• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 7-6] பாவிகளின் இரட்சகராகிய தேவனைத் துதியுங்கள் (ரோமர் 7:14-8:2)

(ரோமர் 7:14-8:2)
“நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தின் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கினது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.”
 
 
மனிதனொரு பாவத்தைச் சுதந்தரித்துக் கொண்ட பாவி
 
எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாளிடமிருந்து பாவத்தை சுதந்தரித்துக் கொண்டு பாவத்தின் வித்தாக மாறினர். ஆகவே நாம் பாவத்தின் மக்களாகவே பிறந்து பாவ மனிதர்கள் ஆனோம். யாரும் பாவியாவரை விரும்புவதில்லை என்றாலும், நம் மூதாரையாரான ஆதாமின் மூலமாக இவ்வுலகின் எல்லா மக்களாலும் பாவிகளாவதைத் தவிர்க்க முடியாது.
பாவத்தின் தோற்றம் என்ன? நம் பெற்றோர்களிடமிருந்து நாம் அதனைப் பெற்று கொண்டோம். நம்மிருதயங்களில் பாவத்துடனே கூட நாம் பிறந்தோம். பாவத்தை சுதந்தரித்துக் கொண்டவர்களின் சுபாவம் இதுவே. ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்த சுதந்தரித்துக் கொண்ட 12 வகையான பாவங்கள் நம்மிடம் இருக்கின்றன, - விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் - ஆகிய இப்பாவங்கள் நாம் பிறந்த நொடி முதலே நம்மிருதயத்தினுள் உள்ளன. மனிதனின் அடிப்படையான சுபாவம் பாவம் செய்வதாகும்.
இப்படியாக பன்னிரண்டு வகையான பாவங்களுடன் நாம் பிறந்தோம். நம்மிருதயத்தில் பாவத்துடனே கூட நாம் பிறந்ததால் நாம் பாவிகள் என அறிக்கை செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது. மனிதர்கள் பிறவிப் பாவிகள் என்பதுடன் அவன்/அவள் தன் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்யாவிட்டாலும் அவனுக்குள்/அவளுக்குள் ஏற்கனவே பாவமிருப்பதால் அவர்களும் பாவிகள் தான் என்பதை மறுக்க முடியாது. ஒருவர் பாவியாகிறார். ஏனெனில் அவர் தன்இருதயத்தில் பாவத்துடனே பிறந்தார். மாமிசத்தினால் நாம் பாவம் செய்யாவிட்டாலும் பாவிகளாவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஏனெனில் கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார். ஆகவே அனைத்து மனிதர்களும் கர்த்தருக்கு முன்னதாக பாவிகளே.
 
 
மீறுதலின் பாவத்தை மனிதன் செய்கிறான்
 
மீறுதலின் பாவத்தையும் மனிதர்கள் செய்கின்றனர். அவன்/அவள் மாமிசத்தினால பாவங்களை செய்கின்றனர். உள்ளேயிருந்து மூலப் பாவம் முளையிடுகிறது. இப்பாவங்களை அக்கிரமம் அல்லது மீறுதல் என்றழைக்கிறோம். நம்மிருதயங்களிலுள்ள பன்னிரண்டு வகையான பாவங்களிலிருந்து தோன்றும் வெளிப்படையான குற்றங்கள் இவையாகும். உள்ளேயிருக்கும் தீய பாவமானது அக்கிரமச் செய்கையைத் தூண்டிவிடும் மனிதர்களைப் பாவம் செய்யச் செய்து எந்தவொரு விதிவிலக்குமில்லாமல் எல்லோரையும் பாவிகளாக்குகிறது. ஒரு மனிதன் அவன்-அவள் சிறு குழந்தையாக இருக்கும் போது பாவியாகத் தெரிவதில்லை. ஒரு பெர்சிமான் மரம் சிறிதாக இருக்கையில் எப்படி அது பெர்சிமான் கனிகளைக் கொடுக்காதோ அதுபோலவே சிறு குழந்தையானது அவன்/அவள் இளமையாக இருக்கும் போது பாவமானது குறிப்பிடும்படி அவர்களிடமிருந்து வெளி வருவதில்லை. நாம் வயதானவர்களாகும் போது நமக்குள்ளே இருக்கும் பாவமானது அதிகமதிகமாய் வெளி வரத் தொடங்குவதால் நாம் பாவிகள் என்பதை அறிந்து கொள்கிறோம். இப்பாவங்களை அக்கிரமங்கள் எனவும் மீறுதல்கள் எனவும் அழைக்கிறோம். அவை நம் பண்புகளில் மூலமாகச் செய்யப்படுகின்றது.
இவையிரண்டும் பாவங்கள் என கர்த்தர் கூறுகிறார். இருதயத்திலுள்ள பாவமும், நம் மாமிசத்தின் அக்கிரமச் செய்கைகளும் பாவங்களே. மனிதர்களை பாவிகளென கர்த்தர் அழைக்கிறார். இருதயத்தின் பாவங்களும் செயல்பாடுகளின் பாவங்களும், எல்லாப் பாவங்களிலும் அடங்கும். ஆகவே கர்த்தரின் பார்வையில் எல்லா மக்களும் பிறவிப் பாவிகளே அவர்கள் தம்முடைய செயல்பாடுகளினால் பாவம் செய்கிறார்களா இல்லையா என்பது பொருட்டல்ல.
மனிதன் பிறக்கும் போது நல்லவனாகவே பிறக்கிறான் எனவும், யாரும் தீயவர்களாய் பிறப்பதில்லை எனவும் அவிசுவாசிகள் கூறுகின்றனர். தாவீது கர்த்தரிடம் அறிக்கை செய்கிறான், தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் (சங்கீதம் 51:4-5). இவ்வசனத்தின் பொருள் கீழ்கண்டவாறு, “நான் தோற்றமுதலே பாவ வித்தாக இருப்பதால் இதைப் போன்று பாவம் செய்வதை தவிர்க்க முடியாது. நானொரு கொடிய பாவி. ஆகவே நீர் எனது பாவங்களை எடுத்துப் போட்டால் என்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாகி என்னால் நீதிமானாக முடியும். ஆனால் அவற்றை நீர் எடுத்துப் போடவில்லையெனில் நான் நரகம் சென்றாக வேண்டும். உன்னிடம் பாவமிருக்கிறது என நீர் கூறினால் என்னிடம் பாவமிருக்கும. ஆனால் உன்னிடம் பாவமில்லை என நீர் கூறினால் என்னிடம் பாவமில்லை. கர்த்தாவே எல்லாம் உம்மிடமும் உமது நியாயத் தீர்ப்பிலும் இருக்கிறது.”
கண்டிப்பாக கூறினால் அனைத்து மக்களும் பாவிகளாவதை தவிர்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் தம் பெற்றோரிடமிருந்து பாவத்தை சுதந்தரித்துக் கொண்டனர். அவர்களின் செயல்பாடுகள் எப்படிபட்டதாய் இருந்தாலும் அவர்கள் பிறவிப் பாவிகளே. பாவத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி இயேசுவின் இரட்சிப்பை விசுவாசிப்பதே. பொது கல்வி முறை நம் குழந்தைகளுக்கு தவறானதைக் கற்றுக் கொடுக்கிறது. அதன் முக்கிய சாராம்சத்தை கீழ்கண்டவாறு சுருக்கமாக கூறலாம். எல்லா மக்களும் நல்ல பண்புகளுடனேயே பிறந்தனர். ஆகவே மனிதர்களுக்கேற்ற நற்பண்புகளுடனே நல்லவர்களாய் வாழுங்கள். நீங்கள் முயன்றால் நலமானவற்றைச் செய்யலாம். நல்லவைகளை மட்டுமே அவர்கள் கூறுகின்றனர். நல்ல கொள்கைகளைக் குறித்து போதனைகளில் மக்கள் வாழுகின்றனர். ஆனால் அவர்களேன் தம்மிருதயத்தில் பாவம் செய்கிறார்கள். அல்லது தமது மாமிசத்தினால் ஏன் சமூகத்திலோ அல்லது தமது வீட்டிலோ ஏன் பாவம் செய்கிறார்கள்? அடிப்படையில் பாவத்துடனே கூட பிறந்ததால் அவர்கள் அப்படித் தான்செய்வர். பாவவித்தாகவே மனிதர்கள் பிறந்தனர். அவன்/அவள் நன்மை செய்ய விரும்பினாலும் மனிதர்களால் பாவம் செய்வதைத் தவிர்க்க இயலாது. நாம் பாவத்துடன் பிறந்தோம் என்பதை இது நிருபிக்கிறது.
 
 
உங்களைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்
 
மக்கள் பாவத்துடனே பிறந்தமையால் தாம் வாழ்வு முழுவதும் மாமிசத்தினால் பாவம் செய்வதை அவர்களால் தவிர்க்க முடியாது. இதுதான் மனிதர்களின் நிலை. நம்மை குறித்து முதலில் நமக்குத் தெரிய வேண்டும். சாக்ரட்டீஸ் கூறினார். உங்களை அறிந்து கொள்ளுங்கள். இயேசு கூறினார். நீங்கள் பாவத்தினால் கருத்தரித்து அக்கிரமத்தினால் வெளி வந்தவர்கள் என்பதால் நீங்கள் பாவியாவீர்கள். ஆகவே பாவமன்னிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களை அறிந்து கொள்ளுங்கள். அநேக மக்கள் தம்மைக் குறித்து தவறுதலாக அறிந்து கொண்டுள்ளனர். தம்மை குறித்து எதுவும் தெரியாமலேயே எல்லா மக்களும் வாழ்ந்து மடிகின்றனர். அறிவான மக்களுக்கு மட்டுமே தம்மைக் குறித்து தெரியும். தாம் தீமைச் செய்பவர்கள் என அறிந்த பிறகு இயேசுவின் சத்தியத்தை அறிந்து அதனைத் தேடுபவர்கள் புத்திசாலிகளாவர். பரலோக ராஜ்யத்தினுள் நுழையும் உரிமை அவர்களிடம் இருக்கிறது.
தம்மைக் குறித்து அறியாதவர்கள் கபட்டுத்தனமாக நடிக்கும் படியும் இனிமேல் பாவம் செய்யாமலிருக்குமாறும் மக்களுக்கு போதிக்கின்றனர். தமக்குள்ளேயிருக்கும் பாவங்களை வெளிப்படுத்த வேண்டாமென மக்களுக்கு அவர்கள் போதிக்கின்றனர். பாவம் செய்யாமலிருக்குமாறும் அவர்களுக்குள்ளிருக்கும் பாவங்கள் வெளியே நெளிந்து வரும் போது அவற்றை அடக்குமாறும் மதப் போதகர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அவர்களெல்லாம் நரகம் செல்லும் பாதையில நடக்கின்றனர். அவர்கள் யார்? அவர்கள் சாத்தானின் ஊழியர்கள் கள்ள மேய்ப்பர்கள். நம் தேவன் நமக்கு போதித்தவைகளை அவர்கள் நமக்கு போதிப்பதில்லை. பாவம் செய்யும்படி நம் தேவன் கூறவில்லைத் தான். ஆனால் “உன்னிடம் பாவமிருக்கிறது, நீயொரு பாவி பாவத்தின் சம்பளம் மரணம். உன் பாவங்களினிமித்தம் உன் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறாய். ஆகவே பாவங்களிலிருந்து நீ விடுதலையடைய வேண்டும். உன்னை உன்னுடைய அனைத்துப் பாவங்களிருந்தும் இரட்சிக்கும் இரட்சிப்பின் ஈவைப் பெற்றுக் கொள். அப்பொழுது உன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனை நீ பெறுவாய். நீ நீதிமானாவாய், ஒரு விலையேறப்பட்ட பரிசுத்தவானாகவும் கர்த்தரின் பிள்ளையுமாவாய்.”
 
 
மனிதர்களுக்கு கர்த்தர் ஏன் சட்டத்தைக் கொடுத்தார்?
 
பவுல் கூறினான், “மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20). கர்த்தர் நமக்கு சட்டத்தைக் கொடுத்தார். ஆகவே அதன் மூலம் நம் பாவங்கள் இன்னமும் அதிக பாவத்துடன் வெளிப்படும் (ரோமர் 7:13). பாவிகளுக்கு அவர் தனது சட்டத்தைக் கொடுத்தார். ஆகவே அவர்களால் தமது பாவங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
யாத்திரைக்கு பிறகு யாக்கோபின் சந்ததியினர் வனாந்தரத்தில் வாழ்ந்த போது கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு சட்டத்தை வழங்கினார். 613 வகையான கட்டளைகளை அவர் கொடுத்தார். மனிதர்களுக்கு கர்த்தர் ஏன் சட்டத்தைக் கொடுத்தார்? முதலாவதாக அவர்கள் தம் பாவங்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்பினார். ஏனெனில் அவர்களுக்கு தம் பாவங்களைக் குறித்து தெரியாது. இரண்டாவதாக அவர்கள் பாவத்துடன் பிறந்தவர்கள். ஆகவே கர்த்தர் அவர்களுக்கு சட்டத்தைக் கொடுத்தார்.
பத்துக் கட்டளைகளின் சட்டம் மக்கள் எத்தனையான கொடிய பாவிகள் என்பதைக் காட்டுகிறது. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. கொலை செய்யாதிருப்பாயாக. விபசாரம் செய்யாதிருப்பாயாக. களவு செய்யாதிருப்பாயாக. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்” (யாத்திராகமம் 20:3-17).
நம்மனைவருக்கு கர்த்தர் சட்டத்தைத் தந்தார். நமது இருதயங்களில் என்ன வகையான பாவம் இருக்கிறது என துல்லியமாக அவர் போதித்தார். கர்த்தருக்கு முன்பாக நாம் முழுப் பாவிகள் என அவர் நமக்கு போதித்தார். நம்மால் சட்டத்தைக் கடைபிடிக்க முடியாததால் நாம் பாவிகள் என்ற உண்மையை நமக்கு அவர் காட்டினார்.
கர்த்தரின் சட்டத்தை மனிதர்களால் கடைபிடிக்க முடியுமா? தனக்கு முன்பாக வேறு கடவுள்கள் வேண்டாம் என இஸ்ரவேலர்களிடமும் புற ஜாதியாரிடமும் தேவன் கூறிய போது தொடக்கத்தில் இருந்தே. அவர்கள் பாவிகள் என்ற உண்மையைக் காட்டவே, முதலாவது கட்டளையைக் கூட அவர்களால் கடை பிடிக்க முடியவில்லை. கட்டளைகளின் மூலமாக படைத்தவரை விட படைக்கப்பட்டவைகளுக்கு தம் அன்பை அதிகமாக காட்டியதை அவர்கள் அறிந்து கொண்டனர். கர்த்தரின் பெயரை வீணில் வழங்கியதை அவர்கள் அறிந்து கொண்டனர். கர்த்தர் வெறுத்த சிலைகளை செய்து அதனை ஆராதிக்கவும் செய்தனர். அவர்கள் ஓய்வெடுப்பதற்காக கர்த்தர் அவர்களுக்கு அளித்த நாளில் ஓய்வெடுக்கவுமில்லை. தம் பெற்றோர்களை மதிக்காததையும் கண்டு கொண்டனர். அவர்கள் கொலை செய்தனர். விபச்சாரம் செய்தனர், அவர்கள் செய்யக் கூடாது என கர்த்தர் கூறிய அனைத்துக்கும் மாறானவைகளை செய்தனர். சுருக்கமாகக் கூறினால் கர்த்தரின் சட்டத்தை அவர்களால் கடை பிடிக்க முடியவில்லை.
 
 
தம்முடைய பாவங்கள் இன்னமும் மன்னிக்கப் படாதவர்களை சட்டம் ஆளுகைப் புரிகிறது
 
கர்த்தர் ஏன் நமக்கு சட்டத்தைக் கொடுத்தார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? மறுபடியும் பிறவாதவர்களுக்கு கர்த்தர் முதலாவதாக சட்டத்தைக் கொடுத்தார். “நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?” (ரோமர் 7:1). தம்முடைய மூதாதையர்களிடமிருந்து பாவத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களுக்கும், மறுபடியும் பிறவாதவர்களுக்கும் தம் பாவத்தை எண்ணி துக்கிக்கும்படி கர்த்தர் அவர்களுக்கு சட்டத்தைக் கொடுத்தார். அவன்/அவள் வாழும் வரை அந்நபரை சட்டம் ஆளுகிறது. ஆதாமின் ஒவ்வொரு வழித்தோன்றலுக்கும் அவன்-அவள் இருதயத்தில் பன்னிரண்டு வகையான பாவங்கள் உள்ளன. தம்முடைய இருதயங்களில் பாவமில்லாதவர்களுக்காக கர்த்தர் தம் சட்டத்தைக் கொடுத்தார். அவர்களிடம் அபாயகரமான பாவங்கள் உள்ளனவென்று கூறினார். இப்படியாக கொலை அல்லது விபச்சாரம் ஆகியவை வெளியே வந்து நம்மை பாவம் செய்யும்படி செய்த போது சட்டம் நம்மிடம் கூறுகிறது, விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என கர்த்தர் உன்னிடம் கூறினார். ஆனால் மீண்டும் விபசாரம் செய்தாய். ஆகவே நீயொரு பாவி. கொலை செய்யாதே என கர்த்தர் கூறினார். ஆனால் உன்னுடைய வெறுப்பினால் நீ கொலை செய்தாய். கொலை செய்யவும், விபச்சாரம் செய்யும் பாவி நீ. களவு செய்யாதே என கர்த்தர் கூறினார். ஆஈனால் மீண்டும் நீ திருடினாய். ஆகவே நீ ஒரு திருடன். இப்படியாக சட்டமிருக்கும் இடத்தில் பாவம் வெளியே வருகிறது.
இதனால் தான் பவுல் கூறினான், “நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?” இன்னமும் பாவ மன்னிப்பு பெறாதவர்களின் மீது சட்டத்தின் ஆளுகை உள்ளது. கர்த்தரின் சட்டத்தைக் குறித்து தெரியாத புற ஜாதியார்களுக்கு அவர்களுடைய மனசாட்சியே சட்டமாகி விடுகிறது. அவர்கள் தீமையானவற்றைச் செய்யும் போது அவர்கள் பாவம் செய்தனர் என்பதை மனசாட்சி கூறுகிறது. அதுபோலவே அவிசுவாசிகளின் மனசாட்சி அவர்களுக்கான சட்டமாக செயல்படுவதால் அவர்கள் தம் மனசாட்சியின் மூலம் தம் பாவங்களை அறிந்து கொள்ளுகின்றனர் (ரோமர் 2:15).
உங்களுடைய மனசாட்சியானது படைத்தவர் ஒருவர் இருக்கிறார் எனக் கூறினாலும் படைத்தவரை ஏன் நீங்கள் ஆராதிப்பதில்லை? கர்த்தரை ஏன் நீங்கள் தேடுவதில்லை? உங்கள் இருதயத்தை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? உங்கள் பாவத்தினால் நீங்கள் வெட்கப்படுகிறீர்கள், உங்கள் பாவத்தைக் குறித்து மற்ற மக்கள் அறிந்து கொள்வார்கள் என பயப்படுகிறீர்கள். கர்த்தரை ஏற்றுக் கொள்ளாத பாவிகளும் தம்முடைய இருதயங்களை ஏமாற்றுபவர்களும் வெட்கம் கொள்வதில்லை.
நம்மிடம் பாவம் இருக்கும் போது வானத்தைப் பார்த்தாலும், பூமியைப் பார்த்தாலும், மற்றவர்களைப் பார்த்தாலும், அல்லது மற்ற படைப்புகளையும் பார்க்கும் போது வெட்கப்படுகிறோம். கர்த்தர் மனிதர்களுக்கு மனசாட்சியைக் கொடுத்ததால் மனசாட்சியின் சட்டம் பாவத்தை சுட்டிக் காட்டுகிறது. ஆனால் அநேகர் கர்த்தரில்லாமலேயே வாழுகின்றனர். கர்த்தரின் பார்வையில் கூட்டு நாடகம் ஆடுகிறார்கள். தாம் விரும்புவதைப் போல் வாழுகின்றனர். அவர்கள் நரகம் செல்ல வேண்டியவர்கள். சட்டத்தின் மேல் கவனமாக இருக்கும்படி பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறான், “நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?” ஒரு மனிதன் இரண்டு முறை பிறக்க வேண்டும் - ஒருமுறை பாவியாக பிறக்க வேண்டும். மறுமுறை நீதிமானாக வாழும் பொருட்டு கர்த்தரின் கிருபையான விடுதலையினால் மறுபடியும் பிறக்க வேண்டும்.
பாவச் சட்டத்தின் சாபத்திலிருந்து தேவன் நம்மை எப்படி இரட்சித்தார் என்பதை பவுல் கீழ்கண்டவாறு விளக்கினான்: “அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல” (ரோமர் 7:2-3).
திருமணமான பெண் கள்ளத் தொடர்பு வைத்திருந்தால், அவளை விபச்சாரி என்கிறோம். ஆனால் அவளுடைய கணவன் இறந்து போய் இன்னொருவனை அவள் திருமணம் செய்து கொண்டால் அதில் தவறேதும் இல்லை. பாவத்தின் சட்டத்திலிருந்து நாம் விடுதலையாவதற்கு இத்தகைய தத்துவம் பொருந்துகிறது. பாவங்கள் இன்னமும் மன்னிக்கப்படாத ஆதாமின் சந்ததயினரின் மீது சட்டத்தின் ஆளுகை இருக்கிறது. “நீங்கள் பாவிகள்” என அது அவர்களிடம் கூறுகிறது. ஆகவே சட்டத்தின் கீழ் உள்ள தமது பாவ நிலையை அறிக்கை செய்கின்றனர். “நான் நரகம் செல்ல வேண்டும். நானொரு பாவி. என்னுடைய பாவத்திற்கு சம்பளமாக நான் நரகம் செல்வது இயற்கையானதே.” ஆனால் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக சட்டத்திற்கு நாம் மரித்தவர்கள் ஆனால் சட்டத்தினால் நம்மை ஆளுகைச் செய்ய முடியாது. ஏனெனில் கிறிஸ்துவுடனே கூட ஞானஸ்நானம் பெற்றதால் அவருடனே கூட பழையவைகளும் சிலுவையில் அறையப்பட்டன.
 
 
நம்முடைய பழையவைகள் மரித்தன
 
நம் தேவன் பழைய கணவன்மாரைப் பொறுப்பேற்றுக் கொண்டு அவருடன் திருமணம் செய்து கொள்ள நம்மை ஏதுவாக்கினார், “அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்” (ரோமர் 7:4) தம்முடைய மூதாதையரான ஆதாமின் மூலம் பாவத்துடன் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் கர்த்தர் சட்டத்தைக் கொடுத்தார். ஆகவே கட்டளையின் மூலம் பாவமானது இன்னமும் அதிகமாக வெளிப்படும். கர்த்தரின் நியாயத் தீர்ப்பினடியில் அவர்களை வாழும்படி செய்தார். ஆயினும் கிறிஸ்துவின் சரீரத்தின் மூலமாக அவர்ளை இரட்சித்தார். நம் இடத்திலிருந்து இயேசு கிறிஸ்து மரித்தார். கர்த்தரின் சட்டப்படி நாம் நரகம் செல்வது சரியானது இல்லையா? அது சரியானதே. ஆயினும் தேவன் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார். யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய அனைத்துப் பாவங்களையும் தன் மீது சுமந்தார். சிலுவையில் அறையப்பட்டார். நம்முடைய இடத்திலிருந்து சட்டத்தின் கோபாக்கினையினால் தீர்க்கப்பட்டு சபிக்கப்பட்டார். இதன் மூலமாக மட்டுமே விசுவாசிப்பதின் மூலம் நம்மால் இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறக்க முடியும்.
மறுபடியும் பிறக்காதவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும். இயேசுவை அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவினுடனே கூட ஒருமுறை நாம் மரிக்க வேண்டும். நம்முடைய பழயவைகள் ஒருமுறை மரித்தால் அன்றி புதிய பிறவிகளாய் நம்மால் பிறக்க முடியாது. ஆகவே பரலோக ராஜ்யத்தினுள் நம்மால் செல்ல முடியாது. இயேசுவினோடு நம் விசுவாசம் ஜக்கியமாவதன் சட்டத்தின்படி நம்முடைய பழையவைகள் தீர்க்கப்படவில்லை என்றால் இப்போது நாம் தீர்க்கப்பட்டு நரகம் செல்ல வேண்டும். மறுபடியும் பிறக்காத அனைவரும் நரகத்திற்கு செல்ல வேண்டும்.
அவிசுவாசிகள் நன்றாக வாழுகின்றனர். நல்வாழ்க்கை அளிக்கும் அனைத்தையும் அனுபவிக்கின்றனர். ஆனால் நித்திய ஆக்கினையைக் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. இப்பூமியில் வாழும் போது அனைத்து மனிதர்களும் தேவனாகிய இயேசுவால் பாவ மன்னிப்பைப் பெற வேண்டும். விசுவாசத்துடன் இயேசுவோடு ஐக்கியமாக ஒவ்வொரு பழமைகளும் ஒருமுறை மரிக்க வேண்டும். ஏனெனில் இவ்வுலகைவிட்டு நாம் புறப்பட்ட பிறகு நம்மால் மறுபடியும் பிறக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசவாசத்தின் மூலம் ஒருமுறை நாம் மரித்து நமது பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். யாரின் மூலமாக? இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் மூலமாக. எப்படி? இயேசு இவ்வுலகிற்கு வந்து நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்பதை விசுவாசிப்பதின் மூலமாக நீங்கள் மரித்து விட்டீர்களா? உங்களில் மரிக்காதவர்கள் யாரேனும் உளரா? “நான் எப்படி மரித்தவனாக முடியும்? நான் மரித்துவிட்டிருந்தால் இப்போது எப்படி உயிரோடிருக்கிறேன்?” என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதுதான் இரகசியம். இந்தப் புதிரை எம்மதத்தினாலும் தீர்க்க முடியாது.
தம்முடைய பழையவைகள் இயேசுவுடனே கூட ஐக்கியமாகி ஏற்கனவே மரித்துவிட்டது என மறுபடியும் பிறந்தவர்களால் மட்டுமே கூற முடியும். மறுபடியும் பிறந்தவர்களிடமிருந்து கர்த்தரின் வார்த்தையைக் கேட்கும் போது மட்டுமே பாவிகளால் மறுபடியும் பிறந்து அவர்களுடைய பழையவைகளால் மரிக்க முடியும். இதன் மூலமாக கர்த்தரின் ஊழியர்களாக அவர்களால் மாற முடியும். மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களிடமிருந்து அனைத்து மனிதர்களும் கர்த்தரின் வார்த்தையைக் கேட்க வேண்டும். அவர்களுடைய போதனைகளை நீங்கள் அலட்சியம் செய்யும் போது உங்களால் மறுபடியும் பிறக்க முடியாது. அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த சட்ட வல்லுனன் ஆன கமாலியேவிடமிருந்து கர்த்தரின் வார்த்தையை அவன் கேட்டிருந்தாலும் கிறிஸ்து இல்லாமல் பவுலினால் மறுபடியும் பிறக்க முடியவில்லை. நாம் எத்தனை நன்றியுடையவர்கள். விசுவாசத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் சரீரம் மூலமாக நாம் மரித்தவர்களாகும் போது மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நீதியின்கனிகளை கர்த்தருக்கு எடுத்துவர முடியும். பரிசுத்த ஆவியானவரின் ஒன்பது வகையான நற்கனிகளை அப்போது நாம் சுமப்போம்.
 
 
மரணக் கனியைச் சுமப்பதற்கு நம் உறுப்புகளில் உள்ள பாவ இச்சைகள் செயல் புரிகின்றனர்
 
“நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது” (ரோமர் 7:5). “நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில்” என்பதின் பொருள் “நாம் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக” என்பதாகும். இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் மூலம் நம்மிடம் விசுவாசம் இல்லாத போது பாவ இச்சைகள் அப்பொழுது நமது உறுப்புகளில் தொடர்ந்து செயல்புரியும். இருதயத்தில் பன்னிரண்டு வகையான பாவங்கள் இருக்கின்றன. வேறு வகையாக கூறினால் பாவங்கள் வெளியேறுவதற்கான பன்னிரண்டு வகையான பாதைகள் நம்மிருதயங்ளில் இருக்கின்றன. உதாரணமாக இன்று விபசாரம் என்ற பாவம் தன் வழியாக வெளியேறி இருதயத்தைப் பிடித்து உலுக்கலாம். அப்பொழுது இருதயம் தலைக்கு கட்டளையிடுகிறது. “விபசாரம் அதன் வழியாக வெளியேறி விபசாரம் செய்யும் படி என்னிடம் கூறுகிறது.” அப்பொழுது தலை பதில் கூறுகிறது, “சரி அதனை செயல்படுத்தும்படி கைகளுக்கும் கால்களுக்கும் கட்டளையிடுகிறேன், கைகளே, கால்களே கேளுங்கள், உங்களுக்கு வேணடியதைச் செய்யுங்கள், சீக்கிரம்!” மாமிசம் எங்கு விபசாரம் செய்யுமோ அங்கு போகும் படி தலையானது தனது உறுப்புகளுக்கு கட்டளையிடுகிறது. அப்பொழுது தலை கட்டளையிடுவதற்கேற்றவாரு சரீரம் செயல்படுகிறது. அதுபோல அரண பாவம் அதன் துவாரத்திலிருந்து வெளிவரும் போது இருதயத்தை அது உலுக்கும் போது யாருடனாவது கோபம் கொள்ளும் படி இருதயம் தலையை மாற்றுகிறது. அப்பொழுது தலை தன் சரீரத்தை ஆயத்தமாய் இருக்கும்படி கட்டளையிடுகிறது. நம் உறுப்புகளிடைய மாமிசம் இப்படி செயல்படுகிறது.
இதனால் தான் நம் பாவங்களுக்கான பாவ மன்னிப்பை நாம் பெற வேண்டும். பாவ மன்னிப்பு நம்மிடம் இல்லையென்றால் நாம் விரும்பாவிட்டாலும் கூட இருதயம் கட்டளையிடும்படி செய்வதை நம்மால் தவிர்க்க இயலாது. உண்மை நற்செய்தியினால் மறுபடியும் நாம் பிறக்க வேண்டும். ஒரு புழு எப்படி பூச்சியாகிறதோ, அதுபோலவே ஒருவர் மறுபடியும் பிறகு மட்டுமே அவர்களால் உண்மையாகவே தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும். மறுபடியும் பிறப்பதற்கு முன்னால் அவர்களால் கூற முடிவதெல்லாம் “அன்பான பரிசுத்தவான்களே நீங்கள் நன்மை செய்ய வேண்டும்.” நோயாளிகள் அவர்களாகவே குணமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒத்தது. அவர்களுடைய சொந்த பாவம் நிறைந்த இருதயத்தைச் சுத்தப்படுத்துவது எப்படி என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில் சபையார் தம்முடைய இருதயங்களை சுத்தப்படுத்த வேண்டுமென அவர்கள் வேண்டுகின்றனர்.
மரணத்தின் கனியைச் சுமக்கும்படி நமது அவயவங்களிலே உள்ள பாவ இச்சைகள் செயல்புரிகின்றன. அவன்/அவள் விரும்புவதால் பாவம் செய்கின்றனரா? பாவத்தின் ஊழியர்களாக நாம் பாவம் செய்கிறோம், ஏனெனில் பாவத்துடனே நாம் பிறந்தோம். மேலும் நமது பாவங்கள் இன்னமும் துடைக்கப்படவில்லை. மற்றும் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் மூலம் இன்னமும் நாம் மரிக்கவில்லை. பாவம் செய்வதை வெறுத்தாலும் நாம் பாவம் செய்கிறோம். ஆகவே ஒவ்வொருவரும் பாவ மன்னிப்பை பெற வேண்டும்.
தம்முடைய பாவங்கள் எடுத்துக் கொள்ளப்படாத போதகர்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதை விட்டுவிடுவது அவர்களுக்கு நலமானதாயிருக்கும். காய்கறிகளை விற்பது அவர்களுக்கு நல்லது. அப்படி செய்யும்படி அவர்களுக்கு ஆலோசனைக் கூறுகிறேன். மக்களிடம் பொய் கூறி அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து காணிக்கைகளைத் தாமே எடுத்துக் கொண்டு பன்றிகளைப் போல் கொழுப்பதை விட இப்படி செய்வது அவர்களுக்கு நல்லது.
ஒரு நபர் அவனின்/அவளின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படவில்லை எனில், அவனின்/அவளின் உறுப்புகள், மரணத்தின் கனியைச் சுமக்கும்படி, அவயவங்களிலே உள்ள பாவ இச்சைகள் செயல்புரிகின்றன. நம்முடைய அனைத்துக் கனிகளும் சுமந்து தீர்க்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதின் மூலம் அவரின் கிருபையின் கீழ் தேவனுக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியும். ஆனால் சட்டத்திற்கு கீழ் தேவனுக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியாது. ஆகவே தேவன் இப்படி கூறுகிறார், “இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ் செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப் பட்டிருக்கிறோம்” (ரோமர் 7:6)
 
 
சட்டம் நம் பாவங்களை கொடுமையான பாவமாக்குகிறது
 
“ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்கும். முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன். பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று” (ரோமர் 7:7-13).
சட்டம் நம் பாவங்களை கொடுமையான பாவமாக்குவதற்காக கர்த்தர் அதனைக் கொடுத்ததாக பவுல் கூறினான். மேலும் அவர் கூறினான், “இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” (ரோமர் 3:20). ஆயினும் சட்டத்தின் நீதியை கடைப் பிடித்துக் கொண்டிருந்தாலும் அநேக கிறிஸ்தவர்கள் சட்டப்படி வாழவே முயற்சி செய்கின்றனர். மறுபடியும் பிறவாத அநேக போதகர்கள் தம் கீழ்படியாமையினால் மக்கள் பாவிகளாயினர் என்பதை அறிவர். சட்டத்தின்படி வாழுவதினால் மட்டுமே அவர்களுடைய நோயிலிருந்து விடுதலையடை முடியும் என அவர்கள் எண்ணுகின்றனர்.
சட்டத்திற்கு கீழ்ப்படியாமல் இருப்பது நம் எல்லா நோய்களையும் உருவாக்குகிறது என நம்மால் உண்மையாகவே முடிவு செய்ய முடியுமா? கர்த்தரின் வார்த்தையின் படி வாழத் தவறியதால் எதுவுமே சரியாக நடைபெற மாட்டேன் என்கிறது என அநேக கிறிஸ்துவர்களும், போதகர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் எண்ணுகின்றனர். தம்முடைய பாவங்களினால் தாம் நோய் வாய்பட்டதாக அவர்கள் எண்ணுகின்றனர். ஆகவே பாவத்திற்கு அவர்கள் பயப்படுகின்றனர். அன்றாடம் அழுகின்றனர். இன்னும் அழுங்கள் இடைவிடாது அழுங்கள். எல்லாவற்றிலும் அழுங்கள். என வேதாகமத்தில் புதிய வசனம் ஒன்றை அவர்கள் சேர்த்தாலும் சேர்ப்பார்கள். “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 5:16-18) என்பதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் கள்ளப்போதகர்களோ தம் மக்களை நன்கு அழுமாறும் இடைவிடாது அழுமாறும் போதிக்கிறார்கள். அழுகையினால் உருவாகும் சுருக்கங்கள் அவர்களின் விசவாசத்திற்கான அறிகுறி என்பதைப் போலவும் கூறுகிறார்கள்.
அழுபவர்களிடம் நல்ல விசுவாசம் இருக்கிறது என சட்டப்படியான விசுவாசமுள்ளவர்கள் கூறுகின்றனர். மறுபடியும் பிறவாத கள்ளப் போதகர்கள் நன்கு அழும் ஒரு பெண்ணை மூத்த டீக்கனாகவும், எப்பொழுதும் அழுதுக் கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவ மனிதரை மூப்பராகவும் நியமிக்கிறார்கள். ஆலயத்திற்கு சென்று அழாதீர்கள். நீங்கள் கண்டிப்பாக அழ வேண்டுமானால் வீட்டில் வைத்து அழுங்கள். இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? நம்மை அழுமூஞ்சிகளாக்குவதற்கா? இல்லை, நம்முடைய அனைத்து கவலைகளையும், சாபங்களையும், நோய்களையும், வேதனைகளையும் இயேசு ஒரேதரமாக சுமந்து தீர்த்தார். ஆகவே அவருடைய சிலுவை மரணம் நம்மை அழச் செய்யாமல் மகிழ்ச்சியுடன் வாழும்படி செய்கிறது. அப்படியானால் நாம் ஏன் அழுகிறோம்? மறுபடியும் பிறந்த கர்த்தரின் ஆலயத்தில் அவர்கள் அழ முயற்சி செய்தனர் என்றால் அவர்களை அவர்களின் வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
 
 
மறுபடியும் பிறந்தவர்களுக்கும் மறுபடியும் பிறக்காதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
 
சட்டத்தில் எத்தவறும் இல்லை. சட்டம் பரிசுத்தமானது. நாம் சிறிதும் நீதிமான்களாயில்லாத போதும் அது உண்மையாகவே நீதியானது. நாம் சட்டத்திற்கு எதிரானவர்கள். ஏனெனில் ஆதாமின் சந்ததியினராக பாவத்துடனே கூட நாம் பிறந்தோம். செய்யக் கூடாததை நாம் செய்கிறோம். ஆனால் செய்ய வேண்டியவற்றை நம்மால் செய்ய முடியாது. ஆகவே சட்டம் நம்மை அதிகப் பாவம் செய்பவர்களாக மாற்றுகிறது.
“நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தின் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கினது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:14-24)
இதற்கு முந்திய வசனத்தில் தான் உட்பட நாமனைவரும் சட்டத்தினால் ஒருமுறை தீர்க்கப்பட வேண்டுமென பவுல் கூறுகிறான். இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் மூலமாக சட்டத்தின் கோபங்களையும், தீர்ப்புகளையும் பெற்றவர்களால் மட்டுமே கர்த்தரின் நீதியின் கனிகளைச் சுமக்க முடியுமென அவன் கூறுகிறான். அவனுக்குள் நல்லவைகள் எவையும் இல்லை எனவும் கூறுகிறான். மறுபடியும் பிறக்காத ஒருவனால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது. மறுபடியும் பிறந்தவனும் கூட அப்படியே செய்கிறான். ஆனால் அவர்கள் இருவரிடமும் பெரிய வேறுபாடு இருக்கிறது. மறுபடியும் பிறந்தவர்களிடம் மாமிசமும் ஆவியும் இருக்கிறது. ஆகவே இரண்டு வகையான ஆசைகள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால் இன்னமும மறுபடியும் பிறக்காதவர்களிடம் மாமிசத்தின் இச்சை மட்டுமே இருக்கிறது. ஆகவே பாவம் செய்ய மட்டுமே அவர்கள் விழைகின்றனர். ஆகவே எததனை அழகாகவும் தொடர்ந்தும் பாவம் செய்கிறார்கள் என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். இது அவர்கள் வாழ்வின் இலட்சியமாகும். மறுபடியும் பிறவாதவர்களிடம் இது பொதுவானது.
பாவம் செய்யும்படி மக்களை பாவம் தூண்டுகிறது. ரோமர் 7:20 கூறுகிறது, “அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” மறுபடியும் பிறந்தவரின் இருதயத்தில் பாவமிருக்கிறதா? இல்லை. அப்படியானால் மறுபடியும் பிறக்காதவர்களின் இருதயங்களில் பாவமிருக்கிறதா? ஆம். உங்களிருதயத்தில் பாவமிருந்தால் உங்கள் மாமிசத்தில் அது செயல்புரிந்து இன்னமும் அதிகமான பாவங்களைச் செய்யத் தூண்டுகிறது. “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” மனிதர்கள் பாவத்துடன் பிறந்ததால் தம் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்வதை அவர்களால் தவிர்க்க முடியாது.
ஆவியின் கனிகளை மறுபடியும் பிறந்தவர்களால் உடனடியாக சுமக்க முடியும். ஆனால் மறுபடியும் பிறக்காதவர்களால் இத்தகைய கனிகளைச் சுமக்க முடியாது. மற்றவர்கள் மீது இவர்கள் இரக்கம் காட்டுவதில்லை. தம்முடைய பிள்கைள் கீழ்படியாவிட்டால் அவர்களில் சிலர் கொலையும் செய்வர். அவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு கிழ்படியாவிட்டால் கொடூரம் அவர்களுடைய இருதயங்களிலிருந்து வெளிப்பட்டு தம்மிருதயங்களால் தம் பிள்ளைகளைக் கொலை செய்கின்றனர். அவர்கள் சரீரப் பிரகாரமாக தம் பிள்ளைகளைக் கொலை செய்யாவிட்டாலும் தம்மிருதயங்களால் எண்ணிலடங்காத முறை கொலை செய்கின்றனர்.
இங்கு நான் கூற விழைவதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? ஆனால் மறுபடியும் பிறந்தவர்கள் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியாது. அவர்கள் விவாதத்தில் ஈடுபடலாம். ஆனால் மற்றவர்களிடம் இருப்பதைப் போல் கசப்பு மற்றும் கோபத்தினால் நிறைந்த கொடூரமான இருதயங்கள் இவர்களிடம் இருக்காது.
மாறாக மக்கள் மீது நீதிமான்களின் இருதயத்தில் கிருபை இருக்கிறது. வெவ்வேறு கருத்துக்களுட்ன அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தாலும் அதனைப் பொருட்படுத்துவதில்லை, “நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.” கர்த்தரின் சாயலாக மனிதர்கள் படைக்கப்பட்டதால் நன்மை செய்ய அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் பாவம் அவர்களின் இருதயங்களில் இருந்தாலும் கூட தீயவைகள் மட்டுமே அவர்களிடமிருந்து வருகின்றன.
மறுபடியும் பிறக்காத கிறிஸ்தவர்கள் ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொள்ளுகின்றனர். நான் உண்மையாகவே நன்மைச் செய்ய விரும்புகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. எனக்கு ஏன் முடியவில்லை என்பதும் புரியவில்லை. இன்னமும் இரட்சிக்கப்படாததால் அவர்கள் பாவிகளாகவே இருக்கும் காரணத்தால் அவர்களால் நல்லவைகளைச் செய்ய முடியாது. மறுபடியும் பிறந்தவர்களிடம் ஆவியானவரின் ஆசைகளும் மாமிசத்தின் இச்சைகளும் இருக்கின்றன. ஆனால் இன்னமும் மறுபடியும் பிறக்காதவர்களிடம் ஆவியானவர் இல்லை. இந்த முக்கிய பேறுபாடே மறுபடியும் பிறந்தவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து காட்டுகிறது.
அதிகாரம் ஏழில், தான் மறுபடியும் பிறக்காதிருந்த போதுள்ள நிலையைக் குறித்து பவுல் பேசுகிறான். ரோமர் 7:1 இலிருந்து சட்டத்தை விளக்கி தான் செய்ய விரும்பும் நன்மையைச் செய்ய முடியாமலும், தான் செய்ய விரும்பாத தீமையை செய்வதாகவும் அவன் விளக்குகிறான். வேறு வார்த்தையில் கூறினால் பாவம் செய்வதை பவுல் விரும்பவில்லை. நன்மை செய்யவிரும்பினான். ஆனால் அவன் விரும்பாததையே அவனால் துல்லியமாக செய்ய முடிந்தது. அதே நேரம் தன்னிருதயத்தால் எதனைச் செய்ய விருப்பப்பட்டானோ அதனைச் செய்வது சாத்தியமாகாததை அவன் கண்டான், நிர்ப்பந்தமான “மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” தன்னுடைய இழிந்த நிலைக்காக அவன் புலம்பினான். ஆனால் உடனடியாக தேவனைத் துதிக்கிறான். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.”
இதன் பொருளை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? மறுபடியும் பிறந்த நம்மால் அவன் கூறவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் மறுபடியும் பிறந்தவர்களால் அதனைப் புரிந்து கொள்ளவே முடியாது. பூச்சியாகாத ஒரு புழுவால், பூச்சி என்ன கூறுகிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. “வாவ், மரத்தில் அமர்ந்து மணிக்கணக்காக பாட்டு பாடிக் கொண்டிருக்கிறேன். காற்று எத்தனை இதமாயிருக்கிறது!” புழுவானது தரையிலிருந்து பதில் கூறும், “உண்மையாகவா? காற்று என்றால் என்ன?” பூச்சி கூறுவதை புழுவால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் காற்று என்றால் என்னவென்பது பூச்சிக்குத் தெரியும்.
பவுல் மறுபடியும் பிறந்தவன் ஆதலால், மறுபடியும் பிறந்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை தெளிவாக விளக்க முடிந்தது. தன்னை இரட்சித்த இரட்சகர் இயேசு கிறிஸ்து என அவன் கூறுகிறான். இயேசு கிறிஸ்து நம்மை இரட்சித்தாரா? ஆம் அவர் இரட்சித்தார், “ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.”
தம் பாவங்கள் அகற்றப்பட்டவர்கள் கர்த்தரின் சட்டத்தைத் தம் இருதயங்களால் ஆராதிக்கின்றனர். அப்படியானால் மாமிசத்தின் மூலம் எதற்கு ஊழியம் செய்கிறார்கள்? தம் மாமிசத்தினால் பாவச் சட்டத்திற்கு அவர்கள் ஊழியம் செய்கின்றனர். மாமிசம் பாவம் செய்ய விரும்புகிறது. ஏனெனில் அது மாறவேயில்லை. மாமிசம் மாமிசத்திற்குரியவைகளையும் ஆவி ஆவிக்குரியவைகளையும் வாசம் செய்வதால் தம் பாவங்கள் அகற்றப்பட்டவர்களால் தேவனைப் பின்பற்ற முடியும். ஆனால் தம் பாவங்கள் பின்பற்றுவதைத் தவிர்க்க முடியாது. தம் பாவங்கள் அகற்றப்பட்ட மறுபடியும் பிறந்தவர்கள் அவர்களால் மாமிசம் பாவத்தை பின்பற்றினாலும் தம்முடைய மனதால் கர்த்தரைப் பின்பற்ற முடியும்.
 
 
கிறிஸ்து இயேசுவினுள் உள்ள ஜீவ ஆவியின் சட்டமானது பாவம் மற்றும் மரணம் ஆகியவற்றின் சட்டத்திலிருந்து நம்மை விடுவித்தது
 
இப்போது ரோமர் 8:1 இற்கு செல்வோமாக. இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை விசுவாசித்து தம் பாவங்கள் அகற்றப்பட்டவர்கள் பாவத்துடனே கூட பிறந்தவர்களானாலும் கர்த்தரின் சட்டத்தால் தீர்க்கப்படுவதில்லை. “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோமர் 8:1-2).
ஆகவே கிறிஸ்து இயேசுவிற்குள் இருப்பவர்களுக்கு எந்த ஆக்கினையும் இல்லை. அங்கு ஆக்கினை இல்லை. மறுபடியும் பிறந்தவர்களிடம் பாவமில்லை. ஆகவே அவர்கள் மீது எத்தகைய நியாயத் தீர்ப்பும் இல்லை. அவர்களின் இருதயங்களில் எந்தப் பாவங்களும் இருக்க முடியாது. ஏனெனில் கிறிஸ்து இயேசுவிறிகுள்ளான ஜீவ ஆவியானவரின் சட்டமானது பாவம் மற்றும மரணம் ஆகியவைகளின் சட்டத்திலிருந்து அவர்களை விடுதலைச் செய்தது. நம் தேவன் உயிரின் தோற்றமாயிருக்கிறார். அவர் தேவாட்டுக் குட்டியானார். பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டு யோர்தான் நதியில் யோவான் அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமந்தார். நமது இடத்திலிருந்து தீர்க்கப்பட்டு நமக்காக சிலுவையில் அறையப்பட்டார். இதன் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டார்.
அப்படியானால் நம்பாவங்களை முன்னிட்டு மீண்டும் நாம் மரிக்க வேண்டுமா?தீர்க்கப்படுவதற்காக நம்மிடம் ஏதாவது இருக்கின்றதா? இயேசு கிறிஸ்துவினுடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களும் அவரின் மீது சுமத்தப்பட்ட பிறகு நமக்குள் பாவம் இருக்கிறதா? அப்படி இல்லை. தேவன் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்று நம் இடத்திலிருந்து சிலுவையில் அறையப்பட்டு எல்லாப் பாவிகளையும் இரட்சிப்பதற்கு மரித்தோரிலிருந்து மூன்றாம் நாளில் எழுந்ததினால் நாம் நியாயம் தீர்க்கப்பட வேண்டியதில்லை.
கர்த்தரின் இரட்சிப்பு அவரின் தீர்ப்பிலிருந்து நம்மை விடுவித்தது அதே நேரம் சட்டம் ஆக்கினையை எடுத்து வருகிறது. “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.” தம்மிடம் பாவமிருப்பவர்களிடம் கர்த்தரின் ஆக்கினை வெளிப்படுகிறது. கர்த்தர் அவர்களை நரகத்திற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் நம்மிருதயங்களிலுள்ள பாவங்களை அகற்றிப் போட்டதன் மூலம் பாவம் மற்றும் மரணம் ஆகியவற்றின் சட்டத்திலிருந்து தேவன் நம்மை விடுவித்தார். இயேசு கிறிஸ்துவுக்குள் உள்ள விசுவாசிகள் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாக்கினார். உங்கள் பாவங்கள் எடுத்துப் போடப்பட்டனவா?
அதெப்படியெனில், மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார் (ரோமர் 8:3-4).
மாமிசம் பலவீனமானது எனவும், சட்டத்தின் நீதியின் எதிர்பார்ப்புகளுக்கு இதனால் கீழ்படிய முடியாது எனவும்; நம் தேவன் நமக்குத் தெளிவாகக் கூறுகிறார். கர்த்தரின் சட்டம் நல்லதும் அழகானதுமாகம். ஆனால் நம் மாமிசம் பலவீனமானதால் அதன்படி நம்மால் வாழ முடியாது. நாம் நிறைவானவர்களாய் இருக்க வேண்டுமென கர்த்தரின் சட்டம் எதிர்பார்க்கிறது. கர்த்தரின் சட்டத்திற்கு முழுமையாக கீழ்படிய வேண்டுமென அது எதிர்பார்க்கிறது. ஆனால் அது பலவீனமாய் இருப்பதினாலே சட்டத்தின் எல்லா எதிர்பார்ப்புகளின்படியும் அதனால் வாழ முடியாது. இப்படியாக சட்டம் தன் ஆக்கினையை நம் மீது எடுத்து வருகிறது. ஆனால் நாம் தீர்க்கப்படுவதானால் இயேசுவானவர் எதற்கு?
நம்மை இரட்சிப்பதற்காக கர்த்தர் தன் ஒரே குமாரனை அனுப்பினார். நம்முடைய பாவங்களுக்காக பாவ மாமிசத்தின் சாயலாக கர்த்தர் தனது சொந்த குமாரனையே அனுப்பி அவர் தமது நீதியைக் கொடுத்தார். மாமிசத்தின் சாயலாக இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார். “மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்” நம்முடைய அனைத்துப் பாவங்களையும் கர்த்தர் இயேசுவின் மீது சுமத்தினார். ஆகவே சட்டத்தின் நீதியின் எதிர்பார்ப்பானது நமக்குள் நிறைவேற்றப்படும். அதனால் நாம் மாமிசத்திற்கு பின்னால் நடவாமல் ஆவிக்கு பின்னால் நடப்பவர்களாய் இருப்போம். நம்முடைய இருதயங்கள் மூலம் இயேசு கிறிஸ்துவை விசவாசிப்பதின் மூலம் நம்பாவங்கள் அகற்றப்பட்டன. இயேசு கிறிஸ்து நமக்காக செய்தவற்றை நாம் ஏற்றக் கொள்ளும் போது நம் பாவங்கள் துடைக்கப்படும்.
 
 
ஆவிக்கேற்றபடி வாழுபவர்களும் மாமிசத்திற்கேற்ற படி வாழுபவர்களும்
 
இரண்டு வகையான கிறிஸ்தவர்கள் உள்ளனர். தம்முடைய சொந்த சிந்தனைகளைப் பின்பற்றுவோர் ஒரு கூட்டத்தினர். மற்றும் சத்திய வார்த்தையைப் பின்பற்றுவோர் இன்னொரு கூட்டத்தினர். பின்குறிப்பிட்ட நபர்களால் இரட்சிக்கப்பட்டு நீதிமான்களாக முடியும். ஆனால் முன்குறிப்பிட்டோர் அழிவர்.
“அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்” (ரோமர் 8:5-6). சட்டத்தின்படி வாழ்வது கர்த்தரை விசுவாசிப்பதற்கு ஒத்தது என எண்ணுபவர்களால் நிறைவானவர்களாகவே முடியாது, “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.”
வெளிப்படையானதை மட்டும் சுத்தப்படுத்துவது மாமிசத்தின் காரியமாகும். அப்படி செய்பவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வேதாகமத்தை தூசிதட்டி தம் பரிசுத்த ஆடைகளை அணிந்து ஆலயத்திற்கு செல்வர். ஆனாலும் அவர்கள் தம் மனைவியருடன் சண்டைப் பிடித்து வீட்டிலுள்ளோருக்கு தீயவர்களாய் இருப்பார். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் தேவ தூதர்களாகிவிடுவர்.
“ஹாய், எப்படியிருக்கிறீர்கள்?”
“உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.”
அவர்களுடைய போதகர் பரிசுத்த தொனியிலும் இரக்கம்மிகு பாணியிலும் பிரசங்கம் செய்யும் போது அநேக முறை “ஆமென்” எனக் கூறுகின்றனர். ஆராதனை முடிந்த அவர்கள் சாதுவாக வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்களின் பார்வையிலிருந்து ஆலயம் மறைந்த உடனே அவர்கள் வேறுவிதமான மனிதர்களாகி விடுகின்றனர்.
“கர்த்தரின் வார்த்தை எனக்கு என்ன கூறிற்று? என்னால் நினைவு கூற முடியாது. நாம் குடிக்கச் செல்வோமா?”
ஆலயத்தில் அவர்கள் தேவதூதர்களாயிருப்பர். ஆனால் ஆலயத்திலிருந்து சிறிது தொலைவிலிருக்கும் போது நொடிப் பொழுதில் மனிதப் பிறவிகளாகிவிடுகின்றனர்.
ஆகவே பாவிகள் கீழ்கண்டவாறு ஜெபிக்க வேண்டும். “கர்த்தாவே, என்னை இரட்சியும், நானொரு கொடியவன். நீர் என்னை இரட்சிக்கவில்லையெனில் என்னால் பரலோக ராஜ்யத்திற்கு செல்ல முடியாது. நான் நரகத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் நான் மரிக்கும் வரை செய்யும் என் எல்லாப் பாவங்களையும் நீர் கழுவிவிட்டீர். ஆனால் விசுவாசத்தின் மூலம் என்னால் பரலோக ராஜ்யத்திற்கு செல்ல முடியும்.” அவர்கள் முற்றிலுமாக கர்த்தரைச் சார்ந்திருக்க வேண்டும்.
அவன்/அவள் கர்த்தரின் வார்த்தைப் பின்பற்றும் போது ஒவ்வொரு விசுவாசியாலும் அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று ஆவிக்குரிய வாழ்வு நடத்த முடியும். “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்” கர்த்தரின் உண்மைக்கேற்றபடி நாம் எண்ணி விசுவாசித்தால் சமாதானம் நம்மிடம் வரும். “எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் அவருக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” (ரோமர் 8:7-8). யாரிடமிருந்து இன்னமும் பாவங்கள் கன்னமும் எடுக்கப்படவில்லையோ யார் இன்னமும் மாமிசத்திலேயே இருக்கிறார்களோ அவர்களால் கர்த்தரைப் பிரியப்படுத்த முடியாது.
“தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட் பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” (ரோமர் 8:9). பவுல் கடினமான ஆவிக்குரிய வார்த்தைகளின் மூலம் பேசுவதால் இவ்வசனத்தையிட்டு மக்கள் குழம்பிவிட்டனர். மறுபடியும் பிறக்காதவர்கள் ரோமரின் 7 மற்றும் 8ஆம் அதிகாரத்தில் குழம்பிவிடுகின்றனர். வேதாகமத்தின் இப்பகுதியை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் மாமிசத்திற்குள் வாழ்வதில்லை என்பதுடன் மாமிசத்திற்காக மட்டுமே வாழுவதில்லை.
மேற்கண்ட வசனத்தில் பவுல் என்ன கூறுகிறான் என கவனமாக வாசிக்கவும். பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசம் செய்கிறாரா? ஒருவனிடம் கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லை என்றால், அந்நபர் கிறிஸ்துவினுடையவனல்ல. அவன் அவருடையவன் இல்லை என்பது இந்நபர் சாத்தானுக்கு சொந்தமானவன் என பொருள்படுகிறது. அவன் நரகத்திற்கு செல்ல வேண்டிய பாவி.
“மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” (ரோமர் 8:10-11). ஆமென்.
நம் தேவன் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டு மாமிசமாக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டு நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். பாவ விடுதலையை விசுவாசிக்கும் விசுவாசிகளின் இருதயத்திற்குள் தேவன் வந்து அவர்கள் ஒவ்வொருவரின் இருதயத்தினுள்ளும் குடியேறுகிறார். நம் தேவன் நம் எல்லாப் பாவங்களையும் கழுவி பனியைப் போல் நம்மை வெண்மையாக்கினார் என்பதை நிருபிப்பதற்காக பரிசுத்த ஆவியானவர் இருதயத்திற்குள் வருகிறார். இயேசு இவ்வுலகிற்கு மறுபடியும் வரும் பொழுது அவர் நமது மாமிசத்திற்கு ஜீவனளிப்பார். “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”
 
 
நாம் கர்த்தரின் பிள்ளைகள் என்பதற்கு ஆவியானவர் நம் ஆத்துமாவிற்கு சாட்சியாயிருக்கிறார்
 
நாம் மறுபடியும் பிறந்த பிறகு கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தினாலும் பரிசுத்த ஆவியானவராலும் வாழ வேண்டும். “ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்” (ரோமர் 8:12-17). “அப்பா, பிதாவே,” என நாம் கூக்குரலிடுகிறோம். ஏனெனில் வல்லமை அளிக்கும் ஆவியானவரைப் பெற்றுள்ளோம். அடிமைத்தனத்தின் ஆவியையும் பயத்தின் ஆவியையும் நாம் பெறவில்லை.
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். முதலாவதாக கர்த்தரின் உறுதியான வார்த்தையின் மூலமாக பாவ மன்னிப்பை நாம் பெற்றுக் கொண்டோம் என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் சாட்சியாக இருக்கிறார். இரண்டாவதாக நம்மிடம் பாவமில்லை என்பதற்கு சாட்சியாயிருக்கிறார். நாம் இரட்சிக்கப்பட்டோம் என்பதற்கு ஆவியானவர் முக்கிய சாட்சியாயிருக்கிறார். தம்முடைய பாவங்கள் எடுத்துப்போடப்பட்டவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் இவற்றை எல்லாம் செய்கிறார் “அந்தப்படியே, நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10). உண்மை, ஆனால் கர்த்தர் நம்மை விடுவித்தமைக்கு முந்திய நிலமையிது. இந்த வசனத்திற்கு கீழ் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக இருக்கும் விடுதலையின் மூலம் வருகிற அவருடைய கிருபையினாலே நாம் இலவசமாக சுதந்தரவாளிகளாவோம் என எழுதப்பட்டுள்ளது. (ரோமர் 3:24) நாம் கர்த்தரின் பிள்ளைகள் என்பதற்கு ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர் எனவும் எழுதப்பட்டுள்ளது. கர்த்தர் நமக்காகச் செய்தவற்றை நம் இருதயங்களால் ஏற்றுக் கொள்ளும் போது ஆவியானவர் நம்மிடம் வருகிறார். ஆனால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நமக்குள் அவரை எங்கும் காண முடியாது. கர்த்தர் நமக்காக செய்தவற்றை நம்மிருதயங்களால் ஏற்றுக் கொள்ளும் போது ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். “நீ நீதிமான், நீ என் பிள்ளை, நீ சரியானவன். நீ என் மனிதன்.” “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்” தேவனுடனே கூட துன்புறுவதும் அவருடைனே கூட மகிமை அடைவதும் கர்த்தரின் பிள்ளைகளுக்கு நன்கு பொருந்துகிறது. பரிசுத்த ஆவியானவரை தம்மிடம் கொண்டவர்கள். ஆவியானவரால் வழிநடத்தப்படுவதால் பரலோக ராஜ்யத்திற்கு செல்வதின் மீது முழு நம்பிக்கையையும் வைப்பர்.
 
 
இக்காலத்துப் பாடுகளின் நடுவிலும் கூட ஆயிர வருட அரசாட்சி மற்றும பரலோக ராஜ்யம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையால் வாழுகிறோம்
 
ரோமர் 8:18-25 இற்கு திரும்புவோமாக “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விதையாக்கப்பட்டு, அவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவாரலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.”
ஆவியானவரின் முதற்கனி நாமாவோம். மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் உயிர்த்தொழுதலின் முதல் கனிகளாவோம். முதலாவது உயிர்த்தெழுதலில் நாம் பங்கேற்போம். உயிர்த்தெழுதலில் முதல் கனி இயேசு கிறிஸ்து ஆவார். அவருடன் ஒட்டிக் கொள்வது நாம் தான். கிறிஸ்துவினுடையவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்பர். அப்போது முடிவு வரம். பாவிகள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்று நியாயம் தீர்க்கப்படுவர். இதனால் தான் பவுல் கூறுகிறான், “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.” மகிமை என்பதின் மூலமாக ஆயிர வருட மற்றும் பரலோக ராஜ்யத்தையும் அவன் குறிப்பிடுகிறான். ஆசீர்வதிக்கப்பட்ட நேரம் வருகையில் நாம் அனைரும் மறு பம் அடைவோம். கர்த்தரின் பிள்ளைகள் முற்றிலுமாக மரித்தவர்களிடமிருந்து மீண்டும் உயிரோடெழுப்பப்பட்டு அவர்களில் ஒவ்வொருவரும் தேவனளிக்கும் நித்திய வாழ்வைப் பெறுவர். நமது மாமிசம் மரித்தோரிலிருந்து உண்மையாகவே உயிரோடெழும்பும் (நமது ஆத்துமாக்கள் ஏற்கனவே மரித்தோரிடமிருந்து உயிரோடெழும்பியுள்ளது), கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்குவார். நீதிமான்கள் ஆயிரம் வருடங்களாக ராஜாவாக மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
பிரபஞ்சத்திலுள்ள எல்லா படைக்கப்பட்டவைகளும் தாம் கர்த்தரின் பிள்ளைகள் என அறிவிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன. படைப்புகள் மாற்றப்படும் அவை மாற்றப்பட்டும் உள்ளன. ஆயிர வருட அரசாட்சியின் போது வலி, துன்பம் அல்லது மரணம் ஆகிய எதுவும் இருக்காது. ஆனால் இப்போதோ முணகுகிறோம். ஏன்? ஏனெனில் மாமிசம் இன்னமும் பலவீனமாக உள்ளது. நமது ஆத்துமாக்கள் எதற்காக முணகுகின்றன? நமது சரீரங்களின் விதுலைக்காக அவை முணகுகின்றன.
“ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்” (ரோமர் 8:23-25).
இந்த நம்பிக்கையினால் நாம் இரட்சிக்கப்பட்டதால் சுதந்தரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். பாவங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்ட நாம ஆயிர வருட அரசாட்சி மற்றும் பரலோக ராஜ்யம் ஆகியவற்றினுள் பிரவேசிப்போம். உலகம் திடீரென முடிவிற்கு வந்துவிட்டாலும் நாம் அழிந்து போக மாட்டோம். உலகின் முடிவில் நம் தேவன் மீண்டும் இங்கே திரும்பி வருவார். அவர் எல்லாவற்றையும் புதிதாக்கி நீதிமான்களின் புதிதாக்கப்பட்ட மாமிசத்தை உயிரோடெழுப்புவார். அவர்கள் ஆயிரம் வருடங்களாக அரசாளும் படி செய்வார்.
இவ்வுலகின் முடிவு பாவிகளுக்கு கவலை தரும், நீதிமான்களுக்கோ அது புதிய நம்பிக்கை பவுல் அதனை நம்பினா¡ன். நீங்கள் முணகுவதோடு உங்கள் சரீரத்தின் விடுதலைக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆத்துமாவும் கூட காத்துக் கொண்டிருக்கிறதா? இயேசு கிறிஸ்துவின் உயிரோடெழுப்பப்பட்ட சரீரத்தைப் போல் ஆவிக்குரிய சரீரங்களாக நாம் மாறுவோம். அப்போது வலியையோ அல்லது பலவீனத்தையோ உணருவதில்லை
 
 
நீதிமான்கள் விசுவாசத்துடனிருக்க பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார்
 
நாம் விசுவாசத்துடனிருக்க பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார். நாம் பார்ப்பவைகளின் மீது நம்பிக்கை வைக்கிறோமா? இல்லை. இன்னமும் நம்மால் காண முடியாததை நாம் நம்புகிறோம். “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிற படியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார்” (ரோமர் 8:26-27).
நமக்குள் பரிசுத்த ஆவியானவர் எதிர்பார்ப்பது என்ன? நாம் எதை செய்ய அவர் உதவுகிறார்? நாம் எதனை எதிர்ப்பார்க்கிறோம்? புதிய வானத்தையும் புதிய பூமியையும் (2 பேதுரு 3:13), பரலோக ராஜ்யத்தை நாம் எதிர்பார்த்திருக்கிறோம். இந்த அழியும் உலகில் வாழ நாம் விரும்பவில்லை. நாம் களைப்படைந்துவிட்டதால் நம் தேவனின் நாளை எதிர்பார்த்திருக்கிறோம். பாவமில்லாமல் நோயில்லாமல் தீய ஆவி இல்லாமல் நித்தியமாய் வாழ நாம் விரும்புகிறோம். மகிழ்ச்சி, சமாதானம், நேசம் மற்றும் தேவனாகிய இயேசுவுடனும் மற்றவர்களுடனும் நல்லத் தொடர்புடன் வாழுவதற்கு நாம் விரும்புகிறோம்.
ஆகவே ஆத்துமாவானது நமக்காக முணகி ஜெபித்து வருவதுடன் புதிய வானம் புதிய பூமிக்காக காத்திருக்கிறது. வெளிப்படையாக பேசினால் நீதிமான்களாகிய நமக்கு நம்முடைய உடன் கர்த்தரின் ஊழியர்களுடன் எப்போதாவது கால்பந்து விளையாடுவதைத் தவிர இவ்வுலகில் வேறு இன்பங்கள் இல்லை. நற்செய்தியைப் பிரசங்கிக்க விரும்புவதால் நாம் இவ்வுலகில் வாழுகிறோம். இந்த பெரிதான கட்டளை இல்லையெனில் பரிசுத்தவான்கள் இவ்வுலகில வாழுவதற்கு எந்த பொருளும் இல்லை.
 
 
கர்த்தரை நேசிக்கும் மறுபடியும் பிறந்தவர்களுக்கு எல்லாமும் நன்மைக்கேற்றபடி நடக்கும்படி செய்கிறார்
 
ரோமர் 8:28-30ஐ வாசிப்போமாக, “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.”
ரோமர் 8:28இல் பவுல் கூறுகிறான், “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” இந்த வசனம் மிகவும் முக்கியமானது. நான் ஏன் பிறந்தேன்? சாத்தான் இல்லாத ஓரிடத்தில் கர்த்தர் என்பைப் படைத்திருக்க வேண்டும். அல்லது தொடக்கம முதலே பரலோக ராஜ்யத்தில் வாழ அவர் என்னை அனுமதித்திருக்க வேண்டும். அவர் ஏன் என்னை இப்படிச் செய்தார். என அநேக மக்கள் எண்ணலாம். மோசமான சூழ்நிலைகளில் பிறந்த சில மக்கள் ஒரு வெறி உணர்வை தம்முள் வைத்துள்ளனர். அது முதலாவதாக பெற்றோரின் மீதும், இரண்டாவதாக கர்த்தர் மீதும் இருக்கிறது. இத்தனைத் துன்பங்களுடன் என்னை ஏன் பிறக்கச் செய்தீர்?
இத்தகைய கேள்விகளுக்கு இவ்வசனம் சரியான பதிலை நமக்கு அளிக்கிறது. கர்த்தரின் படைப்புகளாக நாம் பிறந்தோம். இது சரியா? நாம் அவரின் படைப்புகள். கர்த்தரின் சாயலாக அவர் நம்மைப் படைத்தாலும் கூட இன்னமும் நாம் அவரின்படைப்புகளே. இவ்வுலகில் நம்மைப் படைத்ததற்கு கர்த்தரிடம் ஒரு காரணம் இருக்கிறது. வேதவசனம் கூறுகிறது, “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” சாத்தானால் பாவத்திற்குள் தள்ளப்பட்ட நம்முடைய மூதாதையர்களான ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து மூலப் பாவத்தை நாம் பெற்றுக் கொண்டதால் நாம் பாவிகளாக பிறந்து துன்புறுகிறோம். விசுவாசத்தின் மூலம் நம்மைத் தமது பிள்ளைகளாக்க கர்த்தர் நமக்காக இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். நம்மை அவர் படைத்தமைக்கான காரணம் இதுவே. இயேசு கிறிஸ்துவுடனும் பிதாவாகிய கர்த்தருடனும் ஆயிர வருட அரசாட்சியிலும் பரலோக ராஜ்யத்திலும் தேவர்களைப் போல் நித்தியமாகவும மகிழ்ச்சியாகவும் வாழ அவர் சித்தமுடையவராய் இருக்கிறார்.
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” நம்முடையப் பாவங்களெல்லாம் எடுத்துக் கொள்ளப்பட்டப் பிறகு நம்மீதான கர்த்தருடைய சித்தமெல்லாம் நிறைவேறியது. இது சரியானதில்லையா? இவ்வுலகில் நாம் பிறந்தமைக்காக நாம் மகிழக் கூடாதா? எதிர்காலத்தில் நாம் அனுபவிக்கப் போகும் மகிமையை நாம் எண்ஹணும் போது மறுபடியும் பிறந்தமைக்காக நம்மால் மகிழாமல் இருக்க முடியாது. அநேக மக்கள் மகிழ்ச்சியாயில்லை. கர்த்தருடைய அன்பைத் தள்ளி விட்டதால் இப்படியாயிற்று.
இங்கு ஏன் பாவங்களும் நோய்களும் இருக்கின்றனவென்றும், தீய மக்களும் ஏன் எல்லாம் நலமாயிருக்கின்றவெனவும், நன்மை செய்ய வேண்டியவர்கள் ஏன் துன்பப்படுகின்றனர் எனவும் நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா? நமக்குத் துன்பம் வரும் போது மட்டுமே அவரைச் சந்தித்து நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று அவருடைய பிள்ளைகளாக முடியும் என்பதே அதற்கான காரணம். கர்த்தர் தீய மக்களை இவ்வுலகில் வாழச் செய்து அவரை நேசிப்பவர்களுக்கு எல்லாக் காரியங்களும் நலமாக நடக்கும்படி செய்கிறார்.
இப்படியாக நீங்கள் எண்ண வேண்டாம். கர்த்தர் ஏன் என்னை இப்படி படைத்தார் என புரியவில்லை. இத்தகைய ஏழ்மையான குடும்பத்தில் கர்த்தர் என்னைப் பிறக்கச் செய்து ஏன் துன்புறுத்துகிறார்? சாத்தானின் மற்றும் சட்டத்தின் ஆளுகைக்கு கீழுள்ள இவ்வுலகில் கர்த்தர் நம்மைப் பிறக்கச் செய்து நம்மை அவரின் பிள்ளைகளாக்கவும் அவருடைய ராஜ்யத்தில் நம் தேவனுடனே கூட ராஜாக்களாக நித்தியமாக வாழ செய்யவும் கர்த்தர் எண்ணினார். நமது நன்மைக்காக அனைத்தும் ஒன்று கூடி செயல்பட்டன. மேலும் கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக்கினார். நம்மை இப்படி படைத்ததற்கான கர்த்தரின் நோக்கம் இதுவே. கர்த்தருக்கு எதிராக புகார் கூறவும் கூடாது. முணுமுணுக்கவும் கூடாது. “நான் ஏன் இப்படி படைக்கப்பட்டேன்? நான் ஏன் இப்படியிருக்கிறேன்.” இத்தகைய கஷ்டங்களின் மூலம் கர்த்தரின் நற்சித்தம் நிறைவேற்றப்படுகிறது.
உங்கள் பாடுகளைக் குறித்து புகார் கூறாதீர்கள். உங்கள் வாழ்க்கையைக் குறித்து இத்தகையப் பாடல்களைப் பாடாதீர்கள் “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” (எபிரெயர் 9:27). ஒருவருடைய பிறப்பிற்கும் தீர்ப்பிற்கும் இடையே கிருபையான கர்த்தரின் இரட்சிப்பு இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கிறோம். கர்த்தருடைய கிருபையினால் நம்முடைய அனைத்துப் பாவங்களும் எடுத்துப் போடப்பட்டன. மேலும் ஆயிர வருட அரசாட்சியிலும் பரலோக ராஜ்யத்திலும் நித்தியமாய் நாம அரசாள்வோம். படைக்கப்பட்டவைகளில் சிறந்தவர்கள் என் நாம் அழைக்கப்பட வேண்டும். உங்களைத் துன்பப்பட கர்த்தர் ஏன் படைத்தார் என நீங்கள் இப்போது புரிந்து கொண்டீர்களா? நாம் கர்த்தரிடம் திரும்ப வந்து நம்மை அவரின் பிள்ளைகளாக்க அவர் நமக்கு துன்பங்களையும் வேதனைகளையும் அளித்தார்.
 
 
தம்முடைய குமாரரின் சாயலாக நாம் மாறுவதற்கு கர்த்தர் நம்மை முற்குறித்தார்
 
பாவ மன்னிப்பைப் பெறுவதற்கும், கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்படவும் நீதிமான்களாகவும் சில நொடிகள் கூடத் தேவையில்லை. ஒரே தரமாக நாம் நீதிமான்களானோம். விசுவாசத்தினால் ஒரே நொடியில் கர்த்தரின் பிள்ளைகளாக மாற முடியும். படிப்படியாக நீண்ட காலமாக நாம் பரிசுத்தமாகிக் கொண்டிருந்தமைக்கான பதிலாக கர்த்தரின் இரட்சிப்பு கிட்டவில்லை. ஒரே தரமாக கர்த்தர் நம்மை இரட்சித்து ஒரே முறை நம்மை நீதிமானாக்கினார்.
“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” (ரோமர் 8:29-30).
இந்த வசனத்திலிருந்து “கல்வானிசத்தின் ஐந்து கொள்கைகளை” அநேக மக்கள் அடிப்படையாக்கினார். ஆனால் அது தவறானது. பவுல் இங்கு கூறுகிறான், “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்” இயேசுவிற்குள்ளாக தம் பிள்ளைகளாக்க கர்த்தர் நம்மை முன் குறித்தார். அவருடைய திட்டத்தின் படி நாம் இவ்வுலகில் பிறப்பதை கர்த்தர் முன்குறித்தார். யாருடைய சாயலாக நாம் மாறுவோம்? கர்த்தருடைய சாயலாகவும் அவரின் குமாரரின் சாயலாகவும் நாம் மாறுவோம்.
அவருடைய சித்தத்தின்படி நாம் பிறந்து இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் கர்த்தரின் பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட கர்த்தர் நம்மை அனுமதித்தார். அவருடைய குமாரரின் சாயலாக மாற்றப்படவிருக்கும் அவரின் பிள்ளைகளாக நம்மை ஆக்கவதற்காக அவர் தனது குமாரரை அனுப்புவதற்கு வாக்குத் தத்தம் செய்தார். ஆதாமின் சந்ததியினராகிய நாம் பாவிகளாய் இருக்கும் போது இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தர் நம்மை அழைத்தார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” (மத்தேயு 11:28). நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்ட பிறகு அவர் நம்மை அழைத்தார். விசுவாசத்தின் மூலம் நம்மை நீதிமான்களாக்கும்படி அவர் நம்மை அழைத்தார்.
 
 
கர்த்தர் நம்மை நீதிமான்களாக்கியதுடன் நம்மை மகிமைப்படுத்தவும் செய்தார்
 
கர்த்தர் பாவிகளை அழைத்து ஒரேதரமாக அவர்களை நீதிமான்களாக்கினார். இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகராக விசுவாசித்ததின் மூலம் ஒரே தரமாக நாம் நீதிமான்களானோமே தவிர இறையியலாளர்கள் வலியுறுத்துவதைப் போல் படிப்படியாக பரிசுத்தமானதின் மூலம் நீதிமான்களாகவில்லை. கர்த்தர் பாவிகளை அழைத்து அவர்களை நீதிமான்களாக்குகிறார். பாவிகளை அவர் அழைப்பதற்கான நோக்கம் இதுவே.
“எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்.” கர்த்தரால் அழைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து செய்தவைகளை விசுவாசிப்போர் நீதிமான்களாகின்றனர். ஆதாமின் சந்ததியினராய் நாமிருப்பதால் முன்பு நம்மிடம் பாவமிருந்தது. ஆனால் இயேசு அவைகளை எடுத்துப்போட்டார் என்ற சத்தியத்தை நாம் விசுவாசிக்கும் போது நமது எல்லாப் பாவங்களும் அகற்றப்பட்டன. அப்படியானால் உங்களிடம் பாவமிருக்கிறதா இல்லையா, பாவமில்லை. நமக்குள் எந்த பாவங்களும் இல்லை. “எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்.”
கர்த்தரின் பிள்ளைகளாகியவர்கள் நீதிமான்களாவர். படிப்படியாக ஒவ்வொரு நிலையாக நாம் அவரின் பிள்ளைகளாகிறோம் என்பத உண்மையல்ல. மாறாக அவரின் இரட்சிப்பின் மூலம் கர்த்தரின் பிள்ளைகளாக ஒரே தரம் நாம் மகிமைப்படுத்தப்பட்டோம்.
“எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக்கினார். இரட்சிக்கப்படுவதற்கான ஐந்து படிகள் என்பதை இத்தனைக்கிறிஸ்தவர்கள் ஏன் விசுவாசிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை. இரட்சிப்பும், கர்த்தரின் பிள்ளைகளாவதும் ஒரே நேரத்தில் கிட்டியது. நம் தேவன் இரண்டாம் முறை வருவதற்காக நாம காத்திருக்க வேண்டியிருப்பதால் நாம் சரீரங்கள் உயிரோடெழும்புவதற்கு இன்னும் சிறிது நேரமாகலாம். ஆனால் பாவங்களிலிருந்து விடுதலை கண் இமைக்கும் நேரத்திற்குள் கிட்டி விடுகிறது. நம்மை அழைத்தவராகிய கர்த்தர் நமக்கு அருளியவைகளையும் நம்மை இரட்சிப்பதற்காக அவர் செய்த அனைத்து செயல்களையும் நாம் ஏற்றுக் கொண்டு நம் பாவ மன்னிப்பு வார்த்தைகளுக்கு நாம் செயல்படும் போது விடுதலையை நொடிப் பொழுதில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். உமக்கு நன்றி, தேவனே. அல்லேலு¡யா, ஆமேன், நீர் என்னை இரட்சித்ததால் நான் இரட்சிக்கப்பட்டேன். என்னுடைய எல்லாப் பாவங்களையும் நீர் கழுவியிருக்காவிட்டால் நான் விடுதலைப் பெற்றிருக்கவே மாட்டேன். என் தேவனே உமக்கு நன்றிகள், அல்லேலு¡யா, இப்படியாக நம் பாவங்கள் துடைக்கப்பட்டன.
பாவ விடுதலைக்கு நம் செய்கைகளோ அல்லது நம் நேரமோ தேவையில்லை. நம்முடைய விடுதலைக்கு 0.1 சதவீத நம் செயல்கள் கூட அவசியமில்லை. படிப்படியாக விடுதலையாகவும் பரலோக ராஸ்யத்திற்கு நாம் செல்லவும் நாம் சரியானவர்களாக வேண்டுமென கால்வினிஸ்டுகள் கூறுகின்றனர். ஒரு புழுவானது எத்தனைக் கஷ்டப்பட்டு முயன்றாலும் 100 மீட்டர் தூரத்தை ஒரு செகண்டுக்குள் அதனால் ஓட முடியாததைப் போல் தம்முடைய சொந்த முயற்சிகளால் மக்கள் நீதிமான்களாக முடியாது. அவர்கள் எத்தனை நல்லவர்கள் என்பதோ, சட்டத்தைக் கடைபிடிக்க எத்தனையாய் முயல்கிறார்கள் என்பதோ பொருட்டல்ல. ஒரு புழுவானது தன்னை எத்தனையாய் கழுவி விலையேறப்பட்ட அழகு பொருட்களை பூசிக் கொண்டாலும் அது இன்னமும் புழுதான். அது போலவே தம்மிருதயங்களில் பாவமிருக்கும் பாவிகள் இன்னமும் பாவிகளே. அவர்கள் எத்தனை நல்லவர்களாக தோன்றுகிறார்கள் என்பது பொருட்டல்ல.
படிப்படியாக பரிசுத்தமாவதன் மூலம் பாவி ஒருவனால் எப்படி முழு நீதிமானாக முடியும்? காவல் செல்லச் செல்ல மாமிசம் நல்லதாகி விடுகிறதா? இல்லை, வயது செல்லச் செல்ல மாமிசம் அசுத்தமாகவும் தீயதாகவும் மாறிவிடுகிறது. ஆனால் வேதாகமம் கூறுகிறது, “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” கர்த்தருடைய கிருபையினால் ஒரே தரமாக என்ன நடக்கிறது என்பதை இவ்வசனம் ஒழுங்குப்படுத்துகிறது. பாவ விடுதலையும், நீதிமானாவதும் ஒவ்வொரு நிலையாக நிகழ்கிறது என இது கூறவில்லை. தேவன் மீது விசுவாசம் வைப்பதின் மூலம் ஒரு நபரால் ஒரே தரமாக நீதிமான்களாக முடியும். அது படிப்படியாக வருவதில்லை.
தாம் செய்வது இன்னதென்று அறியாத அநேக இறையியலாளர்கள், தவறான கொள்கைகளை வலியுறுத்தி மக்களை நரகத்திற்கு அனுப்புகின்றனர். நம் விடுதலையைக் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்து இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்மை அழைத்து நம்மை நீதிமான்களாக்கி அவருடைய அழைப்பை ஏற்று முன் வந்தவர்களை மகிமைப்படுத்தினார். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12) கர்த்தர் நம்மை மகிமைப்படுத்தினாரா? ஆம் அப்படி செய்தார். நல்ல செய்கைகளையும், சிறந்தவற்றையும் செய்வதால் நாம மகிமைப்படுத்தப்படுவோமா? நீதிமான்களாக நாம் மிகக் கடினமாக முயற்சிக்க வேண்டுமா? அப்படி இல்லை. நாம் ஏற்கனவே நீதிமான்களானோம்.
 
 
கர்த்தரின் அன்பிலிருந்து யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது
 
கர்த்தர் நம்முடனிருந்தால் யாரால் நம்மை எதிர்த்து நிற்க முடியும்? ஒருவராலும் முடியாது. “இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:31-39).
கர்த்தரின் அன்பிலிருந்து யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது. நீதிமான்களாகிய நம்மை யாராலும் பாவிகளாக்க முடியாது. கர்த்தரின் பிளளைகளாகிய நம்மை ஆயிர வருட அரசாட்சி மற்றும் பரலோக ராஜ்யம் ஆகியவற்றில் வாழப் போகும் நம்மை யாராலும் தடுக்க முடியாது. சோதனைகளால் நம்மை பாவிகளாக்க முடியுமா? கவலைகளால் நம்மை பாவிகளாக்க முடியுமா? துன்புறுத்தப்படுவதால் நாம் பாவிகளாகிவிடுவோமா? பஞ்சம், நிர்வாணம், அழிவு, பட்டயம் ஆகியவற்றால் நம்மை மீண்டும் பாவிகளாக்க முடியுமா? “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” கர்த்தர் நமக்கு பரலோக ராஜ்யத்தைக் கொடுத்தார். நம்மை இரட்சிப்பதற்காக கர்த்தர் தன்னுடைய ஒரே பேரான குமாரனை நமக்கு அருளியதால் எல்லாவற்றையும் கூட அவர் நமக்கு இலவசமாக தருகிறார். நமக்காக மிகப் பெரிய பலியைச் செலுத்த கர்த்தர் சித்தமாயிருக்கும போது அவர் நம்மைத் தன் பிள்ளைகளாக்க மாட்டாரா?
 
 
கர்த்தர் நமக்கருளிய விடுதலையானது...
 
நாம் நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டுமானால் பிதாவாகிய கர்த்தரின் சித்தப்படி இயேசு கிறிஸ்துவானவர் மாமிசமாக அனுப்பி வைக்கப்பட்டார் என்பதை முதலாவது ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் இயேசுவானவர் தன் மீது ஏற்றக் கொண்டார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டார் என்பதை அறிக்கை செய்ய வேண்டும். இறுதியாக அவர் உயிரோடெழுப்பப்பட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேற்கண்ட ஒவ்வொரு காரியங்களையும் நாம் நம்பாவிட்டால் நம்மால் இரட்சிக்கப்பட முடியாது.
இயேசுவானவரை கர்த்தரின் மகனாகவும், அவர் கர்த்தர் எனவும் படைத்தார் எனவும் விசுவாசிக்காத அனைவரும் கர்த்தரின் இரட்சிப்பிலிருந்து விலக்கப்பட்டனர். இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மறுக்கும் நபர் ஒருவன்/ஒருத்தி சாத்தானின் பிள்ளையாகிறார். யோவான் ஸ்நானனால் அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டப்போது இயேசு நம் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பதை ஏற்காதவர்களாலும் கூட இரட்சிக்கப்பட முடியாது. அவர்களுடைய இரட்சகர் இயேசுவானவரில்லை. இயேசுவை அவர்கள் தமது சிந்தனைகளால் விசுவாசித்தாலும் கூட அவர்களின் இருதயங்களில் அவர்களால் இரடசிக்கப்பட முடியாது. இயேசுவை அவர்கள் அறிந்தாலும் கூட நரகத்திற்கு செல்வர். இயேசு கிறிஸ்து தன்னுடைய ஞானஸ்நானத்தினால் நம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துக் கொண்டதால் அதற்காக நமது இடத்திலிருந்து மரித்தார். இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். அவருடைய பாவத்திற்காக மரிக்கவில்லை. அவரை விசுவாசிக்கும் அனைவரையும் நீதிமான்களாக்கி அவர்களை உயிரோடெழுப்புவதற்காக அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார்.
 
 
அவருடைய ஞானஸ்நானத்தின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டோம்
 
ஏழாம் அதிகாரத்தின் எட்டாவது அதிகாரத்தின் மீதுள்ள தொடர்பைக் குறித்து இதுவரை பிரசங்கித்தேன். தம்மில் பாவமிருப்பவர்களால் நல்லவற்றைச் செய்ய முடியாது என அதிகாரம் 7 கூறுகிறது. ஆனால் கிறிஸ்து இயேசுவிற்குள் உள்ளவர்களுக்கு இப்போது எந்த ஆக்கிளையும் இல்லை என அதிகாரம் 8 கூறுகிறது. மேலும இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் நம்மை பாவமில்லாதவர்களாக்கிறது எனவும் இது கூறகிறது. நாம் பலவீனமானவர்கள் ஆகவே கர்த்தரின் சித்தப்படி நம்மால் வாழ முடியாததாகையால் நமது இரட்சகராக இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய கர்த்தர் அனுப்பினார். நாம் பாவிகளாயிருக்கும் போதே இயேசுவானவர் தனது ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட்டு நீதிமான்களானோம். அதிகாரம 7 மற்றும் 8 மூலமாக பவுல் போதிக்கும் உண்மை இதுவே.
“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை.” இப்போது நம்மிடம் பாவமில்லை. நீ இயேசு கிறிஸ்துவினுள் இருக்கிறாயா? இயேசு கிறிஸ்து உனக்காகச் செய்தவற்றை ஏற்றுக் கொள்கிறாயா? பவுல் தனது பாவங்களிலிருந்து விடுதலையானதைப் போல் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களும் கூட எடுத்துப் போடப்பட்டன. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை விசுவாசிப்பதின் மூலம் நாம் விடுதலையானோம். இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை ஒரு நபர் மூர்க்கத்தனமாக விசுவாசிக்க மறுத்தாலோ, தனது தாழ்மையைக் காட்டுவதற்கு மட்டுமே இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றார் என்று வலியுறுத்தினாலோ கர்த்தர் அந்நபரை நரகத்திற்கு அனுப்புவார். கர்த்தரின் வார்த்தைக்கு முன்னதாக மூர்க்கத்தனமாக இருக்காதீர்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து பவுலே இத்தனையாய் பேசும் போது போதகர்களாலும் ஊழியர்களாலும் இதனை எப்படி அலட்சியம் செய்ய முடியும்? விசுவாசத்தின் மிகப் பெறும் தந்தைகளில் ஒருவனான பவுலின் விசவாசத்தை அவர்களால் எப்படி அலட்சியம் செய்ய முடியும்? கர்த்தர் தாமே தனது அப்போஸ்தலராக நியமித்த கர்த்தரின் ஊழியரின் போதனைகளை அவர்களால் எப்படி அலட்சியம் செய்ய முடியும்?
இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாம் போதிக்க வேண்டுமானால் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளதைப் போன்று நாம் பிரசங்கிக்க வேண்டும். மேலும் வேதாகமத்தின் படி நாம் விசுவாசிக்க வேண்டும். தேவன் நம்மிடம் கூறுகிறார். “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32) பவுலைப் போல் நீங்களும் நானும் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்க வேண்டும்.
உங்களுடைய பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்கு எப்போது செலுத்தப்பட்டது? யோவான் ஸ்நானன் இயேசு கிறிஸ்துவிற்கு ஞானஸ்நானம் செய்வித்த போது நம்முடைய எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது. இயேசு யோவானிடம் கூறினார், “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” இங்கு இப்படியாக என்பது “ஹூடோஸ்” என கிரேக்க மொழியில் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் “இந்த வழியாக,” “மிகவும் பொருந்தக் கூடிய,” அல்லது “இதைத் தவிர வேறு வழிகள் இல்லை” என்பதாகும். யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் பாவங்களையெல்லாம் இயேசு தன் மீது ஏற்றக் கொண்டார் என்பதை இவ்வசனம் காட்டுகிறது. ஞானஸ்நானம் என்பதின் பொருள் “கழுவப்படுதல்” என்பதாகும். நம்முடைய இருதயங்களிலுள்ள எல்லாப் பாவங்களும் கழுவப்பட வேண்டுமானால் நம்முடைய பாவங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட வேண்டும்.
இயேசு கிறிஸ்து நம் பாவங்களை தன் மீது சுமந்தார். நமக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார். நம்முடனே கூட ஐக்கியமாக அடக்கம் பண்ணப்பட்டார். ஆகவே பவுல் அறிவித்தான் “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்” (கலாத்தியர் 2:20). இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் எனக்கூறும் போது நாம் எப்படி சிலுவையில் அறையப்படுவோம்? கிறிஸ்துவானவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமந்து இப்பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என விசவாசிப்பதின் மூலம் நாமும் கூட கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டோம்.
என்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் என்னை இரட்சித்த தேவனை நான் துதிக்கிறேன். இயேசு நம்மை நீதிமான்களாக்கியதால் நற்செய்தியை நம்மால் ¨தரியத்துடன் பிரசங்கிக்க முடிகிறது. மிகவும் பலவீனமான மாமிசம் உடையவர்களும் அவருடைய மகிமைக்கு முன் குறைபாடுடையவர்களுமான நம்மை நம் எல்லாப் பாவங்களிலுமிருந்து இரட்சித்த தேவனை நான் துதிக்கிறேன்.