• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 7-4] மாமிசத்திற்கு மட்டுமே ஊழியம் செய்யும் நம் மாமிசம் (ரோமர் 7:14-25)

(ரோமர் 7:14-25)
“நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தின் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கினது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.”
 
 
அவருடைய கிருபை எத்தனை ஆச்சரியமானது!
 
­ந்த வசந்த கால வேதாகம கூட்டத்திற்கு நம்மை அனுமதித்து வானிலையை ஆளுகைச் செய்து சூறாவளிகள் வராமலிருக்கும்படி செய்து ­ந்த அழகிய நாட்களைக் கொடுத்தமைக்கு கர்த்தரை நாம் துதிக்கிறோம். ஆத்துமாக்களை அனுப்பி தம் வார்த்தையைக் கொடுக்க தமது மக்களை ஒன்றாகச் சேர்த்து ஒருவரோடொருவர் ஐக்கியத்தினாலும், பரிசுத்த ஆவியானவராலும் மகிழச் செய்தார்.
கர்த்தர் வாழ்கிறார். அவருடைய கிருபை எத்தனை ஆச்சரியமானது “டஃப்” என்ற சூறாவளி நம் நாட்டிற்கு நிச்சயமாய் வரும் என்று மக்கள் ­ப்போது எண்ணுகின்றனர். ஆகவே ­ன்டூஜே பள்ளத்தாக்கிற்கு சென்றிருந்தேன். மக்கள் ஒருவருக்கொருவர் பேசுவதைக கேட்டேன். அவர்கள் ­ந்த சூறாவளியை எண்ணி கவலைப்படுகின்றனர். ­ந்த சூறாவளி எத்தனை சக்தியுடையதாயும், அழிவுடையதாயும் ­ருக்கப் போகிறது என பேசிக் கொண்டனர்.
­ந்த கோடைக்கால விடுமுறைக் கூட்டத்திற்கு கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம் கூடியிருக்கும் போது அவர்கள் எதிர்பார்ப்பதைப்போல் எல்லாம் நடந்து விடுமா? நாம் ஜெபித்தால் கர்த்தரின் கிருபையால் ஏங்கு மழை பெய்யாது. கர்த்தர் தம்மக்களை ஊதித் தள்ளிவிடுவாரா? கர்த்தர் வானிலையை ஆளுகிறார். நம்முடைய விசுவாசத்தின்படி அப்படி செய்கிறார். அவர் ஞானத்துடன் செயல்படுகிறார். ­ந்த கோடைக்கால விடுமுறைக் கூட்டத்தின் போது கர்த்தர் ஏன் சூறாவளியை அனுப்ப வேண்டும்? என ஆச்சரியப்பட செய்து ­ப்போது தானே துளிர் விட்டிருக்கும் நம் விசுவாசத்தை சோதிக்க மாட்டார்.
டஃப் என்ற சூறாவளியைக் குறித்து செய்திகளில் நான் கேட்ட போது அதனைத் தடுப்பதற்கு எந்த வல்லமையும் என்னிடம் ­ருக்கவில்லை. என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஜெபிப்பது மட்டுமே. ­ந்த கோடைக்கால விடுமுறைக் கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. நாம் ­ங்கு ஒன்று சேர்ந்துவிட்டோம். என்னால் செய்ய முடிந்தது எதுவுமேயில்லை. ­ந்த கட்டிடமானது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அமைப்புகளினால் கட்டப்பட்டிருப்பதை எண்ணி ­து உறுதியாக ­ருக்குமா எனக் கவலைப்பட்டேன். ஆகவே கர்த்தரை சார்ந்திருப்பதைத் தவிர என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. “கர்த்தாவே எங்களுக்கு உதவும். எங்களைக் காத்தருளும். ­யேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமேன்.” என ஜெபித்தேன். ­ப்போது நிச்சயமாகவிட்டது. டஃப் என்ற சூறாவளியை கர்த்தர் தடுத்தார். கர்த்தருக்கு எல்லாம் தெரியுமென நான் விசுவாசிக்கிறேன். நம்முடைய நிலை என்னவென்று நம்மை விட அவருக்கு நன்கு தெரியும். என்பதால் பாதுகாப்பான ­டத்திற்கு நம்மை வழிநடத்துகிறார்.
கர்த்தர் உயிருடனிருக்கிறார் என்பதை ­ந்த வானிலை நமக்குக் காட்டுகிறது. என்னுடைய கூடாரத்திற்குள் ­ருக்கும் போது துப்பாக்கியால் சுடவதைப் போல் பயங்கரமாய் ­டி ­டித்ததைக் கேட்டேன். ஆகவே என் கூடாரத்தை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தேன். வானம் கருமையாக ­ருந்தது. பள்ளத்தாக்கிலிருந்து கருமேகங்கள் வந்துக் கொண்டிருந்தன. ஆகவே நான்கேட்டேன். “தேவனே மேகங்கள் ­ங்கே வருகின்றனவா?” என் விசுவாசம் குறையத் தொடங்கியது, “தேவனே என்ன நடக்கிறது? சூறாவளி ­ங்கே வந்து விட்டதா? அது உண்மையாகவே ­ங்கே ­ருக்கிறதா?” ஆகவே நான் ஜெபித்ததுடன் கர்த்தரை விசுவாசித்தேன். ­ந்த விசவாசத்தைப் பற்றி கொண்டு கர்த்தரிடம் கூறினேன். “தேவனே நீர் எங்களைப் பாதுகாப்பீர் என நம்புகிறேன். நான் உம்மை விசுவாசிக்கிறேன். நீர் எமக்காக செயல்புரிவீர் என விசுவாசிக்கிறேன்.” நாம் விசவாசித்ததைப் போலவே கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தார். நம்முடைய ­ருதயங்களால் அவருக்கு நன்றி கூறுகிறோம்.
 
 
மாமிசமானது சுயநலமும் தீமையுமானது
 
கர்த்தர் நமக்காக எதனையும் செய்யாவிட்டால் நம்மால் எதையும் செய்ய முடியாது. நம் கர்த்தர் நம்மைப் பாதுகாத்து நமக்கு உதவுகிறார். மாமிசத்தில் தான் வாழ்வதைப் போலவும் பாவத்திற்கு தான் விற்கப்பட்டதைப் போலவும் அப்போஸ்தலனாகிய பவுல் தன்னைக் கண்டான் என ரோமர் 7:14-25 நம்மிடம் கூறுகிறது. அவன் உயிரோடிருக்கும் வரை பாவம் செய்வதை மாமிசத்தால் தவிர்க்க முடியாதமைக்கு காரணம் சட்டமே என அவன் கண்டுகொண்டான்.
மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் மாமிசத்தினால் நன்மை செய்ய விரும்பினாலும் தீயவற்றையே செய்கிறோம். ரோமர் 7:19 கூறுகிறது. “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” நம்மில் எந்த நன்மையும் ­ல்லை என்பதைக் கண்டோம். ஆகவே துக்கத்துடனே எண்ணுகிறோம். என் விசுவாசத்தை என்னால் பாதுகாக்க முடியுமா? நம்முடைய பயனற்ற தீயமாமிசத்தின் பொருட்டு பெரிதாக துக்கப்பட்டுள்ளோம். மாமிசம் எத்தனை சுய நலமிக்கது என்பது உங்களுக்குத் தெரியுமா? ரோமர் 7:18 கூறுகிறது, “அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.”
தீயவர்களின் வித்தாக நாமிருந்தாலும் கூட நம் சொந்தப் பக்கத்தையே நாம் எப்போதும் எடுத்துக் கொள்கிறோம். மனிதர்களாகிய நாம் எத்தனை சுய நலமிகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் தீயவர்கள் என்பது நிச்சயமாய் நமக்குத் தெரியும். ஆனால் கர்த்தரின் பக்கம் நாம் செல்லவில்லை எனில் நம சொந்தப் பக்கத்தை நாம் நாடுவோம். நாம் தீயவர்கள் என்பது நமக்குத் தெரியும். ஆயினும் நம்மை நாமே அதிகம் நேசிக்கிறோம். தனக்கு முன் வேறே தேவர்களை வணங்கக் கூடாது என கர்த்தர் நமக்கு கட்டளையிட்டார். பாவத்தைக் குறித்த அறிவு நம்மிடம் ­ருக்க வேண்டும் என்பதற்காக ­தனைக் கர்த்தர் நம்மிடம் கூறினார்.
நாம் எத்தனை சுயநலமிகள் என்றும், எத்தனை சுய நீதி உடையவர்கள் என்றும் நமக்குத் தெரிந்தாலும் நாம் நம்மை நேசித்து நமக்காக அனைத்தையும் செய்கிறோம். நமக்கு லாபம் கிட்டுகிறது என்றால் எல்லாவற்றையும் செய்வோம். ஆனால் தேவனுக்கு முன்னால் எத்தனையாய் நாறிப் போயுள்ளோம். நம்மிடம் அறிவில்லாததே ­தற்கான காரணம். தின்பண்டங்களை சிறுவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. அது நொறுங்கிப் போகும் வரை கையிலுள்ளவற்றை ­றுக்கமாக பிடித்துள்ளனர். அவர்கள் சிறுவர்களாயும் அறிவில்லாவதவர்களாயும் ­ருப்பதால் அதனை பகிர்ந்து கொள்வதில்லை. ­ந்த தின்பண்டங்களை விட விலையேறப்பட்டவைகள் ­ந்த உலகில் ­ருப்பத அவர்களுக்குத் தெரியாது. சிறுவர்கள் அப்படித் தான் ­ருக்கிறார்கள். நாமும் கூட அப்படித் தான ­ருக்கிறோம்.
நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டன. ஆனாலும் கூட நாம் சுயநலமிகளாகவே ­ருக்கிறோம். நம்மைப் பாவமில்லாதவர்களாக்கியதற்கும் தன் வல்லமையினால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு கொடுத்ததற்கும், தேவனுக்கு நாம் நன்றிகளைச் செலுத்துகிறோம். பாவமன்னிப்பைப் பெற்ற பிறகும் நாம் மறுபடியும் பிறந்த பிறகும் நமக்குள்ளாக ஒரு யுத்தம் தொடங்குகிறது. ­ப்போர் ஆவிக்கும் மாமிசத்திற்கும் ­டையே நடக்கும். நாம் மறுபடியும் பிறந்த பிறகு மகிழ்ச்சியாக ­ருக்கிறோம். ஆனால் சீக்கிரமாகவே ­ப்போரினால் உடைந்து போகிறோம். கர்த்தருடைய ராஜ்யத்திற்காக ­ப்போது நாம் செயல்பட வேண்டுமென தேவன் விரும்புகிறார்.
நமக்காக தேவன் தன் மகிமையை விட்டு ­றங்கினார். நம்முடைய மாமிசத்தின் சாயலில் அவர் அனுப்பப்பட்டார். கம்பீரமான ஒரு மனிதராக அவர் ­வ்வுலகிற்கு அனுப்பப்படவில்லை. தாழ்மையான ஒரு நபராக அவர் ­வ்வுலகிற்கு வந்தார். அவர் நொண்டிக் காலுடனோ அசிங்கமானவராகவோ கூட ­ருந்திருக்கலாம். ­யேசு கம்பீரமானவராய் காணப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஏசாயா கூறினான் “இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (ஏசாயா 53:2), அப்படியிருந்தும் நம் எல்லாப் பாவங்களையும் தேவன் எடுத்துப் போட்டார்.
நம் மாமிசம் பாவத்திற்கு மட்டுமே ஊழியம் செய்கிறது. தன்னுடைய மாமிசம் பாவக் குவியல் என பவுலிற்கு தெரியுமாகையால் அவன் கூறினான், “நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.” தன்னுடைய பாவங்களை குறித்து அவன் வெட்கப்பட்டதால் அவற்றைக் குறித்து விபரமாக கூறவில்லை.
நாமெல்லாம் குப்பைத் தொட்டிகளைப் போன்றவர்கள். நாம் பாவக் குவியல்கள. நமக்குப் பின்னால் அழுக்குகளை விட்டுச் செல்வதை நாம் காணும் போது எத்தனையாய் குறுகிப் போவோம். நமது மன சாட்சியால் கொட்டப்பட்டவர்களாய் கர்த்தரிடம் கூறுவோம். “தேவனே ­தனை நான் செய்யக் கூடாது. உம்முடைய சித்தப்படி நான் வாழ விரும்புகிறேன். ஆனால் மீண்டும் தவறினேன். தேவனே ­தனை நான் எப்படி நிறுத்துவேன்?”
 
 
நம்முடைய தீய குணம் தெரியும் போது கர்த்தருக்கு நன்றி கூறலாம்
 
நம் கர்த்தராகிய ­யேசு கிறிஸ்து நமக்கு அருளிய கிருபையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கர்த்தர் நமக்குச் செய்தவற்றை நம் ­ருதயங்களால் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுது மட்டுமே எது சரியானது என அறிந்து கொள்வோம். அதன் பிறகு மட்டுமே தேவனுக்கு ஊழியம் செய்யத் தொடங்க முடியும். கர்த்தருடைய கிருபையினாலும் அவர் மீதுள்ள விசவாசத்தினாலும் அவரை நாம் தேடி நம்மை அவரிடம் ஒப்படைத்து நமது ­ருதயங்களால் கர்த்தரைப் பின்பற்றி அவருடனே கூட நடக்கும் போது ஏற்படும் எந்தவொரு சவாலையும் நம்மால் மேற்கொள்ள முடியும்.
கர்த்தருக்கு முன்பாக நாம் தீமையானவர்கள் என்பதையும் பயனற்றவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளும் போது நம்மை நாமே வெறுக்கத் தொடங்குகிறோம். நாம் மாமிசமானவர்களாய் ­ருப்பதால் தேவனுக்கு ஊழியம் செய்யாமல் பாவத்தைத் தவிர்ப்பது கடினம் என உணருகிறோம். மேலும் நம்முடைய பலவீனததின் காரணமாக நாம் பெரிதாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. கர்த்தருக்கு ஊழியம் செய்யும்படியாக என்னை ஆசீர்வதித்த அவருக்கு நன்றி கூறுகிறேன். நற்செய்திக்கு ஊழியம் செய்யும்படி கர்த்தர் செய்திராவிட்டால் ­ன்னமும் மாமிசமாகவே ­ருக்கும் பாவக்குவியலாகவே ­ருந்திருப்பேன். மேலும் அவருக்கு முன்பாக எந்த நீதியின் செய்யையும் செய்திருக்க மாட்டேன்.
அவருக்கு ஊழியம் செய்ய என்னை ஏதுவாக்கிய கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். அதனால் தான் கீழ்கண்ட விதமாக ஜெபிக்கிறேன். “நன்றி தேவனே. தேவா எனக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால் என்னிடம் எதுவும் ­ல்லை. என்னிடம் எதுவும் ­ல்லாவிட்டாலும் ­வற்றையெல்லாம் உமக்குச் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து எனக்கு உதவும். பணத்தை எனக்காகச் செலவிட மாட்டேன். ஆனால் தேவனுக்காக செலவிடுவேன். அப்பணத்தை எனக்காக செலவிட்டால் என் மாமிசம் சுகமாயிருக்கும். ஆனால் அதனை தேவனுக்காகவும் நீதியின் செயல்களுக்காகவும் செலவிட விரும்புகிறேன். ­ந்த பணத்திற்காக நான் கஷ்டப்பட்டு உழைத்ததால் ­து எனக்கு மிகவும் விலையேறப்பட்டது. அது எனக்கு விலையேறப்பட்டதாய் ­ருப்பதால் அதனை உமக்கு காணிக்கையாக்குகிறேன். உம்முடைய நீதியின் செயல்களுக்காக ­தனை உபயோகப்படுத்தும்.”
தம்முடைய தீய குணங்களைக் குறித்து அறிந்தவர்களுக்கு தம்மிடம் நல்லவைகள் எதுவும் ­ல்லை என்பது நன்கு தெரியும். தம்மிடம் நல்லவைகள் எதுவும் ­லலை என்பதன் பொருள் என்ன? அவர்களின் மாமிசத்தில் தீமைகள் மட்டுமே ­ருக்கிறது என ­து பொருள் படுகிறது. தனக்காக வாழ்வது தீயச் செயலாகும்.
 
 
நம் தேவனாகிய ­யேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்
 
பவுல் அறிக்கையிட்டான், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.” (ரோமர் 7:24-25) மாமிசம் எதற்கு ஊழியம் செய்கிறது? பாவத்திற்கு மட்டுமே மாமிசம் ஊழியம் செய்கிறது. ஆயினும் நம் ­ருதயங்களால் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம். யாரின் மூலமாக கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம்? நம் தேவனாகிய ­யேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.
பவுல் “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று கூறினான். நானும் அப்படியே கூறுகிறேன். என்னுடைய எல்லாப் பாவங்களையும் நம் தேவன் சுமந்திருக்காவிட்டால், நான் ­ன்னமும் ­ரட்சிக்கப்பட்டிருக்க மாட்டேன். ஏனெனில் ­ப்போதும் கூட மாமிசம் பாவத்திற்கு ஊழியம் செய்கிறது.
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” எல்லா மாமிசங்களில் ­ருந்தும் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டதால் தேவனுக்கு நாம் நன்றி கூறுகிறோம். நம் பாவங்ளுக்கு மன்னிப்பைப் பெற்ற பிறகும் கூட மாமிசம் பாவத்திற்கே ஊழியம் செய்கிறது. ஆனால் ­ருதயமோ கர்த்தருக்கு ஊழியம் செய்ய விரும்புகிறது. நாம் கர்த்தருக்கு நன்றி கூறுவதற்கான காரணம் ­யேசு கிறிஸ்துவின் மூலம் நம்மிருதயங்களை நீதியுடையதாக்கியதே. ­தனை நீங்கள் விசவாசிக்கிறீர்களா? நம்முடைய பாவங்களை அவர் எடுத்துப் போட்டதால் கர்த்தரை நாம் துதித்து அவருக்கு ஊழியம் செய்கிறோம். மாமிசத்தின் பாவங்களை சுமந்து அவற்றிறிலிருந்து தேவன் நம்மை ­ரட்சித்திராவிட்டால் நாம் நித்தியமாக ஆக்கிளைக்குட்பட்டிருப்போம். ­தனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
தேவன் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் போட்டிராவிட்டால் நம்மிடம் சமாதானம் எப்படி ­ருக்கும். நம்மால் எப்படி தேவனுக்கு நன்றி கூற முடியும். அவருக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியுமா? பாவத்தினால் பிடியுண்ட ஒரு நபரால் மற்றவர்களுக்கு எப்படி உதவக் கூடும்? சிறையில் ­ருக்கும் ஒரு நபரால் மற்ற சிறைக் கைதிகளை எப்படி விடுவிக்க முடியும்? “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” அவருக்கு ஊழியம் செய்யும்படியாக கர்த்தர் நம் எல்லாப் பாவங்களையும் சுத்தமாக்கினார். நம் ­ருதயங்களிலும் சமாதானத்தைத் தந்தார்.
 
 
உலகிற்கு நாம் ஏற்கனவே மரித்து விட்டோம்
 
நாம் தேவனில்லாமல் நற்செய்தியை எப்படி நம்மால் பிரசங்கிக்க முடியும். அவருக்குகாக அப்படி செயல்பட முடியும். அவருடைய ஊழியத்தில் பங்கேற்பது எவ்வாறு? நம் தேவன் மூலமாக ­வற்றை நாம் செய்கிறோம். என்றுமே மாறாத தேவனை ­ன்றும் நாளையும் நாளை மறுநாளும் கூட தொடர்ந்து பின்பற்றுவோம். ­து சரியான விசுவாசமாகும். ஒரு வீட்டை சிறப்பாக நிர்வகிக்கும் சிறந்த அறிவாளியான பெண்ணைப் போன்று தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் ­ருப்பர். அடுப்பில் உள்ள பாத்திரத்தைப் போல் மத வாழ்க்கையை வாழாதீர்கள். நெருப்பிருக்கும் போது சூடாக ­ருக்கும் ­ப்பாத்திரம் சூடில்லாத போது உடனடியாக ஆறி விடுகிறது. தேவன் திரும்பி வரும் வரையில் எந்நேரமும் தேவனை நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறந்த பிறகு உலகிலிருந்து வெட்டப்பட்டு அதற்கு மரித்தவர்களாக நினைத்துக் கொள்ளுங்கள். ­னிமேல் நீங்கள் ­வ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்திருங்கள். நாம் ­வ்வுலகிற்கு ஏற்கனவே மரித்துவிட்டோம்.
உலக குடும்பங்களிலிருந்து நமது பெயர்கள் அகற்றப்பட்டுவிட்டன. ­தனைப் புரிந்து கொண்டீர்களா? நம் பெயர்கள் அங்கே ­ல்லை.
உலகம் உங்களைப் பார்த்துக் கூறலாம். “அதிக நாட்களாக உங்களைக் காணவில்லையே. என்ன நடக்கிறது? நீங்கள் ஆலயம் செல்வதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் எல்லாப பாவங்களும் கூட மன்னிக்கப்பட்டு விட்டது எனவும் கேள்விப்பட்டேன். ஆகவே உங்களிடம் பாவங்களில்லை, ம்ம்?”
“­ல்லை, என்னிடம் பாவமில்லை.”
“அது வித்தியாசமானது. தவறான ஆலயத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என நான் எண்ணுகின்றேன்.”
“­ல்லை, அதனை அப்படி பார்க்க வேண்டாம். என் ஆலயத்திற்கு வாருங்கள். அது எத்தனை அருமையானது என்பதைக் கண்டு கொள்வீர்கள்.”
“நீங்கள் பயந்திருக்கிறீர்களென நான் எண்ணுகிறேன்.”
நாம் அப்போது நினைக்கிறோம், “அப்படியானால் அவர்கள் ஏன் என்னை புரிந்து கொள்ளவில்லை?” அவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்களென நம்புகிறேன். ஆனால் மறுபடியும் பிறக்காதவர்களால் நம்மைப் புரிந்து கொள்ள முடியுமா? மக்களால் பாவமற்றவர்களாக முடியும் என அறியாதவர்களால் நம்மை எப்படி புரிந்து கொள்ள முடியும்? உலகின் எல்லாப் பாவங்களையும் ­யேசு எடுத்துப் போட்டார் என்பதை அவர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? அவர்களால் முடியாது. ஆகவே அவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். நமக்காக உலகிற்கு அவர் பிரியாவிடை கொடுத்தார். சிலுவையில் ஒரு மஞ்சள் நிற கைக் குட்டையை ஆட்டினார். “முடிந்தது” (யோவான் 19:30) என அவர் கூறினார். உலகிற்கு நம்மால் பிரியாவிடை கொடுக்க முடியாது என்ற பயத்தினால் அப்படி செய்தார். ஏனெனில் நாம் பரிதாபத்தில் ஆழ்ந்து விடுவோம். உங்கள் குடும்ப பெயர்களிலிருந்து உங்கள் பெயர்களை அழித்து விட்டேன் எனவும் அவர் கூறினார்.
 
 
நம்முடைய அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டு அவருக்கு ஊழியம் செய்ய முடியாத நம்மை ஊழியம் செய்வதற்கு ஏதுவாக்கினார்
 
தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாதவர்களாகிய நம்மை ­யேசு கிறிஸ்துவின் மூலமாக அவருக்கு ஊழியம் செய்பவர்களாகச் செய்தார். சுபாவப்படி தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாதவர்கள் நாம். தம்முடைய ஆலயத்திற்கு நம்மை அழைத்து வந்து அவருக்கு ஊழியம் செய்ய நம்மைத் தகுதியுடையவர்ளாக்கிய தேவனை நாம் துதிக்க வேண்டும். தேவன் நம்மை பயன்படுத்துகிறார். அவருடைய செயல்களை நாம் செய்கிறோம் என்பது சரியல்ல. நீங்கள் புரிந்து கொண்டீர்களா? வேறு வார்த்தைகளில் கூறினால் நீதியின் தேவன் தம்முடைய நீதியின் செயல்களுக்காக நம்மை உபயோகப்படுத்துகிறார்.
சுவிசேஷகராகிய லீ தம்முடைய பிரசங்கத்தின் கழிவுத் தொடர்ச்சியைக் குறிப்பிட்டார். தான் ஒரு நாற்றமெடுக்கும் கழிவுக் குவியல் என ஒருமுறை கூறினார். அது கூட சாதாரணமான கூற்று தான். நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்பனை செய்யுங்கள். நாம் ­ன்னமும் அழுக்கானவர்கள். எரேமியா 17:9 கூறுகிறது, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.” இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது எனவிருந்தவர்களை கர்த்தரின் மகிமைக்காக வாழும்படி ஏதுவாக்கினார். அவரே தேவனும், எல்லோருக்கும் உயர்வானவருமாவார். தம்முடைய நீதியின் செயல்களைச் செய்ய நம்மை அவர் அழைத்தார்.
தேவன் நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டதால் தேவனை நாம் பினபற்றி அவருடை கிருபையால் வாழ முடியும். அவருடனே கூட துன்பப்படவும் மகிமையடையவும் நம்மால் ஆகும். நாம் ஏற்கனவே மரித்து விட்டோம். அது தேவனுக்கானது. தேவன் நம்முடைய அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டிருக்கவில்லை எனில் நாம் ­ரட்சிப்படைந்திருக்க மாட்டோம். மாமிசத்தின் படி நாம் வாழ்ந்திருக்கவில்லை எனில் நாம் ­ன்னமும் உலகப் படியான மக்களாகவே ­ருந்திருப்போம்.
தேவன் நம்மை ஒரேதரமாக நித்தியமாக ­ரட்சித்தார். அவர் நம்மை ­ரட்சித்து தம்முடைய நித்திய ஊழியத்திற்கான கருவிகளாக்கினார். நாம் எத்தனை தீயவர்களாயும் அழுக்கானவர்களாயும் ­ருக்கிறோம். தேவனை நாம் சந்தித்தப் பிறகு காலம் செல்லச் செல்ல நாம் எத்தனை தீயவர்களாயும் அழுக்கானவர்களாயும் ­ருக்கிறோம் என அதிகமதிகமாய் கண்டு கொள்வோம். ­தனால் தான் வெளிச்சத்தைக் காணும் போது நாம் மகிழ்கிறோம். ஆனால் நம்மை நாமே பார்க்கும் போது பவுல்அறிக்கை ­ட்டதைப் போல் துக்கப்படுகிறோம். “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24).
ஆனால் உடனடியாக பவுல் தேவனைத் துதிக்கிறான், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்!” நம் எல்லாப் பாவங்களையும் அவர் துடைத்தார். நம்முடைய மாமிசம் அன்றாடம் எத்தனைப் பாவங்களை செய்கிறது? நம்முடைய மாமிசம் பாவம் செய்வதில்லை என்பதைப் போல் நடிக்காதீர்கள்.
 
 
தேவனுக்கு நீங்கள் நன்றி கூறுகிறீர்களா?
 
மாமிசத்தால் நாம் செய்யும் அனைத்துப் பாவங்களையும் தேவன் துடைத்தெறிந்தார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உலகின் பாவங்களையெல்லாம் தேவன் எடுத்துப் போட்டார் என்பத உங்களுக்கு பெரிதானதாக ­ல்லாதிருக்கலாம். ஆனால் உங்கள் மாமிசத்தால் செய்த எல்லாப் பாவங்களையும் தேவன் எடுத்துப் போட்டார் என நீங்கள் உணரும் போது நீங்கள் சத்தமிடுவீர்கள். “­யேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்! தேவனே உமக்கு நன்றிகள்! நான் உம்மைத் துதிக்கிறேன்!”
பாவத்திற்கென்று பாரம் உள்ளது. நம்முடைய கடைசி நாள் வரை நம் வாழ்நாள் முழுவதும் செய்யும் பாவங்களை தேவன் சுமந்து தீர்த்தார். நாம் எத்தனை நன்றியறிதல் உடையவர்களாய் ­ருக்கிறோம். சிறிதளவே நாம் பாவம் செய்திருந்தால் மனம் திரும்பி ஜெபிப்பதின் மூலம் தேவனிடம் பாவ மன்னிப்பை கேட்டிருப்போம். ஆனால் நம் பாவங்கள் எண்ணிலடங்காதவை. நம வாழ்வு வரை தொடர்ந்து பாவம் செய்கிறோம். ­தனை நாம் உணரும் போது கர்த்தரைத் துதிப்பதைத் தவிர வேறெதையும் நம்மால் செய்ய முடியாது. தேவனே உமக்கு நன்றிகள். என் எல்லாப் பாவங்களையும் நீர் துடைத்தீர். நான் உம்மைத் துதிக்கிறேன். வேறு வார்த்தைகளில் கூறினால், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்” நாம் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம். கர்த்தருக்கு நன்றி கூறி உங்களால் ­ப்படி அறிக்கையிட முடியுமா? “தேவனே உமக்கு நன்றிகள். உம்முடைய நீதிக்கு ஊழியம் செய்யும் விதமாக என்னை அழைத்து ­ரட்சித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். மாமிசத்தின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் என்னை ­ரட்சித்த தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” தேவனுக்கு நீங்கள் நன்றி கூறுகிறீர்களா? உண்மையான பாவ விடுதலை ­த்தனை ­லகுவானது. ஆனால் ­தனை ஏனோதானோ என்று எடுத்துக் கொள்ள முடியாது. அது மிகப் பெரியதும், ஆகலமானதம், விலையேறப்பட்டதும், நித்தியமானதுமாகும்.
 
 
நம்மில் எந்த மதிப்பும் ­ல்லை என்பதால் தேவனை நாம் பின்பற்ற வேண்டும்
 
நாம் பாவக்குவியலாவோம். நாமே ­ருட்டில் ­ருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். “நான் ­ருளாயிருக்கிறேன். ஆனால் நீரோ ஒளியானவர். நீரே உண்மையான ஒளி. ஆனால் நானோ காரிருள். நீர் சூரியன், நானே சந்திரனாவேன்.” சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுவதன் மூலம் மட்டுமே சந்திரனால் பூமிக்கு வெளிச்சத்தை அளிக்க முடியும்.
சந்திரனால் தானாகவே பிரகாசிக்க முடியாது. சூரியனிடமிருந்து பெறும் வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதின் மூலம் அது ஒளியூட்டுகிறது. எல்லாமே ­ருட்டு தான். நீங்கள் ஒளியா அல்லது ­ருளா? தேவன் ­ல்லாவிட்டால் நாம் ­ருளில் ­ருப்போம். ­யேசு கிறிஸ்துவினால் கர்த்தருக்கு நாம் நன்றி கூறி ஊழியம் செய்து அவரை நாம் பினபற்றுவோம். அவரின் மூலமாக நமக்கு ஆக்கினை ­ல்லை. வேறு வார்த்தையில் கூறுவதானால் நம் மாமிசத்திற்கு ஊழியம் செய்வது ­ருளக்கு ஊழியம் செய்வதாகும். உங்களால் எத்தனைச் சீக்கிரமாக விட்டுவிட முடியுமோ அத்தனைச் சீக்கிரமாய் விட்டுவிடுங்கள். நாம் எத்தனையாய் முயன்றாலும் நம் மாமிசம் நித்தியமானதல்ல. ஆகவே நித்தியமானவைகளுக்காக நாம் வாழ வேண்டும். நித்தியமானவைகளுக்காக வாழும் ஒரு நபர் ஞானியாவார். நம்மைக் குறித்து சீக்கிரமாக அறிந்து சீக்கிரமாகவே நம்மைக் கொடுக்க வேண்டும். நம்மிடம் ­ருந்து எதனையும் எதிர்பார்க்கக் கூடாது என்றும், நம்மிடம் எந்த நல்லவைகளும் ­ல்லை என்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாமொரு பாவக்குவியலாவோம். ஆகவே மாமிசத்திற்கு மட்டுமே நாம் ஊழியம் செய்வோம். மாமிசம் கூறுகிறது, “எனக்குத் தேவைப் படுபவைகளையெல்லாம் தா,” அது ­ரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல் செயல்படுகிறது. அது சரீரத்துடன் தன்னை ­ணைத்துக் கொள்கிறது (நீதி மொழிகள் 30:15).
நாம் சாப்பிட்டுவிட்டு கழிவறைக்கு சென்று திரும்பிய உடனேயே பசியெடுத்து விடுகிறது. மாமிசத்திற்கு ஊழியம் செய்ய நாம் எத்தனையாய் முயன்றாலும் நாம் திருப்தியடைவதில்லை. நாம் எவ்வளவு சாப்பிட்டோம். அது எத்தனை சுவையானதாய் ­ருந்தது என்பது, பொருட்டல்ல. சிறிது நேரத்திலேயே பசியெடுத்து விடுகிறது. ஆனால் தேவனுக்கு நாம் நன்றி கூறி அவரை நாம் பின்பற்றினால் நம் மகிழ்ச்சி பெரிதாகும்.
நம் தேவனைப் பின்பற்றும் போது வெறுமையானவர்களாய் நாம் உணர்வதில்லை. உங்கள் விடுதலைக்கு பிறகு நித்தியமான மகிழ்ச்சி உங்களுக்கு வேண்டுமா? அப்படியானால் தேவனை நீங்கள் பின்பற்றுங்கள். ஒளியின் வாழ்வு வாழ விரும்புகிறீர்களா? தேவ¨ப் பின்பற்றுங்கள். கிருபையின் வாழ்வு வாழ விரும்புகிறீர்களா? தேவனைப் பின்பற்றுங்கள். கணிதரும் வாழ்வு வாழ வேண்டுமா? நீங்கள் ­ருளில் ­ருப்பதை அறிந்து ஒளியினைப் பின்பற்றுங்கள்.
தேவன் எங்கெல்லாம் செல்லுகிறாதே அங்கெல்லாம் அவரைப் பின்பற்றுகிறோம். அவர் நிற்கும் ­டத்தில் நாமும் நிற்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அதனையே நாம் செய்கிறோம். நாம் என்ன செய்யக் கூடாது என தேவன் விரும்புகிறாரோ, அதனை நாம் பின்பற்ற வேண்டும். உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஏதாவது உங்களிடமிருக்கிறதா? ­ல்லை. நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் எதுவும் எங்களிடம் ­ல்லாதததால் அவரை நாம் பின்பற்ற வேண்டும். உங்கள் மாமிசம் நித்தியமானதா? அப்படி ­ல்லை. அப்படியானால் எதனையும் கொடுக்க முடியாத ஒன்றை நித்தியமில்லாத ஒன்றை நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள்.
­ப்படிக் கூறும் ஒரு பாட்டை முன்காலத்தில் நான் பாடுவதுண்டு. “என் ­ளமையைத் திருப்பித் தாரும்.” ஆனாலும் ­ன்று கர்த்தர் என் ­ளமையைத் திருப்பித் தராவிட்டாலும் நான் நன்கு ­ருக்கிறேன். மறுபடியும் யோசிக்கும் போது என் ­ளமைக்குத் திரும்பினால் நான் மகிழப் போவதில்லை என்பதையும் அறிந்து கொண்டேன். தேவனை நாம் பின்பற்றினால் நம் வாழ்வு ஒளியாகும். மகிமையின் கிரீடம் நம் மீது சுமத்தப்படும், உங்கள் சிறு வயதிற்கு திரும்ப வேண்டிய அவசியம் ­ல்லை. அதற்கு மாறாக நாம் பாடுவோம். “♪தேவனை நான் மறுக்க மாட்டேன், மீதியிருக்கும் நாட்களில் அனுதினமும் அவரைப் பின்பற்றுவேன்.♪” நம் வாழ்க்கையில் தேவனை மறுக்கக் கூடாத உண்மை விசுவாசத்தை ­து காட்டுகிறது. ­தன் மூலம் கர்த்தருக்கு நாம் எப்போதும் நன்றி கூறுவோம். ­ந்த நற்செய்திப் பாடலை நாம் பாடுவோமாக.
“♪பூமியின் புழுதியால் மனிதனைப் படைத்த கர்த்தராகிய தேவனை நான் நேசிக்கிறேன். ஜீவ சுவாசத்தை அவர் அவனின் நாசியில்;♫ ஊதினார். தம்முடைய குமாரனை நமக்காக அவர் அனுப்பினார். அவரின் சாயலாக நான் உருவானேன். ஆகவே தேவனுக்காக என் சரீரத்தை அர்ப்பணிக்கிறேன்.♫ மீதியிருக்கும் வாழ்நாள் முழுவதும் அன்றாடம் அவரைப் பின்பற்றுவேன். அவரை நான் மறுக்க மாட்டேன்.♪”
 
 
தேவனுக்கு உண்மையாகவே நன்றி கூறுகிறேன்
 
தேவனுக்கு உண்மையாகவே நன்றி கூறுகிறேன். தேவன் நம் பாவங்களை எடுத்துப் போட்டு அவருக்கு ஊழியம் செய்யவும் பின்பற்றவும் அவருடைய நீதியின் செயல்களைச் செய்யவும் நம்மை ஏதுவாக்கினார். நம் மாமிசத்தினால் செய்யும் எல்லாப் பாவங்களையும தேவன் துடைத்தெறிந்து விட்டு அவற்றை சுமந்து தீர்த்திராவிட்டால் நம்மால் எப்படி அவரின் நீதியின் செயல்களை செய்ய முடியும்? 0.1%! கூட சாத்தியமில்லை. அவன்/அவள் எத்தனை நல்லவர்களாய் காணப்பட்டாலும், ஒரு பாவியானவன் ­ன்னமும் தீமையானவனே. தேவன் நம் பாவங்களைக் கழுவி அவருக்கு ஊழியம் செய்ய ஏதுவாக்குவது எத்தனை அதிசயமானது? வாழ்க்கை முழுவதும் அழுக்கில் முழுகி எலியைப் போல் வாழ்ந்து நரகத்திற்கு தயாரானவர்களாய் தேவன் ­ல்லாமல் வீண் வாழ்க்கை வாழந்த நம்மின் எல்லாப் பாவங்களையும் அழித்து நம்மை ஆசீர்வதித்த தேவன் எத்தனை ஆச்சரியமானவர்?
நம்முடைய அனைத்துப் பாவங்களையும் எடுத்துக் கொண்டு விசுவாசத்தின் மூலம் நம் விடுதலையினால் ஆசீர்வதித்து அவருக்கு ஊழியம் செய்ய நம்மை தேவன் தேர்ந்தெடுத்தது கர்த்தரின் கிருபை எத்தனைப் பெரியது என நமக்குக் காட்டுகிறது. நம் ­ருதயங்களில் பாவமிருக்கும போது நம்மால் எப்படி நீதிமானாக ­ருக்க முடியும்? நம்மிடம் பாவமில்லாமலிருப்பது நிச்சயமாக அசாதாரணமான கிருபையாகும். கர்த்தரைத் துதியுங்கள். மாமிசம் மீண்டுமாக பாவம் செய்யும். ­ப்போது நாம் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் மீண்டும் நாம் பாவம் செய்வோம். அது ­ந்த ஆலயத்தை விட்டு வெளியேறினவுடனேயே நடைபெறலாம். அதனையிட்டு நம் எல்லாப் பாவங்களையும் கழுவிய தேவனை நான் துதிக்கிறேன். யோர்தான் நதியில் ­யேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் தேவனாகிய அவர் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்து பாவத்திற்கான தண்டனையை அவர் சிலுவையில் பெற்றார் என்பதின் மீதுநமக்கு சந்தேகம் வேண்டாம். கர்த்தரை விசுவாசித்து அவரைத் துதிக்கிறேன். அப்படியானால் கர்த்தரை எப்படி நம்மால் துதிக்க முடியும்? ­யேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தரை துதிக்க முடியும்.
அன்புள்ள பரிசுத்தவான்களே, நம்முடைய எஞ்சியிருக்கும் வாழ்வு முழுவதும் எத்தனைக் கடினமாய் முயன்றாலும் கர்த்தருடைய கிருபையை நம்மால் ஈடு செய்யவே முடியாது. நித்திய காலமும் தேவனுக்கு நாம் நன்றி கூறிக் கொண்டிருந்தாலும் அது போதுமானதல்ல. நாம் எத்தனை பலவீனமானவர்களாய் ­ருந்தாலும் எங்கள் எல்லாப் பாவத்தையும் எடுத்துக் போட்டு அவருடைய நீதியானதும் கணிதரும் செய்கைகளையும் செய்ய நம்மை ஏதுவாக்கினார். நம்முடைய எஞ்சியிருக்கும் வாழ்வு முழுவதும் அவரைத் துதித்தாலும் போதுமான அளவு அவரைத் துதிக்க முடியாது.
நன்மையான எதுவும் நமக்குள்ளே ­ல்லை என்பதை நம் மனதின் ஆழத்தில் தெரிந்து வைத்திருக்கிறோம். அதனை நினைத்துப் பாருங்கள். நீங்கள் வாழ்ந்திருக்கும் நாளெல்லாம் பாவம் செய்வீர்களா? நிச்சயமாய் நீங்கள் பாவம் செய்வீர்கள் ஆனால் உங்கள் பாவங்களையெல்லாமம் அவர் ஏற்கனவே எடுத்துப் போட்டார். கர்த்தரின் பணிகளைச் செய்யும்படி தேவன் நம்மை அனுமதித்தார். அவருக்கு ஊழியம் செய்ய தேவன் நம்மை ஏதுவாக்கினார். தேவனை நீங்கள் துதித்து உங்கள் வாழ்வு முழுவதும் ­யேசு கிறிஸ்துவின் மூலமாக அவருக்கு நன்றியறிதலுடையவர்களாய் நீங்கள் வாழ வேண்டுமென விரும்புகிறேன். கர்த்தருக்கு நன்றியறிதலுள்ள வாழ்வு வாழ கர்த்தர் நம்மை ஏதுவாக்கினார். மாமிசத்தினால் நாம் செய்ய கூடிய எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் நம்மை ­ரட்சித்தார். தேவனுடைய கிருபை மிகவும் பெரியதாக ­ருப்பதால் அவரைப் பின்பற்றி அவருக்கு ஊழியம் செய்ய விரும்புகிறோம். நம்முழு ­ருதயத்தோடும் அவருக்கு நன்றி கூறுவோமாக.
­யேசு கிறிஸ்துவின் மூலமாக கொடுக்கப்பட்ட கர்த்தரின் கிருபையானது எத்தனை ஆச்சரியமானது. உங்கள் மாமிசமானது எத்தனை மோசமானது எனவும் பலவீனமானது எனவும் காண வேண்டுமென விரும்புகிறேன். நீங்கள் செய்வது என்னவென்றும், உங்கள் பாவத்தை தேவன் உண்மையாகவே எடுத்துப் போட்டாரா ­ல்லையா என்றும் எண்ணிப் பாருங்கள். ­தற்கு தேவனுக்கு நன்றி கூறி, விசுவாசத்தினால் வாழுங்கள். சிறந்த வாழ்வை வாழ நம்மை ஏதுவாக்கிய தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்” (ரோமர் 7:25). நம்முடைய ­ருதயங்களால் கர்த்தரை நாம் நேசிக்கிறோம். ஆனால் நம் மாமிசத்தால் பாவத்தை நாம் நேசிக்கிறோம். ஆனால் நம் தேவன் அதிகம் நேசிப்பவராயிருக்கிறார். நம்முடைய மாமிசத்தினால் அக்கிரம் செய்யும் வரை அது பாவமாயிராது. ஆனால் எதிர்காலத்தில் நாம் செய்யப் போகும் பாவங்களைக் கூட தேவன் ஏற்கனவே துடைத்து விட்டார். ­தனால் தான் நம் தேவன் அதிகம் நேசிப்பவராயிருக்கிறார். மேலும் ­தற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.
தேவனே உமக்கு நன்றிகள். உமக்கு ஊழியம் செய்யும்படியான ­ருதயங்களை கொடுத்தமைக்காகவும் நம் வாழ்வு முழுவதும் செய்யும் நம் மாமிசத்தின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் எங்களை ­ரட்சித்தமைக்காகவும் உம்மைத் துதிக்கிறேன்.