• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 4-2] விசுவாசத்தினால் பரலோகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் (ரோமர் 4:1-8)

2021.04.21 27
(ரோமர் 4:1-8)
“அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப் பட்டானாகில் மேன்மை பாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மை பாராட்ட எதுவுமில்லை. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப் படாமல், கடனென்றெண்ணப் படும். ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு: எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.”
 
 
எவர்களுடைய பாவங்கள் துடைக்கப்பட்டதோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
 
இந்நாட்களின் அநேக ஆத்துமாக்களை இரட்சித்தமைக்காக தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன். ரோமர் 4 ஆம் அதிகாரத்தில் வேதாகமம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களைக் குறித்து பேசுகிறது, ஆகவே, நானும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களைக் குறித்து பேச விரும்புகிறேன்.
“அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு: எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்” (ரோமர் 4:6-8). கர்த்தருக்கு முன்பாக ஆசீர்வதிக்கப் பட்டவர்களைக் குறித்து வேதாகமம் கூறுகிறது. கர்த்தருக்கு முன்பாக யாருடைய பாவங்கள் துடைக்கப்பட்டதோ, யாருடைய பாவத்தைக் கர்த்தர் தேவன் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான்.
வேதவசனங்களுக்குள் நாம் ஆழமாக செல்வதற்கு முன் நம்முடைய தற்போதைய நிலையை சோதித்தறிவோமாக. தம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட மக்களைக் குறித்து வேதாகமம் பேசுகிறது. நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா என்று யோசித்துப் பார்ப்போம்.
இவ்வுலகில் பாவம் செய்யாதவன் ஒருவன் கூட இல்லை. ஏசாயா 44:22 இல் எழுதப்பட்டுள்ளது போல் கருமேகத்தின் அளவிற்கு மனிதர்கள் பாவம் செய்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் கிருபை இல்லாது கர்த்தரின் தீர்ப்பை யாராலும் தவிர்க்க முடியாது.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மூலமாக தேவன் நமக்களித்த பாவமன்னிப்பின் மூலம் நம் பாவங்களிலிருந்தும் கர்த்தரின் தீர்ப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டோம். மேலும், இயேசுகிறிஸ்து அளித்த பலியின் மூலமாக நம்மால் வாழ முடிகிறது. இவ்வுலகில் தன் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்யாத ஒருவன்/ஒருத்தி இருப்பது சாத்தியமா? ஒருவன் பாவமன்னிப்பு பெற்றவனா இல்லையா என்றில்லாது அவன் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாவம் செய்கிறான். நாம் அதனைத் தெரிந்துக் கொள்ளாமலேயே தொடர்ந்து பாவம் செய்யாததால், பாவங்களின் பொருட்டு நாம் நியாயம் தீர்க்கப்படவேண்யவர்கள்.
சிறிய அளவு பாவமுள்ளவன் கூட நரகம் செல்லுவான் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஏன்? ஏனெனில் பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதாகமம் கூறுகிறது. (ரோமர் 6:23). பாவத்தின் சம்பளம் எதுவாயினும், ஒருவன் அதற்கு கூலி கொடுத்த பிறகு மட்டுமே பாவமன்னிப்பு கிட்டுகிறது. பாவம் நியாயத் தீர்ப்பை மட்டுமே தருகிறது.
அறியாமையினால் செய்கிற பாவங்கள், தெரிந்தே செய்கிற பாவங்கள், குறைவுடையவர்களாதலால் செய்யும் பாவங்கள் போன்ற கொடிய மற்றும் சிறிய பாவங்களின் நடுவில் நாம் வாழுகிறோம். கண்டிப்பாக கூறுவதானால் அவருக்கு நாம் சொல்வதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும் கூட கர்த்தருக்கு முன்பாக நம் பாவங்களை ஒத்துக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. நீங்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டிருந்தாலும் கூட, நம் பாவங்களை நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பது சரியானதல்ல. ஒத்துக்கொள்ள வேண்டியவற்றை ஒவ்வொருவரும் ஒத்துக் கொண்டேயாக வேண்டும்.
 
 
நீதிமானால் மட்டுமே தேவனைப் புகழமுடியும்
 
தம் பாவங்களும் மீறுதல்களும் மன்னிக்கப்பட்டு அவை மூடப்பட்ட நீதிமான்கள் பாவமற்றவர்கள், கர்த்தருக்கே நன்றிகள். நாம் அவருக்கு முன் வரும்போது ஒவ்வொரு நொடியும், மணிநேரமும் கர்த்தருக்கு நன்றி கூறாமல் இருக்க முடியாது, ஏனெனில் நம் பாவங்கள் கருமேகம் போன்றவைகளாயிருந்தாலும், தேவன் நம் அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். யோர்தான் நதியில், யோவான் ஸ்நானன் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து, நம் இடத்திலிருந்து சிலுவையில் தண்டனையைப் பெற்ற நம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
தேவன் தன் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு பாவத்திற்கு கிரயம் செலுத்தும் வகையில் சிலுவையில் அறையப்பட்டு மரித்திராவிட்டால், அவரை நம் பிதாவே என்று கூறும் உரிமையைப் பெற்றிருப்போமா? நம்மால் எப்படி தேவனைப் புகழமுடியும்? நம்மால் எப்படி கர்த்தரின் பெயரைப் புகழமுடியும்? நம்மால் எப்படி அவரின் இரட்சிப்பின் பரிசிற்கு நன்றி கூறமுடியும், அவரை எப்படி மகிமைப்படுத்த முடியும்? இவையெல்லாம் கர்த்தரின் கிருபையின் பரிசால் ஆயிற்று.
பரிசுத்தவான்களாகிய நம்மால் தேவனைப் புகழ்ந்து அவருக்கு நன்றி கூறமுடியும், ஏனெனில் நம் பாவங்கள் ஏற்கெனவே துடைக்கப்பட்டுவிட்டன. சிறிய துகளளவு பாவம் உட்பட அனைத்துப் பாவங்களையும் தேவன் எடுத்துக்கொண்டார் என்பதாலும் கிறிஸ்துவின் பலியாலும், நம்மால் தேவனைப் புகழ முடிகிறது.
நம்முடையப் பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும், இவ்வுலகில் நாம் வாழும்போது நம் செய்கைகளினால் குறைவற்றவர்களாக நம்மால் வாழ முடியாது. நாமெல்லாம் பலவீனமானவர்கள், ஆனால் நீதிமான்களாகிய நாம், அவரின் கிருபையின் மூலம் பாவிகளின் அனைத்துப் பாவங்களுக்கும் கூலிக்கொடுத்த தேவனைப் புகழ்கிறோம். நீ இருளிலே இருக்கிறாயா? எத்தகைய இருள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், கர்த்தருக்கு முன்பாக சிறிய பாவத்தை ஏற்றுக்கொண்டால், கர்த்தருக்கு முன்பாக பாவம் செய்தோம் என்று அறிக்கைச் செய்தால், எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்த தேவனை நாம் விசுவாசித்தால், தேவனின் சத்தியம் அவரை புகழ்ந்து நன்றி கூற அனுமதிக்கும். மேலும் நம்மிருதயங்களில் பாவமன்னிப்பின் இரக்கத்தைப் பெற்ற பிறகு கர்த்தரை ஆராதிப்பவர்களாவோம்.
 
 
செய்கைகளில்லாமல் நாம் நீதிமானாக்கப்பட்டது கர்த்தரின் பரிசாகும்
 
“அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மை பாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மை பாராட்ட எதுவுமில்லை. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப் படும். ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.” (ரோமர் 4:1-5)
பாவத்திற்கு கூலி கொடுத்த பிறகே மனித பாவம் அழிக்கப்பட்டது. உங்களுடைய மனசாட்சி சுத்தமாக்கப் பட்டது என்று உறுதியாயிருக்கிறீர்களா? எத்தகைய பாவங்களாயிருந்தாலும், பாவங்களுக்கான கூலி கொடுக்கப்பட்ட பிறகே நம் மனசாட்சி சுத்திகரிக்கப்படும். பாவிகளாகிய நமக்கு மரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தேவன் நம் பாவங்களுக்காக மரித்தார், ஆகவே பாவிகள் இரட்சிக்கப்பட்டு நீதிமானானார்கள்.
கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்த, விசுவாசத்தின் தகப்பனான ஆபிரகாமை உதாரணம் காட்டி ரோமர் 4 ஆம் அதிகாரத்தில் யோர்தான் நதியில் உலகின் அனைத்துப் பாவங்களையும் தம் மீது சுமந்து அவர்களின் பாவங்களுக்கும் தீர்ப்பாக சிலுவையிலறையப்பட்ட இயேசுகிறிஸ்துவால் பாவிகள் இரட்சிக்கப்பட்டதாக பவுல் கூறினான். ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்ததால் நீதிமானானான் என்று வேதாகமம் கூறுகிறது. அவன் தன் சொந்த செயல்களினால் இரட்சிக்கப்படாமல் கர்த்தரின் வார்த்தையின் மீதுள்ள நம்பிக்கையால் இரட்சிக்கப்பட்டான். ஆகவே கர்த்தர் அவனை நீதிமானாக எண்ணினார். ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்து நீதியைப் பெற்றுக் கொண்டதோடு விசுவாசிகளின் தகப்பனுமானான். கர்த்தரின் உடன்படிக்கையை விசுவாசித்து அவன் நீதிமான் ஆனான்.
பாவிகளாகிய நம்மீது காட்டப்பட்ட கர்த்தரின் கிருபையும் பாவங்களிலிருந்து கிட்டிய இரட்சிப்பும் எத்தகையவை? இதனை தெளிவுபடுத்த சிந்திப்போமாக. “கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணபடும்.” (ரோமர் 4:4). இது நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்த கர்த்தரின் இரட்சிப்பைக் குறித்து கூறுகிறது. அது பாவக்கிரயத்தைக் குறித்து பேசுகிறது. “கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப் படாமல், கடனென்றண்ணப்படும்.” ஒரு மனிதன் தன் வேலைக்காக கூலியைப் பெற்றால் அது கடனாக எண்ணப்படுமா அல்லது அவன் அதனை கிருபைக்கான கூலியாக எண்ணுவானா? ஆபிரகாமை உதாரணமாக காட்டி அப்போஸ்தலனாகிய பவுல் இரட்சிப்பைக் குறித்து விளக்குகிறான். ஒருவன் தான் கூலிக்காக வேலை செய்த பிறகு அதற்கு கூலியை எதிர்ப்பார்ப்பது இயற்கையே. ஆனால், நாம் நிறைவான வாழ்க்கை வாழாவிட்டாலும், நாம் பரிசுத்த நீதிமான்களாக்கப்பட்டது கர்த்தரின் பரிசாகும். அது நம் சொந்த முயற்சிகளால் கிடைத்ததல்ல.
“கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப் படாமல், கடனென்றெண்ணப் படும்.” (ரோமர் 4:4). பாவமன்னிப்பின் மூலம் வரும் இரட்சிப்பானது தேவனின் ஞானஸ்நானம் மற்றும் பலியாக இரத்தஞ் சிந்துவதால் உண்டாயிற்று. கிருபையினாலும் பாவமன்னிப்பின் பரிசாலும் இரட்சிப்பு சாத்தியமாக்கப் பட்டது. மனிதர்களால் பாவம் செய்யாமலிருக்க முடியாது, ஆகவே தாம் பாவம் செய்தோம் என்று ஒத்துக்கொள்ள வலியுறுத்தப் பட்டார்கள். அவர்கள் எந்த தத்துவத்தை விசுவாசித்தாலும், தம் பாவங்களைக் குறித்து எத்தனை கடினமாக ஜெபித்தாலும், அவர்களால் தம் பாவங்களைக் கழுவ முடியாது.
பாவிகள் தம் பாவங்களைக் கழுவுவதற்கான ஒரே வழியானது, இரட்சிப்பை விசுவாசிப்பதே, இரட்சிப்பு யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் தேவன் ஞானஸ்நானம் பெற்று பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்டார் என்றும், பாவிகளாகிய நம் பாவங்களுக்கு தீர்ப்பை பெற சிலுவையிலறையப்பட்டார் என்றும் கூறுகிறது. பாவிகள் எத்தகைய பாவபலிகளைச் செலுத்தினாலும், தம் பாவங்களுக்கு கூலி கொடுக்க அவர்களுக்கு எந்தத் தகுதியுமில்லை. பாவிகளால் செய்ய முடிந்ததெல்லாம் பாவமன்னிப்பின் மூலம் இரட்சிப்பை விசுவாசிப்பதே. அவர்கள் சார்ந்திருக்க வேண்டியது கர்த்தரின் கிருபை ஒன்றேயாகும்.
இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றதால், பொருத்தமான முறையில் நம் பாவங்களை தம்மீது சுமந்து சிலுவையில் தன்னை பலியிட்டதன் மூலம், பாவிகள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டார்கள். சாத்தானின் வஞ்சனையினால் பலவீனமாகி நாம் செய்யும் சிறிய சிறிய பாவங்களிலிருந்து பெரிய மலைபோன்ற பாவங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. ஆகவே இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும், பாவிகள் பாவங்களிலிருந்து விசுவாசத்தினால் இரட்சிக்கப் பட்டார்கள். கர்த்தரின் இலவச பரிசாகிய இரட்சிப்பினால் பாவிகளாகிய நாம் நீதிமான்களானோம்.
 
 
இரக்கத்தினால் பாவமன்னிப்பு ஈவாக வழங்கப் பட்டது
 
ஒரு பாவி எப்படி, அவனின்/அவளின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டான் என்பதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். “கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப் படாமல், கடனென்றெண்ணப் படும்.” இவ்வுலகின் வேலையாட்களுடன் ஒப்பிட்டு இரட்சிப்பின் கிருபையை அவன் விளக்குகிறான். பாவியொருவன் கர்த்தருக்கு முன்பாக வேலைசெய்த பிறகு அவன்/அவள் தான் பாவமன்னிப்பை பெற்றுவிட்டதாக கூறினால் அது கர்த்தரின் பரிசு அல்ல, அது அவனின்/அவளின் வேலையால் ஆனதாகும். பாவமன்னிப்பு கிருபையால் பரிசாக வழங்கப்படுகிறது. கர்த்தரின் கிருபையில் நம் எந்த செய்கையும் உள்ளடக்கப் படவில்லை. நாம் பெற்றுக் கொண்ட இரட்சிப்பு கர்த்தரின் ஈவா இல்லையா? ஆம், அது ஈவே. நம்முடைய பாவங்களினால் நாம் அழிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. ஆயினும் நம் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து, யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் தாம் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார்.
இயேசுகிறிஸ்து தம் மரணத்தைக் கூலியாக கொடுத்து நமக்காக மரித்தார் என்று விசுவாசிப்பதால் நாம் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். அவர் தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து நம்மைப் பரிசுத்தமாக்கி நம் பாவங்களை சிலுவையில் அறையப்படும்போது எடுத்துச் சென்று இரட்சிக்கவும் செய்தார். இவையெல்லாம் இயேசுவின் இரட்சிப்பின் கிருபையினால் ஏற்பட்டது. கர்த்தரின் கிருபையால் நாம் இரட்சிக்கப்படுவது சாத்தியமாகியது. அது பரிசாகும். அது இலவசமாகும். கர்த்தர் பாவிகள் மீது வைத்த அன்பினால் அவர்கள் இரட்சிக்கப்பட்டனர். இயேசு தம் ஞானஸ்நானம் மூலம் நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, பாவிகளை உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும், சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்தும் இரட்சித்தார்.
“ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோமர் 4:5). முன்பு செய்கைகளாச் செய்பவனைக் குறித்து பேசினோம். “ஒருவன் கிரியை செய்யாமல்” என்ற சொற்றொடர், நீதிமானாக்குவதற்கு எந்த நற்செயல்களையும் செய்யாத ஒருவனைக் குறிக்கிறது. பவுல் அந்த வசனத்தில் தொடர்ந்து கூறுகிறான், “பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.”
கர்த்தரின் நீதியை விளக்குவதற்கு பாவியை அவன் உதாரணமாக காட்டுகிறான். பாவியாக இருப்பது என்பதன் பொருள் என்ன? “பாவி” ஒருவன் கர்த்தருக்கு முன் சிறப்பாக நிற்காமல், அவன்/அவள் தன் வாழ்வின் கடைசி மூச்சு வரை பாவம் செய்து வாழ்பவராவர். இது தெய்வீகத்தன்மைக்கு எதிரானது. ஒருவன் கர்த்தருக்கு முன்பாக அவன்/அவள் மரிக்கும் வரை பாவம் செய்கிறான், என்று இந்த வார்த்தை குறிப்பிடுகிறது. மக்கள் பாவம் நிரம்பியவர்களாக பிறந்தார்கள் என்பது உண்மையாகும். அதற்கு மேலும், அவர்களின் பாவங்களினிமித்தம் கர்த்தரின் நியாயத்தீர்ப்பை மனிதர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் என்பதும் உண்மையாகும்.
ஆயினும், “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.” என்று எழுதப்பட்டுள்ளது. இங்கு, “ஒருவன் கிரியை செய்யாமல்” என்ற சொற்றொடரின் பொருள் “அவன் தெய்வீகத் தன்மை உடையவனாயில்லாதவனாக இருந்தாலும்” என்பதாகும். கர்த்தரின் முன்பு நாம் தெய்வீகத் தன்மை உடையவர்களாயிருக்கிறோமா? -இல்லை, நாம் அப்படி இல்லை.-
பாவிகளாகிய நம்மிடம் தேவன் கூறுகிறார், “நீ பாவமில்லாதவன், மற்றும் நீயொரு நீதிமான்” தேவன் நம் அனைத்து பாவங்களுக்குமான கூலியைச் செலுத்துவிட்டார். இயேசு ஏற்கெனவே பாவங்களுக்கான கூலியை முற்றிலுமாகச் செலுத்திவிட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? விசுவாசி. ஒருவனுக்கு, அவனின்/அவளின் விசுவாசம் நீதியாக எண்ணப்படுகிறது. “சரி. நீங்கள் உண்மையாகவே அதனை விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் என் நீதியின் மக்கள். நான் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதாலும் உங்களின் எல்லாப் பாவங்களுக்காக சிலுவையில் தீர்க்கப்பட்டதாலும் உங்கள் பாவங்கள் துடைக்கப்பட்டுவிட்டதால் உங்களிடம் பாவமில்லை!”
மனிதர்கள் அனைவரும் பாவிகளாயிருந்தாலும், இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கர்த்தர் இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். கர்த்தர் தன் ஒரே பேறான குமாரனை அனுப்பி அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் பாவங்களை எடுத்துப்போட்டு, பாவிகளின் இடத்திலிருந்து சிலுவையில் அறையப்பட்டார். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறும் சட்டத்தையும், கர்த்தரின் அன்பின் சட்டத்தையும் கர்த்தர் ஒரே நேரத்தில் நிறைவேற்றினார். அனைத்துப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
இயேசு தம் நீதியின் செயல் மூலம் பாவிகளின் சார்பாக யோர்தான் நதியில் உலகின் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் என விசுவாசிப்பவர்களிடம் கர்த்தர் கூறுகிறார், ஆம் நீங்கள் பாவமற்றவர்கள். என் குமாரன் உங்களை இரட்சித்தார். நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். ஆகவே, அவர்கள் பாவிகளாயிருந்தாலும் நீதிமான்களாக்கப்பட்டனர். அவர்கள் பாவிகளாயிருந்தாலும், அவர்கள் தேவனின் இரட்சிப்பு மீது வைத்திருக்கும் விசுவாசத்தைக் கண்டு கர்த்தர் அவர்களை அவரின் பாவமற்ற மக்களென்கிறார். எவனுடையப் பாவத்தை தேவன் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான்.
நாம் தெய்வீகத்தன்மையுடையவர்களாக இருக்கிறோமா என்று கர்த்தர் கேட்கிறார். “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.” நாம் நற்செயல்களைச் செய்கிறோமா? நம்மால் நற்செயலைச் செய்ய முடியாது, மாறாக பாவஞ் செய்வதில் தீவிரிக்கிறோம். அப்படியிருந்தும் கூட கர்த்தர் தன் இரட்சிப்பின் பரிசு மூலம் நம்மை இரட்சித்தார். நாம் தேவனின் இரட்சிப்பை விசுவாசிக்கிறோம், அதன் பெயர் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தமாகும்.
 
 
தேவனின் இரட்சிப்பின் மீதுள்ள விசுவாசத்தால் நாம் வாழவேண்டும்
 
பாவிகளாகிய நமக்கு பாவத்தின் சம்பளத்தை தம் சித்தப்படி எப்படியாகக் கொடுத்தார் என்பதை அறிவதால், அவரின் அன்பின் பரிசிற்கும் பாவத்திலிருந்து இரட்சித்த கிருபைக்கும் நாம் தேவனைப் புகழ்ந்து அவரிற்கு நன்றி கூறுகிறோம். நாம் கர்த்தருக்கு முன்பாக பாவிகளாயிருப்பதை ஒத்துக்கொள்ளும்போது, நம் பாவங்களுக்காக அவர் அளித்த கூலிக்கு அவரை நாம் நன்றி கூறி தீராது. ஆயினும், நாம் நம்மை தெய்வீகமானவர்கள் என்று எண்ணினால் நம்மால் கர்த்தருக்கு நன்றி கூற முடியாது.
பாவிகளை நீதிமானாக்கும் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் நபர் ஒருவனின்/ஒருத்தியின் விசுவாசம், நீதியாக எண்ணப்படும். இயேசுவின் விடுதலையையும் நியாயத்தீர்ப்பையும் விசுவாசிப்பவர்களை அது நீதிமான்களாக்குவதால், அவர்கள் கர்த்தரின் பரிசைப் பெறுகிறார்கள். பாவமில்லாதவர்களாக வாழ முயலும்போது அவர்கள் அநேக தவறுகளைச் செய்வதால் கர்த்தருக்கு முன்பாக பாவமில்லாதவர்கள் யாருமில்லை.
மனிதர்களால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது என்ற குறிப்பு அவர்களின் பாவத்தன்மையை நிரூபிக்கின்றது. ஆகவே, நான் பாவத்தன்மை உடையவனாயிருந்தாலும், கர்த்தரின் இரட்சிப்பின் மீதுள்ள விசுவாசத்தால் வாழ்கிறேன். விசுவாசத்தினால் வாழ்வதென்பது தான் விரும்பியபடி வாழ்வதென்று பொருளாகாது. விசுவாசத்தினால் நீதிமானானவனுக்கு குறிப்பிட்ட வழியில் வாழவேண்டியிருக்கிறது.
மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களுக்கு ஒவ்வொருநாளும் இயேசுவின் இரட்சிப்பாகிய நற்செய்தி தேவைப்படுகிறது. ஏன்? ஏனெனில் அவர்கள் பூமியில் செய்வது தெய்வீகத்தன்மை இல்லாததோடு, அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் பாவம் செய்வதைத் தவிர்க்கவும் முடியாது. இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார் என்ற நற்செய்தியை எல்லோரும் அறியவேண்டும். நீதிமான்கள் நற்செய்தியைக் கேட்டு ஒவ்வொரு நாளும் அதனை நினைவுப் படுத்தவேண்டும். அப்பொழுது அவர்கள் ஆத்துமாக்கள் வாழ்வதோடு ஊற்றைப்போல் மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தப்படும். “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.” இந்த செய்தி யாருக்காக? இச்செய்தியானது உனக்கும் எனக்கும் மற்றும் உலகிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் திட்டமிடப்பட்டது.
ஆபிரகாம் எப்படி நீதிமானாக்கப்பட்டான் என்று வேதாகமம் விளக்கமாக கூறுகிறது. செயல்களைச் செய்பவன் கர்த்தரின் இரட்சிப்பை பொருட்படுத்தாமல், அவன்/அவள் அதனைப் புறம்பேத் தள்ளுகிறார்கள். அத்தகைய மனிதன் நற்செய்திக்காக நன்றி கூறுவதில்லை. முதலில், வசனம் 4 கிரியை செய்பவனைக் குறித்து விளக்குகிறது, அதாவது தன் நற்செயல்களால் பரலோக ராஜ்யத்தினுள் செல்ல முயற்சிப்பவனைக் குறித்து விளக்குகிறது. இத்தகைய மனிதன் இயேசுவின் பலிக்கு நன்றி கூறுவதே இல்லை. ஏன் கூறுவதில்லை? ஏனெனில் அவன்/அவள் செய்கைகளில் ஈடுபடுவதாலும், அவனின்/அவளின் அன்றாடப் பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டி மனம் வருந்தி ஜெபிக்கும் அதே நேரம், அநேக நற்செயல்களைப் புரிவதாலும் அவன்/அவள் பாவமன்னிப்பு பெற அவன்/அவள் தம் வேலைகள் எப்படியோ வேலை செய்தது, என்று எண்ணுவதுடன், நற்செய்தியாகிய அவரின் முழுக்கிருபைக்கு அவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பதில்லை. ஆகவே அந்த நபரால் கர்த்தரின் இரட்சிப்பாகிய பரிசை உண்மையாகவே பெற்றுக்கொள்ளவே முடியாது.
வேதாகமம் கூறுகிறது, “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோமர் 4:5). இதன் பொருள் பாவத்தண்மை உடையவர்களையும் தம் சொந்த செயல்களால் பாவமன்னிப்பு பெறமுடியாதவர்களையும் தேவன் முற்றிலும் இரட்சித்தார் என்பதாகும். பாவமன்னிப்பை பெற்ற நீதிமான்களிடம் கர்த்தரின் கிருபை வெளிப்படுகிறது என்பதையும் அது காட்டுகிறது.
 
 
கிரியை செய்கிறவன் அவரின் கிருபையை கிருபையாக கருதுவதில்லை
 
ஆபிரகாமைப் போல், கர்த்தரை ஒப்புக்கொண்டு அவரின் வார்த்தைகளை விசுவாசிப்போரிற்கு ரோமர் 4:5 பொருந்துகிறது. பாவத்தனமையுள்ளவர்களை இரட்சித்த தேவனை நாம் விசுவாசிக்கிறோம். கிறிஸ்தவர்களில் இரண்டுவகையான மக்களிருக்கின்றனர்; தம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட இன்னும் செயல்களைச் செய்து கொண்டிருப்பவர்கள் ஒருவகை, தம் பாவங்களிலிருந்து முற்றிலும் விடுதலையானவர்கள் மறுவகை. வசனங்கள் 4 மற்றும் 5 இல் எழுதப்பட்டுள்ளதைப் போன்று, “கிரியை செய்கிறவன்” “வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல்” பாவமன்னிப்பு கிருபையைத் தள்ளிவிடுகிறான், ஏனெனில் அவன் இயேசுவை விசுவாசித்தபிறகு கர்த்தரிடம் செய்கைகளுடன் வருகிறான்.
மக்கள் தம் செயல்களைக் கர்த்தருக்கு கொடுத்தால் அவர்களால் பாவியாயிருப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. சரியெனக்காட்டும் தத்துவம் கிறிஸ்தவ தத்துவமாகும், அது விசுவாசியொருவன் அவன்/அவள் மரிக்கும் வரை படிப்படியாக பரிசுத்தமாகிறான் என்று கூறுவதால் அது விசுவாசிகளை பாவமன்னிப்பைத் தள்ளும்படியும், கர்த்தருக்கு எதிராக போராடவும் வழிநடத்துகிறது. ஒரு நபர் படிப்படியாக நீதிமானாக முடியும் என்று வேதாகமம் கூறவில்லை. பாவமன்னிப்பிற்காக ஜெபித்து, நற்காரியங்களைச் செய்து, அவனின்/அவளின் அழுக்குகளைச் சுத்திகரித்து படிப்படியாக பரிசுத்தமாக முயலுபவர்களே கிரியைகளை செய்கிறவர்கள். சாத்தானின் சேவர்களாக நரகம் செல்ல வேண்டியவர்கள் இம்மக்களே. அவர்கள் தேவனின் கிருபையை தள்ளிவிட்டதால் நீதிமான்களென்று எண்ணப்படமாட்டார்கள்.
நம்மில் யாரும் தெய்வீகமானவர்களில்லை, ஆயினும், இச்சமயத்தில் அநேக மக்கள் தவறான திசையில் விசுவாசித்து போய்க்கொண்டிருக்கின்றனர். இயேசு அவர்களின் இறந்தகால பாவங்களைக் கழுவிவிட்டார் என்று அறிந்திருப்பதால், அவர்கள் தாம் தினமும் மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் சொந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்புகின்றனர். அவர்கள் தம்மை சிறிது தெய்வீகத்தன்மையுடவர்களாய் எண்ணுவதால் இப்படிச் செய்கிறார்கள். அவர்கள் இயேசுவிற்கு முன் தம் நற்தன்மையையும், சுத்தத்தையும் காட்டிக்கொள்கிறார்கள். முதலில் கர்த்தரின் பரிசாகிய பாவமன்னிப்பை பெறுவதில் குறைவுற்றவர்களாகிவிடுகின்றனர்.
 
 
ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்?
 
இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால் தம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலையான பரிசுத்தவான்கள் நீதிமான்களாகின்றனர். எத்தகைய நபரால் நீதிமானாக முடியும் என்ற கேள்விக்கு பதில்: அவன்/அவள் தன்னிடமுள்ள குறைபாடுகளை நன்கு அறிந்து அவனின்/அவளின் பாவங்களுக்காக மனம் வருந்தி ஜெபித்துக் கொண்டேயிருக்காதவன் மற்றவர்களுடன் கூட நீதிமானாக தகுதி பெற்றவன். நற்செயல்களை செய்வதில் திறமை இல்லாதவர்களும், தெய்வீகமாக இல்லாதவர்களும், ஜெபிக்க முடியாதவர்களும், ஆவியில் ஏழ்மையானவர்களும் இயேசுவிடமிருந்து பாவமன்னிப்பை பரிசாக பெற்றுக் கொள்வர். அவர்கள் நீதிமானகளாக்கப் படுவர். இம்மக்கள் கர்த்தருக்கு முன்பாக நற்செயல்களை செய்யவில்லை.
அவர்கள் செய்த ஒரே செயல் வெளிப்படையாக தம் பாவங்களை ஒத்துக்கொண்டதே, “நான் பாவம் செய்தேன், நான் மரிக்கும் போது நரகம் செல்வதைத் தவிர வேறு வழியில்லாதவன்.” என்று அவர்கள் கூறுவர். அப்பொழுது இயேசுகிறிஸ்து தாம் நிறைவேற்றிய முழு இரட்சிப்பை அவனுக்கு/அவளுக்கு பரிசாக கொடுக்கிறார். அவர்கள் பாவங்களைச் சுமக்கும்படி யோர்தான் நதியில் தேவன் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் செய்யப்பட்டு சிலுவையிலறையப் பட்டார் என்பதை விசுவாசிப்பது, பாவிகளை தம்மிருதயங்களிலுள்ள எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவதை ஏதுவாக்குகிறது. கர்த்தரின் பிள்ளைகளாகும் ஆசீர்வாதத்தினால் அவர்கள் தரிப்பிக்கப்படுகின்றனர். அவருக்கு முன்பாக அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவது கர்த்தரின் ஈவாகும். தேவனாகிய இயேசுகிறிஸ்து நான் அழிந்துப்போவதிலிருந்து விடுதலையாக்கியதால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
அப்போஸ்தலனாகிய பவுல், வசனம் 6 இல் “கிரியைகளில்லாமல்” ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனைக் குறித்து விவரிக்கிறான். “கிரியை செய்வதைக்” குறித்து கீழ்க்கண்ட மூன்று பகுதிகளை அவன் விளக்குகிறான். முதலாவது “கிரியை செய்கிறவனுக்கு” இரண்டாவது “கிரியை செய்யாமல்” மூன்றாவது “கிரியைகளில்லாமல்” வேதாகமம் கூறுகிறது. “அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு: எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்” (ரோமர் 4:6-8). “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ” என்பதன் பொருள் கர்த்தர் ஒருவனை அவனிடம்/அவளிடம் பாவங்களிலிருந்தாலும் பாவமில்லாதவனாக எண்ணுகிறார் என்பதல்ல, ஆனால், அவர் அந்த நபரிடம் உண்மையிலேயே பாவமில்லை என்று பொருள்படக் கூறினார்.
மனிதர்களுக்கு கிட்டிய ஆசீர்வாதத்தைக் குறித்து கர்த்தர் கூறுகிறார். தம் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அப்படியில்லையா? நம்மைவிட மகிழ்ச்சியானவர்கள் யாருமில்லை. பாவமன்னிப்பு பெற்ற நபரை விட மகிழ்ச்சியானவர்கள் யாருமில்லை. இதன் பொருள் என்னவென்றால், சிறிதளவு பாவமுள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களிடம் பாவங்களிருந்தால், அவர்கள் கர்த்தரால் நியாயம் தீர்க்கப்படுவர், மேலும் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது. ஆயினும், நீதிமான்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள், ஏனெனில் அவர்களிடம் பாவமன்னிப்பிருக்கிறது. “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” (ரோமர் 4:8) என்று கர்த்தர் கூறுகிறார்.
“எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ” என்பதன் பொருள் தேவன் எல்லா மனிதர்களின் பாவங்களையும் துடைத்துவிட்டார் என்பதாகும். “எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்” என்று தாவீதும் கூறுகிறான். இவ்வுலகில் அன்றாடம் பாவம் செய்தால் கூட, அவர்களின் பாவங்கள் மன்னிக்கபட்டால் அவர்கள் ஆசீவதிக்கப்பட்டவர்கள். பாவமன்னிப்பு பெற்ற நீதிமான்கள் இயேசுவின் மூலமாக தம் வாழ்நாளில் செய்யும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டார்கள். நீதிமான்கள் உண்மையாகவே மகிழ்ச்சியுடையவர்கள்.
 
 
எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்
 
இரண்டாவதாக, எத்தகைய மனிதன் மகிழ்ச்சியுடையவன்? “எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.” நாம் எப்பொழுதும் பாவம் செய்கிறோம், ஆனால் ஒருவனின் பாவங்கள் மூடப்படுகின்றன என்பதன் பொருள் இயேசு நம் அனைத்துப் பாவங்களையும் தன் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையிலறையப் பட்டமை ஆகியவையின் மூலம் சுமந்து தீர்த்தார் என்பதாகும். அப்படியானால் பிதாவாகிய கர்த்தர் நம்மை நியாயம் தீர்ப்பாரா? பாவிகளின் அனைத்துப் பாவங்களும் மூடப்பட்டு விட்டதா? இயேசு நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, சிலுவையில் தம் இரத்தத்தைச் சிந்தி, நாம் அவரில் இருப்பதால், நமக்காக அவர் மரித்ததால் நாம் தீர்க்கப்படுவதில்லை.
எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் நம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துக்கொண்டதால், பாவத்தின் சம்பளமாகிய மரணம் நம்மீது விழாது. அல்லேலூயா! நாம் மகிழ்ச்சியானவர்கள். நம்மிடம் பாவமிருக்கிறதா? இல்லை. நீரினாலும், இரத்ததினாலும் வந்த இயேசுகிறிஸ்துவை அறியாதவர்களோ அல்லது இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது உலகின் பாவங்களையெல்லாம் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதை அறியாது, இயேசுவைத் தீவிரமாக விசுவாசிப்பவர்களோ, தொடர்ந்து பாவத்துடனேயே இருக்கின்றனர்.
ஆயினும், இரட்சிப்பின் சத்தியத்தை அறிந்து அதனை விசுவாசிப்பவர்களிடம் பாவமில்லை, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள். யோவான் ஸ்நானனால் இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது அவர்மீது எல்லாப் பாவங்களையும் சுமத்தியவர்கள் பாக்கியவான்கள், இவ்வுலகில் உண்மையாகவே மகிழ்ச்சியுடனிருப்பது யார்? அவர்கள் பலவீனர்களாயிருந்தாலும் இரட்சகரைத் தம்முடையவராக்கிக் கொண்டவர்கள் பாக்கியவான்கள். சிறிய பாவங்கள் உட்பட அவர்களின் அனைத்துப் பாவங்களையும் சுமந்து, அவர்களிடத்திலிருந்து தீர்க்கப்படும்படி சிலுவையிலறையப்பட்ட இரட்சகராகிய இயேசுவை விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள்.
 
 
எவனுடைய பாவத்தை கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்
 
இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிப்பதோடு நல்லமேய்ப்பனையும் தன்னுள் பெற்றுக்கொண்டவர்கள் பாக்கியவான்கள். மூன்றாவதாக, தாவீது கூறினான், “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” (ரோமர் 4:8).
நாம் பலவீனமானவர்களாக இருந்தாலும், பாவமன்னிப்பை நாம் பெற்றிருப்பதால் நீதிமான்களானோம். விசுவாசத்தினால் நாம் நீதிமான்களானாலும் கூட நம் மாமிசம் பலவீனமுடையதாகவே இருக்கிறது. அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் தேவன் எடுத்துப் போட்டாரா? தேவன் நம்மைத் தீர்க்கப்பட வேண்டியவர்களாக கருதுகிறாரா? இல்லை. நாம் குறைவானவர்களாகவும் பலவீனர்களாகவும் இருந்தாலும், நாம் தீர்க்கப்பட வேண்டியவர்கள் என்று தேவன் ஒத்துக் கொள்வதில்லை. நம்முடையப் பாவத்தைக் குறித்து தேவன் ஏன் எண்ணாதிருக்கிறார்? ஏனெனில் அவர் ஏற்கெனவே பாவத்திற்கான கூலியைக் கொடுத்ததோடு நமக்காக அவர் தீர்க்கப்பட்டார். விசுவாசத்தினால் நீதிமானாகியவனின் பாவங்களை தேவன் நினைப்பதுமில்லை, அவனை தீர்க்கப்படவேண்டியவன் என்றெண்ணுவதுமில்லை.
விசுவாசத்தினால் நீதிமானாகியவன் பாக்கியவான். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவன் பாக்கியவான் (யோவான் 3:5). கர்த்தர் நம்மை இரட்சித்து ஆசீர்வதித்தார் என்பதை மறந்து, உலகின் பொருட்களைத் தேடி அவரின் ஆசீர்வாதத்தை இழந்தோம். அவருடைய கிருபையை நாம் இழக்கும்போது நாம் கர்த்தருக்கு எதிரானவர்களாகிறோம். கர்த்தரின் கிருபையை நம் மனதில் கொண்டிருக்கவேண்டும். விசுவாசிகளின் நடுவே கர்த்தரின் இரட்சிப்பு இருக்கிறது.
யாருடைய பாவங்கள் துடைக்கப்பட்டதோ அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார். நீதிமான் கர்த்தரால் தீர்க்கப்படுவதில்லை. இவ்வுலகிலும் பரலோக ராஜ்யத்திலும் தீர்க்கப்படாதவன் பாக்கியவான். ஏன்? ஏனெனில் கர்த்தரால் அவர்கள் நீதிமான்கள் என்றெண்ணப்பட்டு, அவரின் அன்பைப் பெற்று அவரின் பிள்ளைகளாயினர்.
 
 
விசுவாசத்தினால் நாம் ஆசீர்வதிக்கப் பட்டவர்களானோம்
 
விசுவாசத்தினால் நீதிமான்களாகிய நாம் ஆசீவதிக்கப் பட்டவர்கள். மறுபடியும் பிறந்தவர்கள் கர்த்தருக்கு முன்பாக ஆசீர்வதிக்கப் பட்டவர்களா? -ஆம்- “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:16-18) என்று விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமின் சந்ததியினனாகிய அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டதால் இப்படிக் கூறினான். நாமும் கூட ஆபிரகாமின் சந்ததியினரே. நாம் இரட்சிக்கப்பட்டது போலவே ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தையின் மீதிருந்த விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டான். “ஆபிரகாமே, நீ பயப்படாதே; நான் உனக்கு கேடயமும் உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்.” (ஆதியாகமம் 15:1) என்று கர்த்தர் ஆபிரகாமிடம் கூறினார்.
ஆனால் ஆபிரகாம் கூறினான், “கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரனைக் கர்த்தனாய் இருக்கிறானே” பின்னும் ஆபிரகாம் கூறினான், “தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப் பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளி என்று கூறிற்று.” அவர் அவனை வெளியே அழைத்து “நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால் அவைகளை எண்ணு” என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” “தேவனே நான் அதனை நம்புகிறேன்” இப்படியாக ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்தான்.
இவ்வுலகில் கர்த்தரின் வார்த்தையை, ஆபிரகாமைப் போன்று உங்களாலும் விசுவாசிக்க முடியுமா? அப்படிச் செய்வது மனிதர்களுக்கு முடியாத காரியமாகத் தோன்றுகிறதா? ஆபிரகாமின் மனைவி மகனைப் பெறுவதற்கு முதிர் வயதுடையளாயிருந்தால், ஆயினும் சிறிதளவே நம்பிக்கையிருந்த அந்த நிலையில் ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்தான். ஆகவே, ஆபிரகாம் கர்த்தருக்கு முன் நீதிமான் என்றெண்ணப் பட்டான்.
நம்முடைய அனைத்துப் பாவங்களையும் இயேசு துடைத்துப் போட்டார். இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் அனைத்துப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு நமக்காக அவரின் இரத்தத்தினால் தீர்க்கப்பட்டார். பாவ மன்னிப்பையும் கர்த்தரின் இரட்சிப்பையும் நாம் பெற்ற பிறகு ஆபிரகாமின் சந்ததியினரானோம், ஏனெனில் மற்றவர்கள் விசுவாசிக்கவில்லை, நாம் மிகவும் பாவத்தன்மை உடையவர்களாயிருந்தோம். “இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 1:25) இயேசுவின் ஞானஸ்நானத்திலும் (நீர்) அவரின் சிலுவையிலும் (இரத்தம்) உள்ள விசுவாசத்தின் மூலமாக கர்த்தரின் நற்செய்தியை விசுவாசிப்போரை அவரின் பிள்ளைகளாக மாற்றினார். இவை மனிதர்களுக்கு முட்டாள்தனமானதாக தெரியலாம். ஆனால் கர்த்தரின் இரட்சிப்பும் அவரின் பாவமன்னிப்பு ஞானமும் அத்தகையவை. மனிதர்களில் பார்வையில் அது முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால் கர்த்தர் தன் இலவச பரிசால் பாவிகளை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார்.
உலகின் நாலு மூலைகளிலும் இருந்து பத்தாயிரம் பேர்களில் ஒருவரை அழைத்து அவர்களை ஆசீர்வதித்ததோடு அவர்களை இரட்சித்து, அவர்களால் ஸ்தோத்தரிக்கப்பட்டார். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா இல்லையா? -ஆம், நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.- அது உங்கள் செயல்களினாலானது என்று எண்ணவேண்டாம். கர்த்தர் நமக்கு அளித்த ஆசீர்வாதத்தை நாம் விசுவாசித்ததாலும், அவர் தன் வார்த்தைகளின் மூலம் நமக்கு நம்பிக்கை அளித்ததாலும் நாம் ஆசீவதிக்கப்பட்டோம். தேவன் நமக்கு தம் அன்பைக் கொடுத்தமையால், அவர் நீர், இரத்தம் மற்றும் ஆவியினால் (1 யோவான் 5:4-8) நம்மைத் தம் பிள்ளகளாக்கினார்.
பூமியில் நாம் அநேக பலவீனங்களுடன் வாழ்ந்தாலும் நாம் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். நான் தேவனுக்கு உண்மையிலேயே நன்றி கூறுகிறேன். அவர் தம்முடைய விலையேறப்பட்ட ஆசீர்வாதத்தை அளித்து, நம் பாவங்களை எண்ணாமல், நம் அக்கிரமங்களை மன்னித்து, நம்மை மூடினார். நம் பரிசுத்தத்திற்காக நம்மால் எதையும் செய்யமுடியாத பாவத்தன்மையுடையவர்களாய் நாமிருந்தாலும் அவற்றைக் கொடுத்தார். நம்முடைய விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிப்பினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்.