இயேசுவின் ஞானஸ்நான இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் இரகசியத்தை அறிந்து அதனை விசுவாசிக்கிறீர்களா? ரோமர் 6:1-4 மூலமாக இதைக் குறித்து உங்களுக்கு கூற விரும்புகிறேன். “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படி பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல் நாமும் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம்.”
இந்த வேதவசனத்தைப் புரிந்துகொண்டு உண்மையைக் கண்டுபிடிக்க கலாத்தியர் 3:27 இல் பவுலின் விசுவாசத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அவனைப் போல் விசுவாசமுடையவர்களாய் இருக்கவேண்டும். பவுல் இதன் காரணத்தை கலாத்தியர் 3:27 இல் விளக்குகிறான் “ஏனெனில் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” இந்த வேத வசனம் எதைக் குறிக்கிறது? நாம் அதனை மத்தேயு 3:13-17 இன் வசனங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
கர்த்தரின் நீதியை விசுவாசித்ததன் மூலம் ஒரே தரமாக நாம் பாவமன்னிப்பை பெற்றோமாயினும், அதற்கு பிறகும் நாம் தொடர்ந்து பாவம் செய்வோமா என்று பவுல் கேட்கிறான். பவுலின் பதில் இல்லை என்பதாகும், கர்த்தரின் நீதியை உண்மையாகவே விசுவாசிப்போரின் பதிலும் கூட அப்படியேதான் இருக்கவேண்டும். நீதிமான் மாமிசத்தினால் பாவம் செய்யமாட்டான் என்று இது பொருள்படவில்லை. இது உண்மையல்ல.
நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதால், இன்னும் அதிகப் பாவங்களை திட்டமிட வேண்டும் என்பதும் இதன் பொருள் அல்ல. நீதிமான்கள் அவரின் மரணத்திற்குள் ஏற்கெனவே ஞானஸ்நானம் பெற்றவர்கள். அவரின் நீதியில் விசுவாசம் உள்ளவர்களால் பாவத்திற்குள் எப்படி உழல முடியும் இது உண்மையாக இருக்க முடியாது. கலாத்தியர் 3:27 இல் இதற்கான காரணத்தை பவுல் விளக்குகிறான், “ஏனெனில் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.”
வேறுவார்த்தைகளில் கூறுவதானால் இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தினாலே உங்கள் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தமையால், அவரை விசுவாசிப்பவர்களால், “விசுவாசத்தினால் கிறிஸ்துவுடனே கூட ஞானஸ்நானம்” பெறமுடிந்தது. ஆகவே, நாம் இத்தகைய விசுவாசமுடையவர்களாய் இருக்கவேண்டும்.
இயேசுவின் ஞானஸ்நானத்துடன் ஐக்கியமாகிய விசுவாசத்தை நாம் பெற்றிருக்கவேண்டும்
இயேசுவின் ஞானஸ்நானத்துடனும் அவரின் மரணத்துடனும் ஐக்கியமாகி விசுவாசத்தை நாம் பெற்றிருக்கவேண்டும். “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” இயேசு யோவான் மூலமாக யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றபோது நம் அனைத்துப் பாவங்களையும் ஒரேதரமாக எடுத்துக்கொண்டார் என்று இந்த வேதவசனம் பொருள்படுகிறது. அவர் தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் எற்றுக்கொண்டதால் இயேசுவின் சிலுவை மரணம் பாவ நிவிர்த்தியாகும். இந்த உண்மையை அதனை விசுவாசிப்பதும் நம் தேவனுடன் ஐக்கியமாவதற்கான நம்பிக்கையாகும்.
நம்முடைய மீறுதல்களினால் கர்த்தருடைய நீதியிலிருந்து பிரிக்கப்பட்டோம். யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது அவர் நம் எல்லாப் பாவங்களையும் அக்கிரமங்களையும் ஏற்றுக்கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நமது பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்டு பாவத்தின் சம்பளத்தைக் கொடுப்பதற்கு சிலுவையில் மரித்தார். நம் வாழ்வு முழுவதும் வேறுவழியின்றி கர்த்தருக்கு முன்பாக நாம் பாவம் செய்யவேண்டியவர்கள். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை அஸ்திவாரமாக்கி கிறிஸ்துவுடன் ஐக்கியமாகும்படியான விசுவாசத்தைப் பெறவேண்டும். இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் கர்த்தரின் நீதியை நிறைவேற்றினார் என்று விசுவாசிக்கும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவுடன் ஐக்கியமாவோம்.
அவருடைய நீதி முழுமையாகும்படி, பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தது யார்? அது இயேசுகிறிஸ்துவேயாகும். இயேசு கர்த்தரின் நீதியை ஒரே தரமாக நிறைவேற்றினார். அவர் யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு தன் மரணத்தினாலே பாவத்திற்கான கூலியைக் கொடுத்தார். நாம் கிறிஸ்துவுடன் ஐக்கியமாக வேண்டுமானால், நம் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக எடுத்துக்கொண்ட அவரின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கவேண்டும்.
தேவன் தம்முடைய ஞானஸ்நானத்தினாலே நம் நித்திய இரட்சகரானதால் நாம் அவருடன் ஐக்கியமாகி விசுவாசித்திருக்க வேண்டும். உங்களுக்கு அளிக்கப் பட்டிருக்கும் ஒரே வாய்ப்பு நீங்கள் இந்த உண்மையை எற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பதே. அவரின் ஞானஸ்நானத்தையும் சிலுவையின் இரத்தம் சிந்துதலையும் விசுவாசித்து கர்த்தரின் பிள்ளையாகவேண்டுமா அல்லது சத்தியத்தை வேண்டாமென்று தள்ளிவிட்டு நரகத்தின் நித்திய அழிவைப் பெறவேண்டுமா என்பது முற்றிலும் உங்களிடம் உள்ளது. நம்முடைய பாவங்களை எடுத்துக்கொள்ளும்படி இயேசு ஞானஸ்நானம் பெற்றார். (மத்தேயு 3:13-15)
மத்தேயு 3:15 ஐ நோக்கினால், “இப்படியாக” என்பது கர்த்தரின் எல்லா நீதியையும் நிறைவேற்றுவது என பொருள்படுகிறது. “இப்படியாக” என்ற வார்த்தை கிரேக்கத்தில் “ஹூடோஸ்” என்பதாகும், இதன் பொருள் “இந்த வழியாக”, “பொருத்தமானது”, “இதைத் தவிர வேறுவழியில்லை” என்பதாகும். இது அவரின் ஞானஸ்நானமே நம் பாவங்களை கையளிப்பதற்கான ஒரே வழியென்று கூறுகிறது. இந்தச் சொல்லானது, இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமே அவர் மனிதர்களின் பாவங்களை ஏற்றுக்கொண்ட வழியென தெளிவாக்குகிறது.
இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது, நம் பாவங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரோமர் 6:5-11 இல் உள்ள சத்தியத்தை நாம் விசுவாசிக்கவேண்டும், இயேசு ஞானஸ்நானம் பெற்றதால் நம் பாவங்கள் ஒழிக்கப்படும் என்றும், அதன் தொடர்ச்சியாக மனிதர்களை இரட்சிப்பதற்காக அவர் சிலுவையில் மரித்தார்.
ஒருவனின் கடனை நீங்கள் செலுத்தவேண்டுமானால் அந்த கடனுக்கான சரியான தொகையைத் திரும்பச் செலுத்தவேண்டும். அதுபோலவே, நம் பாவங்களை ஒழிப்பதற்கு நம் தேவன் எதை எப்படிச் செய்தார் என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
நாம் பிறந்ததிலிருந்து பத்து வயது வரை செய்த பாவங்களையும் 10 இலிருந்து 20, 30, 40, 50, 60, 70, 80, 90 மற்றும் நம்முடைய கடைசி மூச்சு வரை செய்யப்போகும் பாவங்களையும் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது ஏற்றுக்கொண்டார். அவர் தன் ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கான கூலியையும் கொடுத்தார். நாம் அறிந்தோ அறியாமலோ செய்த அனைத்து மீறுதல்களையும் ஒரே தரமாக இயேசு எடுத்துப் போட்டார். நம்முடைய பாவங்களை கழுவும்படி இயேசு ஞானஸ்நானம் பெற்றார், பாவத்திற்கான கூலியை சிலுவையில் கொடுத்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் அடங்கியுள்ள வேதவசனங்கள் கூறும் சத்தியம் இதுவே.
பரிசுத்தமாகும் தத்துவத்தை ஏற்படுத்தி அதனை ஆதரித்து, இயேசுவை தம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள அநேக கிறிஸ்தவர்கள் மிகக் கடினமாக முயலுவதை நாம் காணலாம். இதற்கான காரணம் என்னவெனில் அவர்களுக்கு பவுல் கூறிய “ஞானஸ்நானம்” என்பதின் இரகசியம் புரியவில்லை. இயேசு பூமிக்கு வந்து யோவான் அளித்த “ஞானஸ்நானத்தை” ஏற்றுக் கொண்டிரா விட்டால், மனிதகுலத்தின் பாவங்கள் சதாகாலமும் அப்படியே இருந்திருக்கும். நம் இருதயங்களும் சரீரமும் காலம் செல்லச் செல்ல பரிசுத்தமாகிவிடும் என்று போதிக்கும் இதுபோன்ற தவறான கொள்கைகளை நாம் விசுவாசிக்கக் கூடாது.
இயேசு ஞானஸ்நானம் பெற்று நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார் என்பதே இப்பூமியில் இருக்கப்போகும் ஒரே உண்மையாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசமே தவறான போதனைகளை மேற்கொள்ள உதவும், அதனை விசுவாசிப்பவர்களுக்கு அது வெற்றியளிக்கிறது. ஆகவே, இந்த உண்மையை நாம் விசுவாசித்தேயாகவேண்டும். சில கிறிஸ்தவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தில் ஐக்கியமாகி மறுபடியும் பிறக்காததால் நரகம் செல்வர்.
இருதயத்தை ஒரு கத்தி துளைத்திருப்பதைப் போன்ற ஓவியத்தைப் பார்த்திருக்கின்றீர்களா? அது கர்த்தரின் கிருபாதார பலியைக் காட்டுகிறது. கர்த்தர் நம்மை எந்த அளவு நேசித்தார் என்றால், நம்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும் அளவு நம்மை நேசித்தார் “தேவன், தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16)
இயேசு தான் ஞானஸ்நானம் பெற்று அவரின் குருதியை சிலுவையில் சிந்தியதன் மூலம் நமக்கு காட்டிய அன்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய இருதயங்கள் கர்த்தரின் நீதியுடன் ஐக்கியமாக வேண்டும். நாம் இயேசுவுடன் ஐக்கியமாக வாழவேண்டும். கிறிஸ்துவின் நீதியுடனான விசுவாச வாழ்வு மிகவும் அழகானது. கர்த்தரின் நீதியுடன் நம் விசுவாசத்தின் மூலம் ஐக்கியமாக வாழவேண்டுமென ரோமர் 6 ஆம் அதிகாரம் தீர்மானமாக கூறுகிறது.
கர்த்தரின் சட்டத்தை நம் மனதினால் சேவிக்கவேண்டும். பாவத்தின் சட்டத்தை நம் சரீரத்தினால் சேவிக்கவேண்டும் என்று பவுல் ரோமர் 7:25 இல் கூறுவதுபோல் நாம் செய்கிறோமா? அப்படிச் செய்கிறோமா? ஆம், நாம் அப்படித்தான் செய்கிறோம். அதனாலேயே, பவுலைப் போன்று நாம் எப்பொழுதும் கர்த்தரின் நீதியுடன் ஐக்கியமாக இருக்கவேண்டும். தேவனின் நீதியுடன் நம் இருதயங்களினால் ஐக்கியமாகவில்லையென்றால் என்னவாகும்? முழு அழிவு உண்டாகும்.
கர்த்தரின் நீதியுடன் வாழுபவர்கள் அவரின் ஆலயத்துடன் இணைந்த ஒரு வாழ்வை வாழ்வர். கர்த்தரின் நீதியை நீங்கள் விசுவாசித்தால், அவருடைய ஆலயத்துடனும் அவரின் ஊழியர்களுடனும் ஐக்கியமாக இருக்கவேண்டும். மாமிசம் எப்போதும் பாவத்தின் சட்டத்திற்கு ஊழியம் செய்ய முயல்கிறது. ஆகவே, கர்த்தரின் வாழ்வைக் குறித்த சட்டத்தை மீண்டும் மீண்டும் தியானம் செய்து விசுவாசத்தினால் வாழவேண்டும். கர்த்தருடைய நீதியை நம் மனதில் வைத்து தினமும் அதனை ஆழ்ந்து தியானித்தால் நாம் அவருடன் ஐக்கியமாக இருப்போம், அதனாலேயே வேதாகமம் அசைப் போடும் விலங்குகள் சுத்தமானவை (லேவியராகமம் 11:2-3) என்று கூறுகிறது.
கர்த்தருடைய நீதியுடன் ஐக்கியமாயிருங்கள். ஒரு புதிய பலம் உருவாவதை உணருகிறீர்களா இல்லையா? கர்த்தருடைய நீதியுடன் இணைந்திருக்க முயலுங்கள்! இயேசுவின் ஞானஸ்நானத்துடன் உங்கள் இருதயத்தை ஐக்கியமாக்கினீர்கள் என்று கூறுவீர்களா? அதன் பிறகும் உங்கள் இருதயத்தில் பாவமிருக்கிறதா இல்லையா? -நம்மிடம் பாவமில்லை.- இப்பொழுது இயேசு சிலுவையில் அறையப்பட்டார், இதனை உங்களிருதயத்தில் விசுவாசியுங்கள். இக்குறிப்புடன் உங்கள் இருதயத்தை இணைத்துள்ளீர்களா? அதன் பிறகு, நாம் மரித்து விட்டோமா இல்லையா? -நாம் மரித்து விட்டோம்.- இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தாரா இல்லையா? -ஆம்- அப்படியானால் நாமும் கூட மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தவர்கள் நம்முடைய இருதயங்களை நாம் கிறிஸ்துவுடன் இணைக்கும்போது நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; இயேசுவுடன் சிலுவையில் ஒன்றாக மரித்தோம், கிறிஸ்துவுடனே மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்தோம்.
அப்படியானால், நாம் கிறிஸ்துவுடன் ஐக்கியமாகிவிட்டால் என்னவாகும்? “நாம் எதைக் குறித்து பேசுகிறோம்? ஆமாம், நீங்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசுகிறீர்கள். பழைய ஏற்பாட்டில் பலி மீது கைவைப்பதும் புதிய ஏற்பாட்டில் இயேசு யோவானிடம் பெற்ற ஞானஸ்நானத்தையும் இது குறிக்கிறது என்று எண்ணுகிறீர்கள். அது சரியாக இருக்கலாம்! அனைவரும் அதனைக் குறித்து தயங்கும் அளவிற்கு அதில் பெரிதாக என்னவிருக்கிறது?”
அவரின் ஞானஸ்நானத்தை ஒரு கொள்கையாக எண்ணுபவர்களிடம் உண்மை விசுவாசம் இருக்கமுடியாது. ஆகவே முடிவில் அவர்கள் கிறிஸ்துவை விட்டுவிடுவார்கள். ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் குறிப்புகளைக் கற்பது போல, கொள்கை மீதுள்ள நம்பிக்கை கர்த்தரின் நீதியை பெற்றுக்கொள்ள உதவாது. உண்மையாகவே தம் ஆசிரியர்களை மதித்து அவர்களிடமிருந்து நற்பண்புகளையும், தலைமை தாங்கும் பண்புகளையும் கற்கும் மாணவர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். கர்த்தரின் வார்த்தைகளை நம் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் கற்காமல், அவர் பண்புகளையும், அன்பையும், இரக்கத்தையும், நீதியின் வார்த்தைகளையும் நம் இருதயத்தில் பதிக்கவேண்டும். கர்த்தரின் வார்த்தை நமக்கு போதிக்கப்படும்போது அதனை வெறும் அறிவுக்காக மட்டும் கற்கும் நம் ஆவலை விட்டுவிடவேண்டும்.
கர்த்தருடைய வார்த்தையுடன் ஐக்கியமாகி உள்ளவர்களின் மனம் தேவனுக்கு ஊழியம் செய்ய சித்தமாயிருப்பதுடன், அவருடன் சிறந்த உறவைப் பெற்றிருப்பதோடு, சூழ்நிலைகளினால் மாற்றப்படாதவருமாய் இருப்பர். பெரிதான உத்தரவை வெற்றி கொள்ளும் பொருட்டு மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் இருப்பர். ஆனால் அவருடன் இருதயங்களினால் ஐக்கியமாகாதவர்கள் சிறிய காரியங்களினால் அசைக்கப்படுவர்.
தேவனுடைய நீதியுடன் நம் விசுவாசம் ஐக்கியமுள்ளதாக இருக்கவேண்டும். உலகின் சிறிய விஷயங்களினால் நம் இருதயங்களினால் ஆடிப்போவதை அனுமதிக்க கூடாது. கிறிஸ்துவுடன் இருதயங்களால் ஐக்கியமானவர்கள், இயேசுவினுள் ஞானஸ்நானம் பெற்று, அவருடன் சிலுவையில் அறையப்பட்டு, தம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்படி அவருடன் மீண்டும் உயிரோடெழுந்தவர்கள். நாம் இந்த உலகினுடையவர்கள் அல்ல, ஆகவே, நாம் விசுவாசிக்கவேண்டும். அவருடைய நீதியின் ஊழியர்களாக அழைக்கப்பட்ட நாம், அவர் பிரியப்படும்படி அவரின் நீதியுடன் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும்.
கர்த்தருடைய நீதியுடன் நீங்கள் ஐக்கியமாக இருந்தால், உங்களிருதயங்கள் எப்போதும் சமாதானத்துடனிருப்பதுடன் மகிழ்ச்சியினாலும் நிறைந்திருக்கும், ஏனெனில் தேவனுடைய வல்லமை நம்முடையது. நாம் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை வாழ முடியும், ஏனெனில் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து தெய்வீக வல்லமையையும் கொடுக்கிறார்.
உங்களுடைய இருதயம் கர்த்தரின் நீதியுடன் ஐக்கியமாவதாக. அப்பொழுது உங்களால் என்னைப் போன்ற கர்த்தரின் ஊழியர்களுடன் ஐக்கியமாகமுடிவதுடன், ஒவ்வொருக்கொருவர் உள்ள ஐக்கியத்தால் அவரின் வார்த்தையின் மீது உறுதியான விசுவாசம் வைத்து அவரின் பணியை தீவிரமாக செய்யமுடியும். உங்களுடைய விசுவாசம் கடுகளவு சிறியதாயினும், தேவன் உங்கள் பாவங்களை கழுவிவிட்டார். நீங்கள் குறையுடையவர்களாயிருந்தாலும், அவருடைய ஞானஸ்நானம் உட்பட எல்லாவற்றிலும் அவருடன் ஐக்கியமாக இருங்கள்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலமாக தேவனுடன் ஐக்கியமாகும்படியாக கர்த்தர் நமக்களித்த விசுவாசத்திற்காக அவரிற்கு நன்றி கூறுவோமாக. நாம் இப்போதிருந்து தேவனை சந்திக்கும் நாள் வரை நம் இருதயங்களை தேவனுடம் இணைத்திருக்கவேண்டும். நாம் பலவீனர்களானபடியால் அவருடன் ஐக்கியமாகவேண்டும். இயேசு நிறைவேற்றிய நீதியுடன் உங்கள் இருதயத்தை ஐக்கியமாக்கும் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டீர்களா? இயேசுவின் ஞானஸ்நானத்துடன் இணைந்திருக்கும் படியான விசுவாசத்தைப் பெற்றுள்ளீர்களா? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் சிந்துதலின் மீது ஐக்கியமாகும் விசுவாசத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்படிபட்ட விசுவாசம் இல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதிலிருந்தும், விசுவாச வாழ்வு வாழ்வதிலிருந்தும் தவறிப்போவார்கள். ஆகவே, கர்த்தரின் நீதியானது உங்கள் வாழ்விற்கு அவசியாமான ஒன்று.
கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தினால், தேவனுடன் இணைவது பாவமன்னிப்பு ஆசீர்வாதத்தை நமக்களிப்பதுடன் கர்த்தரின் பிள்ளைகளாகவும் நம்மை வாழச் செய்கிறது. கர்த்தரின் நீதி உங்களின் நீதியாக வேண்டுமென்பது என் பேரவா. இயேசுகிறிஸ்துவே கர்த்தரின் நீதியும் உங்கள் விசுவாசத்தின் தேவனுமாவார். விசுவாசியுங்கள்! கர்த்தரின் நீதியையும் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களுடனிருக்கும்.
நம்முடைய பக்தியை மட்டுமே கர்த்தருக்கு காணிக்கையாக்கக் கூடாது
சில கிறிஸ்தவர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காமல் தேவனை மட்டுமே புகழுகிறார்கள், “♫ஓ கர்த்தர், ♪என்னுடையவைகளை எடுத்துக்கொண்டு, தம்முடையவராக்கினார், ♫என்னுடைய சிறிய பக்தி, என் வாழ்வு, என் காணிக்கை, ஆகியவை சிறிதாயினும் அரசரே நான் அவற்றை உமக்குக்கொடுக்கிறேன். ♪நான் உமக்காக மட்டுமே வாழ்வேன். ♫பரிசுத்த ஆவியானவரே நீர் அக்கினியாக வாரும்.” நாம் அத்தகைய கிறிஸ்தவர்களைப் போல் இருக்கவேண்டும். அவர்கள் எப்போதும் புகழ்வதோடு, கர்த்தருக்கு முன் பக்தியை காணிக்கையாக்குகின்றனர், எனவே கர்த்தர் அவர்களுக்காக எதைச் செய்யவும் வாய்ப்பில்லை.
அதிகப்படியாக பக்தியுடனிருந்து, மனிதர்கள் கர்த்தரை கஷ்டப்படுத்துகிறார்கள். நம்முடைய குருட்டுத்தனமான பக்தியினால் கர்த்தர் களைப்படைந்தார். அவர்கள் தம் “மனித” நீதியை ஏற்றுக்கொள்ளும்படி கர்த்தரிடம் வேண்டுகின்றனர். தரையை துப்புறவாக்கும்போதும் வாசலைப் பெருக்கும்போதும், ஜெபிக்கும்போதும், புகழும்போதும் கூட “ஓ, கர்த்தரே! எங்கள் பக்தியை ஏற்றுக்கொள்ளும்” என்று அவர்கள் தேவனை நோக்கி கூக்குரலிடுகிறார்கள். அநேக கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரின் நீதியைக் குறித்து தெரியாமலும் அதனை விசுவாசியாமலும் இருந்து, அவர்களின் சரீரப்படியான பக்தியை இயேசு ஏற்றுக்கொள்ளவேண்டுமென கூறுவது மிகுந்த குழப்பமானது. நம்முடைய பக்தியை சற்று தள்ளி வைத்துவிட்டு, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் உள்ளடக்கியுள்ள கர்த்தரின் நீதியை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நம்முடைய பக்தி, கர்த்தருக்கு முன்பாக ஒன்றுமில்லாததாகும். ஆனால் மனிதர்கள் தம் பக்தியை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தம் பாவங்களை மன்னிக்கும்படி கர்த்தரை வேண்டுகின்றனர். இது ஒரு முட்டாள் பிச்சைக்காரன் தன்னிடமிருப்பது எல்லாவற்றையும் ஒரு கோடீஸ்வரனிடம் கொடுத்து, அதற்கு பதிலாக பெரிய அரண்மனையில் வாழ அனுமதி கேட்பது போன்றது. நம்முடைய நீதியைக் குறித்து நாம் பெருமை பாராட்டுவதை கர்த்தர் விரும்புவதில்லை. நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து நம்பிக்கையுடனிருக்கவேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.
கிறிஸ்தவம் மனிதர்கள் படைத்தது போன்ற ஒரு மதமல்ல. தொர்ந்து ஜெபித்து, தலைவணங்கி தன்னை தூய்மைப்படுத்தும்படி கூறும் உலக மதமாகிய புத்தமதத்தைப் போன்றதல்ல கிறிஸ்தவம். உலக மதமொன்றை உருவாக்கிய ஒருவரிடம் தலைவணங்கி ஆசீர்வாதம் பெறுவது போன்ற விசுவாசம் நமக்கு தேவையில்லாதது. நம்முடைய பக்தியை கொடுத்து அவரின் ஆசீர்வாதத்தை எதிர்ப்பார்ப்பதற்கு பதிலாக கர்த்தரின் நீதியை அறிந்து அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவர் அதனை நமக்குக் கொடுத்தார்.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிக்கும்போது பாவமன்னிப்பை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். உலகின் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொள்ளும்படி இயேசு ஞானஸ்நானம் பெற்று ஒரேதரமாக நம் பாவங்களை துடைக்கும்படி மரித்தார். ஆகவே, அவர் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டியதுமில்லை, மரிக்கவேண்டியதுமில்லை.
எபிரெயர் 10:18 கூறுகிறது, “இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால் இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே” ஒரு முறை இயேசு ஞானஸ்நானம் பெற்று மரித்ததினால் நம் அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்த்து கர்த்தரின் எல்லா நீதியையும் நிறைவேற்றினார்.
பவுல் மேலும் கூறுகிறான், “ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்கு கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.” (ரோமர் 6:12) சதாகாலத்திலும் ராஜாதிராஜாவாகவும், நம்முடைய தேவனாகவும் இருக்கும் இயேசுகிறிஸ்துவுடன் நாம் ஆளுகை செய்வோமாக. நம்முடைய மாமிசத்தின் கபட்டுத்தனமான பேராசை மற்றும் அதன் விருப்பங்களை பின்பற்றாதிருப்போமாக. கர்த்தர் தன்னுடைய முழுமையான நீதியை நமக்களித்ததினால் இவையனைத்தையும் ஒத்த அதிகாரத்துடன் மேற்கொள்ளலாம்.
உங்களிருதயத்தையும் சரீரத்தையும் கர்த்தரின் நீதியின் உறுப்புகளாக ஒப்புக்கொடுக்கவும்
“நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.” (ரோமர் 6:13)
பாவத்தை எதிர்ப்பதற்கு மூன்று முக்கிய கருத்துகளை பவுல் கூறுகிறான். முதலாவது, அழிந்து போகும் இந்த சரீரத்தின் இச்சைகளுக்கேற்றபடி நாம் நடக்கக் கூடாது. இச்சையின்படி நம் பழைய மனிதன் கூறுவதை நாம் எதிர்க்கவேண்டும். இரண்டாவதாக, நம் உறுப்புகளை பாவத்தின் கருவிகளாக ஒப்படைக்க கூடாது. நம்முடைய திறமையாகிய உறுப்புகளை அநீதியின் கருவிகளாவதிலிருந்து தடுக்கவேண்டும். மூன்றாவதாக, நம் உறுப்புகளை கர்த்தரின் நீதியின் உறுப்புகளாக அளிக்கவேண்டும்.
இயேசுவை நாம் விசுவாசிப்பதற்கு முன், நாம் நம் கைகளையும் கால்களையும், கண்களையும், வாயையும் பாவம் செய்ய ஒப்புக்கொடுத்தோம். நாம் பாவத்தின் கருவியாக அது வழி நடத்தியபடி சென்றோம். ஆனால் இப்பொது நம் உறுப்புகள் பாவம் செய்யும் பொருட்டு அநீதியின் கருவிகளாவதை தடுக்க தீர்மானிக்கவேண்டும். எந்த எதிர்ப்புமில்லாமல் பாவம் மீண்டும் நம்மை ஆட்கொள்வதை அனுமதிக்கக்கூடாது. பாவம் செய்வதற்கான ஆசை வரும்போது, “பாவமே, நீ கிறிஸ்துவுக்குள் மரித்தாய்” என்று அறிவிக்க வேண்டும். நாம் இங்கிருப்பது தேவனாலேயே என்று கர்த்தரைக் குறித்து அறிக்கைப் பண்ணவேண்டும்.
விசுவாச வாழ்க்கையில் இதனைச் செய்ய வேண்டும், இதனைச் செய்யக்கூடாது என்று இரண்டு காரியங்களையும் மனதில் வைத்திருக்கவேண்டும், நாம் நம் உறுப்புகளை பாவம் செய்ய ஒப்புக்கொடுக்காமல், கர்த்தரிடம் ஒப்படைக்கவேண்டும். நாம் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவைகளுக்கு சமமானவை. நாம் எதையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவில்லை என்றால் அவற்றை நாம் பாவத்திற்கு ஒப்புக்கொடுத்தோம் என்று பொருள்படும். உதாரணமாக நம் நேரத்தை கர்த்தருக்காக ஒப்புக்கொடுத்தால், பாவம் செய்வதற்கு நம்மிடம் நேரமிருக்காது. நாம் பாவத்திற்கு எதிரிகளாவதோடு கர்த்தரிடம் ஒரே குடும்பமாக இருக்கிறோம்.
“பாவத்தை வெல்வதற்கான தைரியம் என்னிடமில்லை” என்று சில வேளை நாம் கூறலாம். ஆயினும் ரோமர் 6:14 இல் நாம் அப்படி நினைக்கக் கூடாது என்று, பவுல் கூறுகிறான்: “நீங்கள் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” நாம் பாவத்திற்குட் பட்டவர்களாயிருந்தால், நாம் நிச்சயமாக பாவம் செய்வோம். ஆனால் நாம் கர்த்தரின் கிருபையினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால் அது நம்மைத் தாங்கி வெற்றியைத் தரும். ஆகவே, சங்கீதத்தை எழுதினவன் ஜெபிக்கிறான், “உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.” (சங்கீதம் 119:133)
இந்த உலகில் நாம் வாழும்வரை, பாவம் நம்மிடம் வருவதற்கான வழியைக் கண்டு பிடித்து கொண்டேயிருக்கும். நாம் கிறிஸ்துவுடன் ஏற்கெனவே மரித்துவிட்டோமென்று அறிக்கைச் செய்தால் கூட, பாவம் நம்மை விழப்பண்ணி ஆட்சி செய்யமுயலும். சட்டத்தின்படி நாமே நீதிமானாக முயன்றால், பாவத்தின் பிடியிலிருந்து நம்மால் விடுதலைப் பெற முடியாது. ஆனால் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கிறோம் என்ற நம்பிக்கை நம் மனதில் இருக்கவேண்டும். ஆகவே, பாவம் நம்மை ஆட்கொள்ளாது. நாம் இதனை அறிந்து சத்தமிடவேண்டும்.
நீங்கள் அனைவரும் கர்த்தரின் நீதியை விசுவாசித்து அதனை உங்கள் நாவினால் அறிக்கைச் செய்யவேண்டும். “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப் பண்ணப்படும்.” கர்த்தரின் நீதியை உங்களிருதயத்தினால் விசுவாசிப்பதும், அதனை உங்கள் வாயினால் அறிக்கைச் செய்வதும் முக்கியமானதாகும்.
ஆகவே, பாவம் நம்மை ஆட்கொள்ள முயலும்போதெல்லாம் -கோபம் நம்மை ஆட்கொள்ள முயலும்போது, விபசாரமும் காமவிகாரமும் நம்மை தாக்கும்போது, நம்முடைய வாழ்வை முன்னேற்ற மற்றவர்களை வஞ்சிக்கும்படி, பேராசை நம்மிடம் கூறும்போது, வெறுப்பும் சந்தேகமும் வளரும்போது, பொறாமை நம் இருதயத்தைப் பற்றிப் பிடிக்கும்பொழுது- நாம் சத்தமிடவேண்டும்: “இயேசு இந்த பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டார்!” நாம் விசுவாசத்துடன் சத்தமிடவேண்டும்: “பாவமே! உன்னால் என்னை ஆளமுடியாது. என்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும், அழிவிலிருந்தும், சாபத்திலிருந்தும், சாத்தானிடமிருந்தும் கர்த்தர் தன் நீதியினால் முற்றிலுமாக இரட்சித்தார்.”
“கர்த்தருக்காக நாம் வாழுகிறோம்” என்ற சொற்றொடர், அவரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் நீதிமானாக வாழ்கிறோம் என்று பொருள்படுகிறது. இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்போரை கர்த்தரின் நீதி நிறைவாக்கியது. அதனாலேயே நாம் பாவத்திற்கு மரித்து அவரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தினால் கர்த்தருக்காக வாழுகிறோம். கர்த்தரின் நீதியை விசுவாசித்து ஆவிக்குரிய வகையில் உயிரோடெழுந்தோம் என்று அறிந்து, அதனை அறிக்கைச் செய்வதைத் தவிர முக்கியமானது வேறெதுவுமில்லை.
பாவம் பெருகிய இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகிற்று (ரோமர் 5:20) என்று பவுல் கூறினான். அதனை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அதிக கிருபையைப் பெற தொடர்ந்து பாவம் செய்யவேண்டும் என்றார்கள். ஆனால் பவுல் அதனைத் தவறு என நிருபித்தான். அவரின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசித்த பிறகு கூட சில காரியங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன. உலக பாவங்கள் நம்மைச் சுற்றி நம் இருதயங்களை வெற்றிக்கொள்ள முயலுகின்றன.
ஆயினும், அது நிகழும்போது, நாம் கர்த்தரின் நீதியைச் சார்ந்து நம் பலவீனத்தையும், சந்தேகத்தையும் விசுவாசத்தால் வெற்றிக்கொள்ளலாம். அவருக்குப் பிரியமான கர்த்தரின் பிள்ளைகளாக நாம் வாழலாம். இத்தகைய விசுவாசங்களால், பாவத்திற்கு மரித்து கர்த்தருக்காக வாழ, நம்மால் முடிகிறது. கர்த்தரின் நீதியை விசுவாசித்து அதன்படி நடப்பதன் மூலம் நம்மால் வாழமுடியும், நாம் அவரின் ராஜ்யம் சேரும்போது நிரந்தரமாக வாழலாம்.
ரோமர் 6:23 கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” ஆமேன். கிறிஸ்துவை தம் இரட்சகராக அறிக்கை செய்தவர்கள், அவரின் ஞானஸ்நானத்தின் வல்லமையையும் சிலுவை தீர்ப்பின் விளைவையும் விசுவாசிப்பார்கள். ஆமேன்.
அல்லேலூயா! தேவனுக்கே மகிமை!