• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 7-5] பாவத்தின் சட்டத்திற்கு ஊழியம் செய்யும் நம் மாமிசம் (ரோமர் 7:24-25)

(ரோமர் 7:24-25)
“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப் பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.”
 
 
மாமிசம் ஊழியம் செய்யும் சட்டமானது பாவமாகும்
 
உங்கள் விசுவாச வாழ்க்கை எத்தகையது? “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” (மத்தேயு 26:41) நீங்கள் இதுபோல் இல்லையா?
வேதாகமம் இப்படியும் கூறுகிறது “ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.” நம்மை ஆளுபவைகள் சட்டங்களே. கர்த்தரையும் சத்தியத்தையும் நேசிக்கவே நம் இருதங்கள் மாற்றப்பட்டன. ஆனால் பாவச் சட்டத்திற்கு ஊழியம் செய்வது மாமிசத்தின் சுபாவமாகும். நற் செய்திக்கும் கர்த்தரின் நீதிக்கும் இருதயம் ஊழியம் செய்கிறது என கர்த்தரின் வார்த்தைக் கூறுகிறது. ஆனால் மாமிசமானது பாவத்திற்கு மட்டுமே ஊழியம் செய்கிறது.
பாவத்தின் சட்டம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? விசுவாச வாழ்வைத் தொடர நாம் விரும்புகிறோம். ஆகவே நம்முடைய மாமிசம் பாவத்திற்கு ஊழியம் செய்யாத போது கர்த்தரின் பரிசுத்தவான்களும், ஊழியர்களும் சிங்கத்தினைப் போன்ற துணிச்சலை உணருகின்றோம். நம்முடைய மாமிசம் பாவத்தில் ஆழ்ந்து அதற்கு ஊழியம் செய்யும் போது நம்மிடம் எந்த வல்லமையும் இருப்பதில்லை, இனிமேல் பாவம் செய்யாது இருந்தால் நாம் மகிழ்ச்சியுடனும் ¨தரியத்துடனும் இருப்போம் என எண்ணலாம். ஆனால் நடைமுறையில் இதற்கு மேலும் பாவம் ச¦ய்ய கூடாது என்ற மன உறுதி இல்லை. பரிசுத்தவான்களின் இருதயங்களும் கர்த்தரின் ஊழியர்களுடைய இருதயங்களும் இதனால் சுருங்கிப் போயின.
“என்னுடைய எல்லாப் பாவங்களும் மறைந்தன! கல்வாரியின் கிருபையினால் அவை போயின!” நம்மிடம் விடுதலை இருந்தாலும் இப்படியாக நாம் கர்த்தரைத் துதித்தாலும் நம்முடைய எதிர்கால விசுவாச வாழ்வை எண்ணும் போது நாம் வாழ்வதற்கான மன உறுதி இருக்காது. மாமிசத்தின் பலவீனத்தை எண்ணிப் பார்த்து கீழ்கண்ட முடிவிற்கு வருகிறோம். எதிர்காலத்தில் நான் இப்படி வாழக் கூடாது. இனிமேல் நான் பாவமே செய்யக் கூடாது. ஆனால் இன்னுமொருமுறை தேவனை நாம் சார்ந்திருக்கும் போதும் கர்த்தரின் நீதியில் உறுதியாக நிற்கும போதும் கர்த்தருக்கு உறுதி மொழிகளை நாம் வழங்குகிறோம். தேவனே உமக்கு நன்றிகள், அல்லேலு¡யா, நான் மரிக்கும் வரை உம்மை நான் பின்பற்றுவேன். அதன் பிறகு மிகுந்து வேகத்துடனே கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்வோம். ஆனால் அது நீடித்திருக்காது. ஏனெனில் மீண்டும் நாம் பாவம் செய்வதைக் காணும் போது நாம் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகி விடுகிறோம். குறிப்பாகக் கூறினால் இரட்சிக்கப்பட்ட கர்த்தரின் பரிசுத்தவான்களும், ஊழியர்களும் இப்படிப்பட்டவர்களே. இப்படியாக மாமிசமானது பாவத்திற்கு மட்டுமே ஊழியம் செய்கிறது என்ற முடிவிற்கு நாம் வருகிறோம்.
மாமிசத்தின் பலவீனத்திற்கு நாம் கட்டுப்படுவதை தேவன் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். மாமிசத்திலிருந்து ஆவியைப் பவுல் பிரித்தமைக்கான இன்னுமொரு காரணம் இதுவுமாகும். “ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.” நம் மாமிசத்தை சரி செய்யவே முடியாது. பாவத்திற்கு ஊழியம் செய்து அதனைப் பின்பற்றவே மாமிசமானது படைக்கப்பட்டது. இதனை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? இது தான் சட்டம். சட்டத்தினை யாரால் மாற்ற முடியும்? உங்களாலோ என்னாலோ அப்படி செய்ய முடியாது. அப்படியானால் எங்கள் இருதயத்தின் மூலமாக யாருக்கு ஊழியம் செய்வோம்? கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டும். நம் முழு இருதயத்துடனே கர்த்தரையும் சத்தியத்தையும், ஆத்துமாக்களையும் அவருடைய நீதியையும் நாம் நேசிக்க வேண்டும்.
 
 
மாமிசத்திடமிருந்து பெரிதாக எதனையும் எதிர்பார்க்காதீர்கள்
 
மனித உல்லாசத்தையும், வசதியையும், சமாதானத்தையும், பெருமையையும் பெருக்கிக் கொள்ளவே மாமிசம் விரும்புகிறது. கர்த்தரின் நீதியை அது விரும்புவதில்லை. தான் விரும்பும்படி எல்லாவற்றையும் செய்ய மாமிசமானது விரும்புகிறது.
மாமிசமே, நீ நன்கு செயல்பட வேண்டும் எனக் கூறி மாமிசத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்க் கூடாது மாமிசம் சீரடையும் என்ற எதிர்பார்ப்பை விரட்டி விடுங்கள். கர்த்தரையும் அவர் நீதியையும் மாமிசமானது நேசிக்கிறது என்பதையோ அல்லது கர்த்தரின் நீதிக்கு ஊழியம் செய்து அவருக்காக துன்புற அது விருப்பமுடையதாயிருக்கிறது எனவோ கருதாதீர்கள்.
மாமிசத்திடமிருந்து நல்லவைகளை எதிர்பார்ப்பவர்கள் முட்டாள்கள். அப்படியானால் நாம் என்ன செய்வோம்? தேவனுடைய சட்டப்படி எல்லாம் செய்யப்பட்டன. கர்த்தரின் சட்டத்தை நாம் அறிந்தாலும் அதனை நம்மால் மாற்ற முடியுமா? நம்மால் மாற்ற முடியாது. ஏனெனில் அது தேவனுடைய சட்டமாகும்.
பாவத்திற்கு ஊழியம் செய்யும்படி மாமிசத்தை அனுமதிப்பது கர்த்தரின் சட்டமாகும். மன அழுத்தத்திற்கு உட்பட்டு நமது முகங்கள் கருத்திருந்தால் இதற்கான காரணம் மாமிசத்திற்கு நாம் ஊழியம் செய்வதேயாகும். நமது மாமிசம் நன்கு வாழ விரும்புகிறது. ஆகவே அது தன்னைத் தானே சரியெனக் கூறிக் கொள்கிறது. நம்மை நாமே நீதிமான்களாக்காதிருப்போமாக. மாறாக மாமிசத்தை அப்படியே விட்டுவிடுவோமாக. உங்கள் இருதயத்தினால் தேவனை விசுவாசித்து அந்த விசுவாசத்தினால் நீங்கள் வாழ வேண்டு¦மேன நான் விரும்புகிறேன். மாமிசம் மரித்துப் போகும் வரை பாவம் செய்வதிலிருந்து அதனால் தப்ப முடியாது. ஏனெனில் மாமிசமானத பாவத்திற்கு மட்டுமே ஊழியம் செய்கிறது. பாவத்திலிருந்து நம்மால் தப்பித்துக் கொள்ள முடியாது. நீங்கள் எண்ணலாம். மாமிசம் இன்னமும் சிறந்ததாகும். ஆனால் இது இப்படியாக இருப்பதில்லை. நீங்கள் அறியாமல் பாவம் செய்யும் போது எண்ணலாம். அது மோசமான சூழ்நிலையினால் இப்படியாயிற்று. இல்லை. அது சூழ்நிலையைப் பொறுத்ததேயல்ல. தொடக்கத்திலிருந்தே மாமிசமானத பாவம் செய்யவல்லது.
மாமிசம் எந்த நன்மையையும் செய்வதில்லை. மாமிசம் மரிக்கும் வரை பாவம் செய்கிறது. மாமிசம் சிறந்ததாகுமா? இத்தயைவற்றை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் முற்றிலும் ஏமாற்றமடைவீர்கள். நீங்கள் எத்தனை முறை உங்கள் மனதை ஆயத்தம் செய்தாலும் எத்தனை முறை இப்படி நான் செயல்பட மாட்டேன். என எத்தனை முறைக் கூறினாலும் தீயவைகளைச் செய்வதை மாமிசத்தால் தவிர்க்க முடியாது. உங்கள் விருப்பங்கள் ஒரு பொருட்டல்ல. பாவம் செய்யாமலிருக்க வேண்டுமென இங்குள்ள யார் தான் மனதிற்குள் தீர்மானம் செய்யவில்லை. அனைவரும் தீர்மானம் செய்துள்ளோம். ஆனால் பாவத்திற்கு மட்டும் ஊழியம் செய்யும்படி மாமிசத்தைச் செய்தது கர்த்தரின் சட்டமே.
கத்தோலிக்க பாதிரியார்களும், சகோதரிகளும், மற்ற மதத்திலுள்ள குருமார்களும் சந்நியாசிகளும் தம் மாமிசத்தால் புனித வாழ்வு வாழ விரும்புகின்றனர். ஆனால் களங்கமில்லாத வாழ்வு வாழ மாமிசத்திற்கு சாத்தியமேயில்லை. அவர்கள் கபடர்களைப் போல் வாழுகிறார்கள். நம்முடைய மாமிசத்தால் நன்மை செய்வது நமக்கு சாத்தியமே இல்லாத ஒன்று. பாவத்தின் சட்டத்திற்கு மாமிசம் ஊழியம் செய்கிறது. கர்த்தர் ஏற்படுத்திய சட்டம் இதுவே. ஒரு பூச்சியால் ஆகாயத்தில் பறக்க முடியும் போது, ஒரு புழுவால் அப்படி பறக்க முடியாது. இதுதான் சட்டம். ஒருபுழு எப்படி அழுக்கான மண்ணைத் தின்பதற்கு விரும்புகிறதோ அப்படியே மனித மாமிசம் பாவம் செய்வதை விரும்புகிறது. உங்கள் மாமிசத்திடமிருந்து எதிர்பார்க்கக் கூடிய எதுவும் இருக்கிறது என நேர்மையாக உங்களால் கூறடி முடியுமா? அப்படி இல்லை. இதனால் தான் அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய்கிறேன்” (ரோமர் 7:25).
நாம் மரிக்கும் வரை நம் மாமிசம் பாவம் செய்து கொண்டே இருக்கும். பாவம் செய்வதை அதனால் தவிர்க்க இயலாது. நீண்ட காலமாக நன்கு பயிற்சியளித்து விட்டால் மாமிசம் இனிமேல் பாவம் செய்யாதா? இல்லை. மாமிசத்தைத் திருத்தவே முடியாது. அப்படியானால் மாமிசம் தனக்கு வேண்டிய மட்டும் பாவம் செய்துக் கொள்ளட்டும் என விட்டுவிட முடியுமா? இல்லை. இங்கு நான் அப்படி கூறவில்லை. பாவம் செய்வதை மாமிசத்தால் தவிர்க்க முடியாது என இங்கு கூறினேன். நம்முடைய மாமிசத்தால் தவிர்க்க முடியாது என இங்கு கூறினேன். நம்முடைய திறமையையோ, சித்தத்தையோ நம் பாவங்கள் சார்ந்திருப்பதில்லை. நாம் பாவம் செய்யக் கூடாது என விரும்பினாலும் பாவம் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது. பாவம் செய்யக்கூடாது என தீவரமாக முயலும் போது இன்னமும் அதிகமாக பாவம் செய்வோம்.
“ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தின் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கினது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:23-24). மாமிசத்தால் நன்மை செய்யவே முடியாது. ஏனெனில் பாவத்தின் சட்டத்திற்கு மாமிசம் நம்மை அடிமையாக்கியது.
இந்த உண்மையைக் கூறுவதை மக்கள் வெறுக்கின்றனர். இதனை குறித்து அவர்கள் வெட்கப்படுகிறார்கள். இதனை நீங்கள் எப்படி வெளிப்படையாகக் கூறலாம்? என அவர்கள் கூறலாம். ஆனால் பவுல் தன்னைக் குறித்து வெளிப்படையாகக் கூறவில்லையா? பாவத்தின் சட்டத்திற்கு மாமிசம் ஊழியம் செய்கிறது. நாம் மரிக்கும் வரை நம் சித்தத்தினைப் பொருட்படுத்தாது. பாவத்திற்கு ஊழியம் செய்கிறோம். பாவம் செய்வதற்காக நாம் பிறக்கவில்லை. ஆனால் மாமிசமானது பாவம் செய்வதற்கான உறுப்பு என்பதை மறுக்க முடியாது.
 
 
தமக்கேற்றவாறு ஊழியம் செய்ய கர்த்தர் நம்மை ஏதுவாக்கினார்
 
அன்பான பரிசுத்தவான்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தொடர்ந்து முயற்சிப்பதின் மூலம் உங்கள் மாமிசத்தினால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியுமென்று நீங்கள் எண்ஹணுகிறீர்களா? அது சாத்தியமாகுமா? இல்லை!
நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம் இரட்சித்தது யார்? இயேசு இரட்சித்தார். பாவத்தின் சட்டத்திற்கு ஊழியம் செய்யும் மாமிசத்தின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இயேசு கிறிஸ்து நம்மை விடுதலைச் செய்தாரா? நம் வாழ்வு முழுவதும் பாவம் செய்து பாவத்தின் சட்டத்திற்கு ஊழியம் செய்யும் நம்மை மாமிசத்தின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இயேசு கிறிஸ்து உண்மையாகவே இரட்சித்தாரா? நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் தேவன் நம்மை உண்மையாகவே இரட்சித்தாரா? இதற்கான பதில அழுத்தமான ஆமாம் என்பதாகும். அவர் நம்மை இரட்சித்தார். பாவம் செய்யாமல் இருப்பது மாமிசத்திற்கு சாத்தியமில்லாத ஒன்று, உங்கள் பாவத்திற்கு பாவ மன்னிப்பு பெறுவதும் கர்த்தரின் ஆக்கினையிலிருந்து தப்பிப்பதும் உங்கள் மாமிசத்தினால் சாத்தியமாகாத ஒன்று. ஆனால் தேவன் அதனை சாத்தியமாக்கினார். நாம் தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருந்தாலும் தேவன் நம்மை நீதிமான்களாக்கி நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை அவர் இரட்சித்தார்.
நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து நம்மை இரட்சித்தார். நம்மை இரட்சித்த தேவன் யார்? அது இயேசு கிறிஸ்துவாகும். அப்படியானால் இயேசு யார்? அவர் தேவகுமாரரும் விசுவாசிகளின் தேவனும் ஆவார். நம்மை இரட்சித்த தேவன் அவரே. நம்முடைய எல்லாப் பாவங்க¨ளுயம் அகற்றி நம்மை நிறைவாக்கிய தேவன் இயேசு கிறிஸ்துவே. தனக்கு ஊழியம் செய்ய இயேசு கிறிஸ்து நம்மை ஏதுவாக்கினார்.
பாவமில்லாமல் வாழுவதற்கேதுவாக தேவன் நம்மை ஏதுவாக்கினார். நம்மைப் படைத்த முழு வல்லமையுடைய தேவன் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்தார். பாவத்தின் சட்டத்திற்கு ஊழியம் செய்யும் மாமிசமானது மரிக்கும் வரை பாவம் செய்தாலும் கூட நம தேவன் நம்மை முற்றிலும் இரட்சித்து நீதிமான்களாக்கினார். நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பிய கர்த்தருக்கு போதுமான நன்றிகளை நம்மால் செலுத்த முடியாது.
தேவனின் இரட்சிப்பு எத்தனை ஆச்சரியமானது என்பதையும், அது எத்தனைப் பெரிதானது மற்றும் கிருபைமிக்கது என்பதையும் நாமறிய வேண்டும். தான் மரிக்கும் வரை பாவம் செய்து கொண்டேயிருக்கும் அழுகிய மாமிசத்தின் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்த அவரின் மகத்துவமுள்ள வல்லமைக்கு தேவனுக்கு நம்மால் நன்றி கூறாமல் இருக்க முடியாது. தேவன் தம்முடைய வல்லமையினால் நம்மை இரட்சித்து விசுவாசத்தினால் அவருக்கு ஊழியம் செய்யும்படியான கருவிகளாக நம் உறுப்புகளை மாற்றினார். தேவன் நம்மை முற்றிலுமாக மாற்றினார். ஆகவே இனிமேலும் நாம் பாவத்தின் ஊழியர்கள் இல்லை.
நம் தேவன் நம்மை முழுமையாக இரட்சிக்கவில்லையா? அவர் இரட்சித்தார். நம்மை முற்றிலுமாக நிறைவாக அவர் இரட்சித்தார். போதுமான அளவு அவருக்கு நாம் ஊழியம் செய்ய நம்மை ஏதுவாக்கினார். இந்த பெரிய காரியத்தைச் செய்தது யார்? நம் தேவன் செய்தார். தம்முடைய மாமிசத்தினால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாதவர்களை நீதிமான்களாகவும் கர்த்தருக்கு ஊழியம் செய்யும்படியும் மாற்றியது யார்? நம் தேவன் அப்படி செய்தார். நம் வாழ்வு முழுவதும் பாவம் செய்யும் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் தேவன் இரட்சித்தார். அவருடைய நீதிக்கு ஊழியம் செய்யும்படியாக அவர் நம்மை மாற்றினார்.
 
 
நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் தேவன் நம்மை இரட்சித்தார்
 
நாம் மனிதர்களாய் இருப்பதினாலே இதனைக் குறித்து நாம் எண்ணிப பார்க்க வேண்டும். நானொரு மனிதனாய் இருப்பதினால் தேவனின் இரட்சிப்பு எத்தனை ஆசீர்வாதமானது என எண்ணிப் பார்க்கிறேன். மாமிசம் பாவத்திற்கு மட்டுமே ஊழியம் செய்கிறது என அறிந்திருந்தால் அதன் மூலம் எப்போதும் நான் மனவருத்தமடைந்திருப்பேன். என்னுடைய பாவங்களுக்கான மன்னிப்பை ஏற்கனவே பெற்றிருந்தாலும் என் பாவங்களினிமித்தம் அநேகமாக என் விசவாச வாழ்வை விட்டிருப்பேன்.
இரட்சிக்கப்படுவதற்கு முன் நான் பாவம் செய்தாலும் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது நான் பாவம் செய்தால் நான் இரட்சிக்கப்பட்டவனாக இல்லையா என்பதில் எந்த வேறுபாடும் இல்லை. மறுபடியும் பிறந்ததினால் என்ன பயன்? முன்பை விட சிறந்தவராக இருக்க வேண்டுமென நீங்கள் எண்ணலாம். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன்னதாக உங்கள் மாமிசமானது நன்றாக இருந்தது என நீங்கள் உணரலாம். இன்னமும் மறுபடியும் பிறவாதவர்களால் நான் கூறுவது புரியாது.
மாமிசத்தின் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன என்பதை அறிந்து விசுவாசிக்கும போது மட்டுமே இயேசுவுக்கு நம்மால் நன்றி கூற முடியும். நான் இறக்கும் வரை செய்யப் போகும் எல்லா பாவங்களையும் எடுத்துப் போட்ட தேவனுக்கு நான் நன்றி கூறகிறேன்.
கொரிய கீர்த்தனையின் முந்தையப் பதிப்பில் கீழ்கண்டபடியான கீர்த்தனை இருந்தது. “அல்லேலு¡யா, அவரைத் துதியுங்கள், என்னுடைய பழைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. தேவனாகிய இயேசுவுடன் நான் நடக்கிற§ன். நான் செல்ல வேண்டியிருப்பது பரலோக ராஜ்யமே” இதன் பொருள் என்ன தேவன் நம்முடைய பழைய பாவங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தால் அடுத்து நாம் செய்ய போவதென்ன? மாமிசத்தினால் இனிமேல் பாவம் செய்யக் கூடாது. நாம் எப்போதெல்லாம் பாவம் செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் மிகச் சிரத்தையாக பாவ மன்னிப்பு கேட்டு ஜெபிக்க வேண்டும். மேலும் மிகக் கவனமாக நாம் வாழவேண்டும். ஆனால் இது சாத்தானின் மோசமான தந்திரமாகம்.
இந்த தந்திரத்தைவிட இனிமையானது வேறெதுவுமில்லை. சாத்தான் நம்மை ஏமாற்றுகிறான். உங்கள் பழைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டன. ஆகவே நீங்கள் இயேசுவுடனே கூட நடந்தீர்களானால் நீங்கள் பாவமெதுவும் செய்யாவிட்டால் பரலோக ராஜ்யத்திற்குள் உங்களால் செல்ல முடியும். ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் பாவம் செய்தால் மன்னிக்கப்படும் படியாக மனம் வருந்தி ஜெபிக்க வேண்டும். இப்படி செய்தால் பரலோக ராஜ்யத்தினுள் உங்களால் செல்ல முடியும். இதனைப் புரிந்து கொண்டீர்களா? என அவன் கூறுகிறான். வேதாகமத்தை வாசிக்கும போது அநேக மக்கள் இதனை விசுவாசிப்பர். அவர்கள் அழுகையுடன் இப்பாடலைப் பாடுவர், “அல்லேலு¡யா, அவரைத் துதியுங்கள், என்னுடைய பழைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. தேவனாகிய இயேசுவுடன் நான் நடக்கிற§ன். நான் செல்ல வேண்டியிருப்பது பரலோக ராஜ்யமே.”
ஆனால் பாவம் செய்வதை அவர்களால் நிறுத்த முடியாது. மாமிசத்தைக் குறித்த கர்த்தரின் சட்டம் இதுவாகும். மீண்டும் மீண்டும் பாவம் செய்வதை மாமிசத்தால் தவிர்க்க முடியாது. ஆகவே பாவ மன்னிப்புக் கேட்டு ஜெபிக்க வேண்டுமென அவர்கள் எண்ணுகின்றனர். தம் அன்றாடப் பாவங்களுக்கு பாவ மன்னிப்பு பெறும் பொருட்டு மனம் வருந்தி தீவரமாக ஜெபிப்பர். ஜெபத்திற்கு பிறகு அவர்கள் பாடுவர், “அல்லேலு¡யா, அவரைத் துதியுங்கள், என்னுடைய பழைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. தேவனாகிய இயேசுவுடன் நான் நடக்கிற§ன். நான் செல்ல வேண்டியிருப்பது பரலோக ராஜ்யமே” ஆனால் அது இரண்டு மூன்று நாட்களுக்காவது இருக்குமா? சில மணி நேரத்திலேயே பாவம் செய்வர், நாட்கணக்கில் அல்ல. அவர்கள் மன்னிப்புக் கேட்டு உபவாசமிருந்து ஜெபிக்கலாம். ஆனால் மாமிசத்தால் வாழும் வரை கர்த்தரின் மாற்ற முடியாத இச்சட்டத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது.
இப்பாடலின் வார்த்தைகள் சரியா? உங்கள் பழைய பாவங்கள் மட்டுந்தான் மன்னிக்கப்பட்டதா? பழைய பாவங்களை மட்டுமல்லாது எல்லாப் பாவங்களையும் நம் தேவன் எடுத்துப் போட்டார் இப்போது அவரை நாம் துதிக்கலாம். “அல்லேலு¡யா, அவரைத் துதியுங்கள், என்னுடைய பழைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. தேவனாகிய இயேசுவுடன் நான் நடக்கிற§ன். நான் செல்ல வேண்டியிருப்பது பரலோக ராஜ்யமே.”
இரட்சிக்கப்பட்டவர்களுக்கு தாம் மரிக்கும் வரை தம்முடைய மாமிசமானது பாவம் செய்வது கர்த்தரின் சட்டம் என்பது தெரியாததால் அவர்கள் மீண்டும் பாவம் செய்யும்போது குழப்பத்திற்குள்ளாகிறார்கள். மறுபடியும் பிறக்காதவர்களைப் போன்றே தம் மாமிசத்திலும் தீமை இருப்பதைக் காஹணும்போதெல்லாம் அவர்கள் தம் மனதின் அமைதியை இலகுவாக இழந்து போகிறார்கள். அவர்கள் பாவம் செய்யாதவரை அமைதியாக இருக்கிறார்கள். தம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை இதுவரை பெறாத ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்விலும் இத்தகைய நிலைக் காணப்படுகிறது. அவர்கள் தம் உதடுகளால் பாடலாம். “என் எல்லாப் பாவங்களும் போய் விட்டன. உங்களின் எல்லாப் பாவங்களும் கூட போய்விட்டன. நம் அனைவரின் பாவங்களும் போய்விட்டன.” ஆனால் அவர்கள் மீண்டும் பாவம் செய்யும் போது மீண்டுமாக பாவ மன்னிப்புக் கேட்க வேண்டுமென அவர்கள் எண்ணுகின்றனர். அதிகமதிகமாக அவர்கள் பாவம் செய்யும் போது மிருதுவாக அவர்கள் பாடுகின்றனர். “என் பாவங்களும் போய் விட்டன. உங்களின் பாவங்களும் போய்விட்டன....” மேலும் நேரம் செல்லுகையில் ஏமாற்றமடைவதை அவர்கள் உணருகின்றனர்.
நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் தேவன் நம்மை முழுமையாக இரட்சித்தார். எல்லாப் பாவங்களில் இருந்தும் நம் தேவன் நம்மை இரட்சித்தமையால் எந்நேரத்தில் எச்சூழ்நிலையிலும் தேவனை நம்மால் துதிக்க முடியும் அவருடன் நாம் சமாதானமாக இருக்க முடியும் எந்நேரத்திலும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உதவி கேட்டு கர்த்தரை நோக்கி ஜெபிக்கவும் முடியும்.
 
 
பாவத்தின் சட்டத்திற்கு மட்டுமே நம் மாமிசம் ஊழியம் செய்கிறது என்பதை அறிந்தால் விசுவாசத்தினால் பாவத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும்
 
உங்கள் விசுவாச வாழ்வு ஏன் கடினமானதாய் இருக்கிறது? மாமிசமானது பாவத்தின் சட்டததிற்கு மட்டுமே ஊழியம் செய்கிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாததால் நீங்கள் விசுவாசத்தின் கடின வாழ்க்கையைக் கடைப்பிடிக்கிறீர்கள். இந்த உண்மையை அறிந்து ஆவிக்குரிய வாழ்வை வாழ வேண்டும்.
கர்த்தரின் சத்தியத்தை நாம் அறிந்து அவருடைய வார்த்தையை தீவரமாக கேட்டு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது நாம் மாறுகிறோம் “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் தேவன் நம்மை இரட்சித்தமையால் எந்நேரத்திலும் கர்த்தரை நாம் துதிக்க முடியும். இதனை விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் தேவன் நம்மை இரட்சித்தார்.
உங்கள் சொந்த யோசனைகளால் அதிகமாக உணர்ச்சிவசப்படவோ, நொந்து போகவோ வேண்டாம். அவை உங்களை எங்கும் அழைத்துச் செல்லாது பாவத்தின் நுகத்தடியில் நாம் இல்லை என்றால் தேவனை நம்மால் பின்பற்றி அவருக்கு நன்றி கூறி விசவாச வாழ்வு வாழ மடியும். நம்முடைய விசுவாசம் நம் செய்கைகளுடன் தொடர்புடையதாயும், நாம் இன்னமும் பாவம் செய்வோம் எனவும் அறிந்திருந்தால் நம்மால் எப்போதும் மகிழ்ச்சியுடன் தேவனைப் பின்பற்ற முடியாது. தேவனின் இரட்சிப்பானது சிறிதளவு குறைபாடுடையதாக இருந்தாலும் உறுதியுடனே கூட தேவனை நம்மால் பின்பற்ற முடியாது.
நம்முடைய எல்லாப் பாவங்களையும் தேவன் சுமந்து தீர்த்ததால் தேவனைநாம் துதிக்கிறோம். வல்லமையுடனே கூட அவரைத் துதித்து பின்பற்றுகிறோம். என்னுடைய சொந்தப் பாவங்களினால் உருவாகும் பிரச்சனையை என்னால் தீர்க்க முடியவில்லை எனில் மற்றவர்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து எப்படி இரட்சிப்பேன்? நற்செய்தியை மற்றவர்களுக்கு எப்படி போதிப்பேன்? நீரில் முழுகும் ஒருவனால் நீரில் முழுகும் இன்னொருவனை எவ்வாறு காப்பாற்ற முடியும்? நமது சா£ரத்தால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது என ஒத்துக் கொண்டால் பாவத்திலிருந்து நம்மால் தப்ப முடியும். ஆனால் இந்த சத்தியத்தை நாம் ஏற்றக் கொள்ளாவிட்டால் “கிறிஸ்தவம்” எனக் கூறப்படும் மதத்தின் தவறானக் கொள்கைகளினால் குழப்பப்படுவோம்.
ஒரு கதை இருக்கிறது. உங்களுக்கும் அது தெரிந்திருக்கலாம். முன்னொரு காலத்தில் ஒரு வாலிப கத்தோலிக்க பாதிரியார் இன்னும இரண்டு சகோதரிகளின் கூட தொலை தூரத்தில் உள்ள கிராமத்திலுள்ள இறந்து கொண்டிருக்கும் ஒரு விசுவாசியை சந்திக்க குதிரை வண்டியில் சென்றார். அந்த குதிரை வண்டியை ஓட்டுவதற்காக அவர்களிருவரின் நடுவில் பாதிரியார் அமர்ந்தார். அவருக்கு வலது பக்கத்தில் அழகிய வாலிப சகோதரி அமர்ந்திருந்தார். இடது பக்கத்தில் முதமையான அசிங்கமான சகோதரி அமர்ந்திருந்தார். நகரின் வழுவழுப்பான அகன்ற சாலையில் குதிரை வண்டி சென்று கொண்டிருந்த போது அங்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் மலைப் பாதைக்குள் செல்லும் போது அது குறுகலாகவும் கரடுமுரடாகவும் மாறிற்று. ஆகவே இந்த வண்டி அங்கும் இங்கும் ஆடத் தொடங்கியது. கத்தோலிக்க பாதிரியார் தன் மனதில் என்ன எண்ஹணுவார் என யோசித்துப் பாருங்கள். வண்டியானது வலதுபக்கமாக சாயும் போது “ஓ கர்த்தாவே தயவு செய்து உமக்கு சித்தமானதை செய்யும்,” என ஜெபித்தார். ஆனால் மற்ற பக்கத்திற்கு வண்டி சாய்ந்த போது தன்னிருதயத்தின் பரிதவிப்புடன் கூக்குரலிட்டார். “ஓ தேவனே என்னை இச்சைக்குட்படுத்தாதேயும்,” அவர் இரண்டு விதமாக ஜெபித்தார், “ஓ கர்த்தாவே தயவு செய்து உமக்கு சித்தமானதை செய்யும்,” மற்றும் “ஓ தேவனே என்னை இச்சைக்குட்படுத்தாதேயும்.”
அவரைப் போலவே நாமும் செயல்படுகிறோம். நம்முடைய மாமிசம் பாவச் சட்டத்திற்கு ஊழியம் செய்கிறது. ஆனால் தேவனுடைய சித்தத்தை அறிந்து அவருடைய சித்தப்படி விசுவாசத்துடன் அவரைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. நாம் மரித்தவர்கள் என்பதுடன் நம் மாமிசம் முன்னேறுவதற்கான எந்த சாத்தியமம் இல்லை.
 
 
தேவன் நம்மை முழுமையாக இரட்சித்ததால் அவரை நாம் பின்பற்றுகிறோம்
 
நல்ல காரியங்களைச் செய்து பரலோக ராஜ்யத்திற்கு நாம் சென்றால் எத்தனைப் பாரமாக நாம் உணருவோம். அல்லது நமது இரட்சிப்பு நாம் எத்தனை நல்லவைகளை செய்திருக்கிறோம் அல்லது பாவம் செய்திருக்கிறோம் என்பதைப பொறுத்ததா? தேவன் நமக்குக் கூறுகிறார். “உன் வாழ்வு முழுவதும் நீ பாவம் செய்கிறாய். ஆனால் நீ மரிக்கும் வரை செய்யப் போகும் பாவங்களையெல்லாம் நான் எடுத்துப் போட்டேன். நான் உன்னை நீதிமானாக்கினேன். பாவமில்லாத நீதிமானாக உன்னை மாற்றினேன். உன்னை நான் முழுமையாக இரட்சித்தேன். எனக்கு நீ நன்றி கூறுவாயா?” நம்பதில் என்ன? “ஆம் என் தேவனே நாம் உமக்கு நன்றி கூறுகிறோம்” மீண்டும் அவர் கேட்கிறார், “நீங்கள் என்னைப் பின்பற்றுவீர்களா?” நாம் எப்படி பதில் கூறுவோம்? “ஆம் நாம் பின்பற்றுவோம்.”
கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறீர்களா, தேவனை நாம் பின்பற்ற விரும்புகிறோம். ஏனெனில் நமது எல்லாப் பாவங்களையும் அவர் எடுத்துப் போட்டார். உங்களுடைய பாவங்களில் 90% பாவங்களை மட்டுமே தேவன் எடுத்துவிட்டிருந்தால் அவரை உங்களால் பின்பற்ற முடியாது. நீங்கள் கர்த்தரிடம் புகார் கூறுவீர்கள், என்னுடைய மீதியிருக்கும் 10% பாவங்களையும் கூட நீர் எடுத்துப் போட்டிருக்க வேண்டும. இந்ரத பாவப் பிரச்சனையை என்னால் எப்படித் தீர்க்க முடியும்? என்னுடைய அழுக்கை கழுவ வேண்டியதாயிருக்கையில் உம்மை என்னால் எப்படி பின்பற்ற முடியும்? இந்த பாவங்களினால் கர்த்தரை நாம் பின்பற்றுவதை நிறுத்தி விடுவோம்.
ஆயினும் தேவனை நாம் நாமாகவே பின்பற்ற விரும்புகிறோம். ஏனெனில் அவர் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் முழுமையாக இரட்சித்தார். “ஆம் நீர் என்னை முழுமையாக இரட்சித்தீர்! இப்போதிலிருந்து உம்மை என்னால் பின்பற்ற முடியும்! தேவனே உமக்கு நன்றிகள்! நான் உம்மைத் துதிக்கிறேன். நான் உம்மை மகிமைப் படுத்துகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன்!” தேவனைப் பின்பற்ற நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்கிறோம். ஏனெனில் அவரை நேசிப்பதோடு அவரைப் பின்பற்றவும் விரும்புகிறோம். நம்மிருயத்தின் அடி ஆழத்திலிருந்து தேவனைப் பின்பற்ற நாம் விரும்புகிறோம். ஏனெனில் அவர் நம்மை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்ததுடன் அவருடைய அன்பினால் நாம் தொடப்பட்டும் உள்ளோம்.
ஆலயம் செல்வதற்கும் இது பொருந்தும், ஆலயம் செல்லும் ஆசை நம்மிடம் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு செல்வது மிகவும் எளிதான ஒன்றாகும். ஏதோ ஒரு காரணத்தினால் ஆலயம் செல்ல வேண்டாம் என நாம் உணர்ந்தால் வாரத்திற்கு ஒருமுறை அங்கு செல்வது கூட கடினமானதாகிவிடும். ஒவ்வொரு ஆராதனையின் போதும் “ஆண்களே, பெண்களே, கடந்த வாரம் முழுவதும் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி ஜெபியுங்கள்?” - என்ற ஒரே விதமான கொடிய சொற்களை மீண்டும் மீண்டும் கேட்க நேர்ந்தால் இரண்டொரு வருடங்களில் ஆலயம் செல்வதை முற்றிலும் நிறுத்திவிடுவீர்கள். மிக உறுதியான சித்தம் உள்ளவர்கள் பத்து வருடங்களோ இருபது வருடங்களோ அவற்றைத் தொடர்வர். ஆனால் சீக்கிரமாகவே அதனை நிறுத்தி விடுவர். தம்முடைய பாவங்களினால் துன்புறும் மக்களை அநேக கள்ளத் தீர்க்கதரிசிசகள் மனம் வருந்தும்படி வலியுறுத்துகின்றனர். இயேசுவை விசவாசிப்பது கடினமானதாயும் அது மிகவும் வித்தியாசமானதாய் இருப்பதாயும் அநேக மக்கள் எண்ணுவதால் ஆலயம் செல்லுவதை அவர்கள் விட்டுவிடுகின்றனர்.
அவருடைய அன்பிற்கு கட்டுண்டு தேவனை நாம் பின்பற்றுகிறோம். தேவனைத் துதிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது. நாம் பாடுகிறோம். “இயேசுவை நான் விசவாசிக்கிறேன்! இவ்வுலகின் எதற்காகவும் இயேசுவை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.” நாம் இயேசுவை உண்மையாகவே நேசிப்பதால் அவரை நாம் பின்பற்றகிறோம்.
அவருடைய இரட்சிப்பு எத்தனை ஆச்சரியமானது. சிறிதளவும் பாவமில்லாதவர்களாய் நம்மை மாற்றி அவருக்கு ஊழியம் செய்ய தேவன் நம்மை ஏதுவாக்கினார். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோமர் 8:1-2) அவருக்கு நன்றி கூறவும் துதிக்கவும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். எந்நேரத்திலும் தேவனுக்குள் மகிழ்ந்து அவரைப் பின்பற்ற அவர் விரும்புகிறார். அவர் நம்மை இரட்சித்தார். நீங்கள் இதனை விசுவாசிக்கிறீர்களா?
உங்களுடைய பலவீனங்களால் மனம் தளர வேண்டாம். தம் கோபங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களின் எல்லாப் பாவங்களையும் கூட தேவன் எடுத்துப் போட்டார். மூர்க்கரும், மோசமான குணமுள்ளவரும் செய்யும் எல்லாப் பாவங்களையும் கூட அவர் சுமந்து தீர்த்தார். இப்போது தேவனைப் பின்பற்றும்படி இது உங்களை மாற்றவில்லையா? இதனால் தான் தேவனை நாம் நேசிக்கிறோம். தம்மைப் பின்பற்றும்படி தேவன் வலியுறுத்தவில்லை. அல்லது அவரை ஆராதிக்கும் படியும் வற்புறுத்தவில்லை. கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தார். அவர் நமது பிதாவானார். நாம் அவரின் பிள்ளைகளானோம். தம்மைப் பின்பற்றும்படி கர்த்தர் கூறுகிறார். தமக்கு ஊழியம் செய்யும்படி அவர் தனது ஊழியர்களிடம் கூறுகிறார்.
கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் அவருடைய ஊழியர்கள் ஆவர். கர்த்தர் தம் அனைத்து ஊழியர்களையும் ஆசீர்வதித்து தம்மைப் பின்பற்றும்படி அவர்களிடம் கூறுகிறார். நம்முடைய செய்கைகளின் நிமித்தம் தேவன் நம்மை அழைப்பதில்லை. தேவன் நம்மிடம் கூறுகிறார், “உன் எல்லாப் பாவங்களில் இருந்தும் முழுமையாக இரட்சித்தேன். உன்னால் கோபம் பொறுத்துக் கொள்ள முடியாதது. நீ மூர்க்கனாய் இருக்கிறாய். உன்னை விவரிக்கவே முடியாது. நீ முட்டாள். உன்னுடைய மூதாதையர்களின் பாவங்களுக்காக நீ சபிக்கப்பட வேண்டியவன். ஆனால் நான் உன்னை இரட்சித்தமையால் மற்றவைகளைக் குறித்து நான் கவலைப்படுவதில்லை. உன் வாழ்க்கை முழுவதும் உன்னால் பாவம் செய்யாமல் இருக்க முடியாது ஆயினும் உன் எல்லாப் பாவங்களையும் நான் எடுத்துக் போட்டேன். உனக்காக நான் துன்பப்பட்டேன். மேலும் உன் எல்லாப் பாவங்களையும் துடைப்பதற்காக மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தேன். உன்னை நேசிப்பதால் நான் இவற்றையெல்லாம் செய்தேன். நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னை நேசிக்கிறாயா?” நம் பதில் என்ன? “ஆம் என் தேவனே நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மை நேசிப்பதை நீர் அறிந்திருக்கிறீர். தேவனே உமக்கு நன்றிகள்.”
“என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.” “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” என தேவன் கூறினார். இதனை நீங்கள் விசவாசிக்கிறீர்களா? நாம் எத்தனைக் கெட்டவர்கள்? கர்த்தருக்கு முன் நாம் எத்தனைப் பாவங்களைச் செய்துள்ளோம்? பாவம் செய்யாததைப் போல் நடிக்க வேண்டாம்.
நம் வாழ்வு முழுவதும் எண்ணிலடங்காத முறை பாவம் செய்கிறோம். நம்முடைய பாவங்கள் வானத்தின் நட்சத்திரங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும் நம் அனைத்துப் பாவங்களையும் தேவன் நிரந்தரமாய் எடுத்துப் போட்டார். தேவனாகிய இயேசு போதுமான அளவிற்கும் முற்றிலுமாகவும் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார்.
 
 
கர்த்தர் தம்முடைய நீதியினால் நம்மைத் தரிப்பித்து தம்முடைய ஊழியர்களாய் மாற்றினார்
 
நம்மை நாமே கவனித்துப் பார்க்கும் போது இதற்கு மேலும் கர்த்தரை நம்மால் பின்பற்ற முடியாது என சில சமயங்களில் நாம் எண்ணலாம். சில சமயங்களில் பிரகாசமான நாட்களைப் போல் நம் இருதயம் இருக்கும், மற்ற நேரங்களிலோ ஒளியில்லாதிருக்கும். மேலும் மறுபடியும் பிறந்த பிறகு தேவனைப் பின்பற்றுகையில் சில நேரங்களில் நாம் இருளில் இருப்பதைக் காண்கிறோம். நான்கு காலங்களுக்குள்ளும் செல்வதைப் போல் நாம் மாறுகிறோம். நோவா தன் பேழையில் பயணிக்கையில் எட்டுவிதமான காலங்களை அவனுக்கு கொடுத்தார். கர்த்தர் கூறினார், “பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்” (ஆதியாகமம் 8:22).
நம் விசுவாசம் மேலும் கீழுமாக செல்வதும் நிற்காது. சில நாட்களுக்கு இயேசுவை நாம் மகிழ்ச்சியுடன் துதிக்கிறோம். ஆனால் கஷ்டங்களைச் சந்திக்கும் போது சில நொடிகளிலேயே கோபமடைகிறோம்.
“அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே” (எபிரெயர் 10:17-18). இப்படித் தான் தேவன் கூறினார்.
தான் மரிக்கும் வரை பாவம் செய்வதை மாமிசத்தால் தவிர்க்க முடியாது. மாமிசத்தின் சட்டம் இதுவே. பாவத்தின் சட்டத்திற்கு மாமிசம் ஊழியம் செய்கிறது. மாமிசததால் பாவம் மட்டுமே செய்ய முடியுமென இது பொருள்படுகிறது. ஆனால் பாவம் மட்டுமே செய்ய முடிந்த நம்மை கர்த்தர் தமது ஊழியர்களாக்கினார். நம்மை எப்படி கர்த்தர் தமது ஊழியர்களாக்கினார்? நிச்சயமாக பாவமுள்ளவர்களை அவரால் தமது ஊழியர்களாக்கவே முடியாது.
நீங்கள் கடைசி நாள் வரை செய்யும் எல்லாப் பாவங்களையும் கர்த்தர் சுமந்து தீர்த்து உங்கள் எல்லாப் பாவங்களுக்கும் கிரயம் செலுத்தியதின் மூலமாக உங்களை அவர் நிறைவாக்கியதுடன் தனது ஊழியர்களுமாக்கினார். அவர் உங்களைப் பரிசுத்தப்படுத்தி தன்னுடைய தூய வேலையாட்கள் எனவும் அழைத்தார். நம்மைத் தன்னுடைய ஊழியர்களாக்கினார். நாம் பலவீனர்களாய் இருந்தாலும், இப்போது வல்லமை உடையவர்களாய் இருக்கிறோம். அது என்ன வல்லமை? என நீங்கள் கேட்கலாம். அவருடைய நீதியில் வல்லமை நம்மிடம் இருக்கிறது. தேவனுடைய நீதியை அணிந்து கொண்டதால் நிறைவான வல்லமை நம்மிடம் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நாம் நிறைவானவர்களானோம். நாம் மாமிசத்தின்படி பலவீனர்களாய் இருந்தாலும் ஆவியில் பலமுடையவர்களாய் இருக்கிறோம்.
 
 
தேவனுக்கு யாரால் ஊழியம் செய்ய முடியும்?
 
“துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப் பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப் பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப் பண்ணுகிறோம்” (2 கொரிந்தியர் 6:10). நாம் பாவம் நிறைந்தவர்களாய் காணப்பட்டாலும் கூட நம்மிடம் பாவமில்லை. நாம் பாவம் செய்தாலும் கூட நம்மிடம் பாவமில்லை. ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் அநேக மக்கள் இரட்சிக்கப்பட நம்மால் உதவ முடியும். இது கிறிஸ்துவின் இரகசியமும் பரலோக ராஜ்யத்தின் மறைபொருளுமாகும்.
நம்மை முற்றிலுமாக இரட்சித்த தேவனை நான் துதிக்கிறேன். தேவனுக்கு யாரால் ஊழியம் செய்ய முடியும்? பாவம் செய்யாமல் இருக்க முயற்சிப்பவர்களால் தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்புகிறவர்களால் அது முடியுமா அல்லது தம்முடைய வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்யும் பாவங்களைக் கர்த்தர் எடுத்துப் போட்டார் என்பதை விசுவாசிப்பவர்களால் அவருக்கு ஊழியம் செய்ய முடியுமா? பின்னால் குறிப்பிடப்பட்டவர்களாலேயே தேவனுக்கு ஊழியம் செய்ய முடியுமா? பின்னால் குறிப்பிடப்பட்டவர்களாலேயே தேவனுக்கு ஊழியம் செய்து அவரைப் பிரியப்படுத்த முடியும். தம்முடைய எல்லாப் பாவங்களையும் தேவன் முற்றிலுமாய் கழுவிப் போட்டார் என விசுவாசிப்பவர்களால் மட்டுமே அவருக்கு ஊழியம் செய்ய முடியும். அவர்கள் விருப்பத்துடனே தம்மை தேவனுக்கு அர்ப்பணித்து அவருடைய செயல்களுக்காக தம் உடமைகளையெல்லாம் கொடுப்பர். அவருடைய ஊழியர்கள் என்பதால் பெருமையடைகின்றனர். தேவனுக்கு முன்னால் அது சிறியதாயிருந்தாலும் தம்மால் ஏதோ செய்ய முடிவது பெருமை சேர்க்கிறது.
தம்முடைய சொந்த நீதி உடைபட்டுவிடுமே என சில மக்கள் மிகவும் பயப்படுவதால் அவர்கள் கோபப்படுவதேயில்லை. அவர்கள் கோபப்படும் சூழ்நிலையில் இருந்தாலும் கூட அப்படி செய்வதில்லை. அவர்களுடைய சுய நீதி உடைக்கப்பட வேண்டும். நமக்கு வேண்டாதவைகளை தூக்கி எறிவது போல நம் சொந்த நீதிக¨ளுயம் தூக்கி எறிய வேண்டும். நம்முடைய சொந்த நீதி முறிக்கப்பட வேண்டும். அதனை முத்திரைக் குத்தி வெட்டியெடுத்து குப்பைக் கூடையில் அதனை வீசி யெறிய வேண்டும். நம்முடைய சொந்த நீதியை தூக்கி எறியும போது மட்டுமே தேவனுடைய நீதியைப் புகழ்ந்து அவருக்கு நம்மால் நன்றி கூற முடியும்.
இத்தகைய மக்களால் தேவனைப் புகழ்ந்து நன்றி கூறி பாட முடியும், “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்” (சங்கீதம் 100:4). தம்முடைய சொந்த நீதியுடையவர்களால் இரட்சிக்கப்பட முடிந்தாலும் கூட இறுதி வரை தேவனுக்கு ஊழியம் செய்யவோ அல்லது நேசிக்கவோ முடியாது. தம்முடைய வாழ்வு முழுவதும் மாமிசமானது பாவத்திற்கு மட்டுமே ஊழியம் செய்கிறது என அறிந்து தேவன் தம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் என விசுவாசிப்பவர்கள் பொறுமையுடனே கூட தேவனை நேசித்து அவருக்கு ஊழியம் செய்வர். தேவனை நேசிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் அவர்களின் இருதயங்களில் காணப்படுகிறது.
தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்ற நேசிக்கும் இருதயம் உங்களிடம் இருக்கிறதா? அவருக்கு நன்றி கூறும் இருதயம் உங்களிடம் இருக்கிறதா?
 
 
பாவமில்லாத சந்தோஷமான வாழ்வு வாழ தேவன் நம்மை ஏதுவாக்கினார்
 
ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலருக்கும் மேல் சம்பாதிப்பவர்களை விட கர்த்தரின் ஊழியர்களாகிய நாம் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் வாழுகிறோம். கோடைக் காலத்தின் போது நீர்ப் பூசணியையும், மற்ற காலங்களில் பீச் மற்றும் திராட்சைப் பழங்களையும் நாம் உண்கிறோம். நாம் விரும்புபவைகளை நம்மால் சாப்பிட முடியும். நாம் ஏழைகளல்ல. விடுதலைப் பெற்ற பிறகு ஏழ்மையுடன் நாம் வாழ்ந்தோமா? சிறப்பாக நாம் வாழ்கிறோம்.
தேவனுடனே கூட நாம் நடந்தால் செல்வாக்குடன் நம்மால் வாழ முடியும். தேவனுடனே நடப்பவன் எதுவுமே தேவைப்படாதவன். இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உலகின் தராதரத்துடன் ஒப்பிடும் போது நாம் செல்வந்தவர்களாய் இல்லாவிட்டாலும் எக்குறையுமின்றி நாம் வாழுகிறோம். நீங்கள் இதனை விசுவாசிக்கிறீர்களா? தேவனைச் சந்தித்தப் பிறகு நிறைவேற்றப்படாத தேவைகளும் ஆசைகளும் இன்னமும் இருக்கின்றனவா? எக்குறையும் நம்மிடமில்லை. பழைய காலத்தில் இருந்ததை விட இப்போது மிகவும் செல்வத்துடனிருக்கிறோம். என்னை எடுத்துக் கொணடால் முன்பெப்போதையும் விட இப்போது நன்கு வாழ்ந்து தூங்கி எழுகிறேன்.
நம் தேவன் நிறைவாக நம்மை இரட்சித்தார். இந்த ஆசீர்வாதத்தை வார்த்தையால் கூற முடியாது. நம் தேவன் நம்மை முழுமையாக இரட்சித்ததுடன் அவரின் மூலமாக கர்த்தரைத் துதிக்க உங்களையும் என்னையும் ஏதுவாக்கினார். அவருடைய கிருபை எத்தனைப் பெரியது!
“நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” தன்னுடைய மாமிசத்தைப் பார்த்து பவுல் கூறினான், “இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” நம் வாழ்வு முழுவதும் பாவம் செய்கிறோம். மாமிசத்தால் நாம் செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தது யார்? தேவனாகிய இயேசு கிறிஸ்து நம்மை இரட்சித்தார். பவுல் செய்ததைப் போன்றே நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். என் தேவனே உமக்கு நன்றி. நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டதற்காக உமக்கு நன்றிகள்.
கர்த்தரின் நீதியைப் பெற்ற பிறகு அப்போஸ்தலானகிய பவுல் தன் சொந்த நீதியால் வாழவில்லை. பாவத்திற்கு தனது மாமிசம் விற்கப்பட்டது என அநேக முறை அவன் அறிக்கையிட்டான். இரட்சிக்கப்படுவதற்கு முன் ஏழாம் அதிகாரத்தையும் இரட்சிக்கப்பட்ட பிறகு எட்டாம் அதிகாரத்தையும் பவுல் எழுதியதாக சில மக்கள் கூறுகின்றனர், அதுசரியல்ல.
கர்த்தரின் வார்த்தையானது இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் இரட்சிக்கப்படாதவர்களுக்கும் பொருந்தும். அது எல்லோருக்கும் பொருந்துகிறது. கர்த்தரின் வார்த்தையை அறியாத அநேக இறையியலாளர்கள் ஏழாம் அதிகாரத்தை எட்டாம் அதிகாரத்தில் இருந்து பிரிக்க முயல்வதுடன், ஏழாம் அதிகாரத்தை இரட்சிக்கப்படாதவர்களோடும் எட்டாம் அதிகாரத்தை இரட்சிக்கப்பட்டவர்களுடனும் ஒப்பிடுகின்றனர். ஒவ்வொரு பந்தியையும் எப்படி பிரிப்பது என அவர்களுக்கு புரியாவிட்டாலும் கர்த்தரின் வார்த்தையை ஏனோதானோவென்று பிரிக்கின்றனர். இத்துறையில் தந்திரமிக்க வஞ்சனையான அநேக மக்களிருக்கின்றனர்.
நம்முடைய எல்லாப் பாவங்களையும் தேவன் முற்றிலுமாக சுமந்து தீர்த்தார். கர்த்தருக்கு நன்றி கூறி விசுவாசத்தினால் நீங்கள் வாழவேண்டுமென விரும்புகிறேன். உங்கள் முகத்திலுள்ள சுருக்கங்களை சரி செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். உங்கள் இருதயத்தில் உள்ள கருமையான எல்லாப் பாவங்களையும் தேவன் அகற்றிப் போட்டார். மாமிசத்தின் எல்லாப் பாவங்களிலும் இருந்து நம்மை இரட்சித்த தேவனுக்கு நான் நன்றி  கூறுகிறேன்.