• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 8-2] கர்த்தரின் நீதி, சட்டத்தினுடைய தேவையை நிறைவேற்றுதல் (ரோமர் 8:1-4)

(ரோமர் 8:1-4)
“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. அதெப்படியெனில், மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.”
 
 
கிறிஸ்துவுக்குள்ளாக இருப்பவர்களிடம் எத்தகைய விசுவாசமிருக்கிறது என்பதை ரோமர் 8:1-4 கூறுகிறது. கர்த்தரின் நீதியின் மீதுள்ள நம் விசவாசத்தின் மூலம் சட்டத்தின் அனைத்து தேவைகளையும் நம்மால் சந்திக்க முடியுமென்பதே இவ்வசனத்தின் இரகசியமாகும்.
அப்படியானால் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நம்பிக்கை என்ன? உலகின் எல்லாப் பாவங்களையும் நம் தேவனை ஏற்றுக் கொள்ளச் செய்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும அவரின் இரத்தத்தினை விசுவாசிப்பதின் மூலம் பாவ மன்னிப்பை பெற உதவிய விசுவாசம் இதுவாகும். நம்முடைய இரட்சகராக கர்த்தரின் நீதிக்காக உழைத்து எல்லா நீதிகளையும் நிறைவேற்றிய இயேசுவை விசுவாசிப்பதின் மூலம் பாவங்களை நம்மால் ஜெயங்கொள்ள முடியும். கர்த்ரின் நீதியைப் பின்பற்றும் நம்பிக்கையும் நம் விசுவாசத்தின் வெற்றியும் இதுவேயாகும்.
முதலாவதாக ரோமர் 8:1 நம்மிடம் கூறுகிறது, “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” கர்த்தரின் நீதியை விசுவாசித்து இயேசு கிறிஸ்துவினுள் வாசம் செய்பவர்களிடம் நிச்சயமாக பாவமிருக்க முடியாது. இத்தகைய விசவாசமானது சட்டத்தின் தேவையான அனைத்து நீதிகளையும் நிறைவேற்றிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தையும் அடிப்படையாகக் கொண்டது. மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் கர்த்தரின் நீதியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையானதுமிக முக்கியமான விசுவாசமாகும். சாதாரண மனிதர்களால் வேறெப்படி பாவமற்றவர்களாக முடியும்? இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தரின் நீதியின் மீது அவர்கள் வைத்திருக்கும் அலைபாயாத நம்பிக்கையினால் அவர்களுடைய எல்லாப் பாவங்களும் மறைந்து போயின. கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களுக்காக அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களை இயேசு தனது மாமிசத்தின் மீது சுமந்தார்.
ரோமர் 8:3 நம்மிடம் கூறுகிறது “தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி,” மேலும் மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். வேறு வார்த்தையில் கூறினால் இயேசுவின் சரீரத்தில் பாவத்தை ஆக்கினைக்குட்படுத்தியதால் பிதாவாகிய கர்த்தர் உலகின் எல்லாப் பாவங்களையும் தன்னுடைய ஒரே பேறான குமாரனின் மீது செலுத்தினார். இந்த உண்மையின் வார்த்தையானது மத்தேயு 3:13-17ல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது (இதனைக் குறித்த முழு விபரங்களையும் என்னுடைய “நீங்கள் உண்மையாகவே நீர் மற்றும் பரிசுத்த ஆவியானவராலே மறுபடியும் பிறந்தவரா?” என்ற புத்தகத்தில் காணலாம்). இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்களிடம் பாவமில்லை. ஏனெனில் கர்த்தர் தன் நீதியின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் மன்னித்தார்.
 
 
“நிர்ப்பந்தமான மனுஷன் நான்!”
 
ரோமர் 7:24 முதல் 8:6 வரையுள்ள வசனங்கள் இரண்டு மாறுபாடான கருப் பொருட்களைக் கொண்டுள்ளது. வேறு வார்த்தையில் கூறினால் அவற்றில் ஒன்று பாவ பிரச்சினையைக் குறித்த உரையாடலாகும். அவனுடைய சொந்த சரீரத்தினால் கர்த்தருக்கு கீழ்படியாதது அவற்றில் ஒன்று. மற்றத இயேசு கிறிஸ்துவினுள் பாவ பிரச்சனைக்கான தீர்வை அவன் கண்டு பிடித்ததைக் குறித்த உரையாடலாகும்.
ரோமர் 7:24-25 கூறுகிறது “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய்கிறேன்.” தன்னுடைய சொந்த மாமிசத்தை நோக்கிப் பார்த்து தானொரு கொடிய பாவியென பவுல் கூக்குரலிட்டான். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலம் தன் மாமிசத்திலிருந்து விடுதலையானதால் கர்த்தருக்கு அவன் நன்றி கூறினான். பவுல் தனது மனதினால் கர்த்தரின் சட்டத்திற்கு ஊழியம் செய்தாலும் தன் மாமிசத்தினல் பாவ சட்டத்திற்கு ஊழியம் செய்தான் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
கர்த்தரைப் பிரியப்படுத்தும் ஒரு வாழ்வு வாழுவதற்கு பதிலாக கர்த்தர் விரும்பாத பாவச் சட்டத்தை மாமிசம் இன்னமும் பின்பற்றுகிறது என்பதை பவுல் அறிக்கை செய்தான். ஆனால் தனது மனதாலோ கர்த்தரின் ஆவியானவரின் சட்டத்தை இன்னமும் பின்பற்றுவதாக அவன் கூறினான். இந்த இரண்டு சட்டங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டாலும் தன்னைக் கொடியவனாகவும், பரிதவிப்புள்ளவனாகவும் பவுல் உணர்ந்தான். ஆனால் கர்த்தரின் நீதியின் நிறைவேற்றுதலான இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள தன் விசுவாசத்தின் மூலம் கர்த்தர் அவனை அவனின் பாவங்களில் இருந்து விடுவித்தாக அவருக்கு நன்றி கூறி தான் வெற்றி பெற்றதை அறிவித்தான்.
இயேசு கிறிஸ்து அவனின் அனைத்துப் பாவங்களையும் மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்ததாக பவுல் விசுவாசித்ததால் மட்டுமே அவனால் இத்தகைய நன்றிகளைக் கூற முடிந்தது. இந்த உலகின் பாவங்களை அகற்ற யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் இயேசு தன் மீது ஏற்றுக் கொண்டார். சிலுவையில் பாவத்திற்கான தீர்ப்பைப் பெற்றதன் மூலம் அவரை விசவாசிக்கும் அனைவரையும் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் இரட்சித்தார். இதனால் தான் ரோமர் 8:1இல் பவுல் அறிவித்தான், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” இங்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை என்பதன் பொருள் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களிடம் முற்றிலும் பாவங்களில்லை என்பதாகும். கர்த்தரின் நீதியை விசவாசிப்பதின் மூலம் கிறிஸ்து இயேசுவிற்குள் இருக்கும் அனைவரின் இருதயங்களிலும் பாவங்கள் இருப்பதில்லை. மாமிசத்தின் படி அவர்கள் பலவீனமுடையவர்களாய் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் எததகைய பாவங்களும் இல்லை.
அதற்கு மாறாக ஆக்கினை என்பதன் பொருள் பாவமிருப்பதைக் குறிக்கிறது. அதாவது அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். யாரொருவர் யாதொரு தவறையும் செய்தால் அதனைப் பாவமென்று நாம் அழைக்கிறோம். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதற்கு பதிலாக தன்னைப் பாவியென எண்ணுவதோ இதன் காரணம். ஆனால் கிறிஸ்து இயேசுவிற்குள் உள்ளவர்களுக்கு பாவமில்லை என மேற்கண்ட வசனம் கூறுகிறது.
ஆயினும் உலகின் மதங்கள் வலியுறுத்தும் சரியெனக் காட்டும் தத்துவத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வரவில்லை. விசுவாசத்தின் மூலம் நீதிமானாக கருதுவது என்பதன் முக்கியத்துவம் என்பது ஒருவரின் இருதயத்தில் பாவம் இருந்தாலும் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக நீதியில்லாத அவரை கர்த்தர் நீதிமானாக கருதுவார் என்பது இது ஒரு கொள்ளையளவிலான வலியுறுத்தல் என பொருள்படுகிறது. ஆனால் இது தவறானதாகும். கர்த்தரால் எப்படி பொய் கூற முடியும். பாவியை அவரெப்படி பாவமில்லாதவன் என அழைப்பார்? இதனை அவர் செய்யவே மாட்டார். அதற்கு பதிலாக இத்தகைய பாவியிடம் அவர் இப்படிக் கூறுவார். “உன்னுடைய பாவங்களுக்கு நிச்சயமாக மரணத்தை சந்திப்பாய். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் காட்டப்பட்ட என் நீதியை விசுவாசி.”
இந்நாட்களில் அநேக மக்கள் தம் விசவாசத்தை நியாயப்படுத்துகின்றனர். மேற்கண்ட கொள்கைகளை பற்றிக் கொள்வதன் மூலம் கர்த்தரின் நீதியைப் பெறமுடியும் என கூறுகின்றனர். ஆனால் இத்தகைய விசுவாசமானது தவறானதும் அபாயகரமானதுமாகும். இயேசுவானவர் சத்தியத்தின் கர்த்தராயிராவிட்டால் ஒரு பாவியை தன்னைப் பின்பற்றுபவன் என அழைக்க முடியும். ஆனால் சத்தியபரராகிய இயேசு பாவி ஒருவனை நீதிமானெனவும் பாவமற்றவன் எனவும் அழைக்க மாட்டார். கர்த்தருடைய நீதிக்கு முன்பாகவும் அவருடைய நியதிக்கும் பரிசுத்தத்திற்கும் முன்பாக ஒரு பாவியை நீதிமானெனவும் பாவமில்லாதவன் எனவும் அழைப்பத சாத்தியமில்லாத ஒன்று.
இயேசுவை வெறுமனே விசுவாசிப்பதால் பாவத்திலிருந்து உங்களுக்கு விடுதலைக் கிடைக்காது என்பதையும் உங்களுடையதாகும். கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதால் உங்கள் விடுதலை வருமென்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் நீதியை நீங்கள் அறியாததால் அதனை விசவாசிக்காமலிருந்தால் இயேசுவை நீங்கள் விசுவாசித்தாலும் கூட கர்த்தர் உங்களை நீதிமான் என அழைக்க மாட்டார். ஆனால் இன்றைய யதார்த்தமானது படிப்படியாக பரிசுத்தமாதல், சரியெனக்காட்டும் தத்துவம் ஆகியவற்றை முக்கியமான கிறிஸ்தவ கொள்கைகள் என அநேகர் ஏற்றுக் கொண்டிருப்பதாகும். ஆயினும் இத்தகைய முக்கியமான கிறிஸ்தவ கொள்கைகள் கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்வதைத் தடுக்கின்றன என்பதை சிலர் அறிந்து கொண்டனர். இந்த கொள்கைகளெல்லாம் உண்மையிலேயே கர்த்தருக்கு எதிரானது என்பதை அறியாமலேயே இக்கொள்கைகளை விசுவாசிப்பதால் அநேக மக்கள் கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்வதிலிருந்து தவறியிருக்கின்றன. இத்தகைய கொள்கைகள் அவர்களின் சொந்தமான தடைக் கல்லாக மாறிற்று.
நீங்கள் உண்மையான கிறிஸ்தவராக இருக்க வேண்டுமானால் நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவிற்குள் இருக்கிறீர்களா இல்லையா என்பதை அறிய கர்த்தரின் வார்த்தை மூலம் உங்களை நீங்களே அளக்க வேண்டும். அப்படி செய்வதற்கு நீர் மற்றும் ஆவியானவரின் வார்த்தையைக் குறித்து நீங்கள் கேட்டு பார்த்து அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களையே கேளுங்கள். இயேசுவிற்குள் இருக்கும் என் விசுவாசம் சரியானதா? நான் இயேசுவை விசுவாசிக்கிறேன் எனக் கூறும போது மதத்தை நான் கடைப்பிடிக்கவில்லையா, இயேசுவிலும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் அரைவாசி பாதையில் நின்றுவிட்டேனா? “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை,” என்ற உண்மையின் மீதுள்ள விசுவாசத்தில் சஞ்சரிக்க கர்த்தரின் நீதியைப் பெறுவதற்கு அதனை விசுவாசிக்க உங்களுக்கான நேரம் இதுவே.
எபேசியரில் “இயேசுவின் மீதான பாவவிடுதலை” என்ற வசனத்தை அடிக்கடி காண்கிறோம். நம்மை நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க கர்த்தர் நம்மை முன் குறித்து கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மைத் தேர்ந்தெடுத்தார் என இது பொருள்படும். இயேசுவினுள் கர்த்தரின் நீதியால் பாவ மன்னிப்பு பெற்றவர்களும் கிறிஸ்துவினுள் நுழைந்தவர்களும் தம் பாவங்கள் முற்றிலும் துடைக்கப்பட்டவர்களாவர். ஆகவே நம் தேவனால் அருளப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இயேசு கிறிஸ்துவிற்குள் ஆக்கினையைப் பெறுவதில்லை. ஒருவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் போது தேவனுக்குள்ளாக கர்த்தரின் நீதியைப் பெற்றவராக அவர் மாறி விடுகிறார். மேலும் அவர் இந்த நற்செய்தியையும் பிரசங்கிக்கிறார்.
இயேசு கிறிஸ்துவிற்குள் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களிடமும் அவருடைய அகல விரிந்த கைகளில் அடைக்கலம் புகுபவர்களிடமும் பாவமில்லை. இதுவே சத்தியமும் சரியான பதிலுமாகும். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் கிறிஸ்துவுக்குள்ளானவர்களின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் மறையச் செய்ததால் அவர்களுக்குள் பாவமிருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஆகவே கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களிடம் உண்மையாகவே பாவமில்லை. இந்த சத்தியம் அதாவது கிறிஸ்துவிற்குள் இருப்பவர்களிடம் எப்பாவங்களும் இல்லை என்பது. நீர் மற்றும் ஆவியின் வார்த்தையில் காணப்படும் பதிலாகும். மேலும் பாவப் பிரச்சனைகளில் எக்குழப்பமும் இங்கே இல்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக வெளிப்பட்ட கர்த்தரின் நீதியை நீங்கள் விசுவாசிக்கும் போது உங்களாலும் கூட உண்மையாகவே நீதிமானாகி விட முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து விசுவாசியுங்கள். அதில் கர்த்தரின் நீதி உள்ளடங்கியிருக்கிறது. அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்யும் நீதிமானாவீர்கள்.
நாமொரு கடினமான பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்கிறோம் எனக் கொள்வோம். இந்த பிரச்சனைக்கு உண்மையிலேயே நாம் தீர்வு காண வேண்டுமானால் நம்மை நோக்கி வரும கஷ்டங்களையும் சோதனைகளையும் பொருட்படுத்தாது பதிலை தொடர்ந்து தேட வேண்டும். அது போலவே இயேசுவை விசுவாசித்தும் அவருக்குள்ளே நுழையாதவர்கள் நற்செய்தியாக நீர் மற்றும் ஆவியினால் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரின் நீதியை நாம் தேட வேண்டும்.
உலகின் அநேக மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்று என சில மக்கள் எண்ணுகின்றனர். ஆகவே படிப்படியாக பரிசுத்தமாதல் போன்ற தத்துவங்களை விசுவாசிப்பதின் மூலம் தம்முடைய பாவங்களும் தீர்வு காண முயலுகின்றனர். ஆனால் இத்தகைய கொள்கைகளாலோ தம்முடைய சொந்த நீதிகளினாலோ அவர்களுடைய பாவங்களைக் கழுவ முடியாது என்பதை சீக்கிரமாகவே கண்டு கொள்வர். அதற்கு பதிலாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் பாவப் பிரச்சனை இலகுவாக தீர்ந்து போவதை அவர்கள் கண்டு கொள்வர்.
நீங்கள் உண்மைக் கிறிஸ்தவராய் இருக்க வேண்டுமானால் நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை உங்களிருதயத்தில் விசுவாசிப்பதின் மூலம் கர்த்தரின் நீதியை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மதச் சார்பான மக்களோ படிப்படியாக பரிசுத்தமாகும் தத்துவம் சரியெனக் காட்டும் தத்துவம் ஆகிய தத்துவங்களின் மூலம் கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்ள முயலுகின்றனர் அவர்கள் தம்முடைய சொந்த செயல்களின் மூலம் எல்லாப் பாவ பிரச்சினைகளையும் தீர்க்க முயலுகிறார்கள். இத்தகைய விசுவாசங்கள் அவர்களின் மனந்திரும்பி ஜெபிக்கும் ஜெபத்தை சார்ந்திருக்கிறது. அதனால் அவர்களை அவர்களின் அழிவிலிருந்து தப்புவிக்க முடியாது. ஏனெனில் இத்தகைய ஜெபங்களில் ஈடுபடும் போது பாவங்களைக் காண்பதால் இன்னமும் அதிகப் பாவங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் தம் மாமிசத்தின் படி பலவீனமானவர்களாயிருந்தாலும் கர்த்தரின் நீதியை விசுவாசித்து தம்முடைய எல்லாப் பாவப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டனர். இப்படியாக விசுவாசித்ததின் மூலம் கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொண்டவர்களின் மனங்களில் பாவமிருப்பதில்லை. அத்துடனே கூட அவர்களுக்கு எந்த ஆக்கினையும இல்லை.
 
 
ஏனெனில் கர்த்தரின் நீதி இயேசுவிற்குள் இருக்கிறது
 
வசனம் 2 கூறுகிறது “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.” மனிதனுக்கு கர்த்தர் இரண்டு சட்டங்களைக் கொடுத்தார். இயேசுவினுள் ஜீவ ஆவியானவரின் சட்டம் மற்றும் பாவம் மரணம் ஆகியவற்றைக் குறித்த சட்டம் அவையாகும். பவுல் கூறுவதைப் போல் ஜீவ ஆவியானவரின் சட்டம், பாவம் மரணம் ஆகியவற்றைக் குறித்த சட்டத்திலிருந்து நம்மை விடுதலையாக்கியதோடு நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுதலையாக்கியது. புதிய வாழ்வைப் பெறுவதற்கு பவுல் கூறிய இந்த உண்மையை அறிந்து அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சத்தியம் உலகிலுள்ள அனைவருக்கும் சமமாக பொருந்துகிறது.
ஜீவ ஆவியானவரின் சட்டத்தை விசுவாசித்ததின் மூலம் பாவம் மரணம் ஆகியவற்றைக் குறித்த சட்டத்திலிருந்து நாமும் கூட விடுதலைப் பெற்றோம். இல்லாவிட்டால் பாவம் மரணம் ஆகியவற்றைக் குறித்த சட்டத்தினால் நிச்சயமாக நாம் அழிந்து போயிருப்போம. ஆனால் இயேசுவிற்குள் கர்த்தரின் நீதியை நமது இருதயத்தில் விசுவாசித்ததால் அதாவது இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்ததால் அவருடைய நீதியைப் பெற்றுக் கொண்டு ஜீவ ஆவியானவரின் சட்டத்தின் ஆளுகைக்குள் வந்து நமக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டோம். அப்படியானால் உங்கள் எல்லாம் பாவங்களையும் மன்னிக்கக் கூடி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எங்கே கண்டுபிடிப்பது? இது இயேசு யோவானிடம் பெற்ற ஞானஸ்நானத்திலும் அவர் தன் இரத்தத்தைச் சிந்திய இரத்தத்திலும் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தரின் நீதியானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் காணப்படுகிறது.
அப்படியானால் பாவம் மரணம் ஆகியவற்றின் சட்டத்திலிருந்து நம்மை விடுதலையாக்கிய நற்செய்தியாக கர்த்தரின் நீதி என்ன? நம் தேவன் இவ்வுலகில் பிறந்து உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொள்ளும் படி முப்பது வயதில் யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில மரித்து மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து நம் பாவங்களிலிருந்து விடுதலையாக்கிய இந்நற்செய்தியால் கர்த்தரின் நீதி அடங்கியுள்ளது.
மனித குலமானது பலவீனமாக உள்ளதால் அவர்கள் பாவம் செய்ய விழைவார்கள் என்பதை அறிந்த கர்த்தர் பாவம் மரணம் ஆகியவற்றை குறித்த சட்டத்திலிருந்துஅவர்களை விடதலையாக்கக் கூடிய நற்செய்தியாகிய இரட்சிப்பை அவர்களுக்கு கொடுத்ததன் மூலம் எல்லாப் பாவிகளையும் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்க திட்டமிட்டார். யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்திலும் அவரின் சிலுவை இரத்தத்திலும் காணப்படும் நற்செய்தியாகிய பாவ நிவர்த்தி இதுவே. இந்த நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலம் எல்லா மனிதர்களாலும் அவர்களின் பாவங்களுக்கான மரணச் சட்டத்திலிருந்து விடுதலையாக முடியும். இந்த கர்த்தரின் நீதியே ஜீவ சட்டமாகும். இது மனித குலத்தை அதன் எல்லாப் பாவங்ளிலிருந்தும் விடுதலையாக்கிற்று.
கர்த்தர் மனிதனுக்கு சட்டத்தின் வார்த்தையைக் கொடுத்து அவரின் சட்டப்படி வாழத் தவறினால் அது பாவமாகும் என கூறினார். அதே சமயம் பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவிக்கும் சட்டம் ஒன்றையும் கர்த்தர் ஏற்படுத்தினார். இந்த இரட்சிப்பின் சட்டம் கர்த்தரின் நீதியில் மறைந்துள்ள சத்தியமாகும். இந்த கிருபையின் சட்டமானது அதனை விசுவாசிக்கும் அனைவருக்கும் நித்திய ஜீவனை அளிக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் சட்டமே கர்த்தர் மனிதர்களுக்காக ஏற்படுத்திய பாவ நிவர்த்திக்கான சட்டமாகும். அது இயேசுவின் ஞானஸ்நானமும், அவரின் சிலுவை இரத்தமுமாகும். இந்த விசுவாசமே ஜீவ சட்டமாகும். இதனால் மட்டுமே கர்த்தரின் நீதியை அவர்கள் மீது தரிப்பிக்க முடியும்.
இந்த ஜீவ சட்டத்தை யாரால் எதிர்த்து நிற்க முடியும்? கர்த்தரால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் யாராலும் உலகின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக முடியும். மேலும் இந்த விசுவாசத்தால் அவன்-அவள் கர்த்தரின் நீதியைப் பெறுவர்.
ஜீவ ஆவியானவரின் சட்டத்தை கர்த்தர் உங்களுக்கு எப்படிக் கொடுத்தார்? தன்னுடைய குமாரராகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பி கன்னிப்பெண்ணிற்கு அவரைப் பிறக்கச் செய்து யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தி பாவத்தின் சம்பளமாக அவரை சிலுவையில் மரிக்கச் செய்து மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியதன் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் அழித்து இயேசுவை பாவிகளின் இரட்சகராக்கியதன் மூலம் அதனை உங்களுக்கு கொடுத்தார். இந்த உண்மையை விசுவாசிக்கும் அனைவருக்கும் கர்த்தர் மன்னிப்பையும் புதிய வாழ்வையும் கொடுத்தார். அவர் நமக்கு கொடுத்த ஜீவ ஆவியானவரின் சட்டம் இதுவே.
அப்படியானால் பாவம் மரணம் ஆகியவற்றைக் குறித்த சட்டம் என்ன? மனித குலத்திற்கு கர்த்தர் கொடுத்த சட்டங்கள் இதுவே. கர்த்தர் ஏற்படுத்திய சட்டத்தில் எதைச் செய்யக் கூடும். எதை செய்யக் கூடாது என்ற அவரின் கட்டளைகள் விளக்கமாக இருப்பதுடன் இந்த கட்டளைகளில் இருந்து சிறிது மாறினாலும் அதனைப் பாவமாக்கி அதற்கு சம்பளமாக மரணத்தை அளித்து நரகத் தண்டனையைப் பெற வேண்டும்.
இப்படியாக அனைவரும் மரண சட்டத்திற்குட்படுத்தப்பட்டார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து தம்முடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவை இரத்தத்தினால் இந்த சட்டத்திலிருந்து விடுவித்தார். பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இயேசு ஒருவரால் மட்டுமே இரட்சிக்க முடியும். அவர் நமக்கு அளித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மட்டுமே நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க முடியும். ஆகவே உங்களை இரட்சிக்க இயேசு எப்படி இப்பூமிக்கு வந்தார் எனவும், கர்த்தரின் நீதி என்பது என்னவென்றும் நீங்கள் அறிய வேண்டும்.
ஆயினும் இந்நாட்களில் இயேசுவின் மீது விசுவாசம வைத்திருப்பதாக அறிவிக்கும் அநேகர் சட்டத்தைக் குறித்த விபரமான அறிவு பெற்வர்களாக உள்ளனர். அதாவது பாவம் மரணம் ஆகியவற்றைக் குறித்த அறிவு அவர்களிடம் உள்ளது. ஆனால் அவர்களுடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும அவர்களை விடுதலை செய்யத நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து முற்றிலும் அறிவில்லாதவர்களாயுள்ளனர். இந்த அறிவின்மையுடனேயே இயேசுவை விசுவாசித்தவாறு அநேகர் இன்னமும் வாழுகின்றனர். இதன் மூலமாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனைக் காலமாக மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்மால் கண்டு கொள்ள வேண்டும். சிலுவையில் மட்டுமே விசுவாசம் வைத்திருக்க நற்செய்தியிலிருந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது வேறுபட்டது. அநேக மக்கள் கிறிஸ்துவின் சிலுவை இரத்தத்திற்கு மட்டுமே முக்கியமான இடத்தை அளிக்கின்றனர். ஆனால் அவர் சிலுவையில் அறையப்பட்ட போதல்லாமல் யோவானால் ஞானஸ்நானம் பெற்ற போது உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்ததினால் இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தினார் என வேத வசனங்கள் நம்மிடம் கூறுகின்றன.
இவற்றைக் குறித்த அறிவானது நரகம் செல்லுவோமா மோட்சம் செல்லுவோமா என்ற வேறுபட்ட நிலைகளை அறிவிக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது சிறிய வேறுபாடாகத் தோன்றலாம். ஆனால் இவற்றைக் குறித்த அறிவு ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது. அவை எடுத்து வரும் முடிவுகள் அடிப்படையில் வேறுபாடானவை. இதனால் தான் நீங்கள் இயேசுவை விசுவாசிக்க எத்தனிக்கும் போது உங்கள் விசவாசமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மையமாக்கியதாக இருக்க வேண்டும். இப்படி செய்வதால் மட்டுமே உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களால் விடுதலையாக முடியும். ஆயினும் இந்நாட்கள் இயேசுவை விசவாசிக்கும் அநேகர் கர்த்தரின் நீதியைக் குறித்த அறிவில்லாதவர்களாகவே உள்ளனர்.
இத்தகைய மக்கள் தமக்குச் சாத்தியமான சில பாவங்களைச் செய்துவிட்டு அவர்களாகவே பரிசுத்தமாக முயன்று கர்த்தருக்கு முன்பு முழுமையாக நிற்க முயலுகின்றனர். ஆனால் கர்த்தரின் நீதியானது மனிதனின் சொந்த சிந்தனைகளாலோ, முயற்சிகளாலோ, அல்லது செயல்களாலோ பெறக் கூடிய ஒன்றல்ல. சத்தியமாகிய நீர் மற்றும ஆவியில் மறைந்திருக்கும் பாவ நிவர்த்தியின் சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமே ஒருவரால் கர்த்தரின் நீதியைப் பெற முடியும். சட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம் தம்மைத் தாமே பரிசுத்தமாக்க முயலும் அவர்களின் விசவாசமானது முட்டாள்தனமான விசுவாசமாகும். சட்டத்தின் எல்லாத் தேவைகளையும் பின்பற்றக் கூடிய ஒருவரும் இல்லை.
 
 
இயேசுவின் மாமிசத்தில் பாவத்திற்கான ஆக்கினை
 
வசனம் 3 கூறுகிறது, “அதெப்படியெனில், மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.” இந்த வசனத்தின் மூலம் நீர் மற்றும் ஆவியின் சட்டத்தை பவுலின் சாட்சி எத்தனை விளக்கமாக விளக்குகிறது என்பதை நம்மால் கண்டு கொள்ள முடியும். இயேசுவின் மீது உலகின் எல்லாப் பாவங்ளையும் கர்த்தர் எப்படி சுமத்தினார் என்பதை பவுல் நம்மிடம் கூறுகிறான், “தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.”
பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார் என அது கூறும் போது அதன் பொருள் என்ன? பிதாவாகிய கர்த்தர் தம்முடைய ஒரே பேறான குமாரரை உலகிற்கு அனுப்பி அவரின் சரீரத்தில் உலகின் அனைத்துப் பாவங்களையும் சுமத்தும்படி அவரை ஞானஸ்நானம் பெறச் செய்து அதன் மூலமாக விசுவாசிகளின் எல்லாப் பாவங்களையும் நித்தியமாக அவர் சுத்தமாக்கினார். இதனால் தான் “நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு” என இது கூறுகிறது. உலகின் அனைத்துப் பாவங்களையும் தனது குமாரரின் மீது சுமத்தியதின் மூலம் அவற்றை எல்லாம் கர்த்தர் துடைத்தார். அவரைச் சிலுவையில் மரிக்கச் செய்து மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியதினால் எல்லாப் பாவங்களும் மறைந்தன.
உங்களை இரட்சிக்கும் நற்செய்தியாகிய சத்தியம இதுவே. மேலும் இதுவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியாகும். யோவான் 3:5 இல் நம் தேவன் “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என நிக்கொதேமுவிடம் கூறியது இந்த நற்செய்தியே. இயேசுவானவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததால் இந்த நற்செய்தி கர்த்தரின் நீதியை அறிவிக்கிறது.
மத்தேயு 3:15 கூறுகிறது “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.” இந்த வசனமானது கர்த்தரின் நீதியைக் குறித்தும் இயேசுவிற்குள் அது கூறவதையும் சாட்சி கூறுகிறது. இயேசுவானவர் கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கு வந்து யோவான் ஸ்நானன் மூலம் ஞானஸ்நானம் பெற முயன்ற போது அப்படி செய்ய யோவான் முதலில் மறுத்தான் “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?” ஆனால் கடுமையான குரலினால் யோவானிற்கு இயேசு கட்டளையிட்டார். “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.”
அபபடியானால் “எல்லா நீதியையும் நிறைவேற்றுவது” என்பதன் பொருள் என்ன? யோவானிடம் அவர் பெற்றுக் கொண்ட அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் இயேசு தன் மீது ஏற்றக் கொண்டார் என இது பொருள்படுகிறது. இயேசு ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து வெளியே வரும் போது வானம் அவருக்காகத் தாக்கப்பட்டு கர்த்தரின் ஆவியானவர் புறாவைப் போல் இறங்கினார். அப்பொழுது, “வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” உலகின் அனைத்து பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்ட இயேசுவின் ஞானஸ்நானத்தினால் கர்த்தர் பிரியப்பட்டார். இங்கு திரியேகக் கடவுளின் மூன்று நபர்களையும் நம்மால் காண முடியும். அவர்கள் மனித குலத்தை அதன் பாவங்களிலிருந்து இரட்சித்து இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது வானம் அவருக்குத் திறக்கப்பட்டு “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று வானிலிருந்து ஒரு குரல் ஒலித்தது என வேத வசனம் நம்மிடம் கூறுகிறது. யோவானினால் ஞானஸ்நானம் பெற்ற போது உலகின் எல்லாப் பாவங்களையும் ஒரே தரமாக அவரின் குமாரர் ஏற்றுக் கொண்டதால் பிதாவாகிய கர்த்தர் பிரியப்பட்டார் எனக் கூறலாம். இப்படியாக இயேசு ஞானஸ்நானம் பெற்றதாலும் அவருடைய ஞானஸ்நானத்தினால் உலகின் அனைத்துப் பாவங்களும் அவரின் சரீரத்தில் சுமத்தப்பட்டதாலும் சிலுவையில் அறையப்பட்டு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து எல்லா நீதிகளையும் அவர் நிறைவேற்றினார்.
வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தரின் நீதியை நிறைவேற்றும் பொருட்டு இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அதன் பிறகு அவர் சிலு¨வியல் மரித்தார். இந்த ஞானஸ்நானமும், இந்த மரணமும் கர்த்தரின் எல்லா நீதிகளையும் நிறைவேற்றுவதற்காகும். இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார். இதனால் தான் சிலுவையில் அவரால் இரத்தம் சிந்த முடிந்தது. மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததின் மூலம் கர்த்தரின் எல்லா சித்தங்களையும் நிறைவேற்றினார்.
கர்த்தரின் எல்லா நீதிகளையும் என்பது மனித குலத்தை அதன் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட செயல் எனப் பொருள்படும். இந்த நீதியின் செய்கையை நிறைவேற்றுவதற்காக இயேசு தனது ஞானஸ்நானத்தின் மூலம் அனைத்து மக்களின் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையில் இரத்தம் சிந்தினார். சரியானதும், நீதியானதுமான வழியில் கர்த்தரின் எல்லா நீதியும் நிறைவேற்றப்பட்டது. ஞானஸ்நானம், இரத்தம், இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆகியவை கர்த்தரின் நீதியை நிறைவேற்றின. இந்த கர்த்தரின் நீதி நம்மை பாவமற்றவர்களாக்கி கர்த்தரின் நீதிக்குள் நம்மை வைத்தது. திரியேகக் கடவுள் இதனைத் திட்டமிட்டார். இயேசு இதனை நிறைவேற்றினார். இந்த நீதியை இன்றும் கூட பரிசுத்த ஆவியானவர் சாட்சி பகறுகிறார். “தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்” என்ற வார்த்தையை நீங்கள் விசவாசிக்க வேண்டும்.
உங்களைக் கேட்டுப் பாருங்கள். கர்த்தரின் கட்டளைகளை எந்த தவறுமின்றி எஞ்சியிருக்கும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க முடியும் என எண்ணுகிறீர்களா? என உங்களைக் கேட்டுப் பாருங்கள். அவற்றைப் பின்பற்ற உங்களால் முடிந்த அளவு முயற்சி செய்வீர்கள் தான். ஆனால் முற்றிலும் சட்டத்தின் படி உங்களால் முடியாது. சட்டத்தின் சிறியதொரு பாகத்தை நீங்கள் உடைத்துப் போட்டாலும் அது முழுச் சட்டத்தையும் உடைத்ததாகும். (யாக்கோபு 2:10) இதனால் தான் ஒவ்வொரு வரும் முழுப் பாவியாகிவிடுகின்றனர்.
சட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற உங்கள் ஆசையில் நீங்கள் அக்கறை உள்ளவராய் இருந்து செயலாற்றலாம். ஆனால் கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் நீதியை சட்டத்தைப் பின்பற்றுவதின் மூலம் அடைய முடியாது. நம்முடைய பாவங்களை நாம் உணர்ந்து கொள்வதற்காகவே கர்த்தர் தமது சட்டத்தைக் கொடுத்தார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் நம் மாமிசத்தில் பலவீனமானவர்களாய் இருப்பதினால் கர்த்தரின் நீதியை யாராலும் முற்றிலுமாக பின்பற்ற முடியாது.
இதனால் தான் நம்மை நம் அழமான பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக கர்த்தர் தன் குமாரரை இவ்வுலகிற்கு அனுப்பி எல்லோருடைய பாவங்களையும் ஏற்றுக் கொள்ளும்படி யோவானால் ஞானஸ்நானம் பெறச் செய்தார். வேறு வார்த்தைகளில் கூறினால் இயேசுவை மாமிசத்தில் ஞானஸ்நானம் பெறச் செய்ததின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களும் அவரின் மாமிசத்தின் மீது சுமத்தப்பட்டது. இதனால் தான் கர்த்தர் இயேசுவின் “மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்” என வேதாகமம் நம்மிடம் கூறுகிறது. மேலும் இப்படியாகத் தான் கர்த்தர் நம்மைப் பாவமற்றவர்களாக்கினார்.
நம் பாவங்களை எல்லாம் கர்த்தர் எப்படி அழித்தார் என்பதை நாமறிந்து அதனை விசவாசிக்க வேண்டும். மனித குலத்தின் பிரதிநிதியாகிய யோவானின் மூலமாக அவரின் குமாரரை ஞானஸ்நானம் பெறச் செய்து நம் அனைத்துப் பாவங்களையும் கர்த்தர் இயேசுவின் மீது சுமத்தினார். உலகின் அனைத்துப் பாவங்களையும் இயேசு சிலுவைக்கு சுமந்து செல்லச் செய்து நமக்கு பதிலாக அவற்றிற்கு கிரயம் செலுத்தும் விதமாக இரத்தம் சிந்தி மரிக்கச் செய்தார். அவரை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியதால் அதனை விசவாசிக்கும அனைவருக்கும் பாவ விடுதலைக்கான வழியைத் திறந்தார். இப்படியாக கர்த்தர் திட்டமிட்டு நம் பாவங்களுக்கான இரட்சிப்பை செயல்படுத்தினார்.
ஆகவே இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் நமது பாவ நிவர்த்திக்காக ஏற்படுத்தப்பட்டது என்பதை நம்மிருதயங்களில் நாம் விசுவாசிக்க வேண்டும். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும்.
நீங்களும கூட உங்கள் அனைத்துப் பாவங்களையும் பெற்றுக் கொள்வதற்கும் நிறைவான நீதியுள்ளவர்களாவதற்கும் பாவமற்றவர்களாவதற்கும் ஏற்றபடி விசுவாசிக்க வேண்டும். உங்கள் பாவங்களைக் கர்த்தர் எப்படி மறையச் செய்தார் என்பதை சரியாக அறிந்து உங்கள் சொந்த முயற்சிகளை நம்பிக் கொண்டிராமல் அவருடைய சித்தத்தைப் பின்பற்றி கர்த்தருக்கு முன்பாக விசுவாசியுங்கள்.