(ரோமர் 6:12-19)
“ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்கு கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் நீங்கள் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே. மரணத்துக்கேதுவான பாவத்துக்கேதுவானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்கும் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்போழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமையானீர்கள். உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்கலை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தது போல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.”
கிருபை பெருகும்படி நாம் தொடர்ந்து பாவம் செய்யக்கூடாது
ரோமர் 6 ஆம் அதிகாரத்தில் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டபிறகு, நீதிமான் எப்படி வாழவேண்டுமென அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீதுள்ள ‘விசுவாசத்தை` அவன் மீண்டும் தெளிவுபடுத்துகிறான். இயேசுவின் ஞானஸ்நானம் சிலுவை, மற்றும் உயிர்த்தெழுதலிலுள்ள நம் விசுவாசத்தினால் ஒரே தரமாக நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமல் கர்த்தருடைய நீதியும் இரட்சிப்பும் நிறைந்தவர்களாய் நாம் இருக்க முடியாது. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டிராவிட்டால் பாவமன்னிப்பு பெற்ற பிறகு நாம் நீதிமான்களானோம் என்று கூறமுடியாது.
நம்முடைய அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு நம் பாவங்களுக்காக தீர்க்கப்பட்டதால் நாம் நீதிமான்கள் என்று உறுதியாக கூற முடிகிறது. ரோமர் 6 ஆம் அதிகாரம், விசுவாசத்தினால் இரட்சிப்பு மற்றும் நீதிமானின் அன்றாட வாழ்க்கை முறை ஆகிய இரண்டையும் குறித்து போதிக்கிறது. அவன் கூறுகிறான், “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படி பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.” (ரோமர் 6:1) முன்புள்ள வசனங்களில் அவன் கூறுகிறான், “மேலும் மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது” (ரோமர் 5:20-21) உலகின் பாவங்கள், அவை எத்தனை கொடியவைகளாக இருந்தாலும், அதனால் கர்த்தரின் அன்பையும் நீதியையும் விட அதிகமாக இருக்கமுடியாது. உண்மை வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தினால், கர்த்தரின் அன்பு மற்றும் நீதியினால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
மாமிசத்தினால் வாழும் நாம் நம் எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பைப் பெற்றிருந்தாலும் கிருபை பெருகும்படியாக நம்மால் தொடர்ந்து பாவம் செய்யமுடியாது என்று வேதாகமம் கூறுகிறது. “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல் நாமும் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம்” (ரோமர் 6:2-4).
ஞானஸ்நானத்தின் மூலம் இயேசுவுடனேகூட நாமும் மரித்தோம்
நம்முடைய பழையவைகள் இயேசுவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டன. நாம் பாவத்திற்கு மரித்தோமென்பது இதன் பொருள். நம்முடைய அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டு, நம்முடைய இடத்திலிருந்து அவர் மரித்தார். ஆகவே, இயேசுவின் மரணம், நாம் பாவத்திற்கு மரித்ததாகும் “அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம்.” நம்முடைய மாமிசத்திலான பழையவைகள், அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே அடக்கம் பண்ணப்பட்டன.
பாவிகளாகிய நம் பாவங்களை, ஞானஸ்நானத்தின் மூலம் அவர் தம்மீது ஏற்றுக்கொண்டு, பாவிகளாகிய நம்முடைய இடத்திலிருந்து சிலுவையில் மரித்தார். அவர் இயற்கையாக எந்தப் பாவமும் இல்லாதவர். ஆயினும், பாவிகளின் அனைத்துப் பாவங்களையும் அவர் தம்மீது ஏற்றுக்கொண்டு அவர்களுடைய இடத்திலிருந்து தீர்க்கப்பட்டார். நீங்கள் இதனை விசுவாசிக்கிறீர்களா? தீர்க்கப்பட்டது அவரல்ல, இயேசுகிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற பாவிகளாகிய நாம் அவருக்குள் தீர்க்கப்பட்டோம்.
இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு அப்போஸ்தலனாகிய பவுல் அதிகமுக்கியத்துவம் கொடுத்தான். நாமும் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கிக்கிறோம். விசுவாசத்தின் படி அவருடைய ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கிப்பது தவறல்ல. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவியொருவன் தன் கைகளை பாவபலியின் தலைமீது வைத்து, தன் பாவங்களை அதன் மீது சுமத்தி, அதனைக் கொன்றது போல, இயேசு தன் ஞானஸ்நானம் மூலம் பாவிகளின் பாவங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக மரித்தார்.
தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவிற்கு யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தான். பாவப்பலியாக அவர் ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் அனைத்துப் பாவங்களையும் அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். ஆகவே, அவரின் மரணம் நம் மரணமும், விசுவாசிகள் அனைவரின் மரணமுமாகும். இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் அவருக்குள்ளாக அடக்கம் பண்ணப் பட்டார்கள். இயேசுவினுள் ஞானஸ்நானம் பெறாதவர்களால் இரட்சிக்கப் படவோ, விசுவாசிக்கவோ, தம்மை வெறுக்கவோ, உலகை மேற்கொள்ளவோ முடியாது.
இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பவரால் மட்டுமே, அவன்/அவள் அவருடனே சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை அறிந்துகொள்ள முடியும். இந்நபர் தன்னைத்தானே வெறுத்து உலகை மேற்கொண்டு, அதனை ஆளுவார். அவன்/அவள் கர்த்தரின் வார்த்தையில் சார்ந்திருந்து அதனை விசுவாசிப்பர். உலகின் எல்லாப் பாவங்களையும் சுமக்க இயேசுவிற்கிருந்த ஒரே வழி ஞானஸ்நானமே என்பதை விசுவாசிப்பவர்கள் மட்டுமே அவரின் நிறைவான இரட்சிப்பாகிய பாவமன்னிப்பை பெறுவர்.
பாவமன்னிப்பின் மூலம் இரட்சிப்பு என்பதன் உட்பொருள் இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமுமாகும். இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொண்டிராவிட்டால், அவருடைய மரணம் நம் இரட்சிப்பிற்கு உதவியிராது. இயேசுவின் ஞானஸ்நானமே இரட்சிப்பிற்கான மூலப்பொருள். யோவான் ஸ்நானன் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்த போது உலகின் அனைத்துப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது.
நாம் கர்த்தருடன் வாழ்ந்து புதிய வாழ்க்கை பெற்றோம்
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான், “அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்.” (ரோமர் 6:4) இயேசுகிறிஸ்துவுடனே கூட ஞானஸ்நானம் பெற்றவர்கள் விசுவாசத்தினால் விடுதலைப் பெற்று அவருடன் அடக்கம் பண்ணப்பட்டு அவருக்குள் புதிய வாழ்வைப் பெற்றனர். இவ்விசுவாசம் பெரிதான விசுவாசமாகும். அவருடைய ஞானஸ்நானத்தின் மீது வைத்திருக்கும் விசுவாசமே, உறுதியான தரையிலே அஸ்திவாரம் இடப்பட்ட விசுவாசமாகும்.
“மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல் நாமும் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப் பட்டிருப்போம்” (ரோமர் 6:4-5). இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் கர்த்தருடன் ஐக்கியமாகலாம்.
இப்பொழுது இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பவர்களால் புதிய வாழ்வு வாழமுடியும். மறுபடியும் பிறப்பதற்கு முந்தியிருந்த பழைய மனிதன் இறந்து, நாம் புதிதாகி புதிய வேலைகளைச் செய்ய முடிபவர்களாய், புதிய வழிகளில், புதிய நம்பிக்கைகளினால் வாழுகிறோம். மறுபடியும் பிறந்த ஒருவன் பழைய வாழ்க்கை முறையின்படி வாழுவதுமில்லை, சிந்திப்பதுமில்லை. நம்முடைய பழைய சிந்தனைகளை நாம் மறுப்பதற்கு காரணம் நம் பழைய மனிதன் இயேசுகிறிஸ்துவுடன் சிலுவையில் மரித்ததுவே.
2 கொரிந்தியர் 5:17 கூறுகிறது, “பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொள்ள தேவன் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப்பட்டு, மரித்தவர்களிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார். பாவிகளை புதிய வாழ்க்கையில் நடக்கச் செய்யும்படியாக எல்லாப் பாவிகளையும் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார். கஷ்டம், தொல்லை, கசப்பு, அடிப்பட்ட இருதயங்கள் போன்ற “பழையவைகள்” மறைந்துபோயின. இப்பொழுது நம் புது வாழ்வு தொடங்கிவிட்டது. இரட்சிக்கப்படுதலே புது வாழ்க்கைக்கான தொடக்கப்புள்ளியாகும்.
இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து தப்பி கானான் தேசத்திற்குள் நுழைந்தபிறகு பஸ்கா பண்டிகையை ஆசரிக்குமாறு கர்த்தர் அவர்களிடம் கூறினார். எகிப்திலிருந்து வெளியேறியது பாவமன்னிப்பை பெற்றதற்கு ஒப்பாயிருக்கிறது. கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கூறினார், “கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்கு பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள். ஒரு வீட்டிலிருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியை புசிக்கிறதற்குப் போதுமான பேர்களயிராமற் போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல் வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத் தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத் தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாயிருக்க வேண்டும்; செம்மறி ஆடுகளிலாவது, வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாமிசத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதை அதைப் புசிப்பீர்களாக. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம் மட்டும் அதிலே மீதியாயிருக்கிறதை அக்கினியினால் சுட்டெரிப்பீர்களாக. அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அறைகளில் கச்சைக் கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.” (யாத்திராகமம் 12:1-11) பஸ்கா பண்டிகையில் ஆட்டுக்குட்டியின் மாமிசத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும், கசப்பான கீரையோடும் அதைப் புசிக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டதை நாம் நினைவு கூறவேண்டும்.
பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்ட பிறகு அநேக கசப்பான நிகழ்வுகல் நிகழும். கசப்பான கீரை தன்னைத்தானே மறுப்பதைக் குறிக்கிறது. இடுக்கண் கண்டிப்பாக வரும், ஆனால் கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்பட்டோம் என்று நினைவில் வைத்திருக்க வேண்டும். “அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார், அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள்” (ரோமர் 6:10-11).
இதுவே இயேசுவுடன் ஐக்கியமாகிய இருதயமாகும். அவர் நிறைவேற்றிய அவரின் ஞானஸ்நானம் சிலுவை மற்றும் உயிரோடெழும்பியது ஆகியவற்றை விசுவாசிப்பதின் மூலம் நாம் ஐக்கியமானவர்களானோம். அவரின் ஊழியமானது, அவரின் பிறப்பு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானம், சிலுவை மரணம், உயிரோடெழும்பியது, வானம் ஏகியது, மரித்தவர்களை நியாயம் தீர்க்க மீண்டும் வருவது ஆகியவையாகும். இவையனைத்தையும் விசுவாசிப்பது உண்மை விசுவாசமாகும், அதாவது இரட்சிப்பு, தீர்ப்பு, கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசமாகும்.
ரோமர் 6:10 கூறுகிறது, “அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்” இயேசு நம் பாவங்களை இடைவெளிவிட்டு கழுவவில்லை. இயேசு உலகின் பாவங்களை ஒரேதரமாக துடைத்தார். ரோமர் 6:10-11 கூறுகிறது, “அவர் பிழைத்திருக்கிறது தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார், அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள்” நாம் பாவத்திற்கு மரித்து கர்த்தரில் உயிருடன் இருக்கிறோம். இப்போது நாம் கர்த்தரில் உயிரோடிருக்கிறோம். நாம் புது வாழ்வு பெற்று புதிய படைப்புகளானோம்.
“ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்கு கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் நீங்கள் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோமர் 6:12-14).
“நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது.” நம்முடைய வாழ்க்கையில் எத்தனை பலவீனங்கள் வெளிப்பட்டாலும், விடுதலையடைந்த பிறகு நம்மிடம் பாவமில்லை. நம்மிடம் நிச்சயமாக பலவீனம் உண்டு, ஏனெனில் நாம் இன்னமும் மாமிசத்தினால் வாழுகிறோம். ஆயினும், பாவம் நம்மை ஆளாது. நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை, ஏனெனில் நாம் எத்தனை பலவீனர்களாக இருந்தாலும் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலமாக கிட்டிய தீர்ப்பு ஆகியவற்றை விசுவாசித்து பாவமன்னிப்பை பெற்றிருக்கிறோம். நம்முடைய மீறுதல்களும் பாவங்களே.
பாவத்தால் நம்மை ஆளுகைச் செய்ய முடியாது என்பது உண்மையே. நீதிமான்கள் பாவத்தின் ஆளுகைக்கு உட்படாமல் இருக்குமாறு கர்த்தர் செய்தார். நாம் எத்தனை பலவீனர்களாக இருந்தாலும், பாவம் நம்மை ஆளுகைச் செய்யாதிருக்கும்படி இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் தேவன் அவற்றை ஒரேதரமாக தெளிவாகக் கழுவினார். பாவத்தின் கூலியை சிலுவையில் கொடுத்தார். தேவன் பாவத்திற்கான கூலியைக் கொடுத்து விட்டதால், விசுவாசிகளிடம் பாவமில்லை.
அநேக பலவீனங்களும் மீறுதல்களும் தம்மில் வெளிப்படுவதை நீதிமான்கள் காண்பார்கள், ஆனால் அவர்கள் தேவன் மீது விசுவாசத்தினால் சார்ந்திருக்கும்போது எந்த ஆக்கினையும் வராது என்பதோடு பாவத்தால் அவர்களை ஆளமுடியாது. ஆகவே நாம் நம் புதிய வாழ்க்கையில் நடக்கமுடியும்.
உங்கள் அவயவங்களை நீதியின் கருவிகளாக ஒப்புக்கொடுங்கள்
ஒவ்வொரு நாளும் புது வாழ்வில் வாழும்படி தேவன் நீதிமான்களை ஆசிர்வதித்தார். ஆயினும் அவர்களால் தொடர்ந்து பாவம் செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. ரோமர் 6:13 கூறுகிறது, “நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.”
“முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும்” இயற்கையாகவே நாம் பாவத்திற்கு அடிமையாயிருந்து பாவம் செய்வதில் சிறந்தவர்களாக இருந்தோம், ஆனால் வேதாகமம் கூறுகிறது, “இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்தினனின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு நீதிக்கு அடிமைகளானீர்கள்.” (ரோமர் 6:17-18)
நீதிமான்களாகிய நாம் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கர்த்தரின் நீதிக்கு அடிமைகளானோம். நாம் பாவங்களிலிருந்து முற்றிலும் விடுதலையாகியதால் நீதிமானாக இருக்க முடிகிறது. நாம் அவருடைய நீதிக்கு பணியாற்றும் நீதிமன்களானோம்.
விடுதலையான பிறகு மாமிசத்தை என்ன செய்வோம்? நாம் இரட்சிக்கப்பட்டபிறகு மாமிசத்தின்படி எப்படி நடந்துகொள்வோம்? வேதாகமம் கூறுகிறது, “உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:19). நாம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப் பட்டிருந்தாலும் கூட நம் மாமிசம் என்ன செய்கிறது? நம்முடைய இருதயங்களில் பாவங்களில்லாவிட்டாலும் கூட மாமிசம் வழக்கமாக பாவம் செய்கிறது. ஆகவே நீதியின் அடிமைகளாக நம் மாமிசத்தை ஒப்புக்கொடுத்தால் பாவம் செய்வதைத் தவிர்க்கலாம். நாம் நீதிமான்களாக்கப்பட்டபடியால், நம் மாமிசத்தை நீதியின் செய்கைகளுக்கு ஒப்படைக்கவேண்டுமெனவும் இது பொருள்படுகிறடுது.
நாம் தேவபக்திக்கேதுவாக முயற்சி செய்ய வேண்டும்
நாம் இரட்சிக்கப்பட்டபிறகு நம் மாமிசம் பலவீனமுடையதாக இருந்தாலும் கூட நாம் பாவிகளா? இயேசுவின் ஞானஸ்நானம், சிலுவை, உயிரோடெழும்பியது, இரண்டாம் வருகை, இயேசுவின் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை விசுவாசிப்பவர்களிடம் நிச்சயமாக பாவங்களில்லை. அவர்கள் பாவமற்றவர்கள். நம்முடைய சரீரத்தை நீதியின் செய்கைக்கு மட்டும் ஒப்புக்கொடுக்கவேண்டும், நம்முடைய இருதயங்கள் கூட நீதிக்காக பணிசெய்ய விழைகிறது. ஆனால் அவருடைய நீதிக்கு சேவை செய்வது மாமிசம் அத்தனை சிறந்ததல்ல. ஆகவே, 1 தீமோத்தேயு 4:7 கூறுகிறது, “தேவபக்திக்கேதுவாக முயற்சி பண்ணு” தேவபக்தியை நோக்கி நாம் முயற்சி பண்ணவேண்டும்.
அது குறுகிய நேரத்தில் செய்யப்படும் ஒன்றல்ல. மற்ற மக்களுக்கு நற்செய்தி நூல்களைக் கொடுக்கும்போது, நமக்கு தெரிந்தவர்கள் யாராவது வந்தால் வெட்கப்படுவோம். நாம் வெட்கமடைந்ததால், அவர்களைத் தவிர்த்து வீட்டிற்கு திரும்புவோம். “என்னுடைய பழைய மனிதன் ஏற்கெனவே இறந்து போனான்” என்று நமக்குள் அநேக தரம் நினைத்தால், “பாவ விடுதலை இல்லையென்றால் நீங்கள் நரகம் செல்வீர்கள், ஆகவே பாவ விடுதலை பெறும்பொருட்டு இந்தப் புத்தகத்தைப் பெற்று அதனை வாசியுங்கள்” என்று தைரியமாக கூறுவோம். நீங்கள் அப்படி செயல்புரிவதன் மூலம் உங்கள் சரீரத்தை நீதிக்கு ஔப்புக்கொடுக்கலாம்.
பரிசுத்தமாகும்படி, நீதிக்கு உங்கள் உறுப்புகளை ஒப்புக்கொடுங்கள் என்று ரோமர் 6 ஆம் அதிகாரம் கூறுகிறது. நம்முடைய உறுப்புகளை நீதியின் அடிமைகளாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அதனை அநேகந்தரம் பயிற்சி செய்யவேண்டும். அது குறுகிய நேரத்தில் செய்யப்படுவதல்ல. நாம் மீண்டும் மீண்டும் முயற்சிசெய்யவேண்டும். ஆலயம் செல்ல முயன்றால், அப்படிச் செய்வது எத்தனை மகிழ்ச்சியானது என்பதை நாம் அறிவோம். “நான் அதனை விசுவாசிக்கிறேன், ஆனால் நான் எல்லாவற்றையும் வீட்டிலேயே விசுவாசிப்பேன். எனது போதகர் எதனைப் பிரசங்கிப்பார் என்று எனக்குத் தெரியும்” என்று நாம் எண்ணக்கூடாது. மாமிசமும் இருதயமும் ஆலயத்தில் இருக்கவேண்டும். நம் உறுப்புகளை நீதியின் அடிமைகளாக ஒப்புக்கொடுக்கையில் மட்டுமே நம்மிருதயத்தில் விசுவாசம் வளருகிறது.
நம்முடைய உறுப்புகளை நீதியின் செய்கைக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். நான் என்ன கூறுகிறேன் என்று காண்கிறீர்களா? ஒன்றாக கூடுவதையும் தலைவர்களைச் சந்திப்பதையும் நாம் விட்டுவிடக்கூடாது. நீங்கள் சந்தைக்கு செல்லும்போது, ஆலயத்திற்குள் நுழைந்து “சந்தைக்கு போகும் வழியில் ஆலயத்திற்குள் வந்தேன். இங்கு என்ன நடக்கிறது” என்று கேட்கவேண்டும். ஆலயத்திற்கு அடிக்கடி செல்வது உங்கள் உறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக்குவதாகும்.
அப்பொழுது ஒரு தலைவர் கூறுவார், “சகோதரியே, இதனை தயவுசெய்து சுத்தம் செய்வீர்களா?”
“சரி”
“தயவுசெய்து சாயங்காலமாக வாருங்கள்.”
“ஏன்”
“இன்று சாயந்திரம் வாலிபர்களுக்கான கூட்டமிருக்கிறது.”
“சரி, நான் சாயங்காலம் வருகிறேன்.”
உலகில் நாம் மிகவும் பரப்பாக இருக்கிறோம், ஆனால் உலகின் மக்கள் தம் கூட்டங்களுக்கு வரச் சொல்லி நம்மை அழைக்கும்போது, எங்கு நம் மாமிசத்தை ஒப்படைக்கிறோம்?
ஆலயத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். நம் உடன் ஊழியர்கள் தம்முடன் இரவு உணவு அருந்துமாறு அழைத்தாலும், நாம் ஆலயத்திற்கே செல்லவேண்டும். நம்முடைய இருதயங்கள் ஆலயத்திலிருந்தாலும், நம் சரீரம் உலகத்திலிருப்பதை அனுமதிக்க கூடாது. நம்முடைய சரீரத்தை உலகினுள் தப்ப அனுமதிக்காது ஆலயத்தில் இருக்கும்படி செய்தால் நம் சரீரமும் இருதயமும் சுகப்படும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மாமிசம் மனித இடங்களுக்கு உங்களை இழுத்துக்கொண்டிருந்தால், உங்கள் இருதயம் ஆலயத்துடன் ஐக்கியமாக இருக்கவிரும்பினாலும், நீங்கள் கர்த்தருக்கும் உங்கள் சித்தத்திற்கும் எதிரிகளாவீர்கள்.
ஆவியுடன் மாமிசம் ஒருங்கிணையும்படி முயல வேண்டும்
மாமிசத்தை நீதியின் அடிமைகளாக ஒப்புக்கொடுக்க வேண்டும், ஆனால் இதன் பொருள் மாமிசம் குறைவற்றது என்பதல்ல. நம்முடைய சரீரம் அதற்கு பிரியமானதைச் செய்ய முயன்றாலும், நம் உறுப்புகளை நீதியின் செய்கைகளுக்கு மீண்டும் மீண்டும் ஒப்படைக்கவேண்டும். நாம் தெரிந்த வழியில் செல்வோம். அது நம்முடைய மாமிசத்தை எதற்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கிறோம் என்பதிலிருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான், “பரிசுத்தமாகும்படி உங்கள் உறுப்புகளை நீதியின் அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். உங்கள் உறுப்புகளை கர்த்தரின் நீதியின் கருவிகளாக ஒப்புக்கொடுங்கள்.” அது உங்கள் மாமிசத்தை எப்படி பழக்கப்படுத்துகிறீர்கள் என்பதிலிருக்கிறது. உங்கள் மாமிசத்தை குடிக்கப் பழக்கினீர்களென்றால், மாமிசம் குடிக்கப் போகிறது. ஆகவே, நீங்கள் ஆலயத்திலிருக்கும்போதும் உங்கள் மாமிசம் மதுபான கடைகளை நாடுகிறது. மதுபானக் கடையில் அமர்ந்திருக்கும்போது, உங்கள் இருதயம் வேதனையை உணறுகிறது. ஆனால், நீங்கள் ஆலயத்திற்குள் இருந்தால், மாமிசம் வேதனைப்பட்டாலும் இருதயம் சுகமடைகிறது.
மாமிசத்திற்கு தன்மை இருக்கிறது. மாமிசம் இருதயம் அதனை பழக்கப்படுத்தியதைச் சார்ந்திருக்கிறது. தொடர்ந்து குடிக்கும்போது, மாமிசம் கூறுகிறது, “நான் சாராயத்தை விரும்புகிறேன்” நாம் குடிக்காமல் இருக்கும்போது “குடிப்பதை வெறுக்கிறேன்” என்று மாமிசம் கூறுகிறது. ஏன்? ஏனெனில் மாமிசம் அதற்குப் பழக்கப்படவில்லை. நம்முடைய இருதயம் பரிசுத்தமானதாக இருந்தாலும், நாம் மாமிசத்தைப் பழக்கப்படுத்துதில் அது இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மிருதயத்தை பொறுப்பெடுத்துக்கொள்கிறார். நாம் ஆலயத்திற்கு வெளியிலிருந்தாலும் பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தாங்குகிறார். ஆயினும், பரிசுத்தமடையும்படி நம் சரீரத்தை நீதியின் அடிமையாக ஒப்படைக்கவேண்டும். ஆகவே, எப்படியாயினும் மீண்டும் மீண்டும் ஆலயம் செல்லுங்கள்.
இரட்சிக்கப்பட்டவர்கள் தேவபக்திக்கேதுவாக முயற்சி செய்யவேண்டும். கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதனால் வழி நடத்தப்படவேண்டுமென வேதாகமம் கூறுகிறது. நாம் ஏன் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படியவேண்டுமென்றால், நாம் நம் சரீரத்தை நமதாகக் கருதி, நம் மாமிசம் விரும்புவதற்கேற்ப செயல்பட விரும்புகிறோம். நடனமாடவும், குடிக்கவும் கண்ட இடத்தில் சுற்றவுமாக இருப்பதால், ஆலயத்தின் ஆராதனையில் கவனமாக இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆகவே, ஒரு தலைவர் நம்மை வழிநடத்தவேண்டும்.
“உங்களுக்கு இங்கே ஒரு இருக்கை இருக்கிறது, கர்த்தருடைய வார்த்தையை கேளுங்கள்.”
“சரி.”
ஒரு பிரசங்கத்தை கேட்கும்போது, அது இழுப்பது போலிருந்தாலும், பொறுமையுடன் இருக்கவேண்டும். “இங்கு நான் பொறுமையுடன் இருக்கவேண்டும். நான் ஏன் ஆவலில்லாமல் இருக்கிறேன், என்னால் எப்படி மதுபானக்கடையில் 3 மணிநேரம் அமர்ந்திருக்கமுடிகிறது? என்னால் ஏன் இங்கு ஒரு மணி நேரம் கூட இருக்கமுடியவில்லை. பிரசங்கம் கேட்டு ஒரு மணி நேரமே ஆகிறது. அந்த மதுபானக் கடையில் 5 மணிநேரம் குடித்தேன். இடைவெளிவிடாது 20 மணி நேரம் போக்கர் விளையாடினேன்.”
அது மாமிசத்தை பழக்கப்படுத்துவதிலிருக்கிறது. ஆலயத்தில் உட்காரும் மாமிசம் மதுபானக் கடைகளுக்குப் போவதை வெறுக்கிறது. ஆயினும், மாமிசத்தைக் குடிக்கப் பழக்கிய ஒருவனுக்கு ஆலயத்தில் அமருவது நரகத்திலிருப்பதைப் போன்றதாகும். நீங்கள் அநேக நாட்கள் தொடர்ந்து முயற்சித்தால், அப்படி முயல்வதை கற்றுக்கொள்வீர்கள். உங்களுடைய மாமிசத்தை பழக்கப்படுத்தும் வரை அது மிகவும் கடினமானது. மற்றவற்றை நம் நேரத்தில் செய்ய விரும்பும் அதே நேரம், நம் நேரத்தை ஆலயத்திலும் செலவு செய்யவேண்டும்.
தலைவர்களுடனும், சகோதர சகோதரிகளுடனும் பேசுவது போன்று நம் நேரத்தை ஆலயத்தில் செலவிடுவதன் மூலம் அவற்றைப் பழக்குகிறோம். ஆலயத்தில் நான் சுகமாக இருக்கிறேன். என்னை விழப்பண்ணும் எதுவும் அங்கில்லை. ஆயினும் தெருவில் நான் நடக்கும்போது என்னை விழப்பண்ணும் காரியங்கள் அநேகம் இருக்கின்றன! துணிக்கடைகளில் இருக்கும் ஆடைகளைப் போல் நம்மை கவரும் அநேக காரியங்கள் அங்கிருக்கின்றன. நான் விரும்பும் அனைத்தையும் பார்த்து முடித்து வீடு திரும்ப 2 மணி நேரமாகிறது, இதனால் நான் நாசமாகப் போகலாம்.
ஏதாவது வித்தியாசமானவை அங்கிருந்தால் அதனைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பின்னால் நான் உணருவேன். ‘நான் எப்போது வீட்டில் சேருவேன்? என்னை வீட்டிற்கு கூட்டி சேர்க்க யாராவது வேண்டும்.` ஆகவே, வீட்டிற்கு செல்கையில் இங்கும் அங்கும் சுற்றாதீர்கள். ஆராதனை முடிந்த பிறகு ஆலய பஸ்களில் ஏறி நேராக நம் வீடுகளுக்குச் செல்ல வேண்டும். “ஆலயம் செல்ல பஸ்ஸில் ஏறும்படி என்னை அழைக்காதீர்கள். நானே ஆலயம் செல்வேன். என்னிடம் இரண்டு உறுதியான கால்கள் இருக்கின்றன, ஆகவே, ஆலயம் செல்வதற்கு ஆலய பஸ்ஸில் செல்வது அவசியமில்லாதது.” என்று நீங்கள் நினைத்தால் போகும் வழியில் வஞ்சிக்கப்படலாம். ஆலயத்திற்கு செல்லவும் ஆராதனை முடிந்த பிறகு எந்தக் கவலையுமின்றி வீட்டிற்குச் செல்லவும் ஆலய பஸ் இருப்பதற்காக நீங்கள் நன்றியுடையவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் வீடு சென்றதும் வேதம் வாசித்து, ஜெபித்து படுக்கைக்குச் செல்லலாம்....
இப்படி வாழ்வது உங்களுக்கு நலமாயிருக்கும். ஒரு மனிதன் இப்படி நினைக்கலாம். ‘என்னுடைய விசுவாசம் உறுதியானது. என்னிடம் பாவமில்லை. நான் இதனை நிரூபிப்பேன், நான் மதுபான கடைக்குச் சென்றால் கூட மது அருந்தமாட்டேன். பாவம் பெருகிய இடத்தில், கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. நான் கிருபையினால் நிரப்பப்பட்டேன்.` அவன் இப்படி நினைத்து மதுபான கடைக்குச் சென்றால் அவன் நண்பன் கூறுவான், “ஏய்! இதனைக் கொஞ்சம் குடி.”
“இல்லை, நான் குடிப்பதைப் பார்த்திருக்கிறாயா? நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன்.”
“பரவாயில்லை, சிறிது குடி.”
“இல்லை.”
“ஒரு கோப்பை சாராயத்தை நீ ஏன் குடிக்கக்கூடாது?”
அவன் நண்பன் சாராயத்தை ஒரு கிளாஸில் ஊற்றி அவனிடம் கொடுக்கிறான். ஆனால் அவன் நினைக்கிறான் “நீ என்னை சாராயத்தைக் குடிக்கும்படிச் செய்தாலும் நான் சோடாவைத் தான் குடிக்கிறேன்” அப்பொழுது அவன் அநேக நாட்களுக்கு முன்பு குடித்ததை நினைவு கூறுகிறான். அவன் நினைக்கிறான் “அது எத்தனை சுவையாக இருக்கும். நீ இன்னும் ஒருமுறை சாராயத்தை எனக்கு கொடுக்கக்கூடாது? இன்னும் ஒருமுறை மட்டும் குடிப்பேன்.” அவன் சோடாவை சீக்கிரமாகவே முடித்துவிடுகிறான்.
அவன் நண்பனுக்கு இது புரிந்துவிடுகிறது, எனவே காலியான கிளாஸில் சாராயத்தை ஊற்றுகிறான்.
“இது மிகவும் இலகுவானது. இதனை காக்டெயிலைப் போல் குடி.”
“இல்லை, நான் குடிக்கக்கூடாது. நான் இயேசுவை விசுவாசிப்பது உனக்குத் தெரியாதா?”
ஆயினும் கடைசியில் ஒரு கிளாஸ் சாராயத்தை அவன் குடிக்கிறான், அவன் நண்பனுக்கு இவனொரு குடிகாரன் என்பது தெரியும்.
“இன்று மட்டும் குடி.”
“சரி, நான் இன்று மட்டும் குடிக்கிறேன், ஆனால் நீ இயேசுவை விசுவாசிக்கவேண்டும், சரியா? நான் குடித்தால் கூட என்னிடம் பாவமில்லை. உன்னிடம் பாவமிருக்கிறதா? நீ உன் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படவேண்டும்.”
நம் சரீரத்தை எங்கு கொடுக்கிறோம் என்பது முக்கியமானது
மனிதர்கள் அத்தகையவர்கள். அவர்களிடம் எந்த சிறப்புமில்லை. நாம் எங்கு நம் சரீரத்தை ஒப்புக்கொடுக்கிறோம் என்பது முக்கியமானது. பரிசுத்தமாகும்பொழுது உங்கள் உறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். மாமிசம் பரிசுத்தமில்லாததால் அதனை பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள். இங்கு குடிப்பதை உதாரணமாகக் காட்டினேன். மற்றவை கூட இதைப் போன்றவையே. அது நாம் நம் சரீரத்தை எப்படி பழக்குகிறோம் என்பதிலிருக்கிறது.
ஒரு மூச்சில் நாம் இரட்சிக்கப்பட்டோம், அது நிரந்தரமானது, ஆனால் நம்மிருதயம் மற்றும் மாமிசத்தின் தேவபக்தியானது நம் மாமிசத்தை எங்கு ஒப்படைக்கிறோம் என்பதிலிருக்கிறது. நம்முடைய இருதயம் சுத்தமாக இருந்தாலும், நம் மாமிசத்தை அழுக்கிற்கு ஒப்படைக்கும்போது இருதயமும் அழுக்கானதைப் போல் உணறுகிறோம். அதன் பிறகு சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு நம் விசுவாசத்தை மறுத்து, ஆலயத்திற்கு எதிராக நடந்து கர்த்தரின் பெயரை வீணில் வழங்கி, கர்த்தரின் சமூகத்தை விட்டு தூரமாகிவிடுகிறோம். முடிவில் நாம் அழிவிற்கு வந்து விடுகிறோம்.
ஆகவே, நீங்களே உங்களை அழித்துப் போடாதபடி எச்சரிக்கையாயிருங்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டபிறகு நம் பாவங்களை எப்படிச் சமாளிப்பது? “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.” நாம் அநேக முறை பாவஞ்செய்தாலும், தேவன் நம் பாவங்களை முற்றிலுமாக கழுவிவிட்டதால் நாம் மீண்டும் பாவிகளாவதேயில்லை.
ஆயினும், நம் மாமிசம் மீண்டும் மீண்டும் தீயவற்றையே நாடினால் அது பிரச்சினையாகிவிடும். நம்முடைய மாமிசத்தை எங்கு ஒப்படைப்பது? மாமிசம் அதற்கு எற்படுத்த வழியில் செல்ல வேண்டும். இதனை நீங்கள் புரிந்துகொள்வதற்கு இதுவரை கூறினேன்.
இருதயம் பரிசுத்தமானது போல் மாமிசமும் பரிசுத்தமாக முடியும், அதனை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்தால், கர்த்தருக்கு முன்பாக அதனால் நீதியின் அடிமையாக இருக்கமுடியும். நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு எப்படி வாழ்வது என்று தெரியாவிட்டால் நம் வாழ்வை ஆலயத்தை மையமாக்கி வாழவேண்டும். ஆலயம் குடும்பத்தைப் போன்றது என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு வீட்டில் எப்படி நீர் அருந்தி மற்றவர்களிடம் பேசுகிறோமோ, அது போலவே, ஆலயத்தில் நீர் பருகி, ஆவிக்குரிய உணவை உண்டு தொடர்ந்து ஐக்கியமாக இருக்கலாம்.
ஆலயம் வீட்டைப்போன்றது. நாம் தொடர்ந்து ஐக்கியமாக இருப்பதுடன், ஆலயத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதால், எப்படியாயினும் ஆலயம் செல்வோம். ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்லும் ஒரு நபர் ஆவிக்குரிய நபராகிறார். ஆலயத்திற்கு செல்லாத ஒரு நபரின் விசுவாசம் எத்தனை பெரிதாயினும் அவனால்/அவளால் ஆவிக்கேற்றபடி நடக்கமுடியாது. ஆலயத்திற்கு செல்லும் ஒரு நபர் எத்தனை பலவீனமானவராக இருந்தாலும், அவன்/அவள் ஆவிக்குரிய வளர்ச்சியைப் பெறுவர். இதற்கான காரணம் அவர்கள் விடுதலையான பிறகு கிட்டும் மற்றவர்களுடனான ஆவிக்குரிய ஐக்கியமே.
நாம் சஞ்சரிப்பதற்கு ஆலயத்தை விட்டால் வேறிடமில்லை. நீங்கள் கர்த்தரின் ஆலயத்திற்கு உங்களுக்கு முடிந்த அளவு, அநேக முறை வந்து, அவரின் மக்களுடன் தொடர்ந்து ஐக்கியமாக இருங்கள். ஆலயத்திற்கு வாருங்கள், ஒவ்வொரு ஆராதனையிலும் பங்கு பெறுங்கள், கர்த்தரின் வார்த்தைக்கு செவி கொடுங்கள். நீங்கள் செய்ய திட்டமிட்டிருப்பவைகளைக் குறித்து ஆலய மூப்பர்களுடன் ஆலோசனைச் செய்யுங்கள்.
நம் வாழ்வில் கர்த்தரின் வார்த்தையை மையப்படுத்தி, அனைவரும் ஒன்றாகச் சேரவேண்டும். அப்பொழுது நம் விசுவாச வாழ்வில் தோல்வி இல்லாமல் வெற்றி பெறலாம். அப்போது நாம், தேவனால் சரியாக பயன்படுத்தப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் முடியும். உங்கள் மாமிசத்தையும் இருதயங்களையும் கர்த்தரின் நீதியின் கருவிகளாக ஒப்படைக்கவேண்டுமென விரும்புகிறேன்.