• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 8-1] ரோமர் 8 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம் (ரோமர் 8:1-4)

ரோமருக்கு எழுதிய நிருபத்தில் எட்டாம் அதிகாரம் மிக முக்கியமான அதிகாரம் என கூறப்படுகிறது. இந்த அதிகாரத்தில் காணப்படும் அநேக கருப் பொருட்களின் மூலம் கர்த்தரின் நீதியின் செயல் எத்தனை ஆச்சரியமானது என பவுல் வெளிப்படுத்துகிறான். 
முதலாவது கருப்பொருள், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1) நாம் நம் மாமிசப்படி எத்தனை மோசமானவர்களாகவும், அழுகிப் போனவர்களாகவும் இருந்தாலும் கர்த்தருடைய நீதி நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தது என இது பொருள்படும்.
இரண்டாவது கருப் பொருள், “அதெப்படியெனில், மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு” (ரோமர் 8:3). கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை மனிதர்களால் தம் மாமிசத்தின் மூலம் பின்பற்ற முடியாது என்பதால் இயேசு கிறிஸ்து தான் ஞானஸ்நானத்தின் மூலம் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றக் கொண்டு சிலு¨வியல் மரித்ததின் மூலமாக பாவத்திலிருந்தும் தீர்ப்பிலிருந்தும் அவர்களை இரட்சித்தார். இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஒரே தரமாக ஏற்றுக் கொண்டதால் அப்பாவங்கள்அனைத்தையும் சிலுவைக்கு சுமந்து சென்று அதில் மரித்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததின் மூலம் இந்த உண்மையை விசுவாசிக்கும் அனைவரையும் அவர் இரட்சித்தார். நம் தேவனின் இந்த எல்லாச் செய்கைகளும் கர்த்தரின் நீதியை நிறைவேற்றி பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காகும். நம்முடைய பிதாவாகிய கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்படிந்து அவர் இவற்றைச் செய்தார்.
மூன்றாவது கருப்பொருள், “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்” (ரோமர் 8:5). கர்த்தரை விசுவாசிக்க நாம் தீர்மானிக்கும் போது நம்முடைய சொந்த சிந்தனைகளைப் பின்பற்றி அவரை நாம் விசுவாசிக்காமல் கர்த்தரின் வார்த்தையை பின்பற்றுவதன் மூலம் விசுவாசிக்க வேண்டும் என இது பொருள்படுகிறது.
நான்காவது கருப்பொருள், “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட் பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள்” (ரோமர் 8:9). கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதுடன் கர்த்தரின் பிள்ளைகளுமாயினர். நீங்கள் ஆலயத்திற்கு பயபக்தியாக செல்வதால் கர்த்தரின் பிள்ளையாக முடியாது எனவும் இது பொருள்படுகிறது.
ஐந்தாவது கருப்பொருள், “ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல” (ரோமர் 8:12). கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய நம் தேவனின் நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலம் தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டவர்கள் தம் மாமிசத்திற்கு கடனாளியும் இல்லை அடிமைகளும் இல்லை என்பதை இக்கருப்பொருள் நம்மிடம் கூறுகிறது.
ஆறாவது கருப்பொருள், “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). கர்த்தரை விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டதால் பிதாவாகிய கர்த்தரை அப்பா பிதாவே என இப்போது அழைக்க முடியும்.
ஏழாவது கருப்பொருள், “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்” (ரோமர் 8:16-17). கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டனர். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்கள் கிறிஸ்துவுடனே ஒன்று சேர்ந்து அவருடைய பரலோக ராஜ்யத்தின் வாரிசுகளானோம்.
எட்டாவது கருப்பொருள், “ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது” (ரோமர் 8:22). படைக்கப்பட்டவைகள் அனைத்துடனும் கூட கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் எல்லோரும் இந்த புவியுலகில் பாடுகளை அனுபவிப்பர் என இந்த வசனம் கூறுகிறது. ஆனால் அவர்களுடைய மற்ற உலகில் புலம்பல்களோ வேதனையோ இல்லை எனவும் இது நம்மிடம் கூறுகிறது.
ஒன்பதாவது கருப்பொருள், “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” (ரோமர் 8:30). கர்த்தர் தன் குமாரராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பாவிகளை அழைத்து தம்முடைய நீதியினால் அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் அகற்றி தம் பிள்ளைகளாக்கினார் என இது நம்மிடம் கூறுகிறது.
இறுதியாக பத்தாவதும் கடைசியானதுமான கருப் பொருள், “தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்” (ரோமர் 8:33). கர்த்தருடைய நீதியை விசுவாசித்து தம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று பரிசுத்த ஆவியானவரை ஈவாகப் பெற்ற கர்த்தரின் பிள்ளைகளை யாராலும் தீர்க்க முடியாது.
இந்த பத்து கருப் பொருட்களும் ரோமர் எட்டாம் அதிகாரத்தின் அடிப்படையாகும். அவற்றை ஒவ்வொன்றாக விளக்கமாக நம் உரையாடலில் காண்போமாக.