• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 4-1] ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம்

2021.04.21 43
ரோமர் 4:6-8 இல் கர்த்தருக்கு முன் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களைப் பற்றி பவுல் கூறுகிறான். கர்த்தருக்கும் முன் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவன் யாரெனில் எவனின் அக்கிரமச் செய்கைகள் மன்னிக்கப்பட்டு பாவங்கள் மறைக்கப்பட்டனவோ, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவன். ஆகவே பவுல் அறிவிக்கிறான், “எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள்.” (ரோமர் 4:8)
பிறகு ஆபிரகாமை ஆசீர்வதிக்கப்பட்ட நபராக பவுல் அறிமுகப்படுத்துகிறான். வேதாகமத்திலிருந்து உதாரணமாக ஆபிரகாமை பயன்படுத்தி உண்மையான ஆசீர்வதிக்கப்பட்ட விசுவாசம் என்னவென்று பவுல் விளக்குகிறான். அவனின் சொந்த செய்கைகள் ஆபிரகாமை சரியாக்கியிருந்தால் அவனுக்கு பெருமைப் பாராட்ட எதுவோ இருந்திருக்கும், ஆனால் அது அப்படியில்லை. அவன் பெற்றுக்கொண்ட கர்த்தரின் நீதியானது, கர்த்தரின் வார்த்தைகளை அவன் விசுவாசித்ததாலேயே சாத்தியமாயிற்று.
ஆபிரகாமின் விசுவாசத்தைப் போன்று கர்த்தரின் வார்த்தைகளை எந்த சிந்தனையும் இல்லாமல் விசுவாசத்தால் ஒருவனால் நீதிமானாகி ஆசீர்வதிக்கப் படமுடியுமென்று வேதாகமம் அவ்விசுவாசத்தைக் குறித்து கூறுகிறது. இந்த அதிகாரத்தில், அப்போஸ்தலனாகிய பவுல், ஒருவன் தன்னிருதயத்தில் அவரின் வார்த்தைகளை விசுவாசிப்பதன் மூலம், கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகிறான்.
பூமியில் வாழும்போது பாவம் செய்யாத மனிதன் யாருமில்லை. மேலும், வானத்தை மூடிக்கொண்ட கருமேகம் போல் நாம் அத்தனைப் பாவங்களைச் செய்கிறோம். ஏசாயாவில், நம் பாவங்களும் மீறுதல்களும் கருமேகங்களுக்கு ஒப்பானவை என்று எழுதப்பட்டுள்ளது (ஏசாயா 44:22). இயேசுகிறிஸ்துவின் நீதியை விசுவாசிக்காவிட்டால், கர்த்தரின் நியாயத் தீர்ப்பிலிருந்து அனைத்து மனிதர்களிலும் ஒருவன் கூட தப்பிக்க முடியாது.
இயேசு பெற்ற ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் கர்த்தரின் நீதியை நிறைவேற்றிற்று. ஏற்கெனவே பாவமன்னிப்பு பெற்றவர்களும், தம் மாமிசத்தினால் பாவம் செய்யாதவர்களும் ஒன்றேயாவர். மேலும், நமக்கு தெரியாமலேயே நாம் பாவம் செய்கிறோம், ஆகவே நாம் அப்பாவங்களுக்காக தீர்க்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு நபரிடம் சிறிதளவு பாவமிருந்தாலும், அவன்/அவள் கர்த்தரின் நீதிக்கு முன்னால் மரிக்க வேண்டியவர்கள் என்பதை ஒருவன் மனதில் கொள்ளவேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. (ரோமர் 6:23). ஆகவே நாம் கர்த்தரின் சட்டத்தை புரிந்துகொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும். நம் மனதினாலும் செய்கைகளினாலும் செய்த பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்த வேண்டும், நாம் அக்கிரயத்தைச் செலுத்தவேண்டும், நாம் அக்கிரயத்தைச் செலுத்தினாலேயே நம் பாவ பிரச்சினை தீரும். மறுபுறம், நாம் எத்தனை கஷ்டப்பட்டு முயன்றாலும், நாம் பாவத்திற்கான கூலியை இன்னமும் கொடுக்கவில்லையென்றால், பாவத்திற்கான தீர்ப்பின் பிரச்சினை ஒரு முடிவிற்கு வராது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இயேசுவை விசுவாசிக்கும் ஒரு நபரிடம் பாவமிருந்தால், அவன்/அவள் தம் சொந்தப் பாவங்களுக்காக தீர்க்கப்படுவான்.
எல்லாவிதமான பாவங்களாலும் சூழப்பட்டுள்ள உலகில் நாம் வாழுகிறோம். பெரிதும் சிறிதும், தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றோ வேறுவழியின்றியோ, அநேக விதப்பாவங்கள் உள்ளன. கர்த்தரின் சட்டமான “பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற படி நம்முடைய சொந்தப் பாவங்களுக்காக மரணதண்டனை பெறவேண்டியவர்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.
ஒரு நபர் அவனின்/அவளின் எல்லாப் பாவங்களையும் மூட, கர்த்தரின் நீதியை விசுவாசித்து பாவமன்னிப்பை பெறவேண்டும், கர்த்தரின் நீதி நீர், இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியினாலே வருகிறது. கர்த்தரின் நீதியை விசுவாசித்து பாவமன்னிப்பை பெற்றுக்கொண்ட ஒருவன் கர்த்தருக்கு தொடர்ந்து புகழாராதனைச் செய்ய தகுதிபெற்றவனாகிறான். ஏனெனில் கர்த்தர் தன் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினால் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார். என்னுடைய மேகம் போன்ற பாவங்கள் உட்பட, உலகின் அனைத்துப் பாவங்களையும் தன் ஞானஸ்நானம், இரத்தம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் தேவன் ஏற்கெனவெ எடுத்துக்கொண்டார், ஆகவே நமக்கு நித்திய ஜீவனை அளித்த தேவனுக்கு நன்றி கூற விழைகிறோம்.
யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் மரித்ததன் மூலம் இயேசுகிறிஸ்து எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டிரா விட்டால், பாவங்களுக்கு சம்பளமான மரணத்தை நரகத்திற்குச் செல்வதன் மூலம் செலுத்தியிருப்போம். நம்முடைய அனைத்துப் பாவங்களையும் அவர் முற்றிலும் துடைத்திராவிட்டால் நாமெப்படி அவரைப் புகழுவோம்? நம்முடைய இருதயங்கள் பாவத்தினால் நிறைந்திருந்தால் பரிசுத்தமும் தூய்மையும் நிறைந்த கர்த்தருக்கு முன் நாம் வரும்போது, அவரின் பெயரை நாம் புகழுவது சாத்தியமாகுமா? நம் இருதயத்தில் இன்னமும் பாவமிருக்கும்போது “அவர் நம் எல்லாப் பாவங்களையும் மன்னித்தார்!” என்று அவரின் நீதிக்கு புகழாராதனையை நம்மால் ஏறெடுக்க முடியுமா? இல்லை.
ஆனால் இப்போது, அவரின் நீதியில் அவரை நம் புகழலாம். நாம் அணிந்திருக்கும் ஆடையாகிய கர்த்தரின் நீதி என்ற பரிசை நாம் ஆராதிப்பதால் இவையெல்லாம் சாத்தியமாயிற்று.
 
 
கர்த்தர் செய்தவற்றை நாம் விசுவாசித்ததினால் கர்த்தரின் நீதியைப் பெற்றோம் என்று பவுல் கூறினான்
 
“அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மை பாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மை பாராட்ட எதுவுமில்லை. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப் படாமல், கடனென்றெண்ணப்படும். ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.” (ரோமர் 4:1-5).
ஆபிரகாமை உதாரணமாக எடுத்து நீதிமானாவது எப்படி என்று பவுல் விளக்குகிறான். அவனின்/அவளின் செய்கைக்கு அவன்/அவள் அதற்கேற்ற கூலியைப் பெறுவது சரியானது. ஆயினும், எந்த நன்மையும் செய்யாமல், கர்த்தருக்கு முன்பாக நிறைவான வாழ்வை வாழாமல் இருந்தும், நாம் மறுபடியும் பிறந்ததினால் நீதிமானாக்கப் பட்டது நம்முடைய செய்கைகளுக்கு ஏற்ற கூலியல்ல, அது முற்றிலும் கர்த்தரின் ஈவாகும்.
அப்போஸ்தலனாகிய பவுல், “கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப் படாமல், கடனென்றெண்ணப்படும்” என கூறினான். இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் பலிசெலுத்தப்பட்ட இரத்தத்தினாலும் பாவிகள் பாவத்திலிருந்தி இரட்சிப்பை பெற்றனர் என்பதைக் குறித்து கூறுகிறது. கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் அனைவருக்கும் பாவமன்னிப்பிற்கான ஆசீர்வதிக்கப்பட்ட பரிசாக இரட்சிப்பு வழங்கப்பட்டது.
பாவிகளிற்கான இரட்சிப்பு கர்த்தரின் நீதியின் பரிசாக பாவிக்கு வழங்கப்பட்டது. பாவத்தில் பிறந்தவர்களுக்கு பாவம் செய்வதைத் தவிர வேறுவழியில்லை, அவன்/அவள் தான் பாவி என்று கர்த்தருடன் அறிக்கைச் செய்வதைத் தவிர அவனுக்கு/அவளுக்கு வேறுவழியில்லை. அப்படிப் பட்டவர்களின் பாவங்கள், இப்பொழுது பரவியிருக்கும் கிறிஸ்தவக் கொள்கைகளை விசுவாசித்து, அவன்/அவள் மனம் வருந்தி ஜெபிப்பதால் மறைந்து விடாது.
கர்த்தருக்கு முன்பாக ஒரு பாவியால் அவனின்/அவளின் சொந்த நீதியைக் குறித்து பெருமைப் பாராட்ட முடியாது. “நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல் இருக்கிறது.” (ஏசாயா 64:6) ஆகவே, யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானம், அவரின் பாவநிவிர்த்தியான சிலுவை மரணம் ஆகியவற்றால் நிறைவேற்றப்பட்ட கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதைத் தவிர பாவிக்கு வேறு வழியில்லை. அப்போழுது மட்டுமே கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் ஒருவனுடைய அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படமுடியும். கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்ள பாவி ஒருவன் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதால் மட்டுமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக்கொள்ளமுடியும்.
இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானத்தினாலும், அவரின் பாவநிவர்த்தியான சிலுவை இரத்தத்தினாலும், அனைத்துப் பாவிகளாலும் அவரின் நீதியைக் கண்டு கொள்ள முடிகிறது. ஆகவே, ஒரு பாவியை, பாவத்திலிருந்து இரட்சிப்பை பெற ஏதுவாக்குவது, கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசமேயாகும். இதுவே உண்மை. கர்த்தரின் நீதி அளிக்கும் ஈவு இதுவே.
எல்லாப் பாவங்களிலிருந்தும் பாவிகள் எப்படி இரட்சிப்பு பெறுகிறார்கள் என்பதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான் 
ஆபிரகாமை உதாரணமாக பயன்படுத்தி பவுல் இதனை விளக்குகிறான். “கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்” ஒரு குறிப்பிட்ட வகையான சட்டப்படி செய்வதால் கர்த்தரின் நீதியை ஒருவனால் பெற்றுக் கொள்ளமுடியாது என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். நாம் கர்த்தரின் நீதியை பெறுவதற்கான ஒரே வழி அவரின் ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் நீதியின் சொற்களை விசுவாசிப்பதே.
கர்த்தரின் நீதியே உண்மையாகும், அதனை மனிதர்களின் முயற்சிகளாலோ செயல்களாலோ பெற முடியாது. கர்த்தரின் நீதியின் பரிசு கீழ்க்கண்டவாறு; மக்களாகிய நீங்களும் நானும் நித்திய அழிவிற்கு செல்ல வேண்டியவர்கள், ஆனால் நம் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து, யோர்தான் நதியில் யோவானால் பெற்றுக்கொண்ட ஞானஸ்நானத்தின் மூலம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். அவர் தன் முதுகில் அனைத்துப் பாவங்களையும் சுமந்து சிலுவைக்குச் சென்று அங்கு தன் இரத்தத்தின் மூலம் பாவங்களுக்கான அனைத்து கூலியையும் செலுத்தினார். பாவிகளை நித்திய அழிவிலிருந்து இரட்சித்த கர்த்தரின் நீதியை அவரின் எல்லா நீதியின் செய்கைகளும் நிறைவாக்கின.
 
 
கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்பவர்களால் கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்!
 
வசனம் 5 கூறுகிறது, “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.”
இப்பகுதியில், அப்போஸ்தலனாகிய பவுல் “பாவியை” உதாரணமாக பயன்படுத்தி கர்த்தரின் நீதிக்கான வழியை விளக்குகிறான் “பாவியை” என்பது யாரெனில், கர்த்தருக்கு பயப்படாமல் அவர்கள் வாழ்வு முழுவதும் கொடிய பாவங்களைச் செய்து கொண்டிருப்பவர்கள். மக்கள் ‘பாவக்குவியலாக` பிறந்தார்கள் என்று கூறும் கர்த்தரின் வார்த்தைகள் முற்றிலும் சரியானவை. அதற்கு மேலும், கர்த்தரின் பயங்கரமான தீர்ப்பை பெறவேண்டுமெனில், பாவம் செய்வதைத் தவிர வேறெதையும் தேர்ந்தெடுக்க முடியாத மனிதர்களின் உண்மை சுபாவமாக இது இருக்கிறது என்பது சரியானது. ஆயினும், கர்த்தர் பாவியாகிய நம்மை பாவமில்லாதவர் என்றழைத்து, நம் விசுவாசத்தை நீதியின் விசுவாசம் என்று கூறினால், கர்த்தரின் நீதியைத் தவிர வேறெதனால் இதனைச் சாத்தியமாக்க முடியும்?
பாவிகளாகிய நம்முடன் தேவன் பேசுகிறார்: உலகின் அனைத்துப் பாவங்களையும் எடுத்துக்கொள்வதற்கு, பழைய ஏற்பாட்டின் கடைசித் தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானனால், தேவன் தாமே ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டியதாயிருந்தது. “பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற அவரின் வார்த்தைகளை முழுமையாக்கும்படி அவரின் பாவநிவர்த்தியான இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம்முடைய பாவங்களுக்கு கூலி கொடுக்க வேண்டியிருந்தது. கர்த்தரின் நீதி, அவர் பெற்ற ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மூலம், நம் அனைத்துப் பாவங்களுக்குமான கிரயத்தை இயேசுகிறிஸ்து கொடுத்துவிட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தரின் நீதியே நீதியென்று விசுவாசிப்போரின் விசுவாசத்தையே விசுவாசமாக கர்த்தர் எண்ணுகிறார். இது வலியுறுத்தப்படுவதல்ல, ஆனால் கர்த்தரின் நீதியினால் உறுவான அருமையான ஒன்று.
ஆகவே கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் ஒரு நபரிடம் பிதாவாகிய கர்த்தர் கூறுகிறார், “சரி, நீங்கள் என் மக்களாயிருக்கிறீர்கள். என்னுடைய நீதியை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் என்னுடைய பிள்ளைகள். நீங்கள் பாவமற்றவர்கள். ஏன்? ஏனெனில் என் மகனின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினால் உங்கள் பாவங்களை எடுத்துப்போட்டு உங்களை பாவமற்றவர்களாக்கினேன். ‘பாவத்தின் சம்பளம் மரணம்` என்ற வார்த்தைகளுக்கேற்றபடி அவர் தம் இரத்தத்தினால் உங்கள் பாவங்களுக்கான கூலியைக் கொடுத்தார். மரித்தோரிலிருந்து உங்களுக்காக மறுபடியும் உயிரோடெழுந்தார். ஆகவே அவர் உங்கள் இரட்சகரும் கர்த்தருமாவார். நீங்கள் இதனை விசுவாசிக்கிறீர்களா?”
“ஆம், நான் விசுவாசிக்கிறேன்” அவர் அப்பொழுது தொடர்ந்து கூறுகிறார். “என்னுடைய மகனின் நீதியின் செய்கைகளினால் நிறைவேற்றப்பட்ட என் நீதியை உங்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் என் பிள்ளைகளானீர்கள், என் மகனின் நீர் மற்றும் இரத்தத்தினால் நான் உங்களைத் தத்தெடுத்தேன்.”
கர்த்தருக்கு முன்பாக எல்லா மனிதர்களும் பாவிகளே. ஆயினும், யோவான் அவருக்கு கொடுத்த ஞானஸ்நானத்தின் மூலம், பாவிகள் இதுவரை செய்த பாவங்களையும் நாம் இனிமேல் செய்யப்போகும் பாவங்களையும் தேவனாகிய இயேசு எடுத்துபோட்டார். அதற்கு மேலும், கர்த்தரின் நீதியை விசுவாசிப்போரை தன் நீதியினால் தரிப்பித்து, அதன் மூலம் அவர்களை அவர்களின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். “நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்து கொண்டீர்களே” (கலாத்தியர் 3:26-27). கர்த்தரின் வார்த்தையை நம்மிருதயங்களினால் உண்மையாக விசுவாசிக்கிறோமா இல்லையா என்பதே இப்போதுள்ள கேள்வி. நாம் விசுவாசத்தால் நீதிமானாவோம், விசுவாசிக்காவிட்டால் கர்த்தரின் நீதியை இழந்து போவோம்.
 
 
கர்த்தரின் பார்வையில் பாவிகள் கூட . . .
 
யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதன் மூலம் இயேசு உலகின் பாவங்களை எடுத்துப்போட்டார் என்பதை விசுவாசிப்பதால் மட்டுமே, கர்த்தருக்கு முன்பாக பாவிகளாயிருப்பவர்களுக்கு அவரின் நீதி உரித்தாகும் என்று அவர் உறுதியளித்தார். எல்லா விசுவாசிகளுக்கும் கர்த்தர் தன் நீதியைக் கொடுத்தார். கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் யாரும் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவர். பிதாவாகிய கர்த்தர், அவரின் நீதியிலிருக்கும் விசுவாசிகள், அவரின் பிள்ளைகள் என்கிறார். “ஆம், இப்பொழுது நீங்கள் பாவமற்றவர்கள் என்னுடைய குமாரனாகிய இயேசு உங்களை உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். நீங்கள் நீதிமான்கள். உங்கள் அனைத்துப் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டீர்கள்.”
நாம் பாவிகளாயில்லாவிட்டாலும் கூட, நாம் நீதிமான்கள் என்று உறுதிசெய்ய அவர் தம் நீதியை நம்மீது முத்திரைப் பதிக்கிறார். கர்த்தரின் நீதி நித்தியமானது. தேவனாகிய இயேசு அனைத்து மனிதர்களுக்கும் உண்மையாகவே சரியான செயலைச் செய்தார். கர்த்தரின் நீதியினால் உலகின் மக்களெல்லாம் இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டனர். அவரின் நீதியின் மீதுள்ள அவர்களின் விசுவாசத்தை கர்த்தர் பார்க்கும்போது அந்த பாவிகளை பாவமற்றவர்களாக எண்ணுகிறார். “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்,” ஏனெனில் விசுவாசத்தினால் கர்த்தரின் நீதியை அவன் ஆசீர்வாதமாகப் பெற்றிருக்கிறான்.
“நீ பாவமில்லாதவனா?” என்று கர்த்தர் நம்மிடம் கேட்கிறார். கர்த்தரின் பார்வையில் நாம் பாவிகள் என்று ஒத்துக்கொள்கிறோம். நாம் இதனை ஒப்புக்கொள்ளும் போது, இயேசுவின் மீது நன்றியுடையவர்களாகிறோம், அவர் பாவிகளுக்காக ஞானஸ்நானம் பெற்று, அவரின் இரத்தத்தை சிலுவையில் சிந்தினார், உலகின் பாவங்களை சுமந்தது நம் சொந்த முயற்சிகளல்ல, அது கர்த்தரின் நீதியால் ஆனது. ஆயினும், நாம் சட்டத்திற்கு சரியாக கீழ்ப்படியக் கூடிய மக்கள் என்று எண்ணினால், நம்மால் நன்றியறிதலுள்ளவர்களாகவும் இருக்க முடியாது அல்லது அவரின் நீதியின் மீது விசுவாசமுள்ளவர்களாகவும் இருக்க முடியாது.
அவர் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கிற “பாவியை நீதிமானாக்குகிறவர்,” ஆகவே அவன்/அவள் அவரின் நீதியை பரிசாக பெறுகிறார்கள். விடுதலையையும் இயேசுகிறிஸ்துவின் தீர்ப்பையும் விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தரின் நீதி பரிசாக கொடுக்கப்படுகிறது, ஆனால் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காதவர்களுக்கு, கர்த்தரின் ஆசீர்வாதமும் கிருபையும் மூடிவைக்கப்பட்டிருக்கும்.
மறுபடியும் பிறந்த நீதிமானுக்கு கூட, இயேசு நிலைநிறுத்திய கர்த்தரின் நீதியானது அன்றாட தேவையாகும், ஏனெனில் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நம்மால் கூட, இவ்வுலகில் வாழும்போது ஒவ்வொரு நாளும் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது. ஆகவே, ஒவ்வொரு நாளும், இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார், என்ற கர்த்தரின் நீதியின் மகிழ்ச்சியின் செய்தியை நமக்குள் நினைவு கூறவேண்டும். ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியான செய்தியை நாம் கேட்கும்போதும், அது பொங்கி வழியும் வல்லமையினால் நம் ஆத்துமாக்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டி நம் இருதயத்தை வலிமைப் படுத்துகிறது. “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.” என்ற வசனத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? இந்த தேவ வசனங்கள் உலகின் எல்லா மக்களிடமும் பேசுகிறது.
ஆபிரகாமின் உதாரணம் மூலம், கர்த்தரின் நீதியை ஒருவன் எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்று வேதாகமம் விவரமாக பேசுகிறது. ஆயினும் கர்த்தரின் இரட்சிப்பிற்கு நன்றியறிதலுடையவனாயிராமல் “கிரியை செய்கிறவன்” கர்த்தரை எதிர்க்கிறான் என்று கூறப்பட்டுள்ளது. “கிரியை செய்கிறவன்” கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதில்லை. ஆகவே அவன் நன்றியறிதலில்லாதவன். வசனம் 4 என்ன கூறுகிறதென்றால், நற்காரியங்களைச் செய்வதன் மூலம், பரலோகம் செல்ல முடியும் ஒருவனுக்கு/ஒருத்திக்கு, கர்த்தரின் நீதி தேவையில்லை.
ஏன்? ஏனெனில் கர்த்தரின் நீதி அங்கு காணுவதற்கில்லை, அவனும்/அவளும் தம் பாவங்களை நல்ல காரியங்களைச் செய்தும், ஒவ்வொரு நாளும் மனம் வருந்தி ஜெபிப்பதாலும், அவன்/அவள் இப்படியாக கழுவமுயல்வதால் கர்த்தரின் நீதி அங்கில்லை. அத்தகைய மனிதன் கர்த்தரின் நீதியை முற்றிலுமாக ஏற்றுக்கொள்வதில்லை, ஏனெனில், அவன்/அவள் தன் நற்செயல்களை தாமாகவே விரும்பி வீசி விடுவதில்லை. அதற்கு பதிலாக, மனம் வருந்தி ஜெபிப்பதுடன், அழுது உபவாசமிருந்து, அவன்/அவள் ஆத்துமாவிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ள அவனும்/அவளும் முயல்கிறார். ஆகவே, அவருடைய நீதியின் வார்த்தைகளை உண்மையாகவே விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே கர்த்தரின் நீதி கொடுக்கப்படுகிறது.
 
 
கிரியை செய்பவனுக்கு, கூலி பரிசாக எண்ணப்படமாட்டாது!
 
“ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோமர் 4:5).
சகோதரர்களே, இந்த வேதவசனம் கர்த்தரை ஏற்றுக்கொண்டு, ஆபிரகாமைப் போன்று கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிப்பவனுக்கு பொருந்துகிறது. பாவிகளை இரட்சித்த, இரட்சிப்பின் தேவனை நாம் விசுவாசிக்கிறோம். இவ்வுலகில் இரண்டு வகையான கிறிஸ்தவ விசுவாசிகள் இருக்கின்றனர். வசனம் 4 இல் “கிரியை செய்கிறவன்” என்றொருவன் வருகிறான், அத்தகைய மனிதன் கர்த்தரின் இரட்சிப்பை பரிசாக எண்ணாமல், கடனாக எண்ணுகிறான். ஏனெனில் கர்த்தருக்கு முன்பாக தம் நற்செயல்களால், இத்தகைய மக்கள் அங்கீகாரம் பெற விரும்புகின்றனர். இயேசுவை விசுவாசித்த பிறகு கர்த்தரின் நீதியை, இரட்சிப்பை மறுக்கக்கூடியவர்கள். கர்த்தரின் நீதியை பெற்றுக்கொள்ள உங்களின் எத்தகையப் பலி தேவையென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?
உங்கள் நற்செயல்களைப் பிடித்துக்கொண்டு கர்த்தருக்கு முன்பாக நடக்க விரும்பினீர்களென்றால், கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்ளாத பாவத்தை பெற்றவர்களானீர்கள். அநேக கிறிஸ்தவர்கள் ஆதரிக்கும் படிப்படியாக பரிசுத்தமாகும் தத்துவம், அவர்களை அநேக நற்செயல்களைச் செய்ய வைத்து, பரிசாகிய கர்த்தரின் நீதியுடன் மோதச் செய்து அவர்களை கர்த்தரின் பகைவர்களாக்கிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? படிப்படியாக நாம் கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்வோம் என்று வேதாகமம் கூறவில்லை. நம்முடைய செயல்களினால் கர்த்தரின் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அது கூறவில்லை.
மனம் வருந்தி ஜெபிப்பதனால் நீங்கள் பரிசுத்தமாக முடியுமென்று ‘மனித செயல்களின்` ஆதரவாளர்கள் போதிக்கிறார்கள். சுத்தமாகவும் நன்றாகவும் வாழ்ந்தால் நீங்கள் அதிகம் நீதிமானாவீர்கள் என்றும், இயேசுகிறிஸ்து உங்கள் பாவங்களை ஒழித்துவிட்டாலும் நீங்கள் மரிக்கும் வரை பக்தியாக வாழ்ந்தால் இரட்சிக்கப்படமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் கர்த்தரின் நீதியை மனித செய்கைகளுடன் ஒப்பிடமுடியாது. கர்த்தரின் நீதியை எதிர்ப்பவர்கள் சாத்தானின் பக்கமாகிவிடுகிறார்கள். அத்தகைய நபர்கள் தேவனின் நீதியை மறுப்பதால், தேவனுக்கு முன்பாக அவர்களால் பாவமன்னிப்பை பெறமுடியாது.
சகோதரர்களே, நாம் 100% பாவிகள் ஆயினும், அநேக மக்கள் கர்த்தரின் நீதியை தவறாகப் புரிந்துகொள்வதால், விசுவாசத்தின் தவறான பாதையில் நடக்கின்றனர். சில மக்கள் தாம் கொஞ்சம் புனிதர்கள் என்றெண்ணுவதால், அவர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதில்லை. தம் சொந்தத்திலேயே மனம் வருந்தி ஜெபிப்பதால், தம் அன்றாடப் பாவங்களிலிருந்தும் எதிர்காலப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இம்மக்கள் தம்மில் சிறிதளவு புனிதத் தன்மை இருப்பதாக விசுவாசிப்பதால், கர்த்தரின் நீதியைத் தேடி அதனை விசுவாசிப்பதற்கு பதிலாக தம் நற்செயல்களை முன்னிலைப் படுத்துகிறார்கள்.
எத்தகைய நபரால் நீதிமானாக முடியும்? மனம் வருந்தி ஜெபிக்க முடியாதவர்களால் நீதிமானாக முடியும். பாவ அறிக்கை ஜெபம் ஒருவனுக்கு தேவையில்லை என்று இது பொருள்படவில்லை. இந்தப் பகுதியில் நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்களென்று நம்புகிறேன். “நீதிமானின் வாழ்க்கை” என்பதைக் குறித்து பிறகு கூறுகிறேன். கர்த்தருடைய நீதியை எதிர்ப்பவர்கள், உபவாசமிருப்பது, பக்தியுடன் வாழ்வது போன்ற நற்செயல்களை பெரிதாக எண்ணுகின்றனர்.
ஆயினும், தம்முடைய செயல்கள் குறையுள்ளவை என்று அறிந்தவர்களால் மட்டுமே இயேசுவின் பாவமன்னிப்பு பரிசை தம் இருதயங்களில் பெற்று பாவியின் நிலையிலிருந்து நீதிமானாக முடியும். நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை என்னவெனில் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதும், நம் சொந்த நீதியைக் குறித்து பெருமைப் பாராட்ட எதுவுமில்லை என்பதுமாகும். “ஓ, கர்த்தரே! நாம் இத்தகைய பாவங்களைச் செய்தோம். மரிக்கும்வரை தொடர்ந்து பாவம் செய்யவெண்டியவர்கள் நாம்.” என்று கர்த்தருக்கு முன்பாக ஒப்புக்கொள்ளவேண்டும். அது ஒன்றே நாம் நேர்மையாக ஒப்புக் கொள்ளவேண்டியது. நாம் செய்யவேண்டிய மற்றொரு காரியம் என்னவென்றால் இயேசுகிறிஸ்து அவரின் நீதியை முற்றிலும் நிறைவேற்றினார் என்று விசுவாசிப்பதாகும்.
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதன் மூலம் அனைத்துப் பாவிகளாலும் அவனின்/அவளின் பாவங்களிலிருந்து முற்றிலும் இரட்சிப்பு பெற முடியும். பாவத்தின் நடுவில் அழுகிப் போகவேண்டிய நமக்கு அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பை பெற்றுத்தந்த இயேசுகிறிஸ்துவின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் புகழுகிறோம்.
 
 
உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்?
 
கர்த்தருக்கு முன்பாக ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்? கீழ்க்கண்ட விதமாக உள்ளவனை ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று வேதாகமம் கூறுகிறது. “எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள்” கர்த்தரின் பார்வையில் ஒருவனால் நற்செயல்களைச் செய்யமுடியாவிட்டாலும், அவனிடம் குறைகளும் தவறுகளும் உள்ளன, அல்லது கர்த்தரின் சட்டத்தின் அனைத்துப் பகுதிகளையுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோ கடைப்பிடிக்க முடியாதவனாயிருக்கிறான், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் இரத்தம் ஆகியவை மூலம் நம் அனைத்துப் பாவங்களையும் அழித்துப்போட்ட கர்த்தரின் நீதியினை விசுவாசிப்போரின் வாழ்வுக்கு கர்த்தர் பாவமன்னிப்பை ஆசீர்வாதமாக வழங்கினார். இத்தகைய மக்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கிறார்கள், எண்ணிலடங்காத மக்களிலிருந்து அவருக்கு முன் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள், இவர்கள் கர்த்தருக்கு முன்பாக அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பை பெற்றோம். கர்த்தர் அப்படிக் கூறினார் என்று நாம் நம்புகிறோம். கர்த்தர் அப்படிக் கூறியிருக்கும் போது அவர் வார்த்தைகளில் நாம் எதனையும் சேர்க்க முடியுமா? இல்லை சேர்க்கக்கூடாது.
இவ்வுலகின் அநேக மக்கள் இயேசுவை அவர்களின் இரட்சகராக அறிக்கைச் செய்தாலும், இன்னும் கூட தம் நற்செயல்களால் இரட்சிப்பை பெற முயலுகிறார்கள்.
இயேசு யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்த பிறகு உயிரோடெழுந்தார், என்ற பாவத்திலிருந்து கர்த்தரின் இரட்சிப்பு, என்ற சத்தியத்தை ஈடு செய்வதற்கு பெரிதாக எதுவும் இருக்கிறதா?
ஆயினும், கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதைக் குறித்து இந்நாளின் அநேக கிறிஸ்தவர்கள் குழம்பிய நிலையிலுள்ளனர். இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று மக்களுக்குத் தெரியும். மறுபுறம் இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கிய பிறகு தம்முடைய இரட்சிப்பிற்கு படிப்படியாக பரிசுத்தமாகுவதும் நல்வழியில் வாழ்வதும், கர்த்தரின் வார்த்தைகள் மூலம் சட்டத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியம் என்று அவர்கள் எண்ணுகின்றனர். இப்படியாக மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறுவது நீதி போன்றே தோன்றினாலும், அது, கர்த்தரின் நீதியை அறிந்து விசுவாசிக்கும் விசுவாசத்திற்கு அதிக தூரத்திலுள்ளது. தேவனை ஒருவனால் எப்படி நன்கு விசுவாசிக்க முடியும்? கர்த்தரின் நீதியை உள்ளடக்கியுள்ள நீர் மற்றும் பரிசுத்த ஆவியில் அப்பழுக்கற்ற விசுவாசம் வைப்பதன் மூலம், நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவதன் மூலமே, அது சாத்தியமாகும். கர்த்தரின் நீதி முற்றிலும் வெளிப்பட்ட அவரின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மீதுள்ள நம் விசுவாசத்தினால், கர்த்தரின் உண்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்படைய நம்மை ஏதுவாக்குகிறது.
படிப்படியாக பரிசுத்தமாகும் தத்துவம், நிபந்தனையற்ற தேர்வு, சரியெனக் காட்டுதல் போன்ற குழப்பமான கிறிஸ்தவக் கொள்கைகளையும், பன்றி இறைச்சியை சாப்பிடாமல் இருப்பது, ஔய்வு நாளை ஆசரிப்பது போன்றவற்றால் இரட்சிப்பை பெறலாம் என்பது போன்ற தவறான நம்பிக்கைகளையும் நாம் தூர எறிய வேண்டும். இத்தகைய அறிவில்லாதவற்றை பேசுகிறவர்களிடமிருந்து நாம் அதிக தொலைவிருலிருக்க வேண்டும். அவர்களுடைய பேச்சுகளுக்கு முடிவோ, சரியான பதில்களோ இல்லை.
சகோதரர்களே, நாம் எந்த நற்காரியங்களையும் செய்யாமல் கர்த்தரின் நீதியை நம்பி இரட்சிப்பை பெற்றுக்கொண்டது சரியான விசுவாசமா இல்லையா? -ஆம், அதுவே சரியான விசுவாசம்.- கர்த்தரின் நீதியிப் பெற்றுக்கொள்வதற்கு நாம் எத்தகைய செயல்களைச் செய்தோம்? கர்த்தருக்கு முன் நாம் நற்செயல்கள் எதனையும் செய்தோமா? -இல்லை- நம் சிந்தனைகளிலாவது நாம் நிறைவானவர்களாக இருக்கிறோமா? -இல்லை. நாம் அப்படி இல்லை.- இதன் பொருள் நாம் விரும்பும் வகையில் வாழலாம் என்பதா? -இல்லை.- அவரின் பிள்ளைகளாவதற்கு சட்டத்தின்படி நல்வாழ்க்கை வாழவேண்டுமா? -இல்லை.- சரியான விசுவாசத்தின் மூலம் அவரின் நீதியை நம்பி, பாவமன்னிப்பை பெற்று, பரிசுத்த ஆவியானவரை பரிசாக பெறவேண்டும் என்று அது பொருள்படும்.
நல்வாழ்வு வாழலாம் என்பது மக்களுக்கு சாத்தியமேயில்லாத ஒன்று. ஆயினும், ஒருவன் எச்செயலையும் செய்யாவிட்டாலும், அவன்/அவள் இயேசு அளித்த நீதியை விசுவாசித்ததால், அவன்/அவள் ஆசீர்வதிக்கப்பட்ட நபர், ஏனெனில் அவர்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டனர். நல்வாழ்க்கை வாழும் திறமை யாரிடமும் முதலிலிருந்தே இல்லை. ஆகவே, கர்த்தர் நமக்காக மனமிரங்கி, இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பி, அவரின் பாவங்களை அவர் தம் மீது சுமக்கும் பொருட்டு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெறச் செய்தார். இயேசு சிலுவைக்கு பாவங்களைச் சுமந்து, பாவப்பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்படி செய்யப்பட்டார்.
“மற்றவர்கள் நன்மைக்காக ஒருவன் தன் வாழ்வை பலியாக்க வேண்டுமென” ஒரு பழமொழி உண்டு. ஒருவன் முழுகிக் கொண்டிருப்பவனைக் காப்பாற்றி அவனே முழுகிப்போனால் அவன்/அவள் தன் பலிக்காக பாராட்டப்படுவர். சகோதரர்களே, முழுகிக் கொண்டிருப்பவனை காப்பாற்றுவது இயற்கையானது என்றாலும் அதைக் குறித்து பெரிதாக நினைக்கிறோம் என்று இது பொருள்படும்.
‘இங்வா-யோங்பா` என்று இன்னுமொரு பழமொழி இருக்கிறது. ஒருவன்/ஒருத்தி நல்லவிதமாக வாழ்ந்தால் எதிர்காலத்தில் ஆசீர்வதிக்கப்படுவர் என்றும், அவர்கள் மோசமாக நடந்துக் கொண்டால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இது பொருள்படும். சகோதரர்களே, மற்றவனுக்காக தன்னுயிரை இலவசமாக கொடுத்துவிடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஆண் பெண் உறவில் கூட அது அவர்களின் விருப்பத்திற்கு ஒத்து வருவதால் ஒருவரை ஒருவர் அன்பு கூறுகிறார்கள். இப்படியாக அடிப்படையில் அனைத்து மனிதர்களும் சுயநலம் மிக்கவர்களே.
ஆகவே, நாம் உண்மையாக எத்தகைய நற்காரியங்களையும் செய்திராத போதிலும், நம்முடைய மோசமான பாவங்களையும் அழித்துப்போட்ட அவரின் நீதியை விசுவாசித்து, அதன் மீது உண்மையாக சார்ந்திருக்கிறோமா என்று சோதித்து அறிய வேண்டும் என்றும், மனிதர்களில் நல்லவை எதுவும் இல்லை என்றும் கர்த்தர் கூறுகிறார். நம் கர்த்தர் அளித்த கர்த்தரின் நீதியை விசுவாசித்து நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும், இரட்சிப்பை பெறவேண்டும்.
 
 
உங்கள் அக்கிரமச் செய்கையினால் வந்த எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பை பெறவேண்டும்
 
கர்த்தருக்கு முன்பாக எவையெல்லாம் அக்கிரமச் செய்கைகள்? கர்த்தருடைய பார்வையில் நாம் தவறாகச் செய்வதெல்லாம் அக்கிரமச் செய்கையே.
கர்த்தருக்கு முன்பாக எனது பாவங்களும் உனது பாவங்களும் எப்படி மூடப்படும்? ஒரு தடித்த குண்டு துளைக்காத ஆடையினால் அதனை மூடலாமா? அல்லது கர்த்தரின் பார்வையிலிருந்து 1 மீட்டர் தடிமனுள்ள உறுதியான உலோகத்தால் செய்யப்பட்ட பாதுகாப்பு கவசத்தால் அதனை மூட முடியுமா? சகோதரர்களே, நாம் நற்செயல்களை செய்யும்போதெல்லாம், அது, நாம் கர்த்தருக்கு முன்பாகச் செய்த தவறுகளையும், தப்புகளையும் மூடுகின்றதா? இல்லை. மனிதர்களின் நற்செயல்கள் சுய ஆறுதலைத் தவிர வேறொன்றுமில்லை. நற்செயல்கள் செய்து தன் மனசாட்சியை திருப்தி செய்பவனால் கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பமுடியாது.
“எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்” என்று தான் வேதாகமம் கூறுகிறது. சகோதரர்களே, கர்த்தருக்கு முன்பாக நம் பாவங்கள் மூடப்பட ஒரே வழி, நம்மை இரட்சித்த கர்த்தரின் நீதியை விசுவாசிப்பது மட்டுமே. இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெறுவதற்காக உலகிற்கு வந்தது, பாவங்களைச் சுமந்து சிலுவையில் நமக்காக மரித்தது ஆகியவை கர்த்தரின் நீதியில் அடங்கும். இயேசு ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களைச் சுமந்ததாலும், சிலுவையில் மரித்து அவர் தண்டனைப் பெற்றதாலும் இது இப்படியாயிற்று. இது கர்த்தரின் நீதியாகும். அவரின் நீதியை விசுவாசிக்கும்போது எல்லாப் பாவங்களும் மூடப்படுகின்றன.
ஒருவன் தன் பாவங்களை நற்செயல்களால் மூட முயன்றால், கர்த்தருக்கு முன்பாக அதனால் எந்தப் பயனும் இல்லை. நீதியின் செயல்களான இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் இரத்தத்தினாலும் மட்டுமே உன் பாவங்களையும் என் பாவங்களையும் மூட முடியும். நாம் தீர்க்கப்பட்டு, அழிக்கப்பட்டு, நம் பாவங்களுக்காக கர்த்தரின் கோபாக்கினையைப் பெற்று நரகம் செல்லவேண்டியவர்கள், ஆனால் இயேசு இவ்வுலகிற்கு வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதாலும் சிலுவையில் மரித்ததாலும் கர்த்தரின் நீதியை நமக்காக அவர் நிறைவேற்றினார். நீங்கள் இதனை விசுவாசிக்கவேண்டும். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் நம் பாவங்களை நாம் மூடச் செய்யலாம். ஏன்? ஏனெனில் அவரின் இரத்தம் மற்றும் இரத்தஞ் சிந்துதலினால் ஆன கர்த்தரின் நீதி உலகின் அனைத்துப் பாவங்களுக்கும் நீதியின் படி கிரயம் செலுத்திற்று. இந்த உண்மையை விசுவாசிப்பதன் மூலமாக உங்கள் பாவங்களையும் என் பாவங்களையும் மூடப்பெறலாம்.
எத்தகைய மனிதன் பாக்கியவான்? இத்தகைய விசுவாசமுள்ளவன் பாக்கியவான். “எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்” இத்தகைய விசுவாசமுள்ளவன் சந்தோஷமுடையவனும் ஆசீர்வதிக்கப் பட்டவனுமாயிருப்பான், உன்னிடமும் என்னிடமும் இத்தகைய விசுவாசம் இருக்கிறதா? இயேசுகிறிஸ்து நீராலும் பரிசுத்த ஆவியானவராலும் நம்மை இரட்சித்தார் என்ற கர்த்தரின் வார்த்தைகளை இருதயத்தினுள் எடுத்துச்செல்லுபவன் உண்மையாகவே பாக்கியவான். இயேசு கிறிஸ்துவை அவரின் நீர் மற்றும் ஆவியுடன் தன் இருதயத்தினுள் அவன்/அவள் பெற்று, இயேசுகிறிஸ்துவினுள் வாசஞ்செய்யும் நபர் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நபர்.
சிறிதளவு கூட மனித சிந்தனைகளோ அல்லது நல் யோசனைகளோ இல்லாத கர்த்தரின் நீதியை விசுவாசிகளாகிய நாம் விசுவாசித்ததால் அதிசயமான இரட்சிப்பைப் பெற்றோம். உண்மையாக ஆசீர்வதிக்கப்பட்ட நபராலேயே இந்த உண்மையை விசுவாசிக்கமுடியும், உண்மை நற்செய்தியை அவன்/ அவள் தன்னிருதயத்தில் வைத்து அதனை பிரசங்கிக்கவும் முடியும்.
சகோதரர்களே, உங்களுடைய நற்செயல்களை கர்த்தரின் கிருபையுடன் சேர்த்து பாவமன்னிப்பு பெறவோ அல்லது கர்த்தரின் பிள்ளைகளாகவோ முயற்சி செய்யவேண்டாம். ஒருவன் நல்லவனாக இருக்க முடியாதவனாயிருந்தாலும் அவன்/அவள் தன்னால் எப்படி இருக்க முடியும் என்று எண்ணுவதும் அவன்/அவள் நல்லவனாக இருக்க முயல்வதும் மூர்க்கத்தனம். ஒரு கோடீஸ்வரரிடமிருந்து ஏழையொருவன் வைரம் ஒன்றை பரிசாகப் பெற்றால் அவன் செய்யவேண்டியதெல்லாம் “நன்றி” என்று கூறுவது மட்டுமே. கர்த்தரின் நீதிக்கும் இது பொருந்தும்.
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களைக் குறித்து ரோமர் 4 ஆம் அதிகாரம் பேசுகிறது. அத்தகைய மக்கள் கர்த்தரின் நீதியை உள்ளடக்கிய நற்செய்தியின் வார்த்தைகளை விசுவாசித்து அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டவர்கள்.
இந்த ஆசீர்வாதம் உங்களுடையதாகுமென நம்புகிறேன்.