• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 7-2] பவுலின் விசுவாசத்தினுடைய கருப்பொருள்: பாவத்திற்கு மரித்த பின் கிறிஸ் (ரோமர் 7:1-4)

(ரோமர் 7:1-4)
“நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப் பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப் பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல. அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.”
 
 
நன்கு சிக்கிக் கொண்ட நு¡ல் கண்டை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசித்த இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த சத்தியத்தை அறியாமல் இந்த அதிகாரத்தை நீங்கள் புரிந்து கொள்ள முயன்றால் உங்கள் விசுவாசத்தின் நிலை முன்பை விடவும் குழப்பமான நிலையை அடையும்.
கர்த்தரின் சட்டத்திற்கு முன்னதாக எல்லோருமே பாவிகளாய் இருப்பதினாலே ஒருவன் இயேசு கிறிஸ்துவிடம் சென்று ஆவிக்குரிய விதமாய் மரித்து மறுபடியும் பிறக்க முடியுமென பவுல் இந்த அதிகாரத்தில் கூறுகிறான்.
 
 
பவுல் உணர்ந்து கொண்ட சத்தியம்
 
ரோமர் 7:7 கூறுகிறது “ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை” பவுல் தொடர்ந்து கூறுகிறான், “இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.” அதற்கு மேலும் எழுதுகிறான் “பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது.” கர்த்தருடைய 613 கட்டளைகளையும் தான் மீறியுள்ளதை பவுல் அறிந்து கொண்டான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அவனொரு பாவக்குவியல் பாவம் செய்வதை அவனால் தவிர்க்க முடியாது. ஏனெனில் அவன் முதல் மனிதனாகிய ஆதாமின் சந்ததியினனாய் இருப்பதினாலே அவன் மீறுதல்களோடு வந்திருக்கிறான். மேலும் அவன் தாய் அவனை பாவத்தினால் கர்ப்பந்தரித்தாள்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தாம் பிறந்த நேரம் முதல் மரிக்கும் வரை தொடர்ந்து பாவம் செய்கின்றனர். ஆகவே கர்த்தரின் கட்டளைகளை அவர்களால் கடைபிடிக்க முடியாது. இப்பாவக் குவியல்களால் எப்படி 613 கட்டளைகளையும் கர்த்தரின் சட்டத்தையும் கைக் கொள்ள முடியும்? கர்த்தரின் சட்டத்திற்கு முன்னால் நாம் பாவிகள் என்று அறிந்த கொள்ளும் போதே கர்த்தரின் நீதியாகிய இயேசு கிறிஸ்துவிடம் சென்று கிறிஸ்து இயேசுவினாலே பாவங்களிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டதை உணர்ந்து கொள்ள முடியும். இயேசு கிறிஸ்து கர்த்தரின் நீதியானார். அவர் யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தினாலும் சிலுவை இரத்தத்தினாலும் கர்த்தரின் நீதியை எடுத்து வந்தார். ஆகவே கர்த்தரின் நீதியை நாமனைவரும் அறிந்து அதனை விசவாசிக்க வேண்டும். இயேசுவை நாம் விசவாசிக்க வேண்டியதற்கான காரணம் கர்த்தரின் நீதி அவரிடம் காணப்படுவதே.
கர்த்தரின் நீதியை அறிந்து அதனை விசுவாசிக்கிறீர்களா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் ஒளிந்திருக்கும் இரகசியம் கர்த்தரின் நீதியாகும். யோர்தான் நதியில் இயேசு யோவானிடம் பெற்ற ஞானஸ்நானத்தில் இந்த இரகசியம் உள்ளடக்கியுள்ளது. இந்த இரகசியத்தை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இந்த சத்தியத்தை நீங்கள் விசுவாசித்தால் உங்கள் விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் நீதியை நீங்கள் பெற்றக் கொள்வீர்கள்.
கர்த்தரின் சட்டத்தையும் அவரின் கட்டளைகளையும் நாம் அறிந்து கொள்ளும் முன்னர் அனுதினமும் நாம் பாவம் செய்தாலும் நாம் ஏதோ பாவிகள் இல்லை என்பதைப் போல் தோன்றும். ஆனால் நாம் ஆலயத்திற்கு செல்லத் தொடங்கிய பிறகு நாம் பாவம் நிறைந்தவர்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். நம்மில் வெளிப்படும் பாவத்தினால் ஆவிக்குரிய விதமாக நாம் மரிக்கும் நிலயை அடைகிறோம். ஆகவே இயேசு கிறிஸ்துவிடம் ஆத்துமாக்களை அழைத்து வர கர்த்தரின் சட்டத்தையும் அவரின் கட்டளைகளையும் தவறாகப் புரிந்து அதனை விசுவாசித்த நாட்களை அப்போஸ்தலனாகிய பவுல் நினைவு கூறுகிறார்.
கர்த்தரின் சட்டம் என்ன செய்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். வேதாகமத்தை இப்போது கையில் வைத்திருக்கிறேன். முக்கியமான ஒன்றை வேதாகமத்தின் தாள்களுக்கிடையே மறைத்து வைத்து “அதில் மறைக்கப்பட்டுள்ளதைக் காண முயலக் கூடாது” எனக் கூறிவிட்டு, இந்த மேசையில் அதனை வைத்துவிட்டுச் சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்னுடைய வார்த்தைகளைக் கேட்ட அந்த நொடிப் பொழுதே இந்த வேதாகமத்தில் ஒளித்து வைத்திருப்பதைக் காணும் ஆவல் பிறப்பதை உணர்வீர்கள். மேலும் இந்த ஆவலினால் என்னுடைய உத்தரவை மீறுவீர்கள். ஆனால் இந்த வேதாகமத்தைக் குறித்து எதனையும் நான் கூறியிருக்காவிட்டால் நீங்கள் இதில் சிறிதும் ஆர்வம் காட்டியிருக்க மாட்டீர்கள். அதுபோல கர்த்தர் நமக்கு கட்டளை இடும் போது நமக்குள் மறைத்திருக்கும் பாவங்கள், சூழ்நிலைக்கேற்றவாறு நம்மிடமிருந்து வெளிப்படும்.
மக்களின் இருதயங்களில் உள்ள பாவத்தை வெளிப்படுத்துவதே மனிதர்களுக்கு கர்த்தர் கொடுத்த சட்டம் செய்யும் காரியமாகும். நாம் சட்டத்தைக் கைக் கொண்டு அதனைப் பின்பற்றுவதற்காக கர்த்தர் அதனைக் கொடுக்கவில்லை. மாறாக நம் பாவங்களை வெளிப்படுத்தவும் இதன் மூலம் நம்மை பாவியாக்கவும் சட்டம் நமக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவிடம் நாம் செல்லாமல் யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றில் காணப்படும் கர்த்தரின் நீதியை விசவாசிக்காமல் நாமிருந்தால் அழிந்து போவோம். கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்லவும் அவரின் மூலமாக கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிக்க உதவவும் சட்டம் இருக்கிறது என்பதை நம் மனதில் வைத்திருக்க வேண்டும்.
இதனால் தான் “பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது” (ரோமர் 7:8) என அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். கர்த்தரின் சட்டத்தின் மூலம் பாவத்தின் அடிப்படைகள் என்னவென்று அப்போஸ்தலனாகிய பவுல் நம்மிடம் காட்டுகிறான். அடிப்படையில்தானொரு பாவியெனவும், ஆனால் இயேச கிறிஸ்துவால் அருளப்பட்ட கர்த்தரின் நீதியை விசுவாசித்ததின் மூலம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டதாகவும் அவன் அறிவித்தான்.
 
 
பவுலின் புலம்பலும் விசுவாசமும்
 
ஆகவே பவுல் கூறினான், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்!” (ரோமர் 7:24-25)
கர்த்தரின் நீதியைப் பெற்றிருந்தாலும் தான் தொடர்ந்து பாவம் செய்ததை பவுல் ஒத்துக் கொண்டார். ஆகவே கர்த்தரின் நீதியானது அவனுக்கு மட்டுமில்லாது முழு உலகிற்கும் சீக்கிரமாக தேவைப்படுகிறது.
இயேசு பெற்ற ஞானஸ்நானத்தில் மறைந்திருக்கும் இரகசியங்களை சரியாகப் புரிந்துக் கொண்டு அதனை விசவாசிப்பதின் மூலம் கர்த்தரின் நீதியை நாம் பெற்றக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றில் காணப்படும் கர்த்தரின் நீதியை அறிந்து அதனை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே பாவம் செய்வதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாத நம் ஆத்துமாக்களும் மாமிசமும் நம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட முடியும். கிறிஸ்துவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் கர்த்தரின் நீதியை நிறைவேற்றிற்று என்பதை நாம் மறக்கக் கூடாது.
கர்த்தரின் சட்டத்தை கடைப் பிடிக்க முயலுபவர்கள் எத்தனைக் கடினமாய் அதற்காக முயன்றாலும் கர்த்தரின் நீதியை அறியாதவர்கள் முடிவு வரை பாவியாகவே இருக்க வேண்டியது தான். நாம் கைக் கொள்ள வேண்டும் என்பதற்காக கர்த்தரின் சட்டம் நமக்குக் கொடுக்கப் படவில்லை. ஆனால் சட்டப்படி வாழுபவர்களுக்கு இயேசு பெற்ற “ஞானஸ்நானம்” மற்றும் சிலுவை இரத்தம் ஆகியவற்றிலுள்ள விடுதலையின் இரகசியம் புரியாது. இதனால் தாம் பின்பற்றுவதற்காக கர்த்தரின் சட்டம் கொடுக்கப்பட்டது என தவறாகப் புரிந்து கொண்டு குழப்பத்துடனேயே அவர்கள் தம் வாழ்க்கைத் தொடருகின்றனர். ஆனால் சட்டத்தின் மூலமாக நம் பாவங்களை அறிந்து கொண்டு கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசவாசத்தால் நாம் வாழ வேண்டும். நம்முடைய சொந்த நீதியைக் கடைப்பிடிப்பதற்காக கர்த்தரின் நீதியை எதிர்த்து நிற்கக் கூடாது. மாறாக கிறிஸ்துவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் நிறைவேற்றிய கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய நம் தேவனுக்கு நன்றிகளைக் கூற நாம கற்றக் கொள்ள வேண்டும்.
இதனால் தான் தன் மாமிசத்தைப் பார்த்த பவுல் முதலில் கூக்குரலிட்டான். “நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” ஆனாலும் கூட இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தருக்கு அவன் நன்றி கூறினான். இந்த அறிக்கையை பவுல் செய்தமைக்கான காரணம் அவன் அதிகமாய் பாவம் செய்த போது இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் இன்னமும் அதிகமாய் கர்த்தரின் நீதியை நிறைவேற்றிற்று. நம்மாலும் கூட மகிழ்ச்சியுடனும் வெற்றியுடனும் சத்தமிட முடியும். ஏனெனில் மாமிசத்தின் சட்டத்திற்கும் கர்த்தரின் நீதிக்கும் நடுவே கடின வாழ்வை வாழ்ந்தாலும் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம் விசவாசத்தினால் இரட்சிக்கப்பட்டோம். பவுலிடமிருந்த நம்பிக்கையானது இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதாய் இருந்தது. இப்படியாகத் தான் கர்த்தரின் நீதியில் பவுல் வாழத் தொடங்கினான். மேலும் இந்த கர்த்தரின் நீதியை அவன் விசுவாசித்தமையால் அவரைப் போற்றும் ஒருவனாக அவனால் மாற முடிந்தது.
ரோமர் ஏழாம் அதிகாரத்தில் முற்காலத்திலிருந்த தன்னுடைய பாவ நிலையையும் அதற்கு மாறாக கர்த்தரின் நீதியின் மீதுள்ள வெற்றிகரமான நம்பிக்கையையும் குறித்து பவுல் கூறுகிறான். கர்த்தரின் நீதியின் மீதுள்ள நம்பிக்கையே பவுலின் வெற்றி விசவாசத்திற்கான காரணமாகும்.
“நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?” (ரோமர் 7:1)
ஏழாம் அதிகாரத்தின் முக்கியக் கரு 24 மற்றும் 25ஆம் வசனங்களில் காணப்படுகிறது. பவுல் எழுதினான், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.”
கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டு அவருடனே கூட உயிரோடெழுப்புவதற்கு வழிநடத்தும் நம்பிக்கையைக் குறித்து ரோமர் ஆறாம் அதிகாரத்தில் பவுல் கூறினான். அவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணத்துடன் நம்மை இணைப்பதின் மூலம் இந்த விசுவாசத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
தானொரு கொடிய பாவி என்பதை பவுல் அறிந்து கொண்டான். அவனுடைய மாமிசம் குறைபாடுடையதாயிருந்தது. ஆகவே கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்னதாக கர்த்தரின் சட்டத்தை முறித்ததோடு மட்டுமில்லாமல் அதன் பிறகும் கூட அதனைத் தொடர்ந்து முறித்தான். ஆகவே “இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று அவன் புலம்பினான். கர்த்தரின் நீதியை விசுவாசித்ததன் மூலம் மரண சா£ரத்திலிருந்த தன்னால் விடுதலை பெறு முடிந்தது என முடிவாக அவன் கூறினான், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” கிறிஸ்துவின் மூலமாக கர்த்தரின் நீதியை விசுவாசித்தமையாலும் அவருடன் ஜக்கியமானதாலும் சா£ரம் மற்றும் மனதிலிருந்த பாவங்களிலிருந்து பவுல் விடுதலைப் பெற்றான்.
பவுலினுடைய இறுதி அறிக்கை “ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.” (ரோமர் 7:25) என்பதாகும். எட்டாம் அதிகாரத்தின் தொடக்கத்தில் அவன் இவ்வாறு அறிவிக்கிறான் “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.” (ரோமர் 8:1-2).
கர்த்தர் இரண்டு சட்டங்களைக் கொடுத்தார். அது பாவம் மரணம் என்பவைகளைக் குறித்த சட்டமும், வாழ்வின் ஆவியைக் குறித்த சட்டமும் ஆகும். வாழ்வின் ஆவியைக் குறித்த சட்டம் பாவம் மரணம் என்பவைகளைக் குறித்த சட்டத்திலிருந்து பவுலை இரட்சித்தது. அவனுடைய அனைத்துப் பாவங்களையும் அகற்றிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணத்தை விசுவாசித்ததின் மூலம் இயேசுவுடனே கூட அவன் ஜக்கியமாகி அவனுடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டான் என இது பொருள்படுகிறது. தேவனுடைய ஞானஸ்நானம் அவருடைய சிலுவை மரணம் ஆகியவற்றுடன் இணைக்கும் விசுவாசம் நம்மனைவருக்கும் தேவை.
சட்டத்தின் மூலம் முன்னதாக தான் ஆக்கினைக்குள்ளாக வேண்டியிருந்ததையும், ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலம் இந்த ஆக்கினையிலிருந்து தான் விடுதலையானதையும் ரோமர் ஏழாம் அதிகாரத்தின் மூலம் பவுல் அறிக்கைச் செய்கிறான். அவனுக்குள் வாசம் செய்த பரிசுத்த ஆவியானவரின் மூலமாக கர்த்தரை அவனால் ஆராதிக்க முடிந்தது.
 
 
பவுல் உணர்ந்து கொண்ட சத்தியம்
 
பவுல் அறிவித்தான், “ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை” (ரோமர் 7:7). “நீ பேராசைப்படக் கூடாது” என்று சட்டம் கூறும் வரை தன் பேராசை பவுலிற்கு தெரியாது. சட்டத்திற்கும் பாவத்திற்கும் உள்ள உறவை பவுல் விளக்கினான். “பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது” மனித இருதயங்கள் அடிப்படையில் பாவம் நிறைந்தவை என இது பொருள்படும். தாயின் கர்ப்பத்தில் கருத்தரிக்கும் போதே அவர்கள் பாவத்தினாலும் கருத்தரிக்கப்படுகிறார்கள். ஆகவே பன்னிரண்டு வகையான பாவங்களுடன் அவர்கள் பிறக்கின்றனர்.
இந்த பன்னிரண்டு வகையான பாவங்கள் பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் ஆகும். தாம் மரிக்கும் வரை ஒவ்வொருவரம் இப்பாவங்களைச் செய்கின்றனர். அவன்/அவள் இத்தகைய பன்னிரண்டு பாவங்களுடன் இவ்வுலகில் பிறந்திருக்கும் போது கர்த்தருடைய சட்டத்தையும் அவரின் கட்டளைகளையும் யாரால் பின்பற்ற முடியும்? சட்டத்தைக் குறித்தும் கட்டளைகளைக் குறித்தும் வார்த்தைகளைக் கேட்கும் நொடிப் பொழுதே நாம் எதைச் “செய்ய வேண்டும்” அல்லது எதைச் “செய்யக் கூடாது” என்பதை இது தெரிவிக்கிறது. பாவம் நமக்குள் செயலாற்றத் தொடங்கியது.
கர்த்தரின் சட்டத்தையும் அவரின் கட்டளைகளையும் நாமறிந்திராத போது நமக்குள் உள்ள பாவம் உறங்கிக் கொண்டிருக்கும். ஆனால் நாம் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என நாம் கேட்ட கட்டளைகள் கூறிய போது இப்பாவங்கள் வெளிப்பட்டு இன்னமும் அநேக பாவங்களைச் செய்யச் செய்யும்.
யாரெல்லாம் மறுபடியும் பிறக்காதவர்களோ அல்லது நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை அறிந்து அதனை விசுவாசிக்காதவர்களோ அவர்களிடம் பாவம் இன்னமும் இருக்கிறது. இப்பாவமானது கட்டளைகளின் வார்த்தைகளினால் செயல்படத் தொடங்கி இன்னமும் அதிக அளவு பாவங்களை உற்பத்தி செய்கிறது. எதனைச் செய்ய வேண்டும். எதனைச் செய்யக் கூடாது என மக்களிடம் கூறும் சட்டமானது பாவத்திற்கு பயிற்சியளிக்க முயலும் பயிற்சியாளரைப் போன்றது. ஆயினும் பாவம் கர்த்தரின் கட்டளைகளுக்கு எதிராகச் செல்லுகிறது. இது அவருக்கு கீழ்படியாமலிருக்கவும் செய்கிறது. ஒரு பாவியானவன் கட்டளைகளைக் கேட்கும் போது அவனுடைய/அவளுடைய இருதயங்களிலுள்ள பாவங்கள் செயலாற்றத் தொடங்கி அவனை/அவளை இன்னமும் பாவம் செய்யத் தூண்டுகின்றன.
நமக்குள்ளே பாவமிருக்கிறது என்பதை பத்துக் கட்டளைகளின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இப்படியாக நம்முடைய இருதயங்களிலுள்ள பாவங்களை வெளிப்படுத்தி கர்த்தரின் கட்டளைகள் பரிசுத்தமானவை என்று நம்மை அறியச் செய்து நம்முடைய பாவ நிலையைக் குறித்த விழிப்புணர்சியை அளிப்பது சட்டத்தினுடைய செயல்பாடாகும். அடிப்படையில் பார்த்தால் கர்த்தர் படைத்த எல்லாவற்றின் மீதும் பேராசைப்படும் இச்ச¨யுடனேயே நாம் பிறந்திருக்கிறோம். இதில் சொத்துக்களும் மற்றவர்களின் உடமைகளும் அடங்கும். ஆகவே “இச்சியாதிருப்பாயாக” என்ற கட்டளையானது நாம் பிறந்த போதிலிருந்தே பாவிகளெனவும் நாம் நரகம் செல்ல வேண்டியவர்கள் என்பதையும் கூறுகிறது. கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய இரட்சகரின் முக்கியத்துவத்தையும் இது நமக்குக் காண்பிக்கிறது.
கட்டளையளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாவமான எல்லாவிதமாக ஆசைகளையும் உருவாக்கிற்று என இதனால் தான் பவுல் அறிக்கைச் செய்தான். கர்த்தருடைய சிறந்த கட்டளைகளை முறித்த தானொரு மிகப் பொ¢ய பாவி என்பதை பவுல் அறிந்து கொண்டான். ஏனெனில் அவன் பாவத்துடன் பிறந்தவன். மேலும் கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதற்கு முன்னதாக பாவத்துடனிருந்தான்.
ஏழாம் அதிகாரத்தை நாம் வாசிக்கும் போது அப்போஸ்தலனாகிய பவுல் ஆவிக்குரியவனாய் இருப்பதையும் வேதாகமத்தைக் குறித்த சிறந்த ஞானமுள்ளவனாய் இருப்பதையும் சிறந்த ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலும் அனுபவமும் உள்ளவனாய் இருப்பதையும் நாம் காண்கிறோம். தன்னிடமுள்ள பாவங்களை சட்டத்தின் மூலமாய் அவன் தெளிவாக அறிந்து கொண்டான். அவை கட்டளைகளுடன் ஒன்று சேர்ந்து எல்லாவிதமான தீய ஆசைகளையும் தோற்றுவித்தன. அவனுக்குள் உள்ள பாவங்களை வெளிப்படுத்துவது கர்த்தரின் சட்டத்தினுடைய செயல்பாடு என்பதை அவன் அறிந்தான். இப்பாவங்கள் புதுப்பிக்கப்பட்டால் வாழ்வை எடுத்துவர வேண்டிய கட்டளையானது மரணத்தை எடுத்து வந்ததாக அவன் அறிக்கை செய்தான்.
உங்கள் விசுவாசத்தின் நிலையென்ன? அது பவுலின் விசுவாசத்தைப் போலிருக்கிறதா? நீங்கள் இயேசுவை விசுவாசித்தாலும் விசுவாசிக்காவிட்டாலும் உங்களிருதயத்தில் பாவமிருக்கிறதா? அப்படி இருந்தால் உங்களுக்கு கர்த்தரின் நீதியைக் குறித்து தெரியாது எனவும், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை எனவும், நீங்கள் நரகம் செல்ல வேண்டிய பாவியெனவும், உங்கள் பாவங்களுக்காக தீர்க்கப்பட வேண்டியவர் எனவும் இது பொருள்படும். இக்குறிப்புகளை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசியுங்கள். உங்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் நீங்கள் இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் நீதியைப் பெற்றக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது இறங்கப்பெறுவீர்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
 
 
கட்டளை இடம் கொடுத்ததை பயன்படுத்தி பாவம் பவுலை வஞ்சித்தது
 
அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக் கண்டேன். பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது” (ரோமர் 7:10-11). வேறு வார்த்தைகளில் கூறினால் சட்டத்தின் சாதகமான நிலைகளை பாவம் எடுத்துக் கொண்டு பவுலை அது வஞ்சித்தது. உண்மையாகவே சிறந்ததும் நேர்மையானதுமான கட்டளைகளை பவுல் விசுவாசித்தான். ஆயினும் பன்னிரண்டு வகையான பாவங்கள் அவன் இருதயத்தில் இருந்து வளர்ந்தன. கர்த்தரின் கட்டளைகளின் நோக்கத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாததால் பாவத்தால் அவன் வஞ்சிக்கப்பட்டான் என பொருள்படும்.
முதலாவதாக கீழ்படிவதற்கென்று கர்த்தர் தம் சட்டங்களைக் கொடுத்தார் என பவுல் விசுவாசித்தான். ஆனால் பிற்காலத்தில் கீழ்படிவதற்காக சட்டம் கொடுக்கப்படவில்லை என்பதையும், மக்களின் இருதயங்களிலுள்ள பாவங்களை வெளிப்படுத்தவும் கர்த்தரின் பரிசுத்தத்தைக் காட்டவும் இதனால் கர்த்தரால் அவிசுவாசிகள் தீர்க்கப்படவும் இச்சட்டம் கொடுக்கப்பட்டதை பவுல்உணர்ந்து கொண்டான். கர்த்தரின் கட்டளைகளையும் சட்டத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் இவ்வாறு பாவத்தினால் வஞ்சிக்கப்பட்டதாக பவுல் எண்ணினான். இன்றைய மக்களில் அநேகரும் இப்படியாகவே வஞ்சிக்கப்படுகின்றனர்.
கர்த்தர் தம் கட்டளைகளையும் சட்டங்களையும் கொடுத்ததற்கான சரியான காரணத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனைப் பின்பற்றுவதற்காக கொடுக்கவில்லை எனவும், நம் பாவங்களை உணர்ந்து கொண்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரின் நீதியை அடைய இது கொடுக்கப்பட்டது எனவும் நாம் அறிய வேண்டும். ஆனால் நம் பாவங்களுடனே கூட சட்டப்படி நாம் வாழ முயற்சிப்பதால் நம் பாவ சுபாவங்களை வெளிப்படுத்துவதில் முடிவடைகிறோம்.
ஆகவே சட்டமானது பரிசுத்தமானது என்றாலும் ஒரு பரிசுத்த வாழ்வை வாழ அவனுக்கு/அவளுக்கு திறமை இல்லை என்பதை ஒரு பாவி சீக்கிரமாகவே சட்டத்தின் மூலம் உணர்ந்து கொள்ளகிறார். அந்நொடிப் பொழுதில் அவன்/அவள் பாவியாகி விடுகின்றனர். ஆகவே சட்டத்தினால் நரகம் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசிக்காத பாவிகள் கீழ்படிவதற்காகவே கர்த்தர் சட்டத்தைக் கொடுத்தார் என தொடர்ந்து எண்ணுகின்றனர். அவர்கள் சட்டத்தைப் பின்பற்ற தொடர்ந்து முயலுகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மைத் தாமே வஞ்சித்து முடிவில் அழிந்து போவர்.
கர்த்தரின் நீதியைப் பற்றி அறியாததால் மறுபடியும் பிறக்காத மக்கள் தொடர்ந்து பாவம் செய்வதுடன் மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் பாவ மன்னிப்பு பெற முடியலுகின்றனர். ஆனாலும் முடிவில் கர்த்தரின் சட்டம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதை தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டு தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டதையும் அறிவர். கட்டளை அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பாவம் அவர்களை வஞ்சித்தது. கர்த்தரின் சட்டம் பரிசுத்தம் நிறைந்தது. ஆனால் அவற்றிற்குள் உள்ள பாவம் மரணத்தை நோக்கி அவர்களை வழிநடத்தியது.
பவுல் கூறினான் “ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று” (ரோமர் 7:12-13). இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்களால் கர்த்தரின் நீதியின் தேவையை அறிந்து கொள்ள முடிவதால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே உண்மை என்பதை விசுவாசிக்கத் தொடங்குவர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் ஒருவர் கர்த்தரின் நீதியையும் கூட விசுவாசிக்கிறார். கர்த்தருடைய நீதியை விசவாசிப்பதின் மூலம் நாம் நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று கர்த்தரின் பரிசுத்தத்தை அடைவோமாக. இந்த நற்செய்தியினால் நீங்களனைவரும் ஆசீர்வதிக்கப்பட வாழ்த்துகிறேன்.
 
 
பவுலின் மாமிசமும் மனமும் எத்தகையவாய் இருந்தன?
 
பவுல் ஆவியால் நிறைந்திருந்தான். மேலும் கர்த்தரின் வார்த்தையை ஆழமாக புரிந்து கொண்டுமிருந்தான். ஆயினும் கீழ்கண்ட வார்த்தைகளின் மூலம் அவன் தன் மாமிசத்தைக் குறித்து பேசுகிறான். “மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” (ரோமர் 7:14-17) இயற்கையாகவே தான் மனித சுபாவத்துடனிருப்பதால் தான் பாவம் செய்வதாக அவன் கூறினான். அவன் மனிதனாயிருப்தால் நன்மைச் செய்ய விரும்பினாலும் கூட மாமிசத்தின் விருப்பங்களை தான் நாடுவதைக் கண்டான்.
ஆகவே பவுல் இதனை உணர்ந்து கொண்டான், “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தின் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கினது” (ரோமர் 7:22-23). இதனால் தான் மாமிசத்தைக் குறித்து “நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” (ரோமர் 7:24) எனக் கூறி புலம்பினான். பவுல் மறுபடியும் பிறந்த பிறகும் கூட தீயவைகள் அவனுள் இருந்தமையால் தன்னால் நன்மை செய்ய முடியவில்லையே என பவுல் வியாகூலப்பட்டான். தீயவைகள் தனக்குள்ளிருந்தன என அவன் கூறும் போது தன்னுடைய சொந்த மாமிசத்தையே அவன் சுட்டிக் காட்டுகிறான். தனக்குள் இன்னுமொரு சட்டத்தையும் கண்டான். அது ஆவிக்குரிய சட்டங்களை சீதைத்து மாமிசத்திற்கு அவனை அடிபணியச் செய்து பாவத்தை நோக்கி வழிநடத்தியது. பாவம் செய்யும்படி செய்ய மாமிசமானது அவனைக் கட்டுப்படுத்துவதை அவன் கண்ட போது தான் தீர்க்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஒத்துக் கொண்டான். பவுலிடமும் கூட மாமிசம் இருந்ததால் தன் மாமிசத்திலிருந்து எழுந்த பாவங்களுக்காக அவன் புலம்பினான்.
ஆதனால் தான் “நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” என பவுல் அறிவித்தான். கர்த்தரின் நீதியை நிறைவேற்றியதற்காக இயேசு கிறிஸ்துவிற்கு அவன் நன்றியையும் தெரிவித்தான். இயேசு இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நாம் பெற்று உலகின் அனைத்து மக்களுக்கும் பாவ மன்னிப்பு அளிக்க சிலுவையில் அறையப்பட்டார். அவனால் கர்த்தருக்கு இதய் பூர்வமாக நன்றி கூற முடிந்தது. ஏனெனில் இயேசு கிறிஸ்துவினுடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்துடன் அவனை அவன் விசுவாசம் ஐக்கியமாக்கியது.
இயேசுவிற்கு யோவான் ஞானஸ்நானம் அளித்த போது அவனுடைய எல்லாப் பாவங்களும் உலகின் பாவங்களுடனே இயேசுவின் மீது ஒரே தரமாக சுமத்தப்பட்டது என்பதை பவுல் அறிவான். இயேசு சிலுவையிலே மரித்த போது நாமனைவரும் கூட பாவத்திற்கு மரித்தோம் என்பதும் அவனுக்கு தெரியும். ஆகவே நீர் மற்றும் ஆவியின் சத்தியத்துடன் இணைத்து ஜக்கியமான விசுவாசம் நம்மிடமிருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்ததுடன் உங்கள் இருதயம் இணைந்துள்ளதா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால் கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியுடன் உங்கள் இருதயம் ஐக்கியமாக உள்ளதா? நம் தேவன் யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்துடனும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்துடனும் இணைந்துள்ள விசவாசத்தை நாம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியுடன் இணைவது தேவனுடைய நீதியுடன் இணைவதற்கு சமமாதலால் ஐக்கியமான விசுவாசத்துடனிருப்பது அவசியமானது.
ரோமர் 6:3 கூறுகிறது “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” இதன் பொருள் என்னவெனில் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசவாசிப்பது அவருடனே கூட ஞானஸ்நானம் பெற்றோம் என்பதாகும். நம் தேவனுடைய மரணத்துடனே கூட நாமும் கூட இணைந்துள்ளோம் என இது பொருள்படுகிறது. அதாவது விசவாசத்தின் முலம் ஞானஸ்நானத்துடன் ஐக்கியமானதினால் அவருடைய மரணத்திற்குள்ளாக நாம் ஆவிக்குரியபடி ஞானஸ்நானம் பெற்றோம். தேவனுடன் ஐக்கியமாகியிருக்கிறோம் என்பது அவருடைய ஞானஸ்நானத்தலே இணைந்திருக்கிறோம் என்றும், அவருடைய மரணத்தில் நாம் இணைந்தோம் எனவும் பொருள்படும்.
ஆகவே கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய இயேசுவின் ஞானஸ்நானத்துடனும் அவருடைய சிலுவை மரணத்தையும் நாம் விசவாசித்து அதனுடனே ஜக்கியமாக வேண்டும். கர்த்தருடைய நீதியைக் கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் இன்னமும் விசவாசிக்கவில்லை எனில் இயேசுவின் ஞானஸ்நானத்துடனும், அவருடைய இரத்தத்துடனும் இதுவரை நீங்கள் ஜக்கியமாகவில்லை. மேலும் இந்த நற்செய்தியில் கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இயேசுவின் ஞானஸ்நானத்துடனும் அவருடைய சிலுவை மரணத்துடனும் நம்முடைய இருதயங்கள் இணையவில்லை எனில் நம்முடைய விசுவாசம் வெறும் ஏட்டளவில் இருக்குமென்பதோடு அதனால் எப்பயனும் இல்லை. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சலீவை இரத்தம் ஆகியவற்றுடன் உங்களை இணைத்து அதனை விசுவாசியுங்கள். இப்படித் தான் நாம் விசுவாசிக்க வேண்டும். ஏட்டிலுள்ள விசுவாசத்தினால் எப்பயனும இல்லை. உதாரணமாக உங்களுடையதாயில்லாத வீடு அருமையாயிருந்தால் உங்களுக்கு என்ன ஆகிறது? கர்த்தருடைய நீதியை நம்முடையதாக்க வேண்டுமானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் நோக்கம் நம் பாவங்களைக் கழுவவே என்றும், நம்முடைய சா£ரத்தின் மரணத்திற்காக அவர் சிலுவையில் மரித்தார் என்றும், நாம் அறிய வேண்டும். நம் தேவனால் நிறைவெற்றப்பட்ட கர்த்தரின் நீதி மீதுள்ள விசுவாசத்தின் மூலம் ஒரே தரமாக நாம் விடுதலைப் பெற்று வாழ்வின் புதுமையில் நடக்க வேண்டும்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றுடன் இப்படியாக இணைந்த உங்கள் விசுவாசத்தின் மூலமாக கர்த்தரின் நீதி உங்களுடையதாகிவிடுகிறது. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் மரணத்துடன் நாம் ஜக்கியமாக வேண்டும். இல்லாவிட்டால் நம் விசுவாசம் ஒன்றுமில்லாததாகிவிடும்.
“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24) இது பவுலுடைய புலம்பல் மட்டுமில்லை. இது உங்களுடையதும் என்னுடையதுமாகும். மேலும் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள அனைவரது புலம்பலுமாகும். இந்த பரிதவிப்பில் இருந்து நம்மைக் காப்பவர் இயேசுவே. நமக்காக ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்து உயிரோடெழும்பிய தேவனை விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
பவுல் கூறினான் “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” தேவனுடன் கூட பவுல் இணைந்ததை இது காட்டுகிறது. தன்னுடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் தேவன் நம்மை நம் பாவங்களிலிருந்து மன்னித்தார் என்ற விசுவாசித்து அவருடனே கூட ஐக்கியமானால் நாம் பாவ மன்னிப்பு பெற்று நித்திய வாழ்வைப் பெற்றுக் கொள்வோம் என்பதை விசுவாசிக்க வேண்டும். ஒரு ஐக்கியமான இருதயத்துடனே இயேசுவின் ஞானஸ்நானத்தை நீங்கள் விசவாசிக்கும் போது உங்கள் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்படும். அவர் சிலுவையில் மரித்ததுடன் ஐக்கியமாகக் கூடிய விசுவாசத்தைப் பெற்ற பிறகு நீங்கள் அவருடனே கூட மரித்து உயிரோடெழுந்திருப்பீர்கள்.
தன்னுடைய முப்பதாம் வயதில் இயேசு தன் ஊழியத்தை பூமியில் தொடங்கினார். யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் கழுவும் அவருடைய நோக்கம் முதல் முதலாக அவர் செய்த காரியமாகும். அவர் ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொள்வது அவர் நோக்கமாகும். ஆகவே இயேசுவால் நிறைவேற்றப்பட்ட கர்த்தரின் நீதியுடன் நம் இருதயங்களை இணைக்கும் போது இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நமது எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டது. நம்முடைய எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டு ஒரேதரமாக அது கழுவப்பட்டது.
நம் தேவன் இவ்வுலகிற்கு வந்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் பெற்றுக் கொள்ளும்படி ஞானஸ்நானம் பெற்று அவற்றிற்கு கூலியாக மரித்தார். இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் யோவானிடம் இவ்வாறு கூறினார், “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” (மத்தேயு 3:15). “எல்லா நீதியையும்” என்பது நரகத்திற்கு செல்ல வேண்டிய மனித குலத்தின் அனைத்து பாவங்களையும் கழுவிய இயேசு ஞானஸ்நானம் பெற்றதையும் அவர் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. கர்த்தரின் நீதி என்பது என்ன? பழைய ஏற்பாட்டில் கர்த்தர் செய்த வாக்குத் தத்தங்களின் படி இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் அவருடைய நீதியாகும். மனித உருவில் இயேசு இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றது மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் சுமந்து அதனை கழுவி விடவே.
யோவான் ஏன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தான்? மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் அவர் மீது சுமத்தி கர்த்தரின் எல்லா நீதிகளையும் நிறைவேற்றுவதே அதன் நோக்கம். கிறிஸ்து இயேசுவில் ஞானஸ்நானம் பெற்ற நாம், ஆவருடைய மரணத்திலும் ஞானஸ்நானம் பெற்று புதியதொரு வாழ்வில் வாழுகின்றோம். ஏனெனில் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் அவருடைய உயிர்த்தெழுதல் ஆகியவற்றை விசுவாசித்து அதனுடன் ஐக்கியமாவது கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதாகும். இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது நம்முடைய எல்லாப் பாவங்களையும் இயேசு தன் மீது ஏற்றுக் கொண்டார் என்பதை நாம் விசுவாசிப்பது மிகவும் அவசியமாகும். அவர் சிலுவையில் மரித்த போது நாமும் கூட அவருடனே அடக்கம் பண்ணப்பட்டோம். ஏனெனில் அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நாம் அவருடன் ஐக்கியமானோம். நாம் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையான பிறகும் கூட கர்த்தருடைய நீதியை விசவாசிப்பதன் மூலம் தேவனுடனே கூட நம்மிருதயங்களை இணைப்பது மிகவும் அவசியமானதாகும். இயேசு சிலுவையில் மரித்த போது நாமனைவரும் கூட அவருடனே மரித்தமையால் தேவனுக்கு நம்மால் நன்றி கூற முடியும். ஏனெனில் நம் எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்கனவே சுமந்து விட்டார்.
நம்முடைய விடுதலையின் மூலமாக கர்த்தரின் நீதியைப் பெற்ற பிறகும் கூட விசுவாசத்தினால் இயேசுவுடன் இணைவது முக்கியமாகும். விடுதலையைப் பெற்ற பிறகு நம்முடைய விசுவாசம் ஒரு பழக்கம் ஆகிவிடும். ஆனால் நம்மிருதயங்களை தேவனுடைய நீதியுடன் இணைத்தால் நம்மிருதயங்கள் கர்த்தருடனே கூட வாழும். கர்த்தருடை நீதியுடனே கூட நாம் இணைத்தால் நாம் அவருடனே வாழுவோம். அப்படிச் செய்யவில்லை எனில் அவருக்கு நாம் புறம்பாவதைத் தவிர வேறு வழியில்லை. தேவனாகிய கர்த்தருடன் நாம் ஐக்கியமாகாமல் வெறும் பார்வையாளர்களாக நாமிருந்தால் அது பக்கத்து வீட்டாரின் தோட்டத்தை இரசிப்பதைப் போன்றதாகும். ஆகவே நாம் கர்த்தரிடம் இருந்து பிரிந்திருப்பதால் அவருக்கு புறம்பானவர்களாவோம். ஆகவே தேவனுடைய வார்த்தையுடனும் கர்த்தரின் நீதியுடனும் நம்பிக்கையினால் நாம் ஐக்கியமாவோம்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானத்துடனும் அவரின் சிலுவையுடனும் ஐக்கியமாகும் படியான விசுவாசம் நம்மிடமிருந்தால் நாம் தேவனுடனே ஐக்கியமாகிய கிறிஸ்தவர்களாவோம்
 
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பது என்பது தேவனுடன் இணைந்து அவருடைய நீதியை ஏற்றுக் கொள்வதற்கான நம்பிக்கையை பெற்றிருப்பதே. நம் வாழ்வின் அனைத்து விஉக்ஷயங்களும் கர்த்தரின் நீதியுடனே கூட இணைந்திருக்க வேண்டும். அப்படித் தான் நாம் வாழ வேண்டும். அவருடைய நீதியுடனே இணைந்து நாம் வாழாவிட்டால் நாம் நம் மாமிசத்திற்கு அடிமையாகி இறந்து போவோம். ஆனால் கர்த்தரின் நீதியுடன் இணைந்த அந்நொடிப் பொழுதே நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும். தேவனுடைய நீதியுடன் நம்மிருதயங்களை இணைத்தப் பிறகு மட்டுமே நாம் கர்த்தரின் ஊழியர்களாக முடியும். கர்த்தருடைய அனைத்து செயல்களும் அப்பொழுது நமக்கேற்றவைகளாயிருக்கும் அத்துடன் அவருடைய அனைத்து செய்கைகளும் வல்லமையும் நம்முடையதாகம். ஆயினும் அவருடனே கூட ஐக்கியமாகாவிட்டால் அவருடைய நீதிக்கு நாம் புறம்பானவர்களாய் இருப்போம்.
பவுலைப் போன்றே நாம் பலவீனங்களாகவும் குறைபாடுடையவர்களாயும் இருக்கிறோம். ஆகவே கர்த்தருடைய நீதியுடன் நம்மிருதயங்களை இணைக்க வேண்டும். நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க யோவானிடமிருந்து இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டார் என்பதுடன் நாமிணைந்து அதனை விசுவாசிக்க வேண்டும். இத்தகைய விசுவாசம் கர்த்தரை பிரியப்படுத்துவதுடன் நமது சா£ரத்திற்கும் ஆத்துமாவிற்கும் ஆசீர்வாதங்களை எடுத்து வருகிறது. நம்பிக்கையுடன் இணைந்த நம் இருதயங்களுடன் தேவனுடைய முயற்சிகளை நாம் விசுவாசித்தால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரலோகத்தின் ஆசீர்வாதங்கள் நமதாகும். அதனால் தான் அவருடனே கூட நாம் ஐக்கியமாக வேண்டும்.
மறுபுறம் பார்த்தால் கர்த்தருடைய நீதியுடன் நம்மிருதயங்களை நாம் ஐக்கியப்படுத்தவில்லையென்றால் நாம் அவரை ஆராதிக்க மாட்டோம். கர்த்தருடைய நீதியுடன் தம் இருதயங்களை இணைக்காத அக்கிறிஸ்தவர்கள் மற்றெல்லாவற்றையும் விட உலகின் காரியங்களை அதிகம் நேசிப்பர். இவ்வுலகிலுள்ள அவிசுவாசிகளுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தம்முடைய சொந்த உயிரிற்கு சமமானதாக அவர்கள் நேசிக்கும் அவர்களுடைய உடமைகள் அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே கர்த்தரின் நீதியின் மதிப்பை அவர்கள் உணர்ந்து கொள்ளுகின்றனர். மக்களடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமையோ பெறுமதியோ பொருட்களில் இல்லை. தேவனுடைய நீதியால் மட்டுமே பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்க முடியும். பொருட்கள் நாம் வாழ்விற்கு சமமானதில்லை. தேவனுடைய நீதியுடன் நாம் ஐக்கியமானால் மட்டுமே நம்மாலும் நம் அயலாராலும் வாழ முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
தேவனுடைய நீதியுடன் நம்மிருதயங்கள் ஐக்கியமாக வேண்டும். நாம் விசுவாசத்துடன் வாழ்ந்து கிறிஸ்துவுடனே கூட நம்மிருதயங்களை இணைக்க வேண்டும். கிறிஸ்துவுடைய நீதியுடன் இணைந்த விசுவாசம் அழகானது. ஏழாம் அதிகாரத்தில் இறுதியாக பவுல் கூறுவது என்னவென்றர் தேவனுடனே கூட நாம் ஆவிக்குரிய வாழ்வை நாம் வாழ வேண்டும்.
கர்த்தருடைய நீதியுடனே கூட தன் இருதயம் ஐக்கியமாகாத கர்த்தரின் ஊழியரான ஒருவரை நீங்கள் எப்போதாவது கண்டதுண்டா. அங்கு யாருமே இல்லை. கர்த்தருடைய நீதியுடன் இணையாமல் பாவ மன்னிப்பிற்கான ஒரு அவசியமான நிபந்தனையாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்றுக் கொண்ட ஒருவரை நீங்கள் கண்டுள்ளீர்களா? அங்கு ஒருவர் கூட இல்லை. நமக்கு வேதாகமம் எத்தனையாய் தெரியும் என்பத பொருட்டல்ல. கர்த்தருடைய நீதியுடன் இணைந்து இயேசுவின் ஞானஸ்நானத்ததையும், அவருடைய சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் நாம் விடுதலையாகாவிட்டால் நம்முடைய விசுவாசம் பயனற்றதாகும்.
பாவ மன்னிப்பை நாம் பெற்றிருந்தாலும் ஆலயத்திற்கு நாம் ஒழுங்காகச் சென்றாலும் அவருடைய நீதியுடனே நாம் ஐக்கியமாகவில்லை என்றால், தேவனுடைய திட்டத்தில் பங்கு பெறாத பாவிகளாய் நாமிருப்போம். நாம் கர்த்தரை விசவாசிக்கிறோம் எனக் கூறினாலும் அவருடைய நீதியிலே நாம் இணையவில்லை எனில் தேவனிடம் இருந்து நாம் பிரிந்தே இருப்போம். கிறிஸ்துவால் நாம் ஆறுதல்படுத்தப்படவும், உதவப்படவும், வழிநடத்தப்படவும் விரும்பினால் கர்த்தருடைய நீதியுடனே கூட நாம் ஐக்கியமாக வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரின் நீதியையும், உங்கள் அனைத்துப் பாவங்களுக்குமான பாவ மன்னிப்பையும் பெற்று விட்டீர்களா? பவுல் செய்ததைப் போல் அன்றாடம் உங்கள் சா£ரமானது பாவச் சட்டத்தை ஆராதிக்கும் போது உங்கள் மனதால் கர்த்தரின் சட்டத்தை ஆராதிக்கிறீர்களா? கர்த்தருடைய நீதியுடன் எப்போதும் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும். கர்த்தருடைய நீதியுடன் ஐக்கியமாகாவிட்டால் நமக்கு என்னவாகும்? நாம் அழிந்து போவோம். ஆனால் கர்த்தருடைய நீதியுடன் இணைந்தவர்கள் கர்த்தரின் ஆலயத்துடன் இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வர்.
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பது என்பது ஆலயத்துடன் இணைவதும் கர்த்தரின் ஊழியர்களுடன் இணைவதுமாகும். அன்றாடம் கர்த்தருடை நீதியுடன் நாம் இணையும் போது மட்டுமே, விசுவாசத்துடன் நம்மால் தொடர்ந்து வாழ முடியும். கர்த்தருடைய நீதியை விசுவாசித்ததின் மூலம் தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் கர்த்தரின் ஆலயத்துடன் அன்றாடம் இணைய வேண்டும். பாவத்தின் சட்டத்திற்கு நம் சா£ரம் அடி பணிய விரும்புவதால் கர்த்தரின் சட்டத்தை நாம் எப்போதும் தியானித்து விசுவாசத்துடனே நாம் வாழ வேண்டும். கர்த்தரின் நீதியை தொடர்ந்து தியானித்து அதனை மையப்படுத்தினால் தேவனுடனே கூட நம்மால் இணைந்திருக்க முடியும்.
கர்த்துடைய நீதியை விசுவாசிக்கும் நாம் அன்றாடம் ஆலயத்துடனும் கர்த்தரின் ஊழியர்களுடனும் ஐக்கியமாக வேண்டும். அப்படிச் செய்ய கர்த்தரின் நீதியை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அன்றாடம் கர்த்தரின் ஆலயத்தை நினைத்து அதனுடன் ஐக்கியமாக இருக்க வேண்டும். நமக்காக நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொள்ள தேவன் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்பதை நாம் தியானம் செய்ய வேண்டும். இந்த விசவாசத்துடனும் கர்த்தரின் நீதியுடனும் நாம் இணையும் போது கர்த்தருடன் நாம் சமாதானமாயிருப்போம். நீங்கள் புதிதாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு அவரால் வல்லமைப் பெற்றவராயிருப்பீர்கள்.
கர்த்துடைய நீதியுடன் உங்களை ஐக்கியப்படுத்துங்கள். அப்போது நீங்கள் புதிய பலனைப் பெறுவீர்கள். கர்த்தரின் நீதியினுள் இயேசுவின் ஞானஸ்நானத்துடன் இப்போதே நீங்கள் இணையுங்கள். உங்கள் அனைத்துப் பாவங்களும் எடுத்துப் போடப்படும். கிறிஸ்துவின் சிலுவை மரணத்துடன் உங்களிருதயத்தை இணையுங்கள். நீங்களும் அவருடனே கூட மரிப்பீர்கள். அவருடைய உயிர்த்தெழுதலுடன் இணையுங்கள். நீங்களும் தொடர்ந்து வாழ்வீர்கள். சுருக்கமாக கூறினால் கிறிஸ்துவுடனே கூட உங்களிருதயத்தை இணைத்தால் கிறிஸ்துவுடனே கூட நீங்கள் மரித்து அவருடனே கூட உயிரோடெழும்புவீர்கள். ஆகவே உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவீர்கள்.
கிறிஸ்துவுடன் கூட நாம் இணையாவிட்டால் என்னவாகும்? “இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? என குழப்பத்துடனே நாம் கேட்டோம். பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு கீழ்கண்டவாறு முந்தையது கைவைத்தலைக் குறித்து பேசுகிறது. மற்றது ஞானஸ்நானத்தைக் குறித்து பேசுகிறது. அப்படியானால்? இங்கு பெரிதாக என்னவிருக்கிறது?” அறிவுபூர்வமான அல்லது கொள்கைப் படியான நம்பிக்கையானது உண்மையான நம்பிக்கையாகாது. அது கர்த்தரிடமிருந்து விசுவாசிகள் நகர்ந்து செல்வதற்கு நம்மை வழிநடத்துகிறது.
இத்தகைய விதமாக விசுவாசிப்பவர்கள் தன் ஆசிரியரிடமிருந்து பாடம் கற்ற மாணவன் ஒருவனைப் போன்றவர்கள். அந்த மாணவன் தன்னுடைய ஆசிரியரை உண்மையாகவே மதித்தால் அவர்களுடைய நற்பண்புகளையும், தலைமைத்துவத்தையும், பெரிதான தன்மைகளையும் கூட கற்பர். கர்த்தரின் வார்த்தையை ஏதோ அறிவிற்கான ஒன்றாக நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஆனால் கர்த்தரின் தன்மையையும், அன்பையும், இரக்கத்தையும், நீதியையும் நம்மிருதயங்களால் கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தை அறிவிற்கான ஒன்றாக மட்டும் கற்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் அவருடைய நீதியுடன் ஐக்கியமாக வேண்டும். கர்த்தரின் நீதியுடன் இணைவது உண்மையான விசுவாசத்தை நோக்கி நம்மை வழிநடத்தும். தேவனுடனே கூட இணைந்திருங்கள். ஐக்கியமாகிய விசுவாசமே உண்மை விசவாசமாகும். ஒரு கொள்கைப்படியான மற்றும் அறிவின் படியான விசுவாசமானது ஐக்கியமாகும் விசுவாசமில்லை. ஆனால் அது தவறான ஒன்று.
ஒரு கீர்த்தனையில் “கர்த்தரின் இரக்கம்” எனப் பாடப்படுவது “ஒரு பெருங்கடலின் தெய்வீகமான கட்டுக்கடங்காத ஆழமான வெள்ளம்” ஆகும். கர்த்துடைய நீதியுடனே நம்மிருதயங்கள் ஐக்கியமாக இருக்கும் போது கர்த்தருடைய நீதி¨ நமக்கு வழங்கிய கர்த்தரின் இரக்கத்துடன் கட்டுக்கடங்காத மற்றும் ஆழமான சமாதானத்துடன் நாமிருப்போம். ஆனால் கொள்கைப்படியான அல்லது அறிவுப்படியான விசுவாசமானது ஆ¡மில்லாத தண்ணீரைப் போன்றது என்பதுடன் அது கர்த்தருடன் இணைந்ததல்ல. கடல் ஆ¡மில்லாததாயிருந்தால் இலகுவாக அது நுரைத்தள்ளுகிறது. ஆனால் ஆழமான கடலில் உருவாகும நீல நிற அலைகளின் அழகு விவரிக்க முடியாதது. ஆனால் ஆ¡மில்லாத கடலில் கடலலை கரையை முட்டும் போது அவைத் திரண்டு, உடைந்து, நுரைத் தள்ளி, குழப்பமான ஒரு நிலையை உருவாக்குகிறது. கர்த்தருடைய நீதியுடன் ஐக்கியமாகாதவர்களின் விசுவாசமானது இந்த ஆழமில்லாத கடலின் அலைகளைப் போன்றது.
கர்த்தருடைய வார்த்தையுடன் இணைந்தவர்களின் இருதயங்களின் ஆ¡மாயும், தேவனைச் சுற்றியுள்ளதாயும், பற்றிக் கொண்டும், எத்தகைய சூழ்நிலைகளிலும் அசையாததாயும் இருக்கும். மிக உயர்ந்தவரின் சித்தத்தை நோக்கி அவரின் இருதயங்கள் செல்லும். ஆனால் அவருடைய நீதியுடன் இணையாதவர்கள் இருதயங்கள் சிறிதளவு பிரச்சனையிலேயே இலகுவாக ஆடிவிடுகின்றன.
தேவனுடனே ஐக்கியமாகிய விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். கர்த்தரின் வார்த்தையுடன் நாம் இணைந்திருக்க வேண்டும். அற்ப பிரச்சினைகளினால் நாம் ஆடிப்போக கூடாது. தேவனுடனே கூட ஐக்கியமாகியவர்கள் கிறிஸ்துவுடனே கூட மறுபடியும் எழுந்தவர்களாவர். நாம் இனி இவ்வுலகத்திற்கு சொந்தமானவர்கள் இல்லை என்பதால் அவரைப் பிரியப்படுத்த கர்த்தரின் நீதியுடனே கூட நாம் ஐக்கியமாகும். அவர் நம்மை நீதியின் ஊழியர்களாக ஏற்றுக் கொண்டார்.
கர்த்தருடைய நீதியுடன் நாம் ஐக்கியமானால் நாம் எப்போதும் சமாதானத்துடனும் மகிழ்ச்சியுடனும், முழு வல்லமையுடனும் இருப்போம் ஏனெனில் தேவனின் பலம் நம்முடையதாயிருக்கும். அவருடைய வல்லமையும் ஆசீர்வாதமும் நம்முடையவைகளாய் இருப்பதினால் மிகப் பெரிய ஆசீர்வாதங்களுடன் நாம் வாழ்வோம். இயேசுவின் ஞானஸ்நானத்துடனும் அவரின் சிலுவை மரணத்துடனும் விசுவாசத்துடனே நாம் இணைந்தால் அவருடைய வல்லமையெல்லாம் நம் சொந்தமானதாகிவிடும்.
உங்கள் இருதயத்தை தேவனுடன் ஐக்கியமாக்குங்கள். நீங்கள் தேவனுடனே ஐக்கியமாகும் போது நீங்கள் கர்த்தரின் ஆலயத்துடனும் ஐக்கியமாவீர்கள். கர்த்தருடனே ஐக்கியமாகிறவர்கள் மற்றவர்களுடனும் ஐக்கியமாகி ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு அவருடைய செயல்களைச் செய்து அவருடைய வார்த்தையின் மீதான விசுவாசத்தில் ஒன்றாக வளர்வர்.
ஆயினும் நம்முடைய இருதயங்களை கிறிஸ்துவுடனே கூட ஐக்கியப்படுத்தாவிட்டால் எல்லாவற்றையும் நாம் இழப்போம். நம்முடைய விசுவாசம் கடு¨க் போல் சிறிதாயினும் நம் பாவங்களை தேவன் ஒரேதரமாக மன்னித்துவிட்டார். நாம் எத்தனை பலவீனர்களாய் இருந்தாலும் இந்த உண்மையுடன் அன்றாடம் நாம் இணைய வேண்டும். ஐக்கியமான விசுவாசம் மட்டுமே உங்களை வாழச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தருக்கு நீங்கள் நன்றி கூறுங்கள்.
தேவனுடைய நீதியுடனே நாம் இணையும் போது நாம் புதிய வல்லமையைப் பெறுகிறோம். ஆகவே நம்மிருதயங்கள் அவரைப் பற்றிக் கொள்ளும். கர்த்தருடைய வார்த்தையுடன் நாம் ஐக்கியமாகும போது நம் இருதயம் சரியானதாகிவிடுகிறது. நம்முடைய சொந்த மனதினைப் பின்பற்றினால் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு தேவையான மன உறுதியைப் பெறுவது சாத்தியமில்லாத ஒன்றாகிவிடும். இயேசுவின் ஞானஸ்நானத்துடனும், அவருடைய சிலுவையுடனும் உயிர்த்தெழுதலுடனும் நாம் ஐக்கியமாகும் போது நம் நம்பிக்கை வளர்வதுடன் வேத வசனங்களில் நாம் உறுதியாக நிற்போம்.
தேவனுடனே கூட நம்மிருதயங்களை நாம் இணைக்க வேண்டும். அவருடன் ஐக்கியமாகிய விசுவாசம் மட்டுமே உண்மையான விசுவாசமாகும். அவருடன் இணையாத விசுவாசம் தவறான விசுவாசமாகும்.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நமக்கு கொடுத்ததன் மூலம் தேவனுடன் நாம் நம் விசுவாசத்தால் இணையச் செய்ய அனுமதித்த கர்த்தருக்கு நாம் நன்றி கூறுகிறோம். முதலாவது நாளிலிருந்து தேவனை நாம் சந்திக்கும் கடைசி நாள் வரை நம்மிருதயத்தால் நாம் அவருடன் இணைந்திருக்க வேண்டும். நாம அவருடன் ஐக்கியமாவோமாக.
அவரிற்கு முன்பாக நாம் பலவீனமுடைவர்களாக இருப்பதினாலே கர்த்தருடனே கூட நம்இருதயங்களை ஐக்கியப்படுத்துவது அவசியமானது. பவுலும் கூட கர்த்தருடனே ஐக்கியமாக இருந்தான். ஆகவே அவன் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டான். கர்த்தருடைய விலை மதிப்பு மிக்க ஊழியன் அவனாவான். உலகம் முழுவதும் நற்செய்தியை அவன் பிரசங்கித்தான். கர்த்தரின் நீதியாகிய இயேசு கிறிஸ்துவினால் அருளப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை அவன் அறிந்து விசவாசித்தான். நாம் பலவீனமானவர்கள் என்பதால் நம்முடைய சா£ரத்தின் மூலம் பாவச் சட்டத்திற்கு ஊழியம் செய்யாமல் மனதினால் கர்த்தருக்கு ஊழியம் செய்ய தேவனுடன் ஐக்கியமாக வாழ்வதால் மட்டுமே முடியும்.
இயேசுவின் நீதியுடன் ஐக்கியமாகக் கூடிய விசுவாசத்தைக் குறித்து இப்போது நீங்கள் கற்றீர்களா? இயேசுவின் ஞானஸ்நானத்துடனே உங்கள் விசவாசம் ஐக்கியமாக உள்ளதா? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும இரத்தத்தை விசுவாசிக்கும் நம்பிக்கையுடன் ஐக்கியமாவதற்கான நேரம் இதுவே. கர்த்தருடைய நீதியுடன் ஐக்கியமாகாதவர்கள். தம் விசவாசத்திலும், இரட்சிப்பிலும், அவர்களின் வாழ்விலும் தவறியவர்களாவர்.
ஆகவே தேவனின் நீதியானது உங்கள் விடுதலைக்கான தவிர்க்க முடியாத அங்கமாகும். தேவனுடனே நாம் ஐக்கியமாயிருக்கும் ஆசீர்வாதமானது பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் கர்த்தரின் பிள்ளைகளாவதற்கும் நம்மை வழிநடத்தும். அவருடைய நீதியை விசுவாசிப்பதன் மூலம் உங்களை அதனுடன் ஐக்கியப்படுத்தி கர்த்தரின் நீதியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்களாக. அப்பொழுது கர்த்தருடைய நீதி உங்களுடையதாகும். மேலும் கர்த்தரின் ஆசீர்வாதம் எப்போதும உங்களுடனே கூட இருக்கும்.
 
 
இயேசு கிறிஸ்துவிற்காக கர்த்தருக்கு நீங்கள் நன்றி கூறுங்கள்
 
தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தருக்குத் தான் நன்றி கூறியதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். இயேசு கிறிஸ்துவின் மூலம் விசுவாசத்தினால் தான் பெற்ற கர்த்தரின் நீதிக்காக அவன் நன்றி கூறினான். கர்த்தரின் நீதியை பவுல் விசுவாசித்தமைக்குப் பிறகு கூட மனதினால் கர்த்தரின் சட்டத்திற்கும் மாமிசத்தினால் பாவத்தின் சட்டத்திற்கும் ஊழியம் செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தரின் நீதியை அவன் தன் முழு மனதுடனும் விசுவாசித்தமையால் அவன் இருதயத்தில் எவ்வித பாவங்களும் இருக்கவில்லை.
இயேசு கிறிஸ்துவிற்குள் நியாயப்பிரமாணத்தினால் ஏற்கனவே தான் ஆக்கிளை அடைந்ததாகவும், கர்த்தருடைய நீதியினாலே விசுவாசத்தின் மூலமாக தான் இரட்சிக்கப்பட்டதாகவும் பவுல் அறிக்கை செய்தான். கர்த்தருடைய கோபாக்கினையையும் அவரின் சட்டப்படியான தண்டனையையும் சந்திக்க விருப்பவர்களால் கர்த்தரின் நீதியைத் தம் இருதயங்களால் விசுவாசிப்பதன் மூலம் இரட்சிப்பின் கனிகளைச் சுமக்க முடியுமெனவும் பவுல் கூறினான். மறுபடியும் பிறந்தவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவரின் விருப்பங்களும் மாமிசத்தின் விருப்பங்களும் உள்ளன. ஆனால் மறுபடியும் பிறவாத ஒரு நபரிடம் மட்டுமே மாமிசத்தின் இச்சைகள் உள்ளன. ஆகவே பாவம் செய்ய மட்டுமே பாவிகள் விரும்புகின்றனர். அதில் மிகவும் கொடுமை என்னவெனில் இயற்கையான உணர்ந்து தங்களின் மூலம் மற்றவர்களின் கண்களுக்கு முன்பாக தம் பாவங்களை அழகுபடுத்துகின்றனர்.
மறுபடியும் பிறக்காக டீக்கன்களும், மூப்பர்களும் வழக்கமாக கூறுவதுண்டு நான் நல்லவனாக வாழ விரும்புவதுண்டு. ஆனால் அது ஏன் இத்தனைக் கடினமானதாயிருக்கிறது என எனக்குப் புரியவேயில்லை. இப்படியாக வாழுவதை அவர்களால் ஏன் தவிர்க்க முடியவில்லை என்பதை நாம எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்கான காரணம் அவர்கள் பாவிகளாயிருப்பதே அவர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசித்து இரட்சிப்பை பெற்றவர்கள் அல்ல. அவர்களிடம் கர்த்தரின் நீதி காணப்படாததால் அவர்களுடைய இருதயங்களில் பாவம் இருக்கிறது. ஆனால் மறுபடியும் பிறந்தவர்களின் இருதயங்களில் கர்த்தரின் நீதியும் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரும் இருக்கிறார். ஆனால் பாவமெதுவும் இல்லை.
பவுலின் இருதயத்தில் பாவம் இருந்த போது அவன் புலம்பினான், “நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” ஆனாலும், உடனடியாக பவுல் கூறினான், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” (ரோமர் 7:25). கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததின் மூலம் அவன் தன் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்படைந்தான் என இது பொருள்படும்.
ஏழாம் அதிகாரத்தில் பவுல் கூற முயற்சி செய்வது என்னவெனில் முன்பு அவன் மறுபடியும் பிறக்காதவனாய் மதவாதியாயிருந்த போது சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது அவனுக்குத் தெரியாது. பாவத்தினால் தான் கொடூரமாக இருந்த நிலையிலிருந்துதன்னை மாற்றியது கர்த்தரின் நீதியை நிறைவேற்றியது இயேசு கிறிஸ்துவென அவன் கூறினான். நம்மைப் பாவங்களிலிருந்து விடுவிக்க கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் சட்டத்திற்கு மனதினால் ஊழியம் செய்வர். ஆனால் மாமிசத்தினால் பாவத்தின் சட்டத்திற்கு ஊழியம் செய்வர். மாமிசமானது பாவத்தை நோக்கி சாய்ந்திருக்கும். ஏனெனில் அவர்கள் மறுபடியும் பிறந்தவர்களாய் இருந்தாலும் மாமிசம் மாறவில்லை. மறுபுறம் பார்த்தால் பாவ மன்னிப்பு பெறாதவர்கள் மனதினாலும் மாமிசத்தாலும் பாவம் செய்வதற்கு மட்டுமே ஏவப்படும். ஏனெனில் அவர்களுடைய இருதயங்கள் அடிப்படையில் பாவம் நிறைந்தது. ஆனால் கர்த்தரின் நீதியை அறிந்து அதனை விசுவாசிப்பவர்கள் அவரின் நீதிக்கு கட்டுப்பட்டிருப்பர்.
கர்த்தரின் எல்லா நீதியையும் கிறிஸ்துவானவர் நிறைவேற்றியதால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தருக்கு நன்றி கூறுவோமாக. தன்னுடைய நீதியைக் கொடுத்தமைக்காகவும் அதனை விசவாசிக்கும்படி நம்மை வழிநடத்துவதற்கும் தேவனுக்கு நாம் நன்றியுடையவர்களாயிருப்போமாக.