறான குமாரனை அனுப்பியிருக்காவிட்டால் அவர்களுக்கு எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை இருந்திருக்காது. நமக்கு நம்பிக்கை இருக்கிறதென்றால் அது கர்த்தர் நமக்கு கொடுத்த உண்மையான நம்பிக்கையாகும். அது கர்த்தராக இல்லாதிருந்தால் நாம் நீதிமானாகியிருக்க முடியாது, அல்லது எந்த நம்பிக்கையும் இல்லாதிருந்திருக்க முடியாது. நானும் நீங்களும் உட்பட உலகின் அனைவரின் முடிவையும் ஆராய்ந்தால் அது உண்மையென அறிந்து கொள்வோம்.
நாம் “படைக்கப்பட்டவைகளில் முக்கியமானவன்” என்றழைக்கப்பட்டாலும், நாமும் பாவத்துடனேயே பிறக்க வேண்டியவர்கள், நம் விருப்பம் எதுவாயினும் பயனின்றி வாழ்ந்து நரகம் செல்லுகிறோம். நாம் எத்தனை மாறுதலுக்குட்பட்டவர்கள்! ஒரு மனிதனின் வாழ்வின் காலகட்டத்தை ஒரே நாள் வாழும் பூச்சியுடன் ஒப்பிடலாம். அது ஒரு நாளுக்கு பிறந்து வளர்ந்து ஒரு நாள் மட்டுமே உயிருடனிருந்து, பிறகு இறந்து, தூசிக்கு பயனின்றி போய்விடுகிறது. இயேசுவின்றி நமக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் எத்தனை பிரபலமானவர்களாய் இருந்தாலும், எத்தனைப் பெரியக் காரியங்களைச் செய்திருந்தாலும் மனிதன் தன் வாழ்வில் செய்யும் ஒரே அவசியமான காரியம் பிறந்து, தின்று, குடித்து, இறந்து நரகம் செல்வதே. நாம் பயனற்று வாழ்ந்து பயனில்லாது மறைந்து நித்திய தீர்ப்பை பெறவேண்டியவர்கள்.
ஆயினும், கர்த்தர் நமக்கு பாவத்தைக் குறித்த அறிவைப்பெற சட்டத்தைக் கொடுத்து இயேசுகிறிஸ்துவின் பாவமன்னிப்பின் மூலம் இலவசமாக நம்மை கிருபையினால் நீதிமான்களாக்கினார். அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்பினார், அவர் நம் அனைத்துப் பாவங்களையும் சுமந்து சிலுவையிலறையப் பட்டார், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களுக்கு கிருபாதாரப் பலியானார். கர்த்தர் நமக்காக இயேசுவை கிருபாதாரப் பலியாக ஏற்படுத்தி நம்மை நீதிமான்களாக்கினார்.
பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டவர்களால் எப்படி நீதிமானாக முடிந்தது? பாவமன்னிப்பை பெற்றுக்கொண்ட நம் சரீரத்திடம் நீதியிருக்கிறதா? கர்த்தருக்கு முன் பெருமை பாராட்ட நம்மிடம் என்னவிருக்கிறது? சரீரத்தினால் பெருமைப் பாராட்டுவதற்கு எதுவுமில்லை. கர்த்தராகிய தேவனால் நாம் பாவமன்னிப்பைப் பெற்றதாலும், இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற்றதற்காகவும் நித்திய ஜீவனைப் பெற்றதற்காகவும் அகமகிழ்ந்து அவருக்கு நன்றி கூறுவோமாக.
பாவமன்னிப்பு பெற்ற நமக்கு கர்த்தரில்லாமல் எதுவும் அமையாது. மனித சரீரத்திற்கு பெருமை பாராட்டும்படி எதுவும் இருக்கிறதா? மாமிசம் நீதி உடையதா? 70-80 வருட வாழ்க்கையில் நம்மால் பெருமை பாராட்ட எதுவுமிருக்கிறதா? மனிதனிடம் எந்த நீதியும் இல்லை. கர்த்தருக்கு முன் பெருமை பாராட்ட நம்மிடம் என்ன இருக்கிறது? மாமிசத்திற்கு பெருமைப் பட்டுக்கொள்ள எதுவுமில்லை. 0.1% கூட மனித மாமிசத்தினால் பெருமைப்படமுடியாது.
கர்த்தரின் நீதியைக் குறித்து மட்டுமே நம்மால் பெருமைப்படமுடியும்
“இப்படியிருக்க, நியாயப் பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப் பட்டிருக்கிறது; அதைக் குறித்து நியாயப் பிரமாணமும் தீர்க்க தரிசனங்களும் சாட்சியிடுகிறது” என்று எழுதப்பட்டுள்ளதை போல் நாம் பெருமை பாராட்டுவது தேவன் நம்மை இரட்சித்ததைக் குறித்தே. தேவன் நம் நித்திய ஜீவனும் இரட்சகருமாவார். அவர் நம்மை நீதிமானாக்கினார். இயேசு நம்மை முழுமையாக இரட்சித்தமையால் நாம் நீதிமான்களானோம். செய்கைகளின் சட்டத்தின்படியோ மாமிசத்தின் படியோ பெருமைப் பாராட்ட நம்மிடம் எதுவுமில்லை. எல்லா நீதியையும் நிறைவேற்றும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் கழுவிப்போட்ட தேவனை புகழ்வதோடு அவருக்கு நன்றியும் கூறுகிறோம்.
விசுவாசத்தின் நீதியை நாம் பெற்றுக்கொண்டோம். ஒரு மனிதனைக் கூட விட்டுவிடாமல் உலகின் அனைத்து மக்களையும் அவர்களின் பாவங்களிலிருந்து நம் தேவன் இரட்சித்தார். கர்த்தரின் இரட்சிப்பு நம்மை மகிழச் செய்து நமக்கு நம்பிக்கையையும் அளிக்கிறது. தேவனையல்லாமல் பெருமை பாராட்டுவதற்கு நம்மிடம் எதுவுமில்லை. கர்த்தர் முன்பாக நம் நீதியைக் குறித்து பெருமை பாராட்ட அதிக தொலைவிலிருக்கிறோம், நாம் வெட்கக்கேடானவர்கள். அநேக மக்கள் தம் சொந்த நீதியின் மூலமாகவும், அவர்களின் செய்கையின் பெருமையினாலும் கர்த்தர்க்கு தம் செயல்களைப் படைக்க முயலுகின்றனர், ஆனால் அவர்களின் சுயநீதியானது அழுக்கான துணியைப் போன்றது. மற்றவர்களிடமோ, தமக்குள்ளோ பெருமை பாராட்ட அவர்களிடம் ஏதாவது இருக்கலாம், ஆனால் கர்த்தரின் முன்னல்ல.
தேவனே நம் முழுமையான இரட்சகர். ‘இயேசு` எனபதன் பொருள் ‘இரட்சகர்` என்பதோடு அவர் கிறிஸ்துவுமாவார். இதன் பொருள் என்னவென்றால் மனித சாயலில் வந்த இரட்சகர் கர்த்தரேயாவார். நாம் அவரை “இயேசுகிறிஸ்து” என்கிறோம். இயேசு நம் இரட்சகரும் கர்த்தருமாவார். கர்த்தர் நம்மை முற்றிலுமாக இரட்சித்ததால் நாம் தேவனுக்கு நன்றி கூறி அவரைப் புகழ்ந்து, அவருக்கு முன் நீதியின் செயல்களைச் செய்து விசுவாச வாழ்வை வாழ்வோமாக. கர்த்தரை விசுவாசிப்பவர்களால் மட்டுமே நீதியின் செயல்களைச் செய்யமுடியும்.
தேவன் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டதாலும், நம் இரட்சகராக எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தமையாலும் நம்மால் நீதியாக செயல்படமுடியும். பாவபிரச்சினையை நம்மால் தீர்க்க முடியாது. மாமிசத்தினால் நற்காரியங்களைச் செய்வதால், ஒரு மனிதனால் அவனின்/அவளின் பாவங்களை அகற்றவும் முடியாது, கர்த்தரின் நீதியைக் கடைப்பிடிக்கவும் முடியாது.
கர்த்தர் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்தார், அதனாலேயே நாம் கர்த்தரிடமிருந்து நீதியைப் பெற்றோம். நாம் நீதிமான்கள். நம் பகுதியாக, நற்செயல்களைச் செய்து, மாமிசத்தை பரிசுத்தமாக்குவதால் நாம் நீதியைக் கடைப்பிடிக்க முடியுமா? அப்படி ஒருவரால் செய்ய முடிந்தால் அவன்/அவள் இயேசுவின் மூத்த சகோதரனாக/சகோதரியாக இருக்க வேண்டும். இயேசுவால் அப்படிப்பட்டவர்களுக்கு இரட்சகராகவே முடியாது. நாம் மாமிசத்தின் திறமையாலும் உணர்வாலும் அதனைப் புரிந்துகொள்ளாமலேயே நம் சொந்த நீதியை ஆசரிக்கும் உள்ளுணர்வு நம்மிடம் இருக்கிறது. மாமிசம் உள்ளுணர்வினால் செயல்படுகிறது. நாம் அபாயத்தை சந்திக்கும்போது அதிலிருந்து வெளி வர உள்ளுணர்வினால் போராடுகிறோம், சுவையான உணவை காணும்போது அதிகமாக சாப்பிட விரும்புகிறோம், ஆர்வமுள்ளவைகளைக் காணும்போது விளையாட விரும்புகிறோம்.
மாமிசம் உள்ளுணர்வினால் செயல்புரிவதால், நாம் மாமிசத்தின்படி கர்த்தரின் நீதியை உள்ளுணர்வின் அடிப்படையில் ஆசரிக்க விரும்புகிறோம். ஆயினும் அது நம்மால் முடியாது. நாம் இரட்சிக்கப்பட்டது நம் சொந்த நீதியினால் அல்ல. சட்டத்தை நன்கு ஆசரிப்பதாலும், நல்ல காரியங்களை மாமிசத்தினால் செய்வதாலும், நம்மை கர்த்தருக்காக அர்ப்பணித்தாலும், நம்மால் இரட்சிக்கப்பட முடியாது. நம்முடைய செய்கைகள் 0.1% கூட கர்த்தரின் நீதியில் உள்ளடக்கப்படவில்லை. கர்த்தர் மனித சாயலில் உலகிற்கு வந்து எல்லா நீதியையும் நிறைவேற்றும் விதமாக, சிலுவையிலறையப் படும்படி, யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றது, நம்மை நம் பாவங்களிலிருந்து முழுமையாக இரட்சித்தது, என்பதை விசுவாசிப்பதால் நாம் நீதிமான்களானோம்.
நம்மை இரட்சித்த தேவன் முழுமையான இரட்சகர்
மனிதர்கள் தம் மரணத்திற்கு முன் செய்த எல்லாப் பாவங்களையும் தேவன் ஏற்றுக்கொண்டு எல்லா நீதியையும் நிறைவேற்றி அவர்களின் நிறைவான இரட்சகராகி நம்மை நீதிமானாக்கினார். எல்லா நீதியையும் நிறைவேற்றியதன் மூலம் கர்த்தர் நம்மை நிறைவாக்கினார். ஆவிக்குரிய விதமாக பணிசெய்ய கர்த்தர் நம்மை ஏதுவாக்கினார். நம் சரீரம் மனிதத் தன்மைக்கு ஏற்றபடி தொடர்ந்து செய்தாலும் கர்த்தரின் நீதியை நாம் பெற்றுக்கொண்டதாலே பாவமில்லாதவர்களானபடியால் ஆவிக்கேற்றபடி பணிசெய்ய நமக்கு உரிமை உண்டு. ஆயினும் பாவங்கள் துடைக்கப்படாதவர்களால் ஆவிக்குரியபடி பணி செய்ய முடியாது. அவர்களுக்கு அதைச் செய்யும் தகுதி இல்லை.
நாம் கர்த்தரினால், ஆவிக்குரிய பணியாற்றும் தகுதியைப் பெற்றோம். மாமிசத்தின் பணியைத் தவிர்த்து, நம்மால் கர்த்தரின் நீதியின் செய்கையையும் செய்ய முடியும். கர்த்தர் நமக்கு இரட்சகரானது எத்தனை குறைவற்றது! தேவன் இவ்வுலகிற்கு வந்து எல்லா நீதிகளையும் நிறைவேற்றினதாலே, மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்தக் கர்த்தர், இரட்சிப்பின் தேவனாக நமக்கு வெளிப்பட்டார். அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பாக, கர்த்தர் நம்மை இரட்சித்தமையால் அவர் நம் தேவனும் இரட்சகருமானார்.
பலவீனமான ஒருவராலோ திறமை இல்லாத ஒருவராலோ நாம் இரட்சிக்கப்பட்டிருந்தால் அந்த இரட்சிப்பு நிறைவானதாக இருக்காது. அங்கு தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கு மாறாக நம்மை இரட்சித்தவர் அத்தகைய ஒருவரில்லை. எல்லாவற்றையும் படைத்த படைப்பாளியான அவர் கர்த்தர். யோவான் 1:3 கூறுகிறது, “சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” இயேசு யார்? இரட்சகர். இரட்சகர் யார்? அது படைப்பாளியாகிய கர்த்தர். கர்த்தர் நம்மை நிறைவாக இரட்சித்தார். அவர் நம்மை இரட்சித்தமையாலே நம் இரட்சிப்பு நிறைவானது. அவர் படைத்தவராயில்லாமல், படைக்கப்பட்டவைகளில் ஒருவராயிருந்தால் நம் இரட்சிப்பு ஒன்றுமில்லாததாகியிருக்கும். அது அதிக நாள் தாக்குப்பிடிக்காது அதன் நீதி அழுக்கைப் போன்றது. ஒருவன் அணிந்திருப்பது தரமான தோலினாலான ஆடையாயிருந்தால், அவன் கால்பந்து விளையாடினாலும், சறுக்கி விளையாடினாலும், கிழிந்து போகாது. ஆனால் அவை தரமான ஆடைகளல்லவெனில் ஒரேதரமாக கிழிந்து போய்விடும்.
நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்த நம் தேவன் குறைவானவரல்ல. நம்மை இரட்சித்த தேவனே கர்த்தர், அவர் நிறைவானவர். விசுவாசிகளின் சரீரம் எத்தனை பலவீனமுடையதாயிருந்தாலும், நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்ள ஞானஸ்நானம் பெற்று, சிலுவையிலறையப் பட்டு, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து கர்த்தரின் வலது பக்கத்தில் உட்காந்திருக்கும் இயேசுவின் இரட்சிப்பு எப்பொழுதும் ஒன்றுமில்லாததாகாது.
நாம் விசுவாசத்தினால் வாழவேண்டுமானால் நம் சொந்த நீதியை உடைத்தெரிய வேண்டும்
வேதாகமத்தில் சொந்த நீதியுடன் வாழ்ந்தவர்கள் கடின வாழ்வு வாழ்ந்தனர். ஏனெனில் அந்த கடினங்களின் மூலம் அவர்களின் நீதியை உடைக்க கர்த்தர் விரும்பினார். அரசர்களைப் பற்றிய குறிப்புகளில் “ஆயினும், உயர்ந்த பதவிகள் எடுத்துக்கொள்ளப்படவில்லை” போன்ற வசனங்கள் அநேகமிருக்கின்றன. இதன் பொருள் என்னவெனில் ஒரு மனிதன் அவன்/அவள் மாமிசத்தில் நிறைவானவரில்லை, ஆனால் அவன்/அவள் தேவனை விசுவாசித்தமையால் நீதிமானாக்கப் பட்டனர்.
என் அன்பான பரிசுத்தவான்களே, நாம் எத்தனை பலவீனர்களாயிருந்தாலும், நம் கர்த்தர் நம்மை நிறைவாக இரட்சித்தார். நம் சொந்த நீதியினால் வாழ்ந்தோமானால் மரித்துப் போவோம். ஆனால் தேவனாகிய கர்த்தர் நம்மைப் பாவங்களிலிருந்து முழுமையாக இரட்சித்தார். நாம் எத்தனை பலவீனர்களாயிருந்தாலும், தேவனின் நீதிக்காக நாம் வாழ்ந்தோமானால் அவர் மகிழ்வார். ஏசாயா 53:5 கூறுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” கர்த்தர் நம் அக்கிரமங்களை ஒரேதரமாக எடுத்துப்போட்டார். நம்முடைய நீதி உடைந்து போகும் என்ற பயத்தால் நாம் கவனமாக இருக்க வேண்டியதில்லை.
சில மனிதர்கள் கண்ணாடிப் பாத்திரங்களைப் போன்றவர்கள். அமெரிக்கா சென்று வந்த சகோதரி ஒருவரை எனக்குத் தெரியும். அவர் சிறந்த பண்புள்ளவர்; நான் அவரை சந்தித்தபோது கவனமாக பேசினார், எப்போதும் சபிப்பதில்லை. அவர் பாவமன்னிப்பை பெற்றிருந்தபோதிலும் ஒரு மோசமான மனிதனைப் பார்க்கும் போதெல்லாம் “ஓ! திரு. கெட்ட மனிதன்,” என்று கூறுவது வழக்கம். அவர் தன்னுடைய சொந்த நீதியில் முழுவதுமாக நிறைந்திருந்தாலும், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்தமையால் பாவமன்னிப்பைப் பெற்றிருந்தார். ஆயினும், அவர் பாவ மன்னிப்பைப் பெற்ற போதிலும் தன் சொந்த நீதியில் இன்னமும் நிறைந்திருந்ததால், தன் சொந்த நீதி உடைந்து விடுமோ என்ற பயத்தில் தன்னைப் பற்றி கூறிக் கொள்வதில் அதிக கவனம் உள்ளவராயிருந்தார். அவரைப் போன்ற அநேக மக்களிருக்கின்றனர். இந்த நீதி அதிக காலம் தாக்குப்பிடிக்குமா? அது சீக்கிரமே முறிந்து போகும்.
நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தாலும் கூட உங்கள் மாமிசம் பலவீனமாயுள்ளதா? ஆம். நிறைவான வாழ்க்கை வாழுகிறீர்களா? பாவமன்னிப்பு பெற்ற பிறகு நாம் ஆவியானவருடன் நடக்கும்போது மட்டுமே, நம்மால் குறையின்றி வாழமுடியும். கர்த்தரின் முன் நீதியின் செயல்கள் மட்டுமே நல்லவையாக தகுதியுள்ளவை. நாம் ஆவியுடன் பணியாற்றி அதனுடன் நடக்கும்போது மட்டுமே நாம் புகழப் படத்தக்கவர்கள். மாமிசத்தின் படி நாம் பாராட்டப் படுவதற்கு ஒன்றுமில்லை. பாவமன்னிப்புப் பெற்ற பரிசுத்தவன்களில் சில மக்கள், தம் நீதி உடைந்துவிடும் என்ற பயத்தால் தம் நீதியை ஆசரிக்க முயலுவர்.
ஆயினும், அவர்களால் தேவன் மகிழ்வதில்லை. மனித நீதி எப்படியோ உடைந்து விடும். அது சீக்கிரமாக உடைவது மிக நன்று. எப்படியோ 10 அல்லது 20 வருடங்களில் உடைந்து விடும். ஆகவே, வெளி மனிதன் உடைவதால் உள்மனிதன் விசுவாசத்தினால் வாழ முடியும். தம் நீதி எப்படியோ உடைந்து விடும் என்றாலும் மக்கள் அவை உடையக் கூடாது என்று முயல்கின்றனர்.
தேவன் நம் இரட்சகரானார். நம் இரட்சகர் எத்தனை நிறைவானவர்! தேவனாகிய கர்த்தர் நம் இரட்சகரானார். அவர் உன்னையும் என்னையும் இரட்சித்தார். உங்கள் மாமிசத்தின் தவறுகளினால் நீங்கள் மீண்டும் பாவியாகிறீர்களா? இல்லை. கர்த்தர் எல்லா நீதியையும் நிறைவேற்றினார். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்த பிறகு நம் நீதி அநேக முறை உடையும். நாம் தேவனை பின்பற்றும்போது நம் தீமை அநேக முறை வெளிப்படுகிறது. உள்ளேயே அனைத்தையும் ஒளித்துக்கொள்ள முயல்கிறது, வெளிப்படையாக பழகும் ஒருவரிடம், அது மற்றவர்களுக்கு வெளிப்படுகிறது. நம்முடைய நீதி வெளிப்படும்போது, நம் நீதி மட்டுமே உடைகிறது. ஆனால் தேவனின் நீதி உறுதியாக இருக்கிறது.
மாமிசத்தினால் பிறப்பது மாமிசமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்
நம் தேவனாகிய கர்த்தர் நிறைவான இரட்சகரென்று நீங்கள் விசுவாசிக்கவேண்டுமென விரும்புகிறேன். ஆகவே, நாம் விசுவாசத்தினால் வாழவேண்டும். நம்முடைய நீதி உடைய வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார், அது அவருக்குப் பிரியமாயிருக்கிறது. யோவான் 3:6 கூறுகிறது, “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (யோவான் 3:6) மாமிசத்தினால் ஆவியாக முடியாது. “உலக வாழ்விலிருந்து விடுதலையாகும் கொள்கை” என்று பௌத்த மதத்தில் இருக்கிறது. அது மாமிசத்தினால் ஆவியாக முடியுமென வலியுறுத்துகிறது. மாமிசத்தினால் ஆவியாகவே முடியாது. இல்லை, அதனால் முடியாது. யாரால் அப்படிச் செய்ய முடியும் முன் வாருங்கள். யாராலும் அதனைச் செய்ய முடியாது.
அடிப்படை பௌத்த மதத்தின் மிகப்பிரபலமான கொரிய மதகுருவான சங்-சூல் சில வருடங்களுக்கு முன் இறந்தார். ஒரு சுவரை ஏறத்தாழ 20 வருடங்கள் பார்த்துக் கொண்டு உண்மையைத் தேடி தியானம் செய்தார். பத்து வருடங்களாக ஆவிக்குரிய ஞானத்தைப் பெறவேண்டுமென தூங்குவதற்குகூடப் படுக்கவில்லை. அந்த 10 வருடங்களில் உட்கார்ந்தபடியே தூங்கினார். அவர் நல்ல மனதை மட்டுமே பெற்றுக் கொள்ளும்படியாக, தன்னுள்ளேயிருந்து வரும் தீய சிந்தனைகள், விபசாரம், இச்சை, கொலை, களவு, கபட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகியவற்றை வெற்றிக் கொள்ள முயன்றார். அவர் வாழும் புத்தர் என்று அநேக மக்கள் எண்ணினர். ஆயினும் தன்னுடைய இச்சையை அழிக்க முடியவில்லை என்று அவருக்கேத் தெரியும். ஆகவே, மலைகளுக்கு நடுவே இருபது வருடங்களாக மனதைப் பண்படுத்த முயன்ற அவர் சாகும்போது நிர்வாணத்தை குறித்து ஒரு கவிதையை விட்டுச் சென்றார்.
“என்னுடைய வாழ்ந்த நாட்களில் அநேக ஆண்களையும் பெண்களையும் வஞ்சித்ததால் என் பாவங்கள் உயர்ந்த மலையை விடவும் பெரியது. நான் முடிவில்லாத நரகத்தில் விழுவேன். என்னுடைய புலம்பல்கள் பத்தாயிரம் வழிகளில் பிரியும். சிவப்பு சூரியனின் ஒரு பகுதி நீலமலைகளுக்குப் பின்னால் கீழிறங்குகிறது.”
அவருடைய நல்ல தன்மையையும் நல்ல போதனைகளையும் உலகிலுள்ள எல்லா மத மக்களும் வரவேற்றனர். ஆயினும், தான் நரகம் செல்லபோவதாக தானே கூறினார்.
மாமிசத்தினால் ஆவியாகவே முடியாது ஆனால் அவரின் இரட்சிப்பை விசுவாசித்து நாம் மறுபடியும் பிறக்கும்போது நம் ஆத்துமாக்கள் கர்த்தரின் பிள்ளைகளாகும். அவரின் நீதியால் நம்மை மீண்டும் உயிரோடெழுப்பிய கர்த்தரின் கிருபையால் நாம் புதிய படைப்புகளானோம். அவனின்/அவளின் சொந்த முயற்சிகளினால் மனிதனால் தன்னை புதிதாக்க முடியாது.
ஊழியர்கள், மதக்குருக்கள், கத்தோலிக்க தந்தைகள் தம் சிறைச்சாலை ஊழியத்தின் போது கைதிகளிடம், அவர்களின் எஞ்சியிருக்கும் நாட்களில் நல்வாழ்க்கை வாழும்படி அறிவுரைக் கூறுவர். ஆயினும், மாமிசம் எப்பொழுதும் மாறாது. நம்முடைய சொந்த நீதியைக் கைவிட்டு தேவனே நம் இரட்சகர் என்று நாம் உறுதியாக விசுவாசிக்க வேண்டுமென கர்த்தர் எதிர்ப்பார்க்கிறார். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவையையும் விசுவாசியுங்கள். அப்பொழுது பெரிதான இரட்சிப்பின் விசுவாசத்தைப் பெறுவீர்கள்.
கர்த்தர் விசுவாசிகளை எதிர்பார்க்கிறார்
தேவன் நம் கிருபாதார பலியானார். பிதாவாகிய கர்த்தரை மனிதர்களிடமிருந்து பிரித்த அனைத்தையும் அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது ஏற்றுக் கொண்டார். நம் பாவங்களுக்கு கிரயம் செலுத்துவதற்காக அவர் சிலுவையிலறையப்பட்டு, நம் இடத்திலிருந்து தீர்க்கப்பட்டு, எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார். கர்த்தர் நம் கிருபாதார பலியானார்.
அவர் கூறினார் “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியயைக் காண்பிக்கும் பொருட்டாகவும். கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.” (ரோமர் 3:25-26)
கர்த்தர் உலகிற்கு வந்து எல்லா நீதியையும் நிறைவேற்றினார். உலகிலுள்ள அனைவரும் பாவமற்றவர்கள். அவன்/அவள் கர்த்தரின் நிறைவான இரட்சிப்பை விசுவாசித்தால் யாரும் நரகத்திற்குச் செல்வதில்லை. அவன்/அவள் நரகத்திற்கு செல்வது அவனின்/அவளின் அவிசுவாசத்தினாலேயாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவை மரணத்தையும் விசுவாசித்து, அவன்/அவள் தம் சொந்த நீதியையும் கபட்டுத்தனத்தையும் விட்டு கர்த்தரை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் ஒருவர் இரட்சிக்கப் படமுடியும். கர்த்தரின் பார்வையில் நாம் பாவமற்ற ஒரு நிலையில் வாழுகிறோம். ஏனெனில், அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது எற்றுக்கொண்டு அவற்றை அழித்தார்.
நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன். நீங்களும் விசுவாசிக்கிறீர்கள். அவரே இரட்சகர். நம்மிடம் பாவமில்லை. தேவனாகிய கர்த்தர் நம்மை நிறைவாக இரட்சித்தார். நாமெப்படி மீதி வாழ்க்கையை வாழ்வது என்பதே நமக்கு விடப்பட்ட ஒரே பிரச்சினை. நாம் எப்படி வாழவேண்டும்? நாம் ஆவியானவருடன் நடக்க வேண்டும். நம்முடைய பாவத்தை ஒழிப்பதைக் குறித்து நமக்கு கவலை இல்லை. “முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதை” என்பதன் பொருள் நம் பாவங்களுக்காக கர்த்தர் நம்மை ஆக்கினைக்குட் படுத்துவதில்லை என்பதாகும். யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தை பெற்று பாவங்களைச் சுமந்ததாலும், சிலுவையிலறையப்பட்டதாலும், கர்த்தர் ஏற்கெனவே நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்ததால் நம்மிடம் எந்தப் பாவங்களும் இல்லை, ஆகவே தீர்ப்பதற்கு நம்மிடம் எதுவுமில்லை. ஆகவே, கர்த்தர் நம்மை நம் பாவங்களுக்காக தண்டிப்பதில்லை. இருதயத்தினால் இந்த உண்மையை விசுவாசிப்பவர்களை கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
நீதிமான் ஒருவனும் இல்லை வேதாகமம் கூறுகிறது, ஆனால் கர்த்தரின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் நீதிமான்களானோம். கர்த்தர் கூறுகிறார் “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி, ஏகமாய்க்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும், இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழியிலிருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.” (ரோமர் 3:10-18).
எல்லாவிதமான தீமைகளையும் உலகின் வாழும்போது செய்து, நீதிமானாயில்லாமல், எந்தப் பயனுமில்லாமல் போனவர்களின் எல்லா விதமான பாவங்களையும், கர்த்தர் இவ்வுலகிற்கு வந்து யோர்தான் நதியில் ஏற்றுக் கொண்டார். இதனை விசுவாசிக்கிறீர்களா?
கர்த்தர் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்று விசுவாசிக்கும் மக்களை அவர் எதிர்பார்க்கிறார். தேவனின் கண்கள் நீதிமான்களின் மீது இருக்கிறது. நீதிமானாகிய நம்மை அவர் உற்சாகப் படுத்துகிறார். அவர் நம்மைப் பொறுப்பெடுத்துள்ளார், எப்போதும் நம்முடனிருக்கிறார், நம்மை நிறுத்தி நம்முடன் பணியாற்றுகிறார். நீதியின் செய்கைகளை கர்த்தர் நம்மிடம் ஒப்படைத்தார். நம் மாமிசத்தின் தீமைக்காக நாம் கவலைப்பட்டால் இயேசு நமக்கும் மேலாக கவலைப்படுகிறார். “நான் ஏற்கெனவே உன் எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை இரட்சித்துவிட்டபோது நீயேன் உன் பாவத்தைக் குறித்து வருந்துகிறாய்?”
இப்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம், கர்த்தரை விசுவாசித்து ஆவியானவருடன் நடந்து, ஆத்துமாக்களை அறுவடைச் செய்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். நாம் இப்போது செய்யவேண்டியது அவற்றையே. இதனை விசுவாசிக்கிறீர்களா? உங்கள் நீதியை மற்றவர்களிடம் ஒப்பிட்டு உங்கள் சொந்த நீதியைக் காட்டிக் கொள்ளாதீர்கள், அவனால்/அவளால் நீதிமானாகாத நபரை கேலி செய்யாதீர்கள். இயற்கையாகவே நீதிமானாயிருக்கும் மனிதர்கள் இல்லை.
தம் ஞானஸ்நானத்தினாலும் சிலுவையினாலும் நம்மை இரட்சித்த தேவனுக்கு நன்றி கூறுகிறோம்
நம்மை இரட்சித்த அவரின் அன்பைத் தவிர கர்த்தருக்கு முன் பெருமை பாராட்ட எதுவுமில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம் கர்த்தரின் இரட்சிப்பை பெருமை பாராட்டுவதே, நாம் அதனைப் புகழ்ந்து அவரை மகிமைப் படுத்த, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்க வேண்டும். பாவத்தைக் குறித்தும் நரகம் செல்வதைக் குறித்தும் நாம் கவலைப்படவேண்டியதில்லை. “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை” (ரோமர் 8:1). எப்பொழுதுமில்லை. அதனைக் காண்கிறீர்களா? அவரின் நீதியின் செய்கையால் அவனை/அவளை தேவன் இரட்சித்தார் என்ற குறிப்புடன் ஐக்கியமாகாத அவனும்/அவளும் நரகம் செல்வர், ஆயினும் அவன்/அவள் அதனை விசுவாசித்தால் நரகம் செல்வதைக் குறித்து அந்நபர் கவலைப் படத் தேவையில்லை.
கர்த்தராகிய தேவன், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தால் நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்தார். நாம் எத்தனை நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும் “ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன்? புற ஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம், புற ஜாதிகளுக்கும் அவர் தேவன் தான்.” (ரோமர் 3:28-29).
கர்த்தர் யூதர்களுக்கு மட்டும் கர்த்தராயிராமல், புற ஜாதியாருக்கும் கர்த்தராயிருக்கிறார். அவர் அனைத்து மனிதர்களின் கர்த்தர். தேவனாகிய கர்த்தர் நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்தார். அதனைச் செய்வதற்கு, அவர் உலகிற்கு வந்து, நம் பாவங்களை ஏற்றுக்கொள்ள ஞானஸ்நானம் பெற்று, எல்லாப் பாவங்களுக்கும் தீர்ப்பாக சிலுவையிலறையப்பட்டார். ஆகவே, அவர் மனிதர்களின் கர்த்தரும், இரட்சகருமானார். ரோமர் 3 ஆம் அதிகாரத்திற்கான முடிவுவரை இதுவே. அப்போஸ்தலனாகிய பவுல் இதனை விசுவாசித்தான். நாமும் இதனை விசுவாசிக்கிறோம்.
மாமிசத்தின் பலவீனத்தைக் குறித்து மட்டும் அப்போஸ்தலனாகிய பவுல் பேசவில்லை, அத்துடன் சட்டத்தையும் கர்த்தரின் நீதியையும் குறித்தும் பேசுகிறான். செய்கையின் சட்டத்தினால் நம்மால் இரட்சிப்படைய முடியாது. நாம் எதனால் விடுதலையடைவோம்? கர்த்தரின் இரட்சிப்பின் மீதுள்ள விசுவாசத்தினால். தேவனாகிய கர்த்தர் நமக்கு கிருபாதார பலியானதுடன் முற்காலத்தில் செய்த பாவங்களையும் பொறுத்துக்கொண்டார். ஆகவே, அவிசுவாசிகள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானதினால் பாவத்திற்காக தீர்க்கப்படுவர். மாமிசத்தின் பலவீனத்தினால் செய்த பாவங்களை அவர் தீர்ப்பதில்லை, ஏனெனில் உலகில் பாவமில்லை.
ஆகவே, நாம் தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்க வேண்டும். விசுவாசிகளுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. கர்த்தர் விசுவாசிகளின் கர்த்தர், ஆகவே எஞ்சியிருக்கும் நம் வாழ்நாட்களை ஆவியானவருடன் நடப்பதில் கழிக்கவேண்டும், நம்முடைய மாமிசம் இச்சையின் படி வாழ விரும்பினாலும், நம் அனைத்துப் பாவங்களும் ஏற்கெனவே கழுவப்பட்டுவிட்டதால், நம்மால் எப்பொழுதும் ஆவிக்குரியவற்றைச் செய்ய முடியும். தேவனாகிய கர்த்தர், யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் கர்த்தர். விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் கூட அவரே கர்த்தர். அனைத்து மனிதர்களும் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதை கர்த்தர் விரும்புகிறார் என்பது இதன் பொருள். அவிசுவாசிகளுக்கும் அவர் இரட்சகராயிருக்க முடியும். அவிசுவாசிகளுக்கு அவர் ஏற்கெனவே கர்த்தர் ஆனார்.
இருதயத்தின் அடியிலிருந்து தேவனாகிய கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன். தேவனாகிய கர்த்தர் இல்லாவிட்டால் அவர் மனிதனின் சாயலாக இவ்வுலகிற்கு வராமல், நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்க்க யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றிராவிட்டால், என் நிலைமை எத்தனை மோசமாயிருந்திருக்கும். அவர் நம் முழுமையான இரட்சகராகியிருக்காவிட்டால், நாம் மரிக்கும் நாள் வரை பலவீனர்களாக இருப்பதால், பாவமன்னிப்பை பெற்றுக் கொண்ட பிறகும் கூட நாம் பாவிகளாயிருந்திருப்போம். தேவனாகிய கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன்.