சரியெனக் காட்டும் தத்துவம் உண்மையானதல்ல
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் மட்டுமே “கர்த்தருடன் சமாதானமாக இருக்க முடியும்” என்று பவுல் விசுவாசத்தினால் அறிவிக்கிறான். இதற்கு காரணம் பிதாவாகிய கர்த்தர் கிறிஸ்துவை நமக்காக ஞானஸ்நானம் பெறச் செய்து, சிலுவையில் இரத்தஞ்சிந்தும்படியும் செய்தார்.
ஆயினும், இன்றைய அநேக கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரிடம் சமாதானமாக இருக்க முடியவில்லை என்பதைக் காண்கிறோம், ஏனெனில் அவர்களுக்கு கர்த்தரின் நீதியைக் குறித்து சிறிதளவு அறிவும் இல்லை. இன்றைய கிரிஸ்தவத்தை விசுவாசிப்பவர்களின் நிலை இதுவே. ஆகவே சரியெனக் காட்டும் தத்துவம் கர்த்தருக்கு முன் சரியானதல்ல.
விசுவாசத்தால் கர்த்தரின் நீதியைப் பெறுவது சரியெனக் காட்டும் தத்துவத்தை விசுவாசிப்பதைக் காட்டிலும் சிறந்ததாகும். இயேசுவை விசுவாசிப்பவர்களை அவர்கள் இருதயங்களில் பாவமிருந்தாலும், அவர்களைத் தம் மக்கள் என்று அழைப்பேன் என்று கூறவில்லை. கர்த்தர் பாவிகளைத் தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வதில்லை. கர்த்தர் அப்படிப்பட்டவர் இல்லை. அவன்/அவள் உள்ளத்தில் பாவமிருக்கும் நபரை அவர் மக்களில் ஒருவராக இரட்சகராகிய அவர் கருதுவதில்லை. நாம் விசுவாசிக்கும் கர்த்தர் மகத்துவமானவர். எங்கும் பரவியுள்ள கர்த்தரால் ஒருவனின் தவறான விசுவாசத்தைக் கண்டுகொள்ள முடியாதா? தவறான நம்பிக்கையுடனிருக்கும் கிறிஸ்தவப் பாவியை, அவர் மக்களில் ஒருவராக கர்த்தர் அழைப்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.
கர்த்தருக்கு முன்பாக ஒவ்வொருவரும் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். மக்கள் தவறாக அறிந்து விசுவாசிக்கும் சரியெனக் காட்டுக் தத்துவம் கர்த்தரைக் கேலி செய்யும் ஒன்று. ஆகவே, கர்த்தரின் நீதியின் சத்தியத்தை தெளிவாக புரிந்துகொண்ட பின் இயேசுவை நம் இரட்சகரென்று விசுவாசிக்கவேண்டும். ஒருவன் இயேசுவை விசுவாசிக்கிறானா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அவன் பாவங்களுடன் இருப்பது சரியென பிதாவாகிய கர்த்தர் கூறவில்லை. அவர் அவனின்/அவளின் பாவத்தை தீர்க்கும் ஒருவர்.
ஆகவே, உன் பாவப்பிரச்சினையை தீர்க்கும் விதமாக கர்த்தரின் நீதியை நீ அறிந்து அதனை விசுவாசிக்கவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தத்தை நாம் விசுவாசிப்பதைக் கர்த்தர் கண்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்கிறார். நாம் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதினால் கர்த்தர் நம்மை அவர் மக்கள் என்றழைத்து அணைத்து ஆசீர்வதிக்கிறார். பிதாவாகிய கர்த்தர் அவர் நீதியின் மீதுள்ள நம் விசுவாசம் சரியானது என அங்கீகரிக்கிறார்.
கர்த்தர் உலகின் நீதிபதியல்ல
கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் நம் நீதியானது கர்த்தரின் வார்த்தைகளை முற்றிலும் விசுவாசித்த ஆபிரகாமின் விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்தது. அநேக கிறிஸ்தவர்கள் சரியெனக் காட்டும் தத்துவத்தை தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஆகவே இப்போது அதனைக் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வுலகத்தின் நீதிமன்றங்கள் அளிக்கும் நியாயத்தீர்ப்பு முற்றிலும் சரியானதல்ல என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். இவ்வுலகின் நீதிபதிகள் அவர்களின் தீர்மானத்தில் தவறிழைப்பதை உங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
இதற்கான காரணம் என்னவென்றால் அனைத்து மனித நீதிபதிகளும் குறையுள்ளவர்கள், நன்மை, தீமை எது என்று கூறும் முழு வரைமுறையான கர்த்தரின் நீதியைக் குறித்து அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர். நாம் விசுவாசத்தின் படியான நீதிமான் (ரோமர் 5 ஆம் அதிகாரம்) என்று நம்மைத் தீர்க்கும் கர்த்தரின் நீதியை அநேக கிறிஸ்தவர்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஏனெனில் பாவியொருவனுக்கு நீதிபதியளிக்கும் தண்டனையைப் போன்றதே கர்த்தரின் தீர்ப்பும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
சரியெனக்காட்டும் தத்துவம், தவறான தீர்ப்பின் தத்துவமாகும். மனித சிந்தனைகளினால் இத்தத்துவம் உருவாக்கப்பட்டதே அதற்கான காரணம். மக்கள் மகத்துவமுள்ளவர்கள் அல்லாது இருப்பதால் தவறாக தீர்ப்பளிப்பதில் நல்லவர்கள். ஆகவே, அவர்களை நீதிமானாக்கிய கர்த்தரை சரியெனக்காட்டும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த அவர்களின் சிந்தனையினால், தவறாக விசுவாசிக்கிறார்கள். “நீ என்னை எப்படியோ விசுவாசித்தமையால் உங்களை பாவமற்றவர்களாக கருதுகிறேன்” என்று கர்த்தர் கூறுகிறார் என்று அவர்களை இது விசுவாசிக்கச் செய்கிறது.
ஆயினும், கர்த்தரால் இதைப் போன்று எதையும் செய்யமுடியாது. மக்கள் அடிக்கடி எதை விசுவாசிக்கிறார்களென்றால், அவர்கள் தாம் இயேசுவை எப்படியோ விசுவாசிப்பதால், அவர்களிடம் பாவமிருந்தால் கூட கர்த்தர் அவர்களை தன் மக்களென்று ஏற்றுக்கொள்கிறார் என்று விசுவாசிக்கிறார்கள். இது அவர்களுடைய சொந்த யோசனைகளின் அடிப்படையில் அமைந்த தவறான விசுவாசமாகும், இது சாத்தான் வஞ்சித்ததின் விளைவாகும்.
ஆகவே கர்த்தரின் நீதியின் மீது அவர்கள் தம் விசுவாச வீட்டைக் கட்டவேண்டும். அவன்/அவள் இருதயத்தில் பாவங்களுள்ளவர்களை பரிசுத்தமும் மகத்துவமும் உள்ள கர்த்தர் எப்படி பாவமற்றவன் என்று தீர்ப்பார்? இருதயத்தில் பாவமுள்ளவர்களை பாவமில்லாதவர்களாக எண்ண கர்த்தர் தீர்மானித்தாரா? இத்தகைய ஒன்றை நினைப்பதும் விசுவாசிப்பதும் ஒருவரின் மனித சிந்தனையைத் தவிர வேறொன்றுமில்லை. கர்த்தர் சத்தியத்தின் கர்த்தராக இருப்பதால் அவர் தவறாக தீர்ப்பதில்லை. சத்தியமாகிய கர்த்தரே மனிதர்களைப் போல் தீர்ப்பளிக்கும் போது எப்படி தவறு செய்யக் கூடும். இப்படி நடக்கவே முடியாது. அவரின் நீதியின் அடிப்படையில் அவரின் நீதியை விசுவாசிப்பவர்களை, நீதியின் கர்த்தர் பாவமற்றவர்கள் என்று தீர்க்கிறார்.
கர்த்தருடைய நீதியைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? அவரின் நீதியை விசுவாசித்து அதனை நம்புகிறீர்களா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தைகளில் இந்த நீதியை முற்றிலுமாக காணமுடியும். ரோமரில் பேசப்பட்டுள்ள கர்த்தரின் நீதியைக் கிரகித்துக் கொள்வதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் புரிந்துகொண்டு அதனை விசுவாசிக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் கர்த்தரின் நீதியை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொருவரும் இந்த உண்மையை உணரவேண்டும். கர்த்தரின் நீதியை சரியாக அறிந்து கொண்டவரே அவனை/அவளை நீதிமானாக்கிய உண்மையை புரிந்துகொள்பவர்.
வேதாகமத்தில் வெளிப்படுத்தபட்டுள்ள கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிக்கவேண்டும், இல்லயென்றால், தவறான மனிதத் தீர்ப்புகளினாலும், சிந்தனைகளினாலும் உங்கள் விசுவாசம் ஒன்றுமில்லாததாகிவிடும். இதுவரை நீங்கள் தவறான விசுவாசமுடையவர்களாயிருந்தால், இப்போதிலிருந்து கர்த்தரின் நீதியின் வார்த்தைகளின்படி விசுவாசிக்கவேண்டும்.
அநேக கிறிஸ்தவர்கள் இறையியலில் இருந்து சரியெனக் காட்டும் தத்துவத்தைக் கற்று இதுவரை அதனை உண்மையென நம்பியுள்ளனர். ஆயினும், கர்த்தரின் நீதியை விசுவாசித்து, உண்மை நம்பிக்கைக்கு நீங்கள் திரும்பவேண்டும். யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக கர்த்தரின் நீதி தெளிவாக வெளிப்பட்டது.
உபத்திரவம் பொறுமையை உண்டாக்குகிறது என்று எழுதப்பட்டுள்ளது
ரோமர் 5:3-4 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “அது மாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரிட்சையையும், பரிட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங்களியேயும் மேன்மை பாராட்டுகிறோம்.” மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் கர்த்தர் தம்மை எல்லா சோதனைகளிலிருந்தும் காப்பார் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கை பொறுமையையும், பொறுமை பரீட்சையையும் உருவாக்குகிறது. ஆகவே, கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நீதிமான்கள் சோதனையான நேரங்களிலும் மகிழுகிறார்கள்.
கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசம் கர்த்தரின் ராஜ்யத்தை நம்பியிருக்கிறது என்றும் அது எந்த நம்பிக்கையையும் ஏமாற்றாது என்றும் பவுல் கூறினான். நீதிமான்களின் நம்பிக்கை எத்தகையது? அவர்களுடைய நம்பிக்கையினால் பரலோக இராஜ்யம் சென்று வாழமுடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இத்தகைய விசுவாசம் எங்கிருந்து வருகிறது? அது பிதாவாகிய கர்த்தரின் மூலம் இயேசுகிறிஸ்துவின் நீதியை விசுவாசிப்பதிலிருந்து வருகிறது.
நாம் பாவத்தன்மை உடையவர்களாயிருப்பதாக தேவன் கூறுகிறார்
“அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6).
நாம் கருவாகும் முன்னமோ அல்லது நாம் நம் தாயின் கர்பத்திலிருக்கும்போதோ, அல்லது நாம் பிறந்து தேவனைக் குறித்து அறியாதபோதோ, அதிலிருந்து நாம் மரிக்கும் வரை வாழ்நாள் முழுவதும் பாவம் செய்து நரகம் சென்றடைவதைத் தவிர வேறு வழியில்லை.
நம்முடைய மூதாதையர்களாகிய ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது கர்த்தர் இரட்சகரை அனுப்புவதாக உறுதியளித்தார். “அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதியாகமம் 3:15) என்று கூறினார். இந்த உறுதிமொழிக்கு ஏற்ப நாம் பாவம் செய்வதற்கு முன்பே இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். உலகின் பாவங்களை தன் மீது சுமக்கும்படி யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்துவதன் மூலம் அவற்றைத் துடைத்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிரேடெழுந்ததன் மூலம் நம் பாவங்களை அகற்றினார். அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் உங்களையும் என்னையும் போன்ற பாவிகளினதும், மனிதகுலத்தின் பாவங்களையும் தேவன் ஏற்றுக்கொண்டு, சிலுவையில் மரித்ததன் மூலம், விசுவாசிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
நாம் தெவீகமானவர்களா? தெய்வீகத் தன்மையுடையவர் கர்த்தரின் மகிமையில் நின்று அவன்/அவள் பாவத்திலிருந்து தொலைவிலிருப்பார். பாவிகளாகிய உனக்காகவும் எனக்காகவும் இயேசு ஞானஸ்நானம் பெறுவதை கர்த்தரின் நிறைவான நீதி அனுமதி அளித்ததுடன், அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிரேடெழும்பும்படிச் செய்தது. நம்மிடம் பலமில்லாதபோது நம்மை இரட்சித்ததும் கர்த்தரின் அன்பாகும்.
பழைய ஏற்பாட்டில், தலைமை ஆசாரியன் பலி மிருகத்தின் மீது கை வைத்ததன் மூலம் இஸ்ரவேலரின் ஒரு வருடப் பாவங்களையும் அதன் மீது கடத்தியதைப் போல் (லேவியராகம் 16:20-21), புதிய ஏற்பாட்டில், இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெறும்போது மனிதர்களின் அனைத்துப் பாவங்களையும் மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை, அவர் சிலுவையில் அறையப்படும்படி சிலுவைக்கும் சென்றார். ஏனெனில் அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்துக் கொண்டிருந்தார். இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றும் அவரின் இரத்தத்தைச் சிந்தியும் பாவிகளின் அனைத்துப் பாவங்களையும் கழுவினார் என்பதை கர்த்தரின் நீதி குறிக்கிறது.
நீயும் நானும் பாவமற்றவர்களா? நாம் பாவமுள்ளவர்களாயிருப்பதால் பாவிகளாகிய நம்மை இரட்சிப்பதற்காக தேவன் வரவில்லையா? நாமெல்லாம் பாவிகளென்று கர்த்தருக்கு நன்குத் தெரியும். நாம் பிறந்தது முதல் மரிக்கும்வரை பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாததால் நாம் பாவிகள். ஆயினும், யோவானால் ஞானஸ்நானம் பெற்றதாலும் சிலுவையில் தன் இரத்தத்தை சிந்தியதாலும், நாம் பாவிகளாக இருக்கையிலேயே கிறிஸ்து நமக்கான அன்பை விளங்கப்பண்ணினார்.
இயேசு நம் முடிவை மாற்றினார்
பிறந்த நாள் முதல் மனிதர்களாகிய நாம் எதிர்நோக்கும் விதியைக் குறித்து நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நாம் பிறந்த நாள் முதல் நம் விதி என்னவாயிருந்தது? நாம் நரகத்திற்குச் செல்ல வேண்டியவர்களாயிருந்தோம். அப்படியானால் நீயும் நானும் நரகம் செல்லுவதிலிருந்து இரட்சிக்கப்படுவது எப்படி சாத்தியமாயிற்று? கர்த்தரின் நீதியை நாம் விசுவாசித்ததால் நம் விதி மாறியது, நம் விதியை மாற்றிய உண்மையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே. கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தமையால் நம் விதி ஆசீர்வாதமாக மாறிற்று.
கீழ்க்கண்ட பிரபலமான பல்லவியை நீங்கள் அறிந்திருக்கலாம். “♪ஆச்சர்யமான கிருபை! அச்சத்தம் எத்தனை இனிமையானது, ♫அது என்னைப் போன்ற துரதிருஷ்டசாலியை இரட்சித்தது! ♫ஒரு முறை நான் இழந்து போனேன். ♫ஆனால் இப்போது கண்டு பிடிக்கப் பட்டேன், குருடனாயிருந்தேன், ஆனால் இப்போது பார்க்கிறேன்.♪” நம்முடைய இரட்சிப்பைக் குறித்து சாட்சி கூறுவது கர்த்தரின் இரக்கமும் நீதியுமாகும். ஒருவன்/ஒருத்தி கர்த்தரின் நீதியை அறிந்து அதனை விசுவாசித்ததால் அவன்/அவள் தன் பாவங்கள் மன்னிக்கப் பட்டு பரலோகத்தின் சமாதானத்தை அனுபவிக்கலாம். ஆகவே கர்த்தரின் நீதியை அறியும் பொருட்டு, தம் இருதயங்களில் பாவமுள்ள ஒவ்வொருவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு திரும்பவேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியாத கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் மீது அவர்களின் பாவங்கள் சுமத்தப்பட்டது தெரியாது. ஆகவே, அவர்களால் கர்த்தரின் நீதியை பெறமுடியவில்லை. இயேசு உலகிற்கு வந்து அவர்களின் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சித்ததை விசுவாசித்ததால், தம் இரட்சிப்பைக் குறித்து அவர்களுக்கு நிச்சயமில்லை. உலகம் படைக்கப்பட்டதற்கு முன்பே கர்த்தர் அநேகமாகத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றெண்ணி அவர்கள் கவலையகன்றவர்களாயுள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் கிறிஸ்தவத்தை உலகில் உள்ள மற்ற மதங்களில் ஒன்றாக மட்டுமே விசுவாசிக்கிறார்கள்.
வசனம் 11 கூறுகிறது, “அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப் பற்றியும் மேன்மை பாராட்டுகிறோம்.” பாவிகளாகிய நம்மை, கர்த்தருடன் ஒப்புரவாக்கியது யார்? இயேசுகிறிஸ்து நம்மை பிதாவுடன் ஒப்புரவாக்கினார். எப்படி? அவரே இவ்வுலகிற்கு வந்து, சிலுவையில் அறையப்பட்டு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, தம் செய்கைகளை நிறைவேற்ற கர்த்தரின் எல்லா நீதியையும் நிறைவேற்றியதன் மூலம் ஒப்புரவாக்கினார். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களாகிய நமக்கு இயேசு இரட்சகரானார், அவர் பரலோகத்தின் தலைமை ஆசாரியராக இவ்வுலகிற்கு வந்து மனிதர்களின் பாவங்களை எடுத்துக்கொண்டார். உலகின் தலைமை ஆசாரியனான யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததன் மூலம், கிறிஸ்து நம் இரட்சகரானார்.
இயேசுகிறிஸ்து ஏற்கெனவே நம் அனைத்துப் பாவங்களையும் அழித்துப் போட்டதால், நம் விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் நீதியை நம்மால் பெறமுடிகிறது. இயேசு நம்மை எல்லாப்பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக இரட்சித்தார் என்று விசுவாசிக்கும் யாவரும் கர்த்தரில் களிகூறுவர். அவன்/அவள் இருதயத்தில் பாவமுள்ள ஒருவரும் கர்த்தரின் பிள்ளை அல்ல.
சரியெனக் காட்டும் தத்துவமும், பரிசுத்தமாகும் தத்துவமும் உண்மை என்று உலகின் மக்கள் எண்ணுகிறார்கள் என்பது சகோதரர்களாகிய உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். நம்முடைய இருதயங்களில் பாவங்கள் இருந்தாலும், நாம் இயேசுவை மட்டுமே விசுவாசிப்பதாக கூறினால் நாம் பாவமற்றவர்கள் என்று கர்த்தர் கூறுவது சரியானதா அல்லது நாம் நம்மை கிறிஸ்தவர்களாக காண்பதால் கர்த்தரின் மக்கள் என்று குறிப்பிடுவது மிகச் சரியானதாக இருக்குமா?
“பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் மகிமப்படுவதாக” என்று கர்த்தரின் ஜெபத்தில் கூறுகிறோம். தம்மிருதயங்களில் பாவங்களுடனிருப்பவர்கள் கர்த்தரை “நம் பிதாவே” என்று கூறமுடியாது என்று இந்த வசனம் பொருள்படுகிறது. சரியெனக்காட்டும் தத்துவத்தை இன்னமும் விசுவாசிக்கிறோமா? தற்போது பாவியாக இருக்கும் ஒரு நபரால் தேவனை அவனின்/அவளின் இரட்சகர் என்று கூறமுடியுமா? அவன்/அவள் இரண்டு வருடங்கள் தேவனை விட்டுவிடுவார்கள், ஏனெனில் அவன்/அவள் தாம் கிறிஸ்தவனாக இருப்பதைக் குறித்து வெட்கப்படுகின்றனர். ஆகவே, சரியெனக் காட்டும் தத்துவம் கர்த்தரின் நீதியிலிருந்து உங்களை பிரித்துவிடும்.
பரிசுத்தமாகும் தத்துவமும் தவறானதே. இக்கொள்கை நாம் பரிசுத்தமாகும் வரை படிப்படியாக மாற்றங்களை அடைந்து நாம் மரிக்கும் நொடியில் முழுமையான பரித்தவானாகிவிடுவதால், கர்த்தரை நாம் பரிசுத்தவானாக சந்திப்போம் என்று கூறுகிறது. கர்த்தரை உங்கள் பாவங்களின்றி சந்திக்கும் அளவு நீங்களாகவே பரிசுத்தமாகும் அளவு படிப்படியாக பரிசுத்தமாக முடியுமென எண்ணுகிறீர்களா? அதற்கு வழியே இல்லை. கர்த்தரின் நீதியை அறிந்து விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே கர்த்தரின் ராஜ்யத்தினுள் ஒருவனால் செல்ல முடியுமென சத்தியம் நம்மிடம் கூறுகிறது.
ஒரு மனிதனால் பாவம் உலகினுள் நுழைந்த போதிலும்!
வசனம் 12 ஐ இப்போது வாசிப்போமாக, “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” யாரின் மூலமாக பாவம் எல்லா மனிதர்களின் இருதயங்களிலும் நுழைந்தது, எத்தனை மக்களால் பாவம் உலகில் நுழைந்தது? “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது” என்று வேதவசனம் கூறுகிறது.
வேறுவார்த்தைகளால் கூறுவதானால், பாவம் ஒரு மனிதனால், ஆதாமால் வந்தது, நாமெல்லாம் அவனின் சந்ததியினர், அப்படியானால் யார் மூலமாக உலகின் பாவங்கள் மறைந்தது? பாவம் உலகில் நுழைந்தது போலவே இதுவும் ஆயிற்று என்று கூறமுடியும்.
கர்த்தர் ஏற்படுத்திய சட்டத்தை ஒரு மனிதன் விசுவாசிக்காததால் மனிதர்களின் பாவம் உருவாயிற்று, இப்பொழுது கூட கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்காத ஒருவன் பாவியாகவே இருந்து நரகத்தில் முடிவடைகிறான்.
ஆகவே, நாம் கீழ்க்கண்டவற்றைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். நம்முடைய சொந்தப் பாவங்களினால் நாம் பாவிகளாகவில்லை, நம்முடைய மூதாதையர்கள் பாவமுடையவர்களாயிருந்ததால் அப்படியாயிற்று. மனிதர்கள் பாவம் செய்வதற்கான காரணம் அவர்கள் பலவீனர்களாகவும் தம் இருதயங்களில் பாவமிருப்பதினாலும் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் செய்யும் பாவங்கள் அக்கிரமங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் பாவம் செய்வதற்கான காரணம் அவர்கள் பாவத்துடனேயே இவ்வுலகில் பிறந்தமையே, ஒவ்வொருவரும் குறைபாடுள்ளவர்களாயும், இவ்வுலகிற்கு பாவத்துடன் பிறந்ததினாலும் அவனால்/அவளால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது.
நாம் பாவங்களை நம் மூதாதையர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதால், பாவ வித்தான நாம் அசல் பாவிகளானோம். ஆயினும், கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதால் ஒரே தரமாக எவராலும் பரிசுத்தனாகவும் நீதிமானாகவும் முடியும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
மனிதர்களிடம் பாவம் எப்போது குடிகொள்ளத் தொடங்கியது?
“நியாயப் பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப் பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்பட மாட்டாது”. (ரோமர் 5:13) கர்த்தருடைய சட்டத்தை நாம் தெரிந்துகொள்வதற்கு முன்பாக பாவமிருந்ததா? கர்த்தரின் சட்டத்தை நாம் அறியும் முன்பு கர்த்தருக்கு முன்பாக பாவச்செயல் எது என்று தீர்க்கப்பட்டிருக்கிறாது என்பதை புரிந்துகொள்ளவில்லை. கர்த்தர் நம்மிடம் கூறினார், “எனக்கு முன்பாக வேறு தெய்வங்கள் உனக்கு இருக்கவேண்டாம், மேலே வானத்திலிருப்பது போன்றோ கீழே பூமியில் இருப்பது போன்றோ, நீரில் உள்ளதைப் போன்றோ உருவத்தையும் செய்ய வேண்டாம்; அவற்றைக் குனிந்து வணங்கவோ ஆராதிக்கவோ வேண்டாம், கர்த்தராகிய தேவனின் பெயரை வீணில் உபயோகிக்க வேண்டாம். ஔய்வு நாள் நினைவு கூர்ந்து அதனை பரித்தமாக ஆசரி.” இந்த கர்த்தரின் சட்டங்களையும், கட்டளைகளிலுள்ள எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பவைகளையும் அறிந்துகொள்வதற்கு முன் நமக்கு நம் பாவங்களைக் குறித்து தெரியாது.
“அது மாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரிட்சையையும், பரிட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து” நாம் புறஜாதியாராக இருந்தபடியால் சட்டம் நமக்கிருக்கவில்லை, ஆகவே அதைக் குறித்து நமக்கும் தெரியாது, அதனைக் குறித்த அறிவு இல்லாமலேயே பாவம் செய்தோம். அநேக கொரியர்கள் புத்தர் என்று எண்ணி கல்லை வணங்கிக் கொண்டிருக்கின்றனர், இருந்தாலும் தாம் செதுக்கப்பட்ட ஒரு ரூபத்தை வணங்குகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. கர்த்தருக்கு முன்பாக மற்ற தெய்வங்களை வணங்குவது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.
ஆயினும், சட்டம் வருவதற்கு முன்பே, பாவம் உலகில் இருந்தது, கர்த்தர் ஆதாமைப் படைத்து ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு பிறகு சட்டத்தை நமக்குக் கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு மோசே மூலமாக சட்டத்தை கி.மு. 1,450 இல் கொடுத்தபோதிலும், ஆதாம் என்ற ஒரு மனிதனால் பாவம் உலகினுள் நுழைந்தது, சட்டம் வருவதற்கு முன்பே, தொடக்கத்திலிருந்தே, எல்லா மனிதர்களின் இருதயங்களிலும் பாவம் இருந்தது.
இயேசு தம்மக்களின் இரட்சகர்
இயேசுகிறிஸ்து மட்டுமே உலகின் பாவங்களை அழித்துவிட்டாரா? ஆம். 14 ஆம் வசனம் கூறுகிறது, ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவம் செய்யாதவர்களையும், தவறு செய்யாதவர்களையும் கூட மரணம் ஆட்கொண்டது. ஆகவே ஆதாம் வரப்போகிறவரின் சாயாலாயிருந்தான். மனிதகுலம் ஒரு மனிதனால் பாவிகளாகியது. அது போலவே, இயேசுகிறிஸ்து உலகிற்கு வந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் நம்மை நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார்.
இயேசு. மக்களின் பாவங்களிலிருந்து, அவர்களை இரட்சித்து அவர்களின் இரட்சகரானார். ஆதாமின் சந்ததியினராகிய நம்மை இரட்சித்தது ஒரேயொரு இரட்சகரே. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்” (அப்போஸ்தலர் 4:12) அவர் பெயர் இயேசுகிறிஸ்து, நம் நித்திய இரட்சகர்.
நாம் ஆதாம் என்ற ஒரு மனிதனால் பாவமாகினோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். உலகின் பாவங்களை ஒரேதரமாக அழித்துப்போட்டது இயேசுகிறிஸ்துதான் என்று உங்களுக்குத் தெரியுமா? இயேசுகிறிஸ்து தம் ஞானஸ்நானத்தினாலும், சிலுவை மரணத்தினாலும் ஒரேதரமாக உலகின் எல்லாப் பாவங்களையும் துடைத்துவிட்ட இரட்சகர் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு மீறுதலினால், ஆதாம் எல்லாப் பாவங்களுக்கும் மூலகர்த்தாவானது போல், இயேசு உலகின் பாவங்களை அகற்றி மனிதகுலத்தின் இரட்சகரானார் என்று விசுவாசிக்கிறீர்களா?
ஆதாம் என்ற ஒரு மனிதனால் பாவிகளாகிய அனைவரையும் இரட்சிக்க இயேசு இவ்வுலகிற்கு வந்து, யோவானால் ஞானஸ்நானம் பெற்றதால் மனிதர்களின் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, அவரின் இரத்தத்தை சிலுவையில் சிந்தி தீர்ப்பைப் பெற்று, நம் அனைத்துப் பாவங்களையும் அழித்துப்போட்ட கர்த்தரின் நீதியை நிறைவேற்றினார். இப்படியாக அவர் நம் நிறைவான இரட்சகரானார்.
இயேசுவை விசுவாசித்த பிறகு சரியெனக்காட்டும் தத்துவத்தினாலேயோ அல்லது பரிசுத்தமாகும் தத்துவத்தினாலேயோ நாம் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவில்லை. இயேசு நமக்கு நித்திய இரட்சிப்பை ஒரேதரமாக வழங்கினார். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாலேயே கர்த்தரின் ராஜ்யத்தினுள் நுழைந்து அதனைப் பார்க்க முடியுமென இயேசு கூறினார்.
மனிதர்களின் மனசாட்சியின் கீழிருக்கும் நிலையான எண்ணம் என்ன? அதுவே ஆபத்திற்கான மூலம். அவர்கள் தம் உள்ளத்தின் அடியில், தம் முயற்சிகளும் செயல்களும் எப்படியோ அவர்களை இரட்சிப்படையச் செய்யும் என்று விசுவாசிக்கிறார்கள். ஆயினும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவன்/அவள் விசுவாசிக்கும்போது ஒரேதரமாக தம் விசுவாசத்தினால் பாவத்திலிருந்து உண்மையான இரட்சிப்பை அனைவரும் பெறுகின்றனர். மேலும், நம்மை பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி இயேசு இவ்வுலகிற்கு வந்து சிலுவையில் அறையப்பட்டார். உண்மை நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு அவர் இரட்சகரானார்.
மனந்திரும்பி ஜெபித்துக்கொண்டிருப்பதால் ஒருவரால் பரிசுத்தமாகி அதனால் நீதிமானாக முடியும் என்ற தவறான சிந்தனையிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். வேதாகமத்தில், ஒரு மனிதனாகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து நம் எல்லாப் பாவங்களையும் எற்றுக்கொள்ள ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அவர் செலுத்திய பாவக்கிரயத்தின் மூலம் நம் அனைவரின் இரட்சிப்பையும் நிறைவாக்கினார்.
இயேசு நமக்களித்த நித்தியமான பாவக்கிரயமானது நம் பாவங்களைப் போன்றதல்ல
வசனம் 15 கூறுகிறது, “ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே நம் ஈவும் அநேகர் மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது.”
இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது உங்களின் பாவங்களும் எனது பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதா? அவை சுமத்தப்பட்டன. உலகின் பாவங்களை சுமந்துகொண்டு இயேசு சிலுவைக்குச் சென்று நம் இடத்திலிருந்து அந்தப் பாவங்களுக்காக தீர்க்கப் பட்டார்.
கர்த்தரின் இரட்சிப்பு இலவச பரிசாகும், அது மீறுதலில் இருந்து வேறுபட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இயேசு தம்முடைய 33 வருட வாழ்வு காலத்தில் நம் வாழ்நாள் முழுவதும் தவிர்க்க முடியாது செய்யும் பாவங்களிலிருந்து, அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் இரட்சித்தார். ஒரேதரமாக நிறைவேற்றப்பட்ட பாவநிவர்த்தியை விசுவாசித்து நாம் இரட்சிப்பைப் பெற்றாலும், நம் மாமிசம் தொடர்ந்து பாவம் செய்கிறது, ஏனெனில் அது குறைவுற்றதும் உடைந்து போவதுமாயிருக்கிறது. இயேசு தான் ஞானஸ்நானம் பெறும்போது நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றுக்கொண்டு தம் இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் கர்த்தரின் எல்லா நீதியையும் நிறைவேற்றினார், என்பவனவற்றை நாம் விசுவாசித்தால், நம் சரீரம் தொடர்ந்து பாவங்களைச் செய்துக்கொண்டிருந்தாலும், நித்திய பாவமன்னிப்பை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.
பாவமன்னிப்பாகிய இரட்சிப்பின் ஈவு ஆதாமின் மீறுதல்களை ஒத்ததல்ல. மக்கள் தினமும் பாவம் செய்வது போல் கர்த்தரின் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு தினமும் கிடைப்பதில்லை. 2000 வருடங்களுக்கு முன்பு ஞானஸ்நானம் பெற்று அவரின் இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் தேவன் நம்மை நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்துவிட்டார் என்று பாவமன்னிப்பின் சத்தியம் கூறுகிறது.
நம்மை இரட்சித்த கர்த்தரின் ஈவாகிய இரட்சிப்பு இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்ததால் ஒரேதரமாக நிறைவேற்றப்பட்ட நீதியாகும். நிரந்தரமான பாவமன்னிப்பு இன்றை கிறிஸ்தவர்களில் அநேகர் தேடும் மனந்திரும்பி ஜெபிக்கும் அன்றாட மன்னிப்பைப் போன்றதல்ல. நாம் தினமும் பாவம் செய்வோம் என்று தேவன் எதிர்பார்த்ததால், அவர் ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார் என்று வேதாகமம் கூறுகிறது. ஆகவே, பிதாவாகிய கர்த்தர் தன் மகனின் ஞானஸ்நானத்தினாலும், சிலுவை மரணத்தினாலும் தன் அனைத்து நீதியையும் நிறைவேற்றினார். இயேசு ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் இரத்தஞ் சிந்தி மறுபடியும் உயிரோடெழுந்தமையால் கர்த்தரின் எல்லா நீதியும் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் தாம் மனம் வருந்தி ஜெபிக்கும்போது அவர்களின் பாவங்கள் நிவிர்த்திக்கப்படுகின்றது என்று நம்புகிறார்கள். இது உண்மையா? நிச்சயமாக இல்லை. ஒருவன்/ஒருத்தி ஒரு நபரைக் கொலை செய்து விட்டு மனம் வருந்தி ஜெபிப்பதால் அவனின்/அவளின் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் என்றெண்ணுவது தவறானது. இத்தகைய சிந்தனை மனித சிந்தனையைத் தவிர வேறில்லை. ஒருவன் கர்த்தரின் பக்கமிருந்து பாவங்களை அழிப்பதற்கு, அவன் எப்போதும் பாவத்திற்கான சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். இதனைச் செய்வதற்கு, கர்த்தர் தன் குமாரானாகிய இயேசுவை யோவானால் ஞானஸ்நானம் பெறும்படிச் செய்து சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்தால் பாவங்கள் யாவையும் துடைத்தார். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் இரத்தத்தை விசுவாசிப்பதால் மனிதர்களின் பாவங்களையெல்லாம் கழுவிவிடலாம்; மனம் வருந்தி ஜெபிப்பதால் அப்படியாகாது,
ஆகவே வேதாகமம் கூறுகிறது, “எப்படியெனில் ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர் மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.” கர்த்தரின் இரட்சிப்பின் ஈவு வழிந்தோடுகிறது. முழு இரவும் தண்ணீர் குழாயை திறந்து வைத்துவிட்டால் நீர் எப்படி ஒடுமோ அதுபோல் நாம் எந்தப் பாவங்களைச் செய்தாலும், அவரின் இரட்சிப்பு நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க போதுமானதாயிருக்கிறது.
இயேசு தாம் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். நம்முடைய அக்கிரமங்களை விடவும் கர்த்தரின் இரட்சிப்பு மிகப் பெரியதாயிருப்பதால், நாம் இரட்சிக்கப்பட்டபிறகு கூட அவரின் இரட்சிப்பு அதிகமாயிருக்கிறது. இது தெளிவாகிவிட்டதா?
இயேசுகிறிஸ்து என்ற ஒரு மனிதர் மூலமாய்
வசனங்கள் 16 மற்றும் 17 கூறுகின்றன, “மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன் மூலமாய், மரணம் ஆண்டு கொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமே.”
ஒரு மனிதனுடைய மீறுதலினாலே மரணம் மனிதகுலத்தை ஆட்கொண்டது. ஆதாம் என்ற ஒரு மனிதனின் பாவம் மனிதர்களை பாவியாகும்படிச் செய்ததுடன், அந்தப் பாவமானது ஒவ்வொருவரையும் கர்த்தரின் சாபத்திற்குள்ளாக்கியதை இது சுட்டிக்காட்டுகிறது. பாவஞ் செய்தவன் எவனும் மரித்து நரகம் செல்ல வேண்டியிருந்தது. அதே போன்று இயேசுகிறிஸ்து என்ற ஒருவரால் கர்த்தரின் நீதி வாழ்வை ஆளுகைச் செய்கிறது. வழிந்தோடும் ஈவாகிய கிருபையையும் நீதியைப் பெற்றுக்கொண்டவர்கள் யாரெனில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது அவர்களுக்குள்ள விசுவாசத்தினிமித்தம் இரட்சிப்பின் ஈவை அளிக்கப்பட்டவர்கள். அவர்கள் கர்த்தரிடமிருந்து மிகப்பெரிய கிருபையைப் பெற்றுள்ளனர், அக்கிருபை வாழ்வை ஆட்சி செய்யும்.
வசனம் 18 கூறுகிறது, “ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.”
இங்கு நாம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கவேண்டும். “ஒரு மனிதனின் பாவத்தினால் நாம் அனைவரும் பாவிகளானோம் என்பது உண்மையா?” உங்களுடைய சொந்தப் பாவங்களால் நீங்கள் பாவிகளானீர்களா அல்லது உங்கள் மூதாதையரான ஆதாம் கர்த்தருக்கு எதிராக செய்த பாவத்தினால் நீங்கள் அப்படியானீர்களா? ஆதாமின் மீறுதலினாலே நாமனைவரும் பாவிகளாயிருந்ததால், இயேசு நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்க செய்த நீதியின் செயலை விசுவாசிப்பவர்கள் நீதிமான்களாவர். ஒருவன் கர்த்தரின் நீதியை விசுவாசித்தால் அவன்/அவள் பாவங்கள் உண்மையாகவே அழிந்துப் போகிறதா? -ஆம்- அவன்/அவள் பாவமற்றவராகிறார்.
“ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று” இயேசுவை எப்படியோ விசுவாசித்து இரட்சிக்கப்பட்ட பிறகு இலவச ஈவாகிய கர்த்தரின் நீதியைப் பெறுவது, பரிசுத்தமாகும்படி தினமும் நாம் மனம் வருந்தி ஜெபிக்கவேண்டும் என்று பொருள்படவில்லை. அப்படி இல்லை! அப்போஸ்தலனாகிய பவுல் ‘நீதிக்கு ஏதுவான தீர்ப்பு` என்பது கிறிஸ்தவக் கொள்கை என்று கூறப்படும் “விசுவாசத்தினால் நீதியைப் பெறுவது” என்று பொருளாகாது.
இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதால் அநேக கிறிஸ்தவர்களின் இருதயங்களில் பாவமிருக்கிறது. ஆகவே, அவர்கள் தம் இருதயங்களிலுள்ள பாவங்களை மறைக்கும் பொருட்டு சரியெனக் காட்டும் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை ஆதரிப்பதோடு “நம்மிருதயங்களில் பாவங்கள் இருந்தாலும் அவர் நம்மை பாவமற்றவர் என்றெண்ணுகிறார்” என்று தமக்குள் குழம்பிக் கொள்கிறார்கள். ஆயினும், இக்கொள்கையானது முட்டாள்தனமானதும் சபிக்கப்படவேண்டியதுமான ஒன்று.
வசனம் 19 கூறுகிறது, “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப் படுவார்கள்.”
இங்கு கீழ்ப்படியாத ஒருவனும் கீழ்ப்படிந்த ஒருவரும் தோன்றுகிறார்கள். ஒருவன் ஆதாம், மற்றது மனிதகுலத்தின் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து. ஆதாமின் கீழ்ப்படியாமை மனிதகுலத்தையே பாவிகளாக்கியது, ஆகவே இயேசு தம் பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, மக்களை கர்த்தருடன் மீண்டும் இணைக்கும்படி, யோவானிடம் ஞானஸ்நானம் பெற்று, உலகின் பாவங்களுக்காக சிலுவையிலறையப்பட்டு, நம்முடையப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி மறுபடியும் உயிரோடெழுந்தார். பிதாவாகிய கர்த்தர் தம் நீதியின் மூலம் இயேசுவை விசுவாசிப்பவர்களை முற்றிலுமாக நீதிமானாக்கினார்.
வசனம் 20 கூறுகிறது, “மேலும் மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.”
நம்முடைய மீறுதல்களை அதிகமாக்கும்படி சட்டம் வந்தது என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் ஆதாமின் சந்ததியினர் என்பதால் அவர்கள் பாவத்துடன் பிறந்தனர். ஆனாலும் அவர்கள் பாவம் செய்கையில் அது அவர்களுக்கு புரிவதில்லை. சட்டமில்லை என்றால் ஒருவன் தன் பாவத்தை பாவமென்று உணர்ந்துகொள்ளவே மாட்டான், கர்த்தரின் சட்டம் மூலமாகவே அவன்/அவள் தன் பாவங்களைக் காணமுடிந்தது. ஆயினும் நாம் அதிகமதிகமாய் சட்டத்தைக் குறித்து தெரிந்து கொண்டபோது, நம்முடைய பாவங்களைக் குறித்தும் அதிகமதிகமாய்ப் புரிந்து கொண்டோம். மக்கள் முழுப்பாவத்துடன் இருந்தார்களாயினும், அவர்கள் சட்டத்தைப் பெற்றுக்கொண்டு தம் பாவச் செயல்களைக் குறித்து சிறிதுசிறிதாக தெரிந்துக்கொள்ளும் வரை தம் பாவங்களைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. ஆகவே வேதாகமம் கூறுகிறது “மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது.”
“அப்படியிருந்தும் பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.” இதன் பொருள் என்னவென்றால், ஒருவன் கர்த்தரின் சட்டப்படி அவன்/அவள் பாவங்களைப் புரிந்துகொண்டு அவரின் நீதியை விசுவாசித்து அவரின் பிள்ளையானான். சட்டத்தின் மூலம் மக்கள் தம் குறைபாடுகளையும் பாவங்களையும் குறித்து அறியும்போதே கர்த்தரின் நீதியை உள்ளடக்கியுள்ள உண்மை நற்செய்தியின் மூலமாக அவர்கள் கர்த்தரின் கிருபையை உணர்ந்து கொள்ளமுடியும். சட்டத்திற்கு முன்பாக தம் பாவங்களைக் குறித்து நன்கு அறிந்தவர்கள் தாம் நரகம் செல்ல வேண்டியவர்கள் என்பதை ஒத்துக்கொள்வார்கள். அப்பொழுது அவர்கள் தம்மை தன் ஞானஸ்நானத்தினாலும் சிலுவை மரணத்தினாலும் இரட்சித்த இயேசுவை அதிக நன்றியறிதலோடு விசுவாசிப்பார்கள். சட்டத்தின் மூலம் அதிகப்படியாக நம்முடைய பாவத்தன்மையை நாம் உணரும்போது, கர்த்தரின் நீதியால் ஏற்படுத்தப்பட்ட பெரிதான இரட்சிப்பிற்கு பெரிதும் கடமைப் பட்டவர்களாயிருப்போம்.
வசனம் 21 கூறுகிறது, “ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.”
பாவம் மரணத்தை ஆண்டதாக வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் நீர் மற்றும் இரத்தத்தை உள்ளடக்கிய கர்த்தரின் கிருபை அவரின் நீதியாகும். அவருடைய நீதி நம்மை நம் பாவங்களிலிருந்து முற்றிலுமாக இரட்சித்தமையால் நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம்.
பரிசுத்தமாகும் தத்துவமும் சரியெனக் காட்டும் தத்துவமும் கர்த்தரின் வார்த்தைகளை அலட்சியம் செய்பவர்களால் உருவாக்கப்பட்ட பொருளில்லாத மனித தத்துவங்களாகும். இத்தகைய கொள்கைகள் இறையிலாளர்களாலும் தத்துவமேதைகளாலும் உருவாக்கப் பட்ட நடைமுறைக்கு உதவாத கூற்றுகள் எனக் கூறினால் அது மிகையாகாது. கர்த்தரின் சத்தியம் தெளிவானதும் உறுதியானதுமாகும்.
மனித சாயலில் இருக்கும் கர்த்தராகிய இயேசு நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார் என்பதை விசுவாசிப்பதால், நாம் உலகின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். அவர் மீது விசுவாசமுள்ளவர்கள் இரட்சிக்கப்பட்டனர். இதனை விசுவாசிக்கிறீர்களா? -ஆம்.-
கர்த்தரின் நீதியை நீங்கள் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவீர்கள். நீங்கள் உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் நிச்சயமாக விடுவிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டீர்கள். முடிவில்லாது மனம் வருந்தி ஜெபிப்பதாலும் பரிசுத்தமாகும்படி குறையேதுமில்லாது வாழ்ந்தால் அது உங்களை இரட்சிக்கும் என்று வலியுறுத்தினால், நீங்கள் இயேசுவின்றி இரட்சிக்கப் படமுடியும் என்று அடம்பிடிக்கிறீர்கள். இயேசுவே இரட்சிப்பின் ஒரே வாசல்; உண்மையை பொருட் படுத்தாமல், ஒருவனின் சொந்த முயற்சியாலும், செயல்களாலும் இரட்சிக்கப்பட முடியும் என்று கூறும், பரிசுத்தமாகும் கொள்கையின் வஞ்சனை எது வேண்டுமானாலும் கூறட்டும்.
சட்டத்தை 0.1% கடைப்பிடிக்க முடியாது என்பது சட்டத்தை 100% கடைப்பிடிக்க முடியாது என்பதற்கு சமமானதாகும். நம்மால் அவரின் சட்டத்தை 0.1% கூட கடைபிடிக்க முடியாது என்று கர்த்தர் கூறுகிறார். ஏறத்தாழ 5% சட்டத்தைக் கடைப்பிடிப்பதாகவும்; படிப்படியாக 10% அதனை உயர்த்த திட்டமிட்டுக்கொண்டிருப்பதாகவும் எண்ணுபவர்கள் தம் சொந்த திறமைகளை அறியாதவர்களாக இருப்பதோடு, அவர்கள் கர்த்தரின் நீதிக்கு எதிராக நிற்கிறார்கள். கர்த்தரின் நீதியை உங்கள் யோசனைகளாலும் கொள்கைகளாலும் புரிந்துகொள்ள முயலாதீர்கள். அவர் நீதி நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்ததுடன் நாம் அவரின் பிள்ளைகளாகும் படி அதனை விசுவாசிக்கும் படி காத்திருக்கிறது.
கர்த்தர் மகத்துவமும் கிருபையும் நிறைந்தவரானதாலே, அவர் நம்மை தமது நீதியால் இரட்சித்தார், நம்மை நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக இரட்சித்த இயேசுவின் ஞானஸ்நானத்திற்காகவும் அவரின் நீதிக்காகவும் நாம் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம்.