• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 7-3] தேவனை நம்மால் துதிக்க முடிவதற்கான காரணம் (ரோமர் 7:5-13)

(ரோமர் 7:5-13)
“நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப் பட்டிருக்கிறோம். ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப் பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்கும். முன்னே நியாயப் பிரமாணமில்லாதவனாயிருந்த போது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக் கண்டேன். பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.”
 
 
இதுவரை என்னை வழிநடத்திய தேவனை நான் துதிக்கிறேன்
 
கர்த்தரின் விலையேறப்பட்ட மக்களாகிய உங்களை மறுபடியும் சந்திக்க என்னை வழிநடத்திய தேவனை நான் துதிக்கிறேன். இதுநாள்வரை மகிழ்ச்சியாக வாழும் ஒரு வாழ்வினால் ஆசீர்வதிக்கப்பட்டதால் அவருக்கு நான் நன்றி கூறுகிறேன். வெவ்வேறு சமயங்களில் என்னுள்ளே பலவீனத்தையும், மன உளைச்சலையும், கடினங்களையும் அனுபவித்த போது உற்சாகம் குன்றியதை உணர்ந்திருந்தாலும் கர்த்தர் எப்போதும் என்னுடன இருந்ததோடு என் மீது இரக்கமுடையவராயும் இருந்தார். என்னுடைய துக்கங்களிலும் இன்பங்களிலும் அவர் என்னுடனே கூட உயிருள்ளவராய் இருந்தார். அவர் என்னைத் தனிமையில் விட்ட ஒரு நொடி கூட இல்லை.
கர்த்தர் நம்மை எத்தனையாய் ஆசீர்வதித்துள்ளார். கர்த்தர் நம்மை நேசித்திருந்தாலும் இரண்டு அல்லது மூன்று முறை அவரிடம் இரக்கமிருந்திருக்கும். ஆனால் சீக்கிரமாகவே அவர் பொறுமை இழந்திருப்பார். ஆனால் கர்த்தர் மனிதரல்ல. அவரின் பொறுமைக்கு அளவேயில்லை. நாம் நற்காரியங்களில் ஈடுபடுகிறோமா அல்லது அவருடையை வார்த்தைக்கு கீழ்படிகிறோமா இல்லையா என்பதை பொருட்படுத்தாது. அவர் நம்மீது இடைவிடாமல் இரக்கமுடையவராய் இருக்கிறார். இத்தகைய அன்பு செலுத்தும் கடவுளை துதிக்காமலும், ஆராதிக்காமலும், பணிவிடைச் செய்யாமலும் நம்மால் இருக்க முடியாது. தாவீது ராஜா தன் வாழ்நாள் முழுவதும் தேவனைத் துதித்தான். அவன் தன்னுடைய துன்பங்களின் போதும், வாழ்வின் தோன்றிய கடினமான நேரங்களின் போதும் கர்த்தர் தன்னை பொறுப்பெடுத்துக் கொண்டதற்காக அவரிற்கு நன்றி கூறினான். “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங்கீதம் 18:29) என அறிக்கைச் செய்தான்.
கர்த்தர் நம்மை எத்தனையாய் ஆசீர்வதித்தார். அவரை போதுமான அளவிற்கு நம்மால் துதிக்க முடியாது. உலகம் எத்தனைப் பெரியதோ அத்தனைப் பெரிய ஆலயத்தைக் கட்டினால் நாம் திருப்தியடைவோமா? ஆகாயத்தை முட்டும் அளவிற்கு ஒரு ஆலயத்தை கட்டினால் நாம் திருப்தியடைவோமா? அப்படி இல்லை. மிகப் பெரிய ஆலயங்களையும், நம்மால் கற்பனை செய்யக் கூடிய அளவு அழகிய ஆலயங்களையும் நம்மால் கட்ட முடியும். ஆனால் ஆலயத்தின் அளவும் அதன் அழகும் பொருட்டல்ல. கூக்குரலிடும் ஆத்துமாக்களிடம் கர்த்தர் துல்லியமாக பணியாற்றுவதிலும், அவர்கள் அவரின் வார்த்தையைக் கேட்கச் செய்து அவருடைய வார்த்தையைக் கேட்டு மறுபடியும் பிறப்பதில் இது இருக்கிறது. இந்த ஆசீர்வாதங்களுக்கு மாறாக நம் தேவனைத் துதிப்பதைத் தவிர நம்மால் வேறெதையும் செய்ய முடியாது. அவருக்கு ஊழியம் செய்யவும் அவருடைய செய்கைகளின் கனிகளைச் சுமக்கவும் கர்த்தர் அனுமதித்தமைக்கு நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்.
இந்த புதிய ஓய்வு விடுதியில் உங்களை அமரச் செய்த கர்த்தரிடம் நீங்கள் நன்றியுடையவர்களாய் இருக்கிறீர்களா? கர்த்தர் தம்முடைய எல்லையில்லா கிருபையினால் நம்மை ஆசீர்வதித்தார். நம்மை கண்மணிகளைப் போல் பாதுகாக்கிறார். அவருடைய அனைத்து அன்பையும் பெற்றுக் கொள்ள நாம் யார், நாம் என்ன செய்தோம்? அப்படியிருந்தும் அவருக்கு முன்னால் நம்மை விலையேறப்பட்டவர்களாக்கினார். நாம் அவரிடம் காட்டிக் கொள்ள எதுவுமில்லை. ஆனால் நாம் மறுபடியும் பிறந்தமையே அதற்கான காரணம். இயேசு கிறிஸ்துவை சந்திக்கும முன் நாம் ஒன்றுமில்லாதவர்கள். பைத்தியத்தினால் நுரைத் தள்ளி பாலைவனத்தில் அலைந்து, மரித்து, புழுதியிலும் சாம்பலிலும் மறைந்து போக வேண்டிய நம்மை கர்த்தர் தம் பிள்ளைகளாக்கினார்.
கர்த்தர் நமக்கு கொடுத்த அன்பு எத்தனை அழகானதும் பெரிதானதுமாகும், தேவனுக்கே துதி, இவ்வுலகிலுள்ள பல ஆத்துமாக்களில், தம்முடைய நீதியினுள் நம்மைத் தமது நிபந்தனை இல்லாத அன்பினால் இரட்சித்தார். விடுதலையாவது என்பதிலிருந்து இரட்சிக்கப்படுவது என்பது வேறு. இதன் பொருள் நம் ஆத்துமாக்கள் கர்த்தருடன் தொடர்பு கொண்டுள்ளன என்பதாகும். அவருடைய அன்பு நமக்குரியது எனவும் இது பொருள்படும். நாம் வேணடி பெற்றுக் கொள்ள அவருடைய ஆசீர்வாதங்களும் உள்ளன எனவும் இது பொருள்படும்.
கர்த்தருடைய ஆச்சரியப்படும் படியான வழிநடத்துதல்களாலும், உற்சாகப் படுத்துதலாலும் இப்போது நாம் அவரின் ஆலயத்தில் இருக்கிறோம். கர்த்தர் நம்மை இங்கு வைத்திராவிட்டால் நம்மால் எப்படி இங்கே இருக்க முடியும்? அவர் நம்மை நேசித்து ஆசீர்வதித்திருக்காவிட்டால் நற்செய்தியைப் பிரசங்கித்து அவருக்கு ஊழியம் செய்ய நம்மால் எப்படி முடியும்? அவர் உயிரோடே இருப்பதாலும் நம்முடனே இருப்பதாலும் நம்மை ஆசீர்வதித்ததினாலும் கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்ய முடிகிறது.
தேவன் நம்மை பாதுகாத்து ஆசீர்வதித்திராவிட்டால் அவரை முன்போ அல்லது இப்போதோ நம்மால் துதிக்க முடியாது. கர்த்தர் தம்முடைய இரத்தம் மிக்க கரங்களால் நம்மை பாதுகாத்து நம்மை நேசித்து ஆசீர்வதித்து உற்சாகப்படுத்தியதால் அவரை நாம் பின்பற்றி, துதித்து ஆராதித்து அவருக்கு ஊழியம் செய்கிறோம். இது உண்மை இல்லையா? நம் மீதுள்ள அவரின் முடிவில்லாத அன்பிற்காகவும் அவருடைய ஆச்சரியமான செய்கைகளுக்காகவும் நம் முழு இருதயங்களுடனும் தேவனை நாம் புகழ்வோம்.
அவர் இரட்சித்தவர்களுக்காக அநேகக் காரியங்களைச் செய்துள்ளார். அவர் நம்மை விடுவித்ததும், மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களின் விசுவாசத்தை தொடர்ந்து உறுதிபடுத்தி வருவதும் கர்த்தர் நம்மைத் தாங்கி காத்து வருகிறார் என்பதற்கான அத்தாட்சியாகும். நம் மூலமாக கர்த்தர் செயல்பட்டு தம் சித்தத்தை நிறைவேற்றுகிறார்.
உலகம் முழுவதும் உள்ள மறுபடியும் பிறந்தவர்களின் சபையாகிய அவரின் அனைத்து ஆலயங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். நாம் எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்துள்ளோம். ஆயினும் கர்த்தர் எப்போதும் எங்களுடனே கூட இருந்துள்ளார். அவருடைய வேலைகளை இடைவிடாது தொடர்ந்து செய்யவும் நம் ஆத்துமாக்களை பலப்படுத்தி அதிக அளவு ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு தேவையான பிசுவாசத்தை அடைய நம்மிருதயங்களை ஆயத்தப்படுத்தவும் செய்தார். அவருடைய கிருபை எத்தனைப் பெரியது, தேவனுக்கு இன்னுமொரு முறை நன்றி கூறுகிறேன்.
 
 
நம் முழு இருதயங்களுடனும் தேவனைத் துதிக்க வேண்டும்
 
“நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்” (ரோமர் 7:5-6). நாம் மாமிசத்திற்குரியவர்களாய் இருக்கும் போது சட்டத்தினால் எழுப்பப்படும் பாவமான இச்சைகளினால் நம் உறுப்புகளில் செயல்பட்டு மரணத்திற்கேதுவான கனிகளைக் கொடுக்கும். ஆயினும் வேதாகமம் இதனையும் கூறுகிறது. “இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப் பட்டிருக்கிறோம்.”
பாவ இச்சைகளிலிருந்து மாமிசத்தை விடுவிக்க முடியுமா? ஒரு மனிதன் இரண்டு வகையாக வாழுகிறான். ஒன்று மாமிசமாகும். மற்றது இருதயமாகும். நமது சரீரம் எத்தனைக் கடினமாய் முயற்சி செய்தாலும் கர்த்தரின் நீதியை அதனால் அடைய முடியாது. அல்லது கர்த்தரின் சட்டத்தை அதனால் கடை பிடிக்கவும் முடியாது. (நாம் எத்தனைக் கடினமாய் முயன்றாலும்) நாம் மறுபடியும் பிறந்த பிறகும் கூட கர்த்தரின் சட்டத்தை நம் மாமிசத்தால் கடை பிடிக்க முடியாது. ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான் “நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.”
ரோமர் 4:15 கூறுகிறது. “மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.” நம் கர்த்தரை இருதயப் பூர்வமாக துதிக்க வேண்டும். ஆவிக்குள் புதிதானவர்களாய்அவரை நாம் துதிக்கும்படி கர்த்தர் செய்தார். அது எழுத்துக்களின் பழமையில் அல்ல. ஏனெனில் சட்டத்தினால் தாங்கப்பட்டுள்ளவர்கள் சட்டத்தின் கோபாக்கினையால் ஏற்கனவே சபிக்கப்பட்டவர்கள்.
மாமிசமானது இருதயத்திலிருந்து வேறுபட்டது. மாமிசம் எல்லைக்குட்பட்டது. ஆனால் இருதயத்தால் கர்த்தரின் வார்த்தையைப் பெற்று விசுவாசத்தினால் அவரைத துதிக்க முடியும். இருதயத்தாலும் பாவத்திலிருந்து விடுதலையாக முடியும்.
சட்டத்திற்கு நாம் மரித்தோம். என்னைப் பற்றிக் கொண்டிருந்ததற்கு நான் மரித்ததால் நானும் மரித்தவனாவேன். மாமிசத்தின் மூலம் அவருடைய நீதியை நாம் அடைந்து கர்த்தரின் சட்டத்திற்கு முன் நம்மால் சரியானவர்களாய் இருக்க முடியும். மாமிசத்தால் தீர்க்கப்படாதிருக்க முடியாது. ஆயினும பிதாவானவர் தம்முடைய ஒரே பேரான குமாராகிய இயேசு கிறிஸ்துவை நம்மிடம் அனுப்பினார். அதன் பிறகு சட்டத்தின் முழு கோபத்தையும் அவர் மீது சுமத்தினார். ஆகவே இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டார். ஆவியினால் புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்தினால் தேவனுக்கு நாம் ஊழியம் செய்வது சாத்தியமாயிற்று. தன்னுடைய கோபத்தால் நம்மைப் பிடித்திருந்த எழுத்துக்களின் பழமைக்கு நாம் ஊழியம் செய்யவில்லை.
விசுவாசத்தினால் தேவனை நம்மால் துதிக்க முடியும். இருதயத்தால் தேவனைத் துதிக்க முடியும். நம்மிடம் இன்னமும் மாமிசம் இருப்பது பொருட்டல்ல. தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதை நம் இருதயங்களால் விசுவாசிக்க முடியும். கிறிஸ்துவுக்குள்ளாக நாம் மரித்ததாக நாம விசுவாசிப்பதால் தேவனை நம்மால் துதிக்க முடியும். சட்டத்தின் சாபத்தினாலும் கர்த்தரின் நியாயத் தீர்ப்பாலும் கட்டுப்பட்டிருந்த நம்மிடம் பிதாவாகிய கர்த்தர் தன்னுடைய ஒரேபேறான குமாரனை அனுப்பி அதற்கேற்ற நேரம் கனித்த போது நம்முடைய அனைத்துப் பாவங்களையும் சட்டத்தின் கோபத்தையும் தன் குமாரரின் மீது சுமத்தினார். நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் நம்மை முற்றிலும் இரட்சித்தமைக்காக நாம் தேவனைத் துதிக்கிறோம்.
கர்த்தர் தம்முடைய நீதிக்காக நம்மை இரட்சித்தார் என முழு இருதயத்துடனும் நாம் விசவாசிக்கிறோம். அவருடைய அன்பிற்காக நம் முழு இருதயத்துடன் நன்றிகளையும் துதிகளையும் மகிமைகளையும் கர்த்தருக்கு செலுத்துகிறோம். இவற்றையெல்லாம் நம் மாமிசத்தினால் செய்ய முடியுமா? இல்லை. நாம் மாமிசத்திலிருந்த போது சட்டப்படியான பாவ ஆசைகளினால் நம் உறுப்புகளோடு செயல்புரிந்து சாவுக்கேதுவான கனிகளைச் சுமந்தோம். கர்த்தரின் கோபாக்கினையில் மாமிசம் வாசம் செய்கிறது.
விசவாசத்தின் மூலமாக சட்டத்தின் கோபாக்கினையிலிருந்து இப்போது நாம் விடுதலையடைந்தோம். தன்னுடைய அன்பிலும் இரட்சிப்பிலும் உள்ள விசவாசத்தினால் அவருக்கு ஊழியம் செய்யச் செய்தார். நாம சட்டத்தினால் தீர்க்கப்பட வேண்டியவர்களாய் இருந்தாலும் எழுத்துக்களின் பழமையினாலோ அல்லது கர்த்தரின் சட்டத்தினாலோ இது நடைபெறவில்லை.
நம்முடைய செய்கைகளினால் தேவனுக்கு நாம் ஊழியம் செய்ய முடியாது. நாம் மறுபடியும் பிறந்தாலும் கூட நம் மாமிசத்தினால் அவருக்கு ஊழியம் செய்ய முடியாது. மாமிசத்தினால் தேவனுக்கு ஊழியம் செய்ய முயன்று தோல்வியடைந்தவர்கள் யாரேனும் இங்கே இருக்கிறார்களா? மாமிசத்தின் ம்லமாக தேவனுக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியாது. பாவமான இச்சைகள் மாமிசத்தை எப்போதும் ஆளும். நாம் மறுபடியும் பிறந்த பிறகும் கூட நம் மாமிசத்தால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. விசுவாசத்தின் மூலமாக நம் இருதயங்களால் மட்டுமே கர்த்தரைத் துதித்து அவருக்கு ஊழியம் செய்ய முடியும். ஆகவே கர்த்தரை நீங்கள் துதிக்கும் போது உங்கள் இருதயத்தால் அவரை விசுவாசித்து அவருடைய அன்பிற்கு நன்றி கூறுங்கள். அப்பொழுது விசுவாசத்திற்கு பின்பற்றும் உறுப்பாக நம் இருதயம் மாறும்.
நான் அவரை என் இருதயத்தால் விசுவாசிப்பதால் சட்டத்தின் எல்லா ஆக்கினையிலிருந்தும் நம்மை இரட்சித்த தேவனை நான் துதிக்கிறேன். தேவனுக்கு நான் நன்றிகளை செலுத்துகிறேன். அவர் என்னை முற்றிலுமாக இரட்சித்தார். என்னுடைய அன்றாடப் பாவங்களிலிருந்தும் சட்டத்திலிருந்தும் அவன் என்னை விடுவித்தார். நம் தேவன் நம்மை இரட்சித்தார் என்பதில எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம். கர்த்தர் நம்மை நேசிப்பதால் நாம் பலவீனர்களும், குறைபாடு உடையவர்களுமாய் இருந்தாலும், அவர் நம்மை இரட்சித்தார். நாம் குறைபாடு நிறைந்தவர்களாய் இருந்தாலும் கர்த்தர் நம்மை நீதிமான்களாக்கியது எத்தனை ஆச்சரியமானது? கர்த்தர் நம்மைத் தன் ஊழியர்களாக்கியது எத்தனை அற்புதமானது?
சட்டத்தின் கோபாக்கினையிலிருந்து நம்மை இரட்சித்தமையால் கர்த்தரை நம்மால் புகழ முடியும். நம்முடைய ஆவியின் மூலமாகவும், இருதயங்களாலும் தேவனை நாம் ஆராதிக்கலாம். நம்முடைய பாவங்களிலிருந்தும் அவருடைய கோபாக்கினையிலிருந்தும் நம்மை விடுவித்த தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நீங்கள் அவருக்கு நன்றி கூறுகிறீர்களா? நாம் எத்தனை பலவீனமானவர்கள் என நம்முடைய இரட்சிப்பு வெளிப்படுத்தவில்லையா? நாம் எத்தனைக் கடினமாய் முயன்றும் கூட அவருடைய சித்தப்படி வாழுவதிலிருந்து எத்தனை முறைத் தவறியிருக்கிறோம். எத்தனை முறை நாம் பெருமிதத்துடன் இருந்திருக்கிறோம்? எத்தனை பலவீனங்கள் நம்மிடம் இருக்கின்றன? இப்போதோ அல்லது எதிர் காலத்திலோ நம்முடைய மாமிசத்தாலும், செயல்களாலும் தேவனை நம்மால் துதிக்கவே முடியாது. நம்முடைய இருதயங்களில் அவர் செய்தவற்றிற்கு கர்த்தரை நாம் துதிக்கிறோம். நம்முடைய இருதயங்களாலும் விசுவாசங்களாலும் மட்டுமே தேவனை நம்மால் துதிக்க முடியும்.
 
 
மாமிசத்தின் மூலம் நம்மால் துதிக்க முடியாது
 
தேவனை நாம் பின்பற்றும் போது நம்முடைய சொந்த நீதி துண்டு துண்டாக உடைந்து போகிறது. மனதின் உலகமும் மாமிசத்தின் உலகமும் பிரிய வேண்டும். இது மாமிசத்திலிருந்து ஆவியானது தனியாகப் பிரிவதாகும்.
இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மாமிசத்தினால் நாம் முயல்வது பயனற்றது. நம்முடைய இருதயங்களால் நாம் பாடி, மகிழ்ந்து, துதித்து, விசுவாசித்து, பின்பற்றி நன்றி கூறும் போது நம் இருதயங்களுக்கு கட்டுப்பட்டு நம் மாமிசத்தால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும். நம்முடைய இரட்சிப்பிற்காக தேவனை நாம் துதித்து அவருக்கு நன்றியும் கூற முடியும். இப்படி நாம் படலாம், “♪கல்வாரியினால் என்னுடைய எல்லாப் பாவங்களும் அழிந்தன. கல்வாரியினால் வாழ்க்கைப் பாட்டினால் நிரம்பியது. என் பாவங்களிலிருந்து என்னை விடுவிக்க என் இரட்சகராகிய கிறிஸ்து வாழுகிறார். ஒருநாளில் அவர் திரும்பி வருவாய். ஓ அது ஆசீர்வாதமான அதிசய நாள். எல்லாமே ஆம், இதுவெல்லாம் கல்வாரியினால் ஆயிற்று.♪” மாமிசத்தினால் சில நேரங்களில் தடுமாறுகிறோம். நாம் நமக்குள்காக எண்ணுகிறோம். “என்னிடம் பாவம் இல்லாவிட்டாலும் நான் ஏன் இத்தனை பலவீனமாய் இருக்கிறேன்?” அப்போது நாம் ஆச்சரியப்படுகிறோம். “‘♪என்னுடைய எல்லாப் பாவங்களும் அழிந்தன♪` - அது சரி - ‘♪வாழ்க்கைப் பாட்டினால் நிரம்பியது♪` - அதுவும் சரி தான் - ‘இதுவெல்லாம் கல்வாரியினால் ஆயிற்று` - இதுவெல்லாம் சரி- ஆனால் நான் ஏன் பலவீனமாயிருக்கிறேன்? நேரம் செல்லச் செல்ல மிகவும் மகிழ்ச்சியுடன் தேவனை நாம் பின்பற்றி அவருக்கு நன்றி செலுத்த வேண்டியிருக்க நான் ஏன் இத்தனை குறைபாடுடையவனாய் இருக்கிறேன்? ஆ, என் மோசமான மாமிசம்.”
நாம் கவலைப்படும் போது கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். “என் ஆத்துமாவே நீ என் துக்கப்படுகிறாய்? நான் உன் இரட்சகர் என்பது உனக்குத் தெரியாதா? நான் உன்னை நீதிமானாக்கினேன்.” மாமிசத்தின் மூலம் கர்த்தரைப் பின்பற்றவோ அல்லது ஆராதிக்கவோ நம்மால் முடியாது. நம்மை இரட்சிக்க அவர் செய்தவைகளை விசுவாசிப்பதின் மூலம் கர்த்தருக்கும் நாம் ஊழியம்செய்யலாம். நம்மிருதயங்களால் அவரை நேசித்து நன்றி செலுத்தி மகிமைப்படுத்த வேண்டும்.
உங்களிருதயத்தால் கர்த்தரை நீங்கள் துதிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். உங்கள் இருதயங்களால் அவரை விசுவாசித்து அவருக்கு நீங்கள் நன்றி கூற வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். நம்மிருதயங்களால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாயிற்கு, மாமிசத்தால் இவை சாத்தியமேயில்லை. நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு கூட நம் மாமிசம் மாறாததாகவே இருக்கிறது. நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலைக்கு இப்போதுள்ள நிலைக்கும் மேற்கண்ட வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது பொருந்தும். இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் இரட்சிக்கப்படாதவர்களுக்கும் கர்த்தரின் வார்த்தை மாதிரியானதே.
 
 
நீங்கள் இரட்சிக்கப்பட்ட பிறகு கர்த்தரை உங்கள் மாமிசத்தால் தொடர்ந்து பிரியப்படுத்தினீர்களா?
 
மற்றவர்களிடமிருந்து நீங்கள் வித்தியாசமானவர்களாய் இருப்பதால் கர்த்தரை உங்களால் பிரியப்படுத்த முடியுமென நீங்கள் எண்ணுகிறீர்களா, மற்றவர்களைவிட நீங்கள் கர்த்தருக்கு அதிகம் ஊழியம் செய்கிறீர்களா? தம்முடைய சொந்த நீதியினால் நிறைந்தவர்கள் ஒருநாளில் படுகுழியில் விழுவர். படுகுழியில் விழுந்த அனுபவமும், குப்பைத் தொட்டியில் விழுந்த அனுபவமும் சில மக்களுக்கு ஏற்கனவே கிட்டியுள்ளது.
இந்த வசந்த கால வேதாகம கூட்டத்தின் போது குப்பைத் தொட்டியில் விழுந்த ஒரு சகோதரியை எனக்குத் தெரியும். அது உண்மையாகவே வெளியிலுள்ள வீடாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதுவரை அது பயன்படுத்தப்படவில்லை. அதனை இதற்கு முன் யாராவது உபயோகப்படுத்தியிருந்தால் அவர் உண்மையான சிக்கலில் வசமாக சிக்கியிருப்பார். வேதாகமக் கூட்டத்தை ஏற்பாடு செய்த போது அம்மலையில் சில வீடுகளைக் கட்டுவதற்காக சில ஆழமான துளைகளை அங்கு தோண்டியிருந்தோம். அதன் பிறகு கால்களைத் தாங்கும் தட்டு விரித்து வைத்தோம். ஒவ்வொரு கழிவறையில் காலைத் தாங்கும் அமைப்பை பொருத்தி வைத்தோம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் நாம் இவற்றை பொருத்தவில்லை. ஆகவே இச்சகோதரி கால்தவறி இத்துளைக்குள் விழுந்துவிட்டார். தம்முடைய சொந்த நீதியினால் நிரம்பியவர்களுக்காக இத்தகைய துளைகளைக் கர்த்தர் ஏற்பாடு செய்திருக்கிறார். அவரை மட்டுமே நாம் மகிமைப்படுத்துவதை கர்த்தர் விரும்புகிறார்.
இரட்சிக்கப்பட்ட பிறகு சரியான பாதையிலிருந்து நான் விலக நேர்ந்தால் என் ஆத்துமா அசெளகரியமாகவும், திருப்பியில்லாததாகவும் உணரும். நானேன் இப்படி உணருகிறேன் என எண்ணிப் பார்த்தால் என் ஆடைகள் அழுக்கினால் கறை படிந்திருப்பது தெரியும். அந்த வழியாக நான் போகக் கூடாது என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனால் சீக்கிரமாகவே அது மறந்து போய்விட்டது. இதனை நான் உணர்ந்தவுடனேயே நான் மனம் வருந்தி ஜெபிப்பேன் “இதனை நான் செய்யக் கூடாது. நான் என்ன எண்ணுகிறேன்? ஓ தேவனே என்னுடைய எல்லாப் பாவங்களையும் கழுவியதற்காக உம்மைத் துதிக்கிறேன்.” ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் பாவம் செய்தேன். அப்பொழுது பாவத்திலிருந்து கர்த்தரின் நீதிக்கு நான் தப்பியதை கண்டேன். ஆகவே நான் வாழ்ந்திருப்பதைக் குறித்து கவலையும் பரிதவிப்பும் உள்ளவனானேன்.
என்னுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட பிறகு நான் எத்தனை அழுக்கானவன் என்பதை அறிந்தேன். நான் அதனைப் புரிந்து கொண்டு இவ்வாறு எண்ணினேன். இது கொடூரமானது. கர்த்தராகிய உம்மை நான் விசுவாசித்தாலும் கூட நான் ஏன் இத்தனைக் குறைபாடுள்ளவனாயும் பலவீனமானவனாயும் இருக்கிறேன். சட்டத்தினால் தூண்டிவிடப்படும் பாவ இச்சைகள் நம் உறுப்புகளில் செயல்புரிகிறது. சட்டத்தின் படி வாழ அதிகமாய் முயலும் போது என் மாமிசம் அதிகமாய் பாவத்தின் இச்சையினால் விழுந்து போனதை நான் உணர்ந்து கொண்டேன். மாமிசத்தினால் கர்த்தரைப் பின்பற்ற முடியாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். கர்த்தரின் நீதிக்கு என் மாமிசத்தை ஒரு கருவியாகக் கொடுத்ததின் மூலம் தேவனுக்கு நான் ஊழியம் செய்யத் தொடங்கினேன். என் இருதயத்தினால் அவரை விசுவாசித்தப் பிறகு கிட்டிய கர்த்தரின் ஆசீர்வாதத்திற்காக அவரைத் துதித்தேன்.
 
 
மாமிசமானது பாவ இச்சைகள் நிறைந்த குவியலாகும்
 
தாம் பாவ இச்சையின் குவியல்கள் எனத் தெரியாதவர்கள், கர்த்தருக்கு சில காலம் ஊழியம் செய்வதை நிறுத்தி விட்டால் தாம் எத்தனைச் சீக்கரமாக பாவத்திற்குள் விழுந்து விடுகிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். நம்முடைய இருதயங்களால் தேவனை நாம் விசுவாசித்து அவரை துதித்து மகிமைப்படுத்தி அவரைப் பின்பற்ற வேண்டும். இருதயத்தால் அவரைப் பின்பற்றுவது என்பது தேவ கிருபையின் ஆசீர்வாதமாகும். நம்முடைய இருதயங்களால் அவரை விசுவாசிக்கும் போது மட்டுமே அவரை நம்மால் பின்பற்ற முடியும். நாம் மாமிசத்திலிருக்கும போது சட்டத்தினால் தூண்டி விடப்பட்ட பாவ இச்சைகள் பாவத்திற்கான கனிகளைச் சுமக்குமாறு நம் உறுப்புகளில் செயல் புரிகிறது. நம்முடைய இருதயங்களால் தேவனைப் பின்பற்றி அவரைத் துதிக்காமல் இருக்கும்போது நம் மாமிசம் பாவ இச்சைகளில் சீக்கிரமாகவே விழுந்து விடுகிறது. இது நம் எல்லோரிடமும் இருக்கிறது. பவுலிடமும் கூட இப்படித் தான் இருந்தது.
நற்செய்தியைப் பிரசங்கித்தவாறு தன் வாழ்நாள் முழுவதும் பவுல் திருமணம் செய்யாமல் தனிமையாயிருந்தான். ஆனால் மாமிசத்தின் பாவ இச்சையின் மூலம் பாவம் தூண்டப்படும் என்பதை அவன் அறிந்து கொண்டான். அவன் இவ்வாறு சிந்தித்திருக்கலாம். “எனக்கு பயமாயிருக்கிறது. சில காலங்களுக்கு முன் மகிழ்ச்சியால் நான் நிறைந்திருந்தேன். ஆனால் இப்போது ஏன் மகிழ்ச்சியில்லாதவன் ஆனேன்? என்னிடம் இருக்கும் தவறென்ன? சில காலத்திற்கு முன் ஆவியில் நிறைந்தவனாய் நான் இருந்தேன். ஆனால் இப்போது குப்பைத் தொட்டியானதை உணருகிறேன்.” அதனை எண்ணியப் பிறகு மாமிசத்தை இருதயத்திலிருந்து அகற்றாமல் தேவனைத் தன்னால் ஆராதிக்க முடியாது என அவன் அறிந்து கொண்டான். “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! மாமிசத்தினால் எந்த நன்மையையும் செய்ய முடியாது.”
நம்முடைய இருதயங்களால் கர்த்தரை நாம் துதித்து அவரைப் பின்பற்றும் போது மாமிசமானது இருதயத்திற்கு கட்டுப்படுகிறது. இந்த சத்தியத்தைப் பவுல் அறிந்து கொண்டான். பாவம் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது. இதனை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? இப்படியாக பாவமில்லாதவர்கள் தேவனைத் துதித்து விசுவாசித்து அவரைப் பின்பற்றும் போது மாமிசமானது இருதயத்தைப் பின்பற்றுகிறது. ஒரு நபர் முதலில் இப்படி எண்ணலாம். “நான் என்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டேன். அல்லேலூயா. நான் மிகவும் மகிழ்கிறேன்.” ஆனால் காலம் செல்லச் செல்ல அந்நபரின் பாவ இச்சைகள் அதிகமதிகமாய் வெளிப்படுகின்றன. தம்முடைய சொந்த நீதிகளினால் நிரம்பியவர்கள் தம்முடைய பாவ இச்சைகள் சிறிது சிறிதாக வெளிப்படுத்தப்படும் போது மிக இலகுவாக ஏமாந்து போனவர்களாக தம்மைக் குறித்து எண்ணுகின்றனர். அவர்கள் இப்படியாக எண்ணாவிட்டாலும் தம்மைக் குறித்து அவர்கள் எண்ணுவரைவிட மோசமானவர்கள்.
நம்முடைய மாமிசமானது பாவ இச்சைகள் நிறைந்த குவியல் என்று நாம் அறிய வேண்டும். மாமிசத்தின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. அதனை நீங்கள் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக கர்த்தரின் கிருபையை நீங்கள் விசவாசியுங்கள். தேவனை மகிமைப்படுத்துங்கள். உங்கள் முழு இருதயத்துடனும் அவரைப் பின்பற்றுங்கள். இருதயத்தின் மூலமாகவே இதுவெல்லாம் சாத்தியமாகும். பேசவேத் தெரியாதவனும், என்னுடைய சொந்த நீதியினால் நிரம்பியவனுமாகிய என்னை நற்செய்தியைப் பிரசங்கிக்க அனுமதித்த கர்த்தரின் கிருபைக்காக தேவனைத் துதிக்கிறேன். தேவனுடைய கிருபை இல்லாமல் எப்படி இதனை என்னால் செய்ய முடியும்? தேவனை மட்டுமே என்னால் துதிக்க முடியும்.
 
 
தேவனைத் துதிக்க ஏதுவாக்கிய அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்
 
நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவியதற்கும் நம்முடைய மாமிசத்தினால் அல்லாமல் நம் இருதயங்களால் அவரைத் துதிக்கச் செய்யும் பரிசுத்த ஆவியானவரை நமக்கு கொடுத்தமைக்கும் தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன். நம்முடைய இருதயங்களால் அவரை விசவாசிப்பதால் அவரைப் புகழுவும் மகிமைப்படுத்தவும் நம்மால் முடிகிறது.
“இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:6). நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்த தேவனை நான் துதிக்கிறேன். தேவனைத் துதித்து அவருக்கு நன்றி கூறுகிறேன். அவருக்கு மகிமைச் செலுத்தி அவரை விசவாசிக்கிறேன். பாவ இச்சைகளில் நாம் வாழ்ந்த பிறகு மரிக்க வேண்டிய நம்மை எல்லாப் பாவங்களில் இருந்தும் தேவன் இரட்சித்தார். நம்முடைய இருதயங்களால் கர்த்தரை விசுவாசிப்பதின் மூலம் இரட்சிக்கப்படுவதை அவர் அனுமதித்தார். அவரைத் துதிக்கச் செய்து நமக்கு மகிழ்ச்சியை அளித்தார்.
மாமிசத்தினால் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முயலாதீர்கள். அது சாத்தியமே இல்லாத ஒன்று. மாமிசத்தினால் தெய்வீகத் தன்மையைப் பெற முயலாதீர்கள். அதனை அடையவே முடியாது. இத்தகைய மாமிசத்தின் முயற்சிகளை விட்டுவிடுங்கள். அப்படியானால் நாம் கர்த்தரைப் பின்பற்றுவது எப்படி? இதற்கான பதில் நம்மிருதயங்களில் இருக்கிறது. ஆவிக்குரிய புதியவைகளுடன் இருதயத்தால் அவருக்கு ஊழியம் செய்ய முடியும். நம் கர்த்தர் நம்மை இரட்சித்தார். ஆகவே உங்கள் இருதயத்தால் அவரைப் பின்பற்றுங்கள். இரட்சிப்பைப் பெற இது உங்களை ஏதுவாக்கியது.
கர்த்தரை நான் துதிக்கிறேன். எத்தனை மக்கள் தமக்குத் தாமே புலம்பிக் கொள்கிறார்கள்? அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து தம்மைத்தாமே நொந்து கொள்ளுகிறார்கள். “இப்படி ஏன் நான் செயல்பட்டேன்?” எனக் கூறுவார்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம். உங்கள் மாமிசத்தினால் பாவம் செய்யாமலிருப்பது முடியாத ஒன்று, சாத்தியம் இல்லா ஒன்றை சாத்தியமாக்க முயல வேண்டாம். நீங்கள் கர்த்தரை விசுவாசித்து அவரை உங்கள் இருதயத்தால் துதிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். மாமிசமானது அப்பொழுது இருதயத்தைப் பின்பற்றும். நீங்கள் இரட்சிக்கப்பட்ட பிறகு அதிக காலமாக உங்கள் மாமிசத்தால் தேவனைப் பின்பற்ற நீங்கள் முயன்றீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வதற்கு பிரச்சனை இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் இருதயத்தினால் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு பதிலாக மாமிசத்தினால் அப்படி செய்வதே பிரச்சனை. என்னை மதிக்காதவர்களும் புறம்பேத் தள்ளுகிறவர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியுமா? என்னைப் பார்த்து அவர்கள் சிரிப்பர். நகைக்கிறார்கள், ஆனால் அவர்களைப் பார்த்து சிரிப்பேன். ஏனெனில் எனக்குள் நடப்பது அவர்களுக்குத் தெரியாது என்பதை நான் அறிவேன்.
நற்செய்தியை என்னால் பிரசங்கிக்க முடியும். ஏனெனில் தேவன் ஏற்கனவே என் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார். என்னுடைய எல்லாப் பாவங்களையும் தேவன் கழுவியிராவிட்டால் நான் தீர்க்கப்பட்டு கர்த்தருக்கு முன்னதாக மரித்திருப்பேன். ஆவியானவருடன் நம்மை ஒன்றுபட செய்ததின் மூலம் கர்த்தர் நம்மை முழுமையாக்கினார். நன்றியறிதலுள்ள மனதினால் நம்மை வாழ செய்தார். அவருடைய ஆசீர்வாதங்களினால் நாம் களிகூறும்படி செய்தார். கர்த்தரைத் துதியுங்கள். தம்முடைய பிள்ளைகளாக்கிய தேவனைத் துதியுங்கள். அனைத்து மகிமையும் அவருக்கே அவருக்கு மட்டுமே உரித்தாவதாக.
இன்னமும் நேரமாகவில்லை. உங்கள் மாமிசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். முதலாவதும் சிறிதளவு வாய்ப்பிலும் பாவ இச்சைகள் நம்மிடமிருந்து வருகின்றன. கர்த்தரின் சித்தத்திற்கு முன்பாக மாமிசம் தன்னை முன் நிறுத்த முயற்சி செய்கிறது. இதனால் தான் கர்த்தரின் சித்தத்தைப் பின்பற்றுவது விசுவாசத்தினால் மட்டுமே சாத்தியமாகிறது. மாமிசத்திற்கு இது சாத்தியமேயில்லை. இரட்சிக்கப்பட்டப் பிறகும் கூட உங்களை நீங்களே வஞ்சிக்காதீர்கள். மாமிசத்தின் ஆளுகைக்குட்பட்டு நாம் இரட்சிக்கப்பட்டவர்களாய் இருந்தாலும் விழுந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நம் மாமிசம் குறைபாடுடையதும் பலவீனமானதும் ஆகும் என்பது நமக்கு நன்கு தெரியும்.
நாம் ஆவிக்குரிய மக்கள், விசுவாசத்தின் மக்கள். உங்கள் மாமிசத்தின் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். என்னுடனே கூட கூறுங்கள். என்னுடைய மாமிசம் குப்பைத் தொட்டியைப் போன்றது. இதனை நீங்கள் நினைவில் வைத்திருங்கள். உங்களை நம்பாதீர்கள். நம்முடைய இருதயங்களினால் கர்த்தரை விசுவாசித்து அவரைப் பின்பற்ற வேண்டும். கர்த்தரின் சட்டம் எடுத்து வரும் எல்லா ஆக்கிளைகளிலிருந்தும் நம்மை இரட்சித்தமைக்காக தேவனுக்கு நான் நன்றி கூறி அவரைத் துதிக்கிறேன். அல்லேலூயா.