• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 5-2 ] ஒரு மனிதனினால் ஆனது (ரோமர் 5:14)

2021.04.21 31
(ரோமர் 5:14)
“அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது: அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமாவான்.”
 
 
பாவிகளுக்கு தம் பாவங்களைக் குறித்த அறிவு முதலில் இருக்கவேண்டும்
 
இன்று பாவத்தின் தொடக்கத்தைக் குறித்து பேச விரும்புகிறேன். “நீங்கள் ஒரே செய்தியை தினமும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். மற்றவற்றைக் குறித்து எனக்கு கூறுங்கள்” என்று எண்ணாதீர்கள், நீங்கள் கவனமாக கேளுங்கள். நற்செய்தியானது மிகவும் விலையேறப்பட்டது. தன் பாவங்கள் துடைக்கப்பட்ட பரிசுத்தவான் தினமும் நினைவுகூறும் விதமாக அவன்/அவள் நற்செய்தியைக் கேட்காவிட்டால், அவன்/அவள் மரிப்பான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்காமல் அவனால்/அவளால் எப்படி வாழ முடியும்? அவன்/அவள் வாழ்வதற்கான ஒரே வழி நற்செய்தியைக் கேட்பதே. நாம் வேதாகமத்தைத் திறந்து அதிலிருக்கும் உண்மைப் பொருளை பகிர்ந்துக்கொள்வோமாக.
“இன்னமும் பாவங்கள் மன்னிக்கப்படாதவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது என்ன?” என்று யோசித்தேன். கர்த்தரின் வார்த்தையின்படி பாவத்தைக் குறித்த சரியான அறிவு அவர்களுக்குத் தேவை, ஏனெனில் அவர்களுக்குப் பாவத்தைக் குறித்து தெரிந்தால் மட்டுமே பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிந்துகொண்டேன். பாவிகளுக்கு பாவத்தைக் குறித்த அறிவு அதிகமாகத் தேவைப்படுகிறது என்று நம்புகிறேன்.
ஒரு மனிதன் அவன்/அவள் பிறந்த நேரம் முதல் அவன்/அவள் விரும்பியோ விரும்பாமலோ அநேகமுறை பாவம் செய்கிறார்கள். அவன்/அவள் கர்த்தருக்கு முன்பு பாவியாக இருந்தாலும் அவன்/அவள் வளரும்போது அநேக முறை பாவம் செய்வதால் அவனின்/அவளின் உள்ளே சஞ்சரிக்கும் பாவத்தைக் குறித்து அவன்/அவள் ஆழமாக சிந்திப்பதில்லை. ஆப்பிள் செடி வளர்ந்து, பூத்து சரியான நேரத்தில் காய்ப்பதைப் போன்று பாவஞ்செய்வது இயற்கையானது. ஆயினும் கர்த்தரின் சட்டப்படி பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை நாமறியவேண்டும்.
ஒருவனுக்கு பாவத்தைக் குறித்தும் அதன் விளைவைக் குறித்தும் உண்மையாக தெரிந்திருந்தால் அவன்/அவள் பாவத்தினின்றும், கர்த்தரின் தீர்ப்பினின்றும் விடுதலையாகி, அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் பெறுவான். ஆகவே, பாவி ஒருவனுக்கு அதிகமாக தேவைப்படுவது பாவத்தைக் குறித்த அறிவும் அதன் விளைவுமாகும், மேலும் கர்த்தர் அளித்த பாவமன்னிப்பின் சத்தியத்தையும் அறிந்துக்கொள்ளவேண்டும்.
 
 
உலகினுள் பாவம் எப்படி வந்தது?
 
மனிதன் ஏன் பாவம் செய்கிறான்? நான் ஏன் பாவம் செய்கிறேன்? வேதாகமம் இதைக் குறித்து ரோமர் 5:12 இல் கூறுகிறது, “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” பாவத்தின் மூலமாக உலகில் நுழைந்தது எது? மரணம். மரணமானது மாமிசத்திற்குரியது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆயினும் இங்கு மரணம் என்பது நாம் கர்த்தரை விட்டுப்பிரிவதைக் குறிக்கின்றது. மாமிசத்தின் மரணத்துடன் அது நரகத்தையும் கர்த்தரின் தீர்ப்பையும் கூட குறிக்கிறது. ரோமர் 5:12 மனிதர்கள் எப்படி பாவிகளானார்கள் என்று காட்டுகிறது.
வேதாகமம் கூறுகிறது, “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” கர்த்தரின் வார்த்தை உண்மையானது. ஒரு மனிதனின் மூலம் பாவம் உலகினுள் நுழைந்தது, மரணம் பாவத்தின் மூலம் வந்தது.
நாம் ஆதாமின் சந்ததியினராக பிறந்தோம். நாம் ஆதாமின் சந்ததியினரானபடியால் நம்மிடம் பாவமிருக்கிறதா இல்லையா? -ஆம்.- நம்மிடம் பாவமிருக்கிறது. நாம் பாவத்துடன் பிறந்தோமா? -ஆம், ஏனெனில் நாம் ஆதாமின் சந்ததியினர், ஆதாமே நம் மூதாதையர்.-
ஆபிரகாம் மனிதகுலத்தை தோற்றுவித்தான், ஆயினும், ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருக்கும்போது சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு கர்த்தருக்கு எதிராக பாவஞ்செய்தனர். கர்த்தர் அவர்களிடம் நன்மைத் தீமை அறியத்தக்க மரத்திலிருந்து பழத்தைச் சாப்பிட வேண்டாமென்றும் ஜீவ மரத்தின் பழங்களைச் சாப்பிட்டு நித்திய ஜீவனைப் பெறும்படியும் கூறினார்.
ஆனால் அவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு கர்த்தரின் வார்த்தையை விட்டு நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனிகளைச் சாப்பிட்டனர். ஆதாமும் ஏவாளும் நித்திய ஜீவ வார்த்தைகளான கர்த்தரின் வார்த்தைகளை மறுத்து பாவம் செய்தனர். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு ஆதாமும் ஏவாளும் கூடியதால் அவர்கள் மூலமாக மனிதகுலம் பிறந்தது. நாம் அவர்களின் சந்ததியினர். நாம் அவர்களின் வெளியரங்கமான தோற்றத்தை மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை, அவர்களுடைய பாவ சுபாவத்தையும் கூட பெற்றுக்கொண்டோம்.
ஆகவே, மனிதர்கள் பாவத்தின் வித்து என்று வேதாகமம் கூறுகிறது. உலகின் அனைத்து மனிதர்களும் ஆதாம் ஏவாளின் பாவத்தை சுவீகரித்துக்கொண்டோம். வேதாகமம் கூறுகிறது, “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” ஆகவே எல்லா மனிதர்களும் பாவத்துடன் பிறந்தனர்.
ஆயினும், மக்களுக்குத் தாம் பிறவிப்பாவிகள் என்பது தெரியாது. அவர்கள் பாவத்துடன் பிறந்திருந்தாலும் கூட பாவத்தைக் குறித்த அறிவு அவர்களிடம் இல்லை. ஒரு மரம் அதன் விதையிலிருந்து முளைத்து கனிகளைக் கொடுக்கிறது, ஆனால் மக்கள் தாம் பாவம் செய்வது வேடிக்கையான செய்தி என்று நினைக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் பாவத்தின் வித்துகளாக பிறந்தது அவர்களுக்குத் தெரியாது. இது ஆப்பிள் மரம் “இது வேடிக்கையாக இருக்கிறது. நான் ஏன் ஆப்பிள் கனிகளைச் சுமக்கவேண்டும்?” என்று கேட்பதைப் போன்றிருக்கிறது.
ஆகவே மனிதர்கள் பாவம் செய்வது இயற்கையானது. மனிதர்கள் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியும் என்று எண்ணுவது முற்றிலும் தவறானது. ஆகவே பாவத்தைச் சுவீகரித்துக்கொண்டே மனிதர்கள் அவன்/அவள் தம் வாழ்நாள் முழுவதும் பாவக்கனிகளை சுமப்பது இயற்கையானது, ஆனால் அவன்/அவள் தானொரு பாவி என்று ஆழமாக சிந்திப்பதில்லை. கர்த்தர் என்ன கூறுகிறார்? “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”
நாம் பாவிகளாக பிறந்ததால், நம் வாழ்க்கை முழுவதும் பாவம் செய்கிறோம். ஆகவே நாம் கர்த்தரால் தீர்க்கப் படவேண்டியவர்கள். ‘நமக்கு வேறுவழியில்லாமல் பாவம் செய்துகொண்டிருக்கும்போது அதனைக் கர்த்தர் தீர்ப்பது அநீதியில்லையா?` என்று நீங்கள் நினைக்கலாம். ஆயினும், பாவ மன்னிப்பை பெற்ற பிறகு, உங்களை அவரின் பிள்ளைகளாக்கும்படி கர்த்தர் அப்படிச் செய்யத் திட்டமிட்டார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
 
 
நாம் ஆதாம் என்னும் ஒரு மனிதனின் சந்ததியினர்
 
அப்படியானால், ஆதாமின் வழித்தோன்றல்களான மனிதர்கள், பல நிறங்களில் தோலினை உடையவர்களாக இருப்பதேன்? அவர்களுடைய வித்து வேறுபட்டதா? வெள்ளை, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தில் மக்கள் இருப்பது ஏன்? கர்த்தர் மனிதனை பூமியின் புழுதியில் இருந்து தயாரித்த போது அவனை எரித்தார், நெருப்பிலிருந்து சீக்கிரமாக எடுத்து வெள்ளை நிற மனிதனையும், அதிக நேரம் நெருப்பில் வைத்து கருப்பு நிற மனிதனையும், அவர் படைத்ததாக சில மனிதர்கள் எண்ணுகிறார்கள்.
அனைத்து மனிதர்களுக்கும் பாவம் ஒரே மனிதனின் மூலமாக வந்தாலும், கறுப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மனிதர்கள் ஏன் இருக்கின்றனர் என நீங்கள் ஆச்சர்யப்படலாம். கர்த்தர் வானத்தையும் பூமியையும் தொடக்கத்தில் படைத்தபோது ஆதாமையும் படைத்தார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. “ஆதாம்” என்பதன் பொருள் மனிதன் என்பதாகும். கர்த்தர் ஒரு மனிதனைப் படைத்தார். கர்த்தர் ஒரே மனிதனை, ஆதாமை படைத்து, அவன் மூலமாகவே உலகின் அனைத்து மக்களும் பிறந்தபோதிலும் உலகில் ஏன் இத்தனை வகையான மக்கள் இருக்கின்றனர்? நாம் ஏன் என்று கேட்கலாம், ஆகவே இங்கு பதிலளிக்கிறேன்.
தோலிலுள்ள மெலனின் என்ற பொருள் சூரியனிலிருந்து தோல் கருகிப்போவதை தடுக்க தோலிருந்து வெளிவருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றிவரும்போது அதிக அளவில் சூரிய ஒளியில் மக்கள் கருமையாகவும் மிகக் குறைந்த சூரிய ஒளியில் உள்ளவர்கள் வெள்ளை நிறமாகவும், சரியான அளவு சூரிய ஒளியில் வாழும் மக்கள் மஞ்சள் நிறமாகவும் உள்ளனர். ஆயினும் நம் மூதாதையன் ஒரு மனிதனாகிய ஆதாமே.
மெலனின் தானாகவே தோலிற்கு வெளியே வந்து, அதனை சூரிய வெளிச்சத்தில் கருகிப் போவதைத் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நான் அந்நேரத்தில் இதனைப் புரிந்துகொண்டேன். எனக்கு, மனித குலம் ஆதாமின் வழித்தோன்றல்கள் என்று தெரியும், ஆனால் மெலனினைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நாம் ஒரே மனிதனாகிய ஆதாமின் சந்ததியினரால், மாமிசத்தை மட்டும் சுவீகரிக்கவில்லை, பாவத்தையும் கூட சுவீகரித்துள்ளோம்.
உங்களுக்குப் பாவத்தைத் தெரியுமா? மனிதர்கள் இவ்வுலகில் பிறந்ததுமுதல் பாவிகளா இல்லையா என்பதை ஆராய்வோம். “அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளை கொடுக்க மாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது.” (மத்தேயு 7:17-18) கள்ளத்தீர்க்கத்தரிசிகள் தீய கனிகளையே கொடுக்கிறார்கள் என்றும் அவர்களால் நல்ல கனிகளைக் கொடுக்க முடியாது என்றும் கர்த்தர் கூறுகிறார். நாம் பாவம் நிறைந்தவர்களாகப் பிறந்ததால் கெட்ட மரங்களாக இருக்கிறோம். ஆகவே, நாம் கெட்ட மரங்களாகப் பிறந்ததினாலே தீய கனிகளைக் கொடுப்பதை நம்மால் தவிர்க்க முடியாது.
நாம் பாவங்களை ஒரு மனிதனின் மூலமாக பெற்றுக்கொண்டோம். மரங்களுடன் ஒப்பிட்டால் நாமெல்லாம் கெட்ட மரங்கள், பாவியாக பிறந்த ஒரு மனிதனால் அவன்/அவள் நழ்வாழ்க்கை வாழ விரும்பி பாவம் செய்யாதிருக்க முயற்சி செய்தாலும், எப்படி கெட்ட மரத்தினால் நல்ல கனியை கொடுக்க முடியாதோ, அப்படியே அவர்களால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது. புரிந்துக் கொள்ளுகிறீர்களா? மனிதர்கள் அமைதியானவர்களாகவும், நல்லவர்களாகவும் சிறந்த முறையில் வாழ விரும்புகிறார்கள். ஆயினும் பாவியாக பிறந்த ஒரு மனிதன் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் நீதிமானாக வாழமுடியாது. முடிவில்லாத முயற்சிகளைச் செய்தாலும், அவனால்/அவளால் நல்லவர்களாக இருக்க முடியாது. சில குடிகாரர்கள் குடிக்காமல் இருப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு முயல்கிறார்கள், ஆனாலும் முடிவில் அவர்கள் குடியினால் கஷ்டப்படுகிறார்கள், அவர்கள் குடும்பத்தினர் அவர்களை மருத்துவமனையில் விட்டுவிடுகின்றனர்.
“நாம் அதனைத் தெரிந்து கொள்ளவேண்டும்” என்ற தலைப்புடைய நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒருநாள் பார்த்தேன். ஒரு மனிதன் 13 வருடங்களாக மனநோய் மருத்துவமனையில் அடைப்பட்டிருந்தான். அவனிடம் ஒரு நிருபர் அவன் குடும்பத்தாரைப் பற்றி கேட்டபோது அவன் அவரிடம் கூறினான், அவன் முற்றிலும் பிணமாகிவிட்டாலும், மருத்துவர் அவன் குடிப்பதை விட்டுவிட்டான் என்று கூறினாலும் அவனை அழைத்துக்கொண்டு போக அவன் உறவினர்கள் மீண்டும் வரவில்லை. அவன் மருத்துவமனையை விட்டு வெளிவராமல் இருக்கும்பொருட்டு அவன் குடும்பத்தினர் அம்மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தார்கள் என்று நிருபர் மூலமாக அவன் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபமுடையவனான். அவன் குடும்பத்தினர் அவனால் அதிக கஷ்டங்களுக்கு உள்ளாகியதால் அவனை விட்டுவிட்டனர். அந்த மருத்துவமனையில் இருந்த அநேக நோயாளிகளால் தாம் விரும்பாவிட்டாலும் அதிகம் குடிப்பதை தவிர்க்க முடியாமல் போனதால் அவர்களுடன் யாராலும் வாழ முடியாது போயிற்று என்று அந்த நிருபர் கூறினார்.
ஒரு மனிதனால் ஏன் குடிப்பதைத் தவிர்க்க முடியவில்லை? அது அவன் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று அவனுக்குத் தெரிவதோடு அதனை விட்டுவிடவும் முயற்சி செய்கிறான்; ஆனாலும் அவன் தொடர்ந்து குடிக்கிறான். இதற்கான காரணம் அவன் ஏற்கெனவே குடிகாரனாகிவிட்டதே, ஆனால் இதற்கான மூல காரணம் அவன் மனம் எப்பொழுதும் வெறுமையாக இருப்பதே. அவன் தன் இருதயத்தில் வெறுமையாக உணர்வதால் குடிக்கிறான். அவன்/அவள் பாவத்துடனிருப்பதால் எப்பொழுதும் வேதனையை அனுபவித்து நல்லது செய்ய இயலாதவர்களாய் உள்ளனர். ஆகவே, அவன்/அவள் நொந்துபோய் மீண்டும் குடிக்கிறார்கள். ‘நான் ஏன் இதனைச் செய்கிறேன் என்று தெரியவில்லை. நான் இதனைச் செய்யக் கூடாது.` என்று அவன்/அவள் நினைக்கலாம். அதிகமாக அவன்/அவள் தனக்குத் தானே துரோகம் இழைக்கப்பட்டதாக எண்ணும்போது, சுய பரிதாபத்தினால் அவன்/அவள் அதிகம் குடிக்கிறார்கள்.
குடிப்பதை நிறுத்த ஒருவன் எத்தனையாய் முயன்றாலும் அவனால் குடிக்காமல் இருக்க முடியாது. ஆகவே, ஒருவன் அதிக குழப்பத்திற்குள்ளாகி அதிகம் குடிப்பதால், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் விடப்படுகின்றான். ஒரு மனிதனின் பேச்சும் ஒழுக்கமும் அவனின்/அவளின் உள்மனச் சுபாவத்தின் வெளிப்பாடாகும். ஒரு ஆப்பிள் மரம் ஆப்பிள் ஜீனைத் தன்னுள் கொண்டிருப்பதால் ஆப்பிள் மரம் மொட்டு விட்டு, பூத்து, ஆப்பிள் கனிகளைக் கொடுப்பது போல ஒரு மனிதன் பாவியாக பிறந்ததால் அவன்/அவள் சித்தப்படியல்லாமல் அவனின்/அவளின் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாதவர்களாய் உள்ளனர். மக்கள் நல்லவர்களாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் பாவமன்னிப்பு பெறாதவர்களால் நல்லவர்களாக இருக்க முடியாது, ஏனெனில் நல்லவர்களாக இருக்கும் திறமை அவர்களிடமில்லை. தம் பாவங்கள் கொடியவை அல்ல என்று அவர்கள் எண்ணுகின்றனர், ஆகவே அவர்கள் தமக்குள் ஒளிந்துகொள்ளுகின்றனர், அவர்களுடைய பாவம் வெளிப்படும்போது மட்டுமே அது பிரச்சினையாகிவிடுகிறது.
அவன்/அவள் பாவக்குவியலாக பிறந்திருப்பதாலும், அதனை இயற்கையாகவே பெற்றிருப்பதாலும் பாவியொருவன் பாவம் செய்வது இயற்கையானதோடு, சரியானதுமாகும். ஜூஜூபி மரம் ஜூஜூபியைக் கொடுப்பதைப் போலவும் சிகப்பு மிளகுச் செடி சிகப்பு மிளகைக் கொடுப்பது போலவும், மனிதர்கள் பாவம் செய்வது முற்றிலும் இயற்கையே, ஏனெனில் அவர்கள் பாவத்தின் மரபினால் பிறந்தவர்கள். அவன்/அவள் பாவியாக பிறந்ததால், ஒரு மனிதனால் பாவம் செய்வ¨த் தவிர்க்க முடியாது. அவன்/அவள் பாவத்துடன் பிறந்திருக்கும்போது பாவம் செய்யாமல் ஒரு மனிதனால் எப்படி வாழமுடியும்?
 
 
மனிதர்கள் பன்னிரண்டு வகையான தீயச் சிந்தனைகளுடன் பிறந்தவர்கள்
 
மனிதர்கள் 12 வகையான தீமைகளுடன் பிறந்தவர்கள் என்று இயேசு மாற்கு ஏழாம் அதிகாரத்தில் கூறினார் அவையாவன, விபசாரம், வேசித்தனம், கொலைபாதகம், களவு, பொருளாசை, துஷ்டத்தனம், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு ஆகியவையாகும். களவு செய்யும் ஆசையுடன் நாம் பிறந்தோம். களவு செய்யவேண்டுமென்ற சிந்தனை மூதாதையர்களின் பாவங்களிலிருந்து வந்தது. நீங்கள் களவு செய்கிறீர்களா? எல்லோரும் களவு செய்கிறார்கள். அவன்/அவள் களவு செய்யவில்லையென்றால், அதற்கான காரணம் அவனை/அவளை மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதே. ஆயினும் அவனை/அவளை சுற்றி யாருமில்லை என்றால், கவர்ச்சிகரமான பொருள் ஒன்று அங்கிருந்தால், களவு வெளிப்பட்டு அவனை/அவளை அதனைத் திருடச் செய்து பாவம் செய்யச்செய்கிறது.
ஆகவே, மனிதர்கள் நல்லொழுக்கத்தையும் விதிகளையும் கடைப்பிடிக்கும்படி ஏற்படுத்தினார்கள். மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியானதல்ல என்று குறிப்பிடும் தம் சொந்த விதிகளை மக்கள் ஏற்படுத்தினர். அநேக மக்கள் ஓரிடத்தில் சமூகமாக வாழும்போது விதிகள் தேவைப்படுகின்றன. சமூகத்தின் கட்டுப்பாடுகளின்படி நாம் வாழவேண்டும். ஆயினும், மற்றவர்கள் பார்வையிலிருந்து தப்பி நாம் தனிமையிலிருக்கும்போது திருடுகிறோம்.
திருடாதவர்கள் யாருமில்லை. எல்லோரும் திருடுகிறார்கள். வெகுகாலத்திற்கு முன்பு, ஒரு எழுப்புதல் கூட்டத்தில் தம் வாழ்வில் பாவம் செய்யாதவர்கள் தம் கையை உயர்த்தும்படி சபையாரிடம் கேட்டேன். ஒரு பாட்டி தன் கையை உயர்த்தி “நான் எதையுமே திருடியதில்லை” என்று கூறினார். ஆகவே, அவர் வீட்டிற்குத் திரும்பும்போது வழியில் எதனையும் எடுத்துச் செல்லவில்லையா என்று கேட்டேன். எதிர்பாராத கேள்வியினால் முழித்த அவர் பதில் கூறினார், “ஒரு முறை நான் விட்டிற்குச் செல்லும்போது ஒரு பூசனிக்காயைக் கண்டேன், அது மிகவும் ருசியாக இருக்குமென்று எண்ணி, யாருமிருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தேன். அங்கு யாருமிருக்கவில்லை, அதனைப் பறித்து என் ஆடையில் மறைத்து, பீன்சுடன் சேர்த்து அவித்து சாப்பிட்டேன்.” அவருக்குத் தான் திருடிய பாவத்தைச் செய்ததைக் குறித்து எதுவும் தெரியாது.
ஆயினும், மற்றவர்களின் உடமைகளை அனுமதியில்லாமல் எடுத்துக்கொள்வது பாவம் என்று கர்த்தர் கூறுகிறார். கர்த்தர் “களவு செய்யாதிருப்பாயாக” என்று மோசேயிற்கு அளித்த சட்டத்தில் கட்டளையிட்டார். எதனையாவது திருடிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கிறது. அவனுக்கு/அவளுக்கு வாய்ப்பு கிட்டும்போது கொலை செய்வதற்கும், திருடுவதற்கும் மனிதர்கள் சிறந்தவர்கள். முயல்கள், கோழிகள் போன்ற மற்ற மக்களின் வீடுகளில் இருக்கும் பிராணிகளை அவன்/அவள் திருடுகிறார்கள், இதுவே களவு எனப்படுகிறது. அவன்/அவள் கொலை செய்து, திருடினாலும் அவனுக்கு/அவளுக்கு பாவத்தைக் குறித்த மனச்சாட்சி இருப்பதில்லை. அவன்/அவள் அப்படிச் செய்வது இயற்கையானது, ஏனெனில் அவன்/அவள் பாவத்தைப் பிறக்கும்போது சுவீகரித்துள்ளார்கள்.
 
 
மனிதர்கள் பாவத்தைச் சுவீகரித்தவர்கள்
 
ஒரு மனிதன் அவன்/அவள் பெற்றோரிடமிருந்து விபசாரத்தையும் சுவீகரித்துள்ளான். அவன்/அவள் விபசாரம் செய்யும் இச்சையுடன் பிறந்திருக்கிறான். அவனை/அவளை சுற்றிலும் மக்கள் இல்லாதபோது விபசாரம் செய்வது அதிக நிச்சயம். மக்கள் இருளான ஹோட்டல்களையும் அறைகளையும் விரும்புகிறார்கள். அவ்விடங்கள் பாவிகளிடம் அதிக பிரசித்தி பெற்றுள்ளது. ஏன்? அவ்விடங்கள் பரம்பரைப் பாவத்தைக் காட்டுவதற்கு சிறந்த இடம்.
நல்ல மனிதர்கள் கூட அது போன்ற இடங்களை விரும்புகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் நல்ல தகப்பனாகவும், சமூகத்தில் உயர்ந்த இடத்திலும் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பாவம் நிறைந்துள்ள இருட்டான இடங்களுக்குச் செல்கிறார்கள். அவர்கள் தம் பாவ சுபாவங்களைக் காட்ட அவ்விடங்களுக்குச் சென்று பாவக் கனிகளைச் சுமக்கிறார்கள். அவர்கள் அவ்விடங்களில் சந்தித்து ஒரு கிளாஸ் மது அருந்திய பிறகு பழைய நண்பர்களைப் போலாகிவிடுகிறார்கள். ஒருவரை ஒருவர் சந்தித்தவுடனேயே நெருக்கமாகிவிடுகிறார்கள், ஏனெனில் இரண்டு பேரிடமும் அதே பாவ சுபாவம் இருக்கிறது. “என்னிடம் இது இருக்கிறது, அது உன்னிடமும் இருக்கிறதா?” “நானும் அப்படிப்பட்டவனே. நீ எனது நண்பன்.” “உன் வயது என்ன?” “வயது பெரிய விஷயமில்லை.” “உன்னைச் சந்தித்ததில் மகிழ்கிறேன்.”
மனிதன் தன் பிறவிப்பாவத்தை மற்றவர்களைச் சந்திக்கும்போது காட்டிக்கொள்கிறான், ஏனெனில் அவர்கள் இவ்வுலகில் பாவ சுபாவத்துடன் பிறந்தவர்கள். பாவம் செய்வது அவர்களுக்கு இயற்கையானது. ஏன்? ஏனெனில் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கிறது, அப்படியிருக்கும்படியாக அவர்கள் இயற்கையால் படைக்கப்பட்டார்கள். பாவம் செய்யாதிருப்பது அவர்களுக்கு வேறுபாடானது. ஆயினும், சமூகத்தில் வாழும்போது பாவ வாழ்க்கையிலிருந்து விலகி வாழுகிறார்கள், ஏனெனில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வரைமுறைகள் உண்டு. ஆகவே, அவர்கள் கபட்டுத்தனமாக நடந்து, வேஷமிட்டு, அவர்கள் சமுதாயம் ஏற்படுத்திய வரைமுறைகளுக்கேற்ப நடிக்கிறார்கள். மக்கள் இப்படி வாழ்ந்துகொண்டு, அவர்களைப் போல் வாழாதவர்களை முட்டாள்கள் என்றும், தீயவர்கள் என்றும் கருதுகிறார்கள். “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போல” (ரோமர் 5:12) என்று வேதாகமம் கூறுவது போல ஒரு மனிதன் பிறவிப்பாவியாவான்.
அது சரியானது. ஒரு மனிதன் கூறலாம், “நான் காமவிகாரமுடையவனில்லை. அறைகுறை ஆடையணியும் பெண்ணிடமும் நான் வேறுபட்டவனில்லை.” அவன் உண்மையாகவே வேறுபட்டவன் இல்லையா? அவனைச் சுற்றிலும் அநேகர் இருக்கும்போது வேறுபட்டவன் இல்லாததைப் போல் காட்டிக்கொள்ளலாம், ஆனால் அவனைச் சுற்றி யாருமில்லாதபோது காமவிகாரம் என்னும் பாவத்தைச் செய்வதை அவனால் தடுக்க முடியாது.
ஒரு கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கிறது, அது போல நல்லமரத்தால் கெட்ட கனிகளைச் சுமக்க முடியாது, இச்சொற்றொடரை மாற்றிப் படித்தாலும் அது சரியாக இருக்கும். அவன்/அவள் பாவியென்று மனிதனுக்குத் தெரியவேண்டும். ஒருவனுக்குத் தன் பாவங்களைக் குறித்து தெரிந்தால், அவன் இயேசுவின் மூலம் இரட்சிக்கப்பட முடியும். ஆயினும், அவன்/அவள் தன் பாவங்களை அறியாமல் அவனின்/அவளின் பாவங்களை மறைக்கவோ, பாவம் செய்யாதது போல் காட்டிக் கொண்டாலோ அவன்/அவள் கர்த்தரால் தீர்க்கப்பட்டு நரகம் செல்லவர். மனிதர்கள் பாவிகளாக பிறந்தனர். ஆகவே, அவர்கள் கெட்டமரமாகி, தம் பிறந்த நேரம் முதல் பாவக்கனிகளையே கொடுக்கிறார்கள்.
ஆகவே, தம் சிறுபிள்ளை வயதிலிருந்தே தம் சொந்த பாவம் செய்யும் சுபாவத்தை வளர்த்துக் கொள்ளுபவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் பாவஞ்செய்வதில் சிறந்து விளங்குவர். தம்முடைய பாவ சுபாவத்தை நேரம் சென்று வளர்ப்பவர்கள் தம் முதிர்வயதான காலத்தில் கூட தீய கனிகளையே கொடுக்கிறார்கள். கொரியாவிலுள்ள டேகு நகரத்தில் பெண் அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் இளமையாக இருக்கும்போது, பெண் அமைச்சராக தேவனுக்கு பணியாற்றும் விதமாக, திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருக்கப்போவதாக உறுதியெடுத்தார். ஆனால் 60 வயதாகும்போது தன் உறுதிமொழியை உடைத்து மனைவியை இழந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர் தன் பாவ சுபாவத்தை அதிக நேரத்திற்கு பிறகு வளர்த்தார். அவர் பிறவிப்பாவமாகிய விபசாரத்தை நேரம் கழித்து வளர்த்தார்.
அநேக மக்கள் தம் பாவ சுபாவத்தை சிறு பிள்ளைகளாய் இருக்கும்போதிலிருந்தே வளர்க்கிறார்கள். இந்நாடகளில், இளம் வயதினர் தாம் சிறு பிள்ளைகளாய் இருக்கும்போதிலிருந்தே பாவ சுபாவத்தை வளர்க்க விழைகின்றனர். அவர்கள் தமக்கும், தமக்கு முந்தியவர்களுக்கும் இடைவெளி இருப்பதாக உணருகிறார்கள். அவர்கள் X-தலைமுறையினர் என்றழைக்கப்படுகிறார்கள். இடையில், கர்த்தரின் வார்த்தையிலிருந்து நாம் பிறவிப்பாவிகள் என்றும் நம் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாதவர்களென்றும் அறிந்துக்கொண்டோம். இதனை ஒப்புக்கொள்கிறீர்களா?
 
 
குஷ்டரோகிகளின் சட்டம்
 
இரண்டாவது கர்த்தர் கூறினார், “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” பாவம் மனிதனை கர்த்தரால் தீர்க்கப்படும்படிச் செய்கிறது. ஆகவே, பாவி தன் பாவங்களை அறிந்து அவன்/அவள் பாவமன்னிப்பைப் பெற வேண்டும். அவனுக்கு/அவளுக்கு, அவனை/அவளை குறித்து எப்படி தெரியும்? அவனின்/அவளின் கர்த்தருக்கு முன்பாக எப்படி மன்னிக்கப்படும்?
லேவியராகமம் 13 ஆம் அதிகாரத்தில் கர்த்தர் மோசேயிற்கும், ஆரோனுக்கும் குஷ்டரோகிகளை எப்படி சோதிப்பது என்று போதித்தார். பழைய ஏற்பாட்டு காலத்தில் அநேக குஷ்டரோகிகள் இருந்தனர். எனக்கு குஷ்டரோகத்தை குறித்து அதிகம் தெரியாது, ஆனால் என் இளவயதில் அநேக குஷ்டரோகிகளைப் பார்த்திருக்கிறேன். என் நண்பர்களில் ஒருவனும் கூட குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டவன்.
கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரவேலரின் கூடாரங்களிலிருந்து குஷ்டரோகிகளைச் சோதித்து அவர்களை அகற்றும்படி கூறினார். ஒவ்வொரு குஷ்டரோகியையும் எப்படி சோதிப்பது என்று கர்த்தர் அவர்களுக்குப் போதித்தார். “ஒரு மனிதனுடைய சரீரத்தின் மேல் குஷ்டரோகம் போலிருக்கிற ஒரு தடிப்பாவது அதாவது, வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக் கடவன்.” (லேவியராகமம் 13:2) ஆசாரியன் அவனை சோதித்த பிறகு அவனுக்கு தோல் வியாதி உண்டெனக் கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாட்களுக்கு பிரித்து வைத்தான். ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தோலை ஆசாரியன் சோதித்தான். தோலில் அது படராவிட்டால் ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என்று அறிவித்தான், “நீ சுத்தமானவன். நீ இந்த கூடாரத்தில் வாழலாம்” என்றும் கூறினான்.
தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாக மாற்றினாலோ, அந்த தடிப்புள்ள இடத்தில் இரணமாம்சம் உண்டென்றும் கண்டால் அது குஷ்டரோகமாகும். அப்பொழுது ஆசாரியன் அவனை தீட்டுள்ளவன் என்று அறிவிப்பான். லேவியராகமம் 13:9-11 கூறுகிறது, “குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டு வரவேண்டும். அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து; அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்று என்றும்; அந்த தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால், அது அவன் சரீரத்திலிலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால் ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.” ஆசாரியன் அவனை இஸ்ரவேலரின் கூடாரத்திலிருந்து பிரித்து வைத்தான்.
நம் நாட்டிலும் கூட அப்படித்தான். கொரியாவில் பூக்கிராமம் அல்லது சாரக் தீவு போன்ற தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் உள்ளன. முன்பொரு காலத்தில், காரில் என் வீட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தபோது, நெடுஞ்சாலையிலிருந்த ‘பூக்கிராமம்` என்ற பெயரைப் பார்த்து என் மனைவி என்னை கிண்டல் செய்தாள். அப்பொழுது நான் நினைத்தேன். “உனக்கு ‘பூக்கிராமம்` என்றால் என்னவென்று தெரியாது” “அன்பே நீ இந்த ‘நகரத்தை` காண விரும்புகிறாயா?” அவள் “ஆம்” எனக் கூறினாள். ஆயினும் ‘பூக்கிராமம்` என்பது குஷ்டரோகிகள் தனிமையாக இருக்கும் இடம் என்று அறிந்து மிகவும் ஆச்சர்யப்பட்டு அத்தகைய இடத்திற்கு போக வேண்டுமென்று இன்னும் ஒருமுறை கேட்கவேயில்லை. குஷ்டரோகிகள் சமுதாயத்திலிருந்து கிராமங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
குஷ்டரோகி ஒருவனின்/ஒருத்தியின் தோல் முழுவதும் குஷ்டரோகம் பரவும்போது ஆசாரியன் அந்நபரை தீட்டானவன் என்று கூறி தனிமைப் படுத்தியதை நாம் கவனித்துப் பார்க்கவெண்டும். இது எதையோ கூறுகிறது என்று எண்ணுகிறாயா? அவன் உடம்பில் குஷ்டரோகம் சிறிது பரவியபோது, ஆசாரியன் அவனைத் தனிமை படுத்தினான், அதேவேளை அது அவன் சரீரம் முழுவதும் பரவியபோது, அவனை இஸ்ரவேலரின் கூடாரத்திலிருந்து பிரித்துவிட்டான்.
குஷ்டரோகத்தை எப்படி இனம் பிரிப்பது என்று கர்த்தர் ஆசாரியரிடம் கூறினார். “ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த் ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால் மட்டும் அது தேக முழுவதையும் மூடியிருக்கக் கண்டால்” (லேவியராகமம் 13:12) இப்படியாக குஷ்டரோகத்தை அறிந்துகொள்ளும் படி கர்த்தர் ஆசாரியனிடம் கூறினார்.
 
 
குஷ்டரோகத்திற்கான சட்டம் நமக்கு எதைப் போதிக்கிறது . . .
 
அது நமக்கு இதனைக் கூறுகிறது. மக்கள் பாவசுபாவத்துடனேயே பிறந்ததுடன் தம் வாழ்வு முழுவதும் பாவம் செய்கிறார்கள், ஆனால் சில மக்கள் சில பாவங்களை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்கள் இடைவெளி விட்டு, ஒருமுறை கைகளினாலும், மறுமுறை கால்களினாலும், இன்னுமொருமுறை தம் மனதினாலும் பாவம் செய்தாலும், அப்பாவங்கள் வெளியரங்கமாகத் தெரிவதில்லை. குஷ்டரோகம் இங்கு ஒரு புள்ளியாகவும், அங்கு ஒரு புள்ளியாகவும் பரவியிருக்கும் போது அது ஆபத்தானது என்று யார் கூறுவர்? அவனின்/அவளின் குஷ்டரோகத்திற்கான அறிகுறி யாருக்கும் தெரியாது.
மனிதன் பாவத்தை சுவீகரித்துள்ளதால் அவனொரு பிறவிப் பாவி. கர்த்தர் அவனை/அவளை பாவிகள் என்று கூறினாலும், அவன்/அவள் அநேக பாவங்களைச் செய்யும் வரை தம்மைப் பாவிகளென்று, அவன்/அவள் அறிந்துகொள்வதில்லை. இறுதியாக அவன்/அவள் இவ்வுலகில் தானொரு பாவி என்று அறிந்து கொள்கிறான்.
ஆயினும் சிறிய அளவு பாவங்களைச் செய்து, தன்னை சிறந்த பக்தியுள்ளவனாக காட்டிக் கொள்ளும் அவன்/அவள், தானொரு பாவி என்பதை அவன்/அவள் உணர்ந்துகொள்வதேயில்லை. சிறிதளவு குஷ்டரோகம் பரவியுள்ள அவனை/அவளை தீட்டானவன் என்று அறிவித்து தனிமைப் படுத்துமாறு கர்த்தர் ஆசாரியனிடம் கூறினார். பாவிகள் கர்த்தரிடமிருந்து தனிமைப் படுத்தப் பட்டனர். இதனைப் புரிந்து கொண்டீர்களா? கர்த்தர் பரிசுத்தமானவர். தன்னுடைய பாவம் மிகச்சிறியது என்றென்னும் ஒருவனால்/ஒருத்தியால் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்கமுடியாது.
பரலோக ராஜ்யத்தில் யாரால் வசிக்க முடியும்? பாவம் தம் சரீரம் முழுவதும் பரவி, தம்மால் பாவம் செய்யாமலிருக்க முடியாது என்று கண்டுகொண்ட பாவியால் மட்டுமே பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்கமுடியும். இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டு, பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசித்து, கர்த்தருடன் ஆளுகைச் செய்யமுடியும்.
சிறிதளவு பாவம் பரவியுள்ளவனை தீட்டானவன் என்று கர்த்தர் அழைத்ததாக வேதாகமம் கூறுகிறது. தான் பாவம் செய்யக்கூடாதென விரும்பியும், மீண்டும் மீண்டும் பாவம் செய்து, தாம் பாவிகளென்று அறிக்கைச் செய்கிறவர்களை கர்த்தர் அழைக்கிறார். இயேசு கூறினார், “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” (மத்தேயு 9:13) கர்த்தர் பாவிகளை அழைத்து அவர்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் கழுவுகிறார். கர்த்தர் அவர்களின் எல்லாப் பாவங்களையும் மன்னித்தார். கர்த்தர் அவர்களின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக மன்னித்துவிட்டார். இயேசு தம் ஞானஸ்நானம் மூலம் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் ஏற்று, அவர்களுக்காக சிலுவையில் தீர்க்கப்பட்டு, அவர்களை பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச்செல்ல நீதிமான்களாக்கும் படியாக உயிரோடெழுந்தார்.
 
 
நம்மை நாமே தெரிந்துகொள்ளவேண்டும்
 
நாம் முழுப்பாவிகளா அல்லது அறைகுறை பாவிகளா என்று தெரிந்துகொள்ளவேண்டும். சிறிதளவு குஷ்டரோகம் பரவியுள்ள ஒருவனை தீட்டானவன் என்று கர்த்தர் கூறினார். கர்த்தர் குஷ்டரோகத்திற்கான சட்டத்தை அத்தகையதாக ஏற்படுத்தினார். தான் ஒரு முழுப்பாவி என்று அவனோ/அவளோ அறிந்து கொள்ளும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதை தவிர வேறுவழியில்லை, அப்பொழுது அவன் இயேசு தன் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையினால் அவனின்/அவளின் பாவங்களைக் கழுவி விட்டதாக அவர்களிடம் வரும் போது, அவன்/அவள் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறான். தன்னிடம் அத்தனையாய் பாவங்களில்லை என்றெண்ணும் ஒருவன்/ஒருத்தி நற்செய்தியை கேலி செய்கிறார்.
இயேசு எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்ட பிறகு, வேறு பாவங்கள் அங்கிருக்கிறதா? இல்லை. பாவமன்னிப்பை நாம் ஒரேதரமாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே பாவி ஒருவன்/ஒருத்தி தன்னைத்தானே தெரிந்துகொள்ளவேண்டும். ஒருவன்/ஒருத்தி தன்னைத்தானே தெரிந்துகொள்ளும் போது அவனின்/அவளின் பாவங்களை அகற்றமுடியும். மக்கள் தம் சிறிய பாவங்களை மட்டுமே கர்த்தரிடத்திற்கு கொண்டுச் செல்ல விரும்புகின்றனர். “கர்த்தரே, நான் பாவம் செய்தேன். நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் அவன் அப்படிச் செய்யவைத்தான். இதனை எனக்கு மன்னியும், இனிமேல் பாவம் செய்யமாட்டேன்.” அவர்கள் சிறிய பாவங்களை கர்த்தரிடம் எடுத்துச் செல்கின்றனர், அப்பொழுது கர்த்தர் கூறுகிறார் “நீ தீட்டானவன்.”
கர்த்தருக்கு முன்பாக நீதிமான் ஒருவனுமில்லை. “அப்படியிருப்பதோ இல்லாததோ முற்றிலுமாக உம்மிடமே இருக்கிறது, கர்த்தரே. நானொரு பாவி, நரகம் செல்ல வேண்டியவன். உமக்குப் பிரியமானதைச் செய்யும், ஆனால் கர்த்தரே என்மீது இரக்கமாயிருந்து என்னை இரட்சியும். நீர் கர்த்தரானால் என்னை இரட்சியும். அப்பொழுது நான் உம்மை விசுவாசித்து உமது சித்தத்தின்படி வாழ்வேன்.” அவன்/அவள் முழுவதும் பாவம் நிறைந்த நபர் என்று கூறும் ஒருவரை கர்த்தர் இரட்சிக்கிறார்.
 
 
12 வகையான தீயசிந்தனைகளையுடைய பாவத்தை மனிதன் பெற்றுள்ளான்
 
மாற்கு 7:20-23 ஐ நோக்குவோமாக “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிலிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைப்பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷனமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.” மனிதனின் இருதயத்தினுள்ளிருந்து தீய சிந்தனைகள் புறப்பட்டு வரும். மனிதன் பாவத்தை இயற்கையாகவே பெற்றுக்கொண்டான். புரிந்துகொள்கிறீர்களா? ஒருவனின் வாழ்வு முழுவதும் தீய சிந்தனைகள் இருக்கின்றன. அவனுடைய/அவளுடைய பாவங்களிலிருந்து ஒரே தரமாக அவன்/அவள் விடுதலையாவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒரு மனிதன் 12 வகையான தீய சிந்தனைகளுடன் பிறந்தவன்: விபசாரம், வேசித்தனம், கொலைபாதகம், களவு, பொருளாசை, துஷ்டத்தனம், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு ஆகியவையாகும். ஆகவே, அவன்/அவள் தன் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்வதை அவனால்/அவளால் தவிர்க்க முடியாது. பாவமன்னிப்பு பெறாத ஒருவன் பாவத்துடனேயே வாழுகிறான். அவன்/அவள் அப்படி வாழ்வதை விரும்பாவிட்டாலும் வேறுவழியில்லை. சிந்தனைகள் பண்புகள் உட்பட மனிதனிலிருந்து வரும் அனைத்தும் கர்த்தருக்கு முன்பு பாவம் நிறைந்தவை.
பாவியொருவன் நல்லவனாக இருப்பது நடக்க முடியாத ஒன்று. அவன்/அவள் நல்லவர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள். பாவத்துடன் பிறந்த மனிதன் அவன்/அவள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப் படவேண்டுமென்று அறிந்து கொள்ளவேண்டும். ஆயினும், ஒரு நபருக்கு தானொரு பாவியென்று தெரியாவிட்டால், அவன்/அவள் பாவம் செய்யும்போது அதிகம் வருந்துகிறார், “ஆ, நான் ஏன் இதனைச் செய்கிறேன்” என்று கூறுகிறான். அவன்/அவள் தன்னாலேயே வஞ்சிக்கப்பட்டனர்.
மனிதர்களிடம் தீய சிந்தனைகள் இருக்கின்றன. ‘நான் ஏன் தீய சிந்தனையுடன் இருக்கின்றேன்? இல்லை, என்னிடம் இத்தகைய சிந்தனைகள் இருக்கக் கூடாது. நான் ஏன் தீட்டானவைகளை நினைக்கிறேன். எனது ஆசிரியர் நல்லவற்றைச் செய்யும்படி என்னிடம் கூறினார்.` அவன் அப்படி நினைக்கிறான், ஏனெனில் அவனுக்கு தான் ஏன் அப்படி செய்கிறோம் என்று தெரியாது. அவனுக்கு பாவம் தலைமுறை தலைமுறையாக வந்தது எனத் தெரியாததால், களவாலும், விபசாரத்தாலும் துன்புறுகிறான். விபசாரம், வேசித்தனம், கொலைபாதகம், களவு, பொருளாசை, துஷ்டத்தனம், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு ஆகியவை உடனடியாக அவனிடமிருந்து வருகிறது. ஆகவே, அவன் தன்னையே வெறுப்பதோடு ஏனென்று தெரியாமலேயே வெட்கப்படுகிறான்.
பாவக்குவியலாகிய நாம் நம் வாழ்வு முழுவதும் 12 வகையான கெட்ட கனிகளைச் சுமப்போம், ஏனெனில் நாம் பிறவிப்பாவிகள், நாம் நம் மூதாதையரான ஆதாமிடமிருந்து பாவத்தைச் சுவீகரித்துக்கொண்டோம். தாம் பாவிகள் என்று அறிந்தவர்கள் பாக்கியவான்கள்.
அவன்/அவள் தானொரு பாவியென்று புரிந்துகொள்ளும்போது அவனை/அவளை, அவன்/அவள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் இயேசுவை மனிதன் தேடுகிறான். அதுவே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவதற்கான ஒரே வழி. ஒருவனுக்கு/ஒருத்திக்கு தன்னைக் குறித்து தெரியவந்தால், அவன்/அவள் தன்னைத்தானே வெறுத்து, அவனின்/அவளின் முயற்சிகளை மறுத்து மனிதர்களைச் சார்ந்திருப்பதை விட்டு, தீர்க்கதரிசியும் இரட்சகரும் கர்த்தருமான இயேசுகிறிஸ்துவை தேடும்போது இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் அவர்கள் மன்னிக்கப்படுவர்.
பாவிகளுக்கு தம்மைக் குறித்து தெரியவேண்டும், ஏனெனில் தம்மைக் குறித்து தெரிந்தவர்கள் கர்த்தர் முன்பாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தன்னைத் தானே தெரியாத ஒருவனால் ஆசீர்வாதத்தைப் பெற முடியாது. ஆகவே, பாவிகளுக்கு தாம் யாரென்று தெரிந்திருக்க வேண்டும். புரிந்துகொண்டீர்களா? நீங்கள் பாவமன்னிப்பை பெறுவதற்கு முன்பு எப்போதாவது தீய காரியத்தைச் செய்ததுண்டா? நீங்கள் அப்படிச் செய்திருந்தால் அது ஏன் என்று தெரியுமா? நீங்கள் பாவத்தை சுவீகரித்துக் கொண்டதாலேயே தீயவற்றை செய்தீர்கள்.
 
 
ஒரே மனிதனாலே பாவமும், பாவத்தினால் மரணமும் உலகிற்குள் நுழைந்தது போல்
 
மனிதர்கள் பாவம் செய்வதால் மரணம் தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு மனிதன் தன் பாவங்கள் துடைக்கப்படும்படியாக, அவன்/அவள் இயேசுவைத் தேடி அவரைச் சந்தித்து பாவத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டும். உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெறவேண்டுமா?
“அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது: அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமாவான். ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே நம் ஈவும் அநேகர் மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன் மூலமாய், மரணம் ஆண்டு கொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமே. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப் படுவார்கள். மேலும் மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.” (ரோமர் 5:14-21)
“இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” (ரோமர் 5:12). இங்கு ஒரு மனிதன் என்றழைக்கப்படுவது யார்? அது ஆதாம். ஏவாளும் கூட ஒரு மனிதனாகிய ஆதாமிலிருந்து வந்தவளே. ஆகவே, வேதாகமம் ‘ஒரே மனுஷனாலே` என்று கூறுகிறது. தொடக்கத்தில் கர்த்தர் ஒரு மனிதனைப் படைத்தார், அவன் மூலம் பாவம் உலகினுள் நுழைந்தது. ஏதேன் தோட்டத்தில் இருவர் இருந்ததாக நம் கண்களுக்குத் தெரிகிறது, ஆனால் கர்த்தரின் கண்களில் ஒரு மனிதனே இருக்கிறான். ஆதாம் என்ற ஒரே மனிதனாலே மனிதகுலம் பரவியது.
“ஒரு மனிதனால் பாவம் உலகினுள் நுழைந்தது” என்ற சொற்கள், ஆதாம் பாவம் செய்ததால், அவனின் சந்ததியினரும் பாவிகளாகினர் என்று பொருள்படுகிறது. அனைவரும் பாவம் செய்தமையால் மனிதர்கள் மீது பாவம் வந்தது. பாவத்தினால் அனைத்து மனிதர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. பாவத்துடனிருக்கும் ஒரு நபரைக் கர்த்தரால் பொறுத்துக்கொள்ள முடியாது.
கர்த்தர் சர்வ வல்லமையுடையவராயினும் அவரால் இரண்டு காரியங்களைச் செய்யமுடியாது. அவரால் பொய் சொல்லமுடியாது மற்றும் பாவத்துடனிருக்கும் ஒருவனை பரலோக ராஜ்யத்திற்குள் அனுமதிக்கவும் முடியாது. அவர் உறுதியளித்ததைப் போன்று தன் சட்டங்களை செயல்படுத்துகிறார். பாவமுள்ள நபரை கர்த்தர் நிச்சயமாக தீர்ப்பார், ஏனெனில் கர்த்தரால் பொய் கூறவோ, அவர் ஏற்படுத்திய சட்டத்தை அலட்சியம் செய்வதோ அவரால் முடியாது. அனைத்து மனிதர்களும் ஆதாம் என்ற ஒரு மனிதனால் பாவியாகினர், ஆதாம் கர்த்தருக்கு முன்பு பாவம் செய்து விழுந்து போனான். கர்த்தரின் தீர்ப்பும் மரணமும் அனைத்து மனிதர்களின் மீதும் பரவியது ஏனெனில் அவர்கள் பாவிகளாக்கப்பட்டு, ஒரு மனிதனாகிய ஆதாமின் சந்ததியினராக பிறந்தார்கள். அவர்கள் அனைவர் மீதும் பாவம் வந்தது.
தொடக்கத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்தபோது, அங்கு மரணம் இருக்கவில்லை. அங்கு நன்மை தீமை அறியத்தக்க மரம் மட்டுமின்றி ஜீவ மரமும் இருந்தது. ஜீவ மரத்தின் கனிகளைச் சாப்பிட்டு நித்திய ஜீவனுடம் வாழும்படி கர்த்தர் ஆதாமிற்கு கட்டளையிட்டார். ஆயினும், ஆதாம் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டதால், கர்த்தர் அவனை சாப்பிட வேண்டாம் என்று கூறிய நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனிகளைச் சாப்பிட்டு அவரின் வார்த்தைகளை மீறி கர்த்தருக்கு சவால் விட்டதால், அந்தப் பாவத்தினிமித்தம் உலகின் அனைத்து மக்கள் மீதும் பாவம் வந்தது. ஆதாம் என்ற ஒரு மனிதனால் மரணம் உலகினுள் வந்தது.
 
 
கர்த்தர் மனிதனுக்கு சட்டத்தைக் கொடுத்ததேன்?
 
ஆதாம் மூலமாக பாவம் உலகினுள் வரவில்லையென்றால், மரணம் மனிதர்கள் எல்லோரின் மீதும் பரவியிருக்காது. மனிதன் ஏன் மரித்துப்போகிறான்? அவன்/அவள் பாவத்தினால் மரிக்கிறார்கள். ஒரு மனிதனின் மூலமாக பாவம் உலகினுள் வந்தது, ஆகவே மரணம் அனைவரின் மீதும் பரவியது. சட்டம் வரும்வரை, பாவமும் உலகிலிருந்தது, ஆனால் சட்டம் வரும்வரை மனிதர்களுக்கு பாவத்தைக் குறித்த அறிவு இருக்கவில்லை.
மோசேயின் மூலமாக கர்த்தரின் சட்டம் மனிதர்களின் மீது வந்தது. ஆதாமிலிருந்து நோவாவின் காலம்வரை கூட பாவமிருந்தது, ஆனால் மோசேயின் காலம் வரை கர்த்தர் சட்டத்தை ஏற்படுத்தவில்லை. ஆயினும் அப்போதிருந்த எல்லா மக்களின் இருதயங்களுலும் பாவம் இருந்ததாக வேதாகமம் கூறுகிறது.
ரோமர் 5:13 ஐ நோக்குவோமாக. “நியாயப் பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப் பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்பட மாட்டாது” சட்டம் ஒழுங்கு இல்லாதபோதும் பாவமிருந்தது. ஆகவே மனிதர்கள் கர்த்தருக்கு முன்பாக பாவம் செய்தமையால் மரித்துப் போகவேண்டியதாயிற்று. கர்த்தர் அவர்களுக்கு 613 சட்டப்பிரிவுகளுள்ள சட்டத்தைக் கொடுத்தார், அவர்கள் பாவத்தைக் குறித்து அறிந்துகொள்வதன் மூலம், அதனை அவருக்கு முன்பு வைத்த்திருக்கவேண்டும். கர்த்தரின் சட்டத்தின் மூலம் மனிதர்கள் அறிந்துகொண்டது என்ன? கர்த்தரின் பார்வையில் தாம் பாவிகளாயிருப்பதை உணர்ந்ததோடு, தம்மிடம் பாவமிருப்பதையும் அறிந்துகொண்டார்கள். கர்த்தரின் சட்டத்தைக் கடைப்பிடிக்க முடியாது என்பதை மக்கள் அறிந்துகொண்டனர்.
ஆகவே, அவர்கள் தம் பாவங்களைத் தெரிந்துகொண்டார்கள். ஆதாம் ஏவாளின் சந்ததியினருக்கு தாம் பாவிகள் என்றும் கர்த்தர் மட்டுமே அவர்களுடைய பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றும் அறிந்தனர், ஆனால் காலம் செல்லும்போது தாம் பாவிகளானோம் என்பதையும், தம் மூதாதையரான ஆதாமிடமிருந்து பாவத்தை சுவீகரித்துக் கொண்டதையும் மறந்து போயினர். அச்சமயத்தில் தாம் பாவம் செய்யும்போது மட்டுமே பாவிகள் என்று அறிந்தனர், ஆனால் அவர்கள் பாவம் செய்யாத போதும் தாம் பாவிகள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் எண்ணம் பிழையாகிப்போனது. இந்நாட்களில், அநேக மக்கள் தாம் பாவம் செய்யும்போது தாம் பாவிகள் என்றும், பாவம் செய்யாதபோது பாவிகள் இல்லையென்றும் எண்ணுகிறார்கள். அவர்கள் பாவம் செய்கிறார்களா இல்லையா என்பதால் அனைவரும் பாவிகள் என்றல்ல, ஏனெனில் பாவத்தை தம் பிறப்பிலிருந்தே சுவீகரித்துள்ளனர், எனவே அனைவரும் பாவிகள்.
மனிதர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்னால் திக்கற்ற பாவிகள். ஆகவே, பாவத்தைக் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும்படி கர்த்தர் அவர்களுக்குத் தம் சட்டத்தைக் கொடுத்தார். சட்டத்தின் மூலமாக கர்த்தரை அறிந்து அதனை எற்றுக்கொள்ளும் அவனுக்கு/அவளுக்கு தானொரு கொடிய பாவி என்று தெரியும். ஒரு மனிதனுக்கு கர்த்தரின் சட்டத்தைக் குறித்து முழுவதும் தெரியும்போது அவனொரு முழு பாவியாகிவிடுகிறான்.
 
 
ஒரு மனிதனின் மூலம் மரணம் அனைத்து மக்களின் மீதும் பரவியது
 
ரோமர் 5:13-14 கூறுகிறது, “நியாயப் பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப் பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்பட மாட்டாது. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது: அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமாவான்.”
அனைத்து மக்களும் ஒரு மனிதனால் பாவிகளாகி, அந்த ஒரு மனிதனின் மூலமாக மரணமும் அவர்கள் மீது வந்ததாக கர்த்தர் கூறுகிறார். பாவத்தின் மூலமாக மரணம் அவர்களிடம் பரவியது. இதற்கெல்லாம் காரணம் ஒரு மனிதனே. யார் இந்த மனிதன்? ஆதாம். பொதுவாக நமக்கு இது தெரியும். ஆனால் அநேக மக்களுக்கு இது தெரியாது, அநேக கிறிஸ்தவர்களுக்கு கூட இது தெரியாது. அவர்கள் தம் மூலப்பாவத்தையும் சொந்தப் பாவத்தையும் குறித்து, சொந்தப் பாவத்திற்கு மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் மன்னிப்பு பெறமுடியுமென எண்ணுகிறார்கள். அவர்கள் தீர்க்கப்பட்டு நரகத்திற்கு செல்வதற்கான காரணம் ஆதாமே என்று அவர்களுக்குத் தெரியாது.
ஆதாமின் சந்ததியினர் தாம் எத்தனை நல்லவர்களாக இருக்க முயன்றாலும், அவர்களிடம் பாவங்களிருப்பதாலே, அவர்களுக்கும் கர்த்தருக்கும் எந்த தொடர்புமில்லை. அவர்கள் நல்வாழ்க்கை வாழ எத்தனையாய் கஷ்டப்பட்டாலும், அவர்கள் ஆதாமின் சந்ததியினரானபடியால் கர்த்தர் அவர்களை தீர்க்கிறார். அவர்களின் மூதாதையர் ஆதாம் என்பதால் அவர்கள் நரகத்தின் எரியும் நெருப்பில் வீசப்படுவார்கள்.
 
 
ஆதாம் வரப்போகிறவரின் ஒரு மாதிரியாக இருந்தான்
 
ஆதாம் வரப்போகிறவரின் ஒரு மாதிரியாக இருக்கிறான் என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு மனிதனால் எல்லா மக்களும் பாவிகளானதுடன் மரணமும் அவர்களிடத்தில் வந்தது. ஆயினும், எப்படி மக்கள் ஆதாம் என்ற ஒரு மனிதனால் பாவிகளானார்களோ அதுபோலவே மனித குலத்தின் அனைவரும் இயேசுகிறிஸ்துவாகிய ஒரு மனிதனால் நீதிமான்களாக்கப்பட்டனர். இதுவே கர்த்தரின் சட்டமாகும்.
கர்த்தரின் சட்டத்தைக் குறித்து தெரியாததால் மக்கள் மதங்களை எற்படுத்தினர். இயேசுவை விசுவாசித்துக்கொண்டே நற்செயல்களில் ஈடுபட்டால்தான் அவர்கள் இரட்சிக்கப்படமுடியும் என்று கூறுகின்றனர். அது எத்தனை அகலமாய் உலகினுள் பரவுகிறது? எத்தனை பொய்களைக் கூறுகின்றனர்? “நீங்கள் கிறிஸ்துவைப் போல் நல்லவர்களாக இருக்கவேண்டும்” என்று அவர்கள் மக்களுக்கு போதிக்கிறார்கள். செயல்களினால் நம் பாவங்கள் துடைக்கப்படுவதில்லை.
“அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன் அடையாளமானவன்” நம்முடைய பாவ இரட்சிப்பிற்கு நம்மிடம் வரவேண்டிய மனிதன் யார்? அது இயேசுகிறிஸ்துவேயாகும். இயேசு உலகிற்கு சட்டப்படி அனுப்பப்பட்டு அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை ஒரே தரமாக ஏற்றுக்கொண்டு நம்மை நீதிமானாக்கி தீர்ப்பிலிருந்து நம்மை இரட்சிக்க சிலுவையில் அறையப்பட்டார்.
படைக்கப்பட்டவனாகிய ஆதாம் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டதால் பாவம் உலகினுள் நுழைந்தது. ஆதாம் மூலமாக பாவம் உலகினுள் நுழைந்தது. ஆயினும் இரட்சகரும், படைத்தவரும், ராஜாதிராஜாவானவரும், மகத்துவமானவருமாகிய இயேசுகிறிஸ்து, மனிதர்களை அவர்களின் பாவங்களிலிருந்து ஒரே தரமாக இரட்சிக்கும்படி மனித சாயலில் அனுமதிக்கப்பட்டார். உலகின் பாவங்களை ஒரே தரமாக துடைத்துப் போட்டார். தன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் ஒரே தரமாக தன் மீது ஏற்றுக்கொண்டு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் அவற்றிற்கான கிரயத்தை செலுத்திவிட்டார்.
அவனுடைய/அவளுடையப் பாவங்கள் எத்தகையதாக இருந்தாலும், இயேசு எல்லாப் பாவங்களையும் துடைப்பதற்காக அனுப்பப்பட்டார் என்று அவன்/அவள் விசுவாசித்தால், ஒரு நபரால் புதிய வாழ்க்கையையும் பாவவிடுதலையையும் பெறமுடியும். நம்மை அவரின் பிள்ளகளாக்கும்படி கர்த்தர் வானத்தையும் பூமியை உருவாக்கத் திட்டமிட்டார். அவர் இவ்வுலகிற்கு வந்து தம் உறுதிமொழியை நிறைவேற்றினார். ஆகவே நம்மிடம் நிச்சயமாக பாவமில்லை. கர்த்தர் எப்போதும் தவறு செய்யவில்லை. இயேசு பின்வந்தவரின் ஒரு அடையாளமாக இருந்தார். மக்கள் ஏன் தம் செயல்களைச் சார்ந்திருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நம் இரட்சிப்பு இயேசுவின் மீது முற்றுலும் சார்ந்திருக்கிறது. மனிதர்கள் ஒரு மனிதனாகிய ஆதாமால் பாவிகளாக்கப்பட்டு இயேசு என்ற இன்னொரு மனிதனால் விடுவிக்கப்பட்டனர்.
நாம் செய்யவேண்டிய ஒன்று என்னவெனில் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை விசுவாசிப்பது மட்டுமே. நாம் செய்யவேண்டியது அது மட்டுமே. இயேசு நம் அனைத்துப் பாவங்களையும் துடைத்துவிட்டார் என்பதைக் குறித்து களி கூறுவதைத் தவிர நாம் செய்வதற்கு வேறேதுவுமில்லை. மற்ற மக்கள் ஆர்வமாக நற்செயல்களைச் செய்யவேண்டுமென ஏன் வலியுறுத்துகிறீர்கள்? தம்முடைய செயல்களின் மூலம் மக்களால் தம் பாவங்களிலிருந்து விடுதலை பெற முடியுமா? இல்லை. இரட்சிப்பு பாவமன்னிப்பின் மீதுள்ள விசுவாசத்தை சார்ந்திருக்கிறது.
 
 
கிருபை வரம் மீறுதலைப் போன்றதன்று
 
ரோமர் 5:14-16 கூறுகிறது. “அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது: அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமாவான் ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே நம் ஈவும் அநேகர் மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.”
 
இந்த வசனங்களின் பொருள் என்ன? வேதாகமம் “ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல” என்று கூறுகிறது. கிருபை வரம் என்பது கர்த்தரின் இரட்சிப்பை குறிக்கிறது. ஆதாமின் மூலம் பெற்றுக்கொண்ட பாவத்தினால் அனைத்து மக்களும் நரகம் செல்லவேண்டியவர்கள், ஆனால் அவர்களின் பாவங்களைத் துடைத்துவிட்ட இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் அவர்களின் பாவங்கள் கழுவப்படமுடியுமென பொருள்படுகிறது. நம்முடைய எதிர்காலப் பாவங்களையும் கூட இயேசு துடைத்துவிட்டார் என்றும் இது பொருள்படுகிறது.
ஆதாமின் சந்ததியினனாக பிறந்த மனிதன் அவன்/அவள் பாவம் செய்யாவிட்டாலும் பாவியே. ஆகவே, அவன்/அவள் பாவம் செய்யாவிட்டாலும் தாம் நரகம் செல்வதைத் தவிர்க்க முடியாது. இயேசு இவ்வுலகிற்கு வந்து நம் இரட்சகரானார். உலகின் முடிவரை மனிதர்கள் செய்யப்போகும் பாவங்களின் அளவை விட அதிக அளவு பாவ மன்னிப்பை அவர் நமக்கு ஈவாக அளித்தார்.
ஆகவே, ஒரு மனிதனின் பாவத்தை விடவும் இன்னொரு மனிதரின் ஈவு பெரியது. கர்த்தருக்கு எதிராக ஒருவர் பாவம் செய்கையில், அப்பாவம் மட்டுமே அவன்/அவள் கர்த்தரால் தீர்க்கப்பட்டு நரகம் செல்வதற்கு போதுமானதாக இருக்கிறது. ஆயினும், நம் எல்லாப் பாவங்களையும் மீறுதல்களையும் ஏற்கெனவே துடைத்துவிட்ட தேவனின் ஈவானது ஒரு மனிதனின் மீறுதலைவிடவும் பெரியது.
அதன் பொருள் என்னவெனில் இயேசுவின் அன்பும் ஈவாகிய பாவமன்னிப்பும் அனைத்து மனிதர்களின் மீறுதல்களைவிடவும் பெரிதானது. தேவன் உலகின் அனைத்துப் பாவங்களையும் போதுமான அளவு துடைத்துவிட்டார். நம்மை இரட்சித்த இயேசுவின் அன்பும், ஈவாகிய இரட்சிப்பும், ஒரு மனிதனின் மீறுதலைவிடவும் பெரிதாகவும் அளவுக்கதிமாகவும் இருக்கிறது. நாம் நம்முடைய மாமிசத்தினால் கர்த்தருக்கெதிராக இருந்து அவருடன் போராடும் பாவத்தைச் செய்தாலும், அதனையும் தேவன் ஏற்கெனவே துடைத்துவிட்டார். உலகின் பாவங்களையெல்லாம் ஒரேதரமாக துடைத்துவிட்டதை நாம் விசுவாசிக்கவேண்டுமென தேவன் விரும்புகிறார். ஆகவேதான், தேவ ஆட்டுக்குட்டியாக உலகின் பாவங்களைச் சுமந்து, பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
கர்த்தரை விசுவாசிக்கும்போது நம் பாவங்கள் துடைக்கப்படுகின்றனர், கர்த்தரை விசுவாசிக்காதபோது நம் பாவங்கள் துடைக்கப்படமாட்டாது என்று கூறும் தத்துவம் உண்மயானதல்ல. அவிசுவாசிகளின் பாவத்தைக் கூட கர்த்தர் துடைத்துவிட்டார், ஏனெனில் அவர் உலகின் அனைத்து மக்களையும் நேசிக்கிறார், ஆயினும் மக்கள் கர்த்தரின் அன்பைப் பெற விரும்பவில்லை. கர்த்தரின் அன்பிலிருந்தும் இரட்சிப்பிலிருந்தும் யாரும் விடப்படவில்லை. இயேசு அனைத்துப் பாவங்களையும் துடைத்துவிட்டார் என்று கூறும் நற்செய்தியின் சத்தியத்தை விசுவாசிப்போர் மீது கர்த்தரின் இரட்சிப்பு வருகிறது.
நாம் பலவீனமானவர்கள். இயேசு அனைத்துப் பாவங்களையும் துடைத்துவிட்டார் என்று விசுவாசிப்பவர்களை பாவமற்றவர்கள் என்று கர்த்தர் எண்ணுகிறார். நம்முடைய அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட பிறகு கூட நம் மாமிசத்தில் அதிக பலவீனங்கள் இருக்கின்றன. அநேக நேரங்களில், அவருடைய சித்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளாத போது கர்த்தருடன் போரிட்டு அவரின் நீதியை புறம்பே தள்ளுவதற்கும் முயற்சிக்கிறோம். ஆனால் கர்த்தர் கூறுகிறார், “நான் உன்னை நேசிப்பதுடன் உன்னை இரட்சிக்கவும் செய்தேன். இப்பொழுது நீ செய்த பாவம் வரை உன் அனைத்துப் பாவங்களையும் நான் ஏற்கெனவே துடைத்துவிட்டேன்.” “ஓ, அது உண்மையா கர்த்தரே?” “ஆம், நான் அனைத்துப் பாவங்களையும் துடைத்துவிட்டேன்.” “உமக்கு நன்றி, தேவனே. நான் உம்மைப் புகழ்கிறேன். நாம் உம்மை மறுத்த பாவத்தைக் கூட நீர் துடைக்குமளவு நீர் என்னை நேசித்தமையால் என்னால் உம்மை புகழாமல் இருக்க முடியாது.”
பாவியானவர்கள் நீதிமான்களாக்கப்பட்டு அன்பிற்கு அடிமையானார்கள். அவரின் அன்பிற்கு அவர்கள் அடிபணிந்தனர். பேதுரு செய்ததைப் போல, அவர்களின் பலவீனத்தால் அவரை மறுதலித்தாலும் கூட, அந்த மறுதலித்த பாவத்தையும் தேவன் துடைத்தமையால் இயேசுவை விசுவாசிப்பதை அவர்களால் தடுக்க முடியாது. அது அவர்களை தேவனை துதிக்கச் செய்கிறது. ஆகவே, கர்த்தரின் இரட்சிப்பானது ஒரு மனிதனின் மீறுதலைவிட பெரிதானது என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான்.
இயேசு அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போட்டார்; நாம் சுவீகரித்த மூலப்பாவத்தையும், உலகின் முடிவு வரை நாம் செய்யும் சொந்த பாவங்களையும் அவர் எடுத்துப்போட்டார். ஆகவே, கர்த்தரின் அன்பு எத்தனை பெரியது! ஆகவே, வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது, “இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டு.” (யோவான் 1:29)
 
 
இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள்
 
மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் உலகின் பாவங்கள் மன்னிக்கப்பட முடியாது. விசுவாசிகள் பாவமற்று எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பைப் பெற்றார்கள். ஏனெனில், எதிர்காலத்தில் செய்யப்படப்போகும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களையும் இயேசு அழித்துப்போட்டார். ரோமர் 5:17 கூறுகிறது, “அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன் மூலமாய், மரணம் ஆண்டு கொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.”
நாம் கிருபையினாலே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கிருபையின் பெருக்கத்தையும் நீதியின் ஈவையும் பெற்றுக்கொள்வது யார்? தேவனை நம்பி, அவரின் மீதுள்ள அந்த விசுவாசத்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களே அவர்கள். பாவமன்னிப்பாகிய கிருபை வரத்தை நாம் பெற்றதால் தேவனை துதிக்கிறோம். “கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமாமே.” நாம் ஜீவனை அடைந்து ஆளும் ராஜாக்கள்.
ராஜாக்களே ஆளுவார்கள். நாம் இப்போது ஆளுகிறோம். ராஜாக்களை யாரால் எதிர்த்து போராடமுடியும்? கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவையும் பெற்ற நாம் ஒவ்வொரு நாளும் ஆளுகிறோம். ராஜாக்களாகிய நம் மீது கிருபையாயிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு நம்முடன் ராஜாக்களாகவும் இருப்பார்கள். ஆயினும், ராஜாக்கள் பிரசங்கிக்கும் சத்தியத்தின் நற்செய்தியை விசுவாசிக்காதவர்கள் நரகம் செல்லுவர்.
இவ்வுலகில் இரட்சிக்கப்பட்ட அநேக ராஜாக்கள் இருந்தனர், அதே நேரம் ராஜாக்களுக்கு எதிராக இருந்த அநேக மக்கள் நரகம் சென்றனர். அவர்கள் ராஜாக்களின் மீது மரியாதையுடன் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அப்படியிருக்கவில்லை. அவர்களிடம் சத்திய கண்களும் இருதயமும் இருந்திருந்தால் அவர்கள் ராஜாக்களாகியிருப்பார்கள்.
நீங்கள் ஆளுகிறீர்களா? நாம் உலகின் ராஜாக்கள் என்ற மன உறுதியில் பெருமைப்படலாம். அவிசுவாசிகள் நம்முடன் போரிடுவதால் நரகம் செல்லுவார்கள் என்று நாம் அறிவிக்கிறோம். ராஜாக்களால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும். நான் உண்மை ராஜாக்கள். நீதிமான்களின் மத்தியில் ஆளுகை செய்யாதவர்கள் யாருமிருக்கிறார்களா? அவர்கள் ராஜாக்களாக ஆகாதது அவர்களுக்கு வெட்கமில்லாதது. ஒரு ராஜா, ராஜாவைப் போல் ஆளவேண்டும். “உன்னிடம் தவறான யோசனைகள் உள்ளன. உண்மையை ஒத்துக்கொள்ளாவிட்டால் நீ நரகம் செல்வாய்.” ஒரு ராஜா ராஜாவைப் போல் நடந்து கொள்ள வேண்டும். ஒரு ராஜா மரியாதை செய்யப்படவேண்டும், அவன், பாவிகள் உண்மையை விசுவாசிக்கவேண்டுமென கட்டளையிடவேண்டும்.
ராஜா எத்தனை இளையவனாயிருந்தாலும், அவன் தீர்ப்பளித்து, கட்டளையிட்டு, கர்த்தரின் நீதிக்கு எதிரான அவிசுவாசிகளுக்கு நரகத்தண்டனையை கொடுக்க முடியும். கர்த்தருக்கு முன்பாக அவிசுவாசிகளுக்கு நரகத் தண்டனை அளிக்கும் வல்லமை அவனுக்கு/அவளுக்கு இருக்கிறது, ஆனால் அவன்/அவள் தான் விரும்புவதைப் போல் தன் வல்லமையை தேவையில்லாமல் உபயோகிக்கக் கூடாது. கர்த்தர் நம்மை உலகத்தை ஆளும்படி கூறுகிறார். ஆகவே, நாம் ஆண்டு, பரலோக ராஜ்யத்தினுள் செல்வோமாக.
ஆயினும், சில நீதிமான்கள் தம் வல்லமையை உபயோகிக்க பயந்தவர்களாய் இருந்தனர். தேவன் மீண்டும் வருகையில் அவர்களை கடிந்து கொள்வார். “நீ உன் விசுவாசத்தை விட்டுக்கொடுத்தாய், நீ ஏன் அடிமை போல் நடந்துகொண்டாய்? நான் உன்னை ராஜாவாக்கினேன்.” சில மக்கள் உலகின் அடிமைகளைப் போல் நடக்கிறார்கள். ஒரு ராஜா அவனுடைய பிரதியை “ஐயா” என்று அழைப்பது சரியென தோன்றுகிறதா? ஆயினும் அது பொருளற்ற ஒன்றாயினும் சில நீதிமான்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். கர்த்தர் அவர்களை பாவங்களிலிருந்து விடுவித்த பிறகும், முழங்கால் படியிட்டு உலகத்திடம் கெஞ்சுகிறார்கள். ஒரு ராஜா ராஜாவைப் போல் இருக்கவேண்டும்.
நான் ராஜாவான உடனேயே உலகிற்கு எதிராக சுதந்தர அரசாட்சியப் பிரகடனப்படுத்துகிறேன். நான் இளவயதினானாயினும், நான் ராஜாவாகிவிட்டேன் என்று விசுவாசித்து ராஜாவைப் போல் நடந்துகொள்கிறேன்.
 
 
இயேசுகிறிஸ்துவாகிய ஒருவருடைய கீழ்ப் படிதலினாலே
 
ரோமர் 5:18-19 கூறுகிறது, “ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப் படுவார்கள்.”
“ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல” இங்கு ஆக்கினை என்பது நியாயத்தீர்ப்பு என்று பொருள்படுகிறது. ஆபிரகாமின் சந்ததியினனாக பிறந்த ஒரு நபரோ அல்லது நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்காதவரோ, இயேசுவை விசுவாசித்தாலும், அவன்/அவள் தீர்க்கப்படுவர். “ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.”
ஒரு மனிதருடைய நீதியின் செயலால் நாம் அனைவரும் நீதிமான்களாக்கப்பட்டோம், இயேசு கன்னி மரியாளுக்கு பிறந்து உலகின் எல்லாப் பாவங்களையும் சுமக்கும்படி யோர்தான் நதியின் ஞானஸ்நானம் பெற்றார். அவர்களை நீதிமான்களாக்கும் பொருட்டு அவர்களுடைய இடத்திலிருந்தி சிலுவையில் தன்னை பலியிட்டார். பிதாவாகிய கர்த்தரின் சித்தத்திற்கு ஒருவர் கீழ்ப்படிந்ததால் அநேகர் நீதிமான்களாக்கப்பட்டனர்.
சரியாகக் கூறினால், விசுவாசத்தின்படி கவனிக்கும்போது உலகிலுள்ள அனைவரும் பாவிகளா அல்லது நீதிமான்களா? நான் விசுவாசத்தின் படி அப்படி கூறுவதைக் கேட்டு சிலர் கோபம் கொண்டு என்னிடம் சண்டையிடலாம். குறிப்பாக கர்த்தரின் பார்வையில் யாரிடமும் பாவமில்லை. கர்த்தர் தன் ஒரே பேறான குமாரனை உலகிற்கு அனுப்பி, உலகின் பாவங்களை அவர் மீது சுமத்தி அனைத்து மக்களின் பிரதிநிதியாக அவரை தண்டனை பெறச் செய்தார்.
 
 
மக்கள் தம் விசுவாசத்திற்கேற்ப பரலோக ராஜ்யத்திற்கோ நரகத்திற்கோ செல்லுவர்
 
மக்களுக்கு பதிலாக இயேசுவை தண்டித்துவிட்டதால் கர்த்தர் மீண்டும் உலகத்தை தீர்ப்பதில்லை. ஆயினும், தேவகுமாரன் கர்த்தரின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து எல்லா பாவங்களையும் எடுத்துக்கொண்டு அதனை துடைத்துவிட்டாலும் சிலர் இதனை விசுவாசிக்கின்றனர், சிலர் விசுவாசிப்பதில்லை. கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதினால் விசுவாசிகள் பரலோக ராஜ்யத்திற்குச் செல்லுகின்றனர். கர்த்தர் அவர்களை நீதிமான்கள் என்று எண்ணுகிறார், அவர் கூறுகிறார், “நீங்கள் நீதிமான்கள், நான் உண்மையாகவே உங்கள் எல்லாப் பாவங்களையும் துடைத்துவிட்டதாக விசுவாசிக்கிறீர்கள். முன் வாருங்கள். நான் பரலோக ராஜ்யத்தை உங்களுக்காக ஏற்பாடு செய்தேன்.” அவர்கள் எக்குறையுமின்றி பரலோக ராஜ்யம் செல்வர்.
சில மக்கள் அவரை விசுவாசிக்காமல் நற்செய்தியை புறம்பேத் தள்ளிவிட்டு “கர்த்தரே, இது சரியானதா? நான் இதனை நம்பமாட்டேன். இது சரியானதா? நான் உண்மையில் இதனைப் புரிந்துகொள்ளவில்லை.” என்று கூறுவர். “என்னை ஏன் கோபப்படுத்துகிறாய்? என்னை விசுவாசிக்கவேண்டுமென விரும்பினால் விசுவாசி, விசுவாசிக்கவேண்டாமென்றால் என்னை விசுவாசிக்காதே” என்று கர்த்தர் கூறுகிறார். “தேவனே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது உண்மையானதா?” “நான் உன்னை இரட்சித்தேன்” “அதனை நம்ப முடியாது. 90% என்னால் விசுவாசிக்கமுடியும், ஆனால் 10% சந்தேகப்படுகிறேன்.”
அப்பொழுது கர்த்தர் அவர்களிடம் கூறுவார், “நான் ஏற்கெனவே உன்னை இரட்சித்தாலும் நீ அதை விசுவாசிக்காதே. உன் நம்பிக்கையின்படிச் செய். ஆதாமின் சந்ததியினராதலால் பாவிகளாகிய அவர்களை நரகத்திற்கு அனுப்ப என் மனதை திடப்படுத்திவிட்டேன். நான் பரலோக ராஜ்யத்தையும் கூட ஏற்பாடு செய்துள்ளேன். நீ விரும்பினால் பரலோக ராஜ்யத்திற்குள் வா, நரகத்தின் எரியும் நெருப்பில் வீசப்படவேண்டும் என விரும்பினால் நரகம் செல்.” அவர்கள் பரலோக ராஜ்யம் செல்வதும் நரகம் செல்வதும் அவர்களுடைய விசுவாசத்தைப் பொருத்தது.
இயேசு தன் ஞானஸ்நானத்தினாலும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலும் உன் எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை இரட்சித்துவிட்டார் என நீ விசுவாசிக்கிறாயா? அது உன் விசுவாசத்தைப் பொருத்தது. பரலோக ராஜ்யத்திற்கும் நரகத்திற்கும் இடையில் வேறு இடங்கள் இல்லை. கர்த்தருக்கு முன்பாக “இல்லை” எனப்படுவது எதுவுமில்லை. அங்கு “ஆமாம்” மட்டுமே இருக்கிறது. கர்த்தர் நம்மிடம் இல்லை என்று கூறுவதே இல்லை. கர்த்தர் உறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்றினார். அவர் பாவிகளின் பாவங்களையெல்லாம் துடைத்துவிட்டார்.
 
 
பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று
 
ரோமர் 5:20-21 ஐ பார்ப்போம். “மேலும் மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.” சட்டம் எதற்காக வந்தது? பாவத்தை அதிகப் படுத்துவதற்காக. மனிதர்கள் ஆதாமின் சந்ததியினரான படியால் இயற்கையாகவே வேறு வழியின்றி பாவம் செய்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தம் சுபாவம் தெரியாது, ஆதலால் பாவத்தைக் குறித்து மனிதர்கள் அறிந்துகொள்ளும்படி கர்த்தர் சட்டத்தைப் கொடுத்தார், ஏனெனில் எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று சட்டம் கூறுகிறது, அவர்களுடைய சிந்தனைகளாலும் செய்கைகளாலும் சட்டத்திற்கு கீழ்ப்படியாததும் பாவமாகும்.
பாவங்கள் பெருகும்படி சட்டம் வந்தது. நாம் பாவக்குவியல் என்றும், கொடிய பாவிகள் என்றும் அறிந்துகொள்ளுவதற்காக கர்த்தர் நமக்கு சட்டத்தைக் கொடுத்தார். ஆயினும் பாவம் பெருகின இடத்தில், கிருபையும் அதிகமாய்ப் பெருகிற்று. இது, ஒரு நபர் ஆதாமின் சந்ததியராக பாவத்துடன் பிறந்தான் என்று பொருள்படுகிறது, ஆனால் அவன்/அவள் தன்னை சிறு பாவியாக எண்ணுவதோ, இயேசு அவனை/அவளை இரட்சித்தது ஒன்றுமில்லை என்றும் எண்ணுகிறார்கள்.
ஆயினும், தன்னில் நிறைய பலவீனங்கள் இருப்பதால், கர்த்தரின் வார்த்தையின்படி மாமிசத்தினால் வாழமுடியாது என்றெண்ணும் ஒருவன்/ஒருத்தி அந்நபரை இரட்சித்த தேவனுக்கு நன்றி கூறுகிறார்கள். உலகின் பாவங்களை தேவன் ஒரேதரமாக சுமந்து தீர்த்தார் என்று கூறும் நற்செய்தியானது அத்தகைய நபருக்கு மிகப் பெரும் ஈவாகும். “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” கிருபை அதிகமாய் பெருகிற்று, ஆகவே கொடிய பாவிகள் நிறைவான நீதிமான்களாக்கப்பட்டனர். தம்மிடம் அத்தனை பாவங்கள் இல்லை என்று எண்ணும் சிறு பாவிகள் நரகத்திற்குச் செல்லுவர். கொடிய பாவிகளே நிறைவான நீதிமான்களாக்கப்பட்டனர்.
தானொரு கொடிய பாவி என அறிந்த அவன்/அவள் இயேசுவை இரட்சிப்பை பெரிதும் புகழுகிறார். உலகில் நற்செய்தியை பிரசங்கிப்பவர்களில் நற்பண்புள்ள பிரசங்கியார்கள் சிலர் இருக்கின்றனர். “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” கிருபை அதிகமாய்ப் பெருகும்படி நாம் வேண்டுமென்றே பாவம் செய்யலாம் என்று இங்கு பொருள்படவில்லை.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 6:1 இல் கூறுகிறான், “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்கு பாவத்திலே நிலை நிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.” “கர்த்தருடைய நீதியை விசுவாசித்தால் நம் இரட்சிக்கப்படுவோம். தேவன் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்கெனவே துடைத்து பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து அதிகமாய் இரட்சித்தார். இருதயங்களில் விசுவாசிப்பதால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம். தேவன் செய்தவற்றை நாம் விசுவாசித்தால் இரட்சிப்படையலாம். நாம் எத்தனை தந்திரக்காரர்களாய் இருந்தாலும், நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும் சத்தியத்தின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம்” என்று பொருள்படும்படி பவுல் கூறினான்.
விசுவாசத்தினால் நாம் நீதிமான்களானோம். நம்முடைய செயல்கள் எத்தனை மோசமானவை? எத்தனை முறை நாம் பாவம் செய்கிறோம்? பாவமற்ற கர்த்தர் நம் செயல்களைப் பார்த்தால் நம்மிடம் எத்தனைக் குறைபாடுகள் இருக்கும்? தேவனைப் புகழாமல் இருக்க என்னால் கூடாது. ரோமர் 5:20-21 கூறுகிறது, “அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.”
இயேசுகிறிஸ்துவின் மூலமாய் கர்த்தர் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தார். தேவனின் நீதி அவருடன் கூட நாமும் ஆளும்படிச் செய்தது. பாவிகளை அவர்களின் எல்லா பாவங்களிலிருந்தும் அளவுக்கதிகமாய் இரட்சித்த தேவனை நான் புகழுகிறேன். தேவனே, உமக்கு நன்றிகள்.