(ரோமர் 6:1-8)
“பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்டது போல் நாமும் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால், அவருடனே கூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.”
ஞானஸ்நானத்தின் பொருள் என்ன?
இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்த யோவானை, யோவான் ஸ்நானன் என்றழைக்கிறோம். அப்படியானால் விசுவாசம் என்பதன் பொருள் என்ன? “ஞானஸ்நானம்” என்பது “βάφτισμα”
என்று கிரேக்கத்தில் வழங்கப்படுகிறது. இதன் பொருள், “அமிழ்த்தப்படுதல்” என்பதாகும். ஞானஸ்நானம் என்பதின் மிக முக்கியமான பொருள் “பாவத்தையும் மரணத்தையும் எடுத்துப் போடுவது” என்பதாகும்.
“அமிழ்த்தப்படுதல்” என்ற சொற்றொடர் மரணத்தைக் குறிக்கிறது. யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது உலகின் பாவங்கள் எல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டது, இப்படியாக அவர் அவையெல்லாவற்றையும் சுமந்து, நம் எல்லாப் பாவங்களுக்கும் கூலி கொடுக்கும் விதமாக சிலுவையில் மரித்தார். மரணமென்பது பாவத்தின் விளைவாகும், ஏனெனில் “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23).
ஞானஸ்நானம் என்பது “கழுவுதல்” என்றும் பொருள்படும். சிறிதளவு பாவம் கூட விடப்படாமல் நம் அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டது, ஏனெனில் இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக்கொண்டார். மனிதர்களின் இருதயங்களிலுள்ள அனைத்து பாவங்களும் கழுவப்பட்டன, ஏனெனில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அனைத்துப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது.
ஞானஸ்நானம் என்பதற்கு “கைவைத்தல்” என்றொரு பொருளுமுண்டு. “கைவைத்தல்” என்பது “சுமத்துதல்” என்றும் பொருள்படும். யோவான் ஸ்நானனிடமிருந்து இயேசு ஞானஸ்நானம் பெறும் செயல் உலகின் பாவங்களைச் சுமப்பதற்காகும். ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே இஸ்ரவேலரின் பாவங்களை பாவ பலிமிருகத்தின் மீது சுமத்த ஆசாரியன் அதன் தலை மீது கைவப்பது கர்த்தரின் இரட்சிப்பிற்கான நித்திய சட்டமாகும்.
லேவியராகமம் 16:21-22 கூறுகிறது, “அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லா பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடக்கடவன். அந்த வெள்ளாட்டுக் கடா, அவர்களுடைய அக்கிரமங்களை எல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு குடியில்லாத தேசத்திற்கு போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.” தலைமை ஆசாரியனான ஆரோன் உயிருள்ள ஆட்டின் தலைமீது கைவைக்கும்போது இஸ்ரவேலரின் எல்லாப் பாவங்களையும் அது ஏற்றுக்கொண்டு, மக்களுக்காக கொல்லப்பட்டது.
பழைய ஏற்பாட்டில் “பாவ பலியின் தலைமீது கைவைப்பது” புதிய ஏற்பாட்டின் “ஞானஸ்நானத்தை” குறிக்கிறது
ஞானஸ்நானம் என்பது “அமிழ்த்தப்படுதல்” என்று பொருள்படும். அதில் “அடக்கம் பண்ணப்படுதல், கழுவுதல் அல்லது சுமத்துதல்” ஆகியவையும் அடங்கும். பழைய ஏற்பாட்டில் மக்கள் களங்கமில்லாத ஆட்டையோ ஆட்டுக்குட்டியையோ எடுத்து வந்து தம் பாவங்களை அதன் மீது சுமத்தும் விதமாக தம் கைகளை அதின் தலைமீது வைத்தார்கள். இது புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நான செய்கைக்கு ஒத்ததாகும். “கைவைத்ததால்” பாவங்களை ஏற்றுக்கொண்டு, அது கொல்லப்பட்டது. உலகின் எல்லாப் பாவங்களையும் சும்ந்து சிலுவையில் அறையப்படும்படியாக அனைத்து மனிதர்களின் பிரதிநிதியான யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தான்.
இஸ்ரவேலின் பிரதிநிதியும் தலைமை ஆசாரியனுமான ஆரோன், இஸ்ரவேலின் பாவங்களை ஆட்டின் தலைமீது சுமத்தும்படி தன் கைகளை ஆட்டின் தலைமீது வைத்து அதனை அறுத்து, தன் விரல்களினால் அதன் இரத்தத்தை எடுத்து தகன பலிபீடத்தின் மேடையின் மீதுள்ள கொம்புகளிலிட்டான். ஆகவே, எல்லா இஸ்ரவேலர்களின் பிரதிநிதியான தலைமை ஆசாரியனைப் போன்று, ஆரோனின் குடும்பத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் பிரதிநிதி யோவான் ஸ்நானன் ஆவான் என்று லூக்கா கூறினான்.
வேதாகமம் கூறுகிறது, “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை.” (மத்தேயு 11:11) கர்த்தரின் நித்திய கட்டளைப்படி பூமியின் தலைமை ஆசாரியனான யோவான் ஸ்நானனுக்கு, ஞானஸ்நானத்தின் மூலம் இயேசுவின் மீது உலகின் பாவங்களை ஒரே தரமாக சுமத்தும் அதிகாரமிருந்தது. யோவான் ஸ்நானன் கடைசித் தலைமை ஆசாரியனாவான். யோவான் ஸ்நானனே கடைசித் தலைமை ஆசாரியன் என்று நான் கூறும்போது சில மக்கள் கேட்கின்றனர். “யோவான் ஸ்நானன் தலைமை ஆசாரியன் என்று வேதாகமத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது?” அது எழுதப்படவில்லையா? சகரியாவின் ஒரே பேறான குமாரன் யோவான் ஸ்நானனாவான். தலைமை ஆசாரியனான ஆரோனின் பேரன் அபியா ஆவான், அபியாவின் வகுப்பைச் சேர்ந்தவன் ஆசாரியனான சகரியா, இவன் ஆரோனின் குடும்பத்தின் சந்ததியினன் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1 நாளாகமம் 24:10 இல், ஆரோனின் சந்ததியினராகிய ஆசாரியர்களின் பிரிவுகளைக் குறித்து வேதாகமம் பேசுகிறது. தாவீதின் கடைசி நாட்களில் அநேக ஆசாரியர்கள் இருந்தனர், அவர்களை ஒழுங்குபடுத்துவது அவசியமாயிருந்தது. ஆகவே, ஆரோனின் பேரப்பிள்ளைகளின் 24 குடும்பத்திற்கேற்ப 24 பிரிவுகளை உண்டாக்கி சீட்டுப்போடும் முறையை ஏற்படுத்தினான். எட்டாவது சீட்டு அபியாவிற்கு விழுந்தது. ஒவ்வொரு பிரிவும் தேவாலயத்தினுள்ளே 15 நாட்கள் ஆராதனைச் செய்தனர். அபியா ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த சகரியா ஊழியம் செய்யும் படி கர்த்தரால் தெரிந்துக்கொள்ளப்பட்டான்.
லூக்கா 1:9 கூறுகிறது, “ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.” இது யோவான் ஸ்நானன் தலைமை ஆசாரியனான ஆரோனின் குடும்பத்தில் பிறந்ததைக் காட்டுவதுடன், அனைத்து மக்களின் பிரதிநிதியாகிய கடைசித் தலைமை ஆசாரியன் என்றும் கூறுகிறது (மத்தேயு 11:11, 3:13-17). சட்டத்தின்படி தலைமை ஆசாரியனின் குடும்பத்தில் பிறந்த ஒருவனாலேயே தலைமை ஆசாரியனாக முடியும். சிங்கத்தால் மட்டுமே சிங்கக் குட்டிகளைக் கொடுக்கமுடியும். யோவான் ஸ்நானன் தன் மூதாதையாகிய ஆரோனிடமிருந்து தலைமை ஆசாரியத்துவத்தைப் பெற்றுக்கொண்டான்.
இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து அவரின் அப்போஸ்தலர்கள் சாட்சி பகன்றனர்
பவுல், பேதுரு, மத்தேயு மற்றும் யோவான் ஆகியோர் உட்பட அனைத்து அப்போஸ்தலர்களும் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து சாட்சி பகன்றனர். இந்த அத்தியாயத்தின் முக்கிய வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய சாட்சியை நாம் பார்ப்போம். “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல் நாமும் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால், அவருடனே கூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.”
கலாத்தியர் 3:27 கூட கூறுகிறது, “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.” பேதுருவின் சாட்சியைப் பார்ப்போம். 1 பேதுரு 3:21 கூறுகிறது, “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.”
1 யோவான் 5:5-8 இல் அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறான், “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.”
மத்தேயுவின் சாட்சி மத்தேயு 3:13-17 இல் எழுதப்பட்டுள்ளது. “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவரினிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான், இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”
இயேசு யோவான் ஸ்நானனிடம் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை ஏற்றுக்கொண்டார். “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” இயேசு மிகவும் பொருத்தமான வகையில் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் உலகின் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்டார். கர்த்தரே இதைக் குறித்து சாட்சி கூறினார். “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, மூன்று வருடங்களாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து சாட்சி கூறி, மரிக்கும்படியாக சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளிலே மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். இப்போது அவர் கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
பாவமில்லாது அவருக்காக காத்திருப்போரிடம் இயேசு வருகிறார். எபிரெயர் 9:28 கூறுகிறது, “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.” கர்த்தரே கூறினார். “இவர் எனது நேசகுமாரன், இவரின் நான் பிரியமாயிருக்கிறேன்” உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டு இரட்சகர் இயேசுவே என்று பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். ஆயினும், மக்களின் ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களின் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்க வேண்டும். (யோவான் 3:5)
ஆகவே, மனிதர்களின் இரட்சிப்பிற்கான செய்கைகளை ஏறெடுத்தது இயேசு மட்டுமே என்று அவர்கள் எண்ணுகின்றனர். உண்மையில் பார்த்தால் இயேசு தேவாட்டுக்குட்டியாவார். இங்கு மனிதகுலத்தின் பிரதிநிதியும் பாவங்களை அவர்மீது சுமத்த அதிகாரம் பெற்றவனுமான யோவான் ஸ்நானன் தேவைப்பட்டான். ஏனெனில் இதைப்போன்றே, தலைமை ஆசாரியனான ஆரோன் தன் கைகளை பாவப்பலியின் தலைமீது (உயிருள்ள ஆடு) கைவைத்து இஸ்ரவேலர்களின் பாவங்களையெல்லாம் அதன் மீது சுமத்தினான். ஆரோன் அந்தப் பாவப்பலியைக் கொன்று அவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவித்தான். ஆகவே, கர்த்தர் தன் தூதுவனை அவருக்கு முன்பாக அனுப்பினார்.
யோவான் ஸ்நானன் யார்?
யோவான் ஸ்நானன் மல்கியா 3:1-3 இல் முன்கூறப்பட்ட கர்த்தரின் தூதனாவான். எல்லா மனிதர்களுக்கும் பிரதிநிதியாக இருக்கக்கூடிய யோவான் ஸ்நானன் கர்த்தருக்கு தூதுவனாக தேவைப்பட்டான். புதிய ஏற்பாட்டில் தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நானனின் மூலம் மனிதர்களின் நித்திய பாவங்களை ஏற்றுக்கொண்டு பாவத்தின் சம்பளமாக சிலுவையில் அறையப்பட்டார், பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்யப்பட்ட பாவங்களை ஆடு ஒன்று ஏற்றுக்கொண்டு, அதற்காக கொல்லப்பட்டது. ஆகவே, இயேசு எல்லா மக்களையும் நித்திய பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
இயேசு பிறப்பதற்கு முன் இரண்டு பெரிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஒன்று மரியாள் இயேசுவை கர்ப்பந்தரித்தாள், இரண்டாவது யோவான் ஸ்நானன் அபியாவின் வகுப்பில் பிறந்தான். இவையிரண்டும் தெய்வீக அனுக்கிரகத்தால் நடந்தேறியது. அது கர்த்தரால் எழுதப்பட்ட நிகழ்வு. இயேசுவிற்கு ஆறு மாதங்களுக்கு முன் கர்த்தர் யோவான் ஸ்நானனை உலகிற்கு அனுப்பி, அதன் பிறகு நம்மை போராட்டத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுவிக்க தன் ஒரே குமாரனை அனுப்பினார். புரிந்துகொள்கிறீர்களா? வேதாகமத்தினுள் ஆழமாகப் பார்ப்போம்.
மத்தேயு 11:7-14 ஐ நோக்குவோமாக, இதில் யோவான் ஸ்நானனைக் குறித்து சாட்சி கூறப்பட்டுள்ளது. “அவர்கள் போன பின்பு இயேசு யோவானைக் குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையா? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கத்தரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும் பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறாவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்கிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன் தான்.”
“மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” (மத்தேயு 3:2) என்று வனாந்திரத்திலே கூக்குரலிட்ட யோவானைப் பார்க்க மக்கள் அங்குச் சென்றனர். இயேசு அவர்களிடம் கூறினார். “எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையா? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கத்தரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அரசர்கள் தீர்க்கதரிசிகளைவிட வல்லமை குறைந்தவர்களாய் இருந்தனர். தீர்க்கத்தரிசிகள் கூறியவற்றிற்கு அவர்கள் கீழ்ப்படிந்தனர். பழைய ஏற்பாட்டில் அரசர்களைவிடவும் தீர்க்கத்தரிசிகளைவிடவும் வல்லமை வாய்ந்தது யார்? அது யோவான் ஸ்நானனேயாகும். இயேசுவே அவனைக் குறித்து சாட்சி கூறினார். மனிதகுலத்தின் பிரதிநிதி யார்? இயேசுவைத் தவிர மாமிசமுடைய மனிதகுலத்தின் பிரதிநிதி யார்? அது யோவான் ஸ்நானனாகும். யோவான் ஸ்நானனே மனிதகுலத்தின் பூலோகத்தின் தலைமை ஆசாரியனாவான். அவனை தேவனே நியமித்து உலகிற்கு அனுப்பியதால் அவன் தன் பாத்திரத்திற்கேற்றவைகளை செய்தான்.
“அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கத்தரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.”
எருசலேமின் யுத்தம் முடிவிற்கு வருமென்று ஏசாயா கூறினான். யோவான் ஸ்நானன் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்று கூறியபோது இந்த தீர்க்கத்தரிசனம் நிறைவேறியதை நாம் காணலாம். இயேசுவே தேவகுமாரன் என்றும் அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்றும் யோவான் ஸ்நானன் சாட்சி கூறினான்.
மறுபுறம், யோவான் ஸ்நானனே கர்த்தர் தெரிந்துகொண்ட வரப்போகிற தூதுவன் என்று இயேசு கூறினார். மத்தேயு 11:11 கூறுகிறது, “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிதானவர்கள் யாரும் எழும்பினார்களா இல்லை. “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில்” என்பதின் பொருள் யாது? அதன் பொருள் “உலகின் அனைத்து மனிதர்களும்” என்பதாகும். “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிதானவன் எழும்பினதில்லை” என்ற சொற்றொடரின் பொருள் யோவான் ஸ்நானனே உலகின் அனைத்து மனிதர்களிலும் பெரிதானவன் என்று பொருள்படுகிறது. அவன் ஆரோனின் குடும்பத்தில் பிறந்தமையால் தலைமை ஆசாரியனாவான்.
யோவான் ஸ்நானன் உலகின் அனைத்து மனிதர்களின் பிரதிநிதியாவான்
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் ஆரோனையும் அவன் சந்ததியினரையும் நித்தியமாக ஆசாரிய ஊழியம் செய்யும்படியாக நியமித்தார் என்றும், இயேசுவின் மீது பாவங்களைச் சுமத்திய தலைமை ஆசாரியனும் உலகின் அனைத்து மனிதர்களினது பிரதிநிதியும் யோவான் ஸ்நானன் என்பதை விசுவாசிக்கிறீர்களா?
அனைத்து மனிதர்களினதும் பிரதிநிதி யார்? இயேசுவைத் தவிர, மாமிசமுடைய, அனைத்து மனிதர்களின் பிரதிநிதி யார்? அது இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்த யோவான் ஸ்நானன் ஆவான்.
“அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.”
“இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்று கூறிய மனிதன் யோவான் ஸ்நானன் ஆவான்.
இயேசு கூறினார், “யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்கிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.” (மத்தேயு 11:12-13) யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் உலகின் பாவங்களை இயேசு ஏற்றுக்கொண்டு மனிதகுலத்தின் இரட்சகரானார் என்பதை இந்த வசனங்கள் காட்டுகின்றன. அது யோவான் ஸ்நானன் உலகின் அனைத்துப் பாவங்களையும் இயேசு மீது சுமத்தினான் என்றும் தெரிவிக்கிறது. இயேசுவே இப்படிக் கூறினார். இதன் பொருள் என்னவென்றால் யோவான் ஸ்நானன் உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது சுமத்தினான், இதனை விசுவாசிப்பவர்கள் அவன்/அவள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிப்பர். இது சரியா அல்லது தவறா? கர்த்தரின் வார்த்தையின்படி இது மிகச் சரியானது, ஆகவே வேதாகமத்தின் சத்தியத்தை பிரசங்கிக்கும் நாம் சிறந்த முறையில் விடுவிக்கப்படுவோம். யாரெல்லாம் இதனை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிப்பர்.
பழைய ஏற்பாட்டின் கடைசித் தலைமை ஆசாரியனான யோவான் ஸ்நானன் உலகின் பாவங்களை இயேசுவின் மீது சுமத்தினான்
தேவதூதனிடமிருந்து யோவான் ஸ்நானனின் தகப்பனாகிய சகரியா கேட்டறிந்தான். சகரியா தன் மகனைக் குறித்து கூறிய சாட்சியை சோதிப்போமாக. அவனுடைய தந்தையின் சாட்சி மிகச் சரியானதில்லையா? சங்கீத வடிவில் பாடப்பட்ட அவனின் சாட்சியத்தைப் பார்ப்போமாக, “அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக் கொண்டு, நம்முடைய சத்துருக்கலின்றும், நம்மை பகைக்கிற யாருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சனியைக் கொம்பை ஏற்படுத்தினார். நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்து போவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்திரங்களிலே இருந்தான்.” (லூக்கா 1:67-80).
யோவான் எத்தகைய தீர்க்கதரிசியாகவும் ஆசாரியனாகவும் உருவாவான் என்று அவன் தந்தை முன்கூறினான். அவன் தன் மகனைக் குறித்து முன்கூறியவற்றைப் பார்ப்போமாக. “நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்து போவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.” (லூக்கா 1:76-79)
இங்கு வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது, “அவருடைய ஜனத்திற்கு பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்” இரட்சிப்பைத் தெரியப்படுத்துவது யார்? லூக்கா 1:76 யோவான் ஸ்நானனே அதுவென கூறுகிறது. நாம் இயேசுவை அறிந்து அவரில் விசுவாசித்திருப்பதற்கு யோவான் ஸ்நானனின் சாட்சியே காரணம். மிகப் பொருத்தமான முறையிலே இயேசு அவனிடம் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை ஏற்றுக்கொண்டு பாவிகளை இரட்சித்தார் என்று சாட்சி கூறினான். யோவான் ஸ்நானன் “தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்கச் சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல. அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்க வந்தவனாயிருந்தான்” (யோவான் 1:7-8).
நாம் இரட்சிக்கப்படவேண்டும்
யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் இயேசு மிகவும் பொருத்தமானதும் சரியானதுமான முறையில் எல்லா மக்களையும் இரட்சித்தார் என்பதை விசுவாசித்து நாம் விடுதலையடைய வேண்டும். இயேசு இவ்வுலகிற்கு மனித சாயலில் வந்து, யோவான் ஸ்நானனால் பொருத்தமானதும் சரியானதுமான முறையில் பாவங்களை ஏற்றுக்கொண்டு, சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிரோடெழுந்ததன் மூலம் பாவிகளை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார் என்று கர்த்தரின் நீதி கூறுகிறது. கர்த்தரின் நீதி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினுள் மறைந்திருக்கிறது.
இயேசு மனித சாயலில் அனுப்பப்பட்டார் என்றும் அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார் என்று நமக்கு போதிக்கும் நற்செய்தியை கர்த்தரின் நீதி வெளிப்பட்டது. யோவான் ஸ்நானனின் சாட்சியின் மூலமாக இயேசுவை நாம் விசுவாசித்தோம், இயேசுவின் நீதியை நாம் விசுவாசித்ததால், நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டோம். யோவான் ஸ்நானனின் மூலம் இயேசுவின் மீது விசுவாசம் வைத்ததால் அனைத்து மனிதர்களின் பாவங்களும் துடைக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள். நம்மை கர்த்தரின் பிள்ளைகளென சாட்சி கூறும் பரிசுத்த ஆவியானவரை அவர்கள் வரமாகப் பெற்றுக்கொண்டார்கள்.