• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 7-1] ரோமர் 7 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம்

கர்த்தரின் சட்டத்தின்படி தான் விடுவிக்கப்படுவதற்கு முன் தன்னுடைய சரீரமானது மரண ஆக்கினைக்கு உட்பட்டது என்பதை தெரிவிக்கும் வகையில் இயேசு கிறிஸ்துவைத் தான் விசுவாசித்ததின் லம் பாவத்திற்கு மரித்ததாக அப்போஸ்தலனாகிய பவுல் தன் விசவாச அறிக்கையைக் கூறினான். கர்த்தரின் நீதியை நாம் சந்தித்தமைக்கு முன் அதாவது நாம் மறுபடியும் பிறக்கும் முன் கிறிஸ்துவை விசுவாசித்த நாம் சட்டத்தின் ஆளுகைக்குள்ளும் அதன் சாபத்திற்குள்ளும் வாழ்ந்தோம். கர்த்தரின் நீதியை நமக்கு எடுத்து வந்த இயேசு கிறிஸ்துவை நாம் சந்தித்து நம் பாவங்களிலிருந்து நாம் விடுவிக்கப்படவில்லையெனில் சட்டம் நம்மைத் தொடர்ந்து ஆண்டுக் கொண்டிருக்கும்.
சரீரத்தால் புரிந்து கொள்ள முடியாத ஆவிக்குரிய உண்மைகளைப் பவுல் பேசுகிறான். அதாவது யாரெல்லாம் பாவத்திற்கு மரித்தார்களோ அவர்கள் பாவத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்களல்ல. ஒரு கணவன் இறக்கப்பட்ட பெண், அவனிற்று கடமைகள் செய்வதிலிருந்து எப்படி முற்றிலும் விடுதலைப் பெற்றாலோ அதற்கு ஒத்தது. இந்த வசனமானது மிகவும் இலகுவானதாக தோன்றலாம். ஆனால் ஆவிக்குரிய படி இது மிகவும் முக்கியமானதாகும். இதன் பொருள் கீழ்வருமாரு. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, கர்த்தரின் நீதியை சந்திக்காதவர்களெல்லாம், சட்டத்தின் சாபவத்தினடியில் வாழும்படி விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தம் பாவம் பிரச்சனையை இதுவரை தீர்க்காததே இதற்கான காரணம்.
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்று ரோமர் 6:23 நம்மிடம் கூறுவதின் பொருள், பாவத்திற்கான சம்பளம் கொடுக்கப்பட்ட பிறகே பாவம் மறையும் என்பதாகும். ஒருவர் இயேசுவை விசுவாசித்தாலும், இயேசுவினால் கொடுக்கப்பட்ட கர்த்தரின் நீதியைக் குறித்து அவர் அறிந்து கொள்ளவில்லையெனில், அவர் தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதோடு, பாவத்திற்கான சம்பளத்தையும் கொடுக்க வேண்டும். இதனால் தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தரின் நீதியை நாம் சந்திக்க வேண்டும். கர்த்தரின் நீதியை நாம் சந்திப்பதன் மூலம் மட்டுமே பாவங்களுக்கு நாம் மன்னிக்கப்பட முடியும். மேலும் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நம் புதிய மணவாளனாகிய கிறிஸ்து இயேசுவுடனே கூட திருமணம் செய்து கொள்ளவும் முடியும்.
இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தரின் நீதியை நம்மால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்த கர்த்தரின் நீதியை நாம் விசவாசிக்காவிட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து எவராலும் விடுதலையடைய முடியாது. சட்டத்தின் சாபத்தினை முறித்து அதிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி கர்த்தருடைய நீதியை அறிந்து அதனை விசுவாசிப்பதே. இயேசுவின் மூலம் கர்த்தரின் நீதியை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? அப்படியில்லையெனில், உங்களின் சொந்த நீதியை விட்டுவிட்டு கர்த்தரின் வார்த்தைக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே.
 
 
பாவத்திற்கு மரித்த பின் கிறிஸ்துவிடம் செல்லுதல்
 
ரோமிலுள்ள தன் சகோதர்களுக்கு பவுல் கூறினான், “கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.” இங்கு “கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்” என்ற வசனத்தின் துல்லியமான பொருளை புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் சரீரத்தின் மூலமாக பாவத்திற்கு மரிக்காமல் கிறிஸ்துவிடம் யாராலும் செல்ல முடியாது. வேறு வார்த்தையில் கூறுவதனால் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் நம் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நாம் மற்றும் அவரின் சிலுவை மரணத்தை ஒருவர் விசுவாசிக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதன் மூலமே கிறிஸ்துவுடனே கூட நம்மால் பாவத்திற்கு மரிக்க முடியும். யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொண்டு அதனோடு இயேசு மரித்தமையால் இதனை நாம் விசவாசிக்கும் போது நம் பாவங்களும் கூட இதனுடனே கூட மன்னிக்கப்படுகிறது. யோவான் இயேசுவிறிகு அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதே உண்மை. இந்த உண்மையை நாம் தெரிந்திருப்பது மட்டும் போதாது. இதனை விசவாசித்துடனே கூட நம்மிருதயங்களிலும் வைத்திருக்க வேண்டும். கர்த்தரின் ராஜ்யத்தினுள் நாம் பிரவேசிக்கும் வரை இந்த விசவாசத்தை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். இதனால் தான் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக சட்டத்திற்கு நாம் மரித்தோம் என்று பவுல் கூறுகிறான். ஆகவே இந்த உண்மையை விசவாசிப்பவர்களால் இயேசு கிறிஸ்துவிடம் செல்ல முடிவதோடு அவருடனே வாழ்ந்து கர்த்தருக்காக நீதியின் கனிகளைக் கொடுக்க முடியும்.
இந்த நிருபத்தின் பழையத் தன்மையை நாம் விசுவாசிக்கக் கூடாது. ஆனால் ஆவிக்குரிய புதிய உண்மையை விசவாசிக்க வேண்டும். சட்டத்தின் படி பாவிகள் அதிகப் பாவங்களைச் செய்கின்றனர். அவர்களினுள்ளே மறைந்திருக்கும் பாவங்களை சட்டமானது வெளிப்படுத்துவதே இதற்கான காரணம். இதன் மூலம் அவர்களுடைய பாவங்களைக் குறித்த சிறந்த அறிவை அவர்கள் பெறுவதால் இன்னமும் அதிக பாவங்களைச் செய்ய இது அனுமதிக்கிறது. சட்டத்தின் ஒரு முக்கியவேலை நம்பாவங்களை நாம் அறியச் செய்வது என்றாலும் நம் பாவச் சுபாவங்களையும் இது வெளிப்படுத்துவதால் இன்னமும் அதிக பாவங்களைச் செய்ய இது அனுமதிக்கிறது. கர்த்தர் நமக்கு சட்டத்ததைக் கொடுத்திருக்கா விட்டால் நமக்குள் இத்தனைப் பாவங்கள் ஒளிந்திருப்பது தெரியாது போயிருக்கும். ஆனால் கர்த்தர் சட்டத்தைக் கொடுத்தார். இச்சட்டம் பாவத்தை இன்னமும் அதிகரிக்கச் செய்யாமல் நம்மை அதிகமதிகமாய் பாவம் செய்யவும் தூண்டுகிறது.
ஆகவே கிறிஸ்துவின் சரீரத்தின் மூலமாக நாம் பாவத்திற்கு மரித்தமையாலே கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நம்பிக்கையுடன் தேவனுக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டுமென்று பவுல் கூறினார். பரிசுத்த ஆவியானவரின் உதவியுடனே தேவனை ஆராதிக்க வேண்டுமென்று அவர் கூறுகிறார். மேலும் எங்கள் விசுவாசத்திற்காக கொடுக்கப்பட்ட பாவ விடுதலையின் ஈவை நம் இருதயங்களில் மிக ஆழத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமெ தவிர வார்த்தையின் சொற்படி அவருக்கு விசுவாசத்துடன் ஊழியம் செய்ய வேண்டும் என்பதல்ல. வேதாகமம் “எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது” எனக் கூறுவதைப் போல் கர்த்தரின் நீதியாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் உண்மைப் பொருளை உணர்ந்து தேவனை நாம் பின்பற்ற வேண்டும். வேறு வார்த்தையில் கூறினால் எழுதப்பட்டுள்ள வார்த்தையில் மறைந்துள்ள உண்மைப் பொருளை அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.
 
 
அப்படியானால் சட்டம் பாவமாகுமா? நிச்சயமாய் இல்லை!
 
கர்த்தரின் சட்டம் செய்யும் காரியங்களைக் குறிப்பிடுவதின் மூலம் பவுல் இதனை விளக்குகிறான். சட்டத்தின் செயல்பாட்டைச் சரிவர புரிந்து கொண்டு அதனை விசுவாசிப்பது முக்கியமானது என இது காட்டுகிறது. முன்னால் தன்னுடைய சொந்த வழியில் பவுல் தனது பாவங்களைப் பார்த்தான். இதனால் அவனுக்குத் தன் பாவங்களைக் குறித்து தெரியவில்லை. ஆனால் கர்த்தரின் சட்டத்தின் மூலமாக தன் பேராசை மிக்க இருதயத்தை உணர முடிந்தது.
சட்டத்தைக் குறித்து பவுல் எதைப் புரிந்து கொண்டாரோ அதைப் போலவே இன்று இயேசுவை விசவாசிப்பவர்களாலும் அதனைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நான் நம்புகிறேன். சட்டத்தைக் குறித்த உண்மை தெரியாமல் சட்டத்தின்படி வாழ அநேக மக்கள் மிகக் கடினமான வாழ்வை வாழ முயலுகின்றனர். இன்னும் சிறிது கடினமாக முயன்றால் எல்லாச் சட்டங்களையும் அவர்களால் கடைப்பிடிக்க முடியுமென எண்ணி ஆலயத்திற்கு செல்லுகின்றனர். ஆனால் உண்மையில் பார்த்தால் கர்த்தரின் நீதியை இம்மக்களால் அறிந்து கொள்ளவே முடியாது.
கர்த்தர் சட்டத்தை அளித்தமைக்கான உண்மைக் காரணத்தை அவர்கள் அறிந்து கொள்ளாததால் அவர்கள் சட்டத்தைக் கடை பிடிப்பவர்களாயினர். அவர்கள் தம் சொந்த இருதயங்களைக் கூட பார்க்க முடியாத கபட்டுக் குருடர்கள். கிறிஸ்துவ சமூகத்தில் கர்த்தரின் நீதியை எதிர்த்து நிற்பது அவர்களுக்குத் தெரியாது. இன்றைய கிறிஸ்தவத்தில் இத்தகைய அநேக மக்கள் இருக்கிறார்கள். கர்த்தரின் நீதியை உண்மையாகவே அறியாமல் சட்டப்படியான விசுவாசத்தின் மூலம் இயேசுவைத் தமது இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களால் நித்திய மரணத்திலிருந்து தப்ப முடியாது.
தன்னிருதயத்தினுள்ளிருக்கும் பேராசையை கர்த்தரின் கட்டளைகள் மூலமாக அறிந்ததாக பவுல் கூறினான். கட்டளைகளிலும் தன் பாவங்களை பவுல் அறிந்த போது கர்த்தரின் சட்டத்தைக் கடைப் பிடிக்க வேண்டுமென எண்ணிய சட்டப் படியானவனாகவே பவுல் இருந்தான். பவுலின் இருதயத்திலிருந்த பேராசையை கர்த்தரின் கட்டளைகள் வெளிப்படுத்திய போது பவுலின் பாவங்கள் அதிகரிக்கவும்செய்தன. இப்படியாக தான் ஒரு கொடும்பாவி என்பதை பவுல் அறிந்து கொண்டான்.
மனித மனதில் பன்னிரண்டு வகையான பாவச் சுபாவங்கள் இருக்கின்றன. சட்டத்தின் சரியான செயல்பாடுகளைக் குறித்து பவுல் அறிந்து கொள்ளாத போது அவன் உண்மையில் எத்தனைப் பாவியானவன் என்பதை உணராமல் தான் ஒரு சிறந்த மனிதன் என எண்ணினான். ஆனால் கர்த்தரின் கட்டளைகளின் படி வாழுவதற்கான அவனது முயற்சிகளின் பலனானது இக்கடளைகளைக் கடைப்பிடிப்பது எத்தனைக் கஷ்டமானது என்பதைக் காட்டியது. மேலும் இக்கட்டளைகள் அவனது பாவங்களை இன்னமும் தெளிவாக வெளிப்படுத்தின.
இயேசுவை விசுவாசிக்கும் போது மக்கள் எப்படி இருக்கின்றனர்? இயேசுவை நீங்கள் முதன்முதலாக விசுவாசிக்கத் தொடங்கிய போது உங்கள் விசுவாசத்தில் மிகுந்த அனலுள்ளவராக நீங்கள் இருந்திருப்பீர்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல உங்களுக்குள் இயற்கையாகவே உள்ள அநேக பாவங்களைக் கண்டிருப்பீர்கள். இப்பாவங்களை நீங்கள் எதின் மூலம் உணர்ந்தீர்கள்? எழுதப்பட்ட சட்டம் மற்றும் கட்டளைகள் மூலமாக நமது இருதயங்கள் எப்படி பன்னிரண்டு வகையான பாவங்களால் நிறைந்திருக்கின்றன என்பதைக் கண்டோம். சட்டத்தின் மூலமாக நாம் உண்மையாகவே கொடிய பாவிகள் என்பதைக் கண்டு கொள்வதே இதற்கான காரணமாகும்.
இதனால் தான் தம்மை ஆறுதல் படுத்திக் கொள்ள சில மக்கள் சரியெனக் காட்டும் தத்துவத்தை உருவாக்கினர். நம்முடைய இருதயங்களில் பாவமிருந்தாலும் கூட இயேசுவை நாம் விசுவாசிப்பதால் கர்த்தர் நம்மை நீதிமான்களாக கருதுவாரென இத்தத்துவம் வலியுறுத்துகிறது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்டத் தத்துவமாகும். தம் பாவங்களை ஒளித்துவைப்பதற்காகவும், இந்த தத்துவத்தின் ஆறதலில் வாழவும், இத்தகையதொரு தத்துவத்தை மக்கள் படைத்து அதனை விசுவாசிக்கவும் செய்தனர். ஆனால் சட்டத்திற்கு முன்பாக இன்னமும் அவர்கள் பாவிகளே என வெளிப்படுத்தப்பட்டதால் அவர்களுடைய பாவங்கள், அவர்களின் மனதில் மிக அதிக பாரத்தை உண்டாக்குகின்றன. நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக வேண்டுமானால் கர்த்தரின் நீதியை உள்ளடக்கிய நற்செய்தியை விசுவாசிப்பதைத் தவிர வேறு வழிகளில்லை. நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவதற்கான ஒரே வழி இது மட்டுமேயாகும்.
பின்பற்றுவதற்காகவே கர்த்தர் கட்டளைகளைக் கொடுத்தார் என பவுல் தன்னுடைய இறந்த காலத்தில் எண்ணியதால் அதனைக் கடைப்பிடிக்க முடிந்த அளவு முயற்சி செய்வது இயற்கையே எனவும் கருதினான். ஆனால் இதற்கு மாறாக இக்கட்டளைகள் பாவத்தினிமித்ம் அவன் ஆத்துமாவை மரணத்திற்குள்ளாக்குவதை அவன் கண்டான். கடைசியாக கர்த்தரின் கட்டளைகளை தவறாகப் புரிந்து கொண்டதையும், தவறுதலாக விசுவாசித்ததையும் அவன் அறிந்து கொண்டான்.
மாற்கு 7:21-23 இல் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு வகையான பாவங்கள் எல்லோருடைய இருதயங்களிலும் இருக்கின்றன. “எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.”
கர்த்தரின் கட்டளைகளின் மூலம் பவுலும் மற்ற எல்லா மக்களும் தம் பாவங்களைக் குறித்து அறிந்து கொண்டனர். சட்டத்தின் மூலம் தம் பாவங்களையும், அதனால் தாம் மரணத்திற்குள்ளானதையும் அறிந்ததுடன், இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தரின் நீதியை அறிந்து அதனை விசுவாசிக்கத் தொடங்கினர். கர்த்தரின் நீதியை நீங்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளீர்கள்? கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயல்கிறீர்களா, அவற்றையெல்லாம் கைக் கொள்ள முடியுமென எண்ணுகிறீர்களா? நாம் நம் பாவங்களை அறிந்த கொண்டு பாவத்திலிருந்து விடுதலையாகும்படி வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தரின் நீதியை விசுவாசிக்க அவரிடம் திரும்புவதற்காக கர்த்தர் தன் நியாயப் பிரமாணத்தைத் தந்தார். கர்த்தர் தம் கட்டளைகளை நமக்கேன் அருளினார் என்பதை சரியாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவற்றை சரியான விசவாசிக்கவும் வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டீர்களானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசத்த ஆவியானது எத்தனை முக்கியமானது என்பதை அறிந்து கொள்வீர்கள்.
கர்த்தரின் சட்டத்தை நம்புகிறவர்களால் தாம் கர்த்தரின் பார்வையில் எத்தகைய விதமான பாவியாய் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். கட்டளைகள் எதற்காகவென்று அறியாமல் கர்த்தரின் நீதியை அறியாத மக்கள் தம் மத வாழ்க்கையில் அநேக பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு தம் அழிவை நோக்கி வேகமாக செல்வர். பாவம் நிறைந்த இவ்வுலகில் வாழும் போது பாவத்திலிருந்து தூரமாக வாழ்வது எத்தனைக் கடினமானது என்பதே இதற்கான காரணமாகும். இதனால் தான் சில மக்கள் மனிதர்களை விட்டுப் பிரிந்து தனியாக மலைகளில் வசிக்கின்றனர். மலைகளில் தனியாக வாழும் போது உலகின் பாவங்களிலிருந்து தாம் பிரிந்திருப்பதாகவும், இதனால் தாம் பாவம் செய்ய முடியாது எனவும் நினைக்கின்றனர். ஆனால் இது உண்மையல்ல.
இவ்வுலகிலுள்ள அனைவரும் பாவம் செய்து தம்மிருதயங்களில் பாவம் நிறைந்தவர்களாயிருந்தாலும் கர்த்தரின் நீதியை அறிந்து அதனை விசுவாசிப்பதின் மூலம் இப்பாவங்களிலிருந்து விடுதலையைப் பெற முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். உலகின் பாவங்களிலிருந்து தப்பிக்கும் விதமாக அதனிடமிருந்து நாம் ஓடினாலும், தம்மிருதயத்தின் பாவங்களிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது. நம்முடைய இருதயங்களில் பாவங்கள் காணப்படுவதே இதற்கான காரணம். உண்மையாகவே இப்பாவங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்க வேண்டும். கர்த்தரின் சட்டங்களும் கட்டளைகளும் நம் பாவத்தை இன்னமும் அதிகரிக்கச் செய்யும் தம் பாவங்களின் தீவிரத்தைக் கறித்து அறிந்தவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கர்த்தரின் நீதியை அறிந்து விசுவாசிக்க வேண்டும்.
“இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக் கண்டேன். பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.” (ரோமர் 7:10-11) சட்டத்தைக் குறித்த தெளிவான அறிவு நம்மிடம் இருக்க வேண்டும். சட்டத்தைக் குறித்து சரியாக அறிந்து கொள்ளாதவர்கள் சட்டத்தினுள்ளேயே தம் வாழ்க்கைக் கழிப்பர். அவர்கள் தம் கடைசி நாள் வரை சட்டத்திலிருந்து தப்பிக்க முயல்வர். சட்டத்தைக் குறித்து சரியாக அறிந்தவர்கள் மட்டுமே இயேசுவால் நிறைவேற்றப்பட்ட கர்த்தரின் நீதியை நேசித்து அதனை விசுவாசிக்க முடியும், அப்படியானால் கர்த்தரின் நீதியைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
முன்னதாக தான் மறுபடியும் பிறக்காததினால் அவன் தன் மாமிசத்திற்கு சொந்தமாக இருந்ததாயும், பாவத்திற்கு விற்கப்பட்டிருந்ததாகவும், அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். தான் கர்த்தரின் சட்டத்தின் படி வாழ முயன்றாலும் தான் செய்யக் கூடாது என எண்ணியதை செய்ததாக அதாவது பாவம் செய்ததாக அவன் அறிக்கை செய்கிறான். கர்த்தருடைய நீதி அவனிடம் இல்லாததினாலே பரிசுத்த ஆவியானவர் அவனிடம் வாசம் செய்யாததே இதற்கான காரணம். அவனுடைய இருதயத்தில் பாவங்கள் காணப்பட்டதால் தன் விருப்பத்ற்கு எதிராக பாவம் செய்ததாக பவுல் ஒத்துக் கொண்டான் இதற்கு காரணம், அந்நேரத்தில் கர்த்தரின் நீதியை அவன் அறிந்து கொள்ளாததே.
அப்படியிருந்தும், பவுல் ஒரு சட்டத்தை உணர்ந்தான். அச்சட்டமானது பாவத்தைக் குறித்த சட்டமாகும். தன் இருதயத்தில் பாவமுள்ள மனிதனால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது என்பதை அவன் அறிந்து கொண்டான். கர்த்தரின் சட்டத்தின்படி உள் மனிதன் வாழ விரும்புகிறான் என்பதையும் அவன் அறிந்து கொண்டான். பாவமரமானது பாவக் கனிகளைச் சுமப்பதைப் போல் தான் தொடர்ந்து பாவத்திலேயே வாழ வேண்டியிருக்கிறது என்பதை அறிவிக்கிறான். இதற்கான காரணம் யாதெனில் அவன் இயேசு கிறிஸ்துவை இதுவரை சந்திக்காததால் இதுவதை பாவமன்னிப்பை அவன் பெற்றிருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அவனுடைய பாவங்களுக்காக மரிக்க வேண்டியது மிகச் சரியானதே.
இதனால் தானொரு பாவியான மனிதன் என்பதை அவன் அறிக்கை செய்கிறான். “இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24) என்று அவன் புலம்புகிறான். தானொரு பாவியாக இருந்த போது எப்படி இருந்தான் என பவுல் இங்கு குறிப்பிடுகிறான். பவுலின் இந்த பாவ அறிக்கையை உங்கள் மீது பொருத்திப் பாருங்கள். சட்டத்தைக் கடைபிடிக்க முடியாத மரிக்க கூடிய இந்த சரீரத்தின் கைதியாக நீங்கள் இன்னமும் இருக்கிறீர்களா? கர்த்தரின் நீதியை நாம் விசவாசிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலேயே கர்த்தரின் இந்த நீதி ஒளிந்துள்ளது. மேலும் இந்த நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலம் அவரின் நீதியை நாம் பெற்றுக் கொள்ளலாம்.
இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை மரணத்தையும் விசுவாசித்தமையால் தன் பாவச் சுபாவத்திலிருந்து பவுலால் விடுதலையாக முடிந்தது.